எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன் விமர்சனம்

நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK29ன் உயிர் காற்றாய் உனை ஏற்றேன் எனது பார்வையில். சாருமதி கோமதி பாட்டியின் வளர்ப்பு பாட்டி மீது மிகவும் பிரியம் வைத்திருப்பவள். சாருவின் அண்ணன் அரவிந்த்திற்கு நிச்சயம் செய்த பெண் வந்தனாவின் அண்ணன் தேவேந்திரனின் பொறுப்பான நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட அவளின் குடும்பம் சாருமதிக்கு தேவாவை திருமணம் செய்ய அவர்கள் வீட்டில் கேட்கிறார்கள். அண்ணன் திருமணம் மூலம் வரும் வரன் என்ற மனச் சுணக்கம் இருந்தாலும் இருவரும் பேசிப் பார்த்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.

இரு இணைகளின் திருமணம் நடக்கிறது. அப்பா இல்லாத வந்தனாவிற்கு சாருவிற்கு பிறந்த வீட்டில் இருக்கும் செல்வாக்கு மேல் பொறாமையும், சாருவிற்கு அண்ணன் திருமணத்தினால் தான் தனக்கு திருமணம் முடிவு செய்தார்கள் மாப்பிள்ளை விருப்பத்தின் அடிப்படையில் இல்லாமல் கட்டாயத் திருமணம் என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்கிறது.

இருவரின் உள்மன எண்ணங்களால் சிறு பிரச்சினைகள் வந்தாலும் தேவாவின் பொறுப்பான நடவடிக்கைகளால், அவன் அம்மா செல்வராணியின் அனுசரணை மற்றும் நியாயமான நடவடிக்கைகளால் சமாளித்து சுமூகமாக வாழ்க்கை செல்கிறது.

கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்வு முழுமைக்கும் காதல் இருக்கும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். பாட்டி கோமதி அருமையான கதாபாத்திரம். உறவு எப்பொழுதும் நிலைக்க புரிந்துணர்வு முக்கியம் என்பதை இயல்பான காட்சிகள் மூலம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
 
NNK-29

Moderator

அருமையான விமர்சனம்😍😍😍😍 ரொம்ப நன்றி dear❤️❤️❤️
 
Top