34
சியாட்டல்
வீட்டின் அமைப்புக் கேற்றவாறு பராமரிப்பதும், அலுவலகம் சென்று வேலை பார்ப்பதுமாக தயாவின் நாட்கள் ஓட்டமாக கழிய, இரவு வேளைகளை வினய் ஆக்ரமித்து கொண்டான். சோர்ந்து போனாள் பெண். ஒரு வழியாக வங்கி மற்றும் வினய் இரண்டு கடன் களையும் முடித்தாயிற்று. பணம் திரும்ப தர வேண்டாம் என்று வார்த்தைக்காக கூட வினய் சொல்லாதது மனதின் ஆழம்வரை தயாவுக்கு கசந்தது. அவளுக்கென்று மனம், உணர்வுகள் உண்டு என அவன் நினைக்கவில்லை. அவள் தனக்கு சேவகம் செய்ய பிறந்தது போல் அவன் நடத்தைகள்.
கல்யாண வாழ்க்கை வெகுவாக வெறுத்துபோயிற்று தயாவுக்குள். இந்த திருமண உறவில் தனக்கு கிடைத்தது என்ன?
அவன் பெற்றோர் ஒரு முறை கூட சியாட்டல் வரவில்லை. வினய் தயாவின் பெற்றோர் வருவதற்கு ஆதரவாக இல்லை. மாப்பிள்ளைக்கு இஷ்டம் இல்லாமல் அவர்கள் பெண்ணை பார்க்க வரமுடியாது எனும் நிலை.
தயாவின் தங்கை பொறியியல் படிப்பு முடித்து இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது.
தயா தன்னுடன் வேலை செய்யும் நிகிலை தங்கைக்கு பார்க்கிறாள். இதில் வினயனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இரண்டு முறை வினய் தன் கர்வம் மற்றும் மனைவி மீதான அலட்சிய பாவத்தால் நிகிலிடம் வாங்கிகட்டிக்கொண்டதும் ஒரு காரணம்.
ஆனால், தயாவுக்கு நிஜமாக சந்தோஷம்.
முதலில் தயாவின் அலுவலக பார்ட்டியில் எல்லோரும் குடும்பத்துடன் குழுமி இருக்க, மனைவியை தரக்குறைவாக வினய் நடத்த, யாருக்கும் காதில் விழாமல், வினய்யை எச்சரித்தான் நிகில். அப்போது தயா கணவனை பயத்துடன் பார்த்தாள்.
மற்றொரு முறை தயா வயிற்றில் வலி என்று மருத்துவ மனையில் இருக்க, வினய் வரவில்லை. உடன் அட்டெண்டெர் யாருமில்லாத மோசமான நிலையில், நிகில் தன் அம்மாவை அவளுடன் இருக்க செய்து மாலையில் வந்து பார்த்து சென்றான். இரண்டு நாட்களில் தயா டிஸ்சார்ஜ் ஆக, அவளை வீட்டில் கொணர்ந்து விட வந்தார்கள் நிகிலும் அவன் அம்மாவும். அவன் அம்மா காரில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு பின்னால் வர, தோழியை கைத்தாங்களாக பிடித்துக்கொண்டு வந்தவனுக்கு வீட்டில் இருந்து ஏதோ ஒரு ஆங்கில படத்தை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
'மனைவி என்னவானாள்' என்ற நினைப்பே இல்லாமல் எப்படி இவனால் இவ்வளவு கூலாக படம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது என்று நிகில் மனதில் கேள்வி.
சோபாவில் அமர்ந்துகொண்டு டிவி பார்த்துக்கொண்டு இருந்த வினய், வாசல் பக்கம் நிழலாட திரும்பி பார்த்தான். அங்கே அவன் மனைவியோ இன்னொருவன் கையணைப்பில்.
வினய் மனதில் ஆயிரம் எண்ணங்கள்... அத்தனையும் அழுக்கு. அதையெல்லாம் மனதிற்குள் கூட புதைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாமல், அப்படியே இருவரும் மேலும் தீயாக கொட்டினான். இவற்றைக் கேட்டுக் கொள்ளும் நிலையில் தயா இல்லை. மிகவும் சோர்ந்து போனாள்.
நிகில் தயாவை அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர வைத்துவிட்டு வந்தவன் கோபம் தாளாது, வினைய் சட்டையை பிடித்து விட்டான். தயா விற்கு அழுகைதான் வந்தது. பின்னாலேயே வந்த நிகிலின் அம்மா, ஒரு நிமிடம் உறைந்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, இருவரையும் விலக்கி விட்டார்.
தயாவை ஒரு பார்வை பார்த்தவருக்கு அந்தப் பெண்ணின் மீது பரிதாபம் தான். எவ்வளவுதான் படித்தாலும்நல்ல வேலையில் இருந்தாலும் கூட பெண்கள் சில விஷயங்களில் இவ்வாறு மௌனம் சாதிக்க வேண்டியுள்ளது என்று கவலைப்பட்டார்.
பின்பு,'தம்பி, உங்க வைப் உடம்பு சரி இல்லாம இருக்காங்க. அவளுக்கு இதுக்கு மேல எதுவும் பேசி நோக அடிக்காதீங்க. பத்திரமா பாத்துக்கோங்க ' என்று சொல்ல, நிகில் தனது ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்து விட்டு கிளம்பிவிட்டான். அவன் மனம் முழுவதும், வினய்யை மண்ணில் போட்டு புரட்டி எடுக்கும் கோபம். ஆனால் அவன் தயாவின் கணவன். இந்த நிலையை வெகுவாக வெறுத்தான் நிகில்.
இதற்குப் பிறகு, இருவருக்குமான நட்பு இன்னும் இறுக, தன் தங்கைக்கு இவனை போன்ற ஒருவன் தான் சரியாக வரும் என்று யோசித்தவள், நிகில், அவன் பெற்றோரிடம் சம்மதத்தை வேண்டினாள். பிறகு தன் பெற்றோரிடமும் பேசியவள், நிகிலுடன் தன் தங்கை ஸ்கைப்பில் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்தாள். இருவருக்கும் இரண்டு மூன்று முறை பேசிய பிறகு, ஒருவருக்கு ஒருவர் பிடித்துவிட, சென்னையில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தயாவின் பெற்றவர்கள் செய்யலாயினர். எப்படியும் டிசம்பர் மாதம் சென்னை வருவது நிகில் வழமை. தை மாதம் திருமணம் என்று ஏற்பாடாக, நவம்பர் மாதத்திலிருந்து, மூன்று மாதங்களுக்கு சென்னையிலிருந்து வேலை செய்வதாக சொல்லி தயாவும் இந்தியா கிளம்பி விட்டாள். தான் எப்படி எல்லாம் திருமணம் செய்துகொள்ள நினைத்து கனவுகள் வளர்த்திருந்தாளோ, அவை எல்லாவற்றையும் தங்கை கல்யாணத்தில் நிறைவேற்ற முனைந்தாள். தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் தாராளமாக செலவு செய்து திருமணம் நடத்தும் மூத்த பெண்ணை பார்க்கும் பொழுது நெஞ்சை பிசைந்தது அவள் பெற்றோருக்கு.
முதலில் இந்த வரன் வேண்டாம் என்று மனைவியிடம் சண்டை போட்டு பார்த்தவன், பின்னர் மாமனார் மாமியாரிடம் நிகில் வீட்டை பற்றி திரித்து சொல்லி பற்ற வைத்தான். பயந்து போன பெண்ணை பெற்றவர்கள் நிகில் வீட்டை பற்றி விசாரிக்க அவர்களுக்கு திருப்தி. ஆனாலும், பெரிய மாப்பிள்ளைக்கு பிடித்தம் இல்லை என்பது அவர்களுக்கு உறுத்த, தயா, தன்னுடன் வேலைபார்க்கும் தன் நண்பனுக்காக பேசி, இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டாள். நேராக திருமணத்திற்கு வந்து கலந்து கொள்வதாக, முதலில் சொன்ன வினய் மனதில் மனைவியை பழி வாங்கும் எண்ணம்.
சென்னையில் எதற்கு திருமணம் நடத்த வேண்டும்?இங்கே அமெரிக்காவில் நடந்தலாமே... என்று குழப்பம் செய்ய பார்த்தவனின் குரலை கேட்பதற்கு ஆளில்லை. அது அவனுக்கு வெறியை இன்னும் கூட்டியது.
வினய் திருமணத்திற்கு போவதை தவிர்த்து விட்டான். ஏற்கனவே மனதில் ஆயிரம் குழப்பங்கள் உடன் இருக்கும் தயாவின் மனது மொத்தமாக இறுகியது.
வினய் நடந்து கொள்ளும் முறை பற்றி நிகிலின் அம்மா மூலம் அறிந்து கொண்ட தயாவின் பெற்றோருக்கு மனதில் நீக்க முடியாத பாரம். இரண்டாவது பெண்ணுக்கு செலவு செய்து திருமணம் நடத்தி வைக்கும் மூத்த மகளின் வாழ்வு அவ்வளவு சந்தோஷமாக இல்லை என்பது அவர்களுக்கு பேரிடியாக இருந்தது. இப்போது இந்தப் பெண்ணின் திருமணத்திற்காக இவ்வளவு விசாரிக்கும் தாங்கள் என் மூத்த பெண்ணிற்கு திருமண சமயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இந்த வாழ்க்கையை கொடுத்துவிட்டோம் என்று அவர்கள் வருந்த தொடங்கிவிட்டார்கள். தயா சொன்னது போல் இன்னும் கொஞ்சம் தாமதம் செய்திருந்தால், அவள் படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் வரை பொறுத்திருந்தால் நல்ல இடத்தில் அவள் திருமணமும் அமைந்திருக்கும் என்று காலம் கடந்து ஞானம். இதனால் யாருக்கு என்ன லாபம்?மனதளவில் வருந்தலாம். உடலாலும் மனதாலும் துவண்டு போயிருக்கும் மகளைத் தேற்றுவது எப்படி?
தயாவிடம் உன் கணவர் 0திருமணத்திற்கு வரவில்லையா... என்று கேட்டவர்களுக்கு அவருக்கு லீவு கிடைக்கவில்லை என்று சமாளித்தாள் தயா. ஆனால்,அவள் மனதில் அவன் வராதது ஒரு விதத்தில் சந்தோஷ மாக இருந்தது. சுதந்திரமாய் உணர்ந்தாள் அவள்.
ஒரு வழியாக ஜனவரி இறுதியில் தயா கிளம்பிவிட, பிப்ரவரி இரண்டாம் வாரம் நிகில் தன் மனைவியுடன் வந்து சேர்ந்தான்.
சியாடல் வந்த பிறகு கணவன் மீது வெறுப்புடன் அலட்சியம் வந்துவிட்டிருந்தது தயாவினுள்.
திருமண வாழ்வு, அதில் கிடைக்கும் காதல் என்று அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது.
கொஞ்ச நாள் அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து வச்சுக்கலாம் என்று அவள் யோசிக்க அவளுக்கும் அவனுக்கும் சண்டை பெரிதானது.
போதா குறைக்கு வினய் வேலைக்கு வந்தது பிரச்சனை. பெர்போர்மென்ஸ் சரி இல்லை என்று முதலில் எஸ்கேலேஷனில் போனது, பிறகு அப்ரய்ஸல் அடிப்பட்டது. ஏற்கனவே சான் டியாகோவில் வினய் மீது கோவம் கொண்டிருந்த நடாலி சரியான தருணம் இதுவென, அவன் வேலைக்கு உலை வைத்துவிட்டாள்.
வீட்டில் தயாவின் ஒற்றை சம்பளம். வேலை தேடிக்கொண்டு வீட்டில் இருக்கும் வினய் தனது அட்டிட்யூட் பிரச்சனையால் மனைவியை படுத்தி எடுத்தான். தாழ்வு மனப்பான்மையால் அவன் வார்த்தைகள் கூர் அம்பில் விஷம் தடவியதுபோல் வந்து விழ துவண்டு போனாள் பெண். வேலை வேறு கிடக்க தாமதமாக நிலைமை இன்னும் மோசமாகியது.
தயா துணிந்து தனது பெற்றோரை ஆறு மாத விசாவில் வரவழைத்து விட்டாள். 'அவளது சம்பளம். வீடு இப்போது நடப்பது அவள் தயவில். இன்னும் ஏன் யோசிக்கணும்?'
வினய் வந்தவர்களிடம் வெறுப்பை உமிழ மகள் சொன்னதன் பேரில் வேறு வழி இல்லாமல் பொறுத்துக் கொண்டார்கள். நிகிலும் திருமணத்திற்கு முன்பே டெக்சாஸ் சென்றுவிட இப்போது, வினய் நடந்து கொள்ளும் விதம் பிடிக்காமல் தானும் எங்காவது மாற்றல் வாங்கி சென்று விட துடித்தது மனம்.
நிகிலிடம் பேசியவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். அம்மா அப்பாவை தங்கை வீட்டுக்கு அனுப்பியவள், வீட்டில் வெகு இயல்பாக இருந்தாள்.
இந்தியா சென்று வந்த பிறகு, வினயிடம் தேவைக்கு மேல் பேசுவதில்லை. இருவரும் வெவ்வேறு அறையில்.
தன்னை அருகே நெருங்கவிடாத மனைவி மீது கொலை வெறியில் இருந்தான் அவன். வேலை கிடைக்காமல் சாப்பாடு மனைவி தயவில் என்பது வேறு.
அலுவலகத்தில் பழைய ப்ராஜெக்ட் முடிய, புது ப்ராஜெக்ட்டிற்காக இன்டெர்வியூ எடுத்துகொண்டவள் தேர்வாகிவிட,டெக்சாஸ் நோக்கி தனது மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்தாள் தயா.
வினய் போக கூடாது என்று சண்டை போட '
போகலைன்னா என்னோட வேலையும் காலி, ரெண்டு பேரும் வீட்டுல உக்காந்தா சாப்பாடு? என்று கேட்டவளில் இருந்த உண்மை சுட,
'தென், நா வரல... எனக்கு இங்க தான் கன்வினியன்ட். ப்ராஜெக்ட் முடிஞ்சா வந்திரு.வீக் எண்ட் தவறாம இங்க வா...என்று அடுக்கியவனை கண் மூடாமல் பார்த்தவள் மனதுள் 'உன்ன கூட்டிட்டு போகும் எண்ணமே எனக்கு இல்லயே... என்று ஓடியது.
தப்பித்து வந்தால் போதும் என்ற மன நிலையில் வந்தவளுக்கு, வீடு பார்த்து வைத்திருந்தான் நிகில். புது வீட்டில் அப்பா அம்மாவுடன் பால் காய்ச்சி குடிபுகுந்தவளுக்கு அவளின் தங்கை பாத்திரங்கள் சில கொடுத்து உதவினாள். அந்த வார இறுதியில் சியாடல் வந்தவள் தனது சீர் வரிசையாக கொடுக்கப்பட்ட பாத்திரங்களை பேக் செய்து அனுப்பி விட்டாள்.
எதுக்கு இப்போ என்று கேட்ட கணவனிடம், அங்க நா சமைக்க வேணாமா? அவுட்சைட் புட் எடுக்கல. எவ்ளோ நாள் நிகில் வீட்டில சாப்பிட முடியும்? என்று பதில் கேள்வி கேட்டவளை புரியாமல் பார்த்தான் வினய்.
முதலில் வார இறுதி நாட்களில் வந்து கொண்டிருந்தவள், வேலை காரணம் காட்டி வருவதை குறைத்தவள், போனில் மட்டும் கணவனோடு பேசுகிறாள்.
மாத செலவுக்கு அவனுக்கு பணமும் அனுப்பி வைத்தாலும், இன்னும் வேலையும் கிடைக்காமல் வீட்டில் இருக்கும் வினய் நிறைய கடன் வாங்கியிருந்தான். பேசும் சமயங்களில் அனேகமாக பணம் பற்றியே பேசுவான்.
வெறுத்துபோய் விட்டது பெண்ணுக்கு. பெற்றவர்களும் இந்தியா சென்றுவிட, தனியாய் உணர்ந்தாள் தயா.
கண்டிப்பாய் ஒரு மனதளவில் பலவீனமான சூழ்நிலை. அன்புக்காகவும், காதலுக்காகவும் ஏங்கும் நிலையில், டெரிக் அவளது பாஸ் எனும் நிலையில் அவள் வாழ்வுக்குள் அடிஎடுத்து வைத்தான்.
முதல் பார்வையிலேயே இருவருக்கும் புரிதல் சில மாதங்களில் காதல் என்று புரிய,
விளைவு, வினய்க்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டாள் தயா.
அதிர்ச்சியில் உறைந்த வினய், தயாவுக்கு போன் செய்து பார்க்க, அவள் எடுக்கவில்லை. கோவம் மிக மனைவியை காண விரைய, அவன் மனைவி இன்னொரு ஆணுடன் ஒரே வீட்டில்.
மிஸ்ட் கால் பார்த்தவள், டெரிக்கிடம், வினய் வர வாய்ப்பு உண்டு என்று சொல்ல, அவன் இரண்டு நாட்களுக்கு இவள் வீட்டிற்கு தங்க வந்துவிட்டான். அவள் கண்களில் தெரியும் பயம் அவனை அவ்வாறு செய்ய தூண்டியது.
தவறான பார்வை கூட பார்க்காமல், கண்ணியம் காத்த அந்த மனிதன் அவள் மனதில் ஆழ பதிந்துபோனான்.
தன்னை போலவே பிறரை நினைக்கும் அற்புதன் வினய் நினைத்தது அவன் மனைவி லிவ் இன்னில் இருப்பதாக.
எச்சில் பண்டம் போல் அடுத்தவனுடன் குடித்தனம் செய்தவள் தனக்கு வேண்டாம் என கத்திவிட்டு, விவாகரத்து செய்ய தயாராகிவிட்டான் வினய்.
யாரும் மறுக்க வழி இல்லாமல், டெரிக் - தயா திருமணம். நிகில் வீட்டில் எளிமையாக நடந்தது.
புதியதாய் ஒரு காதல் கதை அங்கு தொடங்க, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டும் வினய் அவனால் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.
வேலையும் கிடைக்காமல், கடன் சுமை அதிகமாக, சியாட்டல் வீட்டை விற்று கடன்கள் எல்லாவற்றையும் அடைத்தவன், மீண்டும் இந்தியா வர, அவனுக்கு பெங்களூருவில் வேலை கிடைக்க என்று விதி மீண்டும் தம் விளையாட்டை தொடங்கிவைத்து
விட்டது .
இன்னும் ஒன்று…