எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவிதைப் பெட்டகம் 3

கடந்து போன
ஒருவரின்
அன்பை
நினைத்து
ஏங்கும்
உன்னிடம்
தான்
எனக்கான
மொத்த அன்பையும்
எதிர்பார்க்கிறேன்..
 
பல ஆயிரம்
மைல் தூரம்
தொலைவில்
இருந்து
நீ சிந்தும்
சிரிப்பு
என்னையும்
தொட்டுச்செல்கிறது
உன்னோடு
பேசும் தருணமதில்..
 
காதல்
மொத்தமும்
உனக்கே
என்றான பின்
கிறுக்கல்கள்
கூட
கவிதைகளாகின்றன..
 
இரவோடு
நிலவும்
உன்
நினைவோடு
நானும்
காத்திருக்கிறோம்
உனக்காக..
 
காதல் எனும்
கானல் நீரில்
நான்
சேமித்த
அழகிய மீன்கள்
உன் நினைவுகள்..
 
என்
தனிமைகள்
எ‌ல்லா‌ம்
இனிய
கவிதைகளாகின்றன
உன்
நிழல் நினைவுகளால்..
 
கவிதைகளால்
பூச்செண்டு
செய்து
உனக்காக
காத்திருக்கின்றது
உன் மீதான
என் காதல்..
 
கடல் கடந்து
தூர தேசம்
போன
உன் நினைவுகள்
மட்டும்
கவிதைப் பூக்களாக
என் கைகளில்..
 
என் நினைவோடு
கலந்துவிட்ட
உனக்கு
என் காதலை
மொத்தமாக
தந்துவிட
உன்னோடான
ஒரு வாழ்வு
வேண்டும்..
 
காதல் எனும்
ஒற்றைப் புள்ளியில்
கால் கடுக்க
நின்று
தவம் செய்து
நான்
வாங்கி வந்த
வரம்
உன் நினைவுகள்..
 
தூரம் போனது
நீ
இருந்தும்..
உன் நினைவுகள்
ஆழம் பார்க்கின்றன..
என் காதலை
 
காலமெல்லாம் எனக்காக
காத்திருக்கும் கண்மணியே
கண்மூடி நிற்கிறேன் கனவாக....
கனவில் வருபவளே
காதலையும் கொண்டு வா
கனவிலே வாழ்வோம்
காதலுடன்.....
 
காலமெல்லாம் எனக்காக
காத்திருக்கும் கண்மணியே
கண்மூடி நிற்கிறேன் கனவாக....
கனவில் வருபவளே
காதலையும் கொண்டு வா
கனவிலே வாழ்வோம்
காதலுடன்.....
சூப்பர் ❤️❤️
 
Top