மனம் - 31
புத்தம் புதிய காலை…
என்றும் பழைய அனைத்தும் புதுப்பிக்கும் சக்தியைக் கையிலேந்தியபடிப் பயணிக்கும் காலத்தின் உடன் தங்கள் வாழ்வில் பாசம் அன்பு எல்லாம் புதுப்பித்துக் கொண்டு இருந்தனர் அம்மாவும் பிள்ளையும்…
தாரா மற்றும் அமரன் இடையே என்றும் இணைத்து இருக்கும் பந்தத்தின் கண்ணி மேலும் இறுகியது…
பார்பதற்கு அழகாக இருந்தது.
அவளின் முகத்தில் பல வருடங்கள் பிறகு சந்தோஷம் மிகுந்துக் காணப்படுகிறது…
அதைப் பார்த்தச் சாந்தியம்மாள்…
"இப்போது தான் என் மருமகள் முகம் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது"… என்றார்.
"அப்போது இவ்வளவு நாட்கள் எங்கம்மா அழகா இல்லையா, பாட்டி" என்று கேட்டான் அகிலன்…
"அகி… ஏன்டா…என்னையும் என் மருமகளையும் சண்டைப் போட தூபம் போடற" என்றார்சாந்தியம்மா…
"சும்மா பாட்டி எல்லாம் ஒரு பொழுதுபோக்குத் தான்" என்றவன் வேகமாக அவரின் மடியில் வந்து படுத்தவன் "இப்பொழுதெல்லாம் ரொம்பப் பிஸி உமனாகிட்டிங்க" என்றான் அகிலன்.
"என்னடா வாயடிக்கிற" என்றபடி அங்கே வந்தாள் தாரா…
"ஒன்றுமில்லையே…ஒன்றுமேயில்லை" என்றான் அகிலன்.
அப்போது அங்கே வந்த அமராவதியின் முகம் சோகமாக இருந்தது.
"ஏன் என் தங்கம் சோகமாக இருக்காங்க" என்று சாந்திக் கேட்கவும்…
"பாட்டி இன்றைக்கு என் கிளாஸ் மிஸ் பேரண்ட்ஸைக் கூட்டி வரசொல்லி இருக்காங்க" என்றாள்…
விட்டால் அழுது விடும் குரலில் சொன்னவள் சோகத்தின் அழகை ரசித்த அமரன் "என் பேபிக்கு என்ன பிரச்சினை" என்றான்…
"இல்லை அண்ணா எனக்குக் கணக்குப் பாடம் ரொம்ப வீக் ஜோன்" என்றாள்…
"ஒ அப்படியா இனி உனக்குப் புரியும் படி நான் சொல்லிதரேன் என்பேபிக்கு… இன்றைக்கு உன்னை நான் கூட்டிபோறேன் ஸ்கூலுக்கு.. மிஸ்ஸிடம் பேசறேன் ஓகே வா" என்றான்…
"தாங்கியூ அண்ணா" என்று தாவி அவனை அணைத்து இருந்தாள் அமராவதி.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கே அவர்கள் டீச்சரிடம் பேசி அவர்களைப் பற்றி எல்லாம் கேட்டுதெரிந்து கொண்டான் எதுவாக இருந்தாலும் என்னை அழைத்துச் சொல்லுங்க என்று தன் அலைபேசி எண்ணை பகிர்ந்தார்.
அந்நேரம் அவன் அலைபேசிக்கு அமீத்திடம் இருந்தது அழைப்பு வந்தது.
"அண்ணா எப்படி இருக்கீங்க... தாராம்மா எப்படி இருக்காங்க" என்று கேட்டவன்…
"ம்ம் நல்லா இருக்கேன் டா… அங்கே எல்லாம் ஓகே வா" என்று கேட்டான் அமரன்.
"ம்ம் ஆல் ஃபைன் அண்ணா" என்ற சின்னவனிடம் "எப்போ இந்தியாவிற்கு வரீங்க.. ப்ளான் பண்ணியாச்சா" என்று கேட்டான் அமரன்.
"அப்பா அதற்கான ப்ராஷஸில் இருக்கிறார்"…
"ம்ம் புரியுது" … பின்னர் …
"சீக்கிரம் வாங்க டா" என்ற அமரனிடம் நீங்கள் அப்பா விடம் பேசுங்கள் அண்ணா" என்றான் அமீத்.
ம்ம் சரி என்றவன் நீண்டசிந்தனையோடு வீட்டிற்கு வந்தான் அமரன்.
தனக்கான வேலைகளையெல்லாம் முடித்து மாமியாருடன் பேசிக்கொண்டு இருந்தாள் தாரா…
அவர்களைக் கவனியாது, தன் அறைக்குச் சென்று உடையை மாற்றிப் பின் படுக்கையில் வீழ்ந்தான் அமரன்.
அமைதியாகச் சென்ற பெரிய மகனின் செயலில் என்ன தோன்றியதோ வேகமாக அவனைக் காண வந்தாள் தாரா.
என்ன அமரன் என்று அவள் கேட்கவும் கோபமாக அங்கே அதியமான் வரவும் சரியாக இருந்தது.
தந்தையின் வரவில் வேகமாக எழுந்து அமர்ந்த அமரனின் முன்புபைலினை வீசியவன் "என்ன டா மனசில நினைச்சுட்டு இருக்கே நீ… உன்னை நான் உன்னோட பெத்தவங்களிடம் தான் அனுப்பினேன்… அநாதையாக உன்னை விரட்டி விடவில்லை அமரன்… என்னை ஏன்டா இப்படிச் கொல்லுகிறாய்" என்று சீறினான் அதியமான்.
தந்தையின் கோபத்தில் என்ன ஆச்சு இவருக்கு என்று அவர் அருகில் வந்து அப்பா என்ற மகனின் இரு தோளில் கை வைத்து "என் தம்பியையே பிள்ளையைப் போல வளர்ந்தவன் டா நான் … உன்னைப் பற்றி யோசிக்காமல் எப்படி இருப்பேன். உனக்கான எதிர் காலத்தைப் பற்றியும் உன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பேனா... ஏன்டா எதுவமே மனம் விட்டுபேச மாட்டேங்கற" என்று கத்தினான்…
"என்ன நான் சொல்ல வில்லை…ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு... தெளிவாகச் சொல்லுங்க அப்பா" என்றான் அமரன்.
"இனியனிடம் இருந்து தான் நான் வரேன்" என்றான் சுருக்கமாக…
அதிலேயே எல்லாம் புரிந்தது அவனுக்கு…
"இல்லை அப்பா... அது வந்து" என்று இழுத்தவனை…
"நீ என்னிடம் சொல்லியிருக்க வேண்டும் அமரன்" என்ற தொனியில் கண்டிக்கும் தந்தையைக் கட்டவனுக்கு ஆனந்தத்தில் அன்புப் பீறிட்டது…
"இதில் என்ன இருக்கிறது" என்று மீண்டும் பதிலைத் தராமல் பேச்சு மாற்றும் மகனைக் கண்ட அதியமான்…
"இங்கே பார் அமரன்… நான் உன் அப்பா… இப்போ நீ என்னிடம் இருக்கிறாய்... உன் நல்லதும் கெட்டதும் எல்லாம் என்னைக் கடந்து தான் உன்னிடம் வரும்… இனி இதுபோன்ற எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யாதே" என்ற அதியமான் முழுமையாக மகனிடம் கோபத்தைக் காட்டும் தந்தையாக மாறி அவனைக் கண்டித்துக் கொண்டு இருந்தான்
அதில் கோபம் வந்தது தாராவிற்கு…
"இப்போ எதுக்குப் பையனிடம் கத்திட்டு இருக்கீங்க"… என்றாள்.
"உன் புத்தரன் என்ன பண்ணி இருக்கான் தெரியுமா?... படிச்சுட்டுப் பகுதி நேர வேலைக்குப் போய் அவனுக்கான வியாபாரம் தொடங்கபணம் சேமித்து இனியனிடம் கொடுத்திருக்கான், இங்கே அவனுக்கும் பிஸினஸ் தொடங்க உதவிக் கேட்டு இருக்கான். இவன் இந்தியா வந்தபின் அவன் என்னிடம் சொல்லறான்… அவனும் என்னிடம் மறைத்து விட்டான். இன்னும் இரண்டு வருடபடிப்பு இங்கே முடிக்க வேண்டும்... இவன் அதற்குள் பெரிய மனுஷன் எல்லாம் பீரி ப்ளான்பண்ணறாராம்" என்று மனைவியிடம் திசைதிருப்பினான்…
"இப்போ என்ன… என் பையன் பொறுப்பா இருந்திருக்கான் அதுக்கு இப்படித் திட்டுவீங்களா"… என்றாள் தாரா.
"அப்பா நான் உயிரோடு இருக்கும் போது, அப்படியென்ன தேவை அவனுக்குக் கேட்கிறேன்" என்றான் அதியமான்…
"என்ன தேவையோ… அவனைச் சும்மா திட்டாதீங்க அவன் வந்து இரண்டு நாட்கள் தான் அகியிருக்கு.. பாவம் என் மகன்" என்று அவன் அருகில் வந்தவள் அவனை அணைத்தாள்…
"உங்க இரண்டு பேரிடமும் மாட்டிட்டு முழிக்கும் நான் தானடிப் பாவம்" என்றவன் தன் கழுத்தில் இருக்கும் டையைத் தளர்த்தியவன் வேகமாக மொட்டை மாடிக்குச் சென்று காற்று வாங்கித் தன் கோபத்தைத் தனிக்க முயன்றான் அதியமான்.
கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை அவனால்.
தந்தையின் பின்னே வேகமாக வந்தவன் பார்த்த அவன் முதுகை மட்டுமே…
அப்பா என்று அழைத்த மகனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல் நின்றிருந்தான் அதியமான்.
தந்தையின் முன்னே வந்து நின்று அவன் முகத்தைப் பார்த்த அமரன் அதிர்ந்து போனான் கலங்கிய தந்தையின் கண்களைக் கண்டு…
"அப்பா.. நான் உங்களை வேதனைப்படுத்த இதைச் செய்ய வில்லை… அங்கே எனக்கு நிறைய நேரம் கிடைக்கும் அப்படித் தான் பகுதி நேர வேலைக்குச் சென்றேன்.. எனக்கென்று எந்தத் தேவையும் இருந்ததில்லை…எல்லாம் டாட் பார்த்துக்குவார்.. இந்தப் பணம் சேமிப்பில் வைத்து விட்டேன்…அதில் எதாவது பண்ணவேண்டும் தான் இனியன் மாமா கேட்டேன் உங்களுக்கு இதனால் இவ்வளவு ஹேர்ட் ஆகும் நான் நினைக்கவில்லை சாரி" என்றான் அமரன்.
உன்னோட வாழ்க்கையில் நீ, பெரிய ஆளாக வளரவேண்டும். அது என் ஆசைதான்… ஆனால் இப்படி விளையாடும் வயதில் வேலைக்குப் போய்ப் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு உன்னைத் தள்ளிய, என் முடிவில் மேல் எனக்கு இன்னும் கோபம் உண்டாகுது … அது மட்டுமல்ல உனக்குப் பணம் தேவைக்கு லோன் முயற்சி செய்து கொண்டு இருப்பது தான் ரொம்ப வலிக்குதுடா" என்றான் அதியமான்.
அப்பா… அதென்று நிறுத்தினான் அமரன்…
"நீ லோன் எல்லாம் போட வேண்டும் டா"… என்று கூறிய அதியமான்…
"உனக்காக நான் சேவிங்ஸில் போட்ட அமௌண்ட் இருக்கு "என்று அவனிடம் கூறினான்.
"நீ தைரியமாகத் தொடங்கு உன் தொழிலைபார்த்துக் கொள்ளலாம்" என்று மகனின் முடிவுக்கு உறுதுணையாக நின்றான்.
"அப்பா என்று இழுத்த அமரனிடம் பயப்படாதே… உனக்கு என்று நான் நீ பிறந்த ஒரு வருடத்தில் இருந்து சேமித்து வருகிறேன். ஒரு தொகை உனக்காகத் தான் உன்னோட கனவு... தொழில் இப்படி எதுவாக இருந்தாலும் பயண் படவேண்டும் என்று தான் நினைத்தது. அதனால் எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொள்ள" என்றான் அதியமான்.
தந்தை தன்னை மறக்க வில்லை என்பதே அவனுக்கு மிகப்பெரிய நிம்மதியை உண்டாக்கியது.
"கண் கலங்கியது அந்த இளம் ஆண் மகனுக்கு… மகனின் நிலையைக் கண்ட அதியமான், உனக்கு என்று இருந்தது இன்றும் உனக்காகத் தான் இருக்கிறது. இன்றைக்கு என்றைக்கும் நீ தான் என் முதல் மகன். என் வாரிசு இதில் மாற்றங்கள் இல்லை அமரன். நன்றாகக் கேட்டுக் கொள்.. அகி அண்ட் அமராவதி உன்னோட பொறுப்பு "என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான் அதியமான்.
"நீங்கள் சொல்லவில்லை என்றாலும், அவர்கள் என்னுடைய பொறுப்புதான் அப்பா… நல்ல அண்ணானாக அவங்களுக்குக் கைட் பண்ணுவேன்" என்று கண் குரல் உடையகூறினான்.
"போதும் என் பையனை அழ வைக்காதீங்க"… என்றபடியே அவனை அணைத்து ஆறுதல் படுத்தினாள் தாரா.
"வந்துருவாடா… எப்பவுமே இப்படித்தான்.. நீ என்னிடம் நெருங்கினால் போதும் பொறாமைப் பொங்கிரும் அம்மா பாசம் என்ற டைட்டிலில்" என்று மனைவியைக் கேலிச் செய்தான் அதியமான்.
"என்னைக் கேலிச் செய்யவில்லை என்றால் உங்களுக்குத் தூக்கம் வராதே "என்று முகம் திருப்பிய மனைவியை அம்மூ என்று அழைத்துச் சும்மா விளையாட்டுக்கு என்றான் அதியமான்.
அம்மூ வா என்று சிரித்த அமரனின் செயலில் முகம் சிவக்க என்னங்க இப்படி என்றபடியே வேகமாகச் சென்றாள் தாரா.
தாரா , சென்றதும் அமைதியாக இருக்கும் தந்தையைக் கண்டவன்... சாரி என்றான்.
"விடு என்றவன் என்ன ஐடியா வச்சுருக்க"… என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் அதியமான்.
தந்தையின் பேச்சில் நிதானம் அடைந்த அமரன் தன் தொழில் பற்றியும் அதற்கு என்ன செய்ய வேண்டும் எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்று எல்லாம் தெளிவாகக் கூறினான்.
மகனின் வார்த்தைகளை எல்லாம் கேட்டவனுக்கு அவன் விளையாட்டுப் பிள்ளை இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது.
மேலும் என்ன செய்ய வேண்டும் என்று தனக்குத் தெரிந்த அணைத்துச் சொல்லிக் கொடுத்தவன் எந்தக் கல்லூரியில் பகுதி நேரமாகச் சேர்ந்துப்படிக்க வேண்டும் என்று அறிவுரைக் கூறினான் அதியமான். நேரம் செல்ல அவர்களை அழைக்க வந்தாள் அமராவதி.
அண்ணா என்று ஒடி வந்தவளை வாரி எடுத்த அண்ணனின் செயலில் "இப்போதெல்லாம் குட்டி அப்பாவைக் கண்டுகொள்வதே இல்லை" என்று அவளிடம் சண்டைக்கு வந்தான் அதியமான்.
"நீங்கள் தான் எப்பவுமே அண்ணா பின்னால் சுத்திட்டு இருக்கீங்க" …என்றாள் அழகாக
அவளின் பேச்சில் இருந்த அழகை ரசித்த அவள் தந்தை…பார்ரா… அண்ணனும் தங்கையும் ஒன்றாகிட்டாங்க…அப்போ நானும் அம்மாவும் தான் டீம் போலையே"… என்றான் அதியமான்.
"நீங்கள் எப்பவுமே அம்மா டீம் தானேப்பா, புதுசாசொல்லுறீங்க" என்ற தங்கையின் குறும்பில் சிரித்தான் அமரன்.
"தாராவோ எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தா என்னைக் கேலிச் செய்வது வாடிக்காயாக வச்சீருக்கீங்க"… என்ற அவள் கோபம் கண்ட அதியமான்…
"நான் எதுவும் சொல்லவில்லை தாரா, எல்லாம் உன் பிள்ளைகள் தான்" என்று சரண்டர் ஆனான் அவளிடம்…
"ம்ம் பார்த்துட்டே தான் இருக்கேன்" என்று அவள் போனதும்.. "அப்பா நீங்க அம்மாவிடன் டிபஃன் பண்ணறதே இல்லை" என்றான் அமரன். தன்னவன் சென்று விட்டாள் என்று நினைத்து.
அவளிடம் சண்டைபோடும் போது அவள் அழுதாள் நிறுத்த மாட்டாளா என்று கவலைபடிந்து முகத்தை வைத்துக் கேலிச்செய்தான் அதியமான் தன் மனைவியை.
போனவள் குடிக்க எதாவது கொண்டு வரவா என்று கேட்கத்திரும்ப வந்தவள், தன் கணவனின் வார்த்தைகளைக் கேட்டு அவனை முறைக்கவும், அப்போது தான் அவள் செல்ல வில்லை என்பதைக் கவனித்த அதியமான்…
"நான் அப்படிச் சொல்ல வில்லைத் தாரா" என்று பயந்த அதியமான் செயலில் பிள்ளைகள் சிரித்தனர்.
அழகான அன்பு அங்கே உறவாடிக் கண்கொண்டு இருந்ததை எல்லோருக்கும் உணர முடிந்தது.
அதியமான் கூறிய அறிவுரைகள் மனதில் வைத்துதனக்கான தொழிலைத் தொடங்கினான் அமரன்.
அதற்கான முதலீடு எல்லாம் தயாராக வைத்திருந்தான் அதியமான்.
அமரனுக்கு என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அது தான் செய்து தரவேண்டும் என்று எப்பொழுதோ முடிவு செய்து வைத்திருந்தான் அவன் தந்தை அதியமான்.
அமரனின் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்திருந்தான் அதியமான்.
இனி வரும் காலங்களில் அவனுக்கு என்ன வேண்டுமோ அது தான் நடக்க வேண்டும் என்று நினைத்தான் அவன் தந்தையாக.
அவன் தொழில்நுட்ப அறிவின் மேலும் நம்பிக்கை அதிகமாக இருந்தது.
இனி வரும் காலம் எல்லாம்
நல்லதாகவே அமையட்டும் என்று இருந்தான்…. இதெல்லாம் நடக்கும் போது சதீஷ் நிலைதான் என்ன என்று தெரியவில்லை… அவன் வரும் போது எல்லாம் மாறி இருக்கும்…
தொடரும்…