அத்தியாயம்1
"அத்தை தென்றல் அங்க வந்தாளா?" என கிருஷ் சித்ராவிடம் தொலைபேசியில் கேட்க,
சித்ராவோ"என்ன மாப்பிள்ளை சொல்றிங்க!!! தென்றல் இங்க வரலயே, அவ எங்க போனா?
உங்க கிட்ட சொல்லிட்டு போகலயா?
அவ போய் எவளோ நேரம் ஆச்சு?
என கேள்வி கனைகளை அடுக்கிக் கொண்டே போக,
"அத்தை,அத்தை பொறுமையா இருங்க,இங்க தான் இருந்தா, கடை வரைக்கும் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனா.
ஆனா போய் ரொம்ப நேரம் ஆகுது இன்னும் காணோம் , அதான் பயந்து போய் உங்களுக்கு கால் பன்னேன் " என்றான் கிரிஷ்.....
மறுபக்க முனையில் சித்ரா ஓஓவென அழ ஆரம்பித்து விட்டார்...
"என்னங்க நம்ம பொண்ண காணோம்னு மாப்பிள்ளை சொல்றாருங்க" என கணவனிடம் அழ,
போனை அவளிடம் இருந்து இராமச்சந்திரன் வாங்கி "என்ன மாப்பிள்ளை ஆச்சு, தென்றல் எங்க போனா' எனக் கேட்க,
கிரிஷ் சித்ராவிடம் சொன்ன அனைத்தையும் ராமிடமும் சொன்னான்....
'அவ யார்க்கிட்டயும் சொல்லாம போக மாட்டாளே மாப்பிள்ளை'என ராமு கூற,
'ஆமா மாமா நானும் பக்கத்துல இருக்கற கடை, கோவில் எல்லாப்பக்கமும் பாத்துட்டு வந்துட்டேன், அவள காணோம்' என உடைந்த குரலில் கிரிஷ் கூற,
' மாப்பிள்ளை நீங்க வாங்க பேசாம நாம போலீஸ்ல ஒரு கம்ப்பிளைண்ட் குடுத்தறலாம்' என ராமு கூற, இவனும் சரி என்று கிளம்பினான்....
மூவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்...
சித்ரா தான் மகளை காணாமல் அழுது கொண்டே வந்தார்...
ஆண்கள் இருவருக்கும் அழுகை வரமால் இல்லை, வரும் அழுகையை அடக்கிக் கொண்டு கார் கண்ணாடி வழியே தென்றல் எங்காவது இருக்கிறாளா, என தேடி கொண்டே வந்தனர்...
கிரிஷ் , ஜன்னல் ஓரம் அவன் பழைய நினைவுகளை சுமந்தபடி வந்தான்..
...2 வருடங்களுக்கு முன்பு கிரிஷ் , ஈரோட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னிமலை கோவிலுக்கு சென்றான்....
அது அவனுக்கு விருப்பமான கோவில், ""அந்த ரம்மியமான மலையில் வீற்றிருக்கும் கடவுள் அவனுக்கு மிக பிடித்தமான தமிழ் கடவுள் முருகன்""....
எவ்வளவோ முறை அந்த முருகனை காண சென்றிருக்கிறான்..
ஆனால் இந்த முறை கொஞ்சம் சிறப்பான தரிசனம்...
கிரிஷ் முருகனிடம் வழக்கமான வேண்டுதல்களை வைத்து விட்டு கோயிலை சுற்றி வரும்போது ஒரு காட்சியை பார்க்கிறான்....
மயில் கழுத்து கலரில் பாவாடை பிளௌஸ் போட்டு அதற்கு மேட்ச்சாக லைட் சந்தன கலரில் தாவணி அணிந்து, தனது அம்மா, அப்பா உடன் அங்கிருந்த கடவுள்களை வணங்கி கொண்டிருந்தால்....
அவளின் அழகான நீண்ட முடி,
அதில் வைத்திருந்த மல்லிகைப்பூ,
படர்ந்த நெற்றி , அதில் சின்னதாய் ஒரு பொட்டு, முருகனின் பிரசாதமாய் கிடைத்த திருநீறு குங்குமம் நெற்றியை நிறைத்து இருக்க,
அளவான சிரிப்பு, துறுதுறு பேச்சு என அவளை ரசித்து கொண்டே வந்த ஆடவன் அவள் அழகில் மயங்கித்தான் போனான்....
அவனுக்கு அதில் மிகவும் பிடித்தது அவளுடைய அம்மாவும் ,அப்பாவும்...
அவளை அவர்கள் பார்த்து கொண்ட விதம் ..
அவளுக்கு சந்தனம் வைத்து விடுவது பிரசாதம் ஊட்டி விடுவது ,அவளின் கைப்பிடித்து நடப்பது, அவளிடம் சிரித்து சிரித்து பேசுவது என அவர்கள் மூவரையும் பார்க்கும் போது அவன் மனதில் அளவில்லா சந்தோசம்....
ஏனென்றால் கிரிஷ் சிறுவனாக இருக்கும் போதே அவன் தாய், தந்தை ஒரு விபத்தில் தவறி விட்டனர்....
தாத்தா பாட்டி ஆதரவில் தான் வளர்ந்தான்...
இப்போது படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் மாதம் 50,000 சம்பளத்தில் வேலை செய்கிறான்...
இவர்களை பார்த்த உடன் இவனுக்கு அவன் தாய் தந்தை ஞாபகம் வந்து விட்டது...
"இவளை கல்யாணம் பன்னிக்கிட்டு அவங்க அப்பா அம்மா அவள பாத்துக்கறத விட இன்னும் அதிகமா அவள பாத்துக்கனும்" என நினைத்துக் கொண்டான்...
கார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது...
பழைய நினைவிலிருந்து வெளியே வந்தவன், காரிலிருந்து இறங்கினான்..
ராமும், சித்தராவும் காரில் இருந்து இறங்கியவுடன் அவர்களுடன் காவல் நிலையத்திற்குள் சென்றான்...
அங்கே இன்ஸ்பெக்டர் முன் மூவரும் அமர்நதனர் .....
" சொல்லுங்க என்ன பிரச்சினை"என இன்ஸ்பெக்டர் கேட்க,
"சார் வணக்கம், என் பேர் கிருஷ்ணன் .
இது என்னோட மாமனார் இராமச்சந்திரன், மாமியார் சித்ரா....
என் வொய்ப் காலைல கடைக்கு போறேன்னு சொல்லிட்டு போனாங்க ஆனா இப்ப வரைக்கும் வீட்டுக்கு வரலை, வழக்கமா அவங்க போற எல்லா இடத்துலயும் போய் தேடி பாத்துட்டோம், ஆனா அவங்க எங்கயுமே இல்ல சார், அதான் ஒரு கம்பிளைண்ட் குடுத்தறலாம்னு வந்தோம்' என கிருஷ் கூறி முடித்தான்....
" ஓஓஓ சரி, வீட்ல எதாவது பிராப்ளமா, அதாவது புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதாவது பிரச்சனையா" என கேட்க,
ராமு "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார் எங்க மாப்பிள்ளை அவள ரொம்ப நல்லா பாத்துக்குவாரு " எனக் கூற,
அவர்கள் இருக்கும் நிலையை பார்த்த இன்ஸ்பெக்டர் அவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பாமல் " முன்னால போய் கம்பிளைண்ட் எழுதி குடுத்துட்டு உங்க போன் நம்பர் அட்ரெஸ் எழுதி குடுத்துட்டு கெளம்புங்க, தகவல் கெடச்ச உடனே கூப்படறோம்....எனக் கூறி அனுப்பி வைத்தார்....
அவர்களும் வந்து விபரத்தை கொடுத்து விட்டு வெளியில் வந்தனர்...
காரை பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்...
அது ஒரு விநாயகர் கோவில்....
உள்ளே சென்றதும் மூவரும் மனம் உருகி தென்றல் கிடைக்கு வேண்டி கொண்டனர்
சித்ராவும் ராமுவும் கண்ணீர் மல்க தன் மகளுக்காக வேண்டி கொண்டிருந்தனர்....
தீபாராதனையுடன் விநாயகர் அவர்களுக்கு காட்சி அளித்தார்...
கோவிலில் இருந்து வெளியே வந்து காரில் ஏற போகும் போது, இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்ததை கவனித்தனர்...
"பாவம் ரொம்ப சின்ன பொண்ணா தான் இருக்கு , வண்டிகாரனுங்க வர வர எப்படி தான் வண்டியோட்டிட்டு போறாங்கனே தெரியல" என பேசிக்கொண்டே வர,
சித்ரா அந்த பெண்களை நிறுத்தி "ஏன் மா என்னாச்சிமா என்ன பிரச்சனைனு கேட்க , அந்த பெண்மணி ஒன்னும் இல்லமா , ஒரு ஆக்ஸிடெண்ட் ஒரு வண்டிக்காரன் ஒரு பொண்ண இடிச்சி போட்டுட்டு போய்ட்டான்" என்றனர்...
கிரிஷ் உடனே 'அந்த பொண்ண பாத்திங்களா? எப்படி இருந்தா? என கேட்க ,
"இல்லப்பா, முகமெல்லாம் பாக்கல பொண்ணு சிவப்பு கலர்ல சுடிதார் போட்டு இருந்துச்சி அவ்வளவு தான் தெரியும் " என கூறினர்..
அவர்கள் சொன்னவுடன் கிரிஷ் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது....
"அத்தை, காலைல தென்றல் சிவப்பு கலர் சுடிதார் தான் போட்டிருந்தா என நா தழுதழுக்க கூற,
"" ஐய்யோ""என கதறினால் சித்ரா,,,
கிரிஷ் அந்த பெண்களிடம், 'அந்த ஆக்ஸிடெண்ட் எங்கக்கா நடந்துச்சி என கேட்க,
தோ அந்த மெயின் ரோட்ல தான் தம்பி, என கூறினர்......
மூவரும் அந்த இடத்தை நோக்கி ஓடினர்...
அந்த பிரதான சாலையில் தலையில் அடிப்பட்டு மயக்க நிலையில் கிடந்தாள் தென்றல்....
ஓடி வந்த அவர்கள் கூடியிருக்கும் கூட்டத்தை விளக்கிக் கொண்டு உள்ளே வந்தனர்....
தென்றலின் கோலத்தைக் கண்டு மூவரும் பித்து பிடித்தது போல கதறினர்....
கிரிஷ் அவளை அள்ளி மடியில் போட்டுக் கொண்டு கதறினான்..
கூட்டத்திலிருந்தவர்கள் யாரோ ஆம்புலன்சிருக்கு சொல்லி இருந்ததில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது....
தென்றலை ஆம்புலன்சில் ஏற்றும் போது மூவருக்கும் அவர்கள் உயிர் அவர்களிடத்தில் இல்லை....
ஏன்னா மூனு பேரும் அவங்க உயிர நம்ம தென்றல் மேல தான வச்சிருக்காங்க