எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைகை வேட்டையும் மதன காதையும்- கதைத்திரி

Status
Not open for further replies.
காதை_01




“ஏன்டா உசுர எடுக்குறீங்க? நானே பீதில இருக்கேன்” என்று மூக்கை உறிஞ்சியபடி ஜான் கெஞ்ச,




“இந்தாடி.. மிந்தாநேத்து பார்த்த பேய் படத்துக்கு இன்னுமா நீ பீதில இருக்க?” என்று விஷ்வேஷ் எகுறினான்.



“அடேய்.. அர்த்த ராத்திரிடா.. உங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவில்லையா?” என்று ஜான் கூற,




“என்னமோ புதுசா வந்து உக்காந்துருக்குற போல ஸீன் போடாத கேர்ள்” என்றபடி துருவன் வந்தமர்ந்தான்.



“அதான? என்ன ஜான்? இந்த முறை நம்ம வட்டம் எவ்வளவு பெருசாயிருக்கு.. நாம அதைச் செலிபிரேட் பண்ண வேணாமா?” என்று இளநகை கூற,




“அப்படி சொல்லுடா” என்று துருவன் தன்னவளுக்கு ஒத்து ஊதினான்.



அவனை ஏற இறங்க பார்த்தவள், “அகாவை மட்டும் வுட்டுட்டீங்க?” என்று கூற,




“அவ பிரெக்னென்டா இருக்காடி” என்று மதி கூறினான்.



“இதுலாம் அநியாயம்” என்று ஜான் கூற, “நீயும் பிரெக்னென்டா இருந்தா வுட்டுருப்போம்” என்று விஷ் கூறியது தான் தாமதம்,




“அர்த்த ராத்திரி இப்புடி புருஷன் பொண்டாட்டிய புடிச்சு வச்சுகிட்டா எங்கேந்துடா மாசமாவுறது” என்று பாய்ந்தாள்.



லஜ்ஜையே இல்லாமல் அவள் பேசியதில் மதி தான் எப்போதும் போல் வெட்கப்பட்டு “அடியே..” என்க,




“யோ.. இதுல உனக்கு வெக்கம் வேறயா? தூக்கம் வருது மதி” என்றாள்.



இவர்களது களவரத்திற்குள் தனது ஒரு வயது மகன் விஜயனை தூங்க வைத்துவிட்ட அமிர்தப்ரியா வந்தமற, தனது ஐந்து மாத சூழ் தாங்கிய வயிற்றை ஒரு கையிலும், அகர்ணன் கரத்தை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தாள் அகநகை செல்வி.



“ஏ கேர்ள்.. உன்னைத் தூங்க தான சொன்னோம்?” என்று ஜான் அதட்டலாய் கேட்க,




“மேடம் மதியம் நல்லா தூங்கிட்டாங்க. நீங்களாம் மாடில மாநாடு வேற போடுறதை பத்தி சொல்லிட்டீங்க.. தூக்கம் வருமா இவளுக்கு?” என்று மனையாளை செல்லமாய் முறைத்தபடி அகர்ணன் கூறவும்,




“சரி சரி.. வந்து சிட்டுங்க” என்று மதி கூறினான்.



ஜான்விகா, மதிமகிழன், அமிர்தப்ரியா, விஷ்வேஷ்வரன், அகநகை செல்வி, அகர்ணன், இளநகை செல்வி மற்றும் துருவன் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.



ஆம்! அவர்களது ஆஸ்தான மொட்டை மாடியில், அந்த மாயாஜால சீட்டுக்கட்டுடன்.



“ரொம்ப நாள் கழிச்சு எல்லாரும் இப்படி விளையாடுறோம்ல?” என்று அகநகை வினவ,



“ஆமா அகா.. நம்ம ஜான் தான் பிஸி.. மேடம் புருஷோட ஊர் சுத்த கிளம்பிட்டாங்க” என்று விஷ்வேஷ் கூறினான்.



“பொறுக்காதே.. நானே இருந்து இருந்து இப்பத்தான்டா அவனோட ஹனிமூன் போயிட்டு வந்தேன்.. அதுக்கு ஏன்டா வயிறு எரியுற? உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போவ வேண்டியது தானே?” என்று ஜான் கூறியபடி அந்தச் சீட்டுக்கட்டை அணைவருக்கும் போட்டாள்.



“ஹ்ம்.. எங்க ஜான்? இந்த விஜய வச்சுகிட்டு வீட்டு வாசல்படிய தாண்டுறதே போராட்டமா இருக்குது.. சரியான அப்பா தூக்கி.. அவரை வேலைக்கு அனுப்புறதே போராட்டம் தான்.. வண்டி சாவிய கையுல எடுத்துட்டாலே அப்பா அப்பானு கத்தி விறைக்குறான்” என்று அமிர்தப்ரியா கூற,




மனையாள் குரலில் இருக்கும் ஏக்கத்தில் அழகாய் சிரித்துக் கொண்ட விஷ்வேஷ், “நாளைக்கு தம்பியவும் தூக்கிட்டு பார்க் போயிட்டு வருவோம்டா அமி” என்றான்.



“ஆளாளுக்கு காதல் பயிறு வளர்த்துக் கடுப்பேத்துறானுங்களே..” என்று துருவன் முனுமுனுத்தது கேட்டு இளநகை பக்கென்று சிரிக்க,




“உனக்கு வேணும்னா நீயும் வளர்த்துவிடேன்டா” என்று அகா நக்கலாகக் கூறினாள்.



“அதுக்குலாம் ஒரு குடுப்பனா வேணும்டி” என்று அவன் பெருமூச்சுவிட,




“ஏன்டா இன்னும் உன் லவ்வ சொல்லாம இருக்க?” என மதி கேட்டே விட்டான்.



அதில் துருவன் திடுக்கிட்டு நோக்க, ‘துருவன் லவ் பண்றாங்களா?’ என்று இளநகை ஆச்சரியமாய் பார்த்தாள்.



அவளுக்குத் துருவன் பால் காதலெல்லாம் கிடையாது.. ஆனால் அக்காவின் தோழர்களுடன் அத்தனை நெருக்கம் என்பதால் புதியதோர் விடயம் அறிந்ததும் அதிர்ச்சியுற்றாள்.



“டேய்..” என்று துருவன் பல்லைக் கடிக்க,




‘ஆத்தீ…’ என்றுணர்ந்த மதி, “சாரி மை டியர் மச்சான்..” என்று பல்லிளித்தான்.



“உங்களயெல்லாம் வச்சுகிட்டு” என்று துருவன் பெரு மூச்சுவிட,




“ஆனா மதி கேட்ட கேள்வி தான் எனக்கும்” என்று அகர்ணன் தனது கையிலிருக்கும் சீட்டை ஆராய்ந்தபடியே கூறினான்.



“அகர்.. நீங்களுமா?” என்று அவன் கேட்க,




“அவர் கேட்குறதுல என்னடா தப்பிருக்கு? இதே கேள்விதான் எனக்குமே” என்று அகா கூறினாள்.



“ப்ச்.. அவ படிச்சு முடிக்கட்டும்.. டிஸ்டர்ப் பண்ண விரும்பலை” என்று அவன் முனுமுனுக்க,




“காதல சொன்னாளே அவளுக்கு டிஸ்டர்பென்ஸ்னு ஏன்டா நினைக்குற? அடுத்து ஒரு டிகிரி பண்ணனும்னு வந்து நின்னா அப்பவும் இதேதான் சொல்லுவியா?” என்று விஷ் கேட்டான்.



இவர்கள் பேச்சு வார்த்தையை மனதில் போட்டுக் கொண்டாளும், இளநகை ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.



அவளை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தவன், “அவளுக்காக வெயிட் பண்றதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று கூற,




பாவையும் அவன் பார்வையை உணர்ந்தாளோ? மெல்ல நிமிர்ந்து தன்னை ஆழமாய் பார்ப்பவனின் பார்வையை சந்தித்தாள்.



அந்த ஒற்றை பார்வை அவளுள் ஊடுறுவி எதையெதையோ உணர்த்த முயற்சித்து உணர்த்த இயலாத தவிப்புடன் திரும்பிட, ஆடவன் தன் சிரம் தாழ்த்திக் கொண்டான்.



'இ..இப்ப எதுக்கு இப்படி பார்த்தாங்க?’ என்று மனதில் தடுமாறி நின்றவள் தன்னை வெகுப் பிரயத்தனப்பட்டு மீட்க,




“சரிசரி.. எதும் படத்துக்குப் போலாமா நாளைக்கு ஈவ்னிங்?” என்று அமிர்தா கேட்டாள்.



“சும்மா கசகசனு லவ் படத்துக்கே கூட்டு போவாதீங்கடா.. ஜுராசிக் பார்க் மாதிரி எதாச்சும் திரில்லிங்கா அட்வென்சரியஸான படத்துக்கா கூட்டிட்டு போங்க” என்று ஜான் கூற,




“உன்னையலாம் எப்புட்ரீ நான் லவ் பண்ணேன்?” என்று மதி ஆச்சரியமாய் கேட்டான்.



“மதியண்ணா.. ரொம்ப லேட்.. கல்யாணமே பண்ணியாச்சு.. இனிமே நோ ஆப்ஷன்” என்று இளநகை கூறி சிரிக்க,




“அதைச் சொல்லுடா.. ரிட்டர்ன் போடுற ஆப்ஷன் கூடக் கிடையாது” என்றான்.



“ஹலோ.. நாங்க என்ன சொமேடோல ஆடர் பண்ண பக்கெட் பிரியாணியா ரிட்டர்ன் போடுறதுக்கு?” என்று ஜான் இடுப்பில் கை ஊன்றிக் கோபமாய் கேட்க,




“இல்லடா தங்கம்.. நீ ஸ்விக்கீல ஆர்டர் பண்ண பழைய சோறு” என்றான்.



மீண்டும் சிரிப்பலை பெறுக, “சரி படத்துக்குப் போலாமா?” என்று மீண்டும் ப்ரியா கேட்டாள்.




“சரிடி.. டிக்கெட் கிடைக்குதா பார்ப்போம்” என்று விஷ் கூற,




“டேய் அட்வென்சர் மூவி..” என்று ஜான் கூறினாள்.



“என்ன ஜான் எதும் புதையல் தேடல்ல இறங்க போறியா?” என்று அகா கேட்க,




“நல்லா இருக்கும்ல? நாம எல்லாரும் சேர்ந்து தேடுவோம்..” என்று விஷ் கூறினான்.



“புதுசா வாங்குன கூலிங்க கிளாஸயே ரூமுக்குள்ள வச்சுட்டு எங்க வச்சோம்னு தெரியாம அந்த தேடு தேடுன.. நீ புதையல் தேட போறியா?” என்று அகர்ணன் வினவ,




“இமோஷனல் டேமேஜ்..” என்றபடி தலையில் கைகள் மடக்கி குத்திக் கொண்டான்.



“எனக்கு இந்த அட்வென்சரஸ் மூவீஸ் ரொம்ப பிடிக்கும்.. நான் கூட யோசிச்சுருக்கேன்.. நாம க்ரூப்பா நிறையா பேர் சேர்ந்து எதாவது புதையல் வேட்டைல இறங்கினா சூப்பரா இருக்கும்னு.. ஏ! உங்களுக்கு ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல செயின், மோதிரம் இப்படி எதாவது ஒளிச்சு வச்சு அது கண்டிபிடிக்க நிறையா க்ளூ எழுதி அங்க அங்க ஒளிச்சு வச்சு நம்ம விளையாடுவோம்ல?” என்று இளா கேட்க,




“ஆமா இளா.. அதுலாம் செம்ம ஜாலியா இருக்கும்” என்று அகா உற்சாகமாய் கூறினாள்.



“ஹ்ம்.. அப்படி எதும் நிஜமாவே தேடி போற போல இருந்தா நல்லா இருக்கும். எக்ஸைடிங்கா.. இந்தச் வீ.ஜீ.பீ ஸ்னோ வேர்ள்ட் இருக்குற போல இதுமாதிரி எதும் இன்டோர்‌ கேம் ஸ்டார்ட் பண்ணா நல்லா இருக்கும்” என்று துருவன் கூற,




“ஆமால்ல?” என்று இளா உற்சாகமாய் அவனைப் பார்த்தாள்.



அவர்கள் கையில் இருந்த மாயாஜால சீட்டுகள் அவர்கள் பேச்சிற்கு ஏற்ப அதன் மாயாஜலத்தை சிறப்பாகச் செய்து ‘ததாஸ்து…’ என்றது.



இரவு வெகுநேரம் ஆனதும், “அகா.. டயர்டா இருக்குனா போய்த் தூங்குடி” என்று ஜான் கூற,




“ஏ.. எல்லாருமே போலாம்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு..” என்று விஷ் கூறினான்.



“ஹ்ம்.. ஆமாபா.. எனக்குத் தூக்கமா வருது” என்று இளா கூற,




“சரி வாங்க கிளம்புவோம்” என்று துருவன் கூறினான்.



யாவரும் விடைபெற்றுக் கொண்டு அவரவர் அறைக்குச் செல்ல, படுக்கும் முன் தங்கள் கரங்களைப் பார்த்தோர், ‘என்ன ஜிகினாவா இருக்கு?’ என்று அதைக் கழுவிவிட்டு வந்து படுத்தனர்.



—---------------------



மறுநாள் காலை, சூரியன் முகத்தில் சுரீரென அடிக்க, அதில் சற்றே எரிச்சலுற்ற இளநகை, பக்கவாட்டாகத் திரும்பிப் படுத்தாள்.




படுத்தவள் உடல் கரடுமுரடான பகுதியில் குத்தப்பட, “ப்ச்.. என்னதிது?” என்று மீண்டும் திரும்பியவள் இடையில் நறுக்கென்று ஏதோ குத்திய உணர்வு..



“ஸ்ஸ் ஆ..” என்று கண்களைத் திறக்க அவள் சிரமப்பட, பாவையை அணைத்து ஏதோ ஓர் வலிமையான பொருள் இருப்பதைப் போன்று உணர்ந்தாள்.



கண்களை வந்து தாக்கிய வெளிச்சத்தினால் சிரமப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு கண் திறந்தவள் முகத்திற்கு வெகு அருகில் துருவனின் முகமிருக்க, அதில் மூச்சுவிட மறந்த நிலையில் பதறிப் போனாள்.



“அம்மே..” என்று அவள் அலற, அதில் பதறிக் கொண்டு முழித்த துருவன் அவளை அணைத்து படுத்திருப்பதில் மேலும் பதறி விலகினான்.



மீண்டும் அவனுடலில் ஏதோ குத்த, “ஆ..” என்றபடி எழுந்தவன் அப்போதே சுற்றி முற்றி தன் பார்வையை சுழற்றினான்.



அடர்ந்த காட்டுப்பகுதிக்கு நடுவில் தான் இருப்பதை உணர்ந்தவன் இளநகையைப் பார்க்க,




பீதியுடன் எழுந்து நின்றவள், “நம்ம எங்க இருக்கோம்?” எனும்போதே, “அய்யோ அம்மே பேயீஈஈஈ” என்று உச்சகட்ட குரலில் ஜான் கத்துவது கேட்டது.



அவள் சத்தத்தில் பதறிப்போன இளா துருவன் கரங்களைப் பற்றிக் கொள்ள, அதில் உள்ளுக்குள் சில்லென்று உணர்ந்தபோதும் அவள் தோளைத் தட்டிக் கொடுத்தவன் அவளுடன் குரல் வந்த திசைக்குச் சென்றான்.



ஜான் வாயைப் பொத்தி முறைத்த மதி, “அது வெறும் பாறைடி பைத்தியமே” என்க,




“டேய் மாங்கா.. என்னாச்சு? உன் மைக் போச்சா?” என்று கத்தி பேசினாள்‌.



தன் காதுகளைப் பொத்திக் கொண்ட மதி, “ஏன்டி கத்துற?” என்க,




“என்னடா பேசுற? சத்தமா பேசுடா” என்று மேலும் கத்தினாள்‌.



அதற்குள் அவள் சத்தம் கேட்ட மற்றவர்களும் அங்கே கூடிவிட, “ஆ.. ஜான் காது வலிக்குது” என்று விஷ் அவள் சத்தத்தில் கடுப்போடு கத்தினான்.



அவள் ஏதும் கேட்காமல் மேலும் கத்த, அவள் வாயைக் கப்பென்று மூடிய துரு, “எங்களுக்கு மைக் நல்லா வேலை செய்யுது உனக்குத் தான் காது கேட்கலை” என்று சைகை செய்ய,




“அய்யயோ.. என் காது போச்சா?” என்று மீண்டும் கத்தினாள்‌.



அதில் அதிர்ந்து போன துருவன் மற்றவர்களைப் பார்க்க, “நான் பேசட்டுமா?” என்ற ஒரு குரல் வானத்திலிருந்து ஒலித்தது.



அனைவரும் மாவீரன் படம் சிவகார்த்திகேயன் போல வானத்தைப் பார்க்க, பிரகாசமான ஒளியுடன் கனீரென்று பேசியது அந்த அசரீரி!



அனைவரும் ஆச்சரியமாய் மேலே பார்ப்பதைப் பார்த்த ஜான் தானும் நிமிர்ந்து, “என்னாத்தடா பாக்குறீங்க?” என்று கத்த,




“அய்யோ.. இவ கத்துறதுல என் காது ஜவ்வு கிளிஞ்சுடும் போலயே” என்று விஷ் தன் காதுகளைப் பொத்திக் கொண்டான்.



“அடடா.. உங்களோட அக்கப்போரா இருக்கு.. ஒரு அசரீரிய பேச விடுறீங்களா? சரி இருங்க” என்ற அந்த ஒளி சொடக்கிட, அனைவரும் வித்தியாசமாய் உணர்ந்தனர்.



ஜான் தன் காதுகளைத் தொட்டுப் பார்த்து, “ஏ குறுவி சத்தம்.. எனக்குக் காது கேட்குது” என்க,




“எல்லாம் ஒரு பத்து நிமிஷத்துக்கு தான்” என்று அசரீரி கூறியது.



யாவரும் மேலே நோக்க, “இது ஒரு சுவாரஸ்யமான புதையல் வேட்டை. புதையலை கண்டுபிடிச்சா உங்க உலகத்துக்குப் போயிடுவீங்க.. இல்லைனா காலம் பூரம் இங்க தான் இருக்கனும்” என்று அசரீரி கூற,




“என்னாதூ.. மறுபடியும் மேஜிக்கா?” என்று நம் தோழர்கள் நால்வரும் கத்தினர்.

-தொடரும்...



உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்க தங்கம்ஸ் 🥰😍
 

Mathykarthy

Well-known member
Super start 🤩❤️
நண்பர்கள் அட்டகாசம் ஆரம்பம் 🥰

புதையல் வேட்டை யா... 😄

ஜான் த்ரில்லிங்கா அட்வஞ்ச்சரஸ் வேணுமா உனக்கு இனி காட்டுக்குள்ள காது கேட்காம சுத்திட்டு இருக்கப் போற....🤭🤭🤭🤭

இவ காதை பஞ்சர் பண்ணினதுக்கு பதிலா வாயை அடைச்சுருந்தா மதியாவது நிம்மதியா இருப்பான் 🤣🤣🤣🤪🤪🤪🤪🤪
 
Super start 🤩❤️
நண்பர்கள் அட்டகாசம் ஆரம்பம் 🥰

புதையல் வேட்டை யா... 😄

ஜான் த்ரில்லிங்கா அட்வஞ்ச்சரஸ் வேணுமா உனக்கு இனி காட்டுக்குள்ள காது கேட்காம சுத்திட்டு இருக்கப் போற....🤭🤭🤭🤭

இவ காதை பஞ்சர் பண்ணினதுக்கு பதிலா வாயை அடைச்சுருந்தா மதியாவது நிம்மதியா இருப்பான் 🤣🤣🤣🤪🤪🤪🤪🤪
நன்றி க்கா 😍😍

ஆமா க்கா 🤣🤣 காது கேட்காம அவ பண்ற அட்டகாசத்தை பாருங்க 🤣

இதே டயலாக் மதி சொல்வான்🤣🤣
 

santhinagaraj

Well-known member
ஜான் ட்ரில்லிங்கா அட்வென்ஞ்சர்ஸ் வேணும்னு கேட்டல்ல இப்ப காட்டுக்குள்ள காது கேட்காம சுத்தி வாழ்ந்துட்டு வா 😂😂

செம்ம ஆரம்பம் சூப்பர் 👌👌👌👌
 
நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து செய்யப் போற அட்டகாசத்தை படிக்க ரெடி 😂😂😂
அட்டகாசத்துக்கு நம்ம கூட்டத்துல பஞ்சம் இருக்குமா🤭
 
ஜான் ட்ரில்லிங்கா அட்வென்ஞ்சர்ஸ் வேணும்னு கேட்டல்ல இப்ப காட்டுக்குள்ள காது கேட்காம சுத்தி வாழ்ந்துட்டு வா 😂😂

செம்ம ஆரம்பம் சூப்பர் 👌👌👌👌
ஜான் படம் தான் கேட்டா.. இளா தான் நிஜமாவே கேட்டா க்கா 😂😂😂 காட்டுக்குள்ள இவங்க போடும் ஆட்டத்தைப் ப பாருங்க 🤭🤭
 

காதை_02


அசரீரி கூறியதை ஜீரனிக்கவே அனைவருக்கும் சில நிமிடங்கள் பிடிக்க,


சட்டென இளா புறம் திரும்பிய மதி, “இந்தாம்மா இளா.. நீதான நேத்து அட்வென்சர் பண்ண போகனும் புதையல் கண்டுபிடிக்கனும்னு சொன்னது?” என்று கேட்டான்.


“ஏ அண்ணா.. நான் சும்மா விளையாட்டா தானே சொன்னேன்” என்று இளா பதற,


“விளையாட்டு வினையாகிடுச்சு போலயே” என்று ப்ரியா கூறினாள்.


“சரி கேளுங்க.. புதையல் கண்டுபிடிக்குறதுக்கு உங்களுக்கு சில க்ளூஸ் கிடைக்கும். இப்ப உங்க கைக்கு ஒரு தடயம் வந்தா அது அடுத்த தடயம் எங்க இருக்கு அப்படிங்குறதுக்கான துப்பு அதுல இருக்கும். எல்லா துப்பையும் ஒழுங்கா கண்டுபிடிச்சா புதையல் எங்க இருக்குனு கண்டுபிடிச்சுடலாம். இதுல உங்க எல்லாருக்கும் ஒரு எக்ஸ்ட்ரா பவரும், ஒரு லாஸ் ஆஃப் பவரும் இருக்கும்” என்று அசரீரி கூற,


“அய்யயோ.. அப்ப எனக்குக் காது கேக்காதது தான் லாஸ் ஆஃப் பவரா?” என்று ஜான் அலறினாள்.


“அறிவாளி பொண்ணு..” என்ற அசரீரி, “ஜான்விகாவுக்கான சக்தி கண் பார்வை தான். எவ்வளவு தூரத்துல இருக்குறதையும் சுலபா பார்க்க முடியும், ஆனா காது கேட்காது.


மதிமகிழனுக்கு விலங்குகளோட பாஷை புரியும், பதில் பேச முடியும். ஆனா தண்ணீல கண்டம்.


அகநகை செல்விக்கு புத்தி கூர்மை அதிகமா செயல்படும், ஆனா பேச முடியாது.


அகர்ணனுக்கு மோப்ப சக்தி அதிகம், ஆனா எழுத்து வடிவங்கள் எல்லாமே மறந்து போயிடும். அதவாது வாசிக்கவோ எழுதவோ வராது.


விஷ்வேஷ்வரனுக்கான பலம் பலவீனம் ரெண்டுமே காது கூர்மையா கேட்பது தான்.


அதேபோல அமிர்தப்ரியாவோட பலம்‌ பலவீனம் ரெண்டும், அவ என்ன சொன்னாலும் அது நடக்கும்.


ஆனா அதை இந்தத் தேடலோட ரூல்ஸுக்கு எதிரா பயன்படுத்த முடியாது.


துருவன் மற்றும் இளநகைக்கு எந்தப் பலமும் கிடையாது, பலவீனமும் கிடையாது.. ஆனா இங்க இந்தப் புதையல் வேட்டைல செயல்முறை எல்லாமே அவங்க தான் செய்யனும்” என்று அசரீரி கூறியது.


“உங்க எல்லாரையும் இந்த மாயாஜால உலகத்துக்கு வரவேற்குறேன்.. முதல் க்ளூ இந்தக் காட்டுல நீங்க சந்திக்கும் முதல் ஜீவன். உங்க ஆசைபடி விளையாடுங்க.. ஆல் தி பெஸ்ட். இன்னும் பத்து நிமிஷத்துல உங்க பலம் பலவீனம் உங்களுக்கு வந்துடும் அதுக்குள்ள ஏதாவது பேசனும்னா பேசிக்கோங்க” என்றுவிட்டு அசரீரி மறைய, யாவரும் பேயறைந்ததைப் போலிருந்தனர்.


“இதென்னடா நம்ம வாழ்க்கைல அடிக்கடி மேஜிக் வேலை காட்டுது” என்று அகா கூற,


“அடிக்கடியா?” என்று அகர்ணன் கேட்டான்.


தற்போது அகர்ணன், ப்ரியா மற்றும் இளநகை மட்டுமே அனைவரையும் புரியாமல் பார்க்க, “அடேய் சீக்கிரம் சொல்லி முடிங்கடா.. எனக்குக் காது கேட்காம போயிடும்.. எதும் முக்கியமா பேசுறதுனா பேசிடுங்க” என்று ஜான் அவசரப்படுத்தினாள்.


ஒரு பெருமூச்சு விட்ட அகா தங்களின் முதல் மாயாஜால வரலாற்றைக் கூற, மதி அந்த இரண்டாம் மாய நிகழ்வைக் கூறினான்.


“என்னடா என்னென்னமோ சொல்றீங்க? ஏ அவி.. கோவில்ல பார்த்து லவ் பண்ணேன்னு தானடி சொன்ன?” என்று அகர் ஆச்சரியமாய் வினவ,


“ஆமா.. அங்க நான் உங்களை ஃபர்ஸ்ட் கோவில்ல தான் மீட் பண்ணேன்” என்றவள் “காலம் வேறையா இருந்தாலும் என் காதல் உண்மை தான்” என்றாள்.


அவ்வரியை கூறும்போது அவள் கண்கள் லேசாகக் கலங்கிவிட, அதில் சிரித்தபடி அவளிடம் வந்தவன், “நீ பொய்யா காதலிச்சனு நான் சொல்லவே இல்லையே?” என்றபடி அவளை அணைக்க, “பதற வைக்குறீங்க அகர்” என்று தானும் அணைத்துக் கொண்டு கலங்கிய விழிகளை அவன் சட்டையில் துடைத்தாள்.


அவளை இலகுவாக இறுக அணைத்தவனுக்கு அப்போதே அந்த வித்தியாசம் தென்பட்டது.


“ஏ புள்ளைய எங்கடி?” என்று அவன் கூற, ஒட்டிய தன் வயிற்றைக் கண்டு அரண்டு போனாள்‌.


“அய்யோ சாரி கைஸ் சொல்ல மறந்துட்டேன்” என்று மீண்டும் ஜதக்கென்று குதித்த அசரீரீயை அனைவரும் அரண்டு போய் மேலே பார்த்தனர்.


“காட்டுல நிறையா இடையூறுகள் குதிக்குறது தாவுரதுனு ப்ராஸஸ் அதிகமா இருக்கும். அதனால தான் பேபிய எடுத்துட்டேன். போட்டி முடிஞ்சு போகும்போது திரும்ப வைத்துக்குள்ள வச்சு குடுத்துடுவேன்” என்று அந்த அசரீரீ கூற,


“அடிங்கு.. அதென்ன சந்தைல வாங்கின அரிசி மூட்டையாடா?” என்று இளநகை கத்தினாள்.


அதையெல்லாம் காதில் வாங்காத மானங்கெட்ட அசரீரீ மறைந்து போக, “அப்ப மதியண்ணா செத்துபோனதும் மேஜிக் தானா?” என்று ப்ரியா கேட்டாள்.


“அட அதெல்லாம் பெரிய கூத்துமா.. கொஞ்ச நாள் பேயா இருந்ததே அவ்வளவு கஷ்டமா இருந்தது.. இந்தப் பேயெல்லாம் எப்படித்தான் பேய் வேசம் போடுதோ” என்று அவன் கூற,


அவன் விலாவிலேயே குத்திய ஜான், “அதெல்லாம் ஒரிஜினல் பேய்.. நீ அப்பப் பார்ட் டைம் பேய்” என்றாள்.


“சரி சரி.. கன்பியூஷன் எல்லாம் முடிஞ்சுதா?” என்று துருவன் கேட்க,


“எனக்கும் உங்களுக்கும் மட்டும் ஏன் எதுவும் குடுக்கலை?” என்று இளநகை கேட்டாள்.


“இதுவொரு நல்ல கேள்வி” என்று விஷ்வேஷ் கூற,


“தெரியலை.. ஆனா நம்மதான் எல்லாம் செய்யனும்.. ஐ மீன்.. இப்ப க்ளூ கிடைச்சு அடுத்த க்ளூ எங்க இருக்குனு நாம தான் எடுக்கனும்” என்று துருவன் கூறினான்.


அவன் மனதில் நேற்று இளா சிறுவயது விளையாட்டுபற்றிக் கூறும்போது அவளோடு தானும் சென்று தேடுவதைப் போன்றும் இடையிடையே காதல் சில்மிஷம் புரிவது போன்றும் அவன் நினைத்துப் பார்த்தது வந்துபோனது.


“நேத்து கார்ட்ஸ் விளையாடிட்டு வந்தபிறகு கையெல்லாம் ஏதோ ஜிகினாவா இருந்ததுல? ஒருவேளை அதுல தான் ஏதும் மேஜிக் இருக்குமோ?” என்று ப்ரியா கேட்கத் தோழர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


ஆம்! ஒவ்வொரு முறையும் அந்த மாய சீட்டுகளைக் கொண்டு விளையாடியபோது அவர்கள் பேசியதுதான் மாயமாக நிகழ்ந்தன.. எனில் அதுதான் இந்த மாயத்தின் காரணமா? என்று நினைத்த நால்வரும், “ஏ அந்தக் கார்ட்ஸ் நம்ம காலேஜ் படிக்கும்போது ட்ரிப்பா ஏற்காடு போனப்ப அந்த மேஜிக் பண்ண தாத்தா கிட்ட தானே வாங்கினோம்?” என்று ஒன்றுபோலக் கூறினர்.


பெரிய ஒளி ஒன்று தோன்றி மறைய, அனைவரது உடைகளும் அந்தக் காட்டுப் பகுதியில் நடப்பதற்கு ஏற்றார் போல் ‘ட்ராக் அன்ட் டீ-ஷர்ட்'-ஆக மாறியது.


மீண்டும் அவரவருக்கான பலமும் பலவீனமும் வந்தது!


துருவனும் இளநகையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “இப்ப என்ன பண்றது?” என்று இளநகை வினவ,


“டேய்.. எனக்கு மறுபடியும் காது கேட்கலைடா.. சைகைல பேசுங்க” என்று ஜான் கத்தினாள்.


தன் காதுகளைப் பொத்திக் கொண்டு “ஆ..” என்று கத்திய விஷ்வேஷ்,


“அவன் பலம் பலவீனம் ரெண்டுமே காது கேட்குறதுனு சொன்னப்ப எதுக்கு நல்லா காது கேட்குறத பலவீனம்னு சொல்றான்னு யோசிச்சேன்டா.. பிரைட்னெஸ் மண்டையன் இவ ரூபத்துல என் காது ஜவ்வ கிழிக்க பிளான் பண்ணிட்டான்” என்று கதறலாய் கூற,


“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க” என்று துருவன் கூறினான்.


ஜான்விகாவைப் பார்த்து “உனக்குக் காது கேட்காது ஆனா கண்ணு நல்லா தெரியுமா?” என்று சைகை செய்து துருவன் கேட்க,


“ஆ..” என்று கத்தபோனவள் வாயைக் கப்பென்று மூடிய மதி, “மெல்ல பேசு” என்று சைகை செய்தான்.


அவளும் ஆமென்று தலையசைக்க, “அகா உனக்கு வாய் பேச முடியாது. உன்னோட ப்ளஸ் என்ன?” என்று இளா கேட்க,


தன் நெற்றியை தட்டி காட்டினாள்.


“புத்தி கூர்மை” என்று துருவன் கூற,


“ஒரு நோட் வேணும். நாம தான் கைட் பண்ணனும். அதனால நமக்கு இதெல்லாம் குறிச்சுக்க நோட் வேணும்” என்று இளா கூறினாள்.


“இந்தக் காட்டுல நோட்டுக்கு நான் எங்கமா போக?” என்ற துருவன் சட்டென நினைவு வந்தவனாய் ப்ரியாவைப் பார்த்தான்.


முதலில் அவன் பார்வைக்கான அர்த்தம் புரியாதவள் விழிக்க, “ஏ அமி.. நீ என்ன சொன்னாலும் நடக்கும்டி” என்று விஷ் உற்சாகமாய் கூறினான்.


“அட.. ஆமால்ல” என்றவள், “இப்ப என்ன நோட் வேணுமா?” என்க,


இளநகை வேகமாகத் தலையசைத்து, “ஒரு பேனாவும் வேணும்” என்றாள்.


“இப்ப இங்க ஒரு நோட் அன்ட் பென் வரனும்” என்று அவள் கூற, அனைவரும் வானத்தை அன்னாந்து பார்த்தனர்.


'எதுக்கு பாக்குறானுங்கனு வேற தெரில..‌ சரி நாமலும் பாப்போம்' என்று எண்ணிக் கொண்ட ஜான்விகாவும் மேலே நோக்க, இளநகை, தோளை யாரோ சுரண்டுவது போலுணர்ந்து திரும்பினாள்.


திரும்பியவள் “ஆ..” என்ற கதறலுடன் துருவன் புஜங்களைப் பற்றிக் கொண்டு ஒன்றிவிட,


“அய்யோ பெருமாளே..” என்று விஷ்வேஷ் தன் காதை மூடிக் கொண்டான்.


தன்னோடு வந்து பாவை ஒன்றி நின்றதில் திடுக்கிட்டுப் போனவன், தன் தோள்வரை உயரம் கொண்டவளின் கார்குழல் மறைத்த முகத்தைக் காதலோடு கண்டுவிட்டு திரும்ப, “அம்மே.. பேயி” என்று அரண்டு தானும் கத்தினான்.


“அய்யோ..‌ அமி.. உன் புருஷன சாவடிக்க பாக்குறானுங்கடி..” என்று காதுகளைப் பொத்துக் கொண்டு குப்புற விழுந்து விஷ்வேஷ் கதறினான்.


அவர்கள் கதறியதன் முழூ காரணியாகக் கருப்பு நிறத்தில் ஏழடிக்கு ஒரு கரடி கையில் புத்தகம் மற்றும் பேனாவுடன் நின்றிருந்தது.


“பாருடா.. டெடி பேர் டெடி பேர் டர்ட் அரௌன்ட்” என்று மதி உற்சாகமாய் கூற, அந்தக் கரடி சட்டென மதியை நிமிர்ந்து பார்த்தது.


அதில் பாடிக் கொண்டிருந்த மதி சட்டென மௌனமாகக் கையிலிருந்தவற்றை கீழே போட்ட கரடி அவனை நோக்கி ஓடியது.


“அம்மா நாயில்ல..” என்று கத்திய மதி தெரித்து ஓட, கரடி அவனைத் துரத்தி ஓடியது.


“அய்யோ அம்மா.. ஏய் ஜானு.. காப்பாத்துடி.. அய்யோ டேய்.. எவனாவது காப்பாத்துங்கடா..” என்று ஒரு மரத்தை அவன் சுத்தி சுத்தி ஓட,


“ஒருவேலை அந்தக் கரடி அவன லவ் பண்ணுதோ?” என்று அகர் ஜானைப் பார்த்துக் கேட்டான்.


அவளோ அவன் கூறுவது கேட்காமல், “ஆங்?” என்க,


“சாரிமா.. உனக்கு ஸ்பீக்கர் போச்சுனு மறந்துடுச்சு..” என்றுவிட்டு அகாவைப் பார்த்துக் கூற, அவளும் அவனை அமைதியாய் பார்த்தாள்.


“அய்யோ.. உனக்கு மைக் போச்சோ?” என்றவன் விஷ்வேஷ் புறம் திரும்ப, கைநீட்டி தடுத்தவன் “கேட்ருச்சு” என்று அகர்ணனை நிறுத்தினான்.


சட்டென “ஹே..” என்று உற்சாகமாய் இளா குதிக்க,


“ஆ.. ஏன் தாயி சாவிடுக்குற?” என்று விஷ் காதைப் பொத்தினான்.


“சாரி விஷ் காதைக் கொஞ்சம் பொத்திக்கோ” என்றவள், “மதிண்ணா.. உங்களோட பவரே விலங்குகளோட பாஷை உங்களுக்குப் புரியுங்குறது தான். அந்தக் கரடி உங்களை எதும் பண்ணாது” என்று கத்த,


“அட ஆமாம்ல?” என்று சடன் பிரேக் அடித்து நிறுத்தியவனை வந்து இறுக கட்டிக் கொண்டது அந்தக் கரடி.


“ஆ.. ஏ.. என் எலும்பு..” என்று அதன் இறுக்கத்தில் தவித்தவன் மெல்ல கரடியைத் தடவிக் கொடுக்க, அதுவும் தன் பிடியை இலகுவாக்கியது.


'ஜான்- காது கேட்காது, கண்ணு நல்லா தெரியும்

மதி அண்ணா- தண்ணில கண்டம், விலங்குகள் பாஷை தெரியும்

அகா- வாய் பேச முடியாது, அறிவு ஜாஸ்தி

அகர் மாமா- மோப்ப சக்தி அதிகம், எழுதப் படிக்கத் தெரியாது

விஷ்- காது நல்லா கேட்கும்

ப்ரியா-சொன்னது அப்படியே நடக்கும்'


என்று அனைத்தையும் குறித்துக் கொண்டவள் துருவனைப் பார்த்து, “இப்ப நாம முதல் க்ளூவ எங்க தேடனும்?” என்று வினவ, அவனும் சற்றே யோசித்து விடை கிடைத்தவனாய் முகம் பிரகாசிக்க நிமிர்ந்தான்.

-தொடரும்...

 

santhinagaraj

Well-known member
எல்லாருக்கும் ஒரு பலம், பலவீனம் கிடைச்சிருக்கு.
இவங்க புதையல் வேட்டை அலப்பறை பெருசா இருக்கும் போல
முதல் க்ளூ என்ன துருவன் யுகம் ஏன் அவ்வளவு பிரகாசமா மாறுது??
 

Mathykarthy

Well-known member
அடேய் 🤣🤣🤣🤣🤣🤣🤣
மாறுகால் மாறுகை வாங்குன மாதிரி ஒருத்தருக்கு மைக்கு ஒருத்தருக்கு ஸ்பீக்கர்னு ஒவ்வொருத்தருக்கும் பியூஸ் பிடிங்கி வச்சிருக்கீங்க...... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆனா எனக்கு ஜாலியா தான் இருக்கு.... 🤪🤪🤪🤪🤪🤪🤪

எதுக்கு மேல பாக்குறாங்கனு தெரியல நாமளும் பார்ப்போம் 😂😂😂😂 ஜான் செம 😆😆😆

விஷ் 🤭🤭🤭 சத்தமா பேசியே கதறவிடுறானுங்க அவனை..🤫🤫🤫🤫 😝😝😝😝

மதி பொண்டாட்டியால தான் கண்டம்னு பார்த்தா தண்ணியால கண்டமா 😜😜😜😜😜😜

துருவ் தான் செம குஷியா இருப்பான் போல லவ் பண்ணிகிட்டே புதையல் தேடப் போறான் 🤗🤗🤗

கரடிகிட்ட தான் முதல் க்ளூ இருக்கா 🤨🤨🤨
 
எல்லாருக்கும் ஒரு பலம், பலவீனம் கிடைச்சிருக்கு.
இவங்க புதையல் வேட்டை அலப்பறை பெருசா இருக்கும் போல
முதல் க்ளூ என்ன துருவன் யுகம் ஏன் அவ்வளவு பிரகாசமா மாறுது??
ஆமா க்கா 😍 முதல் யூகம் நீங்களே கண்டுபிடிச்சுட்டீங்களே😍😍😍 நன்றி அக்கா ❤️
 
அடேய் 🤣🤣🤣🤣🤣🤣🤣
மாறுகால் மாறுகை வாங்குன மாதிரி ஒருத்தருக்கு மைக்கு ஒருத்தருக்கு ஸ்பீக்கர்னு ஒவ்வொருத்தருக்கும் பியூஸ் பிடிங்கி வச்சிருக்கீங்க...... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆனா எனக்கு ஜாலியா தான் இருக்கு.... 🤪🤪🤪🤪🤪🤪🤪

எதுக்கு மேல பாக்குறாங்கனு தெரியல நாமளும் பார்ப்போம் 😂😂😂😂 ஜான் செம 😆😆😆

விஷ் 🤭🤭🤭 சத்தமா பேசியே கதறவிடுறானுங்க அவனை..🤫🤫🤫🤫 😝😝😝😝

மதி பொண்டாட்டியால தான் கண்டம்னு பார்த்தா தண்ணியால கண்டமா 😜😜😜😜😜😜

துருவ் தான் செம குஷியா இருப்பான் போல லவ் பண்ணிகிட்டே புதையல் தேடப் போறான் 🤗🤗🤗

கரடிகிட்ட தான் முதல் க்ளூ இருக்கா 🤨🤨🤨
அப்படிலாம் இருந்தா தானே க்கா குதூகலமாக இருக்கும்🤭🤭

ஜான் காமெடி தான் நல்லா ஸ்கோர் பண்ணும் போலயே🤭🤣

விஷ் தான் இங்க ரொம்ப பாவப்பட்ட கேரெக்டர் க்கா🤣🤣

மதிக்கு பொண்டாட்டியே கண்டம் தான்.. அது பழகி போன ஒன்னு🤣

துரு காட்டுல மழை தான் க்கா 😍

ஆமா க்கா.. கரடி தான் முதல் க்ளூ😍😍

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🥰
 

காதை_03


ஏதோ பேச வந்தவன் வாயைத், தன் கரம் கொண்டு இளநகை மூடிவிட, அதில் திடுக்கிட்டு அவள் புறம் தன் பார்வையைத் திருப்பினான்.


பெண்ணவள் என்னவோ இலகுவாகத்தான் அச்செயலை செய்திருந்தாள். ஆனால் அவன் பார்வை தீண்டிய நொடி ஏதோ ஓர் குறுகுறுப்பு மனதில் தோன்ற, மெல்ல தன் கரம் எடுத்தவள் “ஒ..ஒரு நிமிஷன்” என்றாள்.


அவளிலிருந்து தன் பார்வையை எடுக்காது அவன் தலை மட்டும் மேலும் கீழுமாய் ஆட,


“ப்ரியா எனக்குச் சில பொருட்கள் வேணும். முதல்ல பஞ்சு வேணும்” என்று கூறினாள்.


“அது எதுக்கு?” என்று அகர்ணன் வினவ,


“விஷ் காதுல வைக்க. நாம நார்மலா பேசுறதே அவங்களுக்கு சத்தமா தான் கேட்குது. நம்ம திடீர்னு கத்தினா அவங்க காது கிளோஸ் தான்” என்றாள்.


“அய்யோ என் புருஷன் பாவம்” என்று பிரியா கூற,


“ரொம்ப அக்கரைதான்டி.. இதை நீ முதல்லயே யோசிச்சு ஏற்பாடு பண்ணிருக்கனும்” என்று கூறினான்.


“சரி வேற என்னலாம் வேணும்?” என்று கேட்ட ப்ரியா அந்தக் காட்டுப் பகுதியைச் சுற்றிப் பார்த்தாள்.


அமைதியான அந்தக் காடு அத்தனை ரம்மியமாகத் தென்பட, “வாவ்.. காடு ரொம்ப அழகா இருக்குல்ல?” என்றாள்.


பேசிக் கொண்டிருந்த யாவரும் அவள் கூற்றில் அப்போதே அந்தக் காட்டைச் சுற்றிப் பார்த்தனர்.



சுற்றிலும் பச்சை பசேலென்று நெடு நெடு மரங்களுடனும், பாசி படிந்த பாறைகளுடனும் எனக் காண்பதற்கே அத்தனை மனோரமாக விளங்கியது.


சில்லென்று காற்று வந்து மோத, “இப்ப மழை பெஞ்சா சூப்பரா இருக்கும்” என்று ப்ரியா கூறினாள்.


அந்தக் காட்டின் ரம்மியத்தில் மூழ்கியிருந்தோரும் அவள் கூற்றுக்கு ஒத்து ஊத, ‘ததாஸ்து..’ என்ற அவளது சக்தி மெல்ல மழை பொழிவதற்காக வானை தயார் நிலையில் நிறுத்தியது.


திரள் திரளாய் திரண்ட மேகம் மோகம் கொண்டு ஒன்றோடு ஒன்று உராய்ந்து திடும்மென்ற இடி முழக்கங்களை இசைத்து, தங்கள் ஜீவ ஊற்றைப் பூமிக்கு துளிகளாய் பொழிந்தது.


வானை அன்னாந்து பார்த்த இளநகை அந்த முதல் துளியைத் தன் கன்னங்களில் வாங்கிக் கொள்ள, மழையை ரசித்துக் கொண்டிருந்த துருவனின் விழிகள் மங்கையை ரசிக்கத் துவங்கியது.


அடுத்த நொடியே இருவர் அலறல் ஒலி அவனை நடப்பிற்கு இழுத்து வந்தது.


“அய்யோ.. எரியுது எரியுது.. அம்மா..” என்று மதி சுற்றி சுற்றி மழையிலிருந்து தப்ப வேண்டி ஓட, கரடியும் காரணமே தெரியாமல் அவன் பின்னே ஓடியது.


“ஆ..எரியுது..” என்று அவன் கத்த, “ஆ.. வலிக்குது” என்று விஷ் கத்த, ஒன்றுமே புரியால் திருதிருவென ஜான்விகா இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.


அகர்ணன் மண் வாசத்தை தன் நுரையீரலில் ஆழ சுவாசித்து மந்தகாச புன்னகையுடன் அகாவை நோக்க, தன் தலையில் அடித்துக் கொண்டவள் ஏதோ சைகை செய்தாள்.


ஒன்றும் புரியாமல் விழித்தவன், “என்ன அவி சொல்ற?” என்க,


மீண்டும் தலையில் அடித்துக் கொண்டவள் ப்ரியா புறம் சென்று அவள் முகத்தில் குத்துவது போல் பாவனை செய்தாள்.


“ஏ அகா.. என்னாச்சு?” என்று ப்ரியா புரியாமல் நோக்க,


வானத்தைக் கைக்காட்டி ‘வேண்டாம்’ என்பது போல் சைகை செய்தாள்.


முதலில் புரியாது விழித்த ப்ரியா, “மழை நிக்கனுமா?” என்க,


சட்டென மழை நின்றது.


பொத்தெனப் பாறையில் படுத்த மதி பெருமூச்சுவிட, கரடிகுட்டியும் அவன் அருகே படுத்துத் தட்டிக் கொடுத்தது.


அகா ஏதோ சைகையிலேயே ப்ரியாவை திட்ட, இளநகையும் துருவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


அப்போதே இருவருக்கும் விடயம் புரிந்தது. “அட ராமா..” என்ற இளநகை “ப்ரியா.. பஞ்சு, டேப்பு, குடை, கயிறு, இன்னொரு நோட் பென் இதுலாம் மட்டும் வேணும்” என்று இளநகை கூற, ப்ரியாவும் அவையாவும் வேண்டினால்.


சிரிது நேரத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை சத்தம் எங்கிருந்தோ கேட்டது விஷ்வேஷுக்கு.


“காய்ஸ்.. சி..சிங்கம் வருது..” என்று அவன் கூற,


துருவன் வேகமாக மதியை பாறையிலிருந்து எழுப்பிக் கீழே கூட்டி வந்தான்.


வேகமாக ஓடி வந்த சிங்கம் இவர்களைப் பார்த்துத் தன் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு உறுமி, பாய்வதற்கு தயாராக,


“சிங்கக்குட்டி.. அ..அண்ணே உனக்குக் குல்பி வாங்கி தரேன்டா.. தங்கமில்ல.. மெல்ல வ்..வாங்க” என்று மதி பீதியுடன் கூறினான்.


வேகமாய் வந்த சிங்கம் மதிமீது பாய,


“டேய்.. என் ஒரே புருஷன்டா..” என்று ஜான் கத்தினாள்.


மதி மீது பாய்ந்த சிங்கம் அவன் கன்னம் நக்கி விளையாடவும், “அந்தச் சிங்கத்துக்கும் உன் புருஷன் தான் ஒரே புருஷன் போல ஜான்.. என்ன ஏதுனு விசாரிச்சாக்கோ” என்று துருவன் கூற,


“ஆங்?” என்றாள்.


“உன்கிட்ட பேசினது என் தப்புதான்டி” என்ற துருவன், சிங்கம் முதுகிலிருந்த பள்ளி பையை எடுக்க,


இளநகை கேட்ட அத்தனையும் அதில் இருந்தது. முதலில் பஞ்சை விஷ்வேஷிடம் கொடுக்க, அதை வைத்து முடிந்தளவு தன் காதை அடைத்துக் கொண்டான்.


அதற்குள் சிங்கத்திற்கு தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்து மதி பெருமூச்சுக்களுடன் வர,


“ஹெவி லவ் போலயே” என்ற சிரிப்புடன் அவனுக்குக் குடையை கொடுத்தான்.


புத்தகம் மற்றும் பேனாவை அகநகையிடம் கொடுத்து, “எதாச்சும் இம்பார்டென்டா சொல்லனும்னா எழுதிக்காட்டு” என்க,


அகாவும் சரியென்று தலையசைத்தாள்.


துருவன் கயிற்றையும், ஒட்டுநாடாவையும் (sellotape) இருகைகளிலும் பிடித்துக் கொண்டு இளநகையை கேள்வியாய் பார்த்தான்.


கயிற்றை வாங்கி ஜான்விகா மற்றும் மதியின் கரத்தை இணைத்துக் கட்டியவள், “காது கேட்காம ஜான் பாட்டுக்கு ஒரு பாதைல போயிட போறா” என்று கூற,


“டேப் எதுக்கு?” என்று ப்ரியா கேட்டாள்.


அதில் சிறிதளவு கிளித்தவள், “உன் வாய்ல ஒட்டதான்” என்று அதை ஒட்டிவிட, ப்ரியா அதிர்ந்து விழித்தாள்.


“நீ என்ன பேசினாலும் அது நடக்கும் ப்ரீ.. அவசரத்துல என்னத்தையாவது வாய விட்டு இப்ப நடந்த போல எதும் நடந்துட கூடாது பாரு.. அதான்.. தேவையானப்போ எடுத்துப்போம்” என்று கூறிய இளநகை,


“இப்ப என்ன பண்ணனும்?” என்று துருவனைப் பார்த்தாள்.


சுற்றி முற்றி பார்த்தவன், “அந்தக் கரடியெங்க?” என்று கேட்க,


மதி “டேய் டேடிபேர்..” என்று கத்தியதுதான் தாமதம் மரத்திலிருந்து தொம்மெனக் குதித்து அவனை மிரள வைத்தது.


“அதுக்கிட்ட தான் இப்ப நாம வழி கேட்கனும். நாம இந்தக் காட்டுல சந்திக்குற முதல் ஜீவன் இதுதான்” என்று துருவன் கூற,


“கரடிகுட்டி.. இங்க வாங்க.. ரெண்டாவது க்ளூ எங்க இருக்குனு சொல்லுங்க” என்று அதைக் கொஞ்சியபடி கேட்டான்.


திடீரென விறைப்புற்ற நின்ற கரடி, வேகமாகச் செல்ல, “ஏ டேடி பேர் நில்லு” என்றான்.


சட்டென நின்ற கரடி அவனைப் பிடித்துக் கொண்டு ஓட, “அய்யோ கடவுளே..” என்று கரடி இழுபட்டதில் கிட்டத்தட்ட காற்றில் பறக்கும் நிலையில் அவன் சென்றான் என்றால், “அடேய்.. என்னைய காப்பாத்துங்கடா.. அய்யயோ.. புருஷனயும் பொண்டாட்டியயும் ஒன்னா சாவடிக்க பாக்குறானுங்களே.”’ என்று அவன் கையுடன் தன் கை இணைக்கப்பட்ட நிலையில் தானும் அவன்பின்னே பறந்த ஜான் கத்தினாள்.


“ஆத்தீ.. இந்தக் கரடி என்ன வெறிபுடிச்ச மாதிரி ஓடுது” என்று துருவன் புலம்ப,


“இப்ப நாம எப்படி அவங்கள ஃபாலோ பண்றது?” என்று இளநகை திருதிரு விழிகளுடன் கேட்டாள்.


அங்கிருந்த அறுவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, சட்டென அகா அகர்ணனை பிடித்து இழுத்தாள்.


“என்ன அவி?” என்று அவன் கேட்க, அவள் அவனைக் குறிப்பிட்டு ஏதோ சொல்ல முயன்றாள்.


அவள் கழுத்தில் தொங்கிய நாட்குறிப்பை அவள் கையில் கொடுத்தவன், “என்ன சொல்லவரனு புரியலை இதுல எழுது” என்க,


வேகமாக எழுதி அவனிடம் காட்டினாள்.


அத்தோ பரிதாபம்! அவன் தான் எழுதப் படிக்க மறந்து போனானே! தன் தலையில் அடித்துக் கொண்டவள் அதை இளநகையிடம் காட்ட,


“அட மாமா.. உங்களுக்குத் தான் மோப்ப சக்தி இருக்கே. அவங்க வாசம் வச்சு நாம போகலாம்னு அகா சொல்றா” என்று இளநகை கூறினாள்.


“அட ஆமாம்ல?” என்றவன் கண்களை மூடி ஸ்வாசிக்க,


கரடியின் பிரத்யேக மணம் அவன் நாசியில் நுழைந்தது.


“இந்தப் பக்கம்” என்றவன், “விஷ்.. நீ அவங்க சத்தம் கேட்குதானு பாரு அப்படியே” என்று கூற,


“ம்ம் ஓகே அகர்” என்றவன் தன் காதிலிருந்து பஞ்சை எடுத்துக் கேட்டான்.


வாசத்தினையும் சத்தத்தையும் கொண்டு தேடியோர் அனைவரும் சிரிது நேரத்திற்கு பிறகு ஒரு ஆறை அடைந்தனர்.


அந்த ஆற்றுக்கு அந்தப்புரம் பெரிய அடர்ந்த அலமரம் இருக்க, “எப்பா டேய்.. காப்பாத்துங்கடா” என்று ஜோடியாக அந்த அலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இருவரும் குரல் கொடுத்தனர்.


அவர்கள் இருவரும் சிங்கம் படத்தில் விவேக்கும் குற்றவாளியும் கைவிலங்குடன் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் போன்றிருக்க, அவர்களை அக்கோலத்தில் பார்த்த அறுவரும் அடக்கமாட்டாது சிரித்தனர்.


“அடேய்.. சிரிப்பா இருக்காடா உங்களுக்கு? வயிறெல்லாம் கலக்குது வந்து இறக்கிவுடுங்கடா டேய்” என்று ஜான் கத்த,


“ஆ..” என்று காதுகளில் மீண்டும் பஞ்சை அடைத்துக் கொண்ட விஷ், “அந்த டேப்பை கொஞ்சம் இவ வாயிலுயும் போட்டிருக்கலாம் இளா நீ” என்று கூறினான்.


“ஏ ஆற எப்படி கடக்குறது?” என்று துருவன் கேட்கும்பொழுதே ஆற்றிலிருந்து இரண்டு முதலைகள் கறைக்கு வந்தன.


அதைக் கண்டு அரண்டு போன ப்ரியா விஷ்வேஷ் முதுகில் தவ்விக் கொள்ள,


“அம்மாடி.. அடியே.. உனக்கு இப்பத்தான் உப்புமூட்டை விளையாடுற ஆசை வருமா? நானே நொந்து போயிருக்கேன்.. ஏன்டி?” என்று விஷ்வேஷ் புலம்பினான்.


“ம்ம்..ம்ம்..” என்று அவள் கூறவும் அவன் ‘’என்ன சொல்ற?” என்று அவளை நோக்க, அவள் அவனுக்கு முன்னே கண்காட்டி அச்சத்துடன் சத்தமிட்டாள்.


என்னடி என்றுபடி திரும்பியவன் முன், ‘ஆ..’ என வாயைப் பிளந்துக் கொண்டு நின்றது அந்த முதலை.


“ஆ.. மு..முதலைனு சொல்ல வேண்டியது தானடி” என்றபடி அவளையும் சுமந்துக் கொண்டு பின்னே அவன் ஓட, ‘அதான் வாய கட்டிவச்சுருக்கீங்களேடா பக்கிகளா' என்று எண்ணிக் கொண்டாள் பெண்.


அகநகை வேக வேகமாகத் தனது குறிப்பு புத்தகத்தில் ஏதோ எழுத, “பெரிய ரைட்டுரு இப்பத்தான் எழுதுவா.. முதலை வந்துடுச்சு அவி..” என்றபடி அகர்ணன் ஒருபுறம் அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.


“ஏ.. தப்பிக்குறேன்னு ரொம்ப தூரம் போய்த் தொலைஞ்சுடாதீங்க” என்று துருவன் கத்த,


“து..துரு..துரு.. முதலை..” என்று அவன் கரங்களை இறுக பற்றிக் கொண்டாள்.


“ஏ மகி.. அந்த முதலைய கூப்பிடுடா.. அவங்களை எதாவது பண்ணிட போவுது” என்று தொங்கியபடி கால்களைப் பரபரப்பாய் ஆட்டிக் கொண்டு ஜான்விகா கூற,


தன் கால்களால் அவள் கால்களில் உதைத்து தன்னை பார்க்கச் செய்தவன், “அவனைப் பெர்பாமென்ஸ் பண்ண விடாவோமே? அந்த அசரீரீ அவங்களை சேர்ந்து இதை விளையாட விடுறதே அவளுக்கு அவனோட லவ்வ ப்ரூஃப் பண்ணதான் ஜானு” என்று மெல்ல உச்சரித்து அவளுக்குப் புரியவைத்தான்.


“எல்லாம் சரிடா.. கடிச்சு வச்சுடா போவுது..” என்று அவள் கூற,


“அவ்வளவு தூரம் போகாம பார்த்துக்குறேன்.. இப்பதான் நட்பு மேல அக்கரை பாயும்.. உன் ஜாம் பன்ன அவன் புடுங்கி தின்னது மறந்துடுச்சா?” என்று ஒற்றை கையில் அபிநயம் காட்டி அவன் ஆவேசமாய் கேட்டான்.


“அட ஆமாம்ல? அவனை ரெண்டு கடி கடிச்சாலும் பரவால உடுடா” என்று ஜான்விகா கூறிட,


“அடிப்பாவி.. ஜாம் பன்னுக்காக நட்பைக் காவு குடுக்குறியேடி” என்று எண்ணினான்.

-தொடரும்....
 

Mathykarthy

Well-known member
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கா போகுது ஸ்டோரி 🤩🤩🤩🤩

இளா 🥰 இந்த குரூப்ல இப்படி ஒரு அறிவாளியா 🤭
செம பிளானிங் 👌

துரு அவன் வேலைய சரியா செய்றான் 🤪

ஜான் இந்த காட்டுக்குள்ள உனக்கு தான் டஃப் காம்பெடிஷன் இருக்கும் போல......🤣🤣🤣🤣🤣🤣
உன் ரேஞ்சுக்கு சிங்கம் புலி எல்லாம் தூசு 😝😝😝😎😎😎😎

மதி இப்படி மரத்துல தொங்கும் போது கூட லவ் சர்வீஸ் பண்ணுற நீ கிரேட் டா 🤣🤣🤣🤣😜😜😜😜

ரெண்டு பேரை தொங்க விட்டுட்டு தலை தெறிக்க ஓடிட்டானுங்க எப்போ வருவானுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கா போகுது ஸ்டோரி 🤩🤩🤩🤩

இளா 🥰 இந்த குரூப்ல இப்படி ஒரு அறிவாளியா 🤭
செம பிளானிங் 👌

துரு அவன் வேலைய சரியா செய்றான் 🤪

ஜான் இந்த காட்டுக்குள்ள உனக்கு தான் டஃப் காம்பெடிஷன் இருக்கும் போல......🤣🤣🤣🤣🤣🤣
உன் ரேஞ்சுக்கு சிங்கம் புலி எல்லாம் தூசு 😝😝😝😎😎😎😎

மதி இப்படி மரத்துல தொங்கும் போது கூட லவ் சர்வீஸ் பண்ணுற நீ கிரேட் டா 🤣🤣🤣🤣😜😜😜😜

ரெண்டு பேரை தொங்க விட்டுட்டு தலை தெறிக்க ஓடிட்டானுங்க எப்போ வருவானுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நன்றி அக்கா 🥰😍

ஆமா க்கா.. அவளாது அறிவா இருந்தா தானே முன்னேரி போக முடியும் 🤭
துருவெல்லாம் அவன் வேலைல சரியா இருப்பான்🤭

ஜானுக்கு டஃப் காம்படீஷன் தான்.. ஆனா டிமான்ட் அவ புருஷனுக்கு தான்🤭🤣

வருவாங்க வருவாங்க🤭🤣கொஞ்ச நேரம் தொங்கட்டூம் க்கா🤭
 

santhinagaraj

Well-known member
அடேய் சிரிப்பை அடக்க முடியலடா கரடி கூட ஜானும் மதியும் பறக்கிறது பார்க்கும்போது

ஜானு உன் புருஷனுக்கு டிமாண்ட் அதிகம் போல ஒவ்வொருத்தரா போட்டிக்கு வந்துகிட்டே இருக்காங்க உனக்கு டாப் காம்படிஷன் இருக்கும் போல எப்படி சமாளிக்க போற 😂😂😂

இளா உனக்கு இவ்வளவு அறிவா எல்லாரையும் அவங்கவங்க பலம் பலவீனத்துக்கு ஏத்த மாதிரி தயார்படுத்திட்ட😂😂😂

இவ்வளவு கலவரத்திலையும் துருவன் அவ வேலையில கரெக்டா இருக்கான் 😍😍

என்னடா ரெண்டு பேரையும் மரத்துல தொங்க விட்டுட்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடிட்டீங்க 🙄🙄🙄
 
அடேய் சிரிப்பை அடக்க முடியலடா கரடி கூட ஜானும் மதியும் பறக்கிறது பார்க்கும்போது

ஜானு உன் புருஷனுக்கு டிமாண்ட் அதிகம் போல ஒவ்வொருத்தரா போட்டிக்கு வந்துகிட்டே இருக்காங்க உனக்கு டாப் காம்படிஷன் இருக்கும் போல எப்படி சமாளிக்க போற 😂😂😂

இளா உனக்கு இவ்வளவு அறிவா எல்லாரையும் அவங்கவங்க பலம் பலவீனத்துக்கு ஏத்த மாதிரி தயார்படுத்திட்ட😂😂😂

இவ்வளவு கலவரத்திலையும் துருவன் அவ வேலையில கரெக்டா இருக்கான் 😍😍

என்னடா ரெண்டு பேரையும் மரத்துல தொங்க விட்டுட்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடிட்டீங்க 🙄🙄🙄
எனக்குமே அந்த சீன் ஃப்ரூப் பாக்கும்போது சிரிப்பு வந்துடுத்து க்கா 🤭

இளா கொஞ்சம் அறிவு புள்ள க்கா 😍

துருவன் வேலையே அதுதானே🤭🤭

ஜான்க்கு இங்க காட்டுல நல்ல காம்படீஷன் தான்.. என்ன ஒன்னு.. போட்டி நடக்குறதே அவளுக்கு புரியாது 🤣 பேசுற பேச்சுக்கு ரெண்டும் கொஞ்ச நேரம் மரத்துல தொடங்கட்டும். க்கா🤭🤭🤣

ரொம்ப நன்றிக்கா 😍❤️
 
காதை_04


“துரு.. எதாச்சும் பண்ணுங்க.. பயமா இருக்கு..” என்று கிட்டதட்ட அழுதுவிடுவதைப் போல் அவள் கூற, “பட்டு.. ஜ..ஜஸ்ட் சில்..” என்றபடி அவளைப் பிடித்துக் கொண்டு பின்னே எட்டுக்கள் வைத்தான்.


தனது கூர் பற்கள் பளபளக்க வாயைத் திறந்துகொண்டே முதலை அவர்களை நோக்கி முன்னேற, அதைப் பயத்துடன் பார்த்தவாரே பின்னெட்டுக்கள் வைத்தவன் கால் சருக்கிவிட்டது.


“ஆ..” என்று சரிந்து விழுந்தவன் மேல், பாவையவளும் சரிய அவளை அணைவாய் பிடித்துக் கொண்டவன் அவள் கண்களைப் பார்த்தான்.


கலங்கி லேசாகச் சிவந்த விழிகளுடன் அவனைப் பார்த்தவள், “ப..பயமா இருக்கு..” என்க,


அந்த விழிகள் அவனுக்கு என்ன சொன்னதோ? தன் காலைக் கடிக்க வந்த முதலையைக் கண்டு “ஏ..” என்று அஞ்சிக் காலை இழுத்துக் கொண்டவன் பக்கவாட்டாகத் திரும்பி அங்கிருந்த ஒரு நீலமான மரக்கட்டையை எடுத்து அதன் வாய்க்கு நடுவே வைத்திட்டான்.


முதலையால் வாயை மூடவும் முடியாது, மரக்கட்டையின் நீலத்தைவிட திறக்கவும் முடியாது போக, பதறியடித்துக் கொண்டு மீண்டும் தண்ணீருக்குள் சென்றது.


அதில் ஒரு பெருமூச்சு விட்டு அப்படியே படுத்தவன் தன்மேல் படுத்துக் கொண்டு பயம் நீங்காது கலங்குபவளுக்கு தட்டிக் கொடுக்க,


“ஸோ ஸுவீட்ல மாமா?” என்று விஷ்வேஷ்வரன் முதுகில் தொத்திக் கொண்டிருத்த அமிர்தப்ரியா கேட்டாள்.


அவளைத் திரும்பிப் பார்த்து ஆமென்று தலையசைத்தவன் “டேப் எங்கடி?” என்க


“மூச்சு வாங்கிச்சா.. அதான் கழட்டிட்டேன்” என்றாள்.


“ஓடினது நானு மூச்சு வாங்குறது உனக்கா? இறங்குடி கீழ” என்று அவளை இயக்கியவன்,


“அம்மா.. முதுகு..” என்று பிடித்துக் கொள்ள, “ரொம்ப வலிக்குதாங்க?” என அப்பாவிபோல் கேட்டு அவனைக் கடுப்பேற்றினாள்.


அங்குப் பயம் விலகாத நடுக்கத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கும் இளாவை நிமிர்த்தித் தன் முகம் பார்க்கச் செய்த துருவன், “மா..இளா.. அது போயிடுச்சுடி.. இங்க பாரு” என்க,


“பயந்துட்டேன்.. உ..உங்க காலைக் கடிச்சிருக்கும்” என்றாள்.


“பாருடி.. எப்படி உருகுறானு.. நீயும் தான் இருக்கியே” என்று அங்கிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மதிமகிழன் கூற,


ஜான் அவன் பேசியது கேட்காததால் “ஆங்?” என்றாள்.


“அண்டவா..” என்று நொந்துக் கொண்டு அவன் வானை நோக்க,


“மறுபடியும் அந்த அசராத அசரீரியாடா?” என்று தானும் வானத்தில் அதைத் தேடியபடி கேட்டாள்.


அதில் ஒரு பெருமூச்சு விட்டவன், “உனக்கு ஸ்பீக்கர் போச்சுனு தெரிஞ்சும் பேசுற நான்தான்டி பைத்தியக்காரன்” என்று நொந்துக் கொள்ள,


வானில் அசரீரீயை தேடி தோற்றவள் காட்சியை வேடிக்கைப் பார்க்கத் தொடர்ந்தாள்.


இளநகையை தூக்கிவிட்டு நிற்கச் செய்தவன் அவள் கண்களைத் துடைத்துவிட, ஜோடி ஜோடியாய் ஓடிய மற்ற நால்வரும் வந்து சேர்ந்தனர்.


“பாவிகளா.. விட்டுட்டு போயிட்டீங்க” என்று துருவன் அவர்களை முறைக்க,


“மாசமா இருக்குறவளை காப்பத்தனும்னு போயிட்டேன்டா” என்று அவசரத்தில் அகர்ணன் வாய்க்கு வந்த காரணத்தைக் கூறினான்.


அதில் தலையில் அடித்துக் கொண்ட அகநகை, அவனைத் திருப்பித் தன் வயிற்றை குறிப்பிட்டுக் காட்டவும், அகர்ணன் “அடடா.. அந்த அசரீரீ நம்ம பேபிய ஆட்டயபோட்டத மறந்துட்டேன்டா அவி” என்க,


விஷ்வேஷும் ப்ரியாவும் வெடித்து சிரித்தனர்.


“சரி இதை எப்படி கடக்க?” என்று இளா கேட்க,


“நீங்க எப்புட்ரா இந்த ஆத்தை கடந்தீங்க?” என்று ப்ரியா கேட்டாள்.


“நாங்க எங்கடா கடந்தோம்? அந்தக் கரடிகுட்டி ஏறிக் குதிச்சதுல தான் பறந்து வந்து மரத்துல ஜொயிங்குனு மாட்டிகிட்டோம். கையு வலிக்குதுடா எப்பா” என்று மதி கத்தினான்.


“என்னவாம் அவங்களுக்கு?” என்று ஜான் கேட்க,


“உனக்குச் சொல்றதுக்குள்ள இருக்குற கொஞ்சம் ஜீவனும் செத்து சுன்னாம்பா போயிடும் போடி” என்று அழுதான்.


“ப்ரியா.. ஒரு பாலம் வேணும்” என்று துருவன் கூற,


“நான் என்ன இன்ஞ்..” என்று கூற வந்தவள் வாயைப் பொத்தி, “நீ கேட்டா கிடைக்கும் அமி..” என்று அவளுக்கு விஷ்வேஷ் நினைவூட்டினான்.


“அட ஆமாம்ல?” என்றவள் “இப்பவே இங்க ஒரு பாலம் வரனும்” என்று கூற,


திடுதிடுவென எங்கெங்கிருந்தோ குரங்குகள் வந்தன.


அக்குறங்குள் சேர்ந்து பாலம் அமைக்க, “பாரேன்.. நாம இலங்கைக்கு போகப் போறோம். வாணரப்படை நமக்குப் பாலம் அமைக்குது” என்று விஷ்வேஷ் கூறினான்.


ஒருவழியாய் பாலம் கட்டி முடியவும் யாவரும் அந்த ஆலமரத்திடம் வர,


“எங்கடா அந்தக் கரடி?” என்று அகா சைகை செய்து கேட்டாள்.


“அது மரத்தைச் சுத்தி ரொம்ப நேரமா மோப்பம் புடிச்சுட்டே இருந்து இப்பத்தான் ஒரு இடத்தைத் தோண்ட ஆரம்பிச்சிருக்கு அந்தப் பக்கம். முதல்ல எங்களை இறக்கி விடுங்கடா” என்று மதி கூற,


“கையு வலிக்குதுடா எப்பா” என்று ஜான் கத்தினாள்.


மீண்டும் அனைவரும் ப்ரியாவை நோக்க, “ஏணி வேணும்” என்று பல்லைக் கடித்தாள்.


வானத்திலிருந்து வீலென்று ஏதோ சத்தம் கேட்டதில் யாவரும் மேலே நோக்க, ஏணி ஒன்று அதி வேகத்தில் கீழே வந்துக் கொண்டிருந்தது.


அதில் அய்யோ அம்மாவென்று அலறியவண்ணம் அறுவரும் நகர, ஏனி தொம்மென்று கீழே வந்து விழுந்தது.


“கால் வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே” என்று ப்ரியா புலம்ப, எழுந்த நின்ற துருவன் காலடியில் ‘கிரிக்’ என்ற சத்தம் கேட்டது.


அனைவரும் அரண்டுபோய் அவளை நோக்க, “ஆத்தீ.. அடேய்.. புலம்பக் கூட விடமாட்றீங்களேடா” என்று கதறலாய் கூறியவள், “இப்ப என்ன பண்ண?” என்று பரபரப்பாய் யோசித்தாள்.


“பைத்தியமே.. கன்னிவெடிலாம் நமத்துபோகனும்னு சொல்லு” என்று அகர்ணன் கூற,


“ஆங்.. கன்னி வெடி எல்லாம் வெடிக்காத வெடியா போகட்டும்” என்றாள்.


“அதென்ன தீவாளி பட்டாசாடி” என்று நொந்துக் கொண்ட விஷ்வேஷ் பெருமூச்சுவிட,


இளநகையும் துருவனும் ஏணியை தூக்கி நிறுத்தி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தோரை கீழே இறக்கினர்.


“அந்தக் கரடி எதையாச்சும் கண்டுபிடிச்சுதானு பாருடா” என்று துருவன் கூற,


“டேடி பேர்..” என்றபடி அதைத் தேடிச் சென்றான்.


சில நிமிடங்களில் “டேய்..‌ எல்லாரும் இங்க வாங்க” என்று மதி குரல் கொடுக்க யாவரும் அந்த மரத்தைச் சுற்றிக் கொண்டு பின்புறம் சென்றனர்.


அங்கு மண்ணுக்கு அடியிலிருந்து ஒரு பெட்டியை எடுத்தவன் அதன்மேலிருந்த மண்ணை தட்டி எடுக்க,


“என்ன பேப்பர் மாதிரி இருக்கும்னு பார்த்தா பெட்டி மாதிரி இருக்கு?” என்று ஜான் கேட்டாள்.


“நானும் எதாவது க்ளூ பேப்பரா இருக்கும்னு தான் நினைச்சேன்” என்று இளநகை கூற,


தன் கரங்களைத் தட்டி அனைவரையும் தன்னை பார்க்கச் செய்த அகா அதைத் திறக்கும்படி சைகை செய்தாள்.


அதிலிருந்த சக்கரம் போன்ற அமைப்பை மதி திருக, சடாரென்று அதிலிருந்து ஒரு தகடு நீண்டது.


'எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்' என்று அதில் பொறிக்கப்பட்டிருப்பதை எழுத்து கூட்டி வாசித்த மதி அதை அழுத்த, ‘கண்ணீர் பிரிவினை' என்று மொட்டையாக இருந்தது.


“கண்ணீர் பிரிவினையா?” என்று விஷ்வேஷ் கேட்க,


“அப்படிதான் போட்டிருக்கு. இது என்ன சொல்ல வருது?” என்று மதி கேட்டான்.


“கண்ணீர்ல என்னடா பிரிவினை இருக்கு? எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்னா?” என்று அகர்ணன் கேட்க,


சட்டெனக் கண்கள் பளிச்சிட அகா கைகளைத் தட்டினாள்.


யாவரும் அவளை நோக்க, தனது குறிப்பேட்டில் விறுவிறுவென ஏதோ எழுதி அகர்ணன் புறம் நீட்டினாள்.


“ப்ச்.. மறுக்கா மறுக்கா அசிங்கபடுத்துறியேடி..” என்றவன் அதை இளநகையிடம் கொடுக்க,


“ஏ சூப்பர் அகா” என்ற இளா “எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்னா இந்தக் கேள்விக்கான பதிலை நாம சொன்னாதான் அது நமக்கான க்ளூவை குடுக்கும்னு அர்த்தம். கண்ணீர் பிரிவினைனா கண்ணீரோட வகைகள டிஸ்கிரைப் பண்ண சொல்லிக் கேட்குது” என்று கூறினாள்.


“கண்ணீரோட வகையா?” என்று அனைவரும் குழம்ப சில நிமிடங்கள் அங்கு யோசனையான அமைதி நிலவியது.


துருவன் தோளைச் சுரண்டிய ஜான், “இந்தக் கைய கொஞ்சம் பிடிச்சுவிடேன் வலிக்குது” என்று தன் கரத்தை நீட்டினாள்.


“அடிங்கு.. அவன் அவன் என்ன கவலைல இருக்கான்.. ஒழுங்க யோசி” என்று துருவன் திட்ட,


“மச்சான்.. எனக்குக் காது கேட்காதது எவ்வளவு வசதியா இருக்கு பார்த்தியா? நீ என்னை ஏதோ நாலு நல்ல வார்த்தை கேக்குறனு புரியுது ஆனா எனக்கு எதுமே கேட்கலை” என்று கூறி முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி அவனை வெறுப்பேற்றினாள்.


இதற்குள் ஒரு யோசனைக்கு வந்த மதி “ஏ.. எனக்குப் புரிஞ்சுடுச்சு.. கண்ணீரோட வரையறைய கேட்குறாங்க..” என்று கூற,


அனைவரும் அவனைப் புரியாமல் பார்த்தனர்.


“அதாவது சைகாலஜிபடி வலது கண்ணுலருந்து முதல் துளி கண்ணீர் வந்தா அது சந்தோஷத்தின் அடிப்படைல வரும் கண்ணீர். அதுவே இடது கண்ணுலருந்து முதல்ல வந்தா அது சோகத்தின் அடிப்படைல வரும் கண்ணீர். ரெண்டு கண்ணுலருந்தும் சேர்ந்து வந்தா அது ஃப்ரஸ்டிரேஷன்ல வரும் கண்ணீர்” என்று அவன் கூற, பெட்டியில் ‘கிரிக்’ என்ற சத்தம் கேட்டது‌.


அனைவரும் ஆர்வமாய் பெட்டியைப் பார்க்க, அதிலிருத்த சங்கிலிகள் எல்லாம் சுற்றிக் கொண்டு பெட்டி திறந்தது.


“ஏ ஹுரே..” என்று குதித்த இளநகை அந்தப் பெட்டிக்குள்ளிருந்த தகடை எடுத்தாள்.


“நாளம் தாக்கவும் காக்கவும்

ஆன மலர் சூழ்ந்த,

ஓடுநீர் பிறப்பிடத்தே

மாபெரும் வித்தின் விருட்சத்து, இருபால் பட்சியின் கூட்டதிலே

அடுத்த துப்பு உள்ளதுவே!” என்று இளநகை வாசிக்க,


“கடைசி வரிய தவற ஒரு மண்ணும் புரியலை” என்று விஷ்வேஷ் கூறினான்.


“உனக்காவது பரவால அங்க என் பொண்டாட்டிய பாருடா. அவளுக்கு ஒன்னும் கேக்கவே செஞ்சிருக்காது” என்று மதி கூற,


“அப்படியே கேட்டுட்டாலும் அவ கிளுகிளுனு பதில் சொல்லிக் கிழிச்சுடுவா” என்று துருவன் கூறினான்.


“ஷ்ஷு.. பேசுறத விட்டுட்டு யோசிங்க” என்று இளநகை கூற, அனைவரும் மாறி மாறி அதை வாங்கிப் படித்துப் பார்த்தனர்.


“நாளம்னா.. இதயத்தைக் குறிப்பிடலாம்.. அப்படினா இதயத்தைத் தாக்கவும் காக்கவும் ஆன பூ.. அதென்ன பூ?” என்று இளநகை யோசித்தாள்.


பலமணி நேர யோசிப்பின் பலனாய் ஆளுக்கொரு வரியைக் கண்டுபிடித்திட தங்கள் இரண்டாம் துப்பைத் தேடி சென்றனர்.

-தொடரும்...

(புதிருக்கான விடைகள் வரவேற்கப்படுகிறது 🤗)
 

santhinagaraj

Well-known member
இதயத்தை காக்கும் உதவும் பூவான செம்பருத்தி பூக்கள் நிறைந்த ஓடு நீர் பிறப்பிடமான ஆறு உருவாகும் இடத்தில், மாபெரும் வித்தின் விருச்சம் இருப்பார் உயிரினம் குரங்கு கூட்டத்திடம் புதிர் உள்ளது சரியா?
 

Mathykarthy

Well-known member
துருவ் 🥰 புதையல் எடுக்குறதுக்குள்ள லவ்வை சக்ஸஸ் பண்ணிடுவான்.... 😉

பிரியா வாயை வச்சுட்டு சும்மா இரும்மா......🤐🤐🤐🤐
ஏற்கனவே மரத்துல தொங்குறது ., முதலைகிட்ட பைட்னு ஆளாளுக்கு சர்க்கஸ் பண்ணிட்டு இருக்காங்க 🤣🤣🤣🤣🤣
இதுல கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி வேறயா 🤣🤣🤣🤣🤣

மூணாவது க்ளூ கிடைச்சுடுச்சு 🤩🤩🤩
எதோ மலர் நிறைந்த மலையில இருக்குற மரத்துல இருக்குற பறவை கூட்டத்துகிட்ட அடுத்த க்ளூ இருக்கு 😁😁😁😁😁🫣🫣🫣🫣
 
இதயத்தை காக்கும் உதவும் பூவான செம்பருத்தி பூக்கள் நிறைந்த ஓடு நீர் பிறப்பிடமான ஆறு உருவாகும் இடத்தில், மாபெரும் வித்தின் விருச்சம் இருப்பார் உயிரினம் குரங்கு கூட்டத்திடம் புதிர் உள்ளது சரியா?
நைஸ் கெஸ் க்கா ❤️❤️🥰

நன்றி அக்கா 🥰😍
 
துருவ் 🥰 புதையல் எடுக்குறதுக்குள்ள லவ்வை சக்ஸஸ் பண்ணிடுவான்.... 😉

பிரியா வாயை வச்சுட்டு சும்மா இரும்மா......🤐🤐🤐🤐
ஏற்கனவே மரத்துல தொங்குறது ., முதலைகிட்ட பைட்னு ஆளாளுக்கு சர்க்கஸ் பண்ணிட்டு இருக்காங்க 🤣🤣🤣🤣🤣
இதுல கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி வேறயா 🤣🤣🤣🤣🤣

மூணாவது க்ளூ கிடைச்சுடுச்சு 🤩🤩🤩
எதோ மலர் நிறைந்த மலையில இருக்குற மரத்துல இருக்குற பறவை கூட்டத்துகிட்ட அடுத்த க்ளூ இருக்கு 😁😁😁😁😁🫣🫣🫣🫣
அதெல்லாம் சக்ஸஸ் தான் க்கா 😍

அவ வாயே அவளுக்கு வெண க்கா🤣😂

ஆமா க்கா 😍 மூனாவது க்ளூ கிடைச்சது.. நைஸ் கெஸ் க்கா ❤️🥰
 

காதை_05

‘நாளம் தாக்கவும் காக்கவும்
ஆன மலர் சூழ்ந்த,
ஓடுநீர் பிறப்பிடத்தே
மாபெரும் வித்தின் விருட்சத்து, இருபால் பட்சியின் கூட்டதிலே
அடுத்த துப்பு உள்ளதுவே’

என்ற வரியை மீண்டும் மீண்டும் அனைவரும் வாசித்துக் கொண்டிருந்தனர்.

அகா தன் கைகளை ஆறுபோல் சைகை செய்து காட்ட, “அதான் நோட்டிருக்குல்ல? எழுதித்தொலை பக்கி” என்று விஷ்வேஷ் கூறினான்.

இடவலமாய் தலையசைத்தவள் தான் எழுத வருவதை புத்தகத்தில் எழுத,

எழுத்துக்கள் ஏதும் தோன்றாமல் வெற்று காகிதமாகவே அது காட்சி பட்டது.

“என்ன பேனால இங்கில்லையா?” என்று ஜான்விகா கேட்க,

மறுப்பாகத் தலையசைத்தவள் அவள் பெயரை எழுதிக் காட்ட, அது மட்டும் அழகாய் தோன்றியது.

“என்ன இது மட்டும் எழுதுது?” என்று ப்ரியா கேட்க,

“ஹே ப்ரீ.. அந்த அசரீரீ மண்டையன் சொன்னான்ல? நீ என்ன கேட்டாளும் கிடைக்கும். ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. உங்களுக்கான பலத்தையும் பலவீனத்தையும் மாற்றுவதுக்கோ தேற்றுவதுக்கோ அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியாது. அதனால தான் உன் சக்தில உருவாக்கின இந்த நோட் அன்ட் பென் இதைக் கண்டுபிடிக்க மட்டும் யூஸ் ஆகலை” என்று அகர்ணன் கூறினான்.

‘ஆம்’ என்பதுபோல் தலையாட்டிய அகநகை, மீண்டும் கைகளை வளைத்துக் காட்ட,

“என்னடி பாம்பா?” என்று ஜான்விகா கேட்டாள்.

இல்லை என்பது போல் தலையசைத்து சளிப்பாய் திரும்பியவள் மீண்டும் திரும்பி, தண்ணீர் குடிப்பதைப் போல் சைகை செய்து, கைகளை வளைத்துக் காட்ட,

“ஏ ஆறா?” என்று துருவன் கேட்டான்.

துள்ளலுடன் ஆம் என்று குதித்தவள், மலைபோல் கைகளைக் கொண்டு சைகை செய்ய,

“மலை?” என்று மதி கேட்டான்.

மீண்டும் ஆமெனத் தலையாட்டியவள், இரண்டையும் சேர்த்து செய்ய,

“மலையாறு?” என்று அகர்ணன்‌ கேட்டான்.

இல்லையென்றவள் மலைபோல் சைகை செய்து அதிலிருந்து நீர் வருவது போல் காட்ட,

“அருவி?” என்று இளநகை கேட்டாள்.

தங்கையைக் கட்டியணைத்துக் கொண்டவள் அந்தக் குறிப்பேட்டினை வாங்கி இரண்டாம் வரியைக் குறிப்பிட்டுக் காட்டினாள்.

“ஓடுநீர் பிறந்பெடுத்தே” என்று உச்சரித்த இளநகை, கண்கள் பளீரிட, “தட்ஸ் ஆவ்செம் அகா.. ஓடுநீர்னா ஆறு.. ஆறு பிறக்குமிடம் அருவி” என்று கூற,

“ஏ செம்ம.. அப்ப அந்த முதல் வரி?” என்று துருவன் கேட்டான்.

“இதயத்தைக் காக்கவும் தாக்கவும் உதவும் மலர்?” என்று மதி கூற,

“ஐ காட் இட்” என்று மீண்டும் இளநகை குதித்தாள்.

“என்னது இளா?” என்று அனைவரும் உற்சாகம் அடைய,

“ஃபாக்ஸ் க்ளௌவ்ஸ்” என்றாள்.

“அப்படினா?” என்று ப்ரியா கேட்க,

“அது பிங்க் கலர்ல க்ளௌவ்ஸ் மாதிரி இருக்குற பூ. அதுலருந்து உருவாக்கும் திரவத்தை உடல்ல ஊசி மூலமா செழுத்தினா இதயம் அதோட செயலையே நிறுத்திடும். ஆனா அதே பூவிலிருந்து உருவாகும் திரவம் கொஞ்சம் போல மருந்தா கொடுத்தா அது இதயத்தை வலிமை பெற செய்யும். அந்தப் பூக்கள் நிறைந்திருக்கும் இடத்துல இருக்கும் அறுவி.. இது தான் முதலிரண்டு வரிகள் சொல்லுது” என்று இளநகை கூறினாள்‌.

“வாவ் செம்மடி” என்று கூறிய துருவன் அந்தத் தகடை வாங்கி அடுத்த வரியைப் படித்தான்.

“மாபெரும் வித்தின் விருட்சத்து” என்று அவன் வாசிக்க,

தகடை பார்த்துக் கொண்டிருந்த ஜான் “விருட்சம்னா மரம். யோகா கிளாஸ்ல விருட்சாஸனா, ட்ரீ போஸ்னு எங்க மேடம் சொல்லிகுடுத்துருக்காங்க” என்று கூறி, “ஓம்..” என்று கத்தியபடி தனது வலது காலை இடது தொடையில் வைத்துக் கைகளைத் தலைக்குமேல் கூப்பிட்டாள்.

“உங்க பொண்டாட்டி மைக் புட்டுகிட்டதுக்கு என் பொண்டாட்டி மைக் புட்டுட்டு போயிருக்கலாம்” என்று அகர்ணனைப் பார்த்து மதி புலம்ப,

“சரி அப்போ வித்துனா என்ன?” என்று ப்ரியா கேட்டாள்.

“வித்துனா விதைனு நினைக்குறேன்” என்று துருவன் கூற,

“அப்பனா பெரிய விதையோட மரம்” என்று இளநகை கூறினாள்.

“ஏ பெரிய விதையோட மரம்னா பாம் ட்ரீ ப்பா” என்று பிரியா கூற,

“பாம் ட்ரீ?” என்று கேள்வியாய் கேட்டனர்.

“ஆமா.. நான் ஒரு ஆர்டிகல்ல படிச்சிருக்கேன். உலகத்துல பெரிய விதை கொண்ட மரம் பாம் ட்ரீனு” என்று பிரியா கூற,

“அப்பனா ஃபாக்ஸ் க்ளோவ்ஸ் மலர்கள் சூழ்நதிருக்குற அருவிக்குப் பக்கத்துல உள்ள பாம் ட்ரீ மேல உள்ள ஏதோ ஒரு பறவையோட கூடுல தான் அடுத்த க்ளூ இருக்கு. அப்ப இருபால் பறவைனா என்னது?” என்று அகர்ணன் கேட்க,

“ஹ்ம்.. யோசிப்போம்.. இவ்வளவு கண்டுபிடிச்சாச்சே.. அதுவும் கிடைக்கும்” என்று மதி கூறினான்.

“சரி அந்தக் கரடி எங்க மதிண்ணா?” என்று இளநகை கேட்க, சுற்றி முற்றி தேடியவன் ஆற்றங்கரையில் மீன் படித்துக் கொண்டிருந்த கரடியைக் கண்டு, “அங்கதான் இருக்கான்” என்றுவிட்டு “ஏ டெடிபேர்” என்று அழைத்தான்.

அதுவும் தன் மீன்பிடு தொழிலை விட்டுவிட்டு அவனுக்கு எடுபிடி தொழில் செய்ய ஓடோடி வர,

“எம்பொண்டாட்டி கூட நான் கூப்ட குரலுக்கு இப்படி வரமாட்டா” என்று கூறினான்‌.

“மவனே அவளுக்குக் காது கேக்காதுனு தைரியத்துல பேசுறடி” என்று விஷ்வேஷ் கூற,

“போட்டுக் குடுத்துறாதடா” என்று பீதியோடு கெஞ்சினான்‌.

“சரி சரி போதும்.. அந்தக் கரடிய கூப்பிட்டு அதுகிட்ட விசாரி” என்று துருவன் கூற,

“அதுக்கு எப்புட்ரா ஃபாக்ஸ் க்ளோவ்ஸ்னு சொன்னா புரியும்? அதுக்கு தமிழ் பெயரேதுமில்லையா?” என்று மதி கேட்டான்.

“அய்யோ எனக்கு அதெல்லாம் தெரியாதே?” என்ற இளநகை,
“சரி சுத்தி நிறையா பிங்க் கலர் பூக்கள் இருக்குற அருவி எங்க இருக்கும்னு கேளுங்க” என்று கூற,

“ம்ம்” என்ற மதி அதையே கரடியிடம் கேட்டான்.

அதுவோ பதில் தெரியாமல் தன் நாவால் அவன் கன்னம் வருடிக் கட்டியணைக்க,

“இவன் என்னடி கரடி கூடக் குடும்பம் நடத்திட்டு இருக்கான்?” என்று அத்தனை நேரம் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜான்விகா தற்செயலாய் திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டவளாய் கேட்டாள்.

“ஆமா.. உன்னைய டைவர்ஸ் பண்ணிட்டு கரடியைக் கட்டிக்கப் போறான்” என்று சைகைகளோடு விஷ்வேஷ் கூற,

“ஏதூஊ? என்னைய டைவர்ஸ் பண்ண போறானா?” என்று கத்தினாள்.

“ஆத்தாடீ..” என்று காதுகளைப் பொத்திக்க் கொண்டவன் தலையில் கொட்டிய ப்ரியா,

“அவ பாட்டுக்கு அமைதியா தான இருந்தா? அவளை உசுப்பேத்தி மதியண்ணாக்கு டின்னு கட்டுறேன்னு பேருல உங்க காதைக் கேடுத்துக்காதீங்க” என்று கூறினாள்.

மதி மண்டையிலேயே ஒன்று பொட்டு குத்துகுத்தெனக் குத்திய ஜான்விகா, “என்னைய டிவோர்ஸ் பண்ண போறியாடா? பக்கி நாயே.. பார்டைமா செத்துபோனப்பவே போடா நாயேனு விட்டுட்டு டாம் க்ரூஸ கல்யாணம் பண்ணிருக்கனும்டா நானு.. வெளக்கெண்ண மவனே” என்று கத்த,

“அடியே.. எவன் என்ன சொன்னாலும் நம்புவியாடி.. அவன் உருட்டுரான்டி.. ஆ.. ஊம குத்தா குத்துறாளே.. அடேய் யப்பா.. காப்பாத்துங்கடா” என்று மதி கத்தினான்.

கடைசியில் கரடி தான் அவனை அவளிடமிருந்து காப்பாத்த வேண்டி நடுவே வந்து நிற்க, “வாடி என் சக்களத்தி.. என்னடி? எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல வந்து நிக்குறியா?” என்று தன் சட்டை கையை மடித்து விட்டுக் கொண்டாள்.

“இந்தக் கிழி கிழிக்குறாளேடா..” என்று அகர்ணன் கூற,

அவனை ஏற இறங்க பார்த்த அகா, ‘அவலாம் பாக்கதான் பால்டப்பா.. பேசினா பீர் பாட்டில்’ என்பதாய் சைகை செய்தாள்.

“அய்யோ கடவுளே.. நாம சீக்கிரம் அந்த அருவிக்குப் போகனும். எல்லாரும் உங்க விளையாட்ட நிறுத்துங்க. இப்பதான் முதல் க்ளூவையே உருப்படியா கண்டுபிடிச்சிருக்கோம். இன்னும் எத்தனை க்ளூ இருக்கோ?” என்று இளநகை ஆயாசமாய் கூற,

பின்பே அனைவரும் அவள் புலம்பலுக்குச் செவி சாய்த்தனர்.

கரடியிடம் அருவிகுறித்து கேட்கும் யோசனையில் அனைவரும் மூழ்கியிருக்க, சட்டென யோசனை பெற்ற அகர்ணன்,

“ஏ ஜான்..” என்றான்.

அவளுக்குதான் ஸ்பீக்கர் போய்விட்டதே! அய்யோவென்று அவள் தோளில் தட்டி அழைத்தவன், “ஜானுக்குதான் கண் பார்வை நல்லா தெரியும்ல? மரத்துல ஏறிக் கண்ணுக்கெற்ற தூரம்வரை எங்கெல்லாம் அருவி இருக்குனு பார்ப்போம்.. ஆளாளுக்கு பிரிஞ்சு போய்த் தேடுவோம்..” என்று கூற,

அவன் என்ன பேசுகின்றான் என்றே புரியாமல் ‘’பே’வென்று பார்த்துக்கொண்டிருந்தாள், ஜான்விகா.

அவள் முழியில் சிரித்த அகநகை அவளுக்குச் சைகைமூலம் விடயத்தைத் தெரியப்படுத்த, “ஓ.. அருவியா? இருங்க பாக்குறேன்” என்றவள் இறங்கிய ஏனி மூலமாகவே மேலேறி மரத்தின் கிளைகளைப் பற்றிக் கொண்டு மேலும் முன்னேறி உயர சென்றாள்.

“அடியே விழுந்துடாதடி..” என்று மதி பதட்டமாய் கத்த,

“அதெல்லாம் கொரிலாகுட்டி வம்சாவளி பாசே.. பெர்பெக்டா மரம் ஏறும்” என்று துருவன் கூறினான்.

மேலே சென்றவள் சுற்றிமுற்றி பார்த்தாள். அவளது கண்களைச் சுருக்காமலே அனைத்தும் அத்தனை துள்ளியமாய் தெரிந்தது அவளுக்கு.

“அட அந்தப் பூ என்ன கலர்ல இருக்கும்னு கேட்கலையே?” என்றபடி பார்த்தவள் கண்ணுக்கு நான்கு இடங்களில் அருவி தெரிந்தது.

“ஏன்டா.. ஒரு காட்டுல ஒரு அருவி போதாதா? நாலு அருவி கட்டனுமா?” என்று வானைப் பார்த்து அந்த அசரீரீயை திட்டியவள், அதற்கான பாதைகளைக் குறித்துக் கொண்டு கீழே வந்தாள்.

“என்ன ஜான் என்ன தெரிஞ்சது?” என்று ப்ரியா சைகை செய்து கேட்க,

“நாலு அருவி இருக்குதுபா” என்று அதற்கான பாதைகளையும் கூறினாள்.

“ஓகே.. அப்பனா ஓகே.. நானும் அவியும் ஒரு பாதைல போறோம்.. நாங்க கண்டுபிடிச்சுட்டா நானே வாசம் பிடிச்சு உங்களைத் தேடி வந்து கூட்டிட்டு போவேன்.. விஷ்கு காது நல்லா கேட்கும். அதனால அவனும் சமாளிச்சிடுவான். ஜான்விகாவுக்கு கண்ணு நல்லா தெரியும். அதனால நீ போற அருவி உச்சிக்குப் போயி சிக்னல் குடுத்துடு. யாரா இருந்தாலும் விஷ் அன்ட் ப்ரீயாவ முதல்ல தொடர்புகொள்ள பாருங்க. அவனுக்குக் காது நல்லா கேட்கும். அவங்களை கண்டுபிடிச்சுட்டாளே போதும்.. மத்த எல்லாரையும் ஈசியா புடிச்சுடலாம்” என்று அகர்ணன் கூற,

“அதெப்டி என்னைக் கண்டுபிடிச்சா மித்தவங்கள பிடிக்க முடியும்?” என்று விஷ்வேஷ் கேட்டான்.

“அட விஷ்..‌ அதான்‌ ப்ரியா இருக்காளே.. ஒரு எனிவேர் டோர் ஆர்டர் போட்டா கொரிலாவோ குட்டிசாத்தானோ வந்து குடுக்க போகுது” என்று இளநகை கூற,

யாவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

“ஆனா எனக்கும் இளாக்கும் எந்தப் பவருமே இல்லையே நாங்க எப்படி உங்கள கண்டுபிடிக்க?” என்று துருவன் கேட்க,

‘இந்த ஜென்மத்துல நீ என் தங்கச்சிய இம்பிரெஸ் பண்ண மாட்டடா' என்று அகா எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.

மற்றவர்களும் அதையே யோசித்திருக்க, “அந்த வெட் ஆனியனெல்லாம் எங்களுக்குத் தெரியும்.. நீங்கப் போங்க நாங்க உங்களைக் கண்டுபிடிச்சுக்குறோம்” என்று மதி கூறினான்.


சரியென்ற முடிவுடன் நான்கு ஜோடிகளும் நான்கு மலைகளை நோக்கித் தனித்தனியே பயணித்தனர்.

-தொடரும்...


 

santhinagaraj

Well-known member
ஜான் கரடி சக்களத்தி சண்டை செம்ம 👌👌👌
டேய் துரு நீ ஏண்டா இப்படி டியூப் லைட் ஆ இருக்க ரெண்டு பேரும் தனியா விட்டா என்ஜாய் பண்ணாம இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்க
 

Mathykarthy

Well-known member
டாம் க்ரூஸா 😯😱 உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியல 🤭

டெடிபேர் ன்னு மதி கூப்பிடுறதும் உடனே கூப்பிட்ட குரலுக்கு அது ஓடி வர்றதும் செம க்யூட்டு 🤩🤩🤩🤩🤩🤩

ஜான் கரடி கூட எல்லாம் சக்களத்தி சண்டை போட கிளம்பிட்டா பாவம் கரடி.....🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒரு பூ கலர ஒழுங்கா கேட்காம போய் கடைசில ஆளுக்கு ஒரு பக்கமா போக விட்டுட்டா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
ஜான் கரடி சக்களத்தி சண்டை செம்ம 👌👌👌
டேய் துரு நீ ஏண்டா இப்படி டியூப் லைட் ஆ இருக்க ரெண்டு பேரும் தனியா விட்டா என்ஜாய் பண்ணாம இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்க
ஜானுக்கும் கரடிக்கும் தான் நல்லா போகுது போலயே🤣

துரு கொஞ்சம் இல்ல க்கா ரொம்ப டியூப் லைட் போகப் போகப் பாருங்க🤣🤣🤣
 
டாம் க்ரூஸா 😯😱 உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியல 🤭

டெடிபேர் ன்னு மதி கூப்பிடுறதும் உடனே கூப்பிட்ட குரலுக்கு அது ஓடி வர்றதும் செம க்யூட்டு 🤩🤩🤩🤩🤩🤩

ஜான் கரடி கூட எல்லாம் சக்களத்தி சண்டை போட கிளம்பிட்டா பாவம் கரடி.....🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒரு பூ கலர ஒழுங்கா கேட்காம போய் கடைசில ஆளுக்கு ஒரு பக்கமா போக விட்டுட்டா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அவளுக்கு பெரிய இங்கிலீஷ் ஈரோயினுன்னு நினைப்பு க்கா 🤣🤣🤣

ஜான் கரடி காம்போ நல்லாருக்கு போலயே🤣🤣🤣

மண்டைல சரக்கு பத்தலைக்கா🤣😂
 
காதை_06


சுற்றிலும் பச்சை பசேலென்றும், ஜில்லென்று ஈரக்காற்று வீசியும், அந்தச் சூழலை இலகுவாகக் காட்டியது.


ஆனால் அந்தச் சூழலில் பயணித்துக் கொண்டிருந்தோரின் மனம் தான், அதற்கு முரணாக யோசனையும் படபடப்புமாய் இருந்தது.


“இருபால் பறவைனா என்ன பொருள்?” என்று துருவன் கேட்க,


“ஆண் பெண் இருபாலும் உள்ள பறவை. கேள்விபட்ட மாதிரி தான் இருக்கு. ஆனா நினைவு வரலை” என்று இளநகை கூறினாள்.


“ஹ்ம்.. இப்பதான் முதல் க்ளூவே கிடைச்சிருக்கு. இன்னும் எத்தனை இருக்கோனு ஆயாசமா இருக்கு” என்றவன் கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து தன் முகத்தில் அழுத்திக் கொள்ள,


“நம்பிக்கையா இருங்க துரு.. நம்ம வீட்டுல விளையாடும்போது ஜாலியா விளையாடுவோம் தானே? அதுபோல நினைச்சு விளையாடுங்க. கண்டிப்பா நாம இதை முடிப்போம்” என்று நம்பிக்கையூட்டினாள்.


அவளைக் கண்டு மெல்ல புன்னகைத்தவன் கண்கள், அவள்மீது அப்போது தான் தனது ரசோபாவத்தை கண்டது.


அழகாய், அறைகை சட்டையும், டிராக் பேண்டும் அணிந்துகொண்டு கையில் ஒரு புத்தகம் மற்றும் பேனாவுடன் யோசனையோடு நடந்து கொண்டிருந்தாள்.


'ப்ச்.. இந்த மாதிரி சீனெரில உன்கூட என் லவ்வ சொல்லி எவ்வளவு ரொமான்டிக்கா போயிருக்கனும்..’ என்று நினைத்தவன் பார்வை இதழ் கடித்து யோசிப்பவள் உதடுகளில் நிலைத்தது.


சட்டெனத் தன் பார்வை போகும் நிலையுணர்ந்து திரும்பிக் கொண்டவனுக்குத்தான் முகம் சிவந்து மூச்சு முட்டியது. அவளை ரசித்திருக்கின்றான் தான். ஆனால் இப்படியெல்லாம் அவன் பார்வைகள் அத்துமீறியதில்லை!


அவள் புத்தாடை உடுத்தி வருகையில் ‘ஆஹா என்னவள் எத்தனை அழகானவள்! அவளுக்கென்றே உருவாக்கியதைப் போல் உள்ளதே!’ என்றெல்லாம் மனதிற்குள் அவன் குதூகலித்ததும் ஏராளம்!


எங்கே தன் ரசனை கூட அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாய் சித்தரித்திடுமோ என்று அவன் அஞ்சிய காலங்களும் ஏராளம்!


ஆனால் இன்று அவன் ரசனைகள் போகும் போக்கு மோகத்துடன் கைகோர்த்தல்லவா பயணம் புரிகிறது! அந்தப் புதுவகை உணர்வில் மூச்சு வாங்கி பக்கவாட்டாய் திரும்பித் தன் தலை கோதியவனை இதோடு இரண்டாம் முறையாக அழைத்திருந்தவள், அவன் தோள்களைத் தட்டி அழைத்தாள்.


உள்ளுக்குள் சில்லென்ற உணர்வைக் கொடுத்த அவள் பஞ்சு விரல்களின் ஸ்பரிசம் கூட அவனுக்குள் இன்பத் தீத்துகள்களைத் தூவியதை அவனால் தவிர்க்க இயலவில்லை!


மெல்ல திரும்பியவன் கண்டு, “என்னாச்சு மூச்சு வாங்குதா? கொஞ்சம் உக்காந்துட்டு போகலாமா?” என்று அவள் கேட்க,


இடவலமாய் தலையாட்டியவன், “எதுக்குடா கூப்பிட்ட?” என்றான்.


மனதிற்குள் ‘என் தவிப்புகள் உன்னைச் சென்றடையவே இல்லையாடி’ என்ற செல்லச் சிணுங்களும் எழத்தான் செய்தது அவனுக்கு! ஆனால் அவனே அறியாத ஒன்று, ‘சிலநேரம் ‘டி’ போடுறாங்க. சிலநேரம் ‘டா’ போடுறாங்க. அப்ப அப்ப வித்தியாசமா பாக்குறாங்க. தப்பா தெரியலை.. ஆனா அது ஏதோ வித்தியாசமா இருக்கே’ என்று அவள் தற்போது கூட நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றாள் என்பது தான்!


“மா..இளா..” என்று அவன் அழைக்க,


சட்டென நிலை பெற்றவள், “இல்லை.. இந்தபக்கம் ரெண்டு பாதை போகுது.. எந்தப் பாதைல போகலாம்?” என்று கேட்டாள்.


இரண்டு பாதையையும் பார்த்தவன், “தெரியலையே..” என்றபடி சுற்றிமுற்றி பார்த்தான்.


“வேணும்னா ஆளுக்கொரு பாதைல போவோமா?” என்று அவள் கேட்க,


அவன் பதறித் தான் போனான்.


“என்னடி விளையாடுறியா? நீபாட்டுக்கு போய்த் தொலைஞ்சுட்டா நான் என்ன பண்ணுவேன்? சும்மா இரு.. எங்கயா இருந்தாலும் ஒன்னாவே போகலாம்” என்றவன்,


அருகில் உள்ள மரத்தைப் பார்த்து, “நான் மேல ஏறிப் பாக்குறேன்” என்றபடி அதை நோக்கிச் சென்றான்.


அத்தோ பரிதாபம்! அவனுக்குத்தான் மரமேற தெரியாதே!


“ப்ச்..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டவன் அருகே அவள் வர,


“எ..எனக்கு மரமேற வராது.. நான் ஏத்திவிடுறேன்.. நீ பாரு” என்று திக்கித்திணறி கூறினான்.


அதில் லேசாய் சிரித்துக் கொண்டவள் அவன் அருகே வந்து ‘எப்படி ஏறனும்' என்பதாய் பார்க்கவும், ஒற்றைக்காலை பாதியாக மடக்கி நன்கு ஊன்றி நின்றவன், “ஷோல்டர புடிச்சுட்டு கால்ல ஏறுடா” என்க,


விழிகள் தெரிக்க பார்த்தவள், “க..கால் வலிக்கப் போகுது” என்றாள்.


அவளது புசுபுசு தோற்றம் கண்டு மெல்ல சிரித்தவன், “பேலன்ஸ் பண்ணிடுவேன்டி.. ஏறு” என்று அவன் கூற,


பயத்துடன் பார்த்தபடி மரத்தை ஒரு கையால் பற்றிக் கொண்டு ஒற்றை காலை அவன் தொடை மீது வைத்தாள்.


“ஏறவா?” என்று அவள் கேட்க,


அவள் மற்றைய கரத்தைப் பற்றித் தன் தோள்மீது வைத்தவன் “ஏறு” என்றான்.


'ஆண்டவா' என்று வேண்டிக் கொண்டு ஏறியவள் அவனைப் பார்க்க, “அந்தக் கிளைய பிடிச்சு ஏறு” என்று கண் காட்டி கூறினான்.


அவனைப் பார்த்தபடியே மெல்ல தலையாட்டியவள் அந்தக் கிளையைப் பற்றி ஏற முற்பட, தாவி ஏற முடியாது சற்றே தடுமாறினாள்.


“என் ஷோல்டர்ல நல்லா பேலன்ஸ் பண்ணி அந்தக் கிளைய ஒரு கைல பிடிச்சு எம்பு” என்று துரு கூற,


அதற்கும் உம் கொட்டியவள் அவன் சொன்னபடி எம்ப அவள் கால்களைப் பற்றி நிமிர்ந்து நின்றவன் அவளை மேலே தூக்கி விட்டிருந்தான்.


கிளைகளை நன்கு பற்றி அதில் ஏறிக் கொண்டவள் அதிர்ந்து அரண்டு அவனை நோக்க,


“ஆர் யூ ஓகே?” என்றவன் தான் உண்மையில் பதறித் தெரிந்தான்.


“நி..நீங்க ஓகேவா?” என்று அவள் கேட்க,


‘அய்யோ… கொல்லாதடி' என்று நினைத்துக் கொண்டவன் “ஓகேதான்டா. அங்க இருந்து ஏதும் தெரியாது. இன்னும் ஒரு கிளை மேல ஏறி இல்லைனா அந்தக் கிளைய பிடிச்சு எழுந்து நின்னு பாரு. பயப்படாத விழுந்தா நான் புடிச்சுக்குறேன்” என்று தைரியமூட்டினான்‌.


பீதியுடன் தலையாட்டியவள் எழுந்து நின்று பார்க்க, தூரத்தில் அந்த அருவி தெரிந்தது. அதற்கான பாதையையும் ஓரளவு கண்டுகொண்டவள், “பார்த்துட்டேன்” என்று கூற,


“மெல்ல உக்காந்துட்டு பிறகு இறங்கு” என்றான்.


மீண்டும் அதே கிளையில் அமர்ந்து கால்களை ஒரே பக்கமாகத் தொங்க விட்டவள், “எப்படி இறங்க?” என்றாள்.


“ஒரு காலை ஷோல்டர்லயும் இன்னொரு காலைக் கைலயும் வச்சு என் ஷோல்டர பிடிச்சு இறங்கு” என்று அவன் கூற,


“ஆஹாங் ஆஹாங்.. நீங்கத் தள்ளுங்க நான் குதிச்சுடுறேன்” என்றாள்.


“ஏ கைய கால உடைச்சுகிட்டா என்னால இந்தக் கரடுமுரடான பாதைல உன்னைத் தூக்கிட்டு போகமுடியாதுடி. ஒழுங்கா சொல்றதை செய்யு” என்று அவன் கூற,


‘ஹாங்..’ என்று சிணுங்கியவள் அவன் சொன்னபடி செய்தாள்.


அவன் தோளைப் பற்றிக் கொண்டு இறங்குவதற்கு குதிக்க, அவள் இடை பற்றிப் பிடித்துக் கொண்டு கீழே இறக்கினான்.


அந்தச் செயலில் இருவரும் மனதில் இனம் புரியாத உணர்வை உணர்ந்தனரோ?! அவளைக் கீழே இறக்கி விட்டதும் பட்டெனத் தன் கைகளை எடுத்துக் கொண்டவன் திரும்பிட, பெண்ணவள் புரியாத படபடப்புடன் நின்றாள்.


உள்ளத்தில் தடதடவென்று குதிரை குதித்து ஓட, அதைக் கடிவாளமிட்டு அடக்கிடும் வழி அறியாமல் அவனைக் கண்டாள்.


சிரம் தாழ்த்தி அவள் பார்வையை முற்றுமாகத் தவித்திருந்தவன், ‘அய்யோ.. என்ன நினைப்பா இப்ப? நாளைப் பின்ன லவ்வுனு போய்ச் சொன்னா வேணும்னே தான் தூக்கிவிட்டேன்னு என்னைத் தப்பா நினைச்சுட மாட்டா? அடேய் துருவா..’ என்று எண்ண,


அவன் முகம் பிரதிபலிக்கும் சங்கோஜம் அவளுள் ஒரு சிலிர்ப்பை தூண்டியது.


'நான் எதும் சொல்லுவேன்னு பயப்படுறாங்களோ?’ என்று நினைத்து “த்..துரு” என்றவள், கண்களை அழுந்த மூடித் திறந்து அவன் “ஐம்..” என்று ஏதோ கூற வரும் முன்,


“இந்தப் பாதைதான். போவோமா?” என்றாள்.


அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன் காதல் மனம், ‘எந்தப் பாதையோ? வாழ்நாள் முழுக்க போலாமா?” என்று எண்ண,


“போலாம்” என்றாள்.


சட்டென நிமிர்ந்தவன் கண்கள் காதல் உணர்ச்சிகளில் கலங்கி தெரிய, அதில் தன்னிடமிருந்து எதையோ அவனிடம் தொலைக்க துடித்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு முன்னே நடந்தாள்.


அமைதியான அந்தப் பயணத்தின் முடிவில் அழகாய் அந்த நீர்வீழ்ச்சி இருவரின் விழிகளையும் ரசனைகளையும் மொத்தமாய் களவாடிக் கொண்டது.


“வாவ்..” என்று அவள் வாய்விட்டுக் கூற,


“ரொம்ப அழகா இருக்குல்ல இந்த இடம்?” என்று கேட்டான்.


ஆமென்று தலையசைத்தவள் அந்த அருவியைச் சுற்றி முற்றி பார்த்து, “யாஹூ” என்று குதிக்க, அதில் திடுக்கிட்டுத் திரும்பியவன்,


“ஏன்டி?” என்றான்.


“துரு.. சுற்றி பாருங்க.. ஃபாக்ஸ் க்ளௌஸ்” என்று அவள் உற்சாகமாகக் கூற,


தானும் சுற்றி பார்த்தவன், “இந்தப் பிங்க் கலர் பூ தான் ஃபாக்ஸ் க்ளௌஸா?” என்றான்.


“ஆமா.. இதுதான் அது. நம்ம விஷ்க்கு இன்ஃபோ பாஸ் பண்ணனும்” என்று அவள் கூற,


“ம்ம்..” என்றபடி சுற்றி முற்றி பார்த்தவன் “ஆனா பனை மரத்தையே காணும்?” என்றான்.


தானும் சுற்றி முற்றி பார்த்தவள் “ஆமா..” என்று ஏமாற்றமாய் கூற,


“சில்டா.. தேடிப்பார்ப்போம்” என்றான்.


இருவருமாய் தேடி முன்னேற, “ப்ச்.. என்னால முடியலை.. கால் வலிக்குது” என்று அங்குள்ள பாறை ஒன்றின் மீது அமர்ந்தாள்.


தானும் அவள் அருகே அமர்ந்து தனது கால்களைப் பிடித்துக் கொண்டவன், ஒரு பெருமூச்சு விட்டு, “என்னாலையும் முடியலைமா” என்றான்.


“இப்ப இது தான் அந்தக் குறிப்புல சொன்ன இடமானு கன்ஃபார்மா தெரியாம அவங்களை கூப்பிடவும் முடியாது” என்று கூறியவள் அப்படியே அந்தப் பாறையில் சரிந்து படுத்துக் கண்களை மூடிக் கொள்ள,


கரங்களைப் பின்னே ஊன்றிச் சரிந்து அமர்ந்தவன் தலையைத் திருப்பி அவளைக் கண்டான்.


முகம் சுருக்கி படுத்திருந்தவள் பாதங்களை அசைக்க, அவள் கால்களைப் பற்றிச் சற்றும் தயங்காமல் அவளது ஷுக்களை அவிழ்த்தான்.


சட்டெனப் பதறி எழுந்தவள் “துரு.. விடுங்க” என்று கூற,


“ஷுஸ் ரொம்ப டைட்டா இருக்கும் இளா.. கொஞ்ச நேரம் கலட்டி வச்சுட்டு போட்டுக்கோ” என்றபடி அவற்றைக் கலட்டினான்.


“இல்லை நானே..” என்றவள் அவன் அதைக் கலட்டியதும் “ஸ்ஸ்..” என்று காலைப் பற்றிக் கொள்ள, முதலில் வின் வின்னென்று தெரித்த வலி மெல்ல மெல்ல மட்டுப்பட்டது.


தானும் தனது ஷுவை கலட்டி வைத்தவன் அந்தப் பாறையில் படுக்க, தன் பாதங்களில் உள்ளம் கை வைத்து அழுத்தியபடி அமர்ந்திருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தான்.


கால்களை இடவலமாய் ஆட்டிக் கொண்டு ஒரு கையைத் தலைக்கு அடியிலும் மறு கையை நெற்றியிலும் வைத்துப் படுத்துக் கொண்டிருந்தவன் மெல்ல தன் நெற்றியிலிருந்த கரத்தினை விலக்கி, தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளைப் பார்த்து, ‘என்ன’ என்பதாய் புருவம் ஏற்றி இறக்கினான்.


அதில் சற்றே திடுக்கிட்டவள் ஒன்னுமில்லை என்பதாய் தலையசைத்து திரும்பிட,


சட்டென எழுந்து, “அருவில கால் நனைப்போமா?” என்றான்.


சிறுபிள்ளை போல் அவன் அவ்வாறு கேட்கவும் லேசாய் சிரித்தவள், சரியென்று தலையாட்ட, மெல்ல எழுந்து தன் சட்டையை உதறிக் கொண்டு அவளுக்குக் கைக்கொடுத்தான்.


தானும் எழுந்தவள் அவனோடு நடந்து அந்த அருவி நீர் கீழே விழும் குளம் போன்ற பகுதிக்குச் சென்றனர்.


பார்ப்பதற்கே வெள்ளியை உருக்கிக் கொட்டுவதைப் போல் காட்சி தந்த அவ்விடம் கண்களுக்கும் உடலுக்கு ஒரு குளிர்ச்சியை கொடுத்தது.


இருவருமாய் அந்த நீரில் கால் வைக்க, அதன் குளிர்ச்சியில் அவன் கரங்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு, “ஸ்ஸ்.. ஜில்லுனு இருக்கு” என்றாள்‌.


அவளைப் பக்கவாட்டாய் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவன், “இப்ப தான் காலுக்கு நல்லா இருக்கு” என்றபடி மேலே நோக்க, அப்படியே விழிகள் விரித்து நின்றான்.


அவன் அமைதியில் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அவனது அதிர்ச்சியில் மேலே நோக்கியவள், “ஏ பாம் ட்ரீ” என்று துள்ள,


அவள் கரம் பற்றியிருந்தவன் அதில் தடுமாறி, “ஏ..ஏ..” என்று தண்ணீருக்குள் விழுந்தான்‌. விழும் நேரம் அவள் கரத்தை அவன் விட்டிருக்க, அவள் பிடிப்பதற்குள் தண்ணீருக்குள் விழுந்து, நீர் திவளைகளை வாரி அவள் மீதே இறைத்திருந்தான்.


-தொடரும்...
 

santhinagaraj

Well-known member
அப்போ இல்லாத ஒருவன் ரெண்டு பேரும் வந்திருக்கிற அருவி தான் க்ளூ இருக்கிற அருவியா?
அடேய் லூசு துரு விழும் போது ஏண்டா இளா கைய விட்ட அப்படியே சேர்ந்து விழுந்து இருக்கலாம்ல 🙄🙄
 

Saranyakumar

Active member
இளாவுக்கும் துருவுக்கும் எப்ப கெமிஸ்ட்ரி வெர்க் அவட் ஆயி எப்ப காதல் மழையில் நனையறது
 
அப்போ இல்லாத ஒருவன் ரெண்டு பேரும் வந்திருக்கிற அருவி தான் க்ளூ இருக்கிற அருவியா?
அடேய் லூசு துரு விழும் போது ஏண்டா இளா கைய விட்ட அப்படியே சேர்ந்து விழுந்து இருக்கலாம்ல 🙄🙄
ஆமா க்கா.. இதுதான் க்ளூ இருக்குற அருவி..

நாந்தான் சொன்னேனே அவன் இந்த சப்ஜக்ட்ல ரொம்ப வீக்னு🤭🤭😂😂

நன்றி அக்கா ❤️
 
இளாவுக்கும் துருவுக்கும் எப்ப கெமிஸ்ட்ரி வெர்க் அவட் ஆயி எப்ப காதல் மழையில் நனையறது
இளாவா பாத்து எதாவது பண்ணினாதான் உண்டு க்கா😂😂
 
காதை_07


பாவையவளை கோபமாய் பார்த்தபடி அந்தக் குளத்தின் அருகே உள்ள பாறையைப் பிடித்துக் கொண்டவன் மேலேற முயற்சிக்க,


“நா.. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுங்களா?” என்று இளநகை கேட்டாள்.


“ஒன்னும் வேணாம் தெய்வமே” என்றபடி எழுந்தவன்,


“காலை மட்டும் தான்டி நனைக்கலாமானு கேட்டேன்.. இப்படி என்னை மொத்தமா குளிப்பாட்டிட்டியே” என்று கூறியபடி கைகளை உதற,


“சாரி துரு.. மேல பாம் ட்ரீய பார்த்து எக்ஸைட் ஆயிட்டேன்” என்று பாவம்போல் கூறினாள்.


தன் சட்டையைக் கலட்டி அதிலிருந்த தண்ணீரை அவன் பிழிய, அவன் செயலில் சற்றே திணறியவள், சட்டெனத் திரும்பி நின்று கொண்டு சாதாரணமாக மேலே பார்ப்பதைப் போல் காட்டிக் கொள்ள, தற்செயலாய் அவள் புறம் திரும்பியவன் அப்போதே தனது செயல் உணர்ந்தான்.


மெல்லிய வெட்கம் அவனில் அப்பிக் கொள்ள, அதில் தன் ஈர தலையைக் கோதி சிலுப்பிக் கொண்டவன் அச்சட்டையையே மேலே போர்த்திக் கொள்வதைப் போல் போட்டுக் கொண்டு,


“அருவிக்கு மேல போகப் பாதை இருக்கானு பார்க்கனும்டா. மேலே போயிட்டாலே நாம மித்தவங்களை ஈசியா கூப்பிடலாம்” என்றான்.


மெல்ல மெல்ல தயங்கியபடி திரும்பியவள் அவன் தன் தயக்கத்தை உணர்ந்து செயலாற்றியது புரிய, சிறு பெருமூச்சுடன் “ம்ம்.. எப்படி போக?” என்றாள்.


“உன்னைக் கேட்டா நீ என்னைக் கேட்குற?” என்றவன் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டான்.


அவன் புறமாகச் செல்லும் தன் பார்வையை முற்றுமாகத் தவிர்க்க முயன்றவலும் தேடிப் பார்க்க, அருவிக்கு ஒருபுறம் பாறைகளே சற்று கரடு முரடான பாதை அமைத்திருப்பது தெரிந்தது.


இருவருமாய் ஒன்று போல் “அதோ..” என்று கரம் நீட்டி, அதில் சிரித்துக் கொள்ள, “போவோமா?” என்றான்.


இளநகை மெல்ல தலையசைக்க, “எவ்வளவு எக்ஸைட்டானாலும் அதை உள்ளுக்குள்ளயே வச்சுக்க.. நீ உணர்ச்சிவசத்த அடக்கு..” என்று வடிவேல் பானியில் கூறியவன், “அங்கருந்து எனக்கு ஜலக்கிரிடைலாம் கொடுத்துடாத தாயி..” என்று கெஞ்சும் குரலில் கூற,


அதில் வாய்விட்டுச் சிரித்தவள் அருள் பாளிப்பது போல் கைக்காட்டி, “தாங்கள் கேட்பதையே கொடுத்திட சித்தமாய் உள்ளோம்” என்று சிரித்தாள்.


அதில் “வாலு..” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “வா” என்க,


இருவருமாக அப்பாதையில் ஏறினர்.


மிகவும் சிரமமாக இருந்த பாதை இருவர் கரங்களையும் கோர்த்துக் கொள்ள வழிவகுத்திட, சில, பல நிமிடங்களில் அருவியின் உச்சியை அடைந்தனர்.


அங்கிருந்து சுற்றி முற்றி பார்த்தவன், “டேய் வெளக்கெண்ண..” என்று கத்த,


அருகில் இருந்தவள் அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.


“அடேய் தீபட்டி தலையா.. துருவனும் இளாவும் அந்த அருவிய கண்டு பிடிச்சுட்டோம்” என்று துருவன் கத்த,


இளநகை அவனைப் பேவென்று பார்த்தாள்.


“என்ன லுக்கு? நீயும் கத்து.. அப்பதான் வருவானுங்க” என்று கூறியவன், “டேய் டபரா வாயா.. விஷ்வேஷ்வரா..” என்று கத்த,


“விஷ்.. ப்ரியா..” என்று இளநகையும் கத்தினாள்.


பத்து நிமிட தொடர் கதறலுக்குப் பின், “வாய மூடுடா நாயே” என்று விஷ்வேஷின் குரல் பின்னிருந்து கேட்க, இருவரும் திரும்பினர். ப்ரியாவிடமிருத்து வாங்கிய ‘பேம்பூ காப்டர்' உதவியுடன் பறந்து வந்து சேர்த்திருந்தனர்.


“என் மண்டை தீப்பெட்டி போலவாடா இருக்கு? அதென்ன வாயு? ஆங்..‌டபரா வாயு.. அப்படியாடா இருக்கு என் வாயு” என்று விஷ்வேஷ் கத்த,


“ரொம்ப முக்கியம் இப்ப இது?” என்று கேட்ட ப்ரியா, “அடுத்த க்ளூ கிடைச்சுதா?” என்றாள்.


“அடியே.. உன் புருஷன இன்சல்ட் பண்ணவன சட்டைய பிடிச்சு கேட்காம..” என்று விஷ் ஆவேசமாய் பேச,


“இந்தா நல்லா பிடிச்சு பிழிஞ்சு கேளு” என்று ஈர சட்டையைச் சுரீரென அவன்மீது தூக்கி வீசினான்.


“அம்மே..” என்று அது முகத்தில் மோதிய வலியில் கத்தியவன் அடுத்து பேசுவதற்குள், “அய்யோ டேய்.. விஷ்வேஸ்வரா… காப்பாத்துடா” என்ற சத்தம் விஷ்வேஷின் காதுகளை மரணிக்க வைத்தது.


“வந்துட்டாடா என் காத வாங்குறதுக்குனே..” என்று காதுகளைப் பொத்திக் கொண்ட விஷ் மற்றும் மற்றவர்களும் மேலே பார்க்க, நான்கு ஃபீனிக்ஸ் பறவைகள் தத்தமது வாயில் ஒருவரை கவ்விக் கொண்டு வந்து கொண்டிருந்தது.


அகநகை, அகர்ணன் மற்றும் மதிக்கு அந்தப் பறவைகள் தங்களை சரியான அருவிக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பது புரிந்தது. ஆனால் ஜான்விகாவிற்கு புரியவுமில்லை, புரியவைக்க இயலவுமில்லை.


அதன் விளைவே கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டு வருகின்றாள்.


பறவைகள் நால்வரையும் கீழே இறக்க, அரண்டடித்து விலகி அதனுடன் வாய் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.


“பேசாம இவளைக் கொன்னுட்டு மதிக்கு வேற பொண்ணு பாத்துடுவோம்டா..” என்று விஷ்வேஷ் கூற,


“வேற பொண்ணுக்கு என்ன அவசியம்.. அந்தோ வருதே” என்று துருவன் கூறினான்.


அனைவரும் திரும்பிப் பார்க்க, ஓடோடி வந்த கரடி மதியை கட்டிக் கொண்டு நாவால் அவன் கன்னம் வருடித் தன் அன்பை பொழிந்தது.


அதில் அனைவரும் கலகலவெனச் சிரிக்க, தனது வாக்குவாதத்தை ஃபீனிக்ஸிடம் முடித்துக் கொண்டு வந்த ஜான்விகா, “நீ ஏன்டா பாடி பில்டிங்கு போஸ் குடுக்குற மாதிரி நிக்குற?” என்று கேட்டுவிட்டு மறுபக்கம் பார்க்க, விஷ்வேஷ் அவன் சட்டையை உதறிக் கொண்டிருந்தான்.


“அட புத்தி கெட்ட பிஸ்கெட்டுகளா..” என்று எண்ணிய ஜான் ப்ரியாவிடம் சென்று ஒரு புது சட்டையை வரவைத்துக் கொண்டு அவனிடம் நீட்டி, “இதுதான் சாக்குனு ஆள் முன்னாடி ஃப்ளீம் காட்டுறியாக்கும்” என்க,


“அடியே..” என்று அவள் வாயை மூடியவன், ப்ரியாவிடமிருந்து டேப்பை வாங்கி அதை ஜான்விகாவின் வாயில் ஒட்டி,


"ஷ்ஷ்” என்பதுபோல் வாயில் விரல் வைத்தான்.


அவனவள் சற்றே தள்ளி நிற்பதில் பெருமூச்சு விட்டவன் அதை உடுத்திக் கொள்ள,


கரடியிடமிருந்து வந்த மதி, “க்ளூ கிடைச்சுடுச்சா?” என்று கேட்டான்.


“இல்லைடா.. அந்த இருபால் பறவை எதுனு தெரியலை.. இளா படிச்ச மாதிரி தான் இருக்குனு சொல்றா.. எதும் வித்தியாசமான பறவை கண்ணுக்குப் படுதானு பாருங்க.. அதைப் பார்த்தா எதும் நினைவு வருதானு பார்ப்போம்” என்று துருவன் கூற, அனைவரும் சரியென்று தேடினர்.


'எதுக்கு எல்லாம் விட்டத்தயே பாத்துட்டு நடக்குறானுங்க..? டேய் வுழுந்து முட்டிய கிட்டிய பேத்துகிடாதீங்கடா.. இதைச் சொன்னா நம்மள பைத்தியம்னு சொல்வானுங்க.. எனக்குக் காது இல்லை அதுகளுக்கு புத்தி இல்லை’ என்று மனதோடு புல்பியபடி சுற்றி முற்றி பார்த்த ஜான்விகா கத்தி அழைக்க முயற்சிக்க அத்தோ பரிதாபம் அவள் வாய்தான் பூட்டிடப்பட்டுள்ளதே.


முன்னே சென்று கொண்டிருந்த தன் கணவன் தோளை அவள் சுரண்ட, “ஜானுமா.. கம்முனு வா..” என்றபடியே விட்டத்தில் எதைத் தேடுகின்றோம் என்றே தெரியாமல் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.


'அட லூசு புருஷா’ என்று எண்ணியவள் நங்கென்று அவன் மண்டையில் கொட்ட,


“ஆ…” என்று கத்தினான்.


“அட ராமா.. புருசனும் பொண்டாட்டியும் சிப்ட்டு போட்டுச் சாவடிக்குறானுங்களே” என்று புலம்பியபடி திரும்பிய விஷ்வேஷ்,


“என்னடா உங்களுக்குப் பிரச்சினை?” என்று கத்த,


“ஏன்டி கொட்டின?” என்று அழாத குறையாக மதி கேட்டான்.


தூரத்தில் குறிப்பிட்டு “ம்ம்..ம்ம்..” என்க,


சடாரென்று அவள் வாயில் ஒட்டியிருந்த டேப்பை உறிந்தான்.


“அடப்பாவி புருஷா..” என்று மீண்டும் அவள் கத்த,


“ஈஸ்வரா..” என்று விஷ்வேஷ் காதைப் பொத்த,


“சாரிடி.. நீ பண்ணதுக்கு நான் பண்ணது முடிஞ்சு.. அகைன் நோ ரிவென்ஞ்” என்று மதி கெஞ்சினான்.


“இதுக புருஷன் பொண்டாட்டியா இல்ல பால்வாடி கொழந்தைகளாடா?” என்று அகர்ணன் புலம்ப,


துருவன், “இதுலாம் கம்மி அகர்ணன்.. இதுக அலுச்சாட்டியமெல்லாம் ரெம்ப சாஸ்தி.. ஷப்பா தாங்க முடியாது” என்றான்.


அங்கு “சரி பொழச்சு போ” என்ற ஜான்விகா தூரத்திலிருக்கும் மரத்தைக் காட்டி, “அதுக்கு மேல ஒரு பறவை தெரியுதா?” என்க,


அனைவரும் அதைத் தேடி தங்கள் கண்களைச் சுழல விட்டனர்.


“ஹேயா.. கிரோஸ்பீக்” என்று இளநகை கூச்சலிட,


“அந்தோ அந்தப் பறவை பேர் (பெயர்) ரோஸ் பிரெஸ்டட் கிரோஸ்பீக் (rose breasted grosbeak). அதோட ஒரு பக்கம் ரெட் கிளர்ல இருக்கு. அது ஆண் பகுதி, இன்னொரு பக்கம் யெல்லோ கலர்ல இருக்கும். அது பெண் பகுதி” என்று ஜான்விகா கூறினாள்.


“உனக்கு எப்புடி ஜானுமா இதெல்லாம் தெரியும்?” என்று மதி சைகையோடு வினவ,


“யாரோ வாட்ஸாப் ஸ்டேடஸ்ல வச்சு பார்த்துருக்கேன்டா” என்றாள்.


“பாரேன்.. ஸ்டேடஸ் கேப்ல ஒரு அறிவு” என்று அகர்ணன் கூற,


அந்த உயர்ந்த பனை (lodoicea muldivica) மரத்தின் உச்சியில் சிறு கூடமைத்து அதில் அப்பறவை அமர்ந்திருப்பது ஜான்விகாவின் கண்களுக்கு மிகத் துள்ளியமாகத் தெரிந்தது.


“ஏ அம்மாடி.. என்னா ஒசரத்துல இருக்கு” என்று ப்ரியா கூற,


“என்ன ப்ரியா நீ? நீ நினைச்சா கொண்டு வர முடியாததா?” என்று துருவன் கேட்டான்.


தன் கைகளைத் தட்டிய அகநகை, மேலே சென்று அதை எடுப்பதற்கு ஏதுவானதை வரவழைக்கும்படி சைகை செய்ய,


“அவ்வளவு பெரிய ஏணிக்கு எங்க போக?” என்று கேட்டாள்.


“ப்ரியா.. நம்மூருலலாம் மரமேறி தேங்கா பறிக்க ஒரு கயிறுபோலக் கட்டிப்பாங்கள்ல? அது குடு ஏறிடுவோம்” என்று விஷ் கூற, சில நிமிடங்களில் அதைக் கொண்டு வந்தாள்.


வழக்கம்போல் நமக்கு மரமேறவென்றே வாய்த்த ஜீவனான ஜான்விகா புலம்பியபடி ஏறி அதன் கூட்டிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து வந்து கொடுத்தாள்.


அதில் உள்ள ‘எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்' என்ற தகடை அகா அழுத்த ‘உலகின் மெய்யென்ற பொய்’ என்றிருந்தது.


அதையே யாவரும் உச்சரிக்க, “Sun rises in the east” என்று அகர்ணன் கூறினான்.


அந்தப் பெட்டியை திறக்கும் சக்கரம் மேலே எழும்பி ‘கிரிக்’ என்ற ஓசையைக் கொடுக்க, அதை அகா திருகியதும் பெட்டி திறந்து கொண்டது.


'ஏ எப்புட்ரா' என்பதைபோல் யாவரும் அகர்ணனை நோக்க, “அதுதான யூனிவர்சல் ட்ரூத்..? ஆனா உண்மைலயே சூரியன் உதயமும் ஆகுறதில்லை, அஸ்தமனமும் ஆகுறதில்லை. பூமியோட சூழற்சிக்கு ஏற்பத் தான் அப்படி தென்படுது” என்று அகர்ணன் கூறினான்.


“அப்ப நமக்குச் சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது பொய்யா கோபால்?” என்று மதி கேட்க,


“கண்டிப்பா பொய் தான்.. ரிங்கா ரிங்கா ரோஸஸ் கூட ஒரு ஆங்கில ஒப்பாரி பாடல் தான்” என்று அகர்ணன் கூறினான்.


“அடப்பாவிகளா.. இம்பூட்டு இருக்காடா? நீங்க அறிவாளி தான் அகர்ணன்” என்று துருவன் கூற,


“எங்க மாமா எப்போமே அறிவாளி தான்.. கல்யாண விஷயத்துல மட்டும் கோட்டை விட்டுட்டாரு..” என்று இளநகை கூறினாள்.


அதில் அகா அவளை முறைக்க சிரித்தபடி தகடை எடுத்துத் துருவன் கையில் கொடுத்துப் படிக்கக் கூறினாள்.


‘ஈரைம்பது அடிதாண்ட,

ஓடுநீர் ஏந்தலாகும்

அயிலையின் காவலில்

ஆறடி ஆழத்தில்

ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூலேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே!’


என்று இளநகை வாசிக்க, யாவரும் புரியாத மொழி படம் பார்த்ததைப் போல் விழித்தனர்.


-தொடரும்...
 
Last edited:

santhinagaraj

Well-known member
பத்தடி தூரத்தில் இருக்கும் குளத்தில் அயிலை மீன் காவலில் ஆறடி ஆழத்தில் நத்தை இல்ல ஆமை கூட்டில் அடுத்த க்ளூ இருக்கா
 

Mathykarthy

Well-known member
As usual நண்பர்களோட கலாட்டாவோட கலகலப்பான பதிவு 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰

பினிக்ஸ் பறவை வாய்ல தூக்கிட்டு வர்றது நல்ல கற்பனை..... 👌🤣

க்ரோஸ் பீக்கா 😯 இப்போ தான் கேள்விப் படுறேன்....
சூப்பர் தகவல்... 👌👏

ஈரைந்து- பத்தடி தாண்டி அருவி நீர் தேங்குற இடம் குளம்., அங்க ஆறு அடி ஆழத்தில மீன்கள் கூட இருக்க நத்தை கூட்டில அடுத்த க்ளூ இருக்கு... 🧐🧐🧐

ஆமை எப்போ வேணா தண்ணியை விட்டு வெளிய வரும் மண்ணுலயே கூட இருக்கும்..... தவளை., முதலைக்கு ஓடு இல்லை அப்போ நத்தையா இருக்கலாம்... 🤔
 
பத்தடி தூரத்தில் இருக்கும் குளத்தில் அயிலை மீன் காவலில் ஆறடி ஆழத்தில் நத்தை இல்ல ஆமை கூட்டில் அடுத்த க்ளூ இருக்கா
Super kka 😍
 
As usual நண்பர்களோட கலாட்டாவோட கலகலப்பான பதிவு 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰

பினிக்ஸ் பறவை வாய்ல தூக்கிட்டு வர்றது நல்ல கற்பனை..... 👌🤣

க்ரோஸ் பீக்கா 😯 இப்போ தான் கேள்விப் படுறேன்....
சூப்பர் தகவல்... 👌👏

ஈரைந்து- பத்தடி தாண்டி அருவி நீர் தேங்குற இடம் குளம்., அங்க ஆறு அடி ஆழத்தில மீன்கள் கூட இருக்க நத்தை கூட்டில அடுத்த க்ளூ இருக்கு... 🧐🧐🧐

ஆமை எப்போ வேணா தண்ணியை விட்டு வெளிய வரும் மண்ணுலயே கூட இருக்கும்..... தவளை., முதலைக்கு ஓடு இல்லை அப்போ நத்தையா இருக்கலாம்... 🤔
நன்றி அக்கா 🥰😍

நானும் கதைக்காக தேடும்போது தான் பாத்தேன் க்கா😍

சூப்பர் கெஸ் க்கா ❤️
 
காதை_08


‘ஈரைம்பது அடிதாண்ட,

ஓடுநீர் ஏந்தலாகும்

அயிலையின் காவலில்

ஆறடி ஆழத்தில்

ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூலேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே' என்ற வரியை மாறி மாறி அனைவரும் வாசித்துக் கொண்டிருக்க,


“ஈரைம்பதுனா நூறு அடி, ஓடுநீர்னா ஆறு.. இந்த ஏந்தல்னா என்ன?” என்று ப்ரியா கேட்டாள்.


“தெரியலையே ப்ரீ” என்று அகர்ணன் கூற,


அனைவருய் அகநகையையே குறுகுறுவென பார்த்தனர்.


அனைவரும தன்னைப் பார்ப்பதைக் கண்டு பீதியான அகா,


‘ஆத்தீ.. நம்மலைதான் பாக்குறானுங்க.. யோசி அகா யோசி…’ என்று மனதிற்கு கூறிக் கொண்டு யோசிப்பதைபோல் இங்கும் அங்கும் நடந்தாள்.


“அவ்ளோ சீனெல்லாம் வேணாம்.. நீ எதாச்சும் சொல்லுவியானு பாத்தோம்..” என்ற இளநகை “எனக்கு ஒன்னு தான் தெரியுது.. சூளேந்திய ஆண்னா பிரெக்னென்டா இருக்கும் ஆண்” என்க,


“ஏதே?” என்று ஆடவர்கள் நால்வரும் அதிர்ந்தனர்.


அதில் வாய்விட்டு சிரித்தவள், “ச்சில்.. அது நீர்குதிரைய குறிக்குது. நீர் குதிரைல ஆண் இனம் தான் இனப்பெருக்கம் செய்யும்” என்று கூற,


“சரி இப்ப முதல் வரி புரியுதுல? நாம இங்கருந்து நூறு அடி போகனும். போகும்போது எதும் ஐடியா கிடைக்குதானு பார்ப்போம்” என்று துருவன் கூறினான்.


சரியென்று அனைவரும் நடக்க, அனைவரும் மனதிற்குள் ‘ஒன்னு’ ‘’ரெண்டு’ ‘மூனு..’ என்று எண்ணிக் கொண்டே வந்தனர்.


ஒருவழியாய் நூறு அடிகளை கடந்திருக்க, சுற்றிலும் பார்த்தோருக்கு ஒன்றும் புலப்படவில்லை.


“என்னங்கடா ஒன்னுத்தயும் காணோம்” என்று விஷ்வேஷ் கூற,


அனைவருமே ஒன்றும் புரியாமல் தான் விழித்தனர்.


மீண்டும் அதை படித்துப் பார்த்த இளநகை, “ஓ காட்..” என்று தன் காலை தரையில் உதைத்துக் கொள்ள,


அனைவரும் அவளை பதறிப்போய் திரும்பிப் பார்த்தனர்.


“இதுல நூறடினுதான் இருக்கு.. ஆனா எந்த பக்கத்துலருந்துனு இல்லையே.. நாலு திசையிருக்கு. நாம ஆளுக்கு ரெண்டு ரெண்டு பேரா நாலு திசைலயும் போயிருக்கனும்” என்று தலையில் கைவைத்து அவள் அமர்ந்துக் கொள்ள,


அவள் தோளை சுற்றி கரமிட்ட துருவன், “சில் இளா.. ஒன்னுமில்ல நாம திரும்ப ரிட்டர்ன் போகலாம்..” என்று கூறினான்.


அகர்ணன் தன் குரலை செருமி நக்கலாய் சிரிக்க, அதில் வெட்கம் கொண்டு எழுந்தவன் “சரி நாம எல்லாருமே ரிட்டர்ன் நூறு அடி போயிட்டு அங்கிருந்து ரெண்டு ரெண்டு பேரா பிரிஞ்சுப்போம். அல்ரெடி இந்த திசைல வந்துடதால எக்ஸ்ட்ரா இருக்கு ரெண்டு பேர் மட்டும் பிரிஞ்சு வேற வேற க்ரூப் கூட ஜாயின் அயிக்கோங்க” என்று கூறினான்.


மீண்டும் ‘ஒன்னு’ ‘’ரெண்டு’ ‘மூனு’ என எண்ணியபடியே பழைய இடத்திற்கு திரும்பினர்.


“யப்பா டேய்.. என்னால மிடிலடா.. அல்ரெடி சோர்ந்துட்டேன். எம்பொண்டாட்டிகூட போனா நான் பேச வர்றத அவளுக்கு புரிய வைக்குறதுலயே எனக்கு பாதி சக்தி போயிடும். தயவசெஞ்சு அவளை அகா கூட அனுப்பிவிடுங்கடா.. ரெண்டும் சைகை பாசைலயே பேசிக்கிடுங்க” என்று மதி கெஞ்சினான்.


அதில் யாவரும் சிரிக்க, மதி-அகர்ணன், அகநகை-ஜான்-விஷ்வேஷ், இளநகை, ப்ரியா மற்றும் துருவன் என்று பிரிந்துக் கொண்டனர்.


அனைவரும் மீண்டும் வெவ்வேறு மூன்று திசைகளில் தங்கள் எண்ணிக்கையோடு பயணிக்கலாயினர்.


இங்கு அகநகையும் ஜான்விகாவும் சைகையிலேயே பேசிக் கொண்டு வர,


“ச்ச.. அகா.. என் காதுக்கு எம்புட்டு திருப்தியா இருக்குது தெரியுமா? இப்படியே சைகைலயே பேசுங்க” என்று விஷ்வேஷ் நிம்மதியடைந்தான்.


அங்கு ப்ரியாவை தங்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு இளநகையும் துருவனும் அமைதியாகவே வந்தனர்.


'ஏன் எல்லாரும் இருக்கும்போது நான் துருகூட பேசினதில்லையா? இன்னிக்கென்ன புதுசா தயக்கமெல்லாம்?’ என்று தன் மனதிற்குள் இளா சுய ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க,


துருவன் அவளாக பேசாது ஏதும் பேசிவிட தோன்றாமல் மௌனமாய் வந்தான்.


இவர்களுக்கு நடுவே நின்றிருந்த ப்ரியா தான் மௌனமாக அடிகளை எண்ணிக் கொண்டே வந்தாள்.


அங்கு அகர்ணன் மற்றும் மதி இருவரும் அடிகளை எண்ணிக் கொண்டே வந்துகொண்டிருக்க, என்பதாவது அடியைத் தாண்டியதும் அவர்கள் எதனுள்ளோ ஊடுருவி நுழைந்ததைப் போல் உணர்ந்து திடுக்கிட்டனர்.


ஆகாயத்திலிருந்து பளீரென்ற ஒளி எழுந்து கண்களைக் கூச,


“நான் தான் உங்க அசீரீ பேசுறேன்.. நீங்க ரெண்டு பேரும்தான் சரியான பாதையில வந்திருக்கீங்க. ஆனா இந்த தடயம் இருக்குமிடம் மாயத்தால் கட்டுப்பட்ட ஒரு விசித்திரமான இடம். இப்ப நீங்க மாயவலையத்தை தாண்டி உள்ள வந்துட்டீங்க. இங்கிருந்து நீங்க எத்தனை சத்தமா கூப்பிட்டாலும் வலையத்துக்கு வெளிய கேட்காது, அதே நேரம் வளையத்துக்கு வெளியருந்து உங்களை யாராலயும் பார்க்க முடியாது. இது மாயத்துக்கு கட்டுப்பட்ட இடம் என்பதால ரெண்டு பேருக்கு மேல இந்த இடத்துக்குள்ள யாராலயும் நுழைய முடியாது. நுழைந்தவங்க தடயத்தை அறியாம இங்கிருந்து போகவும் முடியாது. உங்க புத்தி சாதூர்யம் தான் இங்க எடுபடும்.. வர்டா மாமே டுர்ர்..” என்று பேசிவிட்டு சென்றது, அவ்வசரீரி.


முதலில் இருவரும் அதற்கு பெரிதும் அதிரவில்லை...


“சரி அப்ப நாமளே அந்த க்ளூவ எடுத்துட்டு சீக்கிரம் வெளியப்போவோம்” என்று மதி கூற, அகர்ணனும் அதை ஆமோதித்தான்.


இன்னும் இருபது அடிகளை எண்ணிக் கொண்டு வந்தவர்கள் முன் இருந்த அந்த குளம் இருவரையும் குழம்ப வைத்தது.


“என்ன குளமிருக்கு?” என்று மதி தலையை சொறிய,


“உங்கிட்ட அந்த க்ளூ பேப்பர் இருக்கு தானே மதி? அதை எடுத்து பாரு” என்று அகர்ணன் கூறினான்.


“அட ஆமால்ல?” என்ற மதி,


அந்த தகட்டிலிருந்து காகிதத்தில் எழுதி தன் கையில் வைத்துக் கொண்டதை எடுத்த வாசித்தான்.


“‘ஈரைம்பது அடிதாண்ட,

ஓடுநீர் ஏந்தலாகும்..” என்று மதி வாசிக்க,


“நூறு அடி தாண்டியாச்சு.. ஓடுநீர்னா ரிவர்” என்ற அகர்ணன் அந்த பகுதி மட்டும் குளத்தின் அமைப்பிலும் அதை தாண்டியும் அதற்கு முன்பும் ஆறு போல் இருப்பதையும் கண்டான்.


“ஏ மதி.. ஏந்தல்னா குளம்.. அந்த பாரு ஆறுபோல வந்து இந்த இடம் மட்டும் குளம் மாதிரி இருக்கு. ஓடுநீர் ஏந்தலாகும்” என்று அகர்ணன் கூற,


“வாவ் சூப்பர் அகர்” என்ற மதி “அயிலையின் காவலில்

ஆறடி ஆழத்தில்

ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூளேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே” என்று வாசிக்க அங்கு ஓர் டால்பின் குதித்து நீர் திவளைகளை தெரித்தது.


தன்மீது நீர்திவளைப் படவும் “ஆ… ஆத்தாடீ” என்று மதி கத்திக் கொண்டே தரையில் புரள,


“போலீஸ் தொப்பி போட்ட டால்பீன்.. டேய் மதி.. ஆயிலைனா டால்பின் போல.. இதுதான் காவல் காக்குது” என்று அந்த கருப்பு தொப்பியுடனிருக்கும் டால்பினைப் பார்த்து அகர்ணன் உற்சாகமாய் கூறினான்.


“அடப்பாவி சண்டாளா.. இங்க ஒருத்தன் உயிர் போற வலில இருக்கேன்.. அதையெல்லாப் வுட்டுபுட்டு” என்று நொந்தபடி மதி அமர,


மண்ணெல்லாம் உடலெங்கும் ஒட்டி பார்ப்பதற்கே அகோரி போலிருந்தான்.


அவனைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்த அகர்ணன் கண்களில் நீர் வந்து சோர்ந்த பின்பே அமைதியாக,


புசுபுசுவென கோபமூச்சுக்களை வெளியிட்ட மதி, “ரொம்ப சிரிக்காதய்யா.. தண்ணில எனக்கு கண்டம் நீங்கதான் போய் க்ளூவ தூக்கிட்டு வரனும்” என்று கூறினான்.


“ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூளேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே.. அப்பனா இந்த குளத்துல அந்த க்ளூவ இந்த டால்பின் தான் பாதுகாக்குது. ஒரு நாளுக்கு ஒரு முறை சூள் தாங்கிய ஆண்.. அதான் அந்த நீர் குதிரையோட கூடு மேல வரும்‌. அப்பதான் நம்மளால க்ளூவ எடுக்க முடியும்” என்று மதி கூற,


“அப்ப இந்த டால்பின நீ தான் சமாளிக்கனும்” என்று கோபமாய் நின்றுகொண்டிருந்த தொப்பி போட்ட டால்பினை அகர்ணன் காட்டினான்.


“இதுவேறயா..” என்று நொந்துக் கொண்ட மதி, “சரி ஓகே” என்றான்.


இருவருமே கரையோரம் அமர்ந்துக் கொண்டு சொந்த கதை சோகக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.


அதிகம் பேசியதென்னவோ அகர்ணன் தான். இந்த அமைதியானவன் இத்தனை பேசுவானா என்று மதியே‌ அதிர்ந்துதான் போனான்.


அவன் பேசியது முழுக்க, நிஜ உலக்ததில் அவன் அகாவின் மீது காதலில் விழுந்த கதையையும், நிழல் உலகத்தில் அகா காதலித்த கதையை இங்கு வந்தபிறகு சொன்னவற்றையும் தான்.


அந்த கூட்டத்திலேயே அகர்ணன் அனைவருக்குமே மூத்தவன். அனைவரும் அவனையும் தங்கள் நண்பன் போலவே ஏற்றபோதும் மரியாதையாகவே அழைப்பர். ஆனால் மதி மட்டுமே ‘மாமே’ என்று அழைப்பதும் தன் வயதொத்தவனைப் போல் உரிமையாய் ‘டா’ போடுவதுமென‌ இருப்பான்.


அதனால் தானோ என்னவோ இன்று மதியிடம் நிறைய நிறைய பேசினான்.


அனைத்தையும் மதியும் புன்னகையுடன் கேட்க, திடீரென பூமி அதிர்ந்தது.


அதில் திடுக்கிட்ட இருவரும் அதிர்ந்து எழ, அங்கு குளத்தின் மையப்பகுதி கொப்பளித்து தூண் போன்ற அமைப்பொன்று மேலே வந்தது.


அந்த தூணின் மேல் பகுதியில் ஒரு கூடு போல் இருக்க, அதில் ஒரு நீர் குதிரை அமர்ந்திருப்பது தெரிந்தது.


அதை கண்டு “ரைட்டு.. இப்ப அதை போய் எடுக்கனுமா? நீ அந்த டால்பின புடிச்சு வச்சுக்க மதி.. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று அகர்ணன் கூறினான்.


நீருக்குள் குதித்த அகர்ணன் அந்த தூணிடம் செல்ல, அவனை நோக்கி வேகமாய் நீந்திய டால்பினை விசிலடித்து அழைத்தான் மதி.


மதியின் சத்தத்தில் வேகமாய் அவனிடம் வந்த மீனோ, அத்தனை நேரமிருந்த ரௌத்திரம் மொத்தமும் வடிந்து குழந்தை போல் குளத்தினோரம் அமர்ந்து அவனைப் பார்த்தது.


அதில் சிரித்த மதி, அதனுடன் தன் பேச்சு வார்த்தையை நடத்த, பதட்டத்துடன் கரையேறிய அகர்ணன் “டேய் மதி..” என்று அழைத்தான்.


வெறுங்கையுடன் வந்திருக்கும் அகர்ணனைக் குழப்பமாய் பார்த்த மதி, “பெட்டியெங்க மேன்?” என்க,


“அது எடுக்க முடியாதுடா. அந்த கூட்டோட சேந்திருக்குற தகடுல எழுதிருக்கு” என்று அகர்ணன் பீதியோடு கூறினான்.


“அப்ப அதை மணப்பாடம் பண்ணிட்டு வர…” என்ற மதிக்கு அப்போதே அகர்ணனால் படிக்க இயலாது என்று நினைவு வர,


“ஓ..காட்” என்று தன் தலையில் கை வைத்துக்கொண்டான்.


“அந்த அசரீரீ ரொம்ப ஹாப்பியா வர்டா மாமேனு சொல்லும்போதே நெனச்சேன்.. எங்கயோ இக்கு வச்சுபுட்டான்னு” என்று அகர்ணன் கூற,


“அய்யோ இது கிடைக்காம நம்மலாலையும் வெளிய போக முடியாது, மித்தவங்களாலையும் உள்ள வரமுடியாதே” என்று மதி கூறினான்.


சில நிமிடங்கள் மௌனமான பதட்டமே அங்கு நிலவ, “அது இன்னும் எவ்வளவு நேரம் மேலயே இருக்கும்னு அந்த டால்பின் கிட்ட கேளு” என்று அகர்ணன் கூற,


அதேபோல் மதியும் கேட்டான்.


டால்பின் தனது மொழியில் விடைகூற,


“நாளைக்கு காலைல சூரியன் உதிக்கும் முன்ன வரை இருக்குமாம்” என்று மதி கூறினான்.


“சூரியன் உதிக்குற வரையா? நாம இங்க வந்ததுலருந்து நாம இரவே பாக்கலை தானே? இங்க அஸ்தமனம் இருக்கா என்ன?” என்று அகர்ணன் கேட்கும்போதே வானம் இருட்டத் துவங்கியது.


“அட ஆமால்ல? ஒருவேள அந்த அசரீரீ சொன்னதுபோல இந்த இடத்துல மாயாஜாலம் இருக்குறதால இங்க மட்டும் இருட்டுதா?” என்று மதி வினவ,


“இருக்கலாம்” என்று அகர்ணன் கூறினான்.


“அப்ப இருட்டிட்டா எப்படிடா அதை பார்க்க முடியும்?” என்று மதி வினவ,


“இல்ல பார்க்க முடியும்னு தான் தோனுது. அதுல உள்ள எழுத்துளாம் ஒருமாதிரி கண்ணாடி போல இருந்துது. மினுமினுக்குற பொருள் மாதிரி இருக்கு. ஆனா அதை பார்க்க யாராவது அங்க போகனும். உன்னால போக முடியாது, என்னால படிக்க முடியாது, நம்மால வெளிய போக முடியாது, வெளியருந்து யாராலயும் உள்ள வரவும் முடியாது. இப்ப என்ன பண்றது?” என்று அகர்ணன் கேட்டான்.


“ஹ்ம்.. இப்ப என்ன பண்ணனு தெரியலையே?” என்று மதி கூற,


நிலவு மேலெழும்பி வந்து அவ்விடத்தை தன் ஒளியால் பிரகாசிக்க வைத்தது.


வானத்தை நிமிர்ந்து பார்த்த அகர்ணன் மனதில் எதுவோ தோன்ற,


“மதி.. எனக்கு இந்த குளத்துலருந்து க்ளிட்டர் ஃபிஷ், ஜெல்லி ஃபிஷ் எதாவது இருந்தா வேணும்” என்று கூறினான்.


“அது எதுக்கு?” என்று மதி வினவ,


“முதல்ல குடுடா” என்று கூறினான்.


மதியும் டால்பினிடம் கேட்டு ஒரு மீனை கூட்டி வந்து அகர்ணனனுடன் அனுப்பி வைக்க,


மீண்டும் நீந்தி அந்த தூணிடம் சென்றான்.


மீனை கையில் பிடித்து அந்த கூட்டின் அருகே அகர்ணன் கொண்டு செல்ல, அங்கு ஒரு ஒளி உண்டானது.


மீண்டும் மீனை கீழே விட்டு நீந்தி கரைவந்த அகர்ணன் முகத்திலிருந்த தெளிவே அவன் எதையோ கண்டுவிட்டான் என்பதை மதிக்கு உணர்த்தியது.


“என் கெஸ் சரியா இருக்கு மதி. அது ரொம்ப வளுவளுப்பான பொருள் கொண்டு அச்சடிக்கப்பட்டிருக்கு. ஸ்மூத் சர்ஃபேஸோட இன்ஸிடென்ட் ரே அன்ட் ரிஃப்லக்ஷன் ரேவோட ஆங்கில் ஒன்னுபோல இருக்கும். அங்க அந்த கூட்டுல அந்த தகடு சாய்வா நிறுத்தி வச்சுருக்கு. அப்ப நிலா அதுக்கு எதிர்திசைக்கு வரும்போது அந்த எழுத்துக்களோட எதிரொளிப்பு அந்த தண்ணீர்ல தெரியும். நீ தான் வேகமா அதை நோட் பண்ணனும்” என்று அகர்ணன் கூற,


“மாமே.. உனக்கு இம்பூட்டு அறிவாடா?” என்று மதி வியந்தான்.


“சரி ஓகே.. திரும்ப உக்காந்து வெயிட் பண்ணுவோம் வா” என்று தனது ஈரக்கை கொண்டு அகர்ணன் மதியின் தோளில் தட்ட,


“ஆ.. அடேய்.. எரியும்” என்று தோளை தட்டிக் கொண்டு தள்ளி நின்றான்.


அதில் வாய்விட்டு சிரித்த அகர்ணன் அமர,


சற்றே இடைவெளி விட்டு தானும் அமர்ந்தான்.


அந்த குளமே நிலவொளியில் அடர் நீலநிறத்தில் தெரிய, “ச்ச! லொடலொடனு பேசுதேனு தொறத்திவிட்டேன். இப்ப இந்த இடத்த பாத்தா அவகூடவே வந்துருக்கலாமோனு இருக்கு” என்று மதி பெருமூச்சு விட,


அகர்ணன் தன் கரங்களைத் தட்டிக் கொண்டு வாய்விட்டு சிரித்தான்.


சரியாக அகர்ணன் கூறியதைப் போல் நிலவொளி மெல்ல மெல்ல வந்த அந்த தகடில் பட, அதன் எதிரொலி குளத்தில் பிரதிபலித்தது.


“யாஹு.. அகர் யு மெய்ட் இட் மேன்” என்ற மதி வேகமாய் சட்டையிலிருந்த காகிதத்தையும் அதனுடனே வைத்திருந்த பேனாவையும் எடுத்தான்.


தலைகீழாக இருந்த எழுத்துக்களை சற்றே திணறி திணறி கண்டுகொண்டவன், அதை காகிதத்தில் வெற்றிகரமாக எழுதி முடித்து நிமிர, அகர்ணனும் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டான்.


மீண்டு அது மறைவதற்குள் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்த மதி,


“பிணியறியா விருட்சம்

ஒன்றே கொண்ட சிகரத்து,

ஊடுறுவு பாதை சேர,

கோடுகளை கண்டறிக.

ஒளியுள்ள பாதைதனை

ஒலிகொண்டு அறிந்திடவே,

பார்கரன் துணை புரிய,

அடுத்த துப்பு கிட்டிடுமே!” என்று வாசித்தான்.



-தொடரும்...
 
Last edited:
Status
Not open for further replies.
Top