எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயக் கூட்டில் காதல் பிறக்கிறதே (நாவல்)

Status
Not open for further replies.

Kavisowmi

Well-known member
இதய கூட்டில் காதல் பிறக்கிறதே.

1
லேசான தூறலாக ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்தது.

மொத்த பேருமே வீட்டுக்குள்ளே தான் குழுமி இருந்தனர்.

யாரிடமும் ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லை .

மிக மிக அமைதி நிலவியது. எல்லோர் மனதிலும் ஒருவித இறுக்கம் இருக்க.. அதைவிட இறுக்கத்தில் இருந்தான் ஜெகன்.

மாடியறையில் கோபமாக அமர்ந்திருந்தான்.

கண்கள் சிவந்து இருந்தது. யார் வந்து பேசினாலும் அடித்து துவம்சம் செய்யும் மனநிலையில் அமர்ந்திருந்தான்.

யாருமே அவனுக்கு அருகே செல்ல பயந்தனர் .

இங்கே கீழையும் நிறைய வேலைகள் பாக்கி இருந்தது.

இவன் வந்து இறங்கி செய்ய சொன்னால் மட்டுமே அடுத்த கட்ட வேலையை தொடர்வார்கள் என்கின்ற நிலையில் இருந்தது .

இவனோ அதிகாலையில் வந்தவன் .இதோ 10 மணி ஆகி இருக்கிறது .

அதே இறுக்கத்தோடு மாடியறையில் உழன்று கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து அவனுடைய தாத்தா பழனி அந்த அறைக்குள் பிரவேசித்தார்.

“ இன்னும் எத்தனை நேரம் இப்படியே இங்க முறைச்சிக்கிட்டு இருக்க போற.. ஜெகன் கீழ வந்து அடுத்த கட்ட வேலையை பார்க்கணும் இல்லையா .”

“எப்படி தாத்தா.. எப்படி இது பாசிபிள். அவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குது.

பிரச்சனை எங்க தான் இல்ல.. ஒன்னுமில்லாத ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படி வாழ்க்கையை முடிச்சுக்குவாரா..

எனக்கு அவரை பார்க்கும் போது அவ்வளவு கோபம் வருது.

நம்மகிட்ட என்ன இல்ல .எதுக்காக இப்படி ஒரு அவசர முடிவு”.

“ டேய் நடந்து முடிஞ்சிருச்சு .இனி அத பத்தி பேசி பிரயோஜனம் இல்லை .

அடுத்து நடக்க போறத பாக்கணும். நீ கீழ வந்தா தான் அடுத்து என்ன செய்யணுமோ அதை செய்வாங்க .”

“முடியாது தாத்தா .நிச்சயமா அந்த மனுஷனோட முகத்தை என்னால பார்க்க முடியாது.”

“ டேய் அங்க ஹால்ல படுக்க வைத்திருக்கிறது உன்னோட அப்பா டா .

இறந்தவருக்கு கடமையை செய்யணும் இல்லையா .”

“இப்ப இவர் எதுல குறைச்சு போயிட்டாரு ..நம்ம கிட்ட என்ன இல்லன்னு.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் .”

“என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல .தொழில்ல கொஞ்ச நாளா நஷ்டம் தான். எனக்கு நல்லா தெரியும் .

ஆனா அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல .நம்மகிட்ட இருக்கிறத அவங்களுக்கு கொடுத்துட்டு ரிலாக்ஸா இருடான்னு நிறைய முறை சொல்லிக்கொண்டு இருந்தேன்..

எதையுமே உன்னோட அப்பா கேட்கல. அவர் கொடுத்த பக்கம் எந்த பணமும் திரும்ப கிடைக்கலை.

வாங்குனவங்க எல்லாருமே ஏமாத்திட்டாங்க .அதுவே ஒரு மாதிரியான அழுத்தம் ஆயிடுச்சு .

நான் தான் போன முறையே உனக்கு போன் பண்ணி சொன்னேன்ல ..

உன்னோட அப்பாவோட நிலைமை சரியில்ல .நீ கொஞ்சம் அவசரமா இங்க வரணும்னு “.

“தாத்தா புரியுது தாத்தா . உடனே எப்படி வர முடியும் .நான் சொல்லிட்டு தானே இருந்தேன்.

இதோ பைனல் இயர் போய்க்கிட்டு இருக்கு . ஏற்கனவே கவனிக்கிற பிசினஸ் ஒரு பக்கம்..அது முடிக்கவும் உடனே வந்துருவேன்னு சொன்னேன். யூ எஸ் என்ன பக்கத்துலயா இருக்குது..தாத்தா ..”

“சரிடா சரி அதுக்காக இப்படியே இங்க இருந்தா ஆச்சுதா.. கீழ வா. உன் அப்பா முகத்தை கடைசியா பாரு .அழுகை வந்தா அழுதிடு .

இதுக்கு மேல என்ன சொல்றது. உனக்கு அப்பான்னா எனக்கு பையன் .

என்னாலையும் ஏத்துக்க முடியல .நேத்துல இருந்து உடைந்து போய் தான் இருக்கிறேன் .

இங்க இப்போ உனக்கு ஆறுதல் சொல்றதா.. இல்ல இறந்தவனை சந்தோஷமா அனுப்பி வைக்கிறதான்னே தெரியல “.

“எப்படி தாத்தா உயிரை விட்டுட்டு அவரால சந்தோஷமா போய் விட முடியுமா .

நம்மள பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தாரா.. நான் பல டைம் சொன்னேனே ..

யாருக்கு வேணும்னாலும் கொடுங்க ஆனா ஸ்ட்ரீட்டா திருப்பி வாங்க முடியும்னா மட்டும் கொடுங்கன்னு கேட்டேன் .

ஆனா எதையுமே செய்யல” என்று சொன்னவன் .சட்டென்று வேறு ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தான் .

“ஆபீஸ்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .என்ன கேட்டேன் உங்ககிட்ட..

யார் யாருக்கு அப்பா கடன் கொடுத்தார் என்று பார்த்து.. ஏதாவது டாக்குமெண்ட் இருந்தா உடனே இங்க கொண்டு வர சொல்லி இருக்கிறேன்.

சொல்லி நேரம் என்ன ஆச்சு .கிட்டத்தட்ட நான் இங்க வந்து மூணு மணி நேரம் தாண்டியாச்சு.

இது வரைக்கும் எந்த ரெஸ்பான்ஸ்சும் இல்ல. என்ன தான் செஞ்சுகிட்டு இருக்கீங்க “.

“ டேய் ஏன்டா ஏன் இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கிற.. இந்த நேரம் ..
இதெல்லாம் தெரியணுமா”.

“ நிச்சயமா தெரியனும் தாத்தா.. இன்றைக்கு அப்பா இல்ல அதுக்கு காரணம் ..அவர் கொடுத்த பணத்தை எல்லாத்தையுமே ஏமாத்தி இருக்காங்க.

யார் யார் ஏமாத்தி வாங்கினாங்கன்னு பார்த்து நான் அவங்க கிட்ட பணத்தை வசூல் பண்ணி ஆகணும்.

என் அப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும் .நான் சும்மா விடமாட்டேன் .

என்ன காசு பணம்னா சும்மாவா.. சும்மா தூக்கி கொடுத்துடுவாங்கன்னு நினைச்சாங்களா ..

இன்னைக்கு அப்பா இல்ல. அதுக்கான தண்டனையை கொடுத்தவர்கள் எல்லாருமே அனுபவிக்கணும் .

யாரையும் நான் சும்மா விட போறதில்லை .அவர்களே கொண்டு வந்து கொடுத்துட்டா பிரச்சனை இல்ல .

அதே நேரத்துல கொடுக்கலைன்னா மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன் .”

“டேய் இத்தனை கோவம்.. இத்தனை ஆக்ரோஷம் தேவையில்லை ஜெகன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு”.

“ முடியாது தாத்தா, இன்றைக்கு மொத்த டாக்குமெண்ட்டையும் பார்த்து எடுத்து வச்சுட்டு தான் கீழே வருவேன்.

அது எவ்வளவு நேரம் ஆனாலும் சரி” என்றவன் .மறுபடியும் அழைத்தான்.” சார் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன்.

இதோ வந்துகிட்டே இருக்கிறேன் . இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துருவேன் .”

“நேரா மாடிக்கு வாங்க அதுக்கு பிறகு மத்த காரியங்களை பார்ப்பீர்களாம்” என்று சொன்னவன். மறுபடியும் அங்கிருந்து இருக்கையில் அமர்ந்திருந்தான் .

கண்கள் சிவந்து இருந்தது. சொல்ல முடியாத வேதனை மனதில் இருக்க.. அந்த இருக்கும் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது .

இந்த சமயம் அவனது முகத்தை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலுமே சற்று பயப்படுவர்.

அந்த அளவிற்கு கோபத்தில் முகம் சிவந்து கண்கள் அனலாக தகிக்க.. ஒரு இடத்தில் அமர முடியாமல் உழன்று கொண்டு இருந்தான்.

அறைக்குள் அடைப்பட்ட புலியை போல அவனின் ஒவ்வொரு செய்கைகளையுமே பார்த்தவருக்கு பயம். உண்மையில் மனதில் தொற்றிக் கொண்டது.

தந்தையின் உதவியாளர் மொத்த பைல்களையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பையில்கள் கையில் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வர ..அதை பார்க்கமுமே இவனுக்குள் இன்னமும் கோபம் சுழற்றி அடித்தது .

“என்ன மனுசன் இந்த ஆளு.. யாரு என்ன கேட்டாலும் அப்படியே எடுத்து நீட்டிடுவாரா..

மொத்த சொத்தையும் இழந்துட்டு வாழ்வதற்கு வழியே இல்லாத மாதிரி உயிரை விட்டுட்டு என்ன சொல்றது..” என தலையை உதறிக்கொண்டான்.

இவனுடைய தந்தை நந்தகுமார் கிட்டத்தட்ட 50 வயது நெருங்கி இருந்தவர் .

தாயார் சிறுவயதிலேயே இறந்திருக்க இவனை ஆரம்பத்தில் இருந்து செல்லமாக நல்ல நண்பனை போல் வளர்த்தவர் .

படிப்பிற்காக என்று வெளிநாடு செல்ல.. எந்த மறுப்பும் செல்லாமல் அனுப்பி வைத்தவர்.

தாத்தா பழனி இவர்களோடு இல்லை

கிராமத்திலேயே பிறந்து வளர்ந்ததினால் அங்கிருந்து அவருக்கு வர மனம் இல்லை.

கிராமத்து வீட்டிலேயே தங்கி கொண்டார் . மகனையும் பேரனையும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதோடு சரி .

வருடத்திற்கு ஒருமுறை ஜெகனை அழைத்து தன்னோடு வைத்துக் கொள்வார் .

மகனின் மேலும் பேரனின் மேலும் நிறையவே பாசம் இருந்தது .ஆனால் ஏனோ இந்த நாகரீக சிட்டி வாழ்க்கை அவருக்கு பிடிக்கவில்லை.

அதனாலேயே இங்கே வந்து தங்குவதை தவிர்த்து வந்திருந்தார் .

ஒருவேளை நந்தகுமாரோடு வந்து தங்கி இருந்தால் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு இறப்பு நிகழ்ந்து இருக்காது. என்று மனம் கேள்வி கேட்க..

அவரும் கண்கள் கலங்கியபடி தான் அமர்ந்திருந்தது.

யாரிடம் என்ன சொல்வது எப்படி சமாளிப்பது எதுவுமே புரியவில்லை.

கொண்டு வந்த பைல்களை வேகமாக எடுத்து புரட்டிப் பார்த்தான்.

நந்தகுமாரை ஒரு வகையில் பாராட்டியே ஆக வேண்டும் .

கொடுத்திருந்த ஒவ்வொரு பணத்திற்குமே சரியாக டாக்குமெண்ட் போட்டு வாங்கி வைத்திருந்தார் .

பணம்தான் திருப்பி வரவில்லையே தவிர டாக்குமெண்டில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தது .

சிலது எல்லாம் சட்டப்படி ரெஜிஸ்டரும் செய்து வைத்திருந்தார் .

பார்த்தவுடன் முகம் லேசான புன்னகை தொற்றியது .

“என்னடா இத்தனை பிரச்சனையிலெயும் சிரிக்கிற” என்று பேரனை கேட்க ..

“அப்பா ஏமாந்தவர் தான் ஆனால் ஒரு விஷயத்துல கொஞ்சம் தெளிவா இருந்திருக்கிறார் .

யார் யாருக்கு என்ன கொடுத்திருக்கிறார்களோ சரியான டாகுமெண்ட்ட கரெக்டா வெச்சி இருக்கிறார் .

அந்த வகையில் பாராட்டலாம்.அதுக்காக அவர் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன்.

இந்த நிமிஷம் கூட அவரோட முகத்தை பார்க்க எனக்கு துளி கூட விருப்பம் இல்லை.

வாழ்க்கையில ஜெயிச்சவங்களை தலைக்கு மேல வச்சு கொண்டாடலாம் .ஆனால் தோற்றவர்களை பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறவன்..

அப்படி நினைக்கிற எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நான் நெனச்சு பாக்கல.”

“அப்படியெல்லாம் பேசக்கூடாது ஜெகன் .அவன் உன்னோட அப்பா .”

“ இல்லன்னு சொல்லலை தாத்தா .ஆனா இப்படி ஒரு காரியம் பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை” என்று சொன்னவன் மொத்த பைல்களையும் எடுத்து அங்கே இருந்த டிராவில் வைத்து பூட்டினான்.

சாவியை எடுத்து வைத்தவன் “சரி தாத்தா கீழே வாங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம் .

முடிவு எடுக்கிறது சுலபம்தான் ஆனால் அதை ஏத்துக்கிற பக்குவம் எனக்கு இல்ல.

அடுத்தடுத்து வேலை நடக்கட்டும் .நான் அவரோட முகத்தை பார்க்க மாட்டேன் தாத்தா .

நான் வாசல்ல வெயிட் பண்றேன் .என்ன செய்யணுமோ உங்க பையனுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை செஞ்சு முடிங்க .

பெத்த அப்பா என்கிற முறையில் தோள்ல சுமந்து எடுத்துட்டு வரேன் “என்று சொல்லிவிட்டு கோபத்தோடு கீழே இறங்கினான் ஜெகன்.

பேரனின் மனநிலை இவருக்கு நன்றாக தெரிந்தது.

அவன் கோபப்படுவதும் சரிதானே ..

அதிலும் அப்பாவும் மகனும் நண்பர்கள் போல தான் பழகியது.

மகனிடம் இதுதான் பிரச்சனை இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று கேட்டிருந்தால் கூட அவன் மொ
த்தத்தையும் விட்டுவிட்டு இங்கு வந்து இருப்பான்.

தந்தைமின் பிரச்சனைகளை சமாளித்து இருப்பான் .

இப்படி மொத்தமாக உயிரை விடுவது என்பது தவறு தானே..மனதிற்குள் நினைந்தபடியே சற்று சோர்வாக கீழே இறங்கினார் பழனி.
 

Kavisowmi

Well-known member
2

இதோ ஒரு வாரம் முடிந்து விட்டது.

நந்தகுமார் இறுதி காரியங்கள் முடிந்து..

இன்னமும் அந்த வீட்டில் இறுக்கம் அப்படியே இருந்தது.

ஜெகனின் முகத்தில் புன்னகை என்பதே மருந்துக்கும் இல்லை.

எப்போதும் எதையாவது ஒன்றை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

கம்பெனியின் மொத்த பொறுப்புகளையும் இவன் எடுத்து இருந்தான்.

பழைய வேகம் கம்பெனியில் துவங்கியிருந்தது .

சிறு சிறு கடன்களை கையில் இருந்த பணம் கொண்டு சரியாக கொடுத்து முடித்திருக்க…

புதிய புதிய ப்ராஜெக்ட்.. துவங்குவதற்கு பெரிய பெரிய பிளான்களை போட்டுக் கொண்டிருந்தான்.

கூடவே இன்னொன்றையும் மறக்கவில்லை .

தந்தை யாருக்கெல்லாம் கடனாக பணம் கொடுத்திருந்தாரோ அனைவரது பெயரையுமே தனியாக லிஸ்ட் எடுக்க ஆரம்பித்து இருந்தான்.

ஒவ்வொருவரிடமும் பிடிவாதமாக கேட்டு வாங்கிக் கொண்டு இருந்தான் .
கிட்டத்தட்ட இதுவரைக்கும் 10 பேருக்கு மேல் பணத்தை வாங்கி இருந்தான்.

அந்த பணமே அதிகமாக தான் வந்தது .

தந்தை யாருக்கெல்லாம் அவசரமாக கொடுக்க வேண்டும் என எழுதி வைத்திருந்தாரோ.. அதன்படி அவர்களுக்கு முதலில் பணத்தை கொடுத்து செட்டில் செய்து கொண்டிருந்தான்.

இவர்களுடைய பிசினஸ் கன்ஸ்ட்ரக்சன் ..

வீடுகளை கட்டி கொடுப்பது ஏற்கனவே நிறைய இடத்தில் இடங்களாக வாங்கி போட்டு இருக்க..

ஒவ்வொன்றையுமே பார்வையிட்டான். அதற்குரிய பிளான்களை தங்களது கம்பெனியில் உள்ள டீம்களிடம் கேட்டு வாங்கி அதற்கான வேலையை தொடங்கி இருந்தான்.

இயல்பு நிலைக்கு வந்ததாக தெரிந்தாலுமே அவன் இன்னமும் வந்திருக்கவில்லை.

அவனால் அவனுடைய தந்தையின் இழப்பை இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

யாரெல்லாம் அவனிடம் பணம் கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டு இருக்கிறார்களோ.. அவர்களுக்கு எல்லாமே இவனுடைய பாணியில் சரியாக பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்தான்.

நிறைய பேர் அதனை பார்த்து பயந்து மொத்த பணத்தையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றனர் .

“என்னோட சூழ்நிலை.. கொஞ்சம் பிரச்சனை .அதனால தான் என்னால டக்குன்னு பணத்தை ரெடி பண்ணி கொடுக்க முடியல.

ஐ அம் சாரி ஜெகன் .அதுக்காக நீங்க இப்படி எல்லாம் செய்யக்கூடாது .

ஆல்ரெடி எங்க பிசினஸ் இரும்பு சம்பந்தப்பட்டது .உங்களுக்கு தெரியும் தானே ..

மொத்த பேர்கிட்டேயும் ப்ரோடெக்டை கொடுக்காதீங்க என்கிற மாதிரி நீங்க கம்பெனி காரங்க கிட்ட பேசிட்டதா அங்க சொன்னாங்க.

சரியான நேரத்துக்கு வந்தா தான் என்னால திருப்பி பிசினஸ் பண்ண முடியும்.”

“ புரியுதுல்ல.. கடனாதான் வாங்குறீங்க .சில நாட்களில் திருப்பி தரேன்னு சொல்லி தான் பிசினஸ் பண்றீங்க .

அதே மாதிரி தானே என்னோட அப்பாவும் உங்ககிட்ட கொடுத்தாரு..

சரியான நேரத்துக்கு பணத்தை கொடுத்து இருந்தா இன்னைக்கு அவர் உயிரோட இருந்து இருப்பார் .

இதுக்கு எல்லாம் நீங்க என்ன சொல்ல போறீங்க”.

“ ஐ எம் சாரி ஜெகன் “சற்று தலை குனிந்து நின்று இருக்க.. அவரையே முறைப்படி ..

“சரி கிளம்பிக்கோங்க .ஆனா ஏற்கனவே பேசினது பேசினது தான் .

இதுக்கு மேல நான் எந்த பதிலும் சொல்றதா இல்ல .இதுக்கு மேல உங்களோட பிரச்சனை..

உங்களால பேசி சமாளிச்சு.. உங்களோட பிசினஸ் இம்ப்ரோவ் பண்ண முடியும்னா பண்ணிக்கோங்க .

ஆனா சொன்ன சொல்ல நான் மாத்தி சொல்ல மாட்டேன். கிளம்புங்க “என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஒவ்வொரு ஃபைலாக பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை அன்றைக்கு நடுவே இருந்த அந்த ஃபையில் விழுந்தது.

இவன் கைக்கு சிக்கியது அந்த ஃபைல்..கத்தையாக இருக்க எடுத்து பிரித்துப் பார்த்தான்..அது ஒரு வீட்டு பத்திரம்.

அதைப் பார்த்தப்படியே பேப்பரை நகர்த்த… கடைசியாக எழுதியிருந்த சில பேப்பர்களை எடுத்து படித்துப் பார்த்தான்.

கிட்டத்தட்ட கடன் வாங்கி ஒரு வருடங்களுக்கு மேலாக ஆகி இருந்தது.

இதுவரையிலும் வட்டியாக எந்த பணமும் கொடுத்து இருக்க வில்லை .

வட்டி போட்டால் மட்டும் இந்த நேரத்திற்கு அந்த வீடு இவர்களின் கைக்கு வந்திருக்கும் .

அந்த அளவில் வட்டி மட்டும் ஏறி இருந்தது.

யோசனையோடு ஒவ்வொரு பக்கமாக திருப்பி பார்த்தான். கிட்டத்தட்ட 10 சென்ட் அளவில் பெரிய வீடு அது.

பணம் ஏன் தரவில்லை எந்த தகவலும் இல்லை .

இது யாருடையது. என்ன? எது எதுவுமே தெரியவில்லை .

முத்து என்கின்ற பெயர் மட்டும் முன்னாள் இருந்தது.

வீடும் கூட அவரின் பெயரில் தான் இருந்தது .யோசனையோடு தன்னுடைய உதவியாளனை திரும்பி பார்த்தான்.

“இது யாரோடது..சொல்ல முடியுமா “என்று நீட்ட திருப்பி பார்த்தவர் .

“எனக்கு தெரியலையே தம்பி. இந்த பெயரே புதுசா இருக்கிறது.

இவர் பத்தி எதுவுமே தெரியலையே “என்று சொல்ல..

“ எனக்கு இவரு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வேணும் .

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பணத்தை வாங்கி இருக்கிறார் .

ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் திருப்பி கொடுக்கல.

மத்தவங்களை விடவும் கொடுத்த பணம் இவருக்கு ரொம்ப ரொம்ப அதிகம்.

கிட்டத்தட்ட அப்பவே 50 லட்சம் கொடுத்து இருக்கிறார் .

இதுக்கு என்ன அர்த்தம் .வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கல .

வட்டி கொடுக்காட்டி கூட பரவால்ல .அசலையாவது கொடுத்து இருக்கணும் .

அதையும் செய்யல .இந்நேரத்துக்கு வீட்டு பத்திரம் அப்பாவோட பேர்ல மாறி இருக்கணும் .

அதையும் செய்யல. என்ன அப்பாவை ஏமாத்துன ஆட்கள்ல இந்த ஆள் கொஞ்சம் மோசம் போல இருக்குது .கரெக்டா எனக்கு சொல்லணும் “.

“சரி தம்பி .ஒரு நாள் டைம் கொடுங்க .நான் விசாரிச்சு சொல்றேன்.”

“ நண்பர்கள்ல யாராவது ஒருத்தரா இருப்பாருன்னு நினைக்கிறேன்.”

“ யாரா இருந்தாலும் சரி ஆனா இந்த மாதிரி ஒரு ஆள் அப்பாவோட இறுதி காரியத்துக்கு வந்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை .”

“உண்மைதான் தம்பி நான் கவனிச்சேன் .இந்த பேர்ல யாரும் இல்ல . பார்க்கலாம் விசாரிக்கிறேன்.”

“வீட்டு அட்ரஸ் இருக்கு இல்லையா .நேரா அந்த ஊருக்கே போயி விசாரிச்சுட்டு வந்துருங்க .

அவர் என்ன பண்றாரு .இப்ப என்ன நிலைமையில் இருக்கிறார் .எல்லாத்தையுமே விசாரிச்சிட்டு வாங்க .

கூடவே முடிஞ்சா ஒருமுறை போய் ஞாபகப்படுத்திட்டு வாங்க.

இது மாதிரி ஏற்கனவே பத்திரத்தை கொடுத்து இருக்கிறீங்க .

இதுவரைக்கும் பணம் கட்டல இது பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேளுங்க.

உங்களால முடியாத பட்சத்தில் வீட்டை மாற்றி எழுதிக் கொடுக்க தயாரா இருங்கன்னு சொல்லிட்டு வாங்க .”

“சரி தம்பி ..சரி சொல்லிடுறேன்.”

“அங்க பேசி முடிச்சுட்டு வந்த பிறகு என்ன வந்து பாருங்க.

நான் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் .

ஆனால் வந்த சொன்னவரின் தகவல் கேட்டதும் இவனுக்கு கோபம் தான் அதிகமாக வந்தது.

ஏனென்றால் அங்கே யாரை பார்க்க சென்றாரோ அவர் சற்று மரியாதை எதுவும் கொடுக்கவில்லை.

இவனுடைய உதவியாளருக்கு.. கூடவே அதற்கான ஆதாரம் இருக்குதா என்று கொஞ்சம் திமிராகவே கேட்டதாக வந்து சொல்ல..

மொத்த கோபமும் அந்த முத்துவின் மேல் திரும்பி இருந்தது .

யோசிக்கவே இல்லை அப்போதே அந்த நிமிடமே புறப்பட்டிருந்தான்.

‘ எவ்வளவு தைரியம் ..எவ்வளவு திமிரு. யாரு என்ன எதுன்னு கேட்காம எவ்வளவு திமிராவா பதில் சொல்லுவாங்க.

இனி நான் பார்த்துக்கறேன்.”
கோபமாகத்தான் முத்துவை பார்க்க கிளம்பியது .

இவன் சென்று அவர்களது வீட்டு வரவேற்பையில் அமர்ந்திருக்க.. முத்து வருவதற்கான அடையாளமே தெரியவில்லை .

“அந்த ஆள் இங்க இருக்கிறானா இல்லையா.. என்னதான் நினைச்சுகிட்டு இருக்கேன் .

எனக்கு வேலை இல்லயா.. எனக்கு எத்தனையோ வேலை இருக்குது .

அத்தனையையும் விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கிறேன் .

எனக்கு என்ன தலை எழுத்தா “கொஞ்சம் கோபமாக உதவியாளரிடம் கடிந்து கொள்ள ..

“சார் வந்துருவாங்க .5 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க” என்று சொன்னவன் .மறுபடியும் அவரின் நம்பருக்கு அழைத்தான் .

“வெளியூர்ல கோயிலுக்காக போயிருந்தேன். திரும்பி வந்து கொண்டிருக்கிறேன் . இன்னும் அரை மணி நேரம் ஆகும் சொல்லி இருப்பாங்களே “என்று சொல்ல ..

“எங்களுக்கு அதெல்லாம் தெரியாது நாங்க இங்க வந்து அரை மணி நேரமா காத்திருக்கிறோம். சீக்கிரமா வர பாருங்க “என்று சொல்லிவிட்டு கட் செய்தார்.

“சார் வந்துகிட்டு இருக்காங்களாம். இன்னும் பத்து நிமிஷத்துல வர்றதா சொல்லி இருக்காங்க .’

“எத்தனை பத்து நிமிஷம்.. காலையில வந்து எவ்வளவு நேரம் ஆயிடுச்சு .

உனக்கு தெரியலையா “என கோபமாக சொன்னபடியே அமர்ந்து இருக்க..

கிட்டத்தட்ட மறுபடியும் அரைமணி நேரம் தாண்டிய பிறகு வந்தவர் .சற்று படபடப்பாக தான் இவனை வந்து பார்த்தது .

“வணக்கம் சார் .வாங்க வாங்க உட்காருங்கள்” என்று சொல்ல..

“ நான் வந்து உட்கார்ந்து கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாண்டிடுச்சு.

இந்த நிமிஷம் வரைக்கும் வரல. என்ன தான் உங்க மனசுல நினைச்சுகிட்டு இருக்கீங்க .

இந்த பத்திரத்தை பத்தியாவது தெரியுமா “என சொன்னபடியே ஏற்கனவே கொண்டு வந்திருந்த டாக்குமெண்டின் நகலை எடுத்து அவர் முன்னால் போட்டான் .

வேகமாக எடுத்து பார்த்தவர் சற்று தலை குனிந்த படி ..”ஆமாம் முன்னாடி வாங்கின பணம் தான் .ஆனா என்னால கொடுக்க முடியலை..

பிசினஸ்ல கொஞ்சம் லாக்..வெளியே வர முடியல .நிறைய லாக் ஆயிட்டேன் பிசினஸ் லாஸ் ஆயிடுச்சு.

அந்த டைம் தான் உங்க அப்பா கிட்ட இந்த பணத்தை வாங்கினது.

இப்ப நந்தகுமார் எப்படி இருக்கிறார்”என்று கேட்க அவரின் முகத்தையே கோபத்தோடு பார்த்தான் .

“மொத்த பேருக்குமே இது போல பணத்தை அள்ளி அள்ளி கொடுத்தா என்ன ஆகும் .

அந்த மனுஷன் நல்லா இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ..

இன்றைக்கு அவர் உயிரோட இல்ல. அவர் இறந்து முழுசா பத்து நாளைக்கு மேல தாண்டிருச்சு .”

“அச்சச்சோ எப்படி தம்பி “.என பதறி கேக்க ..

“போதும் உங்களோட எந்த பதட்டத்தையும் ,நடிப்பையும் நான் பார்க்க வரல .

எனக்கு தேவை என்னோட பணம் .50 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கீங்க .

இன்னைக்கு வட்டியோட கிட்டத்தட்ட அறுபது லட்சம் தாண்டியாச்சு .

எனக்கு பணம் உடனே வேணும் ஒரு மாசம் தான் டைம் .

அதுக்குள்ள நீங்க பணத்தை மொத்தமா ரெடி பண்ணி கொடுக்கிற வேலையை பாருங்க .

அதை சொல்றதுக்காக தான் வந்தேன். ஒருவேளை உங்களால கொடுக்க முடியலன்னா ..

நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் .இந்த பத்திரம் நகல் எல்லாமே கோர்ட்ல ப்ரடியூஸ் பண்ணுவேன் .

நீங்களே வீட்டை காலி பண்ணி கொடுக்க வேண்டியதா வரும் .

என்ன பண்ணனும்னு முடிவு எடுத்துக்கோங்க
..

“ தம்பி ப்ளீஸ் ..நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க .எனக்கு இருக்கிறது ஒரு வீடு மட்டும் தான்.

இதை விட்டா என்கிட்ட எதுவுமே இல்ல .இருக்கிறது இந்த ஒரு வீடு தான் .
இதையும் விட்டுட்டா எப்படி!”.

“ அதுக்காக நான் தலையில துண்டை போட்டுட்டு போக முடியுமா ..

இதெல்லாம் கேக்குறதுக்கு நல்லா இல்ல .எனக்கு என்னோட பணம் வந்தே ஆகணும் .

நான் கேட்கிறது அதுதான் ரெடி பண்ண முடியுமா முடியாதா..

அதை தவிர நான் எதையும் கேட்க தயாராக இல்லை .

அது உங்களோட பிரச்சனை.. நீங்க பணப்பிரச்சனைல இருக்கீங்களா ..இல்ல பணத்தை பத்திரப்படுத்தி வச்சிட்டு உட்கார்ந்திருக்கிறீர்களா..

எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது .எனக்கு தேவை என்னோட பணம்.

அதை தவிர நான் எதையும் கேட்க தயாராக இல்லை.

என்னோட பணம் வரணும் .அதை தவிர நான் எதையும் கேட்க தயாராக இல்லை.”

“சட்டுனு வந்து இப்ப கேட்டா நான் என்ன பண்ணுவேன். என்கிட்ட எதுவுமே இல்ல. சொன்னா புரிஞ்சுக்கோ தம்பி “சற்று பதட்டமாகத்தான் அவர் பேசியது.

அவரின் முகத்தை பார்த்தவன் “இந்த பேச்செல்லாம் இங்க ஆகாது .முத்து புரியுதா …

என் அப்பா இன்னைக்கு உயிரோட இல்ல .அதுக்கு காரணம் என்ன தெரியுமா..

கையில பணம் இல்லாதது. கொடுத்த பணம் எதுவுமே கைக்கு வரவில்லை.

கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்ல கொஞ்சம் லாஸ் ..அவரால தாங்க முடியல .

தற்கொலை பண்ணிக்கிட்டாரு.. இன்னைக்கு அந்த மனுஷன் உயிரோட இல்ல .

அதுக்கு காரணம் என்னன்னு நினைக்கிறீங்க உங்கள
போல ஆட்களுக்கு பணம் கொடுத்து லாக் ஆனதாலதான் .

அதனால நிச்சயமா நான் யாரையும் மன்னிக்க மாட்டேன்.

எனக்கு தேவை என்னோட பணம் .எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ ரெடி பண்ணுங்க. இப்ப நான் கிளம்புறேன் “என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். சற்று திகைப்போட அமர்ந்திருந்தார் முத்து.
 

Kavisowmi

Well-known member
3
இவன் புறப்பட்ட நான்கு மணி நேரம் கழித்து இவருடைய மகள் இவருக்கு அருகே வந்து அமர்ந்தாள்.
“ என்னப்பா போன் பண்ணினா போன் அட்டென்ட் பண்ணவே இல்ல .
திரும்பத் திரும்ப கூப்பிட்டு பார்த்து நானே கிளம்பி வந்துட்டேன் .
என்ன ஆச்சு ஏன் போன்னை அட்டென்ட் பண்ணல. “ என கேட்டபடி வர ..
சற்று நிமிர்ந்து மகளைப் பார்த்தார்.
“என்னப்பா என்ன ஆச்சது. ஏன் அப்படி பாக்குறீங்க .”
“இல்லமா வந்து எப்ப வந்த..”
“ சரியா போச்சு ஹாஸ்டல்ல அடுத்த ரெண்டு நாள் லீவு தானே ..
என் கூட வந்து தங்கனும்ணு நீங்க தானே போன் பண்ணி இருந்தீங்க .
இப்போ இப்படி கேட்டா என்ன அர்த்தம் .நான் வரணுமா வேணாமா”.
“ இல்ல அப்படி இல்லடா நீ உள்ள வா .”
“எதுக்காக இவ்வளவு டல்லா இருக்குறீங்க .தெரிஞ்சுக்கலாமா”.
“ இல்லம்மா வந்து..”
“ என்னப்பா என்ன ஆச்சு”
“ இல்லடா ஒன்னும் இல்ல பார்த்துக்கலாம் விடு “என்று சொல்லிவிட்டு சற்று சோர்வாக நடப்பது போல தோன்ற யோசனையோடு அமர்ந்தாள் சாரா .
சாரா 21 வயது பருவ மங்கை இளமை, குறும்பு,ரகளை என பூத்து குலுங்கும் பூஞ்சோலையைப் போல இருப்பவள்.
எப்போதுமே இவளுக்குன ஒரு நட்பு வட்டம் உண்டு.
இவள் இருக்கின்ற அந்த இடம் எப்போதுமே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
எதைப் பற்றியும் கவலை கிடையாது.
துரு துருவென எதையாவது செய்து கொண்டிருப்பவள்.
நிறைய நேரம் செய்யும் செயல் ஏதாவது ஒரு விபரீதத்தில் விட.. எளிதாக ஏதாவது ஒன்றை சொல்லி தப்பித்து விடுபவள். இப்படித்தான் இவளுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவள் இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும்.
அதனாலேயே இவளுக்கு நட்பு வட்டத்தில் ஆட்கள் மிக மிக அதிகம்.
எதையுமே யோசிப்பது கிடையாது.
இது தவறா சரியா.. இது சரியாக வருமா.. இதை செய்யலாமா இந்த யோசனைகள் எப்போதுமே கிடையாது .
என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்பவள்.
அதனாலேயே பல நேரங்களில் பிரச்சனையில் சிக்கிக் கொள்பவள்.
அதே நேரத்தில் பேச்சு திறமையால் எளிதாக அந்த பிரச்சனைகளில் இருந்தும் வெளியே வந்து விடுபவள்.
இப்போதும் செல்கின்ற தந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
ஆனால் என்ன என்று தான் இது வரையிலும் புரியவில்லை .
தந்தையின் தொழில் இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் .
ஒரு இடத்தில் வாங்கி இன்னொருவருக்கு சற்று அதிக விலைக்கு விற்பவர்.
நகரின் பிரதான இடத்தில் குடோன் வைத்திருக்க சற்று பிசியாக இருக்கக் கூடியவர்.
இன்று வரையிலும் ஏதாவது பிரச்சனையில் இருக்கிறாரா என்று கேட்டால் இவளுக்கு துளி கூட தெரியாது .
ஏன் இவளுக்கு தெரிவது போல எந்த ஒரு பிரச்சனைகளையும் கொண்டு வந்து சொன்னது இல்லை .
தாயில்லாத மகள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவருடைய தாரக மந்திரம் .
அதனாலோ என்னவோ என்ன பிரச்சனை வந்தாலுமே இவளிடம் எப்போதுமே வாயைத் திறந்து சொன்னது கிடையாது.
‘இவருக்கு இதே வழக்கமா போயிடுச்சு .எல்லாரையும் நம்ப வேண்டியது .
ஏதாவது கேக்குறாங்கன்னா கரெக்டா பணத்தை வாங்கிட்டு பொருளை அனுப்புற வழக்கமே கிடையாது .
முகம் தயவு தாட்சனை என்று பார்த்து எதுலையாவது சிக்கிக்க வேண்டியது .
பின்னாடி இப்படி தான் கையில காசு இல்ல.
சரியான நேரத்துக்கு வரல. அங்க கொடுக்கணும் இங்க கொடுக்கணும்னு புளம்ப வேண்டியது .’தனக்குள் பேசிய படியே எழுந்து மறுபடியும் தந்தையைக் காண சென்றாள்.
தந்தை அவருடைய ரூம்பிற்குள் சென்றவர் அமைதியாக அமர்ந்திருக்க..
இரண்டு நிமிடம் வாசலுக்கு வெளியே நின்றவள். “அப்பா உள்ள வரலாமா “என குரல் கொடுக்க ..சட்டென சுதாகரித்தவர்.” உள்ள வர்றதுக்கு என்கிட்ட நீ பர்மிஷன் கேட்கணுமா என்ன? என்று கேட்க ..
வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
“ அப்பா என்னப்பா ஏதாவது பிரச்சனையா.. சொன்னாதானே தெரியும்.
எதையுமே என்கிட்ட இருந்து மறைக்காதீங்கப்பா .உங்களோட சோர்வான முகம் எனக்கு ரொம்ப பயத்தை தருது தெரியுமா .
பிரச்சனை இல்லன்னா உடம்புக்கு ஏதாவது செய்யுதா..
அதனாலதான் இப்படி இருக்கிறீர்களா..
அப்படின்னாலும் சொல்லுங்க எனக்கு இருக்கிறது நீங்க மட்டும் தானே ..
உங்களுக்கு ஏதாவதுன்னா என்னால தாங்க முடியாதுப்பா.” என்று சொல்ல ..
“இல்லடா அதெல்லாம் ஒன்னும் இல்ல .உடம்புக்கு என்ன அது கல்லு மாதிரி ரொம்ப நல்லா தான் இருக்குது .”
“அப்புறம் ஏன் பா இப்படி இருக்கீங்க. என்ன தான் உங்களை சுத்தி நடக்குது சொல்லுங்க .சொன்னாதானே தெரியும் “.
“வந்து டா.. இப்போ ஒரு வருஷம் முன்னாடி கொஞ்சம் பண பிரச்சனை இருந்தது.
அப்போ இந்த வீட்டு பத்திரத்தை வைத்து அம்பது லட்ச ரூபா வாங்கினேன் .”
“அப்பா என்னது ₹50 லட்சம்மா.. சரிப்பா ..அது.. அதுக்கு இப்ப என்ன ?
என்ன ஆச்சு “.
“பணத்தை கொடுத்தவங்க பிடிவாதமா இப்ப வேணும்னு கேட்டுகிட்டு இருக்காங்க.
வட்டியோட கேட்டுகிட்டு இருக்காங்க .ஆனா என்கிட்ட இப்போ அந்த அளவுக்கு பணம் இல்ல .
அதுதான் ரொம்ப தயக்கமா இருக்குது “.
“சரிப்பா அந்த பணம் வாங்கினது சரி.. என்ன பண்ணுனீங்க .எப்படி செலவு பண்ணீங்க .
உங்களுக்கு அந்த அளவுக்கு பணம் செலவாக எந்த வேலையும் இல்லையே .”
“கரெக்டு தான் டா…உனக்கு தான் தெரியுமே .இரும்பு மொத்தமா கேட்டாங்கன்னு அனுப்பி வச்சேன்.
அந்த பார்ட்டி என்னை ஏமாத்திட்டாங்க. எங்க போனாங்க எங்க இருக்காங்க எதுவுமே தெரியல .
பெரிய மோசடி நடந்துருச்சு. எனக்கே தெரியல .எப்படி நான் இப்படி போய் சிக்கினேனு..
பொருள் வாங்கினவங்கிட்ட பணத்தை கொடுத்தாகணும் இல்லையா .
அந்த நேரம் ரொம்ப அவங்க நெருக்கடி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க .
அந்த டைம்ல தான் நான் பணம் வாங்கினேன்.”
“ சரிப்பா அதுக்கு இப்ப என்ன ஆச்சு .உங்களோட சிட்டுவேஷனை சொல்ல வேண்டியது தானே .”
“கரெக்ட் தான் ஆனால் கேட்கிற நிலையில இப்ப அவங்க இல்லையே..
ஏன்னா நான் வாங்கினவர் இப்போ உயிரோட இல்ல. இறந்துட்டாரு .
அவரோட பையன் தான் மொத்த பொறுப்பை எடுத்து நடத்துறாங்களாம் .சோ வந்தவன் ரொம்ப பிடிவாதமா பணத்தை கேட்டுட்டு போயிருக்கிறான் .
அதுதான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
உனக்கு தான் தெரியுமே.. சாரா இருக்கிறது இந்த ஒரு வீடு தான் .
அம்மா ஞாபகார்த்தமா இது மட்டும் தான் மிச்சம் வச்சிருக்கிறேன் .
இதையும் விட்டுட்டு… ஏதேதோ யோசனை அதுதான் எனக்கு ஒரே கவலையா இருக்குது.”
“ அப்பா ஏம்பா நீங்க இன்னும் கொஞ்சம் டைம் கேளுங்க .இன்னொரு வருஷமுமோ ஆறு மாசமோ ஆகும் ..அது வரைக்கும் எனக்கு டைம் கொடுங்கன்னு கேளுங்க .
உங்க பிரச்சினையை சொல்லுங்க.”
“ கரெக்டுடா சொல்லி கேட்கலாம் .ஆறு மாசமோ ஒரு வருஷமோ கழிச்சு திருப்பி கொடுக்குறதுக்கு நம்மகிட்ட பணம் வேணும் இல்ல .
என்கிட்ட இப்போதைக்கு அந்த அளவுக்கு இல்ல. அதிகபட்சம் எல்லாத்தையுமே வித்தா கூட ஒரு 20 லட்சம் தேறும் .”
“அப்பா என்னோட நகை எல்லாத்தையும் வித்துட்டா எவ்வளவு தேறும் “
“.அது எதுக்குடா கேக்குற ..”
“ப்ளீஸ் சொல்லுங்க .”
“அதை வித்தாலும் அந்த அளவுக்கு ரெடி ஆகாதுமா.. அதிகபட்சம் வேணும்னா ஒரு 30 லட்சம் ரூபா சரி பண்ணலாம்.
மிச்ச 20 லட்சம் ..அது மட்டும் இல்லாம இந்த ஒரு வருஷத்துக்கு கொடுக்க வேண்டிய வட்டி ..
யோசிச்சா எனக்கு பைத்தியம் பிடிக்கிறது மாதிரி இருக்குது.
எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல .”
“என்னப்பா ..இப்ப இதுக்கு தீர்வு தான் என்ன? ஏதாவது ஒரு வழி இருக்கணும்ல “.
“ஏமாத்துன அந்த பார்ட்டி எங்க இருக்கிறாங்கன்னு தேடிகிட்டு இருக்கேன் டா .
எனக்கு சரியா தெரியல கிடைப்பார்களா இல்லையான்னு தெரியவில்லை.
இப்பொழுது இந்த பிரச்சனை வேற ..அது ஒரு மாதிரி ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்குது.
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல .பயமா இருக்குதுடா “.
“அப்பா ரொம்ப பிரச்சினையா இருந்தா யோசிக்கவே வேண்டாம் .
இந்த வீட்டை வித்திடலாம். இது நல்ல விலைக்கு சேல் ஆகும் இல்லையா .
அவங்களோட கடனை கொடுத்துட்டு நம்ம இதே அளவுக்கு இல்லாட்டி கூட நமக்கு சின்னதா ஒரு வீடு போதும் .
உங்களுக்கும் எனக்கும் மட்டும் தானே ..நம்ம பார்த்துக்கலாம் “.
“அப்படி இல்லடா சென்டிமென்ட்டா உன் அம்மா இந்த வீட்ல தான் வாழ்கிறான்னு இந்த நிமிஷம் வரைக்கும் நினைச்சுகிட்டு இருக்கேன்.
ஒவ்வொரு இடத்திலேயும் உன்னோட அம்மாவோட ஞாபகங்கள் இருக்குது.
உன்னை தூக்கி விளையாண்டதிலிருந்து…அவளை கல்யாணம் ஆகி முதல் முறை இந்த வீட்டுக்குள்ள வந்ததுன்னு நிறைய நினைவுகள் இந்த வீட்ல இருக்குது .
என்னால அதை விட்டுட்டு போக முடியுமான்னு யோசிக்க முடியல.
ஏதேதோ யோசனை சரிடா நீ போ பாத்துக்கலாம்” என்று சொல்ல …
“அப்பா ப்ளீஸ் பா நீங்க வருத்தப்படாதீங்க .நீங்க வருத்தப்பட்டா என்னால தாங்க முடியல .
ஏதாவது ஒரு வழி கிடைக்கும். “.
“நானும் அதாண்டா நம்புறேன். சரி போ “என்று அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் வழக்கம் போல சாரா தன்னுடைய ஹாஸ்டலுக்கு புறப்பட்டு இருந்தாள்.
தந்தையை இப்படியே விட்டு விட்டு செல்வது சற்று வருத்தமாகத்தான் இருந்தது.
மிகவும் சோர்வாக தெரிந்தார். அருகே வந்தவள் “அப்பா உங்களோட உடம்பை கவனிச்சுக்கோங்க .
எனக்கு இருக்கிறது நீங்க மட்டும்தான் .இப்ப நான் ஹாஸ்டலுக்கு போய் ஆகணும்.
உங்களுக்கு தான் தெரியுமே.. கடைசி செமஸ்டர் வருது. இது முடிச்சா அதுக்கப்புறம் உங்க கூட வந்து நிரந்தரமா தங்கிக்குவேன்.
எதுவுமே தீர்க்க முடியாத பிரச்சினைன்னு எதுவுமே கிடையாது .
கொஞ்சம் யோசிக்கலாம். இன்னும் வேற யாராவது பணம் தரணுமா இல்ல வேற ஏதாவது முடியுமான்னு யோசிங்க .
நமக்கு நல்லதே நடக்கும். தேவையில்லாம யோசிச்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க.
நேற்றைக்கு விடவும் இன்னமும் சோர்வா தெரியறீங்க .
எனக்கு உங்கள பார்க்கும்போது பயமா இருக்குது .” என்று சொல்ல..
“ இல்லை மா..எனக்கு நீ இருக்கிற.. எனக்கு அந்த தைரியம் நிறைய இருக்குது .
எனக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது .நீ தைரியமா போயிட்டு வா “என்று அனுப்பி வைக்க தந்தையின் முகமே இவளின் நினைவுகளில் நின்றது.
 

Kavisowmi

Well-known member
4

சரியாக பத்து நாட்கள் கழித்து.. ஹாஸ்டலில் இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை .

தந்தையை பார்த்தால் நலமாக இருக்கும் என்று தோன்ற வேகமாக புறப்பட்டு இருந்தாள்.

நேராக வீட்டிற்கு வர வீடு பூட்டி இருந்தது .

தந்தை இந்த நேரத்தில் ஆபீஸில் அமர்ந்திருப்பார் என்பது புரிய வேகமாக ஆபீசை நோக்கி சென்றாள்.

தந்தைக்கு உதவியாக இருவர் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தனர் .

ஒருவர் சற்று வயதானவர் இன்னொருவன் சற்று சிறு வயது உடையவன்.

வயதானவர் இவளை பார்க்கவுமே வேகமாக அருகே வந்தார்.

“சாராம்மா.. வாங்க அப்பாவை பார்க்க வந்தீங்களா “என்று கேட்க …

ஆமாம் என்பது போல தலையாட்டியவள்..” அப்பா எங்க ?ஆபிஸ் ரூம்ல இருக்காங்களா .நான் உள்ள போய் பார்க்கலாமா “என்று சொல்லவும் ..வேகமாக தடுத்தவர்..”இல்ல மா.. வேற ஒருத்தர் பார்க்கிறதுக்காக வந்திருக்கிறார் .

அவர் கிட்ட பேசிகிட்டு இருக்காங்க .யாரையும் இப்போ உள்ளே விட வேண்டாம்.. கொஞ்ச நேரத்துக்குன்னு சொல்லி இருக்காங்க” .என்று சொல்ல.. சற்றே ஆச்சரியமாக போனது இவளுக்கு..

அங்கிருந்து ஆபீஸ் அறையே எட்டி பார்க்க ..
உள்ளே யாரிடமோ தந்தை பேசுவது லேசாக தெரிந்தது.

இவளுடைய தந்தையின் முகம் சற்றே வேர்வை பூத்திருக்க பதட்டத்தோடு நிற்பதாக தோன்றியது .

அந்த முகமே இவளுக்கு சற்று பயத்தை தர வேகமாக எழுந்து உள்ளே செல்வதற்கு தயாரானாள்.

“பாப்பா சொன்ன பேச்சைக் கேளுமா .அப்பா ஏற்கனவே சொல்லி இருக்காங்க .

கொஞ்ச நேரம் தான் இப்போ அவர் வெளியே வந்ததும் நீ அப்பாவை போய் பார்க்கலாம்” என்று சொல்ல நகம் கொறித்த படியே அமர்ந்திருந்தாள்.

பத்து நிமிடம் தாண்டிய பிறகு ஒரு நெடியவன்.. கூடவே அவனுக்கு உதவியாளர் போல ஒரு வயதானவர் வேகமாக செல்ல…

சென்றவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அறைக்குள் இருந்து வெளியே வந்தவன் ஒரு நிமிடம் இவள் அமர்ந்திருப்பதை பார்த்தாலுமே மேற் கொண்டு எதுவும் சொல்லவில்லை .

தன்னியல்பு போல வேகமாக அங்கிருந்து அகன்று இருந்தான்.

ஏன் இவளை நின்று கவனித்தானா என்று கூட தெரியாது.

ஒரு நிமிடம் பார்த்தானா இல்லையா என்பது கூட சந்தேகமே..

அவன் செல்லவுமே வேகமாக அறையை நோக்கி நகர்ந்தாள் .

கதவை திறந்தபடியே “அப்பா அப்பா “என்று சொன்னபடியே உள்ளே நுழைய ..அங்கே அவருடைய இருக்கையில் சோர்வாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார் .

“யார் பா அது..எதுக்காக உங்களை வந்து பார்த்துட்டு போறாங்க” என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க ..

ஒரு நிமிடம் மகளின் குரல் கேட்டு நிமிர்ந்தவர் .அடுத்த நிமிடமே சற்று சோர்வாக.. “அதுதான் ஏற்கனவே சொன்னேன்ல வீட்டு பத்திரம் இவர்கிட்ட தான் இருக்குது.

பணத்தை தர முடியுமா இல்லையா கேட்டுட்டு போறாங்க .”

“கேட்டது போல தெரியலையே மிரட்டல் போல தெரிந்தது பா. என்ன அந்த ஆள் உங்களை மிரட்டினானா..

நேரா கோர்ட்டுக்கு போகலாம்னு சொல்லுங்க .. நம்ம அங்க இருந்து பேசி கரெக்ட்டா கட்டிக்கலாம் .ஒன்னும் பிரச்சனை இல்ல.”

“ அப்படியெல்லாம் பட்டு பட்டுன்னு பேசக்கூடாது பாப்பா. இங்கே பிரச்சனை நிறைய இருக்குது .
உனக்கு சொன்னா புரியாது”.

“ அப்பா அதுக்காக… இப்படி பயந்து போய் உங்களை பார்க்கும் போது எனக்கு பயமா இருக்குதுப்பா .

உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா என்னோட நிலைமையை யோசித்து பார்த்தீர்களா.

யார் இந்த ஆளு ..இப்படி வந்து மிரட்டிட்டு போறான் “என்று கோபமாக கேட்க ..

“விடு மா இது என்னோட பிரச்சனை. நான் பார்த்துக்கறேன் .எப்படியும் சரி பண்ணிடுவேன் .

நீ டென்ஷன் ஆகாத.. இன்னமும் கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டிருக்கிறேன்.”

“அதுக்கு அந்த ஆள் என்ன சொன்னான்.”

“ அப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது பாப்பா”.

“ சாரிப்பா உங்களை சங்கடப்படுத்துற யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் பக்கத்துல இருந்து சின்ன மரியாதை கூட வராது .

எனக்கு அந்த ஆள் தான் .அந்த ஆள் என்ன சொன்னான். அதை சொல்லுங்க .”

“இல்ல மா டைம் தர மாட்டேன்னு பேசிட்டு போறபடி.. எனக்கும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.

நானும் இத்தனை நாளா அசால்டா விட்டு இருக்க கூடாது.

ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடியே என்னோட நிலைமையை இவனோட அப்பா இருக்கும் போதே பேசி இருந்தா ..ஏதாவது ஒரு தீர்வு கிடைத்திருக்கலாம் .
எனக்கே ஒன்னும் புரியல டா. “சோர்வாக பேச “அப்பா வேலையில ரொம்ப பிரச்சினையா இருக்குதா..”

“ இப்போதைக்கு பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லடா.. கொஞ்சம் கவனமா இருக்கிறேன் .

நிறைய முதலீடு போடுவதில்லை .பெரிய செலவெல்லாம் இல்லையே..

நிறைய லாபமும் இல்ல. ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்து இடத்துக்கு வாடகை கொடுத்து வீட்டு செலவுக்கு போக கொஞ்சம் சேமிக்கவும் முடியும் .

ஆனா நிறைய எடுக்க முடியாது உனக்கு தெரியும் தானே..”

“ அப்பா அதெல்லாம் கரெக்டு நம்மளோட சூழ்நிலை இதுதான்னு தெளிவா சொல்ல வேண்டியது தானே.”

“ ஆனால் வாங்குன பணம் இல்லைன்னு ஆகிடாதில்லம்மா..

அவங்க கேக்குறதும் நியாயம் தான் .அவனும் பிரச்சினையில் தான் இருக்கிறான் .

அவன் அப்பா இறந்தது அவனுக்கு பெரிய அதிர்ச்சி அதான் அவனால தாங்கிக்க முடியல .

அது மட்டும் இல்ல அவனோட அப்பா. இந்த பணத்தால தான் இறந்து விட்டதா நம்புறான் .

அதனால எல்லார்கிட்டயுமே ரொம்ப ஹாட்ஸா தான் நடந்துக்கிறான்.
என்ன செய்யறது”.

“ அதுக்கு நீங்கதான் கிடைச்சீங்களா அப்பா. இது ரொம்ப தப்பு பா .”

“அப்படி இல்லடா மத்தவங்களோட சிட்டுவேஷனையும் யோசிக்கணும்.

உன்னை மாதிரி தான் அவனும்..நீ அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு. அவனும் அவனுடைய அம்மா இல்லாம வாழ்ந்தவன் .

அப்பாவும் பையனும் ரொம்ப க்ளோஸ்டு போல இருக்கு. அவனால ஏத்துக்கவே முடியல.

படிக்கப் போனவன் திரும்பி வர்றதுக்குள்ள இது மாதிரி ஒரு முடிவு எடுத்து இருந்தா… என்ன செய்ய முடியும்.ஆனால் இந்த பணம் நம்மளால புரட்ட முடியாது இப்ப..

ஆனால் கொடுத்ததான ஆகணும் .அதை இல்லைன்னு சொல்ல முடியாது இல்ல.

நமக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்குல்ல ..நம்ம மனசாட்சிக்கு விரோதமா எதுவும் செய்ய முடியாதுல்லம்மா.”

“இப்ப இதுக்கு என்னதான் பா முடிவு “.

“எனக்கே தெரியல டா. பார்க்கலாம் .ஏதாவது ஒரு நல்லது நடக்குதான்னு” சற்றே சோர்வாகவே சொல்ல ..

இவளுக்கு பயங்கர கோபம் ஆபீஸ் அறையிலிருந்து நெடியவனாக சென்றவனின் முகமே கண்களுக்குள் நிழல் ஆடியது.

‘ ரொம்ப தப்பு ஒரு வயசானவரை நேரா அவரோட இடத்துக்கு வந்து மிரட்டிட்டு போற…

என்னவோ உன்னோட பணத்தை கொள்ளை அடிச்சது போல நீ நடந்துக்கிற…

இது ரொம்ப தப்பு .நிச்சயமாக இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் .

நிச்சயமா உன்னை ஏதாவது செய்வேன். உன்னை நான் சும்மாவே விடமாட்டேன்.’ இவளுடைய சின்ன மனது தந்தைக்காக இப்படி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க ..

அவரோ எழுந்து கொண்டார். “வாம்மா நம்ம நேரா வீட்டுக்கு போகலாம் .இனி இங்க இருக்கிறவங்க பார்த்துக்குவாங்க .

வீட்ல கொஞ்ச நேரம் உன் கூட இருக்கணும்னு தோணுது” என்று சொன்னபடியே புறப்பட..

“ அப்பா சரிப்பா வாங்க .”

“அம்மா நீ இந்நேரத்துக்கெல்லாம் இங்க வர மாட்டியே?

இன்னமும் ரெண்டு வாரம் கழிச்சு தானே வருவேன்னு போன..”

“அப்பா எனக்கு என்னவோ உங்களுடைய சோர்ந்த முகமே கண்ணுக்குள்ள நிக்கறது போல இருந்தது .

உங்களை ஒரு முறை பார்த்தா நல்லா இருக்கணும்னு தோணுச்சு .

ஆனா இங்க வந்தா முன்ன விடவும் நீங்க இன்னமும் கவலையா இருக்கிறீங்க.

எனக்கு பார்க்க பயமா இருக்குதுப்பா .”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா இதெல்லாம் சின்ன பிரச்சனை..

இதைவிட பெரிய பிரச்சனை எல்லாம் நிறைய தாண்டி வந்தாச்சு .

அப்படி பார்க்கும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல”.

“ ஆனா இப்ப நீங்கதானப்பா வருத்தப்படுறீங்க .அதை இல்லைன்னு சொல்லிட முடியாது .”

“அது உண்மைதான் மா முன்னாடி எல்லாம் வயசு இருந்தது .இளமை இருந்தது.

அந்த திமிர்ல எது வந்தாலும் பார்த்துக்கலாம்னு தோணுச்சு.

இப்ப வயசு ஆகுது இல்ல .நிறைய பயப்படறேன் அதுவும் உன்னை நெனச்சு..

என்ன செய்யறது எனக்கு அப்புறம் நீ எப்படி இருப்ப..

என்ன எது இதெல்லாம் யோசிக்கும் போது பயமா இருக்குது .

நான் ஒன்னு சொன்னா கேப்பியா சாரா..”

“ என்னப்பா என்ன சொல்லுங்க.. கேட்கறேன்..”

“ பேசாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ..நல்ல மாப்பிள்ளையா பார்க்க ஆரம்பிக்கறேன்.

உன்ன ஒருத்தன் கைல பிடிச்சு கொடுத்துட்டேனா அதுக்கப்புறம் என்னை பத்தின கவலை எனக்கு துளி கூட கிடையாது .”

“அப்பா என்ன பிரச்சனை போய்க்கிட்டு இருக்குது .இப்ப எதைப்பற்றி யோசிச்சுகிட்டு பேசிகிட்டு இருக்கீங்க.

உங்களுக்கு புரியுதா.. முதலில் இப்ப இருக்குற பிரச்சனையிலிருந்து எப்படி வெளியே வரலாம்னு யோசிக்கலாம் .

நான் முன்னாடியே சொன்னது தான் பா .யோசிக்கவே வேண்டாம் .வீட்டை வேணும்னா கொடுத்துடலாம்.

மிச்சப் பணத்தை நமக்கு ஏத்த மாதிரி சின்ன வீடா பாத்துக்கலாம் .

நீங்கதான் ஓரளவுக்கு இப்போ வேலையில நல்ல காசு வருதுன்னு சொல்றீங்க இல்லையா .

அதை வச்சு நாம மேற்கொண்டு பார்த்துக்கலாம்.”

“ அப்படி இல்லடா .இரு யோசிக்கலாம் .எதுவுமே செய்ய முடியலன்னா அது மட்டும் தான் கடைசி முடிவா இருக்கும்.

சரி சொல்லு உனக்கு என்ன வேணும் .சாப்பிடுறதுக்கு கடையில வாங்கி தரேன்..”

“இல்லப்பா வெளியே எதுவும் வேண்டாம். எனக்கு இப்ப சாப்பிடுற மூடே இல்ல .

நம்ம வீட்டுக்கு போகலாம் .அங்க போய் ஏதாவது செஞ்சு சாப்பிடலாம்.

நீங்களும் நானும் சேர்ந்து செய்யலாம். என்ன சொல்றீங்க”

“ சரி சரி உன் இஷ்டம் வா” என்று அழைத்துக் கொண்டு நடந்தார்.
 

Kavisowmi

Well-known member
5

தந்தையோடு இரண்டு நாட்கள் இருந்து விட்டு இதோ ஹாஸ்டலுக்கு வந்திருந்தாள். சாரா .

ஹாஸ்டலில் தன்னுடைய அறையில் இங்கு மங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

தீவிரமாக யோசனை முகத்தில் இருந்தது .

அவளுடைய நடையை பார்த்தபடி அவளுடைய ரூம் மேட் நண்பர்கள் இருவர் குரல் கொடுத்தனர் .

“இந்த ரூம்பை வாங்க போறீயா..இல்லை இது மாதிரி கட்டற பிளான் ஏதாவது இருக்குதா.. “

“ பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காத ..நானே ரொம்ப டென்ஷன்ல இருக்கேன் தெரியுமா .”

“அப்படி என்ன டென்ஷன் வந்துருச்சு உனக்கு..

இத்தனை நாளா அப்படியெல்லாம் எதை பத்தியும் யோசிக்கிற குணம் உன்னிடம் கிடையவே கிடையாது .

எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிற ஆள் தானே நீ..

ஏதாவது பிரச்சனையானா கூட ஒண்ணுமே இல்ல பார்த்துக்கலாம்னு சொல்றவ நீ..
உனக்கே பிரச்சனையா ..”

“திவ்யா ப்ளீஸ் நானே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கிறேன்.”

“சரி நீ முழிச்சுக்கிட்டு இரு அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் .

என்ன பிரச்சனை அதை சொல்லு. நீ பிரச்சினையை சொன்னா தானே எங்களால ஏதாவது உதவ முடியுமான்னு யோசிக்க முடியும் .”

“உன்னால் மட்டும் இல்லை யாராலயுமே முடியாது.

50 லட்ச ரூபா பணம் வேணும் உன்னால கொடுக்க முடியுமா..”

“ என்னை பார்த்தா எப்படி தெரியுது. நான் என்ன அம்பானியோட பொண்ணா இல்ல அம்பானி வீட்ல அட்லீஸ்ட் பர்சனல் செகரட்டரியாவது வேலை செய்றனா..

எதுவும் கிடையாது .உனக்கு தான் தெரியும் இல்ல .மாசம் மாசம் ஹாஸ்டல் பீஸ் கட்டறதுக்குள்ள இங்க உயிர் போய் வருது.

அப்பாகிட்ட கெஞ்சி அம்மாகிட்ட கெஞ்சி ..அண்ணா கிட்ட கெஞ்சி என்று பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கிறேன்.

இப்ப எல்லாம் எனக்கு என்ன தோணுது தெரியுமா .

சீக்கிரமா படிச்சு முடிச்சிட்டு எங்கேயாவது வேலைக்கு போனா சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன் .

பக்கத்தில் எங்கேயாவது பார்ட் டைம் ஜாப் கிடைச்சா கூட போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் .

எங்க !!இந்த அம்மா அப்பா இரண்டு பேருமே விடமாட்டேன்னு சொல்றாங்க .

படிக்கிற வேலையை மட்டும் பாரு.. பார்ட் டைம் வேலைக்கு போனா எப்படி படிப்ப ..

படிப்புல கவனம் போயிடும் .அப்புறமா அரியர் வெச்சா அதையும் சேர்த்து உட்கார்ந்து எழுதுவியான்னு நக்கல் அடிக்கிறாங்க .

அந்த ஒரு காரணத்துக்காக தான் இங்க கஷ்டப்பட்டு உட்கார்ந்து இருக்கிறேன் தெரியுமா .”.

“அம்மா தாயே தயவு செய்து விட்டுடு ..நான் உன்கிட்ட எதுவும் கேட்கல சரியா .

விட்டா போதுமே ஒரு பக்கத்துக்கு புராணம் வாசிப்பியே..

எனக்கு கேட்கிறதுக்கு எல்லாம் இப்போ மூடு இல்ல .”

“சரி சரி என்ன பிரச்சனை அதை சொல்லு .”

“அதுதான் பணப்பிரச்சனைன்னு சொன்னேன்ல ..”

“அது தெரியுது அவ்வளவு பணத்துக்கு நம்ம எல்லாம் எங்க போறது.

என்ன தான் ஆச்சு. இத்தனை நாளா இது மாதிரி எந்த பிரச்சனையையும் பத்தி பேசினதில்லையே..

அதுவும் இவ்வளவு டென்ஷனா யோசிக்கிறேன்னா..”

“ நான் என்ன செய்றது திவ்யா வீட்ல பெரிய பிராப்ளம் போய்கிட்டு இருக்குது .

அப்பா தொழில் பிரச்சனைன்னு சொல்லி வீட்டு பத்திரத்தை வச்சு 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறாங்க .

ஒரு வருஷமா வட்டியும் கொடுக்கல போல இருக்குது.

இப்போ வந்து பணத்தை உடனே கொடுங்க இல்லனா நடக்கிறதே வேறங்குற மாதிரி மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்”.

“ மை காட் மிரட்டுறாங்களா அதுவும் இந்த காலத்துலயா..”

“ சும்மா எல்லாத்துக்கும் ஷாக் ஆகாத ..இதைவிட மோசமானதெல்லாம் நிறைய நியூஸ்ல கேள்விப்பட்டு இருக்கிறோம் தானே.

பணம் தரலைனா நல்லா இருக்காதுன்னு சொல்லி மிரட்டிட்டு இருக்கிறார்கள் .”

ஐயோ பெரிய தொகை ஆச்சுதே.. எப்படி கொடுக்க முடியும் “.

“அதுதான் எனக்கும் தெரியல ஒரே யோசனையா இருக்குது.

அப்பாவோ ரொம்ப சோர்வா இருக்குறாங்க .அப்பா சென்டிமென்டா அந்த வீட்டை விற்கறதா இல்லை .

எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல .

ஏதாவது ஒரு சொல்யூஷன் கிடைக்குமான்னு யோசிச்சுகிட்டு இருக்குறேன்.”

“ சரிதான் இங்கே நடந்தா சரியா போயிடுமா ..யார்கிட்ட வாங்கினாங்க வயசானவரா..

வயசானவரா இருந்தா நம்ம பிரச்சனை கொஞ்சம் யோசிப்பாங்க .

இல்லனா நம்ம நேரடியா போய் பார்த்து பேசி பார்க்கலாமே..”

“ யாரு அந்தாளையா.. நீ வேற ஆறு அடிக்கு இருக்கிறான். மூஞ்சில சிரிப்புங்கிறதே பார்க்க முடியாது போல இருக்கு.

அப்படி ஒரு இருக்கம்.. அப்பாவோட ஆபீஸ்ல அப்பாவை பார்க்க போனப்போ அவனை பார்த்தேன் .

சரியான திமிர் பிடித்தவனா இருப்பான் போல இருக்குது.

அப்பாகிட்ட பேசிட்டு வெளியே வந்தான். விறு விறுன்னு வேகமா நடந்து போனான்.

நடக்கும் போது தரை எப்படி அதிர்ந்தது தெரியுமா.. அதையெல்லாம் யோசிக்கும் போதே பக்குனு இருக்கு .

அந்த ஆள்கிட்ட எல்லாம் சமாதானம் போய் பேச முடியாது.

நாம போய் பேசினா கூட அவன் சம்மதிப்பானா அப்படிங்கறது சந்தேகம் தான்.

அதனால இது வேலைக்கு ஆகாது .வேற ஏதாவது ஐடியா இருந்தால் கொடு .”

“வேற என்ன ஐடியா கொடுக்கிறது.. பணமெல்லாம் தர முடியாது போடான்னு சொல்லிட வேண்டியதுதானே?”

“ விளையாடாதீங்கடி நான் உங்ககிட்ட வந்து கேட்டேன் பாரு.

மன சாட்சின்னு ஒன்னு இருக்கு இல்லையா.. அப்படி எல்லாம் இல்ல ..வாங்கலைன்னு எல்லாம் பொய் சொல்ல முடியாது.

அது மட்டும் இல்ல.. எங்க வீட்டு பத்திரம் இப்போ அவன் கிட்ட தான் இருக்குது .”

“அப்படின்னா வெரி சிம்பிள் அந்த பத்திரத்தை தூக்கிட்டு வந்திடு”.

“ என்னடி உளறிக்கிட்டு இருக்கிற” என்று திரும்பி திவ்யாவை பார்த்து கேட்க ..

“நெஜமாதான் சொல்றேன் .அந்த பத்திரத்தை தூக்கிட்டு வந்திடு ..

வேலை முடிஞ்சு போச்சு. உங்க பத்திரம் உங்க கிட்ட வந்துடுச்சு.

அப்புறம் அவன் எதை வச்சு காசு கேட்பான் .அக்ரிமெண்ட் ஏதாவது கொடுத்து இருந்தா..அந்த பேப்பரையுமே சேர்த்து தூக்கிட்டு வந்துடலாம் .

வேலை முடிஞ்சது ..அப்புறமா அவன் வேலையை அவன் பார்த்திட்டு போவான்.”

“ ஏய்.. இதெல்லாம் அநியாயம் இல்ல “.

“அது எப்படி அநியாயமாகும். அவன் நல்லா தானே இருக்கிறான் .

அவன பத்தி வேற ஏதாவது விஷயம் தெரியுமா. சொல்லு கேட்கலாம் .”

“அவனை பத்தி நான் விசாரிச்சு பார்த்தேன் .அவன் நல்ல வசதி தான் ..

அவனோட தாத்தா ரொம்ப வசதியானவரு ..இதெல்லாம் அவங்களுக்கு ஒண்ணுமே இல்ல .

ஆனா அவங்க அப்பா சமீபத்துல பண பிரச்சனையால தற்கொலை பண்ணிக்கிட்டாரு..

அந்த கோவத்துல இவன் எல்லாத்தையும் பழிவாங்கறதா நினைச்சுக்கிட்டு இது மாதிரி நடந்துகிட்டு இருக்கிறான் .

மேக்சிமம் நிறைய பேர் கிட்ட பணத்தை ஃபுல் செட்டில்மெட்டா வாங்கிட்டதா கேள்விப்பட்டேன்.

எங்க அப்பாவை மிரட்டிக்கொண்டு இருக்கிற மாதிரி ஒவ்வொருத்தர் கிட்டயும் மிரட்டி பணத்தை வாங்கிக்கிட்டு இருக்கிறான்.

மேக்ஸிமம் நிறைய பேர் கிட்ட வாங்கியாச்சு .அப்பா பணத்தை கொடுக்காட்டியும் பெருசா எந்த பிரச்சனையும் வராது .

ஏன்னா அவன் ஸ்டேபிளா தான் இருக்கிறான் .பண பிரச்சனை அவனுக்கு கிடையவே கிடையாது .”

“அப்புறம் என்ன இத்தனை தெரிஞ்சு வச்சிருக்கற..

அவனுக்கு பணம் தேவை இல்லை என்கிறப்போ அந்த பத்திரத்தை எடுத்தா என்ன தப்பு ..
அதெல்லாம் தப்பே கிடையாது”.

“ விளையாடுறியா அதெல்லாம் முடியுமா .. அவன் எங்க வச்சிருப்பான்னு கூட தெரியாது”.

“ சோ வாட் நாம தேடி கண்டு பிடிப்போம். இதெல்லாம் பெரிய பிரச்சனையா என்ன?

லாஸ்ட் டைம் நம்ம பவிக்கு அந்த தினேஷால எவ்வளவு பிரச்சனை வந்துச்சு .

ஏதோ ஒரு லெட்டர் அவனுக்கு எழுதிட்டான்னு சொல்லி அவ லைஃபை ஸ்பாயில் பண்ணிடுவேன்னு..

அப்படி இப்படின்னு அத்தனை மிரட்டினான்.. நாம என்ன பண்ணினோம்.

யாருக்குமே தெரியாம அவன் வீட்டுக்குள்ள போயி மொத்த லெட்டரையும் எடுத்துட்டு வரலையா .

அந்த பிரச்சனை அத்தோட கிளியர் பண்ணி விட்டோம்ல.. அதே மாதிரி தான் .

அதே மெத்தர்டை இவன்கிட்டயும் நம்ம ஃபாலோ பண்ணலாம்..

நம்ம நேரா அவனோட வீட்டுக்கு போலாம் .பத்திரம் இருக்கிற பைலை மொத்தமா தள்ளிட்டு வரலாம் .

அப்புறமா அவன் யாருகிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணி என்ன பண்றான்னு பார்த்துடலாம் .

உன் அப்பாவும் ஃப்ரீ ஆயிடுவாரு.. நீயும் ஃப்ரீ ஆயிடுவ .

நீயும் இந்த பத்துக்கு பத்து ரூம்பை அளந்து கொண்டு இருக்க வேண்டாம்ல ..”

அப்படிங்கற ..

“ஆமா நெஜமா தான் சொல்றேன். இதை விட பெஸ்டான ஐடியா வேற எதுவுமே கிடையாது.

அவனுக்கும் பணம் தேவையில்லை .உங்களுக்கு அந்த பத்திரம் கட்டாயமா வேணும் .

அப்ப இதுதாண்டா வழி.. வேற வழியே இல்லையே .

நீ நேரடியா போய் என்ன மன்னிச்சிடுங்க . எங்க அப்பா தெரியாம வாங்கிட்டாரு.

அந்த பத்திரத்தை கொடுத்துருங்க அப்படின்னு காலில் விழுந்தா.. அவன் தருவானா ..தரமாட்டான்ல ..

அப்புறம் இந்த மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் இந்த மாதிரி தான் நம்ம செஞ்சாகணும் .

உன் அப்பா வேற மெரட்டறாங்கன்னு சொல்லி இருக்குற இல்ல .”

“இருடி இரு நீ பாட்டுக்கு அவசர அவசரமா பிளான எக்ஸிக்யூட் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கிற ..

யோசிக்க வேண்டாமா .ஆனால் அங்க போய் மாட்டினா எவ்ளோ பெரிய கிரிமினல் குற்றம் தெரியுமா.”

“ அப்படி எல்லாம் மாட்ட மாட்டோம் டி .மாட்டாத மாதிரி பிளான் போடலாம்.

கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணலாம் .கரெக்டா போய் கேட்ச் பண்ணலாம். அவ்வளவுதான்.

அவனை பத்தி இன்னமும் டீப்பா விசாரி ..எங்க போறான் .எங்க வர்றான் .

எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவான் .எப்போ எங்க இருப்பான் .

வீட்ல யாரெல்லாம் கூட இருக்கிறாங்க. இது மாதிரி எல்லாத்தையுமே கவனி.

நிஜமா நமக்கு ஐடியா கிடைக்கும் .என்ன சொல்ற”.

“ அப்படிங்கற “.

“நிஜமா அப்படித்தான் .போதுமா உனக்கு உன்னோட பிரச்சனைக்கான சொலுஷன் நான் கொடுத்துட்டேன் .

இதுக்கு மேல உன் இஷ்டம். ஒருவேளை நான் அங்கே பைலை எடுக்க போகும் போது நீ என் கூட வருவியா”.

“ ஹலோ என்ன விளையாடுறியா ..இந்த வாரத்தோட நமக்கு காலேஜ் முடியுது.

நான் கிளம்பி போயிடுவேன் என்னால எல்லாம் அங்க வர முடியாது.

எல்லாத்தையும் விசாரிச்சு தனியா நீயே போய் செய்..

தினேஷ் விஷயத்துலயும் நீ அதைத்தானே பண்ணின.. தினேஷ் அங்க வராம நாங்க காலேஜ்ல அவனை பிடிச்சு வச்சோம் .

நீ ரூமுக்கு போய் அழகா தேடி எடுத்துட்டு வந்த..அதையே இங்கேயும் ஃபாலோ பண்ற..

அவன் வீட்டுக்கு கரெக்டா வரமாட்டேங்கறதை கரெக்டா புரிஞ்சு வச்சுக்கிட்டு..

அதுக்கு ஏத்த மாதிரி பிளான் போட்டு நீ செஞ்சுக்கோ..”

“ இது திருட்டு இல்லையா.. இது தப்பு இல்லையா.”

“ நமக்கு நல்லது நடக்கும்னா இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்.

எனக்கு வேற ஐடியா எல்லாம் தெரியல .ஆள விடு. அப்புறமா இது ஒன்னும் பெரிய தப்பு எல்லாம் இல்ல .

நீ தான் சொல்ற ..அவன் ஒன்னும் அப்படி கஷ்டத்துல இல்லன்னு..

உன்னோட பணம் கொடுத்து தான் அவன் வாழனுங்கறதும் இல்ல .

அது ஒரு எக்ஸ்ட்ரா பிராஃபிட்.. நீ கொடுத்தா கூட லாக்கர்ல தான் வச்சு பூட்ட போறான் .

அந்த பணம் அவன்கிட்ட போனா என்ன ?போகாட்டி என்ன?

இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை .எனக்கு தெரிஞ்சு குட்டி மூளைக்கு தெரிஞ்ச ஐடியாவை உனக்கு கொடுத்துட்டேன்.

இத நீ ஃபாலோ
பண்றதும் ஃபாலோ பண்ணாததும் உன்னோட இஷ்டம் சாரா .

சரியா இதுக்கு மேல இப்படி நடந்துக்கிட்டு இருக்காத..

இப்ப நம்ம வெளிய போய் சாப்பிடலாம்.. என்ன சொல்ற..”

“ இல்லை எனக்கு பசிக்கல”.

“ இந்த கதையெல்லாம் இங்க ஆகாது. நீ வா முதல்ல “என இழுத்துக்கொண்டு நகர்ந்தாள்.
 

Kavisowmi

Well-known member
6

“சாப்பிட போறேன்னு எங்க இழுத்துட்டு வந்துகிட்டு இருக்குற ..

இது ஏதோ பெரிய ஹோட்டல் மாதிரி தெரியுது.”

“ ஆமாண்டி இன்னைக்கு நம்ம கூட படிக்கிற பூஜா இருக்கிறால்ல ..

அவளோட பர்த்டே. இன்னைக்கு பார்ட்டி தரேன் வான்னு சொல்லி இருந்தா ..

நீ சொன்னா வரமாட்ட.. அதுதான் இப்படி பொய் சொல்லி இழுத்துட்டு வந்தேன்”.

“ எதுக்குடி வேண்டாத வேலை எல்லாம் .. எனக்கும் அவளுக்கு சரியா செட் ஆகாது .

ஏற்கனவே என்னை பார்க்கும் போதெல்லாம் முறைப்பா.. அது ஒரு சிறு மூஞ்சி “.

“விடு ஆனா நீ கலகலப்பானவல்ல அது மட்டும் இல்ல .காலேஜ் முடிய போகுது .

இவளுக்குத்தான் நம்ம செட்டிலேயே கடைசி பர்த்டே இதுக்கு அப்புறம் நம்ம பிரண்டு சர்க்கிள்ல யாருக்குமே பர்த்டே வரப்போவதில்லை .

அப்போ வந்து கலந்துக்கணும் இல்லையா .இன்னைக்கு எல்லாருமே இங்க ஆஜராகராங்க..வா “என இழுத்துக் கொண்டு நகர ..

ஒரு பெரிய டேபிளில் ஏற்கனவே நண்பர்கள் கூட்டம் மொத்தமாக அமர்ந்திருந்தனர்.

இவளுமே அங்கே சென்று கலந்து கொண்டாள்.

திவ்யாவின் காதருகே வந்து.”.நான் எந்த கிப்ட்டும் வாங்கலை.. .”

“அந்த கவலை எல்லாம் உனக்கு வேண்டாம் உனக்கும் சேர்த்து நானே வாங்கிட்டேன் .

ரெண்டு பேரோட பேருமே எழுதிட்டேன் .ஒன்னும் கவலைப்படாத ‌.

அப்புறமா மறந்திடாம கிப்ட் வாங்குனதுக்கான பாதி காசை எனக்கு நீ அப்புறமா கொடுத்துடு “என்று சொன்னவள் பூஜாவுக்கு அருகே சென்று..

“ ஹாய் பூஜா ஹேப்பி பர்த்டே டு யூ” என்று சொல்ல அருகே சாராவுமே அவளை பார்த்து புன்னகைக்க… சாரா வந்தது அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி..

சட்டென அருகே இழுத்தவள் இருக அணைத்துக் கொண்டாழ்.

“ ஐ அம் சாரி சின்ன சின்ன விஷயங்களுக்கு நிறைய முறை நான் உன்கிட்ட முகத்தை திருப்பிக்கிட்டு போய் இருக்கிறேன் .

ஆனால் எதைப் பத்தியும் கவலைப்படாம கரெக்ட்டா வந்திருக்கிற ..ரொம்ப நன்றி” என்று சொல்ல ..

“ஹேய் என்னது.. நம்ம பிரெண்ட்ஸ்ங்க.. நமக்குள்ள எதுக்கு சாரி எல்லாம்..

அதெல்லாம் தேவையே இல்லை .நிஜமாகவே எனக்கு இன்னைக்கு உன்னோட பிறந்தநாள்னு தெரியாது.

நீ என்கிட்ட சொல்லல. இந்த திவ்யா தான் பிடிவாதமா என்னை இழுத்துட்டு வந்தா..

எனக்கும் ரொம்ப ரொம்ப ஹேப்பி .. உன்னை இங்க பார்த்ததில்.

உன்னோட டிரஸ் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. தேவதை மாதிரி அழகா இருக்குற ..”

“ மனசுக்குள்ள எந்த வருத்தமும் இல்லாம சொல்ற ..எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என சொல்லி விட்டு நகர..

அதன் பிறகு நேரம் கலகலப்பாகவே நகர்ந்தது.

திவ்யாவோடு அரட்டை அடித்துக் கொண்டு நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

ஒவ்வொருவருமே வர கலாய்த்துக்கொண்டு நேரம் நகர.. சற்று நேரத்தில் எல்லாம் இவளோ அங்கே வந்து அமர்ந்து சாப்பிடுபவர்கள் ஒவ்வொருவரையுமே பார்த்து திவ்யாவிடம் கமெண்ட் சொல்ல ஆரம்பிக்க..

திவ்யாவோ சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ சிரிக்காதடி எல்லாரும் உன்னை தான் பார்க்கறாங்க.”

“ நான் என்ன பண்றது ..தெரியாத்தனமா இந்த இடத்துக்கு உன்னை அழைச்சிட்டு வந்துட்டேன்.

பேசாம ரூம்லயே இருந்திருக்கலாம் போல இருக்கு.

என்னால சுத்தமா முடியல. நீ சாப்பிட்டியா இல்லையா “என கேட்க ..அப்போதுதான் அந்த நெடியவனை இவள் கவனித்தாள் .

அன்றைக்கு தந்தையிடம் பேசிவிட்டு சென்றவன்.

இப்போதுமே முகம் இறுக்கமாகத்தான் இருந்தது.

அன்றைக்கு கூடவே வந்திருந்த ஆள் கிடையாது .

இவன் மட்டும் தனியாக வந்திருந்தான்.

சற்று தொலைவில் இருந்த ஒரு டேபிளில் அமர்ந்து யாருக்காகவோ காத்திருப்பது போல தெரிய ..

ஒரு நிமிடம் பார்த்தவளுக்கு சரியாக அடையாளம் தெரிந்தது.

இவனா.. இந்த பொறுக்கியா.. இங்க வந்து இருக்கிறான் .மனதிற்குள் நினைத்தபடி பார்த்துக் கொண்டிருக்க ..

சற்று நேரத்தில் எல்லாம் வயதான இன்னொருவர் அவனுக்கு எதிரே வந்து அமர்ந்து இருந்தார்.

இருவரும் காரசாரமாக பேசிக்கொள்வது தூரத்திலிருந்து பார்க்கும் போது தெரிந்தது .

அவனின் முகத்தில் சிரிப்பு என்பதே இல்லை .பிடிவாதம், கர்வம், திமிர் என மொத்தமாக போட்டுயிட பேசிக்கொண்டு இருந்தான்.

எதிரே இருந்தவரும் சற்று பயந்தபடி பதில் சொல்லிக் கொண்டிருக்க ..இங்கிருந்து பார்த்தவளுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது..

‘ நீ அப்பாகிட்ட மிரட்டுற மாதிரி தான் அத்தனை பேர்கிட்டேயும் பேசற..

இடியட் இவனும் இவனோட மூஞ்சியும் ..ஆளை பாரு’ என மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டிருக்க.. திவ்யாவோ அப்போதுதான் எதையோ கேட்டுக்கொண்டே இவளை திரும்பிப் பார்த்தவள்.

“ போகலாமா..”

“என்ன பேசுற.. என்ன ஆயிடுச்சு” என்று சொல்ல..

“ என்ன ஆச்சு .. ஒன்னும் ஆகலை போகலாம் “.

“இது நல்லா தானே போய்கிட்டு இருந்தது.. பூஜா தான் நல்லவிதமா பேசினாலே..

இல்ல பூஜாவோட ஃப்ரெண்டுங்க யாராவது உன்கிட்ட தப்பா சொல்லிட்டாங்களா ..”

“அதெல்லாம் ஒன்னும் சொல்லலடி .”

“அப்புறம் என்ன.. ஏன் இப்படி இருக்கிற .”.

“அதுவா.. அந்த டேபிள்ல இருக்கறான் பார் அந்த ஆள் தான் அன்னைக்கு அப்பாவை பார்க்க வந்தது “என்று சொல்ல.. சட்டென திரும்பிப் பார்த்தவள் ..”வாவ் வெரி ஹேண்ட்ஸ்ம்.. லுக்கிங் ஸ்மார்ட் “என்று சொல்ல..

“ நீதான் மெச்சிக்கணும். பாத்தா அப்படி எல்லாம் தெரியல கடுகடு என்று எப்படி இருக்கிறான் பாரு .

ஒரு கை கடுகை எடுத்து மூஞ்சில போட்டா.. அப்படியே படபடன்னு பொரிஞ்சிடும் தெரியுமா.”

“ அப்படியா சொல்ற ..எனக்கு பார்த்தா அப்படி எல்லாம் தெரியல .

இன்னும் சொன்னால் இவனும் கூட ஒரு மாதிரியான அழகுதான் .”

“அவன் அழகா இருக்கிறானா டி.. உனக்கு தான் தப்பு தப்பா தெரியுது‌ அவனை பாரேன்” என்று சொன்னபடியே அங்கிருந்தவனை..
பார்க்க.. அவனுமே இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ நம்மள தான் பார்க்கிறான் அங்க பாரு” என்று திவ்யா சொல்ல ..

“கொஞ்சம் பேசாம வரியா” என அவளை அடக்கினாள்.

“எனக்கு இங்க இருக்க பிடிக்கல வா நம்ம பூஜா கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம் “என்று சொன்னவள் சற்று நேரத்தில் எல்லாம் புறப்பட்டு இருந்தாள்.

இவள் சற்று முன்பாகவே இங்கே கிளம்பி வந்து இருக்க.. அதன் பிறகு சற்று நேரம் கழித்து திவ்யா இவளோடு வந்து இணைந்து கொண்டாள்.

சற்றே முகம் கோபமாகத்தான் வந்தது .

“என்ன ஆச்சு எதற்காக கோபமா இருக்கிற ..உன் முகம் சரியில்லையே “என்று திவ்யாவை பார்த்து கேட்க..

“ நீ சொன்னது கரெக்ட் தான் அவன் சரியான சிடு மூஞ்சி தான்.

கிளம்பி வரும்போது அப்பதான் அவன் வெளியே போய்க்கிட்டு இருந்தான்.

தெரியாம லேசா இடிச்சிட்டேன். என்ன பேச்சு பேசுறேன் தெரியுமா .இடியட் அவ்வளவு திட்டு திட்டறான்.

என்னமோ பொண்ணுங்க எல்லாம் வழிஞ்சுகிட்டு மேல இடிக்கிற மாதிரி அப்படி ஒரு ரியாக்ஷன் ..

எனக்கே கடுப்பாயிடுச்சு. இவனை விட அழகான ஆள் எத்தனை பேர் பார்த்திருக்கிறேன் தெரியுமா..

என்னமோ இவன் தான் உலக அழகன் மாதிரி “என்று சொல்ல சட்டென சாரா சிரித்து விட்டாள்.

“நீ எதுக்காக இப்ப சிரிக்கிற..”

“ பின்ன முகத்தைப் பார்த்தாலே தெரியலையா.. அவன் சரியான அரக்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

“ அப்படியெல்லாம் இல்ல அழகா இருக்கிறான் .செமையா இருக்கிறான்னு சொன்ன..

இப்ப கடைசியா வாங்கி கட்டிட்டு வந்து இருக்கிற.. இதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.”

“ இங்க பாரு என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது சாரா..

நீ கட்டாயமா நான் சொல்றத செய்யணும்”.

“என்னடி செய்யணும் சொல்லு.”

“ என்ன ஆனாலும் பரவால்ல.. நீ உன்னோட அப்பாவோட பத்திரத்தையும் அந்த டாக்குமெண்டையும் கட்டாயமா நீ அங்க போயி சூட்டா போட்டுட்டு வர்ற..

அவனுக்கு அது தான் நம்ம கொடுக்கிற தண்டனையா இருக்கும் .

என்ன வார்த்தை எல்லாம் பேசுறான் தெரியுமா? ஆம்பளைங்களுக்கு அலையுறவளாம் சொல்றான் .

என்னை பார்த்தா அப்படியா இருக்குது.

இதுவரைக்கும் எத்தனை பசங்க கிட்ட நான் போய் வழிஞ்சிட்டு பேசி இருக்கிறேன்.

அவனுக்கு என்னை பத்தி என்ன தெரியும்.”

“ கூல் உன்னை பத்தி எதுவும் தெரியாது .அவன் எதோ ஒரு மூடுல பேசிட்டான் .

நான் தான் சொன்னேன் இல்ல பின்னாடியே வா என்று..

நீ தான் கேட்கல .இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்ன அதுதான்..

இப்படி ஆகிடுச்சு.. ஆமா என்னதான் செஞ்சுகிட்டு இருந்த …”

“நான் மட்டும் இல்ல. பூஜா இன்னும் கொஞ்சம் பேர் எல்லாம் மொத்தமா தான் கிளம்பினோம் .

ஒருத்தரை ஒருத்தர் பயங்கரமா கலாய்ச்சிகிட்டு வந்ததுல சட்டுனு யோசிக்காமல் இந்த பூஜா கிறுக்கி என்னை பிடிச்சு தள்ளி விட்டுட்டா..

தள்ளி விட்டதுல வேற வழியே இல்ல.. கரெக்டா அந்த நேரம் அவன் வந்தானா…

யாரு பார்த்தா.. சரியா அவன் மேல போய் மொத்தமா விழுந்துட்டேன்..

நல்ல வேளை கீழே விழவில்லை. பிடிச்சுக்கிட்டான் பிடிச்சு நிப்பாட்டிட்டு தான் இத்தனை திட்டு..

எனக்கு தேவையான்னு இருந்தது. இதுக்கு பேசாம ஒரு ஓரமா நகந்து போயிருந்தா கூட ஓகேயா இருந்திருக்கும் .

கீழே தானே விழுந்தேண்ணு சமாதானம் ஆகி வந்து இருப்பேன் .

அதை விட்டுட்டு என்ன பேச்சு பேசறான் தெரியுமா .அம்மா காதுல ரத்தம் மட்டும்தான் வரல. அந்த அளவுக்கு பேசறான்.

இப்ப கூட அந்த வாய்ஸ் காதுக்குள்ள கேட்கற மாதிரி இருக்கு .என்ன வாய்ஸ் தெரியுமா..

ஆத்தி சரியான வாய்ஸ் .அந்த வாய்ஸ் கேட்டாலே நமக்கு நம்மளை அறியாம மனசுக்குள்ள ஒரு பயம் வருது .

நீ சொன்னது கரெக்ட் தான் அவன் சரியான திமிரு புடிச்சவன் மட்டுமல்ல அகங்காரம் புடிச்சவன்.

அவன் குரலை வைத்து மத்தவங்கள மிரட்டிக்கொண்டு இருக்கிறான் .

அந்த வாய்ஸ்க்கு எல்லாருமே பயப்படுவாங்க .நடுங்குவாங்க எனக்கு நல்லா தெரிஞ்சது.

நிஜமா சொல்றேன் சாரா. அவனுக்கு நம்ம கொடுக்கற சரியான தண்டனை என்னவா இருக்கும்னா ..

நீ உன்னோட அப்பாவோட டாக்குமெண்டை திருடறது மட்டும் தான் .

அது அங்க இல்லைங்கறப்போ அதை கொண்டு வந்து காட்டுன்னு கேட்கும் போது என்ன முழி முழிப்பான் ..

அதற்காகவே இந்த காரியத்தை நீ செய்யணும். எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடு.

உனக்காக உன்னோட அப்பாவோட நலத்துக்காக நீ கட்டாயமா அங்க போற ..

அத திருடிட்டு வர்ற.. சத்தியம் பண்ணுடி .”

“ ஏய் விளையாடாதே அதெல்லாம் முடியாது.

நீ பேசாம இரு ஏதாவது வழி கிடைக்கும். “

“அப்படியெல்லாம் கிடைக்காது எந்த வழியும் கிடைக்காது .

அவன் திரும்பத் திரும்ப உங்க அப்பாவை பார்த்து மிரட்ட தான் போறான் .

ஏற்கனவே உங்க அப்பா ஹார்ட் வீக் ஆனவர் .

ஏதாவது ஆயிடுச்சுன்னா தன்னந்தனியா நீ தான் நிற்ப ..

அதுக்கு முன்னாடி இதை செஞ்சுட்டேன்னு வச்சுக்கோயேன் .

தைரியமா உன் அப்பா கிட்ட மிரட்டும் போது நீ கேட்கலாம் .

அந்த பாத்திரத்தையும் டாக்குமெண்ட்டையும் கொண்டு வாங்க.

நான் பணம் தரேன்னு தைரியமா சொல்லலாம். அதுக்காக தான் சொல்றேன்.
பிராமிஸ் பண்ணுடி .”

“ஏய் என்ன உளறிக்கிட்டு இருக்குற “என்று சொல்லும்போதே டக்கென்னு அவளுடைய கையை எடுத்து திவ்யா தன்னுடைய தலையின் மேல் வைத்
துக்கொண்டாள்.

“ என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணி இருக்கிற..

கட்டாயமா நீ அங்க போய் அந்த டாக்குமெண்ட்டை திருடிட்டு வர்ற.. நிச்சயமா அவனுக்கு சரியான தண்டனை கொடுக்கற..
இது எனக்காக “என்று சொல்லிவிட்டு நகர ..
திகைத்துப்படியே விழித்தால் சாரா.
 

Kavisowmi

Well-known member
7

“இங்க பாருங்க சார் .. இன்னமும் பத்து நாள் தான் இருக்குது .

பத்து நாள் முடிஞ்சதுன்னா நாம இந்த ஹாஸ்டல் எல்லாம் காலி பண்ணிட்டு கிளம்பி ஆகணும்.

எக்ஸாம் வந்துரும். எக்ஸாம்க்கு முன்னாடி இந்த வேலையை செஞ்சாகணும் “.

“விளையாடாதடி ..ஏன் இப்படி எல்லாம் இருக்கிற.. “

“எனக்கு வேற வழியே தெரியல சாரா .நிஜமா நம்ம ஏதாவது செஞ்சே ஆகணும் .

தப்பே செய்யாமல் என்னை திட்டுனான்ல ..அதுக்கான தண்டனை அவனுக்கு கிடைக்கணும் .

விசாரிக்க ஆரம்பி ..பத்து நாள் கழிச்சுதுன்னா அப்புறமா எக்ஸாமுக்காக லீவு விட ஆரம்பிச்சிடுவாங்க .

அப்புறம் எக்ஸாமுக்காக அஞ்சு நாள் காலேஜ் வந்தா போதும் .ஏன்னா அவங்கங்க வீட்டுக்கு கிளம்பிடுவாங்க.

நம்மளுமே ஹாஸ்டலை காலி பண்ணிட்டு போயிடணும்.

அதனால இந்த ஹாஸ்டல்ல இருக்கும் போதே இத எல்லாம் செஞ்சாகணும் .

சத்தம் இல்லாம செஞ்சிட்டு நேரா நீ வீட்டுக்கு போயிடு .

எக்ஸாமிற்கு வீட்ல இருந்தது தானே இங்க வந்து எழுதுவே..”

“ ஆமாண்டி “.

“அப்புறம் என்ன அதை செய்”.

“ சரி சரி நீ பாட்டுக்கு அவசரப்படாத.. டக்குன்னு எதையோ யோசிக்காமல் செய்ய முடியாது .யோசிப்போம்”.

“ யோசிக்க எல்லாம் வேண்டாம். நானும் உன் பின்னாடி கிளம்பி வரேன் ‌

அவன் எங்க போறான்.. ஆபீஸ்க்கு எப்ப போறான். வீட்டுக்கு எப்ப வருவான் .

வீட்ல யார் யார் இருக்காங்க எல்லாத்தையுமே விசாரிக்கலாம்.

எப்படி விசாரிக்கணும் என்கிறதை நான் பார்த்துக்கறேன் இரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் திவ்யா.

சொன்னது போலவே மாலையில் வரும் போது சில தகவல்களை வந்து கூறினாள்.

“ காலையில 9 மணிக்கு ஆபீஸ் போனா நைட் 7 மணிக்கு தான் அங்க இருந்து கிளம்பி வரான்.

எட்டு மணிக்கு வீட்டுக்கு போய் சாப்பிட்டு படுத்து தூங்கினான்னா.. மறுபடியும் காலைல அதே மாதிரி தான் லைஃப் போகுது ஒரு மாதிரி போரீங்கா..

இடையில விடியக்காலம் கொஞ்ச நேரம் எக்சைஸ் பண்றான் .

அதே மாதிரி சாயங்காலமுமே கொஞ்ச நேரம் எக்ஸைஸ் பண்றான்.

அது தாண்டி பெருசா எதுவும் தெரியல .வீட்டை சுத்தி பெருசா யாரும் இருக்குற மாதிரி இல்ல.

எந்த வேலைக்காரங்களுமே கிடையாது. ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் கேட்டுக்கு வெளியில் இருக்கிறாங்க .

இப்போதைக்கு அவன் அவனுடைய அப்பா வீட்ல தான் தங்கி இருக்கிறான் .

அவங்க அப்பா வீட்ல வேற யாருமே இல்ல. தாத்தா கூட ஊருக்கு போயிட்டாரு. தனியா தான் இருக்கிறான்.

நிஜமா அந்த வீட்லதான் டாக்குமெண்ட் எல்லாம் இருக்கும் .

அதனால நீ தாராளமா அங்க போய் தேடிட்டு வந்துடலாம் .”

“ஏய் என்னடி விளையாடறியா.. நிஜமாவே நீ சீரியஸா தான் இருக்கறியா .”

“என்னடி என்ன மறந்து போச்சா.. என் தலையில சத்தியம் பண்ணி இருக்கிற..

ஏமாத்தினா எனக்கு ஏதாவது ஆகிடும் .நியாபகம் இருக்குதா”.

“ திவ்யா ப்ளீஸ் கொஞ்சம் ஃப்ரீயா விடேன் .ஏதாவது யோசிக்கலாம். நீ ஏன் பதட்டப்படற ..

சொல்ல முடியாது அப்பாவே ஒருவேளை பணத்தை ரெடி பண்ணிடாங்கன்னா கொடுத்துட்டு பத்திரத்தை வாங்கிட போறாங்க.”

“ இத பாரு அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை .அவன் மூஞ்சிய நல்லா பார்த்தேல்ல .

அவன் எல்லாம் பணத்தை வாங்கிட்டு பத்திரத்தை கொடுக்கிற ரகம் கிடையாது.

நீங்க பணத்தை கொடுத்தா கூட நிச்சயமா ஏதாவது அதுல வில்லங்கம் பண்ணி பத்திரத்தை கொடுக்க மாட்டான்.

வேற ஏதாவது பிரச்சனை தான் பெருசு பண்ணுவான். அதுக்கு பெஸ்ட் இதுதான் வழி..”

“ ஏண்டி அவனை இந்த அளவுக்கு வில்லன் மாதிரி யோசிக்கிற ..

நியாயமா அவனும் நியாயவாதியா இருப்பான் தானே..”

“ அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது. “

“சரி இவ்வளவு தூரம் சொல்ற இன்னமும் கொஞ்சம் யோசிக்கணும்ல ..

கொஞ்சம் வெயிட் பண்ணு. நானும் என் பங்குக்கு விசாரிச்சுட்டு வரேன்.”

“ நீ எப்படி விசாரிப்ப..”

“ சரி நீ எப்படி விசாரிச்ச.. அதை சொல்லு .”

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் கிட்ட பணத்தை கொடுத்து அவன ஃபாலோ பண்ண சொன்னேன் .

இரண்டு நாள் ஃபாலோ பண்ணிட்டு இந்த தகவலை சொல்லி இருக்கிறான் .”

“ரியலி யார் அவன் .. எனக்கு காட்ட முடியுமா .”

“அவன் எனக்கு தெரிஞ்ச ஃபிரண்டு டி ..”

“சரி நானே என் பங்குக்கு வேற யார்கிட்டயாவது விசாரிக்க சொல்றேன் .

எல்லாம் சரியா வந்ததுன்னா யோசிக்கலாம்” என்று சொல்ல அடுத்த இரண்டு நாட்கள் மேலும் நகர்ந்தது.

இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் திவ்யா ஆரம்பித்து இருந்தாள் .

“என்ன விசாரிக்க சொன்ன ஆள் கிட்ட இருந்து தகவல் வந்ததா ..

எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டியா.. என்ன முடிவு பண்ணி இருக்கற? “

“ஏய் உன்னோட ரொம்ப தொந்தரவா போச்சு .உனக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல .

நான் எல்லாத்தையுமே விசாரிக்க சொன்னேன்.

விசாரிச்சிட்டோம் .டீடைல் கொடுத்துட்டாங்க. வாங்கிட்டேன் .

ஆனா கூடவே என்ன சொன்னாங்க தெரியுமா .”

“என்ன சொன்னாங்க ..”

“நீங்க எதுக்காக அவரை பத்தி தகவல் கேக்குறீங்கன்னு தெரியல.

கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி. ஒரு வேலை உங்களால ஏதாவது ஒரு பிரச்சனை வந்ததுன்னா..

நீங்க ஏதாவது ஒரு பிரச்சனையில மாட்டினீங்கன்னா.. திருப்பி வெளியில் வர முடியாத மாதிரி ஏதாவது பண்ணி வச்சிடுவாங்க.

அதனால எதை பண்றதா இருந்தாலும் யோசிச்சு பண்ணுங்கன்னு சொல்லி இருக்காங்க.”

“ ஏன் இப்படி சொன்னாங்க எனக்கு புரியலையே ..”

“தெரியல ..ஒருவேளை அவன் சரியான பொறுக்கி போல இருக்குது திவ்யா .

அவன் பொண்ணுங்களை ஏமாத்திறவனா இருப்பான்.

அவன்கிட்ட நம்ம ஏமாந்துட்டோம்ணா.. அந்த மாதிரி ஏதோ கோவத்துல என்னவோ செய்ய போறேன்னு நினைச்சாங்க போல இருக்கு.

அதனால இந்த பதிலை சொல்லி இருக்காங்க.”

“ பார்த்தியா நான்தான் சொன்னேன்ல.. திமிர் பிடித்தவன் மட்டும் இல்ல..பொம்பள பொறுக்கியும் கூட போல இருக்கு .

அதனால தான் விசாரிக்க கொடுத்தால் இந்த மாதிரி ஒரு ஸ்டேட்மென்ட்ட கொடுத்து இருக்காங்க. “

“ஆமாண்டி இனி எதை செய்யறதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு செய்யணும் .எனக்கே கொஞ்சம் பயமா தான் இருக்குது. “

“ஆனா அப்படியெல்லாம் விட முடியாது. நம்ம தினேஷ் கிட்ட என்ன செஞ்சமோ ..அதே காரியத்தை தான் இங்கேயும் செய்கிறோம்.

அவன் கிட்ட முடியும்னா.. அதே மாதிரி தான் எல்லா ஆண்களும் இருப்பாங்க .

இவனும் சரியான கல்லுளி மங்கனா தான் இருப்பான். ஈசியா பாத்திரத்தை எடுத்துடலாம் .

சீக்கிரமா அழகா பிளான் போடு. என்னைக்கு அவன் ஊர்ல இல்லைமோ.. அன்றைக்கே போகலாம்.

எங்கையாவது வெளியில போகாமலா இருப்பான்.. டீடைலா கேளு .

நான் வேணும்னா இந்த வாட்ச்மேன் கிட்ட கொஞ்சம் பணத்தை கொடுத்து என்ன ஏதுன்னு விசாரிச்சு வைக்கிறேன்”.

அடுத்து ஒரு நாள் தாண்டவும் ஆரவாரமாக திவ்யா வந்தாள்.

“ சூப்பரான தகவல் கிடைச்சிருக்கு தெரியுமா.”

“ என்ன தகவல் ..”

“அவன் வாரக் கடைசியில அவனோட தாத்தாவை பார்க்க எப்பவுமே கிளம்பி போயிடுவானாமாம்..

சனி ஞாயிறு அவன் தாத்தா கூட இருந்திட்டு திங்கட்கிழமை காலைல தான் இங்கே வருவானாம்..

சோ நமக்கு ஃப்ரீயா இருக்கும். நமக்கு நிறைய டைம் இருக்கு.

அவன் இங்க வீட்ல இல்ல. நம்ம தைரியமா உள்ளே போயி வேண்டியதை எடுத்துட்டு வரலாம் என்ன சொல்ற..”

“நீ சொல்றது உண்மையான தகவலா..கேட்கவே ஜாலியா இருக்குது. “

சாரா.. கூட திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை பேசும் போது எடுத்தால் என்ன என்கின்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்.

திவ்யா சொன்ன தகவல் கேட்கவும் ஆர்வமாக கேட்க ..”ஆமா நாளைக்கு சனி ஞாயிறு தான் .

அடுத்து ஒரு வாரம் தான் நமக்கு இங்கே ஹாஸ்டல்ல இருக்க முடியும் .

நீயே நல்லா பிளான் போட்டுக்கோ.. உனக்கு சந்தேகமா இருந்தா நாளைக்கு போயிட்டு எப்படி வராங்கறதை நீயே வாட்ச் பண்ணி புரிஞ்சுக்கோ ..

அவங்க வீட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் இருந்து கவனி..

அவன் போனான்னா அடுத்த ரெண்டு நாள் கழிச்சு தான் வருவான்.. நோட் பண்ணிக்கோ..

உனக்கு இந்த வாரம் பயமா இருந்தா அடுத்த வாரம் இதை செய் .

அடுத்த வாரம் பத்திரத்தை எடுத்துட்டு ஜூட் ..உன் வீட்டிற்கு போயிடு க்ஷ.

அப்புறமா மறுபடியும் அப்பாகிட்ட எப்பவாவது பேச வந்தா இதெல்லாம் பேசு .

ஒன்னும் பிரச்சனை இல்ல .எக்ஸாம் முடிஞ்சுதும்.”

ஆனாலும்..

“என்ன ஆனாலும் ..அதெல்லாம் யோசிக்காத சரியா..

அப்புறமா சொல்ல மறந்துட்டேன் .இந்த வாரம் என்னோட அப்பா அம்மா இரண்டு பேரும் என்னை வர சொல்லி இருக்காங்க .

நான் கிளம்புறேன் .நீ இங்கேயே இருந்து யோசி. நீயும் வேணும்னா கூட உன்னோட அப்பாவை போய் பார்த்துட்டு வா .

அப்புறமா நான் சொன்ன முடிவு சரியா இல்லையான்னு முடிவு பண்ணிக்கோ “என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் திவ்யா.
 

Kavisowmi

Well-known member
8

அடுத்த ரெண்டு நாட்கள் விடுமுறை எனும் போது எதற்காக இங்கே காத்திருக்க வேண்டும் என நினைத்தவள் சற்று நேரத்தில் எல்லாம் புறப்பட தயாரானாள்.

அதற்கு முன்பாக எதற்கும் அந்த நெடியவனின் வீட்டை சற்று கண்காணித்தால் என்ன என்று தோன்ற …

தன்னுடைய ஃப்ரெண்ட்டின் காரை வாங்கிக் கொண்டவள் முகத்தை முழுக்க மறைத்த படி அவனின் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த திருப்பத்தில் இருந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

சரியாக ஏழு மணி எனும் போது அந்த ரோட்டை தாண்டி அவனுடைய வீட்டுக்கு சென்றவன்.

சற்று நேரத்தில் புறப்பட்டு வெளியே கிளம்பி இருந்தான்.

அதன் பிறகு அவன் வருவது போல தெரியவில்லை.

நீண்ட நேரம் கழித்து நேராக அவனுடைய வீட்டிற்கு எதிரே சென்றவள் .முகத்தை மறைத்தபடியே.. அங்கு நிங வாட்ச்மேனிடம் பேச்சு கொடுத்தாள்.

“ இங்க ஜெகன் சாரை பார்க்க முடியுமா “என்று கேட்க ..அவரோ இவளை மேலும் கீழும் பார்த்தார் .

“என்ன சார் ஏன் இப்படி பாக்குறீங்க”.

“அவரை தேடி இங்க எந்த பொண்ணுமே வந்தது இல்லை .நீ புதுசா இருக்கிற அதனால தான் பார்த்தேன் .சார் வீட்ல இல்ல .இனி திங்கட்கிழமை காலைல தான் வருவாங்க

என்ன விஷயமா அவரை பார்க்க வந்த.. உன்னோட பெயர் என்ன ?சொல்லு “.

“என் பேரு தாரா..”

“ பேர் நல்லா இருக்கே.. வித்தியாசமா இருக்குது .என்ன விஷயமா பார்க்க வந்த..”

“ வந்து வேலை விஷயமா அவர்கிட்ட ஏற்கனவே கேட்டிருந்தேன் .

அவர்தான் வீட்டில் வந்து பாருங்கன்னு சொல்லி இருந்தாங்க .”

“நல்லா தெளிவா கேட்டியா வீட்டுக்கு எல்லாம் யாரும் வந்தது கிடையாது .

திங்கட்கிழமை ஆபீஸ்ல போய் பாரு. சார் வந்தார்னா நானும் சொல்றேன் .”

“அப்படின்னா இப்ப அவர் வரமாட்டாரா ..”

“அவர் அவரோட தாத்தா வீட்டுக்கு போயாச்சு .சனி ஞாயிறு இருக்க மாட்டாரு .

திங்கட்கிழமை காலைல தான் இங்கே வருவார் என்று நினைக்கிறேன்.

“சார் அப்புறமா அந்த மாதிரி ஆளும் கிடையாது. பெண்கள வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அளவுக்கு எல்லாம் கிடையவே கிடையாது

உனக்கு யாரோ தப்பா தகவல் கொடுத்து இருக்காங்க”.

“ சரி அண்ணா ..அப்புறமா அவரோட ஆபீஸ்லையே போய் பார்க்கிறேன் “என்று சொல்லிவிட்டு நகந்தாள்.

நேராக தந்தையை பார்க்க வர போன முறை பார்த்தது விடவும் இன்னமும் சோர்வாக இருப்பது போல தோன்றியது.

நார்மலாக பேச்சு கொடுத்துக் கொண்டிருக்க.. அவரும் இவளிடம் நன்றாகவே பேசினார்.

பேச்சு இயல்பாக இருந்தாலும் பார்வை எல்லாம் தந்தையின் மேல் தான் இருந்தது .

அவரின் ஒவ்வொரு அசைவையுமே கவனித்துக் கொண்டிருந்தாள்.

தந்தை நிச்சயமாக வருத்தப்படுகிறார் என்பது நன்றாக தெரிந்தது.

“என்னப்பா ஏன் ரொம்ப சோர்வா இருக்கீங்க. நிறைய கவலைப்படுகிறீர்கள் என்று தெரிகிறது .ஏன் ?”என்று கேட்க..

“ எல்லாம் இந்த வீட்டு பிரச்சினை தான் .தெரியாம பணத்தை வாங்கிட்டேன் .

என் தப்பு தான் .கொஞ்சம் நிறைய லாபம் வரும்னு சொல்லி அந்த பெரிய ஆர்டருக்கு இரும்பு கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்க கூடாது .

வாங்கி கொடுத்தேன் ..அவனும் எடுத்துட்டு ஓடி இருக்க வேண்டாம் .

இப்ப பாரு செமையா லாக்கான மாதிரி ஆயிடுச்சு .இதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு எனக்கு தெரியல.

அது தான் ஒரே யோசனையா இருக்குது .”

“அப்பா இன்னுமே கொஞ்சம் டைம் கேளுங்க .ஆல்ரெடி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தீங்க இல்ல .

அங்க எந்த அளவுல மூவ் பண்ணிருக்காங்க .அது விசாரிச்சீங்களா.”

“ நான் நேரடியா போய் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் பார்த்துட்டு வந்துட்டேன் மா .

எந்த வேலையும் நடக்குற மாதிரி இல்ல. என்ன நடக்குதுன்னு தெரியல.

ரொம்ப வருத்தமா இருக்குது சாரா “சற்று வருத்தப்பட..” சரி விடுங்கப்பா. நடக்கிற எதையும் நம்மளால மாத்த முடியாது.

பார்க்கலாம் இனி என்னதான் நடக்குதுன்னு” என்று ஆறுதல் கூறியவள். அங்கேயே இருந்து விட்டு அடுத்த நாளை புறப்பட்டு இருந்தாள்.

“என்னம்மா ரெண்டு நாள் தங்க போறேன்னு சொன்ன..”

“ கிளம்புறேன் அப்பா.. நிறைய படிக்க வேண்டியது இருக்குதுப்பா .

உங்கள பாக்கணும் போல தோணுச்சு அதனாலதான் கிளம்பி வந்தேன்.

இப்ப நேரா ஹாஸ்டல் போறேன்.. இன்னமும் ஒரு வாரம் தானே இருக்குது .

அப்புறம் இங்க இருந்து தானே படிக்கணும் .”

“சரி டா.. சரி பார்த்து போ” என்று அனுப்பி வைக்க ..அங்கிருந்து நேராக ஹாஸ்டலுக்கு வந்திருந்தாள்.

அன்றைக்கு ஒரு நாள் முழுக்க ஏதேதோ யோசனையில் ஹாஸ்டல் ரூம்பிலேயே அடைந்து கிடந்தாள் .

அடுத்த நாள் காலையில் திவ்யாவுமே வந்து இருந்தாள்.

“ என்னடி முகம் எல்லாம் ஒரு மாதிரியா டல்லா தெரியுது .என்ன நைட் எல்லாம் தூங்கலையா .

உன் வீட்டுக்கு தானே போன.. எப்ப வந்த “என்று கேட்க ..

“நேற்றே வந்துட்டேன் திவ்யா”.

“ என்ன ஆச்சு அப்பா கூட இருக்க போறேன்னு போன.. ஒரே நாள்ல திரும்பி ஓடி வந்து இருக்கிற..”

“அப்பா ரொம்ப சோர்வா இருக்கிறாங்க .ரொம்ப கவலைப்படுறாங்க.

என்னால அங்க இருக்க முடியல. நான் அவரோட பொண்ணு .. என்னால அவருக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண முடியல .

இதெல்லாம் யோசிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குது.”

“ இத பாரு நான் தான் உனக்கு அழகா பிளானை சொல்லிட்டேன் ..

அவன் வாரத்துல ரெண்டு நாள் அவனோட வீட்ல இருக்கறது இல்ல .

தைரியமா போய் மூவ் பண்ணலாம்னு சொல்லிட்டேன் .நீ தான் கேட்க மாட்டேங்குற..”

“ இங்க பாரு திவ்யா ..வீடு வெளியே ஃபுல்லாவே சிசிடிவி கேமரா வைத்திருக்கிறார்கள்.

அந்த தெரு முடியுற வரைக்குமே ஓரளவுக்கு கவனிச்சுட்டேன்..அப்ப நிச்சயமா வீட்டுக்குள்ளேயும் சிசிடிவி கேமரா இருக்கும்.

அவனுடைய ஆபீஸ் ரூம்.. டாக்குமெண்ட் வைத்திருக்கிற இடத்துல கூட வேற ஏதாவது இருக்கும் .

பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணாமல அவ்ளோ தைரியமா விட்டுட்டு போவானா..”

“ நீ சொல்றது கரெக்ட் ஆனால் எனக்கு என்ன தோணுதுனா அவனுக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கும்னு தோணல.

வெளியே இருக்குது கரெக்டு.. அதெல்லாம் அவனுடைய அப்பா இருந்த காலத்தில் இருந்தது..

இவன் வந்த பிறகு புதுசா எதுவும் செஞ்ச மாதிரி தெரியல புரியுதா .”

அப்படிங்கற ..

“ஆமாண்டி.. என்ன என்ன செய்யணும்னு முடிவு பண்றயோ தைரியமா செய்.

நான் உனக்கு துணையாக இருப்பேன். கவலைப்படாதே “என்று சொல்ல ஏதேதோ யோசித்தவள்..

கடைசியில் போய் பார்த்து எடுத்து வந்து விட்டால் தான் என்ன ?என்ற முடிவுக்கு வந்திருந்தால் சாரா.

அந்த ஒரு வாரம் முழுக்க பரபரப்பாக நகர்ந்தது .

தினம் தினம் வேறு விதமாக திட்டங்களை மனதிற்குள் போட்டு யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்.

எப்படி செய்ய வேண்டும் .எங்கே எந்த மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

தன் மேல் எந்த தவறும் இல்லாதவாறு தன் மீது பழியும் வராதவாறு எப்படி இதை செயல்படுத்துவது.. என மும்பரமாக யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்.

ஆனால் ஒன்றை மறந்து விட்டால்..

இத்தனை கோடி சொத்து இருக்கின்ற ஒருவன் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருப்பான் என்பதை இவள் அறியவில்லை.

ஒரு முறைக்கு இருமுறையாக எப்போது இவள் அவனது கண்ணில் தட்டுப்பட்டாலோ அந்த நிமிடமே இவளின் மேல் பார்வை ஜெகனுக்கு விழுந்திருந்தது .

இவளை பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தான் .

இவள் அவனை விசாரித்து எப்படி சில தகவல்களை சேகரித்தாலோ ..

அது போலவே அவனும் சில தகவல்களை மேலோட்டமாக கேட்டு வைத்திருந்தான்.

விளையாட்டுத்தனமானவள்..
துருதுருப்பானவள்..

எதையாவது கிறுக்குத்தனமாக செய்துவிட்டு மாட்டிக்கொள்பவள்..

அவன் விசாரித்த வரையில் கிடைத்த தகவல் இதுதான்.

கிடைத்த தகவலை கேட்ட போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“ நிதர்சனம் தெரியாம விளையாட்டுத்தனமா வளர்த்தி வைத்திருக்கிறார் ஆனால் இவ ஏன் நம்ம கண்ணுல அடிக்கடி தட்டுப்படணும் .”என்று யோசிக்க பெரியதாக எந்த ஐடியாவும் இவனுக்கு இல்லை.

“ தற்செயலா இந்த பக்கம் வந்திருக்கலாம் அதனால கூட பார்த்து இருக்கலாம் “என்று முடிவு செய்து கொண்டான் .

ஏனென்றால் முதல் முறையாக அவனின் தெருவோரத்தில் நின்று இவனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக ஜெகன் சென்றவன் இவளை நன்றாகவே பார்த்திருந்தான்.

ஜெகனின் முக்கிய பழக்கங்களில் ஒன்று.. யாரை எப்போது பார்த்தாலும் ஒரு முறை பார்த்தாலே போதும் அவர்களை ஆயுசுக்கும் மறக்க மாட்டான்.

நினைவில் இருந்து எப்போதுமே மறக்கின்ற பழக்கம் அவனுக்கு கிடையாது.

அந்த வகையில் இவளை முதல் முறையாக முத்துவின் ஆபீஸில் வைத்து பார்த்த போதே புரிந்து கொண்டான்.

ஒரு நிமிடம் பார்த்து இருந்தாலுமே அவன் அவருடைய மகள் இவள் என்பது புரிந்தது .

அது மட்டும் அல்ல ..அறையில் கூட சிறு வயதில் எடுத்த ஒரு புகைப்படம் தந்தையும் மகளும் இருந்த புகைப்படத்தை மிகவும் பெரியது செய்து மாட்டி இருந்தார் .

பார்த்த உடனே எளிதாக அடையாளம் தெரிந்தது.

அழகாக இருந்தாலும் ஏனோ அந்த நேரம் அவனை வசிகரிக்கவில்லை .எளிதாக கடந்திருந்தான்.
 

Kavisowmi

Well-known member
9

அந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு அவனுடைய வீட்டிற்கு சென்று அந்த பைலை திருட வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.

அதற்கான ஏற்பாடுகளை கவனமாக செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

வாட்ச்மேன் வாசலில் தான் இருப்பது.. எளிதாக உள்ளே சென்றுவிடலாம் .

பின்பக்க கேட் சற்று குறுகலாக சிறிதாக இருந்தது .எளிதாக ஏறி உள்ளே குதித்து விடலாம்.

அங்கிருந்து மாடி அறைக்கு எப்படி செல்வது என யோசிக்க ஆரம்பிக்க ..வீட்டை சுற்றிலுமே நிறைய மரங்கள் வளர்த்து வைத்திருந்தான்.

மரங்களின் உயரம் கூடவே ஏற முடியுமா என்பதைப் பார்த்தவளுக்கு முகத்தில் புன்னகை தொற்றிக் கொண்டது.

அங்கிருந்த ஒவ்வொரு மரமும் பெரியதாக இருந்தாலுமே அதில் ஏறுவது பெரிய விஷயமாக இவளுக்கு தெரியவில்லை .

மரம் ஏறுவதில் இவள் கில்லாடி. எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் எளிதாக ஏறி விடுவாள்.

அதனால் அந்த மரங்களை பார்த்தவளுக்கு ஒரு புன்னகை உற்பத்தியானது .

நேராக மாடி அறை வரையிலுமே ஏறி அங்கிருந்து உள்ளே சென்று விடலாம் .

அதன் பிறகு அவனுடைய அறை எது என தேடி பார்த்து அங்கிருக்கும் பைலை கண்டு பிடித்து எடுத்து வர வேண்டும் அவ்வளவுதான் .என முடிவு செய்தவள் வேகவேகமாக அதற்கான மற்ற வேலைகளை ஈடுபட ஆரம்பித்திருந்தாள்.

திவ்யாவிடம் சொன்னவள்.. “என்ன நீ என் கூட வர்ற தானே”.

“ கட்டாயமா நானும் உன் கூட வரேன் .ஆனா என்னால உள்ள எல்லாம் வர முடியாது.

ஏதாவது பேச்சு கொடுத்து வாட்ச்மேன் கவனத்தை திசை திருப்பறேன்..

நீ அந்த நேரம் பார்த்து உள்ள குதிச்சு போயிடு .

பிறகு சரியா ஒரு மணி நேரம் டைம் ..

அந்த ஒரு மணி நேரத்துல நீ எப்படியாவது எடுத்துட்டு எப்படி போனியோ அதே மாதிரி வெளியே வந்திடு..

அதுவரைக்கும் நான் அந்த வாட்ச்மேன் வாசலை தாண்டி உள்ளே போகாத மாதிரி பார்த்துக்கறேன் சரியா “என்று சொல்ல ..*சரி “என தலையாட்டினாள்.

வெள்ளிக்கிழமை நாளும் வந்திருந்தது .

காலேஜ் விட்டு வந்த நேரத்தில் இருந்து பர பரப்பாக இருந்தாள்.

கையில் நிறைய பொருட்கள் வாங்கி வைத்திருந்தாள்.

“ இதெல்லாம் எதுக்கு “என்று கேட்க ..

“ஒருவேளை ஏதாவது பிரச்சனையினால் டக்குன்னு தப்பிச்சு வரணும்ல ..
அதுக்காக தான் .

ஒரு சிறு கயிறு கூடவே சிறு கத்தி ..ஒரு பேகில் எடுத்து வைத்தவள் கூடவே கொஞ்சமாக குடிக்க நீர், பிஸ்கட் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து உள்ளே போட ..

“என்னடி செஞ்சுக்கிட்டு இருக்குற.. சாரா.. இதெல்லாம் எதுக்கு ..

நீ அங்க போய் என்ன பிஸ்கட் சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு வர போறியா .

இதெல்லாம் ஏன் எடுத்து வைக்கிற “.

“ ஒரு வேளை நாய் ஏதாவது இருந்தா ..அது சத்தம் போட்டுச்சுன்னா .அது கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு தான் இந்த பிஸ்கட்.”

“ நீ எல்லாம் எந்த காலத்துல இருக்கிற ..நாய் எல்லாம் புத்திசாலித்தனமானது.

நீ கொடுக்கிற பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு சத்தம் இல்லாம இருக்கும்னு நினைக்கிறியா…”

அப்படி எல்லாம் நினைக்காத ஒரு சேப்டிக்காக தான்..” என இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

இரண்டு திருப்பங்களுக்கு முன்னாலே கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்தியவள்.. இருவரும் இறங்க ஆரம்பித்தனர் .

“அடுத்த கட்டில் தான் அவனோட வீடு இருக்குது .இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் புறப்பட்டு போயிடுவான்.

புறப்பட்டு போன பிறகு நம்ம உள்ள போகலாம் “என்று அங்கே காத்திருக்க ஆரம்பித்தனர் .

அந்த ரோட்டில் சென்றவர்கள் வித்தியாசமாக இவர்களை பார்க்க ..

“இது சரிவராது டி .இவனுங்க பார்வையே சரியில்ல. நாம இங்க நிற்க வேண்டாம்.

கொஞ்சம் அந்த பக்கம் தள்ளி போகலாம் .அங்க ஒரு சின்ன ஹோட்டல் இருக்குது.

அங்கு உட்கார்ந்து பார்க்கலாம்.அவனோட வண்டி நம்பர் எனக்கு தெரியும்.

கிராஸ் ஆச்சுன்னா தெரியும் வா” என இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் திவ்யா .

சொன்னது போலவே அங்கே இருந்த ஹோட்டலில் அமர்ந்து ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருக்க..

சற்று நேரத்தில் எல்லாம் அங்கே ஜெகனும் அந்த ஓட்டலுக்குள் நுழைந்திருந்தான்.

“இவன் எதுக்கு இங்க வரான் .எனக்கு பயமா இருக்குது.”

“ கொஞ்சம் பேசாம இருக்கறயா.. எதுக்காக இப்படி ஷாக் ஆகற .

அவனுக்கு நீ யார்னு தெரியாது அப்புறம் ஏன் இத்தனை பதட்டம். கண்டுக்காம உன்னோட வேலையை பாரு .”.

“ஒருவேளை நாம இங்கே இருக்கிறது தெரிந்து தான் இங்கே வந்துட்டானோ..

நம்மளோட பிளான் எல்லாம் தெரியுமோ”.

“லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்காத‌. அது எப்படி தெரியும்.

நீயும் நானும் பேசினது அவனுக்கு எப்படி தெரிய போகுது .

அவன் எதேச்சயா இங்கே வந்திருப்பான் .நீ பேசாம சாப்பிடு “என்று சொல்லி இவளை அடக்க ..அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

மனம் திக்திக் என்று அடித்து கொண்டது .

எனவோ பெரிய தப்பு செய்து மாட்டிக்கொள்வது போன்ற பயம் ..

ஆனால் அது போன்ற ஒரு பயம் திவ்யாவிற்கு இல்லை .அவள் அசால்டாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அது மிகவும் சிறிய ஹோட்டல்.. பத்து இருக்கைகளே கொண்டது..

ஹோட்டலில் ஒரு ஓரமாக அமர்ந்தவன் அங்கிருந்தவருக்கு குரல் கொடுத்தான்.

“அண்ணா வழக்கமா நான் சாப்பிடுற ஐட்டம் கொண்டு வாங்க” என்று சொல்லவும்.. திவ்யா இவளை பார்த்து ..

“கேட்டியா அவன் ரெகுலரா இந்த கடையில தான் வந்து சாப்பிடுவான் போல இருக்கு .

அது தெரியாம நாமதான் வந்து உட்கார்ந்திருக்கிறோம் .இதுல பயம் வேற காட்டுற..”

“ என்ன தம்பி ..என்ன புறப்பட்டாச்சா? “

“ஆமா அண்ணா தாத்தா வீட்டுக்கு கிளம்புறேன் .”

“ஓகே தம்பி என்ன ரெண்டு நாள் கழிச்சு திரும்பி வருவியா .”

“ஆமா நா வழக்கம் போல தான் பிளான்ல எந்த சேஞ்சும் இல்லை “என்று சொன்னபடி அமர்ந்திருக்க..

“ கேட்டியா அவன் நிஜமா கிளம்பிட்டான் .இப்ப போனான்னா இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் வருவான்.

நமக்கு நிறையவே டைம் இருக்குது .ஒரு மணி நேரம் இல்ல நீ இரண்டு மணி நேரம் வேணும்னாலும் டைம் எடுத்துக்கலாம் .
பயப்படாம வேலையை பாரு “என்று சொல்ல ..”கொஞ்சம் பேசாம இரு “என்பது போல கண்களால் திவ்யாவை மிரட்டிக் கொண்டிருந்தால் சாரா.

மேலும் அரை மணி நேரம் தாண்டி இருக்க நிதானமாக சாப்பிட்டவன் அங்கே இருந்தவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

திரும்புகையிங இவர்களை கவனித்தானோ.. என சந்தேகம் தோன்ற.. நிமிர்ந்து சாரா பார்த்தாள் .

பார்த்தபோது அவனுடைய புறமுதுகு மட்டுமே தெரிந்தது.

“ நாம தான் பயந்துகிறோம் ..அவன் நார்மலா தான் இருக்கிறான். நீதான் தேவையில்லாம ஏதேதோ கற்பனை பண்ணிக்கிற..

சொல்லுவாங்களே ஒரு பழமொழி.. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்குமாம்.. அது மாதிரி தான் உன்னோட நிலைமை இப்ப இருக்குது.

நீயா எதையாவது யோசிச்சு பயந்துக்கற.. வேற ஒன்னும் இல்ல .

அவன் இப்ப கிளம்பி போய்டுவான் .இன்னும் அரை மணி நேரம் கழிச்சு நீ உன்னோட வேலை பார்க்கலாம் “என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

மேலும் 10 நிமிடம் வரையிலுமே அங்கேயே அமர்ந்து விட்டு பிறகு மெல்ல இருவரும் கிளம்பினர் .

“இப்ப நம்ம என்ன செய்யலாம் சாரா ..நேரா அங்க போயிடலாமா .”

அவன் நேரா போனானா இல்ல எங்க போனானான்னு தெரியலையே. எப்படி கன்ஃபார்ம் பண்ணிக்கிறது.

கன்ஃபார்ம் பண்ணிக்காம அங்க போக முடியாது”.

“ அப்படின்னா நான் ஒன்னு செய்றேன் .நான் போய் அந்த வாட்ச்மேன் கிட்ட பேச்சு கொடுத்து.. சார் உள்ள இருக்கிறாரா.. இல்லையான்னு கேட்டுட்டு வரேன் .

அவன் இல்லன்னா நம்ம வேலையை பார்க்கலாம் .”

“திவ்யா எனக்கு கொஞ்சம் பயமா இருக்குது .இப்ப நேரம் பாரு. எட்டு கூட ஆகல .இப்பவே அங்கே போகணுமா “.

“என்னதான்டி பண்ண சொல்ற இப்ப போகாம எப்ப போறது .”

“இப்ப பாரு ஆட்கள் நடமாட்டும் இருக்கு. பின்னாடி போய் எப்படி குதிச்சு உள்ள போறது .”

“நீ ஏன் பயந்துக்கிற ..ரொம்ப பயப்படுறியா நீ .பழைய சாரா இல்லையே .நீ…ஏய் இது நார்மலான ஒரு சின்ன விஷயம்.”

“தினேஷ் விசயம் வேற திவ்யா..ஜஸ்ட் லவ் லெட்டர் தான். மாட்டிக்கிட்டா கூட அவன் நம்மளோட பிரண்டு .

சண்டை போட்டுட்டு தப்பிச்சுக்கலாம் ஆனா இங்க அப்படி இல்ல . இவன் எப்படிப்பட்டவன்ணு எதுவுமே நமக்கு தெரியாது.

சரியான திமிரு புடிச்சவன். அடியாள் மாதிரி நாலு பேரை வைத்து மிரட்டிக்கொண்டு இருக்கிறவன் .

இது நமக்கே தெரியும் .அப்படி இருக்கும்போது பயமா தான் இருக்கும்.”

“ஒன்னும் செய்யலாம் இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்.

10:00 மணிக்கு மேல நம்ம நேரா வீட்டுக்கு கிட்ட போலாம். நான் அவன் கிட்ட பேச்சு கொடுக்குறேன் .

நீ எப்படியாவது உள்ள போயிடு சரியா “என்று சொல்ல..” சரி என தலையாட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து நேராக அவனது வீட்டுக்கு அருகே சென்று.. திவ்யா வாட்ச்மேனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வேறு ஏதோ அட்ரஸ் கேட்பது போல கேட்டுக் கொண்டிருக்க.. அவர் சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவள் சற்று நகர்ந்து பின்புற கேட் அருகே சென்று நின்றாள்.

முன்னாள் கிட்டத்தட்ட 10 அடி உயரத்துக்கு சுவர் கட்டி இருக்க.. அந்த பங்களா வீட்டில் பின்னால் இருந்தது என்னவோ வெறும் ஆறு அடி உயர சுவர் மட்டுமே ..

சட்டென யோசிக்காமல் எளிதாக ஏறி உள்ளே குதித்து இருந்தாள்.

தொம்..என்கிற சத்தம் இங்கே வாசலுக்கு அருகில் நின்று இருவருக்கு கேட்டது.

சத்தம் கேட்கவும் வாட்ச்மேன் வேகமாக சுற்றிலும் கண்களால் தேடினார்.

“என்ன ணா”. என்று கேட்க.. “இல்லை மா .. ஏதோ சத்தம் கேட்குது..இரு உள்ளே போய் பார்த்துட்டு வரேன் “என்று சொல்ல..

“ இல்ல ணா அந்த மாதிரி எல்லாம் எனக்கு எந்த சத்தமும் கேட்கலையே .

உங்களுக்கு ஒருவேளை பிரம்மையா இருக்குமா இருக்கும் .

இந்நேரத்துக்கு யாரு இங்க வருவாங்க .ரோடு காலியா இருக்குது “என்று சொல்ல..

“ ஆமாமா அதுவும் சரிதான்” என சொன்னபடியே மறுபடியும் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார் .

இங்கே உள்ளே குதித்த சாராவோ மெல்ல அங்கிருந்து நடக்க ஆரம்பிக்க ..எங்கோ தூரத்தில் நாயின் குறைப்பு சத்தம் கேட்டது.

ஒரு நிமிடம் அசையாமல் அப்படியே நின்று இருந்தாள்.

சற்று தொலைவில் தெரிந்தது நாய்க்கான கூண்டு ஒன்று.. உள்ளே உறுமிக் கொண்டிருந்தது.

இங்கே வாசலுக்கு வெளியே இருந்த வாட்ச்மேன் கூட “என்னன்னு தெரியல நாய் ஒரு மாதிரி வித்தியாசமா சத்தம் கொடுக்குது.. உள்ளே போய் பார்த்துட்டு வரேன் ..நீ நில்லுமா”.

“ இல்ல ணா.. நேரம் ஆகுது இந்த அட்ரஸை மட்டும் பார்த்து சொல்லுங்க”.”

“எனக்கு சரியா தெரியல .இந்த அட்ரஸ்சை கொஞ்சம் தூரம் அந்த பக்கம் போனா.. ஒரு கடை இருக்கும் .

அந்த கடையில் கேட்டு பாரு. அவங்க கரெக்டா சொன்னாலும் சொல்லுவாங்க .”

“எனக்கு ஒன்னும் புரியல அதனால தான் இங்க.. இப்ப வந்து இருக்கிறேன் .என்கிட்ட டூவீலர் இருக்கு .நான் கிளம்பிடுவேன். இந்த அட்ரஸ் இல்லாட்டி பரவால்ல .இந்த ஏரியா பத்தி சொல்லுங்க .

ஏன்னா இங்க தான் எங்கயோ என்னோட பிரண்டு இருக்கிறதா சொல்லி இருக்கிறா.. எனக்கு சரியா தெரியல .

இந்த ரோட்ல பார்கவின்னு யாராவது இருக்கிறார்களா..

என்னோட ஃப்ரெண்டோட அம்மா பேரு அதுதான் “என்று சொல்ல ..

“அந்த மாதிரி பேர் எல்லாம் இங்கே யாரும் இல்லையே .”என சொல்லிக் கொண்டிருக்க இங்கே வேகமாக பதுங்கி பதுங்கி சென்ற சாரா சரியாக பின்புற தோட்டத்திற்கு வந்தவள் .அங்கிருந்து பங்களாவை நோட்டமிட்டால்.. கிட்டத்தட்ட மூன்றடுக்கு மாடியாக நின்று இருந்தது .

இதில் எங்கே எந்த அறையில் வைத்திருப்பான் என்பது சுத்தமாக புரியவில்லை. தெளிவாக வந்து மாட்டிக்கொண்டோம் என்பது நன்றாகவே தெரிந்தது .

“இந்த மூன்று மாடி வீட்டில் அவன் எங்கே வச்சிருப்பான் எங்கே இருக்கும் .ஒன்னும் புரியல “என்று சொன்னபடியே சுற்றிலும் பார்க்க ..அங்கங்கே சிசிடிவி கேமரா இருப்பதற்கான அடையாளம் இருந்தது .

ஆனால் இயங்குகிறதா என்பது தெரியவில்லை .

சுற்றிலும் பார்த்தபடியே சற்று முகத்தை மறைத்தபடி அங்கிருந்து ஒரு மரத்தில் ஏறலாம் என பார்த்துக் கொண்டிருக்கும்போது அப்போது அங்கு இருந்த ஜன்னல் இவளை கவர்ந்தது.

அது ஒரு கண்ணாடி தடுப்பு போல இருந்த பகுதி .

ஆர்வமாக அருகே சென்றவர்கள் கண்ணாடியை சற்று நிவர்த்தி பார்க்க.. அது உள்ளே செல்வதற்கான வழி என்பது பார்க்கும் போதே தெரிந்தது .

கண்ணாடி கதவை தள்ளினால் அங்கே ஒரு கதவு விரிந்து திறந்திருந்தது .

அந்த வழியாகச் சென்றால் மாடிக்கு சென்று விடலாம் என்பது நன்றாகவே தெரிந்தது.

உள்புறமாக படிக்கட்டு இருக்க பார்த்தவள்..சற்று நேரம் பார்த்து விட்டு அவளையும் அறியாமல் லேசாக விசில் அடித்தாள்.

“சரியான லூசா இருப்பான் போல இருக்கு .எவ்வளவு ஈஸியா கதவு திறந்து வச்சிட்டு போயிருக்கறான்.

நீ கஷ்டபட வேண்டாம் சாரா..நிதானமா உள்ள போகலாம் .சொன்னபடியே கதவை மெல்ல நகர்த்தி அந்த ஜன்னல் வழி யாக உள்ளே சென்றவள் படிக்கட்டு வழியே மேலே ஏற ஆரம்பித்தான் .

அதே நேரத்தில் சரியாக கேட்டின் வாசலுக்கு ஜெகன் தன்னுடைய காரோடு வந்து வண்டியை நிறுத்தி இருந்தான்.

“ அச்சச்சோ என்னன்னு தெரியலையே என்னைக்கும் இல்லாம அதிசயமா முதலாளி திரும்பி உடனே வராரு. என்னன்னு தெரியல. நீ போ.. எதுவும் பேசிட்டு இருக்கறத பார்த்தா என்னை தான் திட்டுவாரு .

என்ன தேவை இல்லாம பேச்சுன்னு..
நீ கிளம்பிக்கோ.

நீ வேற எங்கேயாவது அட்ரஸ் கேளு சரியா” என சொன்னபடி நகர.. இவளுக்கு பதட்டம் பற்றி கொண்டது .

“என்ன இது.. திடீர்னு அந்த ஆள் வேற வந்துட்டான். இவ வேற உள்ளே போயிருப்பாளே..

உள்ளே போனாளோ.. இல்ல இன்னும் காம்பவுண்டுக்குள்ளே சுத்திக்கிட்டு இருக்கிறாளோ தெரியலையே ..

இப்ப என்ன செய்யறது தன்னை அறியாமல் கையை பிசைந்தபடி நின்று இருந்தால் திவ்யா.
 

Kavisowmi

Well-known member
10

வேகமாக கேட் அருகே சென்ற வாட்ச்மேன் ..”முதலாளி வாங்க” என்று கேட்டபடியே கேட்டை திறந்து விட ..

“என்ன இங்கதான இருந்த.. இல்ல எங்கேயாவது நகர்ந்து போனியா “.

“இல்ல முதலாளி இங்கே தான் இருந்தேன் “.

“ சரி சரி “.

“ ஐயா வந்து “.இழுக்க ..”என்ன? என்ன கேக்கணும் கேளு “.

“இல்ல நீங்க இன்றைக்கு தாத்தாவை பார்க்க போகலையா ..

வழக்கமா தாத்தா வீட்டுக்கு போயிடுவீங்களே.”

“ எனக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்குது. அதனால இன்னைக்கு இங்க தான் இருக்க போறேன்.

நாளைக்கு சாயங்காலம் போய்க்கலாம்னு நினைச்சுட்டு திரும்பி வந்துட்டேன் “என்று சொன்னபடியே வேகமாக வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் .

இங்கே சற்று தொலைவில் நகர்ந்து சென்றிருந்த திவ்யா வேகமாக தாராவிற்கு போனில் அழைப்பு விடுத்தாள்.

முதல் ரீங்கிலேயே போனை அட்டென்ட் செய்தவள்.” என்னடி என்ன விஷயம் சொல்லு “என்று கேட்க ..

“இங்க பாரு அந்த லூசு திரும்ப வந்துட்டான் .”

“எந்த லூசு. எனக்கு புரியல “.

“ஏன் உனக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல அந்த ஜெகன் தான் .

அந்த சிடுமூஞ்சி திரும்பி வீட்டுக்கு வந்துட்டான். நீ என்ன செய்ற எப்படியாவது வெளியே வந்துவிடு .”

“என்னடி விளையாடுறியா .நான் இப்ப மொத மாடியில் இருக்கேன் .
இங்க இருந்து எப்படி வர்றது “.

“எனக்கு தெரியாது எப்படியாவது தப்பிச்சு வந்துரு. எனக்கு வேற வழி தெரியல .

என்னால அங்க பங்களா கிட்ட நிக்க முடியல .நான் வேணும்னா பின் கேட்டு பக்கமா வரட்டுமா .”

“இல்ல அங்கெல்லாம் வேண்டாம். அங்க சரியான வழி கிடையாது.

ஆள் நடமாட்டம் இல்ல.. ஏதாவது உனக்கு பிரச்சனை ஆயிடுச்சின்னா “.

“இப்ப நான் என்னதான் பண்றது.”

“ எனக்கு தெரியல ..ஒன்னு செய் திவ்யா நீ அங்க ரோட்ல நிக்க வேண்டாம்.

நீ வண்டி எடுத்துட்டு கிளம்பிடு. நான் எப்படியாவது வெளியில் வந்து ஆட்டோ புடிச்சு நேரா நான் எங்க வீட்டுக்கு போயிடவேன் .”

“என்னடி சொல்ற. எனக்கு ரொம்ப பயமா இருக்குது .உன்னை எப்படி தனியாக விட்டுட்டு போக முடியும்.

உன்னை பத்தி தெரிஞ்சாதான் என்னால இங்கிருந்து போக முடியும் .”

“சரியான அறவேக்காடு டி அவன் ..ஈசியாவே தப்பிச்சிடலாம் .நான் வந்துருவேன் நீ பயப்படாத..

நீ கிளம்பு அங்க நின்னு தேவையில்லாம நீ மாட்டிக்க வேண்டாம். புரிஞ்சுதா .போனை வைக்கிறேன் .அது வீட்டுக்குள்ள வரும் போல இருக்கு .சத்தம் கேக்குது.” போனை வைக்க.. இங்கே திவ்யா சற்று பதட்டத்தோடு சற்று நேரம் நின்றாள்.

பிறகு அவளுடைய வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

“ சாரா எப்படியும் புத்திசாலி ஈஸியா தப்பிச்சிடுவா.. அவன் எல்லாம் ஒரு பெரிய ஆளே கிடையாது .

அவ ஈசியா அங்கிருந்து நகர்ந்து வந்துருவா.. அவ திறமைசாலி “என மனதிற்குள் 100 முறை சொல்லியப்படியே நகர்ந்து இருந்தால்.

இங்கே சாராவின் நிலையோ வேறாக இருந்தது .

மாடியில் ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து நின்றபடி இவனை நோட்டம் விட்டாள்.

இங்கே ஹாலிற்கு வந்தவன் சற்று நேரம் அமர்ந்து மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன பார்க்கிறான் என்பது இவளுக்கு சுத்தமாக தெரியவில்லை .

சற்று மறைந்து நின்று அவனை கவனிக்க.. அவன் அங்கிருந்து அசைவமாக தெரியவில்லை.

அவன் நகர்ந்தால் தானே இவள் வந்த வழியாக வெளியே செல்ல முடியும் .

ஹாலுக்கு அருகே பின்புறத்தில் இருந்த ஜன்னல் வழியாகத்தான் இவள் உள்ளே நுழைந்தது .

இப்போது இவன் ஏதாவது ஒரு அறைக்குள் நுழைந்தான் என்றால் வேகமாக வந்த வழியில் சென்றுவிடலாம் என காத்திருக்க ..அவன் அசைவமாக தெரியவில்லை.

நீண்ட நேரம் வரையிலுமே இருந்தவன் எதையோ யோசித்தது போல வாசல் வரைக்கும் சென்று மேலே தாழ்ப்பால் போட்டவன் சுற்றிலும் அப்படியே பார்த்த பிறகு நேராக வந்து இவள் எந்த ஜன்னல் கதவின் வழியாக உள்ளே நுழைந்தாலோ.. அந்தக் கதவை இறுக பூட்டி அடுத்த இருந்த கதவையுமே பூட்டுவிட்டு திரும்பி நடக்க.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாராவிற்கு மனதுக்குள் பக் என்று இருந்தது.

என்ன செய்வது என எதுவும் தெரியாமல் நின்ற இடத்தில் அவனை கவனித்துக் கொண்டிருக்க ..மறுபடியும் கூட சற்று நேரம் ஹாலில் அமர்ந்து இருந்தவன் பிறகு நேராக மாடிப்படி ஏற ஆரம்பிக்க.. சட்டென என்ன செய்வது என புரியாமல் அங்கிருந்த பக்கத்து அறைக்குள் நுழைந்து ஒரு திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்.

தலை வரை மொத்தமாக தன்னை மறைத்தபடி அங்கே நின்று பார்த்துக் கொண்டிருக்க.. சொல்லி வைத்தார் போல் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது .

மனம் திக் திக் என்ற இவளுடைய இதயத்துடிப்பு இவளுக்கே சத்தமாக கேட்க பயத்தோடு பார்வையிட்டாள்.

சற்று நேரம் வரையிலுமே அந்த இடத்தில் அமர்ந்திருந்தவன் பிறகு வேகமாக வெளியே நின்றிருந்த வாட்ச்மேனருக்கு ஃபோனில் அழைப்பு விடுத்தான்.

“ அண்ணா நான் தான் வீட்ல இருக்கேன்ல ..நீங்க வெளியே காத்திருக்கணும்னு அவசியம் இல்ல .

நீங்க வீட்ல இருக்குற அந்த ரெண்டு நாயையுமே அவிழ்த்து விட்டுட்டு நீங்க கிளம்பிக்கோங்க.

நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு காலைல வழக்கம் போல டூட்டிக்கு வந்துருங்க” என்று சொல்ல..

“ சரி தம்பி சரி இப்பவே கிளம்பிடட்டுமா “.

“ஆமா கிளம்பிக்கோங்க. இனிமே வேலை இல்லையே‌. நான் காலையில உங்களை கூப்பிடுறேன்” என்று சொன்னபடியே மறுபடியும் சற்று நேரம் யோசித்துக்கொண்டிருக்க..

இப்போது திறந்து விட்ட நாயின் சத்தம் பயங்கரமாக இவளுக்கு கேட்டது.

சற்று நேரம் சத்தத்தை கேட்டு நின்றவன் ..பிறகு ஜன்னல் வழியாக பார்த்து “டாமி.. சத்தம் வெளியே கேட்கக்கூடாது புரிஞ்சுதா “என குரல் கொடுத்தான் .

அடுத்த நொடி இரண்டு நாய்களில் சத்தமும் அப்படியே அமர்ந்து விட்டது.

“ வேற எங்கேயும் போகக்கூடாது” என்று சொன்னபடியே சற்று நேரம் வரைக்கும் அங்கேயே அமர்ந்து இருந்தவன் பிறகு நேராக ஒரு கொத்து சாவியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

அவன் வருவதற்குள் புறப்பட்டு விட வேண்டும் என நினைத்தவள் வேகமாக நகர்ந்து சென்று கதவை திறக்க போக..

அதே நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் மறுபடியும் வேகமாக ஓடி வந்து ஏற்கனவே ஒளிந்து இருந்த இடத்தில் ஒளிந்து கொண்டாள் .

கதவை திறந்தபடி அங்கிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவன் .மொத்த பைல்களையும் அங்கே வைத்து பார்வையிட ஆரம்பித்தான்.

ஒவ்வொரு பைலாக பார்த்து வந்தவன் சரியாக முத்துவின் பைலை எடுத்து..” அம்பது லட்ச ரூபாய் பெரிய தொகை .

இந்தப் பணம் கைக்கு வருமா இல்லையா தெரியல..

பேசாம அந்த வீட்டை எழுதி வாங்கிட்டு அதோட வேல்யூஷன் பார்த்து மிச்சப் பணத்தை கொடுத்தால் வேலை முடிஞ்சதுன்னு நினைக்கிறேன்.

இதுதான் பெஸ்ட் ஐடியாவா இருக்கும்” என சொன்னபடியே அந்த பைலை தனியாக எடுத்து நகர்த்தி வைக்க.. பார்த்துக் கொண்டிருந்த இவளின் கண்கள் விரிந்தது .

அதோ அதோ இருக்கிறது தந்தையுடைய வீட்டு பத்திரம் பார்க்கவுமே சற்று பதட்டத்தோடு அங்கேயே கவனித்துக் கொண்டிருக்க..

மொத்த பைல்களையும் எடுத்துச் சென்றவன் அங்கிருந்த ஒரு பீரோவுக்கு வைத்து பூட்டிவிட்டு இவளுடைய அந்த பைலை மட்டும் தனியாக அதே பீரோவில் ஒரு ஓரத்தில் வைத்தான்.

சற்று நேரம் பார்த்து விட்டு பிரோவை பூட்டியவன் மறுபடியும் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்து இருந்தான்.
 

Kavisowmi

Well-known member
11

பார்வை முழுவதும் அவன் மேல் பதிந்திருக்க.. அவனின் செய்கைகள் ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

அவனும் அந்த அறையில் இருந்து நகர்வதாக தெரியவில்லை.

இவளுக்குள் எக்கசக்கமாக பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது.

நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது .

சற்று நேரம் வரைக்கும் அமர்ந்தவன் பிறகு பீரோவிலிருந்து ஒரு டவளை எடுத்துக்கொண்டு அங்கிருந்த பாத்ரூம்பிற்குள் நுழைய ..சற்று அசுவாசமாக உணர ஆரம்பித்தாள்.

மெல்ல அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என நினைக்க.. அதே நேரத்தில் சரியாக அவளுடைய போனிற்கு மறுபடியும் அழைப்பு வந்தது.
வேகமாக எடுத்து பார்த்தால் இப்போதும் திவ்யா தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக சற்று குரலை தனித்து..” ஏன்டி என்ன பிரச்சனை “என கேட்க..

“ என்னடி நான் இங்க பதறிக்கிட்டு இருக்கிறேன் .நீ ரொம்ப அசால்ட்டா சொல்லிக்கிட்டு இருக்குற..

எங்க இருக்கிற நீ அங்கிருந்து வெளியே வந்துட்டியா..”

“ வெளியே.. எப்படி வர்றது நான் தான் உள்ளேயே சிக்கிக்கிட்டு இருக்கேன்‌ வாசல்ல ரெண்டு நாயை அவிழ்த்து விட்டுட்டான்.

அதைத்தாண்டி எப்படி வெளியே வர முடியும். உனக்கு தான் தெரியும் இல்ல .

எனக்கு நாய்னா அத்தனை பயம் ..அதுவும் சரியா ஆளு உயரத்துக்கு வச்சிருக்கறான்”.

“ சரி நீ இப்ப எங்க தான் இருக்கிற ..”

“நான் ஒரு ரூம்ல சிக்கிக்கிட்டு இருக்கிறேன் .நீ பயப்படாத எப்படியும் வெளியே வந்துருவேன் .

ஒருவேளை வர முடியாட்டி ஏதாவது வழி பண்ணலாம்..”

“ எனக்கு ரொம்ப பதட்டமா இருக்குது சாரா .நான் என்ன செய்யறதுன்னு தெரியல .

நான் பேசாம நேரா அங்க வந்துடுறேன். நானே அவர்கிட்ட உண்மையை சொல்லிடுறேன்.

என்னால தான் இன்னைக்கு தேவையில்லாம அங்க வந்து சிக்கிக்கிட்டான்னு”.

“ நீ ஏண்டி தேவை இல்லாம பயந்துக்கற.. அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. நீ பயப்படாத..

நான் எப்படியும் வெளிய வந்துருவேன் .நான் இங்கே இருக்கிறது அவனுக்கு தெரியாது.

சோ ஒருவேளை ஏதாவது பிராப்ளம் ஆகுற மாதிரி இருந்தா கூட ..பிரச்சனை இல்லை.

இவ்வளவு பெரிய வீட்டில் எனக்கு ஒளிஞ்சிக்க இடமா இருக்காது .எங்கேயாவது ஒளிஞ்சிகிட்டு காலையில் யாருக்கும் தெரியாமல் வெளியில வந்துடுவேன் .

நீ பயப்படாத.. எப்படியும் காலையில எந்திரிச்சு வெளியே போனான்னா.. முதல்ல நாயை அதோட கூண்டில் அடைச்சிடுவான்.

பிறகு இவன் எப்படியும் வாக்கிங் போவான். ஏதாவது கேப் கிடைக்கும் பேக் சைடு வழியாகவே எகிறி குதிச்சு வந்துருவேன் .

எனக்கு சுவர் ஏறி குதிக்கிறதோ இல்ல மரத்தில் ஏறி இறங்குவதோ பிரச்சனை இல்ல. உனக்கு தான் தெரியும் இல்ல “.

“அதெல்லாம் கரெக்டு தான் ஆனா எனக்கு இங்கே பக் பக்னு இருக்கு. தேவையில்லாம நான் உன்னை பிரச்சனைக்குள்ள இழுத்து விட்டுட்டனோன்னு”..

“ஒன்னும் பிரச்சனை இல்ல..
பார்த்துக்கலாம்”.

“ எனக்கு இப்போ பயமா இருக்குது அவனால உனக்கு ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சுன்னா.. உனக்கு ஏதாவது ஆபத்து ஆயிடுச்சுன்னா.. கொஞ்சம் யோசிச்சு பாரு “.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான்தான் இங்க தைரியமாக இருக்கிறேன்.

நீ தேவையில்லாம எதையாவது நெகட்டிவா சொல்லி என்னை இன்னமும் பயம் காட்டாத ..

நீ போனை வை. அவன் வர்ற சத்தம் கேட்குது.”

“ நீ எப்படியாவது அங்கிருந்து மெதுவா வெளியே வந்துரு.. அவன் எப்படியும் மாடியில தான் இருப்பான்.

நீ கீழ ஏதாவது ரூம்ல போய் செட்டில் ஆயிடு. காலையில எப்படியாவது வெளியே வந்திடு புரிஞ்சுதா “.

“ஓகேடி நீ டென்ஷன் ஆகாத பாத்துக்குறேன் .நான் எப்படியாவது மொட்டை மாடிக்கு போயிடறேன் அங்க இருந்து ஏதாவது ஒரு மரத்தை புடிச்சு இறங்கி எப்படியாவது வெளிய வந்துருவேன் .நீ கவலைப்படாத சரியா .”

“எனக்கு ரொம்ப பதட்டமா இருக்குது.”

“சரி நீ இப்ப எங்க இருக்கிற..”.

“ நான் நேரா ஹாஸ்டலுக்கு தான் வந்திருக்கிறேன். நீ அங்க பிரச்சனையில் இருக்கறேன்னு தோணும்போது நான் எப்படி என் வீட்டுக்கு போக முடியும்.

நீ ஷேப்பா தப்பிச்சுட்டேன்னு தெரிஞ்சா மட்டும்தான் நான் இங்க இருந்து கிளம்ப முடியும்.”

“நீ அப்படி எல்லாம் பயந்துக்க வேண்டாம். நீ முதலில் உன் வீட்டுக்கு போகணும்னு சொன்னேல்ல .கிளம்பி போ பஸ் டிக்கெட் வேஸ்ட் பண்ண வேண்டாம் .நான் எப்படினாலும் வெளிய வந்துருவேன் .எனக்கு அது பிரச்சனை இல்லை. பார்க்கலாம்.. அவனா.. நானான்னு…

ஒருவேளை மாட்டிக்கற சூழ்நிலை வந்தா கூட எதையாவது எடுத்து மேல அடிச்சிட்டு தப்பிச்சு வந்துருவேன்.
எனக்கு அந்த தைரியம் இருக்கு”.

“நீ தைரியசாலி.. எனக்கு நம்பிக்கை எல்லாம் நிறைய இருக்குது .ஆனா சாரா … என்ன சொல்றதுன்னு தெரியல.

அவனை பார்த்து இருக்கிறல்ல.. முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு அப்படிங்கறது இருக்காது

ஒருவேளை நீ மாட்டிக்கிட்டா உன்னோட நிலைமையை நினைச்சா பயமா இருக்குது.

அவனால உனக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு .

அப்படி இல்லாட்டி கூட போலீஸ்ல கொண்டு போய் விட்டுடுவேண்னு சொன்னா அது இன்னும் பெரிய அசிங்கம் இல்ல.

உன்னோட அப்பாவோட நிலைமையை நினைச்சு பார்த்தியா ..”

“அந்தளவுக்கு எல்லாம் போகாது நீ தேவையில்லாம பயந்துக்க வேண்டாம் .

இப்ப நீ போனை வை.. வர்ற சத்தம் கேட்குது. எக்காரணத்தை கொண்டும் மறுபடியும் போன் பண்ணாத..

நான் ஃபோன்னை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்க போறேன்” என்று சொன்னவள் வேகமாக சுவிட்ச் ஆஃப் செய்து பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள்.
நன்றாகவே உள்ளே ஒதுங்கி மறைந்து கொண்டாள் சாரா.

சற்று நேரம் கழித்து பாத்ரூமில் இருந்து இடுப்பில் கட்டிய டவலோடு வெளியே வந்தான்.

கண்களை இருக மூடிக்கொண்டவள் நன்றாகவே மறைந்து கொண்டாள்.

“ இடியட் அறிவில்லையா.. ஒரு பொண்ணு ரூமுக்குள் இருக்கிறது கூட தெரியாதா? இவன். பாட்டுக்கு இடுப்புல துண்டோட வரான் “என்று சொல்ல..

இன்னொரு மனமோ..” நீதாண்டி வந்து ஒளிஞ்சிகிட்டு இருக்கிற.. அவனுக்கு எப்படி தெரியும் .நீ இங்க ஒளிஞ்சிகிட்டு இருக்கேன்னு..

நீ வாயை மூடிட்டு சத்தம் இல்லாம நில்லு” என்று எடுத்துரைக்க அப்படியே இறுகிப்போய் நின்று இருந்தாள் .

வந்தவன் விசில் அடித்த படியே வந்து பீரோவை திறக்கும் சத்தம் கேட்டது .

கண்களை திறந்து பார்க்கவில்லை. அமைதியாக இறுக மூடியப்படியே நின்று இருந்தாள்.

சற்று நேரம் சத்தம் எதுவும் கேட்கவில்லை எனவும் மெல்ல கண்களை திறக்க.. அதே நேரத்தில் சரியாக இடுப்பில் இருந்த டவளை தூக்கி போடவும் .. சட்டென இவளுக்கு உடல் ஒரு நிமிடம் பதட்டமாக.. இப்போது பார்க்கும் போது அவன் ஷார்ட்ஸ் அணிந்த பிறகு தான் துண்டை கழட்டி இருந்தது புரிந்தது.

“ அப்பா ஒரு நிமிஷம் ஹார்ட் அட்டாக் வர வச்சிருவான் போல இருக்கு. சீக்கிரமா இங்கிருந்து நகர்ந்து போடா .

நான் இந்த ரூம்ல இருந்து சீக்கிரமா வெளியே போகணும்” மனதிற்குள் நினைத்து படியே நின்றிருந்தாள்.

. மறுபடியும் ஃபோனை எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருக்க .. இவன் எல்லாம் சோறு திங்க மாட்டியேடா ..முதல்ல எந்திருச்சு வெளில போ..”மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்க ..அந்த குரல் இவனுக்கு கேட்டதோ.. என்னவோ தெரியவில்லை.

சில நிமிடம் யோசித்தபடியே எழுந்தவன் வெளியே சென்றான் .

வெளியே சென்ற உடனேயே “அப்பா ஒரு வழியாக வெளியே போயிட்டான். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கிருந்து நகர்ந்து போயிடலாம்..” என நினைக்கும் போதே டக்கென கதவை இழுத்து அடைத்து பூட்டியது தெரிய..

” மை காட் ..என்ன இது இப்படி வந்த சிக்கிக்கிட்ட” என நினைத்தபடி வேகமாக ஒளிந்து இருந்த இடத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தாள்.

கதவு வெளிப்புறமாக பூட்டிருந்தது .திறப்பதற்கு வழியே இல்லை .

சாவி அவனிடம் இருக்கிறது என்று புரியவும்.. “இவன் ஏன் இப்படி இருக்கிறான். இந்த ரூமுக்குள்ள என்ன பெரிய புதையலா வச்சு இருக்கிறான். இப்படி பண்றான் “என திட்டியபடியே பெட்டில் சென்று அமர்ந்து கொண்டாள்..

ஒரு அரை மணி நேரம் தாண்டிய போது மறுபடியும் கதவு திறக்கும் சத்தம் கேட்க.. பழையபடி ஏற்கனவே ஒளிந்திருந்த அதே இடத்தில் சென்று ஒளிந்து கொண்டாள்.

விசில் அடித்தபடியே வந்தவன் சற்று நேரம் மறுபடியும் அமர்ந்து இருந்தான்.

பிறகு லேப்டாப்பை எடுத்து எதையோ பார்க்க ஆரம்பித்தான் .

சிறிது நேரம் பார்த்த படியே பிறகு எடுத்து வைக்க.. ஏதேதோ பைல்களை எடுத்து கணக்கு பார்க்க ஆரம்பித்தான்.

நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

சற்று பயத்தோடும் பதட்டத்தோடும் நேரத்தை பார்க்க.. 12 மணியை நெருங்கி இருந்தது .

“நீ என்ன தூங்கவே மாட்டியா டா காலைல அஞ்சு மணிக்கு எழுந்திருக்கற… வாக்கிங் .
போறேன்னு கேள்விப்பட்டேன்.

இப்ப மணி 12 தினமும் இப்படித்தான் தூங்குகிறாயா..

நீ தூங்குவியா இல்ல விடியற வரைக்கும் இத தான் பார்த்துகிட்டே இருப்பியா “மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்க.. திட்டும் சத்தம் கேட்டுவிட்டதோ நேரத்தை பார்த்தவன்.

“ அப்பா 12 மணி ஆயிடுச்சா இன்றைக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு.

எல்லாவற்றையுமே எடுத்து ஓரமாக வைக்க ஆரம்பித்தான்.

மறைந்திருந்த இடத்திலிருந்து அவனைத் தான் கவனித்துக் கொண்டிருந்தாள்

ஒவ்வொன்றாக எடுத்து வைத்தவன் பிறகு ஏசியை ஆன் செய்து விட்டு சென்று கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

இரவு விலக்கு ஒளிர விட அந்த வெளிச்சமே பிரகாசமாக இருந்தது .

“இடியட் இத்தனை வெளிச்சத்திலேயா நீ தூங்குவ ..
இதுக்கு நீ லைட்டை போட்டுட்டே தூங்கலாம்” பேசிக் கொண்டிருக்க..

இது எதுவுமே கண்டு கொள்ளாமல் திரும்பி படுத்தவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.

இப்போது சாரா நேரம் பார்க்க இரவு ஒரு மணி நெருங்கியிருந்தது .

நீண்ட நேரம் வரைக்கும் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருக்கிறாள்.

ஆடாமல் அசையாமல் பீரோவிற்கு பின்னால்..

ஜன்னலுக்கு அடுத்ததாக இருந்த சந்து எனும் போது பெரியதாக.. ஆள் நிற்பதை அவனுக்கு தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல திரை சீலை ஒன்று பெரிய ஜன்னலை அடைத்தது போல நீளமாக ஒதுக்குப்புறமாக நகர்த்தி இருக்க..

அதன் பின்னால் தான் இவள் நின்று இருந்தது.

நீண்ட நேரம் வரைக்கும் நின்றதினால் கால்கள் வலிக்க ஆரம்பித்தது .

நேரத்தை பார்த்தபடியே மெல்ல தலையை திருப்பிப் பார்க்க இங்கே ஜெகனோ ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது.

இப்போது பைல் ஞாபகம் மட்டும் அல்ல..வேறு எந்த ஞாபகமும் இவளுக்கு இல்லை.

இங்கிருந்து தப்பித்தால் போதும் என்கின்ற மனநிலையில் இருந்தாள் சாரா.

“ எப்படியாவது கதவை ஓபன் பண்ணிட்டு வெளியே போயிடணும்” என்று நினைத்து படியே கதவை பார்க்க ..மேலே தாள் போடப்பட்டு இருந்தது.

“இங்கிருந்து வெளியே போயிட்டா போதும் .பக்கத்துல எங்கயாவது ஒளிஞ்சிக்கலாம் .

காலைல எப்படியும் அஞ்சு மணிக்கு எந்திரிச்சு போகும்போது அதுக்கு ஏத்த மாதிரி நம்ம பிளான் பண்ணி வீட்டை விட்டு வெளியே போயிடனும்” என்று நினைத்தபடியே மெல்ல இரண்டு அடி எடுத்து வைக்க..

ஜெகன் இப்போது திரும்பி படுப்பதற்காக திரும்ப.. சட்டென நகர்ந்து பழைய இடத்திலேயே மறைந்து நின்று கொண்டாள்.

கவனம் எல்லாம் ஜெகனின் மேல் இருந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தால் சாரா.
 

Siva Bharathi

New member
இதய கூட்டில் காதல் பிறக்கிறதே.

1
லேசான தூறலாக ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்தது.

மொத்த பேருமே வீட்டுக்குள்ளே தான் குழுமி இருந்தனர்.

யாரிடமும் ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லை .

மிக மிக அமைதி நிலவியது. எல்லோர் மனதிலும் ஒருவித இறுக்கம் இருக்க.. அதைவிட இறுக்கத்தில் இருந்தான் ஜெகன்.

மாடியறையில் கோபமாக அமர்ந்திருந்தான்.

கண்கள் சிவந்து இருந்தது. யார் வந்து பேசினாலும் அடித்து துவம்சம் செய்யும் மனநிலையில் அமர்ந்திருந்தான்.

யாருமே அவனுக்கு அருகே செல்ல பயந்தனர் .

இங்கே கீழையும் நிறைய வேலைகள் பாக்கி இருந்தது.

இவன் வந்து இறங்கி செய்ய சொன்னால் மட்டுமே அடுத்த கட்ட வேலையை தொடர்வார்கள் என்கின்ற நிலையில் இருந்தது .

இவனோ அதிகாலையில் வந்தவன் .இதோ 10 மணி ஆகி இருக்கிறது .

அதே இறுக்கத்தோடு மாடியறையில் உழன்று கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து அவனுடைய தாத்தா பழனி அந்த அறைக்குள் பிரவேசித்தார்.

“ இன்னும் எத்தனை நேரம் இப்படியே இங்க முறைச்சிக்கிட்டு இருக்க போற.. ஜெகன் கீழ வந்து அடுத்த கட்ட வேலையை பார்க்கணும் இல்லையா .”

“எப்படி தாத்தா.. எப்படி இது பாசிபிள். அவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குது.

பிரச்சனை எங்க தான் இல்ல.. ஒன்னுமில்லாத ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படி வாழ்க்கையை முடிச்சுக்குவாரா..

எனக்கு அவரை பார்க்கும் போது அவ்வளவு கோபம் வருது.

நம்மகிட்ட என்ன இல்ல .எதுக்காக இப்படி ஒரு அவசர முடிவு”.

“ டேய் நடந்து முடிஞ்சிருச்சு .இனி அத பத்தி பேசி பிரயோஜனம் இல்லை .

அடுத்து நடக்க போறத பாக்கணும். நீ கீழ வந்தா தான் அடுத்து என்ன செய்யணுமோ அதை செய்வாங்க .”

“முடியாது தாத்தா .நிச்சயமா அந்த மனுஷனோட முகத்தை என்னால பார்க்க முடியாது.”

“ டேய் அங்க ஹால்ல படுக்க வைத்திருக்கிறது உன்னோட அப்பா டா .

இறந்தவருக்கு கடமையை செய்யணும் இல்லையா .”

“இப்ப இவர் எதுல குறைச்சு போயிட்டாரு ..நம்ம கிட்ட என்ன இல்லன்னு.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் .”

“என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல .தொழில்ல கொஞ்ச நாளா நஷ்டம் தான். எனக்கு நல்லா தெரியும் .

ஆனா அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல .நம்மகிட்ட இருக்கிறத அவங்களுக்கு கொடுத்துட்டு ரிலாக்ஸா இருடான்னு நிறைய முறை சொல்லிக்கொண்டு இருந்தேன்..

எதையுமே உன்னோட அப்பா கேட்கல. அவர் கொடுத்த பக்கம் எந்த பணமும் திரும்ப கிடைக்கலை.

வாங்குனவங்க எல்லாருமே ஏமாத்திட்டாங்க .அதுவே ஒரு மாதிரியான அழுத்தம் ஆயிடுச்சு .

நான் தான் போன முறையே உனக்கு போன் பண்ணி சொன்னேன்ல ..

உன்னோட அப்பாவோட நிலைமை சரியில்ல .நீ கொஞ்சம் அவசரமா இங்க வரணும்னு “.

“தாத்தா புரியுது தாத்தா . உடனே எப்படி வர முடியும் .நான் சொல்லிட்டு தானே இருந்தேன்.

இதோ பைனல் இயர் போய்க்கிட்டு இருக்கு . ஏற்கனவே கவனிக்கிற பிசினஸ் ஒரு பக்கம்..அது முடிக்கவும் உடனே வந்துருவேன்னு சொன்னேன். யூ எஸ் என்ன பக்கத்துலயா இருக்குது..தாத்தா ..”

“சரிடா சரி அதுக்காக இப்படியே இங்க இருந்தா ஆச்சுதா.. கீழ வா. உன் அப்பா முகத்தை கடைசியா பாரு .அழுகை வந்தா அழுதிடு .

இதுக்கு மேல என்ன சொல்றது. உனக்கு அப்பான்னா எனக்கு பையன் .

என்னாலையும் ஏத்துக்க முடியல .நேத்துல இருந்து உடைந்து போய் தான் இருக்கிறேன் .

இங்க இப்போ உனக்கு ஆறுதல் சொல்றதா.. இல்ல இறந்தவனை சந்தோஷமா அனுப்பி வைக்கிறதான்னே தெரியல “.

“எப்படி தாத்தா உயிரை விட்டுட்டு அவரால சந்தோஷமா போய் விட முடியுமா .

நம்மள பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தாரா.. நான் பல டைம் சொன்னேனே ..

யாருக்கு வேணும்னாலும் கொடுங்க ஆனா ஸ்ட்ரீட்டா திருப்பி வாங்க முடியும்னா மட்டும் கொடுங்கன்னு கேட்டேன் .

ஆனா எதையுமே செய்யல” என்று சொன்னவன் .சட்டென்று வேறு ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தான் .

“ஆபீஸ்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .என்ன கேட்டேன் உங்ககிட்ட..

யார் யாருக்கு அப்பா கடன் கொடுத்தார் என்று பார்த்து.. ஏதாவது டாக்குமெண்ட் இருந்தா உடனே இங்க கொண்டு வர சொல்லி இருக்கிறேன்.

சொல்லி நேரம் என்ன ஆச்சு .கிட்டத்தட்ட நான் இங்க வந்து மூணு மணி நேரம் தாண்டியாச்சு.

இது வரைக்கும் எந்த ரெஸ்பான்ஸ்சும் இல்ல. என்ன தான் செஞ்சுகிட்டு இருக்கீங்க “.

“ டேய் ஏன்டா ஏன் இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கிற.. இந்த நேரம் ..
இதெல்லாம் தெரியணுமா”.

“ நிச்சயமா தெரியனும் தாத்தா.. இன்றைக்கு அப்பா இல்ல அதுக்கு காரணம் ..அவர் கொடுத்த பணத்தை எல்லாத்தையுமே ஏமாத்தி இருக்காங்க.

யார் யார் ஏமாத்தி வாங்கினாங்கன்னு பார்த்து நான் அவங்க கிட்ட பணத்தை வசூல் பண்ணி ஆகணும்.

என் அப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும் .நான் சும்மா விடமாட்டேன் .

என்ன காசு பணம்னா சும்மாவா.. சும்மா தூக்கி கொடுத்துடுவாங்கன்னு நினைச்சாங்களா ..

இன்னைக்கு அப்பா இல்ல. அதுக்கான தண்டனையை கொடுத்தவர்கள் எல்லாருமே அனுபவிக்கணும் .

யாரையும் நான் சும்மா விட போறதில்லை .அவர்களே கொண்டு வந்து கொடுத்துட்டா பிரச்சனை இல்ல .

அதே நேரத்துல கொடுக்கலைன்னா மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன் .”

“டேய் இத்தனை கோவம்.. இத்தனை ஆக்ரோஷம் தேவையில்லை ஜெகன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு”.

“ முடியாது தாத்தா, இன்றைக்கு மொத்த டாக்குமெண்ட்டையும் பார்த்து எடுத்து வச்சுட்டு தான் கீழே வருவேன்.

அது எவ்வளவு நேரம் ஆனாலும் சரி” என்றவன் .மறுபடியும் அழைத்தான்.” சார் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன்.

இதோ வந்துகிட்டே இருக்கிறேன் . இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துருவேன் .”

“நேரா மாடிக்கு வாங்க அதுக்கு பிறகு மத்த காரியங்களை பார்ப்பீர்களாம்” என்று சொன்னவன். மறுபடியும் அங்கிருந்து இருக்கையில் அமர்ந்திருந்தான் .

கண்கள் சிவந்து இருந்தது. சொல்ல முடியாத வேதனை மனதில் இருக்க.. அந்த இருக்கும் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது .

இந்த சமயம் அவனது முகத்தை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலுமே சற்று பயப்படுவர்.

அந்த அளவிற்கு கோபத்தில் முகம் சிவந்து கண்கள் அனலாக தகிக்க.. ஒரு இடத்தில் அமர முடியாமல் உழன்று கொண்டு இருந்தான்.

அறைக்குள் அடைப்பட்ட புலியை போல அவனின் ஒவ்வொரு செய்கைகளையுமே பார்த்தவருக்கு பயம். உண்மையில் மனதில் தொற்றிக் கொண்டது.

தந்தையின் உதவியாளர் மொத்த பைல்களையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பையில்கள் கையில் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வர ..அதை பார்க்கமுமே இவனுக்குள் இன்னமும் கோபம் சுழற்றி அடித்தது .

“என்ன மனுசன் இந்த ஆளு.. யாரு என்ன கேட்டாலும் அப்படியே எடுத்து நீட்டிடுவாரா..

மொத்த சொத்தையும் இழந்துட்டு வாழ்வதற்கு வழியே இல்லாத மாதிரி உயிரை விட்டுட்டு என்ன சொல்றது..” என தலையை உதறிக்கொண்டான்.

இவனுடைய தந்தை நந்தகுமார் கிட்டத்தட்ட 50 வயது நெருங்கி இருந்தவர் .

தாயார் சிறுவயதிலேயே இறந்திருக்க இவனை ஆரம்பத்தில் இருந்து செல்லமாக நல்ல நண்பனை போல் வளர்த்தவர் .

படிப்பிற்காக என்று வெளிநாடு செல்ல.. எந்த மறுப்பும் செல்லாமல் அனுப்பி வைத்தவர்.

தாத்தா பழனி இவர்களோடு இல்லை

கிராமத்திலேயே பிறந்து வளர்ந்ததினால் அங்கிருந்து அவருக்கு வர மனம் இல்லை.

கிராமத்து வீட்டிலேயே தங்கி கொண்டார் . மகனையும் பேரனையும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதோடு சரி .

வருடத்திற்கு ஒருமுறை ஜெகனை அழைத்து தன்னோடு வைத்துக் கொள்வார் .

மகனின் மேலும் பேரனின் மேலும் நிறையவே பாசம் இருந்தது .ஆனால் ஏனோ இந்த நாகரீக சிட்டி வாழ்க்கை அவருக்கு பிடிக்கவில்லை.

அதனாலேயே இங்கே வந்து தங்குவதை தவிர்த்து வந்திருந்தார் .

ஒருவேளை நந்தகுமாரோடு வந்து தங்கி இருந்தால் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு இறப்பு நிகழ்ந்து இருக்காது. என்று மனம் கேள்வி கேட்க..

அவரும் கண்கள் கலங்கியபடி தான் அமர்ந்திருந்தது.

யாரிடம் என்ன சொல்வது எப்படி சமாளிப்பது எதுவுமே புரியவில்லை.

கொண்டு வந்த பைல்களை வேகமாக எடுத்து புரட்டிப் பார்த்தான்.

நந்தகுமாரை ஒரு வகையில் பாராட்டியே ஆக வேண்டும் .

கொடுத்திருந்த ஒவ்வொரு பணத்திற்குமே சரியாக டாக்குமெண்ட் போட்டு வாங்கி வைத்திருந்தார் .

பணம்தான் திருப்பி வரவில்லையே தவிர டாக்குமெண்டில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தது .

சிலது எல்லாம் சட்டப்படி ரெஜிஸ்டரும் செய்து வைத்திருந்தார் .

பார்த்தவுடன் முகம் லேசான புன்னகை தொற்றியது .

“என்னடா இத்தனை பிரச்சனையிலெயும் சிரிக்கிற” என்று பேரனை கேட்க ..

“அப்பா ஏமாந்தவர் தான் ஆனால் ஒரு விஷயத்துல கொஞ்சம் தெளிவா இருந்திருக்கிறார் .

யார் யாருக்கு என்ன கொடுத்திருக்கிறார்களோ சரியான டாகுமெண்ட்ட கரெக்டா வெச்சி இருக்கிறார் .

அந்த வகையில் பாராட்டலாம்.அதுக்காக அவர் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன்.

இந்த நிமிஷம் கூட அவரோட முகத்தை பார்க்க எனக்கு துளி கூட விருப்பம் இல்லை.

வாழ்க்கையில ஜெயிச்சவங்களை தலைக்கு மேல வச்சு கொண்டாடலாம் .ஆனால் தோற்றவர்களை பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறவன்..

அப்படி நினைக்கிற எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நான் நெனச்சு பாக்கல.”

“அப்படியெல்லாம் பேசக்கூடாது ஜெகன் .அவன் உன்னோட அப்பா .”

“ இல்லன்னு சொல்லலை தாத்தா .ஆனா இப்படி ஒரு காரியம் பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை” என்று சொன்னவன் மொத்த பைல்களையும் எடுத்து அங்கே இருந்த டிராவில் வைத்து பூட்டினான்.

சாவியை எடுத்து வைத்தவன் “சரி தாத்தா கீழே வாங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம் .

முடிவு எடுக்கிறது சுலபம்தான் ஆனால் அதை ஏத்துக்கிற பக்குவம் எனக்கு இல்ல.

அடுத்தடுத்து வேலை நடக்கட்டும் .நான் அவரோட முகத்தை பார்க்க மாட்டேன் தாத்தா .

நான் வாசல்ல வெயிட் பண்றேன் .என்ன செய்யணுமோ உங்க பையனுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை செஞ்சு முடிங்க .

பெத்த அப்பா என்கிற முறையில் தோள்ல சுமந்து எடுத்துட்டு வரேன் “என்று சொல்லிவிட்டு கோபத்தோடு கீழே இறங்கினான் ஜெகன்.

பேரனின் மனநிலை இவருக்கு நன்றாக தெரிந்தது.

அவன் கோபப்படுவதும் சரிதானே ..

அதிலும் அப்பாவும் மகனும் நண்பர்கள் போல தான் பழகியது.

மகனிடம் இதுதான் பிரச்சனை இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று கேட்டிருந்தால் கூட அவன் மொ
த்தத்தையும் விட்டுவிட்டு இங்கு வந்து இருப்பான்.

தந்தைமின் பிரச்சனைகளை சமாளித்து இருப்பான் .

இப்படி மொத்தமாக உயிரை விடுவது என்பது தவறு தானே..மனதிற்குள் நினைந்தபடியே சற்று சோர்வாக கீழே இறங்கினார் பழனி.
அருமை சகி ❤️❤️❤️❤️❤️❤️
 

Siva Bharathi

New member
2

இதோ ஒரு வாரம் முடிந்து விட்டது.

நந்தகுமார் இறுதி காரியங்கள் முடிந்து..

இன்னமும் அந்த வீட்டில் இறுக்கம் அப்படியே இருந்தது.

ஜெகனின் முகத்தில் புன்னகை என்பதே மருந்துக்கும் இல்லை.

எப்போதும் எதையாவது ஒன்றை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

கம்பெனியின் மொத்த பொறுப்புகளையும் இவன் எடுத்து இருந்தான்.

பழைய வேகம் கம்பெனியில் துவங்கியிருந்தது .

சிறு சிறு கடன்களை கையில் இருந்த பணம் கொண்டு சரியாக கொடுத்து முடித்திருக்க…

புதிய புதிய ப்ராஜெக்ட்.. துவங்குவதற்கு பெரிய பெரிய பிளான்களை போட்டுக் கொண்டிருந்தான்.

கூடவே இன்னொன்றையும் மறக்கவில்லை .

தந்தை யாருக்கெல்லாம் கடனாக பணம் கொடுத்திருந்தாரோ அனைவரது பெயரையுமே தனியாக லிஸ்ட் எடுக்க ஆரம்பித்து இருந்தான்.

ஒவ்வொருவரிடமும் பிடிவாதமாக கேட்டு வாங்கிக் கொண்டு இருந்தான் .
கிட்டத்தட்ட இதுவரைக்கும் 10 பேருக்கு மேல் பணத்தை வாங்கி இருந்தான்.

அந்த பணமே அதிகமாக தான் வந்தது .

தந்தை யாருக்கெல்லாம் அவசரமாக கொடுக்க வேண்டும் என எழுதி வைத்திருந்தாரோ.. அதன்படி அவர்களுக்கு முதலில் பணத்தை கொடுத்து செட்டில் செய்து கொண்டிருந்தான்.

இவர்களுடைய பிசினஸ் கன்ஸ்ட்ரக்சன் ..

வீடுகளை கட்டி கொடுப்பது ஏற்கனவே நிறைய இடத்தில் இடங்களாக வாங்கி போட்டு இருக்க..

ஒவ்வொன்றையுமே பார்வையிட்டான். அதற்குரிய பிளான்களை தங்களது கம்பெனியில் உள்ள டீம்களிடம் கேட்டு வாங்கி அதற்கான வேலையை தொடங்கி இருந்தான்.

இயல்பு நிலைக்கு வந்ததாக தெரிந்தாலுமே அவன் இன்னமும் வந்திருக்கவில்லை.

அவனால் அவனுடைய தந்தையின் இழப்பை இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

யாரெல்லாம் அவனிடம் பணம் கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டு இருக்கிறார்களோ.. அவர்களுக்கு எல்லாமே இவனுடைய பாணியில் சரியாக பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்தான்.

நிறைய பேர் அதனை பார்த்து பயந்து மொத்த பணத்தையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றனர் .

“என்னோட சூழ்நிலை.. கொஞ்சம் பிரச்சனை .அதனால தான் என்னால டக்குன்னு பணத்தை ரெடி பண்ணி கொடுக்க முடியல.

ஐ அம் சாரி ஜெகன் .அதுக்காக நீங்க இப்படி எல்லாம் செய்யக்கூடாது .

ஆல்ரெடி எங்க பிசினஸ் இரும்பு சம்பந்தப்பட்டது .உங்களுக்கு தெரியும் தானே ..

மொத்த பேர்கிட்டேயும் ப்ரோடெக்டை கொடுக்காதீங்க என்கிற மாதிரி நீங்க கம்பெனி காரங்க கிட்ட பேசிட்டதா அங்க சொன்னாங்க.

சரியான நேரத்துக்கு வந்தா தான் என்னால திருப்பி பிசினஸ் பண்ண முடியும்.”

“ புரியுதுல்ல.. கடனாதான் வாங்குறீங்க .சில நாட்களில் திருப்பி தரேன்னு சொல்லி தான் பிசினஸ் பண்றீங்க .

அதே மாதிரி தானே என்னோட அப்பாவும் உங்ககிட்ட கொடுத்தாரு..

சரியான நேரத்துக்கு பணத்தை கொடுத்து இருந்தா இன்னைக்கு அவர் உயிரோட இருந்து இருப்பார் .

இதுக்கு எல்லாம் நீங்க என்ன சொல்ல போறீங்க”.

“ ஐ எம் சாரி ஜெகன் “சற்று தலை குனிந்து நின்று இருக்க.. அவரையே முறைப்படி ..

“சரி கிளம்பிக்கோங்க .ஆனா ஏற்கனவே பேசினது பேசினது தான் .

இதுக்கு மேல நான் எந்த பதிலும் சொல்றதா இல்ல .இதுக்கு மேல உங்களோட பிரச்சனை..

உங்களால பேசி சமாளிச்சு.. உங்களோட பிசினஸ் இம்ப்ரோவ் பண்ண முடியும்னா பண்ணிக்கோங்க .

ஆனா சொன்ன சொல்ல நான் மாத்தி சொல்ல மாட்டேன். கிளம்புங்க “என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஒவ்வொரு ஃபைலாக பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை அன்றைக்கு நடுவே இருந்த அந்த ஃபையில் விழுந்தது.

இவன் கைக்கு சிக்கியது அந்த ஃபைல்..கத்தையாக இருக்க எடுத்து பிரித்துப் பார்த்தான்..அது ஒரு வீட்டு பத்திரம்.

அதைப் பார்த்தப்படியே பேப்பரை நகர்த்த… கடைசியாக எழுதியிருந்த சில பேப்பர்களை எடுத்து படித்துப் பார்த்தான்.

கிட்டத்தட்ட கடன் வாங்கி ஒரு வருடங்களுக்கு மேலாக ஆகி இருந்தது.

இதுவரையிலும் வட்டியாக எந்த பணமும் கொடுத்து இருக்க வில்லை .

வட்டி போட்டால் மட்டும் இந்த நேரத்திற்கு அந்த வீடு இவர்களின் கைக்கு வந்திருக்கும் .

அந்த அளவில் வட்டி மட்டும் ஏறி இருந்தது.

யோசனையோடு ஒவ்வொரு பக்கமாக திருப்பி பார்த்தான். கிட்டத்தட்ட 10 சென்ட் அளவில் பெரிய வீடு அது.

பணம் ஏன் தரவில்லை எந்த தகவலும் இல்லை .

இது யாருடையது. என்ன? எது எதுவுமே தெரியவில்லை .

முத்து என்கின்ற பெயர் மட்டும் முன்னாள் இருந்தது.

வீடும் கூட அவரின் பெயரில் தான் இருந்தது .யோசனையோடு தன்னுடைய உதவியாளனை திரும்பி பார்த்தான்.

“இது யாரோடது..சொல்ல முடியுமா “என்று நீட்ட திருப்பி பார்த்தவர் .

“எனக்கு தெரியலையே தம்பி. இந்த பெயரே புதுசா இருக்கிறது.

இவர் பத்தி எதுவுமே தெரியலையே “என்று சொல்ல..

“ எனக்கு இவரு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வேணும் .

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பணத்தை வாங்கி இருக்கிறார் .

ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் திருப்பி கொடுக்கல.

மத்தவங்களை விடவும் கொடுத்த பணம் இவருக்கு ரொம்ப ரொம்ப அதிகம்.

கிட்டத்தட்ட அப்பவே 50 லட்சம் கொடுத்து இருக்கிறார் .

இதுக்கு என்ன அர்த்தம் .வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கல .

வட்டி கொடுக்காட்டி கூட பரவால்ல .அசலையாவது கொடுத்து இருக்கணும் .

அதையும் செய்யல .இந்நேரத்துக்கு வீட்டு பத்திரம் அப்பாவோட பேர்ல மாறி இருக்கணும் .

அதையும் செய்யல. என்ன அப்பாவை ஏமாத்துன ஆட்கள்ல இந்த ஆள் கொஞ்சம் மோசம் போல இருக்குது .கரெக்டா எனக்கு சொல்லணும் “.

“சரி தம்பி .ஒரு நாள் டைம் கொடுங்க .நான் விசாரிச்சு சொல்றேன்.”

“ நண்பர்கள்ல யாராவது ஒருத்தரா இருப்பாருன்னு நினைக்கிறேன்.”

“ யாரா இருந்தாலும் சரி ஆனா இந்த மாதிரி ஒரு ஆள் அப்பாவோட இறுதி காரியத்துக்கு வந்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை .”

“உண்மைதான் தம்பி நான் கவனிச்சேன் .இந்த பேர்ல யாரும் இல்ல . பார்க்கலாம் விசாரிக்கிறேன்.”

“வீட்டு அட்ரஸ் இருக்கு இல்லையா .நேரா அந்த ஊருக்கே போயி விசாரிச்சுட்டு வந்துருங்க .

அவர் என்ன பண்றாரு .இப்ப என்ன நிலைமையில் இருக்கிறார் .எல்லாத்தையுமே விசாரிச்சிட்டு வாங்க .

கூடவே முடிஞ்சா ஒருமுறை போய் ஞாபகப்படுத்திட்டு வாங்க.

இது மாதிரி ஏற்கனவே பத்திரத்தை கொடுத்து இருக்கிறீங்க .

இதுவரைக்கும் பணம் கட்டல இது பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேளுங்க.

உங்களால முடியாத பட்சத்தில் வீட்டை மாற்றி எழுதிக் கொடுக்க தயாரா இருங்கன்னு சொல்லிட்டு வாங்க .”

“சரி தம்பி ..சரி சொல்லிடுறேன்.”

“அங்க பேசி முடிச்சுட்டு வந்த பிறகு என்ன வந்து பாருங்க.

நான் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் .

ஆனால் வந்த சொன்னவரின் தகவல் கேட்டதும் இவனுக்கு கோபம் தான் அதிகமாக வந்தது.

ஏனென்றால் அங்கே யாரை பார்க்க சென்றாரோ அவர் சற்று மரியாதை எதுவும் கொடுக்கவில்லை.

இவனுடைய உதவியாளருக்கு.. கூடவே அதற்கான ஆதாரம் இருக்குதா என்று கொஞ்சம் திமிராகவே கேட்டதாக வந்து சொல்ல..

மொத்த கோபமும் அந்த முத்துவின் மேல் திரும்பி இருந்தது .

யோசிக்கவே இல்லை அப்போதே அந்த நிமிடமே புறப்பட்டிருந்தான்.

‘ எவ்வளவு தைரியம் ..எவ்வளவு திமிரு. யாரு என்ன எதுன்னு கேட்காம எவ்வளவு திமிராவா பதில் சொல்லுவாங்க.

இனி நான் பார்த்துக்கறேன்.”
கோபமாகத்தான் முத்துவை பார்க்க கிளம்பியது .

இவன் சென்று அவர்களது வீட்டு வரவேற்பையில் அமர்ந்திருக்க.. முத்து வருவதற்கான அடையாளமே தெரியவில்லை .

“அந்த ஆள் இங்க இருக்கிறானா இல்லையா.. என்னதான் நினைச்சுகிட்டு இருக்கேன் .

எனக்கு வேலை இல்லயா.. எனக்கு எத்தனையோ வேலை இருக்குது .

அத்தனையையும் விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கிறேன் .

எனக்கு என்ன தலை எழுத்தா “கொஞ்சம் கோபமாக உதவியாளரிடம் கடிந்து கொள்ள ..

“சார் வந்துருவாங்க .5 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க” என்று சொன்னவன் .மறுபடியும் அவரின் நம்பருக்கு அழைத்தான் .

“வெளியூர்ல கோயிலுக்காக போயிருந்தேன். திரும்பி வந்து கொண்டிருக்கிறேன் . இன்னும் அரை மணி நேரம் ஆகும் சொல்லி இருப்பாங்களே “என்று சொல்ல ..

“எங்களுக்கு அதெல்லாம் தெரியாது நாங்க இங்க வந்து அரை மணி நேரமா காத்திருக்கிறோம். சீக்கிரமா வர பாருங்க “என்று சொல்லிவிட்டு கட் செய்தார்.

“சார் வந்துகிட்டு இருக்காங்களாம். இன்னும் பத்து நிமிஷத்துல வர்றதா சொல்லி இருக்காங்க .’

“எத்தனை பத்து நிமிஷம்.. காலையில வந்து எவ்வளவு நேரம் ஆயிடுச்சு .

உனக்கு தெரியலையா “என கோபமாக சொன்னபடியே அமர்ந்து இருக்க..

கிட்டத்தட்ட மறுபடியும் அரைமணி நேரம் தாண்டிய பிறகு வந்தவர் .சற்று படபடப்பாக தான் இவனை வந்து பார்த்தது .

“வணக்கம் சார் .வாங்க வாங்க உட்காருங்கள்” என்று சொல்ல..

“ நான் வந்து உட்கார்ந்து கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாண்டிடுச்சு.

இந்த நிமிஷம் வரைக்கும் வரல. என்ன தான் உங்க மனசுல நினைச்சுகிட்டு இருக்கீங்க .

இந்த பத்திரத்தை பத்தியாவது தெரியுமா “என சொன்னபடியே ஏற்கனவே கொண்டு வந்திருந்த டாக்குமெண்டின் நகலை எடுத்து அவர் முன்னால் போட்டான் .

வேகமாக எடுத்து பார்த்தவர் சற்று தலை குனிந்த படி ..”ஆமாம் முன்னாடி வாங்கின பணம் தான் .ஆனா என்னால கொடுக்க முடியலை..

பிசினஸ்ல கொஞ்சம் லாக்..வெளியே வர முடியல .நிறைய லாக் ஆயிட்டேன் பிசினஸ் லாஸ் ஆயிடுச்சு.

அந்த டைம் தான் உங்க அப்பா கிட்ட இந்த பணத்தை வாங்கினது.

இப்ப நந்தகுமார் எப்படி இருக்கிறார்”என்று கேட்க அவரின் முகத்தையே கோபத்தோடு பார்த்தான் .

“மொத்த பேருக்குமே இது போல பணத்தை அள்ளி அள்ளி கொடுத்தா என்ன ஆகும் .

அந்த மனுஷன் நல்லா இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ..

இன்றைக்கு அவர் உயிரோட இல்ல. அவர் இறந்து முழுசா பத்து நாளைக்கு மேல தாண்டிருச்சு .”

“அச்சச்சோ எப்படி தம்பி “.என பதறி கேக்க ..

“போதும் உங்களோட எந்த பதட்டத்தையும் ,நடிப்பையும் நான் பார்க்க வரல .

எனக்கு தேவை என்னோட பணம் .50 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கீங்க .

இன்னைக்கு வட்டியோட கிட்டத்தட்ட அறுபது லட்சம் தாண்டியாச்சு .

எனக்கு பணம் உடனே வேணும் ஒரு மாசம் தான் டைம் .

அதுக்குள்ள நீங்க பணத்தை மொத்தமா ரெடி பண்ணி கொடுக்கிற வேலையை பாருங்க .

அதை சொல்றதுக்காக தான் வந்தேன். ஒருவேளை உங்களால கொடுக்க முடியலன்னா ..

நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் .இந்த பத்திரம் நகல் எல்லாமே கோர்ட்ல ப்ரடியூஸ் பண்ணுவேன் .

நீங்களே வீட்டை காலி பண்ணி கொடுக்க வேண்டியதா வரும் .

என்ன பண்ணனும்னு முடிவு எடுத்துக்கோங்க
..

“ தம்பி ப்ளீஸ் ..நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க .எனக்கு இருக்கிறது ஒரு வீடு மட்டும் தான்.

இதை விட்டா என்கிட்ட எதுவுமே இல்ல .இருக்கிறது இந்த ஒரு வீடு தான் .
இதையும் விட்டுட்டா எப்படி!”.

“ அதுக்காக நான் தலையில துண்டை போட்டுட்டு போக முடியுமா ..

இதெல்லாம் கேக்குறதுக்கு நல்லா இல்ல .எனக்கு என்னோட பணம் வந்தே ஆகணும் .

நான் கேட்கிறது அதுதான் ரெடி பண்ண முடியுமா முடியாதா..

அதை தவிர நான் எதையும் கேட்க தயாராக இல்லை .

அது உங்களோட பிரச்சனை.. நீங்க பணப்பிரச்சனைல இருக்கீங்களா ..இல்ல பணத்தை பத்திரப்படுத்தி வச்சிட்டு உட்கார்ந்திருக்கிறீர்களா..

எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது .எனக்கு தேவை என்னோட பணம்.

அதை தவிர நான் எதையும் கேட்க தயாராக இல்லை.

என்னோட பணம் வரணும் .அதை தவிர நான் எதையும் கேட்க தயாராக இல்லை.”

“சட்டுனு வந்து இப்ப கேட்டா நான் என்ன பண்ணுவேன். என்கிட்ட எதுவுமே இல்ல. சொன்னா புரிஞ்சுக்கோ தம்பி “சற்று பதட்டமாகத்தான் அவர் பேசியது.

அவரின் முகத்தை பார்த்தவன் “இந்த பேச்செல்லாம் இங்க ஆகாது .முத்து புரியுதா …

என் அப்பா இன்னைக்கு உயிரோட இல்ல .அதுக்கு காரணம் என்ன தெரியுமா..

கையில பணம் இல்லாதது. கொடுத்த பணம் எதுவுமே கைக்கு வரவில்லை.

கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்ல கொஞ்சம் லாஸ் ..அவரால தாங்க முடியல .

தற்கொலை பண்ணிக்கிட்டாரு.. இன்னைக்கு அந்த மனுஷன் உயிரோட இல்ல .

அதுக்கு காரணம் என்னன்னு நினைக்கிறீங்க உங்கள
போல ஆட்களுக்கு பணம் கொடுத்து லாக் ஆனதாலதான் .

அதனால நிச்சயமா நான் யாரையும் மன்னிக்க மாட்டேன்.

எனக்கு தேவை என்னோட பணம் .எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ ரெடி பண்ணுங்க. இப்ப நான் கிளம்புறேன் “என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். சற்று திகைப்போட அமர்ந்திருந்தார் முத்து.
ஆத்தி ரெம்ப கரார் தான் 🙄🙄🙄🙄🙄
 

Kavisowmi

Well-known member
12
அரை மணி நேரம் வரையிலும் பொறுமை காத்தவள் எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என நினைத்து சரியாக கதவருகே சென்றிருந்தாள்.
கதவை திறக்கப் போனவளுக்கு கடைசி நிமிடத்தில் ஞாபகம் வந்தது .
அவன் வைத்திருந்த கொத்து சாவி..
ஒரு வேளை வாசலை திறப்பதற்கு அந்த சாவி உதவினால்..
அல்லது வேறு ஏதாவது ஒரு அறையை திறப்பதற்கு உதவினால் என்று தோன்றவும்.. வேகமாக கதவை அப்படியே விட்டுவிட்டு மெல்ல அவனுக்கு அருகே சென்றாள்.
அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.
சாவி அவனுடைய தலையணைக்கு அருகில் வைத்ததை பார்த்திருந்தாள்.
மெல்ல தலையணைக்கு அடியில் பூப்போல லேசாக தூக்கிப் படி கையை விட்டு சாவியை எடுப்பதற்காக மெல்ல நகர்த்த.. சாவி இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை.
மெல்ல மெல்ல பயத்தோடு அவனுடைய முகத்தை பார்த்தபடியே தேட..
சரியாக கையில் சாவி மாட்டியது .மெல்ல உருவியப்படியே தன்னைத்தானே மெச்சி கொண்டாள் .
“அட லூசு.. இப்படியா தூங்குவ.. ஒருத்தி ரூமுக்குள்ள இருக்கறா.. கண்டு பிடிக்கலை..
இதோ எளிதாக கதவை கூட திறந்துட்டேன் .இப்ப நான் வெளியே போக போறேன்..
சாவி கூட கிடைச்சிருச்சு “என சொன்னபடியே நகர போனது தான் தெரியும் .
அடுத்த நிமிடம் என்ன நடக்கிறது என்று புரிவதற்கு முன்னாலேயே கண்கள் அதிர்ச்சியில் விரிந்திருந்தது.
“என்ன தேடினது கிடைத்ததா.. அதுக்குள்ள புறப்பட்டா எப்படி ?”என்று கேட்டிருந்தான் ஜெகன்.
கை பிடித்து இழுத்த வேகத்தில் கட்டிலில் மொத்தமாக சரிந்து விழுந்து இருந்தால் சாரா.
அவளை எங்கும் அசையாதபடி இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கேட்க ..
அவன் முகம் இப்போது இன்னமும் பெரியதானது போல தோன்றியது இவளுக்கு ..
பயத்தில் பார்த்தபடியே “விடுங்கள்” என்று கத்தினாள் .
“ஹலோ நீ வந்திருக்கிறது என்னோட வீட்டுக்குள்ள . அது தெரியுதா.
நான் எப்படி பட்டவன். என்ன ஏதுன்னு தெரியாம எவ்வளவு தைரியமா என்னோட அறைக்குள்ள வருவ சாரா” என்று சொல்ல ..
இவளுக்கு இன்னமும் அதிர்ச்சி தொற்றி இருந்தது .
கண்களை அகல விரித்தால்.. “அப்படின்னா என்னை தெரியுமா.. என் பேரு சாரான்னு தெரியுமா” என்று கேட்க ..
“ஏன் தெரியாம.. மொத மொதல்ல உன்னோட அப்பாவ பார்க்க வரும் போது உன்னோட போட்டோவை பார்த்துட்டேன்.
என்ன அது.. சின்ன குழந்தையா இருந்த அப்போ எடுத்த போட்டோ..
இரண்டாவதா உன்னை ஆபீசுக்கு வந்த போது பார்த்தேன்.
அது மட்டும் இல்லாம இந்த ஒரு வாரமாக கண்ணுல அங்கங்கே தட்டுப்படற..
என்னவா இருக்கும்னு யோசிச்சேன். ஆனா பெருசா ஐடியா கிடைக்கல .ஆனா நீ கில்லாடிதான்.
எவ்வளவு தைரியம் இருந்தால் ஒருத்தரோட வீட்டுக்குள்ள வந்ததும் இல்லாம..
அழகா கொத்து சாவிய எடுத்துட்டு புறப்படுவ” என்று சொல்ல இப்போதும் கூட இவளால் அசைய முடியவில்லை .
மொத்தமாக பெட்டில் படுத்திருக்க ..இரண்டு கைகளையும் பிடித்திருந்தான்.
கிட்டத்தட்ட வயிற்றில் ஏறி அமர்ந்தது போன்ற பொசிஷனில் பிடித்து வைத்திருக்க.. அது இவளுக்கு இன்னமும் பயத்தை தந்தது .
“முதல் விடு.. பொறுக்கி ..நான் எங்கேயும் ஓட மாட்டேன்” என்று அவனை நகர்த்தப் போக.. சற்றும் அசைக்க முடியவில்லை அவளாள்..
“அசைச்சு கூட உன்னால பார்க்க முடியாது யோசிக்காத. புரியுதா..
உன்னோட பலம் என்ன? என்னோட பலம் என்னன்னு இப்ப தெரிஞ்சுதா..
நான் எப்படி பட்டவன்னு நினைச்சு ரூம் வரைக்கும் வர துணிச்ச..
நான் தப்பானவன் .உனக்கு தெரியுமா” என்று கேட்டபடியே அருகே நெருங்க.. பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“எந்த பொண்ணுமே என்கிட்ட பக்கத்துல வர பயப்படுவாங்க ..ஆனா உனக்கு எவ்வளவு தைரியம் .
என்னோட ரூம் வரைக்கும் வந்திருக்கற..” என்று கேட்க ..இன்னமும் கூட கண்ணை திறக்கவில்லை .
பயம் முகத்தில் அப்பட்டமாக தெரிய முகம் முழுக்க வியர்க்க ஆரம்பித்தது .
அவளுடைய முக பாவனை, பயம், படபடக்கும் உதடு என மொத்தமுமே இவனுக்குள் சிரிப்பை தோற்றுவித்தது.
சற்றே நகர்ந்து அவளது கையை பிடித்து இருக பற்றிய படி எழுப்பி அமர வைக்க.. இன்னமுமே பிடித்திருந்த கையை பார்த்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“ இத்தனை பயம் இருக்கறவ இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கக் கூடாது .
நீ என்ன பெரிய இவளா.. எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுகுள்ளே வந்திருப்ப..
அதுவும் திருடுவதற்கு “என்று சொல்ல..” இல்ல நான் அதுக்காக ஒன்றும் வரல .”
“பின்ன வேற எதுக்காக வந்த.. ஒருவேளை சுத்தி பார்க்கறதுக்கோ..
உனக்கு தேவை இந்த பைல் தானே” என்று கேட்டபடியே அருகே இருந்த டேபிளில் இருந்த டிராவை ஓபன் செய்து பைலை எடுத்து போட.. இவ்வளவு தந்தையுடைய வீட்டு பத்திரம் கூடவே எழுதிக் கொடுத்த டாக்குமெண்ட் என இரண்டுமே சேர்ந்து இருக்க.. அதை பார்த்தபடியே இவனின் முகத்தை பார்த்தாள்.
“ என்ன உன்னோட அப்பா சொல்லி அனுப்பி வச்சாரா.. அந்த டாக்குமெண்ட் கையில கிடைச்சிருச்சுனா நம்ம பணம் தர வேண்டியது இல்ல .
ஈசியா தப்பிச்சுக்கலாம்னு.. அதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்திருக்கிறயா? “
“ஐயோ இல்ல அப்படியெல்லாம் இல்ல .அப்பாவுக்கு இங்க வந்தது தெரியவே தெரியாது.”
“ தெரியாதுனா.. யார்கிட்ட காதுல பூ சுத்துற .
எனக்கு நல்லா தெரியும் .உன் அப்பன் கிட்ட பத்து பைசா கூட கிடையாது.
தொழிலும் பெருசா லாபம் இல்லை. ஏதோ இருக்கிறத வச்சு சமாளிச்சுக்கிட்டு இருக்கிறார் .
அப்படி இருக்கிறவங்கனால நிச்சயமா அந்த தொகைமை கொடுக்க முடியாது.
அது பெரிய தொகை தான் எனக்கு நல்லா தெரியும்.
வேற ஆப்ஷனே கிடையாது. வேற சொத்து சுகம் இல்லை அப்படிங்கிற பட்சத்துல அந்த வீட்டை வைத்து தான் கடனை செட்டில் பண்ணி ஆகணும்.
உன் அப்பனுக்கு அந்த வீட்டை விற்க துளி கூட இஷ்டம் இல்ல.
அதனால தானே உன்னை அனுப்பி வச்சிருக்கான் .”
“ஐயோ இல்ல சார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை..
நான் வந்தது அப்பாவுக்கு தெரியாது .அப்பாவுக்கு தெரியாம நான் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டு வந்தேன்.”
“ என்னது.. என்ன உளர்ற.. “
“உண்மை சார்..அப்பா கஷ்டப்படுறது எனக்கு பிடிக்கல .
அவர் சங்கடப்பட்டு தலை குனிஞ்சு இருக்கிறது உனக்கு பிடிக்கல .
அப்பாவுக்கும் இந்த வீட்டை விக்கறதா ஆப்ஷன் இருந்தது ஆனா அவர் அம்மா கூட வாழ்ந்த வீடு.
அம்மாவுடன் நினைவுகள் முழுக்க முழுக்க அங்க தான் சுத்திக்கிட்டு இருக்கு.
என்னால் அந்த வீட்டை விற்க முடியாதுன்னு சொன்னாங்க அத கேட்கும் போது என்னால தாங்க முடியல .
அதனால தான் நான் இப்படி ..”
“யோசிக்காம வீட்டுக்குள்ள குதிச்சுட்ட.. அப்படித்தானே இப்ப நீ என்ன பண்ணலாம்னு இருக்கிற..
இப்படியே நீ வெளியே போனா ரெண்டு நாயுமே உன்னை அக்குவேறு ஆணி வேறா பிரிச்சி மேஞ்சிடும்.
உனக்கு நான் வளர்க்கிற நாய பத்தி தெரியலை..
நீ என்ன நினைச்சுகிட்டு இருக்குற ..எவ்வளவு தைரியம்.. அதுவும் சாவி எடுத்துட்டு கிளம்பற” என்று சொல்ல..
“ எனக்கு வேற வழி தெரியலை.. தெரியாம உள்ள வந்துட்டேன் .
இப்ப உங்க டாக்குமெண்டோ.. வேற எதுவுமே எனக்கு வேண்டாம் .என்னை விட்டால் போதும்…
நீங்க சத்தம் இல்லாம இருந்தீங்கன்னா ‌.காலைல கூட சத்தம் இல்லாம வெளியேறி இருப்பேன் .
நான் வந்தது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்காது.”
“ யார் சொன்னா நீ எப்ப என்னோட வீட்டு தெரு மூளைல வந்து நின்னையோ அப்பவே எனக்கு நல்லா தெரியும் .
அந்த நிமிஷத்துல இருந்து நான் உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்குறேன்.
நீ பின் கேட் வழியா எகிறி குதிச்சதும் தெரியும் .ரூமுக்குள்ள வந்ததும் தெரியும்.
ஏன் ரூமுக்குள்ள உள்ளே போன அந்த கடைசி நிமிஷம் வரைக்கும் தெரியும் .
எங்க ஒளிஞ்சிருந்தேண்ணும் எனக்கு தெரியும் .
சரி எவ்வளவு தூரம் தான் போறேன்னு பாக்கலாம்ங்கறதுக்காக தான் சத்தம் இல்லாம இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தது.
நீ என்ன நினைச்சுகிட்டு இருக்குற ..நான் நல்லவெல்லாம் கிடையாது . வந்ததுக்கு உனக்கு ஏதாவது பனிஷ்மென்ட் கொடுக்கணும் இல்ல “என்று சொன்னபடி அவளை அருகில் இழுக்க.. சட்டென பயத்துக்கு பின்னால் நகர ஆரம்பித்தாள்.
“இத பாரு.. எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் .நீ நல்லவன் இல்லை தான்.
எனக்கு நல்லா தெரியும் .நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல.”
“ என்னது நான் நினைக்கிற மாதிரி பொண்ணு நீ இல்லையா..
நட்ட நடு ராத்திரி … கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருத்தனோட வீட்டுக்குள்ள எகிறி குதிச்சு திருடுவதற்காக வந்திருக்கற..
அப்படிப்பட்ட பொண்ணு நல்லவளா.. நான் எப்படி வேணும்னாலும் யோசிக்கலாம் தப்பு இல்லை “என்று இன்னமும் அருகே நெருங்க.. பின்னுக்கு வேகமாக நகர ஆரம்பித்தால் .
“இது பாரு நான் பண்ணினது தப்புதான். நீ எனக்கு வேற என்ன தண்டனை வேணும்னாலும் கொடு .
தயவு செய்து கிட்ட வராத.. எனக்கு பயமா இருக்குது “என்று சொல்லி அழ ஆரம்பிக்க..
“ என்ன இவ்வளவுதான் உன்னோட வீரமா .என்னமோ பெரிய இவலாட்டம் பேசின..
இத்தனை தைரியமா உள்ளே நுழைஞ்சவ.. இதைப் பற்றி எல்லாம் யோசிச்சி இருக்கணும்”.
“ தப்பு தான் நான் வந்து.. தினேஷ் வீட்ல போயி லெட்டர் எடுத்த மாதிரி நினைச்சுட்டேன் .
அது தப்புதான்” என்று சொல்ல..
“ ஓ ..ஆக ஏற்கனவே இதிலெல்லாம் அனுபவம் இருக்குதில்லையா.
அங்க நீ ஈஸியா தப்பிச்சு இருக்கலாம் . அதுக்காக அதே மாதிரி என் வீட்டுக்குள்ளயும் உள்ளே நுழைவியா..” என கேட்டப்படியே.. இன்னும் நெருங்க.. சுவரின் மூளையில் சென்று தஞ்சம் அடைந்திருந்தாள்.
“இத. பாருங்க ..நான் தப்பு பண்ணிட்டேன் . இல்லன்னு சொல்லல.
சட்டப்படி கொண்டு போய் போலீஸ்ல பிடிச்சி கொடுங்க..நான் அப்பாவை கூப்பிட்டு சொல்லிக்கறேன்”.
“ ஓ அப்படின்னா உங்க அப்பா மானம் மரியாதை போகாதா ..
இதெல்லாம் கேட்டா அந்த ஆளு உயிரோட இருப்பான்னு நினைக்கிறாயா? “
“ஐயோ” என்று வேகமாக கத்த..
“ என்ன பயப்படறியா.. துளி கூட பயமில்லாமல் தானே இங்கே வீட்டுக்குள்ள வந்த” என்று கேட்க தலை குனிந்தபடி நின்றிருந்தாள் சாரா.
 
Status
Not open for further replies.
Top