எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 29

subasini

Moderator
மனம் - 29

வருடங்கள் பல கடந்துபோனயிருந்தது.

இதோ தாரிகாவின் வீட்டில் அமரன் தன் அறையில் தன்னுடைய டைரியில் எழுதிக் கொண்டிருந்தான். அன்றைய பொழுதில் என்ன நடந்தது என்று, அவன் மனதில் எதிர்பார்ப்புகளும் எல்லாமே அங்கே பதிவு செய்து கொண்டிருந்தான்.

இளம் காளைப் பருவத்தில் இருக்கும் அமரன் சதிஷின் சாயல் சில நேரங்களில் அவன் உருவத்தில் தெரிந்தாலும் அவன் உடல் மொழியும், அவனுடைய பேச்சின் அழுத்தமும் அதியமானைக் கொண்டிருந்தது .

சதீஷிருக்கே அவனைப் பார்க்கும்போதெல்லாம் தன் அண்ணன் தான் நினைவிற்கு வந்தான்.


தாராளமான அன்பைத் தரும் தாரா…
தாராளமாக என்னைத் தாரை வார்த்துக் கொடுத்தாள்... என்று எழுதியவனுக்கு அன்றைய தினம் மனதில் தாரா மட்டுமே நிறைந்த இருந்தாள்.

தாரிகா மற்றும் சதீஷ்யயோடு வந்தவன் நாட்கள் வருடங்களாகியபோது, சதீஷிடம் வந்து "சித்தப்பா அப்பா எப்போ வருவாங்க" என்று கேட்ட மகனின் அழைப்பில், அன்று தொழில் துறையில் பல டென்ஷனில் இருந்த சதீஷ்…
“முதலில் என்னை டாட் என்று அழைக்கக்கற்றுக்கொள்” என்று ஆங்கிலத்தில் கர்ஜித்தான் அமரனிடம்.

எப்பொழுதும் ஒரு விலகல் தன்மை அவனிடம் இருந்தது. சதீஷின் இந்தக் கோபம் அவனிடம் நெருங்க விடாமல் அமரனைத் தள்ளி வைத்தது.

தாரிகாவிடம் மட்டுமே தன் தேவைக்கேற்பப் பேசும் வழக்கம் வைத்திருந்தான் அமரன்.

அவளும் அவனிடம் அன்னை என்று அதிகாரப்பூர்வமாக உரிமை எடுக்கவும் இல்லை கொடுக்கவும் இல்லை.

தாரிகாவிற்கு எதோ ஒன்று அமரனிடம் நெருங்க முடியாமல் தடுத்தது… அதென்வென்று அவளுக்குத் தெரியவில்லை.

அமரனின் பதினேழாம் வயதில் இருந்து நேரம் தாரிகா இரண்டாவது மகனிடம் பேசுவதைக் கேட்க நேரிந்தது…

"அம்மா ஏன் அமர் அண்ணா உங்களைச் 'சின்னம்மா' என்று கூப்பிடறாங்க" என்ற கேட்டான் தன் தாயிடம்…

எட்டு வயதில் இருக்கும் அமீத்தின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை தாரிகாவிற்கு…
அமரனுக்கும் இந்தக் கேள்விக்கு விடைத்தெரியவேண்டும் என்று மனம்சொன்னது அதனால் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டான்….


"சொல்லுங்க அம்மா" என்றதும் அவனைத் திசைத் திருப்ப "அது பெரிய கதை... எனக்கே தெரியாது... நளினிச் சித்திக்குதான் தெரியும்" என்று‌பேச்சை மாற்றி அவனை விளையாட அனுப்பி வைத்தாள் தாரிகா.

நளினிச் சித்திக்குத் தெரியும் என்பதை மனதில் வாங்கிய அமரன், அவளைத் தொடர்பு கொண்டு கடந்த காலத்தில் நடந்ததை எல்லாம் அறிந்தகொண்டான் அமரன்.

தாராவின் நிலை நன்றாகப் புரிந்தது.

"ஏன் தன்னைத் தொடர்பு கொள்ள முயலவில்லை என்ற உண்மையை அறிந்ததும், அதியமான் மற்றும் தாரா மேல் இருந்த கோபம் அவன் மனதில் இருந்த மறைந்தது. அன்றைய தினம் மனதில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தான்.

இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்று அதற்குத் தான் நன்றாகப் படித்துத் தனக்கான வாழ்க்கை முடிவுசெய்யும் அளவுக்கு வளர வேண்டும். அன்றைய தினம் இருந்து கடுமையாக உழைத்துப் படித்துத் தனக்கான எதிர் காலத்தைத் தீர்மானித்தான் அமரன்.

படிப்பினூடே பகுதி நேர வேலைகள் நிறையச் செய்தான். அதே போல் தன் கணினிதுறையில், தனக்குத் தெரிந்த அறிவினை வைத்துபல ப்ராஜெட்களைச் செய்துக்கொடுத்தான். அதனால் சிறு வயதிலேயே வருமானம் ஈட்டத்தொடங்கிருந்தான் அதெல்லாம் சேமிக்கவும் மறக்கவில்லை அமரன்.

பல‌நினைவுகளில இருந்து வெளியே வந்தவன்... தாராவின் புகைபடத்தைப் பார்த்தான்…‌ நளினியிடம்‌ இருந்து வாங்கி இருந்தான்…

"நான் வரேன் அம்மா... காத்திருங்கள்"… என்று‌ச் சிரித்துக்கொண்டான் அமரன்.

தன்னுடைய மேல் படிப்பிற்காக அவன் இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் அமரன்.

அதைத் தன் தந்தையிடம் கூறி அனுமதி வாங்க நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்றைய நாள் அமீத்தின் பிறந்தநாள். பதினைந்து வயதில் அடியை எடுத்து வைத்திருந்தான் அமித்.

அமீத்திற்கு நல்ல வழிகாட்டியாகத் தன் கடமையை ஒர் அண்ணனாகச் செய்வதில் எப்போதும் தவறியதில்லை அமரன். இதில் அதியமானின் குணத்தைக் கொண்டு இருந்தான்.

மகனின் பொறுப்பினைக் கண்டு அவன் மேல் எப்பொழுதும் ஒரு மரியாதை இருக்கும் தாரிகாவின்‌பேச்சில்…

சதீஷ் உணர்ந்து இருந்தான் மகனின் குணத்தை.

பிறந்தநாள் பார்ட்டி முடித்து எல்லாம் மகிழ்வாக இருந்த தருணம்... சதீஷிடம் வந்தான் அமரன்.
"டாட்…‌ நான் இந்தியாவிற்குப் போகலாம் இருக்கேன்… எனக்குப் பாட்டியைப் பார்க்கணும் என்று ஃபீல் ஆகுது" என்றான் அமரன்.

"அதற்கென்ன பாட்டியை இங்கே வரசொல்லலாம்" என்றான் சதீஷ்.

"நோ டாட்... நான் சொன்னது உங்களுக்கு க்ளியர் ஆகப்புரிய வில்லைப் போல.. நான் இந்தியாவிற்குப் போறேன்" என்றான் அழுத்தமாக.

அவன் பேச்சின் அழுத்தத்தில் என்னைத் தடுத்துப் பார் என்ற தொனி இருந்தது.

"சாரி டாட் உங்கள் பெரியவங்க ப்ராப்ளத்திற்குள் நான் வர‌விரும்பவில்லை…‌ என் மேல் படிப்பு அங்கே பெரிய இன்ஸ்டிடியூடில் இடம் கிடைத்து இருக்கிறது" என்று அந்தக் கல்லூரிப் பெயரைக் கூறியவன், "எனக்கு அதனால் பாட்டி கூட இருந்து படிக்கச் சுலபமாக இருக்கும். அதேபோல் என்னுடைய தொழில் அங்கே சுலபமாகத் தொடங்க முடியும், நான் இதைபற்றி இனியன் மாமாவிடம் கேட்ட‌போது அவரும் அதற்கான சாதகப் பாதகங்களைச் சொன்னாங்க‌" என்றான்.

தன் தொழிலில் வெற்றியாகப் பயணிக்கும் அதியமானோட நண்பனின் வார்த்தைகளைத் தட்டிகழிக்க முடியாது…அவன் வார்த்தைகள் எப்பொழுதும் பொய்சொல்லாது‌ என்று தெரியும் சதீஷிற்கு.


மகனின் பேச்சும் அவன் அறிவும் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருத்திருக்கும் சதீஷ், அவனைத் தடுக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டான்.

அமரன் தன் பேச்சில் எங்கேயும் அதியமான் மற்றும் தாராவின் பெயரைக் குறிப்பிட வில்லை…

"சரி நான் பாட்டியிடம் பேசிவிட்டுச் சொல்லறேன்" என்ற சதீஷிற்கு "இல்லை நான் பேசியாச்சு" என்றான் அமரன்…

ஒஒ… என்றவன் "நீ அங்கே தங்கிபடிக்க வசதிகள் செய்ய வேண்டாமா? என்ற தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு "டோண்ட் வொர்ரி டேட்.. ஐயம் மேனேஜ்‌ இட் மைசெல்ஃப்"… என்றான் அமரன்.

"அங்கே தம்பியோட காலேஜ் ஸ்டடிஸ்க்கும் நான் ஏற்பாடுப் பண்ணி இருக்கேன்... அதற்கு எதாவது சொல்ல வேண்டாம்" என்று கூறிச் செல்லும் பெரிய மகனையே‌பார்த்துக் கொண்டு‌ இருந்தான் சதீஷ்.

தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனைவியைப் பார்த்தவன் “என்னடி அவன் இஷ்டத்திற்குப் பேசறான்… நீ‌ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாய் “என்றான் சதீஷ்.

"அவனுக்கு அங்கே போய்ப் படிக்கணும் ீஆசை... நான் என்ன பண்ண"… என்றாள் தாரிகா.

"உன்னிடம் கேட்டானா? இல்லை சொன்னானா? இந்தியாவிற்குப் போறேன் என்று? என்ற கணவனின் கேள்வியில்…

கண் கலங்கியது அவளுக்கு…

“அந்த அளவுக்கு உரிமையை அவன் தரவில்லை.. சிறு வயதில் இருந்தே அவனிடம் நான் எடுக்கவும் இல்லை” என்றாள் தாரிகா…

“சரிதான்..‌ நீ அவனோட அம்மா என்று‌ என்றைக்காவது நடந்து இருக்காயா?” என்று‌ எகிறினான்‌ மனைவியிடம்.

கணவனின் கோபத்தில் இருக்கும் உண்மை அவளைச் சுட்டது. அவள் தர‌வேண்டிய அன்பைக் கொடுக்க வில்லை... கிடைத்த அன்பையும் கிடைக்க விடாமல் செய்தக்குற்ற உணர்வு அவனிடம் தள்ளி வைத்தது அவளை.

"பெரியவங்க விஷயம் விடு, தாரிகா…‌ அவனுக்கு நாம் தான் பெற்றோர்…‌‌ அன்பைக் கேட்காமல் அள்ளிக் கொடுத்தவர்கள் இடம் இருந்து அவனை வாங்கி வந்துட்டோம்.. அப்போ எப்படியெல்லாம் அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும்… நீயென்வென்றால் அவனிடம் நெருங்கவே பயப்படுகிறாய்” என்று ஆதங்கப் பட்டான் சதீஷ்.

அமரனைப் பார்க்கும் போதெல்லாம் அவனைத் தன் அண்ணனிடம் விட்டு இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் இப்பொழுதெல்லாம் வரத் தொடங்கியது.


ஆம் வயது முதிர்ந்த நேரம் நமக்கு அறிவுக்கண் திறக்கும். வீம்பிற்கு ‌வேட்டையாடியது போல இருந்தது தன்னுடைய கடந்தகாலத்தில் நடந்தகொண்ட விதம்.

தன் இரண்டாவது மகன் அமீத் போன்று ஏன் அமரன் தங்களோடு ஒன்றில்லை என்று கேள்விகளுக்குப் பதில் இல்லை. 'அவன் தேவைகள் எல்லாம் கேட்காமல் செய்து கொடுத்தேனே எங்கே தவறிவிட்டேன்' என்று மோட்டு வலையைப் பார்த்துச் சிந்திக்கத் தொடங்கினான் சதீஷ்.

இந்தியாவில் இருந்து அழைத்து வந்ததும் தன் கடமை முடிந்தது என்று நினைத்து விட்டேன்... தாரிகா இனியெல்லாம் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்துத் தவறு செய்து விட்டேன். ஒரு தந்தையாக அவனிடம் மனம் விட்டுபேசி இருக்க வேண்டுமோ என்று மனதில் வருந்தினான்.

இனி‌யோசித்து என்ன செய்ய... தண்ணீரில் கலந்து எண்ணையாக ஒட்டாமல் இருக்கும் பெரிய மகனினை இனி மாற்ற முடியாது என்பதை வலியோடு உணர்ந்தான்.

என்ன இருந்தாலும் தன் மகன் அல்லவா… அவனுக்கு முறையாக அன்புக் கிடைக்கவில்லையே என்று காலம் கடந்து உணர்ந்து கொண்டான் சதீஷ்.

தாராவின் மேல் இருந்த வன்மம் தான் தன் பெற்ற பிள்ளையின் நன்மையைச் சிந்திக்க விடாமல் செய்திருந்தது.

அப்போதும் சரி.. இப்போதும் தாரா அவள் இடத்தில் சரியாகத் தான் இருக்கிறாள்.
அமரனுக்கும் தங்களுக்கும் இடையில் வரவே இல்லை இப்போது வரைக்கும்.

உண்மையான அன்பு நம்மைத் தேடி வரும் என்பதற்குத் தாரா மற்றும் அமரன் சிறந்த உதாரணம் தான்.

இளம் வயதில் தன்னுடைய செயல் தவறு என்று உணர அவன் எடுத்துக் கொண்ட கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அமரன் மற்றும் தாராவின் பாசப்பந்தம் தான்.
இது தான் நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் என்ன செய்ய என்று விதியின் மேல் பழி இடுவதைத் தவற அவனுக்கு வேற வழி இல்லை.

அடிக்கடிதன் தாயிடம் பேசும் போது தாராவிற்குத் தான் எவ்வளவு பெரிய அநியாயம் செய்து இருக்கிறேன் என்று அவர் பதிவுசெய்வதை மறப்பதில்லை.

அன்றாடத் தொடக்கம் அவள் நாட்கள் அமரனின் அறையில் இருந்து தான் தொடங்கும் என்றும், அவர்கள் தங்களுக்கான சொந்த வீட்டைக் கட்டும் போது, அமரனுக்கு என்று தனியறை ஒதுக்கி அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து அவனுக்காகக் காத்திருக்கிறாள் தாரா.

அவனுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும், அவனுக்கு அவள் வாங்கி வைத்திருக்கும் ஆடைகள் அந்த அறையை நிறைத்து வைத்திருக்கிறது…

அவள் செய்யும் எல்லாச் செயலிலும் அமரனுக்கான எதாவது ஒன்று இருக்கும் என்று கூறியதைக் கேட்டுக் குற்ற உணர்வு உண்டானது சதீஷிற்கு.

அவனையும் தன் உடன் பிறந்த அண்ணனுக்கும் தான் கொடுத்த‌ வலியும் வேதனையும், அமரனை இந்தியாவிற்குச் செல்வதைத் தடுக்கும் தைரியத்தை விரட்டி அடித்திருந்தது.

இதெல்லாம் பேசியோ..யோசித்தோ என்ன செய்ய என்று பெருமூச்சு விட்டவன் கண்கள் அதியமான் நினைத்துக் கலங்கியது.


"என்னை மன்னித்து விடு அண்ணா" என்று மனதில் நினைத்தான்.


தன்னில் உளண்டு கொண்டிருக்கும் கணவனைப் கண்டதும்... தன் பெரிய மகனின் அறைக்குச் சென்றாள் தாரிகா.

அதிகம் அவன் அறைக்கு அவள் சென்றதில்லை. எதுவாக இருந்தாலும் அவனே வருவான் அவன் அறைக்குச் செல்லும் சூழ்நிலையில் அவளை அவன் நிற்க விடவில்லை என்பது தான் உண்மை.


தன் அறையில் வந்திருக்கும் தாரிகாவைக் கண்டவன் “சொல்லுங்க மாம்‌” என்றான்‌அமரன். நளினியிடம் பழையக்கதைகளைக் கேட்டுத்தெரிந்தப்பின் தாரிகாவை 'மாம்' அழைக்கத்தொடங்கி இருந்தான் அமரன்.

மகனின் கேள்விக்குப் பதிலளிக்காமல் அவன் அருகில் வந்தவள்…

"சாரிடா அமர்" என்றாள் தாரிகா.


அவனுக்கு எதுவும் புரியவில்லை.. என்ன அச்சு இன்றைக்கு இவங்களுக்கு என்று நினைத்தவன் அவள் முகத்தைப் பார்த்தான்.

அதில் இருந்த துயரம் கண்டு என்ன நினைத்தானோ…
அவள் கைகளைப் பிடித்து அமர வைத்தவன் “என்ன மாம்‌ … ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க … ஆர் யு ஓகே” என்று கேட்டான்.

அவனின் அக்கரையான‌பாசத்தில் கண்ணீர் உற்பத்தியாகி அவள் கன்னத்தைக் கடந்து கழுத்தில் பயணித்தது.


அவளை அணைத்தவன்…‌ “ஏன் மாம் நான் இந்தியாவிற்குப் போறது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று கேட்டான்.

இல்லை என்று வேகமாகத் தலையை ஆட்டியவள்…

அவன் கன்னத்தில் கை வைத்து.. “நான் உனக்கு உரியத்தாய் அன்பைத் தரவுமில்லை... கிடைத்த தாய் மடியையும் தள்ளி விட்டுட்டேன். என் சுயநலம் தான் காரணம் அமர். இந்தப் பாவத்திற்கு எனக்கு என்ன தண்டனைத் தந்தாலும் மிகையாகாது” என்று அழுதாள் தாரிகா.

தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு அழும் தாயின் முன் அவன் என்ன செய்வான்…


“அதெல்லாம் ஒன்றுமில்லை மாம்.. நான் இப்படியே இருந்து பழகிட்டேன்.. உங்க மேல் எந்தத் தவறும் இல்லை” என்று அவளை ஆறுதல் படுத்தினான் அமரன்…

மகனின் வார்த்தைகளைக் கேட்டு வேகமாக அவனை அணைத்து “என் தாராவே தான் நீ” என்றாள் தாரிகா.

“அவள் தான் எதிலும் நன்மை மட்டுமே பார்ப்பாள். அவள் மேல் எந்தத் தவறும் இல்லை அமரன். எல்லாம் நான் தான் செய்தேன்" என்று அவனிடம் கூறியவள்… "நீ‌ எப்பவும் தாராவைத் தவறாக மட்டும் நினைக்காதே” என்று கூறினாள் தாரிகா.

“புரியுது மாம்”… என்றவன் “உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும் எனக்கு உண்மையான பதில் வேண்டும்” என்று கேட்டான்.

என்ன கேட்கப் போகிறான் என்ற பயத்தோடு அவன் முகம் பார்த்தவளின் செயலில் சிரிப்பு வந்தது அமரனுக்கு.

“எதிர்காலத்தில் இந்தியாவில் நாம் போய்ச் செட்டில் ஆகலாமென்றால் சரி சொல்லுவீங்களா‌” என்று கேட்டான் அமரன்.

சந்தோஷமாக ஆமாம் என்று தலையை ஆட்டிய தாயின் உணர்வுகளைப் புரிந்து கொண்டான் அமரன்.

தன் மகனிடம் மனம் திறந்தாள் தாரிகா…

“எனக்கு இங்கே அவ்வளவாகப் பிடிக்கவில்லை…‌ அம்மா அப்பா.. நம்ம ஊரு.. அங்கே இருக்கும் நம் சொந்தங்கள் அருமை எல்லாம் இப்போது தான் எனக்குப் புரிகிறது.

என் தாராவின் அன்பும் அக்கறையும் நான் ரொம்ப மிஸ் பண்ணறேன்…

என் வாழ்க்கையில் எல்லாம் அழகாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவள் தான்” என்றவள்

“நான் அவளுக்குக் கொடுத்து எல்லாம் வலியும் வேதனையும் மட்டுமே… அவளைப் பார்த்து நான் சாரிச் சொன்னேன் சொல்லறயா” என்றாள் பாவமாக…
“அதெல்லாம் முடியாது.. நீங்கள் தான் பேசணும்... உங்க சிஸ்டர்தானே உங்களுக்கு இல்லாத உரிமையா.. சோ நோ வொர்ரிஸ்… எல்லாம் மாத்தலாம்” என்றவன் “நான் இந்தியாவிற்குச் சென்றதும் தம்பியை அங்கே படிக்கவைப்தற்கான எல்லா ஏற்பாடும் செய்யறேன். நீங்கள் தடுக்காதீங்க... தம்பியோடு நீங்களும் அங்கே வந்தால் டாட் ஆட்டோமேட்டிக் வந்திருவாரு” என்று சிரித்தான் அமரன்.

மகனின் சிரிப்பில் முதல் முறையாக ரசித்த தாரிகா... சரி‌யென்று தலையை ஆட்டியவள் அவனுக்கு எடுத்து வைக்க வேண்டிய எல்லாம் உதவிம் செய்தாள்.

மகனின் இந்தியாவிற்குச் செல்வதன் காரணம், அதற்குப் பின் என்ன நடக்கும் என்று மனதால் உணர்ந்திருந்தான் சதீஷ்.

எப்படியும் எதிர் காலத்தில் இந்தியாவில் தான் வாழ்க்கையைக் களிக்க வேண்டும் என்று உணர்ந்து இருந்தான். அவனுக்குத் தன் தாயின் வயோதிகத்தில் கூட இருக்க வேண்டும் என்று தோன்றியது.

அதற்கான முயற்சியில் இனி வரும் நாட்களில் செயல் படுத்த வேண்டும் என்பது உணர்ந்து இருந்தான்.அதற்கான‌ ஏற்பாடெல்லாம் திட்டமிட்டுச் செயல்படுத்தத் தொடங்கினான்.

நாளை பொழுதுத் தன்னுடைய விடியல் இந்தியாவில் என்ற எண்ணத்தில் பயணித்துக் கொண்டு இருந்தான் அமரன்.

விமானத்தில் அமர்ந்தவன் கடந்தகாகாலத்தில் நடந்தவற்றிக்கெல்லாம் யாரைக்குற்றப்படுத்தவென்று தெரியவில்லை.

தன் பெற்றவர் சுயநலம் என்று தெரிந்தது.. அதனால் தாராவின் மேல் இருந்த சினம் சிறுத்துச் சின்னப் புள்ளியாக இருந்தது.


அவனுக்கு மீண்டும் தன் கூட்டிற்குச் செல்லும் நிம்மதியை உண்டாக்கியது இந்தப் பயணம்.

தாரிகா, பேசியதில் அவளின் நிலையை உணர்த்தியது.

தைரியம் இல்லாமல் எப்போதும் சதீஷ் அன்பிற்குக் கட்டுபட்டு வாழபழகிய அவளிடம் வேறெதுவும் எதிர் பார்க்கவில்லை அவன்.

விமானம் பறந்து கொண்டு இருக்கும் வேகம் அவனுக்குப் போதவில்லை போலும் நீண்ட நெடியபயணமாக மனதில் தோன்றியது..

அவன் தாய் யசோதாவைக் காணபோகும் வேகம் விமானத்தின் வேகத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருந்ததால் அவனுக்கு அப்படி உணர்வுத் தோன்றியது.

நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு தன்னை ஆட்டிபடைக்க வந்துகொண்டு இருப்பது அறியாமல் அவனுக்கான பாசத்தை மனதில் முழுங்கி, தன் வீட்டில் நடமாடிக் கொண்டு இருந்தாள் தாரா.

தினமும் அவன் அறையில் அமர்ந்து அவளுடைய வேலையைச் செய்பவளுக்கு அவன் அருகே இருக்கும் உணர்வு உண்டாகும் அவளுக்கு. அந்த அறையில் அவனுடைய ஆளுயரப் புகைப்படங்கள் கண்டு, மெல்லகலங்கிய‌ விழிகளைத் துடைக்கும் நேரம் அவளருகில் வந்தான் அதியமான்.

"நினச்சேன்டி… அவனிடம் பேசுடி என்று சொன்னாலும் கேட்பதில்லை.. என்னையும் பேச விடுவதில்லை.. அப்படி என்ன தான் யோசிக்கிறாய் என்று தான் தெரியலடியம்மா" என்றபடி அவளை அணைத்திருந்தான்.. அவள் படும் வேதனைகளை நேரில் உணர்ந்து வாழும் அவனுக்குத் தெரியுமல்லவா அவளின் எண்ணங்கள்.

"உங்களுக்கு எப்படித் தான் மூக்கு வேர்க்குமோ…‌ நான் கண் கலங்கினாலே பக்கத்தில் வந்து விடறீங்க... இல்லை போன் செய்து விடறீங்க... எப்படி? என்று அவனை மையலோடு பார்த்தாள்.

"இப்படியெல்லாம் பார்க்கதே டி" என்று சிரித்தான் அதியமான்.


"பசங்க எல்லாம் பெரிசு ஆகிட்டாங்க என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றவள் எழுந்தாள் இரவு உணவுசமைப்பதற்கு.

"அதற்குள் எங்கே செல்கிறாய்" என்றும் அவளைப் பின்னிலிருந்து அணைத்துப் பிடித்து, என்ன விஷயம் உன்னைக் கஷ்டப்படுத்தது" என்று அவள் தோள் வளைவில் முகத்தைப் பதித்துக் கேட்டான் அவள் மேல் இன்றைய வரைக்கும் காதல் குறையாத அதியமான்.

தாயைக் காணவில்லை என்று அவளைத் தேடிவந்த அவர்களின் சின்ன மகள் "அப்பா" என்றபடியே வந்தாள்…

"உன்னைக் கொஞ்சம் நேரம் தனியாக விடுறாங்களா… நான் உன்னிடம் வந்தாளே மூங்கு வேர்த்திடுமே"… என்றபடியே அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தான் அதியமான்.

தந்தையைக் கண்டவள் வேகமாக அவன் மடியில் அமர்ந்து, தந்தையின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்… "என்னடி அப்பாவிடம் மட்டுமே சொல்லற" என்றவளை "சீக்ரெட் அம்மா" என்றபடியே வாயில் விரல் வைத்து அங்கும் இங்கும்
தலையை அசைத்து, தந்தையைப் பார்த்தாள்.

அதியமானின் தலை மகளுக்கு ஒத்துழைத்து ஆடியபோதும் முகம் சிந்தனை ரேகையைத் தத்தெடுத்தது…


நாளைய விடியலை எதிர் பார்ப்போடு காத்திருந்தான் அதியமான்….

தொடரும்…
 
Top