chitrasaraswathi
Member
நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK07 ன் ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் எனது பார்வையில். பல்லவி தன் பெற்றோரை இழந்து தனிமை என்று சொல்ல முடியாது அக்காவின் தோழி மற்றும் மனநல மருத்துவரான சுவாதியின் வீட்டில் இருக்கும் அவளை மனமாற்றத்திற்காக அவள் அக்கா சுருதியின் இரண்டாம் குழந்தை பேறுகால துணையாக இருக்க சுவிட்சர்லாந்து செல்கிறாள்.
சுவிட்சர்லாந்தில் அவள் சந்திக்கும் அக்கா குடும்ப நண்பர் ரிஷி அவள் மீது காதல் கொள்கிறான். விபத்தில் பெற்றோருடன் இருந்த பல்லவி தன் உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டதை அக்காவின் நலம் கருதி மறைத்தாலும் ரிஷி அவளைப் பற்றியும் அவளது தடைபட்ட திருமணம் பற்றியும் தெரிந்துக் கொண்டும் அவள் மீது உள்ள காதலால் திருமணம் செய்து கொள்ள கேட்கிறான்.
பல்லவி தன் மனநிலையை சரிசெய்து கொண்டாளா, தான் முதல் காதல் கொண்ட ஆகாஷ் தன்னை விரும்பிய ரிஷி இவர்களில் ஒருவரை திருமணம் செய்தாளா இல்லை வேறு முடிவு எடுத்தாளா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். இலங்கை எழுத்தாளர் கதைக் களத்தையும் இந்தியா இல்லாமல் இலங்கையையே தேர்வு செய்திருக்கலாம். மற்றபடி குறைகள் ஏதும் எனக்கு இல்லை. நல்ல சரளமான எழுத்து நடையுடன் சுவிட்சர்லாந்தை சிறிய அளவில் அறிமுகம் செய்திருந்தது நன்றாக இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துகள் மா.