Shara Nilaam
Moderator

கருணையில் உருவான உள்ளத்தை சுமந்தே கருவினில் உருவெடுத்தாய் பெண்ணே...
தரணியில் பாதம் பதித்து குழந்தை மழலையிலே கொஞ்சி பல இனிமையான உணர்வுகளை தந்த செல்ல கண்ணே...
பள்ளிப்பருவத்தில் சீராக கல்விப்பயின்று பல பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்று வீட்டுக்கும் நாட்டிற்கும் பெருமையை தேடி தந்த கண்ணியம் நீ....
பருவம் அடைந்த முதல் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் காது மூக்கு கழுத்து கைகள் கால்கள் என பல தங்க ஆபரணங்களால் அலங்காரம் செய்து விலங்கிடப்படுகிறாய்...
பிறந்து வளரும் வரை தந்தை கட்டுபாட்டில்...
பின்னர் மாங்கல்யம் என்ற பெயரில் கணவன் பொறுப்பில் பதவி பிரமாணம் செய்து கொள்கிறாய்...
பெண்மையை போற்றவே தாய்மை முத்திரையை பதித்தாய்...
இவ்வளவும் மற்றவர்களுக்காக செய்தாய்...
கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைகளை தாண்டியே.. நீ நீயாக
எப்போழுது வாழப்போகிறாய்...
பாரதியார் கண்ட புதுமை பெண்ணாக எப்போழுது மாறப்போகிறாய்...
உன் பெண்மை நான் உன்னை கேட்கிறேன் பதில் சொல்வாயா பெண்ணே...
ReplyForward |
Last edited: