எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவிதை போட்டி

admin

Administrator
Staff member
வணக்கம் தோழமைகளே!

"நறுமுகை கவிச்சொல் போட்டி" இது நறுமுகை தளத்தின் முதல் போட்டி. 59 போட்டியாளர்கள், 115 கவிதைகள் இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

முதல் பங்களிப்பே அபாரமான பங்களிப்பு. ஊக்குவித்த அனைவருக்கும், துணை நின்ற அனைவருக்கும், வாழ்த்திய அனைவருக்கும், இந்த போட்டி பற்றிய செய்தியினை எடுத்துச் சென்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
அடுத்து போட்டிக்கான கால கெடு நாங்கள் கொடுத்து இருந்தோம். இருப்பினும் முதல்முறை பங்குபெற்றும் நபர்கள் அநேகமானோர் கலந்துகொண்டிருந்தனர். அதில் பல துறைகள் சார்ந்தவர்கள், ஹவுஸ் வைஃப் இப்படி பலரும் கூறிய விஷயம் போட்டி பற்றிய செய்தி பிந்து கிடைத்தது என்பதே. அப்படி இருக்கும் பட்சத்தில் நாங்கள் கால அளவினை சற்றே அதிகரித்தோம்.
அதற்கமைய தொடர்ந்து போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். அதுபோல இத்தனை கவிதைகளை எதிர்பார்க்காத பட்சத்தில் நடுவர்கள் கவிதையினை பரிசீலிக்கும் நாள் அளவினை நீடிக்க கேட்டதற்கிணங்க பிப்ரவரி மாதம் 3ஆம் கிழமை போட்டி முடிவுகளை அறிவிப்போம்.

Photo_1643535574099.pngநாங்கள் முதல்முறை பங்கு பற்றுகிறோம் என்று இன்று வரையிலும் கவிதைகளை அனுப்பும் அன்பார்ந்த நண்பர்களுக்கு ஒரு அறிவித்தல் நீங்கள் அனுப்பும் கவிதைகள் பிப்ரவரி 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் உங்களது அந்த கவிதை போட்டி கவிதையின் வரிசையில் கலந்து கொள்ளப்படாது. உங்கள் முயற்சியை புறக்கணிக்க மனம் இல்லாத காரணத்தால் கவிதைகளை ஏற்றுக் கொள்வதோடு சிறப்பு பாராட்டு இலத்திரனியல் சான்றிதழும் உங்களுக்கு வழங்கப்படும்.. மீண்டும் சிறப்பு போட்டிகளுடன் சந்திப்போம். பங்கு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
ப்ரஷா

 
Top