#ஆற்றிலின்_அழகன் கதை விமர்சனம் செய்த மீனாட்சி sisterகு நன்றிகள் பல

எனக்கு என்ன சொல்றதுனே தெரியல மீனாட்சி சிஸ்டர். இந்த கதைக்கு நா இன்னைக்கு வர நிறைய விமர்சனங்கள் வாங்கிட்ருக்கேன். எனக்கு மிகப்பெரிய பேர் வாங்கி கொடுத்த என்னோட முதல் கதை. இப்ப நீங்க சொல்லும் ஒவ்வொரு விஷயமும் நா அன்னைக்கு யோசிச்சு யோசிச்சு ரசிச்சு, படிக்குறவங்களுக்கு பிடிக்கணுமேன்னு பயந்து எழுதின பக்கங்கள். எனக்கு நீங்க அதை அப்படியே நினைவு படுத்திட்டீங்க அதுக்கே ஸ்பெஷல் தேங்க்ஸ் சிஸ்டர்.
மறுபடியும் ஆற்றலின் அழகன் மாதிரி ஒரு கதை எழுதுங்க, இத சொன்னவங்க நிறையபேர் உண்டு. என்னால மறுபடியும் அது முடியுமான்னு நிச்சயமா தெரியல, ஆனா ஒன்ஸ் கண்டிப்பா ட்ரை பண்ணுணும்னுற எண்ணம் இருக்கு. உங்க விமர்சனம் படிக்க படிக்க எனக்கு அவ்வளவு சந்தோசம்.
மனமார்ந்த நன்றிகள். நீங்க எவ்வளவு டீப்பா படிச்சுருக்கீங்கன்னு என்னால உணர முடிஞ்சது. அதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள்







. Thanks thanks a lot









#ஆற்றலின்_அழகன்
பிரதிலிபியில் நான் வாசித்த முதல் நாவல்.
Kanimozhi ~ பிரதிலிபியை எனக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த கதையை படிக்க என்னை ஊக்கியவள்.
இன்று வரை நிறைய நல்ல கதைகளை எனக்கு அறிமுகப்படுத்துபவள்.

எனது ஆரம்பகால பிரதிலிபி நாட்களில்
படிக்கக் கிடைத்த நாவல்கள் எல்லாம் என்றுமே என் நினைவில் நிற்கும்.
பல எழுத்தாளர்களின் முதல் நாவல், அவர்களது எழுத்தில் நான் படிக்கும் முதல் அனுபவமாகவே எதேச்சையாக அமைந்ததுண்டு.
அவ்வகையில் எனக்குக் கிடைத்த ஒரு இனிய அனுபவம் தான், Priya Pandees அவர்களின் "ஆற்றலின் அழகன்.
கிராமத்துக்குள், அவர்களின் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்துவிட்டு வந்த உணர்வை ஒவ்வொரு வாசிப்பிலும் அளிக்கும்.
எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று கணக்கே இல்லை. அவ்வளவு பிடித்தமானது.
நாம் வாழ விரும்பும் வாழ்க்கையை கற்பனை வடிவில் கதைகள் நமக்காக வாழ்ந்து காட்டும் என்பார்கள்.
அதனை மெய்ப்பிக்கும் ஒரு இனிய கதையாக, எளிய கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்வை சுவையுடன் சித்தரித்து, அவர்களுடன் நம்மையும் சிறிது நேரம் இளைப்பாறச் செய்யும்.
ஆற்றல்நங்கை

உளங்கவரழகன்
வீட்டின் வடிவைப்பை பற்றிய வர்ணனையே ஒரு அழகியல்.

ஒவ்வொரு முறையும் கற்பனையில் அழகாக விரியும் அந்த கிராமத்து வீடு, அதன் சிறிய வாசல், பெரிய வாசல், திண்ணை, வீட்டின் முன் கொட்டிக் கிடக்கும் மண் திட்டு, அதன் அருகில் விளையாடும் ஆதி, அன்பு, அகி மற்றும் புலி, அவர்களை திட்டித் தீர்க்கும் பாட்டி, அம்பலவாணன் தாத்தா, ஒத்தக்கடை தாத்தா, தென்னமரத்தோப்பு.
திண்ணையில் மூட்டைகளை அடுக்கி அதன் மேல் ஏறி, தாழ்ப்பாள் இல்லாத

வழியாக முதல் மரியாதை கதை(

) கேட்கும் அன்பு, வீட்டில் எப்பேர்பட்ட கலவரம் நடந்தாலும் மொபைலும் கையுமாகவே சுற்றிவரும் அகி, இவர்களது குடும்பநாடகத்தை கலாய்க்கும் புலி, அவனையே கலாய்த்து மாய்க்கும் சகோதரர்கள்.
"ஏண்டா இதெல்லாம் என்னன்னு கேட்டுக்க மாட்டீங்களா?" - புலி
"இப்போ பாட்டிக்கிட்ட கேட்டோம்னா oscar award range ku நடிக்கிறத நிறுத்திட்டு சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதுக்கு நடிப்ப கூட்டும் அது தேவையா?" - அன்பு& அகி
Tat 3 boys ultimate combo

அழகனின் "குட்டிமா" என்ற அழைப்பு, "ஒவ்வொரு முறையும் அவ தான் என்னை வர வைக்கிறா, எல்லோருக்கும் பார்த்து பார்த்து செஞ்சிட்டு அவ விஷயத்துல மட்டும் கோட்டை விடறேன்", என்றெண்ணி வருந்துவது, வீம்பாய் அவளை படிக்க வைப்பது, அப்பத்தாவிடம் விட்டு கொடுக்காமல் பேசுவது, "நீங்க ஆற்றல் பெரியப்பா தானே! என்று அவரை எட்டி நிறுத்துவது, தன் மட்டில் அவர்கள் எந்த நிலை என்று எல்லா நேரமும் தெளிவாய் அவர்களுக்கு உணர்த்துவது, குள்ளச்சி கொஞ்சம் வளருடி என குட்டுவது எல்லாம் அழகு.
பாவடை தாவணி போட்டு வந்து சுத்தி சுத்தி அவள் காட்டுவதும், சின்ன பிள்ளைய போய் எப்படி பார்க்கிற என்று அவன் தலையில் தட்டிக்கொள்வதும், பாண்டி விளையாடும்போது அங்கு வரும் அழகனின் பார்வையை விவரிக்கும் விதமும் கொள்ளை அழகு.
அடிபம்பின் பின் ஒளிந்து அவனிடம் மாட்டுவது, பாண்டி விளையாடும் காட்சி, ஊர் திருவிழாவின் போது நிகழும் கண்ணும் கண்ணும் நோக்கியா எல்லாம் எப்பொழுது படித்தாலும் repeat mode தான்.


மினி கணையாழியின், "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" பாடல் முதல் "விழியிலே என் விழியிலே" பாடல் வரை அவர்களது பாகம் எல்லாம் ரசித்து சிரிக்க வைக்கும்.
அன்பு: "அண்ணன்காரன் என்னையே மதிக்காம என் முன்னாடியே matching matching போட சொல்லிட்டு போறா".

ஆதி, கணையாழி, மினி கணையாழி மூவரின் combo அம்புட்டு அம்சமா இருக்கும்.
கிராமத்து பேச்சுவழக்கு கதை முழுமைக்கும் வாகாய் பொருந்தியதாய்.
"இயற்கை விவசாயம் குறித்த தகவல்கள், அதனை தனது கிராமத்தில் செயல்படுத்தும் அழகனின் முயற்சிகள் யாவும் மிக அருமை".


அழகன் ஆசையாய் தூக்கி வைத்துக்கொண்ட கொழு கொழு குழந்தை முதல் AKS வரை அவர்களது குடும்ப ஆல்பத்தை புரட்டிப் பார்க்கும் ஒரு நெகிழ்ச்சியான உணர்வு.
“ஒரு நிகழ்வில் தொடங்கும் கதை, அதேபோன்ற இன்னொரு நிகழ்வில் முடிவுறும்."
“ஒவ்வொரு வாசிப்பிலும் வில்வதுரைக்கு சென்று உலவி வர வைக்கும்.”



