பாகம் – 21
சக்தி வீட்டை சென்று அடைந்தவுடன் எங்கோ சென்று விட்டான். சுஜிதா அவள் அறையில் சக்திக்காக வெகு நேரமாக காத்திருந்து கடைசியில் உறங்கியே போனாள்.
நள்ளிரவில் வந்த சக்தி தல்லாடியபடி, “ஏய் குட்டி கத்திரிக்கா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று குளறியபடி அவளை எழுப்பினான்.
சுஜிதா அரை தூக்கத்தில் எழுந்து கண்களை சிமிட்டி கொண்டே அவனை உற்று பார்த்தால்.
சக்தி, “குட்டி கத்திரிக்கா இன்னைக்கு நீ நிஜமாவே ரொம்ப அழகா இருந்த தெரியுமா” என்றான்.
சுஜிதா சந்தோஷமாக சிரித்துக் கொண்டே, “அப்படியா? உங்களுக்கு என்னை பிடிச்சிருந்துச்சா?” என்றாள்.
சக்தி, “ஆமா நீ அழகா பொம்மை மாதிரி இருந்த” என்று அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தான்.
சுஜிதா, “நான் கூட சந்தோஷமா தான் இருக்கேன். ஏன் தெரியுமா நான் சுத்தமா எதிர் பாக்கவே இல்ல நீங்க எனக்கு முட்டி போட்டு மோதிரம் போட்டு விடுவீங்க என்று” என்றாள்.
சக்தி, “ம்ம்ம் நான் உனக்கு மோதிரம் போட்டேனே அப்போ அந்த நிலா முகத்தை பார்க்கணுமே அப்பப்பப்பா” என்று சிரித்தான்.
பிறகு, “அவள் கவலை படுறத பார்க்கும் போது அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு எனக்கு இப்போ நினைச்சா கூட என் கண் முன்னாடி வந்து போகுது” என்றான். சுஜிதா என்ன சொல்கிறான் இவன் என்று புரியாமல் பார்த்தாள்.
சக்தி, “நான் உன்கிட்ட பாசமா நடந்துகிட்ட மாதிரி நடிச்சேன் இல்ல அத பார்த்து நிலா உண்மைன்னு நம்பி என்னை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு அவ கவலைப்பட்டால் தெரியுமா?” இது எல்லாம் ஜெயா அக்கா பிளான் தான் என்றான்.
சுஜிதா, “அப்போ இன்னைக்கு நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதம் எல்லாத்துக்கும் நிலா தான் காரணமா?” என்றாள்.
சக்தி, “ஆமா நான் இன்னைக்கு அந்த ஃபங்ஷனுக்கு வந்ததே நிலவுக்காக தானே. நம்ம ஒண்ணா இருந்ததை பார்த்து நிலா நான் நினைச்ச மாதிரியே கஷ்டப்பட்டா” என்றான்.
சுஜிதா வேறு எதுவும் பேசாமல் அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.
சக்தி, “எங்க போற? அடியே குட்டி கத்திரிக்கா” என்று குளறியபடி கூப்பிட்டுக் கொண்டே போதையில் மயங்கி விட்டான்.
****************************
நிலா, அவன் கைகளை தள்ளிவிட்டு கோபமாக, “நான் எந்த அளவுக்கு துருவ் ஐ காதலிக்கிறேன்? ஏன் காதலித்தேன் உனக்கு தெரியுமா?
பல வருடங்களுக்கு முன்பு.
ஒரு நாள் ஸ்கூலில் ரேன்காட் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது எல்லார் வீட்டில் இருந்தும் ரேன்காட் வாங்க வந்தார்கள். நிலா ஓரமாக நின்று அழுது கொண்டு இருந்தாள்.
அப்போ ஒரு ஆண்ட்டி நிலா அருகில் வந்து, “ஏன் அழற?” என்று கேட்டார். நிலா, “என் வீட்டில் இருந்து யாருமே
வரலை” என்றாள்.
அந்த ஆண்ட்டி, “சரி அழாத மா யாராச்சும் வருவாங்க” என்று கூறி அவங்க பையனுடன் அங்கிருந்து சென்று விட்டார்.
அந்த சின்ன பையன் நிலவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தவன் மனசு கேட்காமல், “அம்மா இருங்க இதோ வரேன்” என்று நிலா இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.
ஓடி வந்த பையன், “ஹே அழாத இன்னிக்கி உன் வீட்டில் இருந்து யாரும் வரலைனா அதுக்கு என்ன நாளைக்கி கண்டிப்பா வருவாங்க“ என்றான்.
நிலா எதுவும் கூறாமல் திரும்பி நின்று கொண்டாள். அந்தப் பையன், “என்கிட்டே பேச மாட்டிய?” என்றான்.
நிலா, “நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லையே” என்றால் தன் கைகளை கட்டிக் கொண்டு.
அந்த பையன், “அப்படின்னா நம்ப இப்போ இருந்து பிரண்ட் ஆகிடலாம்” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
நிலா சோகமாக, “எனக்கு பிரெண்டுனு யாருமே கிடையாது. அப்படியே யாராச்சும் என் கூட நெருங்கி இருந்தா சீக்கிரமே அவங்க என்னை விட்டுட்டு போயிடுவாங்க” என்றாள்.
அந்த பையன், “நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன் என்ன ஆனாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன். உனக்கு நல்ல பிரண்டா உன் கூடவே நான் இருப்பேன்” என்றான்.
நிலா, “நிஜமாவா?“ என்று அவனை பார்த்து லேசாக சிறித்தால். அந்தப் பையன் ஆமா என்று தலை அசைத்து தன் ஒற்றை கையை நீட்டி, “என் பெயர் துருவ்” என்றான்.
இவளும் தன் கைகளை அவன் கைகளோடு கோர்த்து கொண்டு “என் பெயர் நிலா” என்றாள்.
துருவ் ஒரு சாக்லேட்டை நிலாவிடம் கொடுத்துவிட்டு, “சரி சரி நான் கிளம்புறேன் எனக்காக அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று ஓடி விட்டான்.
மறுநாள் நிலா ஸ்கூலில் தனியாக அமர்ந்து மத்திய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
துருவ் மூச்சு வாங்க ஓடி வந்தான், “ஹேய் நான் உன்னை தான் தேடிக்கிட்டு இருந்தேன் இவ்வளோ நேரம்”.
“நீ இங்க உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருக்கியா?” என்று அவள் பக்கத்திலே அமர்ந்து கொண்டு “எனக்கும் கொஞ்சம் கொடு” என்றான்.
நிலா அவள் உணவில் இருந்து பாதியை இவனுக்கு வைத்து கொடுத்ததால். துருவ் அவனுடைய உணவில் இருந்து பாதியை நிலாவுக்கு கொடுத்தான்.
இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது நிலா ஏக்கமாக பக்கத்தில் பார்த்தாள். துருவ்வும் திரும்பி பார்க்க அங்கு ஒரு அம்மா தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தார்கள்.
அதை பார்த்த துருவ், நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி விட என்னி அவள் வாய் அருகே சாப்பாட்டை நீட்டினான். நிலா அவனையே பார்த்தாள்.
துருவ், “நா இருக்கும் போது நீ எதுக்கும் கவலை பட கூடாது. சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கவா” என்றான்.
நிலா, “என்ன?” என்றாள். துருவ், “நேத்து உன்கிட்ட யாருமே பிரண்டா இருக்க மாட்டாங்க ரொம்ப நாளைக்குன்னு சொன்னியே ஏன் அப்படி சொன்ன” என்றான்.
நிலா, “அதுவா என்னோட அம்மா தான் எனக்கு பிரெண்ட் மாதிரி எனக்கு அவங்கள தான் பிடிக்கும். ஆனா, என் அம்மா சொன்னாங்க இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடு வாங்கலாம்” என்றாள்.
துருவ், “ஏன் உங்க அம்மா வெளியூருக்கு போறாங்களா?” என்றான்.
நிலா, “தெரியலையே எங்க அம்மா என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடுவேன்னு சொன்னாங்க. ஆனா, எங்க போறாங்கனு சொல்லலியே” என்றாள்.
துருவ், “சரி பரவால்ல நீ கவலைப்படாத உங்க அம்மா திரும்பி வர வரைக்கும் நான் உன் கூடவே இருக்கேன் எப்பயுமே” என்றான் சிரித்துக் கொண்டு.
பிறகு, இருவரும் நல்ல நண்பர்களாக தினமும் சந்தித்து விளையாட ஆரம்பித்தார்கள். லீவ் நாட்களில் கூட துருவ், நிலவை பார்க்க வந்து விடுவான்.
துருவ், “நிலா நீ தினமும் தனியாவே ஸ்கூலுக்கு வரியே உன் அப்பா கூட்டிட்டு வர மாட்டாங்களா?” என்று கேட்டான்.
நிலா, “என்னோட அப்பா பிசினஸ் விஷயமா ரொம்ப பிசியா இருப்பாங்க என்கிட்ட சரியா பேச கூட மாட்டாங்க. ஆனா எனக்கு என்னோட அப்பானா ரொம்ப பிடிக்கும்” என்றாள்.
துருவ், “என்னோட அப்பா கூட அப்படித்தான் பிசினஸ் விஷயமா எங்கயாச்சும் போய்ட்டு வந்துட்டே இருப்பாங்க. ஆனா என்கிட்ட பேசாம ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்க” என்றான்.
ஒரு நாள் நிலா வீட்டிற்கு துருவை அழைத்து கொண்டு சென்றால். நிலா, “தன் அம்மா விடம் சென்று அம்மா இவன் தான் என்னோட புது பிரண்ட் நான் சொன்னேன்ல உன்கிட்ட அது இவன் தான்” என்றாள்.
துருவ், “அம்மா... நிலா சொன்னா நீங்க இன்னும் கொஞ்சம் நாள்ல அவளை தனியா விட்டுட்டு எங்கயோ தூரமா போறீங்களமே”.
“ஆனா நீங்க ஒன்னும் கவலை படாதீங்க நான் நிலாவ பத்திரமா பாத்துக்கிறேன். நீங்க திரும்பி வர வரைக்கும்“ என்றான்.
நிலாவின் அம்மா கண்கள் கலங்க இருவரைகயும் கட்டி அணைத்து கொண்டார்.
இருவருக்கும் சில நாட்கள் அப்படியே சந்தோஷமாக சென்றது. ஒரு நாள் நிலா எப்பொழுதும் போல் மரத்தடி நிழலில் துருவ் காக காத்துக் கொண்டு இருந்தால்.
ஆனால், அவன் வரவே இல்லை. மறுநாள் அதே போல் காத்துக் கொண்டு இருக்கும் போது ஒருவர் வந்து நிலா சீக்கிரம் வா வீட்டுக்கு போகனும் என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.
நிலா வீட்டிற்கு சென்று பார்க்கும் போது நிலா அம்மா இறந்துப்போய் இருந்தார். ஆனால், நிலாவுக்கு அதற்கு அர்த்தம் புரிய வில்லை.
சிறிது நேரம் கழித்து சடங்கு முடிந்து அவள் அம்மாவை தூக்கிக் கொண்டு போகும் போது நிலா ஒருவரிடம், “அம்மா எப்போ திரும்பி வருவாங்க?” என்றாள்.
அந்த நபர், “அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்க இனி வர மாட்டாங்க” என்று சொன்னார்.
நிலா கோச்சிக் கொண்டு, “பொய் சொல்லாதிங்க என்னோட அம்மா முன்னாடியே என்கிட்ட சொன்னாங்க தூரமா போறன்னு. நா தூங்கும் போது வருவேன்னு சொன்னாங்க” என்றாள்.
அதை கேட்டு சிலர் கண்கள் கலங்கி விட்டார்கள். நிலா அழுது கொண்டே, “என்னையும் அம்மா கிட்டயே கூட்டிட்டு பொய் விடுங்க நானும் அம்மா கிட்டயே போறேன்” என்று ரொம்ப அழுதாள்.
துருவ், நிலாவை தேடி கொண்டு மரத்தடியில் சென்று பார்த்தான். அவளை காணும் என்று அவள் வீட்டிற்கு சென்றான். அங்கு ரொம்ப கூட்டமாக இருந்தது. துருவ், பயந்து கொண்டே உள்ளே சென்றான்.
நிலா அவள் அம்மா புகை படத்தை பார்த்து அழுது கொண்டு இருந்தாள். ஒருவர் அவளை சாப்பிட சொல்லி தட்டில் சாப்பாட்டை போட்டு கொடுத்து விட்டு சென்றார்.
நிலா புகைப்படத்தை பார்த்து, “அம்மா நீ வந்து ஊட்டி விட்டால் மட்டும் தான் நான் சாப்பிடுவேன்” என்று அழுதுக் கொண்டு இருந்தாள்.
துருவ் அதை பார்த்துவிட்டு நிலா அருகில் சென்று, “என்ன ஆச்சி?” என்றான்.
நிலா, “துருவ் அம்மா என்கிட்ட சொன்ன மாதிரியே எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் முன்னாடி தான் அம்மாவை கூட்டிட்டு பொய் எங்கேயோ விட்டுட்டு வந்துட்டாங்க அம்மா வந்தா தான் நான் சாப்பிடுவேன்” என்றாள்.
துருவ் மனசு கேட்காமல், “நிலா நா இப்போ தான் அம்மாவை பார்த்தேன் கொஞ்சம் நாள் அப்புறம் வருவாங்களம் உன்கிட்ட சொல்ல சொன்னாங்க. உன்ன சாப்பிடகூட சொன்னாங்க” என்று அவளுக்கு அவனே ஊட்டியும் விட்டான்.
அவங்க வர வரைக்கும் நா உன் கூடவே இருப்பேன் என்று கூறினான். பிறகு இருவரும் விளையாட சென்று விட்டார்கள்.