எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 28

வான்மழை 28:

தூக்கம் என்பது ஒரு பொட்டளவு கூட யாரையும் அண்டவில்லை அவ்வீட்டில். அனைவரின் மனமும் கனத்துக் கிடந்தது.

இத்தனை வருடங்களும், தங்களுடன் இருந்தவளின் மனதில் இருந்த அழுக்கை அறியாமல் போயிருந்தனரே!

முத்துப்பேச்சிக்கு தாளவே முடியவில்லை, வள்ளியம்மை‌ பேசிய பேச்சுக்கள் இப்போது வரை அவரது காதுகளில் ஒலித்து மனதை‌ ரணமாக்கி கொண்டிருந்தன.

அந்தளவு அவர் சுபாவிடம் வேற்றுமை காட்டினாரி? தன் மருமகள் என்றுதானே அவரது எண்ணம் எல்லாம்? ஆனால் அவள் இத்தனை வருடங்களாக அவரை ஏமாற்றி கைப்பாவையாக அல்லவா ஆட்டி வைத்திருக்கிறாள். நினைக்க நினைக்க ஒருபக்கம் ஆத்திரமும் மறுபக்க அழுகையும் வந்தது அவருக்கு.

மெல்ல திரும்பி கணவரை காண, வெறும் கண்களை மட்டும் மூடியிருந்த மகாலிங்கம், மனைவியின் பார்வையை உணர்ந்தாரோ?

“நடந்து முடிஞ்சதை, நம்ம பொய்யுன்னு நம்மள நாமளே ஏமாத்திக்க முடியாது முத்து, நடந்தது உண்மை அதுவும் கசப்பான உண்மை! நம்ம அதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். அந்த உண்மை நம்மளை குத்திக்கிட்டேதான் இருக்கும்.‌ அதோட கசப்பு நம்ம மனசுல குத்திட்டே தான் இருக்கும்.

அதை நினைச்சு நினைச்சு நம்ம மனசை நாமளே ரணமாக்கிக்க போறோம்ன்றதும் நிஜம்.‌ அதை மாத்த முடியாது, நம்ம விதி இந்த வயசுலயும் நிம்மதி இல்லாம இருக்கும்னு இருக்கு.

எல்லா அழுகையையும் இப்பவே அழுது கரைச்சிடாதா. தூக்கம் வராது இருந்தாலும் தூங்கின மாதிரியாவது நடிக்கனும்.” கணவரின் பேச்சினை கேட்ட முத்துவிற்கு, நெஞ்சை அடைத்துக் கொண்டு தான் வந்தது. ஆனாலும் அவர் கூறுவது போல் இத்தனை வயதாகியும் அவர்கள் இந்த துரோகத்தினை அனுபவிக்க வேண்டியிருக்கிறதே! என்ன செய்ய?

தன் நெஞ்சில் சாய்ந்திருந்த மனையாளின் கூந்தலை கோதிய வண்ணம் இருந்த முகிலனின் விழிகள் உறக்கத்தை தூர நிறுத்தியிருந்தன.
கணவனின் இதய துடிப்பினை கேட்டவாறு படுத்திருந்தவளின் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.

“எல்லாம் என்னாலதானேங்க?” அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது அவளது குரல்.

“எல்லாரும் அவுங்கவுங்க மேல பழி போட்டுக்கிட்டு என்ன ஆகப் போகுது? தப்பு செஞ்சவங்க கூட இந்த அளவு தன்மேல பழி போட்டுக்க மாட்டாங்க, மொதல்ல உங்கப்பா, இப்போ நீயா?”

“பழின்னு இல்லை, இன்னைக்கு அம்மா சுபாக்காக்கு அதை கொடுக்காம இருந்திருந்தா, இதை எல்லாம் தடுத்திருக்கலாம் இல்லையா?”

“தடுத்து? தடுத்திருந்தா மட்டும் என்ன நடந்திருக்கும். இன்னமும் அண்ணி மனசுல இருக்கிற எண்ணத்தை கடைசி வரை பரணி அறியாமலே போயிருப்பான்.‌ காலமூஞ்சுடும் அண்ணியும் தனக்குள்ள அப்புடி ஒரு கோபத்தை வச்சியே ஒரு பொய்யான வாழ்க்கையை தான் பரணி கூட வாழ்ந்திருப்பாங்க.”

“ம்ம்ம். ஆனா அவுங்களுக்குள்ள இருந்த கோபம், நான் வந்ததுக்கு அப்பறம் தான் அதிகமாயிருக்கு.”

“அதான் சொன்னாங்களே அண்ணியோட அம்மா, அவங்களோட இடத்தை தக்க வச்சிக்கன்னு.”

“கோபம்ன்றதை விட அவுங்களுக்குள்ள‌ பயம்தான் அதிகமா இருந்திருக்கு. அதுக்கு அவுங்களோட அம்மாவும் ஒரு காரணம் தானேங்க.”

“அவுங்க தான் முழுக்காரணமும்.‌ எனக்கு தெரிஞ்ச அண்ணியை அவுங்க இடத்தை தக்க வச்சிக்கனும்னு மேனிப்புலேட் பண்ணாதே இவங்களாதான் இருக்கும்.”

“இருக்கலாம். நான் ரொம்ப பயந்துட்டேன்.”

“அண்ணியோட அம்மாவைப் பார்த்தா?”

“ம்ஹீம், அவுங்களைப் பார்த்து நான் ஏன் பயப்படனும். நான் எந்த தப்பும் செய்யலையே, அவுங்க சொன்ன‌ மாதிரி எந்தவிதமான கீழ்த்தரமான எண்ணங்களும் எனக்கு இருந்ததில்லை, இப்பவும் எப்பவும்.”

“ம்ம்ம் குட் கேர்ள், இப்புடித்தான் இருக்கனும். பின்ன யாரைப் பார்த்தே பயமாம் என் வருணாக்ஷிக்கு?”

“உங்களை!!!”

“......”

அவனிடம் பதில் இல்லாதுப் போகவும், விழி உயர்த்தி அவனை காண, அவனின் அசையா பார்வையில்,

“இல்லைங்க…!”

“இந்த பிரச்சனைக்கு உங்க வீட்டுல உனக்கு செஞ்ச சீர் வரிசை தான் காரணமுன்னு, உன்கிட்ட கோபப்படுவன்னு நெனைச்சியோ? உங்க வீட்டுல இவ்வளவு செஞ்சிருக்க தேவையில்ல, கடைசியில அன்னைக்கு நான் சொன்ன மாதிரியே, நீ சீரு கொண்டு வர்றது அண்ணிக்கு கஷ்டமா இருக்கும்னு சொன்னேனே, அது உண்மையாகிடுச்சுப் பாருன்னு, உன்கிட்ட இப்புடி கத்தி சண்டை போட்டு குற்றவாளி ஆக்குவேன்னு நினைச்சியோ.” என்றவனின் கேள்விக்கு பதில் இல்லை அவளிடம்.

“அப்போ அப்புடித்தான் நினைச்சிருக்க இல்லையா?” என்றவன் யோசிக்காது நறுக்கென கொட்டியிருந்தான்.

“ஸ்ஸ்ஆ, ஏங்க? என்னங்க” என சிணுங்கியவாறு தலையை தேய்த்துக் கொண்டவள்,

“அப்புடி அப்பட்டமா நினைக்கலை…” என இழுத்தவள், அவனது முறைப்பில்,

“ஆமா, அப்பிடித்தான் நினைச்சேன். ஆனா இந்தளவுக்கு டீப்பா நினைக்கலை. என்மேல‌ கோபப்படுவீங்கன்னு நினைச்சேன். எனக்கு இப்புடி தோணவும் நீங்கதான் காரணம், உங்களுக்கு எப்பவும் என்னோட சின்னப்பிள்ளை தனமான கொணத்துல கொஞ்சம் கடுப்பு இருக்குத்தானே? என்னோட அந்த கொணத்தால நம்ம குடும்பத்துக்குள்ள ஏதும் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு பயந்தீங்கதானே? எங்க இல்லைன்னு சொல்லுங்க பாப்போம்.”

நேராக படுத்திருந்தவன் சடுதியில் அவளது பக்கம் திரும்பி, அவளது முகத்தோடு முகம் புதைத்து ஆழ்ந்த மூச்செடுத்தவன், பின் விலகி அவளது முகம் பார்த்து,

“ஹம்ம், நினைச்சேன்தான் இல்லைங்கள!” என்றதும் வருணா கோபம் கொண்டு விலகிட,

“வருணாக்ஷி!” என அதட்டியபடியே மீண்டும் தன் கைவளைவுக்குள்‌ கொண்டு வந்து, முகத்தோடு முகம் மோதியவன்,

“முழுசாக் கேளு, நினைச்சேன்னு தான் சொன்னேன், நினைக்கிறேன்னு சொல்லலை. ஆரம்பத்துல உன்னோட பேச்சு நம்ம குடும்ப ஆட்களை‌‌ காயப்படுத்திடுமோன்னு பயந்தேன் தான், ஆனா இப்போ அந்த எண்ணம் இல்லை, நமக்கு மேரேஜ் முடிஞ்சதல இருந்து உன்னோடு மேச்சூரிட்டியை தான் உன்கிட்ட நான் அதிகமா பாத்தது,

நீ நினைச்ச அளவு நான் இல்லைடா மடையான்னு, ஆரம்பத்துல இருந்தே ஒவ்வொரு விசயத்துலயும் அவ்வளவு பக்குவமாத்தான் நடந்துக்கிட்ட, அப்பப்பே‌ உன்னோட கொணம் வெளிவந்தாலும் அது யாரையும் காயப்படுத்தாமதான் இருந்தது. நான் ஆரம்பத்துல பயந்தது தேவை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.‌ தப்புதான் மன்னிச்சிடு, சாரி‌.”

“விடுங்க, விடுங்க நானும் ஆரம்பத்துல உங்களை ஸ்ட்ரிக்ட் வாத்தி, சிடுமூஞ்சின்னு தான் நினைச்சேன். ஆனா அந்தளவு இல்லை நீங்க.” என்றவள் சிரிக்க, முறைத்தான் அவன்.

“இப்போ சொல்றது தான் உனக்கு, இன்னைக்கு நடந்த பிரச்சினைக்கும் உனக்கும் துளிக் கூட சம்பந்தம் இல்லை. அண்ணியோட‌ கேரக்டர் ஆரம்பத்துல இருந்தே இப்புடிதான் இருந்திருக்கு, எங்களுக்கு கண்டுபிடிக்க முடியலை, அம்மா பரணி தான் காயப்பட்டுருப்பாங்க.”

“உங்களுக்கு கோபம் வரலையா? உங்க அண்ணி மேல்?”

“உண்மையை சொல்லனும்னா கோபம் இல்லை, வருத்தம் தான் இருக்கு. ஒரு வகையில அவுங்களோட எண்ணமும் சரிதான்னு தோணுது.”

“எது? எல்லாரையும் அவுங்களுக்கு கீழே அடக்கி வைக்கிறதா?” வருணா கேட்டிட,

“பர்ஸ்டு அவுங்களுக்கு எதுனால அந்த எண்ணம் வந்தது சொல்லு பாப்போம்? அவுங்க அம்மா பாதி காரணம்னா, பரணியும் அதுக்கு மறைமுக காரணம் தான். ஸீ அண்ணியோட குடும்ப சூழ்நிலை தெரிஞ்சுதான் பரணி‌ லவ் பண்ணிருக்கான்.

எப்பவுமே வருணா, ஒரு‌ லவ் மேரேஜ்‌ நடக்குதுன்னா அங்க அதிகமா பாதிக்கப்படுறது பொண்ணுங்களாத்தான் இருப்பாங்க. நான் ஜாதி பத்தி பேசுறேன்னு நினைக்காத, இதுதான் ரியாலிட்டி.

ரெண்டு வேற‌ வேற ஆளுங்க லவ் மேரேஜ் பண்ணும்போது, அங்க அந்தப் பொண்ணோட க்கேஸ்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுறதில்லை. கண்டிப்பா அந்த பையன் என்ன ஆளுங்களோ அதுக்கேத்த மாதிரி தான் எல்லாம் நடக்கும். அடுத்து அவுங்களுக்கு வர்ற வாரிசு கூட அப்பாவோட க்கேஸ்ட்டுல தான் வளருவாங்க, பசங்களும் இப்புடி மாறுருவங்க இருந்தாலும், மேஜாரிட்டி பொண்ணுங்க தான்.

தான் லவ் பண்ண பையன மட்டுமே நம்பி அந்த பொண்ணு அத்தனை வருசமா வாழ்ந்த, வளர்ந்த எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வர்றப்போ, அந்த நம்பிக்கையை கடைசி வரை காப்பாத்துற பொறுப்பு அந்த பையனுக்கு தானே இருக்கு.

ஏற்கனவே அண்ணிக்கு இந்த க்கேஸ்ட்டு ப்ராப்ளம் இருந்திருக்கலாம்.‌ இயல்பா வர்ற ஒரு பயம், எங்கே நம்ம‌ புருசன் நம்மளை விட்டுடுவாரோ, அவுங்க ஆளுங்க இல்லைன்னு சொல்லிடுவாங்களோன்ற பயம்‌ இருந்திருக்கும்.‌ அதை‌ தனிய‌விடாம அவுங்க அம்மா பார்த்திட்டு இருந்திருக்காங்க,

அவுங்க சொன்ன மாதிரி பரணிக்குன்னு தனி வருமானம் இருந்து, அது அவுங்க கையில இருந்திருந்தா, அவுங்களுக்கு இந்த பயம் அனாவசியமா இருக்கும் ஆனா இங்க அப்படி இல்ல. எல்லாமே அம்மா அப்பா கண்ட்ரோல்ல தான் இருந்திருக்கு. அப்போ அண்ணிக்கு அந்த பயம் இன்னும் அதிகமாகிருக்கும்.

சோ தன்னை இந்த வீட்ல நிலலப்படுத்திக்க, அவங்களுக்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டு இருக்கு அதுக்காக அவங்க தேர்ந்தெடுத்த எடுத்த வழிதான் இதுவா இருந்திருக்கும். எல்லாருக்கும் அவுங்க முக்கியத்துவம் ஆகிட்டா, ஈஷியா அவுங்களை வெளில அனுப்ப முடியாதில்லையா, இன்னொன்னு அவுங்களுக்கு அம்மா வீட்டு சைடுலயும் ஒரு செக்கியூரிட்டி இல்லை, உங்க வீட்டுல உனக்கு பண்ணதை பார்த்து அவுங்க பயம் அதிகமாகியிருக்கு.

ஏற்கனேவே, தான் ஒண்ணும் கொண்டு வரலைன்ற எண்ணம் இருக்கிறவங்க, நீ சீரோட வர்றப்போ அவுங்களால அதை அக்செப்ட் செய்ய முடியலை, எங்க, உன்னால அவுங்களுக்கு பாதிப்பு வந்திடுமோ, இதுவரை இந்த வீட்டுல ஒரு அதிகாரத்தோட முதன்மையா இருந்தவங்களுக்கு, எங்க தான் இரண்டாம் பட்சமாகிடுவமோ, தனக்கு வர்ற முக்கியத்துவம் இல்லாம போய்டுமோன்ற பயத்துலேயேதான் உன்னையும் அவுங்க கன்ட்ரோல் பண்ண நினைச்சிருக்காங்க, ஆனா அதுக்கான அவசியம் இல்லைன்னு அவுங்களை உணர வச்சாலே போதும்.”

“என்னென்னமோ சொல்றீங்க, எனக்கு குழப்பமா இருக்கு, அப்போ இதுக்கு என்னதான் தீர்வு?”

“அது எல்லாம் பரணி கையிலே தான் இருக்கு. அவனோட வாழ்க்கை இது, அவனுக்கு உதவியா ஒத்துழைப்பு செய்யலாமே தவிர, அதுல நான் தலையிட்டு அவனுக்காக நான் முடிவெடுக்க முடியாது. அண்ணியோட முழு கொணத்தையும் தெரிஞ்சிட்டு தானே இத்தனை வருசம் வாழந்துருக்கான்.

நிச்சயம் முட்டாள்தனமா‌ எதுவும் யோசிக்க மாட்டான்னு தோணுது. அவனோட எண்ணங்கள் சாத்வியையும், அண்ணியை பத்தியும் தான் இருக்கு. எதுனாலும் நான் அவனுக்கு சப்போர்ட்டு பண்ணுவேன். ஆனா முடிவு அவனோடு தான் இருக்கும்.

போதும், நாளைக்கு ஸ்கூல் போகணும்.‌நீ இதை ரொம்ப தலையில ஏத்திக்காதே, அண்ணிக்காக பரணிக்காக வருத்தப்படலாம், உதவி செய்யலாம், ஆனா அவுங்க வாழ்க்கைகுள்ள நம்ம போக முடியாது. அவுங்களுக்காக நம்ப முடிவும் எடுக்க கூடாது.
வாழ்க்கையை நல்லா கொண்டுப் போறதும், சிக்கலாக்கிகறதும் பரணி கையில தான் இருக்கு. நீ உள்ள போன இன்னும் கோபம் தான் அதிகமாகும். சோ இதை இப்டியே விட்டுட்டு தூங்கு நீ” அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலைக்கோத, கணவனின் வார்த்தைகளை உள்வாங்கியவள் நித்திரைக்கு சென்றிருந்தாள்.

இங்கே, பரணியின் இதயம் உள்ளுக்குள் வலித்தாலும், ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை அவனது விழிகளில் இருந்து. அதிக அளவிலான அதிர்ச்சியை தாங்கியதில் கண்ணீர் கூட வர மறுத்துவிட்டது போலும்.

என்ன நினைக்கிறான்? என்ன செய்ய போகிறான்? எப்படி இதனை‌ சரி செய்ய போகிறான்? ஒன்றும்‌ தெரியவில்லை அவனிற்கு. எந்த ஒரு‌ ஆண் மகனும் கேட்க கூடாத ஒரு வார்த்தையை அவனது மாமியாரிடம் இருந்து கேட்டிருக்கிறான்? எத்தனை பெரிய அவமானம் இது? ஆனால் அதை கூட இரண்டாம்பட்சமாக்கி விட்டது, மனைவியின் வாக்குமூலம்.

இத்தனை பெரிய வன்மத்தையா‌‌ அவனது சுபா மனதினில் கொண்டிருந்தாள்? நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.‌‌ சாத்வி! அவனது பிள்ளையை அனுப்பி விட்டான்.‌கோபத்தில் அல்ல, பிள்ளை தாய்க்கு ஏங்கி விட கூடாது என்பதற்காக மட்டுமே!

எத்தனை நாட்களுக்கு இந்த பிரிவு? தற்காலிகமா? இல்லை நிரந்தரமாக? அதிகபட்ச அதிர்ச்சியை எதிர்கொண்டதினால் அவனது மூளை யோசிக்கும் திறனை, நிறுத்தி விட்டது போலும்.

மனம் முழுவதும், மனையாளின் பேச்சும், மாமியாரின் பேச்சுக்களும் அவனை சுழற்றி அடித்த
ன. அதன் தாக்கம் தாங்க இயலாது அதிலிருந்து தப்பிப்பவன் போல கண்களை இறுக மூடிக் கொண்டவனின் விழியோரம் இறங்கியது கண்ணீர்.
 
Top