எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் உயிரானவளே மதியழகே!

1729263500905.jpg
1729263500896.jpg

அத்தியாயம் 1



டிஸ்ஸுவினால் அவளின் கண்களை துடைத்து கொண்டிருந்தாள் ஸ்ருஷ்டி. எத்தனை நேரமாக அழுகிறாள் என்று அவளுக்கே தெரியாது.


"அழாத ஸ்ருஷ்டி", என்று ஆருஷ் சொல்வதெல்லாம் காற்றில் கரைந்து போனது.


"அவன் எப்படி பேசிட்டான் என்னை பார்த்து, டாக்", என்று வெதும்பிக்கொண்டே அவள் கூற, அவனுக்கோ அவளை பார்க்க பாவமாக இருந்தது.


"அவன் கிடக்குறான், அதெல்லாம் அவன் உன்ன அப்படி விட்டுடமாட்டான்", என்று அவன் சொல்லவும், "நீ கூட தான் தளிரை விட மாட்டேன்னு சொன்ன, கடைசில அவளை அம்மாவாகிட்டு விட்டுட்டு தானே வந்திருக்க", என்று அவள் வெடித்து சிதற, "ஹே நான் ஒன்னும் அவளை விடல டி, அவ தான் நான் வேணாம்னு போய்ட்டா", என்று அவனுக்கு அவன் நியாயம் பேசினான்.


அருகில் இருந்த தலையணை எடுத்து அவனின் முகத்தில் அவள் வீச, "ஒரு வார்த்தை அந்த டாக் எழுந்துட்டான்னு சொல்லியிருக்கலாம்ல? நானும் ஒரு வாரமா மோர்னிங் சிக்கனெஸ்ஸால ஹாஸ்பிடல் போகல", என்று அந்த பாக்கெட்டில் உள்ள கடைசி டிஸ்ஸுவையும் காலி செய்து இருந்தாள்.


"நான் யூஸ் பண்ற யுஎஸ் போன் எடுக்கவே இல்ல, உனக்கு தெரியும்னு தான் டி நினைச்சேன்", என்று அவன் சொல்ல, "அடுத்த டிஸ்ஸு டப்பா எடு டா", என்று அவள் சொல்ல, அவனும் எடுத்து கொடுத்தான்.


இங்கோ நிலை இப்படி இருக்க, மறுபுறமோ, "நீ ஸ்ருஷ்டி கிட்ட அப்படி பேசியிருக்க வேணாம் சிவம்", என்று தளிர் சொல்லவும், அவளை திரும்பி பார்த்தவன், "இவ்ளோ நல்லவளா இருக்காத, இந்த உலகம் உன்ன இன்னும் மிதிக்க தான் செய்யும். அவ பண்ணதுக்கு அவளை அடிக்காம விட்டதே பெருசு. மாசமா இருக்காளேனு தான் அடிக்கல இல்லனா கொன்னு போட்ருப்பேன்", என்று அவன் சமைத்து கொண்டே பேசிக்கொண்டு இருந்தான்.


"கொஞ்சம் சாப்ட்டா பேசிருக்கலாமே", என்று அவள் மீண்டும் சொல்லவும், "அவ உங்கிட்ட சாப்ட்டா நடத்துகிட்டாளா?", என்று அவளை ஒரு பார்வை பார்த்து அவன் கேட்க, தளிர் கப்சிப் என்று ஆகிவிட்டாள்.


"அவளை இதோட விட்டேனே, க்ரதாகி", என்று நிறுத்தாமல் அவளை ஏசிக்கொண்டு இருந்தான்.


தளிர் தான் நடந்ததை நினைத்து கொண்டு இருந்தாள்.


அவர்கள் கலிபோர்னியா வந்து இறங்கியதும், லக்கேஜை எடுத்து கொண்டு வெளியே வரும் சமயம், அங்கே ஆருஷிற்காக காருடன் காத்துகொண்டு இருந்தாள் ஸ்ருஷ்டி.


மூவரும் ஒன்றாக தான் வெளியே வந்தார்கள்.


ஆருஷை முதலில் பார்த்த ஸ்ருஷ்டி, "ஹே வீர்", என்று கையை அசைக்க அப்படியே அவனின் அருகில் நின்றிருந்த சிவமை அப்போது தான் கவனித்தாள்.


அவளது கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது.


மூன்று மாதங்கள் கழித்து இன்று அவன் நிற்பதை பார்த்தவளுக்கு என்ன உணர்வு என்று தெரியவில்லை.


அவளே அறியாமல் அவளின் கைகள் அவளின் மணிவயிற்றை வருடிக்கொண்டது.


அவனது வாரிசை சுமந்து கொண்டு இருக்கிறாள் அல்லவா!


தளிரின் பிறந்த நாள் முடிந்து இருவரும் ஒன்றாக செல்லும் சமயம், இருவரும் ஒரு பப்பிற்கு செல்ல முடிவு செய்ய, அங்கே ஆரம்பித்தது அவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டு.


"நீ தான் குடிக்க மாட்டியே, அப்பறம் ஏன் இங்க என்கூட வந்த?", என்று சிவம் நக்கல் தொனியில் கேட்கவும், ஸ்ருஷ்டிக்கு சுரென்று கோவம் ஏறியது.


"நம்ம வேணா பெட் பண்ணிக்கலாம் யாரு அதிகமா குடிக்கிறாங்கனு", என்று அவள் வான்டட் ஆக வம்பை விலை கொடுத்து வாங்கினாள்.


இருவரும் கழுத்து வரை குடித்து விட்டார்கள், நிதானம் இழந்தார்கள், தன்னிலை இழந்தார்கள், குடியின் போதையில் மனதில் இருந்த காதலும் வெளி வர துவங்கியது.


"ஹே அரக்கி", என்று அவன் நா குழற அவளை அழைக்க, "நான் அரக்கியா, நீ தான் டா அரக்கன். என் மனச கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம எவ்ளோ ஹர்ட் பண்ற", என்று அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் இழைய, "நீ தான் டி அரக்கி. என் இதயத்தை சுக்குநூறா எப்பவும் உடைச்சிடற", என்று அவளின் இடையை பற்றி இழுத்தவன், அத்துடன் நிறுத்துவானா என்ன?


கைகள் இடையில் இருந்து அவளின் மொத்த அங்கங்களையும் களவாட எத்தனிக்க, அவளின் இதயத்தில் ஆட்சிசெய்பவன் அவளை நாடும் போது அவளும் மறுக்க வில்லை.


யார் முதலில் இதழை சுவைக்க துவங்கினர் என்று தெரியாது, இடையில் கைவைத்து இதழில் ஆரம்பித்து இருவரும் ஒருவரை ஒருவர் சுகித்தனர், சுவைத்தனர்.


அவளை மொத்தமாக கொள்ளையிட்ட சமயம், அவள் அவனின் தோள் பட்டையில் கடிக்க, "கடிக்காத டி", என்று அவன் உளற , "வலிக்குது", என்று அவள் சொன்னதும், அவளின் இதழை சிறை எடுத்து இருந்தான் சிவம்.


காலையில் இருவரும் தலையில் கைவைத்து எழுந்து கொண்டனர். போதை தெளிந்து நிதர்சனம் நெற்றிப்பொட்டில் அரைய, இருவருக்கும் ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்து கொள்ள முடியவில்லை.


"ஸ்ருஷ்டி", என்று அவனின் அழைப்பால் அவனை பார்த்தவள், அவனின் மார்பிலே சரணடைந்தாள்.


"சிவம் ஐ அம் சாரி, எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும். ஆனா உன் ஸ்டேட்டஸ்க்கு நான் எங்கேயோனு எனக்கு தெரியும்", என்று அவள் சொல்ல, அவளின் தோள்களை பற்றி அவனை பார்க்க வைத்தவன், "என்ன டி பேசுற? என் அப்பா அம்மா அதெல்லாம் பார்க்க மாட்டாங்க, உனக்கு என்னை புடிச்சிருக்கு தான? வி வில் கெட் மரிட் சூன்", என்று அவளின் கன்னத்தில் அவன் இதழ் பதித்தும் தான் சற்று ஆசுவாசம் அடைந்தாள்.


அன்று தெரியாமல் செய்த பிழை, தினமும் தொடர்ந்தது.


ஒரு நாள் கூடல் முடிந்து, அவளை பார்த்து, "கன்சிவ் ஆகிட்டா என்ன பண்ணுவ டி", என்று அவன் கேட்கவும், "அச்சோ அதை பத்தி யோசிக்கவே இல்லை", என்று கண்களை விரித்து அவள் சொல்ல, சத்தமாக சிரித்தவன், "அடுத்த மாசமே கல்யாணம் பண்ணிக்கலாம்", என்று சொல்பவனுக்கு தெரியாது, அவன் இன்னுயிர் இன்றைய கூடலில் அவளுள் விதையாக வளர ஆரம்பித்து விட்டதை!


"வீருக்கும் தளிருக்கும் சொல்லணும்", என்று அவள் அவனை பார்க்க, "தளிர் பிரச்சனையே இல்ல, உன் நண்பன் தான் சாவடிப்பான்", என்று சொன்னதும் தான் தாமதம் அவனின் கையை நறுக்கென்று கடித்து விட்டாள்.


"ஹே சரியான நாய் டி நீ", என்று அவன் தோளை தேய்த்து கொண்டே கூற, "யாரு நானா? நீ தான் டா டாக். எல்லா இடத்துலயும் கடிச்சி வைக்குற", என்று அவள் சொல்லவும், "எந்த எடத்துலலாம் கடிச்சி வச்சிருக்கேன்", என்று அவன் மோக விழியுடன் கேட்டான்.


அவனின் பார்வையை உணர்ந்தவள், "அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு", என்று நகர போக, "நான் டாக்டர் மா செக் பண்ணிட்றேன்", என்று அவளை இழுத்து முழுவதுமாக செக் செய்து விட்டு தான் ஓய்ந்தான்.


மூச்சு வாங்க இருவரும் விலக, "நல்லா செக் பண்ணினேனா?", என்று கண்சிமிட்டி அவன் கேட்கவும், "ஆவெரேஜ் தான்", என்று அவள் வேண்டுமென்றே சொல்ல, "சரி அப்போ மறுபடியும் ஒரு செக் பண்ணிரலாம்", என்று அவன் ஆரம்பிக்கும் போதே, "மறுபடியுமா ?", என்கிற வார்த்தை முடிந்தது என்னவோ அவனின் இதழ்களுக்குள் தான்.


அத்தனையும் அவளின் கண்முன் நிழல் படமாய் ஓட, அவளின் தோள்களில் கை வைத்து இருந்தான் ஆருஷ்.


அப்போது தான் நிதர்சனத்துக்கு வந்து இருந்தாள் அவள்.


"வீர்... சிவம்", என்று அவள் இழுக்க, "ஹ்ம்ம் எழுந்துட்டான். உன்கிட்ட பேச வருவான், நான் போய் கார்ல உட்க்காருறேன்", என்று சொல்லிக்கொண்டு தளிரை பார்த்துவிட்டு காரினுள் சென்று அமர்ந்தான்.


அவன் சொன்னது போலவே அவளின் அருகில் வந்தான் சிவம்.


அவளுக்கோ தொண்டை குழியில் இருந்து எச்சில் இறங்க கூட மறுத்தது.


அவளும் தான் ஆருஷுடன் தளிரை வைத்து செய்தாள் அல்லவா!


"எப்படி இருக்கீங்க மேடம்?", என்று அவன் கேட்கவும், ஒரு பக்கம் அவன் கண் முன் நிற்கின்றான் என்கிற சந்தோஷம், மறுபக்கம் அவள் தளிரை காயப்படுத்தியதற்கு மொத்தமாக இவளையும் அவன் விட போவது இல்லை என்கிற பயம்.


சிவம் நியாமனவன் என்று அவள் அறிவாள்.


"என்ன மேடம் பேசவே மாட்டேங்கறீங்க ? வெறும் தளிர் மாதிரி பாவப்பட்ட ஜீவன் கிட்ட தான் பேசுவீங்களோ?", என்றவனின் குரலிலே அவன் கோவமாக இருக்கிறான் என்று தெரிந்தது.


"சிவம்", என்று அவள் சொல்ல, "ஓஹ் பேரெல்லாம் நியாபகம் இருக்கா? நான் கூட எங்க மறந்துட்டீங்களோனு நினைச்சேன்", என்று எகத்தாளமாக தான் பேசினான்.


அவளின் கண்களில் அப்போதே தண்ணீர் சுரந்து விட்டது. இருந்தாலும் கட்டு படுத்தி கொண்டாள்.


"நான் சொல்றத", என்று அவள் ஆரம்பிக்கும் போதே, "என்ன கன்சிவ்வா இருக்க, அதான?", என்று அவன் கேட்கவும், அவளின் கண்கள் விரிந்தன.


"நீ கன்சிவ்வா இருக்கறது எனக்கு அன்னைக்கே தெரியும் டி, அது தெரிஞ்சு தான் தளிரோட அன்னைக்கு உனக்கு ப்ரொபோஸ் பண்ண ரிங் வாங்க போனேன்", என்று அவனின் வாலட்டில் இருந்த ரிங்கை எடுத்தவன், அவளின் முகத்திலேயே வீசி எறிந்தான்.


அவளின் கண்களில் தேங்கி இருந்த தண்ணீர் உருண்டு ஓடி விட்டது.


அவள் குனிந்து அதை எடுக்க எத்தனிக்கும் போதே, அவன் அதை கால்களால் நசுக்கி விட்டான்.


அவளுக்கோ அவளின் இதயத்தை நசுக்கி விட்டது போல் தான் தோன்றியது.


"சிவம்", என்று அவள் சீற, "என்ன வலிக்குதா? உனக்கே இவளோ வலிக்குது, உன்ன நான் உன் விருப்பத்தோட தான தொட்டேன்", என்று அவன் கேட்கும் போதே இன்னும் உடைந்து விட்டாள்.


"சொல்லு டி", என்று அவன் வேங்கையாக கர்ஜிக்க, காரில் இருந்த ஆருஷிற்கும் கேட்க தான் செய்தது.


ஆனால் அவனாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.


"ஹ்ம்ம்", என்று அவள் தலையை அசைக்க, "அப்போ உன் ஆருயிர் நண்பன் ஆருஷ் வீர் தினம்தினம் அந்த பொண்ண புடிக்காம தொட்டு இருக்கான், அது மட்டும் இல்லாம பாரி வள்ளல் புள்ள வேற கொடுத்து இருக்கான், அதுக்கு நீயும் உடந்தை", என்று அவன் சொன்னதும் அவளின் கண்கள் விரிந்தன.


வீர் தளிரை வார்த்தைகளால் வதைக்கிறான் என்று தான் அவளுக்கு தெரியும். இப்படி ஒரு உறவு அவர்களுக்குள் இருப்பது அவளுக்கே புதிய செய்தி.


இதை கேட்டதும் ஆருஷ் காரை விட்டு வெளியே வந்து, "அவளுக்கு இது தெரியாது … விட்டுரு ", என்று அழுத்தமாக சொல்ல, "என்ன டா அவளை காப்பாத்த பாக்கறியா ?", என்று அவன் அவனிடமும் சீற, "உண்மையா தான் சொல்றேன் சிவம். அவளுக்கு நான் தளிரோட பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல இருக்கறது தெரியாது", என்று அவன் மீண்டும் அழுத்தமாக சொன்னான்.


"நல்லா அந்த பொண்ண இரண்டு பேரும் வச்சி செஞ்சிட்டிங்க", என்று தலையை தேய்த்தவன், "இங்க பாரு நல்லா கேட்டுக்கோ, உன்ன விட பெட்டெர் ஆஹ் ஒருத்தன அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சி அவளை நல்லா வாழ வைக்குறேன் பாரு", என்று சிவம் சொல்ல, "அதுக்கு அவ ஒத்துக்கணுமே ", என்று நக்கலாக புன்னகைத்தான் ஆருஷ்.


"ஏன் சம்மதிக்க மாட்டேன்? எனக்கு நல்ல மாப்பிளை என் குழந்தையோட என்ன அக்சப்ட் பண்ணிக்கிட்டா, கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்குவேன். சிவம் நீ வா போகலாம். எனக்கு கொஞ்சம் டயர்ட்டா இருக்கு", என்று சிவத்தை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டு இருந்தாள் தளிர்.


"ஆருஷ் என்ன இதெல்லாம்?", என்று அவனை பார்த்து ஸ்ருஷ்டி கத்த,"ப்ளீஸ் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்", என்று அவன் அழைத்து வந்து விட்டான்.


அப்போதிலிருந்து தான் இவை நடந்து கொண்டு இருந்தது.


"தளிர் நீ உண்மையா தான் சொல்றியா? இன்னோருத்தன மேரேஜ் பண்ணிக்க உனக்கு ஓகே வா?", என்று சிவம் கேட்க, "வை நாட், அப்போ சொன்னது தான் இப்பவும், எனக்கு நல்ல மாப்பிள்ளை என் குழந்தையோட என்னை அக்சப்ட் பண்ணிக்கிட்டா, கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்குவேன்.", என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.


இப்பொது அவள் சிவமின் அபார்ட்மெண்டில் தான் இருக்கிறாள். சிவம் அவளை அவனுடனே வைத்து கொள்ள முடிவெடுத்து விட்டான்.


அடுத்து அவன் கைபேசியை எடுத்து, "மச்சான் நீ கலிபோர்னியா வா டா, உனக்கு நிறைய வேலை இருக்கு", என்று அவன் சொல்ல, "வந்துட்டா போச்சு", என்று சிரித்தான் மறுபுறத்தில் இருந்தவன்.


அவனின் பெயருக்கு ஏற்ப ஜொலிப்பவன் தான், அவிர் நிலன், அவிரன் என்று அனைவராலும் அழைக்க படுபவன்.


ஆருஷிற்கு இணையான அழகும் அறிவும் இருப்பவன். சிவத்தின் நம்பிக்கை பெற்ற அவனின் ஆருயிர் நண்பன்.


இந்த கதையின் போக்கை மாற்ற போகிறவன்.


சிவத்தின் அழைப்பை வைத்து விட்டு அவனின் எண்ணில் இருந்து இன்னொரு நபருக்கு அழைத்தவன், "நம்ப டாஸ்க் ஈசியா முடிஞ்சிரும் போல, தானா வந்து சிக்குறாங்க, நினைவு இருக்கட்டும் மதி எனக்கு தான்.", என்று அழுத்தமாக சொல்ல, மறுபுறத்தில் இருந்தவர் என்ன சொன்னான் என்று தெரியவில்லை.


ஆனால் அவிரன், "நீ கவலையே படாத, வீரை மொத்தமா முடிச்சிரலாம்", என்று சொன்னவனின் இதழில் நக்கலான ஒரு புன்னகை.


தளிருக்கு ஏற்ற வீரன், ஆருஷ் வீரா? இல்லை அவிரனா?
 
Last edited:
1729455037538.jpg
அத்தியாயம் 2

"யாரு கிட்ட பேசுன?", என்று தளிர் கேட்கவும், "என் பிரென்ட் தான், பிஜி ஒண்ணா பண்ணோம். அவனும் கைனோ தான்.", என்றிட, "என்ன திடிர்னு இங்க கூப்பிட்ற?", என்று அவள் கேட்க, "உன் கூட ஒருத்தர் இருக்கறது தான் உனக்கு சேப்பிட்டி அதனால தான் அவனை வர சொன்னேன்", என்றான்.


அவள் சிறிதும் யோசிக்க வில்லை, "அதான் நீ இருக்கியே", என்றவளை சட்டென திரும்பி பார்த்தவன், ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு, "எப்படியா இருந்தாலும் ஸ்ருஷ்டியோட டெலிவெரிக்கு முதலே இந்தியா போகணும் இன்னும் இரண்டரை மாசத்துல அவளை இந்தியா கூட்டிட்டு போயிறலாம்னு இருக்கேன்", என்றவுடன் அவளின் கண்கள் கலங்கி விட்டது.


"இதுக்கு எதுக்கு உன் பிரென்ட்லாம், நானே என்னை பார்த்துப்பேன் சிவம், இன்னும் அஞ்சு மாசம் தானே அதுக்கு அப்பறோம் நானே இந்தியா தானே வர போறேன், நீ இல்லாம த்ரீ மந்த்ஸ் என்னால என்னை பாத்துக்க முடியும்", என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.


"நான் இல்லாத மூணு மாசத்துல தான் இப்படி உன் வாழ்க்கை ஆகிருச்சு, சாந்தினி கிட்ட உன்ன பாத்துக்குவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். நான் ஸ்ருஷ்டியை இந்தியா அனுப்பிட்டா என் பேரெண்ட்ஸ் கூட பார்த்துப்பாங்க ஆனா ..", என்று அவன் நிறுத்தும் போதே, "நீ இருந்தா தான் நல்லா இருக்கும் சிவம், டூ மந்த்ஸ் முன்னாடி அவங்க அம்மா அப்பா கூட தவறிட்டாங்க", என்று முடித்து என்னவோ அவள் தான்.


அவனுக்கு எப்போதும் அவளை பார்த்தாள் ஒரு பிரம்மிப்பு இருக்கும். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களை பற்றியே யோசிப்பவள் அவள்.


அவள் இப்படி ஒரு முறை யோசித்தத்தின் விளைவு தான் இன்று அவளை இங்கே கொண்டும் வந்து நிறுத்தி இருக்கிறது. அவனுக்கும் தளிர் அனைத்தையும் சொல்லி இருந்தாள்.


அவள் சொல்லும் போதே அவள் சொன்ன நபர் ஆருஷின் தம்பி என்பதை அவள் சொல்லும் போதே அறிந்து கொண்டான். ஆனால் அவள் அவனுக்கு உண்மையை சொன்ன நாள் அன்று தான் தளிரின் தலையெழுத்தை மாற்றியது.


"நீ சொல்லும்போதே எனக்கு தெரியும் நீ சொல்றது அதர்வ் பத்தி தாணு, உங்கிட்ட பொறுமையா சொல்லலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள என்னலாமோ ஆகிருச்சு", என்று அவன் தலையை கவிழ்த்து கொண்டான்.


அவனின் தலையை நிமிர்த்தியவள், "இதுல உன் தப்பு என்ன இருக்கு சிவம், எல்லாம் என் தலை எழுத்து... தப்பு செஞ்சவன் தண்ணிய குடிச்சி தான ஆகணும்", என்றவளை பார்த்தவன், "தெரியாம செஞ்சது தான", என்றவனை பார்த்து இதழில் வலியுடன் கூடிய புன்னகையை புரிந்தவள், "தெரியாம நான் செஞ்ச ஒரு தப்பால ஒரு உயிர் பலி ஆகிருச்சே", என்றவள் கண்களில் கண்ணீர் துளிகள்.


அவனோ பெரு மூச்சை விட்டு கொண்டு எழுந்தவன், "எதை பத்தியும் நினைக்காத, எல்லாம் சரி ஆகிடும். நான் இல்லாத டைம் அவிரன் உன்ன நல்லா பாத்துக்குவான். என்னை விட எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு", என்று அவன் புன்னகைக்க, "அவளோ நம்பிக்கையா? அப்படி என்ன ஸ்பெஷல் அவரு கிட்ட? அப்புறம் அது என்ன பேரு அவிரன்?", என்று அவள் யோசனையுடன் கேட்டாள்.


"அவனோட பேரு அவிர் நிலன் ஆனா காலேஜ்ல இருந்து அவிரன்னு கூப்பிட்டே எல்லாரும் பழகிட்டாங்க ஈவென் ஒர்க் ஸ்பெஸ்லயும் இப்போ அவிரன்னு தான் கூப்பிடறாங்கனு சொன்னான். நம்பிக்கையின் சிகரம் அவன் தெரியுமா? அவன் கிட்ட ஒரு டாஸ்க் கொடுத்தா அத முடிக்க என்ன எல்லைக்கு வேணா போவான்", என்று தான் நண்பனுக்கு சான்றிதழை வழங்கி கொண்டு இருந்தான் சிவம்.


சான்றிதழை பெறுபவனோ, "இன்னும் ரெண்டு வாரத்துல கலிபோர்னியா போறேன். கொடுத்த வாக்க மீற கூடாது, ஆருஷை நான் பாத்துக்குறேன், ஆனா மதி எனக்கு தான்", என்று மீண்டும் அவனின் வார்த்தைகளை உறுதி செய்து கொண்டான் அவிரன்.


"எனக்கு யாரு மேலயும் நம்பிக்கை இல்ல சிவம்", என்று அவள் சொல்லவும், "என் மேல கூடவா?", என்று உடனே கேட்க, "உன் மேல நம்பிக்கை இருக்கறதுனால தான் உன்கூட இந்தியா விட்டு கலிபோர்னியா வரைக்கும் வந்திருக்கேன்", என்று அவள் சொல்லவும், அவளின் தலையை வருட, "எல்லாம் சரி ஆகிடும். நீ கவலை படாத, ஜஸ்ட் திங்க் அபௌட் யுவர் பேபி", என்று அவன் சொல்ல, அவளும் தலையை ஆட்டினாள்.


இங்கோ ஸ்ருஷ்டி ஆருஷை வாங்கு வாங்கு என்று வாங்கி கொண்டிருந்தாள்.


"ஏன் டா கொஞ்சமாச்சு யோசிச்சிருக்கலாம்ல இவளோ பெரிய காரியம் பண்ணியிருக்க ? அன்னைக்கு முதல் முறை அவளை ஒரு அரக்கன் கிட்ட இருந்து அவளை நான் தான் காப்பாத்துனேன். இன்னைக்கு இப்படி ஒரு அரக்கன் கிட்ட நானே அவளை மாட்டிவிட்டுருக்கேன்", என்று அவள் கூறவும் , ஆருஷும் நொறுங்கி விட்டான்.


அப்பா அம்மா திட்டியது வலிக்கவில்லை. சிவம் பேசியது குத்தவில்லை. யாழ் அறைந்தது கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தளிர் மௌனம் அவனை வாட்டியது உண்மை தான். ஆனால் ஸ்ருஷ்டியின் வார்த்தைகள் அவனின் இதயத்தை நொறுக்கி இருந்தது.


அவளை வைத்து தானே பகடை ஆடினான். ஆனால் அவளிடம் கூட முழு உண்மையை சொல்லாமல் மறைத்து விட்டான்.


"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல", என்று அவள் கேட்கவும், "சொல்லிருந்தா விட்டுருப்பியா ?", என்று அவளை பார்க்க, அவளோ இல்லை என்று தலை அசைத்தாள்.


"அதுக்கு தான் சொல்லல", என்று அசால்ட்டாக பதில் அளித்து அவன் செல்ல முற்பட, "நீ இவளோ கேவலமானவனா?", என்று கேட்டே விட்டாள்.


அவனுக்கோ கோவம் வந்தது, அடக்கி கொண்டான்.


"இப்போ என்ன தான் டி உனக்கு பிரச்சனை? உனக்கும் நான் பண்ணது தான் தப்புனா நீயும் கிளம்பி போ", என்று சொல்லி விட்டான்.


"நீ பண்ணது தப்பு இல்ல அதுக்கும் மேல பெரிய பாவம், உனக்கு வேணும்னா நீ அவளை கொலை கூட பண்ணிருக்கலாம். ஏன் நானே சொல்லல வேணும்னா அவளை கொன்னுடுனு, ஆனா நீ என்ன பண்ணியிருக்க ?", என்று அவள் சொல்லவும், "அவளை கொன்னு இருக்கலாம் கொன்னு இருக்கலாம்னு எல்லாரும் சொல்றிங்க, என்னால அவ இல்லாம இருக்க முடியாது டி, அதான் கொலை பண்ணல, பண்ண தான் ஒரு வாடி ட்ரை பண்ணேன், ஆனா மனசு மாறி அவனுக்கு கால் பண்ணி அந்த அட்டெம்ப்ட்டா நிறுத்த சொல்ல நினைச்சேன் ஆனா..", என்று அவன் மேலே தொடர வில்லை.


"வீர்...", என்று அவள் அழுத்தமாக அழைக்க, அவனால் அவளை பார்க்க முடியவில்லை.


"அப்போ சிவமோட ஆக்சிடென்ட் பண்ணது..", என்று அவள் நிறுத்தி விட்டாள்.


கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன் , "எஸ் நான் தான், ஆனா அது அவனுக்கு போட்ட ஸ்கெட்ச் இல்ல, மதிக்கு போட்டது அவன் தான் அவனோட பிரென்ட்ட காப்பாத்த குறுக்க வந்துட்டான்", என்று சொன்னதும் தான் தாமதம், வீரின் கன்னத்தில் ஸ்ருஷ்டியின் ஐந்து விரல்களும் பதிந்து இருந்தது.


ஆம் ஸ்ருஷ்டி வீரை அறைந்து இருந்தாள்.


"ச்சீ நீ எல்லாம் மனுஷனா? அவ தெரியாம தான் டா பண்ணிருப்பா, உன் தம்பி சாவ அவளும் ஒரு காரணம் அவளோ தான். அவ பண்ணது தப்பு தான் நான் இல்லனு சொல்லல, உன் அம்மா அவளோ பேசியும் அவ கேட்காம பண்ணது தப்பு தான். ஆனா நீ தெரிஞ்சே எல்லாமே பண்ணியிருக்க , இவளோ ஏன் என்கிட்ட கூட நீ உண்மையா இல்லல?", என்று கேட்கும் போதே வீரின் விழிகள் தாழ்ந்து கொண்டது.


"அன்னைக்கு என்ன எல்லாம் சொன்ன என் கிட்ட, சிவம நான் காப்பாத்துறேன், இது தான் தளிரை நீ பழிவாங்க நல்ல சமயம் வெறும் அவளை வார்த்தையால தான் வதைக்கலாம்னு இருக்கேன். நீ போய் தளிர் கிட்ட பேசுனு என்னை வேற இந்த பாவத்துல சேர்த்துக்கிட்டியே டா", என்று சொல்லி வெடித்து அழுது விட்டாள்.


"ஸ்ருஷ்..", என்று அவள் பெயரை அவன் உச்சரிக்கும் போதே, "என் பேர கூட சொல்லாத, என்னை ஏமாத்திட டா", என்று இருகைகளையும் மூடி கொண்டு அழுதவள், உடனே அவளை சுதாரித்து கொண்டு, கண்களை துடைத்து கொண்டு எழுந்து விட்டாள்.


"நான் என் வீட்டுக்கு போறேன்", என்று கிளம்பும் போது, "நீ தனியா இருக்கறது செப் இல்ல", என்று அவன் சொல்வதை எல்லாம் அவள் கேட்கவே இல்லை.


சென்று விட்டாள். அவளும் சென்று விட்டாள்.


ஆருஷிற்கோ தனியாக அவனை அனைவரும் ஒதுக்கி வைத்த உணர்வு.


அவளின் உணர்வை பறிக்க அவன் செய்த வினை, இன்று அவனிற்கே திரும்பியது.


மதியிழந்து அவன் செய்த ஒரு தவறு, அவனின் மதியானவளை மட்டும் அல்லாமல் அவனின் மனதில் இருக்கும் அனைவரையும் இழக்க வைத்து விட்டது.


தனித்து விட பட்டுவிட்டான் ஆருஷ். அவனின் அறைக்கு உள்ளே சென்றான்.


ஏனோ இன்னும் தளிரின் வாசமே அவனுக்கு அறை முழுவதும் நிறைந்து இருக்கும் உணர்வு.


மூன்று மாதங்களாக அவளுடன் அவன் வாழ்ந்த நாட்கள் அவனின் கண் முன் வந்து போனது.


இதே அறையில் அவளுடன் அவன் செய்த முதல் கூடல் அவனின் மனதில் இன்றும் தோன்றியது.


அவளை வதைக்க வேண்டும் என்று தான் இந்த விளையாட்டை ஆரம்பித்து இருந்தான். ஆனால் அவளை நெருங்கும் ஒவ்வொரு சமயமும் காதலுடன் தான் கூடினான்.


அவனிற்கே சில சமயம் அவனின் மேல் அதனால் கோவம் வந்துள்ளது.


அவள் கர்ப்பமாக வேண்டும் என்று தான் இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்தான்.


அவளின் பக்கம் உள்ள நியாயத்தை பார்த்த ஒருவர் கூட அவனிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லையே!


அவனிடம் எப்போதும் அவனது வாலட்டில் இருக்கும் அவளின் புகைப்படத்தை எடுத்தவன், "நீ ஏன் டி என் வாழ்க்கைல வந்த? உன்னை எவளோ லவ் பன்றேன்னு எனக்கு மட்டும் தான் டி தெரியும், நீ மட்டும் அந்த ஒரு விஷயம் பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் கண்டிப்பா நீ இப்படி தான் கான்சிவ்வா இருந்திருப்ப ஆனா நான் உன்கூட இருந்திருப்பேன், உன்னோட ஒவ்வொரு அசைவுலயும் நான் உன்கூடவே இருந்திருப்பேன். கல்யாணம் கூட பண்ண மாட்டேன்னு சொல்ற அப்படி என்ன டி கோவம்? கோவம் தான என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை டார்ச்சர் பண்ணலாமே, நீ யாரு கிட்டயாச்சு ஏதாச்சு சொல்லிட்டா அவங்க என்கிட்ட இருந்து உன்னை பிரிச்சிருவாங்கனு தான் டி சொல்ல விடலை", என்று தலையில் கை வைத்து கொண்டு, ஒரு கத்து காத்தினனே, அவனின் அபார்ட்மெண்டில் உள்ள கண்ணாடிகள் உடையாதது அதிசயம் தான்.


"ஏன் டி ஏன் என்னை விட்டுட்டு போன? ஒரு தடவ என்கிட்ட என் சட்டையை புடிச்சி கேட்ருக்கலாமே, உங்கிட்ட இந்தியால இருந்து வந்து எல்லாத்தயும் சொல்லி பிரெஷ்ஷா ஒரு லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா எல்லாத்தையும் நீயே தெரிஞ்சிகிட்ட, தெரிஞ்சிகிட்ட நீ ஒரு தடவ ஒரே ஒரு தடவ வந்து என்கிட்ட வந்து ஏன் டா இப்படி பண்ண கேட்ருக்கலாமே", என்றவனின் கண்ணில் நிற்காமல் கண்ணீர்.


இன்றுவரை குளியறையில் அவனின் கண்ணீரை மறைத்தவன் இன்று அவனின் அறையிலே நான்கு சுவருக்குள் அழுகிறான் அவனவளிற்காக அழுகிறான்.


ஆண்கள் அழமாட்டார்கள் என்று சொன்னது யார்? அவர்களின் கண்ணீரை அவர்கள் காட்டுவதில்லை.


உடைந்து எவ்வளவு நேரம் அழுதான் என்று அவனிற்கே தெரியாது. அவனே அவனை சமன் செய்து கொண்டான்.


"என்ன ஆனாலும் சரி நீ எனக்கு தான் உன்னை யாருக்கும் நான் விட்டு தர போறது இல்லை அது உன் அக்கா சாந்தினியா இருந்தாலும் சரி இல்ல உன்னோட நண்பி யாழ்நிலாவா இருந்தாலும் சரி, அந்த சிவம் தலைல நாலு தட்டு தட்டியாச்சு உன்னை தூக்கிட்டு வருவேன். நான் வேணாம் நான் கொடுத்த குழந்தை மட்டும் வேணுமா? என்ன டி லாஜிக் இதெல்லாம்", என்று அவன் அவனிடமே பேசி கொண்டிருந்தான்.


ஆருஷ் வீரோ தளிரை தனதாக்க எத்தனிக்க, இங்கோ அவிரன், "தளிர்மதி ஐ அம் கமிங் போர் யு, ஆருஷ் கெட் ரெடி டு பேஸ் தி ரியல் டிமன்", என்றவனின் இதழில் ஒரு மர்மப்புன்னகை.


அவிரனின் வருகை மதியை ஆருஷிடம் இருந்து நிரந்தரமாக பிரித்து விடுமா?
 
Last edited:
1729455037527.jpg
அத்தியாயம் 3


ஒரு வாரம் கடந்து இருந்தது.


சிவமும் மருத்துவமனை வர துவங்கி இருந்தான்.


ஸ்ருஷ்டியிடம் அவன் பேசவே இல்லை. அவள் ஆருஷுடன் பேசுவது இல்லை என்பதையும் அவன் கவனித்தான் தான், ஆனால் அவளிடம் கேட்க வில்லை.


அன்று மதிய உணவிற்காக தளிரும் சிவமும் கான்டீன் செல்ல, ஸ்ருஷ்டியும் அங்கே தான் அமர்ந்திருந்தாள்.


"ஸ்ருஷ்டி கிட்ட போய் பேசலாமே", என்று தளிர் சொல்லவும், ஒரே பார்வையில் அவளை அமைதியாக்கி விட்டான்.


ஸ்ருஷ்டியின் பார்வை முழுக்க சிவம் தான் நிறைந்திருந்தான்.


அப்போது தான் ஆருஷ் வருவதை பார்த்தான் சிவம். தளிரும் சாப்பிட்டு முடித்து விட்டாள்.


"நீ கிளம்பு தளிர், ஒர்க் இருக்குனு சொன்னயில்ல ", என்று அவன் சொல்லும்போதே, "வீர் வர்றார்ரா ?", என்று கேட்டு விட்டாள்.


ஒரு வாரமாக நடக்கும் ஒன்று தான்.


அவளை ஆருஷின் கண்களில் இருந்து பொக்கிஷம் போல் பார்த்து கொண்டிருக்கிறான்.


"ஆமா சார் வராரு, நீ கிளம்பு. இன்னைக்கு ஒரு பஞ்சாயத்தை பேசிட்டு வரேன்", என்று அவன் சொல்லவும் அவளும் நகர்ந்து விட்டாள்.


அவள் எழுந்து செல்வதை பார்த்த ஆருஷிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை.


சிவமை தாண்டி இரண்டு நாட்களுக்கு முன் அவன் தளிரை பார்க்க போகும் சமயம், ஒரு தாதி வந்து இம்போர்ட்டண்ட் கேஸ் என்று அவனை இழுத்து சென்று விட்டார்.


"இது டாக்டர் சிவமோட கேஸ்ல", என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க, "ஆமா சார், ஆனா அவரு இப்போ ஒரு இம்போர்ட்டண்ட் ஒர்க்ல இருக்காரு. சோ உங்கள அட்டென்ட் பண்ண சொல்லிருக்காரு, ஜெனரல் கேஸ் தான் அதனால நீங்களே அட்டென்ட் பண்ணலாமேனு ", என்று அவர் சொல்லவும் அவனுக்கு புரிந்து விட்டது.


"அவ பின்னாடி ஏதாச்சு சிசிடிவி கேமரா வச்சிருக்கான் போல, முகத்தை கூட பார்க்க விட மாட்டேங்குறான் ", என்று மனதில் பொருமிக்கொண்டான்.


ஒரு வாரமாக அவனை வைத்து செய்து கொண்டிருக்கிறான்.


ஆருஷ் ஸ்ருஷ்டியின் முன் வந்து அமர்ந்தான்.


"இன்னும் கோவமா தான் இருக்கியா?", என்று அவன் கேட்க, அவளிடம் பதில் இல்லை.


"சொல்றத கொஞ்சம் கேளு டி, நீயும் என்கிட்ட பேசலனா பைத்தியம் ஆகிருவேன் போல", என்று அவன் சொல்லவும், அவளுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.


அவளும் தனித்து தான் இருந்தாள். ஒருவாரமாக யாரிடமும் பேசாமல் இருந்ததால் அவளுக்கும் தனிமை சுட்டெரிக்க துவங்கியது.


அவளின் ப்ரக்னென்சி ஹோர்மோன்கள் வேறு அவளை இம்சை செய்தது.


"இப்படி எல்லாம் பேசுனா மட்டும் உன்னை மன்னிப்பேனு நினைக்காத", என்று அவள் அருகில் இருந்த டிஸுவை எடுத்து கண்களை துடைக்கும் போதே அங்கே வந்திருந்தான் சிவம்.


"என்ன நண்பர்களுக்கு உள்ள ஏதோ சண்டை போல? நான் வேணா பஞ்சாயத்து பண்ணவா?", என்று அவன் கேட்கவும், "பஞ்சாயத்து பண்றதே வேலையா வச்சிருக்கியா", என்று இவனும் சீறினான்.


சத்தமாக சிரித்தான் சிவம். "நல்ல வேலை தான, எனக்கும் ஒரு என்டேர்டைன்மெண்ட் வேணாவா?", என்று கண்சிமிட்டி கொண்டே சொல்ல, ஆருஷிற்கு தான் எரிச்சலாக இருந்தது.


ஸ்ருஷ்டி இல்லை என்றால் கூட ஏதாவது சொல்லிருப்பான், அவளும் இருக்க அவனால் வெளிப்படையாக அவனை திட்ட கூட முடியவில்லை.


"என்னை திட்ட கூட முடியலன்னு பீலிங் போல", என்று அவன் கேட்கவும், அவனை நிமிர்ந்து பார்த்தவன், "நீ கைனோ தானே டா? சைக்கியாட்ரிஸ்ட் மாறி மனச படிக்கறத நிறுத்து. எல்லாரும் உனக்கே சப்போர்ட் பன்றாங்க. யாரு முன்னாடியும் திட்ட கூட முடியல", என்று ஸ்ருஷ்டியை பார்த்து தான் கூறினான்.


"என்ன பண்றது ஆருஷ்? நல்லவனுக்கு தான் இந்த உலகம் எப்பவும் சப்போர்ட் பண்ணும். கெட்டவன் ஜெயிக்கிற மாதிரி தெரியும். ஆனா ஜெயிக்க மாட்டான்", என்று நக்கலாக அவன் சொல்ல, "சினிமா டயலாக்லாம் சேர்த்து பேசாத, கேட்க சகிக்கல", என்று அவன் சொல்லிக்கொண்டே எழுந்து விட்டான்.


சிவமின் கண்களை உற்று நோக்கியவன், "உண்மையா ஸ்ருஷ்டிக்கு எதுவும் தெரியாது, நான் தளிரை ஏதோ திட்டிட்டு இருக்கேனு தான் அவ நினைச்சிட்டு இருந்தா", என்று அவன் சொல்லும் போதே அவனை மேலும் பேச வேண்டாம் என்று சைகை செய்து விட்டான்.


"அதனால தான நீயும் மேடமும் ஒரு வாரமா பேசிக்கல?", என்று வினவ, தலை அசைப்பு மட்டும் தான் ஆருஷிடம் இருந்து.


"இரண்டு பேரும் சேர்ந்து தானே பிளான் போட்டீங்க?", என்று அவன் கேட்க, "ஆமா, ஆனா அவளுக்கே நான் தளிர் கூட இருந்தது தெரியாது", என்று அவன் சொல்லவும், அவனை மேல் இருந்து ஒரு பார்வை பார்த்தான்.


"உங்கிட்ட இருந்து நான் இத எதிர்பார்க்கல ஆருஷ். சின்ன வயசுல இருந்தே நாம எதிரிகள் தான், ஆனா உனக்காக நானே பேசி இருக்கேன் தளிர் கிட்ட, அன்னைக்கு நாம ஹாஸ்பிடல் பார்ட்டி முடிஞ்சு போற சமயம் கூட சொன்னேன், நீ அவளை உண்மையா லவ் பன்றேன்னு.... ஒரு தடவை அவ கிட்ட பேசி பாத்திருந்தா இவளோ பெரிய பிரச்சனையை நீ இழுத்து விட்டு இருக்க மாட்ட", என்று நிறுத்தி கொண்டான்.


"அவ பண்ணது..", என்று அவன் ஆரம்பிக்கும் போதே, "அவ தெரியாம தானே பண்ணா", என்று சொன்னது ஸ்ருஷ்டி தான்.


அவனுக்கோ சலிப்பாக இருந்தது. ஒருவர் கூட அவனிற்காக அவளிடம் பேச மாட்டேன் என்கிறார்களே என்பது இன்னும் அவனுக்கு மனஅழுத்தத்தை சேர்த்தது.


"எல்லாரும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுங்க", என்று சொல்லி அவன் செல்லும் போதே, "அவளை பார்க்க ட்ரை பண்ணாத", என்று கட்டளையாக வந்ததது சிவமின் வார்த்தைகள்.


அவனின் வார்த்தைகளில் திரும்பியவன், "நீ என்ன ப்ரொடெக்ட் பண்ணாலும் அவளை எப்படி தூக்கணும்னு எனக்கு தெரியும்", என்றவனின் இதழ்களில் ஒரு ஏளன புன்னகை.


"நான் மட்டும் ப்ரொடெக்ட் பண்ணா தான?", என்று அவனும் புருவங்களை உயர்த்தி கேட்க, ஆருஷின் புருவங்கள் இடுங்கியது.


"அடுத்த வாரத்துல இருந்து பாருங்க மிஸ்டர் ஆருஷ் வீர்", என்று அவன் கண்களை சிமிட்ட, அவனோ, "எப்படியா இருந்தாலும் இன்னும் இரண்டரை மாசம் தான, அதுக்கு அப்பறோம் நீ இந்தியா கிளம்பிருவ, என்ன அதோட இரண்டு மாசம் உன் நண்பி தனியா தான இருப்பா?", என்று அவனும் சரிக்கு சமமாக பேசினான்.


சிவம் அவனின் முத்து பற்கள் தெரிய சிரித்து, "என்னை இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா? உங்கிட்ட அவளை தனியா விட்டுட்டு போக நான் என்ன முட்டாளா? அதுக்கு அடுத்த வாரம் ஒருத்தன் வருவான், முடிஞ்சா அவன் கிட்ட இருந்து அவளை பிரிச்சி கூட்டிட்டு போ", என்றவன் அத்துடன் நிறுத்தாமல், "அவனும் பார்க்க செம்மயா இருப்பான். இரண்டு பேருக்குமே செட் ஆச்சுன்னா கல்யாணம் செஞ்சு வச்சிரலாம்", என்று முடித்து விட்டான்.


அவனுக்கோ கோவம் தலைக்கு ஏறியது. அவனின் முன்னிலையிலேயே வேறு ஒருவனுடன் அவளை சேர்த்து வைத்து பேசுகிறானே!


"ஸ்ருஷ்டிகாக பாக்குறேன் இல்லனா", என்று பற்களை கடித்து கொண்டு அவன் பேச, "இல்லனா மட்டும் என்ன கிழிப்ப?", என்று அவனின் மூளையை மேலும் சூடாக்கி கொண்டு இருந்தான் சிவம்.


இவனிடம் பேசுவது வீண் என்று நினைத்தவன் அதற்கு மேல் அவனுடன் வாக்கு வாதம் செய்ய விரும்பாமல் அங்கிருந்து சென்று விட்டான்.


"உன் பிரென்ட் என்ன இதுக்கே ஓடிட்டான்?", என்று சிவம் ஸ்ருஷ்டியை பார்த்து கேட்கவும், "உண்மையாவே தளிருக்கு வேற மாப்பிளை பார்க்க போறிங்களா?", என்று அவள் கேட்க, "பின்ன? உன் நண்பனை போய் கல்யாணம் பண்ணி வெக்க சொல்றியா? அவன் பண்ண காரியத்துக்கு..... தளிர் சொன்னதுனால தான் அமைதியா இருக்கேன். இல்லனா அடிச்சே கொன்னுயிருப்பேன்", என்று சொல்லிக்கொண்டே அவளை பார்த்தவன், "நீயும் எஸ்கேப் ஆகிட்ட, ப்ரக்னென்ட் ஆச்சேனு பாக்குறேன். உன் மேலயும் அவளோ கோவம் இருக்கு", என்று பற்களை கடித்து வார்த்தைகளை தூப்பினான்.


"சாரி சிவம்", என்று அவள் கண்ணீருடன் சொல்லவும், அவனுக்கோ அவளின் கண்ணீரை பார்க்க முடியவில்லை.


"ப்ளீஸ் அழாத, கடுப்பா இருக்கு, கொஞ்ச நாளைக்கு என்கிட்ட பேசாத அது தான் இரண்டு பேருக்கும் நல்லது. அண்ட் நாளைக்கு உனக்கு செக் அப் இருக்குல", என்று கேட்க, அவளும் பாவமாக முகத்தை வைத்து கொண்டு ஆம் என்று தலையசைத்தாள்.


"நடிக்காத டி நீ யாருனு எனக்கு தெரியாது, எத்தனை டாக்டர்ஸ் இருகாங்க நம்ம ஹோச்பிடல்ல? அது என்ன மேடம் நான் தான் உங்கள செக் பண்ணனும்னு சொல்லிருக்கீங்க", என்று அவளை பார்த்தான்.


"அச்சோ கண்டுபிடிச்சிட்டானே", என்று மனதில் நினைத்து கொண்டு, அவனை ஏறிட்டு பார்க்க, அவனோ நீ சொன்னால் தான் உன்னை விடுவேன் என்று நின்று கொண்டு இருந்தான்.


"இல்ல அது ஒரு நல்ல டாக்டர்ரா பார்த்தா...", என்று அவள் முடிக்கும் முன்னே, "அப்போ இந்த ஹாஸ்பிடல்ல வேற எந்த கைனோவும் நல்ல டாக்டர்ஸ் இல்ல அப்படித்தானே", என்று அவன் விடாது கேட்க, அவளும் என்ன தான் சொல்லுவாள்.


"என் இஷ்டம் எனக்கு புடிச்ச கைனோவ நான் செலக்ட் பண்ணேன் இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை?", என்று ஒரு வழியாக தைரியத்தை வரவைத்து கொண்டு கேட்டுவிட்டாள்.


இதற்கு அவனால் என்ன சொல்லிவிட முடியும், "நாளைக்கு செக் அப்க்கு வாங்க பேசிக்கலாம்", என்று சொல்லிவிட்டு அவன் செல்ல முற்படும் போதே, அவளை மறுகணம் திரும்பி பார்க்க, "உன் பிரென்ட் கிட்ட பேசு. யாரும் இல்லாம தனியா இருக்கான், ரொம்ப பிரஸ்ட்டிரேட்டா தெரியுறான். நீயும் பேசலான ரொம்ப கஷ்ட படுவான்", என்று அவன் சொல்ல, அவளுக்கோ விழிகள் விரிந்தது.


இப்போது தான் அவனை வறுத்து கொண்டிருந்தான், இப்போது அக்கறையாக பேசுகிறான்.


"உங்கள என்னால புரிஞ்சிக்கவே முடியல", என்று சொல்லியே விட்டாள்.


"இவளோ நேரம் அவனை அந்த கிழி கிழிச்சிட்டு இப்போ கேர் பன்றேன்னு தான?", என்றவனை பார்த்து, ஆமாம் என்று அவள் தலை அசைக்க, "அவன் மட்டும் தான் அவன் வீட்டுக்கு இப்போ இருக்குற ஒரே பையன் அவனும் டிப்ரஷனுக்கு போய்ட்டா விக்ரமன் அங்கிள் வைஷ்ணவி ஆண்ட்டி பாவம் இல்லையா? அந்த அக்கறை தான். நான் ஒன்னும் நல்லவன்லாம் இல்ல", என்று சொல்லிவிட்டு நகரும் போதே, "அப்பறம் நானும் எனக்கு வேற ஒரு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன்", என்றானே பார்க்கலாம்.


"கொன்றுவேன் உங்கள", என்று சட்டென அவளிடம் இருந்து வார்த்தைகள் வந்தன.


அவனின் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியவன், "உன்னால முடிஞ்சது பார்த்துக்கோ டி", என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.


அடுத்த நாள் அவள் செக் அப் செல்ல, ஒரு மருத்துவனாக மட்டுமே அவளிடம் பேசினான். அறிவுரைகள் சில கூறினான். அவளுக்கோ சற்று கடுப்பாக ஆகி விட்டது.


அவனை சீண்டி பார்க்க எண்ணி, "டாக்டர்", என்று அவனை அழைக்கவும், அவளை பார்த்தவனிடத்தில், "என் கணவர் கூட அப்படி இப்படி இருக்கலாம்ல", என்று அவள் கேட்கவும், அவனுக்கு தான் சங்கடமாக இருந்தது.


"இல்ல எனக்கு ப்ரக்னென்ட் ஆனதுல இருந்து டிசையர்ஸ் கொஞ்சம் அதிகமா இருக்கு அதான் கேட்டேன்", என்று அவள் சொல்லவும், அவனோ "வான்டட்டா வச்சி செய்றா", என்று நினைத்து கொண்டவன், உப் என்று இதழ்களை ஊதி கொண்டு, "வச்சிக்கலாம், ரொம்ப டிசையர்ஸ் இருக்கோ?", என்று அவன் கேட்கவும், அதிர்வது அவள் முறை ஆனது.


அவளின் தொண்டை குழியில் எச்சில் ஏறி இறங்கியது.


"ஹ்ம்ம்", என்று அவள் தலையை தாழ்த்தி சொல்லவும், "உன் ரூம்மேட் காலி பண்ணிட்டால ரூமை", என்று அவன் கேட்க, அவனை பட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவன் இதழ்களில் கீற்றாக புன்னகை.


"இன்னைக்கு நைட் டிசையரசை தீர்த்துரலாம்", என்று அவன் சொன்னதும் தான் தாமதம் எழுந்த விட்டாள்.


"நான் சும்மா சொன்னேன்", என்று அவள் பம்ம ஆரம்பிக்க, "நான் சீரியஸ்சா தான் சொல்றேன்", என்று அவன் கைகளை பின் தலையில் வைத்து கொண்டு ஒரு நமட்டு பார்வையுடன் அவளை பார்க்க, அவளுக்கோ எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல் இருந்தது.


"இதோட ஏதாச்சு பேசுவியா?", என்று அவளின் மனசாட்சி அவளை காரி துப்பியது.


"தெரியாம கேட்டுட்டுடேன் விட்ருங்க", என்று கைகளை கும்பிட்டு கேட்டதும், "அடுத்த வாட்டி இப்படி பேசுனா, இங்கயே டிசையரசை தீர்த்து வச்சிடுவேன்", என்று சொன்னதும் ஓடியே விட்டாள்.


அவள் சென்றதும் இதழ் பிரித்து சிரித்து கொண்டான்.


இப்படியே ஒரு வாரம் நகர, தளிர் அன்று சமைத்து கொண்டு இருந்தாள்.


சிவம் சூப்பர் மார்க்கெட் சென்று இருக்க, யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டது.


"சிவம் வந்துட்டியா? அந்த ஹால்ல இருக்க என்னோட போன் எடுத்துட்டு வாயேன் ப்ளீஸ்", என்று சொல்லவும், அடுத்த இருபது வினாடிகளில் அவளிடம் போன் நீட்ட பட, "தேங்க்ஸ்", என்று சொல்லி திரும்பியவளுக்கு அதிர்ச்சி.


நீங்க?? "அவிர் நிலன்", என்று அவள் முன் நின்று கொண்டிருந்தான் அந்த ஆண் மகன்.


சிவம் முன்பே சொல்லிருந்தான் என்பதால் தளிருக்கு அதிர்ச்சியாக இருக்க வில்லை.


"சாரி டோர் க்நோக் பண்ணாம வந்துட்டேன். சிவம் வீட்ல இருப்பான்னு நினைச்சேன்", என்று அவன் சொல்லவும், "பக்கத்துல தான் சூப்பர் மார்க்கெட் போயிருக்கான். வந்துருவான்", என்று அவள் சொல்ல, அவளை தான் அளந்து கொண்டிருந்தன அவனின் கண்கள்.


"தளிர் மதி தான?", என்று அவன் கேட்க, "ஹ்ம்ம் சிவம் சொன்னானா?", என்று அவளும் வினவ, அவனோ குரலை செறுமியவன், "ஆமா", என்று எங்கோ பார்த்து கொண்டு கூறினான். சிவம் தான் தளிரை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே!


"உண்மையாவே மதி தான் நீங்க அவளோ அழகா இருக்கீங்க", என்று அவன் சொல்லவும், "இவளோ ஓப்பனா காம்ப்ளிமென்ட் பண்றீங்க", என்று அவள் சொல்லவும், "இதுல என்ன இருக்கு? அழகை ரசிக்கணும்", என்று அவன் கண்சிமிட்டி சொல்லவும், "கலா ரசிகனோ", என்று அவள் கேட்க, "இப்போ மதிய தான் ரசிக்கிறேன்", என்று அவன் சொல்லும் போதே, சிவம் வந்துவிட்டான்.


"சிவம் உன்னோட பிரென்ட் ஓப்பனா என்கிட்ட நூல் விட்றாரு", என்று அவள் சிவமிடன் குற்ற பத்திரிகை வாசிக்க, "அவன் எப்பவும் அப்படி தான், அவன் பின்னாடி ஒரு பொண்ணுங்க கூட்டமே இருக்கும்", என்று சொல்லிக்கொண்டே அவனை அணைத்து கொண்டான்.


"இன்ட்ரோ ஆகிட்டீங்க போல?", என்று சிவம் கேட்க, "ஆமாம்", என்று சொன்னவனை பார்த்து அவளும் புன்னகைக்க, "சரி டா போய் பிரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்", என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து இருந்தான் சிவம்.


சிவம் தான் அவளை பற்றி கூறி இருக்கிறான் என்று அவள் நினைத்து இருக்க, சிவமோ இவர்கள் இப்பொது அறிமுகமானவர்கள் என்று நினைத்துக்கொண்டான்.


வந்து இருப்பவனுக்கு அக்கு வேர் ஆணிவேராக தளிரை பற்றி தெரியும் என்பது அறியாமல் இருவரும் இருந்தனர்.


அவனும் அவனின் பையுடன் சிவமின் அறையில் நுழைந்து கதவை சாற்றியவன், அவனின் போனில் இருந்து ஒரு எண்ணிற்கு அழைத்து, "வந்துட்டேன், ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம்", என்று சொல்லிக்கொண்டே அழைப்பை துண்டித்து இருந்தான்.
 
1729525519049.jpg
1729525519066.jpeg
அத்தியாயம் 4


ஆயிற்று அவிரன் வந்து ஒன்றரை மாதங்கள் ஆகின்றது.


தளிருடன் நன்கு பழக ஆரம்பித்து இருந்தான். அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அவன் தான் அவளின் கைனோவும் கூட, சிவத்திடம் தான் அவள் செக் அப் செய்து கொள்வதாக முதலில் கூறினாள்.


"வேணா தளிர், நான் இன்னும் இரண்டரை மாசம் தான் இருப்பேன், அதுக்கு அப்புறம் மண்த்திலி ஒன்ஸ் உன்னை வந்து பாத்துட்டு போறேன். அதுக்காக தான் அவிரனை நான் வர சொன்னேனே, அவன் உன்னோட டெலிவரி வரைக்கும் உன் கூடவே இருந்து கைனோவா இருப்பான்", என்று அவன் சொன்னதும் முதலில் சற்று தயங்கினாள்.


ஆனால் அவளின் முதல் செக் அப்பிலேயே அந்த தயக்கத்தை நீக்கி இருந்தான் அவிரன்.


"ரொம்ப ப்ரோபாஷனால இருக்கீங்க", என்று தளிர் பாராட்டவும், "தேங்க யு ப்லோஸ்ஸோம்", என்று அவன் எதார்த்தமாக சொல்ல, அவள் அதிர்ந்து விட்டாள்.


"அப்படி என்ன கூப்பிடாதிங்க", என்று அவள் சொல்ல, "ஏன்?", என்று கேட்டவனின் புருவங்கள் இடுங்கியது.


"இல்ல வேணாம், என்னை அப்படி", என்று அவள் ஆரம்பிக்கும் போதே, "ஆருஷ் வீர் கூப்பிடுவாரோ", என்று கேட்டவனை தான் விழி விரித்து பார்த்தாள்.


அவள் தான் சிங்கள் பேரண்ட் என்று போட்டு இருந்தாள். நிச்சயமாக சிவம் சொல்லிருக்கவும் வாய்ப்பு இல்லை.


"உங்களுக்கு எப்படி தெரியும்?", என்றவளிடம், "உன்னை அவன் விழுங்குற மாறி கேன்டீன்ல பாக்குறான், நீயும் அவனை மட்டும் திரும்பி கூட பார்க்க மாட்டேங்குற, எப்பவாச்சு சொல்லணும்னு தோணுச்சுனா சொல்லு", என்று அவளிடம் சற்று விலகி தான் நின்றான்.


தளிர் அவிரனிடம் மொத்த உண்மையையும் உரைக்கும் நாள் இன்னும் இருவரங்களில் தான் உள்ளது என்பதை அவள் அறியவில்லை.


அவிரன், சிவம், தளிர் மூவரும் ஒன்றாக அவர்களின் நேரத்தை செலவழித்தார்கள். அவ்வப்போது சாந்தினியிடமும் கூட தளிர் பேசினாள்.


சிவம் இருப்பதால் பெரிதாக சாந்தினி அலட்டி கொள்ள வில்லை. யாழிடமும் பேசுவாள், அவளுக்கே அங்கு ஆயிரம் போராட்டங்கள் தான்.


"யாழ் எப்படி இருக்கா?", என்று ஒரு நாள் சிவம் கேட்க, "அவளும் ஆதியும் தான் டிவோர்ஸ் வாங்க போறாங்களே, ஆனாலும் இரண்டு பேறும் ஏன் தான் இப்படி சண்டை போட்டுட்டே இருக்காங்களோ", என்று அவள் நொடித்து கொண்டாள்.


அவிரானோ, "யாரு அவங்க?", என்று கேட்க, "என்னோட கிளோஸ் பிரென்ட்", என்று சொல்லவும், அவனிடம் இருந்து தலையசைப்பு மட்டும் தான்.


ஸ்ருஷ்டியும் மறுபடி ஆருஷிடம் பேச ஆரம்பித்து இருந்தாள். அவளுக்கும் தனிமை வாட்டியது. ஸ்ருஷ்டியை ஆருஷ் தான் நன்றாக பார்த்து கொண்டான்.


இந்த ஒன்றரை மாதங்களில் கொஞ்சம் கூட மாறவே மாறாமல் இருந்தது ஸ்ருஷ்டி சிவமும், ஆருஷ் தளிர்க்கும் தான்.


தளிரை ஆருஷ் பார்க்க சிவம் விடவே இல்லை. மானஜ்மென்ட்டிடம் பேசி தளிரை அவிரனிடம் அவளை பணி அமர்த்தி இருந்தான். அவிரனும் சிவமும் இருக்க ஆருஷால் கிட்ட கூட நெருங்க முடியவில்லை.


ஆனால் ஸ்ருஷ்டியின் நிலைமை தான் படு மோசம். அவள் செக் அப் செல்லும் போது கூட அவனிடம் ஒரு மாற்றமும் இல்லை.


இதற்கிடையில் அவளுக்கு கிடைத்த ஒரு உறவு, சிவமின் தந்தையும் தாயும் தான். அவளின் மனதை படித்த ஆருஷ் சேகர் மற்றும் சாரதாவின் எண்ணை அவளுக்கு கொடுத்து அவர்களிடம் பேச வைத்தான்.


"உங்க மகன் கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறான் அத்தை", என்று தினமும் குற்ற பத்திரிகை வாசித்தாள்.


"நீ இந்தியா எப்போ மா வர? அவனும் உன் பின்னாடியே வருவான், அப்போ கால உடைச்சி அவனை உன் பக்கத்துலயே இருக்க வைக்குறேன்", என்று அவளும் சமாதானம் செய்து அவளின் மனதை கொஞ்சம் சாந்தி அடைய செய்வார்.


அப்போ தான் அவளுக்கு அந்த செய்தி கிடைத்தது.


"ஹே என்ன டி டாக்டர் சிவமும் நீயும் டேட்டிங்லாம் போறீங்க போல?", என்று ஒரு தாதி ஆங்கிலத்தில் கேட்க, வட இந்தியாவில் இருந்து வந்த புது தாதி ஒருத்தி, "இன்னும் இல்ல டி இனி போகலாமான்னு கேட்கலாம்னு இருக்கேன்", என்று அவள் பதில் அளித்ததும் ஸ்ருஷ்டிக்கு தூக்கி வாரி போட்டது.


"இங்க நான் அவனோட குழந்தையை சுமந்துட்டுத இருக்கேன். அவனுக்கு டேட்டிங் கேட்குதா டாக்", என்று நினைத்து கொண்டு இன்று அவளின் செக் அப்பிற்கு சென்றாள்.


அவள் கதவை தட்ட, "கம் இன்", என்று அவன் சொல்லவும், உள்ளே நுழைந்தாள் ஸ்ருஷ்டி.


ஐந்து மாத கருவை சுமந்து கொண்டு இருந்தாள்.


அவளை பார்த்தவனின் கண்களில் தான் என்ன உணர்வு என்று தெரியவில்லை.


"ப்ளீஸ் டேக் யுவர் சீட்", என்று அவளை அமர சொன்னவனை தான் அவளும் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.


"வைட்டல்ஸ்லாம் கரெக்டா தான் இருக்கு சோனோகிராபி பண்ணிரலாம்", என்று சொன்னவன் அவளிடம் மருத்துவனாக மட்டும் தான் பேசினான்.


"சிவம் இட் இஸ் யுவர் பேபி டு", என்று சொல்லியே விட்டாள்.


அப்போது தான் நிமிர்ந்து அவளின் முகத்தை பார்த்தான்.


"நான் இல்லனு சொல்லலையே", அப்படி ஒரு அழுத்தம் அந்த வார்த்தைகளில்!


"அப்பறோம் என் இப்படி பிஹேவ் பண்றீங்க?", என்று கேட்டே விட்டாள்.


"என்ன உன் பிரென்ட் சொன்னானா இப்படி எல்லாம் பேசுனா சிவம் உருகிருவானு", என்று அவன் சொன்னதும் செருப்பால் அடித்த உணர்வு அவளுக்கு, இதே வார்த்தைகளால் தளிரை அவளும் காயம் செய்திருக்கிறாள் அல்லவா!


கண்களில் நீர் தேங்கி விட்டது. "நான் தளிர்க்கு பண்ணது தப்பு தான், ஆனா உண்மையா ஆருஷ் இப்படி நடந்துப்பானு நானே எதிர்பார்க்கல", என்று சொல்லும் போதே அவளின் குரல் உடைந்து விட்டது.


இதழ் குவித்து ஊதியவன் , டிஸ்ஸுவை அவளிடம் நீட்டினானே தவிர, வேறு ஏதும் சொல்ல வில்லை.


"சோனோகிராபி போலாமா?", என்று நகர்ந்து விட்டான்.


"இதுல மட்டும் இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருக்கானுங்க, கல் நெஞ்ச காரனுங்க", என்று சொன்னது அவனில் காதுகளிலும் விழுந்தது.


“ பரவால்ல!!உன் பிரென்ட கூட இப்போல்லாம் திட்ட ஆரம்பிச்சிட்ட போல", என்று சொல்லிக்கொண்டே, அவன் சோனோகிராபி எடுக்க தயார் செய்து விட்டு, சோனோகிராபியும் செய்து முடித்து விட்டான்.


"என்ன பேபின்னு சொல்லலாமே", என்று அவள் ஆசையாக வினவ, அவன் இதழ்களுக்குள் சிரித்து கொண்டான்.


"நீ என்னைக்கு நான் நினைச்சதை செஞ்சிருக்க? எப்பவோம் ஆப்போசிட் தான", என்று பெருமூச்சுடன் கூற, "தெளிவா சொல்லுங்க", என்று சிடுசிடுத்தாள்.


"எனக்கு கேர்ள் பேபி தான் புடிக்கும்", என்று அவன் சொல்லவும், "அப்போ பாய்யா?", என்று அவளின் கண்கள் விரிந்தது.


அவனிடம் ஆமாம் என்கிற தலையசைப்பு மட்டுமே.


அப்போதே ஒரு நர்ஸ் உள்ளே நுழைந்தாள். சிவத்துடன் இப்போதெல்லாம் இவளையும் பார்த்து இருந்தாள் ஸ்ருஷ்டி.


"டாக்டர் நம்ப கிளம்பலாம்ல?", என்று அவள் கேட்கவும், "சுவர்", என்று அவன் எழ, "எங்க ?", என்று ஸ்ருஷ்டி கேட்கவும், "டேட்டிங்", என்று சொல்லிக்கொண்டே அவன் நகர முற்பட, அவனை இழுத்து இதழை கடித்து இருந்தாள் ஸ்ருஷ்டி.


அதை பார்த்த தாதிக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது. அவளின் கண்களில் கண்ணீரும் வந்து விட்டது.


"டேட்டிங் கேட்டிங்கனு சொல்லிட்டு இருந்திங்க அப்பறம் உங்கள என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது", என்று அவனிடம் இருந்து இதழை பிரித்து கூற, அந்த தாதியை பார்த்தவள், "ஹே, இங்க பாரு, ஹி ஐஸ் மை ஹஸ்பேண்ட். இனிமேல் இவரு பக்கம் திரும்புன கண்ண நொண்டிருவேன்", என்று அவளை ஆங்கிலத்தில் மிரட்டி துரத்தி விட்டாள்.


"என்ன டி ரௌடிசம் பண்ற", என்று அவன் எகிற, "ஆமாயா அப்படி தான் ரௌடிசம் பண்ணுவேன்", என்று அவள் சொல்லவும், "யா வா?", என்று இவன் கேட்க, "ஆமா டா உனக்கெல்லாம் எதுக்கு மரியாதை? ஒரு பொண்ண லோட் பண்ணிட்டு அடுத்த பொண்ண உஷார் பண்ண போற, உன்னை லவ் பண்ணதுக்கு நானே என்ன செருப்பால அடிச்சிக்கணும்", என்று அவள் புலம்பிக்கொண்டு இருந்தாள்.


"சாரி செருப்பு இல்ல, ஷு தான் போட்ருக்கேன். வேணும்னா சொல்லு கழட்டி தரேன் அடிச்சிக்கோ", என்று அவன் சொல்லவும், பொறுமை அவளுக்கு காற்றில் பறந்தது.


அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவள், அவனை அதனாலேயே அடிக்க ஆரம்பித்து விட்டாள்.


"வலிக்குது டி ராட்சசி", என்று அவன் கத்தியதை எல்லாம் அவள் காதுகளில் வாங்கவே இல்லை. ஒரு கட்டத்தில் அவனை கடிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.


"சரியான நாய் கிட்ட மாட்டிருக்கேன்", என்று அவன் கத்த, அவளின் கையை தன் வசம் ஆக்கியவன் அவளின் இதழ்களை சிறை எடுத்தான்.


முதலில் திமிறினாள், பின்பு அவனுக்கு அவளின் இதழ்களை ஒப்பு கொடுத்து விட்டாள்.


ஐந்து மாதங்கள் கழித்து இருவரும் இதழ்களை சுவைக்கின்றனர். சிவமின் கைகளோ அவனின் மகனை தொட, அவனோ அவனின் தந்தைக்கு ஹைபை கொடுத்தான்.


"அசையுறான்", என்று அவள் இதழ்களை பிரித்து சொல்ல, அவனின் காதுகளில் எங்கே அதெல்லாம் விழுந்தது, அவளின் கழுத்து வளைவுகளில் புதைந்து கொண்டான்.


அதே சமயம், அவனை மதிய உணவிற்காக அழைத்து செல்ல அவிரனும் தளிரும் அவனின் கேபின் கதவை தட்டினார்கள்.


அவனிடம் பதில் இல்லை, அவன் தான் வேறுலகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தான் அல்லவா!


"கேபின் உள்ள போலாம்", என்று சொல்லிக்கொண்டு இருவரும் ஒரு சேர உள்ளே நுழைய, "சாரி", என்று தளிர் திரும்பி கொண்டாள்.


மின்சாரம் தாக்கியது போல் சிவமும் ஸ்ருஷ்டியும் தள்ளி நிற்க, "டேய் மச்சான் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு வோட்கா, பீர், ஜின்னு எல்லாமே அடிக்கிற டா நீ", என்று அவிரன் தான் சொல்லி சிரித்தான்.


அவிரனிடம் ஸ்ருஷ்டியை பற்றி சொல்லி இருந்தான் சிவம். தளிர் ஆருஷ் பற்றி அவன் சொல்ல விரும்ப வில்லை அது அவளின் பிரைவசி என்று சொல்லி விட்டான்.


ஸ்ருஷ்டிக்கு தான் எங்காவது சென்று புதைந்து விடலாமா என்று இருந்தது.


"மேடம இன்ட்ரோ பண்ணு டா", என்று அவன் சொல்லவும், "புதுசா வந்திருக்க கைனோ தான அவிர் நிலன், அவிரன், தெரியும்", என்று அவள் கீழே பார்த்து கொண்டே சொல்ல, "என்னோட முகம் தரையில இல்லையே மேடம்", என்று அவன் சொல்லவும், தலையை நிமிர்த்தி பார்த்தான்.


"மேடம கூட்டிட்டு எப்போ இந்தியா போற?", என்று அவன் கேட்கவும், "இன்னும் டூ வீக்ஸ்ல", என்று சிவம் சொல்ல, அவனை திரும்பி பார்த்தாள்.


"என்ன டி பாக்குற? டிக்கெட்லாம் போட்டுட்டேன். எப்படி உங்கிட்ட சொல்லலாம்னு நினைச்சிட்டே இருந்தேன். பரவால்ல நீயே வந்து சிக்கிட்ட", என்று அவன் கண் சிமிட்டி கூறினான்.


அடுத்து திரும்பிய ஸ்ருஷ்டி பார்த்தது தளிரை தான். அவள் எதுவும் பேசாமல் நின்று இருந்தாள்.


"தளிர்", என்று அவள் அழைக்கவும், அவளை பார்த்தவள், "ரியல்லி சாரி, எனக்கு உண்மையா வீர் அப்படி பண்ணுவான்னு தெரியாது", என்று அவள் உண்மையாகவே மனமார மன்னிப்பு கேட்க, "உன்னை என்னால அவளோ சீக்கிரம் மன்னிக்க முடியல, ஆனா நீ சிவமோட சந்தோஷமா இருந்தா போதும். பிகாஸ் அவன் ஹாப்பினஸ் எனக்கு முக்கியம். இந்தியா போய் சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோங்க", என்று புன்முறுவலுடன் சொன்னாள்.


ஸ்ருஷ்டிக்கு உண்மையாகவே மனம் வருந்தியது. அன்று அவள் தளிரிடம் பேசிய வார்த்தைகள் என்று அவளை வதைத்தது.


என்ன நினைத்தாளோ, அவளை சென்று அணைத்து கொண்டாள்.


"சாரி சாரி எத்தனை சாரி சொன்னாலும் பத்தாது", என்று சொல்லி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். ஸ்ருஷ்டி இப்படி அழுபவள் எல்லாம் கிடையாது.


தளிரோ சிவமையும் அவிரனையும் பார்க்க, அவர்களோ சலிப்பாக தலையை ஆட்டிக்கொண்டு, ஒருசேர, "ப்ரக்னென்சி ஹோர்மோன்ஸ்", என்று கூறினர்.


தளிருக்கோ அவள் இப்படி அழுவதை பார்க்க முடியவில்லை, "ஸ்ருஷ்டி அழாத ப்ளீஸ்", என்று அவள் எவ்வளவு சமாதானம் செய்தும், "நீ என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு", என்று விடாப்பிடியாக நின்றாள்.


ஒரு கட்டத்தில் அவளின் அன்பு தொல்லையில் இருந்து விடு படவே, "சரி மன்னிச்சிட்டேன் போதுமா, ஆனா ப்ளீஸ் உன் பேஸ்டிக்கு பிரென்ட்டா என்கிட்ட பேசாத", என்று கரராக சொல்லி விட்டாள்.


அவளும் குழந்தையை போல் தலையை ஆட்டினாள்.


ஸ்ருஷ்டியும் ஆருஷிடம் சிவமுடன் இந்தியா போவதை தெரிவித்தவள், தளிர் அவளை மன்னித்தத்தையும் ஆருஷ் பற்றி மட்டும் பேச கூடாது என்று சொன்னதையும் கூறினாள்.


"எல்லாரையும் மேடம் மன்னிச்சிருவாங்க, நான் மட்டும் தான் தக்காளி தொக்கு", என்று நினைத்து கொண்டான்.


இருவாரம் சென்றது. சிவமும் ஸ்ருஷ்டியும் இந்தியா செல்லும் நாள், ஆருஷ் வர வில்லை என்று ஸ்ருஷ்டியிடம் சொல்லி விட்டான்.


அவிரனும் தளிரும் தான் அவர்களை வழி அனுப்ப ஏர்போர்ட் வந்தனர்.


இருவரையும் கட்டி அணைத்து அவர்கள் வழி அனுப்ப, "மண்த்திலி ஒன்ஸ் வரேன் தளிர்", என்று அவளை கட்டி அணைத்து விடுவித்தவன், "டேய் அதெல்லாம் நீ கவலை படாத நான் பாத்துக்குறேன்", என்று அவிரன் தளிரின் அருகில் வந்து நின்றான்.


"அந்த ஆருஷை இவ பக்கத்துல விடாத", என்று அவன் சொல்லவும், ஸ்ருஷ்டி குரலை செருமினாள்.


"அவங்க பேஸ்டில", என்று அவிரன் சொல்ல, சிவமோ ஆமாம் என்று தலையசைப்புடன் கிளம்பி விட்டான்.


தளிரும் சிவமும் வீட்டிற்கு சென்றனர்.


ஆருஷோ, "சிவம் போய்ட்டான் இனி இவ கிட்ட எப்படியாச்சு பேசி கல்யாணம் பண்ணிக்கணும் ", என்று நினைத்து கொண்டு இருக்க, மறுபுறமோ, "சிவம் போய்ட்டான், தளிர் என் கூட தான் இருக்க போறா, இனி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம்", என்று சொல்லி கொண்டு சிரித்தான் அவிரன்.
 
1729589434183.jpg
1729589434170.jpg
அத்தியாயம் 5



இரண்டு மாதங்களாக தளிரிடம் பேசாமல், ஆருஷிற்கு பைத்தியமே பிடித்து விட்டது போல் இருந்தது.



"இன்னைக்கு எப்படியாவது அவ கிட்ட பேசிரனும். அதான் அவளோட பாடிகார்ட் இல்லையே", என்று நினைத்து கொண்டு கிளம்பியவனுக்கு தெரியாது சிவமாவது அவனை தளிரை கண்களால் பார்க்க விட்டான். இப்பொது இருக்கும் பாடிகார்ட் அவனை கண்களால் கூட அவளை பார்க்க அனுமதிக்க போவது இல்லை என்று!



மருத்துவமனையில் அவனின் காரை பார்க் செய்தவன், நேரே அவளின் பிரிவிற்கு செல்ல அங்கிருந்த ஒரு பெண்மணியோ, "அவங்களுக்கு இன்னைக்கு டாக்டர் அவிரன்னோட அப்பொய்ன்ட்மென்ட் இருக்கு இப்போல்லாம் அந்த டாக்டர் கூட தான் இருகாங்க", என்று சொல்ல அவனிற்கோ சுர்ரென்று கோவம் தலைக்கு ஏறியது.



அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்றும் அவனின் காதுகளில் ஒலிக்கிறது, "எனக்கு நல்ல மாப்பிள்ளை என் குழந்தையோட என்னை அக்சப்ட் பண்ணிக்கிட்டா, கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்குவேன்.", என்ற வார்த்தைகள் அவனை இரு மாதங்களாக கொன்று கொண்டு இருக்கிறது.



"என்ன விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்குவாளாமே, அவளுக்கு இன்னைக்கு இருக்கு", என்று நினைத்து கொண்டே அவிரனின் கேபினை அடைந்தவன் வெளியே அவளுக்காக காத்துகொண்டு இருந்தான்.



பதினைந்து நிமிடங்கள் ஆகியும் அவள் வெளியே வர வில்லை. அவனுக்கு பொறுமை போய் விட்டது. அவனே கதவை திறக்க முடிவு எடுத்து விட்டான்.



கதவை திறந்து கொண்டு அவன் உள்ளே வர, அவனுக்கு தென்பட்டது என்னவோ, தளிர் அவளின் கைனோவுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் காட்சி தான்.



சட்டென்று அவன் கதவை திறக்க, அவனை தளிரும் அவளின் எதிரே அமர்ந்திருந்தவனும் பார்த்தனர்.



"உங்க அப்பொய்ன்ட்மென்ட் முடிஞ்சிருச்சுனா பேஷண்டை வெளியே அனுப்பலாமே? தமிழ் தெரியும் தானே அவிரன்", என்று பற்களை கடித்து கொண்டு ஆருஷ் தளிரை எரித்து விடும் பார்வை பார்த்தான்.



அவளோ அவனை கண்டுகொள்ளவே இல்லை. இருமாதங்களாக அவனை பார்ப்பதை அவள் தவிர்த்து கொண்டு இருக்க, இன்று அவளை சந்திக்க அவனே வந்து விட்டான்.



புதிதாக வந்திருக்கும் கைனோவுடன் அவள் நன்கு பழகுவதாக அவனுக்கு கூடுதல் தகவலும் வந்திருந்தது அல்லவா!



"பர்ஸ்ட் ஆப் ஆல், இப்படி மென்னேர்ஸ் இல்லாம உள்ள நுழையரதே தப்பு, இதுல என்ன கேள்வி கேட்குறீங்களா டாக்டர் வீர்?", என்று எழுந்து நின்றான் அவிரன்.



"எனக்கு மென்னேர்ஸ் கிளாஸ் எடுக்குறியா? இப்படி தான் பேஷண்ட் கிட்ட சிரிச்சி பேசிட்டு இருப்பாங்களா?", என்று அவன் சீற, "இப்போ எதுக்கு கத்துற, ஷி இஸ் நோட் ஒன்லி மை பேஷண்ட் பட் ஆல்சோ என் கூட ஒர்க் பண்ண போற நியூட்ரிஷனிஸ்ட்", என்று சொன்னதும் ஆருஷிற்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.



நேற்று தான் அவன் தளிரை அவனிற்கு நியூட்ரிஷனிஸ்ட்டாக கேட்க, அவனின் ரிக்குஸ்ட் நிராகரிக்க பட்டது.



"எனக்கு அவ கூட பேசணும்", என்று அவன் முன்னேற முற்பட, தளிரோ எழுந்து நின்று விட்டாள்.



அவனின் எதிரில் வந்து நின்றிருந்தான் அவிரன்.



"என்ன தாண்டி உன்னால அவள நெருங்க முடியாது டா", என்று அழுத்தமாக அவன் சொல்ல, "அவ குழந்தையோட அப்பா டா நான்", என்று முடித்து இருந்தான் ஆருஷ்.



"ஆனா அவ அப்படி சொல்லலையே", என்ற அவிரனின் உதட்டில் நக்கல் புன்னகை புரிய, "என்ன சொல்ற?", என்று வீர் கர்ஜிக்க, "சிங்கள் பரண்ட்ன்னு தான் போட்ருக்கேன்", என்று தளிர் சொன்னதும் உடைந்து விட்டான் ஆருஷ்.



அன்று அவன், அவனின் செயல்களால் சொற்களால் வன்மையாக அவளை தாக்கிய அனைத்திற்கும் சேர்த்து, இன்று அமைதியை கடைபிடித்து சாட்டையடி கொடுக்க துணிந்திருந்தாள் தளிர்.



"சிங்கள் பேரெண்ட்னு நீ போட்டா மட்டும் நான் குழந்தைக்கு அப்பா இல்லனு ஆகிருமா? நீ என்ன குந்தி தேவியா?? வரம் வாங்கி குழந்தை பெத்துக்க? நான் தானே கொடுத்தேன்", என்று அவன் கேட்கவும் அவன் பக்கம் திரும்பினாள்.



இரண்டு மாதங்கள் கழித்து அவனை பார்க்கிறாள். இன்று அவளிடம் பயம் இல்லை.



"குழந்தை கொடுத்தா மட்டும் அப்பா ஆகிருவிங்களா? இந்த குழந்தையே வர கூடாதுனு சொன்னதா நியாபகம், நினைவு இருக்கா நீங்க என்ன சொன்னீங்கனு? இல்ல நான் நியாபகம் படுத்தவா? உன் வயித்துல வர குழந்தை கூட எனக்கு வேணாம், அத கருவுலயே அறுத்துருவேன்னு சொன்னீங்க... இப்போ பிள்ளை பாசமா? நம்புற மாதிரியா இருக்கு?", என்று அவள் அவன் வீசிய வார்த்தைகளை அவனுக்கே சொல்லிக்காட்ட, அவனுக்கோ இதயம் உடைந்து கொண்டே போனது.



அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்டு, "நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் டி, நீ பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு. தப்புக்கு தப்பு சரியா போயிருச்சு. இனி எல்லாத்தயும் மறந்திறலாம்", என்று அவன் கெஞ்சினான்.



ஆனால் அவளோ, "நான் தெரியாம செஞ்ச தப்பும், நீங்க தெரிஞ்சே என் வாழ்க்கையை அழிச்சதும் ஒண்ணா?", என்று அவள் அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜிக்க, அவிரன் கூட சற்று அரண்டு தான் போய் விட்டான்.



இந்த தளிர் அவனுக்கே புதிது. எப்போதும் அமைதியாக பேசுபவள் இன்று ஆக்ரோஷமாக பேசுவது இருவருக்கும் ஆச்சர்யம் தான்.



"இப்போ என்ன பண்ணனும்னு சொல்லு பண்றேன். மேரேஜ் பண்ணிக்கலாம் மதி ப்ளீஸ்", என்று அவளை நெருங்க அவன் முற்படும் சமயம், "அவ தான் நீ வேணான்னு சொல்றால", என்று அவிரன் மீண்டும் வந்து அவனை தடுக்க, "நீ யாரு டா?", என்று கேட்டு அவனின் டாக்டர் கோட்டை பற்றி விட்டான் ஆருஷ்.



"கைய எடு ஆருஷ்", என்று அவிரனும் அவனின் கோட்டை பற்ற, தளிருக்கு இப்பொது தான் கிலி எடுக்க ஆரம்பித்தது.



"என்ன பண்றீங்க இரண்டு பேரும்? இது ஹாஸ்பிடல்", என்று சொல்லிக்கொண்டே இருவரின் கையையும் பிரித்து விட்டாள்.



"இங்க பாருங்க, என்னை இதோட பார்க்க வராதீங்க. உங்க அம்மா அப்பா பாக்குற நல்ல பொண்ணா...", என்று அவள் ஆரம்பிக்கும் போதே, அவளின் தாடையை பற்றி அவிரன் இருப்பதையும் மறந்து அவளின் இதழில் இதழ் பதித்தான்.



"என்ன பண்றீங்க வீர்?", என்று அவள் அவனை விலக்கி விட்டு கேட்க, "என்ன வேற ஒரு பொண்ணோட கல்யாணம் பண்ணிக்க சொல்றத விட்டுட்டு நம்ம கல்யாணம் எப்போன்னு யோசி", என்று அங்கிருந்து அவன் நகர போக, திரும்பி அவிரனை பார்த்தவன், "ஷி இஸ் மைன். டோன்ட் யு டெர் டச் ஹேர்", என்று அவனையும் மிரட்டினான்.



அதற்கெல்லாம் அஞ்சுபவனா அவன், "ஷி இஸ் நோட் யூர்ஸ்", என்று அவன் சொல்ல, "லெட்ஸ் சி", என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தளிரை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்.



அவனுக்கு கோவம் அடங்கிய பாடு இல்லை. யாரிடமாவது அனைத்தையும் கொட்ட வேண்டும் போல இருந்தது.



அவனின் சகோதரர்களுக்கு தான் அழைத்து இருந்தான்.



அவன் அழைத்த ரெண்டே ரிங்கில் ஏற்று இருந்தனர்.



"சொல்லு டா, என்ன திடிர்னு கால் பன்னிருக்க எல்லாம் ஓகே தான?", என்று ஆதர்ஷ் கேட்கவும், "நாசமா போய்ட்டு இருக்கு", என்று அவன் சொல்லவும், "ஹப்பாடா நான் கூட நீ மட்டும் சந்தோஷமா இருக்கியோனு நினைச்சி பயந்துட்டேன் டா ஆரு", என்று ஆதி சொல்ல, "சாவடி வாங்குவ பாத்துக்கோ", என்று அவனிடமும் சிடுசிடு தான்.



"டேய் நீ வேற ஏன் டா", என்று ஆதியை ஆதர்ஷ் அதட்ட, "என்ன ஆச்சு ஆரு?", என்று மீண்டும் ஆதர்ஷ் கேட்க, "கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்றா டா", என்று அவனும் நெற்றியை நீவி கூறினான்.



"நல்ல விஷயம் தானே, நான் சொல்றத கேளு ஆரு. கல்யாணம்லாம் பண்ணிக்காத, கஷ்டம். என்னோட பர்சனல் அனுபவத்துல சொல்றேன். தினமும் எங்களுக்குள்ள வேர்ல்ட் வார் த்ரீ தான்", என்று ஆதி அவனின் கஷ்டத்தை புலம்பினான்.



"டேய் அதான் இரண்டு பேரும் டிவோர்ஸ் வாங்க போறிங்கனு முடிவு பண்ணிட்டிங்களே அப்புறம் என்ன?", என்று ஆதர்ஷ் கேட்க, "நாசமா போனவ, அதை கூட நிம்மதியா வாங்க விட மாட்டேங்குறா, ஒரு பொண்ணோட பேசுனா கூட குத்தம்னு சொல்றா டா", என்று அவன் சொல்லவும், "நீ பேச மட்டும் செய்ய மாட்டியே", என்று ஆருஷும் அவனுக்கு எதிராக தான் பேசினான்.



"என்னடா இரண்டு பேறும் என்ன ரவுண்டு கட்றிங்க? நீ சொல்லு ஆரு இப்போ என்ன தான் தளிருக்கு பிரச்சனையாம்?", என்று அவனும் சாமர்த்தியமாக பேச்சை மாற்ற, "நான் பண்ணது தப்பு தான் டா இல்லனு சொல்லல, அவளை என்னலாம் சொன்னேனோ அதையே இப்போ குத்தி காட்டி என்ன சாவடிக்கிறா", என்றவனின் குரல் தழுதழுத்தது.



"ஆருஷ்", என்ற ஆதர்ஷின் அழைப்பில் தன்னை சமன் செய்து கொண்டவன், "என்னால முடியல டா கிட்ட கூட விட மாட்றா, ஐ வாண்ட் டு பீல் மை பேபி", என்றவனின் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.



ஆதர்ஷுக்கும் ஆதிக்கும் அவன் தளிரை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது.



"இவளோ லவ் பண்றவன் எதுக்கு டா அவளை இப்படி கொண்டு வந்து நிறுத்தின?", என்று கேட்க, "அவ வேணும்ன்றதால தான் அப்படி பண்ணேன். என்னால அவ இல்லாம இருக்க முடியாது", என்று அவன் சொல்லவும், "இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க?", என்று ஆதி கேட்க, "நீ தான் அதுக்கு மனசு வெட்கனும் ஆதி", என்று அவன் சொல்லவும், "நான் என்ன டா பண்ண முடியும்?", என்று யோசனையுடன் கேட்டான்.



"யாழ் கிட்ட பேசி தளிர் கிட்ட இதை பத்தி பேச சொல்லேன்", என்று அவன் சொன்னவுடன், ஆதிக்கு புரை ஏறியது.



"டேய் பைத்தியமா நீ? அன்னைக்கு அவ உன்னை அடிச்சது நினைவு இருக்குல்ல, அவ கிட்ட மட்டும் உனக்காக தளிர் கிட்ட பேச சொன்னேன்னு வச்சிக்கோ எனக்கு வெஷம் வெச்சிருவா", என்று ஆதி சொல்ல, "ஆதி எனக்காக இத கூட பண்ண மாட்டியா?", என்று ஆருஷ் கேட்க, "லூசு மாறி பேசாத உன் சைட் ரொம்ப வீக்கா இருக்கு. யாழ் கிட்டலாம் பேச முடியாது பிளான் பி சொல்லு", என்று அவன் முடியாது என்று ஒத்த காலில் நின்றான்.



"ஆதர்ஷ்", என்று அவன் இழுக்க, "சத்தியமா சாந்தினியலாம் பேச சொல்ல முடியாது. ஆல்ரெடி அவளுக்கும் எனக்கும் இந்த காண்ட்ராக்ட் இல்லனா அவ முகத்தையே பார்க்க மாட்டேன் இதுல எங்க இருந்து அவ கிட்ட போய் அதுவும் உனக்காக பேச சொன்னேன்னு வச்சிக்கோ அவளோ தான் சாமி ஆடிருவா", என்று சொல்ல, ஆருஷிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.



பின்பு அவனே என்ன நினைத்தானோ, "தளிர் நம்பர் அனுப்பு", என்று ஆதர்ஷ் கேட்க, "எதுக்கு?", என்று ஆதி அவனை மறுகேள்வி கேட்க, "நானே பேசுறேன் அவ கிட்ட", என்று ஆதர்ஷ் சொல்லி முடிக்கும் முதலே, "உனக்கு ஏண்டா இந்த விஷ பரீட்சை?", என்று ஆதி கேட்டே விட்டான்.



"நான் பேசி பார்க்குறேன், மீதி அப்பறம் பாத்துக்கலாம்", என்று ஆதர்ஷ் சொல்லவும், ஆருஷ் சிறிது ஆசுவாசம் அடைந்தது உண்மை தான்.



ஆதர்ஷின் மேல் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.



"அனுப்புறேன்", என்று அவன் சொல்லும் போதே அவனின் குரலில் இருந்த மாற்றத்தை இரு சகோதர்களும் உணர்ந்து கொண்டனர்.



இப்படி கொஞ்ச நேரம் பேசிவிட்டு, "ஆதி யாழ பாத்துக்கோ", என்று ஆருஷ் சொல்லும் போது, "முதல்ல அவ கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க டா", என்று சொல்லி சிரித்து விட்டு வைத்து விட்டான்.



அவர்களுடன் பேசிய பின் அவனின் மனம் கொஞ்சம் லேசானது.



இங்கோ தளிர் இரவு உணவை சமைத்து கொண்டிருக்க, அவிரனின் போன் அடிக்க அதை எடுக்க வந்தாள் அவள்.



போனை எடுத்தவளுக்கோ, திரையில், விக்டோரியா ரே என்ற பெயர் இருக்க, "அவிரன், யாரோ விக்டோரியா ரே கிட்ட இருந்து கால்", என்று சொல்லவும், அவனின் அறையில் உடை மாற்றி கொண்டு இருந்தவன், அடித்து பிடித்து வெளிய வந்து அவளிடம் இருந்து போனை பறித்து இருந்தான்.



"என்ன இவளோ பயப்படற? உன் கேர்ள் பிரென்ட் போல?", என்று அவள் புன்னகையுடன் கேட்க, "ஹ்ம்ம் ஆமா", என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.



"ஏன் இப்படி கண்ட நேரத்துல கால் பண்ற? அவ எடுத்திருந்தா எல்லா பிளனும் சொதப்பி இருக்கும்", என்று மறுபுறம் இருந்த நபரிடம் பேச, அந்த நபர் சொன்னதற்கெல்லாம் தலையை அசைத்து விட்டு இறுதியாக, "மதி எனக்கு தான் என்ன ஆனாலும் சரி", என்பதோடு வைத்து விட்டான்.



இரவு உணவை உண்டு கொண்டு இருந்தார்கள் தளிரும் அவிரனும்.



"உன் கேர்ள் பிரென்ட் கிட்ட பேசிட்டியா?", என்று அவள் கேட்க, "ஹ்ம்ம்", என்று பதில் கூறியவன், அவளை பார்த்து, "நீயும் சிவமும் எப்படி பிரண்ட்ஸ் ஆனீங்க? அத கொஞ்சம் சொல்லேன்", என்று சொல்லவும்.



அவளும் அந்த அழகிய நினைவுகளை நினைவு கூர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.



தளிர் மற்றும் சிவத்தின் நட்பதிகாரம் அடுத்த அத்தியாயத்தில் இருந்து!
 
1729613842118.jpg
அத்தியாயம் 6


அன்று ஸ்ருஷ்டி அவளை பூங்காவில் இருந்து அழைத்து சென்ற பின்பு சிவத்தை அடுத்த நாளே அவளின் மறுபடியும் அவளின் மருத்துவமனையில் உள்ள சிறிய பூங்காவில் பார்த்தாள்.


அன்றும் அவளை அவனிடம் இழுத்து சென்றது அவனின் குரல் தான்.


உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல



என்ற பாடலை அவன் பாடுகையில் அவளின் கால்கள் தன்னிச்சையாக அவனை நோக்கி பயணம் செய்தது.



இன்று கிட்டாருடன் அமர்ந்து இருந்தான்.



"உங்க குரல்ல ஏதோ இருக்கு", என்று அவள் சொல்லவும், சுயநினைவு பெற்றவன்.



அவளை பார்த்து புன்னகைத்து, "நீ என்கூட பேசறத உன்னோட லேடி பாடிகார்ட் பார்த்தா உன்ன கைமா பன்னிடுவா", என்று சொல்லவும், சத்தமாக சிரித்து விட்டாள்.



"சிரிக்கும் போது அழகா இருக்க", என்று அவள் சொல்லவும், அவனை பார்த்து முறைத்தாள்.



"ஹே நிஜமா தான் சொல்றேன் நீ சிரிக்கும் போது அழகா இருக்க", என்று சொல்லிக்கொண்டே அவனின் அருகில் இருந்த திறக்காத ஜூஸ் பாட்டிலை அவளிடம் நீட்டினான்.



"எதுக்கு எனக்கு?", என்று அவள் கேட்கவும், "இப்போ தான் லெவேன் ஒகோலோக் ஆகுது இதுக்குள்ள லஞ்ச்க்கு போக மாட்ட, ஜூஸ் குடிக்க தானே கான்டீன் போற, அதான் குடி", என்று அவன் சொல்லி நீட்டவும், அவளும் அதிர்ந்து தான் போய் விட்டாள்.



வீரும் இப்படி தானே அவள் சொல்லாமலே அனைத்தையும் புரிந்து கொள்பவன். இன்று அதே குணத்தை சிவத்திடம் பார்க்கிறாள்.



ஆனால் வீரின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. சிவத்தின் மேல் இனம் புரியாத மென்மை. அவனின் குரலில் ஏதோ இருக்கிறது. அவளை பாடியே அவளின் பக்கம் ஈர்த்து விடுகிறானே!



"உங்க வாய்ஸ்ல கூட ஏதோ காந்தம் இருக்கு நினைக்கிறன். அப்படியே என்ன ஈர்த்துடறீங்களே", என்று சொல்லிக்கொண்டே அவன் கொடுத்த ஜூஸை வாங்கியவள் அவனின் அருகிலும் அமர்ந்து விட்டாள்.



"உனக்கு பாட்டுன்னா ரொம்ப புடிக்குமோ?", என்று கேட்டுக்கொண்டே அவளை பார்க்க, "ரொம்ப ரொம்ப புடிக்கும் நிறைய டைம் என்னோட கஷ்டத்துக்கு நான் எடுத்துக்கூற பெயின் கில்லெர்னு கூட சொல்லலாம்", என்று அவள் சொல்லவும், "அது என்ன கஷ்டத்துல ஈவென் சந்தோஷத்துல கூட பாட்டு கேட்கலாம்", என்று சொன்னவன், "உனக்கு என்ன பாட்டு வேணும்னு கேளு பாடறேன்", என்று சொன்னான்.



"உண்மையா தான் சொல்றிங்களா?", என்று அதிர்ச்சியாக கேட்க, "இதுல பொய் சொல்ல என்ன இருக்கு? ஆனா இரண்டு கண்டிஷன் இருக்கு", என்று அவன் சொல்லவும், அவனை கூர்ந்து நோக்கினாள்.



"என்ன கண்டிஷன்?', என்று அவள் வினவ, "ஒன்னு நீ என்ன பிரென்ட்டா அக்ஸப்ட் பண்ணிக்கோ இன்னொரு இப்படி வாங்க போங்கனு கூப்பிடாத நீ வா போனே கூப்பிடு", என்று அவன் சொல்லவும், "இரண்டாவது கண்டிஷன் ஓகே தான், ஆனா ..", என்று அவள் தயங்க, "முதல் கண்டிஷனா அக்ஸப்ட் பண்ண பயம்ல, எங்க ஸ்ருஷ்டியும் ஆருஷும் ஏதாச்சு சொல்லிருவாங்களோனு", என்று அவன் கேட்கவும், திருதிருவென விழித்தாள்.



அவளை அப்படி பார்ப்பது அவனுக்கு சிரிப்பாய் வந்தது.



"உன் பிரென்ட் யாருனு நீ தான முடிவு பண்ணனும், யாரும் உன்ன கன்ட்ரோல் பண்ண கூடாது", என்று அவன் சொல்லும்போது அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கும் புரிந்தது.



உன் நண்பன் யார் என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்தவர்களின் கைப்பாவையாய் இருக்காதே என்று மறைமுகமாக சொல்லிருந்தான் சிவம்.



அவன் சொன்னதின் அர்த்தத்தை உணர்ந்தவள், "இரண்டு கண்டிஷன்க்கும் ஓகே தான். பாடுங்க.. சாரி சாரி பாடு சிவம்", என்று அவள் சொல்லி அவளுக்கு பிடித்த அத்தனை பாட்டுக்களை பாட வைத்து விட்டு தான் அவனை விட்டாள்.



"செம்மயா பாடுற தெரியுமா! பிலேபேக் சிங்கிங் ட்ரை பண்ணு", என்று அவள் உற்சாகமாக சொல்லவும், அவளை பார்த்து புன்னகைத்தவன், "இது வெறும் ஹாபி தான் இவளோ சீரியஸ்சா இத நான் எடுத்துகல", என்று சொல்லும்போதே, "தளிர்", என்று அவளை ஆக்ரோஷமாக அழைத்து இருந்தாள் ஸ்ருஷ்டி.



"தோ வந்துட்டா பாரு", என்று சொல்லிக்கொண்டே சிவம் எழுந்திருக்க, "எதுக்கு டா அவ பின்னாடி போற?", என்று அவள் அவனை பார்த்து கோவமாக கேட்க, "பின்ன உன் பின்னாடியா வர முடியும்?", என்று நக்கலாக அவளுக்கு பதில் அளித்தான்.



"உங்கிட்ட மனுஷன் பேசுவானா?", என்று அவள் சீற, "அதான் நீ பேசுறியே? அப்போ மனுஷி இல்லையோ? என்ன வகை ஜந்து மேடம் நீங்க? எனக்கு தெரிஞ்ச ஸ்பேசிமென் லிஸ்ட்ல கூட உங்கள மாறி நான் பார்த்தது இல்ல சொன்னிங்கன்னா எழுதி வச்சிக்குவேன்", என்று அவன் கூறிய விதத்தில் தளிர்க்கும் சிரிப்பு வந்து விட்டது.



"நீயும் அவன் கூட சேர்ந்துட்டல ?", என்று ஸ்ருஷ்டி அவளின் எகிற, "சேர்ந்தா என்ன இப்போ உலகத்துல நீயும் உன் பேஸ்டியும் மட்டும் தான் பிரண்ட்ஸ்சா இருக்கணுமா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ இன்னைல இருந்து நானும் தளிரும் பேஸ்டிஸ்", என்று வேண்டும் என்றே அவளின் தோளில் கையை போட்டு கொண்டு கூறினான்.



ஸ்ருஷ்டிக்கோ காதுகளில் இருந்து புகை வர வில்லை அவ்வளவு கோவம்.



"என்ன டி முறைக்கிற? இவ பிரென்ட் இவளுக்கு மட்டும் தாணு சொல்லிருப்பாளே?", என்று அவன் தளிரை பார்த்து கேட்கவும், அவளும் ஆமாம் என்று தலை ஆட்டினாள்.



"இதே வேலை தான் உலகத்துல இவ பிரெண்டை விட வேற ஒருத்தவனும் நல்லவன்னு இல்லனு நினைப்பு", என்று ஸ்ருஷ்டியை பார்த்து கூறியவன், தளிரை பார்த்து, "உனக்கு நான் இருக்கேன் தளிர் இவளோட பிரெண்ட விட பெட்டெர்ரா", என்று சொன்னவன் அப்போது அறியவில்லை உண்மையாகவே ஆருஷை விட சிறந்த நண்பனாக அவன் மாறப்போவதை!



ஸ்ருஷ்டி கழுத்தை நொடித்து கொண்டு அங்கிருந்து செல்ல, "பாத்து பாத்து கழுத்து சுளுக்கிக்க போகுது அப்பறோம் உன் பிரென்ட் கிட்ட தான் டிரீட்மெண்ட்க்கு போகணும்", என்று போறவளை கூட அவன் விடாது சீண்டினான்.



"போதும் அவ பாவம்", என்று தளிர் சொல்லவும் தான், "உனக்காக தான் விடறேன்", என்று சொல்லி அவளின் தோளில் இருந்து கையை எடுத்து விட்டான்.



"அப்படி என்ன உனக்கும் வீரக்கும் பகை?", என்று அவள் கேட்க, "பகைனு எல்லாம் இல்ல, சின்ன வயசுல இருந்த ஆகாது. அவனும் நானும் ஒரே ஸ்கூல் தான். அவன் இந்தியனா நான் பாகிஸ்தான், அவன் ஈஸ்டனா நான் வெஸ்ட், அவன் வானம்னா நான் பூமி", என்று சொல்லிக்கொண்டு செல்ல, "ஆக மொத்தத்துல கொஞ்சம் கூட செட் ஆகாது அப்படி தான?", என்று அவள் சலித்து கொண்டே தலையாட்ட, "அஃப்கோர்ஸ் அஃப்கோர்ஸ்", என்று அவன் பெருமையாக கூறினான்.



"மேய்க்கறது எருமை இதுல பெருமையா? அப்போ தான் ஏதோ சின்ன பசங்க இப்போ தான் தடிமாடுங்க மாறி வளந்துட்டீங்களே இன்னுமா சண்டை போடுவீங்க?", என்று அவள் கேட்கவும், "இதான் சாக்குனு தடிமாடுனு சொல்லிட்டல?", என்று அவன் குறைக்கவும், அவள் நாக்கை கடித்து கொண்டாள்.



"அவனையும் என்னையும் விற்று, இன்னைல இருந்து நம்ப பிரெண்ட்ஸ். உன்ன யாரு எது பண்ணாலும் என்கிட்ட சொல்லு, அந்த ஜந்து ஸ்ருஷ்டியும் அந்த காண்டாமிருகம் வீர் உட்பட", என்று அவன் சொல்லவும், அவள் குலுங்கி சிரித்து, "இதான் சாக்குன்னு இரண்டு பேரையும் சைட் கேப்ல கலாய்ச்சிட்ட", என்று சொன்னாள்.



அன்று இரவு உணவு உண்ணும் போது, "சிவமும் நீயும் கிளோஸ் பிரெண்ட்ஸ் ஆகிட்டீங்களோ?", என்று பல்லை கடித்து கொண்டே கேட்டான் ஆருஷ்.



அவளுக்கோ சற்று பயம் தான் இருந்தாலும் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு, "எனக்கும் பிரென்ட் வேணும்ல", என்று அவள் சொல்லவும், "அப்போ நானும் ஸ்ருஷ்டியும்?", என்று புருவம் உயர்த்தி அவன் வினவ, "எனக்கு ஸ்ருஷ்டி பிரென்ட் தான் ஆனா உங்க பிரென்ட் தான் அவ உங்களுக்கு மட்டும் தான் பிரென்ட்னு சொல்லிட்டாளே", என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கண் சிமிட்டி சொல்லவும் அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.



இருந்தாலும் அதை அடக்கி கொண்டான். குரலை செறுமியவன், "நீயும் பிரென்ட்டா வச்சிக்கலாமே", என்று அவன் சொல்லவும், "எனக்கு ஓகே தான் அப்போ பிரென்ட் மட்டும் தான",என்று அவளும் புருவம் உயர்த்தி கேட்க, அவனுக்கும் அவள் சொல்ல வருவது புரிந்தது.



அவனும் அல்லவா அவளால் ஈர்க்க படுகிறான்.



"சரி சரி அவனையே பிரென்ட்டா வச்சிக்கோ ஆனா ப்ளீஸ் அவனை பத்தி என்கிட்ட பேசாத", என்று சொல்லிவிட்டான்.



அங்கு தான் ஆருஷ் தவறு செய்து விட்டான். அவனுக்கு தளிரும் சிவமும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள் என்று அவன் நினைக்க வில்லை.



சிவமும் தளிரும் அவர்களின் நட்பை வளர்த்து கொண்டார்கள்.



அவளின் தாயுமானவன் ஆகினான் சிவம் என்று சொன்னால் கூட மிகையாகாது.



தளிரின் நிழல் ஆனான். அந்த மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் தெரியும் தளிரின் சுண்டு விரலை கூட ஆருஷ் சிவத்தை தாண்டி தொட முடியாது என்று!



அந்த அளவு தளிர் சிவமுடன் நெருங்கினாள். அதற்கு காரணமும் இருந்தது, தளிர் பிறந்த அதே தினத்தில் தான் சிவத்தின் ஒன்றரை மாத தங்கை இறந்து இருந்தாள். அதே தினத்தில் அவள் பிறந்ததை அறிந்து கொண்டதாலோ என்னவோ அவளை அவனின் சகோதரியாகவே பார்க்க துவங்கினான் சிவம்.



அவள் கேட்கும் போதெல்லாம் பாடினான், ஆடினான், அவளுக்காக சமைத்து கொடுத்தான். குழந்தையை போல் பார்த்து கொண்டான்.



அவளின் பிறந்த நாள் அன்று கூட, அவளுக்காக அவன் ப்ரெத்யேகமாக செய்த பெண்டெண்ட்டில் அவளுக்கே தெரியாமல் ட்ராக்கர் வைத்து இருந்தான்.



அவளின் பாதுகாப்பை கூட கருத்தில் கொண்டு செயல் பட்டான்.



ஆருஷிற்கு சிறிது பொறாமை எட்டி பார்த்தாலும் சிவத்தை பற்றி அறிந்தததால் அவன் அலட்டி கொள்ள வில்லை.



ஒரு முறை ஸ்ருஷ்டி கூட கேட்டிருந்தால், "சிவம் இடத்துல வேற யாராச்சு இப்படி தளிர் கூட பழகுனா நீ சும்மா இருப்பியா?", என்றவளை பார்த்தவன், "அவன் கை கால் இருந்திருக்காது", என்று அழுத்தமாக சொன்னான்.



"அப்போ சிவம மட்டும் என்ன விட்டு வச்சிருக்க அதுவோம் உனக்கு அவனை சுத்தமா புடிக்காதுல?", என்று அவள் கேட்க, "அவனை எனக்கு தானே புடிக்காது, மத்தவங்களுக்கு புடிக்காம இருக்கணும்னு என்ன அவசியம் இருக்கு மோர்ஓவர் அவன் நல்லவன். பொம்பள பொறுக்கி கிடையாது. கேரக்டர் வைஸ் ஹி இஸ் எ ஜெம்", என்று அவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினான்.



"எதிரியை இப்படி புகழற?", என்று அவள் ஆச்சர்யகமாக கேட்க, "எத்திக்கல் எனிமிஸ்", என்று சொல்லி கண்சிமிட்டி கொண்டான்.



அவளுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.



இதே வார்த்தைகளை தான் சிவமும் அவளிடம் சொல்லிருந்தான் அல்லவா!



"இரண்டும் பைத்தியமா இல்ல நம்பள பைத்தியம் ஆகுதுங்கள்னு தெரியல", என்று நினைத்து மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்.



இப்படியாக அவர்கள் நாட்கள் செல்லும் போது அவளின் பிறந்த நாள் முடிந்து ஒரு நாள் தளிருடன் பூங்காவில் அமர்ந்திருந்தான் சிவம்.



"சிவம்", என்று அவள் அழைப்பில் திரும்பியவனிடம், "என்னை உனக்கு எந்த அளவுக்கு புடிக்கும்?", என்று அவள் கேட்கவும், "என் உயிரை கொடுக்குற அளவுக்கு", என்று எந்த நேரத்தில் சொன்னானோ, அவனின் உயிரை கொடுத்து தான் அவனின் உயிரான தோழியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் வரப்போகிறது என்பதை அறியாமல்!
 
View attachment 2985
அத்தியாயம் 6


அன்று ஸ்ருஷ்டி அவளை பூங்காவில் இருந்து அழைத்து சென்ற பின்பு சிவத்தை அடுத்த நாளே அவளின் மறுபடியும் அவளின் மருத்துவமனையில் உள்ள சிறிய பூங்காவில் பார்த்தாள்.


அன்றும் அவளை அவனிடம் இழுத்து சென்றது அவனின் குரல் தான்.


உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல



என்ற பாடலை அவன் பாடுகையில் அவளின் கால்கள் தன்னிச்சையாக அவனை நோக்கி பயணம் செய்தது.



இன்று கிட்டாருடன் அமர்ந்து இருந்தான்.



"உங்க குரல்ல ஏதோ இருக்கு", என்று அவள் சொல்லவும், சுயநினைவு பெற்றவன்.



அவளை பார்த்து புன்னகைத்து, "நீ என்கூட பேசறத உன்னோட லேடி பாடிகார்ட் பார்த்தா உன்ன கைமா பன்னிடுவா", என்று சொல்லவும், சத்தமாக சிரித்து விட்டாள்.



"சிரிக்கும் போது அழகா இருக்க", என்று அவள் சொல்லவும், அவனை பார்த்து முறைத்தாள்.



"ஹே நிஜமா தான் சொல்றேன் நீ சிரிக்கும் போது அழகா இருக்க", என்று சொல்லிக்கொண்டே அவனின் அருகில் இருந்த திறக்காத ஜூஸ் பாட்டிலை அவளிடம் நீட்டினான்.



"எதுக்கு எனக்கு?", என்று அவள் கேட்கவும், "இப்போ தான் லெவேன் ஒகோலோக் ஆகுது இதுக்குள்ள லஞ்ச்க்கு போக மாட்ட, ஜூஸ் குடிக்க தானே கான்டீன் போற, அதான் குடி", என்று அவன் சொல்லி நீட்டவும், அவளும் அதிர்ந்து தான் போய் விட்டாள்.



வீரும் இப்படி தானே அவள் சொல்லாமலே அனைத்தையும் புரிந்து கொள்பவன். இன்று அதே குணத்தை சிவத்திடம் பார்க்கிறாள்.



ஆனால் வீரின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. சிவத்தின் மேல் இனம் புரியாத மென்மை. அவனின் குரலில் ஏதோ இருக்கிறது. அவளை பாடியே அவளின் பக்கம் ஈர்த்து விடுகிறானே!



"உங்க வாய்ஸ்ல கூட ஏதோ காந்தம் இருக்கு நினைக்கிறன். அப்படியே என்ன ஈர்த்துடறீங்களே", என்று சொல்லிக்கொண்டே அவன் கொடுத்த ஜூஸை வாங்கியவள் அவனின் அருகிலும் அமர்ந்து விட்டாள்.



"உனக்கு பாட்டுன்னா ரொம்ப புடிக்குமோ?", என்று கேட்டுக்கொண்டே அவளை பார்க்க, "ரொம்ப ரொம்ப புடிக்கும் நிறைய டைம் என்னோட கஷ்டத்துக்கு நான் எடுத்துக்கூற பெயின் கில்லெர்னு கூட சொல்லலாம்", என்று அவள் சொல்லவும், "அது என்ன கஷ்டத்துல ஈவென் சந்தோஷத்துல கூட பாட்டு கேட்கலாம்", என்று சொன்னவன், "உனக்கு என்ன பாட்டு வேணும்னு கேளு பாடறேன்", என்று சொன்னான்.



"உண்மையா தான் சொல்றிங்களா?", என்று அதிர்ச்சியாக கேட்க, "இதுல பொய் சொல்ல என்ன இருக்கு? ஆனா இரண்டு கண்டிஷன் இருக்கு", என்று அவன் சொல்லவும், அவனை கூர்ந்து நோக்கினாள்.



"என்ன கண்டிஷன்?', என்று அவள் வினவ, "ஒன்னு நீ என்ன பிரென்ட்டா அக்ஸப்ட் பண்ணிக்கோ இன்னொரு இப்படி வாங்க போங்கனு கூப்பிடாத நீ வா போனே கூப்பிடு", என்று அவன் சொல்லவும், "இரண்டாவது கண்டிஷன் ஓகே தான், ஆனா ..", என்று அவள் தயங்க, "முதல் கண்டிஷனா அக்ஸப்ட் பண்ண பயம்ல, எங்க ஸ்ருஷ்டியும் ஆருஷும் ஏதாச்சு சொல்லிருவாங்களோனு", என்று அவன் கேட்கவும், திருதிருவென விழித்தாள்.



அவளை அப்படி பார்ப்பது அவனுக்கு சிரிப்பாய் வந்தது.



"உன் பிரென்ட் யாருனு நீ தான முடிவு பண்ணனும், யாரும் உன்ன கன்ட்ரோல் பண்ண கூடாது", என்று அவன் சொல்லும்போது அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கும் புரிந்தது.



உன் நண்பன் யார் என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்தவர்களின் கைப்பாவையாய் இருக்காதே என்று மறைமுகமாக சொல்லிருந்தான் சிவம்.



அவன் சொன்னதின் அர்த்தத்தை உணர்ந்தவள், "இரண்டு கண்டிஷன்க்கும் ஓகே தான். பாடுங்க.. சாரி சாரி பாடு சிவம்", என்று அவள் சொல்லி அவளுக்கு பிடித்த அத்தனை பாட்டுக்களை பாட வைத்து விட்டு தான் அவனை விட்டாள்.



"செம்மயா பாடுற தெரியுமா! பிலேபேக் சிங்கிங் ட்ரை பண்ணு", என்று அவள் உற்சாகமாக சொல்லவும், அவளை பார்த்து புன்னகைத்தவன், "இது வெறும் ஹாபி தான் இவளோ சீரியஸ்சா இத நான் எடுத்துகல", என்று சொல்லும்போதே, "தளிர்", என்று அவளை ஆக்ரோஷமாக அழைத்து இருந்தாள் ஸ்ருஷ்டி.



"தோ வந்துட்டா பாரு", என்று சொல்லிக்கொண்டே சிவம் எழுந்திருக்க, "எதுக்கு டா அவ பின்னாடி போற?", என்று அவள் அவனை பார்த்து கோவமாக கேட்க, "பின்ன உன் பின்னாடியா வர முடியும்?", என்று நக்கலாக அவளுக்கு பதில் அளித்தான்.



"உங்கிட்ட மனுஷன் பேசுவானா?", என்று அவள் சீற, "அதான் நீ பேசுறியே? அப்போ மனுஷி இல்லையோ? என்ன வகை ஜந்து மேடம் நீங்க? எனக்கு தெரிஞ்ச ஸ்பேசிமென் லிஸ்ட்ல கூட உங்கள மாறி நான் பார்த்தது இல்ல சொன்னிங்கன்னா எழுதி வச்சிக்குவேன்", என்று அவன் கூறிய விதத்தில் தளிர்க்கும் சிரிப்பு வந்து விட்டது.



"நீயும் அவன் கூட சேர்ந்துட்டல ?", என்று ஸ்ருஷ்டி அவளின் எகிற, "சேர்ந்தா என்ன இப்போ உலகத்துல நீயும் உன் பேஸ்டியும் மட்டும் தான் பிரண்ட்ஸ்சா இருக்கணுமா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ இன்னைல இருந்து நானும் தளிரும் பேஸ்டிஸ்", என்று வேண்டும் என்றே அவளின் தோளில் கையை போட்டு கொண்டு கூறினான்.



ஸ்ருஷ்டிக்கோ காதுகளில் இருந்து புகை வர வில்லை அவ்வளவு கோவம்.



"என்ன டி முறைக்கிற? இவ பிரென்ட் இவளுக்கு மட்டும் தாணு சொல்லிருப்பாளே?", என்று அவன் தளிரை பார்த்து கேட்கவும், அவளும் ஆமாம் என்று தலை ஆட்டினாள்.



"இதே வேலை தான் உலகத்துல இவ பிரெண்டை விட வேற ஒருத்தவனும் நல்லவன்னு இல்லனு நினைப்பு", என்று ஸ்ருஷ்டியை பார்த்து கூறியவன், தளிரை பார்த்து, "உனக்கு நான் இருக்கேன் தளிர் இவளோட பிரெண்ட விட பெட்டெர்ரா", என்று சொன்னவன் அப்போது அறியவில்லை உண்மையாகவே ஆருஷை விட சிறந்த நண்பனாக அவன் மாறப்போவதை!



ஸ்ருஷ்டி கழுத்தை நொடித்து கொண்டு அங்கிருந்து செல்ல, "பாத்து பாத்து கழுத்து சுளுக்கிக்க போகுது அப்பறோம் உன் பிரென்ட் கிட்ட தான் டிரீட்மெண்ட்க்கு போகணும்", என்று போறவளை கூட அவன் விடாது சீண்டினான்.



"போதும் அவ பாவம்", என்று தளிர் சொல்லவும் தான், "உனக்காக தான் விடறேன்", என்று சொல்லி அவளின் தோளில் இருந்து கையை எடுத்து விட்டான்.



"அப்படி என்ன உனக்கும் வீரக்கும் பகை?", என்று அவள் கேட்க, "பகைனு எல்லாம் இல்ல, சின்ன வயசுல இருந்த ஆகாது. அவனும் நானும் ஒரே ஸ்கூல் தான். அவன் இந்தியனா நான் பாகிஸ்தான், அவன் ஈஸ்டனா நான் வெஸ்ட், அவன் வானம்னா நான் பூமி", என்று சொல்லிக்கொண்டு செல்ல, "ஆக மொத்தத்துல கொஞ்சம் கூட செட் ஆகாது அப்படி தான?", என்று அவள் சலித்து கொண்டே தலையாட்ட, "அஃப்கோர்ஸ் அஃப்கோர்ஸ்", என்று அவன் பெருமையாக கூறினான்.



"மேய்க்கறது எருமை இதுல பெருமையா? அப்போ தான் ஏதோ சின்ன பசங்க இப்போ தான் தடிமாடுங்க மாறி வளந்துட்டீங்களே இன்னுமா சண்டை போடுவீங்க?", என்று அவள் கேட்கவும், "இதான் சாக்குனு தடிமாடுனு சொல்லிட்டல?", என்று அவன் குறைக்கவும், அவள் நாக்கை கடித்து கொண்டாள்.



"அவனையும் என்னையும் விற்று, இன்னைல இருந்து நம்ப பிரெண்ட்ஸ். உன்ன யாரு எது பண்ணாலும் என்கிட்ட சொல்லு, அந்த ஜந்து ஸ்ருஷ்டியும் அந்த காண்டாமிருகம் வீர் உட்பட", என்று அவன் சொல்லவும், அவள் குலுங்கி சிரித்து, "இதான் சாக்குன்னு இரண்டு பேரையும் சைட் கேப்ல கலாய்ச்சிட்ட", என்று சொன்னாள்.



அன்று இரவு உணவு உண்ணும் போது, "சிவமும் நீயும் கிளோஸ் பிரெண்ட்ஸ் ஆகிட்டீங்களோ?", என்று பல்லை கடித்து கொண்டே கேட்டான் ஆருஷ்.



அவளுக்கோ சற்று பயம் தான் இருந்தாலும் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு, "எனக்கும் பிரென்ட் வேணும்ல", என்று அவள் சொல்லவும், "அப்போ நானும் ஸ்ருஷ்டியும்?", என்று புருவம் உயர்த்தி அவன் வினவ, "எனக்கு ஸ்ருஷ்டி பிரென்ட் தான் ஆனா உங்க பிரென்ட் தான் அவ உங்களுக்கு மட்டும் தான் பிரென்ட்னு சொல்லிட்டாளே", என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கண் சிமிட்டி சொல்லவும் அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.



இருந்தாலும் அதை அடக்கி கொண்டான். குரலை செறுமியவன், "நீயும் பிரென்ட்டா வச்சிக்கலாமே", என்று அவன் சொல்லவும், "எனக்கு ஓகே தான் அப்போ பிரென்ட் மட்டும் தான",என்று அவளும் புருவம் உயர்த்தி கேட்க, அவனுக்கும் அவள் சொல்ல வருவது புரிந்தது.



அவனும் அல்லவா அவளால் ஈர்க்க படுகிறான்.



"சரி சரி அவனையே பிரென்ட்டா வச்சிக்கோ ஆனா ப்ளீஸ் அவனை பத்தி என்கிட்ட பேசாத", என்று சொல்லிவிட்டான்.



அங்கு தான் ஆருஷ் தவறு செய்து விட்டான். அவனுக்கு தளிரும் சிவமும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள் என்று அவன் நினைக்க வில்லை.



சிவமும் தளிரும் அவர்களின் நட்பை வளர்த்து கொண்டார்கள்.



அவளின் தாயுமானவன் ஆகினான் சிவம் என்று சொன்னால் கூட மிகையாகாது.



தளிரின் நிழல் ஆனான். அந்த மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் தெரியும் தளிரின் சுண்டு விரலை கூட ஆருஷ் சிவத்தை தாண்டி தொட முடியாது என்று!



அந்த அளவு தளிர் சிவமுடன் நெருங்கினாள். அதற்கு காரணமும் இருந்தது, தளிர் பிறந்த அதே தினத்தில் தான் சிவத்தின் ஒன்றரை மாத தங்கை இறந்து இருந்தாள். அதே தினத்தில் அவள் பிறந்ததை அறிந்து கொண்டதாலோ என்னவோ அவளை அவனின் சகோதரியாகவே பார்க்க துவங்கினான் சிவம்.



அவள் கேட்கும் போதெல்லாம் பாடினான், ஆடினான், அவளுக்காக சமைத்து கொடுத்தான். குழந்தையை போல் பார்த்து கொண்டான்.



அவளின் பிறந்த நாள் அன்று கூட, அவளுக்காக அவன் ப்ரெத்யேகமாக செய்த பெண்டெண்ட்டில் அவளுக்கே தெரியாமல் ட்ராக்கர் வைத்து இருந்தான்.



அவளின் பாதுகாப்பை கூட கருத்தில் கொண்டு செயல் பட்டான்.



ஆருஷிற்கு சிறிது பொறாமை எட்டி பார்த்தாலும் சிவத்தை பற்றி அறிந்தததால் அவன் அலட்டி கொள்ள வில்லை.



ஒரு முறை ஸ்ருஷ்டி கூட கேட்டிருந்தால், "சிவம் இடத்துல வேற யாராச்சு இப்படி தளிர் கூட பழகுனா நீ சும்மா இருப்பியா?", என்றவளை பார்த்தவன், "அவன் கை கால் இருந்திருக்காது", என்று அழுத்தமாக சொன்னான்.



"அப்போ சிவம மட்டும் என்ன விட்டு வச்சிருக்க அதுவோம் உனக்கு அவனை சுத்தமா புடிக்காதுல?", என்று அவள் கேட்க, "அவனை எனக்கு தானே புடிக்காது, மத்தவங்களுக்கு புடிக்காம இருக்கணும்னு என்ன அவசியம் இருக்கு மோர்ஓவர் அவன் நல்லவன். பொம்பள பொறுக்கி கிடையாது. கேரக்டர் வைஸ் ஹி இஸ் எ ஜெம்", என்று அவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினான்.



"எதிரியை இப்படி புகழற?", என்று அவள் ஆச்சர்யகமாக கேட்க, "எத்திக்கல் எனிமிஸ்", என்று சொல்லி கண்சிமிட்டி கொண்டான்.



அவளுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.



இதே வார்த்தைகளை தான் சிவமும் அவளிடம் சொல்லிருந்தான் அல்லவா!



"இரண்டும் பைத்தியமா இல்ல நம்பள பைத்தியம் ஆகுதுங்கள்னு தெரியல", என்று நினைத்து மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்.



இப்படியாக அவர்கள் நாட்கள் செல்லும் போது அவளின் பிறந்த நாள் முடிந்து ஒரு நாள் தளிருடன் பூங்காவில் அமர்ந்திருந்தான் சிவம்.



"சிவம்", என்று அவள் அழைப்பில் திரும்பியவனிடம், "என்னை உனக்கு எந்த அளவுக்கு புடிக்கும்?", என்று அவள் கேட்கவும், "என் உயிரை கொடுக்குற அளவுக்கு", என்று எந்த நேரத்தில் சொன்னானோ, அவனின் உயிரை கொடுத்து தான் அவனின் உயிரான தோழியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் வரப்போகிறது என்பதை அறியாமல்!
 
1729701293862.jpg
1729701293851.jpg
அத்தியாயம் 7


இப்படியாக நாட்கள் நகர, ஆருஷிடம் தளிர் உண்மையை கூறி இருந்த இரண்டாவது நாள் தளிருக்கு அழைத்து இருந்தான் சிவம்.



"தளிர் கிளம்பி இந்த ஜெவெல் ஷாப்க்கு வா, ப்ளீஸ்", என்று அவன் சொல்லவும் அடுத்த அரை மணி நேரத்தில் அவளும் அந்த கடைக்கு சென்று இருந்தாள்.



"எதுக்கு இந்த கடைக்கு கூட்டிட்டு வந்திருக்க? என் பர்த்டே முடிஞ்சிருச்சு, வேற எந்த பிரென்ட் பர்த்டே வருது?", என்று அவள் கேள்விகளை தொடுக்க, "பிரண்ட்க்கு இல்ல பியான்ஸேக்கு", என்று அவன் சொல்லவும் , தளிருக்கு தான் இன்ப அதிர்ச்சி.



"அடப்பாவி யாரு டா அந்த பொண்ணு? சொல்லவே இல்ல", என்று அவள் கேட்கும் போதே, அவளின் கைகளை பிடித்து அவன் கடையின் உள்ளே அழைத்து சென்று விட்டான்.



"எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்", என்று சொல்லிக்கொண்டே இருவரும் மோதிரங்கள் இருக்கும் பகுதியை அடைந்தனர்.



"எனக்கு தெரிஞ்ச பொண்ணா? இந்தியனா?", என்று அவனை பார்க்க, "ஆமாம்", என்று அவன் சொல்லிக்கொண்டே, "உங்க கிட்ட இருக்குற ரேர் டைமென்ட் கலெக்ஷன் ரிங்ஸ் காட்டுங்க", என்று ஆங்கிலத்தில் அங்கு வேலைபார்ப்பவரிடம் சொன்னான்.



"ஷில்பாவா?", என்று அவள் கேட்க, "இல்ல டி, உனக்கு நல்லா கிலோசா தெரிஞ்ச பொண்ணு தான்", என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவன் கேட்டதை எடுத்து வந்து கொடுத்தார்.



"எனக்கு கிலோசா தெரிஞ்ச பொண்ணு ஸ்ருஷ்டி தான்... ஆனா அவளும் ...", என்று அவள் துவங்கும் போதே, "அவளே தான்", என்று சிவம் முடிக்கும் போதே, தளிரோ அதிர்ந்து விட்டாள்.



அவளின் காதுகளை நன்கு குடைந்தவள், "என் காதுல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறன், சரியா கேட்கல", என்றவளை பார்த்து, "சரியா தான் கேட்டு இருக்கு", என்று கண்சிமிட்டினான்.



"எப்புட்றா?", என்று அவள் விழி விரித்து கேட்க, "அதெல்லாம் அப்படி தான் நீ கொஞ்சம் ரிங் செலக்ட் பண்ணி கொடுக்குறியா? நான் அவளோ நல்லா செலக்ட் பண்ண மாட்டேன்", என்றான்.



"டேய் அவளுக்கு ஓகே வா நீ பாட்டுக்கு ரிங் வாங்கிட்டு போய்ட்டு அப்பறோம் பல்பு வாங்க போற", என்று மீண்டும் அவனை பார்த்து சொல்ல, "அதெல்லாம் இரண்டு பேருக்குமே புடிக்கும் டி டெட் பண்றோம்", என்று அவன் சொல்லவும் தான் சிறிது நம்பிக்கையே வந்தது.



"நான்லாம் செலக்ட் பண்ண மாட்டேன், நீயே செலக்ட் பண்ணு அது ஓகேவா இல்லையானு வேணா நான் சொல்றேன்", என்று அவள் சொல்லவும், "தாங்கள் என்ன சொன்னாலும் சரி ராஜ மாதா", என்றவனை பார்த்து முறைத்தாள்.



"என்ன டி முறைக்கிற?", என்றவனிடம், "இரண்டு பேறும் அடிச்சிகிட்டே இருந்திங்க அப்பறோம் எப்படி டா டேட்டிங்லாம்?", என்று அவள் மீண்டும் அங்கேயே வந்து நிற்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன், "அதெல்லாம் அப்படி தான்", என்று சொல்லிவிட்டு, மோதிரம் பார்க்க ஆரம்பித்து விட்டான்.



கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆகியும் அவன் எதுவும் எடுக்க வில்லை.



"டேய் என்ன டா பொண்ணுங்கள விட மோசமா பண்ற?", என்று அவள் சலித்து கொள்ளவும், "இரு டி ஸ்பெஷல்லா எடுக்கணும். அவ அந்த ரிங்கை லைஃப் லாங் வச்சுக்கணும்", என்று சொன்னவன் அப்போது நினைக்கவில்லை, அவனே அதை காலால் மிதித்து விடுவான் என்று !



"எஸ் கிடைச்சிருச்சு", என்று ஒரு அழகான இதய வடிவு இருக்கும் டைமோண்ட் ரிங்கை தேர்வு செய்து இருந்தான்.



"நல்ல செலேச்டின்", என்று தளிர்க்கும் அவனுக்கு பச்சை கொடி காட்ட, அதையே வாங்கி கொண்டு இருவரும் வெளியே வந்தனர்.



"காபி குடிச்சிட்டு போலாமா?", என்று அவன் கேட்கவும், "போலாமே", என்று இருவரும் ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைந்தனர்.



ஸ்ருஷ்டி சிவமின் கருவை சுமந்து கொண்டு இருப்பதை அவன் தளிரிடம் சொல்ல வில்லை. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தான் சொல்லிருந்தான்.



அதனால் தான் அவன் சேகரிடம் சொல்லும்போது அவளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.



அவர்கள் ஆர்டர் செய்த உணவும் வர, யாழிடம் இருந்து கால் வந்தது.



சிவம் மற்றும் தளிர் இருவருமே அவளிடம் பேசினார்கள்.



அழைப்பை அவள் துண்டித்தவுடன், "உங்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன் ரொம்ப நாளா ஆனா கேட்க சான்ஸ் கிடைக்கல", என்றவுடனேயே, "ஏன் என்னோட அக்காகிட்ட பேச மாட்டேங்குறேன்னு தானே", என்று அவளே சொல்லவும், ஆமாம் என்று மேலும் கீழும் தலை அசைத்தான் சிவம்.



"இரண்டு நாள் முன்னாடி தான் வீர் கிட்ட சொன்னேன். உன்கிட்டயும் சொல்லிடறேன். நான் பண்ண தப்பாலா தான்", என்று சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர்.



"ரொம்ப எமோஷனல் ஆக போற அப்படினா சொல்ல வேண்டாம்", என்று அவளின் கையை பற்ற, "இல்ல சொல்றதுல ஒன்னும் எனக்கு பிரச்சனை இல்லை", என்று சொன்னவள், சொல்ல ஆரம்பித்து இருந்தாள் அவள் செய்த தவறை!



அவளின் வாழ்வை மாற்றிய அந்த நிகழ்வை!



அப்போது சட்டென்று அவளின் தோள்களை பற்றினான் அவிரன்.



நிகழ் காலத்திற்கு வந்திருந்தாள்.



"சாரி சரியா நீ உன் கதையோட ட்விஸ்ட்ட சொல்ற டைம்ல ஸ்டாப் பண்ணதுக்கு, ஒரு கால் வருது", என்றவுடன் தான் அவளின் போன் ரிங் அவதையே உணர்ந்தாள்.



அவளின் கடந்த காலத்தில் அவள் எவ்வளவு மூழ்கி போகி இருந்தாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது அவிரானால்!



"நீ கால் அட்டென்ட் பண்ணு எங்க விட்டியோ அங்க இருந்து நம்ப இத இன்னோரு நாள் கண்டின்யு பண்ணலாம்", என்று சொல்லி அவன் நகர்ந்து விட்டான்.



அவளின் போனை பார்த்தவளுக்கு அன்நூன் நம்பரில் இருந்து அழைப்பு வந்திருந்தது.



"ஹலோ", என்று அவள் சொல்லவும், "ஹாய் தளிர் எப்படி இருக்க?", என்று மறுபுறம் இருந்தவர் கேட்கவும், "யாரு நீங்க?", என்று கேட்டிருந்தாள்.



"நான் ஆதர்ஷராம் பேசுறேன்", என்று அவன் சொன்னதும், அவளுக்கோ நெஞ்சே அடைத்து விட்டது.



"இவரு எதுக்கு எனக்கு கால் பன்னிருக்காரு?", என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் போதே, "இவன் எதுக்கு டா நமக்கு கால் பண்ணிருக்கானு நீ நினைக்கறது எனக்கு புரியுது, பட் உங்கிட்ட கொஞ்சம் இம்போர்ட்டண்ட்டா பேசணும் அதான் நானே கால் பண்ணிட்டேன். பேசலாமா?", என்றவுடன் அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.



ஒரு பக்கம் அவளின் மனம் பேசாதே என்றது இன்னொரு பக்கம் என்ன தான் சொல்கிறான் என்று கேட்டுக்கொள் என்று சொன்னது.



இறுதியாக சரி பேசலாம், "சொல்லுங்க", என்று அவள் சொல்லவும், "இன்னும் நான் முதல்ல உன்ன கேட்ட கேள்விக்கே நீ தான் பதில் சொல்லலையே?", என்று அவன் பேசும் போதே அவனின் ஆளுமை அவளுக்குள் ஒரு வித பயத்தை கொடுத்தது என்னவோ உண்மை தான்.



ஆனால் இப்போதெல்லாம் அவள் பயத்தை வெளியே காட்டுவது இல்லை.



"உங்க தம்பி கூட இல்லல அதனால நல்லா தான் இருக்கேன்", என்று அழுத்தமாக அவள் சொன்னவுடனேயே, அவளின் மன நிலையை புரிந்து கொண்டான் ஆதர்ஷ்.



குரலை செறுமியவன், "ஆனா நீ இல்லாம அவன் நல்லா இல்லையே மா", என்று அவன் சொல்லவும், "அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சார்? வேணும்னா உங்க தம்பிய வேற ப்ராஸ்டிட்யூட் ஹேர் பண்ணிக்க சொல்லுங்க... ஐ அம் அவுட் ஆப் சர்விஸ்", என்று அவள் பேசும் போதே குரல் தழுதழுத்தது.



ஆதர்ஷனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. ஆருஷ் தான் இந்த வார்த்தைகளை எல்லாம் அவளை புண் படுத்த பயன் படுத்தி இருக்கிறான் என்று யூகித்து கொண்டான்.



"எப்படி எல்லாம் ஒரு பொண்ணு கிட்ட பேசிருக்கான். இருக்கு அவனுக்கு", என்று ஆருஷை மனதில் வறுத்து எடுத்து விட்டு தான் மேலும் தொடர்ந்தான், "தளிர் கம்போஸ் யுவர் செல்ப். அவன் ஏதோ..", என்று ஆரம்பிக்கும் போதே, "கோவத்துல சொல்லிட்டாருனு மட்டும் சொல்லாதீங்க சார்... அது என்ன பொண்ணுங்கள காய படுத்தாமனும்னா பசங்க எடுக்குற ஆயுதம் கேரக்டர் ஆசாசினேஷன் தான். இல்லையா? ஏன் நீங்க கூட என் அக்காவ அப்படி தான பேசுனீங்க?", என்று அவள் கேட்கவும், ஆதர்ஷனுக்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை.



"என்ன அமைதியா இருக்கீங்க? உங்க வீடல்லயும் இரண்டு பொண்ணுங்க இருகாங்க தான? இதே மாதிரி அவங்கள பாத்து ஒருத்தர் சொல்லிருந்தா நீங்க சும்மா விட்டுஇருப்பிங்களா? இந்நேரம் அவன் கைய கால ஒடச்சி போட்டு இருக்க மாட்டீங்க?", என்று அவள் கேள்வி அம்புகளை வீச, வாயடைத்து தான் போய் விட்டான்.



"நாங்க எல்லாம் பாவ பட்ட ஜென்மங்க சார் அதனா எங்களை இவளோ கேவலமா பேசுறீங்க?", என்று அவள் சொல்லும் போதே உடைந்து விட்டாள்.



"தளிர் தண்ணி குடிச்சிக்கோ முதல்ல அப்பறோம் என்ன திரும்பி கேள்வி கேட்கலாம்", என்று அவன் சொல்லவும், அவளுக்கோ என்ன இவன் இப்படி பேசுகிறான் என்று தோன்றியது.



"என்ன...", என்று அவள் துவங்கும் போதே, "என்ன உங்க தம்பி குழந்தையை சுமக்கறதுனால அக்கறையானு கேட்காத? இது உன் மேல இருக்க அக்கறைனு வச்சிக்கோ", என்று அவன் தான் முடித்து இருந்தான்.



"அண்ணன் தம்பி எல்லாம் சைக்கோலஜி படிச்சிருப்பானுங்க போல வீர மாறியே இவரும் பேசுறாரு, யாழும் இதையே தானே ஆதியை பத்தி சொன்னா", என்று அவன் நினைத்து கொண்டு இருக்கையிலே, "என்னோட டாட் விஷ்ணு தான் சைகோலொஜிஸ்ட் நாங்க யாரும் இல்ல", என்று அவள் சொல்லவும், "நினைக்கறத கூட இப்படி சொன்ன என்ன தான் பண்றது?", என்று அவள் கத்தவும், அவனோ சிரித்து விட்டான்.



"நீயே குழந்தை மாறி தான் பிஹாவ் பண்ற? அப்படியே என் பொண்ணு லயா மாறி", என்று அவன் சொல்லி சிரிக்க, "அவளோட சித்தில", என்று சொல்லி நாக்கை கடித்து கொண்டாள் தளிர்.



"ஹ்ம்ம் உன்னோட ட்ரைட்ஸ் தான் என் பொண்ணு கிட்ட இருக்கு, அமைதியா இருக்க மாறி இருப்பா ஆனா டைம் வரும் போது எல்லாத்தையும் மொத்தமா வச்சி செஞ்சிருவா", என்று அவன் சொல்லவும், அவளுக்கோ அவளை பார்க்கும் ஆர்வம் தோன்றியது.



"பசங்க போட்டோஸ் அனுப்புறிங்களா?", என்று கேட்டே விட்டாள்.



"கண்டிப்பா அனுப்புறேன். ஆனா நம்ப இப்போ ஆரம்பிச்சத பத்தி பேசலாமா?", என்று அவன் மீண்டும் அங்கேயே வந்து நிற்க, அவளுக்கோ இந்த விஷயத்தை பத்தி பேசவேண்டாம் என்று தான் தோன்றியது.





ஆனால் ஆதர்ஷ் அவளுக்கு புதிதாக தெரிந்தான். நன்றாக பேசினான். முக்கியமாக அவளின் மனநிலையை உணர்ந்து கொண்டான்.



"சொல்லுங்க", என்று அவள் சொல்லவும், "நீ அவன் கிட்ட பேசு, திரும்பி சேர்ந்து வாழுங்கணுலாம் சொல்ல மாட்டேன். பட் அவனும் அந்த குழைந்தைக்கு அப்பா தான, அடலீஸ்ட் அவனுக்கு உன்னோட ரிப்போர்ட்ஸ் அனுப்பி விடு, சொனோக்ராபி ஆச்சு, பாவம் அவன். நான் உங்கிட்ட ஓப்பனா சொல்றேன் அவன் கிட்ட யாருமே பேசறது இல்ல தெரியுமா? எங்க வீட்டோட செல்ல பையன் அவன். உண்மையா சொல்லனும்னா என்னையும் ஆதியும் விட ரொம்ப நல்லவன்", என்று அவன் சொல்லும் போதே, "ஆமா ஆமா கல்யாணம் பண்ணாம மிரட்டி புள்ள கொடுக்குற அளவுக்கு", என்று அவள் முணுமுத்துத்தது அவனுக்கும் கேட்டது.



அவனோ மேலும் தொடர்ந்து, "உன் விஷயத்துல அவன் பண்ணது தப்பு தான் நான் அத என்னைக்கும் ஜஸ்டிபை பண்ண மாட்டேன். ஆனா அவன் சைடுல இருந்து யோசிச்சி பாரு, அவனோட ட்வின் பிரதர் செத்துட்டான் அதுவோம் அதுக்கு நீயும் ஒரு காரணம்னு அவனுக்கு தெரிய வரும் போது அவனுக்கு கோவம் அவளோ தான். அவனுக்கும் நீயும் வேணும் அவன் அம்மாவும் வேணும் அதனால தான் இப்படி எல்லாம் லூசு மாறி நடந்துக்கிட்டான். கொஞ்சம் யோசி தளிர் நான் இப்பவும் உன்ன அவன் கிட்ட பேசுனு சொல்லல, அடலீஸ்ட் அவன் பேபியா அவன் கண்ணுல காட்டுனு சொல்றேன்", என்று அவன் முடித்து கொண்டான்.



அவளிடம் ஒரு மௌனம். ஒரு நிமிடம் இருவருமே ஒன்றும் பேசவில்லை.



"சரி நான் ரிப்போர்ட்ஸ் சென்ட் பண்றேன் ஆனா அதுக்கு பதில் நீங்க என்ன பண்ணுவீங்க?", என்று அவள் கேட்கவும், ஒரு அளவு அவள் என்ன கேட்பாள் என்பதை யூகித்து தான் இருந்தான்.



"உனக்கு என்ன வேணும்னு சொல்லு", என்று நேரடியாக அவளுக்கு பதில் அளித்தான்.



"உங்க பசங்க கிட்ட என் அக்கா தான் அவங்க அம்மானு சொல்லுங்க ப்ளீஸ்", என்று அவள் சொல்லவும், "உன் அக்காக என்கிட்ட பார்கைன் பண்ற", என்றவனிடம், "நீங்களும் உங்க தம்பிக்காக தான பேச வந்திங்க", என்றவளிடம், "எங்க குடுபத்துக்கு ஏத்த ஆளு தான் மா நீ", என்று சொல்லவும், "உங்க குடும்பத்துக்குள்ள நான் என்னைக்கும் வர மாட்டேன்", என்றவள் குரலில் அப்படி ஒரு அழுத்தம்.



"சரி வர வேணாம், ஆனா என்ன மாமான்னு கூப்பிடு", என்று அவன் சொல்லவும், "என் அக்கா புருஷணத்தான் அப்படி கூப்பிடலாம்னு இருந்தேன்", என்று அவள் சொல்லவும், "புருஷனோட அண்ணனை கூட கூப்பிடலாம்", என்று இவரும் ஏட்டிக்கு போட்டியாக தான் பேசினார்கள்.



"ஆனா நான் என் அக்கா புருஷனை தான் அப்படி கூப்பிடுவேன்", என்று மீண்டும் அவள் அங்கேயே வர, "உன் அக்கா குழந்தைகளோட அப்பான்னு நினைச்சி நீ கூப்பிடு, ஆனா நான் என் தம்பி பொண்டாட்டி கூப்பிட்றத நினைச்சிக்கிறேன். இரண்டு பேருக்குமே பிரச்சனை இல்லை. ஓகே தான?", என்று அவன் இருவருக்குமான தீர்வை சொல்ல, "ஓகே மாமா", என்று அப்போதே இருவரும் நன்றாக பேச துவங்கினார்.



இன்னும் சில விடயங்கள் பேசியவர்கள், "சொன்னது நியாபகம் இருக்கட்டும் பசங்க கிட்ட என் அக்கா தான் அம்மானு சொல்லிரனும்", என்றவளிடம், "நீயும் சொன்னதை நினைவு வச்சிக்க, ரிப்போர்ட்ஸ் அவனுக்கு அனுப்பு", என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து இருந்தனர்.



இதே சமயம், அவனின் அறையில் இருந்த அவிரனோ, "அவ சொல்ல வரதுக்குள்ள தான் அவளுக்கு கால் வந்திருச்சு", என்று அவன் அடிக்குரலில் சீற, அடுத்த பக்கத்தில் இருந்தவர் சொல்லவதற்கெல்லாம் தலையை ஆட்டியவன், "சரி அவ சொன்னதும் சொல்றேன், ஆனா இந்த ஆருஷை நாளைல இருந்து அர்ச்சனை பண்ண ஆரம்பிச்சிரலாம்", என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.



"ஆருஷ் நாளைல இருந்து இருக்கு டா உனக்கு", என்று அவிரனின் இதழ்களில் ஒரு எள்ளல் புன்னகை.
 
1729768113853.jpg
அத்தியாயம் 8


அடுத்த நாள் காலையில் ஆருஷ் தளிருக்காக அவளின் கேபினின் முன் காத்திருக்க, அங்கே அவளுக்கு பதில் அவிரன் தான் வந்திருந்தான்.



"இந்த பக்கி ஏன் இங்க வருது?", என்று அவன் நினைக்கவும், "நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் இன்னைக்கு இல்ல என்னைக்கும் தளிரை பார்க்க முடியாது", என்று அவன் சொல்லவும், "மதி எங்க?", என்று கேட்டவனின் குரல் இறுகியது.



"அது என்ன டா எல்லாரும் தளிர்னு கூப்பிடும் போது நீ மட்டும் மதினு கூப்பிட்ற? நானும் அப்போ மதிக்கு ஷிபிட் ஆகிக்குறேன்", என்று அவன் சொல்லவும் அவன் கோட்டை பிடித்து விட்டான்.



"என்ன பண்றீங்க ஆருஷ்? இது ஹாஸ்பிடல்... கைய எடுங்க சார்", என்று அவன் சொல்லியும் கையை எடுத்தான் இல்லை.



"கைய எடு டா", என்று அழுத்தமாக வந்ததது அடுத்து அவனின் வார்த்தைகள். அதற்கும் அசைந்தான் இல்லை.



"நீ யாரு டா அவ கூடவே நிழல் மாறி இருக்க?", என்று ஆருஷ் கேட்க, "ப்லோஸ்ஸோம்னு கூப்பிடுவியா தளிரை?", என்று அவன் கேட்கவும் அவனின் கையை எடுத்து விட்டான்.



"இது எப்படி உனக்கு தெரியும்?", என்று வந்த வார்த்தைகளில் குரல் கம்மி இருந்தது.



"அது உனக்கு தேவை இல்லாதது. ஆனா நீ அவளோட நிழலை கூட தொட முடியாது. முடிஞ்சத பார்த்துக்கோ", என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டான்.



ஆருஷுக்கோ ஆத்திரமாக வந்ததது. அவன் மட்டுமே அவளை கூப்பிடும் செல்ல பெயர் வரை தெரிந்து வைத்து உள்ளான். தளிரை அவன் சந்தேக பட வில்லை. ஆனால் அவிரனின் நடவடிக்கைகள் மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை.



அவனிடமே வந்து, இப்படி பேசிவிட்டு போகிறான் அல்லவா! அவனின் கேபினுள் நுழைந்தவனுக்கு நிலை கொள்ள முடியவில்லை. மனம் என்னவோ செய்து கொண்டு இருந்தது.



ஏதோ அவனை விட்டு அவள் தூரமாக செல்வது போல் ஒரு பிரம்மை.



அப்போது தான் அவனின் மெயில் ஐடிக்கு ஒரு மெயில் வந்து இருந்தது.



அதை பார்த்தவனின் கண்கள் விரிந்தன. ஆம் தளிரிடம் இருந்து அவளின் ரிப்போர்ட்ஸ் தான் அவனுக்கு வந்து இருத்தது. ஸ்கேனையும் சேர்த்து தான் மெயில் செய்து இருந்தாள்.



அவனின் கைகள் அவனையும் அறியாமல், கணினியின் திரையை வருடியது. அவளின் மணிவயிற்றை தொட்டு தடவி வருட வேண்டிய அவனின் மகவை திரையில் தொட வேண்டிய சூழ்நிலை, கண்கள் கலங்கி விட்டது.



நான்காம் மாதம் துவக்கத்தில் இருந்ததால் அல்ட்ரா சௌண்டை பார்த்தவனுக்கு ஒரு மருத்துவனாய் என்ன குழந்தை என்பதையும் கணிப்பதாய் இருந்தது.



அவனின் இதழ்கள் "மை பிரின்சஸ்", என்று முணுமுணுத்தது.



உடனே அவனின் கைபேசியை எடுத்தவன் அடுத்து அழைத்து என்னவோ, ஆதர்ஷிற்கு தான்.



அவனோ அழைப்பை எடுத்தவுடன், "டேய் இந்தியால இப்போ நடு ராத்திரி டா", என்று சொல்லி முடிக்கும் முன்னே, அவனுக்கு நூறு முத்தங்களை கொடுத்து இருப்பான் ஆருஷ்.



"அடேய் நான் தளிர் இல்ல, ஆதர்ஷ். எனக்கு தப்பா கால் பண்ணிருக்க", என்று சொல்லவும், "ரொம்ப... தேங்க்ஸ்...", என்று சொல்லும் போதே உடைந்து விட்டான்.



"என்ன டா தேங்க்ஸ்லாம் சொல்ற? நம்ப என்னைக்கு அப்படிலாம் சொல்லிற்கோம்? தளிர் தான கான்சிவா இருக்கா? ஆனா உனக்கு ஹோர்மோனல் இம்பாலன்ஸ் அதிகமா இருக்கு போல", என்று அவன் சொல்லி சிரிக்கவும், அவனும் சிரித்து விட்டான்.



"குட் இப்படியே சிரிச்சிட்டு இரு அதான் நல்லது. ரிப்போர்ட்ஸ் அனுப்பீர்காளா?", என்று அவன் கேட்கவும், "ஆமா", என்றவரிடம், "என்ன பேபி உனக்கு?", என்று அவன் கேட்கவும், "அவளே சொல்லுவா இன்னும் டூ வீக்ஸ் கழிச்சி, "அடப்பாவி உனக்காக நான் அவகிட்ட பேசுனா நீ என் கிட்டயே சொல்லமாற்ற... போடா நான் என் செல்லத்து கிட்டயே கேட்டுக்குறேன்", என்று அவன் சொல்லவும், ஆருஷின் கண்கள் விரிந்தன.



"செல்லமா யாரு அது?", என்றவனுக்கு, "நம்ப தளிர் தான், என்னை எவளோ அழகா மாமான்னு கூப்பிட்றா தெரியுமா?", என்று அவன் கேட்கவும், ஆருஷிற்கோ மயக்கம் வராத குறை தான்.



"டேய் என்ன டா சொல்ற? எனக்கு மயக்கம் வருது", என்று அவன் சொன்னவுடன் ஆதர்ஷ் சிரித்து விட்டான்.



"நான் சொல்லல நீ தான் டா கான்சிவ்வா இருக்க மாறி இருக்கு", என்று சொல்லி நேற்று அவளுடன் நடந்த உரையாடலை கூறினான்.



"சோ மேடம் பார்கைன் பண்ணிருக்காங்க", என்றவனின் குரல் கடினமாகவும், "நான் முடியாதுனு சொல்லிருந்தாலும் அவ உனக்கு அனுப்பியிருப்பா", என்று ஆதர்ஷ் தான் கூறினான்.



"என்ன டா உன் மச்சினிச்சிக்கு சப்போர்ட்டா?", என்று அவன் சொல்லவும், "மச்சினிச்சியா? இது என்ன டா புது கதை?", என்று இப்பொது விரிந்தது என்னவோ ஆதர்ஷின் கண்கள் தான்.



"ஆமா அவ உன்ன மாமானு அந்த முறைக்காக தான கூப்பிட்றா", என்று ஆருஷ் அவனின் காலை வார, "ஆனா நான் அவளை என் தம்பி பொண்டாட்டியா தான் பார்க்குறேன், என்னோட கொழுந்தியாள் தான்.", என்று சொல்லவும், பெருமூச்சு விட்டான் ஆருஷ்.



"நடக்குற காரியமா பேசு", என்று அவன் சொல்லவும், "நடத்திரும் இல்லனா நடத்திரலாம்", என்று சொன்ன ஆதர்ஷனின் குரலில் அப்படி ஒரு அழுத்தம்.



"எங்க இருந்து அதான் எனக்கு ஒரு வில்லன் வந்திருக்கானே", என்றவுடன், "சிவம் தான் இந்தியா வந்துட்டானே", என்று சொல்லி முடிக்கும் முதலே, "அவனே பரவால்ல அவிரன்னு ஒருத்தன் வந்திருக்கான் சாவடிக்கிறான் டா...", என்று நடந்ததை அவன் சொல்லி முடித்தான்.



"ஆரு உங்கிட்ட ஒன்னு கேட்கணும்... நீ தளிரை ப்ரொஸ்டிடுட்ன்னு சொன்னியா?", என்று ஆதர்ஷ் கேட்கவும், அழுத்தி கண்களை மூடி திறந்தான்.



"ஹ்ம்ம்", என்று சொல்லியவனின் குரலில் உயிர்ப்பே இல்லை.



அவன் உயிரானவளை வதைக்க அவன் பயன் படுத்திய வார்த்தைகள் அல்லவா அவை. "ஆனா அவளை நான் அப்படி மீன் பண்ணல, அவளுக்கு ஹார்ட் ஆகும்னு தான் சொன்னேன்", என்று அவன் சொல்லவும், "நீ அவ கூட வாழணும்னு சொல்ற, ஒரு ஒரு தடவை நீ அவளை நெருங்கும் போதும் அவளுக்கு அந்த வார்த்தை குத்தாது?", என்று ஆதர்ஷ் கேட்டவுடன், அவனுக்கு யாரோ செருப்பால் அடித்த உணர்வு.



"பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ பீல் பண்ணி பிரயோஜனம் இல்ல", என்று அவன் சொல்லவும் ஆருஷிடம் மௌனம் தான்.



என்ன சொல்லிவிட முடியும் அவனால், அவன் அவளை சொன்ன வார்த்தைகளை திரும்ப பெற இயலாது அல்லவா!



பின்பு ஆதர்ஷனே, "அவன் சிவமோட பிரென்ட் தான நான் சிவம் கிட்ட பேசுறேன், நாளைக்கு மோர்னிங் சிவம்கும் ஸ்ருஷ்டிக்கும் கல்யாணம் ரொம்ப கிளோஸ் பிரண்ட்ஸ் மட்டும் தான் கூப்பிட்டு இருகாங்க...", என்று அவன் சொல்லவும், "ஸ்ருஷ்டி சொன்னா", என்று முடித்து இருந்தான் ஆருஷ்.



"சரி நாளைக்கு அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன். அநேகமா இன்னைக்கு நயிட் ஆதியும் தளிர்க்கிட்ட பேசுவானு நினைக்கிறன்", என்று அவன் சொல்லும்போதே, "என்ன டா சொல்ற ?", என்று விரிந்தன ஆருஷின் கூரிய விழிகள்.



"நம்பர் வாங்கிற்கான் பாப்போம். என்ன விட அவன் தான் இந்த விஷயத்துக்கு கரெக்ட்", என்று சொன்னவன், மேலும் அவனிடம் சில விடயங்கள் பேசிவிட்டு வைத்து விட்டான்.



ஆருஷின் மனதில் ஏதோ ஒரு அழுத்தம் இறங்கிய உணர்வு. அவனின் மனதின் ஓரத்தில் தளிர் அவனை ஏற்று கொள்வாள் என்கிற ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆனால் அது நடக்குமா என்று விதிக்கு மட்டுமே தெரியும்.



இப்படியாக அந்த நாள் செல்ல, அவிரன் வீடு வந்து சேர்ந்தான்.



வந்தவன் பார்த்தது என்னவோ காலை பிடித்து கொண்டு இருக்கும் தளிரை தான்.



"என்ன ஆச்சு இன்னும் கால் வலி இருக்கா?", என்று அவன் கேட்டுக்கொண்டே, அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.



"ஆமா அவி, கால் கொஞ்சம் வீங்கியும் இருக்கு", என்று அவள் சொல்லிக்கொண்டே சினுங்க, "இதுக்கு தான் ரொம்ப நேரம் நிக்காதன்னு சொன்னேன் கேட்டா தான", என்று திட்டிக்கொண்டே அவளின் பாதத்தை எடுத்து பார்த்தான்.



"கொஞ்சம் ஹாட் வாட்டர்ல ஒத்தரம் கொடுத்தா சரி ஆகிரும், நான் போய் எடுத்துட்டு வரேன்", என்று சொன்னவன் அடுத்த பத்து நிமிடத்தில் சுடுநீருடன் வந்து அமர்ந்தான்.



"எதுக்கு இதெல்லாம் நீ பன்னிட்டு இருக்க அவி?", என்றவளை பார்த்தவன், "இதையே சிவம் பண்ணா அமைதியா தான இருப்ப?", என்று அவன் புருவங்கள் தூக்கி கேட்க, அதற்கு மேல் அவளால் தடுக்க முடியவில்லை.



"இங்க பாரு தளிர் நான் உன்ன என்னோட கிளோஸ் ரிலேட்டிவ் மாறி தான் பாக்குறேன்", என்று சொன்னவனின் வார்த்தைகளில் சிறிது கூட பொய் இல்லை.



"உன்னோட கேர்ள் பிரென்ட்கு நீ இப்படி இன்னொரு பொண்ணோட கால புடிச்சிட்டு இருக்கன்னு தெரிஞ்சா என்ன சொல்லுவங்கா?", என்று அவள் கேட்க, "என்ன சொல்லுவா? அப்போ எனக்கு பியூட்டர்ல பிரச்சனையை இல்லனு சொல்லுவா", என்று கண்சிமிட்டி கூறினான்.



"இன்னைக்கு உன்ன தேடி ஆருஷ் வந்திருந்தான் உன் கேபின் கிட்ட", என்று அவன் சொல்லவும், அவனை சட்டென்று அவள் நிமிர்ந்து பார்க்க, "நான் உன்ன பார்க்க முடியாதுனு சொல்லிட்டேன்", என்றவனை தான் கணிமைக்காமல் பார்த்தாள்.



"என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க?", என்று அவன் கேட்க, "நான் சொல்லாமலேயே என்னை புரிஞ்சிக்கிற", என்றவள் கண்களில் நீர் தேங்கி விட்டது.



"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காத, பட் ஐ பீல் ஆருஷ் ரியல்லி லவ்ஸ் யு, அவன் கண்ல உனக்கான தேடலை நான் பார்த்தேன்", என்று அவன் சொல்லவும், "அவருக்கு நான் வேணாம்", என்று சொன்னவள் எழுந்து விட்டாள்.



"ஹே ஜஸ்ட் சொன்னேன். உங்க இரண்டு பேருக்குமே என்ன பிரச்சனைன்னு சொல்லலாமே... உனக்கு வேணும்னா சொல்லு எனக்கு தெரிஞ்ச சொலுஷன் சொல்றேன்", என்றவனை பார்த்து, "சொல்றேன்", என்று சொன்னவள், சொல்லும் நேரம் அவளின் கைபேசி சிணுங்கியது.



ஆதி தான் அழைத்து இருந்தான்.



"இந்த கால் பேசிட்டு வரேன் அவி", என்று சொன்னவள் அவளின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.



அதே நேரம் அவனின் கைபேசியும் அவனை அழைத்தது.



விக்டோரியா ரே என்று திரையில் பார்த்தவன், சலிப்பாக அழைப்பை எடுத்து, "இன்னும் ஏதும் சொல்லல... சொல்ற நேரம் மருமடியும் ஒரு கால் வந்திருச்சு... அவ சொல்லட்டும் அதுக்கு அப்பறோம் பாத்துக்கலாம்", என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து விட்டான்.



இங்கோ தளிர், "ஹலோ", என்று ஆரம்பிக்க, "எப்படி இருக்க தளிர்?", என்ற குரலிலேயே, "ஆதி நீங்களா?", என்று கேட்டு விட்டாள். யாழுடன் அவள் பேசும் நேரம் அவனின் குரலையும் கேட்டு இருக்கிறாள் அல்லவா!



"பரவால்ல கண்டுபிடிச்சிட்டே... தளிர் உங்கிட்ட ஒன்னு சொல்லணும்", என்று அவன் சொல்லும் போதே, "உங்க அண்ணனுக்கு மோர்னிங்கே ரிப்போர்ட்ஸ்லாம் அனுப்பிட்டேன்", என்று அவள் பதில் அளித்தாள்.



"கேள்வியே இன்னும் கேட்கல, அதுக்குள்ள நீயே இதான் கேள்வியா இருக்கும்னு பதில் சொன்னா எப்படி?", என்று கேட்டு அவளின் வாயை அடைத்து விட்டான்.



"தளிர் நீ ஏன் அவனை கல்யாண பணிக்க மாட்டேன்னு சொல்றன்னு எனக்கு தெரியும்", என்று அவன் சொல்லவும் அவளின் கண்கள் இங்கே விரிய, "உன் நண்பிலாம் ஏதும் சொல்லல, என்னோட கேஸ் தான்", என்று சொன்னவன் மேலும் தொடர்ந்து, "உனக்கு பிரச்சனை வைஷ்ணவி மம்மா தான?", என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.



அவளிடம் பதில் இல்லை. மௌனம் மட்டுமே!



"இங்க பாரு தளிர், அவங்க காலம் முடிஞ்சி போச்சு, இப்போ இது உன்னோட ஆருவோட லைஃப் தான். நீங்க தான் டெஸிஸின் எடுக்கணும். நான் உன்ன எதுக்கும் கம்பெல் பண்ண மாட்டேன். பட் யோசி... இன்னும் இருவது வருஷம் கழிச்சி ஐயோ அப்பவே வாழ்ந்து இருக்கலாமேனு நினைக்கறது சுத்த வேஸ்ட்", என்று சொன்னவன் ஒரு ஆழந்த மூச்சை எடுத்து, "போனவன் வரமாட்டான், இருக்குற நீங்க இரண்டு பேருமாச்சு சந்தோஷமா வாழலாமே", என்று சொல்லி முடித்து விட்டான்.



"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஆதி", என்று சொன்னவளிடம், "ஏதும் இப்போதைக்கு சொல்லாத நல்லா யோசி, அப்பறோம் சொல்லு. அண்ட் அவன் எனக்கு அண்ணாலாம் கிடையாது. வெறும் ஒன்பது மாசம் தான் எனக்கு முன்னாடி பொறந்துட்டான்", என்று அவன் சொல்லவும் சிரித்து விட்டாள்.



"வேணும்னா நீ அவனை கல்யாணம் பணிக்குற சொல்லு, உன்ன அண்ணின்னு கூப்பிடறேன்", என்று அவன் சொல்லவும், அவளின் முகம் இறுக்கமானது.



"அண்ணியும் வேணாம் நொன்னியும் வேணாம் தளிர் போதும்", என்று அவள் சொல்லவும், சிரிப்பை அடக்கியவன், "நீ சொல்லிருந்தாலும் கூப்பிட்டு இருக்க மாட்டேன்", என்றவனிடம், "என்கிட்ட நல்லா தான பேசுறீங்க ஏன் யாழ் கிட்ட மட்டும் மட்டமா நடந்துக்குறிங்க?", என்று கேட்டே விட்டாள்.



"உன் பிரென்ட்க்கு சப்போர்ட் பண்ணாத ப்ளீஸ், சரியான இம்சை அவ… அவளுக்கு வாயா அது சப்பா பேசியே சாவடிக்கிறா", என்று அவன் சொல்லவும் சிரித்து விட்டாள்.



"சரி அவளை பத்தி பேசாத, நீ யோசிச்சி சொல்லு... ஏதாச்சு ஹெல்ப் வேணும்னாலும் கேளு சிவம் கூட அங்க இல்லல", என்று அப்படியே கொஞ்ச நேரம் பேசி விட்டு வைத்து விட்டான்.



தளிருக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை பெரிய சமஸ்தானத்தின் அதிபதிகள் அவர்கள், இவளிடம் பேச வேண்டும் என்று தேவையே இல்லை. இருந்தாலும் அவர்களின் சகோதரனுக்காக அதுவும் உடன் பிறவா சகோதரனுக்காக பேசுகிறார்கள்.



அவளுக்கு சற்று பொறாமையாகவும் இருந்தது. ஆருஷ் செய்தது தப்பு என்று தெரிந்தும் அவனிற்காக அவர்கள் வாதாட வில்லை ஆனாலும் அவனின் நிலையை விளக்கினார்கள். ஆனால் சாந்தினி அப்படி செய்ய வில்லை அல்லவா!



தலையை உலுக்கி கொண்டு வெளியே அவள் வர அவளுக்காக இரவு உணவை சமைத்து கொண்டு இருந்தான் அவிரன்.



"அவி உங்கிட்ட ஒரு மெடிசின் வாங்கிட்டு வர சொன்னேனே", என்று அவள் கேட்கவும், என்னோட பெக்ல இருக்கு எடுத்துக்கோ", என்று ஏதோ ஒரு எண்ணத்தில் சொல்லி விட்டான்.



அவளின் ரூமை அடைந்து பையை திறந்து அவளின் மருந்தை எடுக்கும் போது, அவளுக்கு ஒரு புகைப்படம் தென்பட்டது. அதை எடுத்தவளின் கண்கள் அகண்டு விரிந்தது.



அதை எடுத்து கொண்டு அவள் அவனிடம் சென்று நின்றாள்.



"என்ன ஆச்சு தளிர்?", என்று அவன் கேட்கவும், "நீ யாரு ?", என்று அவள் கேட்கும் போதே அவளின் குரலில் உள்ள மாற்றத்தை அறிந்தவன், அவளின் கையில் உள்ள புகை படத்தை பார்த்து விட்டான்.



"தளிர் நான் சொல்றத..", என்று ஆரம்பிக்கும் போதே, "நீ கூட ஏமாத்திட்டா இல்ல", என்றவள் குரல் உடைந்து விட்டது.



அவனோ எதற்கும் அசைய வில்லை.



"நான் யாருனு தெரிஞ்சிகிட்டல இப்போ சொல்லு அன்னைக்கு சிவம் கிட்ட என்ன சொன்ன?", என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.



அவளோ கண்களை துடைத்து கொண்டவள். "சொல்றேன்", என்று சொல்ல துவங்கினால் அவள் செய்த பாவத்தை! இன்றும் அவளால் ஏற்று கொள்ளவே அவளே அவளை மன்னிக்கவே முடியாத பழிசும்மையை!



அடுத்த அத்தியாயத்தில் இருந்து தளிர் தவறி செய்த தவறை பார்ப்போம்!


 
1729781410065.jpg
1729781410079.jpg
அத்தியாயம் 9



"எங்க போற இஷானா?", என்று தளிர் கேட்கவும், "என் பாய் பிரென்ட்டா பார்க்க தான் டி", என்று அவளிடம் பதில் அளித்தாள் இஷானா.



இஷானா தளிருடன் வேலை பார்க்கும் அவளுடைய நெருங்கிய தோழி. இருவரும் ஒன்றாக கல்லூரியில் இருந்து படிப்பவர்கள்.



"அதோ வந்துட்டான்ல உன் பாய் பிரென்ட்", என்று தளிர் சொல்லவும், அங்கே வந்து நின்று இருந்தான் இஷானாவின் காதலன்.



"வர்ஷன் வந்துட்டான் டி ஓகே பை", என்று சொல்லிக்கொண்டே அவள் செல்லவும், அங்கே அவனின் குளிங்க கிளாசை கழட்டி நின்றான்.



இஷானா அவனை ஓடி வந்து அவனை அணைத்து கொண்டதும், அவனும் அவளை ஒரு கையில் அணைத்தான்.



அப்படியே திரும்பி தளிரை பார்க்க, அவளோ தலையை சலிப்பாக ஆட்டி கொண்டாள்.



"ஏன் உன் பிரண்ட்க்கு என்னை பார்த்தா மட்டும் ஆகவே மாட்டேங்குது?", என்று அவன் கேட்கவும், "அவளுக்கு பணக்கார வீட்டு பசங்களையே புடிக்காது", என்று அவள் சொல்லவும், "கடைசில பாரு இந்தியால இருக்க டாப் பணக்கார பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்க போறா", என்று சொன்னவன் அப்போதே காலத்தை கணித்து விட்டானோ என்னவோ!



"ஏய் என்ன கண்ணு அவ பக்கம் போகுது?", என்று அவள் கேட்க, "ஹே அவளை எல்லாம் பாக்கல டி... ஆனா அவளும் அழகா தான் இருக்கா... ", என்று அவன் சொல்லவும், அவளின் ஹீலினாலேயே அவனிற்கு ஒரு மிதி மிதித்தாள்.



"சாவடிச்சிருவேன் பாத்துக்கோ... இதுக்கு தான் அழகா இருக்க பசங்கள லவ் பண்ண கூடாது", என்று அவள் சொல்லவும், "இப்போ கூட நீ போ உன் பிரென்ட்டா கரெக்ட் பண்ணி நான் ஜாலியா இருப்பேன்", என்று சொல்லிக்கொண்டே அவனின் பைக்கை எடுத்தான்.



"உனக்கு அழகா இருக்கேனு திமிரு டா", என்று சொல்லிக்கொண்டே அவனின் தலை கொட்டவும், "இல்லையா பின்ன? தலைல அடிக்காத டி தல முடி கலையுது பாரு", என்றவன் பைக்கை எடுத்து கொண்டு அவளுடன் சிட்டாக பறந்து விட்டான்.



இருவரும் சென்றது என்னவோ வர்ஷனின் கெஸ்ட் ஹவுஸிற்கு தான்.



தளிருக்கு கூட இப்படி ஒரு உறவு அவர்களுக்கு நடுவில் இருப்பது தெரியாது. காதலிக்கிறார்கள் பீச் பார்க் என்று சுற்றுகிறார்கள் என்கிற அளவிற்கு தான் அவளுக்கு தெரிந்து இருந்தது.



அவர்கள் ஒரு உடல் ஈருயிராக எப்போதோ கலந்து விட்டனர் என்று அவளிடம் இஷானா சொல்லிருக்க வில்லை. அவள் அப்படி சொல்லி இருந்தால் எத்தனையோ பிரச்சனைகளை தவிர்த்து இருக்கலாம்.



கூடல் முடிந்து அவளிடம் இருந்து அவன் விலகி படுக்க, அப்போதும் இஷானாவிற்கு அவன் ஸ்பர்சிப்பதை போலவே தோன்றியது.



ஆறடி ஆண்மகன் அவன், செல்வ செழுப்பில் திளைக்கும் அவனிடம் எதற்கும் குறை வில்லை.



"அதர்வ்", என்று மோகம் கலந்த குரலில் அவள் அழைக்க, அவள் புறம் திரும்பியவன், "உங்க வீட்ல நம்பள பத்தி சொல்லிட்டீங்க தான?", என்று அவள் கேட்கவும், "இன்னும் இல்ல இஷு இன்னைக்கு சொல்லிடறேன்", என்று அவன் சொல்லிக்கொண்டே அவளின் இதழை சிறை செய்தான்.



அதற்கு மேல் அங்கு பேச்சு சத்தம் கேட்கவே இல்லை. முத்தங்களும் முன்னங்கால்களை தான் அந்த அரை முழுக்க கேட்டது.



அவள் உடையை அணிந்து கொண்டிருக்கும் போது, அவளின் பின்னே இருந்து அனைத்தவன், "உன் வீட்ல பேசு இஷு", என்று அவன் சொல்லவும், "பயமா இருக்கு", என்று அவள் சொன்னவுடன் சட்டென விலகிவிட்டான்.



"என் வீட்ல கண்டிப்பா ஏதும் சொல்லமாட்டாங்க ஆனா உன் வீட்ல கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க... ஓழுங்க பேசுற வழிய பாரு", என்று கோவமாக அவன் அறையை விட்டு வெளியேறி விட்டான்.



பின்பு எப்படியோ கெஞ்சி கொஞ்சி அவனை சமாதானம் செய்து விட்டு தான் வீடு சென்றாள்.



இப்படியாக அவர்கள் நாட்கள் நகர, ஒரு நாள் தளிர்க்கும் இஷானாவும் காபி அருந்தி கொண்டிருக்கும் சமயம் அங்கு வந்து அமர்ந்தான் அதர்வ வர்ஷன்.



அவன் வந்ததும் தளிர் எழ, அவளின் கையை பட்டென பிடித்து இருந்தான்.



தளிருக்கோ கோவம் வந்து விட்டது. இஷானாவோ சிரிக்க துவங்கினாள்.



இது ஒன்றும் புதிதல்ல, அவளை சீண்டுவது எப்போதும் அவனுக்கு பிடித்த ஒன்று. முதல் முறை இப்படி செய்யும் போது இஷானா கூட சண்டை போட்டாள் தான், ஆனால் அவனோ, "கைய தான டி புடிச்சேன், அவ எனக்கு ஒரு சிஸ்டர் மாறி தான், நீ ரொம்ப யோசிக்காத", என்று சொல்லவும் அதற்கு மேல் அவளால் என்ன பேசி விட முடியும்.



அதர்வ் இப்படி அனைவரும் தங்கை என்று சொல்லும் குணம் உடையவனும் அல்ல என்று அவள் அறிவாள்.



"கைய விடறீங்களா?", என்று அவள் முறைக்க, "கண்ணு வெளிய வந்திற போகுது... அது என்ன நான் வந்தா மட்டும் ஒடனே எழுந்து போய்டுற?", என்று அவளை பார்த்து கொண்டே கேட்டான்.



"லவ்வர்ஸ் குள்ள நான் எதுக்கு தேர்ட் வீல்?", என்று அவள் கேட்க, "நீங்க இரண்டு பேறு தான பேசிட்டு இருந்திங்க நான் தன அப்போ தேர்ட் வீல், நானே ஜாலியா இருக்கேன். மேடம்கு என்னை பார்த்த பயம் போல", என்று இஷானாவை பார்த்து கண்சிமிட்டி கூறினான்.



"முதல்ல கைய விடுங்க", என்று கையை உதறி பிரித்து எடுத்தாள்.



"எனக்கு பயம் இல்ல ஆனா உங்கள புடிக்கல, நீங்க என் பிரென்ட் ஓட லவர் அவளோ தான்", என்று சொல்லிவிட்டு அவளின் பையை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.



"இவ ஏன் தான் இப்படி இருக்களோ?", என்று அவன் கேட்க, "அவ எப்பவோம் அப்படி தானே", என்றவள் அவனை பார்க்க, அவளின் பார்வையை அர்த்தம் உணர்ந்தவன் அடுத்து சென்றது என்னவோ அவனின் கெஸ்ட் ஹவுஸிற்கு தான்.



இப்படியான ஒரு நாள் தான் தளிரும் யாழும் மால்லிற்கு சென்று இருந்தனர்.



"நான் போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேன் ரசகுல்லா", என்று சொல்லி யாழ் நகர்ந்து விட்டாள்.



அப்போது தளிர் சுற்றி பார்த்து கொண்டிருக்க, அவளின் கண்களில் பட்டது என்னவோ அதர்விற்கு ஒரு பெண் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் காட்சி தான்.



மாலில் அத்தனை பேர் முன்னைலையில் ஒரு பெண் அவனிற்கு முத்தம் கொடுக்கிறாள்.



அடுத்து அவனும் அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்க, தளிருக்கு ஆத்திரமாக வந்தது.



"அப்போ இஷானாவ ஏமாத்துறானா?", என்று நினைத்துக்கொண்டே இருக்க, அவளின் தோளில் கையை வைத்தாள் யாழ்.



"என்ன டி அப்படி பார்க்குற?", என்று கேட்டுவிட்டு அவளின் அவளுக்கு வாங்கி வந்த ஐஸ் கிரீமை நீட்ட, "அங்க லைட் எல்லோ ஷார்ட் போட்டுட்டு நிக்குறானே அவன் தான் டி அதர்வ வர்ஷன்", என்று அவள் சொல்லவும், "இஷானாவோட லவர் தான செம்ம அழகா இருக்கான் டி, எனக்கு இன்ட்ரோ கொடேன்", என்று அவள் கேட்கவும், அவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள் தளிர்.



"என்ன டி இப்படி பார்க்குற? எவளோ அழகா இருக்கான் பாரு", என்று அவள் சொல்லிக்கொண்டே ஐஸ் கிரீம் சாப்பிட, மீண்டும் அவனுடன் இருந்த பெண் அவனின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.



"என்ன டி இப்படி பப்ளிக்ல அந்த பொண்ணு கிஸ் பண்ணுது?", என்று விழி விரித்து யாழ் கேட்கவும், "இத தான் அப்படி பார்த்துட்டு இருந்தேன்", என்று அவள் சொன்னாள்.



"இஷானாவ சீட் பன்றான்", என்று தளிர் பற்களை கடித்து கொண்டு கூற, "நம்ப ஏன் அவன் கிட்ட போய் அது யாருனு கேட்க கூடாது?", என்று யாழ் கூற அங்கு தான் மதி அவளின் மதி இழந்து விட்டாள்.



"அதான் எல்லாரு முன்னாடியும் இப்படி பண்றங்களே பார்த்தாலே தெரியல... முதல்ல இஷானா கிட்ட சொல்லணும்", என்று அவள் சொல்லிக்கொண்டே யாழையும் அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.



அவள் மட்டும் அன்று அதர்வ்வை போய் கேட்டு இருந்தால், அது அவனின் தங்கை ஜானவி என்று அவளுக்கு அப்போதே தெரிந்திருக்கும்.



அவள் இப்படி நினைத்து கொண்டு போக, இங்கோ, "இது போதுமா ஜானு?", என்று அதர்வ் கேட்கவும், "வேற லெவல் அண்ணா, எப்படி தான் இவளோ நல்லா செலக்ட் பண்றிங்களோ? லவர் இருக்காங்களா?", என்று அவள் கேட்கவும், ஜூஸ் குடித்து கொண்டுஇருந்தவனுக்கு புரை ஏறியது.



"ஏன் டி?", என்று அவளை பார்க்க, "இல்ல இவளோ நல்ல காம்பினேஷன்ல டிரஸ் சூஸ் பண்றிங்களே அதான் ஒரு டவுட்", என்று அவள் சொல்லிக்கொண்டே அவனின் கையை பிடித்து நகர்ந்து கொண்டான்.



இருவரும் ஒரு உணவகத்தில் வந்து அமர்ந்தனர்.



"அண்ணா ஏன் நீங்க மட்டும் யாரு கூடையும் கிளோஸ்சா இருக்க மாற்றிங்க? ஏதோ என்கிட்ட ஓரளவுக்கு பேசுறீங்க... அதுவும் பர்த்டே வருதேன்னு தான அழைச்சிட்டு வந்திங்க?", என்று அவள் மெனு கார்டை பார்த்து கொண்டே கேட்டாள்.



ஜானவி அந்த வீட்டின் கடை குட்டி என்பதால், அனைவருக்கும் செல்லம் தான். ராஜா பார்த்திபன் மற்றும் விஜயேந்திரன் உட்பட, அவளுக்கு எங்கும் செல்ல தடை இல்லை.



"என்ன பண்றது ஜானு? எனக்கு இருபது நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்தவன் இருக்கானே...", என்று அவன் துவங்கும் போதே, "ஆரு அண்ணாவா? அவரு தான் எல்லாடலையும் பர்பெக்ட் ஆச்சே", என்று அவள் முடித்து இருந்தாள்.



"அதான் பிரச்சனை, அவன் எல்லாத்தலையும் பர்பெக்ட், நான் அவன் அளவுக்கு இல்லாதது தான் பிரச்சனை. அதோட அவன் ரொம்ப ஸ்வீட் எல்லாரு கிட்டயும் நல்லா பேசுறான். அதுக்காக நான் பேசறது இல்லனு இல்ல, அவனை விட கம்மி தான். ஆதி, ஆதர்ஷ், அகல் கிட்ட கூட அவன் அளவுக்கு கிளோஸ் இல்ல ஏன் என்ன விட உனக்கு கூட அவனை தான பிடிக்கும்", என்று அவளை பார்த்து அவன் கேட்க, அவள் தடு மாறினாள்.



"ஆமாம்னு எனக்கு தெரியும் ஜானு. என் அப்பாக்கும் பெருசா என்னை பிடிக்கல அம்மா மட்டும் தான் சப்போர்ட். அப்படியே போகுது வாழ்க்கை", என்று அவன் கூறவும், ஜானுவுக்கும் ஏதோ அழுத்திய உணர்வு.



அவர்களுடன் சேர்ந்து பிறந்தவனை ஒதுக்கி வைத்து விட்டோமோ என்று தோன்றியது.



"சாரி அண்ணா", என்று அவள் சொல்லவும், "நீ எதுக்கு சாரி கேட்குற? டு பி பிராங்க் எனக்கே ஆருஷ் தான் கிளோஸ் அவன் கிட்ட தான் எல்லாமே ஷேர் பண்ணுவேன். ஹி இஸ் ஸ்பெஷல்", என்று சொன்னவனின் கண்களில் பொய் இல்லை.



ஆனால் அவனும் இஷானாவின் விஷயத்தை மட்டும் ஆருஷிடம் கூட மறைத்து தான் இருந்தான். அவன் அவனிடம் அவனின் காதலை மறைத்தது தான் அவன் வாழ்வையே அவனிடம் இருந்து பிரிக்க போகும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.



"ஆனா எனக்கு இப்போ ஆரு அண்ணாவை விட உங்கள தான் பிடிச்சிருக்கு", என்று அவள் சொல்லவும், "அப்பவோம் உனக்கு இதுக்கு மேல எதுவோம் வாங்கி தர மாட்டேன். இதுக்கே கொற்றவை அம்மா கிட்ட திட்டு தான் வாங்கணும்", என்று அவன் சொல்லவும், "அவங்கள சமாளிச்சிக்கலாம்", என்று கண் சிமிட்டினாள்.



சாப்பிட்டு முடித்து அவளை வீட்டில் விட்டு அவன் சென்றவுடன், அடுத்து அவள் அழைத்து என்னவோ ஆதர்ஷ், ஆதி, அகல்யா மற்றும் ஆருஷிற்கு தான்.



இன்று அதரவ்வுடன் பேசிய அனைத்தையும் அவள் கூற, அவர்கள் அனைவருக்கும் சுருக்கென்று தைத்த உணர்வு.



"நம்ப மேல தான் மிஸ்டேக் இருக்கு", என்று ஆதர்ஷ் சொல்லவும், "ஆமா டா ஆனா நான் அவனை இண்ட்ரோவேர்ட்னு நினைச்சேன் அதான் பெருசா அட்டாச் அகல", என்று அவன் சொல்லவும், "நீ முதல்ல இந்தியா வா எங்க கூடையே நீ அட்டாச்சா இல்ல", என்று ஆருஷ் சொல்லவும் அகல்யா சிரித்து விட்டாள்.



"என்ன டி சிரிக்கிற?", என்று ஆதி அவளை கேட்க, "ஒன்னும் இல்ல அண்ணா", என்று அவள் மீண்டும் சிரிக்க, "கொன்றுவேன் பாத்துக்கோ", என்று அவளுடன் வம்பு இழுத்து கொண்டிருந்தான்.



"அடுத்த மாசம் இவனுங்க பர்த்டே வருதுல அப்போ பெருசா செலெப்ரட் பண்ணிரலாம்", என்று ஆதர்ஷ் சொல்லவும், "ஆமா சர்ப்ரைஸா எல்லாரும் வாங்க", என்று ஜான்வியும் உச்சமாக சொல்ல, அனைவரும் ஆமோதித்தனர்.



அவர்களுக்கு தெரியாது அடுத்த மாதம் பிறந்த நாள் அன்று அவன் உயிரோடவே இருக்க போவது இல்லை என்று!



"அடுத்த மாசம் பர்த்டே இருக்கட்டும், இன்னும் இரண்டு நாள்ல உன் பர்த்டே வருதுல அப்போ குரூப் கால் பேசலாம்", என்று அகல்யா கூற, எல்லாருக்கும் அதுவும் சரியாக பட்டது.



தளிரோ இரண்டு நாள் கழித்து வேளைக்கு செல்ல அன்று இஷானா வரவில்லை. அவளுக்கு அழைத்து பார்த்தும் காலை எடுக்க வில்லை.



இப்படியே அவள் நாள் நகர்ந்தது.



ஜானவியின் பிறந்த நாள் அன்று குரூப் கால் என்று அனைவரிடமும் சொல்லிருக்க, அனைவரும் வீடியோ காலில் இணைந்தார்கள்.



"ஹாப்பி பர்த்டே ஜானு", என்று அனைவரும் ஒருசேர கூற, அவளுக்கோ மகிழ்ச்சி தாள வில்லை.



"தேங்க யு அண்ட் எல்லாரும் கரெக்ட்டா கிபிட் அனுப்பிட்டீங்க அதுக்கும் தேங்க்ஸ்", என்று சொல்லிக்கொண்டே அவரவர் அனுப்பி வைத்த பரிசு பொருட்களை பிரித்து காட்டி கொண்டிருந்தாள்.



"எப்படி இருக்க அதர்வ்?", என்று ஆதர்ஷ் கேட்கவும், "என்ன இந்த குட்டி பிசாசு எல்லாத்தையும் சொல்லிருச்சா?", என்று அவன் கேட்டே விட்டான்.



பின்னே இப்படி எல்லாம் அவனிடம் யாரும் பெரிதாக கேட்டதில்லை. இன்று கேட்கிறார்கள் என்றால் ஜானு தான் சொல்லிருப்பாள் என்று யூகித்து இருந்தான்.



"அதர்வ் நீ மட்டும் இவளை குட்டி பிசாசுன்னு சொல்றத நான் கேட்டு இருந்தா நான் தான் டா உனக்கு பெஸ்டி", என்று ஆதி சொல்லவும், "என்ன ஏதாச்சு சொன்னா போதுமே உடனே உங்களுக்கு குளுகுளுனு இருக்குமே", என்று ஜானவி நொடித்து கொண்டாள்.



"அண்ணா சாரி உண்மையா நாங்க உங்கள என்னைக்குமே ஒதுக்கி வெக்கணும்னுலாம் நினைக்கல, அப்பறோம் இந்த பர்பெக்ட் இம்பர்பெக்ட்லாம் நமக்குள்ள இருக்கா என்ன?", என்று அகல்யா கேட்கவும், "அப்படி எல்லாம் இல்ல அகல் நீங்க எல்லாம் ஒரே மாறினு எனக்கு தோணும்", என்று அவன் விளக்கம் அளிக்கும் போதே, "உன் கூட தானடா நானும் பொறந்தேன் அப்போ என்னை மாறி தான நீயும் இருப்ப?", என்று ஆருஷ் கேட்க அவன் ஏதும் சொல்ல வில்லை.



"சரி போனது போகட்டும், இனி இப்படி இருக்காதா நம்ப எல்லாரும் ஒன்னு தான்", என்று ஆதி சொல்லவும் இப்படியே அவர்கள் பேசி கொண்டு அழைப்பை துண்டித்து இருந்தார்கள்.



கடைசியாக அவர்கள் அதர்விடம் பேசியது அப்போது தான்.



அடுத்த நாள் விடிந்தவுடன், "தளிர் தளிர் எழுந்திரு டி", என்று யாழ் அவளை எழுப்ப, "என்ன டி ஏன் இப்படி யாரோ செத்த மாறி பதறுற?", என்று அவள் கேட்கவும், "ஆமா டி உன் பிரென்ட் இஷானா சுய்சைட் பன்னிருக்கா", என்று அவள் சொல்லவும் தளிருக்கு உலகமே நின்று விட்டது.



அடித்து பிடித்து வெளியில் வந்து டிவியை பார்க்க, "இன்றைய முக்கிய செய்தி எம்எல்எ தாரக்கின் மகள் இஷானா தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரின் காதலன் அதர்வ வர்ஷன் என்று அவரின் தற்கொலை கடிதத்தில் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது", என்ற செய்தியில் அவளையும் அறியாமல் அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.


 
1729842968281.jpg
அத்தியாயம் 10


அடித்து பிடித்து கொண்டு அவள் இஷானாவின் வீட்டிற்கு சென்றாள். அவளுக்கு ஏதோ அவளின் ஒரு பகுதியை யாரோ பிய்த்து எரிந்து விட்டது போன்ற உணர்வு. இருவரும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ஒன்றாக இருக்கிறார்கள்.



அவளால் இஷானா இல்லை என்பதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. அதர்வ் பற்றி அவள் அன்று கூறலாம் என்று நினைக்கும் போது, யாழ் தான், "நேர்ல போய் பேசிக்கோ டி எதுக்கு வேஸ்ட்டா வீகென்ட் அப்போ மூட் ஸ்பாயில் பண்ணனும்", என்று சொல்லவும் தான் இரு தினங்கள் கழித்து நேற்று அவளிடம் பேச சென்றாள்.





ஆனால் அவள் அலுவலகமும் வர வில்லை, அழைப்பை கூட ஏற்கவில்லை. அவளின் வீட்டை அடைய அவளின் தந்தை தாரக் தான் நின்று இருந்தார். எம்எல்ஏ அவர் என்று தெரியும், சில நேரம் அவள் வீட்டிற்கு சென்ற மோது பேசியும் இருக்கிறாள். அவளுக்கு தாய் கிடையாது, சிறு வயதிலேயே இறந்து விட்டார்.



"அங்கிள்", என்று அவளிடம் அவள் வரவும், "உனக்கு தெரியுமா மா அவ லவ் பண்ணது, அந்த படுபாவி ஏமாத்திட்டான் மா இவளை, புள்ளையோட இருந்திருக்கா, கல்யாணம் பணிக்க மாட்டேன்னு சொன்னான்னு வேஷத்தை குடிச்சி செத்துட்டா", என்று அவர் சொல்லி கதறி அழவும், அவளுக்கு என்ன சொல்லி அவரை தேற்றுவது என்றே தெரியவில்லை.



அவரின் ஒரே செல்ல மகள் அல்லவா அவள், அவளே சொல்லி இருக்கிறாள், அவளின் தந்தைக்கு அனைத்தும் அவள் தான் என்று!



அதற்கும் மேல் அவளுக்கு அதிர்ச்சி அவள் கர்ப்பமாக இருந்திருக்கிறாள் என்பது தான். அவர்கள் உறவு இவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளது என்று அவளுக்கு தெரியாதே!



"அங்கிள் லவ் பண்ராங்கன்னு தெரியும் ஆனா இப்படி இருந்தாங்கனு சாத்தியமா எனக்கே தெரியாது அங்கிள்", என்று அவளும் கதறி விட்டாள்.



"அந்த படுபாவி நல்லாவே இருக்க கூடாது மா, நாசமா போயிரணும்", என்று அவர் சாபம் விட்டுக்கொண்டே செல்ல, "நீங்க ஒன்னும் கவலை படாதீங்க அங்கிள், நம்ப கண்டிப்பா இஷானாக்காக நியாயம் வாங்கி தரலாம்", என்று சொல்லிவிட்டு, அங்கே சடலமாக இருக்கும் அவளின் தோழியின் அருகே சென்றாள்.



பாட்டாம்பூச்சி போல் பறந்து வந்தவள், இன்று பாடையில் கிடைக்கிறாள். தளிரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. இது அத்தனையும் அதர்வின் மேல் தான் கோவமாக திரும்பியது.



"அதர்வ் உன்ன சும்மா விடவே மாட்டேன் டா", என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.



அதர்வின் வீட்டிலோ நிலை வேறு மாதிரி இருந்தது.



"வைஷ்ணவி எங்க உன் அன்பு மகன்?", என்று விக்ரமன் நடு ஹாலில் கத்த, வைஷ்ணவி, திலகவதி, விஜயேந்திரன் மற்றும் அப்போது தான் எழுந்த அதரவும் வெளியே வந்தான்.



"நியூஸ்ச பாத்தியா?", என்று அவர் கேட்கவும் தான், இல்லை என்று தலையசைத்தவனுக்கு, ஹாலில் இருக்கும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அவனுக்கு செய்தியை காட்டினார்.



அவனுக்கோ இதயம் துடிப்பதே நின்று விட்டது.



"என்ன பண்ணி வச்சிருக்க?", என்று அவர் கத்தவும், "பப்பா நான் சொல்றத", என்று அவன் ஆரம்பிக்கும் போதே, "கண்டிப்பா நீ அந்த பொண்ண கல்யாணம் பணிக்க மாட்டேன்னு சொல்லிருக்க மாட்டேன்னு எனக்கு என் பையன் மேல நம்பிக்கை இருக்கு ஆனா கல்யாணம் பண்ணாம பிள்ளை கொடுத்திருக்க... அப்பவே அந்த கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மென் சொன்னான் தம்பி ஏதோ பொண்ண கூட்டிட்டு அடிக்கடி வராரு ஐயான்னு நான் தான் உன் மேல இருக்க நம்பிக்கைல எதையும் கேட்கல... ஆனா எங்க கொண்டு வந்து நீ நிறுத்திருக்க பாரு", என்று அவர் கத்திகொண்டே இருக்கையிலேயே, போலீஸ் அவர்களின் வீட்டை அடைந்து விட்டார்கள்.



ஏசிபி வந்திருந்தார். பெரிய இடம் அல்லவா! "சார் தாரக் உங்க மகன் மேல ரேப் கேஸ் கொடுத்து இருக்கார்.", என்று சொல்லவும் இன்னும் அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.



விஜயேந்திரன் தான் பேசினார், "லவ் தான பண்ணாங்க அப்பறோம் எப்படி ரேப் ஆகும்?", என்றவரை பார்த்து, "அந்த பொண்ணோட சூசைட் நோட்ல உங்க மகன் அவளை வறுபுறுத்தி தான் இருக்க வச்சாருனு எழுதிருக்கா", என்று அவர் சொல்லவும், இவர்களுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.



"சார் தம்பிய கூட்டிட்டு போறோம் நீங்க லாயர்ர கூட்டிட்டு வாங்க", என்று சொல்லவும், அவர்களால் மறுப்பும் சொல்ல முடியவில்லை. அதர்வ் அப்படியே நின்று இருந்தான்.



வைஷ்ணவியால் தான் நிலை கொள்ள முடியவில்லை. அவனிடம் சென்றவர் ஓங்கி கன்னத்தில் அறைந்திருந்தார்.



"என்ன டா ஏதாச்சு பேசு இப்படியே சிலை மாறி நிற்காத அதர்வ்", என்று அவர் கத்தவும் கூட அவன் எதுவும் பேசவில்லை.



போலீஸ் அவனை அழைத்து செல்லவும், கதறியது என்னவோ வைஷ்ணவி தான், திலகவதி அமர்ந்தே விட்டார்.



"ருத்ரனுக்கு போன் போடு", என்று விஜயேந்திரன் சொல்லும் போதே, விக்ரமனுக்கு அழைத்து இருந்தார் ருத்ரன்.



அழைப்பை ஏற்றவர், "ருத்ரா", என்று அவர் ஆரம்பிக்கும் போதே, "எந்த ஸ்டேஷன்ல அர்ரெஸ்ட் பன்னிருக்காங்க? நம்ப லாயரோட போயிரலாம் விக்ரம் அதான் நல்லது", என்று அவர் சொல்லவும், உடனே விக்ரமன் அந்த ஸ்டேஷனை அடைந்தார்.



ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. இஷானாவின் தந்தை அதற்கு அனுமதிக்கவும் இல்லை.



ருத்ரன் அவளின் பதவியை உபயோக படுத்த விக்ரமன் விடவில்லை.



"வேண்டாம் ருத்ரா அப்பறோம் இன்னும் பிரச்சனை ஆகிறோம். ரேப் கேஸ் வேற", என்று சொல்லும் போதே விக்ரமன் உடைந்து விட்டார்.



விஷ்ணுவும் ருத்ரனும் தான் தேற்றினார்.



கொற்றவையும் வித்யாவும் கூட வந்து இருந்தனர். ஆனால் என்ன செய்தும் வைஷ்ணவியை தான் தேற்றிய பாடு இல்லை.



தளிரிடம் இஷானாவின் தந்தை வந்தார், அவளின் இறுதி ஊர்வலம் நடக்க போகும் சமயம் அது.



"எனக்கு ஒரு உதவி செய்மா", என்று அவர் கேட்கவும், "சொல்லுங்க அங்கிள்", என்று அவள் கேட்க, "நான் அதர்வ் மேல ரேப் கேஸ் கொடுத்திருக்கேன் அதுக்கு சாட்சி நீ சொல்லுவியா?", என்று அவர் கேட்கவும், "நான் என்ன அங்கிள் சொல்றது?", என்று அவரை பார்க்க, "அவன் எப்படி பட்ட பையன்னு சொல்லு மா அது போதும்", என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.



அனைத்தையும் முடிய அடுத்த நாள் வக்கீல் முன் ருத்ரன், விக்ரமன் மற்றும் விஷ்ணு அமர்ந்திருக்க, "சார் கேஸ் ரொம்ப காம்ப்ளிகேட்டேட் ஆகிட்டே போகுது. ஒரு பொண்ணு உங்க மகனுக்கு அகைன்ஸ்ட்டா சாட்சி சொல்ல ரெடியா இருக்கா போல, அது மட்டும் இல்ல, உங்க கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மென் கூட இப்போ அவங்களுக்காக தான் பேசுறான். கேட்டா எனக்கும் பொண்ணு இருக்கு அந்த தம்பி அந்த பொண்ண கூட்டிட்டு வர்றத நானே பற்றுக்கேனு சொல்றான்", என்று அவர் சொல்லவும், என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தார்கள்.



விஷயம் வைஷ்ணவி கதையும் எட்டியது, "நம்ப ஏன் அந்த பொண்ணு கிட்ட பேச கூடாது?", என்று அவர் சொல்ல, "தெரிஞ்ச வாட்ச்மென்னே நம்ப பயனுக்காக பேச மாற்றான் டி அந்த பொண்ணு இஷானா பிரென்ட் எப்படி அதர்வ்க்கு சப்போர்ட் பண்ணுவா?", என்று விக்ரமன் கேட்கவும், "நான் போய் பேசுறேன் ஒரு வாட்டி நீங்க அட்ரஸ் மட்டும் வாங்கி கொடுங்க", என்று சொல்லவும், அவருக்காக அட்ரஸ் வாங்கி கொடுத்தார்.



விக்ரமன் அப்பவும் தளிரை பார்க்க வில்லை. அவளின் பெயர் கூட அவர் கேட்கவில்லை அவளின் விலாசத்தை மட்டும் வாங்கி கொடுத்தார்.



வைஷ்ணவி சாந்தினி மட்டும் தளிர் இருக்கும் அபார்ட்மெண்டை அடைந்த சமயம், யாழும் சாந்தினியும் வேலைக்கு சென்று இருக்க, தளிர் மட்டும் விடுமுறை எடுத்து வீட்டில் தான் இருந்தாள்.



அவளுக்கு நாளை கோர்ட்டிற்கு செல்ல வேண்டியது வேறு இருந்தது.



காலிங் பெல் அடிக்கவும், யார் என்று பார்ப்பதற்கு அவள் வந்து கதவை திறக்க, அவள் முன் நின்று இருந்தது என்னவோ வைஷ்ணவி தான்.



"யாரு ஆண்ட்டி நீங்க? என்ன வேணும்?", என்று அவள் தன்மையாக கேட்க, "நான் அதர்வ் அம்மா மா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்", என்று அவர் சொல்லவும், அவளின் முகம் இடுங்கியது.



அவளின் முகத்தில் இருந்த மென்மை இப்பொது இல்லை. அதை வைஷ்ணவியும் கவனித்தார் தான்.



வயது பெரியவர் என்பதால், "உள்ள வாங்க", என்று அவரை அழைத்து, "உட்காருங்க ஆண்ட்டி. காபி டி?", என்று அவள் கேட்க, "ஏதும் வேண்டாம் மா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்", என்று அவர் சொல்லவும், "உங்க மகனுக்கு அகைன்ஸ்ட்டா பேச கூடாதுனு நீங்க சொல்ல வந்திருந்திங்கனா அப்படியே கிளம்பிருங்க அதான் நல்லது", என்று அவர் முகத்தை பார்க்காமல் தான் கூறினாள்.



"அவன் கண்டிப்பா இப்படி பன்னிருக்கா மாட்டான் மா", என்று அவர் பேச, "இப்படி தான் எல்லா அம்மாவும் நினைச்சிட்டு இருக்கீங்க... வெளிய போய் பார்த்தா தான் தெரியும் உங்க பசங்க லட்சணம் எல்லாம்... இவளோ ஏன் நாலு நாள் முன்னாடி உங்க மகன் வேற ஒரு பொண்ணோட ஜோடி போட்டுட்டு சுத்துனதா நானே என் கண்ணால பார்த்தேன்", என்று அவள் சொல்லியதும், வைஷ்ணவிக்கு தெரிந்தது ஜானவியை பற்றி தான் பேசுகிறாள் என்று!



"அது அவனோட தங்கச்சி மா", என்று அவர் சொல்லவும், "ஓஹ் தங்கச்சிய தான் மால்ல எல்லாரு முன்னாடியும் கிஸ் பண்ணுவாங்களா? விட்டா அவனோட பொண்ணுன்னு கூட சொல்லுவீங்க போல", என்று அவள் பேச, "நீ அவனை பத்தி தப்பா புரிஞ்சி வச்சிருக்க, அவன் அப்படி பட்ட பையன் இல்ல", என்று அவர் மக்னிற்காக வாதாடினார்.



"சும்மா இதையே சொல்லாதீங்க... அப்படி பட்ட பையன் தான் கல்யாணம் பண்ணாம குழந்தை கொடுப்பானா? நல்லா இருக்கே... உங்க மகனுக்கு அவ மேல இருந்தது லஸ்ட் மட்டும் தான்... இப்படி இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிக்க போரானோ?", என்று அவள் சொல்லவும், "போதும் மா நிறுத்து அவன் அந்த பொண்ண காதலிச்சிருக்கான் அதனால தான் பிள்ளை கொடுத்திருக்கான். ஏன் சகுந்தலா கதை எல்லாம் நீ படிச்சது இல்லையா? சரி இவளோ பேசுறியே உன் பிரென்ட் கூட தான என் மகன் கூட இருந்திருக்கா?", என்று அவர் கேட்டே விட்டார்.



"இப்போ வரைக்கும் கூட அவ விருப்ப பட்டு போயிருப்பானு தான் தோணுச்சு ஆனா நீங்க பேசறத பார்த்தா எனக்கே அவள உங்க மகன் கட்டாயப்படுத்தி இருப்பானோன்னு தோணுது", என்று அவள் சொல்லவும், கோவம் வந்தது தான் அடக்கி கொண்டார்.



மகனை காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்பு மட்டும் தான் இருந்தது. இறுதியாக என்ன நினைத்தாரோ, அவளின் காலிலே விழுந்தே விட்டார்.



தளிரோ உடனடியாக இரண்டடி பின்னால் சென்று விட்டாள்.



"ஆண்ட்டி என்ன பண்றீங்க? ப்ளீஸ் எழுந்திரிங்க?", என்று அவள் சொல்லவும், "என் மகனுக்காக உன் கிட்ட மடி பிச்சை கேட்டுக்குறேன்", என்று கை கூப்பி அவர் கூறவும், அவளுக்கோ தர்ம சங்கடமான நிலை.



ஒரு நொடி நாளை கோர்ட்டிற்கு போக வேண்டாமா என்று யோசித்தாள் தான்.



"ஆண்ட்டி முதல்ல எழுந்திரிங்க", என்று அவரை எழுப்பி சோபாவில் உட்கார வைத்து அவளுக்கு க்ளாசில் தண்ணீர் எடுத்து வந்து அருந்த வைத்தாள்.



"நாளைக்கு கோர்ட்டிற்கு போகாமல் விட்டு விடுவோமா?" என்று அவள் நினைத்து கொண்டு இருக்கையில், அவளின் போன் அலறியது.



"ஒரு நிமிஷம் ஆண்ட்டி", என்று சொல்லி போனை எடுத்தவளிடம் பேசியது என்னவோ யாழின் சைக்கோலோஜிஸ்ட் தான்.



"இந்த ஹராஸ்மென்ட்லாம் ரொம்ப கொடுமை தான் தளிர். பாவம் யாழ் ரொம்ப சபர் ஆகுறா", என்று அவர் சொல்லிக்கொண்டே செல்ல, அவளுக்கு இஷானாவின் நினைவு தான் இப்பொது.



போனை வைத்து விட்டு வந்தவள், "நீங்க கிளம்புங்க நாளைக்கு கோர்ட்ல பாத்துக்கலாம்", என்று சொல்லவும், "என்னோட மகன்...", என்று அவர் ஆரம்பிக்கும் போதே, "நீங்களாம் என்ன பொம்பள? ஒரு பொம்பள பொறுக்கிக்கு வந்து சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க? ஒரு பொண்ணோட உயிரே போயிருக்கு... ச்ச... நீங்க அவனுக்கு அம்மா தான இல்ல ... ", என்று அதோட நிறுத்தி கொண்டாள்.



வைஷ்ணவிக்கும் சுரென்று கோவம் வந்தது. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர், "நிறுத்து டி ரொம்ப பேசுற... இவளோ பேசுற உனக்கு ஒரு நாள் உண்மையாவே நரகம்னா என்னனு ஒருத்தன் காட்டுவான் அன்னைக்கு தெரியும் என் மகன் அதர்வோட அருமை", என்று சொல்லவும், "நான் அப்படி எல்லாம் போய் எவன் கிட்டயும் சிக்க மாட்டேன். நீங்க கிளம்புங்க", என்று சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டாள்.





அடுத்த நாள் கோர்ட்டிற்கு விக்ரமன் வர வில்லை. திலகவதிக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனதால் அவர் மருத்துவமனையில் இருந்தார். அதனால் தான் அவரால் தளிரை இறுதி வரை காண முடியவில்லை. ருத்ரன் விஷ்ணுவும் வருவதற்கு முன்னாலேயே கோர்ட்டில் கேஸ் துவங்கி விட்டது.



தளிரும் சாட்சி கூண்டில் ஏறினாள்.



வக்கீல் அவளிடம் அதர்வ் பற்றி கேட்க, அவளுக்கு தெரிந்தவை மட்டும் தான் கூறினாள். அவள் கூறியது, "நானே அவரை பல பெண்களோட பாத்திருக்கேன்", என்பது மட்டும் தான்.



அதர்வ் ஒரு நொடி அதிர்ந்து விட்டான். தளிரின் எதிரில் தான் அவனும் நின்று இருந்தான்.



அவன் பார்த்த பார்வை இன்றும் அவளின் கண்ணில் அப்படியே நின்று இருந்தது...



வைஷ்ணவியின் கண்களில் ரௌத்திரம்.



அன்றைய செஷன் முடிய, மேலும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.



அதர்விற்கு பெயில் கிடைக்கவே இல்லை.



தளிர் வீடு வந்ததும், சாந்தினி மற்றும் யாழ் என்ன நடந்தது என்று விசாரிக்க, அவள் நடந்ததை அனைத்தையும் கூற, "நீ கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்னு எனக்கு தோணுது", என்று சாந்தினி சொல்லவும், "எதுக்கு யோசிக்கணும் அவனே பொம்பள பொறுக்கி, இவளை வேணா கேளுங்க", என்று யாழை கை காட்ட, அவள் ஏதும் பேச வில்லை.



ஒரு வாரத்தில் அதர்வ் வெளியே எப்படியோ பெயில் எடுத்து வெளியே வந்து விட்டான் என்று நியூஸில் கூறினார்கள்.



ஆனால் அடுத்த நாள் வந்த செய்தியில் தான் அவளின் நெஞ்சம் உறைந்து விட்டது.



"இஷானாவின் தற்கொலை கேஸ்இல் கைதான அதர்வ் வர்ஷன் அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மேல் பொய் வழக்கு சித்தரிக்கப்பட்ட காரணத்தால் மனஉளைச்சலின் காரணமாக தற்கொலை செய்வதாக எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்", என்ற செய்தி தான் ஓடிக்கொண்டு இருந்தது.



தளிருக்கோ ஏதோ தவறாக பட்டது.



"இவன் எதற்கு சாக வேண்டும்?", என்ற கேள்வியே அவளை வதைக்க, அவள் அடுத்து சென்றது என்னவோ இஷானாவின் வீட்டிற்கு தான்.
 
1730100162189.jpg
1730100162177.jpg

அத்தியாயம் 11



இஷானாவின் வீட்டை அடைந்தவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.



அங்கே சடலமாக கிடந்தது இஷானாவின் தந்தை தாரக் தான்.



அருகே இருந்து போலிசிஸிடம், "சார் அங்கிள்கு", என்று அவள் ஆரம்பிக்கும் போதே, "மக இறந்த தூக்கத்துல இவரும் சுயிசைட் பண்ணிகிட்டாரு மா", என்று அவர் சொல்லவும் தளிருக்கு தலையே வலிக்க ஆரம்பித்தது.



அவளது உயிர் தோழி விண்ணுலகம் சென்று விட்டாள். அதற்கு காரணமானவனும் இப்பொது உயிரோடு இல்லை, இவன் தான் காரணம் என்று சொன்னவனும் இப்பொது இவ்வுலகில் இல்லை. எங்கே சென்று விடை தேடுவது என்றே அவளுக்கு தெரியவில்லை.



இங்கோ விக்ரமன் இல்லத்தில் அனைவரும் சோகத்தின் உச்சத்தில் இருந்தனர்.



ராஜ பார்த்திபன் கூட வந்து இருந்தார். அப்போதும் விஜயேந்திரனிடம் பேச வில்லை என்றாலும் விக்ரமனுடன் இருந்தார்.



"எங்களுக்கு கொல்லி வைக்க வேண்டியது… இவனுக்கு கொல்லி வைக்க வெச்சிட்டான்", என்று திலகவதி கூறி அழ, யாரை தேற்றுவது என்றே தெரியவில்லை.



ஆதியால் வர முடியாமல் போய் விட்டது. ஆதர்ஷும் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ள, ஆருஷ் மட்டும் தான் அனைத்தையும் பார்த்து கொண்டான்.



தன் உடன் பிறந்தவன், ஒரே கருவறையில் உருவானவன், இன்று சடலமாக அவன் முன்னிலையில்! நினைத்து பார்க்கவே முடியவில்லை.



"அண்ணா அழுத்துருங்க", என்று அகல்யா சொல்லியும் அவன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வர வில்லை.



ஆனால் தாரை தாரையாக அழுது கரைந்தது ஜானவி தான். இறுதியாக அவள் மட்டும் தானே அவனை பார்த்தாள்.



ஜானவிக்கு அழ கூட தெரியும் என்று அனைவரும் அறிந்து கொண்ட நாள், அதர்வின் இறப்பு தான்.



அப்படி கதறி அழுதாள் அந்த வீட்டின் கடைக்குட்டி இளவரசி.



வைஷ்ணவி இடிந்து அமர்ந்து விட்டார். கொற்றவையும் வித்யாவும் கண்ணீர் வடித்தனர். அதுவும் ஜானவியை விட்டு செல்லும் போது, அவன் உள்ளே வராமல் சென்றதற்கு அவர் அவனுக்கு அழைத்து சண்டைபோட, "அம்மா அடுத்த தடவை வரும் போது உங்க கையால சாப்பிடாம போக மாட்டேன்", என்று சத்தியம் செய்து கொடுத்தது எல்லாம் நினைவு வந்தது.



"என் கையால சாப்பிடறேனு சொன்னவனுக்கு இன்னைக்கு நான் வாய்க்கரிசி போடற நிலைமை வரும்னு நினைக்கல", என்று அவர் சொல்லிக்கொண்டே அழுதார்.



அகல்யா ஆதிக்கு அழைத்தவள் கதறி அழ, ஆதியால் அவளை சமாதானம் செய்ய இயலவில்லை.



"அகல் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ", என்று அவன் சொல்லவும், "எப்படி அண்ணா கண்ட்ரோல் பண்ண சொல்றிங்க? சின்ன வயசுல இருந்து ஆறு பேறும் ஒண்ணா தான இருந்தோம். நம்ப கூட தான அதர்வ் அண்ணாவும் இருந்தாரு இப்போ அவரு இல்லனு நினைக்கவே கஷ்டமா இருக்கு", என்று அவள் சொல்லி மீண்டும் கதற, ஆதி எப்படியோ ஒரு வழியாக அவளை சமாதானம் செய்தான்.



ஆதர்ஷனுக்கு அழைத்து பார்த்தார்கள் எடுக்க வில்லை.



"ஸ்டக் இன் எமெர்ஜென்சி", என்று அனுப்பி இருந்தான்.



ஜானவியை ஒரு வழியாக ருத்ரன் தான் தேற்றினார்.



"அப்பா, அண்ணா ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தான்?", என்று சொல்லிக்கொண்டே கதறும் பெண்ணை, "அவனுக்கு நம்ப எல்லாம் முக்கியம் இல்லமா போய்ட்டோம் மா", என்றவரின் குரல் கூட தழுதழுத்தது.



பிள்ளைகளை ஒரே போல் பார்த்தவர்கள் அவர்கள். அவனின் இழப்பு அவர்களின் ஆறு உயிரில் ஒரு உயிரை பிரித்து விட்டது போல் தான் இருந்தது.



"இவனுக்கு என்ன அவளோ அவசரம், கொஞ்சம் கூட நம்ப மேலே பாசம் இல்லாம போயிருச்சு", என்று வித்யாவும் பொருமிக்கொண்டார்.



ஒரு வழியாக அவனின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போதும் வைஷ்ணவி எதுவும் பேச வில்லை.



அனைத்தும் முடிந்து அனைவரும் சென்று விட, வைஷ்ணவியின் கால் அடியில் போய் அமர்ந்தான் ஆருஷ். அவரின் கையில் ஆருஷ் மற்றும் அதர்வின் சிறிய வயது புகைப்படம்.



"என்ன மா ஆச்சு?", என்ற மகனின் ஒரே கேள்வியில் மகனிடம் வெடித்து அழுது விட்டார். அவரு அழுத சத்தத்தில் அனைவரும் அறையின் வாயிலில் நிற்க, அவனின் கண் பார்வையில் அனைவரும் வெளியே செல்ல சொல்லிருந்தான்.



"என்னனு சொல்லுங்க", என்று அவரின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி அவன் வைக்க, ஆதி முதல் அந்தம் வரை சொல்லி முடித்தார்.



தன் அன்னை ஒருத்தியின் காலில் விழுந்தது அவனுக்கு ஒரு பக்கம் வலியை கொடுக்க, ஒரு பக்கம் அவள் பேசிய வார்த்தைகள் அவளை கொல்லும் அளவிற்கு அவனுக்கு கோவத்தை கொடுத்தது.



என்ன வார்த்தைகள் அவை, "நீங்க அவனுக்கு அம்மா தான இல்ல...", என்று அவள் நிறுத்திக்கொண்டாலும் அதான் உள்ளர்த்தம் என்னவென்று தெரியாதவனா அவன்?



"அந்த பொண்ணு யாரு?", என்று அவன் கேட்கவும், அவனை வைஷ்ணவி பார்க்க, மகன் எதற்காக கேட்கிறான் என்று தெரியாதவரா அவர்.



"வேண்டாம் ஆரு இதோட முடிச்சிக்கலாம். அந்த பொண்ணோட சங்காத்தமே வேண்டாம் நமக்கு", என்று சொல்லிவிட்டார்.



ஆனால் ஆருஷால் தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.



அப்போது வீட்டை விட்டு சென்றவன் தான் அத்துடன் கலிபோர்னியா சென்றது கூட யாருக்கும் அவன் சொல்லவில்லை.



இப்படியாக நாட்கள் செல்ல, தளிரும் இதை பற்றி எல்லாம் நினைக்காமல் தான் இருந்தாள்.



அப்போது ஒரு நாள் சாந்தினியும் தளிரும் பேசிக்கொண்டு இருக்கையில், "தளிர் சாரி டி இந்த லெட்டர் உனக்கு அஞ்சு மாசத்துக்கு முன்னாடி வந்தது கொடுக்கணும்னு நினைச்சேன். அப்படியே மறந்து விட்டுட்டேன். இப்போ ரூம்கிளீன் பண்ணும் போது தான் பார்க்குறேன்", என்று சொல்லி அவள் கொடுத்தாள்.



"ஏதாச்சு இம்போர்ட்டண்ட்டா இருந்தா என்ன பன்னிருப்பா?", என்று சாந்தினி கடியவும், "தெரியாம பண்ணிட்டேன் அக்கா", என்று சொல்லி அவள் மீண்டும் சுத்தம் செய்ய உள்ளே சென்று விட்டாள்.



தளிர் கடிதத்தை பிரித்து படிக்கச் ஆரம்பிக்கவும் அவளுக்கு உலகமே தலைகீழாக மாறிய உணர்வு.



கண்களில் தண்ணீர் வழிய தொப்பென்று அவள் விழவும், சாந்தினியும் யாழும் அவளிடம் நோக்கி வெளிய வந்தனர்.



"என்ன ஆச்சு?", என்று யாழ் அவளை கேட்டுக்கொண்டே எழுப்ப, சாந்தினி அவளிடம் இருந்த கடித்தை எடுத்து படிக்கச் ஆரம்பித்தாள்.



சாந்தினியும் அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.



(ஹிந்தியில் இருப்பது தமிழில்)



அன்புள்ள தளிருக்கு,



தாரக் எழுதி கொள்வது, இது நான் கடைசியாக எழுதும் கடிதம். இஷானா சாவிற்கு அதர்வ் காரணம் இல்லை. அதற்கு காரணம் ஒரு வகையில் நான் இன்னொருவனை நானே என் கைகளால் கொன்று விட்டேன்.



இஷானா கருவுற்றுப்பதை தெரிந்து கொண்டேன். என்னால் அதை தாங்க முடியவில்லை. அதை என் நண்பன் ஒருவனிடம் கூறினேன். அதற்கு காரணம் அதர்வ் என்று தெரிந்து கொண்டேன். பிள்ளையே வந்து விட்டதால் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். ஆனால் அந்த கயவனுக்கு என் மகளின் மேல் காமவெறி இருந்துள்ளது என்று எனக்கு தெரியாது.



நான் வீட்டில் இல்லாத சமயம் இஷானாவிற்கு போதை மருந்தை கொடுத்து, அதனால் அவள் கரு களைந்து இருந்த சமயம் அவளுடன் உடலுறவு வைத்து இருக்கிறான்.



என் பெண் வலியால் துடித்து அந்த இடத்திலேயே மரணித்து விட்டாள். அந்த நயவஞ்சகனுக்கு யாரைப்போலவும் எழுதும் திறன் இருந்ததால், அவனே இஷானாவை போல் அந்த கடிதத்தை எழுதி உள்ளான்.



நானும் கூட அதை படித்து நம்பி விட்டேன். செல்லமாக வளர்த்த ஒரே பெண்ணை இழந்த துக்கம் இருந்ததால், எனக்கும் அப்போது அவனின் மேல் சந்தேகம் எழ வில்லை.



அதர்வின் மேல் அவ்வளவு கோவம். ஆனால் அதர்வ் சிறை சென்ற அன்று அவனிடம் மது அருந்தி கொண்டு இருக்கையில், அவன் அனைத்தையும் உளறி விட்டான்.



அப்போதே அவனை அடித்து கொன்று புதைத்து விட்டேன். தெரிந்தோ தெரியாமலோ என் மகளின் விஷயத்தை இப்படி ஒருவனிடம் சொல்லி அவளின் சாவிற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன்.



அதர்வ் இதற்கு காரணம் இல்லை. என் மகளிற்காக நீ அன்று சொன்ன சாட்சியை மாற்றி எழுத முடிந்தால் நிச்சயமாக அதை செய்.



நான் செய்த தவறை திருத்தி எழுதுவாய் என்று நம்புகிறேன்.



இந்த கடிதம் உன்னை அடையும் போது நான் இவ்வுலகில் இருக்க மாட்டேன்.



இப்படிக்கு

தாரக்."



என்று சாந்தினி படித்து முடிக்கவும், தளிரின் அழுகை சத்தம் அந்த மொத்த அபார்ட்மெண்டில் எதிர் ஒலித்தது.



"நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல ஒரு வாட்டி யோசினு இப்போ பாரு அந்த பையன் செத்தே போய்ட்டான். திருப்பி தர முடியுமா உன்னால?", என்று சாந்தினி கர்ஜிக்க, தளிரின் முகம் தாழ்ந்தது.



"இந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்களும் கிடையாது அதே மாறி கெட்டவங்களும் கிடையாது", என்று சாந்தினி சொல்லிவிட்டு, "இதோட என் கிட்ட பேசாத, என்னால நம்பவே முடியல என் தங்கச்சி ஒரு சாவுக்கு காரணம்னு... அந்த பையனோட அம்மா உன் கால்ல விழுந்து கெஞ்சுனாங்க நினைவு இருக்கா?", என்று சாந்தினி கேட்கவும், அவளால் பேசவே முடியவில்லை.



யாழ் தான் அவளை தேற்றினாள். ஆனால் அன்றிலிருந்து தான் தளிருக்கு தண்டனை ஆரம்பித்தது.



அன்று இரவு தீடிரென்று அவள் அலறவும், அவளின் பதிகத்தில் இருந்த யாழ் தான் எழுந்தாள்.



"என்ன டி ஆச்சு என்ன ஆச்சு?", என்று அவள் பதற்றமாக கேட்க, "அதர்வ் என்ன கொன்னுடாத கொன்னுடாத நான் போனது தப்பு தான் தப்பு தான்", என்று உறக்கத்தில் பிதற்றி கொண்டு இருந்தாள்.



"தளிர்", என்று அவளை உலுக்கி எழுப்ப, அப்போது எழுந்தவளிடன், தண்ணி தர, தண்ணியை பருகியவள், யாழை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.



"எனக்கு இன்னமும் என்ன அவன் கோர்ட்ல பார்த்த பார்வை நியாபகம் இருக்கு டி... இப்போ தான் அந்த பார்வைக்கான அர்த்தம் புரியுது... நீ என்னை கொஞ்சம் கூட புரிஞ்சிக்கலையா? என் சாவுக்கு நீ தான் காரணம்னு அவன் சொல்ற மாதிரியே இருக்கு டி... அடிக்கடி இஷானா சொல்லுவா அவனுக்கு உன்ன ஒரு சிஸ்டர் மாதிரி புடிக்கும்னு... நானே அவனை என் கையால கொன்னுட்டேனோன்னு தோணுது... கொலைகாரி மாறி பீல் பண்றேன்", என்று அவள் அழவும், யாழ் வார்தையாற்று நின்றாள்.



தளிர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா! ஒரு உயிர் அவளால் போய் விட்டதே!



தளிர் அவளின் புத்துணர்ச்சியை இழந்தாள். அவளின் முகம் சோர்ந்து போனது. சாந்தினி அவளின் முகத்தை கூட பார்ப்பது இல்லை.



யாழுக்கு மட்டுமே தெரியும்… தினமும் இரவு இதுவே தொடர்கதை ஆனதை!



ஆம் மனதளவில் அவள் பாதிக்க பட்டு இருந்தாள். அவளுக்குள் எப்போதும் ஒரு நடுக்கம் இருக்கும். அவள் செய்த பாவம் அவளை தூங்கவே விடுவதில்லை.



அவள் நிம்மதியாக தூங்கி எத்தனை நாட்கள் என்று அவளுக்கே தெரியாது.



மனநல மருத்துவரை நாடினாள். "இங்க பாருங்க நடந்தது நடந்து போச்சு. அந்த பையன் செத்ததுக்கு நீங்க மட்டுமே காரணம் இல்ல, அவனுக்கு சொசைட்டிய பேஸ் பண்ண தைரியம் இல்ல, நீங்க செஞ்சது தப்பு தான் ஆனா நீங்க மட்டுமே காரணம் இல்ல... உங்கள நீங்க மன்னிங்க எல்லாம் சரி ஆய்டும்", என்று அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் காற்றில் தான் காற்றில் தான் களைந்து போனது.



தளிர் உடலாலும் மனதாலும் தளர்ந்து விட்டாள்.



யாழால் தான் அவளை இப்படி பார்க்க முடியவில்லை. அந்த சமயத்தில் தான் தளிருக்கு காலிஃபோர்னியாவில் வேலை கிடைத்தது.



போகவே மாட்டேன் என்று சொன்னவளை அவளின் மனநிலையை கருத்தில் கொண்டு அனுப்பி வைத்தாள்.



அது அவளுக்கு மாற்றத்தை தரும் என்று நம்பி அனுப்பி வைத்தாள். ஆனால் அவளுக்கு கிடைத்த மன தண்டனையை தாண்டி உடளவிலும் வார்த்தைகளாலும் அவளை ஒருத்தன் பழி தீர்க்க போகிறான் என்பது தான் விதி!





தளிர் துளிர்ப்பாள் என்று நினைத்து கலிபோர்னியா அனுப்ப, அவள் துவளும் காலமும் வந்தது.





"தளிர்", என்ற அழைப்பில் நிகழ் காலத்திற்கு வந்து இருந்தாள் தளிர்.



அவிரான் தான் அழைத்து இருந்தான்.



"மென்டல்லி ரொம்ப டிப்ரஷனுக்கு போய்டியா அப்போ?", என்று அவன் கேட்கவும், "ஹ்ம்ம் டேப்ளெட்ஸ் கூட எடுத்துக்குட்டேன் ஒன்னும் செட் அகல", என்று அவள் சொல்லவும், அவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு மட்டுமே.



"இப்போ?", என்று அவன் கேட்கவும், "வீரோட சேர்ந்து இருக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறோம் எடுக்கறது இல்ல, கொஞ்சம் ஓக்கவா தான் இருந்தேன்... ஆனா", என்று அவள் செல்ல தயங்கவும், "கன்சிவ் ஆகுறதுக்கு முன்னாடி வரைக்கும் எடுத்திருக்க ரெயிட்?", என்று அவன் அவளை பார்க்க, மேலும் கீழும் தலை அசைத்தாள்.



சலிப்பாக தலையை ஆட்டி கொண்டான்.



"வீருக்கு நீ டிப்ரஷன்ல இருந்தது தெரியுமா?", என்றவனிடம், "இல்ல வெறும் அந்த லெட்டர் வரைக்கும் தான் சொன்னேன்", என்று அவள் சொல்லவும், "அத சொல்லிருந்தா அவன் உங்கிட்ட அப்படி நடந்து இருக்க மாட்டான்", என்று அவன் சொல்லவும், "என்ன சப்போர்ட்டா?", என்று கேட்கவும், "நான் நடுநிலை தான் மா, ஆனாலும் உன்கூட தான் எப்பவும் இருப்பேன் இது என்னோட ப்ரோமிஸ்", என்று சொல்லவும், புன்னகைத்தாள்.



"சரி மீதியை அப்பறோம் சொல்லு இப்போவே வேண்டாம்", என்று சொல்லிவிட்டு அவன் எழ, "யாருகிட்டயும் சொல்லிட மாட்டீங்களே?", என்று அவள் கேட்கவும், அவளை பார்த்து முறைத்தவன், "சொல்லலைனா என்ன கொன்னுடுவாங்க", என்று சொல்லிவிட்டு அவன் புறப்படும் போது, "இனி உங்கள எப்படி கூப்பிட்டதும்?", என்று கேட்டாள்.



"மாமான்னு கூப்பிடு", என்றவனை பார்த்து விழி விரித்து, "என்ன இப்போல்லாம் எல்லாரும் மாமான்னு கூப்பிட சொல்றிங்க", என்று அவள் கேட்க, "அதானே முறை", என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான்.



அடுத்து அவன் அழைத்து என்னவோ விக்டோரியா ரேவின் எண்ணிற்கு தான்.



"ஹலோ", என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் சொல்லி முடிக்க, அந்த பக்கத்தில் இருந்த நபர் சொல்வதையும் கேட்டவன், "ஆருஷ் லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம் மை பிரென்ட்", என்று சொல்லி சிரித்து கொண்டான் அவிரன்.
 
1730184952553.jpg
அத்தியாயம் 12



அடுத்த நாள் காலையில் தளிர் சற்று தாமதமாக தான் எழுந்தாள். மசக்கையின் காரணமாக அவளுக்கு இப்பொது சோர்வு சற்று அதிகமாக இருந்தது.



நேரத்தை பார்த்த பிறகு தான் "ஐயோ லேட் ஆகிருச்சே", என்று நினைத்து கொண்டே எழுந்து தயாராகி வெளியே வந்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.



அனைத்து வேலைகளையும் முடித்து வைத்து இருந்தான் அவிரன். அவளுக்கான காலை உணவு மற்றும் மதிய உணவையும் கூட பேக் செய்து வைத்து இருந்தான்.



"நீங்களே எல்லாம் பண்ணிட்டிங்களா?", என்று அவள் கேட்க, "ம்ம்… நீ டயர்ட்டா இருப்பனு நினைச்சி தான் நானே செஞ்சிட்டேன்", என்றவன் அவள் கைகளில் ஹெல்த் ட்ரின்க் கொடுத்து குடிக்க சொன்னான்.



"நான் போய் பிரெஷ் ஆகிட்டு வந்துடறேன், நீ சாப்டுட்டு இரு... சாந்தினி யாழ் கிட்ட பேசுறதா இருந்தா பேசிடு", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



அவளுக்கு யாழுடன் தான் பேச வேண்டும் போல் தோன்றியது.



யாழிற்கு அழைத்தாள், ஆனால் அவள் எடுக்கவில்லை.



"என்ன எடுக்க மாற்றா?", என்று நினைத்துக்கொண்டே இருக்கையில், அவிரனின் போன் அடித்தது.



யார் என்று பார்த்தவளுக்கு விக்டோரியா ரே என்று இருக்கவும், இவ்வளவு நாள் அந்த அழைப்பை எடுக்காமல் இருந்தவள், இன்று அவளே எடுத்தாள்.



"ஹலோ", என்று தளிர் சொல்ல, மறு புறம் இருந்து ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.



தளிரின் கண்கள் விரிந்தன. அதே சமயம் தான் அவ்விரனும் வெளியே வந்தான்.



தளிர் அவனை பார்க்க, அவனின் இதழ்களுக்கு அடியில் சிரிப்பு.



கண்களாலேயே அவளை பேச சொல்ல, அவளோ மாட்டேன் என்று தலை அசைத்தாள்.



அவனும் விடாப்பிடியாக மீண்டும் பேச சைகை செய்ய, ஒரு வழியாக பேச துவங்கினாள்.



"ஐ அம் பைன்", என்று துவங்கி முழு உரையாடலும் ஆங்கிலத்தில் தான் நடந்தது.



"எப்படி ஏன் கேர்ள் பிரென்ட்", என்று அவள் அழைப்பை வைத்ததும் அவன் கேட்க, ""ஜாடிக்கு ஏத்த மூடி தான்", என்று சொல்ல அவனும் சிரித்தான்.



"கிளம்பலாமா?", என்று அவளை பார்க்க, "போகலாம்", என்று சொல்லி எழுந்தவளை பார்த்து, "இன்னைக்கு மட்டர்னிட்டி டிரஸ் எடுக்க போகலாம்... ட்ரேஸ்லாம் டைட் ஆகிருச்சு போல உனக்கு", என்று அவன் சொல்லவும், "நானே சொல்லணும்னு நினைச்சேன் அ..", என்று ஆரம்பித்தவள், "மாமா", என்று முடித்து இருந்தாள்.



"உனக்கு என்னை மாமானு கூப்பிட கஷ்டமா இருந்தா, அவிரன் கண்டின்யு பண்ணிக்கோ", என்று அவன் சொல்லவும், "இல்ல பழக்கமாகிரும்", என்று அவள் சொல்லவும், சிரித்து கொண்டான்.



அன்றும் ஆருஷ் தளிருக்காக காத்திருக்க, வந்தது என்னவோ அவிரன் தான்.



"என்ன இவனே வரான், இன்னைக்கு அவ வருவான்னு அவங்க டிபார்ட்மென்ட் ஹெட் சொன்னாரே", என்று நினைக்கையில் அவனின் அருகில் வந்த அவிரன், "தளிரை நான் என் கேபின் பக்கத்துல ஷிப்ட் பண்ணிருக்கேன்", என்று சொன்னவுடன் ஆருஷிற்கு கோவம் விண்ணை கடந்து சென்றது.



"டேய் உனக்கு என்ன டா பிரச்சனை? சிவமே பரவால்ல போல, அட்லீஸ்ட் கண்ணால அவளை காட்டினான். நீ அவள பார்க்க கூட விட மாற்ற டா... உனக்கு என்ன தான் வேணும்?", என்று பற்களை கடித்து கொண்டு கேட்டான்.



"எனக்கு மதி தான் வேணும்", என்று அவன் சொல்லவும், அவிரனின் டாக்டர் கோட்டை இறுக பற்றி இருந்தான் ஆருஷ்.



"என்னை மிருகமா மாத்தாத அவிரன்", என்றவனின் கண்கள் நெருப்பை விட அனலை கக்கி கொண்டு இருந்தது.



"எதுக்கு கோவப்படற? இதுக்கே இப்படின்னா தளிர் என்னை மாமானு கூப்பிடறானு தெரிஞ்சா கார்டியோலோஜிஸ்ட்கே ஹார்ட் அட்டாக் வந்துரும் போலயே", என்று அவன் சொல்லவும், ஆருஷின் கைகள் அவனின் கோட்டை விட்டன.



"பொய் சொல்லாத... மதி உன்னை அப்படி கூப்பிட வாய்ப்பே இல்ல", என்று அவன் சொல்லவும், அவிரன் அடுத்த வினாடி அவனின் கைபேசியில் இருந்து தளிருக்கு அழைத்து இருந்தான்.



அவள் ஏற்றதும் ஸ்பீக்கரில் போட்டவன், "தளிர் ஈவினிங் ஷாப்பிங் போலாம் தான?", என்று கேட்க, "போலாம் மாமா... அதான் காலைலயே சொன்னேனே", என்று அவள் சொன்னதும், "சரி தளிர் ஜஸ்ட் கன்போர்மஷனுக்கு தான்", என்று சொல்லி வைத்து விட்டான்.



ஆருஷிற்கோ அவனின் இதயம் சுக்குநூறாக உடைவதை போன்ற உணர்வு.



"என்ன ஆருஷ் சார் இப்போ நம்புறீங்களா?", என்று அவன் நக்கலாக கேட்கவும், "நீ என்ன வேணா பண்ணிக்கோ ஆனா மதி என்னைக்குமே ஆருஷுக்கு தான்", என்று சொன்னவனின் குரல் சற்று தழுதழுத்தது.



"இன்னும் நம்புறியா?", என்று புருவம் உயர்த்தி கேட்டவனிடம், "என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு", என்று சொல்லி அவன் நகரப்போக, "அத தான் நீ கொன்னுட்டியே ஆருஷ்", என்று சொன்னதும் ஆருஷின் கால்கள் நின்றது.



"கொஞ்சம் யோசிச்சு நிதானமா நீ இருந்து இருந்தா இன்னைக்கு இந்த நிலைமைக்கு நீ வந்து இருக்க மாட்ட", என்று அவிரன் சொல்ல, ஆருஷின் கண்கள் கலங்கின.



"கூடவே பொறந்தவன் சாவுக்கு… என் மனசுல இருக்குறவ தான் காரணம்னு அவ வாயாலேயே கேட்குறது எவ்வளோ பெரிய வலின்னு அனுபவிச்ச எனக்கு தான் தெரியும் அவிரன்", என்று சொல்லும்போதே அவனின் நினைவுகள் அவனை பின்னு நோக்கி இழுக்க சட்டென சுதாரித்தவன் நிகழ்காலத்திற்கு வந்து விட்டான்.



"எனக்கு தெரியும் ஆருஷ். ஆனா அவளும் ஒன்னும் சந்தோஷமா இருக்காளா, ஷி வாஸ் இன் டிப்ரெஷன் உனக்கு தெரியுமா?", என்று அவன் கேட்கவும், அவனை உடனே திரும்பி பார்த்தான்.



"ஆமா ஷி வாஸ் இன் டிப்ரஷன். அது மட்டும் இல்ல உன் கூட இருந்த மூணு மாசமும் கூட அவ டிப்ரஷன் டேப்ளெட்ஸ் எடுத்துட்டு இருந்திருக்கா... இப்போ கன்சிவ் ஆனதும் தான் ஷி ஸ்டாப்பேட் இட்", என்று அவன் சொல்லவும், ஆருஷிற்கு உலகத்தை புரட்டி போட்டது போல் இருந்தது.



"நீ என்ன சொல்ற?", என்று கேட்டவனின் குரலில் இருந்த வழியை அவ்விரனும் உணர்ந்தான்.



"ஆமா ஆருஷ் அந்த லெட்டர் அவ படிச்சதுக்கு அப்பறோம் அவ டிப்ரஷன்ல இருந்திருக்கா அதுல இருந்து அவ வெளிய வரணும்னு தான் யாழ் அவள கலிபோர்னியா அனுப்புனா... இத நேத்து தான் எனக்கு தளிர் சொன்னா", என்று அவன் சொல்லவும், அவனுக்கு யாரோ இதயத்தை குத்தி கிழித்து வெளியே எரிந்தது போல் இருந்தது.



அவனுக்கு தெரியாது அல்லவா அவள் மனஉளைச்சலில் இருந்திருக்கிறாள் என்று!



இவ்வளவு நாள் அவன் செய்தது தப்பாக அவனுக்கு தோன்ற வில்லை. தன் தம்பியை கொன்றவள் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்கிற ஒரு கோவம் அவனுள் இன்று அளவும் இருந்ததது உண்மை. ஆனால் இப்பொது... அவள் உயிரோடு இருந்தும் நரகத்தை அனுபவித்து இருக்கிறாள் என்று கேட்கும் போது அவனுக்கும் வலித்தது.



"நீ உண்மையா தான் சொல்றியா?", என்று அவன் கேட்க, அவன் கைகளில் அவன் கொண்டு வந்திருந்த ரிப்போர்ட்ஸ் கொடுத்தவன், "நீயே பார்த்துக்கோ", என்று சொல்லி சென்று விட்டான்.



அவனின் கேபினுள் நுழைந்த ஆருஷ், அந்த ரிப்போர்ட்ஸ்களை திறந்து பார்க்க, அவனுக்கோ தலை விண்வினென்று வலித்தது.



எத்தனை பெரிய பாவம் செய்து விட்டான். அவள் செய்தது தெரியாமல் செய்த தவறு.. ஆனால் அவன் தெரிந்தே அவளின் உணர்ச்சிகளுடன் விளையாடி இருக்கிறான் அல்லவா!



எத்தனை முறை அவளை தொடும் போது, நீ ஒரு வேசி என்று கூறி இருக்கிறான் என்று அவனுக்கே தெரியாது.



அன்று வலிக்காதது, இன்று வலித்தது.



"டாக்டர், யுவர் பேஷண்ட் இஸ் வெயிட்டிங்", என்று தாதி ஒருவர் வந்து சொல்லவும், "எமெர்ஜெண்சி ஏதும் இல்லனா இன்னைக்கு எல்லா அப்பொய்ண்ட்மெண்டும் கேன்சல் பன்னிருங்க... ஐ அம் நாட் பீலிங் வெல்", என்று சொல்லிவிட்டு மருத்துவமனையில் இருந்து அவனின் வீட்டை அடைந்து விட்டான்.



உடனே ஆதர்ஷிற்கு தான் அழைத்து இருந்தான்.



"என்ன டா ஆச்சு இப்போ மறுமடியும் நாடு ராத்திரி கால் பன்னிருக்க?", என்று தூக்க கலக்கத்தில் அவன் பேச, "ஆதர்ஷ்", என்று சொல்லும்போதே அழுது விட்டான்.



ஆதர்ஷிற்கோ பதட்டமாகி விட்டது. அவனை கட்டி அணைத்து தூங்கி கொண்டிருந்த லாயவை நகர்த்தி அவன் படுக்கையில் இருந்து எழ, "என்ன ஆச்சு?", என்று லக்ஷித்தை அணைத்து தூங்கி கொண்டிருந்த சாந்தினி தான் வினவினாள்.



"ஒன்னும் இல்ல பசங்கள பார்த்துக்கோ... ஒரு இம்போர்ட்டண்ட் கால்", என்று அவளுடன் சிடுசிடுப்புடன் பேசிவிட்டு அறையை விட்டு வெளியே வந்து விட்டான்.



ஆருஷிற்கும் சாந்தினியின் குரல் கேட்டது.



"சாந்தினி உன் கூட இருக்காளா?", என்று அவன் யோசனையுடன் கேட்க, "லக்ஷித்கு உடம்பு சரியில்ல அதான் அவன் ரொம்ப அடம் பன்னதுனால இங்கயே ஸ்டே பண்ணிட்டா", என்று அவன் சொல்லவும், ஆருஷின் மனதிற்குள் ஏதோ ஒரு நிம்மதி.



"ஒரு தடவ நானும் மதியும் பேசிக்கிட்டோம், என் அண்ணாக்கும் உன் அக்காக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்னு... அது உண்மை ஆகிடும் போல", என்று அவன் சொல்லவும், "சாவடி வாங்க போர... இதுக்கு தான் நடு ராத்திரி கால் பண்ணியா டா?", என்று அவன் கோவமாக பேசினான்.



"சரி சரி", என்று ஆரம்பித்தவன் அவ்விரனுடன் நடந்த உரையாடலை கூற, "நாங்க மும்பைல தான் டா இருக்கோம் சிவம் மேரேஜ்காக வந்தோம்... அவன் கிட்ட பேசுனேன்... நானே உங்கிட்ட பேசணும்னு இருந்தேன்...அவிரன் கிட்ட எவளோ சொல்லிருக்கா தளிர்னு தெரியல ஆனா சிவம் கிட்ட எல்லாமே சொல்லிட்டா", என்று அவன் நிறுத்தியதும், ஆதர்ஷ் அடுத்து என்ன பேசுவான் என்று ஆருஷிற்கு புரிந்து விட்டது.



"நீ எல்லாம் மனுஷனா டா? ஐ அம் ஹயிலி டிசப்போய்ன்டெட். உன்ன கொல்ற அளவுக்கு ஆத்திரம் வருது... இன்னைக்கு நான் சாந்தினி கிட்ட கூட எதுவோம் பேசல, அவளே கேட்டா என்ன இன்னைக்கு என் கூட சண்டை போடாம இருக்கீங்கன்னு.. என்ன சொல்றது என் தம்பி உன் தங்கச்சிய எப்படி எல்லாம் கொடுமை பண்ணிருக்கானு எனக்கு தெரிஞ்சிருச்சு... எங்க மொத்த குடும்பமும் கால்ல விழுந்தா கூட மன்னிக்க முடியாத குற்றம்னு சொல்லவா முடியும்", என்று அவன் நிறுத்தி விட்டான்.



"ஆதர்ஷ்", என்று அவன் ஆரம்பிக்கவும், "இது மட்டும் அகல் ஜானவிக்கு தெரிஞ்சுதுனு வச்சிக்க, உன்னை கொலையே பன்னிரு வாங்க நினைவு இருக்கட்டும்... அதுவும் ஜானவி ஒருத்தி போதும்", என்று அவன் சொல்லவும், "டேய் யாரு கிட்டயாச்சு சொன்னியா?", என்று அவன் பதட்டமாக கேட்க, "இல்ல ஆதிக்கு கால் பண்ணேன் எடுக்கல", என்று அவன் சொல்லவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.



"என்னால ஜீரணிக்கவே முடியல ஆருஷ்... நானே தளிர் கிட்ட எப்படி பேசுறதுனு தெரியல... நீ பிஸிக்கல்லா இருந்ததுது கூட இப்போ சிவம் பெருசா பேசல, லவ் பன்னானு தெரியும்னு சொல்லி விட்டுட்டான்... ஆனா நீ அவள பேசுன வார்த்தைகள் தான் கேட்க கூட முடியல... சிவம் கேட்குறான் என்ன பாத்து நீயும் ஒரு பொண்ணு வச்சிருக்க தான நாளைக்கு அவள ஒருத்தன் இப்படி பண்ணா சும்மா இருப்பியான்னு? என்ன பதில் சொல்றது", என்று அவன் கெடக்கும் ஆருஷால் பதிலே பேச முடியவில்லை.



ஆதர்ஷும் ஆழந்த மூச்சை விட்டுக்கொண்டு, "அவ தெரியாம பண்ணா ஆனா நீ தெரிஞ்சே ரொம்ப மோசமா நடந்து இருக்க... எனக்கு தெரிஞ்சி நீ அவள விற்று ஆருஷ்", என்று அவன் சொல்லவும், "டேய் என்னடா இப்படி சொல்ற", என்று ஆருஷின் தொண்டையே அடைத்து விட்டது.



"அதான் நல்லது... உனக்கு இல்ல அவளுக்கு... ஷி டீசெர்வ்ஸ் பெட்டெர்", என்று அவன் சொல்லவும், "ஆதர்ஷ் நீயே இப்படி பேசுனா எப்படி டா", என்று அவன் கேட்கவும், "வேற என்ன சொல்றது சாந்தினிக்கு மட்டும் இது தெரிஞ்சிது வச்சிக்க...", என்று அவன் இழுக்கும் போதே, "என்ன தெரியணும்", என்ற குரலில் ஆதர்ஷ் திரும்ப அங்கு நின்று இருந்தாள் சாந்தினி.



"உண்மைய மட்டும் சொல்லுங்க என்ன நடந்தது", என்றவளின் குரலில் நீ சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டளை இருந்தது.



ஏனோ இப்பொது ஆதரஷால் உண்மையை மறைக்க முடியவில்லை. ஆருஷின் காலை அவனும் ஸ்பீக்கரில் போட்டு, அத்தனை உண்மைகளையும் அவன் சொல்ல, சாந்தினியின் கண்களில் கண்ணீர்.



"சாந்தினி", என்று ஆருஷ் அழைக்கவும், "என் தங்கச்சிய கொன்னு போட்டாலும் போடுவேன் ஆனா உனக்கு மட்டும் கல்யாணம் பண்ணி தர மாட்டேன் ஆருஷ் வீர்", என்று அழுத்தமாக அவள் கூறவும், ஆதர்ஷும் தலையை தேய்த்து கொண்டான்.



"நான் சொல்றத... ", என்று அவன் ஆரம்பிக்கவும், அவள் அங்கிருந்து நடந்து சென்று விட்டாள்.



"அவ போய்ட்டா டா", என்று ஆதர்ஷ் சொல்ல, "என்ன டா இது", என்றவனின் குரலும் உடைந்து விட்டது.



"எனக்கும் தெரியல டா... சரி நாளைக்கு ஆதி கிட்ட பேசலாம்... முடிஞ்சா ஜானவி அகல் இரண்டு பேரையும் தளிர் கிட்ட பேச சொல்றேன்", என்று சொல்லிவிட்டு அவன் வைத்து விட்டான்.



ஆருஷின் நிலை மோசமாக இருந்தது. அவனின் பக்கம் ஒருவரும் இல்லை, இருக்கின்ற மாதிரி அவனும் நடந்து கொள்ளவில்லை.



இங்கோ அவிரன், "அவனை இன்னும் வலிக்க வெக்கணும் இதெல்லாம் அவனுக்கு பத்தாது", என்று சொல்லிவிட்டு விக்டோரியா ரேவின் காலை துண்டித்து இருந்தான்.



ஆருஷிடம் இருந்து மதி நிரந்தரமாக பிரிந்து விடுவாளோ!
 
Top