எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

admin

Administrator
Staff member
சுயம் நோக்கி

கல்வியில் கிடைக்கும்

என்றெண்ணி

கணினியின் துணை

கொண்டு

தகை சான்றோர்

புறம் இருக்க

நகை சான்றோர்

உடனிருக்க நாடிய

பண்புகள் வேலிகள்

என்றே நடையிடவில்லை

பாசறையில் பாதுகாப்பு

பாதகம் பாசங்கள்

என பிற்போக்கு சூழலையும்

முற்போக்கு சுழல்களையும்

முன்னறிவிப்பார் இன்றி

நானும் கடக்க நாளும் கடக்க

சற்றே தளர்ச்சி

தனிமைதான் தெரிந்தது

சிந்திக்கிறேன் செலுத்துகிறேன்

சுயம் நோக்கி

கல்லறையிலும்

சுயம் நோக்கு


மனிதர்களை அன்றி

வேறெங்கும் இல்லையே

நான் நான் என

பறையறைய வேண்டிய அவசியம்

ஆணோ பெண்ணோ

நான் நானாகவே வாழ

ஆங்கு இடம் உண்டு

எனக்கான சுயம் உண்டு

ஈங்கு இடமில்லையோ

மனிதர்கள் மனிதர்களாக

வாழும் சுயம் அற்ற இம்

மேதினியில்

சுயம் நோக்கு சுயநலநோக்கு.

- தீபாகோவிந்
 
Top