kani suresh
Moderator
அத்தியாயம் 9
போகும் வழி எங்கும், 'எப்படியாவது இந்தத் திருமணத்திற்குக் கண்மணி வீட்டில் இருப்பவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்' என்று மனதிற்குள் ஆயிரம் கடவுளை வேண்டிக் கொண்டே சென்றார்.
இங்குக் கமலி தனது மாமனார், மாமியார், கணவர் மூவரையும் திரும்பிப் பார்க்க, சங்கர் தான் கத்த ஆரம்பித்தான்.
"அவங்க தான் வந்து பேசிட்டு இருக்காங்கனா, நீயும் அவங்களுக்குச் சரிசமமா பேசிட்டு இருக்க, என்ன நினைச்சிட்டு இருக்க கமலி" என்று கத்தினான்.
"ஏன் என்ன ஆச்சு?" என்று கேட்க,
"என்னடி என்னாச்சுன்னு கேக்குற, எதுவுமே நடக்காத மாதிரி. ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு கூட வாழ்ந்து, ஒரு குழந்தையோட இருக்கறவனுக்கு, ஏன் நான் என் தங்கச்சியைக் கட்டிக் கொடுக்கணும்? என் தங்கச்சியை ஒன்னும் விலை போகாம வீட்டுல வச்சிருக்கல, சரியா? அவ கல்யாணம் வேணாம்னு சொன்னதால மட்டும்தான் அமைதியா இருக்கேன். அதுக்காக என் தங்கச்சியை இரண்டாம் தாரமா கட்டித்தரச் சொல்லுவியா?" என்று கேட்டான்.
"நான் அப்படிச் சொல்லலையே" என்றாள் கமலி.
"இப்ப இவ்வளவு நேரம், நீ அவங்க பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டதுக்கு என்ன அர்த்தம்?" என்றான்.
ரகுபதி, காந்திமதி இருவருமே, "டேய், சங்கர் அமைதியா இரு" என்றார்கள்.
"என்னப்பா, அவதான் கேட்டுட்டு இருக்கானா, நீங்களும் அமைதியா இருக்கீங்க?"
"நான் அவங்க பேசுறதைக் காது கொடுத்துக் கேட்டது, பெரியவங்க என்பதால். இன்னொரு விஷயம் அவங்க பக்கம் இருப்பதையும் நம்ப யோசிக்கணும்"
"அதுக்காக நம்ம கண்மணியை, அவங்க வீட்டுக்கு இரண்டாம் தாரமா கொடுக்கணுமா?"
"நம்ப கண்மணியைக் கட்டிக் கொடுக்கப் போறோம்னு சொல்லல சங்கர்" என்று காந்திமதியும் சொல்ல, மூவரையும் முறைத்து விட்டு ரூமுக்குள் நுழைந்தான்.
பெரியவர்கள் இருவரும் கமலியைப் பார்க்க, "ஒன்னும் இல்ல மாமா, நான் பேசுறேன் அவர்கிட்ட. நீங்க எதுவும் நினைக்காதீங்க" என்று விட்டுச் சமையல் அறைக்குச் சென்று மாமனார், மாமியார் இருவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.
இருவரும், “இல்லமா பசியில்லை" என்று சொல்ல, "மாமா வந்து சாப்பிடுங்க, மாத்திரை போடணும் இல்ல" என்று சொல்லிட்டு இருவரையும் உட்கார வைத்துப் பரிமாறினாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு, "போய் சங்கரைப் பாரு கமலி" என்று காந்திமதி சொல்ல, "நான் பார்க்குறேன்" என்று விட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு ரூமுக்குள் நுழைந்தாள்.
அவளைப் பார்த்து முறைத்தவன் முகத்தைத் திருப்ப, "சாருக்கு ரொம்ப தான் கோவம் வருது போல" என்று அவனது அருகில் நெருங்கி வந்தாள். "அமைதியா போயிடு, ஏதாச்சும் பேசிடுவேன். எ..என்னடி என் தங்கச்சியை என்ன நினைச்ச?" என்றான் திக்கித் திணறி.
"நான் இப்போ உங்க தங்கச்சியை ஒன்னுமே சொல்லலையே. என்னால உங்க தங்கச்சியை இந்த வீட்டுக்குள்ள வச்சுக்க முடியாது, சீக்கிரம் கல்யாணம் பண்ணித் துரத்தி அனுப்புங்க, என்றா நான் சொன்னேன்…” என்றாள். வேகமாகத் திரும்பி அவளை முறைத்தான்.
"நீங்க பேசுறது அப்படித்தான் இருக்கு. நான் என்னமோ அவங்க வீடு தேடிப் போய் அவங்களக் கூட்டிட்டு வந்த மாதிரியும், அவங்க மகனுக்கு இரண்டாம் தாரமா தான் உங்க தங்கச்சியைக் கட்டிக் கொடுப்பேன்னு சொன்ன மாதிரியும் இருக்கு" என்றாள் ஆதங்கமாக.
வேகமாக அவளை இறுக்கி அணைத்து இருந்தான்.
"இங்க பாருங்க" என்று அவனது தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்குமாறு செய்தாள். "இல்லடி" என்று கண்கள் கலங்கக் கூறினான்.
"ஒன்னும் இல்ல சங்கர், அந்த அம்மா அவங்க மனசுல தோன்றிய விஷயத்தைச் சொல்லிட்டுப் போயிருக்காங்க, நம்ப நம்ப பக்கம் இருந்து யோசிக்கலாம், அவ்ளோதான் சரியா"
"என்னடி யோசிக்கணும்? என் தங்கச்சிக்கு…" என்று சொல்லும் பொழுதே அவனது வாயில் கையை வைத்து அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு, "உங்களுக்கு அவ எந்த அளவுக்குத் தங்கச்சியோ, அதே அளவுக்கு எனக்கு பிரண்ட் என்றதையும் மறந்துடாதீங்க, சரியா?" என்ற உடன் அவளை தான் அமைதியாகப் பார்த்தான். அவளது கண்கள் கலங்கி இருந்தது.
ஆம், கண்மணியும், கமலியும் நெருங்கிய தோழிகள். கண்மணி மூலமாக தான், சங்கருக்குக் கமலியைத் தெரியவந்து இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஆரம்பத்தில் கமலியைப் பேர் சொல்லி தான் கண்மணி கூப்பிட்டாள். நாள்கள் செல்லச் செல்ல "அண்ணி" என்று அவளாகவே கூப்பிடச் செய்ய,
"என்னை எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடு, ஏன்? இப்படிக் கூப்பிடுற" என்று கமலி கேட்க, "இல்ல, என்ன இருந்தாலும் நீ என் அண்ணன் பொண்டாட்டி" என்று சிரித்து மழுப்பினாள். அதிலிருந்து அண்ணி என்று தான் அழைக்கின்றாள்.
"எனக்கும் அவளோட வாழ்க்கை முக்கியம் தான் சங்கர். ஆனால், கொஞ்சம் அமைதியா இருங்க. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. இப்போ இந்த மூணு வருஷத்துல கண்மணிக்கு நம்ம எத்தனையோ மாப்பிள்ளை பார்த்து இருப்போம். ஆனால், அவ மனசுக்குள்ள இன்னும் அந்த விஷயம் நீங்காத வடுவா இருக்கத்தான் செய்யுது.
எவ்வளவு நல்ல வரன் வந்தாலும், அவ இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் வேணாம் என்று தான் சொல்லிக்கிட்டு இருக்கா… அந்தப் பாதிப்பில் இருந்து இன்னும் அவ மீண்டு வரல. நாமே அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே கொண்டு வர எவ்வளவோ முயற்சி செஞ்சிருக்கோம். இப்போ தான் ஓரளவுக்கு வெளியே வந்து இருக்கா. ஆனா, இன்னும் முழுசா வெளிய வரல. கவின் அவ வெளியே வர ஒரு அளவுக்குக் காரணமா இருந்திருக்கான்னு, நம்ம சொல்லிக்கிட்டாலும், அவ மனசுல ஏதோ ஒரு மூலையில அந்தப் பாதிப்பு இருக்கத்தான் செய்யுது. அதில் இருந்து அவளை வெளியே கொண்டு வரணும்."
"அதுக்காக?" என்றான்.
"அதுக்காக, நான் ஒன்னும் இப்ப அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு அவளைக் கட்டி வைக்கச் சொல்லி சொல்லல. ஆனா, அதப்பத்தி யோசிக்கலாம்னு சொல்றேன்."
"என்ன கமலி சொல்ற?" என்றான் அவளை விட்டு நகர்ந்து நின்று முறைத்தபடி.
"இதுவரைக்கும் கவின ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது, உங்க தங்கச்சி எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கா. ஆபீஸ்ல ஸ்டாஃப் புள்ளைங்க, அந்த மாதிரி நிறையப் பார்த்திருக்கா. ஆனா, யாரும் அவ மனசை இந்த அளவுக்குப் பாதிக்கல. இந்தப் பொண்ணு தான் பாதிச்சிருக்கு. அதுக்காக அவங்க அப்பாவைக் கட்டி வையுங்க என்று நான் சொல்லல.
அவங்க அம்மா உயிரோடு இருந்து நாம் இதைப்பற்றி யோசிச்சா தான் தப்பு, சரியா? அவங்க அம்மா இந்த உலகத்திலேயே இல்லை. இனி வரப்போவதும் கிடையாது. அதுக்கான காரணத்தை முழுசா அந்த அம்மா நமக்குச் சொல்லிட்டு தான் போயிருக்காங்க. எதையும் மறைக்கணும்னு நினைக்கல, கொஞ்சம் யோசிப்போம். விட்டுப் பிடிப்போம். இதைப்பத்தி நான் கண்மணி கிட்டப் பேசுறேன். ஆனா இப்போ இல்ல. நான் சொல்றதைக் கொஞ்சம் நீங்க அமைதியா மட்டும் கேளுங்க. அந்த அம்மா வந்துட்டுப் போனதைப் பற்றி நீங்க கண்மணிகிட்ட இப்போதைக்கு வாயத் திறக்க வேண்டாம்."
"என்னடி சொல்ற?" என்றான்.
"கொஞ்சம் பொறுமையா இருங்க சங்கர், இப்பதான் சொன்னேன். நான் மெதுவா அவகிட்டப் பேசுறேன். அதுக்கு முன்னாடி நம்ம யோசிப்போம்னு சொல்லி இருக்கேன். எதையும் நான் முடிவு பண்ணல, எழுந்து வாங்க. சாப்பிடுங்க. அத்தையும், மாமாவும் நீங்க கோவமா உள்ள வந்ததால வருத்தத்துல இருக்காங்க. உங்களை நினைச்சு, அவங்களுக்கு உடம்பு கெட்டுப் போயிடப்போது. ஏற்கனவே கண்மணியோட வருத்தமே அவங்களுக்குப் பெரும் வருத்தமா இருக்கு." என்று சொல்ல,
அவள் சொல்வதும் உண்மை என்பதால் அமைதியாக வெளியே சென்றான். தன் அம்மா, அப்பா இருவரும் தங்களது ரூமையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், நேராக அவர்கள் அருகில் சென்று "ஒன்னும் இல்லம்மா" என்று சொல்லிக் காந்திமதியின் மடியில் தலை சாய்த்தான்.
அவர் தலையைக் கோதி விட்டு, "நேரம் ஆகுது, போய் சாப்பிடுங்க." என்றார். "சரி" என்று விட்டு இருவரும் சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தார்கள். அப்படியே மாலைப் பொழுது ஆகியது.
கண்மணி கவினை அழைக்க ஸ்கூலுக்குச் சென்று இருந்தாள். அப்பொழுது ராகினியைப் பார்க்க நேரிட்டது. சிரித்த முகத்துடன் ராகினியிடம் இரண்டு வார்த்தை மட்டும் பேசிவிட்டு, கவினை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். மூவரிடமும் கமலி ஏற்கனவே, “அவளிடம் யாரும் இதைப் பற்றிப் பேச வேண்டாம், நான் பொறுமையாகப் பேசுகிறேன்." என்று சொல்லியிருந்தாள். ஆகையால், யாரும் எதுவும் பேசவில்லை.
கவின் வீட்டிற்கு வந்தவன் தன் அம்மாவிடம், ராகினியின் பாட்டி தன்னிடம் வீட்டு அட்ரஸ் கேட்ட விஷயத்தைச் சொல்ல, "சரிடா கவிக்குட்டி, நீ இதைப் பத்தி ஏதாவது அத்தைகிட்டச் சொன்னியா?" என்று கமலி மெதுவாகவே கேட்க, "இல்லம்மா, இன்னும் சொல்லல, அத்தை திட்டுமா என்னன்னு தெரியல." என்றான்.
"சரிடா தங்கம், நீங்க அத்தைகிட்டச் சொல்ல வேணாம். அம்மா சொல்லிக்கிறேன், நீங்க போயி விளையாடுங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
இங்கு வினோத் தன் மகளை அழைத்துக் கொண்டு வந்தவன், தன் தாயை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, அடிக்கடி பத்மாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
"எதுக்குடா என்னைக் குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்க" என்று கேட்டார்.
"இல்ல, காலையில உன் பேத்தியை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி, என்னைக்கும் இல்லாம நீ கூட்டிட்டுப் போயிட்டு வந்தியா… அதான், ஏதாவது வேலை பார்த்து வச்சிருக்கியோ என்னமோ என்று பார்த்தேன்." என்றான்.
"நான் எதுவும் செய்யலடா. கோவிலுக்கு தாண்டா போக செஞ்சேன்" என்றார். வினோத் ராகினியைத் திரும்பிப் பார்க்க, "பாட்டி கோவிலுக்குத் தான் போனாங்க பா, என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க பா" என்றாள்.
"இப்பல்லாம் வரவர என் ராகிமா கூட என்கிட்ட நிறைய விஷயத்தை மறைக்கிறா" என்றான். "அப்பா நானா?" என்று அவள் அவனிடம் செல்லம் கொஞ்ச, "சும்மாடா தங்கம்" என்று விட்டு அமைதி ஆகிவிட்டான்.
'இந்த விஷயம் நல்லபடியாக முடியும் வரை என் மகனுக்கு எதுவும் தெரியக்கூடாது' என்று நினைத்தார் மனதிற்குள். ஒரு வாரம் சென்று இருக்கும். இந்த ஒரு வாரத்தில் பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை. இங்கே கமலி தன் வீட்டில் உள்ள மூவரிடமும் வினோத் பற்றிப் பேசச் செய்தாள்.
பேசுவதோடு நிறுத்தாமல், இந்த ஒரு வாரத்தில் வினோத் பற்றித் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரிக்கவும் செய்தாள். அவள் விசாரித்த வரை அவன் நல்லவனே. அதுவும் ஒரு ஆண் மகனாக இருந்து கொண்டு, தன் தாயின் உதவியுடன் கைக்குழந்தையை இப்போது வரை வளர்த்து வருகிறான்… என்ற பேரைத் தாண்டி எதுவும் பெரிதாக இல்லை. அவனது உலகமே அவள் மகள் ராகினி தான் என்று தான் அவள் கேள்விப்பட்டாள்.
தனக்குள் ஒரு கணக்குப் போட்டு யோசித்தவள் தனது அத்தை, மாமா, கணவன் மூவரிடமும் பேசினாள். மூவரும் அவளை அமைதியாகப் பார்க்க, "எனக்கு இது சரி வரும்னு தோணுது" என்று சொன்னாள்.
சங்கரும், ரகுபதியும் அமைதியாக இருக்க காந்திமதி தான், "நம்ம கண்மணியை இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுக்க உனக்குச் சம்மதமா கமலி?" என்று கேட்டார்.
"நீங்க இரண்டாம் தாரமா பாக்குறீங்க அத்தை. இப்போ கண்மணியை நீங்க யாருக்குக் கட்டி வச்சாலும், உடனே சேர்ந்து வாழ்ந்து விடுவானு நினைக்கிறீர்களா?" என்று கேள்வி கேட்டவுடன் அமைதியாகி விட்டார்.
"அத்தை, எதுவும் உடனே சரி ஆகிடாது. அவளுக்கும் கொஞ்சம் நேரம் தேவை. அதுக்காக எவ்வளவு நேரம் என்று நீங்க கேட்காதீங்க. மூணு வருஷம் ஓடிடுச்சு. இருந்தாலும், அந்த பாதிப்பு அவங்களுக்குள்ளே இருக்கு. அதில் இருந்து அவ வெளியே வர சின்னச் சின்ன மாற்றங்கள் அவளுக்குத் தேவை. இது எந்த அளவுக்குச் சரி வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்தக் குழந்தை ராகினியால் இவ வாழ்க்கையில் மாற்றம் வரும் என்று நான் நம்புறேன். கவினால எப்படி அவளுக்குள் ஓரளவுக்கு மாற்றம் வந்து இருக்கோ, அதே மாற்றத்தை அந்தப் பொண்ணு ராகினியும் தருவான்னு நம்புறேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தா, நீங்க சொல்லுங்க. நம்ம மேற்கொண்டு அந்த அம்மாகிட்டப் பேசுவோம். இல்ல, உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வேணாம். என்ன இருந்தாலும் உங்களோட பொண்ணு, நான் இந்த வீட்டுக்கு வாழ வந்தவள்" என்று சொல்லும்போதே வேகமாக அவளது வாயில் கை வைத்த காந்திமதி, "என்ன கமலி, இப்படிச் சொல்லிட்ட" என்றார்.
"இல்லத்த, உண்மையை தான் சொன்னேன்.”
“எது மா உண்மை? நீயும் இந்த வீட்டுப் பொண்ணு தான்டா. எங்களை விட கண்மணி வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் உனக்குதான் டா இருக்கு." என்று கண்கள் கலங்கச் சொன்னார். ரகுபதியும் அதை "ஆமாம்" என்பது போல் தலை அசைத்தார்.