Shalini shalu
Moderator
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்னும் பழமொழியினை துவக்கத்திலிருந்து முடிவு வரை எந்த ஒரு பிசிறும் இல்லாமல் நிரூபித்திருக்கிறது “நீ இல்லா இடமும் எனக்கேது?” என்ற கதை. கதையில் காதலுக்கு கிடைக்கப் பெறும் முக்கியத்துவத்தை விடக் குடும்பத்திற்கும், அதில் நிறைந்திருக்கும் ஒற்றுமைக்கும், அன்பான பழக்க வழக்கங்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். அதுபோல தோழமையான பெற்றோர் கிடைத்தால் எத்தகைய முயற்சியிலும் வெற்றி கண்டு இன்பத்தில் திளைக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கதையில் உள்ள கதாபாத்திரங்கள்.
குடும்பம் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் கலகலக்கிறது ஓர் அழகான இளைஞர் பட்டாளம்.
பெரும்பாலும் மூவர் கொண்ட கூட்டணி. கதாநாயகியும் அவள் தோழர்களும்,கதாநாயகனும் அவனின் தோழர்களும், மூன்று பேராக வலம் வர அது போலவே கதாநாயகனின் வீட்டிலும் உடன் பிறந்தோர் மூவராக வந்து கதையை சிறப்பித்து இருக்கிறார்கள். அன்பும், ஒற்றுமையும், பாசமும், நேசமும் குடும்பத்திற்கு மட்டுமல்ல தோழமைக்குள்ளும் தேவை என்பதை அழகாக எடுத்துரைக்கிறார் எழுத்தாளர். பொறாமை, பகை என்பது தங்கள் அகராதியிலேயே இல்லை என்பதை உணர்த்தி ஒருவருக்கொருவர் ஆதரவாக திகழும் நண்பர் பட்டாளத்தை சுற்றிய அசத்தலான நேர்மறையான கதை.
அதையும் தாண்டி சற்று வித்தியாசமாக யோசித்திருக்கிறார் எழுத்தாளர். நாவல்கள் என வந்தாலே கம்பெனியில் காதல், கல்லூரியில் காதல், கண்டதும் காதல் எனப் பல்வேறு வகையாய் கதைகள் பிரிந்தாலும் இது சற்று வித்தியாசமான முயற்சியாய் எழுத்து உலகையே சுற்றி வலம் வரும் கதையாய் அமைந்திருக்கிறது. உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்தும் எழுத்தால் இணையும் எழுத்தாளர்களைச் சுற்றிய கதைக்களம்.. ஒரு தளம் எவ்வாறு இயங்குகிறது, என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும், என்னென்ன வேலைகள் நடைபெறுகிறது, ஒரு போட்டி தொடர் நடத்த வேண்டும் என்றால் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என அனைத்தையும் தளத்தின் உரிமையாளர்களாகவும், எழுத்தாளராகவும் இரு வேறு கதாபாத்திரங்களை கொண்டு விளக்கியது மிகவும் அருமை.
அழகான முயற்சி. அருமையான ஃபீல் குட் ஸ்டோரி
- அருள்மொழி காதலி