எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெய்யழகனின் தேன்நிலவு

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 48​

மெய்யழகனின் கோபத்தை கண்ட தேன் நிலவிற்கோ வாய் அடைத்துப் போனது. இப்பொழுது என்ன கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. என்ன கூறினால் இவன் சமாதானம் ஆவான் என்பதும் அவளுக்கு தெரியவில்லை.​

அவன் இவளின் வாயிலாக என்ன வார்த்தையை எதிர்பார்க்கிறான் என்பதும் இவளுக்கு புரியவில்லை. பதில் உரைக்காமல் அப்படியே நின்று இருந்தாள்.​

மெய்யழகன், "நான் பாரின் போனாலும் நீ இங்க பெங்களூர்ல தான் இருக்கணும். ஊருக்கு போகணும் என்ற நினைப்புல சுத்திகிட்டு இருக்காத" என்றான் தன் பற்களை கடித்துக்கொண்டு.​

தேன்நிலவு பதறியவாறு, "அய்யோ! எனக்கு இங்க எதுவுமே தெரியாது அத்தான். நான் இங்க எப்படி தனியா இருக்கிறது".​

மெய்யழகன், "அதெல்லாம் எனக்கு தெரியாது.. தெரியலைனா கத்துக்கோ.. அதுக்காக திரும்பவும் ஊருக்கு போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைக்காத.. நான் ரிட்டர்ன் வர டூ இயர்ஸ் ஆகும்.. நீ இங்க தான் இருக்கணும்.. துணைக்கு வேணும்னா தாத்தா பாட்டி ஸ்டே பண்ணுவாங்க".​

அவனின் கோப வார்த்தையை மீறி பேசவும் தேன்நிலவிற்கு நா எழவில்லை. என்ன பேசினாலும் கோபப்படுபவனிடம் என்ன தான் பேசுவது..​

இப்படி கூறினாலாவது அவள் தன்னுடன் வருகிறேன் என்று கேட்பாள் என்று எண்ணிய மெய்யழகனிற்கோ அவள் வாயிலிருந்து அந்த வார்த்தை மட்டும் வராமல் இருப்பது இன்னமுமே கடுப்பானது.​

'எங்கேயாவது வாயைத் திறந்து இங்க தனியா இருக்கிறதுக்கு பதில் நானும் உங்களோடவே வந்திடுறேன்னு சொல்லுறாளானு பாரு.. அப்படியே கல்லு மாதிரி நிக்கிறா' என்று உள்ளுக்குள் அவளை வறுத்தெடுத்தபடி நின்றிருந்தான்.​

தேன்நிலவு, "தாத்தா பாட்டி அத்தை வீட்டுக்கு போய்ட்டாங்கன்னா நான் எப்படி இங்க தனியா இருக்கிறது" என்றவளின் வார்த்தை தயக்கமாக தான் வெளி வந்தது. எங்கே இதற்கும் ‌திட்டுவிழுமோ என்ற பயத்தில்.​

மெய்யழகன், "நீ என்ன சின்ன குழந்தையா.. உன்னால் தனியா இருக்க முடியாதா?".​

தேன்நிலவு, "அதுக்கு இல்ல புது ஊரு எனக்கு இங்க எதுவுமே தெரியாது. நான் வேணும்னா தாத்தா பாட்டி இங்க இருக்க வரைக்கும் இங்க இருக்கேன்.. தாத்தா பாட்டி அத்தை வீட்டுக்கு போனாங்கன்னா நான் ஊருக்கு போயிடுறேனே" என்றாள் கெஞ்சலாக.​

'அப்போ கூட என் கூட வரேன்னு சொல்றாளா பாரு..'.​

மெய்யழகன், "முடியாது! நான் ஊருக்கு போறதை நினைச்சு சந்தோஷப்பட்ட இல்ல.. நான் திரும்பி வர வரைக்கும் 2 இயர்ஸ் நீ இங்க தான் இருக்கணும்.. நம்ம வீட்ல தான் இருக்கணும்.." என்றவன் வேகமாக நடக்க தொடங்கினான்.​

அவனின் பின்னோடு ஓட்டமும் நடையுமாக கெஞ்சிக் கொண்டே சென்றாள் தேன்நிலவு.​

மற்றது அனைத்தையுமே பேசினாள்.. கெஞ்சினாள்.. மன்றாடினாள்..​

ஆனால், மெய்யழகன் எதிர்பார்த்தது போல் தானும் உங்களுடன் வருகிறேன் என்ற வார்த்தை மட்டும் அவளின் வாயிலிருந்து உதிரவே இல்லை.​

எப்படியும் அவன் தன்னை அழைத்து செல்ல மாட்டான் என்று எண்ணிவிட்டாள் போலும்.​

"ப்ளீஸ்.. ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க.. நான் இங்க தனியா இருந்து என்ன பண்றது.. எனக்கு போர் அடிக்கும்.. எனக்கு தனியா இருந்து பழக்கம் இல்லை" என்றவளுக்கும் கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது.​

விட்டால் இப்பொழுதே அழுது விடுவேன் என்னும் நிலையில் நின்று இருந்தாள்.​

மெய்யழகன், "அது உன் பிரச்சனை.." என்றவனோ லிப்ட் அவர்களின் தளத்தில் நின்றதும் விறுவிறுவென வீட்டிற்குள் சென்று விட்டான்.​

தேன்நிலவு அழுத்தமாக தன் முகத்தை துடைத்துக் கொண்டு அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்தாள்.​

அவளின் முகமே சரியில்லை என்பது கவிதாவிற்கும், ஊர்மிளாவிற்கும் தெளிவாகப்பட்டது.​

கவிதா, "என்ன ஆச்சுன்னு தெரியலையே" என்று வருத்தமாக பார்க்க.​

ஊர்மிளாவோ, "ஏதோ பிரச்சனை போலருக்கு" என்று எண்ணியவளுக்கு குதூகலமாக இருந்தது.​

அடுத்த இரு நாட்களுமே மெய்யழகன் தேன்நிலவிற்கு பாராமுகம் தான் காட்டிக் கொண்டு இருந்தான். அவளிடம் சரியாக பேசுவதில்லை..​

அவளை சற்றும் சட்டை செய்யாமல் அவளே வலியசென்று பேசினாலும் மற்றவர்களின் முன்னிலையில் கேட்பதற்கு மட்டும் பதில் அளித்துவிட்டு சென்று விடுவான்.​

இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என்பது அங்கிருந்த யாருக்குமே தெரியவில்லை. அவ்வளவு ஏன்.. இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்பதே அங்கு யாருக்கும் விளங்கவில்லை. கவிதாவையும், ஊர்மிளாவையும் தவிர..​

மெய்யழகனும் காலை முதல் மாலை வரை அலுவலகம் சென்று விடுவான். ஏழு மணி அளவில் தான் வீட்டிற்கு வருவான் இருக்கும் கொஞ்சம் நேரமும் அவளிடம் சரிவர பேசாமல் முகத்தை தூக்கி வைத்து சுற்றிக் கொண்டிருந்தான்.​

அன்று துணி காய வைக்க மொட்டை மாடிக்கு தேன்நிலவு செல்லவும்..​

அவளை பின்தொடர்ந்து சென்ற கவிதா, "என்ன தான்‌ டி நடக்குது உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல.. ரெண்டு பேருடைய முகமுமே சரியில்ல.. என்ன பிரச்சனை?" என்றதுமே தேன்நிலவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.​

எவ்வளவு கட்டுப்படுத்தியும் சரசரவென கண்ணீர் கன்னம் தொட்டுவிட்டது.​

அவளின் கண்ணீரை பார்த்து பதறிய கவிதா, "ஹே என்னடி.. என்ன ஆச்சு.. ஏதாவது பிரச்சனையா?".​

தேன் நிலவு, "அவர் என் மேல கோவமா இருக்காரு.. பேசக்கூட மாட்டேங்கிறார்".​

கவிதா, "ஏன் என்ன ஆச்சு? நீ ஏதாவது செஞ்சியா?".​

தேன்நிலவு, "அவர் அமெரிக்கா போன பிறகும் நான் இங்கேயே தான் இருக்கனும்னு சொன்னாரு.. நான் எப்படி இங்க தனியா இருக்க முடியும். அதனால் ஊருக்கு போய் இருக்கேன்னு சொன்னேன். அதான் பிரச்சனை".​

கவிதா, "இதுல என்ன பிரச்சனை இருக்கு?".​

தேன்நிலவு, "அவருக்கு நான் ஊருக்கு எல்லாம் போகக்கூடாதாம்.. இங்கேயே தான் இருக்கணுமாம்.. துணைக்கு வேணும்னா தாத்தாவும் பாட்டியும் இருப்பாங்களாம்..​

அவங்க அத்தை வீட்டுக்கு போனா கூட நான் இங்கேயே தான் இருக்கணும்னு சொல்றாரு.. எனக்கு இங்க எல்லாமே புதுசு.. இங்க எதுவுமே தெரியாது.. நான் எப்படி தனியா இருக்கிறது" என்று சொல்லும் பொழுதே அவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.​

சிறு வயது முதலே அவர்களின் ஊரை தாண்டி வெளியூர் கூட சென்றது கிடையாது. அதிலும், எப்பொழுதுமே தன்னை சுற்றி ஆட்களுடனே இருந்து பழகியவளுக்கு இப்படி தனி ஊரில் தனிமையில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் மிகவும் கடினமான ஒன்றாக தான் தோன்றியது.​

கவிதா, "நீ அவர்கிட்ட பேசி பார்க்கலாம் இல்ல".​

தேன்நிலவு, "அவர் பேசுனா தானே.. நான் பேசினா முகத்தை திருப்பிக்கிட்டு போறாரு..".​

கவிதா அவளின் தோளில் தட்டியவள், "சரி விடு.. அழாத.. எல்லாம் சீக்கிரமா சரியாகிடும். என்ன பண்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியல".​

தேன்நிலவு, "இப்போ நான் ஊருக்கு போறேன்னு சொன்னது தானே அவருக்கு பிரச்சனை.. நான் இங்கேயே இருக்கேன்" என்றாள் தன் கண்களை துடைத்தபடி.​

கவிதா, "இங்கேயா.. எப்படி நீ தனியா இருப்ப?".​

தேன்நிலவு, "பரவாயில்ல டி.. அப்புறம் வேற என்ன பண்றது.. நான் ஊருக்கு போறேன்னு சொன்னா தான் அவர் கோவிச்சுக்கிறாரே.. அவர் இங்க இருக்கும் பொழுதே இந்த இடத்தை எல்லாம் கொஞ்சம் பழகிட்டா ஒன்னும் பிரச்சனை இருக்காது. அதான் இந்த அப்பார்ட்மெண்ட்குள்ளவே கடை எல்லாம் கூட இருக்கே. ஏதாவது தேவைனா வாங்கிக்கலாம்.. நான் பார்த்துக்கிறேன்".​

கவிதாவிற்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட விஷயம் அவர்களே முடிவெடுக்கட்டும் என்று எண்ணியவள், "சரி டி உன் இஷ்டம்" என்று முடித்துக் கொண்டாள்.​

அன்றைய நாளும் அப்படியே கழிய..​

அன்று இரவு அனைவரும் உணவருந்தும் வேளையில் தாத்தா, "மெய் ஊர்மி அப்பா போன் பண்ணி இருந்தாங்க.. இங்க ரிசப்ஷன் வைக்கிறது பத்தி உன்கிட்ட பேச சொன்னாருப்பா" என்றதும்.​

சட்டென்று ஊர்மிளா மெய்யழகனை பார்க்க..​

மெய்யழகன், "அதெல்லாம் எதுவும் தேவையில்லை தாத்தா" என்றதும் ஊர்மிளாவின் இதழில் யாரும் அறியாமல் ரகசிய புன்னகை அரும்பியது.​

பாட்டி, "ஏன் வேண்டாம்னு சொல்ற? ரிசப்ஷன் வச்சா தானே உன் கூட வேலை பாக்குறவங்க இங்க நமக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் வருவாங்க.." என்கவும்.​

மெய்யழகன் தேன் நிலவை தான் பார்த்தான்.​

அவளோ அவன் பார்வையை உணர்ந்ததும் சட்டென்று தலையை தாழ்த்திக் கொள்ள..​

மெய்யழகன், "வேண்டாம் பாட்டி.. டைம் இல்ல.. இன்னும் 10 டேஸ்ல நான் கிளம்பணும்" என்றான் உணவில் கவனத்தை செலுத்தியவாறு.​

ரத்தினம், "என்னடா எதுக்குமே பிடி கொடுக்காமல் பதில் சொல்லுற.. இங்க இருக்கவங்களுக்கு எல்லாம் உனக்கு கல்யாணம் ஆனது பத்தி தெரிய வேண்டாமா?".​

அவன் இன்னமும் தேன்நிலவின் விஷயத்தில் மாறவில்லை என்ற‌ எண்ணம் அவர்களுக்கு..​

ஊர்மிளா, "அவனே இப்படி ஒருத்தியை கல்யாணம் பண்ணதை எப்படி வெளியில் சொல்றதுன்னு தெரியாமல் தான் மறைக்க நினைக்கிறானோ.. என்னவோ..​

இவங்க எல்லாம் அது தெரியாமல் ரிசப்ஷன் வைக்கிறது பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க" என்று எண்ணியவளின் இதழில் இப்பொழுதோ நக்கல் புன்னகை குடியேறியது.​

மெய்யழகன் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், "சரி, ரிசப்ஷன் எல்லாம் வேண்டாம். சிம்பிளா பார்ட்டி அரேஞ்ச் பண்றேன். ரொம்ப க்ளோஸ் ஆனவங்களுக்கு மட்டும் சொன்னா போதும்" என்றவனோ எழுந்து அறைக்கு சென்று விட்டான்.​

அவனுக்கோ சம்பந்தமே இல்லாமல் தேன் நிலவின் மேல் அத்தனை கோபம்.. தன் கையை கோபத்தில் இறுக்க முடியவன்.​

"ரெண்டு நாள் ஆகுது.. நானும் உங்களோடு வரேன்னு ஏதாவது வாயை திறந்து சொல்லுறாளா என்று பாரு.. அப்படியே கல்லு மாதிரி இருக்கா.. அப்போ நான் மட்டும் தான் அவளை கூப்பிட்டு போகணும்னு நினைக்கிறேனா..​

அவளுக்கு என் கூட வருவதில் விருப்பமே இல்ல போலருக்கு.. யாரா இருந்தாலும் அவங்க ஹஸ்பண்ட் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறார்னா நானும் கூட வரேன்னு ஒரு தடவையாவது வாயைத் திறந்து சொல்லுவாங்கல்ல.. இவ ஏன் அப்படி எதுவுமே சொல்ல மாட்டேங்குறா" என்று புலம்பியவாறு நின்று இருக்க.​

மெதுவாக அறை கதவை தட்டியவாறு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் தேன்நிலவு.​

அவளை பார்த்தவன், "என்ன" என்றான் வெடுக்கென்று.​

இவ்வளவு நேரம் அவனிடம் என்னென்ன பேச வேண்டும் என்று மனப்பாடம் செய்து கொண்டு உள்ளே நுழைந்தாளோ அவனின் ஒற்றை வார்த்தையிலேயே அனைத்தும் சடுதி​

யில் மறந்து போனது.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 49​

மெய்யழகன், "என்ன வேணும் எதுக்கு இப்போ அப்படியே நிக்கிற?".​

தேன் நிலவும் பதட்டத்தில் தன் கையை அழுத்தமாக மூடியவாறு தலையை குனிந்து கொண்டு, "சரி.. நான் இங்கேயே இருக்கேன்".​

மெய்யழகன், "வாட்! இங்கேயே இருக்க போறியா.. நீ இங்க இருந்தா தாத்தாவும் மத்தவங்களும் எங்க படுப்பாங்க" என்றவனின் வார்த்தையில் அவசரமாக, "இல்லை.. இல்லை.. நான் அதை சொல்லல.. நீங்க அமெரிக்கா போன பிறகு நான் ஊருக்கெல்லாம் போகல இங்கேயே இருக்கேன்" என்றவளை உறுத்து விழித்தவன்.​

'இப்போதாவது என் கூட வரவா என்று கேட்கிறாளா என்று பாரு.. இங்கேயே இருக்க போறாளாம்' என்று முணுமுணுத்தவாறு அவளை முறைத்து பார்க்கவும்.​

'என்ன இது.. நாம தான் அவர் சொன்ன மாதிரி இங்கேயே இருக்கோம்னு சொல்லிட்டோமே.. அப்புறமும் ஏன் இவர் இப்படி முறைச்சு பார்க்கிறார் என்று தெரியலையே' என்று எண்ணியவளுக்கு அவனின் கோபத்திற்கான காரணம் தான் என்னவென்று புரியவில்லை.​

அவனோ அவளே தன் மனதில் இருக்கும் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ண.. இவளுக்கோ அப்படி ஒரு எண்ணமே எழவே இல்லை.​

தேன்நிலவு தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டு நின்றிருப்பவனிடம், "என்ன ஆச்சு?" என்றாள் மெதுவான குரலில்.​

மெய்யழகனிற்கோ அவனின் பொறுமை முற்றிலுமாக பரிபோனது. கடுப்பான குரலில், "நீ எப்பவுமே இப்படி தானா.. இல்ல இப்ப தான் இப்படி இருக்கியா..".​

தேன்நிலவு, "நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல" என்றாள் அவனை புரியாத பார்வை பார்த்தபடி.​

மெய்யழகன், "சும்மா சொல்லாத டி.. நான் உன்னை அமெரிக்காவுக்கு என் கூட கூப்பிட்டு போகலைனு சொல்றேன். நீ பாட்டுக்கு கூலா இருக்க..".​

இவ்வளவு நேரம் இவர்கள் இருவரும் பேசுவதை கதவினோடு கேட்டுக் கொண்டு நின்றிருந்த ஊர்மிளாவிற்கோ இதழில் வெற்றி புன்னகை பூக்க..​

'அப்போ மெய் இவளை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போகலையா.. சூப்பர்! அப்போ‌ அவன் மனசுல இவ இல்லை' என்று உள்ளம் மகிழ்ந்து போனாள்.​

அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தான் தேன் நிலவிற்கு தெரியவில்லையே.. இவன் தன்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறான்.. எதற்காக இவ்வளவு கோபப்படுகிறான்..​

அவன் தன்னை அழைத்து செல்ல மாட்டேன் என்றதும் நான் தான் எந்த வம்பும் செய்யாமல் சரி என்று ஒப்புக்கொண்டேனே..​

இருந்தும் அவன் ஏன் என் மேல் இவ்வளவு கோபப்படுகிறான் என்று புரியாமல் பார்த்தாள்.​

இருவருமே எதிர்பாராமல் சட்டென்று அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஊர்மிளா மெய்யழகனை நெருங்கி நின்றவாறு, "எனக்கு தெரியும்.. உனக்கு இப்படி ஒரு பட்டிக்காடு சுத்தமா செட்டாக மாட்டானு.. எனக்கு தெரியும் அதான் முன்னாடியே சொன்னேன்.. இப்பவாவது உனக்கு புரிஞ்சுதே" என்றவள்.​

"இன்னுமா உனக்கு புரியல.. மெய்யோட மனசுல நீ இல்ல.. மெய் எதிர் பார்த்தபடியும் நீ இல்ல.. அவனுக்கு உன்னை சுத்தமா பிடிக்கல.. அவன் நடந்து கொள்வதில் இருந்தே உனக்கு தெரியலையா..​

நீயே இதெல்லாம் தெரிந்து அவனை விட்டு போயிடுவனு அவன் நினைக்கிறான். ஆனால் நீ என்னடானா அப்படியே அவன் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்க".​

மெய்யழகன், "என்ன பேசுற நீ?" என்றான் கோபமாக.​

ஊர்மிளா, "உனக்காக தான் நான் பேசுறேன் நீ கொஞ்சம் அமைதியா இரு" என்றவள் மீண்டும் தேன் நிலவிடம், "நல்லா யோசிச்சு பாரு.. கல்யாணம் பண்ண புதுசுல யாராவது பொண்டாட்டியை கூட கூப்பிட்டு போகாமல் இப்படி தனியா விட்டுட்டு போவாங்களா..​

அதுவும் நீ உன் ஊருக்கும் போகக்கூடாது இங்கேயே தான் இருக்கணும்னு மெய் சொல்றான்னா இதுக்குள்ள என்ன அர்த்தம் இருக்குன்னு உனக்கு இன்னுமா புரியல..​

நீ அவனை விட்டு விலகிப் போகணும்னு அவன் நினைக்கிறான். அதனால் தான் உன்னை இப்படி எல்லாம் செஞ்சு கார்னர் பண்றான்" என்றவளின் வார்த்தையில் தேன்நிலவிற்கோ சடுதியில் கண்கள் கலங்கிவிட்டது.​

இவள் கூறுவது உண்மையாக இருக்குமோ என்று எண்ணமும் எழுந்தது.​

மெய்யழகன், "என்ன உளறுர நீ".​

ஊர்மிளா, "யாரு நான் உளறுரேனா.. அப்போ நீயே சொல்லு கல்யாணம் ஆன புது பொண்டாட்டியை எதுக்காக உன்னோட கூப்பிட்டு போக மாட்டேங்குற..​

ஏன்னா இவளை அங்க கூப்பிட்டு போய் இப்படி ஒரு பட்டிக்காட்டை உன்னுடைய பொண்டாட்டினு‌ அங்க இருக்குறவங்களுக்கு காட்ட நீ விரும்பல அதானே உண்மை..​

கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டதால் உன்னால் அவளை உன் வாழ்க்கையை விட்டு வெளியே அனுப்ப முடியாமல் நீ தவிச்சுக்கிட்டு இருக்க.. அதனால் தானே அவளை அவங்க ஊருக்கும் போக கூடாதுன்னு சொல்ற..​

அவளே உன்னோட இந்த லைஃப் வேண்டாம் என்று விட்டுட்டு போகணும்னு நினைக்கிற.. அதுக்காக தானே மெய் நீ இப்படி எல்லாம் செய்ற..".​

'ஓ! அப்போ அவர் என்னை அவரோட கூப்பிட்டு போக மாட்டேன் என்று சொன்னதற்கு காரணம் இது தானா.. ஆனா என்னை பிடிக்கும் என்று சொன்னாரே.‌. அப்போ என்கிட்ட சொன்னது எல்லாமே சும்மாவா' என்று எண்ணும் பொழுதே அவளுக்கு இதயத்தில் சுருக்கென்ற வலி முள் போல் தைத்தது.​

கலங்க துடிக்கும் கண்களை இமை சிமிட்டி கட்டுப்படுத்தியவள் தான் திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.​

ஊர்மிளா தேன் நிலவை மேலிருந்து கீழ் இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தவள், "நான் உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன்.. நீ எப்படி இங்க இருக்கனு எனக்கு புரியல..​

கொஞ்சம் சுய புத்தி இருந்தா நீயே யோசிச்சு பாரு இவர் பெங்களூரில் பெரிய கம்பெனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியரா இருக்காரு.. ஆனா நீ என்ன படிச்சிருக்க..​

உனக்கு அவருடைய மனைவினு சொல்லிக்கிற தகுதி கொஞ்சமாவது இருக்கான்னு எப்போவாவது யோசிச்சு பாத்தியா.. இப்போ மெய்க்கு அவருடைய டேலெண்ட்டால் அமெரிக்கா போற ஆஃபர் கிடைச்சிருக்கு.​

இப்போ மேடமும் அவரோட சேர்ந்து அங்க போகணும்னு ஆசைப்படுறீங்கனே வச்சுப்போம். அங்க போயிட்டு அவர் கூட வேலை பாக்குறவங்க கூட நாலு வார்த்தை இங்கிலீஷ்ல உன்னால் பேச முடியுமா..​

அவங்க யாராவது உன்கிட்ட வந்து எப்படி இருக்கனு கேட்டாங்கன்னா உன்னால் பதிலுக்கு இங்கிலீஷ்ல நல்லா இருக்கேன்னு சொல்ல முடியுமா..​

என்னுடைய மெய் இருக்கிற இடம் இங்கே.." என்று தன் ஒற்றை கையை உயர்த்தி காட்டியவளோ, "ஆனா நீ இருக்க இடம் எங்க தெரியுமா.. இங்க.." என்று தன் மற்றொரு கையை நன்கு கீழ் இறக்கி காட்டினாள்.​

"உனக்கு மெய்க்கும் எங்கைக்கு எங்கேயோ இருக்கு பொருத்தம்.." என்று அங்கலாய்ப்பாக கூறவும்.​

மெய்யழகனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது, "ஜஸ்ட் ஷெட்டப்!" என்றான் அந்த அறையே அதிரும்படி.​

தேன்நிலவிற்கோ அவளுக்கு பதில் பேசக்கூட நா எழவில்லை. அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை..​

இவ்வளவு நேரம் இவர்களின் உரையாடலை கேட்டபடி நின்றிருந்த அழகேசன் சடாரென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன். வெளியே இருப்பவருக்கு இவர்களின் வாக்குவாதம் தெரியாதவாறு கதவை சாற்றினான்.​

"உனக்கு வேற வேலையே இல்லையா.. அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அவங்க என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும். நீ மூனாவது மனுஷி தானே..​

எதுக்காக அவங்க பேசுவதை ஒட்டு கேட்டுக்கிட்டு இப்படி கதவை திறந்துக்கிட்டு திறந்த வீட்டில் எதுவோ நுழையுற மாதிரி உள்ளே நுழையிற" என்றான் ஊர்மிளாவை பார்த்து சுறுக்கென்று.​

அவனின் வார்த்தை ஊர்மிளாவிற்கு அவமானத்தை கொடுத்தாலும், "இங்க பாரு மெய் ஒன்னும் யாரோ எல்லாம் கிடையாது. நான் சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன். எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும்.. அவருடைய வாழ்க்கை என் கண்ணு முன்னாடியே இப்படி நாசமா போறதை என்னால் பாத்துட்டு சும்மா இருக்க முடியாது" என்றாள் வீராப்பாக.​

அழகேசன், "அவனுடைய வாழ்க்கை வீணா போகுதுன்னு அவன் உன்னிடம் சொல்லி அழுதானா.. அவனுக்கு வாய் இல்லை.. அவனுடைய வாழ்க்கையை எப்படி காப்பாத்திக்கணும் எப்படி பார்த்துக்கணும்னு அவனுக்கு தெரியும்.​

அவன் கண்ணு முன்னாடியே அவன் பொண்டாட்டியை இந்த பேச்சு பேசுறியே உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது. என்ன தெரியும் உனக்கு தேனை பத்தி..".​

ஊர்மிளா, "இவளை பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு என்ன இருக்கு.. கொஞ்சம் கூட மெய்க்கு பொருத்தமே இல்லாதவள் பார்த்தாலே தெரியுது" என்றாள் தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தவாறு.​

அவளின் நடவடிக்கை மேலும் மேலும் தேன் நிலவை அவமானப்படுத்தும்படியே இருக்க..​

"ஏன் டா எவளோ ஒருத்தி வந்து உன் பொண்டாட்டியை பத்தி இந்த பேச்சு பேசுறா.. நீ பாட்டுக்கு வாயை பார்த்துக்கிட்டு நிக்கிற அவ தலை திரும்புற மாதிரி இரண்டு விடுறதில்லை.​

இப்படித்தான் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பியா? ஒரு வேளை, அவ சொன்ன மாதிரி உன் மனசுலயும் அந்த மாதிரி ஏதாவது எண்ணம் இருக்கா..​

இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டது அவமானம்னு நினைக்கிறியா? உன் கூட கூப்பிட்டு போனா இவளால் அங்க இருக்கவங்க கிட்ட இங்கிலீஷ்ல பேச முடியாது.​

அதனால் உனக்கு மத்தவங்க முன்னாடி அசிங்கமாயிடும் என்று தான் இவளை கூப்பிட்டு போக மாட்டேன் என்று சொல்றியா" என்று கடுப்பாக கேட்கவும்.​

தேன் நிலவிற்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை விறு விறுவென அறையை விட்டு வெளியேறி விட்டாள்.​

மிகவும் அவமானமாக இருந்தது.. யாரையும் எதிர் கொள்ள முடியவில்லை.​

எங்கே ஆமாம் என்று கூறிவிடுவானோ என்ற பயம் ஒருபுறம்..​

தேவை இல்லாத தாழ்வு மனப்பான்மையும், அவமானமும் ஒரு புறம் என கூனிக்குறுகி விட்டாள்.​

அனைவரும் ஹாலில் அமர்ந்திருப்பதால் அவர்களின் முன்பு தன் கலங்கிய முகத்தை காட்ட விரும்பாதவள் மற்றொரு அறைக்குள் இருக்கும் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.​

எவ்வளவு முகத்தை கழுவியும் கண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது.​

மெய்யழகன் அவன் வாயிலாகவே இவளை மனைவியாக ஏற்றுக் கொண்டதாக கூறிவிட்டான் தான்..​

இவளை பிடித்திருக்கிறது என்றும் கூறிவிட்டான் தான்..​

இருப்பினும், ஊர்மிளா வாயிலாக இத்தகைய வார்த்தைகளை கேட்கும் பொழுது அவளின் மனம் வலிக்கத்தான் செய்கிறது.​

உண்மை தான்.. மெய்யழகனிடம் தன்னையும் அவனுடன் அழைத்துச் செல்லுமாறு தேன் நிலவு கேட்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே அவனின் நிராகரிப்பை இவளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தான்.​

மேலும், எதிர்பார்ப்பு வைத்து விட்டால் அந்த எதிர்பார்ப்பு நிராகரிக்கப்படும்போது அதன் வலி இருமடங்காக அல்லவா இருக்கும்..​

பலமுறை அந்த வலியை தன் பிறந்த வீட்டில் அனுபவித்தவளிற்கு மெய்யழகனிடமும் ஏதேனும் எதிர்பார்த்து அவன் மறுக்கும் வலியை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று எண்ணியதாலேயே மெய்யழகனிடம் தன்னையும் அழைத்து செல்லுமாறு அவள் ஒருமுறை கூட கேட்கவில்லை.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 50​

அவனின் எதிர்பார்ப்போ உரிமையாக தன்னிடம் அவள் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்க வேண்டும் என்பது தான்..​

அவள் மனைவி என்ற உரிமையை தன்னிடம் நிலை நாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு..​

ஆனால் அவனின் எதிர் பார்ப்பு தான் இப்பேதைக்கு புரியாமல் போனது..​

அதே ‌போல் அவளின் தயக்கமும் அவனுக்கு விளங்காமல் போனது..​

சிறு வயது முதலே நிறைய நிராகரிப்புகளை சந்தித்தவளிற்கு இவனிடம் அவ்வளவு எளிதில் நெருங்க முடியவில்லை..​

உரிமை எடுத்து கொள்ளவும் முடியவில்லை.. ஏதோ ஒரு தயக்கம்..​

மெய்யழகன், "என்ன பேசுற நீ.. நான் எதுக்காக அப்படி எல்லாம் நினைக்க போறேன்".​

அழகேசன், "நீ நடந்து கொள்வது எல்லாம் பார்த்தா அப்படி தான் டா இருக்கு. பாவம் அந்த புள்ள.. அவளை இந்த பொண்ணு அந்த பேச்சு பேசுறா நீ பாட்டுக்கு அப்படியே நிக்கிற..​

பொண்டாட்டியை அடுத்தவங்க முன்னாடி விட்டுக்கொடுக்காதவன் தான் உண்மையான புருஷன்.. யார் வேணும்னாலும் உன் பொண்டாட்டியை என்ன வேணும்னாலும் பேசலாம்னா அப்புறம் புருஷன்னு நீ எதுக்குடா இருக்க".​

மெய்யழகன் ஊர்மிளாவை முறைத்து பார்த்தவன், "உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம்.. நான் உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் எதுக்காக அவளை ஹர்ட் பண்ற மாதிரி நடந்துக்கிற.. நான் அவளை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போகலைன்னு உனக்கு தெரியுமா?".​

ஊர்மிளா, "எதுக்காக நீ பொய் சொல்லணும்னு நினைக்கிற.. யாருக்காக உன் மனசுல இருக்குற கஷ்டத்தை நீ மறைக்கணும்னு நினைக்கிறனு எனக்கு புரியல மெய்..​

நீ தான் அவளை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போக மாட்டேன்னு சொன்னியே.. எல்லாத்தையும் நான் வாசல்ல நின்னு கேட்டுகிட்டு தான் இருந்தேன்".​

மெய்யழகன், "வாட்! வாசல்ல நின்னு கேட்டுகிட்டு இருந்தியா.. அப்போ நாங்க ரெண்டு பேரும் பேசுறதை நீ ஒட்டு கேக்குறியா" என்றான் முகம் சிவக்க.​

அழகேசன், "ஆமா.. நான் இங்க வந்ததிலிருந்து இந்த பொண்ண கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன். இவளுடைய பார்வையும் நடவடிக்கையும் கொஞ்சம் கூட சரியில்லை.​

அதிலும் உன்னையும் தேனையும் இவ பார்க்கிற பார்வையே சரியில்லை. இப்போ நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குள்ள வந்ததும் கதவுக்கிட்ட நின்னு நீங்க பேசுறதை ஒட்டு கேக்குறா..​

இவளுடைய நடவடிக்கை சரி இல்லையேன்னு தான் நான் இவளை கவனிச்சுக்கிட்டே இருந்தேன். எதுக்காக நீ இப்படி எல்லாம் பண்ற" என்றவன் நேரடியாக ஊர்மிளாவிடமே தன் கேள்வியை கேட்டான்.​

ஊர்மிளா, "ஏன்னா எனக்கு மெய்யை பிடிச்சிருக்கு.. நான் மெய்யை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்".​

அழகேசன், "லூசா நீ.. ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தனை புடிச்சி இருக்குன்னு சொல்ற".​

ஊர்மிளா, "இங்க பாருங்க இது ஒன்னும் இன்னைக்கு நேத்து என் மனசுல வந்த ஆசை கிடையாது. நான் மெய்யை பல வருஷமா காதலிக்கிறேன். அது மெய்க்கும் தெரியும்..​

அவர் என் காதலுக்கு சம்மதிக்கிறதுக்குள்ள அவருக்கு அவளை புடிச்சு கட்டி வச்சிட்டீங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும். யோசிச்சு பாருங்க.. கொஞ்சமாவது அவ மெய்க்கு பொருத்தமா இருக்காளா".​

அழகேசன், "வாயை மூடு! அவ இவனுக்கு பொருத்தமா இருக்காளா இல்லையா என்று முடிவு பண்ண வேண்டியது நீயோ நானோ கிடையாது. இவன் தான்.." என்று மெய்யழகனை நோக்கி தன் கையை காட்டியவன்.​

"நீ சொல்லுடா உன் மனசுல என்ன இருக்கு எதுக்காக நீ தேனை அமெரிக்காவிற்கு கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்ன".​

மெய்யழகன், "ம்ம்ச்ச்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேக்குறியா.. அவளை கூப்பிட்டு போக மாட்டேன் என்று நான் எப்போ டா சொன்னேன்.​

நானும் அவளும் சேர்ந்து தான் அமெரிக்காவுக்கு கிளம்ப போறோம்" என்றதுமே அதிர்ந்து போய் அவனை பார்த்த ஊர்மிளாவின் முகம் தன் விருப்பமின்மையை அப்பட்டமாக காட்டியது.​

அழகேசன், "அப்புறம் எதுக்காக டா அவ கிட்ட அப்படி சொன்ன".​

மெய்யழகன், "அது நான் அவகிட்ட சும்மா விளையாடிட்டு இருந்தேன். அவ வாயாலேயே என்னை கூப்பிட்டு போக சொல்லி கேட்பானு பார்த்தேன்.​

எங்களுக்குள்ள நடக்கிற விஷயம் இது.. இது எங்களுடைய பர்சனல்.. இதுல இவ தலையிட்டதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனையே" என்றான் சலிப்பாக தன் நெற்றியில் கை வைத்தவாறு.​

ஊர்மிளா, "என்ன சொல்ற நீ.. அவளை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறியா.. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. அங்க உன் கூட வேலை பார்க்கிறவங்க கிட்டயும், உன் பிரெண்ட்ஸ் கிட்டயும் எப்படி நீ இண்ட்ரடியூஸ் பண்ணி வைப்ப..​

இவளுக்கு சேர்ந்த மாதிரி நாலு வார்த்தை இங்கிலீஷ்ல கூட பேச முடியாது. இவளை உன்னுடைய வைஃப்னு அறிமுகப்படுத்தினால் அது உனக்கு தான் அசிங்கம்" என்றாள் ஆதங்கமாக.​

மெய்யழகன், "தயவு செஞ்சு நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ ஊர்மி.. இவ்வளவு தூரம் நான் உன்கிட்ட பொறுமையா எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்கேன்னா அது உனக்காக இல்ல..​

அத்தைக்காகவும் மாமாவுக்காகவும் மட்டும் தான். முக்கியமான விஷயம் என்னன்னா இன்னொரு தடவை என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசாத.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.​

சின்ன வயசுல இருந்து நான் உன்னை பார்க்கிறேன்.. உன்கிட்ட நான் பல தடவை சொல்லிட்டேன் எனக்கு உன் மேல உன் மனசுல இருக்குற மாதிரி எந்த ஒரு ஃபீலிங்ஸ்மே இல்லை.​

நான் உன்னை தங்கச்சி மாதிரி தான் பார்க்கிறேன். ப்ளீஸ்.. திரும்பவும் நம்ம உறவை நீயே அசிங்கப்படுத்தாத.. எனக்கு நிலா கூட கல்யாணம் முடிஞ்சு போச்சு.. என் மனசு முழுக்க அவ மட்டும் தான் இருக்கா..​

எனக்கு ஆரம்பத்துல அவளை பிடிக்கல தான். ஆனா, எனக்கு இப்போ அவளை மட்டும் தான் பிடிச்சிருக்கு. திரும்பத் திரும்ப என்னை இதையே உன் கிட்ட சொல்ல வைக்காத..​

உன் மனச நீ தான் மாத்திக்க ட்ரை பண்ணனும்" என்றவனோ விறுவிறுவென்று அறையை விட்டு வெளியே வந்தான்.​

அவனின் பார்வை தேன் நிலவை தான் அந்த ஹாலில் தேடியது. அவன் பார்வைக்கு எங்குமே அவள் அகப்படவில்லை.​

மெய்யழகனின் வார்த்தையில் ஊர்மிளா மொத்தமாக நொறுங்கி போய்விட்டாள். கண்கள் கலங்க நின்று இருந்தாள்.​

அழகேசன் கோபமாக, "உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. உன்னை அவன் கூட பிறந்தவ மாதிரி நினைக்கிறான். அது கூடவா உனக்கு புரியல.. படிச்ச பொண்ணு தானே நீ..​

அவன் மனசுல உன்னை கூட பிறந்தவளா நினைக்கிறான் உன்னை எப்படி அவனால் காதலிக்க முடியும்.. கல்யாணம் செஞ்சுக்க முடியும்.. இதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா".​

ஊர்மிளா கோபமாக தன் கண்களை துடைத்தவள், "அவர் அப்படி நினைச்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? சின்ன வயசுல இருந்தே நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் ஒன்னா தான் வளர்ந்தோம்.​

அவர் சொல்றது எல்லாமே சரி தான்.. அதுக்காக நானும் அவரும் அண்ணன் தங்கச்சி ஆயிடுவோமா.. எப்படி பார்த்தாலும் நான் அவருக்கு அத்தை பொண்ணு முறை தானே".​

அழகேசன் அவளை இவள் என்ன லூசா என்னும் தோரணையில் பார்த்தவன், "உனக்கு அவன் என்ன சொல்றான்னு புரியலையா.. கூட பிறந்தா மட்டும் தான் அண்ணன் தங்கச்சி கிடையாது.​

மனசளவுல அவன் உன்னை தங்கச்சியா பார்க்கிறான். அவன்கிட்ட நீ உன் மனசுல இருக்கிறதை சொன்னது தப்பு கிடையாது.​

ஆனா, அவன் உன்னை தங்கச்சியா நினைக்கிறான் என்று தெரிஞ்ச பிறகும் திரும்பத் திரும்ப நீ உன் மனசுல அதே பழைய எண்ணத்தோடு இப்படி சுத்திக்கிட்டு இருக்க பாத்தியா இது தான் ரொம்ப பெரிய தப்பு.​

அவன் உன் மேல வச்சிருக்க அன்பை நீயே இப்படி கொச்சைப் படுத்துற மாதிரி நடந்துக்காதே.. மெய் பத்தி எனக்கும் தெரியும். அவன் மனசுல அவன் உன்னை தங்கச்சியா நினைக்கிறேன்னு சொன்ன பிறகு நீ என்ன பண்ணாலும் சரி அவன் அவனுடைய மனச மாத்திக்க மாட்டான்.​

அப்படி இருக்கும் பொழுது இப்போ இன்னொருத்திக்கு அவன் சொந்தம் ஆயிட்டான். இப்போ போய் நீ அவனை காதலிக்கிறேன்னு அவன் பின்னாடி சுத்தனா அவன் ஒத்துப்பான்னு நினைக்கிறியா.." என்றான் தன் புருவத்தை உயர்த்தி கேள்வியாக.​

ஊர்மிளா, "அப்போ நான் மெய்யை காதலிச்சது தப்புன்னு சொல்றியா?" என்றவளுக்கு குரல் ஆதங்கத்தில் அடைத்து வெளிவந்தது.​

அழகேசன், "இங்க பாரு ஊர்மிளா அத்தை பொண்ணு என்றதையும் தாண்டி அவன் உன்னை கூட பிறந்த பொறப்பா பார்க்கிறான். அதுக்கே நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் உன்னை கூட பிறந்தவளா நினைக்கிறான்னா உன் மேல அவன் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் வச்சிருக்கான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு..​

அதையெல்லாம் நீயே தேவையில்லாமல் கெடுத்துக்காதே.. இனி மெய்யுடைய மனதை மாற்ற முடியாது. அவன் உன் மேல என்ன மாதிரியான அன்பு வச்சிருக்கான் என்பதை நீ தான் புரிஞ்சுக்க முயற்சி பண்ணனும்.​

திரும்ப அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறேன்னு முட்டாள் தனமான காரியத்தை எதையும் செய்யாத.. அவன் முன்னாடி உன்னுடைய தரத்தை நீயே குறைச்சுக்காத" என்று கோபமாக கூறிவிட்டு விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினான்.​

அழகேசனின் சாடலில் ஊர்மிளாவிற்கும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அவ்வளவு எளிதில் மெய்யழகனை தன் மனதில் இருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.​

ஈர்ப்பு தான் அவன் மேல் அவள் கொண்டது.. காதல் அல்ல.. இருந்தாலுமே அதை எளிதில் ஒப்புக்கொள்ள முடியவில்லை.​

சிறு வயதிலிருந்தே தான் விரும்பிய ஒரு பொருளை வேறொருவர் திடீரென எங்கிருந்தோ வந்து சொந்தம் கொண்டாடினால் எப்படி அதை அப்படியே தூக்கி கொடுக்க முடியும் என்ற எண்ணம் தான் ஊர்மிளாவிற்குள் எழுந்தது.​

ஆனாலும் அவன் தங்கையாக பாவிக்கிறேன் என்று ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் மனதளவில் வெகுவாக உடைந்து போகிறாள்.​

ஆனாலுமே அவனை விட்டுக் கொடுக்க முடியவில்லை.​

அவன் வேண்டாம் என்று ஒரு மனமும்.. அவனுக்கு உன் காதலை புரியவை அவனே உன்னை ஏற்றுக் கொள்வான் என்று மற்றொரு மனமும் இரு வேறு முடிவுகளை அவளுக்குள் திணிக்க இரண்டுக்கும் இடையே சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறாள்.​

தேன் நிலவுக்கும் மனம் முழுவதும் குழப்பம் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தது. தன்​

னை சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாமல் சுற்றிலும் குழப்பத்தால் சூழ்ந்தவாறு தத்தளித்து கொண்டிருந்தாள்.​

 
Top