எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

36 manjam பைனல்

subageetha

Moderator
நிரஞ்சன் -அதி உடல் அளவில் இன்னும் இணையவில்லை. தம்பதியர் மனதளவில் இணைந்து, அதை பகிர்ந்துக்கொள்ள, ஆசையை, மோகத்தை ஒருவருக்கொருவர், உடலின் தேவையையும் பூர்த்தி செய்யும் ஒன்று உடலுறவு.


வயிற்று பசிக்கு உணவு, உடல் பசிக்கு காமம் என்பதல்ல தாம்பத்தியம். இது இருவருக்கும் வார்த்தைகளால் சொல்ல தேவை இல்லாமலே புரிந்ததுதான்!


ஒரு வகையில் இருவருக்குமான காதல் நாட்கள் இவை. அதிக்கு மணம் வீசியது மனது. உடல் சற்று பூசினாற்போல், முகம் ஜொலிப்புடன் சட்டென்று பார்ப்பவர்களை கவரும் விதமாய் இருக்கிறாள் அதி. இறுக்கம் தளர்ந்து, எப்போதும் நீங்காமல் முகத்தில் உறைந்துவிட்ட புன்னகை அவளை இன்னும் அழகாக்கியது.

அந்த அழகு நிரஞ்சனை அவள் பின்னால் இன்னும் சுற்ற வைத்தது.தனி அறை இன்னும் மாறவில்லை. குட்நைட் சொல்லும்போது,

" நரகமாகும் காதல் கணங்கள்."


ஒரே அலுவலகம்,என்பதால் இருவரும் ஒன்றாகவே சென்று வருவதும் காதலை வளர்க்கும் நீரானது.


நிரஞ்சன் ஆடிட்டிங்வேலை என்று வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லும் சமயங்களில் மட்டும் அதிக்கு அழுகை வந்துவிடும்.


எவ்வளவு பரிசுகள் வாங்கிக் கொடுத்தாலும் கூட, 'அவன் இருப்புக்கு ஈடாகாது'என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது.

இந்தக் காதல் கணங்களை தான் அவள் உள்ளுர எதிர்பார்த்து இருந்தாள். நிரஞ்சன் காட்டும் அன்பு... அதியை நிரஞ்சன் பார்த்த அன்றிலிருந்து இன்றுவரை அவனுக்கு இவள் ஸ்பெஷல் தான்.


இது தெய்வம் போட்ட முடிச்சு. எந்த காரியமும் காரணமின்றி நடப்பதில்லையே!


வித்யா- விஸ்வம் இருவரும் 'அதி குழந்தை உண்டானால் வருகிறோம் 'என்றுவிட்டார்கள். அதியின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று நித்தமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் மகளைப் பார்க்கும் ஆசையை மனதுக்குள் அடக்கி வைக்கிறார்கள்.

மகள் முழுமையாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். பெற்றவர்கள் ஆனாலும் கணவன் மனைவி உறவு வலுப்பட யாருடைய தலையீடும் இருக்க கூடாது. முக்கியமாக அதி போன்றவர்கள் விஷயத்தில். இதை வித்யா - விஸ்வம் இருவரும் புரிந்து கொண்டிருப்பது வரம்!

நிரஞ்சன் அதி ரிசப்ஷன் முடிந்த உடனேயே, சுமனாவின் அப்பா அவளுக்கு திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்கப் போவதாகச் சொல்லி விட்டார். ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த சுமனாவுக்கு பக்கபலமாய் இருந்தவன் ஆர்யன். சுமனா நிரஞ்சன் மீது வைத்திருந்த 'அபிமானம் நிச்சயம் காதல் அல்ல' என்பது ஆர்யனின் அபிப்ராயம். ஆனால்,அதை சுமனா புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அவன் நம்புகிறான்.


அவளிடம் இந்த முறை வாய்விட்டு திருமணத்திற்காக கேட்டு விட்டான். ஆனால்,இன்னொருவனை மனதளவில் நினைப்பவள் எப்படி உன்னை ஏற்பேன் என்று நின்றாள் சுமனா.


'எப்படியும் வேற யாரையாவது உங்க அப்பா பார்த்து கல்யாணம் செய்து தானே வைக்க போறாரு... அந்த மாப்பிள்ளை கிட்ட என்கிட்ட பேசற மாதிரி பேச முடியாது. உன்ன நல்லா தெரிஞ்சவன், உன்கூட பழகின என்னை கல்யாணம் செஞ்சுக்க ஏன் யோசிக்கணும்... சுமா' என்று ஆர்யனின் குரல் ஆழ்ந்து ஒலித்தது.

அவன் சொற்களில் இருக்கும் நியாயம் புரிந்தவளாக ஆர்யனை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு விட்டாள் சுமா. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, சுமாவின் அப்பாவிடம் பேச, அவர் ஆர்யனின் குடும்பத்திடம் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

நிதானமாய் சுமனாவை கையாண்டால் அவள் தன்னை காதலிக்க தொடங்குவாள் என்ற எதிர்பார்ப்புடன் மண மேடையில் அமர்ந்தான் ஆர்யன்.

ஆர்யனுடன் முடிந்தவரை சந்தோஷ மாக குடும்பம் நடத்துவேன். இனி, என் வாழ்க்கையில் இவனுக்கு மட்டும் இடம் என்ற தெளிவுடன், அவன் அணிவித்த திருமாங்கல்யத்தையும், உச்சி குங்குமத்தையும் ஏற்றாள் மன(ண)பெண் சுமா. அங்கும் புதியதாய் ஒரு காதல் கதை தொடங்குகிறது.


இந்தியா வந்துவிட்ட வினய், அதிக்கும் நிரஞ்சனுக்கும் திருமணம் முடிந்ததை அவன் பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டவனுக்கு உடல் முழுவதும் காந்தியது. ஏற்கனவே, "தயா வஞ்சகமாக தன்னை பிரிந்து வேறு ஒருவனை மணம் முடித்தாள். இங்கு அதி,தன் திருமணம் முன் இருந்த

கள்ளக்காதலனை இப்போ கல்யாணம் செய்துவிட்டாள்... **** *****. இவளுக ரெண்டு பேருக்கும் நா என்ன தப்பு செஞ்சேன்... என்று ஆத்திரம் அடங்காது கத்தினான்.


'இரண்டு கல்யாணம் செய்தும் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியலைன்னா பிரச்சனை யாருகிட்ட வினய்' என்று அவன் பெற்றோர் கேட்டது வேறு அவனுக்கு அவமான உணர்வை தூண்டியது.

தயாவை ஒன்றும் செய்ய முடியாத நிலை அதியை வாழ விடக்கூடாது என்று மாறியது. ‘என்ன செய்வது’ என்ற எண்ணங்களுடனேயே பெங்களூரு பயணமானான் வினய்.


முதலில் கொஞ்ச மாதங்கள் தன் வேலையில் மட்டும் கவனத்தை பதித்தவன் மனதிற்குள் பழி வெறியுடன் கூடிய காம வெறி 'தீ 'என்று வளர்ந்து இருந்தது.


அதியின் இருப்பிடம், வேலை செய்யும் இடம், நிரஞ்சன் -அதி இருவரின் அன்றாட வழக்கம் என அனைத்து விஷயங்களையும், ஒரு துப்பறியும் நிறுவனம் மூலம் தெரிந்து கொண்டவன் நிரஞ்சனின் அடுக்ககம் அருகிலேயே ஒரு சர்வீஸ்ட் அபார்ட்மெண்ட்டில் வாடகைக்கு வந்துவிட்டான்.


நிரஞ்சன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வதை அறிந்துகொண்டவன் வாய்ப்புக்காக காத்திருந்தான்.


துப்பறியும் நிறுவனம் மூலம் அதியின் சமீப புகைப்படம் கிடைக்க பெற்றவனின் இரவுகள் அவளை தேடியது.

சியாட்டல் வீட்டில் அவளுடன் கழித்த இரவுகள் அப்போது லயிப்பில்லை என்றவனுக்கு இப்போது இனித்தது. அவளது இப்போதைய தோற்றம் அவனுக்கு போதை ஏற்ற காமம் எனும் உணர்வு அவனை பித்தனாகியது.


இப்போது அவள் தன்னுடையவள் இல்லை.." மாற்றானின் மனைவி" என்பது அவனது புத்திக்கு புரியவில்லை.

"பிறன்மனை நோக்காமை "என்ற மொழி மறந்தான்.


போதாக்குறைக்கு, அதியை கல்யாணம் செய்த பிறகு தான் தன் வாழ்வில் இவ்வளவு இறக்கங்கள். அதற்கு அவள் ஈடு செய்தாகவேண்டும் என்று வேறு புத்தி சொல்ல...


நிரஞ்சன் வழக்கம் போல் ஆடிட்டிங் வேலையாக துபாய் சென்றுவிட,மூன்று நாட்கள் காத்திருந்தவன், ஞாயிற்று கிழமை இரவு, யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு, மெல்ல அதியின் வீடு நோக்கி பயணம் ஆனான். அவளுடன் இன்று இரவை கழித்து விட்டால், முன்னாள் கணவனை மறக்க முடியாது அதி அவனுடன் இரவை பகிர்ந்து கொண்டாள் என்ற எண்ணத்தில் நிரஞ்சன் அவளை விட்டுவிட கூடும். பிறகு, முடிந்தால் அவளுடன் வாழ்க்கையை தொடர முயற்சி செய்யலாம் என்ற கேடுகெட்ட எண்ணம் அவனுக்குள். அத்துடன் சி. ஏ முடித்திருக்கும் அதி, அவள் சம்பளம், அவள் அப்பா கொடுக்க போகும் சொத்து என்ற கண்ணக்கீடுகள் வேறு அவனை உந்தி தள்ளியது.


அதி வீட்டு காலிங் பெல் ஒலிக்க,"அதி நிரஞ்சன் இன்று வருவான்தான்... இவ்வளவு சீக்கிரம்... ம்ம்ம்... என்ற யோசனையுடன் கதவை திறந்தாள்.கதவில் பதிந்திருக்கும் கண்ணாடி வழியே பார்த்திருந்திருக்கலாம். விதி வலியது!
வெளியே, அதி சற்றும் எதிர்பார்க்காத, வாழ்வில் மீண்டும் சந்திக்க விரும்பாத வினய்.

முகம் முழுவதும் புன்னகையுடன், கையில் பூக் கொத்துடன் நின்று கொண்டிருந்தவனை பார்த்து அவளுக்கு கால்கள் நடுங்கியது.காரிடார் காலியாய் இருக்க, அவள் மனதுள் பயம்!


அவனிடம் உணர்வுகளை காண்பித்துக்கொள்ளாமல், சமாளித்தவள் 'நீ... நீங்க எங்க இங்க... 'என்று கேட்டு வைத்தாள்.


'’ உள்ள வாங்கன்னு கூப்பிட மாட்டியா... அதிதி’ என்றவாறே, அவள் அழைப்பதற்கு நிற்காமல் அவள் மீது உரசியவாறே வீட்டுக்குள் நுழைந்தவன், வெகு ஸ்வாதீனமாக சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.


"உனக்கும் நிரஞ்சனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு அப்பா சொன்னாரு. அதான் பாத்து வாழ்த்திட்டு போகலாம்னு.. “என்று பார்வையை சுழற்றினான்.


திருமணம் முடிந்து இத்துணை மாதங்கள் கழித்து வாழ்த்து சொல்ல வந்தானா என்று அவள் மனம் எச்சரிக்கை மணி அடிக்க அமைதியை ஆயுதமாக எடுத்துக்கொண்டாள்.


ஹாலில் இருக்கும் நிரஞ்சன் -அதியின் ப்லொவ் அப் வினய் அவனை தகிக்க செய்ய,

''வாஷ் ரூம் போகணும் அதி'' என்றான்.'

பதட்டத்துடன் வழி காட்டியவள் அப்படியே அமர்ந்து விட்டாள்.

உஷாராக வாயில் கதவை திறந்து வைத்தவளுக்கு தொண்டை வறண்டது. காபி குடித்தால் பரவாயில்லை போல் இருக்க, நிரஞ்சன் மீது கோவமாய் வந்தது.'எப்போது வருவான் இவன் ' என்று யோசித்து வினய் வருகை பற்றி குறும் செய்தியும் நிரஞ்சனுக்கு அனுப்பி விட்டாள்.


ஏர்போர்ட்டிலிருந்து வந்து கொண்டிருந்த நிரஞ்சனுக்கு இதை படித்ததும் பிபி ஏகதுக்கும் ஏறியது. வீடு சேர இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே என்று பதைத்தது அவன் மனது.


பொறுக்கி இவனுக்கு என்னோட வீட்டுல என்ன வேல என்று நிரஞ்சனின் மனம் வினய்யை திட்டி தீர்த்தது. வினய் மட்டும் இன்று என் கையில் சிக்கினால்... என்று கொலை வெறியில் இருந்தான் நிரஞ்சன்.


நிரஞ்சன் வீட்டிலோ, வினய் சாதாரணமாக அதியுடன் பேசிக்கொண்டு இருந்தான். நொடிக்கொர் முறை வாசலையும் மொபைல் போனையும் பார்த்து கொண்டு தன் பேச்சில் கவனம் வைக்காத அதியை என்ன செய்தால் தகும்... ஹ்ம்ம்?


"அதி, எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா...


ஹான்..

காஃபி இந்த நேரத்துலயா என்று விழித்தவளை, “ஆமா அதி உன் கையாள காபி ... ரொம்ப நாளாச்சு. ஏக்கமா இருக்கு…” என்று அவள் உதடுகளில் முற்றுகை இடும் கண்களை அடக்க முடியாமல் பதில் சொன்னவனை சரியாக கவனித்திருக்கவில்லை அதி. கவனித்திருந்தால் சுதா ரித்திருக்கலாம். அவள் கவனம் நிரஞ்சனை சுற்றியே இருக்க வேறுவழி இன்றி அடுங்களைக்குள் சென்றாள் பெண்.


சற்று நேரத்தில் சப்தம் வராமல் வாசல் கதவை சாற்றியவன் பூனை போல் அடி வைத்து மெதுவே அடுக்களைக்குள் சென்றான். அவன் நோக்கம் பின்னால் அமைதியாக சென்று கட்டியணைத்து... இன்று எப்படியாவது அவளை பெண்டாள வேண்டும் என்பதே!


அடுக்களையின் ஜன்னல் கண்ணாடி வழியே வினய் வருவதையும் அவன் கண்கள் சொல்லும் செய்தியையும் மின்னல் வேகத்தில் படித்தவள் சற்றும் தாமதிக்காமல் அடுப்பில் கொதிக்கும் நீரை பாத்திரத்துடன் தூக்கி கொட்ட, அந்த கொதி நீர் அவன் இடுப்பு மற்றும் அதற்கு கீழே உள்ள பாகங்களை பதம் பார்த்தது.


எரிச்சல் தாங்காமல் அவன் கத்த, அதே சமயம் நிரஞ்சன் தன்னிடம் உள்ள சாவி வைத்து வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். அவனுடன் வினய் பெற்றோரும்.


வினய் வீட்டில் கொஞ்சம் நாட்கள் கழிக்க வந்தவர்கள் மனதில் மகனின் தவறு புரிந்தவர்கள், அதியிடம் மன்னிப்பு கேட்கும் எண்ணத்துடன் வினய் வீட்டில் இல்லாத நேரம் என்று இப்போது காண வர, கீழே லிப்ட்டில் நிரஞ்சனை பார்த்து பேசிக்கொண்டு வர,


அதி வீட்டில் வினய் நிலைமை மோசம். நிரஞ்சனை கண்ட அதி வேகமாக வந்து நிரஞ்சனை கட்டி கொண்டாள். அவள் உடல் அதிர்ந்து நடுங்கியது.

வினய் அவனது பெற்றோர் நடந்தது அறிந்து,அதி- நிரஞ்சன் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு, மகனை மருத்துவமனை நோக்கி அழைத்து செல்ல, நிரஞ்சன் அவர்களுடன் சென்று வினய்யை சேர்த்து, அவன் பெற்றோருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு வந்தான்.


வினய் அனேகமாக இனி எந்த பெண்ணுடனும் இரவுகளை கழிக்க முடியாது. வீட்டுக்கு வந்தவன் குளித்துவிட்டு வர, பொறுமையாக காத்திருந்த அதி, அதற்குமேல் தாங்காது நிரஞ்சனை இறுக்கி கட்டிக்கொண்டாள்.

நிரஞ்சனை முத்தங்களை முத்தாக்கி அர்ச்சத்தாள் அதி பெண்.
அவள் கண்களில் கண்ணீர் இல்லை. பயம், அதிர்ச்சி.. ம்ஹும் எதுவும் இல்லை.


நிரஞ்சன் மீதான அப்பட்டமான காதல் வழிந்தது. தான் பட்ட துன்பங்களுக்கு காரணமான அரக்கனுக்கு தண்டனை கொடுத்த சந்தோஷம். இத்தனை நாட்கள் அடைத்து கொண்டிருந்த எதுவோ இன்று விலக, தயக்கம் இன்றி அவள் தன்னை தனது நிரஞ்சனிடம் முழுவதும் கொடுக்க தயாராகிவிட்டாள்.

அவள் கண்களின் அழைப்பு புரியாதாவனா அவன்? இல்லை அவளது மனதின் தவிப்புகள் அறியாதவனா...

அவன் அணைப்பு அவளுக்கு காதலின் அடுத்த கட்டத்தை காட்டியது.



சிநேகிதனே சிநேகிதனே

ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்

கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே

இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு

அணைப்பு வாழ்வின் எல்லை வரை

வேண்டும் வேண்டும் வாழ்வின் எல்லை

வரை வேண்டும் வேண்டும் சிநேகிதனே

சிநேகிதனே ரகசிய சிநேகிதனே...


சின்னச் சின்ன

அத்துமீறல் புாிவாய் என்

செல் எல்லாம் பூக்கள் பூக்கச்

செய்வாய் மலா்களில் மலா்வாய்..

பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்

நான் தூங்கும் போது விரல் நகம்

களைவாய் சத்தமின்றி துயில்வாய்...


ஐவிரல் இடுக்கில்

ஆலிவ் எண்ணெய் பூசி

சேவையும் செய்ய வேண்டும்

நீ அழும்போது நான் அழ

நோ்ந்தால் துடைக்கின்ற

விரல் வேண்டும்...


சிநேகிதனே சிநேகிதனே

ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்

கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே


நேற்று முன்னிரவில்

உன் நித்திலப்பூ மடியில் காற்று

நுழைவது ஓ உயிா் கலந்து

களித்திருந்தேன் இன்று

விண்ணிலவில் அந்த ஈர

நினைவில் கன்று தவிப்பது

ஓ மனம் கலங்கி புலம்புகிறேன்


கூந்தல் நெளிவில் எழில்

கோலச்சாிவில்

கா்வம் அழிந்ததடி..

என் கா்வம் அழிந்ததடி


சொன்னதெல்லாம்

பகலிலே புாிவேன்,

நீ சொல்லாததும்

இரவிலே புாிவேன் காதில் கூந்தல்

நுழைப்பேன்...


உந்தன் சட்டை நானும்

போட்டு அலைவேன்...

நீ குளிக்கையில்

நானும் கொஞ்சம் நனைவேன் உப்பு

மூட்டை சுமப்பேன்


உன்னை அள்ளி

எடுத்து உள்ளங்கையில் மடித்து

கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்...

வேளைவரும் போது விடுதலை செய்து

வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்...


சிநேகிதனே சிநேகிதனே

ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்

கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே....





ஐந்து வருஷங்களுக்கு பின்,


வித்யா- விஸ்வம் நிரஞ்சனின் அடுக்ககத்திலேயே பக்கத்து வீடு விலைக்கு வர வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். அதி ஏற்கனவே ஒரு பெண் குழந்தையை பெற்றவள் இப்போது இரண்டாவது முறையாய் தாய்மை அடைந்திருக்கிறாள். வயிற்றில் இரட்டை குழந்தைகள் என்பதால் அவளால் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு போவதற்கு அதிக்கு இப்போதைக்கு இஷ்டம் இல்லை. குழந்தைகளுடன் அதிக நேரம் இருக்க வேண்டும். தான் சிறு வயதில் ஏங்கியது... அம்மா உடன்.


எப்படியும் நிரஞ்சன் அதிகமாவே சம்பாதிக்கிறான். அது போதும். தேவை ஏற்படும் போது,வேலைக்கு நிச்சயம் போவேன் என்ற எண்ணம் அவளுக்குள் பதிந்து விட்டது. நிரஞ்சனும் மறுக்கவில்லை.


மூத்த குழந்தையை வித்யா பார்த்துக்கொள்ள, நிரஞ்சன் வீட்டில் அவன் அம்மா மருமகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்.


இவ்வளவு வருஷங்களுக்கும் சேர்த்து அதி நிறைய பேசுகிறாள்.


நிரஞ்சன் அலுவலகம் விட்டு வந்த பிறகு அதிக்கு கால்கள் பிடித்து விடுகிறான். அவளை தோள் சாய்த்துகொண்டு கொஞ்சுகிறான்.


ஒற்றை பிள்ளைகளாக பிறந்த அதி -நிரஞ்சனுக்கு இப்போது மூன்று குழந்தைகள். உடனேயே இருக்கும் பெற்றோர்கள்.


வாழ்க்கை சக்கரம் நிறைய இவர்களை சோதித்து பார்த்துவிட்டது.


நிரஞ்சனின் காதல் காலத்தை விட வலியது
அது இருவரையும் இணைத்துவிட்டது.


அவர்கள் வாழ்வை இனியாவது அவர்கள் இனிமையாக, அமைதியாக கழிக்கட்டும்.

நாமும் அவர்களை வாழ்த்துவோம்!

 
Top