எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மேகம் போல் என் வானில் வந்தவளே - Teaser threat

Nandhaki

Moderator
வணக்கம் ஸ்வீடிஷ்...

அடுத்த கதையின் டீசர்

இது நினைவுகளை நே(யா)சிக்கின்றேன். rewrite செய்த பிறகு ரெகுலர் அப்டேட் வரும். இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்பது எண்ணம், குறுக்க எந்த லாரியும் வந்திர கூடாது என்று முருகனை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.

அப்படியே இன்று மகரனும் மங்கையும் டீசரும் வரும்... ப்ரசா உதைக்க போறா எத்தனை கதை தொடங்குவீங்க என்று பட் உதை வேண்டினாலும் போட்டு வைப்போம் போட்டு வைப்போம். இது கொஞ்சம் ஆடிப் பாடிதான் வரும். நிறையே ரிசேர்ச் செய்து எழுத வேண்டியது சோ

ஹீரோ: அகம்பன் மன்யு (அசைக்கபட முடியாத மனம் உடையவன்)
ஹீரோயின்: வான்மேகா (மழை தரும் மேகம்)

TEASER

“அவ என் ஆளு”

“ஏஏய் அது என் ஆள்”

“அடேய் அடேய் என்னடா செய்யுறீங்க” இருவரையும் பிரித்துவிட்டாள் அவள். “கங்க்கா (gang) வார் செய்யாலாம். காங் உள்ளே வார் வரகூடாது” என்ற அறிவுரையுடன்.

“மேகா இவன்தான் என் ஆளுக்கு குல்பி வாங்கிக் கொடுத்தான்”

“குல்பி தானேடா”

“பாபாவுக்கு சளி பாவா அம்மா குளிரா எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவர்கள்” விளக்கமளித்தான் அவர்களில் ஒருவன்.

அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்த வான்மேகா கேட்டாள் “சார்மாருக்கு எத்தன வயது” ஏழு வயது சிறுவர்களைப் பார்த்துக் கேட்க இருவரும் அசடுவழிய சிரித்தார்கள்.

“எங்கடா அம்முக் குட்டி” அதட்டினாள்.

ஊஞ்சலில் அமர்ந்து குல்பி குடித்துக் கொண்டிருந்த வாண்டு “இங்கே” என்று கையை உயர்த்தினாள்.

“இவர்களில் யாரை உங்களுக்கு பிடித்திருக்கு”

“எனக்கு அகன் தான் வேணும், நிறைய சொக்லேட் வாங்கித் தருவாரே” நாக்கை சப்புக் கொட்டி தலையை உருட்ட முறைத்தாள் வான்மேகா.

“அடியேய் அது என் ஆள்” என்று ஐந்து வயதுக் குழந்தையுடன் சண்டைக்குப் போனாள். இருபத்தி மூன்று வயது வான்மேகா. அவளைத் தூக்கி வைத்து குல்பி கீழே விழும் வரை சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கே வந்தான் அவன், அகன் என்று அழைக்கப்படும் அகம்பன் மன்யு.

“உனக்கு எப்ப பார் வேலையே இல்லையா சின்னக் குழந்தையிடம் சண்டை போட்டுக் கொண்டு” அவளிடம் எரிந்து விழுந்தவன் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.

அம்மு அவன் தோளுக்கு மேலால் நெளித்துக் காட்ட “அடியே சக்களத்தி...” துரத்திக் கொண்டு சென்றாள்.
 
அந்த சட்டையை ஆசையாய் கையில் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மேகா. இன்று காலைதான் அவள் அப்பா வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்திருந்தார். அழகான வேலைப்பாடு அமைந்த நீல நிற அனார்கலி. அவளுக்கு பிடித்த நிறம். அந்த நிறத்திற்கே எதை வேண்டுமானாலும் வாங்குவாள்.

“அக்கா இதை...” ஏதோ கேட்டவாறே உள்ளே வந்த தர்சினியின் கண் அந்த அனார்கலியின் மீது விழுந்தது. கேட்டுக் கேள்வி எதுவுமின்றி “இந்த அனர்களியை எனக்குத் தா” மேகா மறுத்து எதுவும் சொல்வதற்கு முன் அவள் கையிலிருந்து பறித்துக் கொண்டு சென்றாள்.

எதிரே வந்த அம்மாவிடம் “அம்மா இந்த தர்சினியை பாருங்கள், என் அனர்களியை பறித்துவிட்டாள்” முறையிட்டாள்.

தர்சினியின் கையில் இருந்த அனர்களியை பார்த்த அவளின் அம்மா வேதநாயகி “உன்னை விட அவளுக்குத் தான் அழகாய் இருக்கும் விடு” என்றவரிடம் “அவளுக்குத்தான் ஏற்கனவே இரண்டு எடுத்து இருக்றீங்க இப்ப நான் எதை போடுவது” மல்லு கட்டினாள் வான்மேகா.

“பெண்ணாய் லட்சணமாய் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து பழகு” அவளை அதட்டியவர் “ராஜாத்தி நீ போய் போடுடா” இளைய மகளை கொஞ்சினார்.
 
மழையில் நனைந்த புறாவை தொப்பலாய் நனைந்து போய் வந்தவள் கோலிங் பெல்லை அழுத்த அவனே கதவைத் திறந்தான்.

“இவ்வளவு நேரம் எங்கே சுற்றி விட்டு வருகின்றாய்?” எரிச்சலுடன் கேட்டான் அகம்பன் மன்யு. அவளோ அவனையே வைத்த விழி அசையாது பார்த்திருந்தாள். ‘ஏன் வரவில்லை இவனுக்காக தானே காத்திருந்தேன்’ மனதினுள் சிந்தனை ஓட அதை இடைவெட்டியது தர்சினியின் குழைந்த குரல் “அயு உங்கள் போன் அங்கே வோட்டர் பார்க்கில் ஒரே அடித்துக் கொண்டு இடைஞ்சலா இருக்கு என்று தந்தீர்கள்” வேண்டுமென்றே இல்லாத தகவல்களைக் கொடுத்தாள்.
 
நைஸ் டீ... 🤗🤗🤗

கெத்து ஹீரோ போல....🤩🤩🤩

யாரு மகரனும் மங்கையும் யாரு... என்ன ஸ்டோரி... 🤔
 
தர்ஷினி வேதநாயகி... 😡

தங்கச்சி தான் வில்லியா....
சுடிதாரை பறிச்ச மாதிரி அகனையும் பறிக்க பார்க்குறாளா.... 😤😤😤😤😤
 
நைஸ் டீ... 🤗🤗🤗

கெத்து ஹீரோ போல....🤩🤩🤩

யாரு மகரனும் மங்கையும் யாரு... என்ன ஸ்டோரி... 🤔
thank you daa

எங்க ஆரம்பிக்கும் போது கெத்தா தான் சுத்துறாங்க பிறகு காலிலேயே விழுந்து விடுவார்கள்

புது ஸ்டோரி நேம் நைட் டீசர் வரும்டா அது பாண்டசி ஸ்டோரி யாளி பற்றி
 
தர்ஷினி வேதநாயகி... 😡

தங்கச்சி தான் வில்லியா....
சுடிதாரை பறிச்ச மாதிரி அகனையும் பறிக்க பார்க்குறாளா.... 😤😤😤😤😤
அப்ப பாருங்களேன். வைச்சு செய்வோம்
 
thank you daa

எங்க ஆரம்பிக்கும் போது கெத்தா தான் சுத்துறாங்க பிறகு காலிலேயே விழுந்து விடுவார்கள்

புது ஸ்டோரி நேம் நைட் டீசர் வரும்டா அது பாண்டசி ஸ்டோரி யாளி பற்றி
வாவ். சூப்பர். பாண்டஸி திரில்லர் ஹாரர் ஜெனர் எல்லாம் ரொம்ப பிடிக்கும். 😍
 
thank you daa

எங்க ஆரம்பிக்கும் போது கெத்தா தான் சுத்துறாங்க பிறகு காலிலேயே விழுந்து விடுவார்கள்

புது ஸ்டோரி நேம் நைட் டீசர் வரும்டா அது பாண்டசி ஸ்டோரி யாளி பற்றி
அது என்னமோ உண்மை தான். கௌதம் உங்ககிட்ட படுற பாடை பார்த்தும் ஹீரோ கெத்துன்னு சொன்னது தப்பு தான். 🤭🤭🤭

புது பேஷன்ட்டை அட்மிட் பண்ணிட்டு பழைய பேஷன்ட்டை டிஸ்சார்ஜ் பண்ணி விடுங்க... 🤣🤣🤣🤣🤣 பையன் தான் மன்னிப்பு கேட்டு கதறுறான்ல....🤪🤪🤪🤪
 
அது என்னமோ உண்மை தான். கௌதம் உங்ககிட்ட படுற பாடை பார்த்தும் ஹீரோ கெத்துன்னு சொன்னது தப்பு தான். 🤭🤭🤭

புது பேஷன்ட்டை அட்மிட் பண்ணிட்டு பழைய பேஷன்ட்டை டிஸ்சார்ஜ் பண்ணி விடுங்க... 🤣🤣🤣🤣🤣 பையன் தான் மன்னிப்பு கேட்டு கதறுறான்ல....🤪🤪🤪🤪
அவனை இன்னொரு பத்து எபில டிஸ்சார்ஜ் பண்ணிருவேன். இவனை அட்மிட் பண்ணிருவோம் :D:D:D
 
வாவ். சூப்பர். பாண்டஸி திரில்லர் ஹாரர் ஜெனர் எல்லாம் ரொம்ப பிடிக்கும். 😍
yeeeee என் புது கதைக்கு ஒரு ரீடர் கிடைச்சாச்சு yaaahooooo.......🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Top