மதுரை ராஜூ
Moderator
ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போகும் நேரத்தில் முறைப்பையன் இலக்கியன் வசந்திக்கு தாலி கட்டுகின்றான். முதல் நாள் தன்னுடைய நிபந்தனையை இலக்கியன் வசந்தியிடம் சொல்ல திடுக்கிடுகின்றான். பின் தன்னுடைய நிபந்தனையை தெரிவிக்க வசந்தி திகைக்கின்றாள்.
அந்த நிபந்தனை…….
சவால் ‘ தீ ‘ -- 12
இலக்கியன் சொல்ல ஆரம்பித்தான்.
“ எந்த ஆண்மகனும் விரும்பாத விசயம் இது. எனக்கு எதிர்பாராத அதிர்ச்சிதான். என்னால் தாங்க முடியாத வேதனைதான். நீ கேட்டது நடைமுறைக்கு ஒத்துவராத விசயம்தான் ஆனால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றாலும் உடனே நான் முடிவெடுக்க விரும்பவில்லை. என்னுடைய நிபந்தனையை கேட்டுக்கொள். அது என்னவென்றால்….”
வசந்தி இப்பொழுது திகைத்துப் போனாள்.
‘ இவன் என்ன சொல்லப் போகின்றான் ? நாம் ஒன்று சொன்னால் மறுபடி நமக்கே ஒரு நிபந்தனை போடுகிறானே ! நான் இதற்கு சம்மதிப்பதா அல்லது வேண்டாமா ? ஓன்றும் புரியவில்லையெ. ஒருவேளை நான் இதற்கு சம்மதிக்காவிட்டால் என்ன நடக்கும் ? என் ஆசை நிறைவேறாது.. இப்பொழுது என்ன செய்வது ? ‘
வசந்தி பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
இலக்கியன் தொடந்தான்.
“ என்னுடைய நிபந்தனை இதுதான். சரியாக முப்பது நாள்தான். அதற்குள் நீ நினைப்பது நடக்கவில்லையென்றால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், அதாவது நீ இந்த வீட்டின் மருமகள். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்ன சம்மதமா ? “
இலக்கியன் சொன்ன நிபந்தனை கேட்டு வசந்தி நிதானித்தாள்.
இலக்கியன் தொடர்ந்தான்.
“ இதை நான் ஒப்பந்தமாக ஒரு பேப்பரில் எழுதி தருகின்றேன். இரண்டு பிரதி. உனக்கு ஒன்றும் , எனக்கு ஒன்றும் இருக்கட்டும். உன் பதில் என்ன ? “
தான் எறிந்த பந்து நன்னை நோக்கி திரும்பியது கண்டு வசந்தி திகைத்தாள். எப்படியாவது மனம் விரும்பாத இந்த திருமண பந்தத்தில் இருந்து தப்பிக்கலாம் என புதிநாய் ஒரு ஒப்பந்தம் முளைத்தது கண்டு யோசித்தாள்.
அஙள் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டவன் போல இலக்கியன் பேச ஆர்ம்பித்தான்.
“ உன்னுடைய தயக்கம் எளிதாக புரிகிறது. நீ நினைப்பது போல எளிதாக ஊரறிய நடந்த திருமண நிகழ்வை உடனே அறுக்க முடியாது. நீதிமன்றத்தை நாடினாலும் பிரிப்பதற்கு அல்லது பிரிவதற்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் நேரம் கொடுத்துதான் அனுமதி கொடுப்பார்கள். உனக்கு இந்த விசயமெல்லாம் தெரியும்தானே “.
“ கண்டிப்பாக தெரியும். ஒருவேளை எனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்வரை , ஏன் கண்டிப்பாக வரும், அதுவரை நான் ஏற்றுக்கொண்டால் என் அம்மா வீட்டிலும் இல்லையென்றால் தான் தனியாக என்னுடைய திட்டம் வெற்றி பெறும்வரை இருந்து போராடுவேன். என்னுடைய முடிவில் உறுதியாக இருப்பேன் “.
வசந்தி சொல்லி முடித்தவுடன் இலக்கியன் பேப்பரை எடுத்து நீட்டினான். வாசித்தாள்
அதில் வரிசையாக போடப்பட்டிருந்த நிபந்தனைகளை படித்தாள். அதில்…..
{ மற்றவர் முன் கணவன் –மனைவி நாலு சுவருக்குள் வேறு யாரோ ,வீட்டில் உள்ள பெரியவர்களோடு சுமூக உறவு , உறவு சார்ந்த சுப நிகழ்வுகளில் முகம் சுளிக்காமல் கலந்து கொள்வது, இந்த ரகசிய ஒப்பந்தத்தை எவரும் அறியாமல் பார்த்துக்கொள்வது, இறுதியாக கணவனுக்கு முன் மட்டுமே சுந்தருடன் பேச வேண்டும் , இரவு கடந்து பேசக்கூடாது குறிப்பாக உணர்வுகளை , குரலை அதிகப்படுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்யும் விதத்தில்
நடந்துகொள்ள கூடாது. }
படித்துக்கொண்டே வந்தவள் கடைசி நிபந்தனையை படித்து திடுக்கிட்டாள். சற்று கோபமானாள்.
“ என்ன இது கடைசி ஏற்றுக்கொள்ள முடியாத மாதிரி இருக்கு. இது என்ன வில்லத்தனம். நான் ஏற்றுக் கொள்ள முடியாது “.
“ வசந்தி கோபம் கொள்ளக்கூடாது. இது உன்னை அவமானப்படுத்த அல்ல நீ என் மனைவி , உன் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் . ஏதாவது உங்களுக்குள் பேசி நீ தவறாக அல்லது விபரீதமாக முடிவு எடுத்துவிடக் கூடாது என்பதில்நான் உறுதியாக இருக்கின்றேன். நீ , நம் குடும்ப கவுரவம் எல்லாம் எனக்கு முக்கியம். அதாவது நீ எனக்கு முன் பக்கத்து அறையில் பேசலாம் . உங்கள் உரையாடல் எனக்கு முக்கியமில்லை, அதே சமயம் என் பார்வைபட நீ அமர்ந்து பேசலாம். மீண்டும் சொல்கிறேன் நீ , உன் மரியாதை எனக்கு முக்கியம் . புரிந்துகொள் “.
வசந்தி சற்று நிதானித்தாள் . ஒரு நிமிடம் இலக்கியன் மீது மனம் பாய்ந்து விலகியது. ஒரு ஈர்ப்பு இருந்தது . ஆனால் சுதாரித்துக்கொண்டாள். அமைதியாக இலக்கியனிடமிருந்து பேப்பரை வாங்கி எதுவும் பேசாமல் இரண்டிலும் கையெழுத்து போட்டு அவன் கையெழுத்து வாங்கி ஒரு பேப்பரை அவளிடம் வைத்துக்கொண்டு மற்றொன்றை அவனிடம் கொடுத்தாள்.
எந்த உறவும் இல்லாமல் , இன்ப வரவும் இல்லாமல் அந்த முதல் இரவு கழிந்தது .
மறுநாள்………