எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாலையில் பால் நிலா (கருத்து திரி)

NNK-15

Moderator
நைஸ் ஸ்டோரி... ❤️
ஹாப்பி எண்டிங்... 😀

நந்தா காதல் சூப்பர் 🥰 விடாம துரத்தி கடைசில காதலை சக்ஸஸ் பண்ணிட்டான்.... எத்தனை வருஷம் ஆனாலும் எவ்ளோ தூரம் போனாலும் மாறாத நந்தனோட காதல் அழகு... 💕

சரண்யா கண்மூடித்தனமா நந்தனை வெறுத்தாலும் நம்பிக்கையே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கல்யாணத்துக்கு பிறகு நந்தனோட காதலை உணர்ந்து காதலிக்கிறது அருமை... ❣️

சஞ்சய் நல்ல நட்பு.... 💛
நந்தன் அம்மா சூப்பர்... 🙂

All the best for the competition sis 💐💐💐💐💐💐
நன்றி சகோ..செம ஹேப்பியா இருக்கு.. அழகான விமர்சனம்.. நன்றி.
 

NNK-15

Moderator
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK_15 பாலையில் பால் நிலா எனது பார்வையில். நந்தன் மருத்துவ மாணவன் தனது கல்லூரி வளாகத்தில் உளவியல் மாணவியாக புதிதாக சேர்ந்த சரண்யா மீது காதல் வருகிறது. காதலின் காரணமாக அவள் பின்னால் சுற்றுவதால் சரண்யாவிற்கு மத்திய தர குடும்பத்தில் காதல் பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்று அவனைத் தவிர்ப்பதுடன் வெறுக்கவும் செய்கிறாள். தனது காதலில் தீவிரமாக இருக்கும் நந்தன் தன் படிப்பை முன்னிட்டும் அவளை ஒரு நல்ல சூழலில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தும் மேல் படிப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வருகிறான்.
அவன் வேலை செய்யும் மருத்துவ மனையிலேயே மனநல துறையில் பணியாற்றுகிறாள் சரண்யா. சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவருக்கும் பெரியோர்களால் ஏற்படுத்தப்படும் திருமணமாக திருமணத்தை நடத்திக் கொள்ளும் நந்தன் அவளை விட்டு பிரிந்து செல்கிறான். எதனால் அந்தப் பிரிவு ஏற்படுகிறது அந்தப் பிரிவு நிரந்தரமாகிறதா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். நந்தனின் காதல் ஈர்க்கிறது. ஆனால் சரண்யாவிற்கு அந்த அளவு வெறுப்பு ஏன் என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
திருமணத்திற்கு முன் வரும் நிகழ்வுகள் அதிகமாகவும் திருமணத்திற்கு பிறகு சட்டென்று நிறைவு பெற்ற உணர்வு ஏற்படுகிறது. இரண்டும் சமநிலையில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வாழ்த்துகள்.
அடுத்த கதையில் சரி பண்ணிட்டேன் அதையும் வாசிக்க.. தேன் சிந்தும் காதல் பூஞ்சோலை.. படிச்சிட்டு சொல்லுங்க ரொம்ப நன்றி சித்துக்கா..
 

NNK-15

Moderator
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK15
பாலையில் பால்நிலா
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
நந்தா.. கல்லூரியில் மருத்துவத் துறையில் படிக்கும் இவனுக்கு பார்த்த நிமிடத்தில் இருந்தே காதல் அதே கல்லூரியில் படிக்கும் சைக்காலஜி மாணவியான சரண்யாவின் மீது, புதிதாக கல்லூரியில் சேர்ந்தவளுக்கு உடனே ஒருவன் காதல் என கூறிக்கொண்டு இவள் பின்னால் வருவதை வெறுக்கும் அவள், அவனிடம் கோபத்துடனே நடந்து கொள்கிறாள் இவனைச் சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருப்பதைக் கண்டு, இவனை தப்பானவன் ஆகவும் பொறுக்கியாகவும் நினைத்துக் கொள்கிறாள்.

அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் இவளுக்கு அவன் செய்யும் நல்லவைகள் அனைத்தும் தவறாகவும் பொறுக்கித்தனமாகவுமே தெரிகிறது.. இதனால் அவனை இக்கட்டிலும் மாட்டி விடுகிறாள், காவல்துறைக்கும் கல்லூரியின் முதல்வர் வரைக்கும் செல்லும் இவனுக்கு இவனின் நல்ல பெயரால் வார்னிங்கோடு அனுப்பி வைக்கப்படுகிறான்.. இதனால் அவளின் மீது கோபம் வந்தாலும் வெறுக்க முடியவில்லை அவனுக்கு. நண்பன் சஞ்சயின் சொல்படி சரண்யாவிடம் சென்று தன்னால் அவளுக்கு எந்த தொல்லையும் வராது என்பதை தெளிவுபடுத்தி ஆனால் மனைவி என்ற ஸ்தானத்தில் அவள் மட்டுமே என்பதையும் அவளுக்கு உரைத்து விட்டே வருகிறான்.
கொண்ட காதலில் வெற்றி பெற்றானா? சரண்யாவிற்கு இவனின் மீது இருந்த அபிப்பிராயம் மாறியதா? என்பது கதையில்..
சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰💐🌹
Thread 'பாலையில் பால் நிலா (கதை திரி)'
தேங்க்யூ கா.. நன்றி அழகான விமர்சனம்..
 
Top