Mr D devil
Moderator
எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.. கதை முடிந்தவுடன் எழுத்து பிழைகளை சரி பார்த்து கொள்கிறேன்..
***
காவலர்கள் கூறிய செய்தி அத்தனை உவப்பானதாக இல்லை அவனுக்கு... உடனே அவர்களிடம் மருத்துவமனை பற்றி விசாரித்தவன் தன் காரை நோக்கி விரைந்தான்...
சில நிமிடங்களில் ட்ராஃபிக் கிளியராக மருத்துவமனைக்கு வாகனத்தை செலுத்த உத்தரவிட்டவன் கண்மூடி அமர்ந்து கொண்டான்...
கண்மூடி அமர்ந்திருந்த ஆகாஷின் நினைவுகள் முழுவதும் அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.
"லிஷன் மிஸ்டர் ஆகாஷ் வானவராயன்.. எனக்கு இந்த காதல் கத்திரிக்கா மேல எல்லாம் துளியும் நம்பிக்கையில்லை... வேணும்னா ஒன்னு பண்ணுவோம் நீயும் பார்க்க அம்சமா தான் இருக்க.. நான் வேணா பெர் நைட்டுக்கு இவ்வளவு அமௌண்ட்டுன்னு தரட்டுமா... அதிகமா எல்லாம் எதிர் பார்க்க கூடாது.. உன் பெர்பார்மன்ஸ் பார்த்து நானே எஸ்ட்ரா தருவேன் டீலா..." எனக் கேட்டவளின் குரல் இப்போதும் காதில் கேட்க தலையை அழுத்தி பிடித்து கொண்டான் நிஜத்திலும்...
"சாரி தம்பி... நகரவே மாட்டேங்கறானுங்க அதான் விடாம ஆர்ன் அடிக்க வேண்டியதா போச்சு..." என்ற டிரைவரின் குரலில் கண்களை திறந்தவன் "அது ஒன்னும் பிரச்சனை இல்லைன்னா நீங்க ஹாஸ்பிடல் போங்க..." என்றவன் அவளின் வார்த்தைகளை மறக்க வழியெங்கிலும் செல் நொண்டி கொண்டே வந்தான்.
அதே கணம் எதர்ச்சையாக இன்ஸ்டாவில் நுழைந்து நேரத்oதை நெட்டி தள்ளிக் கொண்டிருந்த நேரம் நேற்று இரவு முகிலை கட்டியணைத்தப்படி கூட்டி சென்ற புகைப்படம் கண்ணில் விழுந்தது... உடனே புகைப்படத்தை தன் கேலரிக்குள் சேமித்து வைக்க அவனின் இதழ்களில் ரகசிய புன்னகை வந்தமர்ந்து கொண்டது..
####
இங்கு அதே சமயம் அந்த மருத்துவமனையின் மேல் பகுதி அனைத்தும் பிறையின் கட்டுப்பாட்டில் இருந்தது...
அந்த மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்த பிறையின் கண்களிலிருந்து நீர் நில்லாமல் வழிந்தது. எவருக்கும் அஞ்சாது நிமிர்ந்த நடையோடு கம்பீரமாக வளம் வந்த பெண்ணை இன்று இரத்த வெள்ளத்தில் கண்டதும் தான் ஒரு மருத்துவன் என்பதையும் மறந்து துடித்து விட்டார்.
ஆம் மருத்துவர் தான் இந்தியாவில் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர்களில் இவரும் ஒருவர்.. இத்தனை ஆண்டுகளில்
ஆயிரமாயிரம் நோயாளிக்களுக்கு சிகிச்சை அளித்திருந்தாலும் மகளிற்கென்று வரும் போது கைகள் நடுக்கம் கொண்டது அவருக்கு.. அதனாலயே மகளிருக்கும் அறைக்குள் கூட செல்லவில்லை. மகளின் உயிருக்கு ஆபத்து இல்லையென்று புத்திக் கூறினாலும் மனம் அதை ஏற்க மறுத்தது. உண்மையில் முகிலின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும் காரில் ஹேர் பேக் இருந்ததாலும் சில காயங்களுடன் தப்பித்திருந்தாள் பிறையின் மகள்..
முகிலின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டிருந்தது. அதற்கு முதலுதவி அளித்துவிட்டு அறுவை சிகிச்சைக்காக போதை மருந்தின் வீரியத்தைக் குறைக்க அதற்கான ரிவர்ஸல் மருந்து செலுத்தபட்டது.
ரிவர்ஸல் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அறுவை சிகிச்சையும் முடிந்திருந்தது...
அறுவை சிகிச்சை முடிந்ததும் வெளிவந்த மருத்துவர்கள் கை,கால்களில் ஏற்பட்ட முறிவால் அவளால் எழுந்து நடக்கவே சில மாதங்களாகுமெனக் கூறிவிடக் கதிரையில் பொத்தென அமர்ந்தவரின் நெஞ்சமெல்லாம் வலித்தது..
"மகளிற்கு ஒன்றுமில்லை என்றாலும் மனம் ஆறவில்லை பிறைக்கு..
ஆயிரம் சமாதானம் கூறியும் அடங்க மறுத்தது மனம். மகளின் இந்த நிலைக்கு காரணமானவனைக் கொன்றுவிடும் வெறியே வந்தது. அதை செயல்படுத்த நினைத்தாரோ அவரும். உடனே காட்ஸிற்கு அழைத்தார்.
எதிர் புறம் கூறிய செய்தியில் புருவங்கள் சுருங்க "ஓகே அதெல்லாம் என் மெயிலுக்கு சென்ட் பண்ணிடுங்க.." என்றவர் அழைப்பைத் துண்டித்து மெயிலுக்காக காத்திருந்தார்...
சில நிமிடங்களில் இவர் கேட்டது இவரின் மெயிலுக்கு வர அனைத்து ஒலி பதிவையும், ஸ்கிரீன்ஷாட்டையும் ஒன்று விடாமல் பார்த்தார் பிறை... புத்தி நீ பார்ப்பது உண்மை என்று கூற மனமோ அதை ஏற்க மறுத்தது... இரு மனங்களுக்கு இடையில் போராடியப்படியே தேவாவிற்கு அழைத்து தகவலை தெரிவித்தார்.
மனைவிடம் விபத்தை பற்றி கூறலாம் தான் ஆனால் மகளின் இந்நிலைக்கு காரணமே மனைவியாக இருக்கும் போது எப்படி அவரிடமே விபத்தைப் பற்றி கூறுவார்... ஆம் பிறை கேட்ட அனைத்து காணொளிகளும், புகைப்படங்களும் தேவி நாச்சியாருக்கு எதிராக தான் இருந்தது...
சொல்லபோனால் மனைவியின் இச்செயலை எதிர்பார்க்கவில்லை. ஆள் வைத்துக் கொல்லும் அளவிற்கு அப்படி என்ன என் மகள் செய்து விட்டாள்? என்ற மனதின் கேள்வியில் முகமும், அகமும் பாறை போல் இறுகியது
மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் சில நிமிட பயணம் என்பதால் ஆகாஷ் வருவதற்கு முன்பே தெய்வம்மாளும், தேவியும், மருத்துவமனைக்கு வந்திருந்தனர்...
முகத்தில் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாது வந்த மனைவியை அழுத்தமாக பார்த்தவிட்டு தேவியின் அருகில் பரிதவிப்போடு வந்த தாயை பார்த்தார் பிறை...
'அவர் கூறியதும் சென்றிருந்தால் இப்படியொரு நிலை உன் மகளுக்கு வந்திருக்குமா...' என மனம் மீண்டுமொருமுறை பிறையை குற்றம் சொல்ல சட்டென தலை கவிழ்ந்தான் அந்த மருத்துவன்.
படபடக்கும் இதயத்தோடு பிறையின் அருகில் வந்த தெய்வம்மாவோ "புள்ளைக்கு என்னாச்சு தம்பி..." எனக் கேட்டார்.
அவரின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காது "ஆக்சிடென்ட் மா..." எனக் கூறியவரின் குரல் கரகரத்தது. மனம் சொல்ல முடியா வலியை கொடுக்க ஏதோ தவறு செய்த பிள்ளையை போல அமர்ந்திருந்தார்...
"நல்லா இருக்கா தானே, உயிருக்கு ஆபத்தில்ல தானே, இப்ப எங்க இருக்கா..." என வராத குரலில் கேட்டார் தேவா.
அவர் கேட்ட அனைத்திற்கும் ஒரே பதிலாக "ம்ம்..." என்று மட்டுமே கூறி அறையை கை காட்டினார். அடுத்த நிமிடம் அறையைத் திறந்து உள்ளே நுழைந்தார் தேவா...
மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் பிறையின் பெண்ணரசி. அவளை அந்நிலையில் பார்த்ததும் துடித்து விட்டார் தேவா... காலையில் வியந்து பார்த்த ஆடை களைந்து தற்போது மருத்துவ உடையில் இருந்தாள்... வலது கையிலும்,இடது காலிலும் வெள்ளை நிற துணிகளைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. காலையில் கையை நீட்டி நீட்டிப் பேசி தன்னை வெறுப்பேற்றி சென்றது நினைவில் வந்தது தேவாவுக்கு...
படிகளில் வேகமாக கீழிறங்கி வந்துக் கொண்டிருந்தவளை ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்தப்படியே பார்த்தார் தேவா. நேற்று அணிந்திருந்த பாடிகான் உடையை போல் அல்லாமல் ஜீன்ஸ் பேண்ட்டும்,வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தாள். அதுவும் அத்தனைப் பந்தமாக பொருத்திருந்தது அவளுக்கு..
'என்ன காஸ்டீயும் போட்டாலும் தேவிக்கு பொருந்தி போறது போல இவளுக்கும் பொருந்தி போகுது..." என ஆச்சரியமாக நினைத்தபடியே கீழிறங்கி வந்த பேத்தியை பார்த்தார்.
"என்ன பாக்குற கிழவி..." எனக் கேட்டு தேவாவின் முகத்தை குத்துவது போல் கை நீட்டி சட்டையை மடக்கி விட்டாள்... முகிலின் செய்கையில் கோபம் வர அவளை முறைத்துக் கொண்டே பின்னால் நகர்ந்து நின்றார் தேவா...
"நீயெல்லாம் சும்மா பாரத்தாவே சிரிப்பு வரும். இதுல சீரியஸா வேற பார்க்குறயா?.." என நக்கல் தொனிக்க கேட்டவள் தேவாவின் எதிர்வினையை கூட எதிர்பார்க்காது தன் வழமையான துள்ளல் நடையுடன் வெளியில் சென்றாள்.
காலையில் துள்ளி குதித்து சென்ற பேத்தியை இப்போது இப்படி காண்போமென துளியும் நினைக்கவில்லை அவர்... பேத்தியின் தற்போதைய நிலையை. பார்க்க பார்க்க கண்களில் நீர் நில்லாமல் வழிந்தது.கண்களில் வழிந்த நீரை முந்தானையில் துடைத்துக் கொண்டே முகிலின் கேசத்தை வருடி விட்டவர் அவளின் அருகில் அமர்ந்து கொண்டார்...
இங்கு தேவியோ பிறையை அழுத்தமாக பார்த்தபடி நின்றார். தேவியின் பார்வையை உணர்ந்தும் அவரை துளியும் நிமிர்ந்து பார்த்தார் இல்லை...அவரின் முகம் பாறை போல் இறுகியிருந்தது.
கணவரின் கோப முகத்தை அழுத்தமாக பார்த்த தேவியோ "இது ஜஸ்ட் நார்மல் ஆக்சிடென்ட் தான். அதுக்காக நீங்க இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந்துட்டு இருக்க வேணும்னு இல்லைங்க..." சற்று கோபமாகவே கூறினார் தேவி. நிமிர்ந்து தேவியை அழுத்தமாக பார்த்தார் பிறை...
அவரின் பார்வையில் எரிச்சல் மீதுற
"ப்ம்ச், இப்ப என்னாச்சு ஆச்சுன்னு முகத்தை இப்படி தூக்கி வைச்சுட்டு இருக்கீங்க நீங்க...அவ இப்ப உயிரோட தானே இருக்கா தென் என்ன?..." முகத்தில் எவ்வித உணர்வுகளும் இன்றி கேட்டார் தேவி...
"ஏன் நாச்சி...உன்னோட பிளேன் பிளாப் ஆயிடுச்சுன்னு வருத்தமா இருக்கா இல்லை அவ உயிரோட இருக்கான்னு வருத்தமா இருக்கா..." என்றவரின் பேச்சில் புருவங்கள் சுருங்க எதுவும் புரியாமல் பார்த்தார் தேவி...
"நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல... அவளும் உன் பொண்ணு தானே கொஞ்சம் கூடவா அவ மேல உனக்கு பாசம் இல்லை. எப்படி? இப்படி செய்ய மனசு வந்தது உனக்கு. ஆள் அனுப்பி கொல்லறளவுக்கு என்னடி பண்ணா என் பொண்ணு..." எனக் கேட்ட பிறையின் குரல் சற்றே உயர்ந்திருந்தது.
கணவனின் பேச்சில் சட்டென்று கோபம் துளிர்க்க "என்ன பேசறீங்க நீங்க... நான் ஏன் அவளைக் கொல்ல ஆள் அனுப்பனும்.." எனக் கேட்டார் தேவி...
நான் தான் ஏதோ கோபத்தில் இப்படி செய்து விட்டேன் என கூறியிருந்தால் கூட பிறை நிதானித்து இருப்பாரோ என்னவோ நடந்த எதுவும் எனக்கு தெரியாது என்பதை போல் தேவி கேட்கவும் பிறையின் கோபம் எல்லையை கடந்தது..
சட்டென்று எழுந்து நின்று தேவியின் முன் சென்றவர் "போதும் போதும் நீ நடிச்சது எல்லாம் போதும்... எனக்கு எல்லாமே தெரியும். இனிமேலும் நடிச்சு என்னை ஏமாத்த வேண்டாம்..." என்றவர் கைகளை இறுக மடக்கி கதிரையை குத்தினார்...
"காலையில நீ ஏதோ முடிவு பண்ணிட்ட சொல்லும் போதே சுதாரிச்சு இருக்கணும். அப்ப யோசிக்காம விட்டது என் தப்பு தான்..." என அந்த கார்டரில் நடந்து கொண்டே கூறியவர் மீண்டும் தேவியின் முன் நின்று
"நம்ம பொண்ணுங்கறத விடு... நீயும் ஒரு பொண்ணு தான, அவளை கொலை செய்ய ஏற்பாடு பண்ணதுமில்லாம அவளோட கற்பையும் நாசமாக்க சொல்லிருக்க? இப்படி செய்ய உனக்கு வெக்கமா இல்லையாடி?.."எனக் கேட்டு கை ஓங்கி விட்டார் இளம்பிறை...
இதுவரை இப்படியொரு கோபத்தை அவரிடம் தேவி கண்டதே இல்லை.. எப்போதும் இதழில் தவழும் புன்னகையுடன் இருப்பவர் இன்று ருத்ர மூர்த்தியாக நின்றார். கணவரின் கோபத்தையும் ஓங்கிய கையையும் பார்த்தது பார்த்தபடி நின்றார் தேவி நாச்சியார்.
துளிக் கூட தேவியிடம் பயமில்லை... நான் இதற்கு காரணமில்லை என்றும் கூறவில்லை நான் தான் செய்தேன் என்றும் கூறவில்லை கணவனையே இமைக்காது பார்த்தார்... தேவியின் பார்வையில் தன்னை சுதாரிக்கும் முன்பே தேவிக்கு பின்னால் ஆகாஷ் வந்து நின்றான்... மனைவியின் பின்னால் நின்றிருந்தவனை பார்த்ததும் இமைகளை இறுக மூடி திறந்து கோபத்தை சமன் செய்தவர் ஓங்கிய கையை கீழிறக்கி பின்னாலிருந்த கதிரையில் அமர்ந்தார்.
" உங்ககிட்ட இதை நான் எதிர் பாக்கல மாமா..." என்றவனின் குரலில் அத்தனை கண்டிப்பு...
" உங்கத்தை என்ன செஞ்சான்னு தெரியாம இப்படி பேசாத ஆகாஷ்..." அத்தனை சீற்றமாக வெளிவந்தது பிறையின் குரல்.
"நீங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டுட்டு தான் இருந்தேன் மாமா..." என்றான்
" ஓ எல்லாத்தையும் கேட்டுட்டு வந்தும் உன் அத்தை எந்த தப்பும் செய்யலன்னு சொல்லறயா ஆகாஷ்..." என பல்லைக் கடித்தபடி கேட்டார். அவர் கோபத்தை அடக்குவது நன்றாகவே புரிந்தது எதிரில் நின்ற இருவருக்கும்...
"எனக்கு என் அத்தைம்மா மேல நம்பிக்கை இருக்கு மாமா.. அவங்க என் இப்படிப்பட்ட காரியத்தை செஞ்சிருக்க மாட்டாங்க. அப்படியே இதை அத்தை பண்ணிருந்தாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்..." என அத்தனை நம்பிக்கையாக கூறினான் ஆகாஷ் வானவராயன்.
"அப்படி என்ன மண்ணாங்கட்டி காரணம் இருக்க போகுது உன் அத்தைக்கு... ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணை நாசம் பண்ண ஆள் அனுப்பி விட்டிருக்கா... இந்த கேவலமான செயலுக்கு காரணம் வேற இருக்குன்னு சொல்ற...ஒரு அம்மாவா ஹிம் இல்லை சாதாரண பொம்பளையா கூட தான் செய்யறது தப்புன்னு யோசிக்கல இவ, ச்சை சேடிஸ்ட்..." மகளின் மேலிருந்த பாசத்தில் வார்த்தைகளை அமில மழை போல் கொட்டினார்...
"மாமா..." என கத்தியே விட்டான் ஆகாஷ்..
" சும்மா கத்தாத ஆகாஷ்... உன் அத்தை தான் இதெல்லாம் செஞ்சான்னு ப்ரூஃப் பண்ண என்கிட்ட ஆதாரம் இருக்கு..." என்றதும் உடனே
"உங்க கிட்ட இருக்கிற ஆதாரம் பொய்யின்னு ப்ரூஃப் பண்ண எனக்கு கொஞ்ச நேரம் ஆகாது மாமா..." என்றவனின் குரலில் நான் கூறியதை செய்வேன் என்ற செய்தியிருந்தது...

Last edited: