பள்ளி வாசல் அறியா
பேதை அவள்
வரலாற்றில் வடித்த
அழியா கல்வெட்டாய்
திகழ்கிறாள்..
சடங்கு சம்பிரதாயங்களில்
சட்டையிழந்த இவள் சாதனை
சாட்டையை எட்டுத்திக்கும்
சுழற்றி அடிக்கிறாள்..
தலை குனிந்து தாலி ஏற்றாள்
பல தலைமுறைகள் படைத்து
தலைநிமிர்ந்து நிற்கிறாள்..
திசை தெரியாமல்
குடிசையில் குனிந்து
நடந்தவள்
இன்று எல்லாத்
திசைகளிலும்
திசை காட்டியாய்
திகழ்கிறாள்..
விதியென்று அழுது
நொந்தவள் தன்
விதியை தானே எழுதும் வல்லமைக்கொண்டு
திகைக்கிறாள்..
சிறகொடிந்து சிறை
கொண்டிருந்த அக்னி சிறகே
சிறகடித்து பறந்து வா.
உன் வெற்றியை
நீயே வெல்ல
விரைந்து வா!
பறந்துவா!
என் அக்னி சிறகே!
அன்புடன்
ப்ரஷா
பேதை அவள்
வரலாற்றில் வடித்த
அழியா கல்வெட்டாய்
திகழ்கிறாள்..
சடங்கு சம்பிரதாயங்களில்
சட்டையிழந்த இவள் சாதனை
சாட்டையை எட்டுத்திக்கும்
சுழற்றி அடிக்கிறாள்..
தலை குனிந்து தாலி ஏற்றாள்
பல தலைமுறைகள் படைத்து
தலைநிமிர்ந்து நிற்கிறாள்..
திசை தெரியாமல்
குடிசையில் குனிந்து
நடந்தவள்
இன்று எல்லாத்
திசைகளிலும்
திசை காட்டியாய்
திகழ்கிறாள்..
விதியென்று அழுது
நொந்தவள் தன்
விதியை தானே எழுதும் வல்லமைக்கொண்டு
திகைக்கிறாள்..
சிறகொடிந்து சிறை
கொண்டிருந்த அக்னி சிறகே
சிறகடித்து பறந்து வா.
உன் வெற்றியை
நீயே வெல்ல
விரைந்து வா!
பறந்துவா!
என் அக்னி சிறகே!
அன்புடன்
ப்ரஷா
Last edited: