Fa.Shafana
Moderator
பா. ஷபானாவின்
"காதலின் இன்மை உணர்கிறேன்"
அத்தியாயம் 1
"நினைவுகளில் கூட
என் அருகே வராதே
விட்டுச் சென்ற நீ...
விலகியே இருந்து கொள்..."
அன்றைய நாள் வேலை எல்லாம் முடிய உடல் சற்று ஓய்வு கேட்க தங்களின் அறைக்குள் நுழைந்த கமலாவை நிறுத்தியது நுழைவாயில் திறக்கும் ஓசை...
"அடடே வாங்க அண்ணா.. வா ரேணுகா ..." என்று புன்னகை முகமாக வரவேற்று... உட்கார வைத்து விட்டு தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றவர் தன் அன்னையையும் அழைத்து வந்தார்...
கமலா கொடுத்த தண்ணீரைக் குடித்த ரேணுகா அண்ணா எப்பிடி இருக்கார் அண்ணி என்று கேட்க...
"இருக்கார் கொஞ்சம் கொஞ்சமா பேச ட்ரை பண்ணார் ஆனா முடியல..."
"உள்ள கூட்டிட்டு போ கமலா ... போங்க போய் மாப்பிள்ளைய பார்த்துட்டு வாங்க.." என்று சொன்னார் வாணியம்மா... கமலாவின் அம்மா..
இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென ஒரு நாள் நாதன் பக்கவாதம் வந்து ஓரிடம் ஆகி விட மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்து தங்கிக் கொண்டார் வாணியம்மா...
" எப்பிடி இருக்கீங்கண்ணா..??" அண்ணனின் அருகில் உட்கார்ந்து அவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரேணுகாவிற்கு கண்ணீர் எட்டிப் பார்த்தது...
தங்கையின் ஸ்பரிசம் உணர்ந்து மூடி இருந்த கண்களை திறந்தவர்
தங்கை மட்டும் மச்சானைப் பார்த்து வரவேற்பாக ஒரு புன்னகை செய்தார்...
" உடம்பு எப்பிடி இருக்கு மச்சான்..." கேட்ட ரவிக்கு கண் மூடித் திறந்து பதில் சொன்னார்....
ஓடி ஆடித் திரிந்தவர் ஒரே நாளில் படுக்கையில் விழ உடலோடு சேர்ந்து மனமும் சோர்வு கண்டது....
ரேணுகாவைப் பார்த்து கை அசைத்து அவர் கேட்க வந்தது புரிந்து... "நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்ண்ணா... ரெண்டு மூணு நாளா உங்க நெனப்பாவே இருக்கு அதான் உங்கள பார்த்துட்டு போக வந்தோம்..."
" சா....ர்" என்பவரை புரிந்து....
"சாரு நல்லா இருக்கா... மருமகள தனியா விட்டுட்டு வர முடியல அதான் அவ கூட இருக்கா..."
ஒரு தலையசைப்பு நாதனிடம்...
கமலா கொடுத்த தேனீரைக் குடித்துவிட்டு
சற்று நேரம் நாதனுடன் இருந்துவிட்டு அவருக்கு ஓய்வு எடுக்க சொல்லி வெளியே முன்கட்டுக்கு வந்து உட்கார்ந்தார்கள்...
வாணியம்மாவும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தார்
"பசங்க எல்லாம் எப்பிடி இருக்காங்க அண்ணி" என்று ரேணுகா கேட்க...
"நல்லா இருக்காங்க ரேணுகா... நதி காலேஜ் விட்டு வர்ற டைம் தான்... தருண் ஃபீல்ட் வேர்க் ஒண்ணுக்கு வெளியூர் போய் இருக்கான்...."
" கரணோட ஆபீஸ்ல வேலன்னு சொன்னானே..."
"ஆமாண்ணா... ஆனால் இன்னும் ஜாயின் பண்ணல்ல..."
அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...
" கரணுக்கு இன்னும் ஒண்ணும் அமையல்லையாமா???"
ரவி கேட்டு இருந்தார்...
" எங்கப்பா...!! முன்னதாக பேச்ச எடுத்தா இப்போ கல்யாணம் வேணாம்...அப்றம் பார்க்கலாம்னு தட்டிக் கழிச்சான்... இப்போ ஒண்ணும் சரியா அமையமாட்டேங்குது...“ வருந்தி வந்தது வாணியம்மாவின் வார்த்தைகள்...
கரண் சொன்னது தப்பில்ல பெரியம்மா அவன் தொழில கொஞ்சம் முன்னேற்றி நிலை நிறுத்திக்கணும் இல்லையா...
“ஆனா இப்போ எதுவும் அமையுதே இல்லையே... அவருக்கு கூட மனசுல அந்த கவலையும் இருக்குண்ணா... அவர வெச்சே சில இடம் தட்டி போகுது...“
"என்ன சொல்றீங்க அண்ணி..."
“ஆமா.... ரேணுகா ... அவனுக்கு வந்த சில இடம் அப்பிடி தான் தட்டிப் போகுது.... மாமனார் இப்பிடி ஒரு இடமா இருக்கும் போது....அவர கவனிச்சுக்குற வேல பொண்ணுக்கு இருக்கும்... பசங்க பொறுப்பு மூத்தவன் தலைக்கு தான் வரும்னு ஏதேதோ காரணம் சொல்லி எல்லாரும் தயங்குறாங்க.... காதுபடவே அப்பிடி பேசிக்கிறாங்க...ரேணுகா“
குறுக்கிட்ட வாணியம்மா “வெளியிலன்னா பரவாயில்லை குடும்பத்திலயே அப்பிடி சொல்லும் போது என் பேரன நெனச்சா எனக்கு கஷ்டமா இருக்கு....
என் மகனோட பொண்ணயே இத சொல்லி தர முடியாதுன்னு சொல்லிட்டான்ப்பா...“
அதிர்ச்சி மாறாமல் ரேணுகா இருக்க நாதனின் இருமல் சத்தம் கேட்டு உள்ளே போன கமலா...வெளியே வந்து ரேணுகா அண்ணா உங்க ரெண்டு பேரையும் அவர் கூப்பிடறார்... என்று சொன்னார்...

Last edited: