Loading…
amzn.in
TEASER
கதிருக்குத் பழைய நினைவுகள் மெல்ல ஆனந்த ராகம் மீட்டியது.
'கலைந்த உடையோடு, தன் உணர்வுகளை ஏற்க முடியாமல், கண்களில் நீரோடு தன்னிடம் போராடியவளின் உருவம் மனக்கண்ணில் தோன்றியது.
தன்னிடம் எதிர்த்துப் போராடியவளின் செயல் , கூடலின் அழைப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அவளின் நிலையை உணர்ந்து இதழில் புன்னகையோடு அவளை விட்டவனிடம், அவள் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்னும் காதில் எதிரொலிக்கிறது.
'இதற்குத் தானடி இத்தனை நாளாகக் காத்திருந்தேன். இனி என்னிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்' என முணு முணுத்தவன் செயலில்.
"என்னடா , எதாவது ப்ளான் இருக்கோ கல்யாணத்தை நிறுத்த" என்றான் தருண்.
---------------------------------------------------------------------------------------------------
எல்லாத்துக்கும் மேலே மிகவும் அதிர்ச்சியானது தருண் மட்டும்தான். தன் மாமன் மகளை மனதில் சிறுவயதிலிருந்தே மனதில் வைத்து வளர்ந்தவன் ... அவள் வேறு ஒருவனைக் காதலித்துத் திருமணம் செய்து சென்றபோதும் கூடத் தன் காதலை வெளிக் காட்டாதவன் ... இன்று கைம்பெண்ணாகத் தன்முன் வந்து நிற்கும் அவளின் நிலையைக் கண்டு சொல்லொன்னாத் துயரத்தில் தவித்தான் .
ஊமைக் கண்டக் கனவாக, யாரிடமும் பகிராதவனின் காதல் செத்துவிட்டது என்று நினைத்திருந்தான் .
இன்று அவள் நிற்கும் நிலைக் கண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதின் ஓரம் வேகமும் ஆவலும் பிறந்தது . மறைந்த காதல் மெல்ல மெல்லப் பாலைவனத்திற்குக் கிட்டிய நீர் போலப் பூக்க ஆரம்பித்தது .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவன் கட்டிய தாலியைத் தாங்கியிருக்கும் அவள் நெஞ்சத்தில் கல்யேற்றியது போல் பாரமானது…
ரேணுகாவும் "ஆமாம் மது ப்ளீஸ்" என்று கேட்டதும் தட்ட முடியாமல் தினறினாள் மதுமிதா.
தன் நிலையை நினைத்து மதுமிதாவின் கண் சட்டென்று கலங்கிச் சிவந்ததைக் கண்டு கொண்டான் கதிர் வேந்தன்...
நடக்கும் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் கதிரின் தங்கை மித்ரா இல்லை…
இருவருக்கமான இந்தப் பனிப்போர் யார் கண்களுக்குத் தட்டுப் படவில்லை…
தன் கணவனின், திருமணத்தில் மணப்பெண் தோழியாக, தன் நிலையை நினைத்துத் துயரத்தில் நின்றாள் மதுமிதா…