Mr D devil
Moderator
ஹேக்கிங் ஆப் இருக்கு உண்மை.. ஓடிபி வரது உண்மை..ஆனா செய்முறை விளக்கம் சொன்னது எல்லாம் என் கற்பனை...பாதுகாப்பு வேண்டி அதை என் கற்பனையில சொன்னேன்.
அத்தியாயம் 9
இன்றோடு முகில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் முடிந்திருந்தது... விபத்து நடந்த மறுநாளே முகில் கண் விழித்திருந்தாலும் மருந்தின் வீரியத்தில் அதீத நேரம் உறங்கியப்படி தான் இருந்தாள்.
இந்த மூன்று நாட்களுமே தேவாவும்,பிறையும் மட்டுமே அவளுடன் இருந்தனர். மற்ற அனைவருமே பெயருக்கு எட்டிப் பார்த்துவிட்டு சென்று விட்டனர்... ஏன் தேவியும், ஆகாசஷுமே கூட விபத்து நடந்த அன்று வந்ததோடு சரி மீண்டும் மருத்துவமனை பக்கம் கூட வரவில்லை..
சில நிமிடங்களிலேயே என் அத்தையின் மேல் தவறில்லையென நிருபிக்க முடியும் என்று கூறி சென்றவன் இன்றுவரை மருத்துவமனையின் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை
உண்மையை சொல்லபோனால் விபத்து நடந்த அன்றிரவே முகில் கடத்தப்பட்டதற்கும்,தேவிக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று கண்டுப் பிடித்து விட்டான் ஆகாஷ்.
ஆம்,மருத்துவமனையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலயே முகிலை கடத்திய ஆட்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அலைபேசிகளை வாங்கி இருந்தான்.
அதில் ஒன்று முகிலின் நண்பன் கௌரி சங்கரின் அலைபேசி இருந்தது.
அதனைப் எடுத்தவன் அதிலிருந்த ஒளிபதிவையும் அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் பார்த்தான். அதில் ஒன்றுமில்லாமல் போக சந்தேகப்படும் படி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அவன் நினைத்தது சரி என்பதை போல அலைபேசி இலக்கத்தை வைத்து ஹேக் செய்ய ஹேக்கிங் ஆப் ஒன்றிருந்தது.
அதில் ஆகாஷின் அலைபேசி இலக்கத்தை பதிவு செய்தவுடனே அவனின் அலைபேசிக்கு ஓடிபி வந்தது...
அந்த ஓடிபி எண்ணை குறிப்பிட்ட இடத்தில் உள்ளிட்டதும் இரண்டு சுயவிவர புகைப்படத்தைக் காட்டியது ஒன்று கெளரி சங்கரின் சுயவிவரம்(profile) மற்றொன்று ஆகாஷின் சுயவிவரம்...
தன்னுடைய சுயவிவரத்தை தொட்டதும் அந்த ஆப்பிலிருந்து வெளிவந்தது.இப்போது கௌரியின் அலைபேசியிலிருந்து தன் மற்றொரு போனிற்கு அழைப்பெடுத்தான்.அது கௌரியின் எண்ணாக இல்லாமல் ஆகாஷின் அலைபேசி இலக்கத்தை காட்டியது...
இதே போல் தான் தேவியின் கைபேசிக்கும் ஓடிபி சென்றிருக்க வேண்டும் அதை வீட்டிலிருக்கும் யாரோ ஒருவர் தான் கூறியிருக்க வேண்டும் என்று நினைத்தான். அவன் அறிந்தவரை ஆகாஸை தவிர்த்து தேவியின் அலைபேசியை கையில் எடுப்பது தேவராஜும், இளம் பிறையும் தான். இருவரில் ஒருவர் தான் தேவியின் கைபேசிக்கு வந்த ஓடிபி எண்ணை இவர்களுக்கு அளித்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.
மனதின் ஒரு ஓரத்தில் ஏன் இளம் பிறை இதனை செய்திருக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. சட்டென நேற்று பிறையின் ருத்ர தாண்டவமும் பரிதவிப்பும் நினைவில் வர தலைத் தட்டி அந்த எண்ணத்தை துரத்தி விட்டவனின் புத்தியோ 'ஏன் இதை உன் தந்தை செய்திருக்க கூடாது...' என்ற கேள்வியை எழுப்பியது.
அந்த கேள்வி அவனை தேட வைத்தது. அடுத்த நாளே
அவன் தேடி சென்ற வினாக்கான விடையும் கிடைத்தது... அந்த கணம் ஆகாஷ் வானவராயன் என்ற ஆண்மகன் சுக்குநூறாக உடைந்து விட்டான். மனம் சமன்பட மறுத்தது என்பதை விட வலித்தது.
மனதின் காயத்தை ஆற்றவா இல்லை முகிலின் உயிரை காப்பாற்றவா ஏதோ ஒன்று அவன் வாழ்வின் முக்கியமான முடிவை எவரையும் எதிர்பார்க்காமல் எடுக்க வைத்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களுமே ஆகாஷின் நேரம் இறக்கை இல்லாமல் பறந்தது... இதோ இன்றோடு மூன்று நாட்கள் முடிந்திருந்தது...
அவன் நினைத்ததை செய்ய அனைத்தும் ஏற்பாடு செய்து விட்டான்.. அதை செயல்படுத்த தெய்வம்மாளின் உதவி தேவைப்பட அவருக்கு அழைத்தான். அவர் அழைப்பை ஏற்காது போகவும் தன் மேல் கோபமாக இருக்கிறார் என்று நினைத்தவன் அவரை நேரில் கண்டு ஒரு மன்னிப்பை கேட்டுவிட்டு தன் திட்டத்தை கூறிவிடலாம் என்று எண்ணியப்படியே தேவியின் இல்லத்தை நோக்கி பயணித்தான். இவன் தேடி செல்பவரோ மூன்று நாட்களாக வீட்டிற்கு கூட வராமலிருக்கும் தன் மகனின் முன் கோபமாக நின்றிருந்தார்.
###
அன்று காலை எப்போதும் போல மகளை பார்க்க வெளிவந்த பிறையை வழியிலே பிடித்து கொண்டார் தேவா.
" உன்கூட கொஞ்சம் பேசணும் தம்பி உன் ரூம்லயே பேசுவோமா..." எனக் கேட்ட தாயிடம் சரியென்றவர் அங்கு தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் அழைத்து சென்றார்...
அறைக்குள் நுழைந்தும் நுழையாமல்
"என்னாச்சு மா? எப்பவும்
வந்தா பேத்தி கூடயே இருக்கேன் சொல்லுவீங்க. இன்னைக்கு என்னடான்னா என்னை தேடியே வந்திருக்கீங்க..." என்ற கேள்விக்கு தேவா பதில் கூறவில்லை அமைதியாக மகனையே பார்த்தார்.
தாயின் அமைதியில் மனம் படபடக்க
"ம்மா வீட்டுல எந்த பிரச்சனையும் இல்லையே..." என மெல்ல கேட்டார். மகனின் படபடப்பில் கண்களை இறுக மூடித் திறந்தவர் "அங்க ஒன்னுமில்லை தம்பி..." என்றார்.
"உப்..." என காற்றை குவித்து வெளியிட்டவர் தாயை கேள்வியாக பார்த்தார்.
மகனின் கேள்வி புரிய "உனக்கும், தேவிக்கும் என்ன பிராப்ளம்..." என நேரடியாக விசயத்திற்கு வந்தார்.
"அதெல்லாம் ஒன்னுமில்ல மா..." தயங்கி தான் பதில் கூறினார் பிறை..
மகனின் தயக்கத்திலயே இருவருக்கும் இடையே மோதல் என்பதை புரிந்து கொண்டவர்
"ஒன்னுமில்லாம தான் வீட்டு பக்கம் எட்டி கூட பாக்கலயா ப்பா..." மகனை கூர்மையாக பார்த்தபடி கேட்டார். தாயின் பார்வையில் தலை தன்னாலேயே தாழ்ந்து கொண்டது...
அன்று பிறை பேச பேச கண்களில் ஜீவன் இல்லாமல் தேவி பார்த்த பார்வை இப்போது நினைவிற்கு வந்து தொல்லை செய்தது. சற்று நிதானித்திருக்கலாமோ என நினைத்த நேரம் 'அப்ப நீ பார்த்த ஆதாரம் எல்லாம் பொய்யின்னு நினைக்கறயா...' என்று மற்றொரு மனம் கேள்வி எழுப்ப மீண்டும் பிறையின் முகம் கோபத்தில் இறுகியது.
"புருசன், பொண்டாட்டிக்குள்ள ஆயிரமிருக்கும். அவங்களுக்கு இடையில நம்ம போக கூடாதுன்னு தான் இருந்தேன். இப்ப பேச வேண்டிய நிலமை அதான் நானே பேசிடலான்னு வந்தேன்..." என்றதும் பிறையின் காதல் மனம் படபடவென அடித்து கொண்டது. மனைவியின் ஜீவனற்ற பார்வை மீண்டும் மீண்டும் நினைவில் வந்து தொலைத்தது.. மனைவிக்கு என்னவோ என்று மனம் பதற தாயினை பார்த்தார் இளம்பிறை.
மகனின் காதலின் ஆழம் பற்றி அறியாதவர் இல்லையே தேவா.. மகனின் கண்களில் தோன்றிய உணர்வு குவியலை பார்த்தபடி "இங்க வந்துட்டு போனதுலிருந்து அவளோட முகமே சரியில்லப்பா. மூனு நாளா சரியா சாப்பிடக் கூட இல்லை. ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடைக்கறா. சரி நம்ம பெரியவனை வைச்சு பேச சொல்லலான்னு நினைச்சா அவனையும் காணோம். நீயும் மூனு நாளா இங்கேயே இருக்க. அவளைப் பார்க்கக் கூட வரல அதான் நானே உன்னை அனுப்பி வைக்கலான்னு வந்தேன். ருத்ராவை நான் பாத்துக்கிறேன். நீ போயி உன் பொண்டாட்டிய பாரு..."எனக் கூறியவரின் குரலில் நீ சென்று தான் ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் தேவியின் பிறையாய் நின்றார் இளம் பிறை.
விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்த தேவியின் முன் நின்றார் பிறை.. அவரை பார்த்துவிட்டு மீண்டும் பழைய படி விட்டத்தை வெறித்தார். தேவியின் ஜீவனற்ற பார்வை பிறையை பலமாக அசைத்தது... இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கண்களில் உயிரற்ற பார்வை பார்த்த மனைவியின் முகம் கண்முன்னே வந்தது. முகத்தை அழுந்த துடைத்து மனைவியை நெருங்கி சென்றவர்
"தேவி டா..." என அழைத்தார். அவரிடம் பதிலில்லை.
மனைவியை இன்னும் நெருங்கி "தேவி மா..." என அழைக்க ஹிஹிம் துளியும் கண்டுகொள்ளவில்லை. உண்மையாகவே பயந்து விட்டார் பிறை...
நடுங்கும் கைகளோடு தேவியின் கேசம் வருட சட்டென திரும்பி பிறையை முறைத்தார் தேவி. அவரின் முறைப்பில் தன்னாலேயே ஆசுவாசம் பிறந்தது...
"தேவி டா.. அது..." ஏதோ சொல்ல வர சட்டென எழுந்து அமர்ந்தவர்
"சொல்லுங்க மிஸ்டர் பிறை..." என்றவரிம் குரலில் அத்தனை கோபம் வெளிப்பட்டது. அதற்கு நேர் மாறாக கண்களில் உயிர்ப்பில்லாமல் இருந்தது...
உன் மேல் தான் தவறென யார் கூறியிருந்தாலும் அதை நிருபிக்க சில நிமிடங்கள் போதும் தேவிக்கு.. ஆனால் குற்றம் சுமத்தியதே கணவர் எனும் போதும் மனம் ஆயிரம் மடங்கு வலித்தது... என் மேல் நீ வைத்த நேசமும் நம்பிக்கையும் இவ்வளவு தானா என்ற கேள்வி தன்னாலேயே தோன்றியது அது கண்களில் அப்படியே பிரதிபலித்தது...
மனைவியின் கண்களை ஆழ்ந்து பார்த்தவர் அவரை மேலும் நெருங்கி தன் வயிற்றோடு சேர்த்தணைக்க
"என்னை விடுங்க மிஸ்டர் பிறை... எனக்கு உங்களை பார்க்கவே பிடிக்கல... என் கண்ணு முன்னாடி வராதீங்க..." என்று சொல்ல பதில் பேசாது தேவியின் பின்னந்தலையில் அழுத்தம் கொடுத்து இன்னுமின்னும் அணைத்து பிடித்தார்...
"என்னை விடுங்க டாக்டரே..." என்று தேவியிடம் மெல்லிய முனகல் வெளிப்பட்டது... தேவியின் டாக்டரே என்ற அழைப்பில் மெல்ல இதழ்கள் விரிந்தது..
"தேவி டா சாரி...ஏதோ டென்சன்ல பேசிட்டேன். அண்ட் எவிடெண்ஸ் எல்லாம் நீ பேசனது போல தான் இருக்கு டா அதை பார்த்ததும் சடன்லி கண்மண் தெரியாம கோபம் வந்து உன்னை பேசிட்டேன் ம்ப்ச் ..." என்றதும் பட்டென அவரிடமிருந்து விலகி
"வேண்டாம் மிஸ்டர் பிறை, ஒன்னும் சொல்ல வேண்டாம்..." என்று கை நீட்டி தடுத்தார் தேவி...
"இல்லை டா..." என பிறை ஏதோ சொல்ல வர தலையை பலமாக வேண்டாமென ஆட்டிக் கொண்டே
"நான் தான் எல்லாமே பண்ணேன் மிஸ்டர் பிறை நான் தான் பண்ணேன் அவளை கடத்தி ரே** பண்ண சொல்லி ஆள் அனுப்பினேன்..." என கத்தினார் தேவி..
"ப்ம்ச், தேவி..." என அவரின் பக்கம் நெருங்க பின்னால் நகர்ந்து கொண்டே
"அப்படி தானே சொன்னீங்க மிஸ்டர் பிறை.. கொஞ்சம் கூட நான் அப்படி பண்ணிருப்பனான்னு யோசிக்கவே இல்லைல நீங்க... ஏதோ ஒரு எவிடென்ஸ் மேல நம்பிக்கை இருக்க உங்களுக்கு இத்தனை வருசமா உங்களோட குடும்பம் நடத்தற என்மேல நம்பிக்கை இல்லை தானே... கொஞ்சம் கூட நான் இதெல்லாம் பண்ணிருப்பனான்னு யோசிக்கவே இல்லை தானே நீங்க..." என கலங்கிய கண்களுடன் ஆவேசமாக கேட்டார்... அதற்கு பிறை பதில் சொல்வதற்குள்
"மாமா மேலயும் தப்பில்லை அத்தை..." அறையின் வாயிலில் நின்றபடி கூறினான் ஆகாஷ் வானவராயன்.
தேவாவை தேடி வந்தவன் அவர் அங்கில்லாமல் போகவும் இவர்களின் அறைக்கு வந்தான் அப்போது தான் தேவியின் பேச்சை கேட்க நேரிட உடனே பிறையின் மேல் தவறில்லை என்று கூறலனான்.
"அப்ப நீயும் என்மேல தான் தப்புன்னு சொல்றயா ஆகாஷ்..." எனக் கேட்டவரின் குரலில் அத்தனை கலக்கம்.
"நான் எப்ப அத்தை அப்படி சொன்னேன்..." என கேட்டபடி அறையினுள் நுழைந்தான் ஆகாஷ்.. அவனை கண்களில் கேள்வி மின்ன பார்த்தனர் தம்பதிகள் இருவரும்.
"மாமா மேலயும் தப்பில்லை, உங்க மேலயும் தப்பில்லை..." என்றவன்
"முகிலோட ஃப்ரெண்ட் போன்ல இருந்து முகிலுக்கு கால் பண்ணி கிளப்புக்கு வர சொன்னவங்க அதே போன் யூஸ் பண்ணி உங்க போனையும் ஹேக் பண்ணிருக்காங்க..." என்றவன் அதை எப்படியென்று செய்தும் கட்டினான்.
"இதிலிருந்து நீங்க பேசறது போல பேசி முகிலை கொல்ல சொல்லி இருக்காங்க.. அந்த போன் கால்ஷும், மேஜேஸ் வைச்சு தான் மாமா உங்க மேல சந்தேகப்பட்டு பேசனது... ஒன்னு இரண்டு ஆதாரம் இல்ல மொத்த ஆதாரமும் உங்களுக்கு எதிரா இருக்கும் போது மாமா அதை நம்பினதுல தப்பில்லை அத்தை..." என்றான்.
ஆகாஷின் வார்த்தைகளில் கசிந்த சிரிப்பை உதிர்த்தவர் கணவனை பார்த்தார்.. அந்த பார்வையே 'எத்தனை ஆதாரம் இருந்தால் என்ன.. என்மீது நம்பிக்கையிருந்திருந்தால் அதை நம்பியிருக்கவே மாட்டார்...' என்றது.
மனைவியின் பார்வை புரிந்தாலும் அதற்கு பதில் கூறும் நேரம் தற்போது இல்லை என நினைத்தவர் ஆகாசிடம்
"நீ சொல்றது போல பண்ணிருக்காங்கன்னா தேவி போனுக்கு ஓடிபி வந்திருக்கணுமே..." என பிறை கேட்டபடி தேவியின் போனை கண்களால் தேடினார்.
படுக்கையின் ஓரத்திலிருந்த டேபிளில் அலைபேசியிருக்க அதனை எடுத்தவர் குறுஞ்செய்தியை பார்த்தார். ஆகாஷ் கூறியது போல தேவியின் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி அதிலில்லை...
"இதுல நீ சொல்ற மெசேஜ் இல்லை ஆகாஷ்..." என பிறை சொல்லவும் புன்முறுவலுடன்
"ஏன் மாமா மெசேஜ் வந்தா டெலீட் பண்ண முடியாதளவுக்கு முட்டாள் இல்லையே எங்கப்பா தேவராஜ் வானவராயன்..." என்றதும் கணவன், மனைவி இருவரும் பெரும் அதிர்ச்சி.

Last edited: