எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா -22

subasini

Moderator
மனம் - 22

மதுரமாக இருந்த போதும் தேனும் அளவுக்கு மேல் திகட்டும் அதுபோல் தேன்நிலவுத் திகட்டத் திகட்ட அனுபவித்துப் பின் வீடு திரும்பினர் தாரிகா மற்றும் சதீஷ் தம்பதியினர்.


தாரிகாவின் மனதில் வேகமாகத் தாயாக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக் கொண்டே இருந்தது அதை அவள் வெளியில் சொல்லவும் இல்லை காட்டிக்கொள்ளவும் இல்லை ஆனால் மனதின் ஓரம் தாய்மையை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

இரண்டு நாட்கள் தள்ளிப் போகும் ஆனால் கரு அவள் மடியில் தங்கவில்லை. அவளுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது.


மன உளைச்சலில் இருந்த நேரம் சாந்திக்கு அதியமானிடமிருந்து அழைப்பு வந்தது.


காலை நேரமே தன்னை அழைக்கும் பெரிய மகனின் செயலில் சிந்தனை ரேகை முகத்தில் படர... அழைப்பை ஏற்றச் சாந்தி "என்ன தம்பி சொல்லு"… என்றாள் சாந்தி

அங்கே தாராவும் அமரனும் வந்திருக்காங்களா என்று கேட்டான் அதியமான். பெரிய மகனின் குரலில் மிக அதிகமான சோர்வு இருந்ததை அவரால் உணர முடிந்தது.

"இல்லையே... உன் மாமனார் மாமியார் வீட்டில் தானே இருக்காங்க" என்று கேட்டார்ச் சாந்தி.

"இல்லையம்மா அவங்க இரண்டு நாளுக்கு முன்னாடியே ஊருக்குப் போய் விட்டார்கள்" என்றான் அதியமான்.

"ஓ அப்படியா, சரி" என்றவர் மேற்கொண்டு தாரா எங்கே... பேரனுக்கு என்ன பண்ணுகிறான் என்று எதைப் பற்றியும் அவர் கேட்கவில்லை. ஆனால் மனதில் அந்தக் கேள்விகள் எல்லாம் இருந்தது. மகனிடம் மட்டும் அவர் கேட்கவில்லை... கேட்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

தாயின் பதிலில் சோர்ந்துப் போனவன் மெல்லக் கண்களை மூடியபடி, சோபாவில் அமர்ந்துத் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே நடந்த முன்றைய நாள் வாக்குவாதத்தை எண்ணிப் பயணம் ஆனான் அதியமான்.


தன் தாய், தந்தையர்ச் சென்றதும்... மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த கணவன் இரவு உறவை முடித்து ஓய்வாகச் சோபாவில் அமர்ந்திருந்த போது... அவனிடம் வந்து நேரடியாகத் தன் தாய்க் கூறியது எல்லாம் மனதில் வைத்து "அப்பா போனுக்கு நீங்க தான் என்னோடதும் அமரனோடதும் போட்டோ அனுப்பி விட்டீர்களா?" என்று நேரடியாகவே கேட்டாள். அவளுடைய கேள்வியில் புருவங்கள் சுருங்கப் பார்த்தான் அதியமான்.


"இல்லை எனக்குப் புரியல... நீ என்ன சொல்ல வர" என்று கேட்டான்.

"நீங்க போட்டோ அனுப்புனதைப் பார்த்துதான்... அதிர்ச்சியில் அப்பாவிற்கு உடம்புசரி இல்லாமல் ஆயிருக்கு, அவர் இங்க வந்து எல்லாம் பார்த்து... அதெல்லாம் அவர் மன அழுத்தத்துக்குள் தள்ளி இருக்கு... அதனால்தான் அவருக்கு மாரடைப்பு வந்து இருக்கு. அவர் மாரடைப்பு வரக்காரணம் நீங்கதானே” என்று அவனிடம் கேள்விக் கேட்டாள் தாரா.

எல்லாம் உண்மையும் அவளுக்குத் தெரிந்து விட்டது என்று அதியமானுக்குப் புரிந்தது. இனி அவள் கேட்கும் கேள்விகளுக்கான பதில் என்ன என்பதைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை.

“ஆமாம்” என்ற ஒற்றைப் பதிலில் நிறுத்திக் கொண்டான்.


“ஏன் இப்படிப் பண்ணுனீங்க… நீங்க பழிவாங்க என் அப்பா தான் கிடைச்சாரா… நான் தானே உங்க தம்பியை அடிச்சேன் அதுக்கு நீங்க எதுக்கு என்னுடைய அப்பாக்கு இப்படிப் பண்ணுனீங்க” என்று அழ ஆரம்பித்தாள் தாரா.

“பழி‌வாங்குவதற்கா… என்ன உளறிக்கொண்டு இருக்கிறாய், தாரா” என்றான் கோபமாக…

“நான் உளறிட்டு இருக்கேனா… நீங்க செய்த வைத்த செயலுக்கு நியாயம் கேட்கிறேன்” என்றாள் அழுதுக்கொண்டே…

அவளின் இந்த நியாயம் கேட்கும் விதம் கூட மென்மையாக இருந்தது.

அவள் செயலில் சட்டெனச் சிரிப்பு வந்தது அதியமானுக்கு. ஆனால் அவளைப் பழி வாங்கத் திருமணம் செய்தான் என்ற அவளின் குற்றச்சாட்டு அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…

'பழிவாங்க யாராவது கல்யாணம் செய்வாங்களா... பைத்தியமா இவள்' என்று நினைத்தவன்…


“இப்போ எதுக்குப் பழைய விஷயங்கள் எல்லாம் தேவை இல்லாமல் நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்து… நம்ம வாழ்க்கையில் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறாய்த் தாரா” என்று கேட்டான்.


அதியமானுக்கு இது தேவையில்லாத பிரச்சினை என்று நினைத்தால் அவளுக்குப் பதில் தரவில்லை அதியமான்.


ஆனால் தன் தந்தை பாதிக்கப்பட்டார் என்பதைத் தாராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் அவனிடம் சண்டையிடத் தொடங்கினாள்.

ரொம்பக் கேவலமான மனிதன் நீங்கள்… இவ்வளவு கீழ் தரமாக நடந்து இருக்க வேண்டாம். உங்களை அப்பா எவ்வளவு நம்புகிறார் தெரியுமா? நீங்கள் போய் இப்படிப் பண்ணி இருக்கீங்களே" என்று அவள் பாட்டிற்கு‌கத்திக்கொண்டிருந்தாள்…‌ மென்மையாக

"கேட்க யாருமில்லை என்று தானே‌ உங்களிஷ்டத்திற்கு‌ எல்லாம் செய்து வைத்து இருக்கீங்க… நான் என் மகி‌ மாமாவிடம்‌ ஒரு வார்த்தைச் சொன்னால் போதும்... அவர் கோபம் உங்களுக்குத் தெரியாது‌… நான் தான் சொல்ல வில்லை" என்று மூக்கைத் தொடைத்தாள் அழுகையின் ஊடே... சிறு‌பிள்ளை‌த்தனமாக இருந்தது அவள் செயல்…
ஆனால் அவள் மாமா என்ற வார்த்தை அவன் ஈகோவைத் தட்டி எழுப்பியது…

வேகமாக அவள் முன் வந்து நின்றவன்…

"ஆமாம் வேணும் என்று தான் செய்தேன்… என்னடி, பண்ணுவான் உன் மகி மாமா… நான் அயோக்கியன் தான்… உன்னைப் பழி வாங்க … உன்னை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணி... உன்னிடம் கசமுசாப் பண்ணிட்டேன்... போ... போய் உன்னிடம் நான் என்னவெல்லாம் பண்ணினேன்... எப்படியெல்லாம் பண்ணினேன் சொல்லு"… என்றான்

"அசிங்கமாகப்பேசாதீங்க" என்று கோபத்தில் அவனை முறைத்தாள்.

"நீ ஏன்டி, தாரிகாவோட பையனுக்கு அம்மாவாக மாறினாய்" என்ற கணவனின் கேள்வியில் தூங்கிக் கொண்டிருக்கும் பையனைத் தான் பார்த்தாள் தாரா. எங்கே விழித்துக் கொள்வானோ என்ற பயம் மனதில் இருந்தது. அவனுக்குத் தான் அம்மா இல்லை என்பது பிள்ளைகளுக்குத் தெரியக் கூடாது என்று உறுதியாக இருந்தாள்.

வேகமாக அவனை அருகே இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்ற படுக்கவைத்தவள்..

"நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், விஷயத்தை மாற்றிப் பேசாதீங்க" என்றாள் தாரா.

"நான் மாற்றிப் பேசறேனா... ஓஹோ, முதலில் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லு‌ நீ‌... கல்யாணமாகாமல் ஒரு குழந்தைக்குத் தாயாகும் பெண்ணின் திருமணம் எப்படி நடக்கும்... கையில் பிள்ளையோடு மகள் தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்று அறிந்தால்... உன் அப்பா ரொம்பச் சந்தோஷபடுவாரோ… இல்லையென்றால் நீ‌, தாரிகாவிடம் பையனைக் கொடுத்துட்டு, கல்யாணம் செய்து கொண்டு இருப்பாயா? என்றுக்கேட்டான் அவள் கணவன்.

கணவனின் நியாயமான கேள்விக்குப் பதில் இல்லை அவளிடம்… அவன் தான் வந்து தன் காதலையும் சேர்த்திக் காப்பாற்றி இருக்கிறான். அது‌ உணர்ந்தப் போதும் அவளால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. தன் தந்தைக்குத் தெரிந்தால் தன் கணவனின் நன்மதிப்பு என்ன ஆகும் என நினைத்தாள். தன் தாயின் வார்த்தைகளை எல்லாம் கேட்டுப் பிறந்திருந்த கோபத்தில்.. தங்களிடம் உண்மையைக் கூறி, மன்னிப்புக் கேட்டு விட்டான் அதியமான் என்பதை மறந்துவிட்டாள் உணர்வுகளின் சூறாவளியில்.

"எங்க வீட்டுப் பிள்ளை அமரன்... நீ யாரையாவது திருமணம் செய்து போகும்போது, அவனைக் கூடவே அழைத்துச் சென்றால் என்ன செய்ய, அது தான் இந்தக் கல்யாணம் பண்ணினேன். இப்போ அது தப்பு என்று நினைக்கிறேன்.. ரொம்பப் பெரிய தப்பு உன்னை நான் திருமணம் செய்தது... பேசாமல் அப்படியே விட்டு இருக்கணும்… என்ன என்றாலும் உண்மை ஒருநாள் வெளி‌வரும் என்று விட்டு இருக்கலாம்.. எல்லாம் சரி பண்ண நினைத்தேன் இல்லையா"… என்றவன் "உன் மேல் இருக்கும் காதலில்" என்ற வார்த்தை மட்டுமே வாய்க்குள் முனகினான்…

"என்ன சொன்னீங்க என்றவளிடம்…‌ முதலில் இங்கிருந்துப் போ…‌ என்னைக் கொஞ்சம் தனியாக விடு.. என்றவன் தலைவலியின் காரணமாகத் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.


தன்னைப் போ என்றது, வீட்டை விட்டு என்று தவறாக நினைத்துவிட்டாள் தாரா.


வேகமாகத் தங்கள் படுக்கையறையில் வந்து படுத்தவளுக்கு உறக்கம் வரவே இல்லை... கடைசியாகத் தன்னிடம் கணவன் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவளைக் கத்திக் கொண்டு கீறியது… அதனால் கணவனின் நிலையோ.. அவன் சோர்வோ எதுவும் அவள் கண்களுக்குப் புலப்படவில்லை. விடிய விடிய அழுதாள்.

வேலைப்பளு, சரியான உணவு மற்றும் உறக்கம் இல்லாத்தால் அதியமானுக்கு உடல் நிலைச் சரியில்லையில்லாமல் காய்ச்சல் அடித்தது.

அன்றைய விடியல் இந்த வீட்டில் அமைதியாக விடிந்தது…
எப்பொழுதும் கண் விழிக்கும் போது அமரன் அவனை எழுப்புவான், இல்லையென்றால் தாரா, காப்பியோடு வந்து அழைப்பாள். இன்று‌ எதுவுமில்லை…

நேரத்தைப் பார்த்தால் அது‌காலை ஒன்பது என்றது.. வேகமாக வெளியே வந்தவன் சமையலறையில் பார்த்தான் யமுனா அக்காவும் இல்லை…
தங்கள் படுக்கு அறையில் வந்து பார்த்தால் தாரா மற்றும் அமரன் இருவரும் இல்லை என்பதை உணர்ந்ததும்.. வேகமாகத் தன் தாயிக்கு அழைத்திருந்தான்…


சாந்தியம்மா, பெரிய மகனிடம் பேசியதெல்லாம் கேட்ட, தாரிகா "என்ன ஆச்சு அத்தை" என்றாள்…

"தாரா வந்தாளா? என்று கேட்டுப் போன் பண்ணினான்"… என்ற சாந்தியின் முகத்தில் சிந்தனை ரேகையைப் பார்த்ததும் தாரிகா "என்ன அத்தை யோசிக்கீறீங்க‌" என்றாள்…

"என் மகனுக்குப் பொருத்தமே இல்லாதவள் தான் உன் தாரா" … என்று‌ச் சட்டென‌க் கூறி விட்டார்.. பின் தான் தன்னை‌ மீறி வார்த்தைகளை விட்டு விட்டார் என்று உணர்ந்து.. "இல்லை, பாரு இப்படிச் சொல்லாமல் வெளியே போயிருக்களாம்.. அதுதான் சொல்லறேன், கணவனை மதிக்காதவள்" என்று அவளை‌ வசைபாடினார்…

"வேறு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்திருக்கலாம்" என்று புலம்பினார்ச் சாந்தி…

"கையில் பிள்ளை இருக்கே என்று பார்க்கிறேன்" என்றாள்…

தன் மாமியாரின் வார்த்தைகளைக் கேட்டு "அதனால் என்ன அத்தை, பிள்ளையை நம்ம வளர்த்துக் கொள்ளலாம்" என்று‌யோசிக்காமல் பதிலளித்தாள் தாரிகா.

அவளுக்கோ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தன் பிள்ளையைத் தன்னோடு வைத்துக் கொள்ளக் கிடைக்கும் சந்தர்ப்பமாகத் தோன்றியது. அதனால் சுயநலமாகச் சிந்தித்தாள்.

"நீங்க உங்க பெரிய பையனிடம் பேசிப் பாருங்கள் அத்தை" என்று அவருக்குத் தூபம் போட்டாள் தாரிகா.

"நீ சொல்வதும் சரி தான், பையன் நம்ம வீட்டு வாரிசு, நாம் வளர்த்துக் கொள்ளலாம்… நான் இன்றைக்குப் போய்ப் பேசிப் பார்கிறேன் அவள் மேல் அவன் கோபத்தில் இருப்பான். அப்போ சரியாக இருக்கும் நாம் பேசறது" என்றவர் நேரம் கடத்தாமல் அதியமானைக் காண வந்தார் சாந்தி.

காய்சல் காரணமாக அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்…

குடிக்கக் காபிப் போட்டுத் தர கூட ஆள் இல்லை… அவனே காபிப் போட்டுக் கொள்வான் தான் ஆனால், இன்று அதற்கு அவன் உடல் நிலை ஒத்துழைக்க வில்லை…

எப்பொழுதும் இப்படி உடல்நிலைச் சரியில்லாத நேரம், நல்ல சூடான காபி... இல்லையென்றால் சூடாக இட்லியும் காரம் கம்மியாகச் சட்னிச் செய்து ,நேரத்திற்கு மருந்துத் தந்து என்று பார்த்துக்கொள்ளுவாள் … இன்று அவளில்லாமல் மிகவும் முடியவில்லை ஆனால் அதற்கு மேல் அவள் மேல் கோபம் இருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு முன் தான் தன் மாமனாரிடம் இருந்து போன் வந்தது. தன் மனைவியும் மகனும் அங்கே விடிந்தும் விடியாமல் வந்திருக்கிறாள்... எதாவது பிரச்சைனையா? என்று கேட்டார்.

"மாமா.. நீங்க அவளிடம் எதுவும் கேட்க வேண்டாம் சின்னக் கோபம் அவளுக்கு, அதுதான் என் வேலையை முடித்துக்கொண்டு, நான் அங்கே வரேன். நீங்க என் பொண்டாட்டிக்குப் பிடித்ததெல்லாம் செஞ்சுக்குடுங்க. ரொம்ப நாள் ஆச்சு அவள் அவங்க அம்மா கையால் சாப்பிட்டு" என்று மனைவிக்காகப் பேசினான்.

மருமகனின் பேச்சில் மனநிம்மதி உண்டானது கங்காதரனுக்கு.

மாமனாரின் அழைப்பைத் துண்டித்தான். மெதுவாகத் தனக்குக் காபிப் போட சமையலறைக்குச் சென்றவனைத் தடுத்தது வீட்டின் அழைப்பு மணி.. யாரென நினைத்த படி, கதவுத் திறந்தவனுக்குத் தன் வீட்டின் முன் தன் அம்மாவைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தான்.

"வாங்க அம்மா… என்னம்மா அதிசயமாக இருக்கு"… என்றவன் அவரை உள்ளே அழைத்தான்.

வந்தவர் வீட்டில் யாருமில்லை என்றதை உணர்ந்துக்கொண்டார்… "எங்கே தம்பி, தாரா" என்றார்..

"உங்களுக்குத் தானே அவள் பிடிக்காத மருமகள், அப்பறம் எதற்கு அம்மா அவளைத் தேடறீங்க" என்றவன் சமையலைக்குச் சென்றவாறே... "உங்களுக்கும் டி, போடவா அம்மா" என்றான்…

"என்ன தம்பி நீ டி,எல்லாம் போட்டுட்டு... நான் போடறேன்" என்று எழுந்தவரை…

"உக்காருங்க அம்மா… எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க… முதன்முதலாக வந்தவங்களுக்கு எதாவது குடிக்கக் கொடுக்க வேண்டாமா"… என்றவனின் முகம் சோர்ந்திருப்பதைப் பார்த்தச் சாந்தியம்மா "என்ன தம்பி உடம்புக்கு முடியவில்லையா?" என்று கேட்டார்.

"ஆமாம் அம்மா தீடிரெனக் காய்சல் வந்திருச்சு… அவளும் வீட்டில் இல்லை… நான் தான் அவளை அவங்க அப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்… இப்போது தான் மாமா போன் பண்ணாரு"…
என்று கோர்வையாகச் சொன்னான்…

“நன்றாகப் பொண்டாடிக்குச் சப்போர்ட் பண்ணறத் தம்பி நீ... காலையில் எனக்குப் போன் பண்ணதை மறந்துட்ட நினைக்கிறேன், அதுதான் என்ன கேட்க வந்தேன் நான்” என்றார்ச் சாந்தியம்மா.

"ஏன் அம்மா" என்று படி அவருக்கு டீயைக் கோண்டு வந்து குடிக்குக் கொடுத்தான் அதியமான்.

"ம்ம் சொல்லுங்க" என்றான் நேரடியாக.

"இங்கே பாருத் தம்பி... அவள் நம் குடும்பத்துக்குச் சரி பட்டு வரமாட்டாள்… உனக்குத் தான் பெண் கேட்டுப் போயிருக்கோம் என்று தெரிந்தும், உன்னை வேண்டாம் என்று சொல்லி, நம் குழந்தையும் நம்மிடமிருந்து பிரிக்க முயன்று இருக்கிறாள்… இன்றைக்கு உன்னை விட்டுப் போயிட்டாள்" என்றார்…


"குடித்த டீ, தலைக்கேற இருமியவன் “அம்மா… என்ன பேசறீங்க அப்பாவீட்டுக்குப் போனவளை விட்டுப் போயிட்டாளென்று சொல்லறீங்கு… உங்கள் உயரத்திற்கும் உங்கள் ஸ்தானத்துக்கும் உங்களோட பேச்சு அழகில்லை அம்மா” என்றான் அதியமான்.

"என் பேச்சின் அழகைப் பற்றிய கவலை எனக்கில்லை என் மகனை என்னிடம் இருந்து பிரித்துச் சென்றவள் அவள்… அவளுக்காக நான் எதற்கு யோசிக்கணும் தம்பி"...

"அம்மா"… என்றான் அதியமான்.


"இங்க பாரு, அவள் வேண்டாம் தம்பி உனக்கு... பையனைத் தாரிகா, பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறாள்… உனக்கு வேறு திருமணம் பண்ணி வைக்கிறேன்" என்று யோசிக்காமல் பேசுனார்ச் சாந்தியம்மா… அவருக்குப் பெண் கேட்ட அன்று.. தன்னைக் கேட்டு வந்தது தன் மாமியார் என்று தெரிந்தும், தனக்கு மரியாதைத் தராமல், திருமணம் வேண்டாம் என்று கூறியதை, அவரால் இப்போ வரைக்கும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…


"அம்மா… என் வாழ்க்கையில் கல்யாணம் ஒரு தடவைத் தான்… அதுவும் நடந்து முடிந்திருச்சு… உங்களுடைய முதல் மருமகள் தாரா என்பதை நீங்க நன்றாக மனதில் பதிவுச் செய்துகொள்ளுங்கள்… இனி இதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம் அம்மா… விருப்பு வெறுப்புக்கு மீறி அவளைப் பாருங்கள் அம்மா கண்டிப்பாக உங்களுக்கு அவளைப் பிடிக்கும். நீங்கள் புரிந்துக்கொண்ட அளவுக்கு, அவள் கெட்டவளெல்லாம் இல்லை அம்மா" என்று தன் மனைவிக்காகப் பேசினான் தன் தாயிடம்…

"அவ்வளவு நல்லவள் தான் உனக்கு முடியாத நேரத்தில் இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிருக்கா, அவள் அப்பா வீட்டிற்கு" என்று கேட்டார்.

"உங்களுக்கு அவளைப் பிடிக்க வில்லை … அதனால் தான் அவள் செயல் அணைத்தும் உங்களுக்குத் தவறாக மனதில் படுகிறது இந்த மனநிலை உங்களுக்கு மாறும் அம்மா" என்று கூறினான் அதியமான்.

"நீ இப்போ அவள் மேல் உள்ள மயக்கத்தில் பேசுகிறாய்த் தம்பி" என்றவர் எழுந்து "நான் போறேன்" என்று கிளம்பினார்…

"நான் வேணா உங்களை வீடு வரை வந்து விடட்டுமா என்றவன் கேள்விக்கு "இல்லை நம்ம ட்ரைவர் கூடத் தான் வந்திருக்கேன்" என்றவர் "நான் வரேன்" என்று அவன் வீட்டில் இருந்து கிளம்பினார். அவர் மனதிலோ இங்கே இருப்பது என் மகன் இல்லை என்ற வலியில் கண் கலங்கியது சாந்தியம்மாவிற்கு.


திருமணம் ஆனதில் இருந்து தாராவிற்காகப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்யும் தன் மகன், தன்னை இங்கேயே தங்கச் சொல்லவில்லை என்று அவள் மனதில் வலி உண்டானது.

அதியமானுக்கோ தனக்கு உடல்நிலைச் சரியில்லை என்று தெரிந்தும் தன்னுடன் தங்கறேன் என்று ஒரு வார்த்தைச் சொல்லாமல் சாந்தியம்மாச் சென்றது அவன் மனதில் வேதனையை உண்டாக்கியது…

இன்றைக்கு நடந்தெல்லாம் தேவையற்றது… அவள் வீட்டில் இல்லாததால் தான் இப்படி நடக்கக் காரணம் என்று மேலும் அவள் மேல் கோபம் கொண்டான்.


இன்றைய தினம் நடந்தெல்லாம் மேலும் அவனைச் சோர்வடைய வைத்தது… மெல்லப் படுக்கையில் வீழ்ந்தவனின் போன் மீண்டும் அலறியது…

சலிப்போடு எடுத்துப் பார்த்தவனுக்கு அழைத்தது தன் நண்பன் என்றதும்…

"சொல்லுடா" என்றான் அதியமான்.


"என்னடா இன்றைக்கு ஆபீஸ் வரலையா நீ" என்றதும் ..

"இல்லை டா எனக்குக் கொஞ்சம் முடியவில்லை அது தான்" என்றான்.. "தாரா எங்கே டா" என்றதும்
"ஏன்டா நீ வேற, அம்மனிக் கோபிச்சிட்டு... அவங்க அப்பா வீட்டுக்குப் போயிட்டாள்".. என்றான்..

"என்னடா ஊடலா" என்றதும்

ஊடலோடனக்காதல் தான்" என்றவன் நடந்ததைஎல்லாம் கூறித் தன் தாயின் எண்ணமும் அதற்குத் தாரிகாவின் செயலும் கூறினான்…

"எனக்கு ஒரு சந்தேகம் டா.. உண்மையாகவே தாரா, தாரிகா இரண்டு பேரும் ட்வின்ஸாடா" என்று கேட்டான்
"எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கு… இன்றைக்கு நான் என் மாமனார் வீட்டிற்குத் தான் போறேன், வாயேன் அவரிடமே கேட்கலாம்" என்று கேலிச் செய்தான் அதியமான்.

"இங்கே பாரு ஆதி.. இதெல்லாம் உங்க குடும்பப் பிரச்சனை, அதிலெல்லாம் தலையிடும் அளவுக்கு நாகரீகம் தெரியாதவன் இல்லை நான்" என்று சொன்னவன்.. "சரி நான் என்ன பண்ணணும் சொல்லு" என்று கேட்டான் இனியன்.

இரண்டு நாடகளுக்குத் தன் அலுவலகத்தையும், கொஞ்சம் மேற்பார்வைப் பார்க்கச்சொன்னவன் தன் காரியதரிசியிடம் எல்லாம் சொல்லி இருக்கேன் என்றான்.

சரி டா அப்பறம் பார்க்கலாம் என்று அழைப்பைத் துண்டித்தான்…

அன்றைய தினம் வேகமாகச் சென்றது அதியமானுக்கு
.

காய்சலோடு சரியான உணவுமில்லாமல் தன் வேலையை முடித்தவன் மாலை நேரத்தில் தன் காரை எடுத்துக்கோண்டுத் தன் மனைவியைத் தேடிப் பயணமனான்…

தொடரும்...
 
Top