Shara Nilaam
Moderator

தினம் ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன் உனக்கு...
பதிலுக்கு நீயும் அனுப்புகிறாய்...
எழுத்தற்ற கடிதங்களை...
எழுத்துக்கள் இல்லாத வெறும் காகிதமாவது உன்னிடம் இருந்து வருகிறதே...
மகிழ்கிறேன்...
உன் வெற்று கடிதங்களை பார்த்து...
நாம் இருவரும் சந்தித்த முதல்
நம் கண்கள் பேசிய பாஷைகள்...உதடுகளின் புன்னகை
இவ்வாறு மெளனம் பேசிய... தருணங்கள்...
நினைத்தாலே சில்லேன்று சிலிர்த்தது....
சில நாட்களாக நான் உனக்கு அனுப்பிய கடிதங்கள்... உன் முகவரி தொலைத்து விட்டு... என்னையே வந்து சேருகிறது..
புரியாமல் குழம்பி நின்றேன்...
உன் முகவரி நாடி முகம் காண வந்தேன்...
நீ அங்கு இல்லை..."
ஊரை விட்டே சென்றதாக என் செவிகளில் வீழ்ந்தது..
எங்கு சென்றாய்... ஏன் சென்றாய்...
என் முகவரியை கூடவா மறந்தாய்..
கார்த்திருந்தேன் பல மாதங்கள்...
முடியவில்லை..
அவளை தேட வேண்டும்...
அதற்காகவே ஒவ்வொரு ஊராய் போய் தபால்காரனாக கடிதங்களை..
வீடு வீடாக பரிமாறுகிறேன்...
ஏதாவது ஒரு முகவரியில்... அவள் முகம் காண்பேனா என்று...
பல வருடங்கள் கடந்துவிட்டேன்...
என் தேடல் தொடர்கிறது...
என் உயிராவது அவள் மடியில்
சாய வேண்டும் என்று உயிரோடு..
எல்லையற்ற காதலுடன் காத்திருப்பான்...
Last edited: