மதுரை ராஜூ
Moderator
இவள் வசந் ‘தீ’ – 4
முன் கதை சுருக்கம்
வசந்திக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற வேளையில் ,வசதி குறைந்ததால் இவர்களால் ஒதுக்கப்பட்ட முறைப்பையன் இனியவனை சந்தையில் சந்திக்க கோபம் கொண்ட வசந்தி தந்தையிடம் எகிற,பத்மா பரிந்து பேசுகிறாள். இறுதியில் பத்மா மெதுவாக அந்த கேள்வி கேட்க வீடு போராட்ட களமானது. அந்த கேள்வி….?
இனி…
விவாத(த்} தீ ---4
” ஏங்க கோபிக்கலைன்னா ஒண்ணு கேப்பேன், என் தம்பி குடும்பத்துக்கு பத்திரிக்கை உண்டா ?வீட்ல முதல் கல்யாணம். அதனாலதான் கேக்கறேன்”.
வசந்தி திரும்பி தாயை கோபமாக பார்த்தாள்.
“ அம்மா புரிஞ்சு பேசுறியா இல்லை புரியாம பேசுறியா ? ஆகாத காரியம் இது”.
“ ஆமாம் பத்மா, வறட்டு பிடிவாதத்தினால ஓதுங்கி போனவள , ஒதுக்கி வைச்சது தப்பா ?”
“இல்லைங்க , அவ முத தடவை உங்க்கிட்ட உதவி கேட்டு வந்தப்ப நீங்க உதவி செய்ய மறுத்திட்டீங்க. அவ மேற்க்கொண்டு உங்க்கிட்ட பிச்சை கேட்க தன்மானம் தடுத்ததனால வைராக்கியாமா பல வீட்டு வேலை செஞ்சு மகனை வளர்த்து ஆளாக்கினா. அது தப்பா ?”
“ சரிம்மா, அதுக்காக நம்மளைவிட தகுதியும் , வசதியும் குறைஞ்ச இடத்துல என் மகளை கட்டிக்கொடுக்க என் மனசு இடம் கொடுக்கலை. இது தப்பா ?”
“ என்னங்க பெரிய வசதி , பணம். நாளைக்கு நாம உலகத்தை விட்டு போறப்ப எல்லாத்தையும் கொண்டு போக போறது இல்லை . இருக்கறவரைக்கும் மத்தவகளுக்கு உதவறதுதான் வாழ்க்கை”.
“ அம்மா இதெல்லாம் கேட்டு கேட்டு புளிச்சு போன கதைம்மா.எத்தனை நாளைக்குதான் இதே வசனம் பேசிகிட்டு அலைவீங்க. இன்னைக்கு புதைக்கறது , எரிக்கறதைக் கூட ஆடம்பரமாக்கிட்டாங்க. சும்மா யாரும் இல்லாம நாலு பேரு மட்டும் தூக்க நாங்க சாதாரண குடும்பம் இல்லை. முதல்ல அதை தெரிஞ்சிகிட்டு பேசும்மா “.
“ வசந்தி சொல்றது சரிதான் பத்மா. நம்மளை மதிக்காதவகளுக்கு ஏன் பத்திரிக்கை வைக்கனும். எங்களுக்கு பிடிக்கலைன்னா விட வேண்டியதுதானே”
“ என்ன பேச்சு பேசுறீங்க ? சின்ன பிள்ளைக மனசுல பண ஆசை காட்டி அவங்களை நெருங்க விடாம பண்ணீங்க. நாம நடுத்தர குடும்பம்தான். சொத்து பாதி , உங்க வேலை பாதின்னு நாம கஷ்டம் இல்லாம இருக்கோம்.அவ்வளவுதான். ஏதோ எங்க அப்பா சொத்தை வைச்சு இடம் வாங்கி தனியா போட்டோம். இல்லைன்னா காலம் தள்ள முடியுமா ?”
“”அம்மா என்ன பேச்சு பேசுற, அப்பா சம்பாதிச்சு , கடன் வாங்கி வீட்டை கட்டி ஓரு பகுதி வாடகைக்கு விட்டு , ஒரு பகுதியில நாம இருக்கோம். இடம் வேணும்னா தாத்தா சொத்துல வாங்கியிருக்கலாம். ஆனா வீட்டை கட்டியது அப்பா காசுதான்”.
“ நல்லா சொன்னம்மா, அம்மாக்கு புத்தியில உரைக்கற மாதிரி சொல்லு. சொத்தை நான் காப்பாத்தி முதலீடு செஞ்சு இன்னைக்கு 3 வீட்டை வாடகைக்கு விட்டு நிம்மதியா இருக்கோம். ஆனா உன் தம்பி , எல்லா காசையும் பிசினஸ்ல போட்டு பிழைக்க தெரியாம நஷ்டத்துல செத்ததுக்கு நானும் என் மகளுமா காரணம் ?”
“ ஆமாம்மா, பிழைக்க தெரியாத மாமாவுக்கு , அவங்க குடும்பத்துக்கு நாங்க ஏன் உதவி செய்யனும் ?”
” ஏய், ஏன்ன பேச்சு பேசுற ? உறவுன்றது ஒருத்தருக்கு ஒருவர் உதவுவது தவிர உதறி விடுவது இல்லை. இத்தனைக்கும் அவர் நம்ம ரத்த சொந்தம். எப்படி நா கூசாம உன்னால பேசமுடியுது ? “
“ அம்மா , நீ சொல்றது சரிதான். அதே சமயத்துல ஒரே வீட்டுக்குள்ள சொத்துக்காக அண்ணன் தம்பிக, அக்கா , தங்கச்சிக சண்டை போட்டு பிரியறது இல்லையா ? குடும்ப தகராறு வந்து குடும்பமே இரண்டாகறது இல்லையா ?”
” பத்மா , மகள் சொல்றது சரிதான். நீ என்னமோ உன் தம்பி குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கற”.
“ இல்லைங்க , என்னதான் நீங்க சொன்னாலும் சரி, நம்ம மக சொன்னாலும் சரி, நீங்க சொல்றது நல்லா இருக்கா ? நீங்க எப்படி உதவி செய்ய மறுத்தீங்க உங்க மகளுபக்குத் தெரியுமா ? கடன் கேட்க வந்தவள்கிட்ட அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் தரேன்னு சொன்னீங்க. ஆனா அவ மறுத்துட்டா. தன்மானத்தோட உழைச்சு மகனை வளர்த்து ஆளாக்கினா. அவ உழைப்பு உங்க பணத்தாசைக்கு முன்னாடி தூசிங்க”.
“ அம்மா , அப்பா செஞ்சது தப்பா இருக்கலாம். ஆனா இரண்டு பொண்ணுகளை கரை ஏத்தனும்னு ஆசையில பணம் சேர்க்க ஆசைப்பட்டது தப்பா ? அவர் இன்னும் நாலு வருசத்துல ரிடையர்டு ஆயிருவாரு. அடுத்து தங்கச்சி . தனக்காக தன் குடும்பத்துக்காக ஒருத்தரு பணம் சேர்க்க நினைச்சது தப்பில்லையேம்மா “.
“ இப்படி ஏதாவது காரணம் சொல்லி இன்னைக்கு பணம் சேர்க்க உலகத்துல ஒரு கூட்டம் அலையுது. பணம் சேரலாம், ஆனா நிம்மதி சேராது. அவ பணம் கேட்டா , நீங்க தரலை. அதுக்காக அவ நம்ம கூட சண்டை போடலை, அழலை , சாபம் விடலை, மண்ணை வாரி தூத்தலை . அவ தனியே போயிட்டா. மகன் காது குத்துக்கு கூப்பிட வந்தப்ப வாசல்ல வச்சு திட்டி அனுப்பினீங்க, நான் போயிட்டு வந்தேன். அடுத்து மகனுக்கு வேலை கிடைச்சுருச்சுன்னு சந்தோசமா இனிப்பு கொண்டு வந்தா, தூக்கி வீசினிங்க. அதுக்கும் நான் மட்டும் போயிட்டு வந்தேன்”.
வசந்தி பலமாக கைத்தட்டினாள். அவளுடன் சேர்ந்து ராகவனும் கை தட்டினார்.
“ அம்மா,அருமையா பேசுற, இப்படியே ஏதாவது பொதுக் கூட்டத்துல பேசினா கைத்தட்டு கிடைக்கும். பணத்திமிர் எங்களுக்கு இல்லை,அதே சமயம் பணம் எதிர்கால தேவைக்கு சேர்க்கிறவன் பணத்திமிர் உள்ளவனா ? தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொத்து சேர்க்கறவன் பணத்திமிர் உள்ளவனா ? இவரு ஓண்ணும் ஏமாத்தி பணம் சேர்க்கலையே “.
“ தன் தேவைக்கு மேல சொத்து சேர்க்கறவன் , குரங்கு கையில ஏராளமான பழம் இருந்தும் என்ன சாப்பிடறதுன்னு குழப்பத்துல பிச்சு போடறது மாதிரி கடைசி நேரத்துல சேர்த்த பணம் உதவாது என் பிரிய மகளே”.
“ அம்மா, நீ கேட்ட கேள்விக்கு வர்றேன். உங்களோட தம்பி வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க சொல்லி கேட்டீங்க . நம்மளை விட தகுதி குறைஞ்ச அவங்களை கூப்பிட எனக்கு மனசு ஒப்பலை “.
“ பத்மா , நானும் , மகளும் கொடூரமானங்க இல்லை. அதே சமயம் மகளுக்கு விருப்பமில்லாதப்ப நான் என்ன பண்றது ? “
பத்மா இருவரையும் உற்றுப் பார்த்தாள். மெதுவாக ராகவனை பார்த்துக் கேட்டாள்.
“ மலர் ஆசுபத்திரி ஞாபகம் இருக்கா, என் அன்பு பிராண நாதா “
கேள்வி கேட்டவுடன் ராகவன் முகம் இருண்டது . சற்று தடுமாறி பின்னால் இருந்த ஒரு நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார்.
வசந்தி புரியாமல் அப்பாவை பார்த்தாள். பின் அம்மாவை பார்த்தாள். அப்பா பார்வையால் அம்மாவை ஏதோ சொல்ல வேண்டாம் என கெஞ்சுவது தெரிந்து குழம்பினாள்.
பத்மா அந்த இடத்தை விட்டு ஒரு மர்ம புன்னகையுடன் நகர்ந்தாள்.
ராகவன் மெதுவாக எழுந்தார்.
“ என்கிட்ட எதுவும் கேட்காதம்மா. அவங்களுக்கு ஒரு பத்திரிக்கை ஒதுக்கும்மா. அம்மா போய் கொடுத்துருவா “
ராகவன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஏதோ பேச முயன்ற வசந்தியை கையை நீட்டி தடுத்து விட்டு பக்கத்து அறையில் நுழைந்தார்.+
வசந்தி ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் நின்று விட்டு பத்திரிக்கையை எடுத்தாள்.
அப்போது அலைபேசி கதற ஆரம்பித்தது.
அடுத்து என்ன ?
காத்திருங்கள்… வசந்தி வருவாள்