எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 28

subasini

Moderator
மனம் - 28

சீமந்தம்…
தாய்மையின் சிறப்பைக் கொண்டாடும் விழா…

கை நிறைய வளையல் பூட்டி முகத்தில் சந்தனம் பூசி…

பெரியவர்கள் ஆசியோடு நல்ல விதமாகப் பிள்ளையைப் பெற்றெடுக்கத் தைரியமும், உடல் ஆரோக்கியம் தர அனைவரும் ஆசீர்வாதம் செய்யும் இந்த விழாவில் மனதில் வலியோடு அமர்ந்து இருந்தாள் தாரா.


அவள் அருகே அமரனை இருத்திருந்தாள் … அவளின் வேதனையைக் கண்டு புனிதாவிறகு முகம் சினத்தில் சிவந்தது.

சீமந்தம் விழாவில் எல்லோரும் பரபரப்பாக இருந்தனர்.

தாரிகாவிற்குத் தாராவிடம் பேசவே சங்கடமாக இருந்தது.

தன்னால் அவளுக்கு என்றுமே துன்பம் மட்டுமே என்று வேதனைப் பட்டாள்…

தாராவிற்கு நலுங்கு வைத்து அவளை ஆரத்தழுவிய தாரிகா, “என்னை மன்னித்து விடுதாரா” என்றதும் அழகை அவளை ஆட்கொள்ளத் தாயாகவும் அவளை அணைத்து அழுதாள்.

அங்கே மிகவும் உணர்ச்சி வசப்
பட்ட நிலையில் உணர்வுகளின் அழுத்ததில் முகம் இறுக நின்றிருந்தான் அதியமான்.

தன் அண்ணன் அருகில் செல்லவே இல்லை சதீஷ்.

அவன் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் அண்ணனின் இந்த வேதனையைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று மனதைத் திடபடுத்திக்கொண்டான்.

இன்று அவன் வாழும் வாழ்க்கை எல்லாம் அண்ணனின் தயவால் என்பதை மறந்திருந்தான். அவன் விட்டுக் கொடுத்துச் சென்ற தொழில்... தன் பெயரில் மாற்றிய சொத்து எல்லாம் தான் இன்று நிமிர்ந்து நிற்கும் சதீஷ்.

என்ன தான் சதீஷ் தொழிலில் முன்னேறியப்போதும் திறமையால் முன்னேறும் அதியமான் உடன் போட்டிப் போட முடியவில்லை. அவனுக்கு அந்தச் சுணக்கம் மனதில் இருந்தது… ஆம் அவனை விடப் பல மடங்கு உயரத்தில் இருந்தான் அதியமான்.

தொழில் துறையில் அவன் என்றும் முடிசூடா மன்னன் என்று பெயர்ப் பெற்றிருந்தான். அவனோடு சேர்ந்து இனியனும் இருப்பதால் இருவரும் இந்தப் பயணத்தில் முன்னிலையில் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை என்று பெயர் இருந்தது.

இதுவும் அவனுக்குப் புகைச்சல் உண்டுப்பண்ணியது. சதீஷைத் தனியாக அழைத்துச் சென்று பொறுமையாகப் பேசினார்சாந்தி.

“சதீஷ்…‌ ரொம்பப்பெரிய தப்புபண்ணற…‌ இத்தனை வருடங்கள் கழிந்து வந்து பையனைக் கேட்பது, அவன் எதிர் காலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு உனக்குப் பதில் இருக்காது இப்படியே விட்டு விடு” என்றார்.

“உங்களுக்கு வேண்டும் என்றால், பெரிய பையன் மகான் என்று இருக்கலாம்… என்னால் விட்டுகொடுக்க முடியாது” என்றான்.

“அவன் விட்டுக் கொடுத்துப் போனதால் தான்… நீ இன்றைக்கு நல்ல தொழில் செய்து வசதியாக இருக்கிறாய்… அதற்கு அவன் பொண்டாட்டியும் காரணம் என்பதை மறந்திறாதே” என்று தாராவிற்குச் சப்போர்ட் செய்தார்.

“என்ன அம்மா இப்போ, பெரிய மருமகள் தான் பிடிக்கும் போல" என்ற‌ இளக்காரமான அவன் பேச்சில் "மரியாதை இல்லாமல் பேசாதே டா, அவள் உன் அண்ணி" என்றார்.


"அவள் என்ன பண்ணினாள் தெரியுமா உங்களுக்கு… நான் ஆக்ஸிடென்டாகி ஒரு வருஷம் கஷ்டப் பட்டத்துக்கு அவள் தான் காரணம்" என்றான் கோபமாக…

"நீ‌‌ என்ன செய்தாய் என்று மறந்துப் பேசாதே சதீஷ்.. படிக்கும் வயதில் தவறிய உன்னை அவள் அடித்தது தவறாகப் படவில்லை எனக்கு… ஆனால் அவளை ஒழுக்கம் தவறியவள் என்று நீ கூறியதை மறந்து விட்டாயா?... நீயும் உன் மனைவியும் செய்ததவறை அவர்கள் திருத்தி எழுதி இருக்காங்க... அதற்கு நன்றியுடன் நடந்து கொள்" என்றார்…

"என்னம்மா ரொம்ப நல்லவங்க போல வேசம் போடுறீங்க… நீங்களும் அவங்களைத் தள்ளி வச்சீங்கதானே" என்ற அவன் வக்கரமான வார்த்தைகளைக் கேட்டு …‌

"எனக்குத் தெரியாதே... அந்ததவறை நீ‌, செய்துவிட்டு‌அமைதியாக இருக்கிறாய் என்று… நான் போற்றி வளர்த்திய பெரிய மகன் ஒழுக்கம் தவறி விட்டான் ... என் வீட்டின் மூத்த மருமகள் ரகசியமாக வாழ்ந்துபிள்ளைப்பெற்றவள் என்ற என் கோபம் சிந்திக்கும் அறிவைத் தடைச்செய்துவிட்டது. பல நேரம் எனக்குத் தோன்றியசந்தேகம் நான் வாய் விட்டு அவளிடம் கேட்டு இருந்தால் ஒருவேளை சொல்லியிருப்பாளோ என்னமோ... என் குடும்ப மானத்தைக் காத்த என் பெரிய மகனின் மேல் நம்பிக்கை இல்லாமல் நான் தவறிழைத்து விட்டேன் என்று அழுதார் சாந்தி. அவரின் வார்த்தைகளில் எவ்வளவு பெரிய தவறை இழைத்து விட்டேன் என்ற குமறல் இருந்தது.

"ரொம்பப் பேசாதீங்க. உங்களிடம்‌, பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்று அவரை அவமதித்துச் செல்லும் தம்பியைப் பார்த்தான் அதியமான்.

"உனக்காக என்னிடம் போராடிய அம்மா மரியாதை இல்லாமல் இன்னொரு முறைபேசினால்... அப்பறம் குடும்பத்தில் மூத்தவனாக உன்னிடம் என் அதிகாரத்தை நிலை நாட்ட வேண்டி வரும்... அந்தச் சூழலில் என்னை நிற்க வைக்காதே" என்றவன் தன் தாயை அழைத்துச் சென்றான்.

"நீங்கள் தாராவின் அருகில் உக்காருங்க அவள் அமரனை எங்களையும் விட மாட்டேங்கறா… அவன் போய்ச் சாப்பிட்டு வரட்டும்" என்றான்.

"நளினி இங்கே வாம்மா…‌ நீ போய் உன் பையனுக்கு அமரனுக்குச் சாப்பிட வை…‌ அவன இங்கே நடக்கும் விஷயங்கள் பார்த்துகுழம்ப வேண்டாம். குழந்தையோடு வாழ்க்கையில் இப்போ சில மாற்றங்கள் வருகிறது, அதை அவன் எந்த மன அழுத்தம் இல்லாமல் எதிர் கொள்ள வேண்டும் நினைக்கிறேன்" என்று அவளோடு அனுப்பி வைத்தான் அதியமான்.

பின் தன்னவளை அணைத்து "இங்கே பார்தாரா... நீ தான் அமரன் நம்மளோட இருக்கனும் சொன்னாய்... நான் சரியென்றேன்.... இப்போது தாரிகாவோடு அனுப்ப வேண்டும் என்று நீ தான் முடிவு எடுக்கிறாய்.... அதற்குச் சரி என்று தான் சொல்லறேன். கோபம் தான் எனக்கு ஆனால் நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது... அமரனை நம் பாசம் கட்டி இழுத்து வருமா? இந்த விதி என்று நாம் காத்திருக்கலாம்… நம் அன்பு சுயநலமற்றாதாக இருக்கும் என்றால் நல்லது நடக்கும். இப்படி நீ வேதனைபட்டு, உன் உடல் நிலைபாதிக்க வைக்காதே, உன் வயிற்றில் அமரனின் தம்பியோ தங்கச்சியோ இருக்கா என்பதை மறக்காதே" என்றான்.

கணவனின் அரவணைப்பில் ஆறுதல் தேடினாள் தாரா.
இதெல்லாம் பார்த்தபுனிதா வேகமாகத் தாரிகாவைக் கைபிடித்து இழுத்துச் சென்றார்.

தன் கையில் இருக்கும் மகனை வேகமாக மகேந்திரன் இடம் கொடுத்தவள் தாயின் இழுப்பிற்குச்சென்றாள் தாரிகா.


"ஏன் டி இப்படி அவளை‌ வேதனைப்படுத்திப் பாக்குறீங்க, புருஷனும் பொண்டாட்டியும்... உனக்குத் தெரியும் தானே அமரன் உன் பையன் என்று, உன் கல்யாணம் முடிந்தகையோடு அவனை அவளிடம் இருந்து வாங்கி இருந்தால், நீ நியாயமானவள்... இத்தனை வருஷமும் அவள் தான் தன்னோட அம்மா என்று வளர்ந்திருக்கிறான் அமரன்... அதில் மண்ணை அள்ளிபோடறீயே உனக்கே நல்லா இருக்கா" என்றவர் குழந்தை மனநிலை யோசிச்சிப் பாத்தியாடி… எல்லாம் உன் இஷ்டம் போல வாழ நினைக்கிற... அப்படித் தானே! மத்தவங்க உணர்வுக்கெல்லாம் மரியாதையே இல்லை... என்ன இருந்தாலும் ஒரே குடும்பத்தில் தானே இருக்கீங்க, ஒன்னா இருந்தா இந்தச் சூழ்நிலையைத் தவிர்க்கலாம் தானே" என்றார்புனிதா…

"நீங்கள் சொன்ன எதுவும் நான் யோசித்து இருக்க‌மாட்டேன்‌ நினைக்கறீங்களா அம்மா" என்றவள் கண் கலங்கியது.

"நான் வாழாமல் வந்த என்ன பண்ணுவீங்க… இல்லை தாரா நிம்மதியாக இருப்பாளென்று நினைக்கிறீங்களா…‌ அவளே‌ அமரனை என்னிடம் தந்துருவாம்மா.. அந்த அளவுக்கு அவளுக்கு நல்ல மனசு இருக்கு" என்றவளின் வார்த்தைகள் கேட்டு அமைதியாக நின்றார்புனிதா.

தாரிகாவின் வார்த்தைகள் புனிதாவை அமைதிப்படுத்தியது. 'என்ன செய்ய விதியின் விளையாட்டு இல்லாமல் வேறு என்ன என்று' அவரால் நினைக்க மட்டுமே முடிந்தது.

சதீஷ் தன் தவறை உணர்வும் இல்லை அதனால் தன்னுடைய அண்ணன் பாதிக்கப்படுகிறான் என்பதைப் பற்றிய கவலையுமில்லை அவனுக்கு.

அமரனோடு சென்ற நளினி அமரனிடம் மெல்லபேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள். "எங்கே போகப் போறீங்க" என்று கேட்டபடியே அவனுக்கு உணவை ஊட்டினாள்.

"சித்தி நான் சின்னம்மா வீட்டுக்குப் போகப் போறேனே... அமித் பாப்பாக்கு நிறைய நல்ல விஷயம் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம். அண்ணனா நான் தான் அவனைப் பார்த்துக்கொள்ளனுமென்று அம்மா சொன்னாங்க. அப்பா எப்படி அவர் தம்பிக்கு ஹெல்ப் செய்தாரோ, அது மாதிரி நானும் அமீத்திக்கு ஹெல்ப் செய்யனும் என்று சொன்னாங்க. அதனால் கொஞ்ச நாளைக்கு நானும் அமீத் பாப்பாவோடு போகப் போறேன்" என்று சந்தோஷமாகக் கூறினான் அமரன்.


அப்பொழுது நளினிக்கு நன்றாகப் புரிந்தது தாரா, குழந்தையிடம் எதுவுமே பகிரவில்லை என்று. காலம் போகும் போக்கில் எல்லாம் உண்மையும் வெளியில வரும் என்பதை நம்பினாள் நளினி.

"அமரன் ஊருக்குப் போறதுனால் சித்தி உனக்குக் கிப்ட் கொண்டு வந்து இருக்கேன், அதென்ன கிஃப்ட் என்றுதெரியுமா? என்று கேட்டாள் நளினி.

"தெரியாது எங்கே காட்டுங்கள்" என்றான் அமரன்.

"அதிலே நான் உனக்கு ரெண்டு ரெண்டு மூன்று டைரி வச்சிருக்கேன். உனக்குப் பிடிச்சது... உனக்கு மனசில் தோன்றுவது எல்லாமே அந்த டைரியில் எழுதிவைத்துக்கொள்... அப்புறம் அடிக்கடிச் சித்தியை அழைத்துப் பேசணும் புரிஞ்சுதா" என்று தன் போன் நம்பரையும் அந்த டைரியில் எழுதிக் கொடுத்திருந்தாள்.

எதுவாக இருந்தாலும் நல்லதாகவே அமையட்டும் என்று யாருமே குழந்தையிடம் உண்மையைக் கூறாமலேயே தாரிகாவோடு அனுப்பி வைப்பதற்கு முடிவுச்செய்தனர்.


தாராவின் வளைகாப்பு நல்ல விதமாக முடிந்தது இருந்த போதும் அதியமான் மட்டும் தாராவின் மனதில் அமரன் தங்களை விட்டுச் செல்லும் வேதனையும் சேர்ந்தே இருந்தது.

எல்லாம் அந்த இறைவனின் கைகளில் என்று நம்பினர் இருவரும் தாராவின் முடிவுச் சரிதான் என்று மனதில் தோன்றியது அதிகமானுக்கு. இதே முடிவைத்தான் ஆறு வருடங்களுக்கு முன் தான் கூறியப்போது ஏற்றுக்கொள்ளவில்லை தாரா. இன்று சதீஷ் வந்து நேரடியாகத் தன் பிள்ளையைக் கேட்கும் பொழுதுக் கொடுப்பதுதான் சிறந்தது என்று நினைத்தான். அன்று சதீசுக்குக் குழந்தை அமரன்தான் என்ற உண்மைத் தெரியுமா? தெரியாதா? என்பது பற்றி எந்த அறிவும் யாருக்குமே இல்லை.

யாரும் அதைப்பற்றி அவனிடம் கேட்கவும் இல்லை. சதீஷ் எல்லாம் தன் மனம் போல் செய்து கொண்டிருந்தான் என்பதுதான் அங்கு உண்மை. அவன் ஒருவன் அனைவரின் உணர்வுகளிலும் விளையாடிக் கொண்டிருந்தான்.

என்ன இருந்த போதும் தன் தம்பி தானே... தன் தம்பியிடம் தானே பையன் இருக்கிறான்... அமரன் அவனுடைய பிள்ளை என்பதை மெதுவாக மெதுவாக அதியமானின் மனதில் புகித்திய போதும் அவன் தந்தை பாசம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

தன்னுடைய வேதனையும் தன்னுடைய வலியும் தன் மனைவியைப் பாதிக்கும் என்பதே உணர்ந்து இருந்ததால்... பிள்ளை வயிற்றில் இருக்கும் மனைவியை வேதனைப்படுத்தவோ சங்கடப்படுத்துவோ அவன் காதல் மனம் இடம் தரவில்லை.

அதனால் அவளின் தவறை மன்னிக்க முடிவுசெய்தான். தான் எப்படிக் கங்காதரனுக்கு அவள் அறியாமல் புகைப்படத்தை அனுப்பி வைத்தானோ... அது போல் தானே அவளும் அன்றைய தினம் அவளுக்கான ஒரு முடிவை எடுத்தாள் என்று அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயன்றான் அதியமான்.
தான் நினைத்தது போல எந்தவொரு எமோஷனல் டிராமாவும் நடக்காமல் இருப்பதைப் பார்த்துச் சதீஷிருக்குப் போதவில்லை... நேராகத் தாராவைக் காண வந்தான்.

தாராவோ அமரனின் உடைமைகளை எல்லாம் பேக் செய்து கொண்டு இருந்தாள். அவள் பின்னில் நின்றிருந்தவன் தன் குரலைச் செருமினான் சதீஷ்.

யார் என்று திரும்பிப் பார்த்தவர்களுக்குத் தன் கணவனின் தம்பி நிற்பதைப் பார்த்து "வாங்க" என்றாள்.

"என்ன ரொம்ப வலிக்கிதோ" என்று கேட்டான் சதீஷ்.

"எனக்கு எதுக்கு வலிக்க வேண்டும்? ஆறு வருடங்கள் பெத்த மகனைப் பிரிந்திருந்த உங்களுக்கு இல்லாத வலியா! எனக்கு வந்துவிடபோது" என்று நேரடியாகவே அவனைத் தாக்கினாள் தாரா.

ஓஹோ என்றவன் "இல்லையே சொந்த மகனாகத் தானே வளர்த்தீங்க... அப்போ அதெல்லாம் பொய்யா! என்று கேட்டான் சதீஷ்.

"அமரனுக்கும் எனக்குமான உறவுக்கிடையே இருக்கும் பந்தம், பாசம், அன்பு, நேசம், எல்லாம் நிரூபிப்பதற்கோ அதைச் சோதிப்பதற்கோ நான் தயாராக இல்லை. எனக்கு அது தேவையும் இல்லை. எல்லாம் காலத்தின் கைகளில் நான் கொடுத்து விட்டேன். என்னுடைய அன்பு உண்மையாக இருந்தால்... எனக்கானது என் கைகளில் கண்டிப்பாக வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றவள் "அவனை நன்றாகப் பாத்துக்கோங்க" என்பதை மட்டுமே கூறினாள். மேலும் அது சதீஷ்க்குக் கோபத்தைத் தான் கொடுத்தது.

"கண்டிப்பாக ஒருநாள் அமரனுக்குத் தெரியும், நாங்கள் தான் அப்பா அம்மா என்றும், எங்களிடமிருந்து பிரித்து அவனை எடுத்துச்சென்று விட்டீர்கள் என்று தானே அவன் நினைப்பான் என்று அவளின் உணர்வுகளை ஆழம் பார்த்தான் சதீஷ்.


"வளர்ந்து வரும் பிள்ளையின் மனநிலையை நம்மால் உணர்ந்துகூற முடியாது. அவன் எப்படி நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. என்னுடைய அன்பு என்ன என்பது எனக்குத் தெரியும், என் கணவனுக்கும் தெரியும் அது மட்டுமே போதுமானதாக இருக்கிறது எனக்கு. நீங்க இனி என்ன சொன்னாலும் எனக்கு வலியோ வேதனையோ வராது. நான் தாரிகாவோட வாழ்க்கைக்காகத் தான் அன்னைக்கும் அந்த முடிவு எடுத்தேன். இன்றைக்கும் அதே முடிவு நான் எடுக்கிறேன். எனக்கு எப்பவுமே தாரிகாவின் சந்தோசம் தான் வேண்டும்” என்றாள் தாரா.

புரியுது என்றவன் என்னால் "தாரிகாவையும் வேதனைப்படுத்த முடியாது என்பதைத் தெரிந்து இருக்கிறது உனக்கு... என்ன இருந்தாலும் என்னுடைய அந்த ஒரு வருடகால வலிக்கு... இனி வரும் வருடங்கள் உனக்கான தண்டனையாக
நினைத்துக் கொள்கிறேன்" என்று சென்றுவிட்டான் சதீஷ்.


இவன் எப்பொழுதுதான் திருந்துவான் என்று சோர்வு உண்டானது தாராவிற்கு. அதென்னமோ தெரியவில்லை சதீஷுக்கும் தாராவிருக்கும் எதுவுமே சரியாகவே அமையவில்லை. தன் அண்ணனின் மனைவி என்ற மரியாதை இல்லாத அவனுடைய இந்தப் பேச்சு அவளுக்கு வேதனையைத் தந்தாலும் அதைத் தன் கணவனிடம் காட்டிக் கொள்ளவில்லை தாரா.

மாலை நேரம் வந்ததும் சதீஷ் தாரிகாவிடம் வந்து "என்ன கிளம்பலாமா? தாரிகா என்று கேட்டான். தன் குழந்தை அமீத்தை எடுத்துக்கொண்டு அமரனைப் பார்த்தாள். அவன் தயாராக இருந்தான். அமரனோடு பெட்டியைச் சதீஷ் எடுத்துக்கொண்டு போய்க் காரின் பின்பக்கம் எடுத்து வைத்தான்.

எல்லாரிடமும் விடைபெற்ற அமரன் நேராகத் தாராவிடம் வந்து அம்மா நான் சின்னம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன். சீக்கிரம் வாங்க என்னைக் கூட்டிட்டுப் போக... பேபி நல்லாபாத்துக்கோங்க" என்றவன், அவள் அவளைக் குனியச் செய்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனின் செயலில் உணர்ச்சி மிகுதியில் விழிநீர்கோர்க்க, வேகமாக அவனைத் தூக்கிக் கொண்டாள் நிறை மாத வயிற்றோடு, அவனை எடுப்பதைக் கண்டு வேகமாக வந்த அதியமான், அவள் அருகில் வந்து அமரனை வாங்கிக் கொண்டான்.

அவர்கள் மூவரையும் கண்டு அங்கு இருக்கும் அனைவரின் கண்களும் கலங்கியது அவர்களின் அன்பும் பாசமும் அந்தப் பந்தமும் எப்படித்தான் இந்தச் சதீஷிற்கு மனது வந்ததோ அவர்களைப் பிரிப்பதற்கு என்று தங்களுக்குள் மனதினில் குமறிக்கொள்ள மட்டுமே முடிந்தது அவர்களால்.

தாராவின் மனநிலை உணர்ந்த அதியமான்…

"சதீஷ்.. அமரனை விமான நிலையத்திற்கு நாங்கள் அழைத்து வருகிறோம்" என்றவன் வேகமாகக் காரை எடுத்தான்.

அதியமானோடு அவன் காரில் வந்தனர் அவர்களை வழி அனுப்ப…


அழுத விழியைத் துடித்துக்கொண்டு இருந்தாள் தாரா.

பயணிகள் செல்லும் நேரம் வந்ததும் மகனைப் பிரிந்தாள் தாரா.. அங்கே விமானம் உயரே‌ப் பறக்கும்‌ வரை நின்று ப்பார்த்தவளைக் கைப் பிடித்து அழைத்து வந்தான் தங்கள் கார் நிற்கும் இடத்திற்கு.

அவளைக் காரின் உள்ளே அமர வைத்தவன் தானும் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தான்.
தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு இருக்கும் கணவனை அழுதபடியே அணைத்திருந்தாள்.

தன்னவளின் முன்னே தன் வேதனையைக் காட்டி அவளை மேலும் வருந்த வைக்க அவனுக்கு மனமில்லை.. ஆனால் தன்னவன் உணர்வினைப் படித்தவள் அவனுக்கு ஆறுதலானாள்.

"நான் எடுத்த இந்த முடிவுதவறு நீங்கள் நினைக்கிறீர்களா… நீங்கள் எனக்குச் சொன்ன விஷயம் தான்.. ஆனால் அன்று எனக்குப் பக்குவம் இல்லை... ஆனால் இன்று பக்குவத்தோடு எடுத்து இருக்கேன்ங்க… நம் பையனுக்கு எதிர் காலத்தில் இப்படி ஒரு சூழலில் நிற்க நேரிடும் போது, நாம் அவன் முன் எப்படியான அம்மா அப்பா என்று அவன் நினைப்பான், அவன் என்னைத் தவறாக நினைத்து என்னை வெறுத்துட்டால், அதை என்னால் தாங்க முடியாது.. அதே போல அவனோட பெத்தவங்க இடம் இருந்து அவனைப் பிரித்த பாவம் நமக்கு வேண்டாம் நினைச்சேன்…‌என்ன இருந்தாலும் நம்மை விட அவங்களுக்குத் தானே அவன் மேல் உரிமை அதிகம்" என்று கூறிய அவள் வார்த்தைகள் எல்லாம் அழுகையின் ஊடே வந்தது.

மனைவியின் வார்த்தைகளைக் கேட்டான் அதியமான்.

"ம்ம் புரியுது" என்றவன் விழிசிவந்து இருந்தது.

"சாரிங்க" என்றாள் தாரா.

ம்ம் எதுக்கு என்ற அதியமானிடம்…

"நீங்கள் சொன்னதை நான் கேட்டு‌ இருக்கனும்… இப்போ வரைக்கும் நான் தாரிகாவின் நன்மைக்காகத் தான் எல்லாம் பண்ணினேன்.. உங்களை ரொம்ப வலிக்க வைத்து விட்டது. என் உடன் பிறந்தவளின் வாழ்க்கைக்காக உங்களை வேதனைபடுத்த எந்த உரிமையும் இல்லை"… என்று கணவனிடம் மன்னிப்புக் கேட்டாள் தாரா.

இவ்வளவு உணர்வுப் போராட்டங்களுக்கு இடையே அவளுக்குப் பிரசவ வலி வரவும் பதட்ட அடைந்தான் அதியமான். வேகமாக அவளை‌ மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றவன், வீட்டில் இருப்பவர்களுக்கு அழைத்து இந்த விஷயத்தைக் கூறி மருத்துவமனை முகவரியும் தந்து வரச்சொன்னார்.


பிரசவத்திற்கு நாட்கள் இருந்த போதும் அவருடைய பிள்ளை வேகமாக இந்த உலகைக் காண விரும்பினான். அதனால் அவளுக்குப் பிரசவ வலி உண்டாகிவிட்டது. மன வலியோடு இந்த வலியும் சேர்ந்துத் தாராவைச் சோர்வடையச் செய்தது.

பல போராட்டங்களுக்குப் பிறகு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் தாரா. அவனைக் கண்டதும் அவளுடைய பெரிய மகனின் நினைவுகள் அவளை ஆட்டிபடைத்தது. கண்களின் நீரோடு தன் மகனை வாரி உச்சி முகர்ந்தாள் தாரா.

எல்லாம் நல்லவிதமாக நடந்தது. ஒரே குறை அவளுடைய அமரன் அவள் அருகில் இல்லை என்பது மட்டுமே இதையும் கடந்து வரபழகிக் கொள்வாள் இந்தத் தாரா என்பது உறுதி.

ஆனால் அமரன் இந்த வாழ்க்கையை மாற்றத்தை எப்படி எதிர்கொள்வான் என்பது கால
ம் மற்றும் தாரிகா மற்றும் சதீஷ் தம்பதியர்கள் இடையே உள்ளது.

தொடரும்…
 
Top