எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமே அந்தாதியாய் !! - டீசர்

Thoshi

Moderator
ஹாய் சகிஸ் நான்தான் இங்க கடைசியா டீசரோட வந்திருக்கேன் நினைக்கிறேன்.


டீசர் 1 :

"பாப்பா ! மணி ஆகிடிச்சி பாரு எழுந்து படி ..."

"பாப்பா ...!"

"பாப்பா ...எழுந்துரு " என நிமிடத்துக்கொருமுறை அவள் அறைக்குள் வந்து அவளின் நித்திரையை களைத்துக்கொணடிருந்தார் அவளின் தாய் சரஸ்வதி.

"மா...இன்னும் கொஞ்சநேரம் ப்ளீஸ் " என யாதவி தூக்கத்தில் கண்களை மூடியபடியே சிணுங்கினாள்.

"உனக்கு என்னதான் பாப்பா ஆச்சி ? உங்க அண்ணன் தான் எவ்வளவு நேரம் எழுப்புனாலும் எழுந்துக்காம அழிச்சாட்டியம் பண்ணுவான் ,நீ எப்பவும் ஒரே குரலுக்கே எழுந்துப்பியே இந்த வேலைக்கு மாறுனதுல இருந்து தான் இப்படி பண்ணுற " என அவர் அங்கும் எங்கும் எதையோ செய்தபடி தன் பாட்டிற்க்கு புலம்ப அடுத்த நொடி அவள் கட்டிலிருந்து எழுந்தமர்ந்தாள்.

"ம்மா ! நீயா எதாவது சொல்லிட்டிருக்காத ..நான் எழுந்திட்டேன் மா , நீ போ.. போய் பூஜையை முடி " என அன்னையை விரட்டியவள் தன் அன்றாட காலைகடன்களை முடித்து வந்து டி.என்.பி.ஸி பரிட்ச்சைக்காய் தானே எடுத்திருந்த குறிப்பு புத்தகத்துடன் அமர்ந்துவிட்டாள்.

"உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதிமதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடைமுக்குடை நீழல் பொற்புடை ஆசனம்ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்"

- ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும்." என வாய்விட்டு வாசித்துக்கொண்டிருந்தாள்.

"ஏன் பாப்பா ! எப்போபாரு தமிழ் தான் படிப்பியா? நேத்து உங்க அண்ணன் வரலாறுல இருந்துலாம் கேள்வி வரும்னு சொல்லிட்டிருந்தான் " என பூஜைக்கு இடையில் மகளின் அறையை எட்டி பார்த்து போன சரஸ்வதி கேட்க ,

"எனக்கு எதுவருமோ அததான நான் படிக்கமுடியும் " என அவள் பதிலுக்கு முனங்கியது கேக்காததில் அவர் அங்கிருந்தே " என்ன பாப்பா சொன்ன ?" என கேட்டார்.

"மா ! தமிழ்ல தான் மா நிறைய கேப்பான். நீ நான் என்ன படிக்குறேன்னு பார்க்காம ஒமுங்கா பூஜைய பண்ணு " என இவள் இங்கிருந்தே கத்த,

"சரிசரி !கத்தாம ஒழுங்கா படி " என்றவர் சிறிது நேரத்திலே பூஜையை முடித்து அவளுக்கு பழம் ஒன்றை அறிந்துஎடுத்து வந்து உண்ண கொடுத்துவிட்டு சென்றார்.

அவள் அதை உண்டுகொண்டே படிக்க , கட்டிலில் ஒரு ஓரமாய் கைப்பேசி இசைத்து அவளின் கவனத்தை தன்புறம் திருப்பியது. இவள் அமர்ந்தபடியே யாரென பார்க்க அதன் டிஸ்பேளேயில் ஒளிர்ந்தது "ஓட்டவாய் " என்ற பெயர்.

அதில் அதிசயித்தவள் அறையில் இருந்த கடிகாரத்தை ஒருமுறை பார்த்தபடி கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்றாள்.

"ஒரு போனை எடுக்க எவ்வளவு நேரம்டி உனக்கு கொஞ்சமாச்சும் உனக்கு எதுனா அக்கறை இருக்கா ..நான் இங்க உனக்காக எவ்வளவு வேலை பண்ணிவச்சிருக்கேன் " என மறுபுறம் இருந்த குரல் காட்டுகத்து கத்த,

"சிவா ! இப்போ என்னத்துக்கு நீ இந்த கத்து கத்துற ? டைம் இன்னும் ஏழுகூட ஆகலை குறஞ்சது பத்து மணிக்கு முன்னாடி எழுந்துக்காதவங்ககிட்ட இருந்து விடியகாலையில போன் வந்தா ஷாக்கா இருக்காதா எனக்கு " என இவள் பதிலுக்கு கத்த , அந்த சிவா எனப்படும் நபர் அமைதியானார்.

"என்ன சிவா அமைதியாகிட்ட நீ இப்படிலாம் அமைதியா இருக்க ஆள் இல்லையே" என சந்தேகமாய் கேட்ட யாதவிக்கு பின்பே சற்று முன் அந்நபர் சொன்ன விஷயம் நினைவு வர ,

" ஏய் !இப்போ என்ன சொன்ன? எனக்காக நீ என்ன வேலை பண்ண ?" என கேட்டாள்.

அவள் கேட்டதில் சிவா தான் உளறியதை அறிந்து சுதாரிக்க," ஈஈ ! உனக்காக.. இல்லடி நமக்காக ..நமக்காக தான்" என சமாளிக்கிறேன் என அசடுவழிய,

அதில் சந்தேகம் வழுத்தது யாதவிக்கு. "அதான் அது என்ன சிவா ?"

"அது ஒன்னுமில்லடி ! அடுத்தவாரம் நம்ப ஸ்கூல் அலுமினி இருக்குல , அதுக்கு நம்ப பசங்க எல்லோர்கிட்டையும் பேசி வரசொல்லிட்டேன் .எல்லோருமே கண்டிப்பா வரேன்னு சொல்லிட்டாங்க " என்ற குரலில் இருந்த மகிழ்வு யாதவிக்கு எதையோ உணர்த்த ,

"எல்லோருமேனா ?" என கேள்வியாய் கேட்டவளின் குரலிலோ அதிகபடியான அழுத்தம் , அதை உணர்ந்த சிவா அமைதியாய் இருக்க ,

மீண்டுமாய் "எல்லோருமேனா யாரு சிவா ?" என கேட்டாள் ,இம்முறை அழுத்தம் கூடியிருந்தது.

அதில் சிவாவும் "சர்வேஷூம் தான் யாதவி !" என்றிருக்க இப்பொழுது மௌனம் யாதவியின் வசமானது.

"ப்ளீஸ் யாதவி ! சர்வேஷ் உனக்காக பத்து வருஷமா காத்திட்டிருக்கான்...நீ மட்டும் என்ன அவனை தான கல்யாணம் பண்ணும்னு சொன்ன..அம்மா அப்பாவைலாம் யோசிச்சு திரும்ப அவனை மிஸ் பண்ணிடாத " என சிவா அந்த சர்வேஷ் என்பவனுக்காய் பேச , அதை கேட்டபடி கட்டிலில் சாய்ந்த யாதவியின் கண்களில் பட்டது சுவற்றில் இருந்த மாதநாள்காட்டி .

அதில் இன்றைய தேதியை பார்த்தவளின் மனம் அவளையும் மீறி தனக்குள் கணக்கிட , அவளின் மனக்கண்ணில் ஒளிர்ந்தது ஒருவனின் முகம் .

" இன்னும் கொஞ்ச நாள் ம்ம்ம்ஹூஹூம்ம் கொஞ்ச வருஷம் தான் லட்டுமா ! நான் திரும்பி வந்த அடுத்த நிமிஷம் உன்னை பொண்ணு கேட்டு உங்க வீட்ல வந்து நிப்பேன்.அப்போ அவங்க சரினு மட்டும் சொல்லாம இருக்கட்டும் " என இழுத்தவனின் குரல் இன்றுமே இவளுள் அடுத்து என்ன என கேட்க தூண்ட , அன்றைய அவனோ ,

"சடாருனு உன் கைய புடிச்சுட்டு படாருனு என் மாமியார் கால்ல விழுந்துருவேன் லட்டுமா"என்றிருந்ததில் இன்றைய இவளின் உதடுகளில் வசிக்கும் சிரிப்பு வந்தமர்ந்தது.

தற்பொழுது புன்னகையுடன் அவள் உதடுகள் அவனின் பெயரையும் இணைத்துக்கொண்டது "அப்புப்பா" என்று .

அந்த அவன் யார் ? அவன் தான் சர்வேஷா? சர்வேஷ் யாதவியின் ஆதியா அல்ல அந்தமா ? ஒருவேளை இருவரும் வேறுவேறு எனில் யாதவியின் அந்தாதியாய் ஆகப்போவது யார் ?

அறிந்குகொள்ள காத்திருங்கள் ஆகஸ்டு 1 வரை....


கதை ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து பதிவிடப்படும் சகிஸ்??நான் எழுத்துலகிற்க்கு புதிது ஏதேனும் தவறிருந்தால் சொல்லிக்கொடுங்கள் கற்றுக்கொள்கிறேன் ...என்றும் உங்கள் நட்பையும் , அன்பையும் , ஆதரவையும் வேண்டும் ,

-உங்கள் நறுமுகைநிலவுமுப்பது❤?
 
Last edited:
Top