எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மை லிட்டில் மியாவ்

rebe novel

Moderator

பாகம் - 1​

அந்த அழகிய மாலைப் பொழுதில் சிலு சிலு என காற்று வீச, கூந்தல் ஒரு புறம் அசைந்து ஆட மெலோடி பாட்டு காதில் ஒலிக்க சோகமான முகத்துடன் எழில் ஓவியமாய் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து இருந்தால் அவள், நம் கதையின் நாயகி, "நிலா".​

அங்கு ஓடி ஆடும் குழந்தைகளை வெறித்தபடி பார்த்துக் கொண்டு சோகமான முகத்துடன் எதையோ சிந்தித்த படி அமர்ந்து இருந்தால் நிலா.​

திடீரென்று யாரோ தன் தோள்பட்டையில் கை வைக்க. திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள், "ஐயோ! நீயா நான் யாரோ என்று நினைத்து பயந்துட்டேன்”.​

“சரி ஏன் இவ்வளவு லேட்டு சீக்கிரமாக வரமாட்டியா? உனக்காக நான் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறது" என்றாள்.​

சுஜிதா, "சாரி டி நான் சீக்கிரம் வரலாம் என்று தான் பார்த்தேன். ஆனால் மேனேஜர் பர்மிஷன் தர வில்லை. அதான் அறை நாள் ஒர்க் முடிச்சிட்டு கிளம்பி வர லேட் ஆகிடுச்சு” என்றாள்.​

நிலா, “சரி வா உட்காரு" என்று அங்கு இருக்கும் நாற்காலியின் மேல் இருவரும் அமர்ந்தார்கள். நிலா அவளின் சோக கீதத்தை வழக்கம் போல் வாசிக்க ஆரம்பித்தாள்.​

நிலாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவள் தான் “சுஜிதா". சிறு வயதில் இருந்து இருவரும் ஒன்றாக இல்லாவிட்டாலும் கல்லூரி பருவத்தில் இருந்து நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

தற்பொழுது வேலைக்காக அலைந்து கொண்டு இருந்தார்கள்.​

ஆனால், வேலை இருவருக்கும் வெவ்வேறு கம்பெனியில் அமைந்து விட்டது. நிலா தற்பொழுது சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.​

சுஜிதா அதற்கு எதிர்மாறாக பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள். ஆகையால், இருவரும் ஞாயிற்றுக் கிழமை தவறாமல் சந்தித்து விடுவது வழக்கம்.​

நிலா, "இந்த வாட்டியும் சித்தி மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம் டி என்ன பண்றது என்று எனக்கே தெரியலை. என் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு” என்று தலையில் கை வைத்துக் கொண்டு “இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கவே இல்லை" என்று கூறினால்.​

சுஜிதா "அச்சச்சோ என்ன டி சொல்ற மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா”.​

“சரி பரவாயில்லை விடு எப்பயும் போல் இந்த மாப்பிள்ளையும் ஓட விட்டு விடலாம்” என்று கூறி நகைத்தாள்.​

நிலா, அவளை முறைத்துக் கொண்டு "இல்ல டி எப்பயும் போல் எல்லாம் இந்த வாட்டி நம்மால் ஒண்ணுமே பண்ண முடியாது. ஏனென்றால், இந்த மாப்பிள்ளை என்னோட சித்தி வீட்டுக்கு புதுசா வேலைக்கு வந்தவன்”.​

“எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை பார்க்கவே ஒரு மார்க்கமாக இருக்கிறான். அவனைப் பார்த்தாள் வேலைக்காரனை போல் தெரியவில்லை எனக்கு என்னமோ பயமாக இருக்கு" என்று கையைப் பிசைந்தபடி கூறினாள்.​

சற்று நேரம் அமைதியாக எதையோ சிந்தித்த படி அமர்ந்து இருந்த சுஜிதா, "ஏய் நிலா கொஞ்சம் அமைதியா அங்க பாரு நம்மளை யாரோ குறுகுறு என்று பார்க்கின்ற மாதிரியே எனக்கு தோன்றுது. டக்குனு பார்க்காத பொறுமையா பாரு யாராவது நம்மள பார்க்குறாங்களா?" என்று கூறி முடிப்பதற்குள் நிலா டக்கென்று திரும்பினால்.​

அங்கு ஒருவன் காதில் வாக்மேன் உடன் முதுகை காண்பித்தபடி நின்றிருந்தான்.​

நிலா, "நீ சொன்னது சரி தான் டி யாரோ நம்ப பேசிக்கிட்டு இருப்பதை ஒட்டு கேட்குற மாதிரியே தோணுது" என்றாள்.​

சுஜிதா ,"நம்ம என்ன இராணுவ ரகசியமாடி பேசிக்கிட்டு இருக்கோம். இதை ஒட்டு கேட்டு யாரு என்ன பண்ண போறாங்க. நீ எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டே இருக்காத. எவனாவது நம்மை சைட் அடிச்சிருப்பான்”.​

“நீ இப்படி தொட்டதுக்கெல்லாம் பயப்படுவதால் தான் உன் சித்தி உன் சொத்துக்கு உன்னையே அடிமை ஆக்கி வைத்திருக்காங்க. சரி நீ எதுக்கும் பயப்படாத நாளைக்கு காலையில் நான் உன் வீட்டுக்கு வருகிறேன்”.​

“பொண்ணு பாக்குற சடங்கு நேரத்துக்கு நான் அங்க உன் கூட இருப்பேன்" என்று தைரியம் கொடுத்து விட்டு "நம்ம இப்போ இங்கு இருந்து கிளம்பலாம்" என்று இருவரும் கை கோர்த்தபடி எழுந்து அவன் இருக்கும் திசையை நோக்கி சென்றனர்.​

இவர்கள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த அவன் வேக எட்டுகளுடன் அங்கிருந்து நகர்ந்தான்.​

நிலா, "என்னடி அவனை காணும்? திடிரென்று மறைந்து விட்டான். ஒருவேளை இவன் சித்தியோட ஆளாக இருப்பானோ? எனக்கு பயமா இருக்கு" என்றாள்.​

சுஜிதா, "நீ பயப்படாம இருந்தால் தான் அதிசயம். இவன் யார் என்றே நமக்கு தெரியாது. நீ தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக்காத" என்று தைரியம் ஊட்டினாள். ஆனால், அவள் மனதிலும் பதட்டம் இருக்க தான் செய்தது அது ஏன்? எதற்கு? என்று அவள் மட்டுமே அறிவாள்.​

சிறு வயது முதல் நிலா தொட்டதற்கெல்லாம் பயப்படும் குணம் கொண்டவள். ஆனால், சுஜிதா அதற்கு எதிர் மாறாக தைரியம் கொண்டவள் அவள் அப்பாவை போல் . அப்பாவின் செல்ல பிள்ளையும் கூட.​

அதை பார்க்கும் போது நிலாவிற்கு சிறு ஏக்கம் உண்டாகும்.

ஏனென்றால் , நிலாவும் சிறு வயதில் அப்பாவின் செல்லப்பிள்ளை தான். ஆனால், எப்பொழுது அவள் வாழ்க்கையில் சித்தி என்று ஜெயலக்ஷ்மி வந்தாலோ அப்போதில் இருந்து இவள் ஒதுங்கி விட்டாள்.​

நிலாவுக்கு ஓர் தோழியாகவும், சகோதரியாகவும் இருந்து தைரியம் ஊட்டி கொண்டே இருப்பாள் சுஜிதா. சுஜிதா, "மணி ஆறு ஆச்சு டி வா நம்ம கிளம்பலாம்" என்றாள்.​

நிலா, "அச்சச்சோ டைம் ஆகிடுச்சு இப்போ வீட்டுக்கு சென்றால் ஜெயா சித்தி ஏன் இவ்வளோ லேட்? என்று கேட்பாங்களே. நான் என்ன பதில் சொல்வது. உன்னை பார்க்க வந்ததால் லேட் என்று சொன்னால் சித்தி உன்னையும் திட்டுவாங்க எனக்கு பயமா இருக்கு" என்று மறுபடியும் சித்தி புராணத்தை ஆரம்பித்தாள்.​

சுஜிதா, "ஐயோ போதும்டா சாமி முடியலை" என்று தன் இரு கரங்களையும் தூக்கி கும்பிடுவது போல் காண்பித்தால் நிலாவை கோபப்படுத்தும் படி.​

உடனே நிலா, "அவன் அவனுக்கு வந்தால் தான் டி தெரியும் கஷ்டம். உன் இஷ்டத்துக்கு நீ இருக்குற உன் ஃபேமிலி அப்படி இருக்கு என் குடும்பம் என்ன அப்படியா... உனக்கு தெரியாதா என் சித்தியை பற்றி" என்றாள்.​

சுஜிதா, “அதற்கு நீ உன் சித்தியிடம் தைரியமாக பேசு. இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொல்லு அவங்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லு" என்று அந்த உரையாடலை முடித்து வைத்தால்.​

இருவரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டார்கள். சுஜிதா வீட்டிற்குள் நுழைந்தவுடன், "அம்மாடி சுஜி வந்துட்டியா ஏன்டா இவ்வளோ லேட்?” என்று அவள் தாய் பத்மா அக்கரையாக விசாரித்தார்.​

சுஜிதா, "அது நான் நிலாவை பார்க்க போயிருந்தேன். இரண்டு பேரும் இரண்டு மணி நேரமாக நம் வீட்டு அருகில் உள்ள பூங்காவில் தான் பேசிக்கொண்டு இருந்தோம்" என்று கூறினாள்.​

பத்மா, "நிலா எப்படி மா இருக்கா? நல்லா இருக்காளா? வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது தானே அவளை" என்று விடாமல் கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டே சென்றார்.​

சுஜிதா ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகிவிட்டால், "அம்மா தாயே நான் இப்போ தான் வந்தேன். எனக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வா. நீ பாட்டுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிற. உன் பொண்ணையே நீ கவனிக்க மாட்டேங்குற அதுக்குள்ள என் பிரண்டை பத்தி பேச வந்துட்டியா" என்று சிடுசிடுப்பாக பேசினாள்.​

சுஜிதாவின் வீட்டில் சுஜிதாவின் ராஜ்ஜியமே எப்பொழுதும். அன்பாகவும், பாசமாகவும் அவள் அப்பாவும், அம்மாவும் இருப்பார்கள்.​

அதற்கு எதிர் மாறாக நிலா வீட்டின் உள்ளே நுழைந்தவுடன், “ஏய் நில்லு டி" என்று கர்ஜிக்கும் குரலில் அவள் சித்தி ஜெயா குரல் ஒலித்தது. அதில் அடி வயிறு கலங்க ஒரு அடி எடுத்து வைக்காமல் அப்படியே சிலையாகி போனால் நிலா.​

நிலாவிற்கு வார்த்தைகள் எழவில்லை. கால்கள் எல்லாம் தடதடக்க சித்தியை பார்த்தபடி அப்படியே நின்றிருந்தாள்.​

ஜெயலட்சுமி, "எங்க டி போன? இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. வீட்டில் விளக்கு வைக்கும் நேரத்திற்கு பிறகு வரும் பெண்களை எல்லாம் தவறாக பேசுவார்கள். உனக்கு அறிவு இருக்கா”.​

“நீ இல்லாமல் வீட்டில் இருக்கும் பாத்திரத்தை எல்லாம் யார் துலக்குவது? இவ்வளவு நேரம் எவனுடன் போய் ஊர் சுற்றி விட்டு வருகிறாய்?" என்று கேட்டார்.​

நிலாவுக்கு கண்கள் கலங்க "இஇ... இல்லை சித்தி” என்று வாய் எடுக்கும் முன்பே அவள் கன்னத்தில் பளீர் என்று ஓர் அறை விழுந்தது".​

அந்த சத்தத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க.​

சித்தியின் பார்வை ஒன்றே அனைவரையும் மறுபடி வேலை பார்க்க வைத்தது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிலா சிலை என நிற்க அவள் காதில் எதுவும் கேட்கவில்லை.​

ஜெயலட்சுமி அவர் வசைப்பாட்டை பாடிவிட்டு, “போய் சமையல் கட்டில் இருக்கும் வேலையைப் பார் முதலில்" என்று கட்டளை இடுவது போல் கூறிவிட்டு கடகடவென சென்று விட்டார்.​

அங்கு வேலை பார்க்கும் கண்ணம்மா மட்டுமே நிலாவை சிறுவயதில் இருந்து வளர்த்து வருகிறார். ஆகையால், கண்ணம்மா நிலாவின் தோள்பட்டையில் கை வைத்து உலுக்கி “நிலா நிலா" என்று அழைத்தார்.​

அதில் உணர்ச்சி அடைந்த நிலா, கண்ணம்மாவை கட்டியணைத்து தன் ஆதங்கத்தை அழுதே தீர்த்தாள்.​

கண்ணீரை துடைத்தபடி எழுந்த நிலா திரும்பிப் பார்க்க அங்கு அவள் தந்தை சுந்தரம் எதுவும் நடக்காதது போல் செய்தித்தாளை வாசித்தபடி மௌனமாகவே அமர்ந்து இருந்தார்".​

அதை பார்த்த நிலா இதெல்லாம் ஓர் வாழ்க்கையா என்று வெறுத்துப் போய் விட்டாள்.​

பூங்காவில் இவர்களை வாட்ச் செய்த அந்த நபர் யாருக்கோ செல்போனில் அழைத்து, “ஹலோ நான் ராஜேஷ் பேசுறேன்”.​

“நீங்க சொன்ன படி இவ்வளவு நாள் நிலா மேடத்தை ஃபாலோ செய்து எல்லா தகவலையும் உங்களிடம் கொடுத்து விட்டேன்”.​

“இப்போ நிலா மேடம் அவங்க சித்தி ஏற்படுத்தின கல்யாணத்தை பத்தி பயந்து அவங்க பிரண்ட் கிட்ட பேசிட்டு இருக்காங்க ரொம்ப சோகமா இருக்காங்க" என்றான்.​

அந்த பக்கம் இருந்து பதில் அளித்தவன், "எல்லாம் அவள் கல்யாணம் வரைக்கும் தான் அதற்கு அப்புறம் அவள் வாழ்க்கையே மாறிவிடும்" என்று கூறி அழைப்பை துண்டித்தான்.​

நிலா அனைவருக்கும் இரவு உணவை பரிமாறிவிட்டு கடைசியாக அடுப்பறையில் அமர்ந்து கண்ணம்மாவுடன் உணவை உண்டு விட்டு அங்கேயே பாயை போட்டு படுத்து‌ கண்களை மூடினால்.​

ஆனால், அவளுக்கு தூக்கம் தான் வர மறுத்தது அதற்கு பதிலாக கண்ணீர் மட்டுமே வழிந்து ஓடியது. இனி தன் வாழ்க்கை எவ்வாறு இருக்குமோ என்று எண்ணி அன்றைய இரவு அப்படியே கழிந்தது.​

காலை 6:00 மணி அளவில், ஜெயலட்சுமி, "இன்னும் என்ன உனக்கு தூக்கம் வேண்டி கிடக்கு எழுந்து போய் வாசல் தெளித்து கோலம் போடு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்திடுவாங்க லீவ் எல்லாம் போட்டுட்ட இல்ல. சும்மா நீ மாட்டுக்கு ஆபீஸ்க்கு போறேன் அங்க போறேன் என்று பையை தூக்கிட்டு கிளம்பிடாத" என்று சிடுசிடுப்பாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.​

நிலா வேறு வழி இன்றி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பெண்பார்க்கும் சடங்கிற்கு ஏற்றார் போல் மிதமான ஆபரணங்களுடன் தயாராகிக் கொண்டு இருந்தாலும் அவளுடைய சோர்ந்த முகமே காட்டியது இத்திருமணத்தில் அவளுக்கு சற்றும் உடன்பாடு இல்லை என்று.​

படபடவென கதவு தட்டும் சத்தத்தை கேட்டு நிலா தன் சோக கனவில் இருந்து விழித்தவள் யார் என்று பார்க்க, “இதோ வரேன்" என்று குரல் கொடுத்தபடி வேக எட்டுகளுடன் நகர்ந்தாள்.​

அதற்குள் இன்னும் படபடப்பாக கதவு தட்டப்பட்டது தன் கண்களை துடைத்தபடி ஜெயா சித்தியாக இருக்குமோ? அய்யோ மறுபடியும் அடிப்பாங்களே என்று மனதில் குமுரலுடன் தலை குனிந்த படி கதவை திறந்தாள்.​

“நிலா குட்டி” என்ற குரலில் பதரி நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனால். ஏனென்றால், அங்கு நின்று இருந்தது ஜெயலட்சுமி யின் தம்பி "சக்தி". சக்திக்கு, சிறு வயது முதல் நிலாவின் மேல் ஒருதலையாக காதல் உண்டு.​

ஆனால், நிலா, சக்தியை கண்டாலே பதறிப் போவாள். அவனை சுத்தமாக பிடிக்காது. சக்தி எப்பொழுதும் நிலாவை மிரட்டியபடியே சுற்றுவான்.​

சக்தி, "என்ன நிலா குட்டி உனக்கு கல்யாணம் என்று சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்க போலயே. இந்த மாமன் கிட்ட இருந்து தப்பி விடலாம் என்று நெனச்சிட்டு இருக்கியா?”.​

“ஆனால், அது நடக்காதது உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதாக சொல்லி இப்போ இருக்கிற மாப்பிள்ளை உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஏனென்றால், உனக்கு தாலி கட்ட போறது நான் தான்” என்று கூறி சிரித்தான்.​

ஏன் என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கோ என்று நொந்துப் போனவள் நிலா, “உன்னை கட்டிக்கிரதிலும் எனக்கு சந்தோஷம் இல்லை. அந்த வேலைக்காரனை கட்டிக்கிரதிலும் எனக்கு சந்தோஷம் இல்லை. அந்த வேலைக்காரன் பெயர் கூட எனக்கு தெரியாது என்னை ஏன் இப்படி சித்திரவதை பண்றீங்க தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க” என்று கைகூப்பி வேண்டினாள்.​

சக்தி சிரித்தபடி "என்ன குட்டிமா நீ இப்படி எல்லாம் பேசுற. ஏன் இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற என்ன இருந்தாலும் நான் உன் மாமன் உன்னை கட்டிக்கிற எல்லா உரிமையும் எனக்கு மட்டும் தான் இருக்கு சரியா”.​

“நீ ஒன்னும் பயப்படாதே வேறு எவனும் உன்னை கட்டிக்க மாட்டான். நான் அதுக்கு விடவும் மாட்டேன். மாமனை பத்தி உனக்கு தெரியாதா இது எல்லாமே ஒரு டிராமா தான் ஜெயா அக்காவுக்காக. ஜெயா அக்கா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்காது அதனால் தான் ஒரு சின்ன ட்ராமா புரிந்ததா" என்றான்.​

நிலா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். இப்போ "நீ அழறதை நிறுத்த வில்லை என்றால் என் கையில் இருக்கிறதை தூக்கி அப்படியே உன் முகத்தில் ஊற்றி விடுவேன்" என்று தன் கையில் இருக்கும் ஆசிட் பாட்டில் ஒன்றை காண்பித்து மிரட்டினான்.​

அதைப் பார்த்தவள் அதிர்ச்சியாக கண்களை விரித்துப் பார்க்க சக்தி அசராது அப்படியே முகத்தில் ஊற்றி விட்டான் .​

 

rebe novel

Moderator

பாகம் – 2​

சுஜிதா, “நிலா எங்க இருக்க?“ என்று குரல் கொடுத்த படி நிலாவின் அறையை நோக்கி விரைந்து ஓடினாள்.​

வழியில் ஜெயலட்சுமி சுஜிதாவை நிறுத்தி “ஒரு வயசு பொண்ணு மாதிரி நடந்துக்கோ. இங்க வயசு பசங்க எல்லாம் இருக்கிறாங்க“ என்று சக்தியை கைகாட்டி கூறினார்.​

சுஜிதா, ‘ஆமாம், இங்க இருப்பவனுங்க எல்லாரும் ரொம்ப நல்லவனுங்க நான் மெதுவாக நடந்தால் மட்டும் என்னை பார்க்காமல் விட்ற போறாங்களா. எந்த பொண்ணுங்க போனாலும் மேலேயும் ,கீழேயும் பார்க்கிறது தான் இவனுங்க வேலையே’ என்று மனதுக்குள் ச்ச்சீசீ.... என்னும் படி அலுத்துக் கொண்டாள்.​

ஜெயலட்சுமி, “புரிந்ததா இனிமே மெதுவா போ“ என்று சிடு சிடுப்பாக கூறிவிட்டு சென்று விட்டார். சுஜிதா, ஜெயலட்சுமி கூறிய எதையும் ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் நிலாவின் அறையை நோக்கி சென்றார்.​

நிலா அறை கதவு திறந்து இருப்பதை கண்ட சுஜிதா, “நிலா எவ்வளவு நேரம் நான் கூப்பிட்டுக் கிட்டு இருக்கிறேன் நீ பாட்டுக்கு இப்படி அமைதியா இருக்கிற. ஒரு குரல் கொடுத்தால் என்ன குறைந்தா போயிடுவ” என்று கத்தியபடி வாசலின் நுழைவாயுலில் காலை எடுத்து வைக்க அங்கு நிலாவின் நிலையை கண்டு பதறி விட்டாள்.​

சுஜிதா, “ஏய் நிலா என்ன டி ஆச்சு உனக்கு? எழுந்திரு” என்று பக்கத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து நிலாவின் முகத்தில் தெளித்து “நிலா எழுந்திரு நிலா” என்று கன்னத்தில் தட்டிக் கொண்டே இருந்தாள்.​

நிலா, மெதுவாக கண்களை சிமிட்டி சிமிட்டி திறக்க அங்கு சுஜியை பார்த்தவுடன் “சுஜி” என்று கட்டியணைத்து அழ ஆரம்பித்து விட்டாள் .​

சுஜிதா, “நிலா என்ன டி ஆச்சு உனக்கு? என்ன தான் ஆச்சு சொல்லு? ஏன் அழற? என்ன ஆச்சு? யாரு உன்னை என்ன பண்ணாங்க சொல்லு?” என்றாள்.​

நிலா கைகள் எல்லாம் நடுக்கம் கண்டது. ஆனால், வார்த்தைகள் மட்டும் எழ மறுத்தது.​

“நிலாக்கு என்ன ஆச்சு என்று நான் சொல்லவா?” என்று பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்க சுஜி, டக்கென்று திரும்பி பார்த்தாள். அங்கு சக்தி கை கட்டியபடி உள்ளே நுழைந்தான்.​

சக்தியை கண்டவுடன் நிலாவுக்கு மேலும் பதட்டம் தொற்றிக் கொண்டது. உடல் முழுக்க வியர்க்க தொடங்கியது.​

சுஜிதா நிலாவை கட்டி அணைத்து, “ஒன்றும் இல்லை பயப்படாத டி. நான் இருக்கிறேன் உன் கூட பயப்படாத” என்று ஆறுதல் கூறினாள்.​

சுஜிதா, “டேய் என்ன டா பண்ண இவளை? மரியாதையா சொல்லிடு இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது” என்று மிரட்டினார்.​

சக்தி, “கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கியா. ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்க. உன் பிரண்டுக்கு என்ன ஆச்சு என்று தெரியனுமா? வேண்டாமா?” என்று கூலாக கூறிவிட்டு நாற்காலியில் கால் மேல் கால் இட்டபடி அமர்ந்தான்.​

சக்தி, “என்ன நிலா குட்டி ரொம்ப பயந்துட்டியா. மாமன் மேல் பயம் இருக்கிறதும் நல்லதுக்கு தான்” என்று நக்கலாக சிரித்து கொண்டே “ரொம்ப பயப்படாத நிலா குட்டி நான் உன்னை ஒன்றும் பண்ணிட மாட்டேன்”.​


“ஏனென்றால், நீ எனக்கு முழுசா வேணும். நான் சொன்னது எல்லாம் உன் நினைவில் இருக்கட்டும் உன்னை கட்டிக்க போகிறது நான் தான் வேறு யாரும் இல்லை”.​

“புரிந்ததா ஒழுங்கா நா சொல்ற படி இந்த கல்யாணத்தில் எந்த ஒரு தடங்கலும் பண்ணாமல் மண மேடையில் வந்து நீ உட்காரனும் நடுவில் வேறு ஏதாச்சும் பண்ணலாம் இங்கிருந்து தப்பித்து போகலாம் என்று நெனைச்ச”.​

“இப்போ நான் வெறும் தண்ணியை தான் ஊற்றினேன் அப்புறம் நிஜமாகவே ஆசிட் ஊத்திடுவேன் முகத்தில் நினைவில் வச்சுக்கோ“ என்று மிரட்டும் தோணியில் “சீக்கிரமா பொண்ணு பாக்குற சடங்குக்கு தயாராகு உன்னை பெண் பார்க்க வந்தவன் என்னமோ இந்த வீட்டு வேலைக்காரனாக இருக்கலாம்”.​

“ஆனால், உன்னை கட்டிக்க போகிறது நான்தான்” என்று காலரை தூக்கிவிட்டு பந்தாவாக எதையோ சாதித்த படி மனதிற்குள் திமிராக அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.​

சக்தி சென்றதை உறுதி செய்து கொண்ட நிலா சுஜியை பார்த்து மேலும் இறுக்கி அணைத்து அழ ஆரம்பித்தாள்.​

சுஜிதா, “என்ன டி நடக்குது இங்க. அவன் என்ன ஊற்றினான்? உன் முகத்தில். நீ பாட்டுக்கு இப்படி அழுதுகிட்டே இருக்க” என்றாள் பதட்டமாக.​

நிலா, “காலையில் நான் கிளம்பி கொண்டு இருந்தேன். அப்போ சக்தி வந்து... என்று ஆரம்பித்தவள் நடந்த அனைத்தையும் சுஜிதாவிடம் ஒப்பித்தால்.​

வாயில் கையை வைத்த படி சுஜிதா, “என்ன டி சொல்ற?. உன் வாழ்க்கை ஏன் டி இப்படி இருக்கு” என்று அவளும் வருந்தினாள். இதை எவ்வாறு கையாள்வது என்று இருவருக்கும் தெரியவில்லை.​

சுஜிதா, “நாம் ஏதாவது செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம். நீ எதுக்கும் பயப்படாதே” என்று உறுதியாக கூறினாள்.​

கண்ணம்மா, “நிலா ரெடி ஆகிட்டியா மா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. ஜெயா அம்மா உன்ன காப்பி, தண்ணி எடுத்துட்டு வர சொன்னாங்க“ என்று நிலாவை அழைத்து சென்றார்.​

அனைவரின் முன்பும் நிலா மனம் இல்லாமல் கையில் காப்பி கோப்பைகளுடன் வந்து நின்றாள்.​

ஜெயலட்சுமி, “அவன் தான் நீ கட்டிக்க போறவன் பெயர் விக்ரம் போ போய் காபி கொடு” என்றார். நிலா குனிந்த தலை நிமிராமல் நேராக சென்று அவனிடம் காபி கோப்பையை நீட்டினாள்.​

நிமிர்ந்து முகத்தை கூட பார்க்காமல் நின்றிருக்கும் நிலாவை பார்த்த விக்ரம் காஃபி கோப்பையை கையில் எடுக்க மறந்து அவளையே வைத்த கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டே இருந்தான்.​

பாவாடை தாவணியில் நீண்ட கூந்தலுடன், முட்டை கண்களும், மிதமான ஒப்பனைகளுடன் அவள் அழகை மேலும் அழகூட்டியது”.​

அதை கவனித்த சக்தி, “விக்ரமை முறைத்துக் கொண்டே எனக்கு தான் முதல் காப்பி” என்று முன்வந்தவன் காபி கோப்பையை எடுப்பது போல் நைசாக கை நழுவி டம்ளர் தவறியது போல் விக்ரம் மேல் காஃபியை ஊற்றினான்.​

சக்தி, “நிலா காது அருகில் சென்று உன்னை யாராவது பார்த்தால் கூட நான் சும்மா விட மாட்டேன்“ என்று நிலாவுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கூறினான்.​

அனைவர் முன்பும் சக்தி, “நிலா குட்டி பார்க்க ரொம்ப அழகா இருக்கியே” என்று யாரும் பார்க்காத வண்ணம் அவளைப் பார்த்து கண் அடித்து சிரித்தான். அதில் நிலா பதட்டமாகி கடகடவென சென்று சுஜிதா அருகில் சென்று நின்று கொண்டாள்.​

ஜெயலட்சுமி, “என்ன விக்ரம் குடும்பத்தினர் எல்லாரையும் அழைச்சிட்டு வரேன் என்று சொல்லிட்டு இப்போ ஏதோ ஒரு பையனை மட்டும் கூட்டிட்டு வந்து இருக்கியே?“ என்று கேள்வி எழுப்பினார்.​

விக்ரம், “இவன் என்னோட ஒரே தம்பி” என்று அறிமுகம் செய்தவன் “எனக்கு வேறு யாரும் கிடையாது இவன் தான் என்னுடைய உலகமே” என்று கூறி பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டான் .​

ஜெயலட்சுமி, “சரிப்பா நீ இப்போத்தில் இருந்து வேலையில் சேர்ந்துக்குறியா? இல்ல நாளையில் இருந்து சேர்த்துக்குறியா?” என்றார்.​

விக்ரம், “இப்போ இருந்தே சேர்ந்து கொள்கிறேன் மேடம்” என்று ஒப்புக்கொண்டு தன் தம்பியிடம் “நீ வீட்டுக்கு போ நான் வேலை முடித்துவிட்டு இரவு வந்து விடுகிறேன்” என்று கூறி அனுப்பி வைத்தான்.​

சக்தி தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரமை சொடக்கிட்டு அழைத்து, “நீ கொஞ்சம் பாக்குற மாதிரி தான் இருக்கிற அதுக்காக உனக்கு என்னோட நிலா குட்டியை தூக்கி கொடுத்திட முடியாது” என்று முறைத்துக் கொண்டு கோபமாக கூறினான்.​

விக்ரம், “ஜெயா மேடம் தான் எனக்கு வேலை கொடுத்து என் கேரக்டர் நல்லா இருக்கு என்று சொல்லி நிலாவை கட்டிக்க சொன்னாங்க”.​

“இங்கேயே முழுசா வேலை பார்த்துக்கிட்டு நிலாவையும் கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. எனக்கு இருக்க குடும்ப கஷ்டத்துக்கு நான் வேலைக்கு ஒத்துக்கிட்டேன் எனக்கு என்று குடும்பம் எதுவும் இல்லை”.​

“அதனால் தான் ஜெயா மேடம் சொன்னவுடன் நல்ல குடும்ப பொண்ணாக இருக்கு என்று நானும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் இதில் என்ன தப்பு இருக்கு” என்றாள்.​

சக்தி, “இந்த கதையெல்லாம் எனக்கு தேவை இல்லை. நிலா என்னோட சொத்து நான் அவளை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் . எங்க அக்கா உன்னை நிலாவுக்கு கட்டி வைக்கணும் என்று ஆசைப்பட்டது எல்லாம் அவ சொத்துக்காக மட்டும் தான்”.​

“எனக்கு தெரியும் நிலா அழகைப் பார்த்து நீயும் கொஞ்சம் ஆசை பட்டு இருக்கலாம். ஆனால், நிலா கழுத்தில் தாலி கட்ட போறது நான் மட்டும் தான்”.​

“அதை யாராலும் மாற்ற முடியாத உண்மை. என்னோட அக்காவை பொறுத்த வரைக்கும் உனக்கும் நிலாவுக்கும் கல்யாணம் ஏற்பாடு எல்லாம் நடக்கும்”.​

“ஆனால், கடைசி நிமிஷத்தில் நான் வந்து மணமேடையில் நின்றவுடன் நீ எழுந்து இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லை என்று கூற வேண்டும் இல்லை என்றால் உனக்கு இருக்கும் ஒரே தம்பியை இந்த உலகத்தை விட்டே அனுப்பி விடுவேன்”.​

“நான் தான் நிலாவுக்கு தாலி கட்டுவேன் என்னோட செல்வாக்கு உனக்கு நல்லா தெரியும் என்று நினைக்கிறேன் என்னை மீறி நீ ஏதாச்சும் பண்ணலாம்னு நினைச்ச உன்னை சாவடிக்கவும் தயங்க மாட்டேன்” என்று மிரட்டும் தோணையில் கூறி சென்று விட்டான்.​

விக்ரம் ஏதோ இவன் புரியாத பாஷையில் பேசியது போல் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அவனைப் பார்த்து விட்டு அவன் வேலையை மேலும் தொடர்ந்தான்.​

சுஜிதா நிலாவை பார்த்து, “நீ எதுக்கும் கவலை படாதே நான் என் அப்பா கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு ட்ரை பண்றேன். உன்னை இங்கே இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியூருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று முடிந்தவரை தைரியமும் வாக்கும் கொடுத்து சென்றாள்.​

நிலா வேறு வழியின்றி சரி எனும் படி தலை அசைத்தாள். ஜெயலட்சுமி கம்பீரமாக அந்த வீட்டின் சோபாவில் கால் மேல் கால் இட்டு அமர்ந்து இருக்க.​

சக்தி மெல்லமாக அவர் எதிரில் வந்து அமர்ந்தான், “அக்கா நான் சொல்லிட்டே இருக்கிறேன். ஆனாலும், நீ என் பேச்சை கேட்காமல் நிலாக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து இருக்க”.​

“ஏன் எனக்கு கட்டிக் கொடுத்தால் என்ன? அந்த சொத்து மொத்தமும் எனக்கு தானே வரப்போகுது. அப்புறம் நான் உனக்கு கொடுத்து விடுவேன் நாம் எல்லாம் ஒரே குடும்பமாக இருக்கலாம் இல்லையா“ என்று நல்லவன் போல் கேட்டுக் கொண்டான்.​

ஆனால், ஜெயலக்ஷ்மி இவனுக்கே அக்காவாச்சே சிரித்தபடி, “உனக்கு நிலாவை கட்டிக் கொடுத்தால் நீ எனக்கு சொத்து கொடுப்பியா?”.​

“அது எத்தனை சொத்து எங்கே இருக்கு ஏதாச்சும் ஒரு கணக்கு வழக்கு தெரியுமா உனக்கு இல்ல நீ பள்ளிக்கூடம் தான் போய் படிச்சி இருக்கியா நாலு வார்த்தை சேர்த்து கூட்டி படிக்க தெரியாது நீ சொத்துக்கு அதிபதி ஆகலாம் என்று கனவு கண்டுகிட்டு இருக்கியா” என்று தன் தம்பியை மட்டம் தட்டி சிரித்தாள்.​

சக்தி சிறு வயது முதல் தன் அக்காவை மீரி ஒரு விஷயம் கூட செய்ய மாட்டான். சக்தியை தனக்கு கீழே வைத்து கொள்வதற்காக ஜெயலட்சுமி அவனை பள்ளிக்கூடம், நண்பர்கள் என்று அதிகம் பழகவிடாமல் கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் அடியாள் மூலமாக கற்றுக் கொடுத்திருந்தால்.​

சக்திக்கு சிறுவயது முதல் நிலா மேல் அதிகம் ஈர்ப்பு உள்ளது. ஆனால், தன் அக்காவின் பேச்சே தெய்வ வாக்காக இருப்பவன் முதல் முறையாக நிலாவை கட்டிக் கொள்ள ஆசைப்பட்டு எதிர்த்து நிற்கிறான்.​

சக்தி கப்பல் கவிழ்ந்தது போல் சோகமான முகத்தை வைத்துக் கொண்டு தன் அடியாட்கள் தோழனுடன் மொட்டை மாடியில் பீர் குடித்துக் கொண்டு நின்றிருந்தான்.​

சக்தி போதையில், “டேய் மச்சான் அக்கா கிட்ட என்ன சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று எனக்கு தெரியலை டா” என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.​

கீழே நிலா மற்றும் சுஜிதா வாசலில் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த சக்தி, “நிலா இல்லாம என்னால் இருக்கவே முடியாது டா மச்சான்”.​

“எனக்கு இப்பவே நிலாவை கட்டி பிடிக்கனும் போல் இருக்கு” என்று கடகடவென படியில் இறங்கி கீழே சென்று முதுகு பக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்.​

 

rebe novel

Moderator

பாகம் - 3​

திடீரென யாரோ பின்புறமாக கட்டி அணைத்ததில் பயந்து மூச்சு விட முடியாமல் திணறியபடி அவனை தள்ளிவிட்டு திரும்பினால் சுஜிதா.​

சக்தி அதிர்ச்சியாக பார்க்க சுஜிதா கோபமாக கையை ஓங்கிக் கொண்டு அவனை அறைய சென்றாள்.​

சட்டென்று அவள் கையைப் பிடித்த சக்தி, “யாரை அடிக்க வர? ஏதோ தெரியாம கட்டி புடிச்சிட்டேன் இதெல்லாம் ஒரு விஷயமா? போ போய் வேலையை பாரு“ என்று கையை தள்ளிவிட்டு செல்ல முன் வந்தான்.​

கோவமாக சுஜிதா, “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஒரு பொம்பள பிள்ளைய இப்படியா கட்டி பிடிப்ப. இப்படி பண்றதுக்கு அசிங்கமா இல்லையா உனக்கு” என்றாள்.​

சக்தி, “நான் என்னுடைய நிலா குட்டின்னு நெனச்சு தான் உன்னை கட்டிப் புடிச்சேன். அப்படியே நீ ரொம்ப பெரிய பேரழகி இவளை தேடி வந்து கட்டிக்கிறாங்க எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு போ டி“ என்றான்.​

சுஜிதாவுக்கு கோவம் தலைக்கு ஏறியது, “அதானே உனக்கு தான் நாகரிகமே தெரியாதே தெரிந்து இருந்தால் இப்படி நிலாவை வற்புறுத்த மாட்டியே கல்யாணம் பண்ணிக்க சொல்லி”.​

“பொறுக்கி பசங்களோடு சேர்ந்து சுற்றினால் இப்படி பொறுக்கி தனம் தான் பண்ணுவாங்க மானங்கெட்டவன்” என்று திட்டி முறைத்தாள்.​

சக்தி, “வாயை மூடு. நிலா குட்டிக்கு என் மேல் அதிக பாசம் இருக்கு தெரியுமா?. ஒரு நாள் அவளே என்கிட்ட சொன்னா என் பின்னாடி சுத்தாதீங்க என் பின்னாடி சுத்துனா உங்க வாழ்க்கை தான் வீணா போகும் என்று”.​

“அவள் என் வாழ்க்கையை பற்றி யோசித்து இருக்கா அப்படின்னா என்ன அர்த்தம்? அவளுக்கு என் மேல் காதல் இருக்கு என்று தானே அர்த்தம்”.​

“ஆனால், நிலாவுக்கு தான் அது புரிய மாட்டேங்குது. நீ போய் அவளுக்கு எடுத்து சொல்லு இதுதான் காதல் அப்படின்னு சொல்லு“ என்று குலரிய பாஷையில் பேசினான்.​

சுஜிதா, “பைத்தியம் மாதிரி பேசாத டா அவளுக்கு உன் மேல் காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. உனக்கு அவள பத்தி தெரியாது . அவளோட வாழ்க்கையில் காதலிக்கிற நிலைமையில் இப்போ அவ இல்லை”.​

“அவ ஒரு பெரிய பிஸ்னஸ் வுமன் ஆகுரது தான் அவளோட கனவு. நிறைய சம்பாதிக்கணும் சொந்த காலில் நிற்கனும் என்பது மிக பெரிய ஆசை. இதெல்லாம் உனக்கு எங்கேயாவது தெரியுமா?”.​

“இதெல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்து அவளை கொஞ்சம் வாழ விடுங்க”.​

“நீயும் உன் அக்காவும் சேர்ந்து அவ வாழ்க்கைய இப்படி நாசம் பண்றீங்களே” என்று சுஜிதா தன் தோழியின் வாழ்க்கையை நினைத்து வருந்தி கத்திக் கொண்டிருந்தாள்.​

ஆனால், இதையெல்லாம் கேட்கும் நிலையில் சக்தி தான் இல்லை. ஏனெனில், அவன் தான் ஏற்கனவே தள்ளாடிக் கொண்டு நின்றிருக்கிறான். இது எதுவும் அவன் செவியில் எட்ட வில்லை. பிறகு, எப்படி அவன் மூலையில் எட்டும்.​

இவள் ஏதோ கத்திக் கொண்டிருக்கிறாள் என்பது போல் சக்தி, “போடி உனக்கெல்லாம் என்ன தெரியும் நானும் என் நிலா குட்டியும் சின்ன வயதில் இருந்து ஒன்றாகவே வளர்ந்தோம் எங்க காதல் எங்களுக்கு மட்டும் தான் புரியும் போய் வேலையை பாரு போ“ என்று குளறலாக பேசிக் கொண்டே சென்றுவிட்டான்.​

சுஜிதா அவன் சென்ற திசையை முறைத்து‌ பார்த்து திமிர் பிடித்தவன் என்று மனதிற்குள் வசைப்பாடினாள்.​

அன்று இரவு அப்படியே சென்று விட மறுநாள் காலையில் நிலா சமையல் அறையில் கண்ணம்மாவுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டு இருந்தாள்.​

ஹாலில் ஜெயலட்சுமி, ”ஏய் நிலா எனக்கு தலை எல்லாம் வலிக்குது காபி எடுத்துட்டு வா சீக்கிரம்” என்று குரல் கொடுக்க நிலா அடுத்த நொடி காப்பியை கையில் எடுத்துக் கொண்டு கடகடவென நடந்து சென்றாள்.​

விக்ரம் தோட்டத்தில் மலர்களுக்கு நீரூற்றி விட்டு தண்ணீர் குடிப்பதற்காக சமையல்கட்டு அருகில் சென்றான். எதிரில் வேகமாக வந்து கொண்டு இருந்தால் நிலா.​

இருவரும் எதிர் எதிரே வந்த வேகத்திற்கு ஒரு நிமிடம் எங்கே இடித்து விடுவோமோ என்ற பயத்தில் இருவருமே தன் நெஞ்சிக்கு இடையே கைகளை விரித்து வந்த வேகத்திற்கு அங்கேயே தள்ளாடி இரண்டு சுற்று சுற்றி அப்படியே நின்றார்கள்.​

நிலா அவளை அறியாமலே தன் மீன் போன்ற விழிகளால் விக்ரமை விழுங்கி விடும் படி அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.​

விக்ரம் அவளுக்கு சலைத்தவன் இல்லை என்பதை காட்டும் படி அவனும் கண்களை சிமிட்டாமல் எதையோ கூறிக் கொண்டு இருந்தான் கண் இமைக்கும் நொடியில்.​

ஜெயலட்சுமி சிறு வினாடி கழித்து, “அடியேய், நிலா எங்க போய் தொலைஞ்ச? நான் காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு” என்று கர்ஜிக்கும் படி குரல் கொடுத்தாள்.​

அந்த குரலில் சுதாரித்து ஓர் அடி பின் வந்த நிலா, “மன்னிச்சிடுங்க” என்று கூறி விட்டு மறு வார்த்தைக்கு எதிர்பாராமல் அடுப்படியை நோக்கி ஓடிவிட்டாள்.​

விக்ரம் மனதுக்குள் இருபத்தி ஏழு வருடமாக இருந்த ஏக்கம் மொத்தமாக அந்த ஒரு நிமிட பார்வையில் தீர்ந்தது போல் ஏதோ ஓர் உணர்வு தோன்றியது.​

விக்ரம் வெளியே சென்று விட்டான். ஆனால், அவன் நினைவு மொத்தமும் நிலா முகத்திலே இருந்தது.​

நிலா கண்ணம்மாவிடம் சென்று, “அம்மா சித்தி கேட்ட காபி கீழ ஊத்திக்கிச்சு. அதனால், நான் வேறு காபி போட்டுடேன். நீங்க இதை எடுத்துட்டு போய் சித்தி கிட்ட தரீங்களா? நான் கொடுத்தா திட்டுவாங்க” என்று கெஞ்சுதலாக கேட்டாள்.​

கண்ணம்மா சரி என்று காப்பியை எடுத்து சென்று, “ஜெயா மேடம் இந்தாங்க காப்பி” என்று நீட்டினார். ஜெயலட்சுமி முறைத்து பார்த்ததில் புரிந்து கொண்ட கண்ணம்மா, “நிலா பாப்பாக்கு உடம்பு சரியில்ல அதான் நான் எடுத்துட்டு வந்தேன்” என்று காப்பிய நீட்டிக் கொண்டே இருந்தார்.​

ஜெயலட்சுமி, “சரி சரி துணி எடுக்க கடைக்கு போகணும் அவள சீக்கிரம் தயாராக சொல்லு” என்று காப்பியை எடுத்துக் கொண்டு தன் கணவருடன் உரையாடிக் கொண்டு இருந்தார்.​

கண்ணம்மா, “அம்மாடி நிலா ஒரு சந்தோஷமான விஷயம். ஜெயா மேடம் உன்னை துணி எடுக்க கடைக்கு போக தயாராக சொன்னாங்க எனக்கு தெரிஞ்சு கல்யாணத்துக்காக தான் துணிமணி எல்லாம் வாங்க போறாங்க நினைக்கிறேன்”.​

“இங்க இருக்கிற எல்லா வேலையும் நான் பாத்துக்குறேன். நீ போய் தயாராகு” என்று சந்தோஷமாக நிலாவை அனுப்பி வைத்தார் உண்மையான தாயை போல்.​

நிலா கையை பிசைந்த படி ‘இப்போ நான் என்ன பண்றது‌ என்னால் எப்படி தனியாக போக முடியும்’ என்று மனதுக்குள் குழம்பிக் கொண்டே இருந்தாள்.​

அவள் முகத்துக்கு அருகே சுடக்கிடும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் சக்தியை கண்டு இரண்டு அடி பின் நகர்ந்து நின்றாள்.​

சக்தி, “நிலா குட்டி இன்னுமா நீ ரெடி ஆகல. இங்க பாரு மாமா எப்படி ரெடி ஆகி வந்து இருக்கேன். சீக்கிரம் போய் நீ ரெடி ஆகிட்டு வா நம்ப கல்யாணத்துக்கு ஷாப்பிங் போறோம் ஷாப்பிங்...”.​

“அதுவும், அக்காவோட ஆசிர்வாதத்தோட நம்ப கல்யாணத்துக்கு நம்ப இரண்டு பேருக்கும் புது துணி எடுக்க காஞ்சிபுரம் போறோம்”.​

“நம்ம கல்யாணம் எப்படி அக்காவை மீரி நடக்கும் அப்படின்னு தானே நீ பயப்படுற நீ எதுக்கும் கவலைப்படாதே நான் உன்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்” என்றான்.​

நிலா அவன் கூறிய எதற்கும் பதில் அளிக்காமல், “நான் போய் கிளம்பனும்“ என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.​

சக்தி கல்யாணத்தை பற்றி பேசுனதும் நிலாக்கு பயம் போயிட்டு வெட்கம் வந்துடுச்சு போலயே என்று சிரித்துக் கொண்டு தனியாக பேசிக் கொண்டே இருந்தான்.​

நிலா செல்போனை எடுத்து சுஜிதாவுக்கு அழைத்து, “ஹலோ சுஜி நான் நிலா பேசுறேன். இங்க ஒரே பிரச்சனையா இருக்கு டி“ என்று மெதுவாக யாருக்கும் தெரியாமல் கூறிக் கொண்டு இருந்தாள்.​

சுஜிதா, “என்ன டி ஆச்சு?” என்றாள். நிலா, “சித்தி என்ன கல்யாணத்துக்கு புடவை எடுக்க கடைக்கு கூப்பிடறாங்க” என்று அழுது கொண்டே கூறினாள்.​

சுஜிதா, “நீ எதுக்கும் பயப்படாத நான் வரேன் உன் கூட கடைக்கு. ஆனால், என்னால இப்போ உன் வீட்டுக்கு எல்லாம் வர முடியாது நா வெளியே இருக்கிறேன்”.​

“அதனால், நீ எல்லாருடனும் கிளம்பி கடைக்கு போ கடையில் நான் இருப்பேன் சரியா” என்று கடையின் பெயரை மட்டும் கேட்டுக் கொண்டு செல் போனை துன்டித்து விட்டாள்.​

அனைவரும் காரில் ஏறிக்கொண்டு இருந்தார்கள். முன் சீட்டில் டிரைவர் மற்றும் ஜெயலட்சுமியும். பின் சீட்டில் மூன்று பேர் மட்டுமே உட்கார முடியும்.​

அதில் ஒரு புறம் சக்தி அமர்ந்துகொள்ள பக்கத்தில் நிலாவை அமரும் படி கூறினான்.​

விக்ரம், “அவளை தடுத்து நீங்க இந்த ஓரமா உட்காருங்க நடுவுல நான் ஒட்காந்துகரேன்” என்று நிலாவுக்கு இடம் கொடுத்தான்.​

எல்லோரும் விக்ரமையே பார்க்க, “இல்ல பொதுவா பெண்களுக்கு நடுவில் உட்கார்ந்தால் வாந்தி வரும் சொல்லுவாங்க. அதனால், நிலா ஓரமாக உட்கார்ந்து கொள்ளட்டும்” என்று கூறினான்.​

நிலா மனக்கணக்கில் ஒருவரிடம் இருந்தாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, “ஆமா எனக்கு நடுவில் உட்கார்ந்தால் வாந்தி வரும்” என்று ஒப்புக் கொண்டாள்.​

ஜெயலட்சுமி, “எங்கேயாவது உட்காருங்க சீக்கிரம் கிளம்புவோம் மணி ஆகுது” என்றார்.​

சக்தி, “இல்ல இல்ல முடியாது அப்போ இந்த வேலைக்காரன இந்த பக்கம் உட்கார சொல்லுங்க நா நடுவுல உட்கார்ந்துகிரேன்” என்று கூறி முடிப்பதர்குள் விக்ரம் காரில் அமர்ந்து கொண்டு நிலாவின் கையை பிடித்து யாருக்கும் தெரியாமல் இழுத்து அருகில் அமர வைத்துக் கொண்டான்.​

ஜெயலட்சுமி, “சக்தியை முறைத்துக் கொண்டு வாயை மூடிட்டு உட்கார போரியா இல்லையா“ என்றார். சக்தி வேறு வழியின்றி வாயை மூடிக் கொண்டான்.​

விக்ரம் அருகில் நிலா ஒதுங்கி ஒதுங்கி அமர்ந்தாள். அவன் மேல் எங்கு கை, கால் பட்டு விடுமோ என்ற பயத்திலே உட்கார்ந்து இருந்தால்.​

அதை கவனித்த விக்ரம் சற்று சக்தியின் பக்கம் தள்ளி அமர்ந்தான். சக்தி கைகளை பின் பக்கமாக நிலாவின் தோள்பட்டையில் படும்படி நீட்டினான்.​

விக்ரம் அதை கவனித்து சக்தியின் கை மேல் தலையை வைத்து தெரியாமல் அழுத்துவது போல் கையை ஆட்ட முடியாதபடி அழுத்திக் கொண்டான். சக்தி வெளியே சொல்ல முடியாமல் ம்ம்ம் என்று முனகினான்.​

எதுவும் தெரியாதது போல் கண்களை மூடி கொண்டு விக்ரம் அமைதியாக படுத்து விட்டான். ஒரு மணி நேரம் கழித்து துணி கடையின் வாசலில் கார் நின்றது.​

பிறகு, தான் விக்ரம் கைகளை விடுவித்தான். சக்தி தன் கையை அமுக்கியபடி இவன் என்ன சாதா வேலைக்காரன் என்று நினைத்தால் இவ்வளவு பலமாக இருக்கிறான் நம்பளை விட பலமாக இருப்பான் போலயே என்று யோசித்தபடி கடைக்குள் சென்றான்.​

அனைவரும் பட்டுப் புடவை செக்ஷனை நோக்கி விரைந்தார்கள். நிலா மட்டும் பார்வையாலே தன் தோழியை வலைவீசி கொண்டு இருந்தாள்.​

அவள் பின்னாலே விக்ரம் ஒருபுறம் சக்தி ஒருபுறம் பாதுகாப்புக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.​

அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் நிலா இல்லை. தன் தோழி வருவாளோ? மாட்டாளோ? என்ற பயத்திலேயே இருந்தால்.​

புடவை செக்ஷனில் சுஜிதா நின்று இருப்பதை பார்த்தவுடன் தான் நிலாவுக்கு உயிர் வந்தது போல் இருந்தது.​

சுஜிதா சத்தமாக சிரித்துக் கொண்டே விக்ரம் மற்றும் சக்தியை பார்த்து, “என்ன நீங்க இரண்டு பேரும் என்னமோ நிலாவுக்கு பாடிகார்ட் மாதிரி வரீங்க” என்று கிண்டல் அடித்தாள்.​

விக்ரம், “அது வந்து ஜெயா மேடம் தான் நிலாவை பத்திரமா பாத்துக்க சொன்னாங்க. ஏற்கனவே இரண்டு, மூணு தடவை ஏதோ கல்யாணம் எல்லாம் தடை பட்டுடுச்சாம்”.​

“அதனால், எந்த பிரச்சனையும் இல்லாமல் நிலா பின்னாடியே இருன்னு என்கிட்ட சொல்லி இருக்காங்க” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விட்டான். பிறகு, அங்கிருந்து ஓடி விட்டான்”.​

விக்ரம் என்ன இவள் கண்ணை காலையில் பார்த்ததில் இருந்து எதையுமே யோசிக்க முடியலையே. இவலையே பாத்துட்டு இருக்கோம் என்று உதடுகள் முனுமுனுத்துக் கொண்டே சென்றான்.​

சக்தி, “விக்ரம் பின்னாடி சென்று இது எல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை புரிஞ்சுதா”.​

“உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் நீ என்ன பண்ணனும் என்று அதை மட்டும் நீ பண்ணா போதும் நிலாவ பாத்துக்க எனக்கு தெரியும்” இருவரும் பேசிக்கொண்டே இருக்க சுஜிதா நிலாவை அழைத்து சென்று விட்டாள்.​

ஜெயலட்சுமி இவர்கள் செல்வதை பார்த்து, “ஏய் எங்க போயிட்டு இருக்க உனக்கு தானே கல்யாணத்துக்கு புடவை எடுக்க வந்திருக்கோம்”.​

“வா வந்து பாரு உன் வாழ்க்கையில் எதுவுமே நீ நினைச்ச மாதிரி நடக்கல இந்த புடவையாச்சும் உனக்கு புடிச்ச மாதிரி எடுத்துக்கோ போ. உன் இஷ்டம் தான் இங்க” என்று கூறிவிட்டு. ஜெயா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.​

நிலா ஒரு புடவையை கையில் எடுத்து பார்க்க அவளுக்கு பின்பக்கம் சக்தி ஒரு புடவையும் விக்ரம் ஒரு புடவையும் எடுத்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.​

இருவரும் ஒரே சமயத்தில், “நிலா இது நல்லா இருக்கா? உனக்கு“ என்று புடவையை நீட்ட நிலா திரு திரு என விழித்தாள்.​

 

rebe novel

Moderator

பாகம் – 4​

ஜெயலட்சுமி சொன்னதால் நிலா வேறு வழி இன்றி புடவையை செலக்ட் செய்து கொண்டு இருந்தாள்.​

நிலா நீலம் நிறத்தில் கடல் அலை போல் வெள்ளை கலந்த ஜருகையுடன் ஓர் புடவையை எடுத்து, “சுஜி இந்த புடவையை சித்தி கிட்ட கொடுத்திடு” என்று திரும்பும் பொழுது அங்கு சக்தி, ஓர் புடவை எடுத்துக் கொண்டு வந்து நின்றான்.​

சுஜிதா, அவன் கையை உற்றுப் பார்த்துவிட்டு “இது இந்த புடவை யாருக்கு உனக்கா?” என்று யோசனை செய்வது போல் பாவனை காட்டி “கட்டிக்கோ கட்டிக்கோ நல்லா தான் இருக்கும் உனக்கு” என்று கேலி செய்தாள்.​

சக்தியை கண்டாள் அனைவரும் பயப்படுவார்கள். ஆனால், சுஜிதா மட்டும் எதற்கும் அசர மாட்டாள் இவ்வாறு எல்லாம் எப்பொழுதும் அவனை வம்புக்கு இழுக்கும்படி கேலி செய்வாள்.​

சுஜிதா, நிலாவின் தோழி என்பதால் சக்தி அவளை பெரிதாக திட்ட மாட்டான். அதனால் சுஜிதாவுக்கு சக்தியை கண்டு கொஞ்சமும் அச்சம் இல்லை.​

சக்தி முரைத்துக் கொண்டே, “நான் என் நிலா குட்டிக்காக புடவை எடுத்து வந்தேன் எப்படி இருக்கு? ஆரஞ்சு நிறத்து புடவை என் நிலாவுக்கு பொருத்தமா இருக்கும் இல்ல” என்று சுஜிதாவை பார்த்து ஒற்றை புருவத்தை தூக்கி கூறினான்.​

சுஜிதா, “அவனை முறைத்து தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்காத. அவதான் உன்னை வேண்டாம் என்று சொல்லிட்டா இல்ல எதுக்கு சும்மா அவ பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க. நாங்க புடவை எல்லாம் எடுத்தாச்சு நீ கெளம்பு“ என்றாள்.​

சக்தி, “விடாப்பிடியாக நான் எடுத்த புடவை தான் நிலா கட்ட வேண்டும். ஏனெனில், நானும் அவளும் தான் புருஷன் பொன்ஜாதியா வாழ போகிறோம் அப்போ அவ என்னோட இஷ்டப்படி தான் நடந்துக்கணும்” என்றான்.​

சுஜிதாவுக்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது அவன் முகத்தருகே தன் ஒற்றை விரலை நீட்டி, “நிலா கூட உனக்கு கல்யாணம் நடக்காது அப்படியே அன்னைக்கே உனக்கு கல்யாணம் நடந்தாலும் மனப் பெண் நிலா வா இருக்கவே முடியாது“ என்று சவால் விட்டு மிரட்டுவது போல் கூறினால்.​

சக்தி சிரித்து விட்டு, “என்ன காமெடி பண்ணிட்டு இருக்கியா?” என்று அந்த விரலை பிடித்து ஆட்டி கொண்டு “ஆலையும், பேச்சையும் பார்த்தியா கத்திரிக்காய் மாதிரி இருந்துகிட்டு பேசுற பேச்ச பாரு இந்தக் கல்யாணம் என்கூட தான் நடக்கும்”.​

“நான் தான் மாப்பிள்ளையாக உட்காருவேன் மணமேடையில் உன்னால் முடிஞ்சா தடுத்து பாரு டி குட்டி கத்திரிக்கா“ என்று சிரிப்பது போல் கோபத்தோடு கூறிக் கொண்டு இருந்தான்.​

அங்கு வந்த ஜெயலட்சுமி, “புடவை எடுத்துட்டீங்களா?” என்றார்.​

சுஜிதா நீல நிற புடவையை காண்பித்து, “இந்த புடவை தான் சித்தி எடுத்து இருக்கிறோம்” என்றாள்.​

சக்தி, “இல்லை இல்லை அக்கா இந்த புடவைதான் நிலா கட்டிக்கணும் திருமணத்துக்கு இதுதான் நல்லா இருக்கு பாருங்க” என்று காட்டினான்.​

ஜெயலட்சுமி தன் தம்பியை பார்த்து முறைத்து, “உனக்கு எதுக்குடா இந்த தேவையில்லாத வேலை போயும் போயும் இவ பின்னாடி போய் சுத்தி என்ன நீ ரொம்ப அவமானப் படுத்துற இதோட இதெல்லாம் நிறுத்திக்கோ”.​

“அவளுக்கு விக்ரம் கூட கல்யாணம் ஆகப்போகுது இனி விக்ரம் பார்த்துப்பான் அவளை. உன்கிட்ட நிலாவோட விஷயத்துல இனி தலையிடாதனு நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன்”.​

“ஆனால், நீ அவளுக்கு புடவை எடுத்துக்கிட்டு இருக்க நீ போய் உனக்கு டிரஸ் எடுக்க வேண்டியது தானே” என்று கூறி முறைத்து அங்கிருந்து சக்தியை அனுப்பி வைத்தார்.​

ஜெயலட்சுமி நிலா கையில் வைத்திருந்த புடவையை வாங்கி விலையை பார்க்க அது ஒரு லட்சம் போட்டிருந்தது.​

ஜெயலட்சுமி, “உன்னோட தகுதி என்னன்னு தெரியும் இல்ல உனக்கு. இம்புட்டு விலையில் துணி தேவையா உனக்கு?“ என்று ஏளனமாக அவளைப் பார்த்து விட்டு.​

அங்கு துணி எடுத்து போடும் ஆட்களிடம் ஒரு இருபது ஆயிரத்தில் புடவை எடுத்து காட்டுங்க என்று சொல்லி 10 ஆயிரத்தில் மெருன் கலரில் ஓர் புடவையை தேர்வு செய்தாார்.​

நிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் விலை ஒரு லட்சம் என்பது கூட நிலாவுக்கு தெரியாது.​

வேண்டா வெறுப்பாக அங்கு இருந்து ஒரு புடவையை கையில் எடுத்து சுஜியிடம் கொடுத்தாலே தவிர அதை ஆசையாகவோ அழகாக இருக்கிறது என்றோ அவள் எடுக்க வில்லை.​

மனம் வெறுத்து போன நிலா, சுஜியை பார்த்து, “கல்யாணமே நமக்கு பிடிக்காமல் தான் நடக்கிறது புடவை எல்லாம் ஒரு விஷயமே இல்லை” என்று மெதுவாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.​

ஜெயலட்சுமி அவளுக்கு வேண்டிய புடவையை எடுக்க தேர்வு செய்து கொண்டிருக்கும் பொழுது.​

அங்கு வந்த விக்ரம், “மேடம் நீங்க ரொம்ப வசதியா இருக்கீங்க உங்க வீட்டு பொண்ணு நிலாவுக்கு என்னை எப்படி கட்டிக் கொடுக்க நீங்க ஆசைப்பட்டீங்க என்று நான் தெரிஞ்சுக்கலாமா?”.​

“இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கா?“ என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான்.​

மேலும் பேச்சை தொடர்ந்தவன், “எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு தம்பி எனக்கு ஒன்னுனா அவனை பாத்துக்க ஆள் கூட கிடையாது”.​

“அதனால் தயவு செஞ்சு உண்மைய சொல்லிடுங்க. இதுல ஏதேனும் பிரச்சனை இருக்குகிறது என்றால் இந்த வேலையும் வேண்டாம் இந்த கல்யாணமும் வேண்டாம் இந்த இடத்தை விட்டே போயிடுறேன்” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.​

ஜெயலட்சுமி, “ஒரு நிமிஷம் உனக்கு வேலை கொடுத்து இருக்கேன். கூடவே பொண்ணையும் கொடுத்து இருக்கேன்‌ இவ்ளோ பெரிய பிசினஸ் எல்லாம் நான் பண்றேன் எனக்கு தெரியாதா எது சரி எது தப்பு என்று”.​

“உன்னை பத்தி நீ வேலை கேட்டு வந்த முதல் நாளே நான் விசாரிச்சுட்டேன். நீ பொறந்து வளர்ந்தது எல்லாமே செங்கல்பட்டுல உன் குடும்பமே ஒரு ஓட்டு வீட்ல தான் இருந்திருக்கீங்க”.​

“அங்க மழை அதிகமா பேய்ந்ததில் வெள்ளம் வந்து உங்க வீட்ல இருந்தவங்க எல்லாருமே செத்துட்டாங்க”.​

“இப்போ நீயும் உன் தம்பியும் மட்டும் தான் இருக்கீங்க. உன் தம்பி இப்ப படிச்சுக்கிட்டு இருக்கான்”.​

“அவன் படிப்பு செலவுக்கு காசு தேவைப்படுது. அதனால், தான் இப்போ நீ இங்க வேலைக்கு வந்து இருக்க கூடவே நான் இந்த பொண்ணை பற்றி சொன்னவுடன் இந்த பொண்ணும் நல்லா அழகா இருக்கானு நீயும் ஒத்துக்கிட்ட”.​

“நல்லா வசதியான பொண்ணா இருக்காளே அப்படின்னு சொல்லிட்டு நீ கல்யாணத்துக்கு ஒத்து கிட்ட எனக்கு உன்னோட வாழ்க்கை வரலாறு மொத்தமாவே தெரியும்”.​

“நான் எது செஞ்சாலும் அதுல எனக்கான தேவை ஒன்னு இருக்கும். அதுக்காக தான் நான் பண்ணுவேன் உன்னை இந்த வீட்டில் எங்க வைக்கணுமோ அங்க தான் வைப்பேன் புரிஞ்சுதா. நீ போய் உனக்கு தேவையான துணிகளை மட்டும் எடு”.​

“நான் சொல்றதை மட்டும் நீ கேட்டினா உனக்கும் உன் தம்பி உயிருக்கும் நல்லது” என்று கூறிவிட்டு.​

தன் தலையில் போட்டிருந்த கண்ணாடியை எடுத்து கண்களில் மாட்டிக் கொண்டு கம்பீரமாக நடந்து சென்றார்.​

ஜெயலட்சுமி சென்ற இடத்தை பார்த்து மௌனமாக சிரித்து விட்டு அங்கிருந்து சென்ற விக்ரம் நேராக பட்டுப் புடவை செக்க்ஷனுக்கு யாருக்கும் தெரியாமல் நுழைந்தான்.​

நிலாவுக்கு மெரும் கலரில் தங்க ஜரிகையால் ஆன புடவையை தேர்ந்தெடுத்து அந்த புடவை நிலாவுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று கற்பனையாலயே கட்டி அழகு பார்த்து அதன் பிறகு செலக்ட் செய்தான்.​

அந்த புடவையில் முந்தானை ஓரத்தில் “துருவ் வெட்ஸ் நிலா” என்று ஆங்கிலத்தில் பெயர் பதிக்க கூறினான்.​

சுஜிதாவை கடையின் ஓரமாக இழுத்துச் சென்ற நிலா, “எனக்கு என்னமோ இந்த விக்ரம் கொஞ்சம் நல்லவனாக இருப்பானோ என்று தோணுது டி” என்றாள்.​

சுஜிதா, “என்ன டி சொல்ற அப்போ உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா?” என்றாள்.​

நிலா, “இந்த கல்யாணத்தில் எல்லாம் எனக்கு சம்மதம் இல்லை அவன் கேரக்டர் நல்லதாக இருக்கு என்று சொன்னேன்” என்று காலையில் இவர்கள் தவறி இடிக்க வந்ததில் ஆரம்பித்து.​

இப்பொழுது காரில் வரும் பொழுது இடிக்காமல் நகர்ந்து அமர்ந்து. சக்தி, நிலா மேல் கை வைக்க வந்ததை தடுத்து முதல் கொண்டு கூறி முடித்தாள்.​

இதையெல்லாம் கேட்ட சுஜிதா, “நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தால் அந்த விக்ரம் உன்ன வாட்ச் பண்ணிட்டே இருக்கான்னு நினைக்கிறேன்” என்று வேறு விதமாக சரியாக கூறினாள்.​

நிலா, “அவனே படிக்காதவன் டி அவனுக்கு என்ன தெரியும் இத பத்தி எல்லாம்”.​

“ஏதோ சித்தி வந்துட்டு பணம் தரேன் என்னை கல்யாணம் பண்ணிக்கோ இந்த வீட்ல வேலைக்காரனா வேலை பாருன்னு சொன்னதுனால் ஒத்துக்கிட்டு வந்து இருப்பான்”.​

“அவனுக்கு படிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது முடிவெடுக்கிற மாதிரி அறிவும் கிடையாது”.​

“அப்புறம் எங்க இருந்து அவன் இதெல்லாம் யோசிச்சு பண்ணி இருப்பான்”.​

“எதார்த்தமா அவன் பண்ணது எல்லாமே எனக்கு நல்லதா முடிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்” என்று நிலா வேறு புறம் யோசித்தாள்.​

இவர்கள் இருவரில் யார் யோசித்தது சரி என்று கல்யாணத்தன்று தெரியும்.​

சுஜிதா, “எது எப்படியோ இந்த கல்யாணம் மட்டும் எப்படியாவது நிற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்”.​

“ஆனால், இவன் நல்லவனாக இருப்பதால் நீ சந்தோஷமாக இவனையே திருமணம் செய்துக்கோ” என்று தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.​

நிலா அவள் தலையில் அடித்து, “பைத்தியம் மாதிரி பேசாத டி எனக்கு கல்யாணத்திலேயே இஷ்டம் இல்ல. அதுவும் இவன சுத்தமா பிடிக்கலை”.​

“எனக்கு சக்தியையும் பிடிக்காது அதேபோல் விக்ரமையும் பிடிக்காது” என்றவுடன் சுஜிதா, “அப்போ சக்தியும், விக்ரமும் உனக்கு ஒரே மாதிரினு சொல்ற அப்படித்தானே? என்றாள்.​

நிலா இரண்டு நிமிடம் மௌனமாக இருந்தவள் கண் முன்னே வின்பமாய் விக்ரம் காலையில் அவளிடம் நடந்து கொண்ட முறை மற்றும் பெண் பார்த்ததிலிருந்து அவன் இந்த வீட்டிலேயே வேலை பார்த்தாலும் கூட நிலாவிடம் தவறாக ஒரு முறை கூட நடந்து கொள்ளாத விதமும்.​

அவளை கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒழுக்கமாக இருந்த விதமும் அவள் கண்முன் வந்து சென்றது.​

இதை எல்லாம் சிந்தித்து விட்டு நிலா, “இல்ல டி விக்ரம் வந்து கொஞ்சம் நல்லவன் தான்” என்றாள் மெதுவாக. சுஜிதா சிறித்திக்கொண்டு அப்படியா என்றாள்.​

உடனடியாக நிலா, “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் பொதுவா சொன்னேன்”.​

“அவன் நல்லவன் அவ்வளவு தான். அதுக்காக அவனை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது”.​

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை அவ்வளவுதான்” என்று கூறி முடிக்கையில் நிலாவுக்கு எதிர்ப்புறம் இருந்து “மேடம்க்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையோ?” என்று கர்ஜிக்கும் குரல் ஒன்று கேட்டது.​

இருவரும் ஒரே சமயத்தில் திரும்பி பார்க்க அங்கு நின்று இருந்தது ஜெயலட்சுமி.​

நிலாவுக்கு யாருடன் திருமணம் நடக்கும்? விக்ரம் உண்மையில் யார்? விக்ரம் எடுத்த புடவை எப்படி நிலாவிடம் போய் சேரும்?.​

 

rebe novel

Moderator

பாகம் – 5​

நிலா இந்த கல்யாணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை சுஜிதாவிடம் கூறிக் கொண்டு இருந்தாள்.​

அதேசமயத்தில் எதிரில் இருந்து கைதட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ஒரே சமயத்தில் நிமிர்ந்து பார்க்க அங்கு நடந்து வந்தது வேறு யாரும் இல்லை நம்ம ஜெயலட்சுமி.​

இவர்கள் அருகில் வந்த ஜெயலட்சுமி, “மேடம்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?” என்று ஒரு புருவத்தை ஏற்றி கைகட்டியபடி கேட்டார்.​

அதில் பதறிப்போன நிலா, “அஅஅது.... அது வந்து சித்தி” என்று வார்த்தைகல் தந்தி அடிக்க மேற்கொண்டு அவளை பேசவிடாமல் ஜெயலட்சுமி கைகளை ஓங்கி அவளை அறைய சென்றாள்.​

அதே சமயத்தில் அங்கு ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஜெயலட்சுமி அவளை அறையாமல் அப்படியே ஓங்கிய கைகளோடு நின்று விட்டாள்.​

அனைவரும் திரும்பி பார்க்க அங்கு வேறு யாரும் இல்லை விக்ரம் தான் தண்ணீர் டம்ளரை கீழே போட்டான். ஆனால், அந்த டம்ளர் அவனுக்கு தெரியாமல் கை நழுவி விழுந்ததா அல்லது தெரிந்தே கீழே விழுந்ததா என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை.​

அந்த சத்தத்தில் ஜெயலட்சுமி நிலாவை அடிக்காமல் நிறுத்தி விட்டார். பிறகு, கடையில் இருப்பதை உணர்ந்த ஜெயலட்சுமி நிலாவிடம் திரும்பி ஒற்றை விரலை நீட்டி “இந்தக் கல்யாணம் நடக்கும் கட்டாயம் நடக்கும்”.​

“நான் ஜெயலட்சுமி நினைச்சதை நடத்துறது தான் என்னோட ஸ்பெஷல் புரிந்ததா. உனக்கு பிடிக்குதா?, இல்லையா? என்பது முக்கியம் இல்லை. நான் நினைச்சது நடக்கணும் அவ்வளவுதான்”.​

“இன்னும் இரண்டு நாட்களில் உனக்கு கல்யாணம் அது வரைக்கும் நீ வாயை திறக்கவே கூடாது“ என்று அவளை எச்சரித்து விட்டு அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.​

வீட்டிற்கு வந்த நிலா கண்களில் கண்ணீர் தேங்கிக் கொண்டே இருந்தது. ஏனென்றே தெரியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.​

அவள் அம்மாவின் புகைப்படத்தை பார்த்து விரல்களால் தொட்டு நெஞ்சோடு புதைத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். எவ்வளவு அழுதும் அவள் மனதில் உள்ள பாரம் மட்டும் குறையவே இல்லை.​

சுஜிதா அதை வாசலில் இருந்து பார்த்து விட்டு முதலில் விக்ரம் கிட்ட இந்த கல்யாணத்தில் நிலாவுக்கு விருப்பம் இல்லை என்னும் உண்மையை கண்டிப்பாக நாம் கூறியே ஆக வேண்டும் என்று மனதுக்குள் ஒரு உறுதியான தைரியத்தை வரவழைத்து வேகமாக விக்ரமை நோக்கி சென்றாள்.​

சுஜிதா, “அண்ணா ஒரு நிமிஷம்” என்றாள். விக்ரம், என்ன என்பது போல் திரும்பி கண்களால் கேட்டான்.​

சுஜிதா, “அண்ணா நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்க இல்ல?” என்றாள். விக்ரம், “அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன் என்னவென்று சொல்லுமா” என்றான்.​

சுஜிதா, “ என்னோட பிரெண்டு நிலாவுக்கு சின்ன வயசுல இருந்து சந்தோஷமான வாழ்க்கை அமையவே இல்ல. அவ சந்தோஷமா இருந்தது அவளோட அஞ்சு வயசு வரைக்கும் தான்” என்றாள்.​

விக்ரம், “ஏன்?” என்றான். சுஜிதா, “நிலா அவளோட அஞ்சு வயசு வரைக்கும் தான் அவ அம்மா கூட இருந்தா. அப்போ வரைக்கும் தான் அவளுக்கு புடிச்ச ஒரு பையனும் கூட இருந்தான்”.​

“அவ வாழ்க்கை ரொம்ப அமைதியா சந்தோஷமா இருந்தது. அவங்க அம்மா இறந்து போன அதே வாரத்தில் அந்தப் பையனும் இந்த ஊரை விட்டு போயிட்டான்”.​

“அப்போல இருந்து அவளுக்கு அந்த பையனை தவிர வேறு யார் மேலையும் விருப்பமே கிடையாது. அவளுக்கு இந்த கல்யாணத்துல எந்த ஒரு இஷ்டமும் கிடையாது”.​

“அதனால், தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நீங்களே நிறுத்திடுங்க‌. எங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று எங்களுக்கே தெரியலை”.​

“சித்தி கிட்ட சொன்னா நிலாவ கொன்னே போட்றுவாங்க” என்று கை கூப்பி தன் தோழிக்காக கெஞ்சிக் கொண்டிருந்தாள்.​

ஆனால், விக்ரம் “அப்படியா? எனக்கு இது எதுவுமே தெரியாது. இதை நினைத்து எனக்கு கவலையும் இல்லை. நான் வேலை கேட்டு என்னோட நண்பன் மூலமாக தான் உங்க சித்தியை பார்த்தேன்”.​

“உங்க சித்தி ரொம்ப நல்லவங்களா பேசினாங்க எனக்கு வேலையும் கொடுத்தாங்க. கொடுத்துட்டு கல்யாணம் ஆயிடுச்சா என்று என் குடும்பத்தை பத்தி கேட்டாங்க”.​

“அப்போ பேசும் போது எனக்கு ஒரு பொண்ணு தெரியும் அவளுக்கு யாரும் இல்லை அதனால் அவளுக்கு நான் தான் மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கேன்”.​

“நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி உங்க சித்தி தான் சொன்னாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன்“ என்றான்.​

சுஜிதா அவனை பார்த்து முறைத்தாள். விக்ரம் கூலாக, “என்ன அப்படி பாக்குற. நிலா எந்த பையனை விரும்பி இருந்தாலும் பரவால எனக்கு எந்த பிரெச்சனையும் இல்லை”.​

“அதுவும் அஞ்சு வயசுல பார்த்த பையனை நினைத்து எந்த நம்பிக்கையில் உன் பிரென்ட் இப்போ காத்துகிட்டு இருக்கா. இன்னேரம் அந்த பையன் உயிரோடு இருக்கானோ? இல்லையோ?” என்றான்.​

சுஜிதாவுக்கு பயங்கர கோபம் வந்தது, “இவ்வளவு தூரம் நான் பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கேன் சித்தி சொன்னாங்க சித்தி சொன்னாங்கன்னு அதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க”.​

“அவளுக்கு படிச்சு சாதிக்கணும் என்பது தான் ஆசை. நீங்க அவ கால் தூசிக்கு வர மாட்டீங்க. உங்களுக்கு தான் படிப்பறிவும் இல்லை எந்த அறிவும் இல்லையே”.​

“எதாச்சும் மண்டையில் இருந்து இருந்தால் இந்நேரம் நான் சொன்னதை நீங்க புரிந்து கொண்டு இருப்பிங்க“ என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் கத்தினாள்.​

விக்ரம், சுஜிதா அழுவதை பார்க்க முடியாமல் அவளிடம் ஏதோ கிசுகிசுப்பாக கூறினான். பிறகு, அதிர்ந்து போய் அவனை பார்த்த சுஜிதா “அப்படியா அண்ணா? நீங்க சொல்றது எல்லாம் உண்மையா?” என்று கண்கள் கலங்க கேட்டால்.​

விக்ரம் சிரித்துக் கொண்டே ஆம் என்பது போல் தலை அசைத்தான். அத்துடன் சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பி விட்டால் சுஜிதா.​

விக்ரம் சுஜிதாவை ஆச்சரியமாக பார்த்து வியந்து போனான். தன் தோழிக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாளே. இந்த மாதிரி பெண்களும் பிரெண்ட்ஸ் காக வந்து நிப்பாங்களா.​

இத்தனை நாட்களாக ஆண்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி உயிரை குடுக்கும் நண்பர்கள் இருக்காங்க என்று நினைத்தேன்.​

ஆனால், பொம்பள பசங்களுக்கும் அதே போல் பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்கிறது பெரிய விஷயம் தான் என்று நிலா, சுஜிதா பிரெண்ஷிப்பை பார்த்து வியந்து போனான்.​

சக்தி தன் அக்கா ஜெயலட்சுமியிடம் சென்று, “அக்கா நம்ம வீட்டில் கல்யாணம் நடப்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லையே துணி எடுத்ததோடு அப்படியே இருக்கு”.​

“ஒரு வாரத்தில் கல்யாணம் என்று நீ சொல்லி நாலு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நாளில் கல்யாணம். ஆனால், இன்னும் மண்டபம் பார்க்கவே இல்லையே?” என்றான் கேள்வியாக.​

ஜெயலட்சுமி, “இந்த கல்யாணம் நான் சொன்னது டா எனக்கு தெரியாதா எப்படி நடத்தணும் என்று நீ எனக்கு பாடம் எடுக்குறியா?” என்றார்.​

சக்தி, இல்லை என்னும் விதமாக தலை அசைத்து அது வந்து அக்கா என்று பேச்சை ஆரம்பித்தான்.​

ஜெயலட்சுமி, “இந்த நிலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதே பெரிய விஷயம். இதுல மண்டபம் வேற தேவையா?” என்றால் எரிச்சலாக “எல்லாம் கோவிலில் சின்னதா செய்து கொல்லலாம்” என்று பேச்சை முடித்து விட்டால்.​

சக்தி மனதில் எனக்கும் நிலாகும் நடக்கும் திருமணத்தில் எந்த குறையும் இருக்க கூடாது எல்லா சடங்கும் பன்னனும் என்று உறுதியாக இருந்தான்.​

சக்தி, “அப்படி பண்ணா ஊர்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. ஏற்கனவே நிலாவை நம்ம என்னமோ அடிமையா வைத்திருக்கோம் என்று சந்தேகப்படுறாங்க”.​

“இந்த கல்யாணத்தில் ஏற்கனவே நிலாவுக்கு விருப்பம் இல்லை எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறாள்”.​

“அதனால் ஊர் காரங்க கிட்ட நிலா கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டால். பிறகு பெரிய பிரச்சனை ஆகிவிடும். அதனால், பெரிய மண்டபத்தில் நாம் கல்யாணம் செய்தால் சந்தோஷமாக இந்த கல்யாண நடக்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொள்வார்கள்” என்றான்.​

இதை சிந்தித்த ஜெயலட்சுமி, “பரவாலையே உனக்கு கூட கொஞ்சம் அறிவு இருக்கிறது” என்றாள். பிறகு ஜெயலட்சுமி, “சக்தி சரி அப்போ நீயே மண்டபம் பார்த்து ஐயர் கிட்ட சொல்லிடு எனக்கு ஒரு சில வேலைகள் இருக்கு”.​

“நிலாவோட சொத்து மொத்தத்தையும் ஒரே பத்திரமாக மாற்றி அதில் நிலா விடம், விக்ரமிடமும் ஒன்றாக கையொப்பம் வாங்கி விட்டு அப்பொழுதே இருவரையும் வீட்டை விட்டு அனுப்ப வேண்டும். அப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்” என்றாள்.​

சக்தி, “அக்கா அப்படி இல்லை யென்றால் கல்யாண முடிந்து சில நாட்கள் பிறகு கூட கையொப்பம் வாங்கிக் கொள்ளலாம் இல்லையா” என்றான்.​

ஜெயலட்சுமி, “அதெல்லாம் சரிப்பட்டு வராது டா மனிதர்கள் குணம் குரங்கு மாதிரி எப்பொழுது வேண்டுமானாலும் மாறிவிடும். விக்ரம் இப்பொழுது எனக்கு பயப்படுகிறான்”.​

“ஆனால், அவன் பேச்சில் ஒரு திமிர் இருக்கு என்கிட்ட போன் ல வேலை கேட்டு பேசுன விக்ரம்கும் இப்போ வீட்டுக்கு வந்த பிறகு இருக்கும் விக்ரம் கும் சில வித்தியாசம் இருக்கு சில காலங்களில் என் மேல் பயம் இல்லாமல் போகலாம் அவனுக்கு”.​

“அதனால், இப்பொழுதே கையொப்பம் வாங்கினால் தான் எல்லாம் சரியாக வரும்” என்று தன் தம்பியிடம் தன் மனதில் நினைத்த அனைத்தையும் கூறிக் கொண்டு இருந்தால்.​

ஜெயலட்சுமி செல்லும் பொழுது சக்தி மறுபடியும் குறுக்கிட்டான். சக்தி, “அக்கா இன்னொரு விஷயம் நாளைக்கு நலுங்கு வைக்கணும் இல்லையா நிலாவுக்கு” என்றான்.​

ஜெயலட்சுமி, நிலாவின் சொத்தை பற்றி பேசியது எதையுமே சக்தி ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.​

ஏனெனில், தன் அக்கா நிலா சிறு வயதிலிருந்து இந்த சொத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்று மிகவும் நுணுக்கமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கும் தெரிந்த ஒன்று.​

ஜெயலட்சுமி, “அதெல்லாம் எதுக்கு டா இப்போ” என்றார் எரிச்சலாக. சக்தி, “இல்ல அதையெல்லாம் செய்தால் தான் நம்ப நல்லவங்களா தெரிவோம்” என்றான். ஜெயலட்சுமி, “சரி என்னமோ நீயே பாத்து பண்ணு” என்றாள்.​

மறுநாள் பரபரப்பாக வீட்டில் நலுங்குக்கான ஏற்பாடு எல்லாம் சக்தி தலைமையில் ஆரம்பமானது.​

விக்ரம் கூறியதும் சந்தோஷமாக சென்ற சுஜிதா நிலாவிடம் சென்று, “நிலா நீ எதுக்கும் பயப்படாதே உன் வாழ்க்கை கண்டிப்பா சந்தோஷமாக தான் அமையும். நான் வாக்கு தருகிறேன்” என்றாள்.​

நிலா, “என்ன டி உளருர இன்னும் இரண்டு நாள்ல என் தலையெழுத்தே மாறப்போகுது. நானே பல குழப்பத்தில் இருக்கிறேன் நீ வேற சும்மா இரு” என்றாள்.​

சுஜிதா, “நீ எதையும் நினைத்து குழம்பாதே உனக்கு எது நடந்தாலும் எல்லாம் நல்லதாக தான் நடக்கும். இந்த கல்யாணம் உன் தலையெழுத்தை கண்டிப்பாக மாற்றம்“ என்றாள் விக்ரம் கூறியதை மனதில் வைத்து கொண்டு.​

நிலா அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள். சக்தி, “நிலா குட்டி” என்று அங்கு வந்தான்.​

சக்தி, “சுஜிதாவை பார்த்து நீ கூறியது சரிதான். இந்த கல்யாணம் கண்டிப்பா நிலாவோட தலையெழுத்தை மாற்றும் நான் அவளை ராணி மாதிரி வைத்து பார்த்துபேன்” என்றான் புன்னகையோடு.​

நிலா பயந்து கொண்டு சுஜிதாவின் பின்னால் சென்று மறைந்தாள்.​

அதை பார்த்த சக்திக்கு கோபம் தலைக்கேறியது, “நான் உன் வருங்கால மாமா என்னை பார்த்து நீ ஏன் பயப்படுற? உனக்கு அறிவு இருக்கா இல்லையா?”.​

“நீ என்ன பயந்தாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணினால் ஒரே ரூம்ல என் கூட தான் இருக்க போற புரிஞ்சுதா.​

“நீ இப்படி பண்றதினால் எனக்கு எரிச்சலாக இருக்கு” என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.​

விக்ரம் சுஜிதாவிடம் கூறிய சீக்ரெட் என்னவாக இருக்கும்? சக்தி, நிலாவை பிடித்திருந்தாலும் ஏன் எப்பொழுதும் நிலா கிட்ட கோபமாக நடந்து கொள்கிறான்?.​

 

rebe novel

Moderator

பாகம் – 6​

சக்தி தலைமையில் நிலாவுக்கு தடபுடலாக நலுங்கு ஏற்பாடு ஆரம்பம் ஆனது. மஞ்சள் நிறத்தில் பட்டுப் புடவையும், அதில் கருநீலம் நிறத்தில் ஆன ஜரிகை பாடரும், பஃப் கை வைத்த பிளவுஸும் நிலாவை மங்களகரமாக காட்டியது.​

நிலாவுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் நலுங்கு வைக்க ஆரம்பித்தார்கள். விக்ரம் தூணில் சாய்ந்த படி அவளை ரசித்துக் கொண்டு இருந்தான்.​

மீன் போன்ற கண்களும், கூர்மையான நாசியும், அளவான கோவை பழம் போன்ற உதடும், மேக்கப் இல்லாமலே பளிச் என்று இருக்கும் அவள் நிறமும், நலுங்கு வைக்கும் மஞ்சள் கன்னத்தில் ஒட்டி இருக்க மேலும் அழகாய் காட்டியது அவள் முகத்தை.​

விக்ரம் அவனை அறியாமலே வைத்த கண் எடுக்காமல் நிலாவை விழுங்கும் படி பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான்.​

அதை பார்த்த ஒரு பாட்டி, “கல்யாண மாப்பிள்ளை விட்டா இப்பவே தாலி கட்டிடுவார் போலயே. இப்படி பொண்ணை கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் பார்க்க கூடாது” என்று கேலி செய்தார்.​

சுஜிதா கிசுகிசுப்பாக விக்ரமிடம், “அண்ணா என்ன அவசரம் நாளைக்கு கல்யாணம் ஆகத்தானே போகுது அப்புறம் பொறுமையா பார்த்துக்கோங்க உங்க பொண்டாட்டிய” என்றால் கிண்டலாக.​

அதில் விக்ரம் வெட்க பட்டு கன்னம் இரண்டும் சிவந்து போனது. சக்தி அதை காதில் வாங்கிவிட்டு சுஜிதாவை பார்த்து, “இங்க வா” என்றான்.​

சுஜிதா, “ஐயையோ, இவனா” என்று சற்று தயக்கத்துடன் அவன் அருகில் சென்றாள் .​

சக்தி தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றியவாறு, “இப்போ நீ என்ன சொன்ன விக்ரம் கிட்ட” என்றான் .​

சுஜிதா, “நான் எதும் தப்பாக சொல்லலையே” என்றால் அவனுடன் மல்லுக்கட்டியபடி. சக்தி, “உன்கிட்ட நான் சிரிச்சு பேசுறேன் என்று இப்படி திமிரா பேசாத எனக்கு இப்படி பேசுறது பிடிக்காது“ என்று அவளை பற்களை கடித்து அடக்கினான்.​

சுஜிதா வாயை சுழித்துக் கொண்டு ‌‌ம்கூம் என்று முணுமுணுத்தாள்.​

சக்தி, “நிலா குட்டிக்க கல்யாணம் எப்போ ஆனாலும் சரி நான் மட்டும் தான் மாப்பிள்ளை புரிஞ்சுதா.​

கண்டவனையும் என் நிலா குட்டிக்கு புருஷன்னு சொல்லாத“ என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.​

மேலும் பேச்சை தொடர்ந்தவன், “அப்புறம் இன்னொரு விஷயம் மறந்துடாத என்னை தவிர நிலா வேறு யாரையாவது கல்யாணம் பண்ணா அவ முகத்தில் ஆசிட் அடிக்கவும் தயங்க மாட்டேன்”.​

“எனக்கு கிடைக்காத நிலா வேறு யாருக்கும் கிடைக்க விட மாட்டேன் ஞாபகம் இருக்கட்டும்” என்றான் உச்ச கட்ட கோபத்தில்.​

அவன் பேசியதில் சுஜிதா சற்று பயந்து போனால். ஆனால், அதை முகத்தில் காட்டாமல் சுஜிதா, “என்ன நீ இப்படி எல்லாம் பேசுற உங்க அக்கா தானே கல்யாணம் ஏற்பாடு பன்னாங்க“ என்றாள் மெதுவான குரலில்.​

சக்தி, “ஆமா நீ சொல்றது உண்மை தான். என் அக்கா தான் கல்யாணம் ஏற்பாடு பண்ணாங்க. ஆனா, நாளைக்கு எங்க அக்கா முன்னாடி நான்தான் நிலாவுக்கு தாலி கட்டுவேன் அதை யாராலும் மாற்ற முடியாது புரிஞ்சுதா” என்றான்.​

சுஜிதா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு, “என்ன ஆனாலும் என்னோட நிலா கழுத்தில் உன்னை தாலி கட்ட விட மாட்டேன் டா” என்றாள் இவளும் போட்டிக்கு.​

சக்தி, “போடி குட்டி கத்திரிக்கா” என்று தலையில் தட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான் இவளை ஒரு ஆலாக கூட மதிக்காமல்.​

பிறகு மாப்பிள்ளை நலுங்கு ஆரம்பம் ஆனது. சக்தி விக்ரமை அழைத்துச் சென்று நலுங்குக்கு அமருமாறு கூறினான்.​

விக்ரம் அமர்ந்தவுடன் நலுங்கு வைக்க ஆரம்பம் ஆனது. சக்தி, “முதல் நலுங்கு நான் வைக்கிறேன்” என்றான் அனைவரின் முன்பும்.​

ரவி, “டேய் மச்சான் நீ என்ன லூசா டா? நீ எதுக்கு டா இவனுக்கு எல்லாம் நலுங்கு வைக்கணும்” என்று கிசுகிசுப்பாக கேட்டான். சக்தி, “எல்லாம் ஒரு காரணமாக தாண்டா” என்றான்.​

அங்கு இருந்த ஒரு பாட்டி, “என்னப்பா தம்பி நீ சின்ன பையன் நீ எப்படி நலுங்கு வைப்ப? கல்யாணம் ஆன பெரியவங்க தான் வைக்கணும்” என்றார்.​

அதற்கு சக்தி, “பாட்டி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. விக்ரம் எனக்கு ரொம்ப நெருக்கம். விக்ரமுக்கு முதலில் நான் தான் நலுங்கு வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” என்று விட்டு மறுவார்த்தை மற்றவர்கள் பேசுவதற்கு முன் அவன் நலுங்கை ஆரம்பித்தான்.​

சக்தி, விக்ரம் கன்னத்தில் சந்தனம் தடவிக் கொண்டே “இந்த நலுங்கை பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டுக்காதே. நான் உன்கிட்ட சொன்னது எல்லாம் நினைவுல இருக்கட்டும்”.​

“நாளைக்கு மன மேடையில் தாலி கட்டும் நேரத்தில் நீ நிலா பக்கத்தில் இருந்து எழுந்து விட வேண்டும் இல்லை என்றால் உன் தம்பி உயிரோடு உனக்கு கிடைக்க மாட்டான்” என்றான் சிரித்துக் கொண்டே கிசு கிசுப்பாக.​

விக்ரம் எதுவும் கூறாமல் அவனை பார்த்துக் கொண்டு இருந்தான். சக்தி, “என்ன அப்படி பாக்குற. உன் தம்பியை நீ காலையில் நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் பூங்காவில் சந்திச்சு பேசிட்டு தானே வந்த”.​

“ஆனா, அவன் நல்லபடியா வீடு போய் சேர்ந்தானா இல்லையான்னு உனக்கு தெரியுமா?“ என்றான் கேள்வியாக.​

விக்ரம் அதில் பதட்டமாக, “நீ என்ன சொல்ற என் தம்பிக்கு என்ன ஆச்சு” என்றான்.​

சக்தி, “ரொம்ப பதறாதே உன் தம்பி என் தம்பி மாதிரி பத்திரமா அவனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கிறேன். நாளைக்கு கல்யாணம் முடிந்த உடன் அவனை அனுப்பி விடுவேன்”.​

விக்ரம், “நான் எல்லாத்துக்கும் சரி தானே சொன்னேன். அப்புறம் ஏன் என் தம்பியை கடத்துனீங்க?” என்றான் கோபத்தை அடக்கி பயந்த முகத்தோடு.​

சக்தி, “எல்லாம் ஒரு காரணமாக தான். நாளைக்கு நீ ஏதாச்சும் என் பேச்சைக் கேட்காமல் போயிட்டேனா அதுக்கு தான்” என்றான்.​

அதற்குள் கூட்டத்தில் ஒருவர் “எவ்வளவு நேரம் பா நீங்களே பேசிக்கிட்டு இருப்பிங்க மத்தவங்க எல்லாம் நலுங்கு வைக்க வேண்டாமா மணி ஆகுதுல“ என்றவுடன் சக்தி சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.​

பிறகு அனைவரும் நலுங்கு வைத்து முடித்து விட்டு கிளம்பி விட்டார்கள். அனைவரும் படுக்கை அறைக்கு சென்றுவிட நிலாவுக்கு இரவு தூக்கம் சுத்தமாக வரவில்லை.​

நாளைக்கு என்ன நடக்குமோ என்ற பயம் அதிகமாக இருந்தது. கண் முன்பு அன்றைக்கு ஒரு நாள் சக்தி தன் முகத்தில் தண்ணீரை ஊற்றி ஆசீட் என்று பயம் காட்டியது நினைவில் வந்து போனது.​

ஒரு பக்கம் விக்ரம் செல்போனில் தன் தோழன் ராஜேஷ்க்கு அழைத்து, “அங்க என்ன நடக்குது உண்மையான விக்ரம் எங்கே இருக்கிறான்” என்றான்.​

ராஜேஷ், “அவன் நம்ம பிளான் படி அந்த ரூம்ல தான் இருக்கிறான்” என்றான்.​

விக்ரம், “அவன் தம்பி காலையில் என்னை வந்து சந்தித்து விட்டு செல்லும் பொழுது சக்தி அவனை கடத்தி விட்டானாம் அவனை காப்பாற்ற வேண்டியது நம்ம கடமை தான் விடியறதுக்கு முன்னாடி நீ அவனை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டு போனை துண்டித்தான்.​

இன்னொரு பக்கம் சக்தி தூக்கம் இல்லாமல் நடந்து கொண்டே இருந்தான். அவன் மனதில் ஒரு வேலை சுஜிதா சொன்னது போல் நாளைக்கு நிலாவுக்கு என் கூட கல்யாணம் நடக்கவில்லை என்றால்? விக்ரம் உடன் அக்கா திருமணம் செய்து வைத்து விட்டால்? நான் என்ன செய்வது.​

ஆனால், இது என் வாழ்க்கை. அக்கா என்ன சொன்னாலும் நான் கேட்க போறது இல்லை என்று மிகவும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தான்.​

சக்தி தன் தோழர்கள் உடன் பேசிக் கொண்டு இருக்கும் போது ரவி, “மச்சான் பேசாம நான் ஒரு ஐடியா தரவா” என்றான்.​

சக்தி என்ன என்பது போல் பார்த்தான். ரவி, “பேசாமல் நைட் நம்ம நிலாவை கடத்திட்டா என்ன?” என்றான் கேள்வியாக. சக்தி மண்டைக்குள் பல்பு எரிந்தது போல் தோன்றியது.​

சக்தி, “நீ சொல்றதும் சரி தான் டா. அந்த குட்டி கத்திரிக்கா விக்ரம் கிட்ட புருஷன்னு சொன்னதில் இருந்து என் மனசுக்கு என்னமோ தப்பாவே தோணுது”.​

“பேசாம நைட்டு நீ நம்ப ஆளுங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் நிலாவை கடத்திடு” என்று சிறிய போதையுடன் ஒரு பிளான் செய்தான்.​

நிலா உறங்கிக் கொண்டிருந்த சுஜிதாவை எழுப்பி அமர வைத்து. நிலா, “சுஜி நாளைக்கு என் தலையெழுத்தே மாற போகுது டி. நான் கிணற்று மேல் நிற்பது போல் தோன்றுது”.​

“எந்த பக்கம் குதித்தாலும் ஆபத்து எனக்கு தான் டி. விக்ரமை திருமணம் செய்தாலும் எனக்கு பிடிக்காத கல்யாணம் தான். அதே சமயம் சக்தியை நான் திருமணம் செய்ய வில்லை என்றால் அவன் என்னை கொல்லவும் தயங்க மாட்டான்”.​

“அவன் பைத்தியம் மாதிரி என் பின்னாடி சுற்றிக்கொண்டே இருக்கிறான். அவனை பார்த்தாலும் எனக்கு மிகவும் பயமாக இருக்கு” என்றாள் அழுது கொண்டே.​

சுஜிதா, “நீ எதுக்கும் கவலைப்படாதே நான் எப்பவும் உனக்கு நல்லது மட்டும் தான் நடக்க விடுவேன் புரிந்ததா. நாளைக்கு உனக்கு நல்லது மட்டும் தான் நடக்கும்”.​

“விக்ரம் ஒண்ணும் கெட்டவன் கிடையாது அவனை பார்க்க கொஞ்சம் கோவக்காரன் போல் தெரிகிறதே தவிர அவர் மனசு வெள்ளை தான்” என்றால் விக்ரமுக்கு வரிஞ்சு கட்டிக் கொண்டு.​

நிலா, “வாய மூடு டி. நீ வேற என்னை இரிடேட் பண்ணாத. எனக்கே நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயமா இருக்கு” என்றாள்.​

பிறகு சுஜிதா கடினப்பட்டு நிலாவை சமாதானம் செய்து உறங்க வைத்தாள். இருவரும் ஒன்றாக கட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.​

விடியற்காலை 3 மணி அளவில் சக்தி அவன் ஆட்களை அனுப்பி வைத்தான் நிலாவை கடத்துவதற்கு.​

ரவி மற்றும் இரண்டு ஆட்கள் வந்து அவள் அறையில் கட்டிலில் பார்க்க அங்கு நிலா மற்றும் சுஜிதா இருவரும் ஒன்றாக போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.​

மூவருக்கும் இவர்களில் யார் கல்யாணப் பெண் என்று சிறு குழப்பம் வந்துவிட்டது ரவி உட்பட.​

இவர்கள் மூவரும் சற்று போதையில் இருந்ததால் சக்திக்கு போனில் தொடர்பு கொண்டு, “மச்சான் இங்க இரண்டு பேர் இருக்காங்க இவர்களில் யார் நிலா? என்று குழப்பமாக உள்ளது டா” என்றான்.​

சக்தி, “பைத்தியக்காரனே இதுக்கு தான் சரக்கு அடிக்காதீங்க சரக்கு அடிக்காதீங்கன்னு சொன்னேன் என்னமோ நான் புடுங்கிடுவேன் நான் செஞ்சிடுவேன் என்று வசனம் பேசிக்கிட்டு இருந்தியே இப்போ பாரு என்ன ஆச்சுன்னு” என்று திட்டினான்.​

பிறகு, “என்னுடைய நிலா செஞ்சு வச்ச செல மாதிரி இருப்பா பார்த்தாலே தெரியும். அவ தான் அழகா இருப்பா”.​

“அவ கையில் மருதாணி எல்லாம் வைத்து இருந்தாள்” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே ரவி போனை வைத்து விட்டான் .​

 

rebe novel

Moderator

பாகம் – 7​

ரவி முதலில் உறங்கிக் கொண்டு இருந்த போர்வையை விலக்கி உற்று பார்த்தான். அதில் சுஜிதா உறங்கிக் கொண்டு இருந்தாள்.​

வட்டமான முகமும், சிறிய நாசியும், அளவான உதடும், அழகாக தெரிந்தது அவன் கண்களுக்கு.​

மேலும், கைகளில் மருதாணி வைத்து இருப்பதை பார்த்து உறுதி செய்து விட்டு அவளை கடத்தி விட்டார்கள்.​

மறுநாள் யாருக்கும் காத்தில்லாமல் கதிரவன் தன் தலையை வெளியே நீட்டினான்.​

ஜெயலட்சுமி, சக்தியை அழைத்து “இது எல்லாம் நம்ம தலையெழுத்து இவ கல்யாணத்துக்கு எல்லாம் நம்ம இரண்டு பேரும் வேலை செய்ய வேண்டியதா இருக்கு“ என்றார் வெறுப்பாக.​

ஜெயலட்சுமி, “சரி அதை எல்லாம் விடு” என்று சக்தியிடம் ஒரு சில வேலைகளை ஒப்படைத்தாள்.​

அக்கா கொடுத்த அந்த பத்திரம் வேலையில் சக்தி கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டான்.​

ஆகையால், சக்தி, ரவிக்கு செல்போனில் அழைத்து “மச்சான் நிலாவ பத்திரமா வச்சி இருக்கியா?” என்றான் மெதுவாக.​

ரவி, “அதெல்லாம் பக்காவா முடிச்சிட்டேன் டா நம்ம ரூம்ல தான் கட்டி வச்சிருக்கேன்“ என்றான் உறுதியாக.​

ரவி பக்கத்தில் இருக்கும் ஒருவனை அனுப்பி செக் செய்து கொண்டான்.​

அவனுக்கு நிலா முகம் தெரியாததால் ஒரு பெண் இருப்பதை பார்த்து விட்டு, “ரவி சார் பொண்ணு இருக்கு” என்றான்.​

ரவி அதை அப்படியே ஃபோனில் சொல்லி விட்டான். அதில் தைரியமாக சக்தி எப்படியும் இந்த கல்யாணம் நின்று விடும் என்று மனக்கணக்கு போட்டு விட்டு அக்கா கூறிய படி சொத்து பத்திரங்கள் விஷயமாக வக்கில்லை அழைத்து வர சென்றான்.​

ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வருமாறு கூறினார். சக்தி, சிரித்துக் கொண்டே விக்ரமை அழைத்து வந்தான்.​

விக்ரம், “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க” என்றான் சக்தியை பார்த்து. சக்தி, “ஆமா என்னோட நிலா குட்டி எனக்கு கிடைக்க போகிறால் இல்லையா அந்த சந்தோஷம் தான்” என்றான் புன்னகையோடு.​

சக்தி விக்ரமை அழைக்க வரும் முன்னதே விக்ரம் யாருக்கோ செல்போனில் அழைத்து “நிலா என்ன செய்து கொண்டு இருக்கிறாள்?” என்று கேட்டுக் கொண்டான். மறுமுனையில் இருந்தவன், “பாஸ் மேடம் ரெடி ஆகிட்டு இருக்காங்க” என்றான்.​

சக்தி விக்ரமை பார்த்து, “நிலாவை கட்டிக்க முடியல என்று நீ ஒன்னும் கவலைப்படாதே. எனக்கும் நிலாவுக்கும் திருமணம் ஆன பின் நானே உனக்கு ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தான்.​

விக்ரம் சரி என்று தலை அசைத்துக் கொண்டு மேடையில் ஐயர் க்கு எதிரில் அமர்ந்தான்.​

நிலா ரெடியாகி விட்டு இந்த சுஜிதா எங்க போய் தொலைஞ்சா என்றே தெரியலையே முதலில் திருமணத்தை நிறுத்தலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.​

பிறகு விக்ரமை திருமணம் செய்து கொள் என்று சொல்லிக் கொண்டே இருந்தால். அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கை தான் அமைத்து தருவேன் என்னை நம்பு என்றால்.​

கடைசியில் இப்பொழுது அவள் எங்கு போனால் என்றே தெரியவில்லையே என்று அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.​

ஐயர் மணப்பெண்ணை அழைத்து வருமாறு கூறினார். பெண்கள் நிலாவை அழைத்துச் சென்று விக்ரம் அருகில் அமர வைத்தார்கள்.​

சக்தி அந்த சமயத்தில் மண்டபத்தின் வெளியே அவன் ஆட்கள் உடன் பேசிக் கொண்டு இருந்தான், “இன்னும் ஏன் கல்யாணம் பெண்ணை காணவில்லை என்று யாருமே குரல் கொடுக்கவில்லை” என்று யோசனையோடு நின்றிருந்தான்.​

சரி நம்பளே உள்ள போய் பார்ப்போம் என்று மண்டபத்தினுள் நுழைந்தான். அங்கு அவன் கண்டது விக்ரம் மற்றும் நிலா இருவருக்கும் கல்யாண புடவை மற்றும் வேஷ்டி சட்டை ஐயர் கொடுத்து சம்பிரதாயம் செய்து கொண்டு இருந்ததை.​

சக்தி அதிர்ச்சியாக நிலாவை பார்த்து கொண்டே உள்ளே சென்றான். பிறகு ஐயர் துணிகளை கொடுத்துவிட்டு அதை அணிந்து வருமாறு கூறினார். இருவரும் துணிகளை மாற்ற அறையை நோக்கி சென்று விட்டார்கள்.​

சக்தி அவசரமாக ரவிக்கு ஃபோன் செய்து, “பைத்தியக்காரனே என்ன காரியம் பண்ணி வச்சிருக்க நிலாவ பத்திரமா பாத்துக்கோ தானே சொன்னேன். ஆனா நீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்க“ என்று திட்டிக் கொண்டிருந்தான்.​

ரவி ஒன்றும் புரியாமல், “என்ன மச்சான் சொல்ற நிலா இங்க தாண்டா இருக்கா அவ முகத்துல இருக்க துணியை கூட இன்னும் நான் எடுக்கவே இல்லை. அதுமட்டும் இல்ல இன்னும் அவ மயக்கத்துல தான் இருக்கா“ என்றான்.​

சக்தி, “முதல்ல போய் அவ முகத்தில் இருக்கும் துணியை எடுத்துட்டு பாரு நீ யாரை கடத்தி வச்சிருக்க என்று. நிலா இப்போ மண்டபத்தில் தான் இருக்கா“ என்றான்.​

ரவி குழப்பமாக, “அது எப்படி மச்சான் முடியும் என் முன்னாடியே தான் அவ உட்கார்ந்து இருக்கா அப்புறம் எப்படி மண்டபத்தில் இருக்க முடியும்”.​

“நீ வேறு யாரையாவது பார்த்து இருக்க போற” என்று மறுபடி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான் .​

அதில் ஆத்திரம் அடைந்த சக்தி, “நான் மட்டும் அங்க வந்தேன்னு வச்சுக்கோ உன்னை கொன்னு போட்டு விடுவேன் மரியாதையா போய் முகத்தில் இருக்கும் துணியை எடுத்து விட்டு பாரு” என்றான்.​

ரவி, “இரு பார்க்கிறேன் கத்தாதே“ என்று விட்டு முகத்தில் இருந்த துணியை விளக்கினான். அதிர்ச்சியாக ரவி, “டேய் மச்சான்” என்றான்.​

சக்தி, “சொல்லித்தொல யாரை தூக்கிட்டு வந்த இருக்க?” என்றான். ரவி, “என்னை மன்னிச்சிடு டா. இவ நிலாவோட ஃப்ரெண்ட் சுஜிதா டா” என்றான் .​

சக்தி, “அறிவு கெட்ட நாயே இதுக்கு தான் நான் அவ்வளவு தூரம் சொல்லிக்கிட்டே இருந்தேன். நைட்டு எவனும் குடிக்காதீங்க அப்படின்னு”.​

“என்னமோ நான் புடுங்கிடுவேன், நான் பண்ணிடுவேன்னு சொன்னியே இப்போ பாரு எந்த லட்சணத்துல நீ பண்ணி இருக்க என்று“ என்று கோபமாக​

“முதலில் சுஜிதாவை யாருக்கும் தெரியாமல் மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்து விடு. இங்கு யாரும் அவளை கானும் என்று தேட வில்லை சீக்கிரம் கூட்டிட்டு வா” என்று விட்டு போனை துண்டித்து விட்டான்.​

துணி மாற்ற வந்த நிலா ‘சுஜிதா எங்க போனானே தெரியலையே இரவு என் கூட தான் தூங்கிட்டு இருந்தா. ஆனா, காலையில் இருந்து அவளை காணும்’.​

‘ஒருவேளை வீட்டுக்கு போயிட்டு இருப்பாலோ? அப்படி இருந்தாலும் இன்னும் ஏன் வரவே இல்லை செல் போனை கூட இங்கயே வைத்து விட்டு போயிருக்கா’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .​

விக்ரம் மிகவும் சந்தோஷமாக கிளம்பி கொண்டு இருந்தான். நிலா கடமைக்கு என்று கல்யாணத்துக்கு தயாராகி விட்டு. தன் அம்மாவின் புகைப்படத்தை எடுத்து மேஜையின் மீது வைத்து.​

‘அம்மா நீங்க இருந்து இருந்தால் இந்நேரம் இந்த கல்யாணம் நடந்து இருக்காது என்னை இந்த கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப கட்டாயப் படுத்துறாங்க’ என்று கண் கலங்கி புகைப்படத்தை பார்த்து பேசிக்கொண்டு இருந்தால் .​

‘இந்த கல்யாணத்தால் எனக்கு நல்லது நடக்குமா அல்லது என் வாழ்க்கை பாழாகி விடுமா என்று எனக்கு தெரியவில்லை. இந்த கல்யாணத்தை நிறுத்த சுஜிதா எனக்கு உதவி செய்வேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்’.​

‘ஆனால், இப்போ அவளையும் காணோம் எனக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. என் தலையெழுத்து என்னவோ அதுபடி நடக்கட்டும். நான் ராசி இல்லாதவள் சின்ன வயசிலேயே நீங்களும் என்னை விட்டு போயிட்டீங்க’.​

‘அதேபோல், நான் ஆசைபட்ட என் துருவ் கூட என்னை விட்டு போயிட்டான். நீங்க என் கூட இருந்த வரைக்கும் தான் எனக்கு எல்லாம் நல்லதாக நடந்துச்சு. அப்பா கூட நீ இருந்த வரைக்கும் என் கிட்ட பாசமாக தான் இருந்தாங்க’.​

‘ஆனால், இப்போ அவர் இருந்தும் எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை. இனி என் தலையெழுத்து படி இந்த கல்யாணம் நடக்கட்டும்’ என்று அழுது கொண்டே கூறினாள்.​

அவள் கூறி முடிக்கும் நேரத்தில் அவள் தலையில் இருந்த மல்லிப்பூ அந்த புகைப்படத்தின் மேல் விழுந்தது.​

அந்தப் பூவை பார்த்த நிலா, ‘என்னம்மா பூ விழுந்திருக்கு நீ என்னை ஆசிர்வாதம் செய்ததாக நான் நினைத்து கொள்கிறேன்’ என்று தன் மனதில் இருந்து பேசிக் கொண்டு இருந்தால்.​

ரவி இன்னும் மயக்கம் தெளியாத சுஜிதாவின் கையைப் பிடித்து உயிர் இருக்கிறதா என்று பரிசோதித்தான்.​

பின்பு அவளை காரில் எடுத்து போட்டு கொண்டு கூட இரண்டு ஆட்களையும் ஏற்றிக் கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்தான்.​

ஐயர், “மாப்பிள்ளையை அழச்சிட்டு வாங்கோ” என்றார். ஜெயலட்சுமி மண்டபத்தில் முதல் வரிசையில் முதல் ஆளாக கையில் சொத்து பத்திரத்துடன் அமர்ந்திருந்தாள்.​

விக்ரம் முதலில் வந்து மன வரையில் அமர்ந்தான். அவனைப் பார்த்த ஜெயலட்சு, ஏலனமாக சிரித்து கொண்டு மனதுக்குள் உன் முகத்தை பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்க மாதிரி தெரியுது எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரம் தான்.​

அப்புறம் இந்த வீட்டை விட்டு உன்னையும் எதுக்கும் உபயோகம் இல்லாத அந்த நிலாவையும் சேர்த்து துரத்தி விடுவேன்.​

தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் இரண்டு பேரும் கஷ்ட பட போறிங என்று மனக்கணக்கு போட்டு சந்தோஷப்பட்டாள்.​

மறுபக்கம், “ஐயர் பொண்ணை அழச்சிட்டு வாங்கோ” என்றார். நிலா நடந்து வருவதை பார்த்த விக்ரம் கண்களை சிமிட்ட நேரமில்லாமல் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.​

மெரூன் நிறத்தின் புடவையில், மிதமான ஆபரணங்களுடன், தலை நிறைய மல்லிகை பூ வைத்து மிகவும் அழகாக கோவில் சிலையை போல் தெரிந்தாள்.​

நிலா வருவதை பார்த்த சக்தி கண்கள் சிவந்து போனது. இவ்வளவு அழகாக இருக்கிறாளே இவளை எப்படி நான் விட முடியும் என்று அவள் அழகை மனதுக்குள் வர்ணித்து கொண்டிருந்தான்.​

கண்டிப்பாக நான் நிலாவை விட்டுக் கொடுக்க மாட்டேன். இப்போது நான் நிலாவை விட்டுக் கொடுத்தால் அது எனக்கு அவமானம்.​

சின்ன வயதில் இருந்து நிலா எனக்கு தான் என்று அவள் மேல் ஆசை கொண்டு உள்ளேன். அவளை மிரட்டி உள்ளேன்.​

ஆனால், இப்பொழுது நான் விட்டு விட்டால் அது என்னை நானே அசிங்கப்படுத்திக் கொண்டதற்கு சமம் என்று மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான்.​

மணவறையில் வந்து அமர்ந்தால் நிலா அவள் அமர்ந்த சற்று நேரத்தில் சக்தி விக்ரமை பார்த்து முறைத்து எழுந்தரி டா என்று கண்களால் கட்டளையிட்டான்.​

விக்ரம் அதை பார்த்து சிரித்து கொண்டே எந்த ஒரு சலனமும் இன்றி திரும்பி கொண்டான். அதில் கோவம் கொண்ட சக்தி உன்னை என்று பற்களை கடித்துக் கொண்டு எழுந்து நின்று சத்தமாக “மரியாதையா என் நிலா பக்கத்தில் இருந்து எழுந்தரி டா” என்றான்.​

 

rebe novel

Moderator

பாகம் – 8​

சக்தி கோபமாக அனைவரின் முன்பும் எழுந்து நின்று விக்ரமை பார்த்து மரியாதையாக என் நிலா பக்கத்தில் இருந்து நீ எழுந்திரு. என் நிலா பக்கத்தில் அமர உனக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூச்சல் போட்டான்.​

அனைவரும் சக்தியை திரும்பி பார்த்தார்கள். பக்கத்தில் அமர்ந்து இருந்த ஜெயலட்சுமி, “டேய் என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க” என்றால் குழப்பமாக. .​

சக்தி எதையும் காதில் வாங்காமல், “சொல்லிக்கிட்டே இருக்கேன்ல இப்போ நீ எழுந்திருக்க போறியா இல்லையா” என்று மீண்டும் கத்தினான்.​

ஜெயலட்சுமி உடனே எழுந்து நின்று, “உனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு. கல்யாணம் நடக்க போற நேரத்துல இப்படி பண்ணிக்கிட்டு இருக்க வாய மூடிட்டு இரு கொஞ்ச நேரம்“ என்றாள்.​

சக்தி, “அதெல்லாம் முடியாது அக்கா என்னோட நிலாவ நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். கண்டிப்பா விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான் கோபமாக.​

முதல் முறையாக தன் அக்காவை எதிர்த்து பேச ஆரம்பித்தான். அதில் ஜெயலட்சுமி பயங்கர கோபம் கொண்டாள், “எவ்வளவு திமிர் இருந்தா என்னையே எதிர்த்து இப்படி பேசுவ. அதுவும் கேவலம் இந்த நிலாவுக்காக என்னை எதிர்த்து பேசுறியா. நான் உனக்கு அக்கா டா” என்றார்.​

சக்தி, “தலை குனிந்த படி அதனால் தான் என்னால் உங்களை மீறி எதுவும் பண்ண முடிய வில்லை”.​

“அதற்காக என்னால் என் நிலாவ மறக்கவும் முடியாது. என் வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி தேவையோ அது போல் நிலாவும் தேவை“ என்று விட்டு நேராக மன மேடைக்கு சென்று விக்ரம் சட்டை காலரை பிடித்து தூக்கினான்.​

விக்ரம் எழுந்தவுடன் நிலா பதறிப் போய் அழுது கொண்டே அவளும் எழுந்து நின்று கொண்டாள்.​

விக்ரம் சக்தியை பார்த்து, “கைய எடுங்க பாஸ்” என்றான். சக்திக்கு இவன் மிகவும் கூலாக இருப்பது எரிச்சலை ஊட்டியது.​

சக்தி, “என்னடா திமிரா உனக்கு? எல்லாத்தையும் மறந்துட்டியா என்று பக்கத்தில் இருக்கும் நிலாவை எட்டிப் பார்த்து இவன் இன்னைக்கு வந்தவன். ஆனா உனக்கு என்னை பத்தி தெரியும் இல்ல. எந்த தைரியத்தில் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த” என்றான் பற்களை கடித்த படி.​

நிலா எதுவும் கூறாமல் அழுது கொண்டே கைகளை பிசைந்தபடி நின்றிருந்தால். விக்ரம் திரும்பி நிலாவை பார்த்து ஆறுதல் ஆக அவள் கைகளைப் பிடித்து பயப்பிடாதே என்று தடவி விட்டான்.​

விக்ரம், “பாஸ் எதுக்கு இப்போ நிலா கிட்ட போறீங்க. நிலா கிட்ட போகனும் என்றால் என்னை தாண்டி தான் போகணும்” என்றான்.​

சக்தி, “உனக்கு குடும்பமே இல்லை. இப்போ இருக்கிற உன் தம்பியை ஆச்சு காப்பாத்திக்கனும் என்று ஆசை இல்லையா? நேத்து நைட் தானே எல்லாத்தையும் ஞாபகம் காமிச்சுட்டு போனேன். உனக்கு என்ன ஞாபக மறதியா“ என்றான் ஒற்றைப் புருவத்தை தூக்கி மிரட்டும் தோணியில்.​

விக்ரம், “இப்போ என்ன பாஸ் பண்ண சொல்றீங்க” என்றான் பயப்படுவது போல். சக்தி, “மரியாதையா இந்த இடத்தை விட்டு ஓடிடு இல்லை என்றால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது“ என்றான்.​

ஜெயலட்சுமி, “சக்திதிதிதி...” என்று அந்த இடமே அதிரும்படி கத்தினாள். சக்தி காலரைப் பிடித்து அவனை திருப்பி பளீர் என்று அறைந்தாள். அந்த சத்தத்தில் அனைவரும் அதிர்ச்சியாக இவர்களை பார்த்தார்கள்.​

ஏனெனில், ஜெயலட்சுமி மற்றவர்கள் முன்பு தன் தம்பியை எந்த ஒரு காரணத்திற்காகவும் திட்டவோ அடிக்கவோ மாட்டாள். முதல் முறையாக ஊர் காரர்கள் அனைவர் முன்பும் தன் தம்பியை கைநீட்டி விட்டாள்.​

ஜெயலட்சுமி, “ஏன்டா இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்கிற. இந்த கல்யாணம் நான் ஏற்பாடு பண்ணது என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்றே இப்படி பண்ணுகிறாயா?”.​

“நான் ஜெயலட்சுமி எந்த ஒரு காரியத்தை பண்ணனும் என்று நினைக்கிறேனோ அது கட்டாயம் நடந்தே ஆகணும்” என்று விட்டு சக்தியை கையோடு கீழே இழுத்துச் சென்றாள்.​

ஜெயலட்சுமி ஊர்க்காரர்கள் பக்கம் திரும்பி, “அனைவரும் அமருங்கள்” என்று விட்டு ஐயர் பக்கம் திரும்பி, “மந்திரத்தை சொல்லுங்கள் சீக்கிரம் கல்யாண வேலை முடியட்டும்” என்று சொல்லி விட்டு அமர்ந்துக் கொண்டாள்‌‌ தன் தம்பியோடு.​

சக்தி கோபமாக தன் அக்காவிடம் இருந்து கையை உதறினான். ஜெயலட்சுமி, “சக்தியை பார்த்து இங்க பாருடா நான் எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் பண்ணுவேன். உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”.​

“ஆனால், அது இவ கூட இல்லை. இவள் எதுக்குமே ராசி இல்லாதவள். இவளுக்கு நான் இப்போ கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு காரணமே” என்று கையில் இருக்கும் பத்திரத்தை காமித்து, “இந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதற்காக தான்”.​

“இவள் அம்மாக்காரி மொத்த சொத்தையும் நிலா பேர்ல எழுதி வச்சிருக்கா. அதுவும் நிலாவும் அவளோட வருங்கால புருஷனும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் இந்த சொத்து செல்லும் அப்படின்னு சொல்லி எழுதி வச்சிருக்கா”.​

“அந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் நான் வேற வழி இல்லாமல் இவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஊர்க்காரங்க முன்னாடி நல்லவங்க மாதிரி நம்ம வேஷம் போட்டுட்டு இருக்கோம்”.​

“நீ இப்படி எல்லாம் பண்ணினா அப்புறம் எப்படி சொத்து நம்ம கைக்கு வரும்” என்றால் கோபமாக யாருக்கும் கேட்காதபடி கிசுகிசுப்பாக.​

சக்தி, “அதுக்கு ஏன் அக்கா வேற யாரையாவது கட்டி வைக்கணும். நானே நிலாவை கட்டிக்கிறேன் நானும் அவளும் சேர்ந்து கையெழுத்து போட்டால் இந்த சொத்து செல்லும் அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு. உனக்கு தேவை சொத்து தானே” என்றான்.​

ஜெயலட்சுமி, “இல்ல சக்தி நிலாவை வேற ஒருத்தனுக்கு கட்டி வச்சிட்டு இந்த சொத்து மொத்தத்தையும் நம்ம எழுதி வாங்கிக்கிட்டு. பிறகு உனக்கு வேற பணக்கார வீட்டு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா நமக்கு இந்த சொத்தும் கிடைச்சிடும்”.​

“உன்ன கட்டிக்க போற அந்த பொண்ணு வீட்ல இருந்தும் நிறைய சொத்து வரும. நம்ம பணக்காரர்கள் ஆகிடலாம்“ என்று முகம் நிறைய புன்னகையோடு தன் தம்பியின் மனதை மாற்றுவதற்கு அவள் மனதில் இருக்கும் திட்டத்தை எல்லாம் கூறிக் கொண்டிருந்தாள்.​

சக்தி, “என்ன இருந்தாலும் என் மனசுல நிலா மட்டும் தான் இருக்கா” என்று அந்த இடத்தை விட்டே சென்று விட்டான்.​

ஜெயலட்சுமி தன் தம்பி கவலைப்படுவதை நினைத்து துளி அளவு கூட கவலைப் படவில்லை. தனக்குத் தேவை சொத்து இன்னும் சிறிது நேரத்தில் மொத்தமாக கிடைத்துவிடும் என்று சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள்.​

நிலாவை பார்த்து விக்ரம் கண்களை சிமிட்டி அழாதே என்று கூறி நிலா கைகளைப் பிடித்து அமரும்படி இழுத்தான். நிலாவுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.​

வெளியே சென்ற சக்தி மனதுக்குள் இவன் தம்பியை நான் கடத்தி வைத்து இருக்கிறேன். அப்படி இருந்தும் இவனுக்கு ஒரு துளி பயம் கூட இல்லையே எப்படி? என்று மிகவும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான் .​

அப்பொழுது தான் அவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது ஆரம்பத்தில் இருந்தே விக்ரம் சக்தியிடம் நடந்து கொண்ட விதத்தை வைத்து எதுவோ தப்பாக உள்ளது என்று.​

அப்போத்தில் இருந்தே இந்த விக்ரம் திமிராக தான் இருக்கிறான் என்று விட்டு மீண்டும் மனவரை நோக்கி சென்றான்.​

அவன் பின்னாடியே ஒரு கும்பல் கோட் சூட்டுடன் வந்தது. ஆனால், அதை சக்தி கவனிக்கவில்லை.​

ரவி சுஜிதாவை அழைத்து வந்து கொண்டிருக்கும் பொழுது காரில் சுஜிதா கண் விழித்து விட்டால்.​

சுஜிதா, “என்ன எங்கடா கூட்டிட்டு போறீங்க?” என்றால் ரவியை பார்த்து, “நீ அந்த சக்தி கூட இருக்கும் பையன் தானே?” என்று கூச்சல் போட்ட ஆரம்பித்தாள்.​

ரவி, “கத்தாத டி நாங்களே ஆள் மாறிடுச்சுன்னு டென்ஷனா இருக்கோம்“ என்றான்.​

சுஜிதா, “புரியாமல் என்ன ஆள் மாறிவிட்டது” என்றாள். ரவி, “நேற்று நைட் நிலாவை கடத்தலாம் என்று வந்தோம் ஆனா நாங்க பண்ண ஒரு சின்ன தப்பில் மாத்தி உன்னை கடத்திட்டு போயிட்டோம்”.​

“இப்போ உன்னை யாருக்கும் தெரியாமல் மண்டபத்தின் வாசலில் கூட்டிட்டு போய் விடனும்” என்றான். சுஜிதா, “என்ன டா சொல்றீங்க” என்று பதறிப் போனால்.​

ரவி, “ஆமா இப்போ சக்தி வேற எங்களை எல்லாம் என்ன பண்ணுவான் என்று பயமாக இருக்கு. எங்க ப்ளானே சொதப்பிடிச்சு” என்று பயத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தான்.​

சுஜிதா, “என்னை இங்கேயே இறக்கி விடுங்க நானே போயிக்கிறேன். உங்கள எல்லாம் நான் என்ன பண்றேன்னு பாருங்க. போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணாமல் நான் விட மாட்டேன்” என்றாள்.​

ரவி, “நீ போலீஸ் கிட்ட போனினா அப்புறம் இதை உன் வயிற்றில் சொறுகிட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கோ” என்று தன் கையில் இருக்கும் கத்தியை காண்பித்து மிரட்டினான்.​

ரவி, “இங்க நடந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரிய கூடாது. நீ எங்க போன அப்படின்னு கேட்டால் நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ எங்களை மட்டும் வெளியில் சொன்ன உன்னையும் கொன்னுட்டு உன் குடும்பத்தையும் கொன்னுடுவேன்” என்று மிரடினான்.​

அதில் சற்று மிரண்டு போயிவிட்டாள் சுஜிதா. மண்டபத்தின் வாசலில் சுஜிதாவை இறக்கிவிட்டு அனைவரும் தனித்தனியாக சென்று விட்டார்கள்.​

திருமணத்தை நிறுத்துவதற்காக சக்தி மண்டபத்தின் உள்ளே சென்றான். ஐயர், “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றவுடன் தாலியை கையில் வாங்கின விக்ரம் நிலா கழுத்தின் அருகில் எடுத்துச் சென்றான்.​

சக்தி, “டேய் விக்ரம் உனக்கு உன் தம்பியை பற்றி கவலையே இல்லையா?” என்று கர்ஜிக்கும்படி கத்தி ஒரு புகைப்படத்தை காண்பித்தான்.​

ஊர்க்காரர்கள் அனைவரும் அதிர்ச்சியாக திரும்பி சக்தியை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.​

அதில் நாற்காலியில் அவன் தம்பி அமர்ந்து இருப்பதாகவும் கயிறு போட்டு அவனை கட்டி வைத்த படியும் இருந்தது.​

விக்ரம் எதற்கும் அசராமல் மூன்று முடிச்சு போட்டு விட்டு அப்புறம் தான் திரும்பினான்.​

சக்தி, “கண்கள் சிவக்க நீ என் நிலாவை என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட இல்ல. உன் குடும்பத்தை நான் அழிக்கிறேன் டா” என்று சபதம் போட்டு செல்போனில் யாருக்கோ டயல் செய்தான்.​

விக்ரம், “ஒரு நிமிஷம் நேத்து எடுத்த புகைப்படத்தை நீ இப்போ என்கிட்ட காட்டுன. ஆனால், நீ இன்னைக்கு எடுத்த புகைப்படத்தை இன்னும் பாக்கலையா?“ என்றான்.​

அவன் செல்போனில் இருந்து ஒரு படத்தை எடுத்து கான்பித்தான். அதில் அவன் தம்பி இல்லாமல் வெறும் நாற்காலி மட்டுமே இருந்தது.​

அதை பார்த்து அதிர்ச்சியாக சக்தி யாருக்கோ அழைத்தான் ரிங் போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்கவில்லை.​

விக்ரம் சிரித்து கொண்டே, “என்ன யாரும் எடுக்கலையா“ என்றான். சக்தி, “உன்னை....” என்று ஆக்ரோக்ஷமாக கத்தினான்.​

அதே சமயம் சக்திக்கு பின்னால் இருந்து நான்கு பேர் விக்ரமை பார்த்து, “பாஸ் உங்களை அப்பா அழைத்து வர சொன்னாங்க” என்றார்கள்.​

 

rebe novel

Moderator

பாகம் -9​

சத்தி திரும்பி பார்க்க அங்கு கோட் சூட் உடன் ஒரு கும்பலே நின்று இருந்தது.​

விக்ரம், நிலா கையை பிடித்து அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே சென்றான்.​

ஜெயலட்சுமி, “விக்ரமை பார்த்து நீ... என்று ஒற்றை விரலை நீட்டி நீ யாரு? “என்றாள்.​

விக்ரம் வெளியே செல்ல காலை எடுத்தவன் அப்படியே நின்று ஜெயலட்சுமி பக்கம் திரும்பினான், “ நான் நீங்க நினைக்கிற விக்ரம் கிடையாது. நான் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பண்ற விக்ரம் தேவ்“ என்றான் கம்பீரமாக.​

ஜெயலட்சுமி, அதிர்ச்சியாக “மிஸ்டர் தேவ்...” என்றாள். விக்ரம், ஆட்களில் ஒருவன் “மல்ட்டி மில்லியன் ராஜேந்திரன் தேவ் ஓட முதல் பையன் விக்ரம் தேவ்” என்றான்.​

நிலா, ஒன்றும் புரியாமல் பயந்து விழித்தபடி நின்று இருந்தாள். நிலாவுக்கு விக்ரம் யாரென்றே தெரியவில்லை. இதில் அவன் தந்தை ராஜேந்திரன் யார் என்று எவ்வாறு தெரியும் .​

விக்ரம், நிலா கையை பிடித்து அழைத்துக் கொண்டு கம்பீரமாக காரில் ஏறி சென்று விட்டான்.​

நிலா செல்லும்பொழுது வாசலில் நின்றிருந்த தன் தோழி சுஜிதாவை பார்த்து கொண்டு எதுவும் பேச முடியாமல் கண்கள் கலங்க மௌனமாக விக்ரம் பின்னாலே சென்றாள்.​

சுஜிதா, “ஜாடையாக நான் போன் பண்றேன் பயப்படாதே” என்று ஆறுதல் கூறினாள்.​

ஆனால், நிலா இருக்கும் மனநிலைக்கு அந்த ஆறுதல் போதவில்லை. எங்கு செல்கிறோம்? ஏன் செல்கிறோம்? இவன் யார்? எதற்காக நம்மை கல்யாணம் செய்தான்?​

என்று ஒன்றும் புரியாமல் பயந்த சுபாவத்தோடு இருக்கும் நிலா இனி இவன் நம்மை என்ன செய்வானோ.​

இவன் நம்மை ஏதேனும் செய்து விட்டால் கூட கேட்க ஆல் இல்லை என்று உச்சகட்ட பதட்டத்தில் கண்ணீரோடு சென்றாள்.​

சக்தி, கோபமாக சுஜிதாவிற்கு எதிரே வந்து நின்றான். சுஜிதா, இவனை சிறிது அச்சத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.​

சக்தி, கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது. எப்போதும் தைரியமாக பேசும் சுஜிதா க்கு தற்போது பயம் தொற்றிக் கொண்டது.​

சக்தி, “ஏய் திமிர் பிடித்தவளே உன்னால் தான் டி இன்னைக்கு என் நிலா என்னை விட்டு போயிட்டா. இனி அவ எனக்கு கிடைக்கவே மாட்டா”.​

“ஆனால், அவ எனக்கு கிடைக்காமல் போனதுக்கு காரணமாக இருந்த உன்னை நான் நிம்மதியாக இருக்கவே விட மாட்டேன் டி” என்றான் கோபமாக.​

சுஜிதா, “நான் ஒன்றும் பண்ண வில்லையே“ என்றால் மெதுவான குரலில்.​

சக்தி, “நீ தான் ஆரம்பத்தில் இருந்து நிலா எனக்கு கிடைக்க மாட்டான்னு அபசகுனமா சொல்லிக்கிட்டே இருந்த. இப்போ நீ சொன்ன மாதிரியே தான் நடந்திருக்கு”.​

“அப்போ எல்லாத்துக்கும் காரணம் நீ தானே. அன்னைக்கு நலுங்கு வைக்கும் போது கூட இந்த விக்ரம் அருகில் சென்று நிலாவுக்கு புருஷன் நீங்கதான் அப்படின்னு நீ சொன்ன”.​

“அது நான் காதில் வாங்கினேன். அப்படின்னா உனக்கு இவன் யார் என்று முன்னாடியே தெரியுமா?” என்றான் சந்தேகமாக பார்த்து.​

சுஜிதா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைப்போடு தெரியும் என்று தலையை அசைத்தால். சக்தி வேறு எதுவும் கேட்க வில்லை அவளிடம்.​

ஊர் காரர்கள் அனைவரும் சலசலத்து கொண்டு இருந்தார்கள். பளீர் என்று ஒரு சத்தம் கேட்டது அனைவரும் திரும்பி சுஜிதாவை பார்த்தார்கள். சுஜிதா கன்னத்தில் கை வைத்த படி நின்று இருந்தாள்.​

சக்தி, சஜிதா கையைப் பிடித்து நேராக மனமேடைக்கு அழைத்துச் சென்று அவளை தள்ளிவிட்டான். அதில் சுஜிதா தொப் என்று மன மேடையில் அமர்ந்தால்.​

பக்கத்தில் அமர்ந்த சக்தி கையில் இருந்த தாலியை அவளிடம் காமித்து, “இது உன் தோழி நிலா கழுத்தில் கட்டலாம் என்று வாங்கினது”.​

“ஆனால், அவளை வேறு ஒருத்தன் கட்டிக்கிட்டு போறதுக்கு நீ காரணமா இருந்திருக்க உன்னை எப்படி பழி வாங்குகிறேன் என்று பார்” என்று அந்த தாலியை சுஜிதாவின் கழுத்தில் கட்டி விட்டான்.​

ஊர் காரர்கள் அனைவரும் அந்த சம்பவத்தை பார்த்து வாயில் கை வைத்து என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, “ஜெயலட்சுமி அம்மா நீங்க என்ன பாத்துட்டு சும்மா இருக்கீங்க. உங்க தம்பி பன்றது ரொம்ப பெரிய தப்பு” என்று சண்டைக்கு கிளம்பி விட்டார்கள்​

ஜெயலட்சுமி ஏற்கனவே நிலா கதையில் என்ன செய்வது என்று தெரியாமல் கையில் இருக்கும் பத்திரத்தை பார்த்து விழித்துக் கொண்டு இருந்தால்.​

அது போதாது என்று சக்தி செய்த இந்த காரியத்தில் அங்கேயே சேரில் அமர்ந்து விட்டால்.​

ஊர் காரர்கள் அனைவரும், “உங்க தம்பி பண்ணது மிகப்பெரிய தப்பு, மிக பெரிய பாவம் ஒரு பொண்ணோட விருப்பமில்லாம இப்படி கல்யாணம் பண்றது ரொம்ப பெரிய தவறு” என்று சண்டைக்கு கிளம்பினார்கள்.​

சுஜிதா, “இது எங்க குடும்ப பிரச்சனை நாங்க பார்த்துக்கிறோம்” என்றாள். அனைவரும் வாயை மூடி கொண்டார்கள்.​

சக்தி, சுஜிதாவை அங்கேயே விட்டுவிட்டு அவள் முகத்தைக் கூட பார்க்க விருப்பம் இல்லாமல் அவன் மட்டும் வீட்டிற்கு செல்ல முன்வந்தான்.​

ஜெயலட்சுமி ஊர் காரர்கள் முன்பு நல்லவளாக காட்சியளிக்க வேண்டும் என்று சக்தியை பார்த்து “அவளை உன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டீர்க்கு போ” என்றாள்.​

சக்தி, “என்னால் முடியாது அக்கா. இவ பண்ண தப்புக்காண தண்டனை தான் இது“ என்றான். ஜெயலட்சுமி, “அக்கா சொல்றேன்ல அவளை கூட்டிட்டு வீட்டுக்கு போ எதுவாக இருந்தாலும் வீட்டில் பேசிக்கலாம்” என்றாள்.​

மறு வார்த்தை இன்றி சக்தி அவள் கையைப் பிடித்து விறு விறு என முன்னே நடந்தான். அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடையும், ஓட்டமும் ஆக சுஜிதா அவனை வெரித்த படி பார்த்துக் கொண்டே அவன் பின்னாடியே சென்றாள்.​

சுஜிதா மற்றும் நிலா இருவரும் எந்த அளவுக்கு நெருக்கமாக, ஒன்றாக இருந்தார்களோ அதற்கு நேர் மாறாக இருவர் வாழ்க்கையும் அமைந்தது.​

கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகி போனது. இனி தன் வாழ்வில் என்ன நடக்கும் என்று இருவருக்கும் தெரியாமலே தன் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.​

விக்ரம் வீட்டை சென்று அடைந்தான். காரில் இருந்து இறங்கி வந்த விக்ரம் நிலா அமர்ந்திருக்கும் பக்கம் வந்து கதவை திறந்து விட்டான். விக்ரம், “நிலா பார்த்து கீழே இறங்கு” என்றான்.​

நிலா பயந்த படி மெதுவாக இறங்கினாள். நிமிர்ந்து வீட்டை பார்த்த நிலா கண்ணை அகல விரித்தாள். கடல் அளவுக்கு இருந்தது அந்த வீடு.​

நடந்து உள்ளே செல்ல தனி பாதையே இருந்தது. இரு பக்கமும் சிறு பூக்களோடு கார்டன் இருந்தது. வெளியில் இருந்து பார்த்த நிலா இந்த வீட்டில் இனி நாம் இருக்கப் போகிறோமா என்று ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.​

கார் ஹாரன் சவுண்டில் வெளியே வந்த ராஜேந்திரன் தேவ், “டேய் என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்க” என்று விட்டு பக்கத்தில் இருந்த ஆட்களைப் பார்த்தான்.​

மேலும் பேச்சை தொடர்ந்தவன், “உங்ககிட்ட நான் என்ன சொன்னேன் இந்த கல்யாணத்தை நிறுத்தி அவனை அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னா இப்படி கல்யாணம் பண்ணி பொண்ணு மாப்பிள்ளையாக கூட்டிட்டு வந்து இருக்கீங்க இப்போ இவனோட அம்மா வந்தா நான் என்ன சொல்லுவேன்”.​

“நல்லவேளை இந்த நேரம் பார்த்து அவ ஏதோ திருமணத்திற்காக வெளியே சென்று இருக்கிறால்” என்றான் படபடவென.​

விக்ரம், “அதற்கு நான் என்ன பண்ண முடியும் கல்யாணம் ஆயிடுச்சு அவ்வளவுதான். சீக்கிரம் யாரையாவது கூப்பிட்டு ஆரத்தி எடுக்க சொல்லுங்க. உள்ளே போகனும். எனக்கு ஆபீஸ் வேலை நிறைய இருக்கு” என்றான்.​

ராஜேந்திரன் வேலை ஆட்களை அழைத்து ஆரத்தி எடுக்குமாறு கூறினார். அங்கு வேலை செய்யும் சித்ரா ஆரத்தி எடுத்துவிட்டு, “உள்ளே செல்லுங்க ஐயா” என்றாள்.​

விக்ரம், நிலா கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு உள்ளே அடி எடுத்து வைக்க சென்றான்.​

நில்லுங்க என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கு அவன் சித்தி ராதிகா நின்றிருந்தால்.​

ராதிகா, “யாரை கேட்டு நீ இவளை கல்யாணம் செய்து கூட்டிட்டு வந்த. இந்த வீட்டுக்கு பெரிய பையன் இப்படி ஒன்னும் இல்லாதவளை கட்டிக்கிட்டு வந்து இருக்க”.​

“நம்ம குடும்பத்தையே அவமானப் படுத்துறியா. நம்ம குடும்பத்துக்கு இருக்கிற அந்தஸ்துக்கு எவ்வளவு பணக்கார பொண்ணுங்க லைன்ல வந்து நிக்கிறாங்க. உங்க அம்மாவோட கனவு உன்னோட கல்யாணம்”.​

“நீ இப்படி பண்ணுவேன்னு உங்க அம்மா கனவில் கூட நினைச்சு பார்த்திருக்க மாட்டாள். அவளை அங்கேயே விட்டுட்டு நீ மட்டும் உள்ளே போ” என்றார்.​

விக்ரம், “ஷி இஸ் மை வைஃப்” என்று அவள் தோள்பட்டையில் கை போட்டு இருக்கி அனைத்து நின்றான்.​

விக்ரம், “உள்ளே வந்தால் இருவரும் தான் வருவோம். முதலில் இவளை உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?“ என்றான்.​

நீங்கள் யார்? என்ற அந்த ஒற்றை வார்த்தையில் ராதிகா ஸ்தம்பித்து போய்விட்டாள். ராதிகா, நிலாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.​

அவர் பார்வையாலே தன்னை எரித்து விடுவார்களோ? என்று நிலா மனதுக்குள் நினைத்தாள்.​

விக்ரம் நேராக நிலாவை அழைத்துக் கொண்டு அவன் அறையை நோக்கி சென்றான். நிலா அவன் பின்னாடியே சென்றாள்.​

விக்ரம், “நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்று விட்டு விக்ரம் அமைதியாக அங்கு கட்டிலில் படுத்து விட்டான். வெகு நாட்களுக்கு பிறகு விக்ரம் தன்னுடைய அறையில் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.​

நிலாவை திருமணம் செய்வதற்காக ஒன்றும் இல்லாதவன் போல் நடித்து தரையில் படுத்து தூங்கி இவ்வளவு நாளாக கஷ்டப்பட்டவனுக்கு இப்பொழுது தூக்கம் மிகவும் அவசியமாகவும், நிம்மதியாகவும் இருந்தது.​

நிலா மாற்றுவதற்கு துணி இல்லாமல் பாத்ரூம் சென்று முகத்தை மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வெளியே வந்தாள். அதற்குள் விக்ரம் தூங்கிவிட்டான்.​

வெளிய வந்த நிலா கண்ணாடியை பார்த்து அழுது கொண்டிருந்தாள். இவ்வளவு வசதியாக இருக்கிறான் இவன் ஒற்றை அறையே நம் வீட்டில் பாதி அளவுக்கு இருக்கிறது.​

இவன் நமக்காக எதற்கு அங்கு வந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று முனங்கி அழுதால். முதலில் இவன் விழித்தவுடன் எதற்காக நம்மை திருமணம் செய்தான் என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தால்.​

 

rebe novel

Moderator

பாகம் – 10​

சக்தி வீட்டிற்கு சுஜிதாவை அழைத்துச் சென்றான். ஒரு வார்த்தை கூட அவளிடம் அவன் பேச விரும்ப வில்லை. வீட்டு வாசலில் அவள் கையை விட்டுவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான்.​

சுஜிதா, சுற்றி முற்றி பார்த்துவிட்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே நின்றிருந்தாள்.​

மண்டபத்தில் ஜெயலட்சுமி கோபமாக நின்று இருந்த போது ஊர்காரர்கள் அனைவரும், “உங்கள் தம்பி பண்ணியது ரொம்ப தப்பு”.​

“அந்த பெண்ணை இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போற மாதிரி போயிட்டு அப்புறம் வீட்டை விட்டு துரத்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள்”.​

“நாங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம். அப்புறம் பின்னாடி நீங்க பெரிய விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும்” என்று மிரட்டுவது போல் கூறினார்கள்.​

ஜெயலட்சுமி மனதுக்குள் என்னை பார்த்தாலே நடுங்கும் நீங்கள் எல்லாம் இன்று என்னை மிரட்டுகிறீர்களா என்று அதுவே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.​

ஜெயலட்சுமி எதுவும் கூறாமல் வண்டியை எடுங்கடா என்று விட்டு காரில் ஏறி வீட்டை சென்றடைந்தால்.​

வீட்டு வாசலில் சுஜிதா நின்று இருப்பதை பார்த்து ஊர் காரர்கள் யாராவது பார்த்தால் தப்பாக போய்விடும் என்று எண்ணினால்.​

ஜெயலட்சுமி சுஜிதாவை பார்த்து, “நீ ஏன் இங்கேயே நிக்கிற? உனக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிட்டு போவாங்கனு நினைப்பா“ என்று விட்டு ஜெயலட்சுமி சென்று விட்டாள்.​

பிறகு சுஜிதா தானாகவே உள்ளே சென்றால். ஜெயலட்சுமி, “சக்தி....” என்று அடி குரலில் இருந்து கத்தினாள்.​

சக்தி சரக்கு பாட்டிலுடன் குழறியபடி வந்து நின்றான். ஜெயலட்சுமி, “ஏண்டா மண்டபத்தில் இப்படி ஒரு காரியத்தை பண்ண” என்றார் கோபமாக.​

சக்தி, “நான் பண்ணது மட்டும் தான் உங்களுக்கு தப்பாக தெரியுதா?” என்றான் வெறுப்பாக.​

சக்தி, “நீங்க ஆரம்பிச்ச பிரச்சனை தான் இவ்வளவு பெருசா வந்து நிக்கிது. நீங்க சும்மா இருந்திருந்தால் இந்நேரம் நான் ஆசைப்பட்ட மாதிரி நிலா எனக்கு கிடைத்து இருப்பா”.​

“நீங்க ஆசைப்பட்ட மாதிரி சொத்தும் கிடைத்திருக்கும். ஆனா, உங்களோட பேராசையால் இப்போ இரண்டுமே போச்சு” என்றான் அக்காவை பார்த்து.​

ஜெயலட்சுமி, “நான் என்ன இவனையா மாப்பிள்ளையா கொண்டுட்டு வர நினைத்தேன். எனக்கு தெரிந்தவன் ஒருத்தன் மாப்பிள்ளை இருக்கு நீங்க கேட்ட மாதிரி ரொம்ப ஏழ்மையான குடும்பம்”.​

“இப்போ கொஞ்சம் நாள் முன்னாடி அவன் குடும்பமே இறந்துடுச்சு. ஒரே ஒரு தம்பி தான் இருக்கான் அப்படின்னு சொன்னாங்க. ஃபோட்டோ கேட்டேன் ஆனா ஃபோட்டோ இல்ல ஃபோன் நம்பர் இருக்கு பேசறீங்களா அப்படின்னு கேட்டார்”.​

“நானும் சரின்னு பேசினேன் பேரு விக்ரம் தான் சொன்னான். பெருசா எழுத்துக்கூட்டி படிக்கவும் தெரியாது அவனுக்கு என்று குடும்பமும் இல்லை”.​

“சரி நம்ம எதை சொன்னாலும் தலை ஆட்டுற மாதிரி ஒரு வீட்டு வேலைக்காரன் ஆக வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்”.​

“கல்யாணம் முடிந்த பிறகு சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு இவனையும் நிலாவையும் வீட்டை விட்டு துரத்தி விடலாம் என்றும் நினைத்தேன்”.​

“நான் எதிர்பார்த்த மாதிரி இவன் இருந்ததால் பெண் பார்க்க வர சொன்னேன். அப்புறம் எப்படி ஆள் மாறுச்சு என்று எனக்கு எப்படி தெரியும்“ என்றால் இவளும் கோபத்தின் உச்சத்தில்.​

சக்தி, “எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இவன் மேல் சந்தேகமாக இருந்தது” என்று விட்டு திரும்பும் பொழுது அங்கு சுஜிதா வந்து நின்றாள்.​

சக்தி, “அவளை பார்த்தவுடன் என்னோட பத்து வயசு முதல் இருந்த காதல் இப்படி மண்ணோட போயிடுச்சு எல்லாத்துக்கும் இவ தான் காரணம் இவளை யாரு வீட்டிற்குள்ள விட்டது. என் வீட்டை விட்டு வெளியே போ டி” என்றான் கோபமாக.​

சுஜிதா அழுதபடி அங்கேயே நின்றிருந்தாள். சக்தி, “இந்த நீலி கண்ணீர் வடிக்கிற வேலை எல்லாம் இங்க வேண்டாம். நீ என் காதலை பிரிச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட அதுக்கான தண்டனையை நீ காலம் முழுக்க அனுபவிக்கணும்”.​

“அதுக்காக மட்டும் தான் நான் உன் கழுத்தில் தாலி கட்டினேன். உயிரற்ற ஒரு ஜடம் போல் தான் நீ இந்த வீட்டில்” என்றான்.​

சுஜிதா அதிர்ச்சியாக கண்களை விரித்து சக்தியை பார்த்தால். இந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு எவ்வாறு இவன் இவ்வளவு பெரிய வார்த்தையை தன்னை பார்த்து கூறலாம் என்று பல கேள்விகள் அவளுக்குள் தோன்றியது .​

ஆனால், அதை எல்லாம் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.​

ஜெயலட்சுமி, “நீ முதலில் அவளுக்கு ஏன் தாலி கட்டின? சம்பந்தமே இல்லாம ஏற்கனவே நமக்கு நிலா விஷயத்துல பெரிய பிரச்சனை இருக்கு இதுல இவளை வேற கட்டிக்கிட்டு வந்து தொலச்சிட்ட”.​

“உனக்கு காதலிச்சாலோ அல்​

லது கல்யாணம் பண்ணினாலோ பெரிய இடத்து பெண்களைப் பார்த்து பண்ண தெரியாதா?”.​

“காதலிச்சதும் அந்த ஒன்னுத்துக்கும் உதவாத நிலா. இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கதும் ஒண்ணுமே இல்லாத பேங்க் மேனேஜர் பொண்ணு. ஏன்டா இப்படி படுத்துற” என்றார் எரிச்சலாக.​

சக்தி, “அக்கா உனக்கு தெரியாது நீயும் நானும் தான் நிலா விஷயத்துல முட்டாளா இருந்திருக்கிறோம். ஆனா, இவளுக்கு எல்லாமே தெரியும் அந்த விக்ரம் யார் என்று இவளுக்கு முன்னாடியே தெரியும்”.​

“ஆனா, இவ நம்ம யார் கிட்டயும் சொல்லாமல் மறைத்து இருக்கா “ என்றான் நெருப்பை கக்கும் விழிகளோடு.​

ஜெயலட்சுமி அதிர்ச்சியாக சுஜிதாவை பார்த்து, “உனக்கு முன்னாடியே விக்ரமைப் பற்றி எல்லாம் தெரியுமா?” என்றார்.​

சுஜிதா அமைதியாக இருந்தால். சக்தி, “பார்த்தியா எப்படி மௌனமாக இருக்கா” என்று அவள் எதிர்பார்க்காமல் சட்டென்று அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்தான்.​

அதில் கண்ணம் எறிய அவள் அங்கேயே மயங்கி போனால். அன்பான அம்மா, அப்பா கிடைத்ததில் இருந்து இவள் யாரிடமும் அடி வாங்கியது கிடையாது. இதுவே முதல் முறை அதில் மயங்கி விட்டாள்.​

ஜெயலட்சுமி, “சரி விடு எல்லாம் முடிஞ்சு போச்சு. இதுக்கு அப்புறம் இவளை அடிச்சும், சாவடிச்சும் எந்த ஒரு பிரியோஜனமும் இல்லை. இதுக்கு அப்புறம் நடக்க வேண்டியதை பார்க்கலாம்” என்றாள்.​

சக்தி, “இதுக்கு அப்புறம் நடக்கிறதுக்கு என்ன இருக்கு” என்றான் குளறியபடியே.​

ஜெயலட்சுமி, “விக்ரமுக்கு இந்த வீட்டு பத்திரத்தில் நிலா விடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று நினைத்தது எல்லாம் தெரியும்”.​

“அதனால் ஏதாவது பிரச்சனை பண்ணுவானோ என்று எனக்கு சிறு அச்சமாக உள்ளது“ என்றார்.​

சக்தி, “எனக்கு வாழ்க்கையே போச்சு அதைப் பற்றி உனக்கு கவலை இல்லை. ஆனால், உனக்கு இந்த சொத்து வேண்டும் அப்படி தானே”.​

“எனக்கு இந்த சொத்தும் தேவை இல்லை ஒரு மண்ணும் தேவையில்லை” என்று போதையோடு அறையை நோக்கி சென்று விட்டான்.​

பிறகு ஜெயலட்சுமி தனியாகவே ஒரு பிளான் போட்டால்.​

விக்ரம் வீட்டில்.​

விக்ரம் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான். நிலா, குட்டி போட்ட பூனையைப் போல் அங்கும் இங்கும் உலாவி கொண்டே இருந்தால்.​

நிலா இவன் எழுந்தவுடன் முதலில் எதற்காக நம்மை திருமணம் செய்தான் என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் பல சந்தேகங்களுடன் இருந்தால்.​

விக்ரம் கண்களை சிமிட்டி சிமிட்டி லேசாக கண்களை திறந்தான். வானத்தில் இருக்கும் நிலவு போல் நிலாவின் முகம் அவன் கண்களுக்கு முழு நிலவாக தெரிந்தது.​

புன்னகையோடு கண்களை விரித்தவன் கட்டிலில் இருந்து இறங்கி நிலா அருகில் சென்றான். நிலா நடந்து கொண்டு இருந்தாள். அவள் முன்பு நெருக்கமாக வந்து நின்றான்.​

அவள் முகத்தில் சிறு தலை முடிகள் காத்தில் கலைந்து இருப்பதை காதோரம் ஒதுக்கி விட்டான்.​

அவள் காதோரம் தொங்கும் ஜிமிக்கியை சுண்டி விட்டு “சோ க்யூட் டார்லிங். இன்னுமா நீ பிரஷ் ஆகவே இல்லை? அதே ட்ரெஸ்ல இருக்க” என்றான்.​

நிலா கேட்க வந்த கேள்விகளை எல்லாம் விட்டுவிட்டு அவன் இவ்வளவு நெருக்கமாக வந்து கேள்வி கேட்டவுடன் பதட்டம் ஆகிப்போனால்.​

இதுவரை எந்த ஆம்பளைங்களுடனும் அவள் பேசியதே கிடையாது அப்படி இருக்கும் போது இவன் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை மட்டும் இல்லை என்று ஆட்டினாள்.​

விக்ரம், “ஏன் பேபி” என்றான். நிலா, “மாத்திக்க துணி இல்லையே” என்றால் சிறு குரலில்.​

விக்ரம் கையால் தலையை தேய்த்தபடி, “ஓ..ஷட்.. சாரி பேபி. நான் உன்கிட்ட டிரஸ்ஸ கொடுத்துட்டு பிரஷ்ஷாக சொல்லி இருக்கணும் தப்பு என் மேல் தான் சோ சாரி“ என்றான்.​

அவள் கையை பிடித்து அவன் இருந்த அறையினுள் ஓர் கண்ணாடியின் முன்பு நிர்க்க வைத்தான். விக்ரம், “இந்த கண்ணாடியில் கை வைத்து தள்ளு பேபி” என்றான்.​

நிலா என்ன என்பது போல் அவனையே பார்த்தால். விக்ரம் அவள் அப்படியே நிற்பதை பார்த்து. அவனே நிலா கைகளை பிடித்து கண்ணாடியின் மேல் வைத்து ஒருபுறமாக தள்ளினான்.​

அது திறந்தவுடன் அங்கு ஒர் பெரிய அறை இருந்தது. ட்ரெஸ்ஸிங் ரூம் அந்த ட்ரெஸ்ஸிங் ரூம் முழுக்க நிலாவுக்கு பார்த்து பார்த்து வாங்கியது போல் பல வண்ணங்களில் பல டிரஸ் இருந்தது. சுடிதார் மற்றும் சாரீஸ் ஒருபுறம்.​

மற்றொருபுறம் பல வண்ணங்களில் காலனி டிசைன் டிசைனாக இருந்தது. ஒரு பக்கம் ஸ்போர்ட்ஸ் ஷூ போல் இருந்தது மற்றொரு பக்கம் பல விதமான நகைகள் இருந்தது. நிலா இது அனைத்தையும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கேயே மயங்கி விட்டாள்.​

விக்ரம் மயங்கி விழும் நிலாவை தாங்கி இடுப்பில் கை வைத்தபடி பிடித்தான். கன்னத்தில் தட்டி “பேபி என்ன ஆச்சு?. வாட் ஹேப்பன் பேபி. ஆர் யூ ஓகே?“ என்று தட்டிக் கொண்டே இருந்தான்.​

ஆனால், நிலா கண் விழிக்கவில்லை. விக்ரம் தன் கைகளில் அவளை ஏந்தி கொண்டு கட்டிலில் படுக்க வைத்து தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்து, “பேபி எழுந்திரு பேபி என்ன ஆச்சு உனக்கு?” என்றான் பதட்டமாக .​

பிறகு நிலா கண் விழித்து அவனை இவ்வளவு நெருக்கமாக பார்த்தவுடன் வாய் வார்த்தை எழவில்லை. இதுவரை அவனை இவ்வளவு நெருக்கமாக பார்த்ததே கிடையாது.​

இரண்டு வாரமாக ஒரே வீட்டில் இருந்தும் இவ்வளவு நெருக்கத்தில் அவன் கண்களை இவள் பார்த்தது கிடையாது.​

முதல் முறையாக அவன் கண்களை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவுடன் அவள் கண்கள் வேறுபுறம் செல்ல மறந்து விட்டது போல் அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.​

இரண்டு நிமிடம் கழித்து விக்ரம் அவள் கண்ணுக்கு நேர் சுடக்கிட்டு “பேபி“ என்றான். நிலா, எந்த அசைவும் இல்லாமல் அப்படியே இருந்தால்.​

விக்ரம், “பேபி என்ன ஆச்சு?. ஏன் இப்படி பாக்குற?“ என்றான் பதட்டமாகமா. நிலா, “அது ஒன்றும் இல்லை” என்று திக்கியபடி கூறினாள்.​

விக்ரம் மெல்லிய புன்னகையோடு, “இப்படி பார்க்காத பேபி எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கு“ என்றான். நிலா பதட்டமாக நகர்ந்து அமர்ந்து கொண்டு, “இல்லை இல்லை சாரி” என்று கட்டிலில் இருந்து இறங்கி விட்டாள்.​

விக்ரம், “இப்ப எதுக்கு நீ இவ்வளவு பதட்டமா இருக்க சில் பேபி” என்றான்.​

 

rebe novel

Moderator

பாகம் – 11​

விக்ரம் மெல்லிய புன்னகையோடு “இப்படி பார்க்காத பேபி எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது“ என்றான். நிலா, பதட்டமாக நகர்ந்து அமர்ந்து கொண்டு “இல்லை இல்லை சாரி” என்று கட்டிலில் இருந்து இறங்கி விட்டாள்.​

விக்ரம், “இப்ப எதுக்கு நீ இவ்வளவு பதட்டமா இருக்க சில் பேபி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்றான்.​

நிலா எதுவும் கூறாமல் மொனமாக இருந்தாள். விக்ரம், “பேபி உனக்கு இந்த டிரஸ் எல்லாம் பிடிச்சிருக்கா? பாரு உனக்கு பிடிக்கலைன்னா எல்லாத்தையும் டோட்டலா மாத்திடலாம் எல்லாம் உன் இஷ்டப்படி தான் இனிமே“ என்றான்.​

நிலா அவனை லேசாக தலை சாய்த்து ஆச்சரியமாக பார்த்தால். நிலா, “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்“ என்றாள் தயக்கமாக. விக்ரம், “ என்ன கேளு பேபி?” என்றான்.​

நிலா, “அது வந்து நீங்க“ என்று ஆரம்பிக்கும் பொழுதே சித்ரா கதவை தட்டினாள்.​

விக்ரம், “ஓ மை காட் நீ இப்போ தான் முதல் முறை என் கிட்ட பேச ஆரம்பிச்ச அதுக்குள்ள யாரோ கதவை தட்டுராங்க“ என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்தான்.​

அங்கு சித்ரா நின்று இருந்தால், “ஐயா உங்க அம்மா வந்து இருக்காங்க உங்களை கூப்பிடுறாங்க” என்றாள்.​

விக்ரம், “ஒரு நிமிஷம் இரு பேபி அம்மா வந்திருக்காங்களாம் நான் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்” என்று திரும்பி வாசலை நோக்கி சென்றான்.​

நிலா திருவிழாவில் தொலைந்து போனது போல் முழித்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.​

நிலா பக்கம் திரும்பி பார்த்த விக்ரம, “பேபி உன்னை அம்மாக்கு இன்ட்ரோடியூஸ் பண்ணனும் இல்ல. இந்த வீட்டு பெரிய மருமகள் நீ தானே. சோ நீயும் வா கீழே போகலாம்“ என்றான்.​

நிலா அவனை பார்த்து, “நானா” என்று தயங்கினாள். விக்ரம் புரிந்து கொண்டான் நிலா பயப்படுகிறாள் என்று.​

விக்ரம், “பேபி நான் பார்த்துக்கிறேன் எல்லாத்தையும். நீ எதுக்கும் பயப்பட கூடாது நீ விக்ரம் தேவ் ஓட வைஃப்” என்று அவள் கைகளைப் பிடித்து கீழே அழைத்துச் சென்றான்.​

ராஜலட்சுமி வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராதிகா, “அக்கா இங்க என்ன காரியம் நடந்திருக்குன்னு தெரியுமா? உனக்கு” என்றார்.​

ராஜலட்சுமி, “இப்போ என்ன ஆகிடுச்சுன்னு நான் உள்ள வரும்பொழுதே இப்படி கூச்சல் போட்டுட்டு இருக்க? உனக்கு என்ன பிரச்சனை?” என்று ராதிகாவிடம் சிடுசிடுத்தாள்.​

ராஜேந்திரன், “ராதிகா நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்கியா. அவ இப்போ தானே உள்ளே வாரா அதுக்குல்ல உனக்கு என்ன அவசரம் இரு வரட்டும்” என்றான்.​

ராதிகா, “இல்ல மாமா என்ன நடந்துச்சுனு அக்கா கிட்ட சொல்லனும் இல்ல” என்றாள்.​

ராஜேந்திரன், “ஆமா உனக்கு இந்த குடும்பத்து மேல் ரொம்ப அக்கறை தான்” என்றான் குத்திக் காட்டும் படி.​

ராதிகா, “அக்கா மாமாவ பாரு இந்த வீட்டில் நடக்கும் பிரெச்சனைக்கு எல்லாம் நான் மட்டும் தான் காரணம் என்னும் படி சொல்கிறார்” என்றார்.​

ராஜேந்திரன், “அதான் உனக்கே தெரியுமே அப்புரம் நான் ஏன் அப்படி சொல்ல போறேன்” என்றான்.​

ராதிகா, “அக்கா இப்போ நான் சொல்ல போறதை கேட்க போறியா இல்லையா? அந்த விக்ரம் என்ன காரியம் பண்ணி இருக்கான்னு உனக்கு தெரியுமா?. இந்த வீட்டோட மரியாதையவே அவன் கெடுத்துட்டு வந்திருக்கான்“ என்றார்.​

ராஜலட்சுமி, ராஜேந்திரன் பக்கம் திரும்பி, “என்ன ஆச்சுங்க?” என்றாள். ராதிகா, “அக்கா நான் சொல்றேன்” என்றாள். ராஜலட்சுமி ஒற்றை கையை நீட்டி வாயை மூடு என்னும் படி கை காட்டினார்.​

ராஜலட்சுமி யின் பார்வையில் ராதிகா மௌனமாகி போனால். ராஜேந்திரன் பக்கம் திரும்பிய ராஜலட்சுமி, “நீங்க சொல்லுங்க என்ன ஆச்சு?“ என்றாள்.​

ராஜேந்திரன், “நீ முதல்ல பிரஷ் ஆகிட்டு வா அப்புறம் பேசிக்கலாம் எதுவாக இருந்தாலும்” என்றான்.​

ராஜலட்சுமி, “சரி” என்று விட்டு அரையை நோக்கி கால் எடுத்து வைத்தவள் திரும்பி ராஜேந்தீரனை பார்த்து, “விக்ரம் வந்துட்டானா?” என்றாள்.​

ராஜேந்திரன் பதில் உறைக்கும் முன்னே ராதிகா முந்திக் கொண்டால், “அக்கா அவன் தான் இந்த குடும்பத்தோட மானத்தையே வாங்கிட்டு வந்து இருக்கானே அவன் என்ன காரியம் பண்ணி இருக்கான்னு தெரியுமா உனக்கு?” என்று மறுபடியும் ஆரம்பித்தால்.​

அதில் ராஜலட்சுமி அங்கேயே நின்று விட்டாள். ராதிகா, “அக்கா அந்த விக்ரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான் கா“ என்றாள்.​

ராஜலட்சுமி, “என்ன?” என்று அதிர்ச்சியாகி போனால். ராதிகா, “ஆமாம் அக்கா அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என்றாள்.​

ராஜலட்சுமி, “என் பையன் இப்படி என்னிடம் சொல்லாமல் திருமணம் செய்ய மாட்டான் எனக்கு என் பையன் மேல் நம்பிக்கை இருக்கு” என்று ராஜேந்திரனை பார்த்தால்.​

ராஜேந்திரன் மற்றும் ராஜலட்சுமி கணவன் மனைவியை தாண்டி நண்பர்கள் போல் பழகுவார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ராஜேந்திரன் சொன்னால் ராஜலட்சுமி தட்ட மாட்டாள்.​

அதேபோல் ராஜலட்சுமி சொன்னாலும் ராஜேந்திரன் தட்ட மாட்டான்.​

இது வரைக்கும் இருவருக்கும் நடுவில் எந்த ஒரு பிரச்சனையும் வந்ததே கிடையாது. ஈகோ, பொறாமை, பொய் பேசுதல் என்று எதுவும் கிடையாது.​

இவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் முழுமையாக நம்புவார்கள். ஆகையால் ராஜலட்சுமி, “ராஜேந்திரனிடம் சென்று அவள் கூறியது அனைத்தும் உண்மையா?” என்றாள்.​

ராஜேந்திரன் மௌனமாக இருந்ததில் உண்மை என்று தெரிந்து கொண்ட ராஜலட்சுமி, “என்ன ஆச்சு நீங்க சொல்லுங்க?. இதுக்காக தான் என்னை பிரெஷ் ஆக சொல்லி உள்ளே துரத்திட்டே இருந்திங்களா?” என்றாள்.​

ராஜேந்திரன் எவ்வாறு சொல்வது என்று சிறு தாய்க்கத்துடன் இருந்தான். ராஜலட்சுமி, “சித்ரா” என்று குரல் கொடுத்தாள்.​

அடுப்பறையில் இருந்து ஓடி வந்த சித்ரா, “சொல்லுங்க அம்மா” என்றாள். ராஜலட்சுமி கோபமாக, “நீ போய் விக்ரமை கூட்டிட்டு வா” என்றாள்.​

சித்ரா சரி என்று படியில் ஏறி அவன் அறையை நோக்கி சென்று கதவை தட்ட ஆரம்பித்தாள், “விக்ரம் ஐயா.. விக்ரம் ஐயா.. அம்மா வந்துட்டாங்க உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றாள்.​

நிலா கையைப் பிடித்து விக்ரம் கீழே அழைத்துச் சென்றான். முதல் படியில் இருந்து தன் அம்மாவின் முகத்தை பார்த்தவுடன் அவன் புரிந்து கொண்டான் தன் அம்மா பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்பதை.​

ராஜலட்சுமி அவன் படியில் இறங்குவதை பார்த்து சிரித்தாள். அவன் பின்னே ஒலிந்த படி இறங்கி வந்த நிலாவை பார்த்து கோபம் அடைந்தாள்.​

அவன் கை நிலாவின் கையை இறுகப் பற்றி இருந்தது. அதை பார்த்த ராஜலட்சுமி பற்களை கடித்து, “என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க” என்று கர்சித்தார்.​

விக்ரம் பதில் அளிக்காமல் ராஜலட்சுமி அருகில் வந்து நின்று, “ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா” என்றான்.​

ராஜலட்சுமி தன்னிடம் ஆசிர்வாதம் கேட்டதில் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.​

இவன் கல்யாணம் பண்ணிட்டு வந்த கோபத்தையும் தாண்டி இவன் அம்மா என்று அழைத்தவுடன் அவள் கோபம் ஐஸ்கிரீமை போல் உருகிப் போனது.​

ஏனெனில், விக்ரம் சில காலமாக ராஜலட்சுமி மற்றும் ராஜேந்திரனிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.​

ஏன் விக்ரம் இவர்களிடம் பேசாமல் இருக்கிறான் என்ற காரணம் இன்னும் இவர்களுக்கே புரியாத புதிர்.​

அதனால் விக்ரம் தன்னை அம்மா என்று அழைத்தவுடன் ராஜலட்சுமி மிகவும் சந்தோஷமாகி போனால்.​

ராஜலட்சுமி, “என்னங்க இங்க வந்து நில்லுங்க விக்ரமை ஆசிர்வாதம் பண்ணனும். சித்ரா ஓடிப்போய் சாமி அறையில் இருந்து குங்குமமும், மஞ்சளும் எடுத்துட்டு வா” என்றாள்.​

சித்ரா பூஜை தட்டுடன் வந்து நின்றாள். விக்ரம் நிலா கையை பிடித்து இவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.​

ராதிகா, “அக்கா பாத்தியா இவதான் நம்ப விக்ரமை கட்டிக்கிட்டு வந்தவள் எப்படி கைய விடாம பிடிச்சுக்கிட்டே இருக்கா பாரு. இப்படித் தான் நம்ம பையனையும் மயக்கி வச்சிருக்கா” என்றாள். ராஜலட்சுமி யை ஏற்றி விடும் படி கூறினாள்.​

ஆனால், ராஜலட்சுமி ராதிகா எதிர்பார்த்ததற்கு மாறாக, “இவ வந்த நேரம் தான் என் பையன் என்கிட்ட பேச ஆரம்பித்திருக்கான்” என்று சந்தோஷமாக கூறினாள்.​

ராஜலட்சுமி மற்றும் ராஜேந்திரன் மனசார வாழ்த்தினார்கள். ஆனால், ராஜலட்சுமி மனதில் தங்கள் யாரிடமும் சொல்லாமல் ஏன் இவன் திருமணம் செய்து வந்தான்.​

எங்களிடம் சொல்லி இருந்தால் நாங்களே பெரிதாக கல்யாணம் பண்ணி வைத்து இருப்போமே. ஆனால், இவன் ஏன் எங்களிடம் சொல்லவில்லை” என்று யோசித்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் ஆசீர்வாதம் செய்து விட்டார்.​

பிறகு ராஜலட்சுமி, “விக்ரம் இவள் யார்? எப்படி உனக்கு தெரியும்? ஏன் எங்களிடம் இவளை பற்றி இவ்வளவு நாளாக கூறவே இல்லை?”​

“எங்களிடம் சொல்லி இருந்தால் நாங்களே உனக்கு திருமணம் செய்து வைத்து இருப்போமே“ என்றாள் கவலையாக.​

விக்ரம், “இவ பெயர் நிலா. எனக்கு இவளை ரொம்ப பிடித்திருந்தது. இவ சித்தி இவலுக்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்ய பார்த்தார்கள்”.​

“அதனால் தான் என்னால் உங்களிடம் எல்லாம் சொல்லி பொறுமையாக கல்யாணம் செய்ய முடியாமல் அவசரமாக நான் அவள் வீட்டிற்கு சென்று கல்யாணம் செய்து கொண்டேன். அதனால் என்னை மன்னித்து விடுங்கள்” என்றான்.​

நிலா விக்ரமையே பார்த்துக் கொண்டு இருந்தால் இவனுக்கு எப்படி என் சித்தி எனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயம் தெரியும் என்று யோசித்தால் அதற்கு மேல் விக்ரம் அவர்களிடம் எதுவும் கூறவில்லை.​

 

rebe novel

Moderator

பாகம் – 12​

ராஜலட்சுமி, “என்னங்க சரி நடந்தது எல்லாம் நடந்து போச்சு கல்யாணம் தான் இவன் இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டு வந்துட்டான். நம்ப ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணலாம்” என்றால் சந்தோஷமாக.​

விக்ரம் நான் இவங்களை பொருத்தவரை யாரோ தானே. அதனால் தான் நிலாவை நான் திருமணம் செய்து வந்தும் கூட என்னை கோபமாக திட்டவோ அடிக்கவோ இல்லை.​

நான் செய்தது தப்பு என்று கூட இவர்கள் சொல்ல வில்லை என்று மனதுக்குள்ளேயே நினைத்து மௌனமாக வருந்தினான்.​

ராஜேந்திரன், “நாளைக்கு நைட்டு ரிசப்ஷன் வச்சுக்கலாம்” என்று விக்ரமை பார்த்து கூறினார்.​

விக்ரம் எதுவும் கூறாமல் சரி என்று தலை மட்டும் அசைத்தான். பிறகு விக்ரம் நிலாவை அழைத்துக் கொண்டு மேலே சென்று விட்டான்.​

ராஜேந்திரன், ராஜலட்சுமியை அமர வைத்து, “லட்சுமி நீ விக்ரம் கிட்ட சண்டை போடுவ என்று தான் நான் நினைத்தேன். ஆனால், நீ எதுவும் கூறாமல் ரிசப்ஷன் வச்சுக்கலாம் என்று சொல்லிட்டியே”.​

“உன் குணம் எனக்கு நல்லா தெரியும். நீ ரொம்ப கோபப்பட்ட ஆனால் ஏன் உன் கோபத்தை விக்ரமிடம் காட்ட வில்லை?“ என்றார்.​

ராஜலட்சுமி, “என்னங்க இப்படி கேட்டுட்டீங்க நான் ரொம்ப கோவமா தான் இருந்தேன். அதுவும் அந்த பொண்ணை பார்த்தவுடன் எனக்கு பயங்கர கோவம் வந்ததும் உண்மைதான்”.​

“ஆனால், விக்ரம் ரொம்ப காலம் பிறகு இப்போ தான் என்னை அம்மா என்று அழைத்தான் கவனித்தீர்களா” என்றாள் முகம் நிறைய புன்னகையோடு.​

ராஜேந்திரன், “ஆமா லட்சுமி நானும் பார்த்தேன். அவன் அம்மா அப்படின்னு அழைத்தான். ஆனால் அவன் ஏன் நம்மிடம் சரியாக பேச மாட்டேங்கிறான் என்று தான் எனக்கு இன்னமும் புரியவில்லை”.​

“இருபது வருஷமாகி விட்டது நம்மிடம் சரியாக பேசி. வேண்டா வெருப்பாக தான் பேசுகிறான் எப்போழுதும்“ என்று வருத்தப்பட்டார்.​

ராஜலட்சுமி, “அதெல்லாம் பரவாயில்லை விடுங்க இனிமே நம்ம பையன் நமக்கு பிடிச்ச மாதிரி தான் நடந்துப்பான்னு நினைக்கிறேன்” என்றாள்.​

ராஜேந்திரன், “நீ சொல்வது போல் நடந்தால் எனக்கும் சந்தோஷம்தான்” என்று விட்டு ராஜேந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.​

ராதிகா, ம்ம்ச் என்று உதட்டை சுழித்து கொண்டு அவர்கள் பேசுவதை தெரிந்துக் கொள்வதற்காக அங்கேயே நின்றிருந்தார்.​

ராதிகா, “அக்கா அந்த நிலா யாரு? என்ன ஜாதி? என்று கூட நமக்கு தெரியலையே. அவளை போய் இவன் கட்டிக்கிட்டு வந்து இருக்கான். இவனை நீங்க ஒரு நாலு வார்த்தை நல்லா கேட்க வேண்டியது தானே“ என்றாள் கோபமாக.​

ராஜலட்சுமி, “அதெல்லாம் உனக்கு ஏன். நீ இந்த வீட்டில் எனக்கு தங்கையாக மட்டும் தான் இருக்க”.​

“உன் வேலையை மட்டும் நீ பார். விக்ரம் என் பையன் எனக்கு அவனை எப்படி பார்த்துக்க வேண்டும் என்று தெரியும்” என்றார்.​

ராதிகா, “விக்ரம் ஒன்னும் உங்க பையன் இல்லையே. ஆதித்யா தேவ் மட்டும் தான். உங்களுக்கு ஒரே பையன், ஒரு பொண்ணு அவ்ளோ தான்”.​

“இவன் ராஜேந்திரன் மாமாவோட அண்ணன் பையன் உங்க நினைவுல வச்சுக்கோங்க. அதனால் தான் இவன் திமிரா இருக்கான்” என்றாள்.​

ராஜலட்சுமி, “ஏய் வாய மூடு. நீ ரொம்ப அதிகமா பேசுர. இந்த வீட்ல நீ இருக்கனும்னு ஆசைப்பட்டேனா ஒரு ஓரமா போயிரு தேவையில்லாம என் குடும்ப விஷயத்துல நீ தலையிடாதே” என்று தன் தங்கையை திட்டி முறைத்து சென்றாள்.​

ஜெயலட்சுமி சக்தியை அழைத்து வந்து அமருமாறு கூறினாள். ஜெயலட்சுமி, “சக்தி இந்த சொத்து மொத்தத்திலும் நிலா கையெழுத்து மிகவும் தேவை”.​

“அப்பொழுது தான் இந்த சொத்தை நாம் கைப்பற்ற முடியும். அதற்கு எப்படியாவது நாம் விக்ரம் தேவ் வீட்டிற்குள் நுழைய வேண்டும்” என்றார்.​

சக்தி கோவமாக, “அவன் வீட்டுக்குள்ளேயே நான் கால் எடுத்து வைக்க மாட்டேன்” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.​

ஜெயலட்சுமி, “இவன் வேற ஒரு லூசு மாதிரி இருக்கான். இவ்ளோ சொத்துகளை நம்ப கையாளப் போகிறோம் அதை நினைவில் வைத்துக் கொள்ளாமல்”.​

“அந்த ஒண்ணுத்துக்கும் உதவாத நிலாவ நினைச்சு இன்னும் உருகிக் கிட்டு இருக்கான்” என்று திட்டி முறைத்தாள்.​

கோவமாக சென்ற சக்தி அவன் அரை கதவை திறந்து உள்ளே நுழைந்தான். அங்கு சுஜிதா கட்டில் மேல் ஓரமாக அமர்ந்து அழுதுக் கொண்டு இருந்தாள்.​

சுஜிதாவை பார்த்தவுடன் சக்திக்கு கட்டுக் அடங்காமல் கோபம் வந்தது. சக்தி, “ஏய் யாரைக் கேட்டு நீ இந்த ரூம்குள்ள வந்த? இது என்னோட ரூம்” என்றான் அதட்டலாக.​

சுஜிதா பயந்து எழுந்து ஓரமாக நின்றால். சக்தி, “முதலில் நீ இந்த ரூம்பை விட்டு வெளியே போ” என்றான். சுஜிதா பயந்து கொண்டே வாசல் வரை சென்றாள்.​

திரும்பி சக்தியை பார்த்து ஒரு பக்கம் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு கையில் ஒற்றை விரலை நீட்டியபடி, “என்னை இந்த ரூம்பை விட்டு வெளியே போக சொல்வதற்கு நீங்கள் யார்?“ என்றாள்.​

சக்தி பயங்கர கோபத்துடன், “இது என்னோட அறை நான் தான் சொல்லுவேன் இங்க யார் இருக்கனும் இருக்கக் கூடாது என்று“ என்றான்.​

சுஜிதா சிரித்துக் கொண்டே, “இதையெல்லாம் நீங்க என்னிடம் சொல்வதற்கு நான் ஒன்னும் மூன்றாவது மனுஷி கிடையாது”.​

“நான் உங்க மனைவி உங்க ரூம் இனிமே என்னோட ரூம் புரிஞ்சுதா” என்று விட்டு முந்தானியை தூக்கி தோள்பட்டையில் போட்டபடி திமிராக வந்து கட்டிலில் கால்மேல் கால் இட்டு அமர்ந்தாள்.​

சக்தி, “ஏய் என்ன ரொம்ப பேசிக்கிட்டு இருக்க” என்றான். சுஜிதா, “நான் ஒன்னும் நிலா கிடையாது எல்லாத்துக்கும் பயந்துகிட்டு அச்சச்சோ அச்சச்சோ அப்படின்னு சொல்வதற்கு. நான் சுஜிதா என்னை பத்தி உங்களுக்கு சரியா தெரியாது” என்றாள்.​

சக்தி, “நான் உன்னை என்னோட மனைவியா ஏத்துக்கவே இல்லை. உன்ன பழி வாங்குவதற்காக மட்டும் தான் உன் கழுத்தில் தாலியை கட்டினேன் புரிந்ததா” என்றான்.​

சுஜிதா, “நீங்க எதற்காக வேண்டும் என்றாலும் தாலி கட்டி இருக்கலாம். ஆனால் நீங்க தாலியை கட்டிடீங்க அவ்வளவு தான்”.​

“இனி நீங்களே நினைத்தாலும் நான் உங்களையும் இந்த வீட்டையும் இந்த ரூம்பையும் விட்டு வெளியே போக மாட்டேன்” என்றாள் உறுதியாக.​

சக்தி, “உன்னை எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறேன் என்று பார்” என்று சபதம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.​

சுஜிதா சிரித்துக் கொண்டே கண்ணாடி முன்பு நின்று கட்டி இருக்கும் புடவையை தடவிக் கொண்டே மனதுக்குள் நினைத்தால்.​

அன்று நலுங்கு முடிந்த இரவு நீ என்னை பின்புறம் கட்டி அணைத்ததில் அன்று நான் எவ்ளோ சந்தோஷப் பட்டேன் என்று உனக்கு தெரியுமா?.​

என்னை நீ கட்டி அணைத்ததில் ஒரு பக்கம் சந்தோஷமாக உணர்ந்தேன் மறு நிமிஷம் என்னிடம் நிலா என்று நினைத்து தான் நான் உன்னை கட்டிக் கொண்டேன் என்று நீ சொன்ன ஒரு வார்த்தையில் நான் சுக்கு நூறாக உடைந்து விட்டேன்.​

ஆனால், விதியைப் பார்த்தியா நீ ஆசை ஆசையாக எடுத்த இந்த புடவை என் காதல் உண்மை என்பதால் தான் என் கையில் வந்து சேர்ந்தது.​

ஆனால், நான் ஒரு பயத்துடன் தான் இருந்தேன் என் காதல் நிறைவேறுமா என்று. இந்த கல்யாணம் மூலியமாக என் காதல் உண்மை என்று நிரூபித்து காட்டிவிட்டார் அந்த கடவுள்.​

உன் காதலுக்கு நடுவில் நான் வரக்கூடாது என்பதற்காக மட்டும் தான் நான் அமைதியாக இருந்தேன் இத்தனை நாட்களாக.​

ஆனால் அந்த கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்பதை இப்பொழுது நான் தெரிந்து கொண்டேன். இனி என்னை விட்டு நீயே பிறந்து போக நினைத்தாலும் உன்னை நான் விடமாட்டேன்.​

கடவுளே என் பக்கம் இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று பயங்கரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்‌.​

*****************************​

விக்ரம் வீட்டில் ரிசெப்ஷன் எவ்வாறு பண்ணலாம் என்று பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்தது .​

ராஜேந்திரன், ராஜலட்சுமி, ராதிகா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.​

அப்போது ராஜலட்சுமி, “நம்ப ரிசப்ஷன் மண்டபத்தில் வைக்கலாம். நேரம் காலம் எல்லாம் ஐயரை வர சொல்லி பாத்துடுங்க”.​

“அப்படியே நாளைக்கு நைட்டே சடங்குக்கு ஏற்பாடு பன்னிடுங்க” என்று முடிவு செய்து கொண்டு இருந்தாள்.​

ராஜேந்திரன் யோசனையாக, “நிலா வீட்டில் இருப்பவர்களையும் அழைக்கனுமே?” என்றார்.​

ராஜேந்திரன், “ஆமாம் லட்சுமி. ஆனால் அவள் வீட்டு ஆட்கள் யார் என்று நமக்கு தெரியாதே. முதலில் நிலாவை வரச்சொல்லுங்கள் அவளிடம் விசாரிக்கலாம்” என்றார்.​

பிறகு சித்ராவை அழைத்து நிலாவை அழைத்து வருமாறு கூறினார்கள்.​

நிலா சோகமாக இது எல்லாம் கனவா அல்லது நினைவா என்று தெரியாமல் என்ன வாழ்க்கை இது எதுவுமே புரியவில்லை கண்ணை கட்டி காட்டில் விட்டபடி இருக்கு என்று குழம்பிக் கொண்டு அவள் அறையில் இருந்தாள்.​

சித்ரா, “விக்ரம் ஐயா” என்று கதவை தட்டினாள். விக்ரம் பாத்ரூமில் இருந்த படி கதவு தட்டும் சத்தத்தை கவனித்து, “நிலா” என்று குரல் கொடுத்தான்.​

அதில் நிலா பதறிப் போய் கதவு அருகே நின்று எப்படி அழைப்பது என்று தெரியாமல், “சொல்லுங்க இங்கதான் இருக்கேன்” என்றாள் பதட்டமாக.​

விக்ரம் அவள் குரலில் உள்ள பதட்டத்தை உணர்ந்து, “எதுக்கு நீ பதறுற நான் நிலான்னு கூப்பிட்டேன் அவ்வளவு தான் . சரி சித்ரா கூப்பிடுற பாரு என்னன்னு கேளு” என்றான்.​

நிலா கதவை திறந்து, “என்ன?” என்றாள். சித்ரா, “கீழே பெரிய ஐயா, அம்மா எல்லாரும் இருக்காங்க உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றாள்.​

நிலா பயத்துடன் பாத்ரூம் வாசலில் நின்று கொண்டு, “என்னை கீழே கூப்பிடுறாங்களாம் நான் என்ன செய்வது” என்றாள்.​

விக்ரம், “எதுக்கு நீ எல்லாத்துக்கும் பயந்துட்டே இருக்க. நீ விக்ரம் தேவ் ஓட பொண்டாட்டி புரிஞ்சுதா. அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ. கீழ உன்னை தானே கூப்பிட்டாங்க போ” என்றான் கூலாக.​

நிலா, “மெதுவாக நான் எப்படி போறது? எதுக்கு கூப்பிடறாங்கன்னு தெரியலையே” என்றாள்.​

விக்ரம், “நீ போய் என்னன்னு கேட்டா தானே தெரியும் எதுக்கு கூப்பிடுறாங்க என்று“ என்றான்.​

நிலா, “இல்ல எனக்கு ஒரு மாதிரி இருக்கு நா எப்படி தனியா போறது“ என்றாள்.​

விக்ரம், “நா குளிச்சிட்டு இருக்கேன் வேண்டும் என்றால் அப்படியே வரவா” என்று கதவை லேசாக திறந்தான்.​

அதில் பதறிப்போன நிலா, “இல்ல இல்ல வேண்டாம் நானே போயிக்கிறேன்” என்று மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி விட்டால். சித்ரா நிலாவை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.​

 

rebe novel

Moderator

பாகம் – 13​

ராஜலட்சுமி, “என் பக்கத்தில் வந்து உட்காருமா” என்றார் பாசமாக. நிலா சிறு தயக்கத்துடன் பார்த்தாள்.​

ராஜலட்சுமி, “ஏன் இப்படி பாக்குற. என்னை உன் அம்மா மாதிரி நினைச்சுக்கோ வந்து இங்க உட்காருமா” என்றார்.​

நிலா அம்மா மாதிரி என்ற வார்த்தையில் கண்கள் கலங்க ஆரம்பித்தது. ஆனால் அனைவ அறியும் முன்பே கண்ணீரை உள் இழுத்து தன்னை சமன் செய்து கொண்டாள்.​

ஆனால், அதை ராஜேந்திரன் மட்டும் கவனித்து விட்டார், “ஏன் கண்கள் கலங்குது உங்க அம்மா வுக்கு பிடிக்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டியா அதை நினைத்து கவலை படுறியா“ என்றார்.​

நிலா இல்லை என்று தலையசைத்து விட்டு, “எனக்கு சின்ன வயசுல இருந்தே அம்மா இல்லை“ என்றாள்.​

ராஜலட்சுமி கவலையாக, “சரி நீ கவலைப்படாதே. இன்னையில் இருந்து நான் தான் உனக்கு அம்மா மாதிரி புரிஞ்சுதா”.​

“என்னை நீ அத்தைன்னு கூப்பிட்டாலும் எனக்கு சம்மதம் தான் அம்மான்னு கூப்பிட்டாலும் சம்மதம் தான்“ என்றார் இன் முகமாக.​

ராதிகா, “ஆமா ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத அப்படியே நின்னுட்டு போய் உட்கார் போ” என்றாள் சிடு சிடுப்பாக.​

நிலா மெதுவாக வந்து ராஜலட்சுமி பக்கத்தில் அமர்ந்தாள். ராஜலட்சுமி, “நீயும் விக்ரமும் எவ்வளவு வருஷமா காதலிக்கிறீங்க?” என்று கேள்வி எழுப்பினார்.​

ராதிகா, “ஆமாம் சொல்லு கல்லு மாதிரி இருந்தவனை எப்படி நீ வளச்சு போட்ட எல்லாம் பணத்துக்காக தானே?” என்றார்.​

அந்த நேரம் சரியாக விக்ரம் மாடிப்படி இறங்கி கீழே வந்தான். ராஜலட்சுமி கேட்ட கேள்விக்கு அவன் படியில் இருந்தபடியே பதில் கொடுத்தான், “மே பி 2 இயர்ஸ் இருக்கும்” என்றான்.​

ராஜலட்சுமி, “ஓஹோ சரி பா. நிலா உன் வீட்டு அட்ரஸ் கொடு. நாங்க போய் அவங்களை எல்லாம் ரிசப்ஷன்கு அழச்சிட்டு வரோம்” என்றார்.​

நிலா மனதுக்குள் அச்சச்சோ இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க மாதிரி இருக்காங்க.​

நேரில் போனா நம்ம சித்தி இவங்களை அசிங்க படுத்திவிட்டால் என்ன செய்வது என்று பலமாக சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.​

விக்ரம், “எனக்கு வீடு தெரியும் நானே உங்க எல்லாரையும் கூட்டிட்டு போறேன் வாங்க” என்று கூறினான்.​

நிலா பதற்றமாக விக்ரமை பார்த்து கண்களால் வேண்டாம் என்று சைகை செய்தாள்.​

விக்ரம் அதை சட்டை செய்யாமல் ராஜலட்சுமியை பார்த்து, “நீங்க வாங்க“ என்றான்.​

விக்ரம், “அப்புறம் நிலா நீ வீட்டிலேயே இரு. நான் இவங்களை எல்லாம் கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்” என்று விட்டு காரை நோக்கி சென்று விட்டான். ******************************​

ராமலிங்கம் மற்றும் பத்மா இருவரும் ஜெயலட்சுமி வீட்டிற்குள் நுழையும் பொழுதே, “சுஜிதா அம்மாடி சுஜிதா எங்க இருக்க?” என்று குரல் கொடுத்தார்கள்.​

அந்த குரல்களை கேட்ட சுஜிதா அழுது கொண்டே அறையில் இருந்து வெளியே ஓடி வந்து ராமலிங்கத்தை கட்டி அணைத்து கொண்டு அழுதால்.​

ராமலிங்கம், “என்னம்மா ஊர் காரங்க எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க. நிலாவுக்கு தானே கல்யாணம் என்று நீ சொன்ன”.​

“இப்போ என்னடான்னா நீ அந்த பையன் சக்தியை கட்டிக்கிட்டன்னு எல்லாரும் சொல்றாங்க அது உண்மையா?” என்று பயத்துடன் கேட்டார் .​

பத்மா, “நானும் உன் அப்பாவும் வெளியூர் போவதனால் உன்னை அப்போவே கல்யாணத்துக்கு போக வேண்டாம் என்று சொன்னோம்”.​

“ஆனால், நீ தான் கேட்கவே இல்லை. நிலா நல்ல பொண்ணு தான் நான் இல்லன்னு சொல்லல”.​

“ஆனா இந்த குடும்பம் அப்படி இல்லையே இவங்க பெரிய இடத்துக்காரங்க நம்ம எல்லாம் இவங்களுக்கு ஒரு விஷயமே கிடையாது. இப்போ பாரு உன் வாழ்க்கையே போச்சு” என்று அழுதார்.​

ஜெயலட்சுமி அங்கு வந்து, “நீங்க எல்லாம் யாரு? எதுக்கு இங்க வந்து கத்திக்கிட்டு இருக்கீங்க“ என்றாள் அதட்டலாக.​

பத்மா, “என்னோட பொண்ணு சுஜிதாவை நீங்க எப்படி உங்க தம்பிக்கு கட்டி வைக்கலாம்” என்றாள் கோபமாக.​

ஜெயலட்சுமி, “ஆமாம் இந்த அழு மூஞ்சிய பிடிச்சி என் தம்பிக்கு கட்டி வைக்கணும் என்று எனக்கு தான் ஆசை”.​

“நானே கடுப்பில் இருக்கிறேன். வந்ததில் இருந்து அழுதுட்டே இருக்கு வேண்டும் என்றால் உங்க பொண்ணை கூட்டிட்டு இப்பவே கெலம்புங்க”.​

நான் ஒன்னும் வேண்டாம்னு தடுக்க மாட்டேன். சீக்கிரமா எடத்த காலி பண்ணிட்டு போங்க“ என்ற விட்டு உள்ளே சென்று விட்டாள்.​

ராமலிங்கம், “அம்மாடி சுஜிதா நீ எங்க கூடவே வந்திரு மா. இது ஒரு திருமணமே கிடையாது உன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து இருக்காங்க. நீ வந்துரு எங்க கூட” என்று கையைப் பிடித்து இழுத்தார்.​

சுஜிதா, “இல்லப்பா இவங்க மனசுல ஒரு பொண்ணோட வாழ்க்கை நா என்ன சும்மான்னு நினைச்சுட்டாங்களா”.​

"என் கழுத்துல இவங்க தாலி கட்டினதுக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்றாள் விடாப்பிடியாக.​

அந்த சமயம் வீட்டிற்குள் நுழைந்த சக்தி இவர்கள் யாரையும் சட்டை கூட செய்யாமல் அவன் பாட்டுக்கு உள்ளே சென்று விட்டான்.​

அதில் கோபம் கொண்ட ராமலிங்கம், “இவங்க எல்லாம் மனுஷங்களை மதிக்கவே மாட்டாங்க. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது”.​

“இவங்களை எல்லாம் நம்பளால் திருத்தவே முடியாது ஏன் அந்த கடவுள் நினைச்சா கூட முடியாது” என்று அவர் பெண்ணிடம் கெஞ்சுதலாக தன்னுடன் வருமாறு கூப்பிட்டார்.​

ஆனால் சுஜிதா உண்மையில் சக்தி மேல் காதல் வசப்பட்டதால் எப்படி தன் தந்தையோடு செல்ல முடியும். தன் தந்தை கண் கலங்குவதை பார்க்க முடியாமல்.​

சுஜிதா, “எனக்கு ஒரு வருஷம் அவகாசம் கொடுங்க அதுக்குள்ள கண்டிப்பா சக்தியை நான் திருத்தியே தீருவேன். பிறகுதான் நம்ம வீட்டுக்கு நான் வருவேன்”.​

“அது வரைக்கும் நீங்களும் எந்த காரணத்துக்காகவும் என்னை பார்க்க வர வேண்டாம்” என்று விட்டு உள்ளே ஓடிவிட்டாள்.​

சுஜிதா ஒத்த பிள்ளை என்பதால் பாசத்தை கொட்டி வளர்த்தார் ராமலிங்கம்.​

எந்த அளவுக்கு அவர் சுதந்திரம் கொடுத்தும், அன்பை கொடுத்தும் வளர்த்தாரோ அதற்கு எதிர் மாறாக அவள் திருமண வாழ்க்கை அமைந்து விட்டது.​

ராமலிங்கம் எங்க வீட்டுக்கு வந்த பொக்கிஷம் நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப என்று நினைத்து மிகவும் வருந்தி கொண்டே அங்கு இருந்து சென்று விட்டார் தன் மனைவியுடன்.​

ஜெயலட்சுமி சோபாவில் அமர்ந்து எப்படி நிலாவிடம் கையெழுத்து வாங்குவது என்று பலமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.​

நான் அந்த விக்ரம் வீட்டிற்குள் சென்றால் மட்டுமே அந்த நிலாவை சந்திக்க முடியும். அப்பொழுது அவளிடம் கையேழுத்தும் வாங்கி விடலாம்.​

ஆனால் என்ன காரணத்துக்காக நான் அங்கு செல்வது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.​

அந்த சமயம் வாசலில் இருந்து கார் ஹாரன் சத்தம் கேட்டது. ஜெயலட்சுமி, “கண்ணம்மா யாருன்னு போய் பாரு நம்ம வீட்டு வாசல்ல சும்மா ஹாரன் அடிச்சிட்டே இருக்காங்க“ என்று கோபமாக கூறினாள்.​

கண்ணம்மா வாசல் வரை சென்று விட்டு சிரிப்புடன் வாங்க தம்பி வாங்க என்று விட்டு, “ஜெயா அம்மா விக்ரம் தம்பி வந்து இருக்காங்க குடும்பத்தோட” என்றார்.​

ஜெயலட்சுமி இவன் எதற்கு இங்க வந்திருக்கான் என்று அதிர்ச்சியாக அவர்களைப் பார்த்தாள்.​

ஒருவேளை நிலா சொத்து பத்திரங்கள் எல்லாம் வாங்கிட்டு போரத்துக்கு வந்து இருப்பாங்கலோ என்றும் யோசித்தாள்.​

ராஜலட்சுமி, “வீட்டுக்கு வரவங்கள வாங்க என்று கூப்பிட மாட்டீங்களா?” என்றார். ஜெயலட்சுமி, “இல்ல அப்படி இல்ல வாங்க வாங்க எல்லாரும் வாங்க” என்றார்.​

ஜெயலட்சுமி, “கண்ணம்மா போய் எல்லாருக்கும் காப்பி தண்ணி எடுத்துட்டு வா” என்று விட்டு எல்லாரையும் அமருமாறு கூறினார்.​

ராஜலட்சுமி, “விக்ரம் கல்யாணத்தை நாங்க பெருசா பண்ணனும்னு ஆசை பட்டோம். ஆனால் அவன் இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிப்பான் என்று நாங்க யாரும் எதிர்பார்க்கல”.​

“கல்யாணம் தான் அவன் இஷ்டப்படி நடந்திருச்சு. அதனால் நாளைக்கு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்கோம்”.​

“விக்ரம் சார்பில் நாங்கள் எல்லோரும் இருக்கோம். ஆனால் நிலா வுக்கு யாரும் இல்லை என்று தோன்ற கூடாது”.​

“ஏற்கனவே அம்மா இல்லாத பொண்ணு அதனால் உங்க எல்லோரையும் ரிசப்ஷன்கு அழைக்கலாம் என்று வந்திருக்கோம்” என்றார்.​

ஜெயலட்சுமி அந்த நிலாவுக்கு எல்லாம் ரிசப்ஷன்னா என் தம்பிக்கு கூட நான் ஒன்னுமே பண்ணல. அந்த மூதேவிக்கு சந்தோஷமா ரிசப்ஷன் நடக்க போகுதா என்று யோசித்து.​

கோபமாக, “இல்லைங்க எங்களால் வர முடியாது என் தம்பிக்கும் இவங்க கூட தான் கல்யாணம் ஆகி இருக்கு. நாங்களும் நாளைக்கு ரிசப்ஷன் வைக்கலாம் என்று இருக்கோம்” என்றாள்.​

விக்ரம், ஜெயலட்சுமியை பார்த்து நக்கலாக “பரவாயில்லையே அதுக்குள்ள உங்க தம்பி மனச மாத்திக்கிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?” என்றான்.​

ராஜலட்சுமி, “அப்படியா” என்று அமைதியாக இருக்க.​

ராஜேந்திரன், “ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க தம்பியும், மருமகளையும் கூட்டிட்டு வந்துருங்க ஒரே மண்டபத்திலேயே நம்ம ரிசப்ஷன் வச்சுக்கலாம்” என்றார்.​

அப்போது வெளியே வந்த சக்தி, “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல” என்றான்.​

 

rebe novel

Moderator

பாகம் – 14​

ஜெயலட்சுமி, சக்தியை பார்த்து அமைதியாக இருக்கும்படி கண்களைக் காண்பித்தாள்.​

பிறகு ராஜலட்சுமி, ராஜேந்திரனை பார்த்து, “நீங்க இவ்வளவு தூரம் கட்டாயப் படுத்துவதால் மட்டும் நான் ஒத்துக்குறேன் என் தம்பிக்கும் நாளைக்கே ரிசப்ஷன் அங்கேயே வச்சுக்கலாம்” என்றாள்.​

ராதிகா, “என்னக்கா இது எல்லாம் நல்லாவா இருக்கும். நம்ம வீட்டு விசேஷத்துக்கு பெரிய மனுஷங்க எல்லாம் வருவாங்க”.​

“இவங்க குடும்ப ஆளுங்க எல்லாம் வந்தா நமக்கு அவமானமா இருக்காதா?” என்றாள் குத்தலாக. இவர்களுக்கு வசதி கம்மி என்னும்படி கூறினார்.​

ஜெயலட்சுமிக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் தன் மனதில் இருக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைத்து அமைதியாக இருந்தாள்.​

ராஜலட்சுமி, “நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது” என்று ராதிகா வாயை அடக்கினார்.​

விக்ரம் சிரித்துக் கொண்டே, “தெரியும் ஜெயா ஆன்டி இவங்க ரொம்ப போர்ஸ் பண்ணதுனால் மட்டும் தான் நீங்க ஒத்துக்குறீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும்“ என்றான் நக்கலாக.​

ராஜலட்சுமி, “அப்படின்னா நாளைக்கு நீங்க கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வந்துடனும் ரெண்டு பொண்ணு மாப்பிள்ளைக்கும் ஒன்னாவே ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணிடலாம்“ என்றார்.​

ராதிகா வீட்டை சுற்றி தன் கண்களால் ஸ்கேன் செய்தவள், “அக்கா சீக்கிரம் இங்க இருந்து கிளம்பலாம்”.​

“என்னால் இங்க மூச்சை கூட விட முடியல கொஞ்சம் கூட காற்று வசதியே இல்லை ரொம்ப ஸ்வெட் ஆகுது“ என்று வேண்டும் என்றே கூறினாள்.​

ஜெயலட்சுமி, ராதிகா வை பார்த்து முறைத்தாள். ராதிகா எழுந்து, “சீக்கிரம் வாங்க கிளம்பலாம். அதான் சொல்லியாச்சு இல்ல வர சொல்லி” என்று விட்டு வெளியே சென்று விட்டால்.​

பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.​

நிலா, கைகளை பிசைந்தபடி தன் அரையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தாள்.​

விக்ரம் சட்டென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். நிலா சித்தி என்ன சொன்னாங்க என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக விக்ரம் அருகில் சென்று “சித்தி” என்று ஆரம்பித்தாள்.​

அதற்குள் விக்ரம் ஒரு துண்டை கையில் எடுத்துக் கொண்டு பாத்ரூம் உள்ளே நுழைந்து விட்டான்.​

நிலா தலையில் அடித்துக் கொண்டு இப்போ உடனே குளிச்சு என்ன ஆகப்போகுது கொஞ்சம் ஆச்சு அறிவு இருக்கா பாரு.​

அங்க என்ன நடந்து இருக்குமோ தெரியலையே ஒரு வேலை ஏதேனும் பிரேச்சனை ஆகி இருக்குமோ.​

அதான் இவங்க கோவமா இருக்காங்கலோ என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் கொஞ்சம் சத்தமாகவே.​

அதை கேட்டு கொண்ட விக்ரம் மெதுவாக வெளியே வந்து அவள் பின்னால் கை கட்டியபடி நின்று சிரித்து கொண்டு இருந்தான்.​

நிலா அவனை திட்டிக் கொண்டே சட்டென்று திரும்பினால். விக்ரம் , நிலாவை தான்டி முன்னே சென்று வேண்டுமென்றே அவலை அலைய விட்டான்.​

விக்ரம் நிலா பின் தொடர்வது தெரியாதது போல் கண்ணாடியின் முன்னாடி நின்று விசில் அடித்துக் கொண்டும் ஸ்பிரே அடித்துக் கொண்டும் தன் ஆடைகளை சரி செய் கொண்டும் இருந்தான்.​

அப்படியே கண்ணாடி வழியாக நிலாவை பார்த்து ரசித்து சிரிப்பை அடக்கிக் கொண்டும் இருந்தான்.​

பிறகு சிறிது நேரம் கழித்து விக்ரம், “நிலா” என்று அழைத்தான். நிலா ஆவலாக இவன் ஏதோ கூற வருகிறான் என்று நினைத்து, “நா இங்க இருக்கேன” என்றாள் புன்னகையோடு.​

விக்ரம் சீரியஸ் ஆன முகத்துடன், “நிலா நான் வெளியே போகிறேன் நைட் டின்னருக்கு வீட்டுக்கு வந்திடுவேன் வீட்ல யாராவது கேட்டா சொல்லிடு” என்று சரசரவென வெளியே சென்று விட்டான்.​

நிலா கோவமாக இவருக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. ஒரு இடத்துக்கு போய்ட்டு வந்தா அங்க என்ன நடந்தது என்று சொல்லனும் என்று கூட தெரியல. அதுவும் என் வீட்டுக்கு போய் இருக்காங்க.​

அப்போ அங்க என்ன நடந்தது என்று நான் தெரிஞ்சுக்க ஆவலா இருப்பேன்னு கூடவா இவங்களுக்கு தெரியாது.​

இந்த பேசிக் ஃநாலேட்ஜ் கூடவா இல்ல என்று விக்ரமை வருத்தெடுத்துக் கொண்டிருந்தால்.​

அந்த சமயம் சரியாக உள்ளே வந்த விக்ரம் ஒற்றை புருவத்தை ஏற்றியபடி, “மேடம் யாரை திட்டிக்கிட்டு இருக்கிங்க? என்றான்.​

நிலா எதிர் பார்க்காமல் திடீரென விக்ரம் வந்ததில் வார்த்தைகள் தந்தி அடித்தது போல், “அஅ.. அது அது ஒன்னும் இல்லை” என்றாள்.​

விக்ரம், “அப்படியா” என்று கூற்ந்த பார்வை பார்த்தான். அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் நிலாவின் விழிகள் அங்கும் இங்கும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தது.​

விக்ரம் மனதில் நிலா தன்னிடம் வாய் திறந்து அங்கு என்ன நடந்தது என்று அவளே கேட்க வேண்டும் என்று நினைத்தான்.​

அதனால் நிலா படும் அவதியைப் பார்த்து சிரிப்பை கடின பட்டு அடக்கிக் கொண்ட விக்ரம், “நிலா உனக்கு என்னிடம் ஏதாவது கேட்கனுமா?” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல்.​

நிலா மௌனமாக அவனைப் பார்த்து ஆமா என்று தலையை அசைத்தால். விக்ரம் சிரித்துக் கொண்டே கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டேன்.​

பிறகு நிலாவை பார்த்து, “தெரியும் என் பின்னாடியே நீ சுத்தி சுத்தி வரும் போதே. உங்க வீட்டுக்கு போன இடத்துலே என்ன நடந்தது என்று உனக்கு தெரிந்துக் கொள்ளனும் அதானே” என்றான்.​

நிலா, கண்களை அகல விரித்து அவனைப் பார்த்து தெரியுமா? “அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை. நான் எவ்வளவு பயந்தேன் உங்களுக்கு தெரியுமா?” என்றாள்‌.​

பிறகு சோகமான முகத்துடன், “உங்க அம்மா, அப்பா ரொம்ப நல்லவங்களா இருக்காங்க”.​

“என் வீட்டுக்கு போன இடத்தில் என் சித்தி அவர்களை ஏதேனும் அசிங்கப்படுத்தி பேசி விடுவார்களோ என்று பயந்துட்டே இருந்தேன். சரி அங்க என்ன நடந்துச்சு?” என்றாள் .​

விக்ரம், “உனக்கு என்னிடம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தைரியமா வாயைத் திறந்து கேட்க வேண்டியது தானே” என்றான்.​

நிலா மறுபடியும் மௌனம் ஆகிவிட்டால். விக்ரம், “சரி உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லவா? உன் சித்தி எங்களை எல்லாம் பார்த்தவுடன் சந்தோஷமா வரவேர்த்தாங்க“ என்றான்.​

நிலா அதிர்ச்சியாக, “அப்படியா? அப்போ ரிசப்ஷனுக்கு வரேன்னு ஒத்துக்கிட்டாங்களா?” என்றாள்.​

விக்ரம், “ஆமாம் உன் சித்தி, அப்பா எல்லாரும் குடும்பத்தோட வருவாங்க நீ எதுக்கும் கவலைப்படாதே” என்றான்.​

நிலா முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை விக்ரம் மிகவும் ரசித்துப் பார்த்தான்.​

விக்ரம் மனதில் இதுவரைக்கும் நீ எவ்வளவு கஷ்ட பட்டிருந்தாலும் சரி இனி உன் வாழ்க்கை சந்தோஷத்தால் மட்டுமே நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.​

விக்ரம், “சரி அதெல்லாம் விடு. உனக்கு ஷாக்கிங் ஆன ஒரு விஷயத்தை நான் சொல்லவா?” என்றான் அவள் முகத்தைப் பார்த்து.​

நிலா பயத்துடன், “என்ன ஆச்சு சொல்லுங்க?” என்றால். விக்ரம், “அது வந்து உன்னோட மாமா சக்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றான்.​

நிலா அதிர்ச்சியாக, “நிஜமாகவா கல்யாணம் ஆகிடுச்சா?” என்று சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று விட்டால்.​

நிலா, “அப்படின்னா இனிமே என்ன அவங்க தொந்தரவு பண்ண மாட்டாங்க இல்ல“ என்று சிரித்தாள்.​

பிறகு நிலா, “சரி ஜெயா சித்தி என்னை திட்டுனாங்களா?” என்றாள் குழந்தையைப் போல். விக்ரம் இல்லை என்று தலை அசைத்தான்.​

நிலாவுக்கு அப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது, “அவங்களுக்கு பிடிக்காத மாதிரி நான் ஏதாச்சும் பண்ணா அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?” என்று தன் தோள்பட்டையில் இருக்கும் தழும்பை காண்பித்து, “இதுபோல் சூடு வச்சுடுவாங்க”.​

“ஒரு நாள் சுஜி கூட சேர்ந்து ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு மாலை நேரம் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சித்தி கோவத்துல இப்படி பண்ணிட்டாங்க” என்றால் அப்பாவியாக.​

அதை பார்த்த விக்ரம் கண்கள் சிவக்க கோபம் கொண்டான். தன் மனதுக்குள் சிறுவயதில் எல்லாம் நீ எவ்வளவு தைரியமா பேசுவ.​

ஆனால் இப்போ இவ்வளவு பயந்து பயந்து பேசுகிறியே என்று நொந்து போனான். அவ்வளவு பயம் காட்டி வைத்திருக்கிறால் அந்த ஜெயலட்சுமி.​

அவங்களை நான் சும்மா விடமாட்டேன். இது எல்லாத்துக்கும் உன் சித்திக்கு நான் பாடம் கற்றுக் கொடுப்பேன் என்று நினைத்துக் கொண்டான்.​

சிறிது நேரம் கழித்து நிலா தான் பேசும் நிலையை உணர்ந்து அச்சச்சோ நான் ஏதோ உளறிட்டு இருக்கேன் போலயே என்று யோசித்து அமைதி ஆகிவிட்டாள்.​

சிறிது நேரம் மௌனமாக இருந்தவள் யோசனையோடு விக்ரமை பார்த்து, “நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கவா?” என்றாள் தயக்கத்துடன்.​

விக்ரம், “எதுவாக இருந்தாலும் என்கிட்ட நேரடியாக நீ கேட்கலாம். அதுக்கான எல்லா உரிமையும் உனக்கு இருக்கு” என்றான்.​

நிலா, “கீழே உங்க அம்மா கிட்ட நம்ப ரெண்டு பேரும் இரண்டு வருஷமாக காதலிக்கிறோம் என்று ஏன் பொய் சொன்னீங்க” என்றாள். விக்ரம், “அது உண்மை தானே” என்றான்.​

நிலா முதல் முறையாக கோபம் கொண்டால், “எனக்கு உங்களை யார் என்றே தெரியாது‌. நான் உங்களை எப்பொழுது காதலித்தேன்?” என்றாள் சற்று குரலை உயர்த்தி.​

விக்ரம், “நீ இப்படி கோவமா எல்லாம் பேசுவியா?” என்றான் எழுந்து நின்று.​

நிலா கோபமாக, “ஆமா என் வாழ்க்கையை நீங்க அழிச்சுட்டிங்க. என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம நீங்க என் கழுத்துல தாலி கட்டுனது ரொம்ப பெரிய தப்பு” என்றாள்.​

விக்ரம், “என்ன டி அன்னியன் மாதிரி மாத்தி மாத்தி பேசுற. இவ்வளவு நேரம் நீ நல்லா தானே பேசிக்கிட்டு இருந்த என்கிட்ட” என்றான்.​

நிலா, “அது வந்து” என்று இழுத்தவள் சிறிது நேரம் கழித்து “உங்க குடும்பம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க”.​

“போன இடத்தில் என் சித்தி இவங்க எல்லாரையும் ஏதாச்சும் சொல்லி இருப்பார்களோ என்ற பயத்தில் தான் நான் கேட்டேன்” என்றாள்.​

நிலா மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தாள், “நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணிங்க?. நீங்க இவ்ளோ பெரிய சிட்டியில் இருக்கிங்க என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?”.​

“எப்போது என்னை காதலிச்சீங்க? நான் இதுவரைக்கும் உங்கள பார்த்ததே கிடையாது என் வாழ்க்கையில்” என்றால் சற்று கரடு முரடாக.​

விக்ரம், “அது வந்து” என்று ஆரம்பிக்கும் பொழுது சித்ரா கதவைத் தட்டி, “பெரியம்மா உங்களை சாப்பிட கீழே வர சொன்னாங்க” என்றாள்.​

 

rebe novel

Moderator

பாகம் – 15​

விக்ரம், “இது எல்லாத்துக்கும் நேரம் வரும் போது நானே உன் கிட்ட சொல்கிறேன்” என்றான்.​

நிலா, “கோபமாக அது என்ன நேரம் வரும்போது. இது என்ன சின்ன விஷயமா இதில் என்னோட வாழ்க்கையே அடங்கி இருக்கு. நீங்க இப்பவே சொல்லணும்” என்றாள்.​

சித்ரா மீண்டும் குரல் கொடுத்தாள் சாப்பிட வருமாறு.​

விக்ரம், “சரி நாளைக்கு நம்ம ரிசப்ஷன் முடிஞ்சதும் நைட்டு உன்கிட்ட கண்டிப்பா நான் சொல்கிறேன்” என்று வாக்கு கொடுத்தான்.​

பிறகு இருவரும் ஒன்றாக கீழே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள் . அங்கு ராஜேந்திரன் ,ராஜலட்சுமி, ராதிகா அமர்ந்து இவர்களுக்காக சாப்பிடாமல் காத்திருந்தார்கள்.​

ராஜேந்திரன், “வாப்பா விக்ரம் உங்களுக்காக தான் நாங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம் சாப்பிடாம” என்றார்.​

விக்ரம், “நான் உங்களை வெயிட் பண்ண சொல்லலையே” என்றான் வெடுக்கென்று.​

ராஜலட்சுமி, “சரி சரி நீ உட்காருப்பா எல்லாரும் சாப்பிடலாம்” என்றார் சிரித்த முகமாக. விக்ரம் நிலாவை அமர வைத்து விட்டு அவனும் பக்கத்தில் அமர்ந்தான்.​

ராஜலட்சுமிக்கு மனதில் விக்ரம் நிலா மேல் இவ்வளவு பாசமாக இருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டாள்.​

பிறகு இரவு உணவை சாப்பிட்டு கொண்டே விக்ரம், “மித்ரா, ஆதித்யா எப்போ வராங்க?” என்றான். ராஜலட்சுமி, “நாளைக்கு ஃபங்ஷனுக்கு கண்டிப்பா வந்துருவாங்க” என்றாள்.​

விக்ரம், “ நிலா நீ சாப்பிட்டு மேல வா” என்று விட்டு அங்கிருந்து சென்றான். ராஜலட்சுமி, “ஒரு நிமிஷம் நில்லுப்பா” என்றாள்.​

விக்ரம் திரும்பி பார்த்தான். ராஜலட்சுமி, “இன்னைக்கு நைட்டு நிலா என்கூட தூங்கட்டும்” என்றாள்.​

விக்ரம், “ஏன்?” என்றான. ராஜலட்சுமி, “இல்ல கல்யாணம் ஆகி முதல் நாள் புருஷன், பொண்டாட்டி தனி தனியா தான் தூங்கனும் அது நம்ப வீட்டு சம்பிரதாயம்” என்றார்.​

“அப்போதான் உங்க வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் அதுக்காக தான் இதெல்லாம்” என்றார்.​

விக்ரம், “இல்ல எனக்கு இதில் எல்லாம் எந்த நம்பிக்கையும் கிடையாது. நிலா என்கூடயே தூங்கட்டும்” என்றான்.​

ராஜலட்சுமி, “அதெல்லாம் முடியாது இன்னைக்கு நிலா என் கூட தான் தூங்கணும்” என்று முடிவாக கூறிவிட்டாள் .​

வேறு வழி இன்றி விக்ரம், நிலாவை பார்த்து கண்களால் உனக்கு ஓகேவா என்று சைகை செய்தான்.​

நிலா, சரி என்று தலையசைத்து விட்டு மனதுக்குள் என்னமோ நம்மளை கேட்டு தான் எல்லாமே பண்ற மாதிரி சீன் போடுறாரு.​

தாலி கட்டுறதுக்கே என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல பிடிச்சு இருக்கான்னு. அவர் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்து நிக்க வச்சி இருக்காரு என்று முனு முனுத்தால்.​

பிறகு விக்ரம் சரி ஓகே என்று மேலே சென்று விட்டான். அவன் சென்றதை உறுதி செய்து கொண்ட ராதிகா, “பார்த்தியா அக்கா அவன் இவளை கேட்காமல் ஒரு முடிவை கூட எடுக்கவே மாட்டிக்கிறான்”.​

“இதுக்கு முன்னாடி எல்லாம் நம்ம எது சொன்னாலும் சரின்னு சொல்லுவான் இல்லனா அவன் எடுக்கறது தான் முடிவு என்று சொல்லுவான்”.​

“ஆனா இப்ப பார்த்தியா நம்ம பையனுக்கு என்னத்த கலந்து கொடுத்தாலோ தெரியல இப்படி இவள் கண் அசைச்சால் தான் அவன் தலையவே அசைக்கிறான் எனக்கு என்னமோ சந்தேகமா தான் இருக்கு இந்த சொத்துக்காக தான் நம்ம பையன இவ வளச்சி போட்டு இருப்பா என்று” என்றாள்.​

ராஜலட்சுமி, “நீ கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு இருக்கியா மத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைகிறதே உனக்கு வேலையா போச்சு” என்று சிடுசிடுத்தால்.​

ராதிகா, “என்னது மத்தவங்க விஷயமா இது நம்ம குடும்பத்து விஷயம் அக்கா” என்று கண்களை துடைப்பது போல் நடித்துக் கொண்டு “அப்படின்னா என்னை இந்த குடும்பம் இல்லைன்னு சொல்றியா? அக்கா”.​

“என் வீட்டுக்காரர் சரியில்லைன்னு நான் இங்க வந்து உன் கூட இருக்கேன் அதனால் நீ என்னை எலக்காரமா பாக்குற இல்ல”.​

“நீ என்னை உன் தங்கச்சியாக நினைக்கவே இல்லை“ என்று கண்களை துடைப்பது போல் செய்தால்.​

ராஜலட்சுமி, “இல்ல டி நான் அப்படி சொல்லல. நீ தேவை இல்லாம விக்ரம் விஷயத்துல தலையிடாதே என்று தான் சொன்னேன்”.​

“நீ சாதாரணமா பேச போய் அது பிரச்சினையா போய் முடிஞ்சிடும் என்று சரி இப்போ போய் தூங்கு நீயும் இந்த குடும்பம் தான். உன்னை நான் எதுவும் சொல்லல” என்று விட்டு நிலாவை அழைத்துக் கொண்டு அவள் அரைக்கு சென்றால்.​

ராஜேந்திரன் பக்கம் திரும்பிய ராஜலட்சுமி, “நீங்க ஆதித்யா ரூம்ல படுத்துக்கோங்க” என்றாள்.​

ராஜேந்திரன் சரி என்று சென்று விட்டான். ராஜலட்சுமி, நிலாவை அழைத்துச் சென்று “இதுதான் மா எங்க ரூம். நீ போய் படுத்துக்கோ” என்றாள். நிலா, நேராக சென்று பீரோ மேல் இருக்கும் ஒரு பாயை எடுக்க முயற்சி செய்தாள்.​

ராஜலட்சுமி, “அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்றார் கேள்வியாக. நிலா, “இல்லங்க அத்தை தூக்குவதற்கு பாய் வேண்டும் இல்லையா அதான்” என்றால் தயக்கமாக.​

ராஜலட்சுமி, “என்கிட்ட பேசுறதுக்கு நீ எதுக்கும் தயங்க தேவையில்லை. நீ என்கிட்ட வெளிப்படையா எல்லாமே பேசலாம் சரியா. பாய் எல்லாம் தேவையில்லை பெட்லயே என் பக்கத்தில் படுத்துக்கோ” என்றாள்.​

நிலா, “இல்ல பரவாயில்லை இருக்கட்டும். நான் கீழேயே படுத்துக்கிறேன்” என்றாள்.​

ராஜலட்சுமி, “கட்டளை இடுவது போல் நான் சொன்னா கேட்கணும் புரிஞ்சுதா போய் படு” என்றவுடன் அவளுக்கு தன் சித்தியின் ஞாபகம் வந்து விட்டது பயத்துடன் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.​

ராஜலட்சுமி சிரித்துக் கொண்டே என்ன கொஞ்சம் சத்தமா பேசினதும் இப்படி பயந்துட்டாலே பாக்க ரொம்ப அப்பாவியா இருக்கா என்று நினைத்து கொண்டு நிலா பக்கத்தில் படுத்து உறங்கி விட்டாள்.​

நிலா மனதில் ஒரு நாள் தன் வீட்டு சோஃபாவில் படுத்ததற்கு சித்தி தன் காலில் சூடு வைத்து நீ என்ன இந்த வீட்டுக்கு எஜமானி நினைப்பா ஒய்யாரமா சோஃபாவில் படுத்திருக்க நீ இருக்க வேண்டிய இடம் அடுப்பங்கரையும் பக்கத்தில் இருக்க அந்த சின்ன ரூம் மட்டும் தான்.​

நீ இந்த வீட்டுக்கு முதலாளி கிடையாது உன் இஷ்டத்துக்கு எல்லா இடத்திலும் படுக்குறதுக்கு” என்று திட்டி முறைத்தது நினைவில் வர மௌனமாக கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.​

ஆனால் லட்சுமி அத்தை, கட்டிலில் அதுவும் பக்கத்தில் படுக்க சொல்லி முறைக்கிறார்களே என்று ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.​

மறுநாள் காலை எப்பொழுதும் போல் நிலா நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு குளித்து தயாராகி பூஜையறையில் பூஜை செய்து பக்தியுடன் சாமி பாட்டு ஒன்றை போட்டுவிட்டு சாம்பிராணி புகையை வீடு முழுக்க காண்பித்தாள்.​

ஆறு மணிக்குள் டீ, காபி இரண்டையும் போட்டு பிளாஃக்ஸ்சில் ஊற்றி வைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலீல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தால் .​

சித்ரா அப்பொழுது தான் வீட்டு வேலைக்கு உள்ளே நுழைந்தால். நிலா அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பதை பார்த்து “என்னம்மா சீக்கிரமா எழுந்துட்டீங்களா? சரி இருங்க நான் போய் உங்களுக்கு காபி போட்டு எடுத்துக்கிட்டு வரேன்” என்று விட்டு கடகடவென அடுப்பங்கரையை நோக்கி சென்றால்.​

அங்கு அடுப்பாங்கரையில் மொத்த வேலையும் முடிந்து இருந்தது. சித்ரா, “என்னம்மா நீங்களே எல்லா வேலையும் பண்ணிட்டீங்களா?“ என்றால் நிலாவை பார்த்து.​

நிலா, “ஆமா இதுல என்ன இருக்கு” என்றால். சித்ரா, “நீங்க இந்த வீட்டு முதலாளி மா நான் தான் எல்லா வேலையும் பண்ணனும் எனக்கு முன்னாடி நீங்க பண்ணிட்டீங்க” என்றாள்.​

நிலா, “பரவாயில்லை இருக்கட்டும் எனக்கு இதெல்லாம் பழக்கப்பட்ட வேலை தான். எங்க வீட்ல நான் தான் இதெல்லாம் பண்ணுவேன்” என்றால் சிறித்த முகமாக.​

பிறகு அனைவரும் எழுந்து விட ராஜலட்சுமி, நிலாவை பார்த்து சீக்கிரமா எழுந்துட்டியா? என்றார்.​

சித்ரா, “அம்மா நான் காலையில் வரும் பொழுதே நிலாமா எல்லா வேலையும் முடிச்சிட்டாங்க” என்றாள்.​

ராஜலட்சுமி, நிலாவை பார்த்து அப்படியா என்றாள். நிலா, “நான் காலையில் நாலு மணிக்கு எல்லாம் எழுந்துட்டேன் அத்தை அதான்” என்றாள்.​

ராஜலட்சுமி, “இனிமே இந்த வேலை எல்லாம் சித்ரா பார்த்துப்பா. நீ விக்ரமை மட்டும் பார்த்துக்கிட்டா போதும்” என்று விட்டு அனைவரும் தயாராகி காலை உணவை முடித்து விட்டார்கள்.​

ஆனால் விக்ரம் மட்டும் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. ராஜலட்சுமி, “நிலா சரி நீ போயிட்டு விக்ரமை எழுப்பி கூட்டிட்டு வா சாப்பிட” என்றார்.​

நிலா சரி என்று கையில் காபியுடன் விக்ரம் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால்.​

விக்ரம், உறங்கிக் கொண்டு இருந்தான். நிலா, எப்படி இவங்களை எழுப்புவது என்று யோசனையாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.​

பிறகு ”காபி.. எழுந்து காபி குடிங்க” என்றால் மெதுவான குரலில். அவன் ஒரு அசைவும் இன்றி அப்படியே படுத்து இருந்தான்.​

நிலா என்ன இது எழுந்திருக்கவே மாட்டிக்கிறாங்க என்று சிறு தய்க்கத்துடன் அவன் அருகில் குனிந்தபடி அவன் தோள்பட்டையில் கை வைத்து, “காபி குடிங்க” என்றாள்.​

விக்ரம் அவள் கண் சிமிட்டும் நேரத்தில் அவன் கை வளைவுக்குள் கட்டி அணைத்தபடி படுக்க வைத்து இருந்தான் அவளை.​

நிலா முகத்து அருகே இவன் முகத்தை வைத்து மூக்கும், மூக்கும் உரச, “குட் மார்னிங் டார்லிங்” என்றான் மென்மையாக.​

நிலா அவன் கண்களைப் பார்த்து பேசும் வார்த்தைகளை எல்லாம் மறந்து போனால். சிறு நிமிடம் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தவள் தான் இருக்கும் நிலையை அவள் உணர்வதற்கே சிறு வினாடி எடுத்துக் கொண்டது.​

விக்ரம் கிசுகிசுப்பாக அவள் காதோரம் உரசியபடி, “என்ன டார்லிங் இப்படி பார்த்துக்கிட்டே இருக்க” என்று கண் அடித்தான்.​

நிலா தான் இருக்கும் நிலையை உணர்ந்து பதறிப் போய் திருத்திரு என விழித்து கொண்டு அவனை பிடித்து ஒரே தல்லாக தள்ளி, “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று எழுந்தரிக்க முற்பட்டால்.​

ஆனால் விக்ரமின் பிடி அவளை எழுந்தரிக்க முடியாதபடி மேலும் இறுக்கி பிடித்தது. நிலா, என்ன செய்வது என்று தெரியாமல் நெலிந்தபடி தத்தளித்துக் கொண்டு இருந்தா​

 

rebe novel

Moderator

பாகம் – 16​

நிலா எழுந்திரிக்க முயற்சி செய்ததால் விக்ரமின் பிடி மேலும் மேலும் இறுகி போனது.​

நிலா ‍ அதிலிருந்து வெளிவர எவ்வளவு முயற்சித்தும் அவளால் முடியவில்லை, “என்னை விடுங்க” என்று வாய்விட்டு சொன்ன பின் விக்ரம் சிரித்துக் கொண்டே அவளை கீழே இறக்கி விட்டான்.​

இருவரும் கட்டிலில் இருந்து இறங்கியவுடன் நிலா, கைகள் விக்ரமின் கன்னத்தை பதம் பார்த்தது.​

அதில் விக்ரம் அதிர்ச்சியாக, “ஏய்” என்று கத்தி நிலாவை அடிக்க கை ஓங்கினான். ஆனால் அடிக்காமல் கைகளை முறுக்கி உதறினான்.​

நிலா கோவமாக, “உங்க மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க இஷ்டத்துக்கு நடந்துக்கிறீங்க எனக்கும் உயிர் இருக்கு”.​

“என்னோட மனசுல என்ன இருக்குன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் இந்த மாதிரியெல்லாம் நடந்துக்கோங்க” என்றாள்.​

விக்ரம், புரியாமல் அவளை பார்த்தான். நிலா, “என் மனசுல வேறு ஒருத்தன் இருக்கான்” என்றாள்.​

விக்ரம் மனதுக்குள் அன்று சுஜிதா சிறு வயதில் நிலா ஒருவனை காதலித்ததாக சொன்னது நினைவில் வந்தது.​

நிலாவை வெறுப் பேற்றுவதற்காக வேண்டும் என்றே அப்படியா என்று அதிர்ச்சியாகுவது போல் பாவனை செய்தான்.​

நிலா ஆமா என்று தலை அசைத்தாள். விக்ரம், “ஆனால் அதற்கு என்னால் ஒன்றும் பண்ண முடியாது. நான் உன்னை பல வருஷமாக ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான்.​

நிலா, “என்னது பல வருஷமாகவா? இது வரைக்கும் நான் உங்களை பார்த்ததே கிடையாதே” என்றாள்.​

விக்ரம், “அதெல்லாம் அப்படித் தான் நான் என் பிஏ வச்சி உன்னை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்” என்றான். நிலா எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.​

விக்ரம் நிலா முகத்தின் அருகே குனிந்து, “ஆனால் உனக்கு ஒரு சின்ன வயசு காதல் கதை இருக்குன்னு கேள்விப்பட்டேன்” என்றான் சிரித்துக் கொண்டே.​

மேலும் பேச்சை தொடர்ந்தவன், “சின்ன வயசு காதல் எல்லாம் ஒரு காதலே கிடையாது அதனால் நீ எல்லாத்தையும் மறந்திடு” என்றான் வேண்டும் என்றே.​

விக்ரம் எதிர் பார்க்காத வண்ணம் நிலா மறுபடியும் அவன் கன்னத்தில் அறைந்து விட்டால்.​

நிலா ஒற்றை விரலை நீட்டி, “எவ்வளவு திமிர் இருந்தா என் கிட்டயே இப்படி சொல்லுவ. என்னோட காதல் சின்ன வயசுக்காதல் தான்”.​

“ஆனால், அதோட ஆழம் ரொம்ப ரொம்ப அதிகம் உங்களுக்கு அதெல்லாம் சொன்னால் கூட புரியாது” என்று விட்டு நிலா கோபமாக அழுதுக் கொண்டே குளியல் அறைக்குள் சென்று விட்டால்.​

அத்துடன் இருவரும் பேசிக்கவே இல்லை. விக்ரம் என் மேல் இன்னும் எவ்வளவு காதல் வச்சிருக்கா என்று சந்தோஷமாக இருந்தான்.​

மத்திய வேலை உணவை அனைவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது ராஜலட்சுமி, “விக்ரம், நிலா நீங்க ரெண்டு பேரும் இப்பவே ரெடியாக ஆரம்பிச்சுடுங்க”.​

“அப்போது தான் இவ்னிங் ரிசப்ஷனுக்கு தயாரா இருக்க முடியும் சீக்கிரமா கிளம்பிடனும்” என்றார்.​

விக்ரம், “நிலாவை தயார் பண்ணுவதற்காக பார்லரில் இருந்து ஆட்கள் வருவாங்க. நீங்க மண்டபத்து வேலையை மட்டும் பார்த்துக்கோங்க”.​

“நிலாவும் நானும் நேரத்துக்கு தயாராகிடுவோம்” என்று விட்டு நிலா கையைப் பிடித்து கொண்டு மேலே அறைக்கு சென்று விட்டான்.​

வாசலில் இருந்து மித்ரா, “என் அண்ணியை கூட்டிட்டு போறதுலேயே இருக்காதீங்க” என்று குரல் கொடுத்தாள்.​

விக்ரம், திரும்பிப் பார்த்தான் மித்ரா ஓடிவந்து விக்ரமை கட்டி அணைத்து “அண்ணா மிஸ் யூ சோ மச்” என்றாள்.​

விக்ரம் மித்ரா தலையை தடவியபடி, “மீ டூ டா” என்றான்.​

பிறகு மித்ரா, “பார்த்தியா நான் எப்படி டைமுக்கு வந்துட்டேன். ஆனா அந்த ஆதித்யாவை பாரு இன்னும் வரவே இல்ல. அவன் எப்படியோ கடைசி நேரத்துக்கு தான் வருவான்” என்றாள்.​

ஆதித்யா, “வாய மூடு டி குட்டி சாத்தான்” என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தான்.​

விக்ரம், “நீயும் வந்துட்டியா” என்று சந்தோஷமாக அவனையும் கட்டி அணைத்தான்.​

பிறகு மித்ரா, “சரி சரி நேரமாச்சு நீ போய் தயாராகுர வேலையை பாரு”.​

“நானும் அண்ணியும் தயாராகிட்டு உன்னை வந்து பார்க்கிறோம்” என்று விக்ரம் பதிலுக்கு கூட எதிர் பார்க்காமல் நிலாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.​

மித்ரா ஒரே பெண் பிள்ளை என்பதால் அந்த வீட்டின் செல்ல பிள்ளை ஆகிபோனாள்.​

ஆதித்யா, “அண்ணா உங்களுக்கு நான் இருக்கேன் வாங்க நம்பளும் அவங்களுக்கு டஃப் கொடுக்குற மாதிரி ரெடியாகிட்டு வரலாம்” என்று விக்ரமை அழைத்தான்.​

விக்ரம் சிரித்துக் கொண்டே சரி என்று தலை அசைத்தான். ராஜலட்சுமி, ராஜேந்திரனை பார்த்து “நம்ப பசங்களை பாத்தீங்களா எப்படி ஒத்துமையா இருக்காங்க பார்க்கவே சந்தோஷமாக இருக்கு”.​

“மித்ராவும், ஆதித்யாவும் வந்ததுக்கு அப்புறம் தான் வீடு களை கட்டுது. ஆனால், என்கிட்ட ஒரு வார்த்தை கூட ரெண்டு பேருமே பேசவில்லை”.​

“ஒருத்தி அண்ணின்னு சொல்லி நிலா கூட போயிட்டா. இன்னொருத்தன் அண்ணன்னு சொல்லி விக்ரம் கூட போயிட்டான்”.​

“ஆக மொத்தத்துல என்னை யாருமே கண்டுக்கவே இல்லை” என்று வருத்தமான குரலில் கூறினார்.​

ராதிகா கிடைத்த நேரத்தில் எல்லாம் கெடா வெட்டுவது போல், “ஆமாம், அக்கா அந்த விக்ரம் நம்ம பசங்களை எல்லாம் எப்படி மாத்திட்டான்னு பார்த்தியா” என்றாள்.​

ராஜலட்சுமி அவளை முறைத்துப் பார்த்தார். ராதிகா அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார்.​

மத்தியத்திற்கு மேல் நிலாவை அலங்கரிக்க பார்லரில் இருந்து ஆட்கள் வந்து அவள் அழகுக்கு மேலும் மேலும் அழகூட்டினார்கள்.​

விக்ரம் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த மெருன் கலர் புடவையை அணிந்து அதற்கு ஏற்றார் போல் டைமண்ட் நகைகளை அணிந்து பல பலவென மின்னுவது போல் முகத்தில் சில பல மேக்கப் எல்லாம் போட்டு அவளை இளவரசி போல் தயார் செய்தார்கள்.​

விக்ரம் பக்கத்து அரையில் நிலா புடவைக்கு ஏற்றது போல் மெருன் கலரில் கோட் சூட் அணிந்து தாடி எல்லாம் டிரிம் செய்து தலைகளை அழகாக வாரி இளவரசன் போல் ரெடியாகி இருந்தான்.​

விக்ரம் கண்ணாடி முன்னாடி நின்று சரியாக ரெடி ஆகி விட்டோமா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.​

ஆனால், ஆதித்யா விக்ரமை தள்ளிவிட்டு, “கொஞ்ச நேரம் நீ ஓரமா போய் உட்காரு அண்ணா நான் ரெடியாகிக் கிட்டு இருக்கிறேன்ல” என்றான்.​

விக்ரம் ஆதித்யாவை முறைத்து பார்த்தான். ஆதித்யா சிரித்துக் கொண்டே, “என்ன இப்படி பாக்குற. நீ ஒரு ஓரமா தானே மண்டபத்தில் நிற்க போற நீ எப்படி இருந்தால் என்ன”.​

“ஆனால் நான் என்ன அப்படியா சொல்லு நாலு பொண்ணுங்க வருவாங்க அவங்க கிட்ட நாலு வார்த்தை பேசுவேன் எல்லாரும் என்னை பார்ப்பாங்க. இப்போ சொல்லு நான் தானே அழகா இருக்கணும்” என்றான்.​

விக்ரம் ஏற இறங்க அவனைப் பார்த்து, “ஒரு அண்ணன் கிட்ட பேசுற பேச்சாடா இது” என்றான்.​

ஆதித்யா, “நீ வயசுல வேண்டும் என்றால் எனக்கு அண்ணனாக இருக்கலாம். ஆனா நம்ம ரெண்டு பேரும் என்னைக்குமே நண்பர்கள் மாதிரி தான்”.​

“சரி வா நம்ம போயிட்டு அண்ணி எப்படி இருக்காங்கன்னு பார்க்கலாம்” என்று விக்ரம் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நிலா ரூம் கதவை தட்டினான்.​

மித்ரா, “ஒரு நிமிஷம்” என்று குரல் கொடுத்தாள். ஆரியன் மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டே இருந்தான். விக்ரம், “சும்மா இருடா கிளம்பிட்டு வர போறாங்க” என்றான்.​

ஆதித்யா, “அண்ணா அவங்களை விட்டால் நாள் முழுக்க கிளம்பிட்டே தான் இருப்பாங்க. நம்ம இப்படி கதவை தட்டிக்கிட்டே இருந்தாள் தான் சீக்கிரம் கிளம்புவாங்க” என்றான்.​

மித்ரா கதவை திறந்து, “சும்மாவே இருக்க மாட்டியா டா. கதவை தட்டிக்கிட்டே இருக்க ரெடி ஆகிட்டு தானே இருக்கோம்” என்று முறைத்தாள்.​

ஆதித்யா, “நீ முதல்ல ஓரமா போ டி பேய் மாதிரி கிளம்பி நிற்கிற இதுல இன்னும் வேற உனக்கு டைம் தேவையா” என்று கலாய்த்தான்.​

மித்ரா அவனை முறைத்து கொண்டு, “விக்ரம் அண்ணா நான் பேய் மாதிரியா இருக்கேன்?” என்றாள்.​

விக்ரம், “அவன் ஒரு பைத்தியம். அப்படி தான் பேசுவான் நீ கன்டுக்காத” என்றான்.​

மித்ரா, “சரி சரி அண்ணியை பார்த்துட்டு மேக்கப் எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றாள்.​

நிலாவை திரும்பிப் பார்த்த விக்ரம் சுற்றி நடப்பதையே மறந்து அவளை விழுங்கும் படி பார்த்துக் கொண்டே இருந்தான்.​

நிலா தலை குனிந்த படி நின்று இருந்தாள். மித்ரா, “அண்ணி நீங்களும் அண்ணாவை பாருங்க எப்படி இருக்காங்கன்னு சொல்லுங்க” என்றாள்.​

நிலா இதுக்கு அப்புறம் நான் பார்த்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் கேட்காத வண்ணம் முனு முனுத்தாள். ஆனால் அது சரியாக விக்ரம் செவியில் மட்டும் சென்றடைந்தது விட்டது.​

அதை கேட்ட விக்ரம் மௌனமாக சிரித்துக் கொண்டு நான் தான் துருவ் என்று உனக்குத் தெரியும் பொழுது நீ எப்படி என்கிட்ட நடந்துக்குவ அப்படின்னு பார்க்க எனக்கு ரொம்ப ஆவலாக இருக்கு என்று அவள் கண்களை பார்த்து ரசித்துக் கொண்டே நினைத்தான்.​

ஆதித்யா, “மித்ரா நான்​

சொல்ல மறந்துட்டேன் அம்மா நம்ப இரண்டு பேரையும் கீழே கூப்பிட்டாங்க” என்றான்.​

மித்ரா, “அப்படியா? சரி நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்துடறேன் இல்லனா அம்மா கத்திட்டே இருப்பாங்க” என்று அங்கிருந்து ஓடி விட்டாள்.​

ஆதித்யா, “விக்ரம் காதில் ரொம்ப வழியுது தொடச்சுக்கோ” என்றான். ஆனால், விக்ரம் அதை சட்டை செய்யாமல் அவன் வேலையை தொடர்ந்து கொண்டே இருந்தான்.​

ஆதித்யா தலையில் அடித்துக் கொண்டு நடத்து நடத்து என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்.​

பிறகு விக்ரம் கதவை சாத்திவிட்டு நிலா அருகில் வந்தவன், “நீ இந்த சேலையில் ரொம்ப அழகா இருக்க. வானத்தில் நிலவு ரொம்ப அழகாக இருக்கும் ஆனா அதை விட நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க டார்லிங்” என்றான்.​

நிலா எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள். விக்ரம், “சரி ஓகே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்லவா?” என்றான். நிலா என்ன என்று அவனை உற்றுப் பார்த்தாள்.​

விக்ரம், “உன் சக்தி மாமாவுக்கும் இன்னைக்கு தான் ரிசப்ஷன்” என்றான்.​

நிலா, “அப்படியா?” என்று விட்டு எந்த ஒரு முக பாவனையும் இன்றி அமைதியாக இருந்தாள்.​

விக்ரம், “உன் மாமாக்கு ரிசப்ஷன் எங்கன்னு தெரியுமா?” என்றான். நிலா, “அது எங்க நடந்தா எனக்கு என்ன எப்படியோ நான் போக போறது இல்லையே” என்றாள்.​

 

rebe novel

Moderator

பாகம் – 17​

விக்ரம், “நீ ம்ம்ம் என்று ஒரு வார்த்தை சொல்லு நான் உன் அப்பாவை நம்ப ரிசப்ஷனுக்கு வர வைக்கிறேன்” என்றான்.​

நிலா, “அது எப்படி நடக்கும் சக்தி மாமாவுக்கும் இன்னைக்கு தானே ரிசப்ஷன் என் சித்தி கண்டிப்பா மாமா ரிசப்ஷன்க்கு தான் போவாங்க. சித்தி எங்க போறாங்களோ அங்க தான் அப்பாவும் போவாங்க” என்றாள்.​

விக்ரம், “அது எல்லாம் உனக்கு ஏன் நீ சரி என்று ஒரு வார்த்தை சொல்லு உன் குடும்பத்தையே இங்க வர வைக்கிறேன்” என்றான்.​

நிலா, “அப்படின்னா இன்னைக்கு சக்தி மாமாக்கு ரிசப்ஷன்னு தானே சொன்னிங்க. இப்போ என்னோட அப்பா நம்ப ரிசப்ஷனுக்கு வருவாரா? இல்ல மாமா ரிசப்ஷனுக்கு போவாங்களா?” என்றாள் கை கட்டியபடி கேள்வியாக.​

விக்ரம் சிரித்துக் கொண்டே, “இப்போ நீ என்ன சொன்ன நம்ப ரிசப்ஷன்னு தானே நீ சொன்ன. அப்போ நீ என்னை ஏத்துக்கிட்டியா?” என்றான்.​

நிலா அவனை முறைத்துக் கொண்டு, “தேவை இல்லாமல் பேசாதிங்க” என்றாள். விக்ரம், “ஓகே ஓகே கூல் அது வந்து உங்க அப்பா” என்று ஆரம்பிக்கும் போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது.​

ஆதித்யா, “டேய் அண்ணா சீக்கிரம் வா டைம் ஆச்சு எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்பிட்டாங்க நம்பதான் இப்போ போகணும்” என்று கதவை தட்டினான்.​

விக்ரம், சென்று கதவை திறந்தவுடன் ஆதித்யா, “அதான் கல்யாணமே ஆகிடுச்சு இல்ல”.​

“நாள் முழுக்க ஒன்னா தான் இருக்கீங்க அப்புறம் என்ன எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருக்க அப்படி என்னதான் பேசுவியோ” என்றான்.​

*******************************​

ஜெயலட்சுமி, கண்ணம்மா வை அழைத்து “ஈவினிங் ரிசப்ஷனுக்கு சுஜிதா வை தயாராக சொல்லு” என்று கையில் ஒரு துணி பையையும் கொடுத்து விட்டு சென்று விட்டாள்.​

கண்ணம்மா சுஜிதாவிடம் சென்று, “இந்தாங்க அம்மா இந்த துணியை ஜெயா அம்மா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க ஈவினிங் ஃபங்ஷன்க்கு இத போட்டுக்க சொன்னாங்க” என்றார்.​

சுஜிதா சந்தோஷமாக தன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள். சக்தி, சட்டென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.​

சுஜிதா இருக்கும் கோலத்தை பார்த்த சக்தி, “அச்சச்சோ” என்று திரும்பி நின்று கொண்டான்.​

சுஜிதா லெகங்கா ஷாலை கையில் வைத்து சரி செய்து கொண்டு இருந்தாள்.​

சுஜிதா சட்டென்று சக்தியை கண்டவுடன் பதட்டமாக தன் முட்டை கண்களை அகல விரித்து “ஆஆஆஆ” என்று கத்தினாள்.​

சக்தி பதறிப் போய் சுஜிதா வாயில் கை வைத்து, “கத்தாதே வெளியே யாருக்காச்சும் கேட்டா தப்பா நினச்சிப்பாங்க” என்றான்.​

சக்தி வாயில் கை வைத்து அழுத்தியவுடன் சுஜிதா தடுமாறி பின்னே சாயிந்தாள்.​

அவள் எங்கே விழுந்து விடுவாளோ என்று சக்தி சட்டென்று சுஜிதா இடுப்பு வளைவில் கை போட்டு இருக்கி பிடித்தான்‌.​

அவள் வெற்று இடுப்பில் இவன் சூடான கை பட்டவுடன் அவளுக்கு உடம்பே சிலிர்த்து போனது. அவன் சட்டை காலரை இருக்கி பிடித்தாள் சுஜிதா.​

இருவரும் அவர்களையே மறந்து கண்களால் பேசிக் கொண்டு இருந்தார்கள். சக்தி அவனையே அறியாமல் அவன் கைகளால் சுஜிதாவின் இடுப்பு வளைவில் தாளம் போட்டு கொண்டு இருந்தான்.​

அதில் தன்னிளை உனற்ந்த சுஜிதா சக்தியை உலுக்கினால். ஆனால், எந்த ஒரு அசைவம் இன்றி சக்தி சிலையாக நின்று அவன் கைகளுக்கு வேலை கொடுத்து கொண்டே இருந்தான்.​

சுஜிதா அவனை பிடித்து தள்ளி விட்டு “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் வெட்கம் கலந்த கோபத்தில்.​

சக்தி அவள் தள்ளி விட்டதில் இரண்டு அடி பின்னே சென்று அப்போது தான் தன் கனவில் இருந்து கலைந்தான், “அது அது வந்து நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்றான் தட்டு தடுமாறிய படி.​

சுஜிதா, “நான் இங்க துணி மாத்திட்டு இருந்தேன். உள்ளே வரும் போது கதவை தட்டிட்டு வரணும் என்று உங்களுக்கு தெரியாதா?” என்றாள்.​

சக்தி, “துணி மாத்தினா கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு மாத்தணும் என்று உனக்கு தெரியாதா?” என்றான்.​

சுஜிதா அவனை பார்த்து முறைத்து கொண்டு வேண்டுமென்றே அவனை வெறுப் பேற்ற என்னி, “அது சரி சார் கொஞ்சம் முன்னாடி என்று தன் இடுப்பை சுட்டி காட்டி இங்க என்ன பன்னிட்டு இருந்திங்க” என்றாள்.​

சக்தி சுஜிதா நினைத்தது போலவே, “அது வந்து... நான் ஒன்னும் பண்ணலையே” என்றான் திருத்திரு என விழித்துக் கொண்டு.​

சுஜிதா அவனை உற்றுப் பார்த்து ஒரு அடி அவன் புறம் எடுத்து வைத்து மெதுவான குரலில், “நீங்க ஒன்னும் பண்ணலையா?” என்றாள்.​

சக்தி, “நீ எதுக்கு இப்படி ஒரு மாதிரி பேசுற. அது தெரியாமல் நடந்திருச்சு” என்று சட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டான்.​

சுஜிதா கதவை சாத்திக் கொண்டு அவன் நெருக்கமாக இடுப்பில் கை வைத்ததை நினைத்து கதவில் சாய்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.​

சக்தி தோட்டத்திற்கு சென்று தலையில் அடித்துக் கொண்டு என்னடா இப்படி மானத்தை வாங்கிட்டியே.​

எவ்வளோ கோபமாக கம்பீரமாக இருந்த. அந்த குட்டி கத்திரிக்கா கீழ விழுந்தா விழுந்துட்டு போகட்டும் என்று விட்டு தொலைக்க வேண்டியது தானே என்று தன் கையை பார்த்து தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தான்.​

ஜெயலட்சுமி பின்னால் இருந்து சக்தியை பார்த்து காத்துலயே பேசிக்கிட்டு இருக்கான் பாரு என்று தலையில் அடித்து கொண்டாள்.​

இந்த முட்டாள் பையனை என்ன சொல்லி ரிசப்ஷன்க்கு வர வைக்கிறது என்று சிந்தித்து ஒரு ஐடியாவுடன் சக்தி அருகில் சென்றாள்.​

ஜெயலட்சுமி, “சக்தி” என்று அழைத்தாள். சக்தி எதுவும் கேட்காதது போல் அப்படியே நின்றிருந்தான்.​

ஜெயலட்சுமி, “இன்னைக்கு ரிசப்ஷனுக்கு போகனும். இன்னும் நீ ரெடி ஆகலையா?” என்றாள். சக்தி, “நான் எங்கேயும் வரவில்லை” என்றான்.​

ஜெயலட்சுமி, “என்ன டா இப்படி சொல்லிட்ட உன்னை வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போனாளே அந்த நிலா”.​

“அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். உன்னை வேண்டாம் என்று சொன்னதுக்காக அவ வருத்தப்படுற மாதிரி நம்ம ஏதாச்சும் பண்ணனும் இல்லையா” என்றாள் நல்லவளை போல்.​

சக்தி தன் அக்காவை முறைத்து பார்த்தவிட்டு, ”நீ எனக்கு கல்யாணம ஏற்பாடு பண்ணிருந்த அந்த நிலா என்னை வேண்டான்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டா லா” என்றான் கோபமாக.​

ஜெயலட்சுமி, “இல்ல டா நான் என்ன சொல்றேன்னா அந்த நிலாவோட புருஷன் உனக்கு எதிரி எனக்கு அந்த நிலாவே எதிரி”‌.​

“அதனால் நம்ப ரெண்டு பேரும் இந்த பங்ஷனுக்கு போயிட்டு நிலாவை ஏதாவது கஷ்டப் படுத்திட்டு வரலாம்” என்றாள். சக்தி யோசனையாக, “எப்படி?” என்றான்.​

ஜெயலட்சுமி, “ஆமாம் அவ உன்னை பிடிக்கல நீ முரட்டுத்தனமா முட்டாள் மாதிரி இருக்க அப்படின்னு சொல்லி தானே வேண்டாம் என்று சொன்னாள்”.​

“ஆனால், இப்போ அவளுடைய நெருங்கிய தோழியவே நீ கல்யாணம் பண்ணி இருக்க”.​

“நீ உன் பொண்டாட்டி கூட ரொம்ப நெருக்கமா சந்தோஷமா இருக்க மாதிரி நடிச்சேன்னா கண்டிப்பா அவ இருக்க வேண்டிய இடத்தில் அவள் தோழி இருப்பதை நினைத்து பொறாமைப் படுவா. உன்ன வேண்டாம் என்று சொன்னதுக்கு வருத்தப்படுவா” என்றாள்.​

சக்தி, “ஆமாம் நீ சொல்றதும் சரி தான் என்னை வேண்டாம் என்று சொன்னதுக்கு அவ கண்டிப்பா வருத்தப்படணும்” என்றான் ஆக்ரோஷமாக.​

ஜெயலட்சுமி தன் திட்டம் நிறைவேறியதை நினைத்து மௌனமாக சிரித்தாள். சக்தி, “சரி அப்போ நான் போய் தயாராகுகிறேன்” என்று சென்று விட்டான்.​

*******************************​

நிலா, விக்ரம் இருவரும் ஆடி காரில் வந்து மண்டபத்தின் நுழைவாயுலில் இறங்கினார்கள்.​

ஆதித்யா அவன் தோழன் நான்கு பேர் மற்றும் மித்ரா அவள் தோழி நான்கு பேர் என அனைவரும் சேர்ந்து வரவேற்புக்கு நடனம் ஆடினார்கள்.​

“மனசோ இப்போ தண்டியடிக்கிது மாமன் நடைக்கு மத்தள டும் டும்​

சிரிப்போ இல்லை மின்னல் அடிக்கிது ஆசை பொண்ணுக்கு அச்சாத டும் டும்”​

என்று பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே உள்ளே வரவேற்றார்கள்.​

மேடைக்கு சென்றவுடன் மித்ரா பொக்கே ஒன்றை விக்ரம் கையில் கொடுத்து ப்ரொபோஸ் செய்யுமாறு கூறினாள்.​

விக்ரம் மனதுக்குள் எல்லார் முன்னாடியும் இவல் வாங்காவிட்டால் என்ன பண்ணுவது என்று சிறு அச்ச வந்தது.​

இருந்தும் வேறு வழி இன்றி அந்த பொக்கேவை வாங்கிக் கொண்டான். நிலா அருகில் விக்ரம் முட்டி போட்டு கைகளை நீட்டி, “ஐ லவ் யூ டார்லிங்” என்றான்.​

நிலா அதை வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். விக்ரமுக்கு பதட்டத்தில் வியர்த்து விட ஆரம்பித்தது.​

மித்ரா, “வெட்கப்படாதீங்க வாங்கிக்கோங்க அண்ணி” என்று நிலாவை பிடித்து உலுக்கினாள்.​

நிலா முழு மனதாக இல்லா விட்டாலும். கடமைக்கென அனைவர் முன்பும் சிறித்த முகமாகவே அதை வாங்கிக் கொண்டாள்.​

பிறகு விக்ரம், தன் ஒற்றை கையை நீட்டி, “டு யூ லைக் டு டான்ஸ் வித் மீ” என்றான்.​

நிலா தயக்கமாக வேண்டாம் என்று கண்களால் சைகை செய்தால். அதற்குள் மித்ரா நிலாவை பிடித்து விக்ரம் மேல் தள்ளி விட்டிருந்தாள். நிலா கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தாள்.​

விக்ரம் கீழே குணிந்து கண்களாலயே நிலா அவன் மார்புக்கு மேல் ஒரு கை வைத்து கொண்டும் அவன் கை மேல் இன்னோரு கை வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி நீயா தான் என் கையை பிடித்த என்பது போல் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.​

மித்ரா திரும்பி பார்த்து சைகை செய்ய ஆதித்யா அங்கு பாட்டை போட்டு விட்டான்.​

“அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்” என்னும் பாட்டிற்கு விக்ரம் நிலா கைகளை பிடித்து நடனம் ஆடினான்.​

நிலா கிசுகிசுப்பாக அனைவர் முன்பும் சிரித்துக் கொண்டே, “போதும் ப்ளீஸ் போதும்” என்றாள்.​

விக்ரம் மனதுக்குள் இவகளுக்கு பிடிக்கா விட்டாலும் அனைவர் முன்பும் எனக்கும் என் குடும்பத்திற்கும் அவமானம் ஏற்பட கூடாது என்று அனைத்திற்கும் ஒத்துழைக்கிறாலே என்று சந்தோஷப் பட்டான்.​

ராஜேந்திரன், விக்ரம் கையில் ஓர் மாலையை கொடுத்து நிலா கழுத்தில் போடுமாறு கூறினான். ராஜலட்சுமி, நிலா கையில் ஓர் மாலை கொடுத்து விக்ரம் கழுத்தில் போடுமாறு கூறினார்.​

நிலா மற்றும் விக்ரம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாலையை மாற்றிக் கொண்டார்கள்.​

பிறகு ராஜலட்சுமி ஒரு டைமண்ட் செயினை விக்ரம் கையில் கொடுத்து, “இதை நிலா கழுத்தில் போட்டு விடு பா உங்க கல்யாணத்தை தான் நாங்க யாரும் பார்க்க வில்லை”.​

“அதனால் இந்த செயினை போட்டு விடு இதை பாற்த்து நாங்க சந்தோஷப்பட்டு கொள்கிறோம்” என்றார்.​

பிறகு அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து கூறி பறிசுகளை கொடுக்க அரம்பித்தார்கள்.​

வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஜெயலட்சுமி, சுந்தரம் இறங்கினார்கள். ராஜேந்திரன், ராஜலட்சுமி இருவரையும் இன்முகமாக வரவேற்றார்கள்.​

மேடையில் இருந்து நிலா இவர்களை பார்த்தவுடன் அவளை அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது என் தந்தை எனக்காகவா இங்கு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.​

விக்ரம், நிலா காது அருகே சென்று “நீ சொல்லா விட்டாலும் உன் மனதில் என்ன நினைக்கிற என்று எனக்கு தெரியும்”.​

“நீ ஆசைப்பட்டால் அதை நிறைவேற்றாமல் நான் விடமாட்டேன் டார்லிங்” என்றான். நிலா, “கண்கள் கலங்க விக்ரமை பார்த்தாள்”.​

 

rebe novel

Moderator

பாகம் – 18​

நிலா கலங்கிய விழிகளுடன் விக்ரமை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையின் வீரியத்திலே அவள் தந்தையின் பாசத்திற்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.​

யாரும் பார்க்காத வண்ணம் அவள் கண்களை இவன் கரங்களைக் கொண்டு துடைத்து அழாதே என்பது போல் தலையாட்டினான்.​

திடீரென ஜெயலட்சுமிக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதை எடுத்து “ஹலோ யாரு” என்றாள் கம்பீரமாக. அந்த பக்கம் இருந்தவன், “நான் விக்ரம் சாரோட பீஏ” என்றான்.​

ஜெயலட்சுமி அங்கும் இங்கும் திரும்பி பார்க்க மேடைக்கு பக்கத்தில் ஒருவன் இவளைப் பார்த்துக் கொண்டே காதில் ஹெட்போன் உடன் நின்றிருந்தான்.​

ஜெயலட்சுமி, “என்ன விஷயம்?” என்றாள் அதே கம்பிறத்துடன்.

அந்த பீஏ, “நீங்களும் உங்க புருஷனும் மேடைக்கு சென்று நிலா மேடம் கிட்ட பாசமாக பேச வேண்டும்” என்றான்.​

ஜெயலட்சுமி ஏளனமாக சிரித்துக் கொண்டு, “அவ கிட்டையா? அதுவும் நான் பாசமா பேசணுமா?” என்றாள்.​

பீஏ, “இது எங்க சார் ஓட கட்டளை உங்களுக்கு சொத்து வேண்டும் என்றால் எங்க சார் சொல்றபடி நீங்க நடந்து கொண்டு தான் ஆக வேண்டும்” என்று ஃபோனை துண்டித்து விட்டான்.​

ஜெயலட்சுமி அவள் கோபத்தை வெளியே காட்ட முடியாமல் சுந்தரத்திடம், “வாங்க உங்க பொண்ணை பார்த்து வாழ்த்திட்டு வரலாம்” என்றாள்.​

சுந்தரம் அதிர்ச்சியாக, “ஜெயா நீ என்ன சொல்ற எனக்கு சரியா புரியல” என்றான்.​

ஜெயலட்சுமி எரிச்சலாக, “ஒருவாட்டி சொன்னா உங்களுக்கு புரியாதா வாங்க மேடைக்கு போகலாம்” என்றாள்‌.​

சுந்தரம் எதுவும் கூறாமல் அவள் பின்னாலேயே சென்றான். ஜெயலட்சுமி நிலா அருகில் சென்று, “எப்படி மா இருக்க? நல்லா இருக்கியா?” என்றார் பாசமாக கேட்பது போல்.​

நிலா, “சித்தி...” என்றாள் எப்பொழுதும் போல் பயத்துடன் நடுங்கும் குரலில்.

ஜெயலட்சுமி விக்ரமை பார்த்தாள் நிலா இன்னமும் தன்னை பார்த்து பயப்படுவதை கண்களால் காண்பித்த ஏளனமாக சிரித்தார்.​

பிறகு ஜெயலக்ஷ்மி அவள் என்ன கூற வருகிறாள் என்பதை கூட காதில் வாங்காமல் கீழே இறங்கி விட்டாள்.​

ஜெயலட்சுமி சென்ற பின் சுந்தரம், நிலாவின் தலையை தடவிய படி, “நல்லா இருக்கியா மா?” என்றார்.

பல வருடங்களுக்குப் பிறகு தன் பிள்ளையை பார்த்து பேசினார்.​

நிலா ஒரு நிமிடம் தன் தந்தையை கட்டி அணைத்து சந்தோஷத்தில் அவளையும் மீறி அழுது விட்டாள்.​

சுந்தரம், “உங்க அம்மா உனக்கு எப்பயும் துணையாக இருப்பாள். நீ எதுக்கும் கவலைப் படாதே” என்று விட்டு சுந்தரம் கையில் இருந்து ஒரு மோதிரத்தை கழட்டி நிலாவிற்கு அணிவித்தார்.​

நிலா, “அப்பா இதெல்லாம் வேண்டாம் அப்புறம் சித்தி உங்களை ஏதாச்சும் சொல்ல போறாங்க” என்றாள் பாவமாக.​

சுந்தரம், “நீ சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது இது உன் கல்யாணத்துக்காக உன் அம்மா முதல் முதலில் சீட்டு கட்டி வாங்கின மோதிரம்”.​

“இதை உன் கல்யாணத்தப்போ கொடுக்க வேண்டும் என்று நான் இவ்வளவு வருடமாக பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் உன் சித்திக்கு தெரியாமல்” என்று கூறி அவள் கையில் அணிவித்து தலையை வருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.​

விக்ரம், நிலாவின் கைகளை ஆறுதலாக பிடித்து தலையை இருபக்கமும் ஆட்டி அழாதே என்று அவள் கையில் அழுத்தம் கொடுத்தான்.​

அந்த நிமிடம் நிலா அவளையும் மீறி விக்ரம் ஆறுதலை ஏற்றுக் கொண்டாள். லேசாக அவள் தலையை விக்ரம் தோல் பட்டையின் மேல் சாய்த்துக் கொண்டாள்.​

பிறகு விக்ரம், “டூ மினிட்ஸ் ஃப்ரஷ் ஆகிட்டு வந்துடரோம்” என்று ராஜலட்சுமியிடம் சொல்லிவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்கு சென்று விட்டான்.​

அதே சமயம் வாசலில் ஜீப் ஒன்று மணல் பறக்க வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து சக்தி எகிறி குதித்து இறங்கி கடகடவென உள்ளே சென்றான்.​

அதை தூரத்தில் இருந்து பார்த்த ஜெயலட்சுமி இவன் வேற நம்பள அசிங்கப்படுத்தி விடுவான் போலயே.​

பெரிய இடத்து பசங்க மாதிரி கெத்தா வந்து ஸ்லோ மோஷன் இல் இறங்குவான்னு பார்த்தா இப்படி ரவ்வுடி மாதிரி எகிரி குதித்து இறங்குகிறான்.​

அதுவும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகிட்ட மாதிரி ஒரே ஓட்டமா ஓடிக்கிட்டு இருக்கானே என்று தலையில் அடித்து கொண்டு அவசர அவசரமாக தன் தம்பிக்கு செல்போனில் அழைத்தாள்.​

சக்தி செல்போனை எடுத்து, “சொல்லுக்கா எங்க இருக்க?” என்றான்.​

ஜெயலட்சுமி கோபமாக, “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டா. நீ பாட்டுக்கு என்னமோ சன்டைக்கு போற மாதிரி கடகடவென்று போய்கிட்டே இருக்க. அந்த பொண்ணை யாரு டா கூட்டிட்டு வருவா” என்றாள்.​

சக்தி, “இங்க பாரு நீ ஏதேதோ சொன்னியேன்னு நானும் வந்துட்டேன் சும்மா அவளை கூட்டிட்டு வா இதை பண்ணு அதை பண்ணு என்று என்னை சொல்லாத” என்றான்.​

ஜெயலட்சுமி தலையில் அடித்துக் கொண்டு இவன வச்சிட்டு என்று, “என்னடா நம்ப திட்டத்தையே மறந்துட்டியா. அந்த நிலாவ வெறுப் பேற்றுவது தானே நம்பளோட திட்டமே”.​

“நீ இப்படி தனியா வந்தினா அந்த நிலா பார்த்துட்டு நல்ல வேலை நம்ப இவனை கட்டிக்கல என்று சந்தோஷப் படுவா டா புரியுதா சந்தோஷப் படுவாள்” என்று அந்த வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினார்.​

சக்தி, “அதெல்லாம் முடியாது அக்கா அவள் சந்தோஷப்படவே கூடாது” என்றான். ஜெயலட்சுமி நம்ப வழிக்கு வர ஆரம்பிச்சிட்டான் என்று மேலும் பேச்சை தொடர்ந்தால்.​

ஜெயலட்சுமி, “அந்த விக்ரம் நிலாவுடன் சந்தோஷமாக நெருங்கி இருந்து உன்னை வெறுப் பேற்றுவான் அதுக்கெல்லாம் நீ இடம் கொடுக்கலாமா? நல்லா யோசிச்சு பாரு”.​

“நீ இவ கூட சந்தோஷமா இருக்க மாதிரி சும்மா நடிச்சா மட்டும் போதும் எல்லாம் உனக்காக தான் அவ கைய புடிச்சு உள்ள கூட்டிட்டு வாடா” என்று போனை துண்டித்தாள்.​

பிறகு ஜெயலட்சுமி ஐயோ இந்த பைத்தியக்காரனை வைத்துக் கொண்டு நான் எப்படித் தான் பணக்காரியாக மாற போகிறேனோ தெரியலையே என்று நொந்து போனார்.​

சக்தி அக்கா சொல்வதும் சரிதான் என்னை திருமணம் செய்யாததை நினைத்து அவள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டும்.​

அடியே நிலா உன்னை நான் எப்படி வெறுப் பேற்றுகிறேன் பார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.​

சக்தி பிறகு சுஜிதா வை திரும்பி பார்த்தான். அவள் கீழே இறங்காமல் ஜீப்பிலே அமர்ந்த இருந்தாள், “ஐயோ இவ கூட எப்படி சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறது இவ ரொம்ப ஓவரா பண்ணுவாலே” என்று நினைத்து நொந்து போனான்.​

சக்தி சுஜிதா அருகில் சென்று, “நான் இறங்கி உள்ளே செல்கிறேன்ல நீயும் இறங்கி வர வேண்டியது தானே” என்றான்.​

சுஜிதா, “நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க. அப்போ நீங்க தான் கைய புடிச்சு உள்ளேயும் கூட்டிட்டு போகனும்” என்றால் அவனைப் பார்த்து கண் அடித்த படி.​

சக்தி, “எல்லாம் என் நேரம்” என்று முனு முனுத்துக் கொண்டு சுஜிதா விடம் தன் கைகளை நீட்டி இறங்குமாறு சைகை செய்தான்.​

சுஜிதா ஆச்சரியமாக பார்த்தாள் என்ன இவன் பதிலுக்கு எதுவும் தன்னுடன் சண்டை பிடிக்காமல் ரொமான்டிக்காக கைகளை நீட்டுகிறானே.​

சரி எதுவா இருந்தால் நமக்கு என்ன இந்த நிமிடம் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைத்து அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.​

சக்தி, “என்ன பாத்துட்டே இருக்க சீக்கிரம் இறங்கு” என்றான். சுஜிதா, “அதை கொஞ்சம் அன்பாக சொன்னால் என்ன” என்றாள்.​

சக்தி அவளை முறைத்துக் கொண்டு, “அதெல்லாம் எனக்கு வராது நீ இறங்கு சீக்கிரம்” என்றான்.​

சுஜிதா இறங்குவதற்காக கீழே கால்களை எடுத்து வைத்தாள். ஆனால், அந்த ஜீப் கொஞ்சம் உயரமாக இருந்ததால் இவளுக்கு கால் எட்டாமல் சற்று தடுமாறினாள்.​

அதை கவனித்த சக்தி கலகலவென சிரித்து, “குட்டி கத்திரிக்கா நீ எல்லாம் இறங்கணும் என்றால் உனக்கு ஏணி தான் எடுத்துட்டு வந்து போடணும்” என்று கிண்டல் செய்தான்.​

அதற்குள் ஜெயலட்சுமி, சுந்தரம் மற்றும் ராஜேந்திரன், ராஜலட்சுமி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து இவர்களை உள்ளே வரவேற்றார்கள்.​

சக்தி தன் அக்கா சொன்னது போல் சுஜிதா கையை பிடித்துக் கொண்டு ஒன்றாக நடந்து சென்றான்.​

ஆனால், சுஜிதா இவன் உயரத்திற்கு ஈடு கொடுப்பதற்காக காலில் பெரிய ஹீல் அணிந்து இருந்தாள்.​

அவள் அணிந்து இருந்த லெஹன்காவும், ஹீளும் ஒன்று சேர்ந்து சதி செய்தது போல் பேலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறினாள்.​

அந்த நேரம் சரியாக சக்தி அவளை தாங்கிப் பிடித்து கீழே விழ விடாமல் தடுத்தான், “உனக்கு ஒழுங்கா நடக்க கூட தெரியாதா?” என்று அவளை திட்டிக் கொண்டே தன் கைகளில் ஏந்திக் கொண்டு உள்ளே சென்றான்.​

சுஜிதா, “ஐயோ கீழே இறக்கி விடுங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றாள் வெட்கம் கலந்த பதட்டத்தில்.​

சக்தி, “சும்மா இரு நீ எங்கேயாவது கீழே விழுந்து தொலைச்சேனா ஜெயா அக்காக்கு அவமானம் ஆகிடுச்சுன்னு என்னைய தான் திட்டுவா” என்றான்.​

அனைவர் கண்களுக்கும் இவர்கள் ஜோடி பொருத்தம் அம்சமாக இருந்தது. சக்தி ஆறடி உயரமும், கம்பீரமான நடையும், முறுக்கு மீசையுடன் மிதமான தாடியும், ஆளையே மயக்கும் படி இருந்தான்.​

சுஜிதா அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் 4.9 அடி உயரத்தில், பலிச் என்ற வெள்ளை நிறத்தில், 23 வயதுக்கு ஏற்றது போல் உடல் பாவனையும்.​

மற்றும் சிவப்பு நிறத்தில் லெஹங்கா போட்டு கொண்டு மிதமான ஒப்பனைகளுடன் அவன் உயரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஹீல் ஷு போட்டு இருந்தாள்.​

அப்பொழுதும் சக்தியின் தோல்பட்டை உயரத்திற்கு தான் இருந்தால் சுஜிதா.​

இருவரும் எலியும், பூனையுமாக இருந்தாலும் அது வெளியே தெரியாததால் அனைவர் கண்களுக்கும் இவர்கள் ரோமியோ, ஜூலியட் போல் பிரதிபலித்தார்கள்.​

இவர்களை அழைத்துச் சென்று விக்ரம், நிலா நின்றிருந்த இடத்திற்கு பக்கத்தில் சக்தி, சுஜிதாவை நிற்க வைத்தார்கள்.​

மேடை ஏறிய பிறகு தான் சக்தி, சுஜிதாவை கீழே இறக்கி விட்டான்.

இவர்கள் வந்து நிற்கும் வேலையில் விக்ரம், நிலாவை உள்ளே அழைத்துச் சென்றிருந்தான்.​

சக்தி ஒரு புறம் நிலாவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை தேடிக் கொண்டிருந்தான்.​

சக்தி மனதுக்குள் நிலா என்னைய கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனால இப்போ உன்னோட ஆருயிர் தோழியவே நான் கட்டிக்கிட்டு வந்திருக்கேன்.​

இத பார்த்து நீ கஷ்டப்படணும். நீ கஷ்டப்படுறதை பார்த்து நான் ரசிக்கனும் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.​

ஜெயலட்சுமி அனைவர் முன்னிலையிலும் தன்னை ஆடம்பரமாக காமித்துக் கொள்வதற்காக மேடைக்கு சென்று தன் தம்பிக்கு ஒரு தங்க சங்கிலியை அணிவித்தாள்.​

இருவர் கையிலும் மாலை கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு கூறினார்கள்.​

சக்தி என்ன அவசரம் இரு என்று கண்களால் தன் அக்காவிற்கு சைகை செய்தான்.​

சக்தி, “அந்த நிலா வரட்டும்” என்றான். ஜெயலட்சுமி, “எல்லாரும் பார்கிறாங்க முதலில் மாலையை மாத்திக்கோ.​

பிறகு ஒரு மோதிரத்தை சக்தி கையில் கொடுத்து நிலா வரும் பொழுது இந்த மோதிரத்தை சுஜிதா கையில் போட்டு விடு” என்று இவளும் கிசுகிசுப்பாக கூறினாள்‌.​

 

rebe novel

Moderator

பாகம் – 19​

சக்தி, “சரி அக்கா நீ சொன்னா சரியாக தான் இருக்கும்” என்று மறுப்பு கூறாமல் சுஜிதா கழுத்தில் மாலையை அணிவித்தான்.​

சுஜிதாவும் மன நிறைவோடு சக்தி கழுத்தில் மாலையை அணிவித்தாள். விக்ரம் நிலாவை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று டிஷு பேப்பரை எடுத்து அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.​

பிறகு விக்ரம், “உனக்கு இப்போ சந்தோஷமா? டார்லிங்” என்றான். நிலா அவனை பார்த்து, “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் அப்பா என்னிடம் பேசியே பல வருடம் ஆகிவிட்டது”.​

“அதுவும் தன் கையில் இருக்கும் மோதிரத்தை சுட்டிக்காட்டி இந்த மோதிரம் என் அம்மா எனக்காக வாங்கி வைத்திருந்ததாம் இதை என் அப்பா பத்திரமாக வைத்து இருந்து இப்பொழுது என்னிடம் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கும் பொழுதே எனக்கு வானத்தில் பறப்பது போல் இருக்கிறது”.​

“எவ்வளவு நாட்கள் நான் என் அப்பா என்னிடம் பேசாமல் இருப்பதை நினைத்து அழுது இருக்கிறேன்.​

ஆனால், அந்த அழுகை அனைத்திற்கும் ஒரு படி மேலே இன்று சந்தோஷமாக இருக்கிறேன் தேங்க்ஸ்” என்றால் உணர்ச்சி பூர்வமாக.​

விக்ரம், “சரி ஓகே கூல் நீ கொஞ்சம் தண்ணி குடிச்சு ரிலாக்ஸ் ஆகு” என்றான்.​

சிறிது நேரம் கழித்து விக்ரம், “ஓகே டைம் ஆச்சு நம்ப ஸ்டேஜ்க்கு போகணும்‌ எல்லாரும் நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க” என்று அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் மேடைக்கு சென்றான்.​

நிலா சந்தோஷமாக வந்தவள் மேடையில் ஏறிய பின் சக்தியை எதிரில் பார்த்து அதிர்ச்சியாகி போனாள்.​

சக்தி சிரித்துக் கொண்டே, “உனக்காக தான் இவ்வளவு நேரம் காத்துக் கிட்டு இருந்தேன். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்று உனக்கு தெரிந்திருக்கும் நினைக்கிறேன்”.​

“ஆனால், நான் யாரை கல்யாணம் செய்து கொண்டேன் என்று உனக்கு தெரியாது இல்லையா. பாரு இவ தான் என் பொண்டாட்டி” என்று ஒரு அடி பின்னே நகர்ந்தான்.​

அப்பொழுது தான் நிலா பக்கத்தில் இருக்கும் சுஜிதாவை பார்த்தாள். நிலாவுக்கு இவ்வளவு நேரம் சந்தோஷத்தில் அதிர்ச்சி கிடைத்தது.​

ஆனால், தற்போது கவலையில் அதிர்ச்சி கிடைத்தது. நிலா, “சுஜி” என்றாள் பதட்டமாக. சுஜிதாவுக்கு தன் தோழியை பார்த்தவுடன் ஏனோ கண்கள் கலங்க ஆரம்பித்தது.​

நிலா ஒன்றும் புரியாமல் சுஜிதாவை பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள். நிலா, சுஜிதா இருவருக்குமே ஒருசேர கட்டி அணைக்க வேண்டும் போல் இருந்தது‌.​

ஆனால், இவர்கள் இருக்கும் சூழ்நிலையில் எதுவும் பேசிக்கொள்ள கூட முடியவில்லையே என்று நினைத்து நொந்து போனார்கள்.​

நிலா மனதுக்குள் பல கேள்விகள் தோன்றியது. எப்படி இந்த திருமணம் நடந்திருக்கும்? கண்டிப்பாக சுஜிதாவிற்கு பிடிக்காமல் தான் நடந்திருக்கும்?​

சக்தி மாமா மிரட்டி தான் திருமணம் செய்து இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இருக்கும் கலவரத்தை பார்த்து சக்தி ஆனந்தம் கொண்டான்.​

இரு தம்பதிகளுக்கும் மித்ரா ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள். நிலா, “எனக்கு வேண்டாம் என்றால்” சோகமாக. சுஜிதாவும், “வேண்டாம்” என்று மறுத்தாள்.​

விக்ரம், “நிலா டார்லிங் நீ இதை குடித்தால் தான் கொஞ்சம் தெம்பாக இருக்க முடியும் இல்லை என்றால் மயக்கம் தான் வரும்”. டின்னர் சாப்பிட இன்னும் லேட் ஆகிடும்” என்றான்.​

நிலா வேறு வழியின்றி ஜூஸை பருகினாள். அதைப் பார்த்த சக்தி, “சுஜி பேபி நீ ஏன் வேண்டாம்னு சொல்ற இந்த ஜூஸைக் குடி” என்று வல்கட்டாயமாக வாயில் திணித்தான்.​

அது லேசாக சுஜிதாவின் ஆடையிலும் சிந்தி விட்டது. அதை பார்த்த நிலா சுஜிதா வின் நிலையை கண்டு வருந்தினாள். அந்த வருத்தத்தை கண்டு சந்தோஷம் அடைந்தான் சக்தி.​

விக்ரம் ஒரு பக்கம் கோபம் கொண்டான் நிலா வீட்டில் இருந்த போது சுஜிதா அவனிடம் பேசும் போது எல்லாம் அவனுக்கு மித்ராவை போல் தான் தோன்றும்.​

தன் தங்கையை போல் தான் பார்த்தான். அவளுக்கு இவன் மாப்பிள்ளையா? அதுவும் இப்படி முட்டாள் மாதிரி நடந்துக் கொள்கிறான் என்று சக்தியை பார்த்து முறைதான்.​

சக்தி, சுஜிதாவின் தோள்பட்டையில் கை போட்டு இறுக்கி பிடித்தான்.​

சுஜிதா வலியில் நெலிந்தால்.​

ஆனால், அதை எல்லாம் சக்தி கவனிக்கவில்லை. நிலா மற்றும் விக்ரம் இதை பார்க்கிறார்களா? என்று மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்தான்.​

இதை எல்லாம் கீழே இருந்து கவனித்த ஜெயலட்சுமி மனதுக்குள் ஐயோ இந்த சக்தி இப்படி முரடனை போல் நடந்துக் கொள்கிறானே யாராச்சும் பார்த்தால் ஜெயா தம்பி இப்படி பன்னுகிறான் என்று எனக்கு தானே அவமானம் ஏற்படும்.​

இவன் எங்கே இது போல் நடந்து கொள்வானோ என்ற பயத்தில் தான் வீட்டிலேயே நிலா உன்னை திருமணம் செய்யாததை நினைத்து வருத்தப்பட வேண்டும்.​

அதற்கு நீ உன் பொண்டாட்டியை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளனும் அனைவர் முன்பும் என்று அவன் மண்டையை கழுவி வைத்திருந்தேன்.​

இருந்தும் இப்படி படுத்துகிறானே என்னை என்று சரசரவென மேலே வந்து சக்தி காதருகில் சென்று, “என்ன டா பண்ணிக்கிட்டு இருக்க இப்ப எதுக்கு ஜூசை அந்த பொண்ணு மேல் ஊத்தின?” என்றார்.​

சக்தி, “அக்கா நம்ப பிளான் பண்ண மாதிரி தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அங்க பாரு அந்த நிலா இவளை நினைத்து எப்படி வருத்தப்படுறா” என்றான்.​

ஜெயலட்சுமி, “அட பைத்தியக்காரா அவ சுஜிதாவை நினைத்து வருத்தப்படுறதா முக்கியம். உன்னை வேண்டாம் என்று சொன்னதை நினைத்து வருத்தப்பட வேண்டும்”.​

“அதுக்கு நீ உன் பொண்டாட்டியை பாசமாக பார்த்துக் கொல்லனும். அப்போ தான் அவ இவனை நம்ப கட்டிக்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுவாள்”.​

“ஆனா, நீ பண்ண காரியத்துக்கு நல்லா உற்று பாரு அந்த நிலா முகத்தில் சந்தோஷம் தான் தெரியுது நல்ல வேலை நம்ம தப்பிச்சிட்டோம் அப்படின்னு நினைச்சு அவ சந்தோஷமா இருக்கா” என்றாள்.​

சக்தி இரண்டு நிமிடம் நிலா முகத்தை உற்றுப் பார்த்தவன், “ஆமா அக்கா நீ சொல்ற மாதிரி எனக்கும் அப்படி தான் தோன்றுது”.​

“சரி இதுக்கு அப்புறம் பாரு நான் எப்படி நடந்து கொள்கிறேன்” என்று கூறினான். ஜெயலட்சுமி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.​

அனைவர் முன்பும் சக்தி, “சுஜி பேபி இப்படி வா” என்று நிலா அருகில் நிற்க்க வைத்து முட்டி போட்டு ஒரு மோதிரத்தை எடுத்து அவள் கையில் அணிவித்தான்.​

அந்த மோதிரத்தில் ஓர் முத்தத்தை கொடுத்து விட்டு நிலாவை பார்த்தான். பிறகு அனைவரும் இரு தம்பதிகளுக்கும் வாழ்த்து கூறி விட்டு சாப்பிட சென்று விட்டார்கள்.​

ராஜலட்சுமி இரு ஜோடிகளையும் உணவு அருந்த செல்லுமாறு கூறினார். விக்ரம், நிலா கைகளை பிடித்து உணவருந்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.​

அது பஃப்பே என்பதால் நிலாவிற்கு அவனே ஒரு தட்டில் அனைத்து டிஷ் எடுத்து வைத்து சாப்பிடுமாரு கூறினான்.​

விக்ரம் எவ்வாறு நிலாவிடம் நடந்து கொண்டானோ அதே போல் சக்தி, சுஜிதா வை அழைத்துச் சென்று அவளுக்கு உணவுகளை பறிமாறினான்.​

சுஜிதா குழப்பமாக அவனை பார்த்தாள். இங்கு வர வரைக்கும் நல்லா தானே இருந்தான்.​

திடீரென இவனுக்கு என்ன ஆயிற்று ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்கிறானே என்று ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.​

நிலா இது வரைக்கும் பஃப்பே எல்லாம் போனது கிடையாது இதுவே முதல் முறை என்பதால் அவலுக்கு சாப்பிடவும் சரியாக வரவில்லை.​

போக் ஸ்பூனை எடுத்து நூடுல்ஸில் குத்தி அவள் எடுத்து பார்க்க அதில் ஒன்றுமே வரவில்லை.​

இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தும் அவளுக்கு அதே போல் இருக்க, “எனக்கு பசி இல்லை சாப்பாடு வேண்டாம்” என்றாள்.​

அதை பார்த்த சக்தி சுஜிதாவுக்கு நான் மோதிரம் போட்டதை பார்த்து தான் நிலா வருத்தமாக சாப்பாட்டை கூட வேண்டாம் என்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.​

நான் எப்படி என் பொண்டாட்டிக்கு ஊட்டி விடுகிறேன் பாரு அதை பார்த்து இன்னும் வருத்தபடு என்று நினைத்து சுஜிதாவுக் அனைத்து உணவுகளையும் ஊட்டி விட்டான்.​

விக்ரம் நிலாவை பார்த்து, “அது எப்படி பசிக்காமல் இருக்கும். இரவு நேரத்தில் சாப்பிடாமல் தூங்க கூடாது உனக்கு தெரியாதா‌” என்று விட்டு.​

அவனே ஃப்போக் ஸ்பூனை நூடுல்ஸில் குத்தி ஒரு சுழற்று சுழற்றி எடுத்தான் அதில் அனைத்து நூடுல்ஸும் துவண்டு தொங்கியது அழகாக.​

நிலா அதை ஆச்சரியமாக பார்த்தாள். அழகாக நிலாவுக்கு ஊட்டியும் விட்டான். அவளும் இருக்கும் பசிக்கு வேண்டாம் என்று மறுக்காமல் மொத்தமாக சாப்பிட்டு விட்டாள்.​

அங்கு வந்த ஆதித்யா மற்றும் மித்ரா அடப்பாவிங்களா உங்கள ஒரு போட்டோக்கு போஸ் கொடுங்க உங்க பொண்டாட்டிக்கு ஊட்டி விடுற மாதிரி அப்படின்னு கேட்கலாம்னு வந்தேன்”.​

“நீங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க பொண்டாட்டிக்கு மொத்த டின்னரையும் ஊட்டிக்கிட்டு இருக்கீங்க நடத்துங்க நடத்துங்க” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.​

பிறகு ஜெயலட்சுமி அனைவரிடமும், “சரி அப்போ நாங்க கிளம்புறோம்” என்றார். ராஜலட்சுமி, “சரி” என்று கூறினாள். விக்ரம், “அதுக்குள்ள ஏன் ஆன்ட்டி கிளம்புறிங்க” என்றான்.​

ஜெயலட்சுமி மனதுக்குள் எனக்கு மட்டும் என்ன போகணும் என்று ஆசையா. நான் உங்க வீட்டுக்கு வந்தால் மட்டும் தான் நிலாவிடம் கையெழுத்து வாங்க முடியும்.​

ஆனால் எப்படி நான் வருவது நீங்கள் கூப்பிடாமல் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.​

விக்ரம், நிலாவை திரும்பிப் பார்த்தான். நிலா சுந்தரத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.​

உடனே விக்ரம், “ஆன்ட்டி ஒரு இரண்டு நாள் நிலா கூட தங்கிட்டு போங்களேன் நிலாவும் சந்தோஷப்படுவா” என்றான்.​

ஜெயலட்சுமி, “அது எப்படி நல்லா இருக்கும்” என்று இழுத்தாள். விக்ரம், “சரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்” என்றான்.​

ஜெயலட்சுமி அடுத்த நொடி, “இல்ல இல்ல எனக்கு பிடிக்கவில்லை என்று நான் எப்போ சொன்னேன். என் பொண்ணு கூட இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்” என்றார்.​

பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தார்கள். ஜெயலட்சுமி மனதுக்குள் அச்சச்சோ இப்போ இந்த சக்தி பையன் கிட்ட என்ன சொல்லி விக்ரம் வீட்டுக்கு வர வைக்கிறது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.​

அந்த சமையம் சரியாக அங்கு வந்த சக்தி, “அக்கா கிளம்பலாமா? மணி ஆச்சு” என்றான்.​

ஜெயலட்சுமி, “இல்ல டா நம்ப எல்லாறையும் அவங்க வீட்டுக்கு வந்து இரண்டு நாள் தங்க சொல்லி ரொம்ப வம்பு பண்றாங்க நீ என்ன சொல்ற” என்றார்.​

சக்தி, “அதெல்லாம் முடியவே முடியாது நான் வரவே மாட்டேன்” என்று ஒரே பிடியாக கூறினான்.​

ஜெயலட்சுமி, “நாளைக்கு கையெழுத்து வாங்கிட்டு நம்ம கிளம்பிடலாம்” என்றாள்.​

சக்தி, “நீ வேண்டும் என்றால் போ என்னால் எல்லாம் வர முடியாது” என்றான்.​

 

rebe novel

Moderator

பாகம் – 20​

ஜெயலட்சுமி, சக்தியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் “ஒரு நாள் மட்டும் விக்ரம் வீட்டில் தங்கிக் கொள்ளலாம்” என்று.​

ஆனால் சக்தி, “என்னால் முடியாது அவன் வீட்டில் நான் காலை வைக்கவே மாட்டேன். நான் எதை நினைத்து வந்தேனோ அது நிறைவேறி விட்டது”.​

“நிலா கஷ்டப்பட்டதை பார்த்து நான் சந்தோஷ பட்டேன் எனக்கு அது போதும். நான் கிளம்புறேன் நீ ஏதாச்சும் பண்ணிக்கோ” என்று ஜீப்பில் ஏறி சுஜிதாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.​

ஜெயலட்சுமி, அட பைத்தியக்காரனே நிலா கஷ்டப்படுறதெல்லாம் ஒரு விஷயமா நினைச்சு பேசிக்கிட்டு இருக்கான்.​

இவனை இங்க கூட்டிட்டு வருவதற்கு வேறு வழி தெரியாமல் ஒரு பேச்சுக்கு நிலாவை கஷ்டப்படுத்தி நீ சந்தோஷப்பட்டுக்கோ.​

உன் கோபம் குறையும் என்று நான் சொன்னேன் கடைசியில் அதையே பெரிய விஷயம் போல் நினைத்து கொண்டு செல்கிறான்.​

இவன் எப்படி தான் எனக்கு தம்பியாக பிறந்தானோ எனக்கே தெரியலை. நான் நெனச்சது இன்னும் நடக்கவே இல்லையே கடவுளே எனக்கு எப்போது தான் அந்த சொத்து எல்லாம் கிடைக்குமோ என்று நொந்து போனாள்.​

ஜெயலட்சுமி, வேறு வழியின்றி அனைவரிடமும், “இன்னொரு நாள் கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருகிறோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சுந்தரத்துடன் கிளம்பி விட்டார்.​

ராஜலட்சுமி குடும்பத்தினரும் வீட்டிற்கு புறப்பட்டார்கள்.மித்ரா வீட்டை சென்று அடைந்தவுடன், “அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் நிறைய வேலை செஞ்சுட்டேன் போல இன்னைக்கு” என்று சோம்பல் முறித்த படி கூறினாள்.​

ராஜலட்சுமி, “அப்படி என்ன வேலை எல்லாம் மேடம் பண்ணீங்க?” என்றாள்.​

மித்ரா, “ஐயோ என்ன மா இப்படி கேட்டுட்ட. என் பிரண்ட்ஸ் எல்லாம் வந்து இருந்தாங்க நான் எவ்வளவு போட்டோஸ் எடுத்துக்கிட்டு இருந்தேன்”.​

“அதுவும் நின்று கொண்டே இருந்தது எனக்கு கால் எல்லாம் வலிக்குது. உன்கிட்ட பேச கூட என்னால் முடியல நான் போய் படுக்கிறேன்” என்றாள்.​

ஆதித்யா, “அம்மா நானும் போறேன் எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு. நிறைய சாப்பிட்டு விட்டேன் போல என்னால் நிக்க கூட முடியல” என்று அவனும் சென்று விட்டான்.​

பிறகு ராஜலட்சுமி, ராஜேந்திரனிடம் “பாருங்க உங்க பசங்களை ஒருத்தி போட்டோஸ் எடுத்தே டயர்ட் ஆகிட்டாலாம்”.​

“இன்னொருத்தன் சாப்பிட்டே டயர்ட் ஆகிட்டானாம் இதையெல்லாம் வெளியில் சொன்னா எனக்கு தான் அசிங்கம்” என்றாள்.​

ராஜேந்திரன், “நமக்கு கல்யாணம் ஆகிய போது எல்லாம் நீ எப்படி இருந்த கொஞ்சம் யோசிச்சு பாரு. நான் எது சொன்னாலும் ஆதித்யா மாதிரி தான் நீயும் பதில் கொடுப்ப” என்று சிரித்தான்.​

ராஜலட்சுமி, “இப்ப ரொம்ப முக்கியம் இல்ல அது” என்று முறைத்தாள். பிறகு விக்ரம், நிலாவை அழைத்துக் கொண்டு மேலே சென்றான்.​

ராஜலட்சுமி, “ஒரு நிமிஷம் நில்லுப்பா” என்றார். விக்ரம், “என்ன?” என்றான்.​

ராஜலட்சுமி, “நீ ரூமுக்கு போ நிலா கிட்ட நான் சில விஷயம் பேசணும் பேசிட்டு அனுப்பி வைக்கிறேன்” என்றார்.​

விக்ரம், நிலாவை பார்த்து ஓகேவா என்று தலை அசைத்து விட்டு சென்றான்.​

ராஜலட்சுமி, நிலாவை அழைத்துக் கொண்டு அடுப்பங்கரையை நோக்கி சென்றாள். ராதிகாவும் இவர்கள் பின்னாலேயே சென்றாள்.​

ராஜலட்சுமி தயங்கியபடி, “உங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னைக்கு தான் முதல் நாள் நீ விக்ரம் கூட தூங்க போகிற இல்ல” என்றாள் புன்னகையோடு.​

நிலா தலை குனிந்தபடி ஆமா என்று தலை அசைத்தாள். ராஜலட்சுமி, “இன்னைக்கு... உங்களுக்கு.... நான் எப்படி சொல்வது” என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.​

ராதிகா, “நீ இப்படி முழிக்கிற அளவுக்கு என்ன இருக்கு. இன்னைக்கு முதலிரவு அவ்வளவுதான். இவள் என்ன ஒன்றும் தெரியாதவலா?”.​

“காதலிச்சு திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்க தெரியுதுல. அதுவும் பெரிய இடத்து பையனா பார்த்து வளைச்சு போட்டு இருக்கா”.​

“இன்னைக்கு தான் இவளுக்கு முதலிரவுன்னு நம்ப நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால், உண்மை என்னன்னு நமக்கு எப்படி தெரியும்”.​

“இப்போ இருக்க பசங்க எல்லாம் காதலிக்கும் போதே தான் எல்லா தப்பும் பண்ணிடுறாங்களே” என்றாள் படபடவென.​

ராஜலட்சுமி, “நீ கொஞ்ச நேரம் சும்மா வாயை மூடிட்டு இரு டி. எப்ப பாரு ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்க”.​

“உன் வாயில் இருந்து நல்லவிதமான வார்த்தைகளே வராதா” என்று அவளை முறைத்தாள்.​

ராதிகா, “ஆமா இந்த விஷயத்துக்கெல்லாம் இவளோட அம்மா வீட்டில் இருந்து யாராவது ஒருத்தவங்க வரணும். வந்து பொண்ணு முதலிரவுக்கு சடங்குக்கு தயார் பண்ணி அனுப்பி வைக்கனும்”.​

“ஆனா, இங்க பாரு இவளுக்குன்னு யாருமே வரல. அப்படின்னா இவ சரி இல்லாதவள் தானே. அவங்க வீட்டிலேயே யாருக்கும் இவளை பிடிக்காது நினைக்கிறேன். அதனால் தான் இவ வீட்டில் இருந்து யாருமே வரலை” என்றாள்.​

ராதிகா பேசியதில் நிலா முகம் வாடிப்போய் அழுகை வந்தது.​

ராஜலட்சுமி, “நீ வாயை திறந்தாலே பாம்பைப் போல் கொத்திக்கிட்டே தான் இருப்பியா?”.​

“பாவம் அந்த பொண்ணு முகத்தை பாரு எப்படி வாடி போச்சு. நீ முதல்ல இங்கிருந்து போ. நான் பாத்துக்குறேன் எல்லாத்தையும்” என்று ராதிகாவை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.​

ராஜலட்சுமி, “நிலா நீ இவ சொல்றதை எல்லாம் நினைத்து கவலைப்படாதே” என்று ஒரு பால் செம்பை கையில் கொடுத்தார்.​

பிறகு, “நீ இதை எடுத்துக்கிட்டு மாடிக்கு போ சந்தோஷமா உங்க வாழ்க்கைய ஆரம்பிங்க” என்று நிலாவை அனுப்பி வைத்தார்.​

விக்ரம் மேலே சென்று அரை கதவை திறந்தான் பூக்களால் பாதை வடிவில் கட்டில் வரை போட்டிருந்தது. கட்டில் முழுக்க பூக்கள் நிறைந்திருந்தது நடுவில் மட்டும் ஹார்டின் வடிவில் பூக்களை வைத்து அலங்கரிக்க பட்டிருந்தது.​

ஒரு தட்டில் பழங்கள் நிறைந்திருந்தது.​

அதை பார்த்த விக்ரம் சிரித்துக் கொண்டே இதை எல்லாம் யார் எப்போ தயார் பண்ணதுன்னு தெரியலையே என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றேன்.​

நிலா வந்து இதை எல்லாம் பார்த்துட்டு எப்படி ரியாக்ட் பன்னுவானே தெரியலையே என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே ஒரு பக்கம் ஆமா அவ வந்து வாயை கூட திறக்க மாட்டா எந்த பீலிங்ஸ் காட்ட மாட்டா.​

ஆனால், நா விட மாட்டேன் கண்டிப்பா இன்னைக்கு எல்லா உண்மையும் சொல்லி எங்க வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவேன் என்று தனக்குத்தானே பேசினான்.​

விக்ரம் ஒரு குளியலை போட்டு விட்டு கண்ணாடியை பார்த்து விசில் அடித்த படி தலை வாரி கொண்டிருந்தான்.​

கதவைத் திறந்து கொண்டு நிலா கையில் பால் செம்புடன் வெள்ளை நிறத்து புடவையில் தேவதை போல் தலையில் மல்லிகை பூவுடன் மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.​

விக்ரம் அவளை பார்த்தவுடன் சிரிப்புடன் சென்று அவள் இரு கரங்களையும் பிடித்து கட்டிலில் அமர வைத்து அவள் கையில் இருந்த பால் செம்பை வாங்கி பக்கத்தில் வைத்தான்.​

நிலா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தாள். அவள் தலையை தன் கரங்களைக் கொண்டு மேலே நிமிர்த்தி தன்னை பார்க்கும்படி செய்தான்.​

விக்ரம், “இன்னைக்கி நான் உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுரேன் டார்லிங்” என்றான். நிலா அவனைப் பார்த்து, “நீங்கள்” என்று ஏதோ கூற ஆரம்பித்தாள்.​

அதற்குள் விக்ரம் அவள் வாயில் தன் கைகளை வைத்து, “நீ எதுவும் பேசக் கூடாது நான் மட்டும் தான் இப்போ பேசுவேன். என் மனசுல இருக்க ரகசியத்தை உன்கிட்ட இப்ப சொல்லியே ஆகணும். அதனால் நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு” என்றான்.​

பிறகு விக்ரம் எழுந்து திரும்பி நின்று கொண்டு, “நிலா எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால்”.​

“என் குடும்பத்திடம் கூட செல்லாமல் உனக்காக உன் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி கஷ்டப்பட்டு உன்னை கல்யாணம் பண்ணிருக்கேன். என் காதல் அந்த அளவுக்கு ஆழமானது” என்றான்.​

நிலா, “நீங்க சொல்றது எல்லாம் உன்மை தானா என்னை அந்த அளவுக்கு காதலிக்கிறிங்களா?” என்றாள்.​

விக்ரம், “அதை சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. இந்த நிமிஷம் எனக்காக உண்மையாவே ஒருத்தவங்க இருக்காங்க அப்படின்னா அது நீ மட்டும் தான். உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்“ என்றான்.​

நிலா அவன் வாயில் தன் ஒற்றை விரலை வைத்து, “ஷ்ஷ்ஷ் இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல தேவையில்லை” என்று அவன் முதுகில் தன் முகத்தை புதைத்து இருக்கி கட்டி அணைத்து கொண்டாள்.​

விக்ரம் கண்களை மூடி அந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.​

அந்த சமயம் டக் டக் என்று சத்தம் கேட்டது. விக்ரம், கண்களை திறந்து திரும்பிப் பார்த்தான். அங்கு கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.​

விக்ரம் ச்சே எல்லாம் கனவா? என்று சிரித்துக் கொண்டே தலையை கோதிய படி, “இதோ வரேன்” என்று கதவை திறந்தான்.​

நிலா அவன் நினைத்தது போலவே அழகாக வெள்ளைப் புடவை அணிந்துக் கொண்டு கையில் பால் செம்புடன் வந்து நின்றாள். ஆனால், அவன் எதிர் பார்த்ததற்கு மாறாக கோபமாக வந்திந்தாள்.​

நிலா கையில் இருந்த செம்பை டேபிள் மேல் வைத்துவிட்டு,‍ “நானா உங்களை காதலித்தேன். இதற்கு முன்னாடி நான் உங்களை எங்கேயாவது சந்தித்து இருக்கிறேனா?”.​

“நீங்க என்னை கேட்காமல் என் மனதில் என்ன இருக்கிறது என்று கூட தெரிந்து கொள்ளாமல் என் கழுத்தில் தாலியை கட்டுனீங்க”.​

“ஆனா உங்க வீட்டில் எல்லாம் என்னை தப்பு தப்பா பேசுறாங்க. எனக்கு உங்களை சுத்தமாக பிடிக்கவே இல்லை” என்றாள் கோபமாக.​

விக்ரம் ஏதோ கூறுவதற்காக ஆரம்பித்தான். ஆனால், அவனை பேச விடாமல் நிலா பேசிக் கொண்டே சென்றாள்.​

விக்ரம், நிலாவை ஆச்சரியமாக பார்த்தான் நீ இவ்ளோ பேசுவியா என்று.​

நிலா, “என்னோட காதல் ரொம்ப ஆழமானது நீங்க என்ன பண்ணாலும் என் மனசுல நுழையவே முடியாது” என்று கண்கள் கலங்கியபடி கூறினாள்.​

விக்ரம் அவள் தோள்பட்டையில் கை வைத்து “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு” என்றான்.​

நிலா, அவன் கைகளை தள்ளிவிட்டு கோபமாக “நான் எந்த அளவுக்கு துருவ் ஐ காதலிக்கிறேன்? ஏன் காதலித்தேன் தெரியுமா?” என்றாள் ஆக்ரோஷமாக.​

 

rebe novel

Moderator

பாகம் – 21​

சக்தி வீட்டை சென்று அடைந்தவுடன் எங்கோ சென்று விட்டான். சுஜிதா அவள் அறையில் சக்திக்காக வெகு நேரமாக காத்திருந்து கடைசியில் உறங்கியே போனாள்.​

நள்ளிரவில் வந்த சக்தி தல்லாடியபடி, “ஏய் குட்டி கத்திரிக்கா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று குளறியபடி அவளை எழுப்பினான்.​

சுஜிதா அரை தூக்கத்தில் எழுந்து கண்களை சிமிட்டி கொண்டே அவனை உற்று பார்த்தால்.​

சக்தி, “குட்டி கத்திரிக்கா இன்னைக்கு நீ நிஜமாவே ரொம்ப அழகா இருந்த தெரியுமா” என்றான்.​

சுஜிதா சந்தோஷமாக சிரித்துக் கொண்டே, “அப்படியா? உங்களுக்கு என்னை பிடிச்சிருந்துச்சா?” என்றாள்.​

சக்தி, “ஆமா நீ அழகா பொம்மை மாதிரி இருந்த” என்று அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தான்.​

சுஜிதா, “நான் கூட சந்தோஷமா தான் இருக்கேன். ஏன் தெரியுமா நான் சுத்தமா எதிர் பாக்கவே இல்ல நீங்க எனக்கு முட்டி போட்டு மோதிரம் போட்டு விடுவீங்க என்று” என்றாள்.​

சக்தி, “ம்ம்ம் நான் உனக்கு மோதிரம் போட்டேனே அப்போ அந்த நிலா முகத்தை பார்க்கணுமே அப்பப்பப்பா” என்று சிரித்தான்.​

பிறகு, “அவள் கவலை படுறத பார்க்கும் போது அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு எனக்கு இப்போ நினைச்சா கூட என் கண் முன்னாடி வந்து போகுது” என்றான். சுஜிதா என்ன சொல்கிறான் இவன் என்று புரியாமல் பார்த்தாள்.​

சக்தி, “நான் உன்கிட்ட பாசமா நடந்துகிட்ட மாதிரி நடிச்சேன் இல்ல அத பார்த்து நிலா உண்மைன்னு நம்பி என்னை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு அவ கவலைப்பட்டால் தெரியுமா?” இது எல்லாம் ஜெயா அக்கா பிளான் தான் என்றான்.​

சுஜிதா, “அப்போ இன்னைக்கு நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதம் எல்லாத்துக்கும் நிலா தான் காரணமா?” என்றாள்.​

சக்தி, “ஆமா நான் இன்னைக்கு அந்த ஃபங்ஷனுக்கு வந்ததே நிலவுக்காக தானே. நம்ம ஒண்ணா இருந்ததை பார்த்து நிலா நான் நினைச்ச மாதிரியே கஷ்டப்பட்டா” என்றான்.​

சுஜிதா வேறு எதுவும் பேசாமல் அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.​

சக்தி, “எங்க போற? அடியே குட்டி கத்திரிக்கா” என்று குளறியபடி கூப்பிட்டுக் கொண்டே போதையில் மயங்கி விட்டான்.​

****************************​

நிலா, அவன் கைகளை தள்ளிவிட்டு கோபமாக, “நான் எந்த அளவுக்கு துருவ் ஐ காதலிக்கிறேன்? ஏன் காதலித்தேன் உனக்கு தெரியுமா?​

பல வருடங்களுக்கு முன்பு.​

ஒரு நாள் ஸ்கூலில் ரேன்காட் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது எல்லார் வீட்டில் இருந்தும் ரேன்காட் வாங்க வந்தார்கள். நிலா ஓரமாக நின்று அழுது கொண்டு இருந்தாள்.​

அப்போ ஒரு ஆண்ட்டி நிலா அருகில் வந்து, “ஏன் அழற?” என்று கேட்டார். நிலா, “என் வீட்டில் இருந்து யாருமே
வரலை” என்றாள்.​

அந்த ஆண்ட்டி, “சரி அழாத மா யாராச்சும் வருவாங்க” என்று கூறி அவங்க பையனுடன் அங்கிருந்து சென்று விட்டார்.​

அந்த சின்ன பையன் நிலவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தவன் மனசு கேட்காமல், “அம்மா இருங்க இதோ வரேன்” என்று நிலா இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.​

ஓடி வந்த பையன், “ஹே அழாத இன்னிக்கி உன் வீட்டில் இருந்து யாரும் வரலைனா அதுக்கு என்ன நாளைக்கி கண்டிப்பா வருவாங்க“ என்றான்.​

நிலா எதுவும் கூறாமல் திரும்பி நின்று கொண்டாள். அந்தப் பையன், “என்கிட்டே பேச மாட்டிய?” என்றான்.​

நிலா, “நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லையே” என்றால் தன் கைகளை கட்டிக் கொண்டு.​

அந்த பையன், “அப்படின்னா நம்ப இப்போ இருந்து பிரண்ட் ஆகிடலாம்” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.​

நிலா சோகமாக, “எனக்கு பிரெண்டுனு யாருமே கிடையாது. அப்படியே யாராச்சும் என் கூட நெருங்கி இருந்தா சீக்கிரமே அவங்க என்னை விட்டுட்டு போயிடுவாங்க” என்றாள்.​

அந்த பையன், “நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன் என்ன ஆனாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன். உனக்கு நல்ல பிரண்டா உன் கூடவே நான் இருப்பேன்” என்றான்.​

நிலா, “நிஜமாவா?“ என்று அவனை பார்த்து லேசாக சிறித்தால். அந்தப் பையன் ஆமா என்று தலை அசைத்து தன் ஒற்றை கையை நீட்டி, “என் பெயர் துருவ்” என்றான்.​

இவளும் தன் கைகளை அவன் கைகளோடு கோர்த்து கொண்டு “என் பெயர் நிலா” என்றாள்.​

துருவ் ஒரு சாக்லேட்டை நிலாவிடம் கொடுத்துவிட்டு, “சரி சரி நான் கிளம்புறேன் எனக்காக அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று ஓடி விட்டான்.​

மறுநாள் நிலா ஸ்கூலில் தனியாக அமர்ந்து மத்திய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தாள்.​

துருவ் மூச்சு வாங்க ஓடி வந்தான், “ஹேய் நான் உன்னை தான் தேடிக்கிட்டு இருந்தேன் இவ்வளோ நேரம்”.​

“நீ இங்க உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருக்கியா?” என்று அவள் பக்கத்திலே அமர்ந்து கொண்டு “எனக்கும் கொஞ்சம் கொடு” என்றான்.​

நிலா அவள் உணவில் இருந்து பாதியை இவனுக்கு வைத்து கொடுத்ததால். துருவ் அவனுடைய உணவில் இருந்து பாதியை நிலாவுக்கு கொடுத்தான்.​

இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது நிலா ஏக்கமாக பக்கத்தில் பார்த்தாள். துருவ்வும் திரும்பி பார்க்க அங்கு ஒரு அம்மா தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தார்கள்.​

அதை பார்த்த துருவ், நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி விட என்னி அவள் வாய் அருகே சாப்பாட்டை நீட்டினான். நிலா அவனையே பார்த்தாள்.​

துருவ், “நா இருக்கும் போது நீ எதுக்கும் கவலை பட கூடாது. சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கவா” என்றான்.​

நிலா, “என்ன?” என்றாள். துருவ், “நேத்து உன்கிட்ட யாருமே பிரண்டா இருக்க மாட்டாங்க ரொம்ப நாளைக்குன்னு சொன்னியே ஏன் அப்படி சொன்ன” என்றான்.​

நிலா, “அதுவா என்னோட அம்மா தான் எனக்கு பிரெண்ட் மாதிரி எனக்கு அவங்கள தான் பிடிக்கும். ஆனா, என் அம்மா சொன்னாங்க இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடு வாங்கலாம்” என்றாள்.​

துருவ், “ஏன் உங்க அம்மா வெளியூருக்கு போறாங்களா?” என்றான்.

நிலா, “தெரியலையே எங்க அம்மா என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடுவேன்னு சொன்னாங்க. ஆனா, எங்க போறாங்கனு சொல்லலியே” என்றாள்.​


துருவ், “சரி பரவால்ல நீ கவலைப்படாத உங்க அம்மா திரும்பி வர வரைக்கும் நான் உன் கூடவே இருக்கேன் எப்பயுமே” என்றான் சிரித்துக் கொண்டு.​

பிறகு, இருவரும் நல்ல நண்பர்களாக தினமும் சந்தித்து விளையாட ஆரம்பித்தார்கள். லீவ் நாட்களில் கூட துருவ், நிலவை பார்க்க வந்து விடுவான்.​

துருவ், “நிலா நீ தினமும் தனியாவே ஸ்கூலுக்கு வரியே உன் அப்பா கூட்டிட்டு வர மாட்டாங்களா?” என்று கேட்டான்.​

நிலா, “என்னோட அப்பா பிசினஸ் விஷயமா ரொம்ப பிசியா இருப்பாங்க என்கிட்ட சரியா பேச கூட மாட்டாங்க. ஆனா எனக்கு என்னோட அப்பானா ரொம்ப பிடிக்கும்” என்றாள்.​

துருவ், “என்னோட அப்பா கூட அப்படித்தான் பிசினஸ் விஷயமா எங்கயாச்சும் போய்ட்டு வந்துட்டே இருப்பாங்க. ஆனா என்கிட்ட பேசாம ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்க” என்றான்.​

ஒரு நாள் நிலா வீட்டிற்கு துருவை அழைத்து கொண்டு சென்றால். நிலா, “தன் அம்மா விடம் சென்று அம்மா இவன் தான் என்னோட புது பிரண்ட் நான் சொன்னேன்ல உன்கிட்ட அது இவன் தான்” என்றாள்.​

துருவ், “அம்மா... நிலா சொன்னா நீங்க இன்னும் கொஞ்சம் நாள்ல அவளை தனியா விட்டுட்டு எங்கயோ தூரமா போறீங்களமே”.​

“ஆனா நீங்க ஒன்னும் கவலை படாதீங்க நான் நிலாவ பத்திரமா பாத்துக்கிறேன். நீங்க திரும்பி வர வரைக்கும்“ என்றான்.​

நிலாவின் அம்மா கண்கள் கலங்க இருவரைகயும் கட்டி அணைத்து கொண்டார்.​

இருவருக்கும் சில நாட்கள் அப்படியே சந்தோஷமாக சென்றது. ஒரு நாள் நிலா எப்பொழுதும் போல் மரத்தடி நிழலில் துருவ் காக காத்துக் கொண்டு இருந்தால்.​

ஆனால், அவன் வரவே இல்லை. மறுநாள் அதே போல் காத்துக் கொண்டு இருக்கும் போது ஒருவர் வந்து நிலா சீக்கிரம் வா வீட்டுக்கு போகனும் என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.​

நிலா வீட்டிற்கு சென்று பார்க்கும் போது நிலா அம்மா இறந்துப்போய் இருந்தார். ஆனால், நிலாவுக்கு அதற்கு அர்த்தம் புரிய வில்லை.​

சிறிது நேரம் கழித்து சடங்கு முடிந்து அவள் அம்மாவை தூக்கிக் கொண்டு போகும் போது நிலா ஒருவரிடம், “அம்மா எப்போ திரும்பி வருவாங்க?” என்றாள்.​

அந்த நபர், “அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்க இனி வர மாட்டாங்க” என்று சொன்னார்.​

நிலா கோச்சிக் கொண்டு, “பொய் சொல்லாதிங்க என்னோட அம்மா முன்னாடியே என்கிட்ட சொன்னாங்க தூரமா போறன்னு. நா தூங்கும் போது வருவேன்னு சொன்னாங்க” என்றாள்.​

அதை கேட்டு சிலர் கண்கள் கலங்கி விட்டார்கள். நிலா அழுது கொண்டே, “என்னையும் அம்மா கிட்டயே கூட்டிட்டு பொய் விடுங்க நானும் அம்மா கிட்டயே போறேன்” என்று ரொம்ப அழுதாள்.​

துருவ், நிலாவை தேடி கொண்டு மரத்தடியில் சென்று பார்த்தான். அவளை காணும் என்று அவள் வீட்டிற்கு சென்றான். அங்கு ரொம்ப கூட்டமாக இருந்தது. துருவ், பயந்து கொண்டே உள்ளே சென்றான்.​

நிலா அவள் அம்மா புகை படத்தை பார்த்து அழுது கொண்டு இருந்தாள். ஒருவர் அவளை சாப்பிட சொல்லி தட்டில் சாப்பாட்டை போட்டு கொடுத்து விட்டு சென்றார்.​

நிலா புகைப்படத்தை பார்த்து, “அம்மா நீ வந்து ஊட்டி விட்டால் மட்டும் தான் நான் சாப்பிடுவேன்” என்று அழுதுக் கொண்டு இருந்தாள்.​

துருவ் அதை பார்த்துவிட்டு நிலா அருகில் சென்று, “என்ன ஆச்சி?” என்றான்.​

நிலா, “துருவ் அம்மா என்கிட்ட சொன்ன மாதிரியே எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் முன்னாடி தான் அம்மாவை கூட்டிட்டு பொய் எங்கேயோ விட்டுட்டு வந்துட்டாங்க அம்மா வந்தா தான் நான் சாப்பிடுவேன்” என்றாள்.​

துருவ் மனசு கேட்காமல், “நிலா நா இப்போ தான் அம்மாவை பார்த்தேன் கொஞ்சம் நாள் அப்புறம் வருவாங்களம் உன்கிட்ட சொல்ல சொன்னாங்க. உன்ன சாப்பிடகூட சொன்னாங்க” என்று அவளுக்கு அவனே ஊட்டியும் விட்டான்.​

அவங்க வர வரைக்கும் நா உன் கூடவே இருப்பேன் என்று கூறினான். பிறகு இருவரும் விளையாட சென்று விட்டார்கள்.​

 

rebe novel

Moderator

பாகம் – 22​

ஒரு நாள் நிலா மத்திய நேரத்தில் எப்போதும் போல் துருவ் காக காத்துக் கொண்டு இருந்தாள்.​

ஆனால் அன்று துருவ் நிலாவை பார்க்க வரவே இல்லை.​

மாலை நேரத்தில் ஸ்கூல் முடிந்து நிலா வீட்டிற்கு சோகமாக சென்றாள். அப்போது ஸ்கூல் வாசலில் துருவ் நின்று இருந்தான்.​

நிலா, துருவ் ஐ பார்த்தவுடன் ஓடி சென்று, “நீ ஏன் இன்னைக்கு மத்தியம் என்னை பார்க்க வரவே இல்ல. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ண தெரியுமா” என்றாள்.​

துருவ், “எங்க அப்பாவுக்கு திடீர்னு பிசினஸ் விஷயமா ஆஸ்திரேலியா போக வேண்டியதா ஆகிடுச்சு இதுக்கு அப்புறமும் நான் இந்த ஊர்ல இருக்க மாட்டேன்”.​

“நாங்க குடும்பத்தோட ஆஸ்திரேலிய க்கு போறோம் அம்மா இப்போதான் சொன்னாங்க எல்லாரும் கார்ல ஏறிட்டாங்க நான் உன்னை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு குடுகுடுன்னு ஓடி வந்தேன்” என்றான்.​

நிலா, சோகமான முகத்துடன், “அப்போ இனிமே என்னை பார்க்க நீ வர மாட்டியா?” என்றாள்.​

துருவ், “அப்படிலாம் இல்ல இப்போ நம்ம சின்ன பசங்களா இருக்கோம் இன்னும் கொஞ்சம் நாள்ல ரொம்ப பெரிய பசங்களா ஆகிடுவோம்”.​

“அப்போ நான் கண்டிப்பா உன்னை பார்க்க வருவேன். அதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் எப்பயும் பிரியாம ஒண்ணாவே இருக்கலாம் சரியா”.​

“நீ எதுக்கும் கவலைப்படாத ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் படிச்சிட்டு நீ வேலைக்கு போகணும் சரியா அதுக்கு அப்புறம் தான் நம்ப ரெண்டு பேரும் மீட் பண்ணுவோம்” என்று கூறினான்.​

நிலா, “என்னோட அம்மா போனதுக்கு அப்புறம் நீ மட்டும் தான் எனக்கு ஒரே ஒரு ஃபிரண்ட் இப்போ நீயும் போறியா. நான் தான் அப்பவே சொன்னேன்ல என்கூட பிரண்டா இருந்தா எல்லாருமே என்னை விட்டு போயிடுவாங்கன்னு”.​

“இப்போ பாரு முதல்ல அம்மா ரொம்ப தூரம் போயிட்டாங்க இன்னும் வரவே இல்ல. இப்போ நீயும் போற அப்போ நீயும் வர மாட்ட எனக்கு தெரியும்” என்றாள்.​

துருவ் ஒரு பேப்பரில் செல்போன் நம்பரை எழுதி நிலா கையில் கொடுத்து “இது எங்க வீட்டு போன் நம்பர் இந்த நம்பருக்கு போன் பண்ணு நான் எடுத்துப் பேசுவேன் சரியா”.​

“உனக்கு எப்போ தோணுதோ எனக்கு போன் பண்ணு. நான் கண்டிப்பா உன்னை பார்க்க வருவேன். சரி அம்மாவும் அப்பாவும் எனக்காக காத்துகிட்டு இருக்காங்க நான் கிளம்புறேன் பாய்” என்று ஓடிவிட்டான்.​

நிலா அவன் சென்ற பின் இவர்கள் வழக்கமாக சந்திக்கும் அந்த மரத்தடியில் தனியாக அமர்ந்து அந்த நம்பரையே பார்த்து அழுது கொண்டிருந்தாள்.​

சிறிது நேரம் கழித்து நிலா வீட்டிற்கு சென்றாள். அங்கு உறவினர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள்.​

அதில் ஒருவர், “சுந்தரம் இப்படியே இருந்தா உன் வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டாமா? நீ எப்ப பாத்தாலும் பிசினஸ் பிசினஸ்னு எங்கேயாவது சுத்திட்டே இருக்க”.​

“இத்தனை நாள் உன் பொண்டாட்டி இருந்தா நிலாவ பாத்துக்கிட்டா இதுக்கு அப்புறம் நிலாவை யார் பார்த்துக்கறது?” என்றார்.​

சுந்தரம், “இல்ல அது எப்படி சரியா வரும்” என்று இழுத்தார். கூட்டத்தில் ஒருவர், “உனக்கு என்ன சின்ன வயசு தானே பா. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ அப்பதான் நிலாவ உன்னால் ஒழுங்கா பார்த்துக்க முடியும்”.​

“அது மட்டும் இல்ல நீ வச்சிருக்கது ஒரே ஒரு பொம்பள பிள்ளை.​

இன்னும் கொஞ்சம் காலம் போச்சுன்னா கல்யாணம் பண்ணி நிலாவையும் அனுப்பி வச்சிட்டு நீ என்ன தனியா உட்கார்ந்து இருப்பியா வயசான காலத்துல உனக்குன்னு ஒரு துணை வேணும்ல” என்றார்.​

சுந்தரம் நிலாவை அழைத்து, “அம்மாடி நிலா அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவா?” என்று கேட்டார்.​

நிலா, “வேண்டாம் பா.. அம்மா திரும்பி வருவேன்னு என்கிட்ட சொல்லிட்டு போயிருக்காங்க. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா அம்மா வந்து பார்க்கும்போது வருத்தப்படுவாங்கல்ல” என்றாள்.​

சுந்தரம், “இல்லம்மா உன்னோட அம்மா சாமி கிட்ட போய்ட்டா. அப்பாவும் வேலையா அப்போ அப்போ வெளியூருக்கு போறது வர்றதுன்னு இருக்கேன். உன்ன சரியா பார்த்துக்கவே முடியலை”.​

“அதனால் புது அம்மா வந்தா உன்னை தினமும் ஸ்கூலுக்கு கிளப்பி கூட்டிட்டு போவாங்க‌, சாப்பாடு ஊட்டி விடுவாங்க, உன்னை குளிக்க வைப்பாங்க இது எல்லாத்துக்கும் உனக்கு புது அம்மா இருந்தா நல்லா பாத்துப்பாங்க இல்ல”.​

“அதனால் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவா?. நீ சரி சொன்னா மட்டும் தான் அப்பா புது அம்மாவை கூட்டிட்டு வருவேன். அவங்க கூட நீ ஜாலியா இருக்கலாம்” என்றான். நிலா, “சரி“ என்று தலை அசைத்தாள்.​

மறுநாள் நிலா துருவ் நம்பருக்கு போன் செய்து பார்த்தாள். துருவ் ஆர்வமாக எடுத்து “ஹலோ நிலா நீ தானே” என்றான்.​

நிலா சிரித்துக் கொண்டே, “ஆமா எப்படி கண்டுபிடிச்ச” என்றாள். துருவ், “எனக்கு தெரியும். நீயா தான் இருப்பனு” என்று இருவரும் சிரித்துக் கொண்டு பேசினார்கள்.​

நிலா, “உன்கிட்ட ஒன்னு சொல்லவா எனக்கு புது அம்மா வர போறாங்க. அப்பா தான் சொன்னாங்க” என்றாள்.​

துருவ், “அப்படியா அப்போ உனக்கு ஜாலி தான். உனக்கு இன்னொரு பிரிண்ட் கிடைக்கப் போறாங்க”.​

“ஆனா நீ எனக்கு தினமும் இதேபோல் போன் எல்லாம் பண்ணனும். புது பிரென்ட் வந்ததும் என்னை நீ மறந்துட கூடாது” என்றான்.​

நிலா, “நீ எனக்கு ஸ்பெஷல் பிரென்ட் டா எப்பயுமே” என்றாள்.​

இப்படியே தினமும் இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே பிரென்ஷிப்பை நீடித்துக் கொண்டிருந்தார்கள்.​

கொஞ்சம் நாட்கள் கழித்து சுந்தரத்திற்கு திருமணம் ஆகி ஜெயலட்சுமி இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள்.​

நிலா ஓடிச் சென்று, “புது அம்மா இனிமே நீங்க தான் என்னை பார்த்துப்பீங்கன்னு அப்பா சொன்னாங்க” என்றாள்.​

மறுநாள் நிலா ஜெயலட்சுமியிடம் சென்று, “புது அம்மா எனக்கு ஸ்கூலுக்கு மணியாகிடுச்சு என்னை குளிக்க வைக்கலையா?” என்றாள்.​

ஜெயலட்சுமி அவளைப் பார்த்து முறைத்து கொண்டு “இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கியே உனக்கு குளிக்க கூட தெரியாதா” என்றாள்.​

நிலா, “அப்பா தான் சொன்னாங்க புது அம்மா வந்தா உனக்கு எல்லாமே பாண்ணுவாங்கன்னு“ என்றாள்.​

ஜெயலட்சுமி கோவமாக, “முதலில் புது அம்மான்னு கூப்பிடுவதை நிறுத்து” என்றாள். நிலா, “உங்களை வேறு எப்படி கூப்பிடுறது?” என்றாள்.​

ஜெயலட்சுமி, “சித்தின்னு கூப்பிடு புரிஞ்சுதா. நான் என்ன இந்த வீட்டுக்கு வேலைக்காரியா? உனக்கு சோறு ஊட்டி குளிக்க வைக்கிறதுக்கு ச்சீ... இங்கு இருந்து போ” என்றாள்.​

நிலா அழுதுக் கொண்டே எப்பொழுதும் போல் தானாகவே தயாராகி ஸ்கூலுக்கு சென்றாள்.​

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் ஜெயலட்சுமி நிலாவை அனைத்து வீட்டு வேலைகளும் வாங்குவாள்.​

ஒரு நாள் இரவில் தூங்குவதற்கு முன்பு துருவுக்கு போன் செய்தாள். நிலா, “ஹலோ துருவ் எப்படி இருக்க?” என்றாள்.​

துருவ் கோவமாக, “ஏன் இவ்வளவு நாள் போன் பண்ணவே இல்ல. புது பிரென்ட் வந்ததும் என்னை மறந்துட்டியா” என்றான்.​

நிலா, “இல்ல டா சித்தி நிறைய வேலை கொடுத்தாங்க எல்லாத்தையும் செஞ்சுட்டு வரதுக்கு லேட்டாகிடுச்சு” என்றாள்.​

துருவ், “சித்தியா அது யாரு?“ என்றான். நிலா, “அது வந்து” என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.​

துருவ், “அச்சச்சோ நீ ஒன்னும் கவலைப்படாதே. நான் சிக்கிறமே பெரிய பையன் ஆகிட்டு வந்து உன்னை அங்க இருந்து கூட்டிட்டு போறேன்“ என்றான்.​

நிலா, “அப்பா சொன்னாங்க எனக்கு இவங்க பிரண்ட் மாதிரி இருப்பாங்கன்னு. ஆனா எனக்கு இவங்கள சுத்தமா பிடிக்கல” என்றாள்.​

தண்ணி குடிப்பதற்காக அந்த பக்கம் வந்த ஜெயலட்சுமி இரவில் நிலா தனியாக போன் பேசுவதை பார்த்து அங்கேயே நின்று விட்டாள்.​

துருவ், “நீ உன் அப்பா கிட்ட சொல்லு நிலா இவங்கள உனக்கு பிடிக்கலை என்று” என்றான்.​

நிலா, “சரி நான் காலையில் அப்பா கிட்ட இதை எல்லாம் சொல்லிடுறேன்“ என்றாள்.​

ஜெயலட்சுமி அந்த நொடியே நிலாவை பளார் என்று அறைந்து இருந்தாள்.​

நிலா அழகும் சத்தம் மட்டுமே துருவுக்கு கேட்டது. அன்று தான் கடைசியாக இருவரும் பேசிக் கொண்டது.​

மறுநாள் காலையில் துருவ் சொன்னது போல் நிலா தன் அப்பாவிடம் சென்று, “அப்பா எனக்கு இவங்கள சுத்தமா பிடிக்கவே இல்லை” என்றாள்.​

சுந்தரம் தன் மடியில் அவளை அமர வைத்துக் கொண்டு, “ஏன் மா என்னாச்சு?” என்றான்.​

அதேசமயம் ஜெயலட்சுமி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. சுந்தரம் நிலாவை அங்கேயே விட்டுவிட்டு, “ஜெயா என்னாச்சு?” என்று ஓடினான்.​

அப்போது தான் ஜெயலட்சுமி முதல் முறையாக சங்கீதாவை வயிற்றில் சுமக்க ஆரம்பித்தாள். அந்த செய்தியை கேட்ட சுந்தரம் சந்தோஷமாக இருந்தான்.​

மறுநாள் மறுபடியும் நிலா, “அப்பா இவங்க என்னை ரொம்ப வேலை வாங்குறாங்க நீங்க இல்லாத அப்போ” என்றாள். சுந்தரம் எதுவோ புரிவது போல் கோவமாக, “அப்படியா?” என்றான்.​

ஜெயலட்சுமி சரியாக அந்த நேரம் சுந்தரம் பக்கத்தில் வந்து, “ரொம்ப முடியலைங்க தலை சுத்துதுங்க” என்று சொல்லி கொண்டே அமர்ந்து, “நிலா கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா மா” என்றாள்.​

நிலா, “பாருங்க அப்பா இப்ப கூட என்னை வேலை தான் வாங்குறாங்க” என்றாள்.​

சுந்தரம் சிரித்துக் கொண்டே, “நீ இதை தான் சொன்னியா?. நான் கூட என்னமோ ஏதோ நினைச்சுட்டேன்”.​

“இதெல்லாம் வேலை கிடையாது மா ஒரு உதவி தானே அவங்களுக்கு உடம்பு முடியல அதனால் தான் உதவி கேட்கிறாங்க”.​

“இதெல்லாம் நீ பெருசா ஏன் யோசிக்கிற அவங்க சொல்ற உதவியை செஞ்சு கொடு பாவம் தானே அவங்க. சரி நான் கிளம்புறேன்” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.​

பிறகு, ஜெயலட்சுமி வீட்டில் இருக்கும் செல்போன் நம்பரையும் மாற்றி விட்டாள். துருவ் தினமும் போன் செய்வான்.​

ஆனால், அது போகாது ஒரு வாரம் கழித்து நிலா துருவிடம் பேசுவதற்காக தன் பேக்கில் இருந்து அவன் செல்போன் நம்பரை எடுத்து டயல் செய்தாள்.​

ரிங் சென்று கொண்டே இருந்தது. துருவ் கடைசி ரிங்கில் எடுத்தவன் “ஹலோ யாரு?” என்றான். நிலா, “நான் தான் நிலா“ என்றாள்.​

துருவ், “ஏன் இத்தனை நாளா போன் பண்ணல? நான் போட்டாலும் உனக்கு போகவே மாட்டேங்குது. அன்னைக்கு உன்ன யாரு அடிச்சது?” என்றான்.​

நிலா, “ஹலோ துருவ்” என்றாள் அழுகும் குரலில். அதற்குள் ஜெயலட்சுமி அங்கு வந்து அவளை அடித்து போனை தூக்கி போட்டு உடைத்து விட்டாள்.​

அவள் கையில் வைத்திருந்த துருவ் நம்பரையும் நெருப்பில் எரித்து விட்டாள். நிலா அன்றுடன் அந்த வீட்டில் ஓர் வேலைக்காரியாக மாறிப் போனாள்.​

ஆனால், அவள் மனதில் மட்டும் படித்து வேலைக்கு சென்றால் துருவ் தன்னை பார்க்க கட்டாயம் வருவான் என்று ஆழமாக நம்பினாள்.​

 
Top