எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலா வரும் வேளையில் NNK67

yugarasha

Member
#Rasha_Review 7

#நிலா_வரும்_வேளையில்

#NNK_67

மற்றும் ஒரு ரிவியுல சந்திக்கிறேன். அதுவும் ஒரே ரைட்டர் ஆன மௌன நிலா வின் மூன்றாவது கதைக்கான ரிவியூ???

ரைட்டர் ஜீ முதல்ல உங்கள பாராட்டியே ஆகனும். ??அவனவன் ஒரு கதைக்கே தள்ளாடுறான் நீங்க அசால்டா மூனு கதை கம்பிளிட் பண்ணிட்டிங்க. உங்க உத்வேகத்தின் ரகசியம் என்ன????❤️❤️

உங்க இந்த கதை பெரும்பாலும் மீரா, கௌதம் அண்ட் பழனி மட்டுமே கொண்டே பயணிக்கிறது ???. ஒரு அழகான காதல் கதை வித்யாசமாக் சொல்லி இருக்கிங்க♥️♥️♥️.

மீராவ கௌத்தம் ஏமாற்றி கலயாணம் பண்ணினான் என்று நீங்க சொன்னாலும் ஏர்லியாவே ஓரளவு எங்களால கொஞ்சம் ஊகிக்க கூடிய தாக தான் இருந்திச்சு.???

ஆனா கடைசி வரை ஏன் மீரா கல்யாணம் வேனாம் எண்டு சொன்னாள் என்டு புரியவில்லை???. ராஜி அவளின் நட்புக்கு நல்லது நடப்பதற்கு சின்ன ஏமாத்து வேலையும் செய்து இருக்காள் அனாலும் அடிக்கடி இவன் வேணா வேணா என்டு தான் சொன்னாள் ( ஒரு வேளை மீராக்கு அலார்ட் கொடுத்தாளோ தெரியல்ல)???

கௌத்தம ஒரு அழகான கரக்டர் ???அடிதடி பணறான், ஆடிட்டிங் பண்றான், கோபம் வருது, பட்டெண்டு அடிக்கிறான், ஆனா மீரா விசயத்தில எவ்வளவு பொறமையா போக ஏலுமோ அவ்வளவு பொறுமையா போனான். மீராவும் உண்மை தெரியாமல் அவனை லேப்ஃ்ட் அன்ட் ரைட் வாங்குவாள்???

வில்லன் வில்லி இல்லாத எதார்த்தமான கதை, ???மீரா மனதில் காதல் இல்லாமலே கட்டாயத் திருமணம் பண்ணி மஞ்சள் கயிறன் மாயம் என்றே வாழாமல் தன் போக்கிலே இருக்கிறாள்???

உங்க மற்ற கதை எழுதும் போது கூடவே கருத்துக்கள் சொல்லி உங்கள ஊக்குத்திருப்பேன், சில வேளை உங்க கதையை சிறபாக கொண்டு போக உதவி இருக்கும். நேரம் போதாதல் உங்க கதை வாசிக்க முடியல்ல, ஒரே தரத்திலே வாசித்து முடித்தேன். மறை கருத்தை சொல்லுறேன் என்று நினைக்க வேண்டாம், மற்ற அளவுக்கு இந்த கதை இல்லை, சிம்பிளான கதை மாதிரி இருந்தது( எல்லா எபிய்யும் ஒன்றாக படித்ததாலோ தெரியல்ல). கொஞ்சம் ரொமான்ஸ் வச்சு கொஞ்சம் பரபரப்பாக கொண்டு போயிருக்கலாம்ணு தோணுது ???

இந்த கதை இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்?? மென் மேலும் இதே வேகத்தில் கதைகளைப் படைக்க மீண்டும் வாழ்த்துக்கள்???
 

Advi

Well-known member
#nnk

#கௌரிவிமர்சனம்

#நிலா_வரும்_வேளையில்...

ஹீரோயின் - அடமெண்ட்டான பொண்ணு???

ஹீரோ - அனுசரிக்கும் பையன்☺️☺️☺️

கல்யாணமே வேணாம்னு இருக்கற மீரா, தாத்தா ஓட பிளாக் மெயில்லா தனக்கு ஒரு லவ்ர் செட் பண்ணி வீட்டுக்கு கூட்டி போறா ????

அதுவும் கண்டிஷன் எல்லாம் பலமா போட்டு, அங்க போனதுக்கு அப்பறம் தான் தெரியுது அவ தாத்தா அவல விட பெரிய கேடினு ????

மீரா - எதுக்கும் துணிந்து செயல் படும் அவ துணிச்சல் ரொம்பவே பிடிச்சது?????. தாத்தா மேல இவ வெச்சி இருக்கற பாசம்☺️☺️☺️☺️. அவ பக்கம் நியாயம் இருந்தாலும், பல இடத்தில் செம்ம கான்டு ஆகுது????????

அதுவும் எதையும் புரிஞ்சிக்காம வார்த்தையை நிறைய இடத்தில் விடும் போது?????

கெளதம் - அந்த நல்ல பையன், வரும் போது பெரிய ரவுடி போல வந்தாலும் ரொம்பவே ஸ்வீட்????

மீரா செய்யர தப்பு எல்லாம் அவன் ரொம்ப அழகா அவ காயம் படாம எடுத்து சொல்லும் போது????

ஆன அது அந்த லூசுக்கு கடைசி வரை புரியவே இல்ல?????

எதையும் பார்த்து பார்த்து செய்யும் விதம், அதுவும் அவன் காதல்☺️☺️☺️☺️☺️

தாத்தா - இப்படி ஒரு உறவு கிடைக்க மீரா ரொம்பவே லக்கி, அவ தப்பே செய்தாலும் அவ பக்கம் நிக்கற விதம்????

கண்டிப்பா பீல் குட் ஸ்டோரி தான், எந்த டென்ஷனும் இல்லாம படிக்கலாம்???

ஒரே ஒரு விசயம் தான் ரைட்டர் ஜி, எழுத்து பிழைகள் நிறைய இடத்தில் இருக்கு, கொஞ்சம் பாருங்க.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி ????

லிங்க் ???

 

Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#நிலா_வரும்_வேளையில்..

கதையை மார்னிங் படிச்சு முடிச்சுட்டேன்.. கதை நல்லா இருந்துச்சு டியர்..

கௌதம் - இவனை என்ன சொல்றது..? ஆரம்பத்துல ரௌவுடியா இன்ட்ரோ ஆகி கடைசில லவ்வர் பாயா முடிச்சுட்டிங்க..இவனோட காதலும் பொறுமையும்😍😍😍😍

நான் கூட இவனை ரவுடியா தான் நினைச்சைன் கடைசில என் நினைப்புலயும் மண்ணை அள்ளி போட்டுட்டீங்க..

மீரா - இது லூசா இல்ல நம்ம லூசா.? கதை ஆரம்பத்துல தைரியசாலி பொண்ணுனு நினைச்சா கடைசில இது லூசானு நிலைமைக்கு கேட்க வச்சுட்டிங்க..

தைரியசாலி மேடம் ப்ரேக் வயரை அவன் கட் பண்ணுனா அவன் எப்படி உங்ககூட வர்றேனு சொல்லுவான்.? எனக்கே இப்படிதான் தோணுச்சு ஹஹஹஹ..

இவளோட யோசனை பைத்தியக்கார தனமா பட்டாலும் அவ மனநிலைல யோசிச்சா சரியா தான் இருக்கும்.. தெரியாம கௌதமா கூட்டிட்டு போய் அவ பட்டபாடு... ஹஹஹஹ இனி இந்த மாதீரி கேணத்தனமா யோசிக்கவே மாட்டா..

பழனி தாத்தா - மீரா மேல மட்டுமில்ல இவரு மேலயும் தப்பு இருக்கு.. சின்ன பொண்ணை கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல விட்டது தான் இவர் பண்ணுன பெரிய தப்பு.. எப்படியோ கடைசில கௌதமால எல்லாம் சரியாகிருச்சு..

ராஜி - வந்தது சில இடம்னாலும் மீரா மேல இவ அக்கறை,😍😍😍😍

ரைட்டர் மேடம் மீரா ஏன் கல்யாணத்தை வெறுத்தானு கடைசி வரைக்கும் சொல்லலயே.? இது மட்டும் எனக்கு லேசா டவுட்டுடு.. சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் இருந்துச்சு அதையும் சரி பண்ணிக்கங்க..

நெக்ட்டிவ் இல்லாத பீல் குட் ஸ்டோரி படிக்கணும்னு கண்டிப்பா இந்த கதையை படிக்கலாம்.. போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍
 
Top