எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைகை வேட்டையும் மதன காதையும்- கதைத்திரி

Status
Not open for further replies.

santhinagaraj

Well-known member
பிணியறியா விருட்சம் ஒன்றே கொண்ட சிகரத்து _நோயறியா மரம் இருக்கும் மலை.

ஊடுறுவு பாதை சேர கோடுகளை கண்டறிக _ மலைக்கு போவதற்கான பாதையை கண்டறியனும்.


ஒளியுள்ள பாதைதனை ஒலி கொண்டு அறிந்திடவே _ வெளிச்சம் உள்ள பாதையை சத்தம் கொண்டு அறியணும்.

பாற்கரன் துணை புரிய அடுத்த துப்பு கிட்டிடுமே _ சிவபெருமான் துணையோட அடுத்த துப்பு(க்ளூ) கிடைக்கும்
 

Saranyakumar

Active member
இளாவுக்கள்ள இப்பதான் சம்திங் சம்திங்🥰 மதி மாயஜால உலகத்துல இருந்து வெளிய போனதுக்கு அப்பறம் ஜான்வி கிட்ட நல்லா வாங்கி கட்டப் போற😂😂 வாவ் அகர் செம
 

Mathykarthy

Well-known member
very interesting 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஒவ்வொரு க்ளூவும் எக்ஸலன்ட்டா இருக்கு 👌😍

மதி எவ்வளவு நேக்கா பொண்டாட்டியை கழட்டி விட்டுட்டு வந்துட்டான் 🤣🤣🤣🤣

மதி அகர்ணன் pair போட்டு அவங்களால க்ளூவை எடுக்க முடியாத அளவுக்கு டஃப் குடுத்தது செம மூவ் 👌

நோயறியாத ஒற்றை மரம் இருக்க மலை உச்சியில அடுத்த க்ளூ இருக்கு........
ஒளி ஊடுறுவும் பாதையை அடைய கோடுகளை கண்டுபிடிக்கணும்.....
சப்தத்தை வச்சு சூரிய ஒளிப்பாதையை கண்டுபிடிச்சு சிகரத்தை அடையலாம்......
விடியல் நேரத்துல மட்டும் க்ளூ கண்டுபிடிக்க முடியும்.......
 
பிணியறியா விருட்சம் ஒன்றே கொண்ட சிகரத்து _நோயறியா மரம் இருக்கும் மலை.

ஊடுறுவு பாதை சேர கோடுகளை கண்டறிக _ மலைக்கு போவதற்கான பாதையை கண்டறியனும்.


ஒளியுள்ள பாதைதனை ஒலி கொண்டு அறிந்திடவே _ வெளிச்சம் உள்ள பாதையை சத்தம் கொண்டு அறியணும்.

பாற்கரன் துணை புரிய அடுத்த துப்பு கிட்டிடுமே _ சிவபெருமான் துணையோட அடுத்த துப்பு(க்ளூ) கிடைக்கும்
Super kka 😍❤️
 
இளாவுக்கள்ள இப்பதான் சம்திங் சம்திங்🥰 மதி மாயஜால உலகத்துல இருந்து வெளிய போனதுக்கு அப்பறம் ஜான்வி கிட்ட நல்லா வாங்கி கட்டப் போற😂😂 வாவ் அகர் செம
ஆமா க்கா 😍

மதி இங்கயே நல்லா வாங்கி கட்டிக்குறானே🤣🤣
 
very interesting 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஒவ்வொரு க்ளூவும் எக்ஸலன்ட்டா இருக்கு 👌😍

மதி எவ்வளவு நேக்கா பொண்டாட்டியை கழட்டி விட்டுட்டு வந்துட்டான் 🤣🤣🤣🤣

மதி அகர்ணன் pair போட்டு அவங்களால க்ளூவை எடுக்க முடியாத அளவுக்கு டஃப் குடுத்தது செம மூவ் 👌

நோயறியாத ஒற்றை மரம் இருக்க மலை உச்சியில அடுத்த க்ளூ இருக்கு........
ஒளி ஊடுறுவும் பாதையை அடைய கோடுகளை கண்டுபிடிக்கணும்.....
சப்தத்தை வச்சு சூரிய ஒளிப்பாதையை கண்டுபிடிச்சு சிகரத்தை அடையலாம்......

விடியல் நேரத்துல மட்டும் க்ளூ கண்டுபிடிக்க முடியும்.......
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🥰😍

மதிக்கு அவகிட்டருந்து கொஞ்சம் ரெஸ்ட் குடுப்போம்னு தான் 🤣🤣

நன்றி அக்கா 🥰😍

வாவ் நைஸ் கெஸ் க்கா ❤️
 
காதை_09

“மித்த ரெண்டை காட்டிலும் இது ரொம்ப ஈசியா இருக்கு” என்று மதியிடமிருந்து வாங்கிய தாளைப் படித்த இளநகை கூற,

தானும் அவளருகே சென்று பார்த்த துருவன், “ஏ ஆமாடி.. ஆனா இதுபடி நாம போகும்போது கஷ்டமா இருக்கும்னு நினைக்குறேன்” என்றான்.

“ம்ம்..‌இருக்கலாம் துருவ்..” என்று இளநகை கூற,

“பிணியறியா விருட்சம்
ஒன்றே கொண்ட சிகரத்து,
ஊடுறுவு பாதை சேர,
கோடுகளைக் கண்டறிக.
ஒளியுள்ள பாதைதனை
ஒலிகொண்டு அறிந்திடவே,
பார்கரன் துணை புரிய,
அடுத்த துப்பு கிட்டிடுமே!” என்று துருவன் வாசித்தான்.

“பிணியற்ற விருட்சம்னா ஆலிவ் ட்ரீஸ். ஆலிவ் க்ரீன் பத்தி தெரிஞ்சுக்க போகும்போது இந்த ஆலிவ் ட்ரீஸ் பற்றிக் கண்ணுல பட்டுப் படிச்சிருக்கேன்” என்று ப்ரியா கூற,

மனைவி தோளைச் சுற்றி கரம் போட்ட விஷ், “அறிவாளி பொண்டாட்டி” என்றான்.

“ஹலோ.. போதும்” என்ற இளநகை, “ஓகே.. சிகரம்னா..” என்று முடிக்கும் முன்,

“மலை” என்று துருவன் கூறினான்.

அவனைக் கண்டு சிரித்தவள், “கரெக்ட்.. அப்ப ஆலிவ் ட்ரீ மட்டுமே இருக்கக்கூடிய மலையோடு ஊடுறு பாதை..” என்று அவள் முடிக்கும்முன்,

“குகை” என்று மதி மற்றும் அகர்ணன் ஒன்றுபோலக் கூறி தங்கள் கைகளைத் தட்டி ‘ஹை-ஃபை’ போட்டுக் கொண்டனர்.

“வாரேவா..” என்று குதூகலம் அடைந்த இளநகை, “அந்தக் குகைய ஏதோ கோடுகள் வச்சு கண்டுபிடிக்கனும் போல.. ஒலி வச்சு ஒளிய கண்டுபிடிக்கனும்னா என்னது?” என்று யோசித்தாள்.

கைத்தட்டி அனைவரையும் அழைத்த அகநகை, கைகளைச் சுருக்கி, தன் சட்டையைத் தொட்டுக்காட்டி காதில் கரம் குவித்து கேட்பதைப் போல் செய்தாள்.

“கம்மியான சட்டைக்குக் காது கேட்காதா?” என்று ஜான்விகா அவள் சைகை வைத்துக் கூற,

தன் தலையில் அடித்துக் கொண்ட அகநகை, காதில் கேட்பது போல் கைவைத்து கைகளில் அலைகள்போல் அபிநயம் பிடித்தாள்.

“சவுண்ட் ரிஃப்லக்ஷனா?” என்று இம்முறை ஜான்வி சரியாகக் கூறிட,

ஆமென்று தலையாட்டிய அகநகை, ‘சிறிய’ என்பதுபோல் சைகை செய்து வானவில் போல் காற்றில் வரைந்து காட்டினாள்‌.

“ஐ காட் இட்..” என்ற இளநகை, “லைட் கலர்ஸ் சவுண்ட நல்லா ரிஃப்லக்ட் பண்ணும். அப்பக் குகைல லைட் கலர் இருக்குற இடத்தைச் சத்தம் வச்சு கண்டுபிடிச்சு போகனும்” என்று கூற,

“யூ ஆர் ஜஸ்ட் டாலென்டேன் இளா” என்று துருவன் கூறினான்.

தற்போது அனைவருமே “ஹலோ.. போதும்” என்க,

அதில் ஏனோ ஆண் பெண் இருவருக்கும் வெட்கம் தொற்றிக் கொண்டது.

ஒருவரை ஒருவர் கடைக்கண்ணில் பார்த்துச் சிரித்துக் கொள்ள,

“சரிசரி அடுத்தென்ன இருக்கு?” என்று ஜான்விகா கேட்டாள்.

“ம்ம்.. அடுத்து பார்கரன் துணை கொண்டு துப்பு அறிக..‌ அதாவது சூரியனை வச்சு க்ளூவ கண்டுபிடிக்கனுமாம்” என்று இளநகைக் கூற,

“சரி மதி.. முதல்ல உன் டெடிபேர கூப்பிடு. அந்த மலைக்கு வழி கேட்போம்” என்று விஷ்வேஷ் கூறினான்.

சரியென்று தானும் தனது கரடியை அழைத்த மதி அம்மலைக்கான வழியைக் கேட்க, கரடியும் அவர்களுக்கு வழிகாட்டி முன்னே சென்றது.

அனைவரும் முன்னே நடக்க, இளநகை மற்றும் துருவன் மட்டும் பின்தங்கி நடந்தனர்.

கையில் உள்ள காகிதத்தைக் கொண்டு அவர்களுக்கிடையே பேச்சு வார்த்தைகள் சாதாரணமாய் போக, அவ்வப்போது பேச்சினூடே வேறு பக்கமும் அவர்கள் பேச்சு வட்டம் சென்று மீண்டது.

அதில் ஏதோ தோன்ற, “துருவ்.. அ.. அன்னிக்கு காட்ஸ் விளையாடும்போது உங்கள எல்லாரும் கலாய்ச்சாங்களே.. நிஜமாவே லவ் பண்றீங்களா?” என்று இளநகை வினவ,

ஆடவன் திடுக்கிட்டுப் போனான்.

'இல்லை அது பொய்' என்று அவளிடமே தனது காதல் இல்லையென்று கூறவும் மனம் வரவில்லை, ஆமென்று கூறினால், தன்னை வேறொருவரின் மணாளன் என்ற எண்ணத்தில் நிறுத்திடுவாளோ என்ற பயத்தில் ஆமென்றும் கூற இயலவில்லை!

அவனது திருதிரு விழியைக் கண்டு என்ன நினைத்தாளோ? “சரி அதை விடுங்க. லவ் பத்தி உங்க ஒப்பீனியன் என்ன?” என்று அவள் கேட்க,

அவளைக் காதலாய் பார்த்தான்.

பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் தனக்கு வரப்போகும் பெண்ணிடம் சில எதிர்ப்பார்ப்புகள் வைத்திருப்பர். அதில் ஓன்றே, தான் கூறாமல் தன்னை அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது.. அது எல்லா முறையும் நடந்திடாது என்றாலும் அவை நடக்கும்போது எழும் உவகைக்குதான் இணையேயில்லை. தனக்கு பதில் கூற விருப்பமில்லை என்பதை புரிந்துக் கொண்டு அவளே வேறு விடயம் சென்றது அவனுக்குச் சற்றே நிம்மதியாகவும் சந்தோஷமாகவுமிருந்தது.

“ஹலோ.. என்ன துருவ்.. ட்ரீம்ஸா?” என்று அவள் கையசைக்க,

அதில் சிரித்தவன், “என்ன நினைக்குறீங்கனா என்ன சொல்ல?” என்றான்.

“ஒரு புத்தகம் எழுத்தாளரோட ஒரே கருத்துல தான் உருவாகும். ஆனா வாசகர்களோட கற்பனையில் அது வெவ்வேறு வண்ணம் பெற்று மாறுபடும். அப்படிதான் இந்தக் காதலும்… என்னைக் கேட்டா நான் டோபமைன், வாஸ்ப்ரஸின், ஆக்ஸிடோஸின்னு ஹார்மோன்ஸை தான் கைக்காட்டுவேன்” என்று அவள் முடிக்கும் முன்,

“ஏன்? ஏன்? காதலுக்கு உணர்வு சுரபிகளை மட்டுமா காரணம்னு சொல்லுவ?” என்றான்.

“ஹ்ம்.. எனக்குக் காதல் கத்தரிக்காயெல்லாம் தோன்றியதில்லை. ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சா தானே நம்பிக்கை இருக்கு இல்லைனு சொல்ல முடியும். காதலே இல்லையானுலாம் இல்லை.. எனக்குக் காதல் இருக்கு” என்று அவள் கூற,

அவன் அழகான புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

“என்னப்பா? ஷாக் ஆக மாட்றீங்க?” என்று அவள் கூற,

“என்ன மெடிகல் தானே உன் லவ்?” என்று புன்னகையுடன் கேட்டான்.

“வாரேவா.. எப்படி துருவ்..” என்றவள், “ஆமா.. அதுதான் என்னோட லவ்..‌ ரத்தம், கத்தி, நரம்பு, சுரபி இதெல்லாம் பார்த்துப் படித்து என்னோட தாட்ஸும் அதுகூடவே பயணிக்குது போல.. அதனால லவ் பத்தி எதும் ஃபீல் பண்ணதில்ல” என்று அமைதியாய் கூறிக் கொண்டே வந்து அவ்விடத்தில் ஆர்வத்துடன் அவனைத் தன் புறம் திருப்பினாள்.

“ஆனா என்னோட பிரெண்டு தாரி.. அவ லவ் பண்றா.. அவ சின்ன சின்ன விஷயத்தை ஃபீல் பண்ணி சொல்லும்போது ‘ச்ச நமக்கேன் இப்படி தோனலை?’ ‘நாமலும் இப்படிலாம் ஃபீல் பண்ணுவோமா?'னு எக்ஸைட் ஆயிருக்கேன்” என்று கூறியவள், “உங்க பாயின்ட் கேட்க வந்துட்டு என்னோட பாயின்ட்ஸ சொல்லிகிட்டு இருக்கேன் பாருங்க” என்று கூற,

அதில் அழகாய் சிரித்துக் கொண்டான்.

“காதல்.. அது ஒரு ஃபீல்.. காலம் காலமா சொல்றது இதுதான்.. எப்பேர்பட்ட முரடனையும் ரசிக்க வைக்கும் இந்தக் காதல்.. சாதாரணமா ரொம்ப கற்பனை தூக்கலா இருக்கும் காதல் கவிதைய பார்த்தா சிரிப்பா இருக்கும். ஆனா அதுவே லவ் பண்றவங்க கண்ணோட்டத்துல ரொம்ப அழகா இருக்கும். அது கவிதை மேல காதலோடவும் இருக்கலாம், காதலன்/காதலி மேல உள்ள காதலோடவும் தெரியலாம்.

உருவம்.. ஒருத்தர பாக்குறோம்.. உருவுகேலி செய்றோம்.. ஆனா உண்மைலயே நமக்குச் சொந்தமான ஒருத்தரா இருந்தா அப்படி செய்யத் தோன்றுமா? அழகு அப்படிங்குறது நம்ம ரசிக்குற விதத்துல தான் இருக்கு. நான் காதலிக்குறவ ஒல்லி பெல்லிக்கு நடுவுல குண்டா இருந்தாலும், ஃபேர் அன்ட் லவ்லீக்கு நடுவுல கலர் கம்மியா இருந்தாலும், கேசவர்தினிக்கு நடுவுல முடி கம்மியா இருந்தாலும், மீன் விழியாலுக்கு நடுவுல, கண்ணைத் தேடி கண்டுபிடிக்குற போலக் குட்டியா இருந்தாலும், மொத்தத்துல அழகான ராட்சிக்கு நடுவுல அவ சுமாரானவளா இருந்தாலும் அவ பேரழகியா தான் தெரியுவா.

ஒரு பொண்ணை காரணமே இல்லாம புடிச்சு போயிட்டா, அடுத்து அவ செய்யுற எல்லாமே நம்மைக் காதலில் விழ வைச்ச காரணங்களா தான் தெரியும். அவ தப்பு பண்ணா உரிமையா தட்டி கேட்க வைக்கும், சண்டை போட வைக்கும், சமாதானம் செய்ய வைக்கும். காதல் அதட்டவும் வைக்கும் அடிபணியவும் வைக்கும். மொத்தத்துல காதல் செய்யாததை செய்ய வைக்கும், செஞ்சதை மறக்க வைக்கும், பார்க்காதத ரசிக்க வைக்கும், ரசித்தத சுகிக்க வைக்கும். இல்லாத அத்தனை மாயத்தையும் இந்தக் காதல் நடத்தி குடுக்கும்” என்று அவள் கண்களைப் பார்த்து உணர்ந்து கூறினான்.

காதலைப் பற்றிக் கேட்டவளுக்கு, அவள்மீதான தன் காதல் கொடுத்த உணர்வுகளை ஒப்பித்துக் கொண்டிருந்தவன் விழிகள் அவள் விழிவிட்டு துளியும் நகராது நிற்க, அதில் கட்டுண்டவள் மனம் ‘என்ன ஏதோ எனக்காகவே பேசுற போல இருக்கு’ என்று கேட்டு அவளை அதிரவும் வைத்தது, பிரம்மிக்கவும் வைத்தது.

“க..காதல்ல இவ்வளவு உணர்வு இருக்கா?” என்று தானும் அவன் கண்களைப் பார்த்தபடி அவள் கேட்க,

“வாழ்ந்து பாருடி.. அப்பதான் புரியும்” என்றான்.

சில நிமிடங்கள் பார்வை மட்டுமே தீண்டிய ஓரடி இடைவெளியில் ஒருவர் பார்வையில் மற்றவர் மூழ்கி நின்றிட,

“எப்பா சாமிகளா.. மலை வந்துடுச்சு.. வரீங்களா?” என்று கூட்டமாய் அவர்களை விட்டுச் சற்று முன்பே இருந்த கூட்டம் கத்தியது‌.

அதில் நிலை மீண்டவன் அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கி பார்த்துக் கொண்டே முன்னே நகர்த்திட,

அதே இடத்தில் அவனைப் பார்த்தபடியே பாவை உறைந்து நின்றாள்.


-தொடரும்...
 

அடேய் துருவா என்னடா காதலுக்கு விளக்கம் கொடுத்து இளாவ உறைய வச்சிட்ட 😍😍
பல வருஷக் காதலுக்கு இவ்வளவு கூட பேசி இம்பிரஸ் பண்ணலைனா காதல் குத்தமாகிடும்ல க்கா🙈😍
 
அவன் காதலுக்கு வேறை யாரை கூப்பிட்டு விளம்பரம் பண்ணுவான் பாவம்🤭🤭🤭
துருவ் அருமையாக விளம்பரம் பண்ற 🤣🤣காதல் பைத்தியமும் பிடிக்க வைக்கும் 😂
 
Status
Not open for further replies.
Top