எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

15 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 15

மனோ கதறி அழவில்லை, குனிந்து அமர்ந்திருந்தாள், அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள். கத்தி அழவேண்டும் போல் இருந்தும், அழ தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவள் அவனை தேடியது அவனுக்காக தானே, அவன் வேண்டும், அவனுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் தானே? அதை கடைசி வரை புரிந்து கொள்ளாதவனுக்காக எதற்காக அழவேண்டும்? அதும் வீணாக தான் போகும், இனி எதையும் அவனுக்காக வீணாக்க வேண்டாம் என்ற முடிவில் அவள் அழவில்லை.

"அடியே மனோ!" என அதிர்ந்து நொந்து, தலையை குலுக்கி நிதானித்து அவனும் அவள் முன் குனிந்து ஒற்றை காலில் குத்திட்டு அமர்ந்தான். இதுற்கு முன்னும் சண்டை இட்டிருக்கின்றனர், இந்த முறை பிரிவு அவளை வெகுவாக கலங்கடித்து விட்டது என நிதானித்தான்.

"மனோ!" என அவள் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்த, சோர்ந்த முகம் சிவந்து கன்றிபோய் அவளை பார்க்கவே பயமாக இருந்தது அவனுக்கு.

"என்ன பண்ணுது? முகம் ஏன் இவ்ளோ ரெட்டிஷா இருக்கு? எந்திரி மனோ! அழ வந்தா அழுதுடு அடக்காத. எந்திரிடி" என எழுப்பி நிறுத்த,

"விடுங்க கைய" என அவனை எரிச்சலோடு உதறிவிட்டு தானே நகர்ந்து அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.

"என்னன்னு சொல்லு மனோ! நா செய்றது எல்லாமே உனக்கு தப்பாவே தெரியதுனா, ஒன்னு நா தப்பா தான் செய்யணும் இல்ல நீ என்னைய தப்பா புரிஞ்சுருந்துருக்கணும். எதுவானாலும் சரி பண்ணலாம்டி. சொல்லு மனோ!" என்றான் அவள் பின்னயே சென்று பொறுமையாக.

"உங்கள கிளம்புங்கன்னு சொல்லிட்டேன் போலாம் நீங்க. நா சொல்றதெல்லாம் சொல்லியாச்சு. நீங்க அனுப்பின ரூபாய உங்க பிள்ளைங்க செலவுக்கு தான் எடுப்பேன். இனியும் அவங்க உங்க பொறுப்பு தான். என்னைய நா பார்த்துக்குறேன். உங்கள நீங்க பார்த்துக்கோங்க. பட் பிள்ளைங்க பொறுப்பு உங்களோடது தான், அவங்களுக்கு எதுனாலும் நீங்க தான் பாக்கணும், அத மட்டும் விட்டுத்தர மாட்டேன். போலாம் நீங்க" இப்போது நிறுத்தி நிதானமாக அவன் முகத்தை நேரே பார்த்து கூறிவிட்டாள்.

"போ போன்னா? என்ன ரிவென்ச்சா?" என்றான் கடுப்புடன்.

"கண்டிப்பா ரிவன்ச்சு தான். ஏன் எடுக்க கூடாது? இங்க இருங்க இருங்கன்னு எத்தனை டைம் அழுதேன், ஏமாத்திட்டு போக தெரிஞ்சதுல? இப்ப போங்கனே சொல்றேன், போங்க" என அவளும் எகிறிகொண்டு வர,

"மனோ! வேலைக்கு தான் போனேன். ஏதோ தப்பு பண்ண போனவன பேசுற மாதிரி இருக்கு உன் பேச்சு" என்றான் அவனும் திமிறி.

"அதையும் பண்ணலன்னு அங்க யார் வந்து பார்த்தா?"

"என் அக்கா வருஷா வருஷம் வந்துட்டு தான் இருக்கா, வீடு கூட மாறாம அதே இடத்துல தான் இருக்கேன். அங்க வேணா வந்து என்னைய பத்தி கேட்டு பாரு. இல்ல ப்ளட் டெஸ்ட் எடுப்போம் வா. நா டீட்டோட்டலர்டி. பொண்ணுங்க விஷயத்தையும் சேர்த்து தான் சொல்றேன். உனக்கு முன்னையும் சரி உனக்கு அப்றமும் சரி ஒரு பொண்ணையும் ஃப்ரெண்டிலியா கூட டச் பண்ணல. பண்ணவும் மாட்டேன். சந்தேகபடுற நீ? டென்ஷன்ல பேசுறன்னு தான் விளக்கம் குடுக்குறேன். அல்ரெடி சொன்னது தான் எங்க சுத்துனாலும் உன்ட்ட தான் வந்து நிப்பேன்" என்பதையும் திமிராக தான் பேசினான். அவனை பொறுத்தவரை அவனிடம் தவறில்லை அதனால் பதில் தைரியமாக திமிராக தான் வந்தது.

"உங்கள இங்க யாரும் தேடுற மாதிரி இல்ல நீங்க வரவும் வேணாம்" அவளும் இறங்கிபோக கூடாது என்பதில் அவ்வளவு உறுதியாக தான் நின்றாள்.

"எனக்கு வேணும்"

"வேணுமோ? சரி உங்க லைஃப்ல உங்களுக்கு யாரு ரொம்ப முக்கியம்னு சொல்லுங்க. அதாவது ஹை ப்ராயிரிட்டி?"

"எல்லாரும் தான். நீ, பசங்க, அம்மா, அக்கா எல்லாரும் எனக்கு முக்கியம் தான் மனோ. பிரிச்சு பார்க்காத நீயும்"

"ம்ச் பிரிச்சு பாக்றளவுக்குலாம் யோசிக்க வேணாம். உங்களுக்கு உங்கள லைஃப்ல உங்கள தவிர யாரும் முக்கியம் கிடையாது. யாருமே!" என்றாள் தீர்க்கமாக.

புருவம் சுருக்கி யோசித்தவன், "தனியா இருக்க பிடிக்கும்னு சொன்னத வச்சு சொல்றியா? அப்ப எனக்கு உங்க யார் மேலயும் அக்கறை இல்லன்னுறியா?"

"இருக்கா உங்களுக்கு? உண்மைலையே தெரியலையா இல்ல கண்டுபிடிச்சுட்டாளேன்னு நடிக்கிறீங்களான்னு தெரியல. வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. இங்க இருக்குற உங்க அம்மா, அக்கா, அப்பா, மாமா, நானு, பசங்க இப்படி யாரையாவது என்னைக்காது மிஸ் பண்ணிருக்கீங்களா? பேசுவோமான்னு யோசிச்சு நீங்களா சும்மா! காரணம் எதுவும் இல்லாமலே, ஒரு பத்து நிமிஷம் பேசணும் போல இருந்துச்சு அதான் கால் பண்ணேன்னு பேசிருக்கீங்களா? காசு அனுப்பிட்டா உங்க கடமை முடிஞ்சது உங்கள யாரும் எதுவும் கேட்டு புண்ணாக்க மாட்டாங்க, தொந்தரவு பண்ண மாட்டாங்க, பிக்கல் பிடுங்கல் இல்லாம சுதந்திரமா இருக்கலாம். எந்த பொறுப்பையும் ஏத்துக்க வேண்டியது இருக்காது, பொண்டாட்டின்னு ஒருத்திய கட்டிட்டு வந்துட்டா, நம்ம இடத்த ஃபில் பண்ணன்னு அந்த பொம்மைய அங்க உட்கார வச்சுருலாம், நல்லது கெட்டதுக்கு கூட, என் சார்பா என் பொண்டாட்டி முன்ன நிப்பான்னு ஜம்பமா சொல்லிக்கலாம். சேக்குற சொத்துல அனாமத்தா போனது போக மிச்சத்துல வாரிசு பேர்ல எழுதி வைக்கவும் ஆம்பளன்னு காட்டவும் ரெண்டு பிள்ளைங்கள பெத்துட்டா மொத்த கடமையும் முடிஞ்சது. மொத்தமா சுயநலமான உங்க சொந்த சுக வாழ்க்கைக்கு பலிகடாவா ஒரு பொண்ணா என்னைய யூஸ் பண்ணிருக்கீங்க. நா என்ன பேசுனாலும் உங்களுக்கு புரிய போறதில்ல, மண்டைல ஏறபோறதில்ல. ஏன்னா நீங்க தெரியாம எதையும் செய்யல. நல்லா தெரிஞ்சு வேணும்னே தான் உங்களுக்கே உங்களுக்காக மட்டுமா ஒரு வாழ்க்கை வாழுறீங்க. நல்லா வாழுங்க போங்க. அக்கறை சக்கரைன்னு என் வாய கிளறாதீங்க" என அறை வாசலை நோக்கி கை நீட்டி காண்பித்தாள். இவ்வளவு நீளமாக பேசும்போதும் அவள் அழவில்லை, மொத்தமாக அடக்கி வைத்ததெல்லாவற்றையும் கொட்டிக் கொண்டிருந்தாள். அழுகை அவளை பேசவிடாமல் செய்யுமோ அவன் முன் பலவீனமாக காட்டிவிடும், இரண்டும் நடக்க கூடாதென்பதாலேயே, கண்ணை தாண்டி கண்ணீர் இறங்க விடவில்லை அவள். ஆவேசம் மட்டுமே மொத்த பேச்சிலும்.

கையை கட்டியபடி நின்றேவிட்டான் மார்க், மொத்தமாக அவள் பேசி முடிக்கட்டுமே, இல்லை மனதில் உள்ளதை வெளியேற்றி முடிக்கட்டுமே! என்று. அவனை சுயநலவாதி என்றுவிட்டது நிஜமாலுமே நெஞ்சை சுட்டது. அவனுக்கு பிடித்தமாதிரியான வாழ்க்கையை திருமணத்திற்கு பிறகு வாழ்ந்தால் அது சுயநலத்தில் சேரும் என மனதில் ஏற்ற முயன்றான்.

"என்னைய இருங்க இருங்கன்னு சொன்ன வாய், இன்னைக்கு நூறு மட்டம் போ போ போன்னு சொல்லிடுச்சுல்ல மனோ? நாந்தான் சுயநலமா இருந்து சொல்ல வச்சுட்டேன் இல்லையா?" என அதட்டலாகவே கேட்டான். வாயை சுழித்தவள் அசால்ட்டாக தான் பார்த்து வைத்தாள்.

"எல்லாமே சொல்லி முடிச்சுட்டியா? இன்னும் என்னபத்தி சொல்றதுக்கு எதுவும் பேலன்ஸ் இருக்கா?"

"ஏதோ நா நீங்க செய்யாதத சொல்லிட்ட மாதிரி இருக்கு உங்க கொஸ்டின். நாந்தான் அடுத்த ரத்தம், என்னையதான் நீங்க தேடல ஓகே. உங்க ரத்தம் தானே உங்க பிள்ளைங்க ரெண்டும், அவங்கட்ட பேசாம கூட மூணு வருஷம் இருக்க முடிஞ்சதே உங்களால! அப்ப முடிவு பண்ணேன், நாலாம் உங்களுக்கு ஒரு ஆளா நிச்சயம் தெரியமாட்டேன். காத்துட்ருக்கேன்னு என்னைய நானே ஏமாத்திக்றது கூட முட்டாள் தனம்னு எப்பவோ புரிஞ்சு தெளிஞ்சுட்டேன். திரும்பவும் சொல்றேன் உங்களுக்கு யாருமே தேவையில்ல பேருக்கு ஊருக்கு காண்பிக்க பொண்டாட்டி பிள்ளைங்க வேணும், மத்தபடி அவங்க பொறுப்பு வேணாம்னு சொல்ற ஆளு தான் நீங்க"

"நா உங்கள நினைக்கவே மாட்டேன்னு சொல்றியா மனோ?"

"ஓ! ஓரத்துல நினச்சும் பாப்பேன்னு இப்ப அடுத்த சத்தியம் பண்ண போறீங்களா?"

"தப்பு தான், வந்துடுவேன்னு உனக்கு பொய் ப்ராமிஸ் பண்ணதால என்னோட இனி எந்த ப்ராமிஸ்கும் உன்ட்ட வேல்யூ இருக்க போறதில்ல. ஐ அக்ரி. ஆனா அதுக்காக நா உங்கள நினைக்கவே இல்ல, தேடவே இல்லன்னு ஒரேடியா நீ சொல்லிட முடியாது மனோ! ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்ட, உன் அப்பாட்ட கேட்டு என் பிள்ளைங்கட்ட பேசினா அவங்க என்ன நினப்பாங்கன்ற எண்ணம் வேற. நீ அப்பான்னு என்னைய சொல்லிட்டேயிருந்தா அவங்களுக்கு பாசம் வந்துருக்கும் என்னைய தேடிருப்பாங்க, கேட்டுனாலும் அவங்களாவது என்ட்ட பேச ட்ரை பண்ணிருப்பாங்க. நீ அவங்களுக்கு என்னைய தப்பா ப்ரொஜெக்ட் பண்ணிட்ட அதனால அவங்களும் என்னைய தேடல. எப்படிதான் நா அவங்கட்ட பேச முடியும் சொல்லு. நான் உங்க மூணு பேரையும் நினைக்காம ஒருநாளும் தூங்கினதுமில்ல, எந்திச்சதுமில்ல. நீ நம்பலனாலும் அதான் நெஜம்"

"ஆஹான் பசங்க பாசமில்லாம போனதுக்கும் நாந்தான் காரணமோ? கரெக்ட் தான். நீங்க அங்கேயே இருக்குறதுக்கு நா எதுக்காக உங்க மேல பாசத்த அவங்களுக்கும் விதைக்கணும்? நா ஒருத்தி தேடி ஏமாந்தது பத்தாதுன்னு அவங்களும் உங்கள தேடி ஏமாந்துட்டே இருக்கணுமோ? திரும்ப திரும்ப நீங்க எவ்ளோ சுயநலம்னு காமிச்சுட்டே இருக்கீங்கள்ல? ச்ச ச்ச நீங்க பேசாதீங்க ப்ளீஸ், எரிச்சல் எரிச்சலா வருது"

"என்னதான்டி பண்ணணுங்கற? நா இப்படியே போயிட்டா சந்தோசமா இருப்பியா நீ?" காரசார விவாதமாக தான் சென்றுகொண்டிருந்தது.

"ஆமா ப்ளீஸ். போயிடுங்க" என கும்பிட்டே வாசலை காண்பித்தாள்.

"எனக்கு பேச தெரியலயா மனோ?"

"உங்களுக்கு சாதகமா மட்டுமே பேச தெரியும். பதில் சொல்ல முடியாத விஷயம்னா மொத்தமா எஸ்கேப் ஆக தெரியும்"

"நீ இவ்ளோ பேசுவியா மனோ?" என்றான் கேள்வியை மாற்றி.

"இன்னும் நின்னீங்கனா இதவிட அதிகமா கூட பேசுவேன்" விரல் நீட்டி எச்சரிக்கவே செய்தாள்.

பெருமூச்சு தான் வந்தது அவனுக்கு, அவள், இரு இரு என சொன்னபோது எளிதாக சமாளித்து சென்றுவிட்டவனால், போ போ என விரட்டும்போது ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அவள் கூறியது போல சேடிஸ்டாக மேல் சாவ்னிஸ்டாக தான் இத்தனை நாட்களும் இருந்துவிட்டானா? சரியாக தானே இருப்பதாகவும், சிறுபிள்ளையாக அவள் தான் நடந்து கொள்கிறாள், பேச தெரியவில்லை, அவர்களின் உறவுமுறையை பணத்தை வைத்து தவறாக எண்ணுகிறாள். விவரம் இல்லை, போக போக புரிந்து கொள்வாள் என்றெல்லாம் அவன் நினைத்திருக்க, அவள் மொத்தமாக அவன் பக்கம் தான் தவறென்கிறாள். கூடவே இல்லாததால் இருவருக்குமே ஒருவரின் மேல் ஒருவருக்கு புரிதல் இல்லாமலே சென்றுவிட்டதோ. இதை எப்படியாகினும் அவன் சரி செய்தே ஆகவேண்டுமே! மொத்தமாக வெறுத்துவிட்டாளா என தெரியவில்லை, வெறுக்குமுன் இழுத்து பிடிக்கத்தான் வேண்டும். நின்ற இடத்தில் நின்றே அனைத்தையும் அவளை பார்த்தபடி யோசனையில் இருக்க, அவளோ தலைவலி தைலத்தை தேடி எடுத்து தலையில் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

"டீ போட்டு தரவா மனோ? எது எங்க இருக்குன்னு சொல்லு நா போடுறேன்"

அவனை ஏகத்துக்கும் முறைத்து தான் பார்த்தாள். அவன் அவளை பாவமாக பார்த்தான்.

"நீங்க பாவபடுறீங்களா எனக்கு? முதல்ல லுக்க மாத்துங்க. ஏதோ நீங்க பாக்குறது, உங்களுக்கு ஏங்கிபோய் நா பாவமா நிக்றமாதிரி மீனிங் குடுக்குது. அதெல்லாம் இல்லவே இல்ல. உங்கள போக தான் சொல்ல போறேன், ஆனா அதெப்படி சும்மா போயிடுங்க சொல்லிட முடியும்? அப்ப இங்க உள்ள நா அடக்கி வச்சுருக்குறதெல்லாம் யார்ட்ட இறக்கி வைக்குறது? அப்படி உங்கள எதுவும் கேட்காம விடவா உள்ளுக்குள்ள அவ்ளோ புலுங்கிட்ருந்தேன் நான்? அதான் அதுக்காக மட்டுந்தான் மொத்தமா பேசிட்டேன். நீங்க மறுபடியும் வேணுங்குறதுக்காக பேசுனதா நினைச்சு இப்டி பாக்ற வேலைலாம் வேணாம். அமெரிக்காவுல போய் இன்னும் எவ்ளோ சொத்துவேணாலும் சேருங்க, ஜாலியா இருங்க. இப்ப நீங்க கிளம்பினாலே எனக்கு தலைவலி விட்ரும்" என்றதும், "டீ போட்டு தர மூஞ்சிய பாரு!" என வாய்க்குள்ளும் முனங்க,

"நா போய்ட்டு நாளைக்கு வரேன் மனோ. ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரல. உனக்கும் பிள்ளைங்களுக்கும் பர்சேஸ் பண்ணதையும் கொண்டு வரல. எப்படியும் கூட்டிட்டு போயிடலாம்னு திமிறுல தான் வந்துட்டேன். பட் இல்ல, இங்க நமக்குள்ள ஏதோ மிஸ்ஸாகிட்டு, அத அகைன் ஃபில் பண்ற வர நா உன்ன கம்பல் பண்றது நல்லாவும் இருக்காது"

"நீங்க கம்பல் பண்ணாலும் இங்க எதுவும் நடக்காது. நாளைக்கு வரணும்னு இல்ல. ஒரு ப்ளான் சார்ட் போட்டு தானே கிளம்பி வந்துருப்பீங்க? நீங்க அது பிரகாரம் எல்லார் வீட்டுக்கு தனியாவே உங்க தலையை காண்பிச்சுட்டு போய்ட்டே இருக்கலாம்" பட்பட்டென்று கத்தரித்தாள்.

"மனோ ப்ளீஸ்! பொறுமையா இரேன் கொஞ்சம்"

"எட்டு வருஷமா இருந்துட்டேன் மிஸ்டர்"

"ஏன்டி அராத்து பண்ற? என்னைய கொஞ்சம் யோசிச்சு பேச விடு. நீ அடுக்கின அக்யுஷேசனே அதிகம். எனக்கு முதல்ல ரீகால் பண்ணி எக்ஸ்ப்ளனேஷன் குடுக்க விடு. நீ மட்டுமே பேசிட்ருந்தா நமக்கு சொல்யூஷன் எப்படி கிடைக்கும்?"

"யாருக்கு வேணும் உங்க சொல்யூஷன்?"

"எனக்கு தான்டி. எனக்கு தான் வேணும் போதுமா? ஏற்கனவே நிறைய நிறைய பேசிட்ட. மொத்தமா இறக்கி வச்சிட்ட தான? இனி நா பாத்துக்குறேன் அத. திரும்ப நீ அதெல்லாம் நினைக்க கூட வேணாம். நா எனக்காக அதெல்லாம் சரி பண்ணிக்கிறேன் போதுமா? எனக்காக தான் அதுவும், சுயநலமா எனக்கே எனக்காக மட்டுமா, நீங்க மூணு பேரும் வேணுங்குறதுக்காக மட்டுமே தான் சொல்யூஷன்"

"ஹீரோயிஸமா? ட்ரை பண்ணுங்க உங்களுக்கு வராத ஜோனர், முடிஞ்சா ட்ரை பண்ணி பாருங்க. பட் நா ஒரு விஷயம் க்ளியர் பண்ணிடுறேன், சாஞ்சு உட்கார தூண் இல்லனா முதுகு தன்னால நிமிர்ந்துக்கும்னு ஒரு ப்ராவெர்ப் கேள்வி பட்ருக்கீங்களா? அப்டி தான் நிமிர்ந்திருக்கேன் நானும். புரியும்னு நினைக்கிறேன்" என அவள் சொல்லவும், மூச்சேயில்லை அவனுக்கு.

"எங்கடி இவ்ளோ பேச கத்துக்கிட்ட. நிஜமா முடியல. எப்படி தான் உன்ன சமாளிக்கன்னு பயமுறுத்துற நீ" என்றான் அயாசமாக.

இவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் கொடுத்தாலும் பேசி முடிக்க மாட்டார்கள் அதற்காக சிறு பிள்ளைகளை எவ்வளவு நேரம் தான் வெளியேவே பிடித்து வைக்க முடியும். மீனம்மா, மல்லி மூன்று குட்டீஸ்களோடு அந்நேரம் வர, கேட் திறக்கும் சத்தத்தில், "கிளம்புறேன் மனோ! நாளைக்கு கண்டிப்பா வருவேன். சும்மா போ போன்னு விரட்டாத" என்றுவிட்டே வெளியே வந்தான்.

ஈகோ பிடித்தவன் அவன். அவனை ஒன்று சொல்லிவிட்டால் இரண்டாக திரும்பி கெஞ்ச வைக்க கூடியவன். தொலைவில் இருந்தபோது, 'பேசாட்டி போடி, உன்ன பேச வைக்றேனா பார்' என்று தான் மூன்று வருடமும் இருந்திருந்தான். ஆனால் இந்தியா வந்திறங்கியபின் அப்படி இருக்க முடியவில்லை, சண்டை பிடிக்கனாலும் நிச்சயம் வருவாள் என நினைத்திருக்க, அவனை வரவைத்துவிட்டாள். அதன் பின்னுமே, மூன்று வருடங்கள் கழித்து பார்க்கும் எந்த ஆரவாரமும் அவளிடம் தெரிந்ததாக இல்லை. அதன் பின்னான அவளின் வரிசையான குற்றச்சாட்டுகள் எல்லாம் அவன் கனவிலும் எதிர்பார்க்காதது. ஆனால் அவனுக்கே ஆச்சரியம் அவ்வளவு கேட்ட பின்னரும் அவன் அமைதியாக அவள் முன் நின்றது தான். இந்நேரத்திற்கு அவன் ஈகோ கொதித்தெழுந்து, 'சரிதான் போடி!' என போயிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படி செல்லவில்லை, அதுவே ஏன் என்று அவனுக்கு புரியவில்லை. இதில், 'போ! போ!' என விரட்டுவது வேறு கடுப்பை கிளப்பியது. அதற்கும் அவன் ஈகோ வெளிவரவில்லை என்பது தான் உச்ச ஆச்சரியமே! இத்தோடே அவளை சமாதானம் செய்துவிடுவோம் என பார்த்தால், மேலும் மேலும் பேசுகிறாளே தவிர்த்து சமாதானம் ஆக தயாராக இருப்பவளாக தெரியவில்லை. அவனே அந்த குழப்பத்தில் இருக்க அதே யோசனையில் தான் வெளியே வந்தான்.

பொறுமை என்றால் என்ன என்பதை முதல் படிப்பாக கற்றுக்கொடுக்க போகிறாளோ அவன் மனைவி!

"என்ன ஃபாரீன் சாரு! அடி பலமோ? யோசனை எல்லாம் பலமா இருக்கு?" என மீனம்மா கத்தி கேட்டபடி வர,

அவரை கண்கள் சுருக்கி பார்த்தவன், "என் பொண்டாட்டிய ட்ரைன் பண்றதே நீங்க தான? நா கல்யாணம் பண்ண மனோக்கு இவ்ளோ பேச தெரியாது. ஆனா இன்னைக்கு நா பார்த்த மனோ மொத்தமா மீனம்மா ரூபம். எதுக்கு இப்படி மாத்தி வச்சுருக்கீங்க அவள?" என அவரிடம் எப்போதும் போலவே சாதாரணமாக பேசினான்.

"இது என்னத்தா கூத்தா இருக்கு. நா என்னத்த சொல்லிதர போறேன்? கங்காவா இருந்த பிள்ளைய சந்திரமுகியா மாத்துனதே நீங்கதான். சொல்ல போனா, நாந்தேன் உங்கட்ட கேக்கணும் ஏன் எங்க பிள்ளைய இப்படி மாத்திட்டீங்க?" என்றார் அவரும் இடக்காக.

இப்போது நன்றாகவே முறைத்து பார்த்தான். அதற்குள் அங்கு கிருஷ்ணா அவனது ரெடிமேட் க்ளே உருண்டையை எடுத்து அதில் தண்ணீரை விட்டு இடத்தையும் கையையும் போட்டிருந்த உடையையும் பிசுபிசுபாக்கி கொண்டிருக்க, அவனுக்கு தெரியாமல் கொட்டடிக்கும் பொம்மையை எடுக்க, சின்னவன் கண்ணன் சேரை இழுத்துபோட்டு அதில் ஏறி செல்ஃபில் தொத்திக்கொண்டு இறங்க தெரியாமல் மேல் செல்ஃபை பிடித்து தொங்கிக்கொண்டு, பயத்தில் "ம்மா!" என கத்த, அதில் மல்லிகா இடுப்பிலிருந்த அவள் பிள்ளை பயந்து வீறிட்டு அழ, இடமே கலவரமாகி விட்டிருந்தது.

அந்நேரம் தான் ஞானமும், ஆண்டாளும் ஆட்டோவில் வந்திறங்கனர். ஏற்கனவே தலைவலியில் படுத்திருந்த மனோவிற்கு, இது இன்னும் தலையிடியை தர, "கிருஷ்ணா, கண்ணா" என அதட்டியபடி தான் எழுந்து வெளியே வந்தாள்.

மீனம்மா உள்ளே சென்று கண்ணனை பிடிப்பதற்குள் கையை விட்டு கீழே விழுந்து மண்டையை வீங்க வைத்திருந்தான் அவன். மீனம்மா தூக்கியும், "அம்மா அம்மா!" என அழுது அவளிடம் சென்று, அவன் கீழே விழுந்ததற்கு அவளை போட்டு முகத்திலேயே அடித்தான்.

மனோவிற்கு, அது இன்னும் இன்னும் எரிச்சலை தர, அடக்கி வைத்திருந்த அழுகை கூட வந்துவிடும்போலிருந்தது. அனைத்தும் ஒருசில நொடிகளில் நடந்திருக்க, மார்கண்டேயனுக்கு தலையே சுற்றிவிட்டது.

அதிலும் கண்ணன் மனோவிடம் சென்று அவளை அடித்ததும் வலியில் அவள் முகம் சுருங்கியதும், இவனுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டிருந்தது. அவள் தலைவலி, ப்ரீயட்ஸ் வலியோடு அவனோடு சண்டை பிடித்ததால் மனசோர்வு என அனைத்தும் போட்டு தாக்கியதில் நிற்க கூட முடியாமல் திணற, அவளையே கவனித்திருந்த மார்க் சட்டென்று கண்ணனை கையில் தூக்கிக்கொண்டு அவளையும் பிடித்து நிப்பாட்ட, கையை காலை உதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தான் கண்ணன்.

"குடுங்க மாப்ள நா பாக்றேன்" என கண்ணனை ஞானம் ஓடி வந்து வாங்க வர, மனோ மார்க்கை விட்டு விலகி சோஃபாவில் சாய்ந்து நின்றாள்.

"இவனுக்கு அம்புட்டு ஆங்காரம் வருது இப்பவே. அவனா கீழ விழுந்து மண்டைய உடச்சுட்டு அவள போட்டு அந்த அடி அடிக்கான் அவளே ஏற்கனவே சோர்ந்து தான் தெரியிறா. அவன ரெண்டு அடி வை மனோ, இல்லனா சரிவர மாட்டான். எங்கயிருந்து பழகினானோ இந்த பழக்கத்த, உன்னைய அடிக்கமட்டும் தெரியுதா அவனுக்கு" என ஆண்டாள் திட்ட,
 
கண்ணன் இன்னும் மல்லுகட்டி அழ, மார்கண்டேயனாலேயே பிடிக்க முடியாதபோது ஞானம் எவ்வாறு பிடிப்பார் என யோசித்தவன், அப்படியே தூக்கிக்கொண்டு வெளியே செல்ல திரும்பினான், "மனோக்கு தலைவலி, டீ கேட்டாத்தே" என நின்று சொல்லிவிட்டு செல்ல,

"அவனுக்கு அவர சரியா தெரியாது. அதுக்கே அதிகமா அழுவான்" என்றார் ஆண்டாள்.

"அவர் பிள்ள தான, எப்படியாவது அப்பாவும் மகனும் சமாதானம் ஆகி வரட்டும், நீ போய் புடவைய மாத்து, நா டீ வைக்கிறேன்" என சென்றார் மீனம்மா. மனோ அப்படியே சோஃபாவில் தலை சாய்த்து அமர்ந்துவிட்டாள்.

"ம்மா! அப்பா தம்பிய தூக்கிட்டு போய்டுவாங்களா?" என அந்த ரெடிமேட் களிமண் கையோடு வந்து நின்றான் கிருஷ்ணன்.

அவனை கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள், "அவ்ளோ ரிஸ்க்லாம் எடுக்க மாட்டார் உங்கப்பா. தம்பி இப்ப வந்துருவான், நீ ட்ரெஸ்லாம் நாஸ்தியாக்காம கைய கழுவு போ" என விரட்டினாள்.

"நீ போய் படுலே. நா அவன பாத்துகிடுதேன்" என ஞானம் சொல்லவும், "டீ வரட்டும்பா" என அமர்ந்துவிட்டாள், கண்ணனை தூக்கிச் சென்றவனும் வரவேண்டுமே. அவன்போக்கில் ஊருக்கு கூட்டிச்சென்றுவிட்டான் என்றால், அதனால் உடம்பு மொத்தமும் வலித்தாலும் அமர்ந்திருந்தாள்.

அங்கு வீட்டை விட்டு வெளியே வரும்வரை கூப்பாடு போட்டவன், அதன்பின் பம்மிவிட்டான், "அம்மா அம்மா" தவிர எதுவும் அவன் வாயில் வரவில்லை, கடத்திக்கொண்டு போகிறவனை அடித்தான் தோள்பட்டையில் கடித்தான், மார்க்கும் எதற்கும் அசந்து கொடுக்கவில்லை.

"உன் அம்மா என்னைய அடிக்காம விட்டதுக்குலாம் சேர்த்து அடிக்கிற நீ?" என தூக்கி போட்டு பிடித்தவன் வண்டியில் அமர வைத்து ஊரைச் சுற்றி வந்தான், எதையும் சாப்பிட மட்டும் வாங்கிகொடுக்கவில்லை, காலையில் மூத்தவன் கற்று தந்தது இப்போது வேலை செய்ய, இவனுக்கு ஊர் சுற்றல் மட்டுமே. கண்ணன் அழுகை நின்று வேடிக்கை பார்க்க துவங்கியதும், "நா யாருன்னு தெரியுமாடா?" என கேட்க,

"அப்பா!" என்றான் மெதுவாக,

"யார் சொல்லி தந்தா?"

"மீனம்மா"

"அப்றம் ஏன்டா நா தூக்கினதுக்கு அழுத?"

அழுததை மீண்டும் ஞாபகபடுத்திவிட, "அம்மா அம்மா!" என ஆரம்பித்துவிட்டான் மறுபடியும்.

"அழகூடாது!"

"அவகூவாது சொல்லகூவாது. நா அவுவேன்" என அவன் அழுதே சொல்ல,

"நல்லா அவுவுடா அவுவு" என சிரித்தான் மார்க். ஒருமணிநேரம் வைத்து சுற்றிவிட்டு கொண்டு வீட்டில் இறக்கிவிட,

"இதுக்குத்தான அப்பாரு கூடவே இருக்கணுங்குறது. அவளா இப்பிடி தூக்கிட்டு சுத்த முடியும்? எவ்ளோ வலுவான கொம்பா இருந்தாலும் ஓரளவுக்கு தான் பாரம் தாங்கும், அதிகம் ஏத்துனா மொத்தமா உடஞ்சு விழுந்துரும் ஃபாரீன் சாரு" என மீனம்மா சொல்ல,

"கன்போர்ம் என் பொண்டாட்டிக்கு ட்ரைனர் நீங்க தான். இத்தோட நிறுத்திக்கணும் நீங்க" என மிரட்டவே செய்தான்.

"என்னத்த?"

"உங்க பேச்சுவார்த்தைய என் பொண்டாட்டிகிட்ட"

"இல்லன்னா என்ன செய்வீக?"

"அவ வரமாட்டா, உங்கள அமெரிக்காவுக்கு பார்சல் பண்ணிடுவேன்"

"ஹான்! ஆசைதான், நா என்னைய தங்கமா தாங்குற என் புருஷன விட்டுட்டு எங்கையும் வரமாட்டேனாக்கும்" என நொடித்தார் மீனம்மா.

"சேலஞ்ச் மீனம்மா! என் பொண்டாட்டியையும் இப்படி சொல்ல வைக்கிறேன்" என சொல்ல,

"பாக்கலாம் ஃபாரீன் சாரு" என முந்தியை சொருகினார் மீனம்மா.

டீயை குடித்துவிட்டும் எழுந்து செல்லாமல் அதே இடத்தில் தான் இருந்தாள் மனோ.

வாசலில் நின்றே மகனை இறக்கிவிட்டவன் அங்கிருந்தே சோஃபாவில் சாய்ந்திருந்தவளை ஒரு நொடி நின்று பார்த்து விட்டு கிளம்பிவிட்டான்.
 
Evlo perimaiyana vishayam la marku un paiyan kita na yaaru nu theriyuma nu ketkura. Intha perumaiya arumai Malika tha anupanum. Innum nalu adiya serthu poduda kanna. Mano ivan munna azhaga koodathu pesi mudikanum nu vairakiyathula ivlo neram irunthuta. Ava avalukulla iruka erimalai avala summa viduma. Ivlo stress. Pavam pulla
 
Top