எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா -32

subasini

Moderator
மனம் -32

ஒவ்வொரு நாளும் விடியும்…

அந்த விடியலெல்லாம் ஒரே போன்று இருப்பதில்லை…

ஒவ்வொரு மனதிலும் மாற்றங்களை உண்டாக்கி இருக்கும்.

அப்படித் தான் அமரன் வாழ்க்கையில் பல மாற்றங்கள் உண்டாகியது.

இப்போ எல்லாம் மாறி இருந்தது…

பெற்றோர்களுடன் ஒரே வீட்டில் இருந்த போதும் தனிமையில் வாழ்ந்தவன்..தன்னை வளர்த்தியவர்களிடம் மீண்டும் வந்து சேர்ந்த தில் அவனுக்குப் பறவை தன் கூட்டிற்கு வந்து சேர்ந்த உணர்வு தந்தது.

அவனுக்கு இன்றும் எல்லாமுமாகத் தாராவின் அன்புக் கட்டி வைக்கிறது.

மகனின் ஆசைப்படி அவனுக்குக் கனவுத் தொழில் உருவாக்க இரவும் பகலும் நாடு பட்டான் அதியமான்.

அமரன் கூடவே இருந்து எல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்து கொடுத்தான்.

அவனுக்கான முதல் ப்ராஜெக்டில் அவனுக்கு உறுதுணையாக இருந்தனர்.

இருவரின் வழிக் காட்டுதல் கொண்டு வெற்றிகரமாகத் தன் வேலையை முடித்துக் கொடுத்ததில் அவன் வாடிக்கையாளர் அவனுக்கு மேலும் ஒப்பந்தம் செய்து அவனோடு பயணிக்கத் தீர்மானித்தனர்.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர் சதீஷ் மற்றும் தாரிகா.. அமீத்.

சதீஷ் குடும்பத்தினர் வரும் போது விருந்து முடிந்து வீட்டில் அதியமான் குடும்பம் மட்டுமே இருந்தது.

சாந்தியம்மாவின் கால்களுக்கு மருந்துப் போட்டுக் கொண்டு இருந்தாள் தாரா.

அவள் அருகே அமர்ந்து அன்றைய தினம் நடந்த கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தான் அமரன்.

அப்போது அழைப்பு மணி அடிக்க யாரெனப் போய்க் கதவுத் திறந்துப் பார்த்தாள் உமா.
தாரிகாவை அவருக்கு நினைவு இருந்தது…

வேகமாக "வாங்க" என்று உள்ளே அழைத்தாள்…

அங்கே தந்தையுடன் விளையாடும் அமராவதியைப் பார்த்து " பாப்பா... உங்கள் சித்தப்பா வந்து இருக்காங்க" என்றதும்.. வேகமாக வெளியே வந்த அதியமான் "வா டா, சதீஷ்" என்று தன் தம்பியை ஆரத் தழுவினான்…

அந்த அணைப்பில் அன்று போல் இன்றும் அவன் அன்பை மட்டுமே உணர முடிந்தது சதீஷிற்கு.

வெளியே கேட்ட அரவத்தில் உள்ளே இருந்து வந்தனர் அம்மாவுடன் மகனும்.

வந்தவர்களை வரவேற்றாள் தாரா…


தாரிகா என்றவள் கண்ணீர் மல்க அவளை அணைத்திருந்தாள் அதில் நன்றியுணர்வு இருந்தது தன் மகனைத் தன்னிடம் விட்டுக் கொடுத்தற்கு.

"வாங்க டாட்" என்றவன் அமீத் பார்த்து "எப்படி இருந்தது உன்னோட பயணம்" என்று கேட்டான் அமரன்.

"சூப்பர் அண்ணா" என்றான் அமீத்.

அங்கே வந்த அகிலிடன்… "அமீத்தைக் கூட்டிட்டுப் போ அகி... அவன் பிரெஷாகட்டும்‌" என்றான் அமரன்.

அமரனின் இந்த உரிமையான செயலை எல்லோரும் உணர்ந்தனர்…

"அம்மா எங்கே? அண்ணா" என்ற சதீஷின் கேள்விக்கு…

"காலில் மருந்து இப்போது தான் போட்டு விட்டேன், அது தான் படுத்து இருக்காங்க" என்றாள் தாரா.

அவனுக்குத் தாராவை நேருக்கு நேர்ப் பார்க்க முடியவில்லை.

தன் தேவையற்றக் கோபமும் ஈகோவும் தங்கள் பிள்ளையைக் கீறிப் பதம் பார்த்து விட்டதில் அவனுக்கு வேதனை இருந்தது மனதில்.

அமரனின் மனகாயம் ஆறினாலும் அதன் வடு இருக்கத்தானே செய்யும் என்று நன்றாகப் புரிந்தது சதீஷிற்கு.

"சரி வாங்க நாம் அவங்களை அங்கே போய்ப் பார்க்கலாம்" என்று அழைத்துச் சென்றாள் தாரா.

அப்போது தான் லேசாகக் கண் மயங்கிய தாயின் முகத்தைப் பார்த்து அம்மா என்ற அதியமானின் குரலில் "இப்போது தான் தூங்கவே போறேன், சும்மா மருந்துச் சாப்பிடுங்க என்று
என்னைத் தொந்தரவுச் செய்யாதே அமரா" என்று திரும்பிப் படுத்தார்.

"பாட்டி நீங்கள் கண் விழித்துப் பாருங்கள் யார் வந்திருக்கா" என்று அவரின் அருகே அமர்ந்து அவரை எழுப்பினான் அவரின் செல்லப் பேரன்.

மெல்லகண் விழித்துப் பார்த்தச் சாந்தியம்மாவின் கண்கள் நம்பிக்கையின்மையின் காரணமாக மீண்டும் விழிகளைக் கசக்கிப் பார்த்தார்… அவரின் சிறுபிள்ளைச் செயலில் சிரித்த அமரன், "பாட்டி வயசானாலே இப்படித் தான் கண்ணாடிப் போடுங்க" என்று அவரைக் கிண்டல் செய்தான் அமரன்.

"உனக்குத் தான் டா வயசு ஆகிடுச்சு" என்றபடி எழுந்து அமர்ந்தவர்…
தன் இளைய மகனைப் பார்த்ததும் கண் கலங்கியது.

"எப்படி இருக்கே சதீஷ்" என்றார்சாந்தியம்மா.

"நான் நல்லா இருக்கேன் அம்மா, நீங்க எப்படி இருக்கீங்க" என்று அவரின் அருகே அமர்ந்துகேட்டான்.

"ம்ம் இப்பொழுதாவது, என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது, உனக்குச் சந்தோஷம் தான் எனக்கு" என்றார்சாந்தியம்மா.

"என்றைக்கும் உங்களை நினைக்காதே நாளே‌ இல்லையம்மா… வேலை அப்படி என்ன செய்வது" என்று அவரைச் சமாதானம் செய்தான் சதீஷ்.

ம்ம் சரி சரி.. நீ‌போய்க் குளித்து ஃப்ரெஷ்ஷாக… என்றவர் தாராவைப் பார்த்தார்.

அவளோ தலையையாட்டிச் செல்ல எத்தனிக்கையில் அங்கே அனைவருக்கும் குடிக்க டீ… மற்றும் காஃபி எடுத்து வந்தாள் உமா…

எல்லோருக்கும் கொடுத்த தாரா, சமைக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறியவள் தாரிகாவை அழைத்துச் சென்றாள் தங்கள் அறைக்கு.

"எப்படித் தாரிகா இருக்கிறாய்? என்றவள் "வீட்டில் அம்மாவிற்கு அழைத்துப் பேசினாயா? என்று கேட்டாள் தாரா.

"அம்மா என்னிடம்‌ நன்றாகப் பேசியே வருடங்கள் ஆகிறது தாரா. எதைப் பற்றியும் கேட்பதில்லை ஏன் என்று தான் தெரியவில்லை. அவருக்கு என்ன கோபம் என்று சொன்னால் தானே எனக்குத் தெரியும்" என்றாள் தாரிகா.

தாயின் கோபம் புரிந்தபோதும்… "நீ இப்படி அயல் தேசத்துப் போய்ச் செட்டில் ஆனதில் கோபம் இருக்கலாம்… இனி‌பாரு நன்றாகப் பேசுவார்" என்று அவளை ஆறுதல் படுத்தியவள், "சரி நீ வா, உன்னோட அறைக்குச் செல்லலாம்" என்று அவர்களுக்கு என்று இருக்கும் அறையில் அவளை அழைத்துச் சென்று "நீ குளித்து உன் களைப்பைப் போக்கு, நான் அமரனிடம் உன்னோட பயணப் பெட்டியைக் கொடுத்து விடறேன்" என்று அங்கிருந்துச் சென்ற சிறுது நேரத்தில் அமரன் அங்கே வந்தான் அவளோட உடமைகளைக் கொண்டு வந்து…

"மாம் உங்களோட பயணம் எப்படி இருந்தது" என்றவன்… "எல்லாம் ஓகே வா" என்றான்.
மகனின் நீண்ட நெடிய உரையாடலைக் கேட்டு அவன் முகத்தைப் பார்த்த, தாரிகா மனதில் தன்னிடம் இருக்கும் போது இப்படி இருந்ததில்லையே என்று எண்ணினாள்…

இங்கே இருக்கும் அவன் உரிமையான செயல் எல்லாம் அங்கே அவனிடம் இல்லாமல் இருந்தது அப்போது தான் ஒன்றை உணர்ந்தாள்…

அமரன் தங்களுடன் வரும் போது அவனிடம் நாங்கள் தான் உன்னைப் பெற்றவங்க என்பதைச் சொல்ல வில்லை யாரும் என்று புரிந்தது. அதனால் அவன் தாரிகா, தன் தாய் என்ற எண்ணத்தில் பழக வில்லை…
கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் எப்படியோ உண்மைத் தெரிந்து இருக்கும். அது தான் அழைப்பு மாற்றி மாம் டாட் என அழைத்தான் என்று புரிந்துகொண்டாள்.

அமரன் இடத்தில் சரியாகத் தான் இருந்து இருக்கிறான்… அப்பொழுதுதான் தவறு செய்து இருக்கிறேன் என்று காலம் கடந்து சிந்தித்தாள் தாரிகா.

தன் தவறால் அமரன் மற்றும் தாரா மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது குற்ற உணர்வு உண்டாக்கியது.


எங்கே தவறிழைத்தோம் என்று புரிந்தது.

இனி இதெல்லாம் புரிந்தும் உணர்ந்தும் என்ன செய்ய நடந்து முடிந்ததை மாற்றவா முடியும் என்று பெருமூச்சு விட்டாள் தாரிகா…

"மாம் நான் கேட்டுட்டே இருக்கேன் என்ன யோசனை" என்ற அமரனின் குரலில் நிகழ்கால வந்தவள் அவனின் கன்னத்தில் கையை வைத்து "உன்னோட வாழ்க்கையில் உனக்கு உண்டான தனிமைக்கும்.. அதனால் உண்டான‌ வேதனைக்கும் நான் மட்டுமே காரணம்.. என் சுயநலம் தான் தாராவும் மாமா ரொம்பப் பாவம், அவங்க நல்ல மனம் எங்களுக்கு ஒத்துழைக்கச் சொன்னது" என்றவள் "சாரி அமரன்"… என்று உளமார மன்னிப்புக் கேட்டாள் தான் பெற்றெடுத்த பிள்ளையிடம்.

அவனுக்குக் கிடைக்க வேண்டிய எதுவும் கிடைக்காமல் போகக் காரணம் தங்கள் சுயநலம் நிறைந்த வாழ்க்கை என்று உணர்ந்துக் கேட்டாள் மன்னிப்பு.


"மாம் என்ன பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசிட்டு.. ம்ம் விடுங்க, இனி இதைப் பற்றிப் பேச வேண்டாமே" என்றான்…

"நீங்கள் முதலில் குளித்துவிட்டு வாங்க, எல்லாம் மாறிப் புத்துணர்வு இருக்கும்" என்றவன் வேகமாகத் தாராவைத் தேடி வந்தான்.

அவள் அங்கே அமீதிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

"பெரியம்மா நீங்கள் செம்ம.. எப்படித் தெரியும் எனக்கு இந்த ஸ்நாக்ஸ் பிடிக்கும்" என்று கேட்டான் சந்தோஷக்குரலில்…

"அதெல்லாம் தெரியுமே" என்று அவனோடு இணைந்து பேசிக்கொண்டு இருந்தாள் தாரா.

வேகமாக வந்த மகனின் செயலில் அவன் முகம் பார்த்தவள்…

"சரி நீங்கள் சாப்பிட்டு இந்தப் பூஸ்ட் குடிக்கணும் சரியா" என்றவள் அகிலனிடம் பார்த்துக் கொள் என்று கண்ணசைவில் கூறியவள் பெரிய மகனோடு தங்கள் அறைக்கு வந்தாள் தாரா.

"அமரா என்ன ஆச்சு" என்றவளை …
இறுக்கமாக அணைத்தவன் கண்கள் கலங்கியது.


"என்னடா, சின்னப்பிள்ளைப் போல" என்றவள்…

"கல்யாணம் பண்ணற வயது ஆகிருச்சு உனக்கு… இப்படிக் குழந்தைப் போல அழுதால், நான் எப்படிப் பெண் பார்க்க" என்று கேலிச் செய்தத் தாயின் பேச்சில் "எனக்குக் கல்யாணம் எல்லாம் வேண்டாம்… வரப் போகும் பெண் நம் உறவை புரிந்து கொள்ள மாட்டாள் மாமியார் சண்டையில் திரும்பவும் நமக்கு இடையே தான் பிரிவை உண்டாக்கும்" என்று அவன் பதில் தீவிரமாக வந்து வீழ்ந்தது.

"என்ன பேச்சுக் கண்ணா" என்றவள் "எனக்கு என் மருமகள் நன்றாகப் பார்த்துக் கொள்வேன், கண்டிப்பாக நம் வீட்டில் இருக்கும் அனைவரின் அன்புக்கு அவள் கட்டுப் படுவாள்" என்றாள் தாரா.

"கனவுக் காணதீங்க மிஸஸ் அதியமான்" என்றான் அமரன்.

தன்னவளை அணைத்துப் படி அவளிடம் பேசிக் கொண்டு இருக்கும் மகனின் செயலில் "முதலில் இவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்கணும்" என்ற படி அங்கே வந்தான் அதியமான்.

தன் கணவனின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரித்தாள் தாரா.
தந்தையை முறைத்தான் அமரன்.

"என்னடா லுக்கு… எங்களுக்கு நடுவே நீ தான் டா, எப்பவும்" என்று கோபம் தாண்டவமாட விளையாடினான் தன் வயது வந்த பிள்ளையிடம்.

"சாரி மிஸ்டர் அதியமான்… எனக்கும் என் அம்மாவிற்கும் இடையே.. நீங்களும் சரி.. சோ கால்ட் மருமகள் சரி வரவே முடியாது" என்று அவளை மேலும் அணைத்து நின்றான் அமரன்.

"டேய் அவள் என் பொண்டாட்டி டா" என்ற தந்தையிடம்..

"அவங்க என் அம்மா" என்றான் அமரன்…
ஓஹோ… என்றவன்…

இருவரையும் தன் இரு கரங்களால் அணைத்துப் பிடித்த அதியமான்… "நீங்கள் இருவருமே என் அன்பு உள்ளே டா என்னை மீறிதான் யாருமே வர முடியும்" என்றான் அதியமான்.

தந்தையின் செயலில் உணர்ச்சி வசப்பட்டு அமரன் ஆமாம் அப்பா என்ற குரல் உடைந்து அழுகை வெளிப்பட்டது.

ம்ம் அமரன் என்று அவனை மட்டும் நன்றாகத் தன்னோடு அணைத்து இருந்தான் அதியமான்.

கணவன் மற்றும் மகனின் செயலில்.

"மக்கும் இரண்டு சேர்ந்து என்னை வெளியே அனுப்பிட்டீங்கப் பார்த்தீங்களா" என்றாள் தாரா.

"நீ தான் எங்கள் ஆணி வேர்" என்று இருவரும் அவள் அணைத்து இருந்தனர்.

இந்த மூவரணி இணைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது என்று உணர்ந்தனர் அனைவரும்.

தாரிகாவைத் தேடி வந்தான் சதீஷ்.

அப்போது தான் குளித்து இருந்தாள்.

இவ்வளவு நாட்கள் இல்லாத பொலிவு அவள் முகத்தில் தாண்டவம் ஆடியது.

மனைவியின் அருகே வந்த சதீஷ்.. "என்னடி இந்தியா வந்ததும் உன் அழகுக் கூடி இருக்கிறது" என்றான்.

தன்னை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் கணவனின் செயலில் "வயதிற்கு வந்த பசங்களோட அப்பாவாக நடந்து கொள்ளுங்கள்" என்ற படி அவனுக்குத் துண்டை எடுத்துக் கொடுத்தவள் "போய்க் குளித்துவிட்டு வாங்க" என்றாள்.

பிள்ளைகளைப் பற்றிய அவள் பேச்சில் முகத்தில் சிந்தனைப் படர அமரனைக் கவனித்தாயா? தாரிகா" என்றான் சதீஷ்.

"ம்ம் கவனித்தேன்.. இங்கே எவ்வளவு உரிமையாக வலம் வருகிறான்.. நம்மிடமொரு ஒதுக்கம் இருந்து கொண்டே இருந்தது, மனதளவில் அவன் தாராவோடு மகனாகவே தான் வாழ்ந்து இருக்கிறான். நம்முடன் அது மறுக்கப்பட முடியாது" என்று உணர்ந்துக் கூறினாள் தாரிகா…

"உண்மைதான்" என்று எதையோ மனதில் வைத்துப் பேசினான் சதீஷ். "அவர்களின் கூட்டில் கல் எரிந்து விட்டேன் இல்லையா" என்று தன் மனைவியை நோக்கிக் கேட்டான்.

"புரிந்தது உங்களுக்கு இதைத்தான் நான் அன்றே கூறினேன், சரி முடிந்துப் போனதைப் பற்றிப் பேசிய எதும் ஆகப்போவதில்லை, இதுதான் நம் குடும்பம் என்பதை மனதில் இருத்தி, இனிவரும் காலங்கள் சந்தோஷமாக வாழலாம் என்கிற முடிவோடு இருக்கேன் நான், உங்களோட முடிவு என்ன" என்று தன் கணவனிடம் கேட்டாள் தாரிகா.

"உனக்கு இங்கே அம்மா தாரா எந்தக் குடும்பத்தோடு இருக்க விருப்பம் தானா" என்று நேரடியாகவே கேட்டான். மீண்டும் அனைவரும் ஒன்றாக என்று கூறும் போது, பலவிதமான பிரச்சனைகள் வரும், உனக்குப் புரியும் தானே" என்றான்.

இதுதான் என் குடும்பம் தாரா உங்கள் அண்ணன் மனைவியாக இருந்தாலும் என் உடன் பிறந்தவன் எனக்கு எப்பொழுதுமே நன்மை மட்டுமே சிந்திப்பவர் அது மட்டும் தான் நான் மனதில் வைத்திருக்கிறேன். எல்லாரும் ஒன்றாகவே இருக்கலாம் சதீஷ், வேண்டாமே தனியா என்ற ஒரு வாழ்க்கை" என்றாள்.
"உங்கள் அம்மாவுக்கு ஒரு மகனாக நீங்களும் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்" என்றாள். "நம் குழந்தைகளுக்கு உடன்பிறந்தவர்களோடு அன்பும் பிணைப்பு இருக்கும் போதுதான் வருங்காலம் அழகாக இருக்கும்" என்றாள்.

"விட்டுக் கொடுப்பதும் அனுசரித்துப் போவதும் குழந்தைகளுக்கு இடையே நாம்தான் உண்டாக்கித் தர வேண்டும். அதற்கானச் சந்தர்ப்பமாக அனைவரும் ஒரே குடும்பமாக வாழலாம். இதைப் பற்றி உங்கள் அண்ணனிடம் பேசுங்கள்" என்றாள் தாரிகா.

"எங்க அண்ணன் எதுவுமே சொல்ல மாட்டான், அவனுக்கே தெரியும் நான் வேற வீடு பார்க்கிறேன் என்று சொன்னாலே என் அண்ணன் கூறும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். அதனால் நீ சொல்வதற்காக நான் பேசிப் பார்க்கிறேன்" என்றான் சதீஷ்.

வேகமாகக் குளித்து வேறு ஆடைகள் வந்தவன் நேராக உணவருந்தும் இடத்திற்கு வந்தான். அனைவரும் அங்கே ஒன்று கூடி இருந்தனர். பார்க்கவே அழகாக இருந்தது. உமாவும் மிகவும் சுறுசுறுப்பாக எல்லாப் பணிகளையும் செய்து கொண்டிருந்தாள். அவளுக்குத் என்ன செய்ய வேண்டும் எந்த மாதிரிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு அவளும் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரா.

உணவு மேசையில் அனைவரும் கூடி இருந்தனர் பல வருடங்கள் பிறகு… அதுவே பார்பதற்குச் சந்தோஷமாக இருந்தது சாத்தியம்மாவிற்கு. இது தான் நம் குடும்பம் என்று மனதில் ஒரு நிறைவு உண்டானது அவருக்கு.

அனைவருக்கும் உணவைப் பரிமாறினாள் தாரா அவளுக்கு உதவியாக இருந்தாள் தாரிகா.

அதியமானிடம் உணவுப் பரிமாறும் போது கேளுங்கள் என்று கண் ஜாடைக் காட்டினாள் தாரா.

ம்ம் என்றவன் சதீஷ் பார்த்து "ரூம் உனக்கு வசதியாக இருக்கிறதா? சதீஷ், இல்லை எதாவது மாற்ற வேண்டுமா? என்று‌ நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அதியமான்.

"நாம் எல்லோரும் ஒன்றாக இங்கேயே இருக்கலாம் சதீஷ்… நீ இந்தியா வருவே என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது..
அது தான் வீடு கட்டும் போது உனக்கான அறையை உனக்குப் பிடித்தது போல் கட்டி இருக்கேன். எதுவும் எதிர்த்துப் பேசாதே… அம்மாவிற்கு வயது ஆகிருச்சு, அவங்களுக்கு எல்லோரும் ஒன்றாக இருப்பது தான் ஒரே சந்தோஷம்" என்று சதீஷிற்குச் சங்கடம் உண்டாகாமல் அவனுக்குத் தேவையான வழியில் எல்லாம் பேசினான் அதியமான்.

"உன்னோட பிஸினஸ் வெளிநாட்டு எப்போதெல்லாம் போகணும் அதுக்கு போல எல்லாப் பார்த்துக்கொள்" என்றான் அதியமான்.

"அதெல்லாம் சரியாகத் திட்டம் போட்டு எல்லாம் செய்து விட்டுதான் வந்திருக்கேன் அண்ணா" என்றான் சதீஷ்.

அன்றும் இன்றும் அவனால் அதியமான் வார்த்தைகளுக்கு எதிராகப் பேச முடியவில்லை முயலவும் இல்லை.

பெரியவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவுக்கு வந்திருந்தனர்.

அதில் சிறியவர்களுக்கு‌ எல்லையில்லாத ஆனந்தம் உண்டானது.

பெற்றோரின் இந்த முடிவில்.. "அப்பாடா.. இனி‌நானும் அக்கியும் ஒன்றாக இருக்கலாம்.. அண்ணா கூட ஜாலியாக இருக்கலாம்" என்றான் அமீத்.

அவன் வார்த்தைகளில் இவ்வளவு காலமும் அவன் என்ன மிஸ் பண்ணிணான்‌ என்று‌ச் சொல்லாமல் சொன்னான்.

அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் ம்ம் சீக்கிரம் சாப்பிடுங்க என்றான் அமரன்.

அண்ணனின் வார்த்தைகளைக் கேட்டு அதன் படிப் பேசாமல் வேகமாக உண்டெழுந்தனர் இருவரும்.

அமராவதி மட்டும் இதில் விதி விலக்கு மெல்ல அவள் உண்ணும் அழகைப் பார்த்து அவளுக்கு ஊட்டி விட்டான் அமரன்.

அவன் தன் தங்கையை மகளைப் போன்ற தாக்கினான்.

இதைப் பார்த்தாள் தாரா…

"ரதி அண்ணா சாப்பிடணும் இல்லையா, நீயே சாப்பிடு" என்று குரலை உயர்த்திக் கூறவும் அவள் விழிச் சிவக்கத் தந்தையைப் பார்த்தாள் அமராவதி.

" பட்டூ வா அப்பா ஊட்டி விடறேன்" என்றான்.

அவனை முறைத்தாள் தாரா.

"விடுங்க அப்பா நானே அவளுக்கு ஊட்டி விடறேன்" என்றவன் தன் தாயைப் பார்த்து "அம்மா அவளை மிரட்டாதீங்க… ஸீ ஸ் குட் கேர்ள்.. பாருங்கள் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்" என்று அவளுக்கு உணவை ஊட்டினான் அமரன்.

"அண்ணனும் அப்பாவும் அவளுக்கு அளவிற்கு மீறிப் பாசத்தைக் குடுங்க" என்று கோபமாகச் சமையற்குச் சென்றாள் தாரா.

அன்னையின் வார்த்தைகளைக் கேட்டுச் சோகமாகத் தந்தையின் தோளில் சாய்ந்து அமர்ந்து உணவினை உண்டு முடித்தாள் அவர்களின் செல்ல மகள்.

மகளின் வாடிய முகம் கண்டதும் சதீஷ் "அச்சோ ஏனடிச் செல்லம் சோகமாக இருக்கிறாய்… நம் அம்மா தானே, அவங்க எப்பவும் நல்லது மட்டும் தான் சொல்லுவாங்க" என்றவன் "வா உனக்குப் பிடிக்கும் சாக்லேட் வாங்கி வந்து இருக்கேன் நான்" என்றான்…

"அப்படியா டாட்" என்று அமரன் எப்படி அழைப்பான் ஓ அதே விளிச்சொல்லில் சதீஷ் அழைத்தாள் அமராவதி.

"ஆமாடித் தங்கம்" என்று அவளை அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்த எல்லாம் வாங்கி வந்ததைக் காட்டினான்.

அழகாக இருந்தது இதெல்லாம் பார்க்க.

அப்போது "இந்த வீட்டில் பெண்ணாகப் பிறந்த இருக்காலாம் அண்ணா" என்று அமீத் திடம் புலம்பினான் அகிலன்.
அவனின் குறும்பில் "என்ன சொன்னாய் அக்கி" என்ற தந்தையின் குரலைக் கேட்டு "எப்படித் தான் இவருக்கு மட்டும் நான் பேசறதுக் கேட்குமோ" என்று தன் பாட்டியிடம் அடைக்கலம் ஆனான்.

அவனின் குறும்பில் அவனை மிகவும் பிடித்தது தாரிகாவிற்கு. அவனுக்குத் தாரிகாவோடு நன்றாகச் செட் ஆனதில் அவனுக்குச் சப்போர்ட் ஆகா இருந்தாள் தாரிகா.

பல வருடங்களுக்குப் பிறகு தன் குடும்பம் ஒன்றாக இருப்பது பார்த்துக் கண் கலங்கியது அதியமானுக்கு.

எந்த ஒரு நல்ல விஷயம் நடப்பதானாலும்‌ அதற்கென்றொரு நேரம் வரும், அதுவரைக்கும் நாம் காத்திருக்க வேண்டுமென்று‌ப் புரிந்துக்கொண்டான்.


சதீஷ் மற்றும் தாரிகா இங்கேயே வந்து விட்டனர் என்று அறிந்து, கங்காதரன் மற்றும் புனிதா அவர்கள் காண வந்தார்.

தாராவின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் பாரா முகத்தைக் கை விட்டவர், தாரிகாவிடம் நன்றாகப் பேசினார்.

இதெல்லாம் பார்த்து அமரன் தன் தந்தையிடம் வந்தான்.

அதியமான் அவனை அணைத்து "இதெல்லாம் உன்னால் தான் முடிந்தது அமரன்" என்று இறுக அணைத்து இருந்தான்.

நம் குடும்பம் இது தான்.


"நீ தான் என் கூட இருந்து நம் குடும்பத்தைப் பார்க்கணும், நீ தான் பெரிய பையன், அந்தப் பொறுப்பும் கடமையும் உன்னுடையது, நீ தான் அமீத் அகிலன் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்றான்.

"கண்டிப்பாக அப்பா இது தான் என் குடும்பம்.
என் தம்பிகள் என் பொறுப்பு. என் தங்கை என் கடமை மற்றும் என் உரிமை அவள்" என்றான்.

அமராவதி என்று வரும் போது கொஞ்சம் இல்லை அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விடும் அமரனின் செயலில் பழைய சதீஷின் அண்ணன் அதியமானைப் பார்த்தான் அவன் தந்தை அதியமான்.


என்ன தான் மன வருத்தம் வந்தாலும்.. உடன் பிறந்த உறவுகள் இடையே ஒரு கட்டத்தில் அது‌மாறி‌ மறைந்து விடும் எல்லா‌ மாற்றங்களுக்கு அடிப்படைப் பாசமும், மன்னித்து மறக்கும் குணமும் தான் என்று உணர முடிந்தது. இந்த அண்ணன் தம்பி மற்றும் தாரா, தாரிகா வாழ்க்கையில்.

அவர்கள் வாழ்வில் எல்லாமுமாக அமரன் இருந்தான்.

இனி‌
எல்லாம் சுகமே என்று அமைதிச் சாந்தி அம்மா மனதில் உண்டாயிற்று.
இனி யார் கண்ணும் என் குடும்பத்தில் படக் கூடாது என்று அந்த இறைவனிடம் வேண்டினார்.

அன்பு மட்டுமே அங்கே இருந்தது... இனி அவர்களின் உறவை பலப்படுத்தும்.

சுபம்…
 
Top