எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இவள் வசந் ‘ தீ ‘ –8

இவள் வசந் ‘ தீ ‘ –8

இதுவரை வசந்தி……



வசந்திக்கு சுந்தருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. திருமணம் நடைபெற இருந்த காலையில் தாலி கட்டும் நேரத்தில் தீடிரென சுந்தரின் தாய் சீர் வரிசையில் பத்து பவுன் பாக்கிக்காக திருமணத்தை நிறுத்துகிறாள். எல்லாரும் அதிர்ச்சியுறும் வேளையில் வசந்தியின் தாய் பத்மா தன் மகளுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் என சத்தம்போட அனைவரும் திகைத்து போய் நிற்கின்றனர். இனி….

குழப்பத் ‘தீ’ –8

பத்மா தன் மகளுக்கு கல்யாணம் நடக்கும் என சத்தமாக சொல்ல மண்டபத்தில் ஒரு அமைதி நிலவியது.

ராகவன் குழம்பி போனார். தன் மனைவிக்கு என்ன ஆயிற்று என தெரியாமல் முழித்தார். ஒருபக்கம் திருமணம் நின்று போன அவமானம், மறுபக்கம் மகளை நினைத்து கவலை, இதற்கிடையில் மனைவி வேறு திருமணம் நடக்கும் என சொன்னவுடன் பத்மாவைப் பார்த்தார்.

அவள் மேடை அருகே கம்பீரமாய் நின்றுகொண்டு இருந்தாள். அவள் பார்வை சென்ற திசை நோக்கிப் பார்க்க அங்கே இலக்கியனும் , சரோஜாவும் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

வசந்தி த,லையை குணிந்து அழுகையை அடக்கசிரம ப்பட்டவள் தாயின் குரலைக் கேட்டு தலையை நிமிர்த்தி பார்த்தவள் தாயைக் கண்டு அவள் பார்வை சென்ற திசை கண்டு அதிர்ந்தாள். வசந்திக்குள் முதல் தீ மனதிற்குள் கோபத் தீயாக மாறி எரிய ஆரம்பித்தது. கைகளில் இருந்த மருதாணி சிவப்பு தோற்கும் வண்ணம் கண்களில் கோப சிவப்பு நிறம் ஏற ஆரம்பித்தது.

முன் வரிசையில் அமர்ந்து இருந்த தாயும் மகனும் குழம்பிப் போனார்கள். இலக்கியன் தாயை புரியாமல் பார்க்க சரோஜாவும் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

பத்மா யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.

“ என் மகளுக்குன்கு பிறந்தவன் இங்கே அம்சமா இருக்க நான் எதுக்கு கவலைப்படனும். அவன் குணத்தில, பண்புல, பாணத்துல , பண்புல பணக்காரன். என் மகளுக்கு பொருத்தமானவன் அவனைத் தவிர உலகத்துல வேறு யாரும் கிடையாது. போறவங்க போகலாம். எனக்கு என் மக கல்யாணம் நின்னு போனதுல எந்த வருத்தமும் கிடையாது. ஆண்டவன் நல்ல இடமா காட்டிட்டான். வசந்தி போய் முகத்தை கழுவிட்டு வந்து உட்காரும்மா “.

ஆவேசமாக பேசி ஓய்ந்தவள் அருகில் இருந்த நாற்காலியில் மூச்சு வாங்க உட்கார்ந்தாள்.

சுந்தர் வகையறா மெதுவாக தலையை குணிந்தவாறே மண்டபத்தை விட்டு வெளியேறியது.

ராகவன் மெதுவாக பத்மாவிடம் வந்தார்.

” என்னம்மா இது , அவசரப்பட்டு எதுவும் பேசிடலாமா ? என்னை விடு நான் உன்னோட பேச்சைக் கேட்டு மாறலாம். ஆனா பிடிவாதக்காரியான நம் பொண்ணு சம்மதிப்பாளா ? ஏற்கனவே அவ நொந்து போயிருக்கா. இதுல நீ வேற எரியற தீயில பெட்ரோலை ஊத்தற மாதிரி பண்ணா என்ன ஆகும் ?”

பத்மா எதுவும் பேசவில்லை.

ராகவன் திரும்பி மணமேடையை பார்த்தார். சற்று முன் முதல் தீயான கோபத் தீ முகத்தில் படர அமர்ந்து இருந்த வசந்தி இப்பொழுது குழப்பத் தீயால் முகம் வாடிய பூவாய் அமர்ந்து இருந்ததைக் கண்டு வேதனைப்பட்டார்.

இலக்கியன் இன்னும் குழப்பத்தில் இருந்தான். என்னதான் முறைப்பெண் என்றாலும் இந்த நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் ஆனால் அதே சமயத்தில் அமைதியாக இருந்தான். தாயின் முகத்தைப் பார்க்க , சற்று முன் திருமணம் நிறுத்தப்பட்ட போது வருத்தப்பட்ட அவள் முகம் எந்த சலனமில்லாமல் இருந்தது கண்டு புரியாமல் தவித்தான்.

பத்மா மெதுவாக எழுந்து சரோஜாவிடம் வந்தாள். அவள் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“ கொஞ்ச நேரத்திற்கு முன் ஒரு பணத்தாசை பிடிச்ச ஒரு பேய்கிட்ட என் மக வாழ்வுக்காக கெஞ்சின நாங்க, இப்ப குணத்துல, பாசத்துல பணக்காரியான உன்கிட்ட என் மக வாழ்க்கைக்காக கை ஏந்தி நிக்கிறேன். இரக்கம் காட்டுவாயா ?”

அதற்கு மேல பத்மாவால் பேச முடியாமல் வெடித்து அழுதவள் அப்படியே சரோஜாவின் காலில் தன் இரு கைகளை கூப்பியவாறு விழப் போனாள்.

சரோஜா பதறிப் போய் பத்மாவின் கைகளை பிடித்து இழுத்து தூக்கி தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

மண்டபத்தில் இருப்பவர்களை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள். அக்காவின் திருமணம் நின்றது கண்டு மிரண்டு நிற்கும் வசந்தியின் தங்கை நிஷாந்தி, தர்ம சங்கட நிலையில் நின்று கொண்டு இருந்த ராகவன், குழப்ப நிலையில் இருந்த வசந்தி மற்றும் இவளின் பதிலை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் மற்ற உறவினர்கள் என தன்னைச் சுற்றி உள்ள கூட்டத்தை கண்டாள்.

“ கவலைப்படாத பத்மா, நான் சொன்னா என் பையன் தட்ட மாட்டான். ஆனா ஒரு சின்ன நிபந்தனை. அதை நிறைவேத்திட்டா வசந்தியை எங்க வீட்டுப் பொண்ணா ஏத்துக்கறதுல எந்த பிரச்சனையும் இல்லை”.

சரோஜா இப்படி சொன்னவுடன் மண்டபத்தில் இருந்த அனைவரும் திகைத்தனர்.

‘ஏற்கனவே திருமணம் நின்ற கவலையில் எல்லாரும் இருக்கும் நிலையில் என்ன நிபத்தனை அது ?’

பத்மா திடுக்கிட்டு சரோஜாவைப் பார்த்தாள். ராகவன் என்ன கேட்க போகிறாள் என திகைத்து நிற்க, வசந்தி குழம்பினாள்.

குழப்பத் தீ அவள் முகத்தை குறுக வைத்தது.

அந்த நிபந்தனை…..?

வசந்தி வருவாள்……காத்திருங்கள்…….
 

Attachments

  • download.jpg
    download.jpg
    5.6 KB · Views: 0
Top