Sowndharyacheliyan
Writer
இங்கே இவன் இப்படி வீட்டினர் முகம் பார்க்காமல் சுற்றிக் கொண்டிருக்க, அங்கே சுபாவிற்கு லேசாக பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது. வள்ளியம்மைக்கும் தான், எப்படியும் பிள்ளையை பார்க்க வேண்டும் என்றாவது, பஞ்சாயத்து பேச வருவார்கள் என அவர் நம்பிக் கொண்டிருக்க, அதில் மண் விழுந்தது.
அடுத்த பிரச்சனையாக, அக்கம் பக்கத்தினர் மெதுவாக சுபாவின் இருப்பை விசாரிக்க ஆரம்பித்திருக்க, ஒப்புக்கு சப்பாக ஒரு காரணத்தை கூற, அவர்கள் அதை நம்பினார் போலத் தெரியவில்லை. எப்போது வந்தாலும் மாலையே கிளம்பி விடுபவளின்,ஒருவார இருப்பு அவர்களுக்கு லட்டாய் வாய்ப்பு கிடைத்தது இவளை பற்றி பேசுவதற்கு.
அடுத்த பெரும் பிரச்சனை, வள்ளியம்மை வைத்திருந்த பணம் எல்லாம் கரைய ஆரம்பித்திருந்தது. அவர் வேலைக்கு எல்லாம் செல்வதில்லையே, சுபா தான் மாதம் மாதம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தாள். யாதவியும் கடைசி வருடப் படிப்பில் இருந்தாள். ஆக, நாட்கள் செல்ல, செல்ல கையிருப்பாய் வைத்திருந்தது எல்லாம் கரைய ஆரம்பித்ததில் பெரும் அவஸ்தைக்குள்ளாகிப் போனார் வள்ளி.
இதனை தொட்டே, இப்போதெல்லாம் அடிக்கடி அம்மா, மகள் இருவருக்கும் மனஸ்தாபம் எழ ஆரம்பித்திருந்தது.
பரணி என்பவன் அவளது மெளனத்தாலே, வள்ளியம்மையை அலற விட்டுக் கொண்டிருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, வழக்கம் போல் பரணி விடியும் முன்னே கடைக்கு சென்றிருக்க, இன்று அவனிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் என நினைத்திருந்த முகிலன், அவனும் எழுந்து கடைக்கு சென்றிருந்தான்.
தம்பியை கண்டு ஆச்சரியம் எழவில்லை பரணிக்கு, அவனிற்கு தெரியும் முகிலன் வருவான் என!
“வாடா, டீ ஏதும் குடிச்சியா?”
“இல்லை!”
“டீ கூட குடிக்காம ஓடி வந்தியாக்கும் என்னை பிடிக்கிறதுக்கு?” நக்கலாய் அவன் கேட்க,
“தெரிஞ்சா சரி” பதிலுக்கு வெட்டினான் தமையன்.
“சரி, சரி இந்தா மொதல்ல டீயை குடி, அப்பறம் பேசுவோம்.” ஏற்கனவே வாங்கி வைத்திருந்த டீயை அவனிற்கு ஊற்றி கொடுக்க, அதன் பிறகு வியாபாரம் சூடுப்பிடிக்க ஆரம்பித்திருந்தது.
காலை, மதியம் உணவினை அங்கேயே முடித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை வேறாததால் கூட்டம் அலைமோதியது.
மதிய உணவினை உண்டு பின்பும், ஓய்வெடுக்கவில்லை இருவரும்.
மாலை ஆனதும் தான் சற்றே ஓய்வு கிடைத்தது இருவருக்குமே. அப்போதும் பரணி முகிலனை கிளம்ப சொல்ல முடியாது என மறுத்து விட்டான்.
“முகிலா, நாளைக்கு வேலைக்கு போக வேணாமா? இதுக்கு மேல கூட்டம் கம்மி ஆகிடும் நான் பார்த்துக்கிறேன் நீ வீட்டுக்கு கிளம்பு.”
“இல்ல பரவால்ல ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுக்கு கிளம்பலாம்.”
“டேய்! சொன்னா கேக்க மாட்டியா? பாரு காலையிலிருந்து கொஞ்சம் கூட உனக்கு ரெஸ்டே இல்ல, நான் வீட்டுக்கு தான் வருவேன் எங்கே ஓடிப் போயிட மாட்டேன்.” இவ்வளவு தூரம் சொல்லியும் முகிலன் கிளம்ப மறுகின்றானே என்ற கோபத்தில் பரணியும் வார்த்தைகளை விட்டிருந்தான்.
“ஒரு வாரமா ஓடி தானே ஒளிஞ்சிட்டு இருக்க இல்லைன்னு சொல்லிடுவியா நீ?”பதிலுக்கு கோபப்பட்டு இருந்தான் முகிலன்.
“முகிலா, டேய்!” வீம்பு பிடிப்பவனிடம் என்ன பேசுவது என தெரியாது பரணி அமைதியாகிவிட்டான். சற்று நேரத்திலே பரணி கூறியது போல் கூட்டமும் கம்மியாக ஆரம்பித்திருந்தது.
“டேய் பரணி! நான் எத பத்தி பேச போறேன்னு நல்லாவே தெரியும் உனக்கு, அதனால தானே அவாய்ட் பண்ணிட்டு இருக்க இந்த ஒரு வாரமா?”
பதில் பேசவில்லை அவன்.
“அமைதியா இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காத பரணி, இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டாமல் நான் போக போறது இல்ல. உன் மனசுல என்ன இருக்குன்னு இன்னிக்கி நீ சொல்லியே ஆகணும். பாப்பாவ பத்தி கொஞ்சமாச்சு நினைப்பு இருக்கா உனக்கு? என்னதான் பண்ணலாமன்ற முடிவுல இருக்க நீ? அதையாவது வாயை திறந்து சொல்ல வேண்டியதுதான. உன்னை நெனச்சு அம்மாவும் அப்பாவும் கவலைப்படுறது உனக்கு தெரியுதா இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடந்துக்கிறியா?.
அன்னைக்கு நடந்த விஷயத்தை பத்தி யாரும் பேசிட கூடாதுன்னு தானே நீ இப்படி ஓடிக்கிட்டு இருக்க. இன்னும் எத்தனை நாளைக்கு ஓடுறதா எண்ணம் உனக்கு?” முகிலன் கோபமாய் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பரணியின் அலைபேசி அழைத்தது. அழைப்பை ஏற்றவன்,
“வந்துட்டியா? சரி கடைக்கு வா யாரும் இல்லை.” என கூற,
“யாருடா போன்ல யாரை கடைக்கு வர சொல்லிட்டு இருக்க?” முகிலன் கேள்விக்கு பதில் கூறவில்லை பரணி அவனின் விழிகள் எல்லாம், யாரையோ ஆவலாய் காண்பதற்கு காத்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவனது கண்கள் திடீர் மகிழ்ச்சியை பிரதிபலிக்க அதனை உணர்ந்த முகிலன், பரணி பார்த்த பக்கம் அவனும் பார்க்க மெல்லமாய் அதிர்ந்தான்.
அங்கே சாத்விகாவை தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள் யாதவி. கடையினை நெருங்கி விட்டவள் முகிலனை கண்டு ஒரு நொடி தயங்கி நிற்க, அதற்குள் தந்தையை கண்டுவிட்ட சாத்வி “அப்பா!” என அழைத்தப்படியே அவனிடம் தாவியிருந்தாள்.
“செல்லக்குட்டி!”குழந்தையை அள்ளி தூக்கி அணைத்தவாறு கொஞ்சவும் பிள்ளையின் முகத்தில் முத்தங்களை பதித்திருந்தான்.
“ப்பா காணோம்?” பிள்ளையின் கேள்வியில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது தகப்பனிற்கு. அவர்களின் உலகத்தில் சிறிது நேரம் உழன்றனர்.
அப்போதுதான் சிறிய தந்தையை கண்ட பிள்ளை “முகில்பா” என்றவாறு அவனையும் அழைத்து அவனிடம் தாவிட அள்ளி அணைத்துக் கொண்டான்.
“உள்ள வா யாதவி!” பரணி அவளை கடைக்குள் அழைத்து அமரச் செய்திருந்தான்.
“டீ ஏதும் குடிக்கிறியா?”
“இல்லை, வேண்டாம் மாமா.”
“சரி சொல்லு, என்ன விசயம்? காலையில போன் பண்ணி முக்கியமான விசயம் பேசணும்னு சொன்ன?” என்றவனின் பேச்சில் முகிலன், யாதவி எப்படி வந்தாள் என்பதை புரிந்துக் கொண்டான்.
“அது வந்து மாமா.. நீங்க அக்காவ வந்து எப்போ கூட்டிட்டு போவீங்க?”
“உங்கக்கா இதை கேட்டு வர சொன்னாலா?”
“அய்யோ, இல்லை மாமா, நான் வந்தது இங்க யாருக்கும் தெரியாது. பிரண்டு வீட்டுக்கு போறேன் சோறு தான் பாப்பாவ தூக்கிட்டு இங்க வந்து இருக்கேன்.” பரணி பதில் ஏதும் பேசாது அவளை பார்க்க,
“நீங்க சீக்கிரமே அக்கா வந்து கூட்டிட்டு போறது தான் நல்லது மாமா. அம்மா அவளை அங்க ரொம்ப படுத்தி எடுக்குறாங்க.” என்றவள் தாயின் எண்ணத்தையும் சுபாவின் தற்போதைய நிலையையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்திருக்க பரணி முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
“இன்னும் திருந்தலையா உங்க அம்மா?”கோபத்துடன் அவன் கேட்டிட பதில் பேசாது தலை குனிந்து விட்டாள் அவள்.
“எந்த நம்பிக்கையில நான் வருவேன்னு உங்க அம்மாவும், உங்க அக்காவும் நினைச்சுட்டு உட்கார்ந்து இருக்காங்க?”ஆத்திரம் அடங்கிடாமல் அவன் கேட்டிட,
“பரணி!”என அதட்டி அவனை கட்டுக்குள் வரவைத்தான் முகிலன்.
“அன்னைக்கு நடந்தது ரொம்ப பெரிய தப்புதான் மாமா. ஆனா இதுல என்னால எதுவும் பண்ண முடியாத நிலையில் தான் நான் இருக்கேன். என்னோட பேச்சு எங்க வீட்ல அம்மா கேட்கிற மாதிரி இல்ல அவங்க வீம்பு புடிச்சிட்டு உக்காந்துட்டு இருக்காங்க. ஆனா இதுல ரொம்ப பாதிக்கப்படுறது பாப்பாவும், அக்காவும் தான். அதனால தான் மனசு கேட்காம பாப்பாவ உங்கள பாக்க வைக்கணும்னு வந்திருக்கேன்.
எவ்ளோ சீக்கிரம் அக்காவையும் பாப்பாவையும் உங்க கூட கூப்பிட்டுக்க முடியுமா சீக்கிரம் கூப்பிட்டுக்கோங்க. அங்க அம்மா அக்காவை தினம் ஏதாவது சொல்லி படுத்திட்டு தான் இருக்காங்க. பத்தாதுக்கு இப்போ செலவு வேற அதிகமாக, அதனால சமாளிக்க முடியாமல் அதை வச்சு அக்காவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்துகிட்டு இருக்கு.” என கடைசி வரியை அவள் கூறும் பொழுது அவள் முகம் சிறுத்து விட்டது.”
பரணி இதற்கு பதில் பேசாது இருக்க, ஏமாற்றமாய் உணர்ந்தாள் யாதவி.
இதற்கு மேல் அவள் என்ன பேசிட முடியும்?
நிமடங்கள் நேரங்களாய் கடந்திருக்க,
“நான் கிளம்புறேன் மாமா, இதுக்கு மேல லேட் பண்ண முடியாது.” என்றபடி சாத்வியை நோக்கி கை நீட்ட, குழந்தை வர மறுத்தது.
“சாத்வி செல்லம், இப்போ சித்தி கூட போங்க சரியா.” என கொஞ்சி அவளை சமாதனப்படுத்தி யாதவியிடம் கொடுத்தவன், தன்னிடம் இருந்து பணத்தை எடுத்து யாதவியிடம் நீட்டினான்.
“செலவுக்கு வச்சுக்கோ!” என,
அந்த பணத்தை அவனிடம் இருந்து வாங்க அவள் தன்மானம் ஒத்துக்கொள்ளவில்லை.அவளின் அக்காவின் வாழ்க்கைக்காக தானே அவள் வந்தது, பணத்திற்காக அல்லவே!
“இல்லை, வேண்டாம் மாமா. என்கிட்ட இருக்கு. அதும் இல்லாம பார்ட் டைம் ஜாப் போயிட்டுதான் இருக்கேன் என்னால சமாளிக்க முடியும்.” என அவள் மறுத்திட, நொடியில் அவள் எண்ணத்தினை புரிந்துக் கொண்டவனின் முகத்தில் சிறுப் புன்னகை.
“உங்கம்மாகிட்ட பேச்சு வாங்கிட்டு சாப்பிடனும்னு எம்பொண்ணுக்கு என்ன அவசியம்? எம்பொண்ணுக்கு செய்ய நான் இருக்கேன் தானே?”
“அப்போ, அக்கா பேச்சு வாங்குனா பரவாயில்லையா மாமா?”
“நேரமாச்சு கிளம்பு நீ, ஒரே ஒரு உதவி அடிக்கடி பாப்பாவ மட்டும் வந்து காட்டு!” சமார்த்தியமாய் அவளது கேள்விக்கு பதில் கூறாமல் தவிர்க்க,
“எங்க அக்காவுக்கும், அவ பொண்ணுக்கும் சாப்பாடு கூட போட முடியாத அளவுல நான் இல்லை மாமா, உங்களுக்கு உங்க பொண்ணுக்கு செய்யனும்னா, வீட்டுக்கு கூப்பிட்டு வச்சு செய்யுங்க. அக்கா பண்ணது பெரிய தப்புதான் மாமா, இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். அவளோட தப்புக்கு பாதி எங்கம்மாவும் காரணம், அவளுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லி எல்லாம் நான் நியாயப்படுத்த போறதில்லை. அதுக்காக அவளை அப்பேடியே விட்டு, ரொம்ப பெரிய தண்டனையை கொடுத்துடாதீங்க. நான் வரேன்.” என கிளம்பியிருந்தாள்.
அடுத்து முகிலன் ஒருவார்த்தை பரணியிடம் பேசவில்லை. இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.
இவர்களின் வரவிற்காகவே மற்ற மூவரும் அமர்ந்திருந்தனர்.இரவு உணவினை முடித்துவிட்டு பரணி அவனது அறைக்கு செல்ல முயல,
“பரணி!” எடுத்திருந்தார் மகாலிங்கம்.
“அப்பா!”
“வந்து உட்காரு!” அவரது வார்த்தைகளை மீற முடியாது அவன் அமர்ந்திட,
“என்ன முடிவெடுத்திருக்க?”
மெளனம் மட்டுமே பதிலாக வந்தது.
“நான் எதைப் பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியும்தானே.” அப்போதும் வாய்திறக்கவில்லை அவன்.
“அவன் பேச மாட்டான்ப்பா, என்ன நினைப்பில இருக்கான்னே தெரியலை.” என்ற முகிலன், இன்று யாதவி வந்தது முதல் அனைத்தினையும் கூறியிருந்தான்.
“இப்பவாச்சும் வாயை திறந்து சொல்லுடா?” முகிலன் கேட்க,
“என்னடா சொல்லனும் உனக்கு?” சட்டென மூண்டுவிட்ட கோபத்துடன் பரணி.
“அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க? அண்ணியையும், பாப்பவையும் எப்போ கூட்டிட்டு வரப் போற?”
“யாதவி சொன்னதை கேட்டத்தானே! அந்தம்மா இன்னும் திருந்தாம என் பிள்ளைய வச்சே திட்டம் போட்டிருக்கு. நான் வருவேன்னு அவ்வளவு உறுதியாக சொல்லுச்சாம்ல,அங்க போயி நின்னு அதை உண்மையாக்க சொல்றியா?”
“சரி, வேண்டாம் வேற என்ன பண்ணலாம்னு இருக்க?”
“தெரியலை, நான் அதைப் பத்தி யோசிக்கலை, அதுக்கு விருப்பமும் இல்லை.”
“அப்போ, விவாகரத்து முடிவுல ஏதும் இருக்கியா?”
பதில் சொல்ல விருப்பமின்றி முகத்தை திருப்பிக் கொண்டான் பரணி.
“ஏதாவது, வாயைத் திறந்து சொல்லு பரணி? இப்புடி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?”
“எனக்கு இதைப் பத்தி பேச விருப்பமில்லைன்னு அர்த்தம், இதுல யாரும் தலையிட வேண்டாம்னு அர்த்தம்.”
“அப்போ, நாங்க பேசக் கூடாதுன்னு சொல்லுறியா, சாத்விய என்ன பண்ண போற?”
“என்னடா உனக்கு பிரச்சினை? இந்த பேச்சை விடுன்னு சொன்னா உனக்கு புரியாதா? எம் பொண்ணை எப்புடி பாத்துக்கனும்னு எனக்கு தெரியும். இது என்னோட வாழ்க்கை, நான் ஏற்படுத்திக்கிட்டது தானே, நானே முடிவெடுத்துக்கிறேன்.
என்ன பண்ணனும், பண்ணக் கூடாதுன்னு. இதுல யாரும் வராதீங்க. இதைப் பத்தி இனி யாரும் என்கிட்ட பேச கூடாது, பேசுனாலும் பதில் வராது. இதுவே கடைசியா இருக்கட்டும்.
என் வாழ்க்கையை நானே பாத்துக்கிறேன். இது எனக்கான பிரச்சனை, இதுல யாரும் வர்றதை நான் விரும்பலை.
இனி இதைப் பத்தி யாரும் பேசக் கூடாது, இல்லை பேசுவேன்னு சொன்னீங்கன்னா, நான் வீட்டுக்கு வர மாட்டேன்.” என இறுகிய குரலில் உரைத்தவன், யாரையும் கண்டுக் கொள்ளாது சென்றிருந்தான்.
அவனின் பேச்சில் முத்துபேச்சிக்கு அழுகை தான் வந்தது. சுபாவின் மீது கோபமிருந்தாலும், மகனின் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை அவர்.
“முத்து, போதும் உன் அழுகை, இதுனால ஏதும் மாறிடப் போறதில்லை. அதான் உன் பிள்ளையே சொல்லிட்டான்ல யாரும் தலையிடாதீங்கன்னு. ஒரு அப்பாவ, அவன் வாழ்க்கைய சரி பண்ணனும்னு நினைச்சேன்.
ஆனா, அவனுக்கு அதில விருப்பம் இல்லாதப்போ நம்ம விலகி நின்னு நம்ம மரியாதைய காப்பாத்திகனும். நம்மாள அவனுக்கு உதவிதான் செய்ய முடியும், ஆனா முடிவு அவன்தான் எடுக்கனும். அவனுக்கு என்ன செய்ய விருப்பமோ, செஞ்சுக்கட்டும்.இனி, இதுல நான் தலையிடுவதாக இல்லை.
முகிலா, இது உனக்கும் சேர்த்து தான். நீ உன்னோடத மட்டும் பார்த்தா போதும்.” என்றவர் மேலே ஏதும் பேசவில்லை.
குடும்பத்தினரிடம் பேசிவிட்டு வந்த பரணிக்கு அழுத்தம் தாங்கவில்லை, பிள்ளையின் வாசத்திற்கு ஏங்கியது அவன் உள்ளம். அதே சமயம் வள்ளியம்மையின் திட்டத்தை எண்ணி ஆத்திரமும் வந்தது.
எத்தனை எளிதாக அவனை ஏமாற்ற திட்டம் போட்டிருக்கிறார்!
“அப்போ டிவோர்ஸ் பண்ண போறியா?” முகிலனின் வார்த்தைகளை நினைத்து பார்க்க, அவன் நெஞ்சம் துடித்து அடங்கியது.
முடியுமா? அவனால்? மனைவி மீது கட்டுக்கடங்காத கோபம் இருக்கிறது தான். அதற்காக அவளை வேண்டாம் என ஒதுங்கி விட முடியவில்லை அவனால்?
என்ன செய்வது என அவனிற்கே தெரியாத நிலை. மனைவியை மன்னிக்கவும் அவனிற்கு முடியவில்லை, பிரிவதற்கும் தைரியம் இல்லை.
ஆனால், மனைவியுடன் மனம் ஒத்து வாழ்ந்திட முடியுமா அவனால்? எந்த கே
ள்விகளுக்கும் அவனிடம் பதில் இல்லை.
அவனது முடிவினை காலமே எடுக்கட்டும் என விட்டுவிட நினைத்து, அதன்படியே விட்டுவிட்டான்.இனி அவன் எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை,