டீசர்
"ஓட்டம் இன்னும் முடிக்கவில்லை போல மிஸஸ் அ....." என்று இழுக்க
அவள் முகம் வெளிறி உடல் வேர்வை யில் நனைந்தது. ஏதோ நினைவுகள் சிக்கி கொண்டு தவித்தது பெண்ணுள்ளம்.
உடனே அவ்விடத்தை விட்டு போக சொல்லி மனம் உந்த கால்கள் அதை செயலாற்ற மறந்தது போல வேரோடி நின்றன.
" என்ன மகளே வாழை இலை வெட்டேலையோ, நான்தான் சொன்னனே நான் வெட்டுவன் எண்டு........ " என்று சொல்லிய வண்ணம் வந்த குமாரி அவளின் பதற்ற நிலை பார்த்து ஆதரவாக அணைத்து, "என்னாயிற்று மகள் , என்ன செய்யுது " என்று அவள் முகம் வருட சுய நினைவுக்கு வந்தவள் நாக்கு வறண்டது.
அவள் தேவை அறிந்து அவள் முன்னே நீண்ட வலிமயான கரங்கள் தண்ணீர் கிளாசை நீட்டின.
***************************************
"சோ"?
" நா....ன் .. வர..... வில்லை...... உங்கள் வீட்டுக்கு " என்று வாய் தந்தியடிக்க அவன் முகம் பார்க்காமல் சொல்ல
"ஓகே. அப்போ என் குழந்தை... "என அவள் ஏழு மாத வயிற்றில் பார்வை பதித்தான் அழுத்தத்துடன்.அவன் அழுத்தமான குரலில் அடக்கப்பட்ட சினம் அவளுக்கு புரிந்தது.வயிற்றை நடுங்கும் கரங்கள் பற்றியவாறு"இது ஒன்றும் உங்கள் குழந்தை இ....."
அதற்கு மேல் பேச முடியாது மயக்கம் ஆட்கொண்டது அவளை இரத்தத்தின் பாய்ச்சலில்.