kani suresh
Moderator
அத்தியாயம் 5
பத்மா ராகினியைக் கொண்டு வந்து தன் ரூமில் படுக்க வைத்துக் கொண்டார்.
சிறிது நேரம் தன் தலையில் கை வைத்து இருந்த வினோத், தன் தவறை உணர்ந்து இருந்தான்.
கீழே கிடந்த புக்கை எடுத்து அந்த போன் நம்பரைப் பார்த்துவிட்டு, 'யாருடி நீ, இப்படி என் பொண்ணையும், அம்மாவையும் மயக்கி வச்சிருக்க. முதல்முறை உன்னால என் பொண்ணுகிட்ட நான் சத்தம் போட்டு இருக்கேன். யாருன்னே தெரியாத உன் மேல எனக்கு இவ்வளவு கோவம் வருது. இதுல அம்மா உன்னை என் வாழ்க்கைக்குள்ள கொண்டுவரப் பார்க்கிறாங்க.
அதை நெனச்சாலே எனக்கு இன்னுமும் உன் மேல வெறுப்பு தான் கூடுது. உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கும் இல்ல. அதப் பார்த்துட்டுப் போயேன். ஏன், என் பொண்ணுக்கும், எனக்கும் இடையில வர?' என்று சம்பந்தமே இல்லாமல், வெறும் ஃபோன் நம்பரைப் பார்த்துப் புலம்பிவிட்டு புக்கை ஒரு மூலையில் எடுத்து வைத்தவன், வெளியில் வந்து மகளைத் தூக்கினான்.
"அவ இங்கவே தூங்கட்டும் டா" என்றார் பத்மா.
"மா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. நான் பண்ணது தப்பா கூட இருக்கட்டும். ஆனா, முதல்முறையா எனக்கும், என் பொண்ணுக்கும் நடுவுல ஒரு பொண்ணு வருதுன்னா… என்னோட மனநிலை என்னன்னு யோசிங்க. அத மறந்துறாதீங்க. இன்னொன்னு, நான் ராகிமா இல்லாம தூங்கி இருக்கேனா? இப்போ என்னையும், என் மகளையும் நீங்கதான் பிரிக்கப் பார்க்கறீங்க" என்று கண்கள் கலங்கச் சொன்னான்.
மகனின் நிலைமையை உணர்ந்த பத்மா அமைதியாகி விட,
மகளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், அவளை ரூமில் படுக்க வைத்து விட்டுக் கதவைச் சாற்றிவிட்டு வந்து தன் மகளை அணைத்துக் கொண்டு படுத்தான்.
இரவு 11 மணி போல் குழந்தை சாப்பிடாததால் பசியில் சிணுங்கினாள். வேகமாக எழுந்து உட்க்கார்ந்தவன், "ராகிமா, சாரிடா அப்பா திட்டிட்டேன்" என்று கண் கலங்க சொன்னான்.
"சாரிப்பா, எனக்கு நீ..நீங்க... நீங்க தான் வேணும்" என்று திக்கித் திணறினாள்.
மகள் இன்னும் தன்மீது பயத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்தவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, "ராகிமா, அப்பா பால் எடுத்துட்டு வரட்டா" என்று கேட்டான்.
அவளுக்கும் பசி எடுத்ததால், சரி என்று தலை ஆட்ட, வேகமாகப் பால் ஆற்றி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
"அப்பா, நீங்க குடிக்கல" என்று கேட்டாள் அந்த நிலைமையிலும்.
"அப்பா குடிச்சிட்டேன்டா தங்கம்" என்றான் அவளின் தலையைக் கோதியவாறு.
"நான் சாப்பிடாம நீங்க என்னைக்குச் சாப்பிட்டு இருக்கீங்க? பொய் சொல்லாதீங்க, வாங்க" என்று கையோடு அழைத்துக் கொண்டு சென்று தன் பாட்டியைப் பார்த்தாள்.
அவரும் யோசனையில் உட்கார்ந்து இருக்க, "பாட்டி, வாங்க சாப்பிடலாம்" என்று அழைத்தாள்.
குழந்தையை அள்ளிக் கொஞ்சிய பத்மா, "பாட்டி சாப்பிட்டேன் டா, அப்பா சாப்பிட வச்சுட்டான்" என்றார்.
அப்பாவைப் பார்க்க அவன் ஆமாம் என்பது போல் தலையாட்டியவுடன்,
"சரி வாங்க பாட்டி, அப்பாவுக்குத் தோசை ஊத்திக் கொடுங்க" என்று கூப்பிட்டாள்.
"நான் ஊத்திக்கிறேன் ராகிமா, பாட்டிக்கு எதுக்குச் சிரமம்?" என்றான்.
"எனக்கு என்னடா சிரமம்? என் புள்ள பசியில் இருக்கிறதப் பார்த்துட்டு ஒரு தாயா அமைதியா இருக்கச் சொல்றியா?" என்று விட்டு வேகமாக எழுந்து வந்து அவனுக்கு மூன்று தோசை ஊத்திக் கொடுக்க அவன் சாப்பிட்டவுடன்,
"சரிடா நேரம் ஆகுது, போய் தூங்குங்க" என்று விட்டுத் தன் ரூமுக்குச் சென்று விட்டார் பத்மா.
இங்குச் சாப்பிட்ட உடன், மகள் தன்னிடம் எப்பொழுதும் போல் பேசிய சந்தோஷத்தில், மகளைத் தட்டிக் கொடுத்து விட்டு அவளுடன் சேர்ந்து தூங்கி விட்டான் வினோத்.
கண்மணி தான் இன்றும் தூக்கம் வராமல் புரண்டவள், ' இது சரியில்ல கண்மணி, நாம எதுக்காக தினமும் அந்தப் பொண்ணு ராகினி பத்தி யோசிச்சிட்டு இருக்கோம்? அதுவும் அந்தப் பொண்ணோட சிரிப்பும், அழுகையும் வந்து வந்து போகுது. அவங்க அம்மா எங்க, அப்படின்ற கேள்வி எனக்கு எதுக்கு? அது எனக்குத் தேவையில்லை.' தன்னோடு சேர்ந்து தன் குடும்பத்தையும் வருத்துகிறோம் என்று மனதிற்குள் எண்ணி ராகினியின் நினைவைத் தள்ளி வைத்தாள்.
தள்ளி வைக்க முயற்சி செய்தாள் என்று தான் சொல்ல வேண்டும். மறுநாள் பொழுது நன்றாகப் புலர்ந்து இருந்தது. எப்பொழுதும் போல் கவினை ஸ்கூலில் விட்டுவிட்டுக் கண்மணி வெளியில் வர, ராகினி வேகமாக வந்து கண்மணியைக் கட்டிக் கொண்டாள். கண்மணி ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்துவிட்டு, "ராகி மா, நீங்க லேட்டா வருவீங்கன்னு சொன்னீங்க" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளை முறைத்துக் கொண்டு வந்து நின்றான் வினோத்.
யார் என்று புரியாமல், தன்னை முறைத்துக் கொண்டு நிற்கும் நபரைப் பார்த்துக் கொண்டு நின்றாள் கண்மணி.
"அப்பா, இவங்க தான் கண்மணி ஆன்ட்டி" என்று வினோத்திடமும், "ஆன்ட்டி, இவங்கதான் என்னோட அப்பா வினோத்" என்று கண்மணியிடமும் சொல்ல, இருவரின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டது.
'இவர் ஏன் தன்னை முறைக்க வேண்டும்?’ என்பது போல் இருந்தது கண்மணியின் பார்வை. ‘இவளால் தான் எனக்கும், என் பொண்ணுக்கும் நடுவுல நேத்து சண்டை வந்தது' என்று வினோத்தும் எண்ணினான்.
முதல் சந்திப்பு இருவருக்கும் ஏதோ போல் இருக்க, "சரிடா ம்மா, எனக்கு வேலைக்கு நேரம் ஆகுது. அப்புறமா பார்க்கலாம்" என்று விட்டு வேகமாக நகர்ந்தாள் கண்மணி.
ஏதோ ஒன்று அங்கு நிற்க விருப்பம் இல்லாதது போல் தோன்றியதால், "ஆன்ட்டி ஆன்ட்டி" என்று ராகினி கூப்பிடுவதைக் கூடக் காதில் வாங்காமல் சென்றாள்.
கவின், "ராகினி, கிளாசுக்கு வா, நேரம் ஆகுது.” என்று சொல்ல, "சரிப்பா பாய்" என்று விட்டு ராகினி கவினுடன் சென்றுவிட, வினோத் வேகமாகச் சென்றவன், அவளின் முன்பு போய் நின்று "ஒரு நிமிஷம்” என்றான்.
கண்மணி ஒன்றும் புரியாமல் அமைதியாக இருக்க, "உங்க பேரு?" என்றான்.
'இவர் எதற்காக என்னுடைய பெயரைக் கேட்க வேண்டும்' என்று யோசித்தவள், இருந்தாலும் ராகினியின் அப்பா என்பதால் ஒரு மரியாதைக்காக, "கண்மணி சார்" என்றாள். "ஓ" என்று விட்டுக் கைகளைக் கட்டிக் கொண்டவன், "கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டான்.
'என்னிடம் பேச இவருக்கு என்ன இருக்கிறது?' என்று மனதிற்குள் நினைத்தவள், "என்கிட்டப் பேச உங்களுக்கு என்ன சார் இருக்கு?" என்று வெளிப்படையாகவும் கேட்டிருந்தாள்.
"பேச ஏன் இல்ல, நிறையவே இருக்கு. தொடர்ந்து ரெண்டு மூணு நாளா உங்க பேச்சு மட்டும் தான் என் வீட்லயும் சரி, என் மகள் வாயில இருந்தும் சரி வருது" என்றான்.
"அதுக்கு?" என்றாள்.
"சொல்றேன், அதுக்கு தானே பேசணும்னு கேட்டிருக்கேன்."
"சாரி சார், தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகுது." என்றவள், வேறு ஏதும் பேசாமல் அவனைத் திரும்பியும் பாராமல், தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள்.
போகும் கண்மணியையே வினோத் பார்த்துக்கொண்டு… சாரி, சாரி… முறைத்துக் கொண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
'எவ்வளவு திமிரு, ஒருத்தங்க வந்து பேசுறாங்கன்னா, மரியாதைக்காகவாவது நின்னு பதில் சொல்லிட்டுப் போகனும் என்ற எண்ணம் கூட இல்லை.’ என்று எண்ணினான்.
ஆனால், அவனது இன்னொரு மனமோ கேள்வி கேட்டது.
'அவள் மரியாதை நிமித்தமாக உனக்குப் பதில் சொல்லதான் செய்தாள். கூப்பிட்ட உடனே தனக்கென்ன என்று சென்றிருக்கலாம். நீ கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்ன பிறகுதான் வேலைக்கு நேரம் ஆகிறது என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள்’ என்றது.
'அப்படி என்ன நேரம் ஆகுது, என்கிட்டக் கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போவதில்?' என்று புலம்பிக் கொண்டே தனக்கும் நேரம் ஆவதை உணர்ந்தவன், வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
போகும் வழி எங்கும் வினோத்துக்குக் கண்மணியின் நினைவும், கண்மணிக்கு வினோத்தின் நினைவும் ஆட்டிப் படைத்தது. 'இவருக்கு என்கிட்டப் பேச என்ன இருக்கு?' என்று கண்மணியும், 'ஏன், என்கிட்டக் கொஞ்ச நேரம் பேசிட்டுப் போனால், குறைந்து விடுவாளா, என்ன?" என்பது போல் வினோத்தின் நினைவும் இருந்தது.
இருவரும் அவர்களது வேலையில் கண்ணும், கருத்துமாக இருந்தாலும், அவ்வப்போது இருவருக்கும் நினைவுகள் வந்து சென்று தான் இருந்தது.
'மாலை சீக்கிரம் சென்று, அவளைப் பார்க்கலாமா?' என்று எண்ணினான் வினோத். ஆனால், அவனது வேலை அவனை இழுத்துக்கொள்ள. 'அவளைப் பார்க்க முடியாது போல' என்று எண்ணிவிட்டுத் தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான் .
இங்குக் கவினைக் கூப்பிட வந்த கண்மணி, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சுற்றிக் கண்களைச் சுழல விட்டுக் கொண்டே வந்தாள்.
'என்ன, சுத்திப் பார்த்துகிட்டே வர அத்தை? இன்னைக்கும், ராகினி கூட என்கூட தான் நிக்குறா. உனக்காக, உன்னைப் பார்ப்பதற்காக" என்று கவின் சொல்ல,
"என்ன ஆன்ட்டி" என்று கேட்டாள்.
"ஒன்னும் இல்லடா தங்கம்" என்று சொல்லி சிரித்தவள், "வீட்டுக்குப் போலாமா கவின்" என்று கேட்டாள்.
"உங்களுக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஆன்ட்டி. நீங்க வீட்டுக்குப் போகலாம்னு சொல்றீங்க?"
"இல்லடா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, அதான் தப்பா எடுத்துக்காத. நீ உங்க ஆயாம்மா கூடப் போய் வெயிட் பண்ணு, அப்பா வருவாங்க" என்று சொல்லி வேகமாகக் கவினின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் என்று தான் சொல்ல வேண்டும்.
வண்டி வரை அமைதியாக வந்த கவின். அவளின் கையை உதறிவிட்டு, "அத்தை அவ உன்கிட்டப் பேசணும்னு அவ்வளவு நேரம் வெயிட் பண்றா. ஆனா நீ ஏன், அவகிட்ட முகம் கொடுத்துக் கூடப் பேசாம ஒரு மாதிரி வந்துட்ட, என்ன ஆச்சு?" என்று கேட்டான்.
"ஒன்னும் இல்லடா கவிக்குட்டி, சும்மாதான்" என்றாள்.
“உன் முகமே சரியில்ல, ஏதோ பயந்த மாதிரி இருக்க. என்ன ஆச்சு?" என்று கேட்க, காலையில் நடந்ததை ஒன்று விடாமல் சிறுவன் தான் என்றாலும், தன் அண்ணன் மகனிடம் சொல்லி இருந்தாள்.
'இப்பொழுது தனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன்தான் என்பது போல'
"அத்தை, அதுக்காக நீ ஏன் ஃபீல் பண்ற? அவ உன்னப்பத்திப் பேசுறதுக்கு நீ என்ன பண்ணுவ? அவளுக்கு உன்னைப் புடிச்சிருக்கு."
"அதாண்டா, என்னை ஏன் புடிக்கணும்? அவர் ஏதோ என்கிட்டத் தனியாப் பேசணும்னு சொன்னாரு."
"நீ பேசி இருக்க வேண்டியதுதானே, பயந்துகிட்டுப் பேசாம விட்டுட்ட…" என்றவுடன் கவினை முறைத்தவள்,
"டேய் எனக்கு உண்மையாவே அப்ப வேலைக்கு நேரமாச்சு சரியா?" என்றாள்.
"அது சரி, அதுக்கு என்ன? இப்ப நின்னு பேசிட்டு வீட்டுக்குப் போலாம்." என்றான் விடாமல்.
"உன்னையும், என்னையும் வீட்டில் தேட மாட்டாங்களா?" என்றவுடன்,
"ஆமாம்" என்று பல்லைக் காமித்தான்.
"வா போலாம்" என்று சொல்லிவிட்டு அவனை முன்னால் உட்கார வைத்து விட்டு நிமிர்ந்த கண்மணி, வினோத்தைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் கவினை அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.
வினோத் அவளைப் பார்த்தவன், 'திமிரு' என்று வாய்விட்டுப் புலம்பி விட்டு மகளை அழைக்க உள்ளே சென்றான்.