எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ராமனின் உயிரான சீதையவள்!

அத்தியாயம் 1



ஆயிற்று, சென்னை வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது.



சாந்தினி ஆதர்ஷின் சென்னை வீட்டிற்கு அருகில் தான் வீடு எடுத்து இருந்தாள்.



அவளுடன் அவளின் பிஏ தாராணியும் தங்கி இருந்தாள்.



அவளுக்கு ஆதர்ஷனை சமாளிப்பது ஒரு பக்க கடினமாக இருக்க, தாரணியின் தொன தொன பேச்சை சமாளிப்பது ஒரு பக்கம் கடினமாக இருந்தது.



யாழை விட பத்து மடங்கு பேசி கொண்டு இருந்தாள்.



"மேம் இன்னைக்கு மிஸ்டர் ஆதர்ஷ் கூட உங்களுக்கு மீட்டிங் இருக்கு", என்று அவள் சொல்லவும், சாந்தினியோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "எத்தனை மணிக்கு?", என்று கேட்கவும், "ஈவினிங் நாலு மணிக்கு மேம்", என்று அவள் சொல்லவும், சரி என்று தலையசைத்து கொண்டாள்.



"மேம் உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்?", என்று அவள் தயங்கி நிற்க, "கேளு", என்றவளிடம், "உங்களுக்கும் ஆதர்ஷ் சார்க்கும் ஆகவே மாட்டேங்குது அப்புறம் எப்படி ஒண்ணா ஒர்க் பண்ண போறீங்க?", என்று அவள் கேட்கவும், அவளை பார்த்த சாந்தினி, "நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ", என்பதுடன் நிறுத்தி கொண்டாள்.



அவளும் எவ்வளவு சோதனைகளை தாங்குவாள்.



தளிரை காலிஃபோர்னியாவில் விட்டதே அவளுக்கு ஒரு பக்கம் தலை வலி தான். இதில் யாழை நினைக்கும் போது இன்னும் அவளின் மனம் பதறியது.



அவளின் வாழ்க்கை எதை நோக்கி போகிறது என்றே அவளுக்கு தெரியவில்லை.



தன்னலம் அற்றவள் அவள், இன்னும் என்னவெல்லாம் அவளின் வாழ்க்கையில் அவளும் தாங்குவாள்.



தைரியம் ஆனவள் தான், ஆளுமையானவள் தான், ஆனால் அவளுக்கென்று ஒரு கஷ்டம் என்று சொல்லி அழ கூட ஆளில்லாது போல் தோன்றியது.



இப்போதைக்கு அவளின் மனதிற்கு இருக்கும் ஒரே இதம் அவளின் குழந்தைகள் லக்ஷித் மற்றும் லயனிக்கா தான்.



மாலை நான்கு மணி அளவில், ஆதர்ஷின் சென்னை அலுவலகம் சென்று விட்டாள்.



அங்கே அர்னவ் இருக்கவும், "ஹாய் மேம்", என்று அவளை பார்த்து சொன்னவனை தான் சைட் அடித்து கொண்டு இருந்தாள் தாரணி.



"உங்க பாஸ் என்ன பன்றாரு?", என்று கேட்கவும், "பிரீ தான் மேம், உங்களுக்காக தான் வெயிட் பன்றாரு", என்று சொல்லவும், அவளும் அவனின் அறையின் கதவை தட்ட, "கம் இன்", என்கிற பதிலில் உள்ளே சென்றாள்.



அவளை பார்த்த ஆதர்ஷனின் கண்களில் அணல் பறந்தது.



சாந்தினி சாதாரணமாக தான் இருந்தாள்.



அவன் அவளை அமர கூட சொல்லவில்லை.



அப்படியே தான் அமர்ந்து இருந்தான்.



இதற்கெல்லாம் அசருபவள் அல்லவே சாந்தினி, அவளே நாற்காலியை இழுத்து போட்டு அமரவும், "நான் உங்கள உட்கார சொல்லலையே", என்று அவன் புருவம் உயர்த்தி கேட்கவும், "உங்களுக்கு தான் மரியாதைனா என்னன்னே தெரியாதே.. மரியாதை தெரியாதவங்க கிட்ட எப்படி அத எதிர் பார்க்க முடியும் மிஸ்டர் ஆதர்ஷராம்?", என்று அவளும் புருவம் உயர்த்தி வினவினாள்.



ஆதர்ஷின் இதழ்களில் கேலி புன்னகை.



"என்னால காசுக்காக குழந்தை பெத்துக்குறவளுக்குலாம் மரியாதை கொடுக்க முடியாது", என்றவனை பார்த்து, "நீங்க இப்போ வச்சிருக்கறவங்க கூட காசுக்காக நான் இதே வயத்துல சுமந்த பிள்ளைங்க தான்", என்று அவள் சொல்லவும், "என் பசங்கள பத்தி பேசாத", என்றவன் கைகளை மடக்கி, அவனின் கோவத்தை கட்டு படுத்தி கொண்டான்.



அவனுக்கு தான் அவளை பார்த்தாலே எரிகிறதே!



"ஒர்க் பத்தி பேசலாம்", என்றவன் அதற்கு பிறகு வேலை விடயமாக அவளிடம் பேச ஆரம்பித்து இருந்தான்.



இருவரும் வேலை என்று வந்து விட்டால், வேலையை பற்றி மட்டும் தான் பேசுவார்கள்.



பேசி முடிய, "இன்னைக்கு ஒரு கிளைன்ட் பார்ட்டி இருக்கு நீயும் வரணும்", என்று அவன் சொல்லவும், "நான் எதுக்கு?", என்று கேட்டவனிடம், "அவரும் இந்த ப்ராஜெக்ட்ல இன்வெஸ்ட் பன்றாரு... சோ நீயும் வந்தா பெட்டரா இருக்கும்", என்றவனை பார்த்து, "ஓகே.. என் பிஏவையும் கூட்டிட்டு வரலாமா?", என்று கேட்கவும், "ம்ம்", என்றவனுக்கு தலையசைத்து வெளியே சென்று விட்டாள்.



இதே சமயம், வெளியே அர்னவை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் தாரணி.



அவனுக்கே ஒரு கட்டத்தில் பொறுமை போய் விட்டது.



"மிஸ் எதுக்கு இப்படி பார்த்துகிட்டு இருக்கீங்க?", என்க, "நீங்க எவளோ அழகா இருக்கீங்க அதான் பார்த்து கிட்டே இருக்கேன்", என்றவளை பார்த்து, "ரொம்ப வழியுது தொடச்சிக்கோ", என்று சொல்லவும், "உங்க ஷர்ட்ல தொடச்சிக்கவா?", என்று கேட்கவும், அவனுக்கு கடுப்பாகி விட்டது.



இதே சமயம் சாந்தினி வெளியே வரவும், பார்ட்டியின் விவரங்களை அர்னவ்விடம் பெற்று கொண்டு சாந்தினி சென்று விட்டாள்.



அர்னவ்வுக்கு, "பை", என்று கைசைகை செய்து தாராணியும் சென்று விட்டாள்.



அன்றைய நாள் மாலை, சாந்தினி மற்றும் தாரணி தயாராகி ஆதர்ஷ் சொன்ன இடத்திற்கு வந்து விட்டார்கள்.



புது இடம் என்பதால், உபர் உபயோக படுத்தி வந்து இருந்தார்கள்.



அவர்களை நோக்கி வந்து இருந்தான் அர்னவ்.



சூட் அணிந்து இருந்தான்.



சாந்தினியோ சிவப்பு நிற உடையில் அழகாக இருந்தாள்.



தாராணியோ அழகான பிங்க் நிற உடையில் இருக்க, "வெல்கம்", என்று அர்னவ் புன்னகைக்க, "தேங்க்ஸ் அர்னவ்", என்று சாந்தினி சொல்லவும்,

"யு லுக் பியூட்டிபுல் மேம்", என்று அவன் சினேகமாக சொல்லவும், "யு லுக் ஹண்ட்ஸம் டு", என்று அவன் முடித்து இருந்தாள்.



அதற்குள், "நான் எப்படி இருக்கேன்?", என்று வெளிப்படையாக கேட்டு இருந்தாள் தாரணி.



சாந்தினியோ அவளை பார்த்து முறைக்க, "மேம் உங்கள மட்டும் பியூடிபுள்ன்னு சொல்ராங்க அப்போ நான்?", என்று வெகுளியாக கேட்கவும், "நீ பார்க்க பார்பி டால் போல இருக்க", என்று ஆதர்ஷின் குரல் ஒலித்தது.



அவளோ புன்னகைத்து, "தேங்க யு சார்... நீங்களும் செம்மயா இருக்கீங்க சார்", என்று பற்கள் விரிய கூறினாள்.



ஆதர்ஷிற்கு அவளை பார்த்ததும் ஜானவியின் நினைவு தான். இதே போல் தானே அவளும் மனதில் பட்டதை பட்டென்று பேசி விடுவாள்.



"உள்ள போலாம்", என்று சொன்னவன், உள்ளே செல்ல, அவனை பின் தொடர்ந்து அவளும் செல்ல, சட்டென்று சாந்தினிக்கு பிள்ளைகளின் நினைவு.



"பசங்க எங்க?", என்று அவள் ஆதர்ஷனை பார்க்க, "கேர் டெக்கர் கிட்ட விட்டுட்டு வந்து இருக்கேன்... இவளோ நாள் நான் தான் பார்த்துக்கிட்டேன்... இப்போ வந்து அக்கறை மாறி நடிக்கிறா", என்று வெளிப்படையாகவே கூறினான்.



சாந்தினிக்கு அவமானமாக இருந்தது. அர்னவ் மற்றும் தாரணியின் முன் இப்படி பேசுகிறான்.



அர்னவிற்கும் கூட அவளை பார்க்க பாவமாக இருந்தது.



எதுவும் அவனாலும் பேச முடியாத நிலை.



தாராணிக்கு தான் மனம் பொறுக்கவில்லை.



"இப்படி எல்லாம் பேசாதீங்க சார்", என்று சொல்லி விட்டாள்.



ஆதர்ஷ் அதற்கு பிறகு அவளை கஷ்ட படுத்த விரும்பவில்லை.



அவனின் கிளேன்டிடம் சென்று, "ஹலோ சார், இவங்க தான் மிஸ் சாந்தினி", என்று அறிமுகம் செய்யவும், "ஹாய்", என்று அவரும் கை குலுக்கினார்.



"கௌஷிக் இந்த ப்ராஜெக்ட் பார்த்துப்பான் ஆதர்ஷ்", என்று சொல்லவும், அவனும் தலை அசைத்து கொண்டான்.



இதே சமயம் பார்ட்டி ஆரம்பம் ஆனது.



தாராணிக்கு இது எல்லாம் புதிது.



ஆ வென்று பார்த்து கொண்டு இருந்தாள்.



"பார்த்து கொசு போய்ட போது", என்று அர்னவ் சொல்லவும், வாயை மூடிக்கொண்டாள்.



அவளிடம் ஜூஸ் ஒன்றை நீட்டினான்.



அங்கே நவ நாகரிக ஆடைகள் அணிந்தும் பெண்கள் வந்து இருந்தார்கள்.



"என்ன இப்படி டிரஸ் பன்னிட்டு வராங்க?", என்று அர்னவ்வின் காதுகளில் வினவ, "இத விட மோசமா கூட வருவாங்க", என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே, ஒருவன் தாரணியிடம் வந்து இருந்தான்.



குடி போதையில் தள்ளாடி கொண்டு வந்தவனை பார்த்து, அவள் சற்று தள்ளி நிற்கவும், அவனோ மேலும் அவளை நெருங்க, அர்னவ் வந்து அவனின் முன்னால் நின்றான்.



"அவ கூட டான்ஸ் ஆடணும் பாஸ்", என்று சொல்லி முன்னேற போக, "சாரி அவ என்கூட வந்து இருக்கா", என்று சொல்லவும், அவன் சென்று விட்டான்.



அர்னாவின் கையை இறுக்கி பிடித்து இருந்தாள் தாரணி.



கொஞ்சம் பயம் வந்து விட்டது.



"இப்போ எதுக்கு கைய பிடிக்கிற?", என்று அவனின் கையை அவன் உருவ பார்க்க, "அவளோ ப்ளீஸ் பிடிச்சிக்கிறேனே", என்று கெஞ்சவும், அவனும் பெருமூச்சை விட்டு கொண்டு அமைதியாகி விட்டான்.



அவனின் கையை பிடித்தால் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்கிற நினைப்பு அவளுக்கு.



"சாப்பிடலாமா?", என்று கேட்டவளை அழைத்து கொண்டு அவன் சாப்பிட என இருந்த தனி அறையை நோக்கி சென்று விட்டனர்.



அவர்கள் இருந்து இருந்தால், பின்னால் நடக்கும் அசம்பாவிதத்தை தடுத்து இருக்கலாமோ என்னவோ!



இங்கோ ஆதர்ஷ் அவனின் கைபேசியை பார்த்து கொண்டு அமர்ந்து இருக்க, சாந்தினியின் முன் ஒரு கிளாஸ் நீட்ட பட்டது.



"ஜூஸ்", என்று பேரர் சொல்லவும், அதை அவள் எடுத்து குடித்து விட, ஆதார்ஷோ அவனின் கைபேசியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.



இதே சமயம் அங்கே வந்தார் மிஸ்டர் ஷர்மா.



சாந்தினியின் பரம எதிரி என்று கூட சொல்லலாம், எத்தனையோ முறை அவளை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார். அவரும் கௌஷிக்கின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.



அவரும் இந்த பார்ட்டிக்கு வந்து இருக்க, சாந்தினியிடம் வந்தவர், "டான்ஸ் ஆடலாமா?", என்று கேட்க, அவள் பதிலை கூட எதிர் பார்க்க வில்லை.



இழுத்து சென்று விட்டார்.



ஆதர்ஷ் சாந்தினி சென்றதை பார்த்தான் தான். அவனுக்கு அவள் இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன என்கிற மனநிலை.



உன்னை அறிமுக படுத்த அழைத்தேன், செய்து விட்டேன், இனி நீ என்னமோ செய்து கொள் என்கிற எண்ணம்.



இதே சமயம், சாந்தினிக்கு மயக்கம் வர ஆரம்பித்து இருந்தது. அந்த பெரெர் கொண்டு வந்த ஜூஸில் தான் போதை மாத்திரை கலந்து இருந்தானே அந்த கயவன்.



அவளை அவன் அழைத்து சென்று, ஆட ஆரம்பிக்க, சாந்தினியோ திமிர ஆரம்பித்தாள்.



அந்த கயவனின் கையில் அகப்பட்டு கொண்டாள் சாந்தினி.



அவனின் எண்ணம் இன்னும் கொடூரமாக இருந்தது.



சாந்தினி ஒரு முறை அவனை அனைவரின் முன்னிலையிலும் அறைந்து இருந்தாள்.



அதற்கு பழி தீர்ப்பதற்காக தான் காத்து கொண்டு இருந்தான்.



இன்று வாய்ப்பும் கிடைத்து விட்டது.



அவனின் புத்தியில் அவளை நிர்வாணமாக அனைவரின் முன்னால் ஆக்க வேண்டும் என்கிற எண்ணம் தான்.



அவனின் எண்ணத்திற்கு ஏற்றார் போல, அவன் அவளின் உடையில் இருக்கும் ஜிப்பை திறக்க, சாந்தினியோ அவனின் கையில் திமிறியவளால் அதற்கு மேல் முடியாமல் போக, அவளோ போதையின் பிடியிலும் கண்ணீர் மல்க நின்று கொண்டு இருந்தாள்.



இதே சமயம் அவளின் உடையும் அவிழ்ந்து இருந்தது. கூனி கூறுகி அமர்ந்து இருந்தாள் ஆதிக்கம் மிக்க சாந்தினி.
 

அத்தியாயம் 2



சாந்தினியை மிஸ்டர் சர்மா அழைத்து செல்லும் போதே ஆதர்ஷின் கண்கள் அவனை அளந்தன. ஏதோ சரி இல்லாதது போல் தோன்றியது.



அவன் சென்றது அந்த பேரர் பக்கம் தான்.



"அவளுக்கு என்ன கொடுத்த?", என்று அவன் நேரடியாக கேட்கவும், அவன் திணறி தான் விட்டான்.



"அது வந்து சார்... ", என்று அவன் திக்கி திணறவும், விட்டான் ஒரு அரை, "சொல்லு டா ராஸ்கல்", என்று அவனின் சட்டையை பிடித்து உலுக்கவும், அவனும் அனைத்தையும் ஒப்பித்து விட்டான்.



"சாரி சார்", என்றவனின் மறு கன்னமும் பழுத்தது.



"உன் அக்கா தங்கச்சியா இருந்தா இப்படி தான் பன்னிருப்பியா?", என்றவன் அவனிடம் ஒன்றை செய்ய சொல்ல, அவனும் சரி என்று தலையசைத்து சென்று விட்டான்.



ஆதர்ஷ் அந்த இடத்திற்கு வந்த அதே சமயம் தான், சாந்தினியின் ஆடையின் மீது அந்த கயவன் கை வைத்து இருந்தான்.



அவன் ஆடையின் ஜிப்பை அவிழ்க்கும் அதே சமயம், அங்கு உள்ள அனைத்து விளக்குகளும் அணைந்து விட்டது.



பார்ட்டியில் உள்ள அனைவரும் கொஞ்சம் போதையில் இருந்ததால், அவர்களின் மொபைல் எடுத்து டார்ச் ஆன் செய்யவும் நேரம் எடுத்தது. அதையும் தாண்டி ஆட வந்திருப்பரவளின் கையில் மொபைலும் இல்லை.



இது ஆதர்ஷிற்கு வசதியாக போய் விட, காற்றின் வேகத்தில் சாந்தினியை அவன் நெருங்க, ஆடை அவிழ்ந்த நிலையில் அமர்ந்து இருந்தவள், கண்கள் திறக்கவே இல்லை.



திறக்கவும் முடியவில்லை.



போதையின் பிடி ஒரு புறம், அவமானம் மறுபுறம் என்று மனது அவளுக்கு துடித்து கொண்டு இருந்தது.



இதே சமயம், மற்றொரு கை அவளை தீண்டவும், துடித்து விட்டவளின் செவிகளில், "ரிலக்ஸ்", என்ற ஆதர்ஷின் குரல் கேட்கவும் தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள்.



அவன் அவளை மோசமாக பேசி இருக்கிறான், அவமானப்படுத்தி இருக்கிறான் ஆனால் ஒருபோதும் அவளை தவறாக தீண்டியது இல்லை.



விரைவாக செயல் பட்டவன் எப்படியோ அவளின் ஆடையை எடுத்து அப்படியே அவளின் தோள்களில் கிடத்தி, பட்டென ஜிப் போட்டு அவளை மேலே நிமிர்த்தி வைக்க, இதே சமயம் விளக்கும் உயிர்ப்பிக்க பட்டது.



ஷர்மாவின் கண்கள் விரிந்தன!



அவளை ஆடை இல்லாமல் அத்தனை பேரின் மத்தியிலும் அவமான படுத்த வேண்டும் என்று நினைத்து இருந்தான் தான். ஆனால் ஆதர்ஷ் அவளுக்கு அரணாக அவளை கை வளைவில் நிறுத்தி இருக்க, அவனால் வாயே திறக்க முடியவில்லை.





ஆதார்ஷை நெருங்க முடியாதே! சென்ட்ரல் மினிஸ்டர் வீட்டு பிள்ளை அதையும் தாண்டி தொழில் சாம்ராஜ்யத்தையே ஆட்டி வைத்து கொண்டிருக்கும் ஆர்எ குரூப்ஸின் வாரிசு அவன்!



ஆதர்ஷ் அவனை ஒரு பார்வை பார்த்து, சாந்தினியை அவனின் கைவளைவில் அணைத்து கொண்டு சென்று விட்டான்.



இதே சமயம் அங்கே வந்தனர் தாரணி மற்றும் அர்னவ்.



சாந்தினியின் நிலையை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான்.



அவளால் நிற்க கூட முடியவில்லை.



"என்ன ஆச்சு சார்?", என்று அர்னவ் அவனை வினவ, "உன் கார்ல தான வந்த... இவங்கள கொண்டு போய் வீட்ல ட்ரோப் பண்ணிடு.. ஐ வில் கம்", என்று சொன்னவன், அவனே சாந்தினியை தாங்கி வண்டி வரை அழைத்து கொண்டு வந்து இருந்தான்.



தாரணி காரை திறக்கவும், அவளை அவன் உள்ளே கிடத்த, சாந்தினியோ அவனின் சட்டையின் காலரை பிடித்தவள், அவனின் கன்னத்தில் சட்டென இதழ் பதித்து இருந்தாள்.



போதையின் பிடியில் அவள் என்ன செய்தால் என்று அவளுக்கு தெரியவில்லை.



"தேங்க்ஸ்", என்று அவள் குரல் வர, நல்ல வேலை இன்னும் அர்னவ் மற்றும் தாரணி உள்ளே எற வில்லை.



ஆதர்ஷ் அழுந்த கண்ணை மூடி திறந்து அவளின் கையை விளக்கி விட, தாராணியை பார்த்தவன், "வீட்டுக்கு போயிட்டு அவளுக்கு லெமன் ஜூஸ் கொடு... நாளைக்கு நார்மல் ஆகிடுவா", என்று சொல்லவும், அவள் வெறும் தலை தான் அசைத்தாள்.



அர்னவ்வை அவன் பார்க்கவும், "டிரைவ் தேம் செப்", என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றான்.



ஷர்மாவை தான் அவனின் கண்கள் தேடி கொண்டு இருந்தன.



அவனோ ஆதார்ஷை பார்த்தவன் அருகே இருந்த கழிப்பறைக்குள் நுழைந்து கொள்ள, ஆதர்ஷின் லேசர் விழிகளில் இருந்து தப்புமா என்ன?



அவனும் அவன் பின்னாலயே சென்றவன், கழிப்பறையின் கதவை அடைத்து விட்டு, அவனை பின்னால் இருந்து சட்டையை பிடித்து அவனின் முகத்தில் அடித்து இருந்தான்.



"யு ப்ளாடி... நீ எல்லாம் மனுஷனா டா? அந்த பொண்ணு உன் கூட படுக்கலைனு இப்படி அவ மாணத்தோட விளையாட்ற! உனக்கு தைரியம் இருந்தா அவ நிதானத்துல இருக்கும் போது அவளை தோடு பார்ப்போம்.. முடியாதுல? அவ சிங்கம் மாறி இருக்கறதுனால தான் இப்படி பொ*டை மாறி ட்ரக் கொடுத்து இவளோ சீப்பா பிஹேவ் பண்ற?", என்றவன் ஆத்திரம் தீரும் வரை அடித்தான்.



"வேணும்னா போய் வெளிய சொல்லிக்கோ நான் தான் அடிச்சேன்னு", என்று அவனே சொல்லிவிட்டும் சென்றான்.



சொல்லமாட்டான் என்று அவனுக்கு தெரியுமே! சொன்னால் அவனுக்கு தானே பிரச்சனை.



அவனும் அந்த பார்ட்டியில் இருந்து வந்து விட்டான்.



லக்ஷித் மற்றும் லயனிக்கா தூங்கி இருந்தனர்.



அவர்களை பார்த்தவன், "உங்கள இவ கிட்ட மட்டும் காட்டவே கூடாதுனு நினைச்சேன் ஆனா இப்போ அவ முன்னாடியே இருக்க வேண்டிய நிலமை", என்றவன், அவர்களின் உச்சந்தலையில் முத்தம் பதித்தான்.



உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவனுக்கு சாந்தினியை பிடித்து தான் இருந்தது.



அவனின் மனதை ஈர்த்த முதல் பெண் அவள் தான்.



அவன் ஒன்றும் அவளின் அழகை பார்த்து எல்லாம் அவளிடம் ஈர்க்க படவில்லை.



அவளின் தைரியத்தை முதல் முறையே ரசித்து இருந்தான். அடுத்த முறை அவனின் குழந்தைகளை அந்த ஐஸ் கிரீம் பார்லரில் கையாண்ட விதம் கூட அவனை அவளின் பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.



அவள் தான் குழந்தைகளின் சரோகேட் என்று தெரியாமல் இருந்து இருந்தால் காலப்போக்கில் அவளை திருமணம் செய்து இருப்பானோ என்னவோ!



ஆனால் இப்போது அவன் இவ்வுலகில் வெறுக்கும் ஒரே பெண் சாந்தினி தான்!



அவனுக்கு அவளின் மீது அவ்வளவு கோவம்!



ஆத்திரம், இருந்தாலும் இன்று அவளை ஒருவன் தீண்டுவதை அவனால் பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை.



அவனை அப்படி அவர்களின் குடும்பமும் வளர்க்கவில்லையே!



வித்யாவின் வயிற்றில் ஜனித்து, கொற்றவையின் கைகளில் தவழ்ந்தவன் அவன்!



அவனின் முதல் திருமணம் ஏன் நடந்தது என்பது அனைவரும் நடந்த விடயம் தான்.



அவனின் மனக்கண்ணில் அவனின் கடந்த கலாம் ஓட, அவனுக்கு சாந்தினியின் மீது அவ்வளவு வெறுப்பு.



"ஏன் டி ஏன் இப்படி பண்ண?", என்று அவனின் மனது அவளை தான் சாடியது.



குழந்தைகளை அணைத்து கொண்டே உறங்கி இருந்தான்.



அடுத்த நாள் காலை சாந்தினி எழ, தலை வீண் வீண் என்று வலித்தது.



அவளுக்கு ஜூஸ் குடித்தது நன்றாக நினைவு இருந்தது.



அதற்கு பிறகு அவளுக்கு நடந்த அனைத்தும் நினைவு வர, அவளின் மனம் கூனி குறுகி விட்டது.



இதே சமயம் தான், அவளை ஆதர்ஷ் காப்பாற்றியதும் நினைவிற்கு வந்தது.



"ச்ச ஆதர்ஷ் மட்டும் இல்லனா என்ன ஆகியிருக்கும்", என்றவளுக்கு அப்போது தான் அவள் முத்தம் கொடுத்ததும் நினைவிற்கு வர, அவள் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.



"சும்மாவே சலங்கை கட்டி ஆடுவான்... இன்னைக்கு சங்கு ஊத போறான்", என்று நினைத்து கொண்டவள் எழுந்து கொண்டு அவள் தயாராகி வெளியே வரவும், அங்கே அவளுக்காக தாரணி காத்து கொண்டு இருந்தாள்.



"மேம் நீங்க ஓகே தான?", என்று கேட்கவும், "ம்ம்", என்றவளிடம், "இன்னைக்கு நானே சமச்சிட்டேன்", என்றவளுக்கு அவளே பறி மாற, இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.



"இன்னைக்கு எத்தனை மணிக்கு நம்ப ஆதார்ஷை மீட் பண்ணனும்?", என்றவளுக்கு, "இன்னைக்கு மார்னிங் டென் மேம்", என்றவளுக்கு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தாள்.



ஒன்பது மணி அளவிலேயே அவர்கள் ஆதர்ஷின் அலுவலகம் சென்று விட, அங்கு அர்னவ் அமர்ந்து இருந்தான்.



"ஆதர்ஷ் இருக்காரா?", என்று சாந்தினி கேட்கவும், "எஸ் மேம்", என்று அவன் சொல்ல அவளும் உள்ளே நுழைந்தாள்.



ஆதர்ஷ் அவளை புருவம் உயர்த்தி பார்த்து, "எப்படி இருக்கீங்க ஜான்சி ராணி?", என்று கேட்கவும், அவளுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



"தேங்க்ஸ்", என்றவளை பார்த்து, "அதான் நேத்தே தேங்க்ஸ் சொன்னிங்களே மிஸ் சாந்தினி அதுவும் கிஸ் கொடுத்து", என்றவுடன், அவளுக்கோ தர்மம் சங்கடமான நிலை தான்.



போதையின் பிடியில் செய்த தவறு, அவனை பார்க்க கூட விடமால் செய்கிறதே!



"சாரி ஆதர்ஷ்", என்க, "எதுக்கு சாரி?", என்றவனை பார்த்து, "அது நேத்து கிஸ் பண்ணதுக்கு", என்றவளை பார்த்து, "இது என்ன நீங்க கொடுக்குற பர்ஸ்ட் கிஸ்ஸாவா இருக்கும்?", என்றவுடன், அவளுக்கு கோவம் தலை தூக்கியது.



"கரெக்ட் தான்... நீங்க ஒன்னும் என் பர்ஸ்ட் கிஸ்ஸும் இல்ல லாஸ்ட் கிஸ்ஸும் இல்ல", என்றவள், கதவை டம் என சாத்தி விட்டு சென்று விட்டாள்.



"இவனுக்குலாம் தேங்க்ஸ் சொல்ல வந்தேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும்", என்று அவள் சொல்லவும், அவளின் முன் செருப்பு நீட்ட பட்டது.



தாரணி தான் நீட்டி இருந்தாள்.



"நீங்க தான் மேம் செருப்பால அடிக்கணும்னு சொன்னிங்க இந்தாங்க", என்றாலே பார்க்கலாம்.



அர்னவ் தான் அவளின் கையை தட்டி விட்டு, "மேம் உங்க கேபின் ரயிட் சைட் இருக்கு", என்று அவளுக்கு வழி காட்டவும், அவளோ தாராணியை முறைத்து விட்டு சென்று விட்டாள்.



அர்னவ் தாரணியில் தலையின் நங்கென்று கொட்டி, "உனக்கு அறிவே இல்ல டி", என்று சொல்லி நகர்ந்து விட்டான்.



"நான் என்ன பண்ணேன்? அவங்க கேட்டாங்க நான் கொடுத்தேன்", என்று யோசித்து கொண்டு நின்றது என்னவோ தாரணி தான்.



அன்றைய நாள் அப்படியே நகர, சாந்தினி ஆறு மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டு இருந்தாள்.



தாரணி ஐந்து மணிக்கே புறப்பட்டு சென்று விட்டாள்.



சட்டென சாந்தினியின் மனதில் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்.



ஆதர்ஷ் வீட்டிற்கு சென்றால் குத்தும் படி பேசுவான் தான், ஆனால் அதற்கெல்லாம் பார்த்தால் அவளால் பிள்ளைகளை பார்க்க முடியாதே!



மனதை சமன் செய்து கொண்டு, தாய் உள்ளத்தோடு அவனின் வீட்டை நெருங்கினாள்.



அங்கு சென்றவள் கண்ட காட்சியில் அவளுக்கு இதயமே நின்று விட்டது.
 

அத்தியாயம் 3



அவள் அங்கு குழந்தைகளை காண செல்லவும், அங்கே அவர்களின் கேர் டெக்கர் ஆக இருக்கும் பெண் லயாவை அடிக்க கை ஓங்கி இருந்தாள்.



நான்கு வயது சிறுமி தானே அவள் அடிக்கும் முன்னமே அழ ஆரம்பித்து விட்டாள்.



சாந்தினிக்கு இதயமே நின்ற உணர்வு.



"ஹே", என்று சிங்கமாய் கர்ஜித்தவள், அந்த கேர் டெக்கரை நெருங்கி அவள் ஒங்கிய கையை பிடித்து அவள் மறுகையால் அடித்து இருந்தாள்.



லயா அவளை பார்த்ததும் அவளை இறுக அணைத்து இருந்தாள்.



"அறிவில்ல இப்படி தான் குழந்தைங்களை அடிக்க கை ஓங்குவியா?", என்று அவள் கேட்கவும், எதிரே இருந்தவளுக்கோ நடுங்க ஆர்மபித்தது.



"ஆண்ட்டி", என்று லயாவின் விசும்பலில், அவளை பார்க்கவும், அங்காரமாய் இருந்த முகம் சட்டென சாந்தமாக மாறி விட்டது.



அவளின் முன் அவள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவளே அணைத்து கொண்டு, "லக்ஷ் லக்ஷ்", என்று அவள் விசும்பவும், "என்ன ஆச்சு?", என்று பதற்றமாக வந்தது சாந்தினியின் கேள்வி.



அவளை தூக்கி கொண்டு லக்ஷித் இருக்கும் இடத்திற்கு சென்று பார்க்க, அவனின் காலில் சிறு சிறு சிராய்ப்பு.



"சைக்கிள் ஓட்டும் போது விழுந்துட்டான்", என்று அவள் மழலை குரலில் சொல்லி மேலும் விசும்பவும், அங்கே அழுகையுடன் அமர்ந்து இருந்தான் லக்ஷித்.



அவளை இறக்கி விட்டவள், லக்ஷித்திடம் செல்லவும், "ஆண்ட்டி வலிக்கிது", என்று விசும்பினான்.



அவனை கையில் ஏந்தி கொண்டு, வீட்டின் உள்ளே சென்றாள்.



அவளின் பின்னே அந்த ஒன்றுக்கும் உதவாத கேர் டேக்கரும் சென்றாள்.



அவளை பார்த்து, "பர்ஸ்ட் எயிட் கிட் எடுத்துட்டு வா", என்று சொன்னவுடன், முப்பது வினாடிகளில் அவளின் முன் முதல் உதவி செய்ய தேவையான அனைத்து உபகரணங்களும் எடுத்து வந்து வைத்து விட்டாள்.



எல்லாம் சாந்தினி விட்ட அடியின் மாயம்.



"எதுக்கு அடிக்க கை ஓங்குனாங்க?", லயனிகாவை கேட்டுக்கொண்டே லக்ஷித்தின் காயத்திற்கு மருந்து போட்டு கொண்டு இருந்தாள்.



"அவங்க பாய் பிரண்ட் கிட்ட பேசும் போது நான் தொல்லை பன்னிட்டேனாம்", என்று கண்களை கசக்கி கொண்டு அவள் கூறவும், "ஐயோ மேம் அது...", என்று அவள் எதையோ சொல்ல வர, சாந்தினி பார்த்த பார்வையிலேயே கப்சிப் என்று ஆகி விட்டாள்.



லக்ஷித்தின் காயத்திற்கு அவள் மருந்து போட்டு முடிக்கவும், அங்கே ஆதர்ஷ் வரவும் சரியாக இருந்தது.



சாந்தினியை அவன் இங்கே எதிர் பார்க்க வில்லை.



லயாவோ அவளின் தந்தையை பார்த்தவள், "டாடி", என்று சென்று அவனை அணைத்து கொள்ள, அந்த கேர் டேக்கருக்கு கிலி எடுக்க துவங்கியது.



"இங்க என்ன பண்ற?", என்று சாந்தினியை பார்த்து அவன் கேட்கவும், "டாடி ஆண்ட்டி தான் லக்ஷ்க்கு மருந்து போட்டு விட்டாங்க... இந்த ஆண்ட்டி எப்ப பாரு போன்லேயே இருகாங்க", என்று போட்டு கொடுத்து விட்டாள்.



குழந்தைகளுக்கு தான் பொய் சொல்ல தெரியாதே!



ஆதர்ஷ் அந்த கேர் டெக்கரை பார்க்கவும், "சார் ஐ அம் சாரி", என்று அவள் ஆரம்பிக்கும் போதே, "கெட் அவுட்", என்று அந்த வீடே அதிரும் படி கத்தி இருந்தான்.



அவன் அவளை அடிக்காமல் விட்டதே பெரிய விடயம் என்று நினைத்து கொண்டு அந்த மங்கையும் அங்கிருந்து சிட்டாக பறந்து விட்டாள்.



"ரொம்ப தேங்க்ஸ் என் பையனுக்கு மருந்து போட்டு விட்டதுக்கு இப்போ நீங்க கிளம்பலாம்", என்று அவன் அழுத்தமாக சொல்லவும், "உங்க கிட்ட பேசணும்", என்று எழுந்து நின்றாள் சாந்தினி.



"எனக்கு உங்கிட்ட எதுவும் பேச வேண்டாம்... வெளிய போ", என்று சொல்லவும், "அஞ்சு நிமிஷம் தான் பேசிட்டு போய்டுறேன்", என்று அவள் சொல்லவும், "ஆண்ட்டி தான் பேசணும்னு சொல்ராங்களே டாடி", என்று அவனின் மகள் சாந்தினிக்காக பேசவும், அவனுக்கோ வேறு வழியும் தெரியவில்லை.



"சரி நீங்க போய் ரூம்ல கார்ட்டூன் பாருங்க", என்று சொல்லவும், லயனிக்கா எழுந்து கொண்டாள். ஆனால் லக்ஷித்திற்கு வலி எடுத்தது.



ஆகையால் சாந்தினியே சென்று அவனை விட்டுவிட்டு வந்தாள்.



"என்ன பேசணும்?", என்று அதிகார தோரணையில் கேட்கவும், "நீங்க நல்ல கேர் டேக்கரா வைக்கலாமே! இன்னும் ஒன் வீக் தானே அதுக்கு அப்புறம் அவங்க ஸ்கூல் போய்டுவாங்க... தாரணிய வேணா இந்த ஒரு வாரம் பசங்கள பார்த்துக்க சொல்றேன்", என்று அவள் சொல்லவும், அவனுக்கு எப்படியாக இருந்தாலும் கேர் டெக்கரை மாத்தி ஆக வேண்டிய கட்டாயம் தான்.



ஆனாலும் தாரணியா? என்று அவன் யோசிக்கவும், "உனக்கு பிஏ அப்போ?", என்று கேட்கவும், "நான் மேனேஜ் பண்ணிக்குறேன்", என்று முடித்து விட்டாள்.



அவனுக்கும் சரியாக பட்டது. தாரணி மிகவும் வெகுளியான பெண் தான் என்றாலும் அவள் சாந்தினி சொல்லும் வேலை அனைத்தையும் சரியாக தான் செய்து விடுகிறாள்.



"சரி ஓகே", என்றவுடன், "நாங்க இருக்க வீட்ல கொண்டு போய் வச்சிக்கட்டுமா?", என்று அவள் ஆசையாக கேட்கவும், "நினைச்சேன் இப்படி தான் ஏதாவது சொல்லுவன்னு.. இங்க பாரு என் வீட்ல என் குழந்தைங்க இருக்கிறது தான் எனக்கு பெஸ்ட்... சோ ப்ளீஸ் அவளை இங்க வந்து பார்த்துக்க சொல்லு", என்று கறாராக சொல்லி விட்டான்.



எதிர் பார்த்த பதில் தான். அவளும் ஆழ்ந்த மூச்சை எடுத்து, "ஓகே", என்று எழுந்து வெளியே செல்ல போக, "தேங்க்ஸ்", என்று அவள் செவியில் விழுந்தது ஆதர்ஷின் குரல்.



"நான் என் குழந்தைங்களை தான் பார்த்துக்கிட்டேன்", என்று அவள் திரும்பி சொல்ல, "என்னோட குழந்தைங்க மட்டும் தான்", என்று அழுத்தமாக சொல்லி இருந்தான்.



அவனிடம் வாதிட அவள் விரும்பவில்லை.



வீட்டிற்கு நேரே வந்தவள், தாரணியிடம் விடயத்தை கூறவும், "மேம் நான் ஆதர்ஷ் சார் பசங்கள பார்த்துக்கணுமா?", என்று அதிர்ச்சியாக கேட்டாள்.



"ஆமா நீ தான் பார்த்துக்க போற.. கொஞ்சம் சென்சிபிள்லா நடந்துக்கோ", என்று அவள் சொல்லவும், "ம்கூம் அது எந்த ஸ்டோர்ல விக்குதுனு எனக்கு தெரியாதே மேம்", என்று தாரணி சொல்லவும், சாந்தினி முறைக்க அமைதியாக ஆகி விட்டாள்.



அடுத்த நாள் காலையில் ஆதர்ஷின் வீட்டில் தாராணியை ஆதர்ஷ் அறிமுக படுத்தினான்.



"இவங்க தான் ஒன் வீக்கு உங்களுக்கு கேர் டெக்கர்", என்று சொல்லவும், "ஹாய் செல்லங்களா", என்று தாரணியில் குரலிலே மயங்கி விட்டனர் குழந்தைகள்.



அவளும் மனதளவில் குழந்தை தானே!



ஆதர்ஷிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பிள்ளைகள் நம்பிக்கைக்குரிய இடத்தில் இருப்பது போன்ற உணர்வில் அவனும் நிம்மதியாக ஆபீஸ் சென்று விட்டான்.



அன்று அர்னவிற்கும் வேறு ஒரு வேலை இருக்க, அவன் அதற்காக சென்று இருந்தான்.



சாந்தினிக்கு ஆதரிஷிடம் ஒரு பைல் கொடுக்க வேண்டி இருந்தது.



இப்போதெல்லாம் அவள் அர்னவ்வுடன் அனைத்தையும் முடித்து கொள்கிறாள். ஆனால் இன்று அர்னவ் இல்லை தாராணியும் இல்லை.



அவளே செல்ல வேண்டிய கட்டாயம். அதற்காக அவளும் ஆதர்ஷின் அறையை நோக்கி சென்றாள்.



ஆதர்ஷ் அவனின் வயதை ஒத்த ஒரு ஆண்மகனிடம் அந்த ப்ராஜெக்ட் பற்றி தான் பேசி கொண்டு இருந்தான்



ஆதர்ஷின் ப்ராஜெக்ட் பார்ட்னர் கௌஷிக் தான் வந்து இருந்தான்.



அதே சமயம், "எக்ஸ்க்யூஸ் மீ?", என்று உள்ளே நுழைந்தாள் சாந்தினி.



"உங்க புது பிஏவா மிஸ்டர் ஆதர்ஷ் செம்ம ஹாட்டா இருக்காங்க", என்று கௌஷிக் லஜ்ஜை இன்றி பேச, சாந்தினிக்கோ அருவெறுப்பாக இருந்தது.



"அவளோ ஹாட்டா எனக்கு தெரியல", என்று ஆதர்ஷ் சொல்லி திரும்பவும், சாந்தினி கோவத்தை கட்டு படுத்தி கொண்டு நின்று இருந்தாள்.



"நான் அவரோட ப்ராஜெக்ட் பார்ட்னர்", என்று அவள் அழுத்தமாக சொல்லவும், "சோ வாட் பேபி என்னோட பெட் பார்ட்னர் ஆகிடு", என்று சொல்லிக்கொண்டே சாந்தினியை நெருங்க, அவளோ அவனின் மூலஸ்தானத்திலேயே கால் மூட்டியால் உதைத்து இருந்தாள்.



"கிட்ட வந்த கொன்றுவேன் ராஸ்கல்", என்று சொல்லி பைலை ஆதர்ஷின் டேபிளில் தோம் என்று வைத்து விட்டு வெளியே சென்று விட்டாள்.



ஆதர்ஷின் இதழ்களில் மெல்லிய புன்னகை.



கௌஷிக்கோ வலியில் துடித்து அப்படியே அமர்ந்து விட்டான்.



"என்ன ஆதர்ஷ் இப்படி ஹார்ஷா பேசுறா? சரியான பஜேரி போல", என்று அவன் சொல்லவும், "நீங்க ரொம்ப நல்லா பேசுனீங்களா? அவங்க என் ப்ராஜெக்ட் பார்ட்னர்.. இந்த ப்ராஜெக்ட் அவங்க கம்பெனி தான் பண்ண போகுதே நம்ப வெறும் இன்வெஸ்ட் தான் பண்றோம்... கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுக்க கத்துக்கோங்க", என்று கூறி இருந்தான்.



"என்ன ஆதர்ஷ் உங்களுக்கு அவங்க மேல கண்ணு போல.. விட்டா அவங்களுக்கு குழந்தை கொடுத்துருவிங்க போல", என்று நக்கலாக கௌஷிக் பேசவும், ஆதர்ஷ் சிரித்து கொண்டே நக்கல் குரலில், "ஆல்ரெடி குழந்தை கொடுத்து இருக்கேன் கௌஷிக்", என்றானே பார்க்கலாம்!



"வாட்", என்று கௌஷிக் கத்தவும், "என் குழந்தைகளோட அம்மா அவங்க தான்", என்று அவன் சொல்லவும், "ஒஹ் சாரி ஆதர்ஷ் உங்க வைப்னு தெரியாது", என்று அவன் போலியாக தான் மன்னிப்பு கேட்டான்.



ஆதர்ஷின் உயரம் தெரியுமே, அவனிடம் பகை வேண்டாம் என்கிற எண்ணம் தான்.



"என் வைப் இல்ல வெறும் குழந்தையோட அம்மா தான்", என்று சொல்லவும் கௌஷிக் எதுவும் கேட்க வில்லை.



ஆனால் அவனுக்கு சாந்தினியின் மேல் ஒரு தப்பான பார்வை படிந்தது.



குழந்தையின் அன்னை என்கிறான் ஆனால் மனைவி இல்லை என்றும் சொல்கிறான். அப்போது படுக்கைக்கு அழைத்து இருப்பான் இவளும் போய் இருப்பாள், ஆனால் இப்போது பத்தினி வேஷம் போடுகிறாள் என்கிற எண்ணம் கௌஷிகிற்கு.



அவன் சரோகேட் என்று சொல்லவில்லை அல்லவா. சொல்லிருந்தால் நிறைய பிரச்சனைகளை தவிர்த்து இருக்கலாம்.



இதே சமயம் அன்றைய நாள் மதியம் சாந்தினிக்கு மாதவிடாய் வந்து விட, வலி உயிர் போனது. ஆனால் அவள் முடிக்க வேண்டிய கட்டாயம்.



மாத்திரை உட்கொண்டு வேலை செய்ய துவங்கினாள். இப்படி எல்லாம் மாத்திரை போட மாட்டாள் தான். ஆனால் இன்று வேலையை முடித்தே ஆக வேண்டிய கட்டாயம்.



ஆதர்ஷ் அன்று மாலை சீக்கிரமே வீட்டிற்கு சென்று விட்டான். முதல் முறையாக பிள்ளைகளை தாரணியிடம் விட்டு வந்து இருக்கிறான்.



அவன் சென்ற உடன், பிள்ளைகள் தாரணியை புகழ்ந்து தள்ளி விட்டனர்.



"தாரு கேக் செஞ்சாங்க டாடி", என்று லயனிக்கா சொல்ல, "எங்க கூட உட்காந்து ஷின்சான் பாத்தாங்க",என்று லக்ஷித் சொல்லவும், அவனுக்கும் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.



இரவு எட்டு மணியளவில் ஆதர்ஷின் கைபேசி அலறியது.



தாரணி தான் அழைத்து இருந்தாள்.



"சார் மேம் இன்னும் வீட்டுக்கு வரல", என்றவுடன் அவனின் கண்கள் சுருங்கியது.



"சரி நீ இங்க வா", என்று அவன் சொல்லவும், அடுத்த பத்து நிமிடங்களில் அவள் வந்து விட, பசங்கள பார்த்துக்கோ என்றவன் அவனின் காரின் கீயை எடுத்து கொண்டு சென்றான்.



இங்கோ சாந்தினி மயக்கத்தில் இருக்க, அவளின் மீது படர காத்து கொண்டு இருந்தான் கௌஷிக்.



அவனின் இதழில் கொடூர புன்னகை.
 

அத்தியாயம் 4



சாந்தினி வேலை செய்து கொண்டிருந்தவள் மணி பார்க்கவே இல்லை.



மணி ஏழரையை தாண்டி இருந்தது.



ஆதர்ஷின் அலுவலகத்தில் அனைவரும் சென்று விட்டனர்.



அப்போது தான் அதை கூட அவ கவனித்து இருந்தாள்.



அங்கு கதவின் அருகே நின்று அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான் கௌஷிக்.



அவனை பார்த்ததும் அவளின் கண்கள் கனலாக மாறியது.



அவளுக்கு வயிறு வேறு மீண்டும் வலிக்க துவங்கியது. மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டது, பின்பு தண்ணீர் கூட குடிக்கவில்லை.



இப்போது தான் அவளுக்கு உரைத்தது.



அவளின் சானிட்டரி நாப்கின் கூட அவள் மாற்றவில்லை.



இப்போது மாற்றி விட்டு செல்லலாம் என்று நினைக்க, அவள் எழுந்து கொள்ள, அவளின் எதிரே வந்து நின்றான் கௌஷிக்.



"கொஞ்சம் தல்லுறிங்களா?", என்று அவள் கடுப்பாக கேட்கவும், "தள்ளிட்டா போச்சு..", என்று அவன் சொன்ன விதமே ஒரு மார்கமாக இருந்தது.



அவளுக்கு வயிறு வலி ஒரு பக்கம், அவளின் பெட் மாற்ற வேண்டிய கட்டாயம் வேறு.



"தள்ளு டா பொறுக்கி", என்று அவள் சொல்லி நகர போக, அவளின் கையை பிடிக்கவும், தீ சுட்டது போல துடித்து விட்டாள்.



கையை உதறி அவனை அடிக்க அவள் கையை ஓங்க, அவளின் கையை பிடித்தவன், அவளை தள்ளவும், அவளின் தலை டேபிளில் மோதி மயங்கி சரிந்தாள்.



ஒரு பக்கம் அவளின் மாதவிடாய், வேலையின் பளு, மற்றும் சாப்பிடாமல் வேறு இருந்தது எல்லாம் சேர்ந்து அவளை சோர்வாகி இருக்க, தலை மோதவும் மயக்கத்திற்கே சென்று விட்டாள்.



கௌஷிக்கின் இதழ் வளைந்தன.



காம கொடூரன் அவன்! இன்று சாந்தினி அவனை அடித்தது அவனை சீண்டி விட்டு இருக்க, அவளை இன்று சீரழிக்க வேண்டும் என்று அவனின் மனம் கருவிக்கொண்டது.



அவன் சாந்தினியின் மேல் படர எத்தனிக்க, அவனை எட்டி உதைத்து இருந்தது ஒரு கால்.



"அம்மா", என்று கத்தி விழுந்து இருந்தான் அந்த கேடுகெட்டவன்.



அங்கு ஆங்காரமாக அய்யனாரை போல் கோவத்தில் நின்று இருந்தான் அர்னவ்.



ஒரு வேலையாக வெளியே சென்றவன் இங்கயே அவனின் அபார்ட்மெண்ட் சாவியை விட்டுவிட்டு சென்று விட்டான். அதை எடுக்க அவன் இங்கு வரவும், அவன் கண்ணில் பட்டது என்னவோ சாந்தினியின் கேபினில் லைட் எரியும் காட்சி தான்.



அவள் இங்கே இருக்கிறாள் என்று எண்ணியவன், அவனே அவளை விட்டுவிடலாம் என்று கேட்பதற்காக அங்கே சென்றவனின் கண்ணில் பட்டது என்னவோ இந்த கௌஷிக் சாந்தினியின் மேல் படரும் காட்சி தான்.



அவனுக்கு சாந்தினி ஒரு சகோதரி போல அல்லவா!



கோவம் தலைக்கு ஏறி நின்று இருந்தான்.



"என்ன டா அம்மா! த்து பரதேசி, ஒரு பொண்ணு சுய நினைவு இல்லமா இருக்கும் போது இப்படி மேல பாயுற வெக்கமா இல்ல? அவங்க மட்டும் சுயநினைவுல இருந்தா உன்ன சீவி போட்டு இருப்பாங்க", என்றவன் கௌஷிக்கின் கோளாறை பற்றி எழுப்பி அவனின் கன்னம் வீங்க அடித்து எடுத்து விட்டான்.



இதே சமயம் தான் வந்தான் ஆதர்ஷ்.



அவன் அங்கே வரவும், அவனுக்கு சாந்தினி மயங்கி இருப்பது தெரிய, அதே சமயம் அர்னவ் கௌஷிக்கின் கன்னத்தை மாறி மாறி அரைவதை வைத்தே என்ன நடந்து இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது.



"அர்னவ்", என்ற ஆதர்ஷின் அழைப்பில் அவன் ஆதர்ஷனை பார்க்க, கௌஷிகோ இதான் சமயம் என்று, "ஆதர்ஷ் பாரு இவன் சாந்தினி கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பன்றான்... இத கேக்க வந்த என்ன கூட...", என்று சொல்லி முடிக்கும் முதல் ஆதர்ஷ் அடித்த அடியில் சுருண்டு விழுந்து இருந்தான்.



"ஸ்கௌன்றல் எவளோ தைரியம் இருந்தா இப்படி கேவலமான வேலை பார்த்துட்டு அர்னவ் மேல இப்படி பட்ட பழி போடுவ... அவன் என் தம்பி மாறி டா", என்று சொல்லி மீதும் அவனை மிதித்தான்.



"அர்னவ் த்ரோ திஸ் ஷிட்", என்றவன் சாந்தினியின் அருகில் செல்ல, அவளின் கன்னத்தின் காயத்தை பார்த்தவனுக்கு கௌசிக்கை கொன்று போடும் அளவிற்கு கோவம் வந்தது.



"சாந்தினி... சாந்தினி", என்று அவளை குலுக்கவும், அவளிடம் அசைவு இல்லை.



அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தான் சிறந்த வழி என்று அவனிற்கு தோன்றியது.



அவளை கையில் ஏந்தியவனின் கையில் ஏதோ ஈரப்பதம், அவளின் உடையை தாண்டி குருதி வழிந்தது.



அது எங்கே என்று தெரிந்தவனுக்கு மனதில் பாரம் ஏறி போனது என்னவோ உண்மை தான்.



உடனே அவனின் காருக்கு அவளை அழைத்து சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து விட்டான்.



இதே சமயம் அவனிடம் போர்ம் பில் பண்ண கொடுக்கவும், அதையும் பூர்த்தி செய்து முடிக்கவும், மருத்துவர் சாந்தினியை சோதித்து விட்டு வெளியே வரவும், ஆதர்ஷ் அவருக்காக காத்துகொண்டு இருந்தான்.



"சார் நீங்க தான் அவங்க ஹபாண்ட்டா?", என்று கேட்கவும், அவனுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.



ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை.



"உங்க மனைவி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருகாங்க அதனால தான் ஓவர் ப்ளீடிங் ஆகியிருக்கு... கொஞ்சம் அவங்கள பார்த்துக்கோங்க சார்... இவளோ பெரிய இடமா தெரியுறீங்க ஆனா பொண்டாட்டிய பார்த்துக்க மாட்டேங்குறீங்க...", என்பவர் அப்படியே தயங்கி நின்று விட்டார்.



"என்ன டாக்டர்?", என்று அவன் கேட்கவும், "உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்?", என்று அவர் சொல்லவும், ஆதர்ஷின் கண்கள் சுருங்கியது.



அவனும் ஆமோதிப்பாக தலையசைக்க, இருவரும் ஒரு சேர கேபினிற்குள் நுழைய, அவர் சொன்ன விடயங்கள் எல்லா ஆதர்ஷனுக்கு ஒரு நிமிடம் உலகமே தலை கீழாக மாறியது போன்ற உணர்வு.



"டோன்ட் ஒர்ரி சார் எல்லாம் சரி ஆகிடும்", என்று அவர் சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.



அவனோ அடுத்து சாந்தினியை பார்க்க அவளின் அறையில் நுழைய, அவளுக்கு சலைன் ஏறி கொண்டு இருந்தது.



உடையும் மாற்றி இருந்தார்கள்.



அவளின் அருகே சென்றவனுக்கு, அவளை நினைத்து பாவம் பார்ப்பதா அல்லது கோவப்படுவதா என்று தெரியவில்லை.



ஒரு நர்ஸ் உள்ளே வரவும், அவனை பார்த்தவர், "அவங்க எழுந்ததும் ஜூஸ் கொடுங்க சார்", என்று ஜூஸை வைத்து விட்டு சென்று விட்டார்.



இதே சமயம் அவனின் கைபேசி அலறியது.



அர்னவ் தான் அழைத்து இருந்தான்.



"சார் கௌஷிக்கை போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டேன்... சாந்தினி மேம்...", என்று அவன் நிறுத்தவும், "ஹாஸ்பிடல்ல இருக்கா அர்னவ்.. நீ என்னோட வீட்டுக்கு போய் இரு.. தாரணி அப்புறம் பசங்கள தனியா விட்டுட்டு வந்து இருக்கேன்...", என்று அவன் சொல்லவும், "ஓகே சார்... நான் உங்க வீட்டுக்கு போய் இருக்கேன்", என்று சொல்லி வைத்து விட்டான்.



ஆதர்ஷ் இருக்கும் போது சாந்தினியை பற்றி அவன் கவலை பட தேவை இல்லை.



அர்னவ்விற்கு ஆதர்ஷ் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது.



அர்னவ் அடுத்து ஆதர்ஷ் வீட்டை அடைய, குழந்தைகளுக்கு பியூட்டி அண்ட் தி பிஸ்ட் கதையை சொல்லி கொண்டு இருந்தாள் தாரணி.



"அந்த பிஸ்ட் அழகான ராஜகுமாரனா மாறிட்டான்", என்று அப்படியே அவள் திரும்ப, அவளின் முன் நின்று இருந்தான் அர்னவ்.



அவனை பார்த்ததும் உலகம் மறந்து, "இப்படி தான் அழகா இருந்தான்", என்று அவள் அவனின் முகத்தில் கை வைத்து வருட வர, அவனோ அவளின் கையை தட்டி விட்டு இருந்தான்.



"உண்மையாவே இருக்கீங்களா?", என்று விழி விரித்து கேட்கவும், "இல்ல ஹாலோகிராம்", என்று சொல்லிக்கொண்டே அவளை கடந்து சென்று லயனிக்கா மற்றும் லக்ஷித்தின் அருகில் அமர்ந்தான்.



அவர்களை குழந்தையில் இருந்து பார்ப்பவன் அவன்.



"அங்கிள்", என்று இருவரும் அவனை கட்டி கொண்டு, "டாடி எங்க?", என்று ஒரே போல கேட்க, "சாந்தினி ஆண்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல... தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காரு", என்று சொல்லவும், இருவரும் தலையாட்டி கொண்டனர்.



"மேம்க்கு என்ன ஆச்சு?", என்று பதட்டத்துடன் கேட்ட தாரணியிடம், "சொல்றேன்", என்று நிறுத்தி, "சாப்பிட்டீங்களா?", என்று பிள்ளைகளிடம் கேட்கவும், அவர்கள் ஆமோதிப்பாக தலையசைத்தனர்.



"நீங்க சாப்பிட்டீங்களா?", என்றவளுக்கு, இல்லை என்று தலைஅசைக்கவும், "வாங்க சாப்பிடலாம்", என்று அவள் அழைக்க, பிள்ளைகளுக்கு கார்ட்டூன் போட்டு விட்டு இருவரும் உணவு மேஜைக்கு சென்றனர்.



அங்கே அவன் பிள்ளைகள் கார்டூனில் மூழ்கி விட்டதை உறுதி செய்து கொண்டு நடந்தை தாரணியிடம் கூற, அவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.



"ஏன் இப்படி எல்லாம் பன்றாங்க? பொண்ணுங்கனா அவளோ சீப்பா? நாங்க எல்லாம் வெறும் உடம்பு சுகத்துக்கு மட்டும் தானா?", என்று அவள் கேட்கவும், அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது.



"எல்லா ஆம்பளைங்களும் அப்படி இல்ல", என்று அவன் சாப்பிட துவங்கினான்.



"தேங்க்ஸ்", என்றவளை அவன் நிமிர்ந்து பார்க்க, "மேம காப்பாத்தி இருக்கீங்க", என்றவுடன், "அவங்கனு இல்ல யாரா இருந்தாலும் நான் காப்பாத்தி இருப்பேன்", என்றான்.



அவள் அவனை பார்த்து கொண்டே இருக்க, "ஏன் இப்படி சைட் அடிக்கிற?", என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.



"அப்போ சைட் அடிக்கிறேன்னு தெரியுமா?", என்றவளை இவள் என்ன ராகம் என்று தான் பார்த்தான்.



"இப்படி விழுங்குற போல பார்த்தா தெரியாதா?", என்றவன் சாப்பிட்டு முடித்து விட்டு, மறுபடி பிள்ளைகளுடன் வந்து அமர்ந்து கொண்டான்.



இதே சமயம் கடினப்பட்டு கண்ணை திறந்து இருந்தாள் சாந்தினி,



அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான் ஆதர்ஷ்.



அவள் கஷ்ட படுவதை பார்த்தவன், அவளின் தோளை பிடித்து அமர்த்தி, அருகில் இருந்த ஜூஸை கொடுத்தான்.



அவளும் மறுக்காமல் வாங்கிகொண்டாள்.



பசி வயிறை கிள்ளியது. சோர்வாகவும் இருந்தது.



"ஆர் யு ஓகே நொவ்?",என்று கேட்டவனுக்கு, ஒரு சிறு தலையசைப்பு மட்டுமே!



"கௌசிக்கை போலீஸ் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டான் அர்னவ்", என்று சொன்னவன் நடந்ததையும் கூற, அவளுக்கோ என்ன மனநிலை என்று தெரியவில்லை.



அமைதியாக அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாள்.



"ஐ அம் சாரி", என்று அவன் சொல்லவும், அவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.



"டாக்டர் என்கிட்ட ஒன்னு சொன்னாங்க", என்று அவளை ஊடுருவி அவன் பார்க்கவும், "என்... என்ன?", என்று கேட்கவும் போதே அவளின் உதடுகள் நடுங்கின.



பிறகு அவன் சொல்லவும், இவ்வளவு நேரம் விழாமல் இருந்த கண்ணீர் விழுந்து விட்டது.
 

அத்தியாயம் 5



ஆதரிஷிடம் டாக்டர், "உங்க இரண்டு பேருக்கும் குழந்தை இருக்கா சார்?", என்று கேட்கவும், அவனோ தயக்கத்துடன், "ம்ம் இரண்டு பசங்க இருக்காங்க", என்றவனை பார்த்து, "ஹப்பாடா அப்போ ஓகே சார் ஒன்னும் பிரச்சனை இல்ல", என்றவரை பார்த்து, "எதுக்கு ஓகே?" என்று அவன் புருவம் உயர்த்தி கேட்டான்.



"இல்ல சார் உங்க மனைவியால இதோட ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாதே அதான் சொன்னேன்", என்றவுடன், அவனுக்கோ பேரதிர்ச்சி.



சாந்தினியால் கர்ப்பம் தரிக்க முடியாதா? இதனால் தான் அவள் இன்று வரை திருமணம் செய்யவில்லையா? என்கிற பல கேள்விகள் அவனுள் சுழன்றது.



"உங்க இரண்டு பசங்களோட சந்தோஷமா இருங்க சார்... அண்ட் பீரியட்ஸ் அப்போ அவங்கள கொஞ்சம் பார்த்துக்கோங்க", என்பதுடன் அவர் நிறுத்தவும், அவன் வெளியே வந்து விட்டான்.



அவனின் கண்களில் சாந்தினி அன்று தவித்த தவிப்பு கண் முன் வந்து சென்றது. சட்டென தன்னை கட்டு படுத்தி கொண்டு அவளின் முன் இப்போது அமர்ந்து இருக்கிறான்.



"சோ உன்னால இதுக்கு மேல குழந்தை பெத்துக்க முடியாது?", என்று அவன் புருவம் உயர்த்தி கேட்கவும், "ம்ம்..", என்று பதில் அளித்தவளின் கண்களில் இவ்வளவு நேரம் தேக்கி வைத்த நீர் விழுந்து விட்டது.



"ஆனா எப்படி?", என்று அவன் புருவம் உயர்த்தி கேட்கவும், "மூணு வருஷம் முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் ஆச்சு அப்போ தான் கர்ப்பப்பை வீக் ஆகிருச்சு.. இதுக்கு மேல குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க", என்று அவன் முன் அழவே கூடாது என்று தாக்கு பிடித்து பேசி கொண்டு இருந்தாள்.



"அதுக்கு பிறகு தான் லக்ஷித் லயனிகாவை பத்தி கேட்டியா?", என்றவனின் குரலில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை.



"இல்ல அதுக்கு முன்னாடியே கேட்டேன்.. என் லைஃப்ல கல்யாணம் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்... உங்க மனைவி இறந்துட்டாங்கனு கேள்வி பட்டேன்.. சோ...", என்று அவள் நிறுத்தவும், "சோ குழந்தைகளை நீ பார்த்துக்கலாம்னு நினைச்சிட்டே", என்று அவன் தான் முடித்து இருந்தான்.



அவளிடம் ஆமாம் என்று தலையசைப்பு மட்டும் தான்.



"எனக்கு மட்டும் தான் உன்ன பார்த்து கொஞ்சம் கூட பரிதாபமே வரல... குழந்தையை கொல்ல கூட துணிஞ்சவ தான நீ... அதான் உனக்கு கடவுள் குழந்தைகளே கொடுக்கல", என்று அவன் ஈவு இரக்கம் இல்லாமல் பேசவும், "லயா லக்ஷித் என் குழந்தைங்க தான்", என்று அவள் அழுத்தமாக கூறவும், "நீ வெறும் சரோகேட் தான்", என்று அவனும் சளைக்காமல் பதில் அளித்தான்.



"ட்ரடிஷனல் சரோகேட் தான்", என்று அவள் சொல்லவும் அவனுக்கு தூக்கி வாரி போட்டது.



"என்ன சொல்ற?", என்று புருவம் சுருக்கி அவன் பார்க்க, "உங்க மனைவி மிஸஸ் சுப்ரியா ஆதர்ஷராம் சொல்லலையா? ஆர்டிபிஷியல் இன்செமினேஷன் முலயமா என்னோட கருமுட்டை வச்சி தான் குழந்தை பிறந்தது... நான் தான் அவங்க பயோலொஜிக்கல் மதரும் கூட மிஸ்டர்", என்று அவள் சொல்லவும், அவன் தான் பேச்சற்று நின்று விட்டான்.



"இன்னும் எத்தனை பொய் என் கிட்ட சொல்லிருக்காளோ", என்று அவனின் முன்னாள் மனைவி சுப்ரியாவை நினைத்து கொண்டான்.



அவனுக்கு அவளை நினைத்து கடுப்பாக இருந்தது.



காதலால் நிகழ்ந்த திருமணம் கூட அல்லவே! அவன் ஒரு நாள் செய்த தவறுக்காக செய்த திருமணம் அவனை இங்கு கொண்டு வந்து நிறுத்தும் என்று அவன் நினைக்கவே இல்லை.



"நீங்க என்கூட இருக்க வேண்டாம்... பசங்க தனியா இருப்பாங்க கிளம்புங்க", என்று அவள் சொல்லவும், "ரொம்ப அக்கறை தான்.. பொறந்த குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன்னு சொன்னவை தானே நீ...இப்போ வந்துட்ட பெருசா...", என்று அவன் சீறவும், "ஆமா கொடுக்கல ஏனா...", என்று அவள் ஆரம்பிக்கும் போதே, "ஸ்டாப் இட் சாந்தினி... நீ சரோகேட்டா இருக்கலாம் , பயோலொஜிக்கல் மதர்ரா கூட இருக்கலாம் பட் நீ ஒன்னும் நல்லாவா கிடையாது... உன்ன பத்தி இன் அண்ட் அவுட் சுப்ரியா அப்பா பிரகாஷ் சொல்லிட்டாரு", என்று அவன் சொல்லவும், அவளின் விழிகள் அழுத்தமாய் மூடி திறந்தன.



"சரி தெரிஞ்சிகிட்டீங்களா? ரொம்ப நல்லது... கிளம்புங்க", என்று அவளின் முகத்தை திருப்பி கொண்டாள்.



அவனுக்கோ கோவமாக வந்தது, இத்தனையும் செய்துவிட்டு எதுவும் செய்யாதது போல் இருக்கிறாளே என்கிற கோவம், அவனை முதன் முதலில் ஈர்த்த பெண் இப்படி செய்து விட்டாலே என்கிற ஆத்திரம் வேறு, அவள் முகத்தை திருப்பவும், அவனே சென்று அவளின் தாடையை பற்றி திருப்பி அவனை பார்க்க வைத்தான்.



அவளோ அவனிடம் இருந்து விடுபட முயல, அவன் விட்டால் தானே, "என்ன டி சீன் போடற?", என்று அவன் கேட்கவும், அவன் எதற்காக இப்போது கோவப்படுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.



"வலிக்குது ஆதர்ஷ்", என்று அவள் ஒருகட்டத்தில் சொல்லிவிட, அதே சமயம் உள்ளே வந்தார் ஒரு தாதி.



அவர்கள் இருந்த நெருக்கத்தை பார்த்து அவர்கள் ஏதோ முத்தம் கொடுப்பது போல் அவருக்கு தெரிய, "அச்சோ சாரி சார்", என்று அவரது குரலில் அவன் சட்டென விலகி விட்டான்.



"மேம்கு வைட்டல்ஸ் செக் பண்ணனும்", என்று அவர் சொல்லவும், அவன் வெளியே சென்று விட்டான்.



அவன் வெளியேறியதும், "உங்களுக்கு குழந்தைங்க இருக்கா மேடம்?", என்று அந்த தாதி கேட்கவும், "ம்ம்", என்று பதில் சொல்லவும், "எத்தனை வயசு?", என்று அவர் கேட்கவும், "நாலு வயசு", என்று சொன்னவுடன், "நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க மேடம்", என்றவரை ஆழ்ந்து பார்த்தார்.



"இல்ல இந்த காலத்துல, குழந்தைங்களாம் வந்தததும் புருஷங்க இவளோ அக்கறையா பார்த்துக்க மாட்டாங்க.. ஆனா உங்க புருஷன் உங்க கூடவே இருந்து பார்த்து கிட்டார். உங்களுக்கு நாப்கின் கூட அவரு தான் வாங்கிட்டு வந்தார்.", என்றவரை விழி விரித்து பார்த்தாள்.



"புருஷனா?", என்று அவள் புருவம் சுருங்கவும், "ஹான் நீங்க மிஸஸ் சாந்தினி ஆதர்ஷராம் தான?", என்று அவர் கேட்கவும், "ம்கூம் நாசமா போச்சு இது மட்டும் அந்த அரக்கன் காதுல விழுந்தா இதுக்கும் சேர்த்து என்ன வச்சி செய்வான்", என்று நினைத்து கொண்டே, "ஐயோ அது...", என்று அவள் ஆரம்பிக்கும் போதே, மீண்டும் உள்ளே நுழைந்தான் ஆதர்ஷ்.



அவனின் போனை தான் எடுக்க வந்தான். அதற்குள் தாதியோ, "கொஞ்ச நேரம் கூட பொண்டாட்டிய விட்டுட்டு இருக்க மாட்டிங்களா சார்?", என்று அவர் வெளிப்படையாக கேட்கவும், சாந்தினிக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்று இருந்தது.



ஆதார்ஷோ பற்களை கடித்து அமைதியாக இருந்தான்.



"இரண்டு பசங்களுக்கும் நாலு வயசா மேம்?", என்று சாந்தினியை பார்த்து வினவ, "ஆமாம் ட்வின்ஸ்", என்று சொன்னதும், தாதிக்கு தான் வெக்கம் வந்து விட்டது.



"சார் உங்கள லவ் பண்றத பார்த்தா உங்களுக்கு ட்ரிப்லேட்ஸ் பிறந்து இருந்தா கூட ஆச்சரிய பட ஒன்னும் இல்ல", என்று சொன்னாரே பார்க்கலாம், சாந்தினி ஆதர்ஷ் இருவருக்குமே தர்ம சங்கடமான நிலை.



"எல்லாம் என் நேரம்", என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்து கொண்டான்.



தாதி வெளியே சென்றதும், "எதுக்கு உங்க மனைவின்னு சொன்னிங்க?", என்று அவனிடம் மல்லுக்கு நின்றாள்.



"எனக்கு ஒன்னும் ஆசை எல்லாம் இல்ல தாயே... அவங்க ப்ரோம் கொடுத்தாங்க... உன்ன அட்மிட் பண்ணனும்னு அப்படியே சைன் பண்ணிட்டேன்... தப்பு தான்", என்று அவனும் கத்த, இருவரும் திரும்பி கொண்டனர்.



இதே சமயம் டாக்டர் வந்து, "ட்ரிப்ஸ் முடிஞ்சதும் கிளம்பலாம் சார்... கொஞ்சம் பார்த்துக்கோங்க", என்று அவர் சொல்லவும், தாதியோ, "அதான் எப்பவும் பார்த்துகிட்டே இருக்காரே", என்று சொன்னவுடன், இருவருக்கும் உள்ளுக்குள் எரிமலை குழம்பு கொதித்து கொண்டு இருந்தது.



ட்ரிப்ஸ் முடிய, இருவரும் வீட்டை அடைந்த சமயம், மூன்று குழந்தைகளை சமாளித்து கொண்டு இருந்தான் அர்னவ்.



தாராணியும் குழந்தை தானே, லயனிக்கவோ பார்பி படம் பார்க்க ஆசை கொல்ல, லக்ஷித் டோரேமோன் என்று சொல்லவும், தாரணியோ ஹார்ரி பாட்டர் பார்க்கலாம் என்று நின்று விட்டாள்.



அர்னவ் தான் அவர்களை உருட்டி மிரட்டி இறுதியாக, பிரோசான் பார்க்க வைத்து கொண்டு இருந்தான்.



சற்று சோர்வாக வந்தாள் சாந்தினி.



அவர்கள் இருவரையும் பார்த்தவர்கள், "மேம்", என்று தாரணி அவளை ஓடிச்சென்று அணைத்து கொள்ள, பிள்ளைகளும், "ஆண்ட்டி", என்று அணைத்து கொண்டனர்.



"ஆண்ட்டிக்கு உடம்பு சரி இல்ல, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்", என்று ஆதர்ஷ் சொல்லவும், "நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்", என்று சாந்தினி சொல்லிவிட்டு அர்னவை பார்த்தவள், "ரொம்ப தேங்க்ஸ்", என்று உருக்கமாக கூறினாள்.



அவனோ, "ஐயோ மேம், இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் நீங்க எனக்கு ஒரு அக்கா மாறி", என்றவுடன், "என்ன எல்லாம் அக்கா தங்கச்சின்னு சொல்லாதீங்க சொல்லிட்டேன்", என்று தாரணி சொல்லவும், அர்னவ் அவளை முறைத்து பார்த்தான்.



"அப்படி பார்க்காதீங்க வெக்கமா வருது", என்றவுடன், "மேம் உங்களுக்கு வேற நல்ல பிஏ கிடைக்கலயா?", என்று கேட்டே விட்டான்.



"ஏன் தாரணிக்கு என்ன குறைச்சல்?", என்று ஆதர்ஷ் கேட்கவும், "எதுவும் குறைச்சல் இல்ல சார், எல்லாமே அதிகம்", என்று சொன்னவன், "நான் இவங்கள ட்ரோப் பண்ணிட்டு கிளம்புறேன் சார்', என்றவுடன், சாந்தினி மற்றும் தாராணியும் கிளம்பி விட்டனர்.



குழந்தைகளுடன் ஆதர்ஷ் உறங்க சென்று விட்டான்.



அடுத்த நாள் விடிய, தாரணியோ, "நான் ஆதர்ஷ் சார் வீட்டுக்கு போறேன்", என்று சொன்னவள், சென்று விட, இன்று ஒரு நாள் சாந்தினிக்கு விடுமுறை எடுத்து கொள்ள தான் தோன்றியது.



இதே சமயம், ஆதார்ஷோ, தாரணி வந்தவுடன், "சாந்தினி ஆபீஸ் வரலா?", என்று கேட்கவும், "இல்லனு நினைக்கிறன் சார்', என்றவுடன், அவனுக்கோ அவளிடம் இருந்து ஒரு கோப்பை வாங்க வேண்டி இருந்தது.



ஆகையால் அவனே அவளை சென்று பார்க்க முடிவெடுத்து இருந்தான்.



அவனின் மனமும் அவளை ஒரு முறை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னது உண்மை தான்.



ஆனால் அவனது ஈகோ அதை எல்லாம் விடாதே!



அவனும் அவளின் வீட்டிற்கு வந்தவன், கதவை தட்ட, "கம் இன்", என்று சொன்னவள் தாரணி தான் என்று நினைத்து இருந்தாள்.



இல்லை என்றால் அவளை பார்க்க யார் வர போகிறார்கள். அர்னவ் இப்போது தான் அவளிடம் பேசி வைத்து இருந்தான்.



ஆதர்ஷ் உள்ளே வரவும், இருவரின் கண்களும் விரிந்தன.
 

அத்தியாயம் 6



"இப்படி தான் உள்ள வருவீங்களா?", என்று அவள் சீறவும், அவன் சட்டென திரும்பி கொண்டான்.



அவள் மட்டும் தானே இருக்கிறாள் என்று, அவள் நைட் பண்ட்ஸ் மற்றும் மேலே ஒரு மெல்லிய ஆடை மட்டும் தான் அணிந்து இருந்தாள். வெறும் அந்த மெல்லிய ஆடை மட்டும் தான். அது அவளின் அங்க வளைவுகள் மட்டும் அல்லாமல் அவளின் முன்னழகையும் எடுத்து காட்டியது.



"அப்புறம் எதுக்கு டி கம் இன் சொன்ன?", என்று அவனும் பற்களை கடித்து கொண்டு கேட்டான்.



அவனுக்கு என்ன ஆசையா அவளை இப்படி பார்க்க வேண்டும் என்று! அவளை கண்டாலே கத்திக்கொண்டு இருக்கிறான்.



"நான் தாராணின்னு நினைச்சேன்", என்று அவள் சொல்லிக்கொண்டே, அருகில் ஏதாவது டீ ஷார்ட் கிடைக்குமா என்று தேடவும், அவளது நேரத்திற்கு அது கூட கிடைக்கவில்லை.



"எதுக்கு வந்திங்க?", என்றவளுக்கு அவனை வெளியில் அனுப்பி விட்டால் போதும் என்று தான் தோன்றியது.



"பைல் வாங்க வந்தேன்... அப்படியே நீ எப்படி இருக்கானு பார்க்க வந்தேன்.. நல்லா தான் இருக்க", என்று இறுதி வார்த்தையை அவன் குரலை செருமி சொல்லவும், அவளுக்கோ கோவம் வந்து விட்டது.



"என்ன சொல்றிங்க?", என்று எகிறி கொண்டு அவள் அவன் முன் வந்து நிற்கவும், அவள் நிற்கின்ற கோலத்தை மறந்து விட்டாள்.



"என்ன உண்மையா தான் சொல்றேன்.. நல்லா தான் இருக்க", என்று அவன் மீண்டும் அவளை மேல் இருந்து கீழ் பார்க்க, அவளுக்கு அப்போது தான் மீண்டும் அவள் இருக்கும் கோலம் தெரிந்தது.



"ச்ச இப்படியா ஒரு பொண்ண பார்ப்பீங்க?", என்றவளை பார்த்து, "நான் ஒன்னும் முனிவன் இல்லமா சாதாரண மனுஷன் தான்... இப்படி தல தலனு ஒரு பொண்ணு வந்து முன்னாடி வந்தா எல்லா ஆம்பளைங்களும் மாறி நானும் பார்ப்பேன் தான்", என்று சொன்னவனுக்கு தெரியும் அவன் ஒன்றும் யாரையும் இப்படி பார்த்தது இல்லை.



ஹார்வர்ட்டில் படித்தவன் அவன், யுஎஸ்இல் அவன் காணாத பெண்களும் இருப்பார்களா என்ன?



ஆனால் எப்போதும் அவனுக்கு என்று கோட்பாடுகள் இருந்தன.அது தகர்த்த ஒரே ஆள் சுப்ரியா மட்டும் தான்.



"இருங்க போய் பைல் எடுத்துட்டு வரேன்", என்று சொன்னவள் செல்ல போக, அப்போது தான் குளித்து வந்தவளின் கால் தடுக்கி விட, அப்படியே ஆதர்ஷனின் மேல் சரிந்தாள்.



அவனும் அவள் விழுவாள் என்று எதிர்பார்க்க வில்லை.



அதனால் கீழே விழுந்து விட, அவனின் மேலே சாந்தினியும் விழுந்து இருந்தாள்.



அவளின் மென்மையான பகுதிகள் அவனை முட்டி செல்ல, அவனுக்கோ கோவமாக வந்தது.



"சரியான இம்சையா இருக்கா, படுத்துறா", என்று நினைத்தவன், "கொஞ்சம் எழுந்து தொலை டி", என்று கத்தவும், "இருங்க", என்று சமாளித்தவள், எழுந்து நின்று, "இந்த டி போட்டு பேசுற வேலை எல்லாம் வச்சிக்காதிங்க", என்று ஒற்றை விரலை நீட்டி அவனை எச்சரிக்கவும், அவனோ அவளின் கையை பிடித்து கீழே இறக்கி விட்டான்.



"அப்படி தான் டி பேசுவேன் என்ன பண்ணுவ?", என்று அவளை நெருங்கி அவன் நிற்கவும், அவளுக்கோ அவனை அருகில் இருந்த வாசை எடுத்து அடித்து விட்டாள் என்னவென்று தான் தோன்றியது.



இருந்தாலும் அடிக்க முடியாது என்று தெரியும்.



"தள்ளுங்க", என்று அவள் சொல்லவும், அவன் இரண்டு கைகளால் அவளின் தோளை பிடித்து தள்ளி விட்டான்.



"ஐயோ தள்ளி தொலையா", என்று கத்திவிட்டு சென்று விட்டாள்.



இரண்டு நிமிடங்களில் அவள் வந்து அவனிடம் பைலை நீட்டவும், டீ ஷர்ட்டும் அணிந்து இருந்தாள்.



அதை வாங்கி கொண்டவன், "இதுக்கு முன்ன இருந்ததே நல்லா இருந்துது", என்று சொல்லிவிட்டு அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன் சென்று இருந்தாள்.



"ச்ச அவன் போய்யா இப்படி பார்க்கணும்? இதோட கேர்புல்லா இருக்கனும்", என்று சொல்லவிட்டு அவளும் நகர்ந்து சென்று சாப்பிட்டவள் உறங்கி இருந்தாள்.



இப்படியாக ஒரு இரண்டு நாள் சென்று இருக்கும்.



மூன்றாம் நாள், சாந்தினி வேலைக்கு வந்து இருந்தாள்.



அவளுடன் ஆதர்ஷ்க்கு ஒரு வேலையும் இருந்தது. ஆகையால் அதை செய்து கொண்டு இருந்தவர்கள், அப்படியே மதிய உணவு நேரம் வர, ஒன்றாக சாப்பிட துவங்கி இருந்தார்கள்.



அவனுக்கோ அவளிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருந்தது.



ஆதர்ஷின் முன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் சாந்தினி.



"எவளோ பணம் வாங்குன?", என்று நக்கலாக வந்தது அவனின் கேள்வி.



அவளோ அவனை புருவம் சுருக்கி பார்த்து, "என் குழந்தைங்களை சுமக்க எவளோ வாங்குனேன்னு கேட்டேன்", என்று அவன் கூறவும், அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்து, "ஒன் க்ரோர்", என்று சொல்லவும், "பணம் கொடுத்தானு கருப்பையை வித்து இருக்க.. அப்போ எத்தனை பேருக்கு பணத்துக்காக உன்னோட கற்பை வித்து இருக்க?", என்று கேட்கவும், சாந்தினி கொதித்து எழுந்து விட்டாள்.



"மைண்ட் யுவர் ஒர்டஸ் மிஸ்டர் ஆதர்ஷராம்", என்று அவள் சீற்றமாக கூறவும், "என்ன டி என்னவோ பத்தினி மாறி சீன் போடுற? பணத்துக்காக தான குழந்தையை சுமந்த! அப்போ பணம் தேவைப்பட்டதுனால இதுக்கு ஒத்துக்கிட்ட, இதே எவனாச்சு அப்போ படுக்க கூப்பிட்டு இருந்தாலும் போயிருப்ப தானே", என்று அவன் நாக்கில் நரம்பு இல்லாமல் பேசவும், அவளோ அருகில் இருந்த சாம்பாரை எடுத்து அவனின் தலையில் கவிழ்த்து இருந்தாள்.



"இதுக்கு மேலே ஏதாவது பேசுனா சாம்பார் ஊத்த மாட்டேன், சங்க அறுத்துருவேன்", என்று சொன்னவள் அங்கிருந்து சென்று விட்டாள்.



"நான் பாஸா இல்ல இவை பாஸானு தெரியல", என்று அவன் சலித்து கொண்டு அமர்ந்து இருந்தான்.



இதே சமயம் அர்னவ் மற்றும் தாரணி ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.



"நீங்க எவளோ நாளா ஆதர்ஷ் சார் கிட்ட ஒர்க் பண்றீங்க?", என்று கேட்டாள் தாரணி.



"பைவ் இயர்ஸ்", என்று சொன்னவன், அவனின் வேலையை பார்க்க, "அப்போ உங்களுக்கு ஆதர்ஷ் சார் பத்தி எல்லாமே தெரியும்ல?", என்று கேட்கவும், அவளை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன், "அவரை பத்தி எல்லாமே தெரிஞ்சி வச்சிக்க நான் என்ன அவரோட பொண்டாட்டியா?", என்று அர்னவ் சலிப்பாக சொன்னான்.



"அச்சோ சோ பண்ணி", என்று சொல்லி சிரிக்கவும், "உனக்கு என்ன வேணும்?", என்று நேரடியாக கேட்கவும், "முத்தம் வேணும் தருவீங்களா?", என்றாலே பார்க்கலாம்.



"பைத்தியமா டி நீ?", என்று எழுந்தவனிடம், "இதுல என்ன இருக்கு நீங்க தரலைனா என்ன, நான் தரேன்", என்றவள் அவனின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து இருந்தாள்.



அவனின் கண்கள் விரிந்தன, அவன் அடுத்த வார்த்தை பேச வருவதற்குள் சாந்தினி உள்ளே வந்து விட்டாள்.



"ஒர்க் எல்லாம் ஓகே வா?", என்று அவள் கேட்கவும், "எஸ் மேம்" என்று இருவரும் பதில் அளிக்க, அருகில் இருந்த திசு எடுத்து அர்னவ் கையில் கொடுத்தவள், "கன்னத்தை தொடச்சிக்கோங்க", என்று சொன்னதும், அவனின் கண்கள் சட்டென தாராணியை பார்த்தது.



அவனுக்கோ ஒரு வித அழுத்தம். இப்படி சாந்தினியின் முன்னால் தலைகவிழ்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விட்டாலே என்கிற கோவம் வேறு.



"ஒர்க் பண்ணா சரி தான்", என்று சொன்னவள் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.



அடுத்து வந்த நாட்கள் இப்படியே நகர்ந்து சென்றன. இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் தான் ஆருஷ் அவனுக்கு அழைத்து இருந்தான்.



அவனும் தளிருடன் பேசி இருந்தான்.



தளிர் தான் அவனிடம் கேட்டு இருந்தாலே, பிள்ளைகளிடம் சாந்தினி தான் அன்னை என்று சொல்லிவிட வேண்டும் என்று அதை தான் அவன் நினைத்து கொண்டு இருந்தான்.



ஒரு வாரம் முன் பிள்ளைகளின். பள்ளியில் நடந்த நிகழ்வும் அவனின் நினைவிற்கு வந்தது.



லயனிக்காவின் வகுப்பரிசியார் அவனை அழைத்து இருக்க, அவள் ஒரு பிள்ளையை அடித்து விட்டதாக அவனை வர சொல்லி இருந்தார்கள்.



அவன் வந்ததும், அவள் அடித்த பிள்ளையின் அன்னை தான் பேசினார்.



"ஏன் சார் உங்க பொண்ணுக்கு கொஞ்சம் கூட மனேர்ஸ் சொல்லி கொடுக்க மாட்டிங்களா?", என்று அவர் கத்த, ஆதார்ஷோ அவனின் மகளை பார்க்க, "அவன் எனக்கு மம்மி இல்லனு கிண்டல் பண்ணன் டாடி", என்று அவளும் விசும்பினாள்.



"உண்மையை தானே சொல்லிற்கான்.. உனக்கு அம்மா இருந்து இருந்தா இப்படியா இருந்து இருப்ப?", என்று அந்த பெண்மணி கூறவும், "இது மட்டும் அவ அம்மா கேட்டு இருந்தா உங்கள சும்மா விட்டு இருக்க மாட்டா", என்று ஆதர்ஷும் சீறினான்.



ஏனோ அப்போது அவன் கண்களில் வந்தது சாந்தினியின் பிம்பம் தான். அவளின் ஆளுமையை மட்டும் தான் அவன் கண்களுக்கு தெரிந்தது. நிச்சயமாக இப்போது சாந்தினி இருந்து இருந்தால் இந்த பெண்மணியால் வாயை திறந்து கூட இருக்க முடியாது.



அன்றிலிருந்து அவனின் மனத்திலும் ஒரு நெருடல் இருந்தது. பிள்ளைகளை அவன் வைத்து கொள்ளலாம் ஆனால் இவள் தான் அன்னை என்று சொல்வதில் தவறில்லையே என்று தோன்றியது.



இதே சமயம் தான் தளிரும் இதை சொல்லி இருந்தாள்.



அவனுக்குள்ளும் தான் எத்தனை கஷ்டங்கள், கசப்பான நினைவுகள்.



முப்பது வயது ஆண்மகன் அவன், இருபத்தி நான்கு வயதிலேயே திருமணம், இருபத்தி ஆறு வயதில் அவனின் கைகளில் குழந்தைகள் என்று கொடுத்து விட்டு, சுப்ரியாவும் சென்று விட, அவனுக்கு கிடைத்தது என்னவோ அவளின் மரண செய்தி தான்.



அவனுக்கு இன்றும் அவன் யுஎஸ்சில் இருந்து அவன் இந்தியா வந்த பிறகு தனியாக அவன் தொழில் துவங்க எத்தனிக்கும் போது நடந்த அனைத்தும் நினைவில் இருந்தது.



எப்படி இருந்து இருக்க வேண்டிய அவன் வாழ்க்கை, திசை மாறி போனது எப்படி என்று அவனுக்கே தெரியவில்லை.



செந்தளிர் இல்லத்தின் செங்கோலை வைத்து ஆட்சி செய்ய வேண்டியவன், இன்று குடும்பம் விட்டு தனியாக தத்தளிக்கிறான்.



அதுவும் இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு, நினைத்தால் அவனுக்கே சிரிப்பாகவும் இருந்தது அதே சமயம் மனது ரணமாகவும் வலித்தது.



அவனின் நினைவுகள் அவனின் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்தது, ஆதர்ஷின் வாழ்வு திசை மாறிய தருணம் இனி அடுத்த அத்தியாயத்தில் இருந்து!






 

அத்தியாயம் 7



அப்போது ஆதர்ஷிற்கு இருபத்தி மூன்று வயது இருக்கும்!



"நான் தனியா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்", என்று ஹார்வர்டில் படிப்பை முடித்து விட்டு வந்தவன் ராஜ பார்த்திபனின் முன்னால் வந்து நின்றான்.



யாருக்கும் அடங்காதவன் அவன்! சிறுவயதில் இருந்தே அப்படி தானே...



"என்ன பிசினஸ்?", என்று அவர் கேட்கவும், "ஈக்கோ பிளேட்னு ஒரு புட் பிஸ்னஸ்", என்றவனை பார்த்து, "உனக்கு என்ன வேணுமோ நீ எடுத்துக்கலாம்", என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.



"ஏன் டா தனி பிஸ்னஸ்?", என்று அஞ்சனா கேட்கவும், "அவனுக்கு பிடிச்சதை அவன் பண்ணட்டும்", என்று ருத்ரன் தான் அவனுக்கு துணையாய் நின்றார்.



"உனக்கு எப்படி டா புட் பிஸ்னஸ்லாம்?", என்று கேட்கவும், "நான் தனியா ஆரம்பிக்கல... என்னோட பிரண்ட் சுப்ரியா கூட இருக்கேனு சொல்லிருக்கா", என்று அவன் சொல்லவும், "மிஸ்டர் பிரகாஷ் பொண்ணுல?", என்று விஷ்ணு கேட்கவும், "ஆமா டாடி அவ தான் என்னோட கிளாஸ்ட்மேட் தான்.. செம்ம ஸ்மார்ட்", என்று அவளுக்கு புகழாரம் வேறு சூட்டினான்.



"அவன் தான் இவளோ சொல்றனே அப்புறம் என்ன... எல்லாம் அவன் பார்த்துக்குவான்", என்று ருத்ரன் முடித்து விட, ஆதர்ஷ் அவனின் புது நிறுவனத்தை நிறுவி இருந்தான். ஆனால் அதை அவன் ஆர்ஏ குரூப்ஸ் உடன் இணைக்க வில்லை.



இணைய தோன்றும் போது இணைத்து கொள்வதாக கூறி இருந்தான்.



அப்போதே ஆதிக்கு அழைத்து இருந்தார் விஷ்ணு.



"சொல்லுங்க டாடி", என்று அவன் சொல்லவும், "நீயும் உன் அண்ணா மாறி தைவ செஞ்சு நான் தனியா போறேன்னு வந்து நிக்காத டா... என்னால தனியா இதை எல்லாம் மைண்டைன் பண்ண முடியல", என்று விஷ்ணுவின் வார்த்தையில் ஆதிக்கே பாவமாக தான் இருந்தது.



"நீங்க எதுவும் கவலை படாதீங்க டாடி நான் பார்த்துக்குறேன்", என்று அவனின் வார்த்தை அவருக்கு தேன் போல இருந்தது.



இதே சமயம் அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டு இருந்த ஜானவியும், "டாடி நான் இருக்கேன்", என்று சொல்லவும், "நீ கல்யாணம் ஆகி உன் புருஷன் வீட்டுக்கு போயிருவியே", என்று மூக்கை பிடித்து ஆட்டினார்.



அடுத்து அவனின் நிறுவனத்தை துவங்கிய நாள் அன்று தான் அனைவரும் முதல் முறை சுப்ரியாவை பார்த்தனர்.



முன்னவே அவளை பற்றி சொல்லி இருக்கிறான் தான். ஆனால் இன்று நேரில் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள்.



"ரொம்ப அழகா இருக்கா இந்த பொண்ணு", என்று வைஷ்ணவி சொல்லவும், "ம்ம் ஆதர்ஷ்க்கு பிடிச்சி இருந்தா வெறும் பிஸ்னஸ் பார்ட்னரா மட்டும் இல்லமா லைஃப் பார்ட்னரா கூட ஆகிக்கலாம்", என்று விஷ்ணு முடித்து இருந்தார்.



"எனக்கு என்னவோ ஆதர்ஷ்க்கு இந்த பொண்ணு செட் ஆக மாட்டான்னு தோணுது... ஆதர்ஷ் ரொம்ப டொமினன்ட் அவனை மேய்க்க அவனுக்கே ஆர்டர் போடுற பொண்ணு வந்தா தான் சரியா இருக்கும்... இந்த பொண்ணு ரொம்ப சாப்ட்", என்று கொற்றவை சொல்லவும், வித்யாவின் எண்ணம் கூட அது தான்.



அவர்கள் வீட்டின் முதல் மருமகள், நல்ல ஆளுமையாகவும், அதே நேரத்தில் அன்பாகவும் வர வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். அழகு எல்லாம் கூட அவர்களின் குடும்பத்தில் அடுத்த் படி தான்.



ஆகையால் தானே யாழை கூட அவர்கள் எளிதாக ஏற்று கொண்டார்கள்.



இதே சமயம், அந்த நிறுவனத்தை திறந்து வைத்தார் ராஜ பார்த்திபன்.



"ஆள் தி பெஸ்ட்", என்று அவர் சொல்லவும், அவனும் கட்டி அணைத்து, "தேங்க்ஸ் தாத்தா", என்று சொல்லி இருந்தார்.



அதர்வ் மற்றும் ஆருஷ், சிவம் அவனது பெற்றோர்கள் என்று அனைவரும் வந்து இருந்தார்கள்.



"வாழ்த்துக்கள் டா பிஸ்னஸ் மென்", என்று சிவம் கட்டித்தழுவ, "உனக்கும் வாழ்த்துக்கள் டா டாக்டர்", என்று சொல்லி இருவரும் சிரிக்க, "மாஸ் பண்ணிட்ட டா ஆது", என்று ஆருஷ் சொல்லி அணைத்து கொண்டான்.



"நீ எது ஆரம்பிச்சாலும் சக்ஸஸ் தான்", என்று அதர்வ் கூறி அணைத்து விடுவித்துத்தான்.



"எனக்கு இன்ட்ரோ இல்லையா ராம்?", என்று அங்கு வந்து நின்றாள் சுப்ரியா.



"டேய் இவ தாண்டா சுப்ரியா என் பிஸ்னஸ் பார்ட்னர்", என்று சொன்னவன், "இவங்க இரண்டு பேறும் என் ப்ரதர்ஸ் அப்புறம் இவன் எங்க கூட பிறக்காத பிரதர்", என்று சிவமை காட்டவும், சிவமிற்கோ மகிழ்ச்சியாக இருந்தது.



"உங்க எல்லாரையும் பத்தி நிறைய சொல்லிற்கான். அதுவும் ஆருஷ் சிவம் இரண்டு பேறும் டாம் அண்ட் ஜெர்ரி போல", என்று அவள் அவர்களை பார்க்கவும், அவர்கள் இருவரும் ஆதர்ஷனை தான் முறைத்தார்கள்.



"அடியேய் உன்ன கேட்டாங்களா? நீ வா", என்று இழுத்து கொண்டு அவன் செல்லவும், "எல்லாரும் ரொம்ப அழகா இருகாங்க டா... எனக்கு செட் பண்ணி கொடு", என்று அவள் சொல்லவும், "சாவடி வாங்குவ பார்த்துக்கோ", என்று அவளை ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான்.



"போடா போடா", என்று சொல்லிவிட்டு அவளும் வந்தவர்களை கவனிக்க சென்று விட்டாள்.



இப்படியாக அவர்கள் நாட்கள் நகர ஆரமபித்து இருந்தது.



ஒரு வருடம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை.



மிகவும் கடினமாக உழைத்தார்கள். அவனும் சுப்ரியாவும் இரவு பகல் பாராது அவர்களின் முழு உழைப்பையும் அந்த நிறுவனத்திற்காக போட்டு இருந்தார்கள்.



அதற்கு பலனும் கிடைத்தது.



ஆம், முதலாம் ஆண்டிலேயே அவரகள் நினைத்ததை விட நான்கு மடங்கு ஈட்டி இருந்தார்கள்.



இந்த ஒரு வருடத்தில் சுப்ரியாவின் கண்ணோட்டம் ஆதர்ஷின் மேல் மாற ஆரம்பித்து இருந்தது.



இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக படிக்கும் போது தோன்றாத ஈர்ப்பு இப்போது ஒன்றாக வேலை பார்க்கும் போது தோன்றியது.



அவனின் திறமை, அழகு, ஆளுமை, அதிகாரம் என்று அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.



"அடுத்த வாரம் நம்ப கம்பெனி அனிவேர்சரி ஹோட்டல் க்ரீன் எமரால்டுல வச்சிக்கலாம்', என்று அவன் சொல்லவும், அவள் எங்கு அதை எல்லாம் கவனித்தால், அவனை தான் விழுங்கி விடும் அளவு பார்த்து கொண்டு இருந்தாள்.



"ஹே உன்ன தான் டி", என்று அவளை உலுக்கவும், அப்போது தான் சுயநினைவுக்கு வந்து இருந்தாள்.



"என்ன சொன்ன ஆதர்ஷ்?', என்று அவள் கேட்கவும், "நொண்ண சொன்ன ஆதர்ஷ்", என்று திருப்பி அவன் சொன்னதை சொன்னான்.



"உன் அப்பா வருவாரா?", என்று அவன் கேட்கவும், "எஸ்...உன் பேம்லில?", என்று அவள் கேட்கவும், "கூப்பிடலானாலும் எல்லாரும் வந்துருவாங்க சிவம் உட்பட", என்று அவன் முடித்து இருந்தான்.



"எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு ஆதர்ஷ்.. உன் வீட்ல ஒரு மெம்பெர்ரா ஆகணும்", என்று அவள் ஆசையாக கூறவும், "வைஷ்ணவி மம்மாக்கு பொண்ணு இல்லனு குறை இருக்கு வேணும்னா உன்ன அடாப்ட் பண்ண சொல்றேன்", என்று அவன் சொல்லவும், "யூ அப்போ எனக்கு அண்ணாவா ஆகிருவ", என்று அவள் முகம் சுளித்து கொண்டாள்.



"இதுல என்ன இருக்கு?", என்று அவன் சாதாரணமாக தான் கேட்டான்.



"போடா லூசு", என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்து விட்டான்.



அடுத்த ஒரு வாரம் எப்படியோ கடந்து விட, அவர்களின் அலுவலகத்தின் முதலாம் ஆண்டு விழாவும் வந்து சேர்ந்தது.



'செம்மயா இருக்க டா ஆது", என்று சொல்லி சிவம் அணைத்தவன், "அப்படியே பிஸ்னஸ் மென் கலை டா உன் முகத்துல", என்று சொன்னவன், அவனின் கன்னத்தை பிடித்து ஆட்ட, "ஏன் டா இப்படி மானத்தை வாங்குற?", என்று ஆதர்ஷ் சொல்லவும், "ஆது க்யூட் டா நீ", என்று அங்கு வந்தான் ஆருஷ்.



"டேய் ஹண்டசம் சொல்லுங்க அது என்ன க்யூட்", என்று சலிப்பாக அவன் பேச, அதர்வ் அவனுக்காக ஜூஸ் எடுத்து வந்தான்.



"என்ன டா சுப்ரியா கண்ணு உன் மேலயே இருக்கு?", என்று சிவம் அவனின் தோளை இடிக்க, "பிரண்ட் தான் டா", என்றான்.



"பார்த்தா அப்படி தெரியல", என்று ஆருஷ் அவனிடம் சொல்ல, "அவ உன்னை பார்க்குற விதமே ஏதோ சொல்லுது ஆது", என்று அதர்வ் சொல்லவும், "என்ன என்னவோ சொல்றிங்க டா", என்றவனிடம் வந்தாள் ஜானவி.



"அண்ணா சுப்ரியா அண்ணி இந்த பிரேஸ்லெட் எனக்கு கிபிட் பண்ணாங்க", என்று அவள் சொல்லவும், "அண்ணியா?", என்று நால்வரும் ஒரு சேர கேட்க, "அவங்க தான் அப்படி கூப்பிட சொன்னாங்க", என்று அவள் சொல்லவும், "அண்ணி எல்லாம் இல்ல, நாங்க காட்றவங்க தான் உனக்கு அண்ணி", என்று சொல்லி இருந்தான் ஆதர்ஷ்.



"ராம்", என்று அங்கு சுப்ரியா வரவும், "எதுக்கு ஜான்வியை அண்ணின்னு கூப்பிட சொல்ற?", என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.



"சும்மா தான்", என்றவளின் முகம் கூம்பி விட்டது.



"இங்க பாரு சுப்ரியா... நாங்க யாரை கல்யாணம் பணிக்கிறோமோ அவங்க மட்டும் தான் எங்க தங்கச்சிங்களுக்கு அண்ணி", என்று நேரடியாகவே அவன் சொல்லிவிட, அவளும் சரி என்று தலையாட்டி கொண்டு சென்று விட்டாள்.



பிரகாஷ் வந்து இருந்தார். அவரிடம் ஆதர்ஷ் பேசும்போதே அங்கு வந்த ருத்ரன், "உன்ன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு மை பாய்", என்று அவர் சொல்லவும், "தேங்க யு சோ மச் அப்பா", என்றவனை அணைத்து விடுவித்தார்.



"டேய் ஆதர்ஷ் நீ வேற லெவல் டா... உன்ன நினைச்சி நாங்க எல்லாரும் ரொம்ப பெருமை படறோம்", என்று வைஷ்ணவி பாராட்டு பத்திரம் வாசித்தார்.



எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்தது.



அனைவரும் சென்று விட, இதே சமயம் ஆதரிஷிடம் ஒரு ஜூஸ் கொடுத்தான் அங்கு வந்த பேரர்.



அதை குடித்தவனுக்கு தலை வீண் வீணென்று வலித்தது.



தள்ளாட ஆரம்பித்தான். அவனை தாங்கி பிடித்து இருந்தாள் சுப்ரியா.



அது வரைக்கும் தான் அவனுக்கு நினைவில் இருந்தது.



அடுத்த நாள் விடிய, அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக முழிப்பு வர, அவன் கண்ட காட்சியில் அவனின் இதயமே நின்று துடித்தது.



அவன் நிர்வாணமாக இருக்க, அவனின் நெஞ்சில் பிறந்த மேனியாக படுத்து இருந்தாள் சுப்ரியா.



அதிர்ந்து விட்டான். மொத்தமாக ஸ்தம்பித்தே விட்டான்.



அவனின் வீட்டில் அவனை வளர்த்தது எப்படி, ஆனால் அவன் இங்கு வந்து செய்த காரியம் என்ன? என்று அவனின் மனசாட்சியே அவனை காரி துப்பியது.



இதே சமயம் அவனின் அறையை தட்டும் சத்தம் கேட்டு உறைந்து விட்டான் ஆதர்ஷராம்.


 

அத்தியாயம் 8



சுப்ரியாவை அவனை விட்டு தள்ளி வைத்தவனுக்கு மனது ரணமாய் வலித்தது. அவன் தெரியாமல் தீண்டி இருக்கிறான். அவனையும் மீறி தீண்டி இருக்கிறான். அவன் மனதில் இல்லாத அதுவும் அந்த பெண்ணுக்கு பிடித்து இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் தீண்டி இருக்கிறான்.



தன்னை நினைத்தே ஆத்திரம். கொற்றவை, வித்யா மற்றும் வைஷ்ணவிக்கு தெரிந்தால் உடைந்தே விடுவார்கள்.



அதுவும் கொற்றவை, சொல்லவே வேண்டாம். ஆதியை விட எவ்வளவு நம்பிக்கை அவன் மீது வைத்து இருக்கிறார்.



இன்று மொத்தமாக உடைத்து விட்டான் அல்லவா!



மீண்டும் கதவை தட்டும் சத்தம். அவன் போய் திறந்து ஆக வேண்டிய நிலை.



அவளின் மீது போர்வையை முழுக்க போர்த்தியவன், அவனுடைய பேண்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு கதவை திறக்கவும், அங்கோ பிரகாஷ் மற்றும் விக்ரமன் தான் நின்று கொண்டு இருந்தனர்.



விக்ரமின் ஹோட்டல் தானே அது. "என் பொண்ணு சுப்ரியாவை காணோம் ஆதர்ஷ்", என்று பிரகாஷ் பதற்றமாக கூறவும், அவனோ அழுந்த கண்களை மூடி திறந்து, "என் கூட தான் இருக்கா", என்றவுடன், அவரை அங்கேயே தடுத்தவன், "நானே கூட்டிட்டு வரேன்", என்றவனால் அவரின் கண்ணை பார்க்க கூட முடியவில்லை.



அவன் சொன்ன விதத்தை வைத்தே என்ன நடந்து இருக்கும் என்று யூகித்து கொண்டார் விக்ரமன்.



"ஆதர்ஷ்", என்று அவர் அழைக்கவும், "உங்க கேபினுக்கு நான் கூட்டிட்டு வரேன்", என்றவன் அதற்கு மேல் பேசாமல் கதவை சாற்றி விட்டான்.



இன்னுமே அவனால் நிலை கொள்ள முடியவில்லை.



அப்படியே படுக்கையின் எதிரே உள்ள சோபாவில் அவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.



ஐந்து நிமிடம் போய் இருக்கும். சுப்ரியாவின் முனங்களில், அவன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ அந்த பெட்ஷீட்டை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்.



அப்போது தான் ஆதர்ஷ் அவளை பார்ப்பது அவளுக்கு தெரிந்தது. ஒரு வித கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்தாள்.



ஒரே ஒரு கேள்வி தான் அவனுக்கு பிரதானமாக கேட்க வேண்டி இருந்தது.



"டிட் ஐ போர்ஸ் யு? உன்ன கட்டாயப்படுத்தி...", என்று அவன் மீதி வார்த்தைகளை முழுங்கி இருந்தான்.



அவனுக்கு அவளுடன் ஒன்றாக இருந்தது கூட இப்போது பெரிதாக தெரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி அவளுடன் இருந்து இருக்கிறானா என்கிற கேள்வி தான் அவனை கொன்று கொண்டு இருந்தது. அவனும் இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவன் தானே!



"அது அப்படி இல்ல ஆதர்ஷ்... நீ அப்ரோச் பண்ண... ஐ ஆல்சோ லைக் யு... அதான் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்... மேரேஜ் பண்ணிக்கலாம்", என்று அவள் சொல்லவும், அவள் சொல்லவில்லை என்றாலும் அவனுக்கும் அதே எண்ணம் தான்.



இவ்வளவு நடந்த பின்பு எங்கிருந்து வேறு ஒருத்தியை அவனால் நினைத்து பார்க்க முடியும்?



அவனும் அவளை அவதானித்து தான் இருந்தாள். அவனின் மேல் ஈடுபாடு உள்ளதால் தானே, ஜானவியை அண்ணி என்று கூற சொல்லி இருந்தாள்.



"சரி டிரஸ் பண்ணிக்கோ", என்றவனின் குரலில் அப்படி ஒரு இறுக்கம். மொத்தமாக இறுகி விட்டான்.



அவளின் மேல் கோவமாக வந்தது. அவன் தான் போதையில் இருந்தான், நிதானத்தில் இருந்து இருந்தால் அவளை சீண்டி கூட இருக்க மாட்டான்.



இப்போது ஒரு பெண்ணை சுயநினைவு இல்லமால் தொட்ட குற்ற உணர்ச்சி அவனை பாடாய் படுத்தி எடுத்தி கொண்டு இருந்தது.



அவள் உடை அணிந்து வரவும், "வா போகலாம்", என்றவனின் கையை அவள் பற்ற வர, அவனோ சட்டென விலகி விட்டான்.



அவளை தீண்டவே அவன் விடவில்லை.



"போகலாம்", என்று மீண்டும் அழுத்தமாக சொன்னவன் நின்றது என்னவோ விக்ரமனின் கேபின் முன் தான்.



அவரை பார்க்கவே சங்கடமாக இருந்தது.



அவன் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய, அங்கு பிரகாஷும் இருந்தார்.



சுப்ரியா ஆதர்ஷ் பின்னால் வந்தாள்.



"எங்க போன சுப்ரியா?", என்று அவர் கேட்கவும், அவளுக்கோ கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.



"நைட் ஆதர்ஷ் கூட ஒரே ரூம்ல இருந்து இருக்க.. உன்ன", என்று அவர் கையை ஓங்கி கொண்டு வரும் போதே, 'எனக்கும் சுப்ரியாக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் ஏற்பாடு பண்ணுங்க", என்று சொல்லி இருந்தான் ஆதர்ஷ்.



ஏறிய கை தானாக கீழே இறங்கியது.



"என்ன சொல்ற ஆதர்ஷ்?", என்று விக்ரமன் எழுந்தே விட்டார்.



அவன் அவரின் கண்களை கூட பார்க்கவில்லை. "ப்ளீஸ் பப்பா...", என்றவனின் குரல் தானாக தழுதழுத்தது.



அதற்கு மேல் அவனை சங்கட படுத்த விக்ரமன் விரும்பவில்லை.



வெளியே சென்றவன், யாரிடமும் சொல்ல கூட இல்லை. அவனின் காரை உயிர்ப்பித்து, நேரே செந்தளிர் இல்லத்திற்கு சென்றான்.



"ஆதர்ஷ் எங்க போன?", என்று கொற்றவை கேட்டது கூட காற்றில் தான் கரைந்து போனது.



அவன் நேராக நின்றது என்னவோ ஷவரின் கீழ் தான்.



எவ்வளவு நேரம் குளித்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனின் மேல் ஏதோ தீ சுட்டாற்போல் இருந்தது.



வெளியே அவன் உடை மாற்றி வரவும், விக்ரமன் வைஷ்ணவியையும் அழைத்து கொண்டு வந்து இருந்தார்.



சேகர் மற்றும் சாரதாவும் அமர்ந்து இருந்தனர். இதே சமயம் ஆருஷ், சிவம் மற்றும் அதர்வ் உள்ளே நுழைய, "எதுக்கு சீக்கிரம் வர சொன்னிங்க?", என்று அதர்வ் கேட்கவும், "உங்க அண்ணா கல்யாணம் பண்ணிக்க போறானாம்", என்று வித்யா தான் சொல்லி இருந்தார்.



அனைவரும் ஆதர்ஷனை பார்க்க, "என்ன டா இதெல்லாம்?", என்று சிவம் கேட்கவும், அவனும் எதற்காக என்று இலை மறை காயாக தான் சொல்லி இருந்தான்.



"ஆதர்ஷ் எனக்கு ஏதோ சரியா படல டா", என்று அதர்வ் கூறவும், "எனக்கும் அப்படி தான் தோணுது", என்று ஆருஷும் ஆமோதித்தான்.



"நீங்க சொல்றது எல்லாம் சரி தான்... ஆனா நான் அவளை மொத்தமா பார்த்து இருக்கேன்.. இதுக்கு மேல என்ன எதுவும் கேட்காதீங்க.. நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ்", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



அவர்களிடம் அவள் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சம்மதம் எல்லாம் கேட்கவில்லை, திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று இருந்தான்.



"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. இந்த பையன் என்ன இப்படி பேசுறான்", என்று கொற்றவை சொல்லவும், "ருத்ரன் கிட்ட விட்டு பேச சொல்லலாம்", என்று சேகர் சொல்லவதும் அனைவருக்கும் சரியாக பட்டது.



அன்றைய மாலை நேராக ருத்ரன் ஆதர்ஷ் முன் தான் அமர்ந்து இருந்தார்.



"நீ என்ன பண்ற ஆதர்ஷ் கொஞ்சம் யோசி... இதுல ஏதோ இருக்கு", என்று அவர் சொல்லவும், "இருக்கட்டும் அப்பா... நீங்க கொஞ்சம் யோசிங்க அந்த பொண்ணு ஒரு நாள் நைட் முழுக்க என் கூட இருந்து இருக்கா... அதுவும் ஒட்டு துணி இல்லாம... எங்களுக்குள்ள ஏதாவது நடந்து இருக்கலாம் நீங்க சொல்ற மாறி இல்லாமலும் இருக்கலாம்... ஆனா இது தெரிஞ்ச பிறகு அவளை யாராச்சு கல்யாணம் பன்னிப்பானா? என்னால ஒரு பொண்ணு வாழ்க்கை போக வேண்டாம்", என்று முடித்து விட்டான்.



அதற்கு மேல் ருத்ரனும் அவனிடம் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டார்.



அடுத்த நாள் விடிய, அவர்கள் அனைவரும் சாதாரண உடையில் தான் அமர்ந்து இருந்தனர்.



யார் முகத்திலும் பொட்டு அளவு கூட புன்னகை இல்லை. ஜானவி மற்றும் அகல்யா கூட அப்படியே மறந்து இருந்தார்கள்.



"இப்போ இந்த கல்யாணம் வேணுமா அண்ணா?", என்று அகல்யா சீற, "அவங்க அண்ணியா வேண்டாம் நம்ப வேற அண்ணி பார்க்கலாம்", என்று ஜானவி ஒரு புறம் கூறினாள்.



"எனக்காக ப்ளீஸ்", என்று அவன் மீண்டும் சொல்லவும், அமைதியாகி விட்டனர்.



ஆதர்ஷனின் திருமணத்தை எப்படி எல்லாம் நினைத்து இருந்தார்கள். இந்த வீட்டின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு அவன், கோலாகலமாக விழா போல் கொண்டாட வேண்டும் என்று அனைவரின் மனத்திலும் நினைத்து கொண்டு இருந்த நிகழ்வு.



இன்று ஒருவரின் மனதில் கூட மகிழ்ச்சி இல்லை, மாறாக வெறுமையாக இருந்தது.



அனைவரும் வந்து சேர, பிரகாஷ் மற்றும் சுப்ரியாவும் வந்து சேர்ந்தார்கள்.



பதிவு திருமணம், இருவரது பெற்றோரும் இருப்பதால் பிரச்சனை இல்லாமல் போய் விட்டது.



அனைவரும் கையொப்பம் இட்டு முடிய, சுப்ரியா பிரகாஷ், சுப்ரியா ஆதர்ஷராம் என்று மாறி இருந்தாள்.



"இனி என்ன அண்ணினு கூப்பிடலாம்", என்று ஜானவியை பார்த்து புன்னகையுடன் சுப்ரியா கூற, "பார்க்கலாம்", என்று முடித்து விட்டாள்.



ஏனோ இன்று அவளுக்கு அவளை அப்படி கூப்பிட தோன்ற வில்லை. ஆதர்ஷ் கூட அவளை அப்படி கூப்பிட சொல்லவில்லை அல்லவா!



"என் பொண்ண நல்லா பார்த்துக்கோங்க", என்று பிரகாஷ் கண்ணீர் மல்க சொல்ல, "நாங்க பார்த்துக்குறோம்", என்று கொற்றவை வராத புன்னகையை வரவழைத்து கூறி இருந்தார்.



பின்பு அவளை செந்தளிர் இல்லத்திற்கு அழைத்து வந்து இருந்தனர்.



"வா மா", என்று கொற்றவை சொல்லவும், உள்ளே நுழைந்தாள் சுப்ரியா. ஏனோ அவளை ஆதர்ஷின் மனைவி என்று யாராலும் பார்க்க முடியவே இல்லை.



அனைத்தும் முடிய அன்று ஆதர்ஷ் இரவு அவனின் அறைக்கு வர, அங்கு சிறிய இரவு உடையில் இருந்தால் சுப்ரியா.



அவளை பார்த்தும் அவனுக்கு கிளர்ச்சி எழ வில்லை.



அவன் மாற்று உடை எடுத்து கொண்டு செல்லவும், அவளுக்கு தான் புஸ் என்று ஆகி விட்டது.



உடை மாற்றி வந்தவன், அப்படியே படுத்து விட்டான்.



அவளோ அவனை நெருங்கி ஆதர்ஷ், என்று அவனின் செவி மடல்களை தீண்ட, "ப்ளீஸ் சுப்ரியா ஐ அம் நோட் இன்டெரெஸ்ட்டேட்", என்று கர்ஜனையாக அவன் கூறவும், அவள் இரண்டடி பின்னே சென்று விட்டாள்.



அவனால் ஏனோ அவளை ஏற்று கொள்ளவே முடியவில்லை. மனதில் இருந்தால் தானே ஏற்று கொள்ள முடியும். அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட வாழ முடியவில்லை.



அவனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை போய் விடும் என்கிற குற்ற உணர்ச்சியில் பதிவு திருமணம் செய்து விட்டான். தாலி கூட கட்டவில்லை.



அடுத்த நாள் விடிய, அவன் எழுந்து வெளியே வந்த சமயம், பிரகாஷ் தான் விஷ்ணு மற்றும் ருத்ரனிடம் பேசி கொண்டு இருந்தார்.



'வாங்க மாப்பிள்ளை", என்று அவனை பார்த்து அவர் சொல்லவும், அவனும் தலையசைப்புடன் வர, அங்கு புடவை கட்டிக்கொண்டு நின்று இருந்த சுப்ரியாவை அவன் கண்டு கொள்ளக்கூட இல்லை.



"எப்போ தாலி கட்டலாம்?", என்று பிரகாஷ் வினவ, 'அதெல்லாம் எதுக்கு லிகளி புருஷன் பொண்டாட்டி தானே அவளோ தான்", என்று முடித்து விட்டான்.



அதற்கு பின் அவனின் குணமே மாறி இருந்தது, சுப்ரியாவை பதிவு திருமணம் செய்ததோடு சரி, அவனின் சுண்டு விரல் கூட அவளின் மீது பட வில்லை.



இப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது. அவர்களின் முதல் திருமண நாள் அன்று தான் அடுத்த அதிர்ச்சியை வைத்து இருந்தாள் சுப்ரியா.
 

அத்தியாயம் 9



"ஆதர்ஷ் இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் வெட்டிங் அன்னிவெர்சரி", என்று சுப்ரியா சொல்லவும், அவனுக்கோ எரிச்சலாக வந்தது. அவன் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாள். அவர்களது திருமண நாளும் அதற்கு முந்தைய நாளும் தானே! அவன் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது.



இருபத்தி நான்கு வயதில் திருமணம் செய்ய அவனுக்கு என்ன தலை எழுத்தா? வாழ்க்கையில் எதையாவது தானாகவே சாதிக்க வேண்டும் என்று அவனின் தாத்தாவின் சாம்ராஜ்யத்தை விட்டு வந்த அரசன் அவன்!



இந்த ஒரு வருடத்தில் அவன் வீட்டிற்கு வருவது கூட அரிதாகி விட்டது.



அனைவருக்குமே அவர்களின் ஒட்டாத வாழ்வை பற்றி தெரிந்து தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும் வாயை திறக்கவே இல்லை.



இன்று கூட அவனை நிறுத்தி வைத்தது கொற்றவை தான்.



"இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்?", என்று அவன் கேட்கவும், "எல்லாரும் குட் நியூஸ் எப்போன்னு கேக்குறாங்க", என்று அவள் தயங்கி கொண்டு கேட்கவும், அவனுக்கோ கோவமாக வந்தது.



விருப்பம் இல்லாத திருமணம், இதில் குழந்தை வேறா?



"யாரு கேட்டா?", என்று அவன் கேட்கவும், "அது என் அப்பா தான்...", என்று அவள் இழுக்கவும், "அதுக்கு நான் என்ன பண்ணனும்?", என்றவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.



"என்ன பண்ணனும்னு தெரியாதா?", என்று அவள் விழி விரித்து கேட்கவும், அவனோ, 'ஐ அம் நோட் இன்டெரெஸ்ட்டேட் டு பி பிஸிக்கல் வித் யு", என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட்டான்.



'ஏன் நான் அழகா இல்லையா?", என்று அவனின் முன் வந்து அவள் நிற்க, "அழகா இருக்க எல்லாரோடையும் நான் போய் படுக்க முடியுமா? இங்க பாரு சுப்ரியா, நான் உன்ன நியூடா பார்த்துட்டேன்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அன்னைக்கு நமக்குள்ள என்ன நடந்ததுன்னு உனக்கு மட்டும் தான் தெரியும்... வாட்எவர் ஆனா எனக்கு உன் மேல இன்டெரெஸ்ட் இல்ல... நான் என் வாழ்க்கைல வர போற பொண்ணு கிட்ட இருக்க நினைச்ச குவாலிட்டி ஒன்னு கூட உன் கிட்ட இல்ல", என்று சொன்னவன், மாற்று உடையை எடுத்தான்.



"நீங்க ரொம்ப மாறிட்டீங்க ஆதர்ஷ்", என்று அவள் சொல்லவும், அவனோ விரக்தியாக சிரித்தவன், “வாழ்க்கை என்ன மாத்திருச்சு", என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் நுழைய போக, அவளோ மீண்டும் அவனின் முன் வந்து நின்றாள்.



"இப்போ என்ன?", என்று அவன் கடுப்பாக கேட்கவும், 'சரி அப்போ ஐவிஎப் போகலாம்", என்று அவள் சட்டென சொல்ல அவனுக்கு தான் இப்போது கண்கள் விரிந்தன.



"என்ன சொல்ற நீ?", என்று அவன் கேட்கவும், "எஸ் ஐ வாண்ட் டு ஹேவ் பேபி", என்று அவள் விடாப்பிடியாக நின்றாள்.



அவனுக்கா இந்த நிலை இல்லாத உறவில் புது உயிர்கள் வேறயா என்று இருந்தது.



"லூசா நீ? இவளோ சீக்கிரம் எதுக்கு பேபி இப்போ", என்று கேட்டே விட்டான்.



"இங்க பாரு ஆதர்ஷ் எனக்கு ஒன்னு நச்சுரல்லா வேணும் இல்ல ஆர்டிபிஷியல் எதுவா இருந்தாலும் ஓகே பட் பேபீஸ் வேணும்", என்று விடாப்பிடியாக நிற்பவளை என்ன செய்ய முடியும்.



"சரி ஐவிஎப் ட்ரை பண்ணலாம்", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். ஒரு வாரம் கடந்து இருக்கும்.



மீண்டும் அவனின் முன் வந்து நின்றாள்.



"இப்போ என்ன?", என்றவனை பார்த்து, 'நம்ப செரோகசி ட்ரை பண்ணலாம் ஆதர்ஷ்", என்று சொல்லவும், அவனுக்கு அடுத்த இடி.



"என்ன டி நினைச்சுகிட்டு இருக்க? குழந்தை வேணும்னு கேக்குற? ஐவிஎப்க்கு ஒத்துக்கிட்டேன்... இப்போ செரோகசினு சொல்ற?", என்று சீறவும், 'எனக்கு என் பாடி மைண்டைன் பண்ணனும்", என்றவுடன் அவனுக்கு பொறுமை போய் விட்டது.



"அப்போ முதல்ல குழந்தை கேட்கும் போது தெரியலையா?", என்று அவன் கர்ஜிக்க, அவளோ, "இப்போ தான் யோசனை வந்தது", என்று அவள் சொல்லவும், "எங்க வீட்ல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க", என்று அவன் விடாப்பிடியாக நின்றான்.



"வீட்ல சொல்ல வேண்டாம்... நான் என் அப்பா வீட்டுக்கு புனே போய்டுறேன்னு சொல்லுங்க ", என்று சொல்லவும், அவனுக்கோ, "பைத்தியமா இவள்?", என்று தான் தோன்றியது.



"வந்து பார்க்க மாட்டாங்களா? எங்க வீட்டோட முதல் வாரிசு அதுவும் கண்டிப்பா எல்லாரும் பார்ப்பாங்க", என்று அவன் சொல்லவும், "நீங்க சமாளிங்க ஆதர்ஷ்... சரோகேட் யாரு என்னனு நான் பார்க்குறேன்", என்று அவள் சொல்லவும், அவனுக்கு எங்காவது என்று இவளை முட்டினால் என்னவென்று தான் தோன்றியது.



"லூசா ஆகிடியா நீ சுப்ரியா? என்னால நம்பவே முடியல நீயா இப்படி? இத நான்..", என்று அவன் ஆரம்பிக்கும்போது, "ஆமா இப்படி தான் நான்... இப்போ ஒத்துக்க முடியுமா முடியாதா?", என்று அவள் ஒத்தக்காலில் நிற்க, அவளின் காலை உடைத்து விட்டால் என்னவென்று தான் அவனுக்கு தோன்றியது.



"சரி... பண்ணி தொலையிறேன்.. நீ சரோகேட் பாரு", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



அவனால் நிலை கொள்ளவே முடியவில்லை. அவன் எப்படி பட்ட பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான்.



எப்படி இருக்க வேண்டியவன் அவன், வாழ்க்கை அவனுக்கு ஆரம்பிக்கும் முன்னே முடிந்து விட்டது போன்ற உணர்வு.



எங்கேயோ மாட்டி கொண்டது போல் தோன்றியது. கைபேசியை எடுத்து பார்த்தவனுக்கு அவனின் நெருங்கிய நண்பனை அழைத்தால் என்னவென்று தோன்றியது.



ஆனால் இறுதியாக அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் தான் நினைவிற்கு வந்தது. அன்றே அவன் சொன்ன அத்தனை வார்த்தைகளும் இன்று அவன் செவிகளில் கணீர் என்று ஒலித்தது.



சுப்ரியாவால் தான் அவர்களுக்குள் பிரச்சனையே வந்து இருந்தது. இல்லையென்றால் இன்று இருவரும் எப்படி இருந்து இருப்பார்கள்.



நினைக்கவே கசத்தது.



"சாரி டா", என்று மனதார அவனின் நண்பனுக்கு மன்னிப்பை யாசித்து இருந்தான்.



ஒரு மாதம் கடந்து இருக்கும்.



மருமடியும் அவனின் முன் வந்து நின்றாள். ஆதர்ஷ் இப்போதெல்லாம் அவள் அவன் முன் வந்தாலே அவனுக்கு அடுத்து என்ன அணு குண்டு வெடிக்குமோ என்று நெஞ்சம் பதறவே துவங்கி இருந்தது.



வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லக்கூட முடியவில்லை. உள்ளுக்குளேயே அனைத்து உணர்வுகளையும் அடக்கி கொண்டு இருந்தான்.



"இப்போ என்ன?', என்று சலிப்பாக கேட்டு இருந்தான்.



"சரோகேட் கிடைச்சிட்டாங்க", என்று அவள் சொல்லவும், "அந்த பர்சன் எப்படி?", என்று அவன் கேட்கவும், நஞ்சை காக்க ஆரம்பித்து இருந்தாள்.



"ஏன் அவ கூட அபைர் வச்சிக்கவா?", என்று அவள் கேட்டவுடன், "லூசா நீ? யாருனு தெரியாம எப்படி என் குழந்தையை சும்மாவா ஒத்துக்க முடியும்", என்று அவன் கத்தவும், "அவ ஒரு வர்ஜின் தான்.. பணத்துக்காக இப்போ இதுக்கு ஒத்துக்கிட்டா", என்று சொன்னவள், "அண்ட் நீங்க உங்க ஸ்பெர்ம் சீக்கிரம் கொடுங்க", என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.



ஒரு வாரத்திற்கு பின், அவனும் சென்று அவனின் விந்தை கொடுத்துவிட்டு வர, சரியாக ஒன்றரை மாதம் கழித்து அவன் உள்ளே வந்ததும், "வி ஆர் ப்ரெக்னன்ட் ஆதர்ஷ்", என்று அவள் சொல்லவும், "நோட் வி ஆர்ல நானும் அந்த சரோகேட்டும் தானே", என்று புருவம் உயர்த்தி கேட்கவும், அவளுக்கோ சுருக்கென்று தைத்தது.



"எப்படி இருக்கா அவ?", என்று அவன் கேட்கவும், "ரொம்ப அக்கறையோ?, என்று நக்கலாக வந்தது சுப்ரியாவின் குரல்.



"கண்டிப்பா என் குழந்தையை சுமக்குறாங்க.. அவங்க நல்லா இருந்தா தானே என் குழந்தைங்க நல்லா இருக்க முடியும்", என்று அவன் சொல்லவும், "குழந்தையே வேணாம்னு சொன்னிங்க", என்றவளை பார்த்து, "ஆமா சொன்னேன்... ஆனா அதான் வந்துருச்சே இன்னும் எதுக்கு எனக்கு வீம்பு... தட்ஸ் மை கிட்", என்று சொன்னவன், அத்துடன் பேசாமல் சென்று விட்டான்.



அவன் உடை மாற்றி வந்ததும், "வீட்ல பேசுங்க ஆதர்ஷ்... நான் புனே போறேன்னு சொல்லுங்க", என்று சொல்லவும், அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.



"சுப்ரியா ப்ரெக்னன்ட்டா இருக்கா... ஆனா புனேல இருக்க ஆசை படறா...நீங்க யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ்", என்று அவன் நேரடியாக சொல்லவும், கொற்றவையும் வித்யாவுமா விடுவார்கள்.



"டேய் நம்ப வீட்டோட முதல் குழந்தை டா...", என்று அவர்கள் சொல்லவும், "எனக்காக ப்ளீஸ்", என்று கெஞ்சவும், அவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் அவனும் கேட்பதாக இல்லை.



டாக்டர் சந்திரலேகா தான் அவர்களின் இந்த சரோகசியை பார்த்தது. இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இருவரும் சொல்லி இருந்தார்கள்.



அவரும் கேட்டுக்கொண்டார். சுப்ரியா வேறு ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்தாள்.



இதில் ஒரே ஒரு விடயம் என்னவென்றால் அவள் சரோகேட்டின் பெயரை கூட ஆதரிஷிடம் சொல்லவில்லை.



மூன்று மாதங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் அவளே அழைத்து, "நமக்கு ட்வின்ஸ் ஆதர்ஷ்", என்று மகிழ்ச்சியாக சொல்லவும், "எனக்கு ட்வின்ஸ்", என்று முடித்து இருந்தான்.



ஆனாலும் அவனின் மனதில் மகிழ்ச்சி இருந்தது. ஒரு தகப்பனாக ஆக மனதளவில் தயாராகி விட்டான்.



அவனின் கைகளில் இரண்டு குழந்தைகளா? நினைக்கும் போதே மேனி சிலிர்த்தது.



"சீக்கிரம் அப்பா கிட்ட வந்துருங்க", என்று மனதில் நினைத்து கொண்டான். நிலையில்லாத உறவில் அவனுக்கு கிடைக்கவிருந்த நிரந்தர பொக்கிஷங்கள் தான் அவனின் குழந்தைகள் என்று எண்ணி கொண்டான்.



ஏழு மாதங்கள் கருவை சுமந்து கொண்டு இருந்தாள் சாந்தினி. அவனுக்கு தான் அது யார் என்றே தெரியாதே.



ஒரு நாள் சுப்ரியா அவனை அழைத்து இருந்தாள்.



"நம்ப பேபி ஸ்கேன் இருக்கு வரிங்களா?", என்று கேட்கவும், அவனும் வந்து விட்டான்.



ஆனால் அவன் வந்த சமயம், ஸ்கேன் முடிந்து விட்டு இருந்தது. அதை காபி செய்வதற்கு தான் சுப்ரியாவும் மருத்துவரும் போய் இருந்தார்கள்.



இதே சமயம் ஸ்க்ரீனிற்கு பின்னால் நிழலோவியமாய் நின்று இருந்தாள் சாந்தினி.



யாரோ வரும் சத்தம் கேட்க, "யாரு?" என்று குரல் வந்தது.



"ஐ அம் சாரி... சுப்ரியா எங்க?", என்று கேட்கவும், சுப்ரியாவின் கணவன் என்று அறிந்து கொண்டவள், "அவங்க ரைட் சைட்ல இருக்க ரூம்ல இருகாங்க", என்று சொல்லவும், "ஓகே தேங்க்ஸ்", என்று சொல்லிவிட்டு திரும்பியவன் பின்பு என்ன நினைத்தானோ, "பேபீஸ் இப்போ மூவ் ஆகுதா?', என்று ஆசை மிகுதியில் கேட்டே விட்டான்.



"ம்ம்", என்று மட்டும் தான் அவளிடம் இருந்து பதில் வந்தது.



அவனுக்கு தொட்டு பார்க்க கைகள் பரபரத்த போதும், அந்நிய பெண்ணை தீண்ட முடியாதே, அப்படியே சென்று விட்டான்.



அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு இரவு, சந்திரலேகா தான் அழைத்து இருந்தார்.



"ஆதர்ஷ்... இப்போ போய் பேபி வேண்டாம்னு அந்த சரோகேட் சொல்றா", என்று அவர் சொல்லவும், அவனின் கண்கள் விரிந்தன.



உடனே மருத்துவமனைக்கு விரைந்து இருந்தான்.



அவன் அன்று மருத்துவமனைக்கு வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.



அங்கே அவனுக்காக காத்து கொண்டு இருந்தனர் பிரகாஷும் சுப்ரியாவும், "லாஸ்ட் மினிட்ல இந்த சரோகேட் குழந்தையே கொல்ல துணிஞ்சிட்டா மாப்பிள்ளை... எப்படியோ பேபிய காப்த்திட்டோம்.. இவளோ ஏன் ஒரே ஒரு வாட்டி பால் கூட கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா", என்று அவர் சொல்லவும், அவனுக்கு கோவம் எல்லாம் அந்த சரோகேட்டின் மீது திரும்பியது.



அவனின் குழந்தைகளை ஒருத்தி கொல்ல துணிந்து இருக்கிறாளா? அவளை என்றைக்காவது பார்த்தால், கொன்று போடும் அளவு கோவம் வந்தது.



"எங்க அவ?", என்று அவன் கோவமாக கேட்கவும், "அவ கெடக்குறா, அந்த நாயை நாங்க துரத்தி விட்டுட்டோம்...", என்று சொன்னவர், என் பேரன் பேத்தியை பாருங்க", என்றவர் அப்படியே ஆதர்ஷனை அவனின் விந்தில் இருந்து முளைத்த இரண்டு விந்தைகளை பார்க்க சென்றான்.



அங்கே அழகாக இருந்தனர் அவனின் இரண்டு பிள்ளைகள்.



"ஒரு பையன் ஒரு பொண்ணு", என்று பிரகாஷ் சொல்லவும், அவர்களை ஒன்றாக கையில் ஏந்தியவனுக்கு உடல் முழுக்க சிலிர்த்து விட்டது.



அவனின் மகவுகள், நினைக்கவே இனித்தது.



இதற்கு பிறகாவது அவனின் வாழ்வில் ஒளிவீசும் என்று நினைத்து இருக்க, மொத்தமாக அவனின் ஆனந்தம் அணைந்து போகும் நாளும் வந்தது.
 
Last edited:

அத்தியாயம் 10



"இந்த குழந்தைங்களை போய்யா கொல்ல நினைச்சா?", என்று வாய் விட்டே கேட்டு விட்டான் ஆதர்ஷ்.



குழந்தைகள் இரண்டுமே அவ்வளவு அழகாக இருந்தார்கள். பார்ப்பதற்கு அவனுக்கு திகட்டவே இல்லை.



"அவளுக்கு பணம் பத்தலயாம்... அதனால குழந்தைங்க பிறந்ததும் கொல்ல நினைச்சிட்டா மாப்பிள்ளை", என்று பிரகாஷ் கூறவும், அவனுக்கு யார் என்றே தெரியாத ஒரு பெண்ணை பற்றி தெரிந்தவர்கள் கூறுகையில் அவனும் அதை தானே நம்புவான்.



"எப்படி இப்படி ஒருத்திய சூஸ் பண்ண?", என்று அவனின் கோவம் மொத்தமும் சுப்ரியாவிடம் தான் திரும்பியது.



"நல்லவ மாறி பேசுனா ஆதர்ஷ் அதான்...", என்று அவள் தடுமாறவும், "சரி நீ குழந்தைகளை பாரு", என்று அவளிடம் கொடுக்கவும், அவளின் கைகள் நடுங்கின.



"இப்படி நடுங்குனா... எப்படி குழந்தைகளை பார்த்துக்க போற?", என்று அவன் திட்ட, "கத்துக்குறேன் ஆதர்ஷ்...", என்றவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது.



அவனுக்கு அவளின் அழுகையை பார்க்க முடியவில்லை.



"அழாத சுப்ரியா", என்று சொன்னவன், குழந்தைகளை எப்படி பிடிக்க வேண்டும் என்று அவளுக்கு சொல்லியும் கொடுத்தான்.



இதே சமயம் விடயம் அவனின் இல்லத்திற்கும் தெரிவிக்க பட்டது.



குழந்தைகளை வந்து பார்த்தவர்கள், "வீட்டுக்கு எப்போ மா வர?", என்று சுப்ரியாவை பார்த்து கேட்கவும், "மூணு மாசம் போகட்டும் அத்தை" என்று முடித்து விட்டாள்.



அனைவரும் குழந்தைகளை வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.



ஆருஷ் மற்றும் அதர்வ் இருவருக்கும் பூரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தன. இதே சமயம், சிவமும் வந்து பார்த்து விட்டு சென்றான்.



ஆனால் அவன் அப்போது தான் பிஜி படித்து கொண்டு இருந்தான். குழந்தைகளை பார்த்தவன், சுப்ரியாவை பார்க்கவில்லை, பார்த்து இருந்தாள் நிலையே மாறி இருக்குமோ என்னவோ! நிச்சயமாக அவன் சுப்ரியா ஒரு குழந்தைக்கு தாய் இல்லை என்பதை அப்போதே போட்டு உடைத்து விட்டு இருப்பான்.



மூன்று மாதம் கடந்தது. வாரம் ஒரு முறை சுப்ரியாவையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு வருவான் ஆதர்ஷ்.



அவள் வருவாள் என்று நினைத்து இருக்க, அவளின் இறப்பு செய்தி தான் அவனின் செவிகளை அடைந்தன.



அதிர்ந்து விட்டான்.



அடித்து பிடித்து கொண்டு அங்கே செல்லவும், அவனுக்கு அங்கே சடலமாக இருந்த சுப்ரியா தான் தென்பட்டாள்.



அங்கே அவனின் குழந்தைகளை வைத்து கொண்டு அழுது கொண்டு இருந்தார் பிரகாஷ்.



"எப்படி மாமா?", என்றவனின் குரல் தழுதழுத்தது தான். மனைவிக்காக இல்லை என்றாலும் அவனின் நண்பிக்காக.. அவனுடன் நான்கு வருடங்கள் இருந்தவள் அவள்.



அவளால் தான் அவன் இந்த நிறுவனத்தை நிறுவி இருந்தானே! அவனை சுற்றி என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியவில்லை.



"அவ யாரு கூடவோ அபைர் வச்சிக்கிட்டு இருந்து இருக்கா மாப்பிள்ளை... அவனுக்கு எச்ஐவி இருந்து இருக்கு.. அது இவளுக்கும் வந்து போய்ட்டா', என்று அவர் சொல்லவும்,தூக்கி வாரி போட்டது.



அவளின் மீது அவ்வளவு ஆத்திரம் இப்போது வந்தது. அவனுடன் திருமணம் செய்து கொண்டு இன்னொருத்தனுடன் உறவா? ஆதலால் தான் அவனது குழந்தையை சுமக்க மாட்டேன் என்றாளா? அவனது தோழி சுப்ரியாவா இது? என்று ஆயிரம் கேள்விகள் அவனுள் எழுந்தது.



ஆனால் அதற்கு விடை தேடும் மனநிலையில் தான் அவன் இல்லை.



பெற்றோர்களுக்கும் விடயம் தெரிவிக்க பட, அனைவருக்கும் என்ன உணர்வென்றே தெரியவில்லை. அவளின் பிரிவை ஒரு சக மனிதனுக்காக வருந்துவதாய் இருந்ததே தவிர, அதற்கு மேல் அவர்களுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.



ஆனால் மூன்று மாத குழந்தைகளுக்காக வருந்தினார்கள்.



அன்னை இல்லாமல் அவர்கள் வளர வேண்டுமே என்கிற வேதனை அனைவரின் மனதிலும் இருந்தது.



சுப்ரியாவின் இறுதி சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தவர்கள், பின்பு குழந்தைகளை கூட்டி கொண்டு செந்தளிர் இல்லத்திற்கு வந்து விட்டான்.



கொற்றவை மற்றும் வித்யா இருக்க பயமேன்? இன்னும் வைஷ்ணவி மற்றும் சாரதாவும் வந்து விடுவார்கள்.



ஆதர்ஷும் நிறைய கற்று கொண்டான். பிள்ளைகளுக்கு லக்ஷித் மற்றும் லயனிக்கா என்று பெயர் சூட்டி இருந்தான்.



அவனின் இருளான வாழ்க்கையில் லயமாக மாற்றியவர்கள் அவர்கள் தானே!



மூன்று வருடங்கள் கடந்து இருந்தது. ஆதியிடம் வீடியோ காலில் தினமும் குழந்தைகள் பேசுவார்கள்.



அதுவும் லயனிக்காவிற்கு ஆதி என்றாள் கொள்ளை பிரியம்.



இப்படியாக நாட்கள் செல்ல, ஒரு நாள் பிரகாஷ் வந்து இருந்தார், எதிர்ச்சியாக பேசும் போது, "உங்க மகனை நல்லா வளர்த்து இருக்கீங்க..", என்று ஆரம்பித்தவர் சரோகசி முதல் சுப்ரியாவின் எச்ஐவி வரை சொல்லி இருக்க, அவர்களுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.



ராஜ பார்த்திபனுக்கு கோவம் வந்து விட்டது.



"அப்போ உங்க பொண்ணு எங்க எல்லாரையும் ஏமாத்தி இருக்கா", என்று அவர் கர்ஜித்தவர், ப்ளீஸ் வெளியே போங்க...", என்று சொல்லவும், பிரகாஷ் தலை கவிழ்ந்து வெளியே சென்றார்.



"ஆதர்ஷ்", என்று அவர் அழைக்கவும், அவரின் முன் வந்து நின்றவன், "அப்போ இந்த குழந்தைங்க உன்னோடதா? இல்ல உன் மனைவின்னு ஒருத்தி இருந்தாலே அவ வேற யாருக்கோ பெத்திருக்காலா செரோகசி மூலமா?", என்று அவர் கேட்கவும், அவனுக்கு ஒரு பக்கம் அவமானம் மற்றொரு பக்கம் மறித்து விட்டான்.



"டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாம்", என்று சொல்லி எடுத்து பார்த்து அவனது குழந்தைகள் தான் என்று வந்ததும், "நான் இந்த வீட்டை விட்டு போறேன்...", என்று அவன் இப்போது அவர்களின் தலையில் இடையை இறக்கி இருந்தான்.



"டேய் ஆதர்ஷ் என்ன டா பேசுற?", என்று பேச வந்த விஷ்ணுவை, "இல்ல டாடி எப்போ என் குழந்தைகள்னு சந்தேகம் வந்துருச்சோ... நாளைக்கு சுப்ரியா வச்சி நீங்க ஏதாவது பேச மாட்டிங்கனு என்ன நிச்சயம்?", என்று அவன் கேள்வி கேட்கவும், அனைவரிடமும் மௌனம்.



"நான் சம்பாரிச்ச காசுல ஒரு வீடு வாங்கிற்கேன் அங்க போய்டுறேன்", என்று சொன்னவன், இரு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அவனின் வீட்டிற்கு வந்து விட்டான்.



அவனின் உலகமே பிள்ளைகள் தான் என்று ஆகி போனது.



வேண்டாம் என்று அவன் சொன்ன பிள்ளைகள் தான் இன்று அவன் வாழ்வதற்கே வாழ்வாதாரமாக இருந்தனர்.



இதற்கு இடையில் அவனை மறுமணம் செய்து கொள்ள எத்தனையோ முறை அனைவரும் கேட்டு இருந்தனர். அவனுக்கு இருக்கும் அழகிற்கும், அறிவுக்கும், திறமைக்கும், வசத்திக்கும் பெண்கள் லைனில் நின்றனர்.



ஆனால் அனைவரையும் நிராகரித்து விட்டான்.



அவன் நினைத்து இருந்ததது என்னவோ சுப்ரியாவின் கருமுட்டையை இருந்து உருவாகி உள்ள குழந்தைகள் என்று தான், சாந்தினி சொன்னது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.



அப்படி பார்த்தால், அது அவனது மற்றும் சாந்தினியின் குழந்தைகள் தானே!



அவன் வாழ்வில் உண்மையாகவே அவனின் மனதை தடுமாற செய்த முதல் பெண் சாந்தினி தான்.



அவனும் நிறைய மாறி இருந்தான். இருபத்தி நான்கு வயது ஆதர்ஷ் அல்லவே அவன்! தொழிலில் அசுர வளர்ச்சி என்றால், மனிதர்களையும் நன்கு படிக்க கற்று கொண்டு இருந்தான்.



அவனின் நினைவுகள் இப்போது நிகழ் காலத்திற்கு வந்து இருந்தது.



அனைத்தையும் நினைத்து பார்த்தவனுக்கு, "பணத்துக்காக குழந்தைகளை கொல்ல துணிஞ்சுஇருக்கியே டி" என்று நினைத்தவனுக்கு, ஏதோ தவர்கவும் பட்டது.



அவன் பார்த்து வியந்த சாந்தினி ஒரே நொடியில் எப்படி அவனுக்கு ராக்ஷசியாக மாரி விட்டாள்.



அவனுக்கு உண்மையாகவே சாந்தினியை பிடித்து இருந்தது. அவர்களது ப்ராஜெக்ட் மற்றும் அவர்களது மனப்பான்மை ஒத்து போனால், திருமணம் செய்ய கூட ஒரு பக்கம் யோசித்து இருந்தான். ஆனால் காலம் அனைத்தும் செய்யும் என்று அந்த சிந்தனைகளை தள்ளி வைத்து இருந்தான்.



அவனுக்கு சுப்ரியாவையே பிடிக்காது, இதில் சாந்தினி மேல் இப்போது நல்ல எண்ணம் வேறு இல்லை.



தலையை உலுக்கி கொண்டு சென்று படுத்து விட்டான்.



அடுத்த நாள், சனிக்கிழமை என்பதால் பிள்ளைகளுக்கும் விடுமுறை நாள் தான்.



காலை எழுந்தவன், இன்று பிள்ளைகளிடம், சாந்தினியை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி விட வேண்டும் என்று நினைத்து கொண்டான்.



அவன் இறங்கி வர, அங்கே பிள்ளைகள் தாரணியிடம் பேசி கொண்டு இருந்தனர்.



அவள் அவர்களுக்கு அவள் உருண்டையும், கார்ன் பீஸ் புலாவ் மற்றும் பன்னீர் கிரேவி எடுத்து கொண்டு வந்து இருந்தாள்.



"நீ சமைப்பியா?", என்று அவன் கேட்கவும், "ஒருஅளவுக்கு தான் சார், இதெல்லாம் சாந்தினி மதம் கொடுத்து விட்டாங்க", என்று அவள் சொல்லவும், "சாந்தினியை இன்னைக்கு ஈவினிங் வர சொல்லு", என்று அவன் சொன்னதற்கு தலையாட்டியவள், பிள்ளைகளிடமும் விடை பெற்று சென்று விட்டாள்.



இங்கு சாந்தினியின் வீட்டிற்கு வந்தவள், ஆதர்ஷ் சொன்னதை சொல்லவும், "இன்னைக்கு லீவு நாள்ல கூட வச்சி செய்வான் போல", என்று நினைத்து கொண்டாள்.



மணி நான்கு ஆகவும், அவள் வந்து விட, பிள்ளைகளுடன் அமர்ந்து இருந்தான் ஆதர்ஷ்.



"ஆண்ட்டி", என்று இரண்டு சிட்டுகளும் அவளிடம் ஓடி செல்ல, அவர்களை அல்லி அணைத்து முத்தம் இட்டாள்.



"ஆண்ட்டி லஞ்ச் சூப்பர்...", என்று கையசைத்து பேசும் கிள்ளைகளை அவளுக்கு பார்ப்பதற்கே அவ்வளவு சந்தோஷம்.



"டாடி தான் நிறைய சாப்பிட்டார்", என்று போட்டு லயனிக்கா போட்டு வேறு கொடுத்து இருந்தாள்.



அமிர்தமாக உணவு இருக்கும் போது அவனால் எப்படி சாப்பிடாமல் இருக்க முடியும்...



"எதுக்கு வர சொன்னிங்க?", என்று அவள் கேட்கவும், "சிட்", என்று அவன் சொல்லவும், அவளும் அமர்ந்தாள். குழந்தைகளும் அவளுடன் அமர்ந்தார்கள்.



"உங்களுக்கு மம்மி யாருனு கேட்டிங்களே', என்று பிள்ளைகளை பார்த்து சொன்னவன், "இவங்க தான் உங்க மம்மி", என்று அவன் சொல்லவும், லயாவோ, "நிஜமாவா?", என்று விழி விரித்து கேட்கவும், லக்ஷிதோ, "வாவ் அப்போ இவங்க தான் எங்க மம்மியா?", என்று கேட்கவும், "ஆமா", என்று அவன் சொல்லவும், சாந்தினிக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.



தீடீரென்று சொல்லிவிட்டான். அவளுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.



"மம்மி மம்மி", என்று அவளின் கன்னத்தை இரண்டு பிள்ளைகளும் முத்தத்தால் நிரப்ப, திணறி விட்டாள்.





அடுத்து பிள்ளைகள் கேட்ட கேள்வியில் ஆதர்ஷ் சாந்தினி இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று விட்டனர்.
 

அத்தியாயம் 11


"அப்போ மம்மி ஏன் டாடி நம்ப கூட இல்ல?", என்று லக்ஷித் கேட்க, "ஆமா மம்மி ஏன் நம்ப கூட இல்ல? எங்க பிரண்ட்ஸ் மம்மி டாடி எல்லாம் ஒண்ணா இருக்காங்க...", என்று சொல்லிருந்தாள் லயனிக்கா.



லக்ஷித்தோ, "ஆமா ஏன் நீங்க மம்மி ஒண்ணா இல்ல? மம்மி நம்ப கூடவே இருக்கட்டும் டாடி ப்ளீஸ்...", என்று கெஞ்ச ஆரம்பித்து இருந்தான் குழந்தை அவன்!



ஆதர்ஷும் சாந்தினியும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்று இருந்தனர்.



"அது வந்து...", என்று சாந்தினி ஆரம்பிக்கும் முதல், "இப்போதைக்கு மம்மி தனியா இருக்கட்டும்... தாரணி ஆண்ட்டி தனியா இருப்பாங்கல?", என்று அவன் கேட்கவும், லயனிக்காவோ, "அர்னவ் அங்கிள் கூட தான் தனியா இருக்கார்", என்று முடித்து இருந்தாள்.



"ம்கூம் எந்த சைடு பால் போட்டாலும் அடிக்கிறாங்க... நான் பெத்ததுங்க என்னையே வச்சி செய்றாங்க", என்று இருவரும் ஒரே போல் நினைத்து கொண்டனர்.



"அர்னவ் அங்கிள் ரொம்ப தைரியசாலி... ஆனா தாரணி ஆண்ட்டி ரொம்ப பயப்படுவாங்க... அதான் மம்மி அவங்க கூட இருக்கேன்", என்று இந்த முறை சாந்தினி சமாளித்து இருந்தாள்.



ஆனால் பிள்ளைகள் விடுவார்களா என்ன?



இவ்வளவு நாள் மம்மி ஏன் எங்களுடன் இல்லை? நீங்களும் மம்மியும் சேர்ந்து எங்கள் ஸ்கூல்க்கு வாருங்கள் என்று அவர்கள் இருவரையும் ஒரு வழி செய்து விட்டனர்.



நாட்கள் நகர ஆரம்பித்த சமயம் தான், சிவமின் திருமணம் முடிந்து அடுத்த நாள் சென்னை வந்த தருணம் அந்த நிகழ்வு நடந்தது.



ஆதர்ஷ் சிவமின் வழியாக ஆருஷ் செய்த விடயங்களை சொல்லி இருக்க, அவனுக்கோ அப்போதில் இருந்து சாந்தினியை பார்ப்பதே கொஞ்சம் குற்ற உணர்வாக இருந்தது.



அவளது முகத்தில் எப்படி முழிப்பது? அவளையும் யாழையும் ஆருஷ் பேசிய பேச்சிற்கு எங்கிருந்து அவனால் பேச முடியும்? அது மட்டும் அல்ல, அவனுக்கு சாந்தினியுடன் இப்போது வேலை செய்ய ஆரம்பித்த பின்பு, பிரகாஷ் சொன்னதில் நிறைய சந்தேகங்கள் வந்து இருந்தது.



ஒருவரை பார்க்காமல் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் நம்பி விடலாம்... ஆனால் கூடவே இருக்கும் போது அப்படி அல்லவே! இதே போல தானே அனைத்து முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கை கூட, நாம் செய்தி தாள், நியூஸ் என்று கேட்கும் அனைத்தையும் நம்பி விடுகிறோம், அவர்கள் வாழ்வில் சென்று பார்த்தால் தானே நிதர்சனம் புரிய வரும்.



அதே போல் தான் ஆதர்ஷும், சாந்தினியின் குணநலன்களை நன்கு ஆராய துவங்கி இருந்தான். அதுமட்டும் இன்றி அவன் ஒன்னும் இப்போது இருபத்தி ஐந்து வயது கத்து குட்டி அல்லவே! இந்த ஐந்து வருடங்கள் அவனை வலிக்க வலிக்க அடித்து இருக்கிறது. அவன் இப்போதெல்லாம் மனிதர்களையும் இடை போட கற்று கொண்டு இருந்தான்.



சாந்தினியின் மீது அவன் காட்டிய வெறுப்பு இத்தனை நாட்கள் அவனின் ஆழ் மனதில் பதிந்து இருந்த உணர்வுகளை தான். அவனின் குழந்தைகளை வைத்து பணம் பேரம் பேசி இருக்கிறாள் என்கிற கோவம்!



ஆனால் பொறுமையாக இப்போது சிந்தித்தவனுக்கு ஏனோ சாந்தினியை அப்படி நினைக்க தோன்றவில்லை. அவள் பண்ணத்திற்காக குழந்தைகளை ஈன்று இருக்கலாம் ஆனால் நிச்சயமாக குழந்தைகளை கொள்ளவெல்லாம் துணிந்து இருக்க மாட்டாள் என்று அவன் உள்மனம் அடித்து கூறியது.



கடந்த சில நாட்களாகவே அவளை குத்தி பேசுவதையும் குறைத்து தான் கொண்டிருந்தான்.



குழந்தைகள் அன்று பள்ளி சென்று வரவும், மிகவும் சோர்வாக காணப்பட்டான் லக்ஷித்.



"என்ன ஆச்சு என் ஸ்ட்ரோங் பாய்க்கு?", என்று கேட்டுக்கொண்டே ஆதர்ஷ் அவனின் தலையை தொட்டு பார்க்க, அவனுக்கு உடல் நெருப்பாய் கொதிக்க துவங்கியது.



"டாடி லக்ஷு வொமிட் பண்ணிட்டான் லஞ்ச் அப்போ", என்று அவளும் சொல்ல, அவனோ புது கேர் டெக்கரிடம், லயனிக்காவை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, லக்ஷித்தை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.



மருத்துவரை பார்த்தவுடன், "சார் பையனுக்கு வைரல் பிவேர் தான் ஒன்னும் பயப்பட வேண்டாம்... உங்க மிஸஸ் வரலையா?", என்று அவர் கேட்கவும், "மம்மி ஆபீஸ் போயிருப்பாங்க", என்று குட்டி லக்ஷித் கூறவும், ஆதர்ஷின் அலைபேசி சிணுங்கியது.



சாந்தினி தான் அழைத்து இருந்தாள். இப்போதெல்லாம் பிள்ளைகளுடன் மாலையில் நேரத்தை செலவழித்து விட்டு தான் வீடு சென்றாள்.



அவள் இன்றும் அப்படி பார்க்க வரவும், லயு பாப்பா அனைத்தையும் சாந்தினியிடம் கூறி இருந்தாள்.



"ஒன் செகண்ட் டாக்டர்", என்றவன் அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே சென்று அழைப்பை உயிர்பித்தவுடன், "லக்ஷித் எப்படி இருக்கான்? என்ன ஆச்சு?", என்று அவள் பதட்டமாக கேட்கவும், அவனோ, "சாந்தினி நான் அவனை பக்கத்துல கிளினிக்க்கு தான் கூட்டிட்டு வந்து இருக்கேன்... நீ கொஞ்சம் வரியா?", என்றவுடன், அவளுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.



அவளை அழைக்கிறானா? என்று நினைத்தவளுக்கு, இப்போது லக்ஷித்த்தின் உடல் நிலை மட்டும் அவளுக்கு முதன்மையாக இருக்க, அவளும் அவன் சொன்ன கிளினிக் நோக்கி சென்றாள்.



ஆதர்ஷிற்கு குழந்தைகளை பார்த்து கொள்ளும் அனுபவம் இருந்தாலும், உடல் நிலை சரி இல்லை என்றால், அவனுக்கு கொற்றவை அல்லது வித்யாவின் துணை நிச்சயம் தேவை. கடந்த முறை வைஷ்ணவியை கூட அழைத்து இருந்தான்.



என்ன தான் அப்பாக்கள் இருந்தாலும், உடல் நிலை சரி இல்லாத போது பிள்ளைகளுக்கு தேவையான அரவணைப்பை ஒரு அன்னையால் தானே தர முடிகிறது. அதற்காக அப்பாக்களின் அன்பில் குறை என்று சொல்லி விடவும் முடியாது.



அடுத்த ஐந்து நிமிடங்களில் சாந்தினி வந்து விட, அவளை பார்த்த குழந்தையவனோ, "மம்மி', என்று அழைக்க, அவளும் சென்று அவனை அணைத்து கொண்டான்.



டாக்டரோ, "இவங்க தான் உங்க வைப்பா சார்?", என்று கேட்கவும், ஆதர்ஷும் சாந்தினியும் ஒன்றும் பேசவில்லை.



லக்ஷித் தான், 'இவங்க தான் என் மம்மி", என்று சொல்லவும், "மிஸஸ் ஆதர்ஷராம்", என்று அவளை அழைக்க, இருவருக்குமே தர்ம சங்கடமான நிலை தான்.



இரண்டாவது முறையாக மிஸஸ் ஆதர்ஷராம் என்று அழைக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



"இந்த மெடிசின்ஸ்லாம் கொடுத்திருங்க", என்று அவர்களிடம் ப்ரீஸ்க்ரிப்ஷன் நீட்ட, அடுத்து சாந்தினி நிறைய கேள்விகள் கேட்டாள்.



குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம், கொடுக்க வேண்டாம், எந்த மாதிரி உணவுகளை தவிர்க்க வேண்டும், என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது.



ஆதர்ஷிற்கு ஏதோ கொற்றவை, வித்யா அல்லது வைஷ்ணவியுடன் வந்தது போல் தான் இருந்தது.



இதற்கு தானே பெண்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள்.



அனைத்து விடயங்களையும் கேட்டவள், விடை பெற முற்பட, "இதுக்கு தான் மிஸ்டர் ஆதர்ஷ் உங்க வைப்ப வர சொன்னேன்... என்ன தான் நம்ப ஆம்பளைங்க எல்லாமே செஞ்சாலும் அந்த கேர் எப்பவும் பெண்கள் கிட்ட அதிகம் தான்", என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார்.



லக்ஷித்தோ மீண்டும் வீட்டிற்கு செல்லும் போதே, "மம்மி ப்ளீஸ் இன்னைக்கு என்கூட இருங்க", என்று அவளை கொஞ்சி கெஞ்சி கொண்டு வர, ஆதார்ஷோ, "நீ வேணும்னா இன்னைக்கு இங்கயே ஸ்டே பண்ணிக்கோ", என்று சொல்லி இருந்தான்.



அவள் அவளையே கிள்ளி பார்த்து கொண்டாள்.



"எதுக்கு கிள்ளி பாக்குற?", என்று கேட்கவுடன், "இல்ல கனவு ஏதோ காணுறேனான்னு...", என்று அவள் சொல்லவும், அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, திரும்பி கொண்டான்.



அவர்கள் வீட்டிற்கு வந்ததும், லயனிக்கா அவர்களை நச்சரிக்க ஆரம்பித்து விட, நாளைக்கு விடுமுறை என்பதால் அவளை சென்று விளையாட சொல்லி விட்டு, அவளோ லக்ஷித்தை கவனிக்க ஆரம்பித்து இருந்தாள்.



"உங்களுக்கு குக் பண்ண தெரியுமா ஆதர்ஷ்?", என்று கேட்டவளிடம், "நார்மல்லா சமைப்பேன் ஆனா இந்த பிவேர் புட்லாம் தெரியாது", என்று அவன் சொல்லவும், "சரி நானே இன்னைக்கு சமைக்கிறேன்.. நீங்க இவனை பார்த்துக்கோங்க", என்று சொல்லிவிட்டு அவள் தான் சமைக்க ஆரம்பித்து இருந்தாள்.



ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் சமைத்து முடித்தவள், லயனிக்காவையும், ஆதர்ஷனையும் சாப்பிட அழைத்தாள்.



"நீங்க சாப்பிடுங்க.. நான் போய் லக்ஷித்க்கு புட் கொடுத்துட்டு டேப்லெட்லாம் போட்டுட்டு வரேன்", என்று சொல்லி நகர்ந்து விட்டாள்.



சப்பாத்தி, குருமா மற்றும் தக்காளி தொக்கு கொஞ்சம் பழங்கள் வைத்து இருந்தாள். லயனிக்காவிற்கு வெதுவெதுப்பான தண்ணியை குட்டி பிளாஸ்க்கிலும் ஊற்றி வைத்து இருந்தாள்.



எடுத்து சாப்பிட்டவனின் நாக்கில் சுவை அப்படியே ஒட்டி கொண்டது.



"யம்மில டாடி மம்மி சமையல்", என்று சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டிருந்தாள் குழந்தை.



இங்கோ பெரிய குழந்தையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்க, சிறிய குழந்தையின் பேச்சு எதுவும் செவிகளை அடையவில்லை.



இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்த சமயம், "ஆதர்ஷ்", என்று அழைத்து இருந்தாள் சாந்தினி.



லயனிக்காவை டிவி பார்க்க செய்தவன், அவனின் அறைக்குள் நுழைய, அங்கோ லக்ஷித் எடுத்த வாந்தியை தாங்கி இருந்தாள் சாந்தினி.



"இவனுக்கு செஞ் பண்ணி விடுங்க... அப்படியே பெட்ஷீட் மாத்திருங்க ப்ளீஸ்... அண்ட் நான் போய் பிரெஷ் ஆகிட்டு வரேன்... இப் யு டோன்ட் மைண்ட் உங்க கிட்ட செஞ் பண்ண டிரஸ் இருக்கா?", என்று அவள் கேட்கவும், "அகல்யாவோட டிரஸ் இருக்கும்... அவ சில நேரம் இங்க வருவா.. நான் எடுத்துட்டு வரேன்", என்று சொல்லவும், அவள் குளிக்க சென்று இருந்தாள்.



அதற்குள் ஆதர்ஷ், லக்ஷித்திற்கு உடையை மாற்றி விட்டு பெட்ஷீட்டையும் மாற்றி இருந்தான்.



பிள்ளையை நன்றாக கம்பளம் போர்த்தி விட்டவன், அடுத்து அங்கு இருந்த ஒரு அறைக்கு சென்று, அகல்யாவின் இரவு உடையை எடுத்து வந்து, "சாந்தினி", என்று அவன் குளியலறை கதவை தட்ட, அவளும் கொஞ்சமாக திறந்து கையை நீட்ட, அவனின் மனமோ தறி கேட்டு ஓட துவங்கியது.



அவளின் ஈர கைகளை பார்த்தவனுக்கு, அவள் உள்ளே எந்த கோலத்தில் இருப்பாள் என்று நினைத்து பார்க்கவே உடல் சிலிர்த்து அடங்கியது.



"இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சா செருப்பால அடிப்பா", என்று நினைத்தவன், அவளின் கைகளில் உடையை வைத்து விட்டு, திரும்பி வந்து, லக்ஷித்தின் அருகில் இருக்கவும், குளியலறையின் கதவை திறந்து வெளியே வந்தாள் சாந்தினி.



அவளுக்கு அகல்யாவின் உடை சரியாக தான் பொருந்தி இருந்தது.



இதே சமயம், லயனிக்கவோ, "டாடி", என்று அழைக்கவும், சாந்தினியும் ஆதர்ஷும் வெளியே சென்று பார்க்க, இருவரின் கண்களும் விரிந்தன.
 

அத்தியாயம் 12



அவர்கள் இருவரும் அறைக்கு வெளியே வர பிரகாஷ் தான் நின்று இருந்தார். இருவரின் கண்களும் விரிந்தன. வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் பேர பிள்ளைகளை பார்க்க வருவார். அப்போது தான் அவனுக்கும் லயனிக்கா மற்றும் லக்ஷித்தின் பிறந்த நாள் இன்னும் இரு வாரங்களில் வர இருப்பது தெரிந்தது.



"வாங்க", என்று அழைத்து இருந்தான். மாமா என்றும் அங்கிள் என்றும் அவன் அவரை அழைப்பதை நிறுத்தி இருந்தான்.



"இவ என்ன இங்க பண்ரா மாப்பிள்ளை?", என்று அவர் சாந்தினியை பார்த்து அவர் பற்களை கடிக்க, அவரை கூர்ந்து பார்த்தவன், "அவ மகனை பார்த்துக்க வந்து இருக்கா", என்று கூறி இருந்தான்.



அவரின் கண்கள் விரிந்தன. "என்ன மாப்பிள்ளை சொல்றிங்க இவ யாருனு தெரியுமா?", என்று அவர் கேட்கவும், "ஹான் தெரியுமே! என் பசங்களோட மம்மி... அப்படித்தானா லயு?", என்று அவனின் மகனிடம் புன்னகை புரிந்து கேட்டான்.



அவனுக்கு சளைத்தவள் அல்லவே அவனது மகள். "ஆமா டாடி... எங்க சாந்து மம்மி", என்று அவள் மழலை மாறா குரலில் சொல்லவும், ப்ரகாஷிற்கு தான் கோவம் தலைக்கு ஏறியது.



"நீ போய் உள்ள இரு லயு", என்று அவளை விளையாடுவதற்கு என்று இருக்கும் அறைக்கு அனுப்பி வைத்து விட்டான்.



"சொல்லுங்க இங்க ஏன் வந்திங்க?", என்றவனை பார்த்து, "நீங்க இப்படி பண்ணுவிங்கனு நான் நினைக்கல மாப்பிள்ளை...இந்த பொண்ணு கூட போய் கூத்து அடிக்கிறீங்க", என்று பற்களை கடித்து கொண்டு கேட்கவும், "உங்க பொண்ணு என்ன கல்யாணம் பண்ணிகிட்டே இன்னொருத்தனோட கூத்து அடிச்சிருக்கா தானே", என்றவுடன் அவரின் முகமும் கூம்பி போய் விட்டது.



"என் பொண்ணும் இந்த கழிசடையும் ஒண்ணா?", என்று அவர் சீறிக்கொண்டு வர, சாந்தினிக்கோ கோவம், அவள் பேச ஆரம்பிக்கும் போதே, அவளின் கையை பிடித்து அழுத்தி நிறுத்தி இருந்தான் ஆதர்ஷ்.



"சரியா சொன்னிங்க உங்க பொண்ணோட போய் சாந்தினியை கம்பேர் பண்ண கூடாது... அவ காசுக்காக குழந்தையை சுமந்ததா இருக்கட்டும்... ஆனா உங்க பொண்ணு குழந்தையை கூட சுமக்க மாட்டேன்னு சொல்லிட்டா", என்று சொல்லவும், அவருக்கு தான் அவமானமாக போய் விட்டது.



அதற்கு மேல் அவருக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை.



"என் பேர பசங்கள நான் கூட்டிட்டு போறேன்... என் கிட்ட கொடுத்துட்டு நீங்க என்னவோ பண்ணுங்க", என்று அவர் பிள்ளைகளின் அறையை செல்லும் போதே, "மிஸ்டர் பிரகாஷ்" என்று வீடே அதிரும் படி கர்ஜித்து இருந்தான் ஆதர்ஷராம் விஷ்ணு தேவன்.



"அடுத்த அடி எடுத்து வச்சிங்க அதுக்கு அப்புறம் நீங்க வேற ஆதர்ஷ பார்க்க வேண்டியதா இருக்கும்", என்று அவன் சொல்லவும், ஒரு கணம் ஆடி தான் போய் விட்டார்.



"இரண்டு வாரம் கழிச்சி பசங்க பார்த் டேக்கு வாங்க... நொவ் ப்ளீஸ் லீவ்", என்று சொன்னவுடன் வெளியே சென்று விட்டார். ஆதர்ஷ் இன்னும் சாந்தினியின் கைகளை விடவே இல்லை.



"கொஞ்சம் கைய விடுறிங்களா?", என்று கேட்டவுடன் கையை விட்டுவிட்டான்.



"என்ன உங்க மாமனார் கிட்ட எனக்காக இப்படி பேசி இருக்கீங்க?", என்று அவள் புருவம் உயர்த்தி கேட்கவும், "யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கனு இனி தான் நான் டிசைட் பண்ணனும்... என் முதுகுக்கு பின்னாடி நிறைய நடந்து இருக்கோனு எனக்கு தோணுது", என்று அவன் சொன்னதும், "பாப்போம் நீங்க என்ன தான் பண்றிங்கனு", என்று சொன்னவள் லக்ஷித்திடம் சென்று விட்டாள்.



அன்றைய நாள் தான் ஆருஷ் அழைத்து இருந்தான். ஆதர்ஷ் அவனை பொரிந்து தள்ளி கொண்டு இருக்கும் போது தான் சாந்தினிக்கும் உண்மை தெரிந்து இருந்தது.



அவனின் அழைப்பை அவர்கள் வைத்தவுடன், "உங்க குடும்பமே இப்படி தானா? பொண்ணுங்கள எல்லாம் யூஸ் அண்ட் த்ரோவ் மாறி பயன்படுத்திகிட்டு இருக்கீங்க! உங்களுக்குலாம் பொண்ணுங்கனா கிள்ளு கீரையா போச்சுல? ஆதி ஆதர்ஷ் ஆருஷ்னு பேரு வச்சதுக்கு பொம்பள பொறுக்கிங்கனு வச்சி இருக்கலாம்", என்று அவள் சொன்னதும் அவனுக்கும் கோவம் தான்.



அவளின் இடையை பற்றி இழுத்தவன், அவளை மூச்சு காற்று படும் படி அணைத்து இருந்தான்.



"என்ன பண்றீங்க?", என்று அவள் விடுபட முயற்சிக்க, "பொம்பள பொறுக்கி தானே இப்படி தான் பண்ணுவான்", என்று சொல்லி அவன் அவளின் கழுத்தில் முகம் புதைக்க எத்தனிக்கும் முன்னே அவனை தள்ளி விட்டு இருந்தாள் சாந்தினி.



"தெரியுதா இப்போ? ஏன் டி நான் தெரியாம தான் கேட்குறேன்... ஆதி என்னைக்காவது உன் கழுத்துக்கு கீழ பாத்து இருப்பானா? சரி ஆருஷ் கூட உன்ன என்னைக்காவது தப்பா பார்த்து இருப்பானா? அவன் பேசுனது தப்பு தான் சாந்தினி நான் இல்லனு சொல்லல... ஐ அம் சாரி அபௌட் இட்... பட் ப்ளீஸ் இந்த பொம்பள பொறிக்கினுலாம் சொல்லாத.. உனக்கு அவளோ கோவம் இருந்தா அவனை பார்க்கும் போது நாலு அடி கூட அடி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்", என்று சொல்லி சென்று விட்டான்.



அடுத்த நாள் விடிய, லக்ஷித்திற்கு உடல்நிலை கொஞ்சம் தேறி இருந்தது.



ஆதர்ஷ் வந்து பார்க்கவும், "நீ கிளம்பு இட்ஸ் ஓகே நான் பார்த்துக்கறேன்", என்று அவன் சொல்லவும், "இல்ல நான் இன்னைக்கு லீவ் போடுறேன்.. நீங்க ஆபீஸ் போங்க...", என்று அவள் சொல்லவும், அவனுக்கும் ஏனோ இன்று ஆபீஸ் செல்ல மனம் இல்லை.



"இட்ஸ் ஓகே நானும் வீட்லயே இருக்கேன்", என்றவன் அடுத்து அர்னவ்வை வீட்டிற்கு அழைத்து இருக்க, சாந்தினியும் காரணியை அழைத்து இருந்தாள்.



தாரணி அருகிலேயே இருப்பதால் சீக்கிரமாக வந்து விட்டாள்.



"சொல்லுங்க மேம்", என்று வந்து நின்றவளிடம், அனைத்து வேலைகளையும் பட்டியல் போட்டு விட்டு, பின்பு கடைசியாக, 'அர்னவ் கூட ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணு அண்ட் நானே அவனை உன்ன ட்ரோப் பண்ண சொல்லிடறேன்", என்று சொன்ன அதே சமயம் உள்ளே நுழைந்து இருந்தான் அர்னவ்.



"மோர்னிங் மேம்", என்று புன்னகையுடன் அவன் வரவும், "அர்னவ் ஈவினிங் நீயே இவளை ட்ரோப் பன்னிரு ப்ளீஸ்", என்று சொல்லவும், "ஓகே மேம்", என்று அவளுக்கு பதில் அளித்தவன், தாராணியை மட்டும் பார்க்கவே இல்லை.



ஆதர்ஷ் வந்து அர்னவ்வின் வேலைகளை சொல்லி இருந்தான்.



"அர்னவ் நான் லயா லக்ஷித் பர்த்டே இந்த வாட்டி ரொம்ப சிம்பிள்லா தான் பன்னலாம்னு இருக்கேன்... சோ அதுக்கு தேவையான அரேஞ்மென்ட்ஸ் பண்ணனும்", என்று அவன் சொல்லவும், "நானும் அவருக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?", என்று அவளாக கேட்டு இருந்தாள் தாரணி.



அர்னவ் பற்களை கடிக்கவும், சாந்தினி அவளை பார்க்க, "உனக்கு அவளோ ஆசையா இருந்தா ஹெல்ப் பண்ணிக்கோ", என்று அவன் சொல்லவும், "கண்டிப்பா சார்... நீங்க பாருங்க லயணிக்காக்கு பார்பி கேக், லக்ஷித்க்கு நிமோ கேக்னு நிறைய பண்ணலாம்", என்று அவள் உற்சாகமாக சொல்லவும், அவளை பார்ப்பதற்கே குழந்தை போல தெரிந்தாள்.



"இவளோ எக்ஸைட் ஆகுறியே! அப்போ உன் பார்த் டேக்கு இன்னும் எக்ஸைடேட்டா இருப்ப போல?", என்று ஆதர்ஷ் கேட்கவும், "என் பார்த் டே நான் செலிப்ரட் பண்ணதே இல்ல சார் ", என்று அவள் சாதாரணமாக தான கூறினாள்.



அனைவரின் புருவமும் ஒரே போல் அவளை கேள்வியாக பார்த்தது.



"எனக்கு சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாங்க சார்.. அம்மா மட்டும் தான்.. ரொம்ப கஷ்டம்.. மெரிட்ல தான் படிச்சேன்... எங்களுக்கு தினமும் மூணு வேளை சாப்பிடறதே பெரிய விஷயம் சார் இதுல எங்க இருந்து பார்த் டேலாம்.. தீபாவளி பொங்கலுக்கு தான் நாங்க மூணு வேளை சாப்பிடுவோம்.. அதுவும் பக்கத்துக்கு வீட்லலாம் ஏதாச்சு எடுத்து வந்து கொடுப்பாங்க... இப்போதான் நான் வேலை செய்ய ஆரம்பிச்சு ஓரளவுக்கு அம்மாவை பார்த்துக்கறேன்.. இப்போ மேம் கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சதுல இருந்து என் அம்மா இன்னுமே நல்லா தான் இருகாங்க... நல்லா சாப்பிடறாங்க மூணு வேளையும் அதுவே எனக்கு சந்தோசம் தான்", என்று அவள் சொல்லவும், அனைவர்க்கும் அதிர்ச்சி தான்.



அவள் எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவள், இன்று அவளின் இருண்ட வாழ்வைக்கூட இனிப்பது போல் சிரித்து கொண்டே தான் கூறினாள்.



வாழ்க்கை எத்தனை கொடியது சில நபர்களுக்கு?



ஆதர்ஷிற்கு இந்த வாழ்வு புதுசு தான். வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன வென்று தெரியாமல் வளர்ந்தவன் அவன்? அவனுக்கு தாராணியை பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.



அவள் இருந்தாலே ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். ஆனால் அவளின் புன்னகைக்கு பின்னால் இப்படி ஒரு வலி நிறைந்த வாழ்வு இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை.



இதே சமயம், சாந்தினிக்கோ அவளையே பார்ப்பது போன்ற உணர்வு. அவளை குழந்தை என்று அவள் நினைத்து இருக்க, அவளின் அன்னைக்கே அன்னையாக இருக்கிறாள் என்று தோன்றியது.



அர்னவ் இன்று தான் தாராணியை முதல் முறையாக ரசித்து பார்க்க துவங்கினான். எப்போதும் அவளை பார்த்தால் அனல் வீசும் கண்கள் இன்று அன்பை பொழிய துவங்கி இருந்தது.



அவள் மீது அனுதாபம் எல்லாம் இல்லை, அவளை பார்த்து ஒரு வித மரியாதை. அவனுக்கு சாந்தினியின் மீது எப்போதும் ஒரு மரியாதை இருக்கும் ஆனால் அது அத்துடன் நின்று கொண்டு இருந்தது.



ஆனால் தாரணி மீது வெறும் மரியாதையுடன் நிற்க போவது இல்லை என்று அவனுக்கும் தெரிந்தது.



"தாரணி யு ஆர் கிரேட்", என்று ஆதர்ஷ் சொல்லவும், "நான் இல்ல சார் என் அம்மா தான் கிரேட்... எனக்காக அவங்க லைஃப் சக்ரிபைஸ் பண்ணி இருகாங்க.. எனக்கு தளிர்மதி மேம் மேல தான் கொஞ்சம் பொறாமை.. எனக்கும் சாந்தினி மேம் மாறி அக்கா இருந்து இருந்தா நான் கூட இன்னும் நல்லா இருந்து இருப்பேன்... ஒரே பொண்ணா போய்ட்டேன்", என்று பெருமூச்சு விட்டு கொண்டாள்.



"இப்ப மட்டும் என்ன எனக்கு யாழ் எப்படியோ நீயும் அப்படி தான்", என்று சாந்தினி சொன்னதும், "சும்மா சொல்லாதீங்க மேம்", என்று சொன்னவள் ஆபீஸ் சென்று விட, அவர்கள் மூவரும் தான் அப்படியே அமர்ந்து இருந்தனர்.



மூன்று நாட்கள் கழிந்து இருக்கும், லக்ஷித் நன்றாக தேறி இருந்தான். ஆனாலும் சாந்தினி அங்கேயே இருந்து அவனை பார்த்து கொண்டாள்.



அன்றைய நாள் இரவு, தாரணி மட்டும் இருந்த சமயம், அவளுக்கு யாரோ வீட்டினுள் வருவது போல் இருந்தது.



சட்டென விழித்து விட்டாள்.



"யாரது?", என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்து பார்த்தவள் கண்கள் விரிந்து கொண்டன.
 

அத்தியாயம் 13



"சர்ப்ரைஸ்", என்று அங்கு அனைவரும் நின்று இருந்தார்கள். ஆதர்ஷ், சாந்தினி, அர்னவ், லக்ஷித் மற்றும் லயனிக்கா என்று அனைவரும் நின்று இருந்தார்கள்.



சாந்தினியின் கையில் கேக் உடன் நின்று இருந்தாள்.



அனைவரும் ஒரு சேர, "ஹாப்பி பார்த் டே டு யு... ஹாப்பி பார்த் டே டு யு", என்று அனைவரும் ஒன்றாக பாடினர்.



அவள் அன்று சொல்லிய தினமே அவளின் பிறந்த நாளை தான் பார்த்து இருந்தாள் சாந்தினி.



"இன்னும் த்ரீ டேஸ்ல தாராணிக்கு பார்த் டே", என்று அவள் சொல்லவும், "கண்டிப்பா செலெப்ரெட் பண்ணனும்", என்று ஆதர்ஷ் சொல்லவும், "என்ன செலெப்ரெட் பண்ணனும் டாடி?", என்று கேட்டுக்கொண்டே வந்தாள் குட்டி லயா.



"தாரு ஆண்ட்டிக்கு பார்த் டே இன்னும் த்ரீ டேஸ்ல அதான் நம்ப செலெப்ரெட் பண்ணலாம்", என்று சொல்லவும், "டாடி ஆண்ட்டிக்கு ஆனா கேக் வெட்டலாம்... ப்ரோசன் படத்துல வருவாளே", என்று குழந்தை கூறவும், "லயு பிரின்சஸ் சொன்ன மாறியே அதே கேக் வெட்டிரலாம்", என்று அர்னவ் சொல்லவும், ஆதர்ஷ் சாந்தினி அவனை தான் பார்த்தனர்.



'உனக்கு தான் அவளை பிடிக்காதே", என்று ஆதர்ஷ் சொல்லவும், "அது... வந்து... சார்... பிடிக்காதுன்னுலாம் இல்ல.. அவ தொண தொணன்னு பேசுறது தான் கடுப்பா இருக்கு", என்று அவன் சமாளித்து இருக்க, ஆதார்ஷோ, "பார்த்துக்கோ", என்று எழுந்து சென்று விட்டான்.



அர்னவ்விற்கு தான் வேலை பளு அதிகமாக இருந்தது. ஒரு பக்கம் லக்ஷித் லயனிக்கா பிறந்த நாள், மறுபக்கம் தாரணியின் பிறந்த நாளுக்காக அவன் செய்ய வேண்டியவை இருந்தது.



சாந்தினியிடம் உள்ள சாவியின் மூலம் மூவரும் பூனை போல உள்ளே நுழைந்து விட்டனர்.



உணர்ச்சிவசத்தில் நின்று இருந்தாள் தாரணி.



"ஹாப்பி பார்த் டே ஆண்ட்டி", என்று பிள்ளைகள் இருவரும் அவளை சென்று கட்டி கொண்டனர்.



"தேங்க் யு பேபீஸ்", என்றவள், அவர்களை கட்டி அணைத்து இருந்தாள். அதே சமயம், அவளுக்கு இரண்டு கன்னங்களிலும் முத்தம் வைத்தனர் சிறு பிள்ளைகள்.



"ஹாப்பி பார்த் டே தாரணி", என்று சாந்தினி அவளுக்கு ஒரு நெக்லெஸ் செட் கொடுத்து இருந்தாள்.



"ஐயோ மேம் இது ரொம்ப எக்ஸ்பென்சிவ்', என்று அவள் வாங்க மறுக்க, சாந்தினியோ அவளின் கையில் அதை திணித்து, "தளிர்க்கு வாங்கி கொடுத்து இருக்க மாட்டேனா?", என்று கேட்கவும், "மேம்", என்று மேலும் தயங்கி நிற்க, அவளின் கையை அதை திணித்து இருந்தாள் சாந்தினி.



அடுத்து ஆதர்ஷ் வந்து, "ஹாப்பி பார்த் டே தாரணி பிரின்சஸ்", என்று அவளிடம் ஒரு ஐபேட் கொடுத்து இருந்தான்.



'சார் ஏன் சார் இதெல்லாம்?", என்று அவள் அதையும் வாங்க மறுக்க, அவன் விடுவானா என்ன, "உனக்கு இது யூஸ் ஆகும்", என்று கொடுத்து விட்டு தான் இருந்தான்.



அடுத்து அர்னவ் தான் தயங்கி கொண்டு நின்று இருந்தான்.



"ஹாப்பி பர்த்டே தாரணி", என்று சொன்னவன் அவளுக்கு ஒரு பென்டென்ட் கொடுத்து இருந்தான்.



அதில் இதயவடிவில், டி அண்ட் எ என்று இருந்தது.



"டி ஓகே எ யாரு?", என்று அவள் கேள்வியாய் பார்க்கவும், "இது தான் நல்ல டிசைன்ல இருந்தது அதான்", என்று சொல்லி சமாளித்து வைத்து இருந்தான் அர்னவ்.



அன்றைய இரவு மகிழ்ச்சியாக சென்றது.



அடுத்த நாள் அவர்கள் அனைவரும் தீம் பார்க் சென்று வந்தார்கள். ஒரே ஆட்டம் தான். மூன்று குழந்தைகளுடன் அவர்கள் மூவரும் தான் அவஸ்த்தை பட வேண்டியதாக போய் விட்டது.



அன்று தாராணியுடன் சாந்தினியும் வீடு திரும்பி இருந்தாள்.



பிள்ளைகளிடம், தாரணி ஆண்ட்டிக்கு பயம் என்று சொல்லி சமாளித்து இருந்தார்கள்.



உள்ளே நுழைந்ததும், சாந்தினியை கட்டி அணைத்து இருந்தாள் தாரணி.



"ரொம்ப தேங்க் யு மேம்", என்று அவள் கண்ணீருடன் சொல்லவும், "நான் எதுவும் பண்ணல.. எல்லாமே அர்னவ் தான் பிளான் பண்ணான்", என்று அவள் சொல்லவும், "நான் அதுக்கு சொல்லல மேம்... என் அம்மாவை வேற வீட்டுக்கு ஷிப்ட் பண்ணிருக்கீங்க அதுக்காக", என்றவளை, அணைத்து விடுவித்து விட்டு, "எனக்கும் அம்மா மாறி தான்... போய் நிம்மதியா தூங்கு", என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு சென்று விட்டாள்.



அடுத்த நாளில் இருந்து அர்னவ் மற்றும் தாரணி பிள்ளைகளின் பிறந்த நாளின் விழாவிற்காக அனைத்தையும் தயார் செய்து வைத்து இருந்தனர்.



பிறந்த நாள் அன்று பனிரெண்டு அடித்தவுடன், ஆதர்ஷ் மட்டும் தான், "ஹாப்பி பார்த் டே மை பேபீஸ்", என்று சொல்லி இருவரின் தலையிலும் முத்தம் பதித்து இருந்தான்.



சாந்தினியோ அவளது வீட்டில் அவளின் மணிவயிற்றை தடவியவள், "ஹாப்பி பார்த் டே டு மை ஹார்ட்ஸ்", என்று சொல்லி இருந்தாள்.



அடுத்த நாள் விடிய, "தேங்க் யு தாத்தா... தேங்க் யு பாட்டி", என்று சொல்லி கொண்டு இருந்தனர் பிள்ளைகள். ஆதர்ஷ் அப்போது தான் விழிக்க, "யாரு கிட்ட பேசுறீங்க?", என்று கேட்கவும், அவனின் விழிகள் விரிந்தன.



அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததோ சிதம்பரம் மற்றும் காத்யாயணியிடம், "அகல்யா அத்தை கால் பண்ணாங்க டாடி", என்று சொன்னவர்கள் அப்படியே போனை அவன் புறம் திருப்ப, காத்தியாயனியோ ஆதார்ஷை பார்த்து, "எப்படி ப்பா இருக்க?", என்று கேட்டு இருந்தார்.



அவனோ எழுந்து அமர்ந்து, "நல்லா இருக்கேன் அத்தை... நீங்க எப்படி இருக்கீங்க?", என்று கேட்கவும், "எங்களுக்கு என்ன ப்பா.. உன் தங்கச்சி நல்லா பார்த்துக்குறா...", என்று அவர் சொல்லவும், "அண்ணா நம்பாதீங்க.. நான் சமைக்கவே இப்போதான் கத்துக்குறேன் பாவம் அத்தை மாமா தான் டெஸ்டிங் மெட்டிரியல்", என்று சொல்லவும், "அவங்க பாவம் டி", என்று சொன்னவன் சிரித்து கொண்டே அப்படியே சிதம்பரத்தை பார்த்தான்.



"எப்படி இருக்கீங்க மாமா?", என்று கேட்கவும், "நல்லா இருக்கேன் மாப்பிள்ளை... யாழ் ஆதி மாப்பிள்ளையை தான் ஊருக்கு கூப்பிடனும்... நீங்களும் பசங்கள கூட்டிட்டு ஒரு நாள் வாங்க மாப்பிள்ளை.. எங்களுக்கும் ஆசையா இருக்கு.. எங்களை தாத்தா பாட்டினு கூப்பிடலாம் பிள்ளைங்க இருக்குனு கேட்கவே ரொம்ப ஆனந்தமா இருக்கு", என்று சிதம்பரம் சொல்லவும், "சீக்கிரமே யாழ் ஆதி குட் நியூஸ் கொடுப்பாங்க", என்று சொல்லி இருந்தான் ஆதர்ஷ்.



பேச்சுக்கு தான் சொல்லி இருந்தான். அவர்களின் ஏக்கம் அவனுக்கு புரிந்தது.



"என்ன இருந்தாலும் லயா லக்ஷித் எங்களுக்கு முதல் பேர குழந்தைகள் இல்லையா தம்பி.. எங்களுக்கு சாந்தினியும் பொண்ணு மாறி தான் தம்பி", என்று சொல்லி இருந்தார் காத்தியாயனி.



"ஒரு நாள் ஊருக்கு கூட்டிட்டு வரேன் அத்தை", என்று சொல்லவும், "கண்டிப்பா கூட்டிட்டு வரணும்", என்று அகல்யா சொல்லும் போதே, "யாரு கிட்ட பேசுறீங்க எல்லாரும்", என்று அங்கு வந்தான் வெற்றி வேந்தன்.



ஆதர்ஷனை பார்த்தவன், அப்படியே அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.



ஆதர்ஷும் பேசி கொள்ளவில்லை.



"அண்ணா அவரு கிட்ட பேசலாமே", என்று அவள் சொல்லவும், "எனக்கு தெரியும் நீ சொல்லாத", என்று சொன்னவன், பிள்ளைகளிடம் போனை கொடுத்து விட்டு சென்று விட்டான்.



அடுத்து அவன் குளித்து முடித்து வரவும், இன்னும் பிள்ளைகள், "தேங்க் யு தாத்தா", என்று சொல்லவும், "இன்னும் அவங்க கிட்ட பேசுறிங்களா?", என்று கேட்கவும், "இல்ல ருத்து தாத்தா கிட்ட", என்று அவனிடம் போனை காட்டி இருந்தார்கள்.



அவர்களின் பிறந்த நாளுக்கு அழைப்பு ஓய்ந்த பாடே இல்லை.



அடுத்து கொற்றவை அழைத்து இருக்க, விஷ்ணு மற்றும் வித்யா, வைஷ்ணவி மற்றும் விக்ரமன், ஏன் ராஜ பார்த்திபன் மற்றும் அஞ்சனா, விஜயேந்திரன் மற்றும் திலகவதி கூட அழைத்து அவர்களின் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.





அடுத்து ஆதி, யாழ் வீடியோ காலில் பேசி வாழ்த்து கூறினர்.



சிவம் அழைத்து இருந்தான், அவனிடம், "எங்களுக்கு எப்போ அங்கிள் விளையாட பாப்பா வரும்?', என்று கேட்டு நச்சரித்து விட்டனர்.



தளிர் கூட அழைத்து இருந்தாள். ஆருஷ் அவனின் வாழ்த்தை கூறி முடிக்க, சாந்தினி வந்து இருந்தாள்.



"ஹாப்பி பார்த் டே", என்று அவள் சொல்லவும், இருவரும் ஒரு சேர அணைத்து கொண்டு, "மம்மி எங்க கிபிட்?", என்று கேட்கவும், அவர்களுக்கு உடை வாங்கி வந்து இருந்தாள்.



லக்ஷித்திற்கு சிவப்பு நிற ஷர்ட்டும், லயனிக்காவிற்கு சிவப்பு நிற கவுன் வாங்கி வந்து இருந்தாள்.



"ஈவினிங் போட்டுக்கோங்க", என்று சொல்லி கொடுக்கவும், "ரொம்ப அழகா இருக்கு மம்மி", என்று சொல்லி அவளிடம் ஒட்டி கொண்டனர்.



அதே சமயம் ஆதர்ஷ் வர, "கோவில் போலாம் வரியா?", என்று கேட்டு இருந்தான்.



அவளும் சம்மதமாக தலையாட்ட, நான்கு பேறும் கோவில் சென்றனர்.



அங்கோ அய்யர், "தம்பி உங்க மனைவிக்கு குங்குமம் வச்சி விடுங்க", என்று சொல்லவும், தூக்கி வாரி போட்டது.



"சாமி நான் வச்சிக்கிட்டேன்", என்று சாந்தினி சொல்லவும், "இல்லமா இன்னைக்கு வெள்ளி கிழமை வேற நல்ல நாள் வச்சி விடட்டும்", என்று அவர் விடவே இல்லை.



"ஆமா டாடி மம்மிக்கு வச்சி விடுங்க... நாங்க பாக்குற மூவிஸ்ல கூட இப்படி தான ஹீரோ ஹீரோயினிக்கு வைப்பாங்க", என்று அவர்கள் சொல்லவும், "முதல்ல இதெல்லாம் பாக்குறத நிறுத்துங்க", என்று ஒரு சேர சொல்லி இருந்தனர் ஆதர்ஷ் மற்றும் சாந்தினி.



அவனோ குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைத்து விட்டான்.



சங்கடமான நிலை தான். ஆனாலும் இப்படி வந்து மாட்டி கொண்ட பின் என்ன செய்ய முடியும்.



அன்றைய மாலை வர, அர்னவ் மற்றும் தாரணி அனைத்தையும் தயார் செய்து வைத்து இருந்தனர்.



பிங்க் நிற உடையில் தாரணி இருக்க, அரனவ் பிங்க் நிற ஷார்ட் அணிந்து இருந்தான்.



"ரெண்டு பேறும் ஒரே கலர் டிரஸ்", என்று தாரணி சொல்லவும், அவனோ அவளை தாண்டி பார்த்து புன்னகைத்து, அவளின் தோள் பிடித்து திருப்பி, "செமயா இருக்காங்க இல்ல?", என்று கேட்டு இருந்தான்.



தாரணியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. ஆதர்ஷ், சாந்தினி, லயனிக்கா மற்றும் லக்ஷித் நால்வரும் ஒரே போல் சிவப்பு நிற உடையில் குடும்பமாக வந்தனர்.



"ரொம்ப அழகா இருகாங்க", என்று அவள் மகிழ்ச்சியில் சொல்லி இருந்தாள்.



இதே சமயம் உள்ளே நுழைந்தார் பிரகாஷ். அவரின் முகத்தில் வன்மம் நிறைந்து இருந்தது.



இந்த பிறந்த நாளில் பிரகாஷின் ஆட்டம் எப்படி இருக்குமோ?
 

அத்தியாயம் 14



பிரகாஷ் உள்ளே நுழையவும், ஆதர்ஷ் அவரை பார்த்தான். ஆனால் அவரிடம் செல்ல வில்லை. அவனின் மிக மிக நெருங்கிய சில நண்பர்களை மட்டும் தான் அழைத்து இருந்தான்.



"ரொம்ப அழகா இருக்கு டெக்கரேஷன்", என்று சாந்தினி, அர்னவ் மற்றும் தாராணியை பார்த்து கூறவும், இருவரும் ஒன்றாக புன்னகைத்தனர்.



"மேம் கேக் கட் பண்ணலாமா?", என்று அர்னவ் கேட்கவும், சாந்தினியோ ஆதர்ஷனை தான் பார்த்தாள்.



"ஸ்டார்ட் பண்ணலாம்", என்றதும், ஆதர்ஷ் மற்றும் குழந்தைகள் இருவரும் கேக் அருகே செல்ல, பிள்ளைகளோ, "வாங்க மம்மி", என்று பிள்ளைகள் இருவரும் சாந்தினியை பார்க்க, அவளோ தயங்கி நின்றாள்.



அவளுக்கு எப்படி அருகே செல்வது என்கிற தயக்கம்.



"போங்க மேம்... பசங்க ஆசைப்படறாங்க", என்று தாராணியும் அர்னவ் இருவரும் சொல்லவும், ஆதர்ஷ் சாந்தினியின் கையை பற்றி இருந்தான்.



அவளோ அவனை பார்க்க, அவளின் கையை பிடித்து கேக் வெட்ட அழைத்து சென்று இருந்தான்.



அங்கே இருந்த பிரகாஷின் அருகே இருந்த ஒருவர், "இவங்க தான் ஆதர்ஷ் சார் வைப் போல", என்று சொல்லவும், "வைப்லாம் இல்ல அவ எவளோ ஒருத்தி", என்று சொல்லி இருந்தார் பிரகாஷ்.



"என்ன சொல்றிங்க சார்?", என்று அருகில் இருந்தவர் கேட்கவும், "என் பொண்ணு தான் ஆதர்ஷ் வைப், அவ இறந்துட்டா இது எவளோ", என்று அவர் பற்களை கடித்து கொண்டு கூறவும், அந்த நபரோ, பிள்ளைகள் கேக் வெட்டும் சமயத்தில், "மிஸ்டர் ஆதர்ஷ் இவங்க யாரு", என்று சாந்தினியை பார்த்து கேள்வி எழுந்தது.



"யாரு இவங்க?", என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி எழுப்பி கொண்டு இருந்தனர்.



"இவங்க எங்க மம்மி", என்று பிள்ளைகள் இருவரும் சொல்ல, "அப்போ உங்க வைப்பா ஆதர்ஷ்?", என்று அடுத்த கேள்வி, அர்னவ் மற்றும் தாராணிக்கே சங்கடமான நிலை.



தாராணிக்கு இங்கு நடக்கும் எதுவும் தெரியாது. அவளுக்கு இன்று வரை சாந்தினி சரோகேட் என்று கூட தெரியாது தான். அவள் நினைத்து கொண்டு இருந்தது என்னவோ, பிள்ளைகள் அவளை அன்னை என்று கூறுகிறார்கள்.



ஆதர்ஷின் மனைவி இறந்து விட்டாள் என்று அறிந்து கொண்டாள்.



அவள் ஆதர்ஷ் மற்றும் சாந்தினி காதலிக்கிறார்கள் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறாள்.



"சார் பசங்க பார்த் டே பார்ட்டி வந்துட்டு எதுக்கு இவளோ சவுண்ட்... வந்திங்களா ஜாலியா என்ஜோய் பண்ணிட்டு போங்க", என்று வந்தது ஒரு குரல்.



அங்கே அர்னவ்வின் நண்பன் வருண் தான் நின்று கொண்டு இருந்தான்.



"அதானே பாவம் பசங்க இரண்டு பேறும் வெயிட் பன்றாங்க", என்று அங்கிருந்த ஒரு பெண்மணி சொல்லவும், மற்றவர்களும் அமைதி ஆகி விட்டனர்.



"தேங்க்ஸ் டா சேவ் பண்ணிட்ட", என்று அர்னவ் அவனை பார்த்து கூறினான்.



"இவரு யாரு?", என்று தாரணி கேட்கவும், "ஹாய் பப்லி", என்று தாரணியிடம் அவன் பேசவும், "டேய் அவ பேரு தாரணி", என்று அர்னவ் சொல்லவும், "சோ வாட் எனக்கு பப்லி தான்", என்று கண்சிமிட்டவும், தாரணியில் கன்னங்கள் சிவந்து விட்டது.



"போதும் டா ரொம்ப வழியாத", என்று அர்னவ் சொல்லவும், "டேய் என் தங்கச்சி மாறி டா", என்றவுடன் தான் விட்டான்.



பின்பு அனைவரும் அவர்களுக்கு பிறந்த நாள் பாட்டு பாட, கேக்கை வெட்டினார்கள் பிள்ளைகள். லக்ஷித் சாந்தினிக்கும், லயனிக்கா ஆதர்ஷிற்கும் ஊட்டினார்கள்.



அந்த படத்தை எடுத்து ஆதர்ஷ் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தான் அர்னவ்.



பின்பு நால்வரும் அர்னவ் அருகே வரவும், "ஹாப்பி பார்த் டே பிரின்ஸ் அண்ட் பிரின்சஸ்", என்று அவர்களுக்கு வாழ்த்து கூறினான் வருண்.



"நீ வருண் தானா?", என்று கேட்டாள் சாந்தினி.



"ஹாய் மேம்! எஸ் அர்ஜுன் உங்கள பத்தி சொல்லிருக்காரு", என்று சொல்லவும், "உனக்கு தெரியுமா?", என்று ஆதர்ஷ் அவளை பார்க்க, "அர்ஜுன் பிஏ", என்று சொல்லி இருந்தாள்.



அர்ஜுன் தான் ஜானவியை கடத்தி இருந்தான் என்று அனைவரும் அறிந்த ஒன்று தானே!



ஆனால் வருணிடம் என்ன சொல்வது, "உங்கள பத்தி சார் சொல்லிருக்காரு மேம்", என்று சிரித்து இருந்தான்.



ஆணழகன் அவன்! அர்னவ்வின் உயரத்தில் சிவந்த நிறத்தில் கட்டுமஸ்தான தேகத்துடன் இருப்பவன்.



பெண்கள் அவனின் பின்னால் செல்வது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல!



"ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா", என்று தாரணி சொல்லவும், அவளுக்கு புன்னகையை பரிசாக கொடுத்தான்.



அப்போது தான் அங்கு வந்தார் பிரகாஷ்.



"என் பேர பிள்ளைங்களை என் கிட்ட கொடுத்திருங்க", என்று அவர் மீண்டும் வந்து நிற்கவும், "உங்களால என்ன முடியுமோ பண்ணிக்கோங்க ஆனா கண்டிப்பா நான் என் பசங்கள உங்களுக்கு தர மாட்டேன்", என்று உறுதியாக வந்தது ஆதர்ஷின் பதில்.



"நீங்க இவளோட கூத்து அடிக்கிறிங்க.. பிள்ளைங்களை யாரு கவனிப்பா?", என்று அவர் சீறவும், "உங்க பொண்ணு அடிச்சத விட கம்மியா தான் அடிக்கிறோம்", என்றவனை பார்த்து முறைத்து விட்டு சென்று விட்டார்.



"நீ பசங்கள பார்த்துக்கோ", என்று பிள்ளைகளை அவளிடம் விட்டுவிட்டு அர்னவ் மற்றும் வருண் உடன் சென்று இருந்தான்.



"சொல்லு அர்னவ்.. சார் இவன் தான் நான் சொன்ன பிரண்ட்", என்று அறிமுகம் செய்து வைத்தான்.



"இவனால பண்ண முடியுமா?", என்று கேட்கவும், 'சார் நீங்க கேட்ட எல்லா டீடெய்ல்ஸ் இதுல இருக்கு", என்று ஒரு கோப்பையை கொடுத்து இருந்தான் வருண்.



ஆதர்ஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் வேலையை முடித்து இருக்கிறானே.



"ஐ அம் இம்ப்ரெஸ்ட்", என்றவன் அவனுக்கு பேசிய தொகையை செக்காக கொடுத்து விட்டான்.



"தேங்க யு சார்.. அப்படியே இவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருங்க சார்.. எப்போ பாரு முனிவர் மாறியே முறிக்கிட்டு திரியுறான்', என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



வருண் மிகவும் கலகலப்பானவன். அர்னவ் சற்று கடுமையாக இருப்பவன்.



ஆனாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.



"ரொம்ப ஜாலியா பேசிட்டு போறான்", என்று ஆதர்ஷ் சொல்லவும், "ரொம்ப ஜாலியானவன் தான் சார்.. செம்மையா பிலர்ட் பண்ணுவான்", என்று அர்னவ் சொல்லவும், "இருந்தாலும் ஹி ஹஸ் எ சார்ம்", என்று முடித்து இருந்தான் ஆதர்ஷ்.



பின்பு வந்தவர்களை கவனிக்க சென்று இருந்தான்.



பாவம் சாந்தினி தான் ஆதர்ஷ் இல்லாமல் திண்டாடி விட்டாள்.



வந்தவர்கள் அனைவரும், "குழந்தைங்க மம்மினு கூப்பிட்றாங்க... அப்போ நீங்க தான் ஆதர்ஷ் வைப்பா? இல்ல லிவ் இன்ல இருக்கீங்களா? லவ் பண்றிங்களா?", என்று கேள்வி அம்புகளை தொடுத்து ஒரு வழி ஆக்கி விட்டார்கள்.



அவளும் எப்படியோ சிரித்து, அது இது வென்று சொல்லி சமாளித்து கொண்டிருந்தாள்.



ஆதர்ஷ் வர, ஓரளவு அவனும் சமாளித்து கொண்டான்.



பிள்ளைகளின் பிறந்த நாள் விழா இனிதாக நிறைவடைந்தது.



அர்னவ் அனுப்பிய புகைப்படத்தை வைத்து பார்த்து கொண்டிருந்தார் வைஷ்ணவி.



"என்ன பார்த்துகிட்டு இருக்க?", என்ற விக்ரமனிடம், "சாந்தினியே ஆதார்ஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்ல இருக்கும்", என்றவுடன், "ம்கூம் அவ தங்கச்சிய முதல்ல ஏத்துக்கோ அப்புறம் சாந்தினிக்கு போவோம்", என்று சொல்லி இருந்தார்.



இதே சமயம், வருண் கொடுத்த கோப்பையை படிக்க துவங்கி இருந்தான் ஆதர்ஷ்.

அத்தியாயம் 15



கோப்பையை முழுமையாக படித்தவனுக்கு ஆயிரம் கேள்விகள்.



தலையை பிய்த்து கொள்ளலாமா என்று இருந்தது. வருணிற்கு அழைத்து இருந்தான்.



"சொல்லுங்க சார்", என்றவனிடம், "எப்படி வருண், சுப்ரியா அம்மா பாடி கிடைக்கவே இல்லையா?", என்று அவன் அதிர்ச்சியாக கேட்கவும், "அப்படி தான் சார் மிஸ்டர் பிரகாஷ் கொடுத்த வாக்கு மூலத்துல இருக்கு", என்று சொன்னான்.



"ஓகே", என்று சொல்லி வைத்து விட்டான்.



அவனுக்கு கடுப்பாக இருந்தது. எங்கே ஆரம்பித்தானோ அங்கேயே வந்து நின்றது போல் தோன்றியது.



பின்பு அதை ஒதுக்கி வைத்தவன், வேலையில் கவனம் செலுத்த துவங்கினான்.



சில வாரம் கழித்து தான் அமெரிக்கா சென்று வந்தார்கள். சிவம் தான் அழைத்து இருந்தான்.



அதற்கு பிறகு வந்த ஒரே வாரத்தில் தான் தளிர் மற்றும் ஆருஷ் வர அவர்களின் திருமணம் நடந்தது.



அன்றைய நாள் சாந்தினி அவனை வைத்து செய்து விட்டாள்.



"உங்க தம்பி இருக்கானே...", என்று ஆரம்பித்தவள், அவனையும் சேர்த்து கிழித்து தொங்கவிட்டு இருந்தாள்.



பின்பு சென்னை திரும்பியவர்கள் வாழ்க்கை அப்படியே தான் போய் கொண்டு இருந்தது.



அப்போது தான் ஒரு நாள், லக்ஷித் லயனிக்கா பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது.



அப்போது சாந்தினியும் அவனுடன் தான் இருந்தாள்.



ஏனோ இம்முறை அவளையும் அழைத்து செல்ல தோன்றியது.



"நீயும் வரியா?", என்று வாய் விட்டே கேட்டு இருந்தான் ஆதர்ஷ்.



அவளும் ஆமோதிப்பாக தலையசைக்க, இருவரும் பள்ளிக்கு போயினர்.



அங்கே அதே பெண்மணி தான் இருந்தார்.



"அம்மா இல்லாம வளர்ந்தா இப்படி தான் தறிகெட்டு திரியுங்க பசங்க.. என் பையன தள்ளி விட்டு இருக்கா உங்க பையன்", என்று அவர் பேசிக்கொண்டே செல்ல, "என்ன ஆச்சு லக்ஷித்?", என்று அவனது உயரத்திற்கு அமர்ந்து கேட்டாள் சாந்தினி.



"அவன் லயுவை மம்மி இல்லதவனு சொல்லி கிண்டல் பண்ணிகிட்டே இருந்தான். அவளோட போனி டைல்ல இழுத்து விட்டான். அதான் தள்ளி விட்டுட்டேன்", என்று பாவமாக சொல்லவும், "இப்படி பண்ணலாமா? நீ அவன் இந்த மாதிரி பண்ணா மிஸ் கிட்ட தானே சொல்லணும்", என்று சாந்தினி சொல்லவும், அவன் தலைகவிழ்ந்து கொண்டான்.



அந்த பெண்மணி விடுவதாக இல்லை, "அதெல்லாம் அம்மா இருந்தா சொல்லி கொடுத்து இருப்பா", என்கவும், "அதான் சொல்லி கொடுத்துட்டு இருக்கேன்ல", என்று கர்ஜித்து இருந்தாள் சாந்தினி.



"இன்னைக்கு இந்த பொம்பளைக்கு சாவு தான்... நம்ப வேடிக்கை பார்ப்போம்... ஜான்சி ராணி இன்னைக்கு ஜாஸ் ஆட போறா", என்று நினைத்து கொண்டு நடப்பதை அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தான் ஆதர்ஷ்.



"நீங்க யாரு?", என்று அந்த பெண்மணி எகிறிக்கொண்டு வர, "இவங்கள பெத்த அம்மா", என்கவும், "என்ன விளையாடறிங்களா? இவங்களுக்கு தான் அம்மாவே இல்லையே", என்றவுடன், "அம்மா இல்லமா எப்படி குழந்தைங்க பிறப்பாங்க?", என்று கேட்கவும், ஆதர்ஷ் சிரித்து விட்டான்.



"என்ன காமெடி பண்றிங்களா? அவங்க டாடி கூட தான் இருக்காங்கனு சொன்னாங்க", என்று சொல்லவும், "இப்போ மம்மியும் இருக்கேன்.. சரி சொல்லுங்க நீங்க உங்க மகனுக்கு என்ன அப்படி சொல்லி கொடுத்து கிழிச்சீங்க?", என்றவுடன் அந்த பெண்மணிக்கு கொஞ்சம் பயம் எடுக்க துவங்கியது தான்.



ஆதர்ஷ் பேச மாட்டான். ஆனால் சாந்தினி அப்படி கிடையாதே!



"இப்படி தான் கிளசஸ்ல கூட படிக்கிற பொண்ணுங்க தலை முடியில கை வைப்பானா? இது தான் நீங்க உங்க மகனை வளர்க்குற லட்சணமா? சரி அம்மா இல்லனு வச்சிக்கோங்க.. பசங்களுக்கு கரிசனயா இருக்க சொல்லிதரனும், இப்படி கலாய்க்க சொல்லி தர கூடாது... நான் யார் கிட்ட இதெல்லாம் சொல்றேன் பாருங்க.. உங்களுக்கென மெனெர்ஸ்க்கு ஏ பி சி கூட தெரியாத உங்க கிட்ட வேற என்ன எக்ஸ்பெக்ட் பண்ண முடியும்?", என்று கையை கட்டி கொண்டு அவள் கேட்கவும், அந்த பெண்மணிக்கு கோவம் வந்து விட்டது.



"நீ இப்படி இருக்கறதுனால தான் உன் பிள்ளைகளும் இப்படியே இருக்கு", என்று அவர் பேசவும், "நீங்க இப்படி மரியாதை தெரியாம இருக்கறதுனால தான் உங்க மகனும் இப்படி இருக்கான்", என்று சளைக்காமல் அவள் பேசும் போதே, அந்த பெண்மணியின் கணவன் உள்ளே நுழைந்து இருந்தான்.



"ஆதர்ஷ் சார்", என்று அவன் சொல்லவும், "ஹலோ", என்று அவனிடம் கையை குலுக்கியவன், எல்லா விடயங்களையும் கேட்டறிந்தான்.



"ஐ அம் ரியலி சாரி சார்", என்றவனை பார்த்து, "என்னங்க நீங்க ஏன் சாரி கேக்குறீங்க?", என்ற பெண்மணியிடம், "நீ வாய மூடு டி.. தேஜ் சாரி கேளு", என்று அவன் மகனை பார்த்து சொல்லவும், "சாரி", என்று அவனும் இரு பிள்ளைகளிடமும் சொல்லி இருந்தான்.



"சாரி சார்", என்றவுடன், "உங்க வைப் ரொம்ப பேசுறாங்க... அடுத்த தடவ பேசுனாங்கனா நான் சும்மா இருக்க மாட்டேன்.. நான் இருதாலும் சாந்தினி சும்மா கண்டிப்பா இருக்க மாட்டா", என்று அவன் சொல்லவும், அந்த நபருக்கு தான் பயம்.



"அடுத்த தடவை அப்படி ஆகம நான் பார்த்துக்குறேன்", என்று உறுதி அளித்து விட்டு சென்று இருந்தார் அந்த நபர்.



பிள்ளைகளிடம் சில அறிவுகளை கூறி விட்டு தான் சாந்தினியும் ஆதர்ஷ் இருவரும் விட்டனர்.



இதே சமயம், "இன்னைக்கு ஹோட்டல் போலாம் டாடி", என்று இரு பிள்ளைகளும் சொல்ல, ஆதர்ஷ் இரு பிள்ளைகளையும் சாந்தினி, அர்னவ் மற்றும் தாராணியை அழைத்து கொண்டு தான் சென்றான்.



சாப்பிட்டு முடித்து வரும் நேரம் யாரோ ஒரு பெண்மணி ஓடிக்கொண்டு வருவது போல் இருக்க, அவன் பிரேக் அடித்து நிறுத்தவும், அந்த பெண்மணி மயங்கி சரிந்து இருந்தார்.



ஆதர்ஷ் காரை விட்டு வெளிய வர, அந்த பெண்மணி யார் என்று பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது.



"மிஸஸ் பிரகாஷ்", என்று அவனின் உதடுகள் முணுமுணுக்க, உடனே அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.



அவனை மருத்துவமனையில் அட்மிட் செய்தவன், "அர்னவ் நீ இவங்க எல்லாரையும் ட்ரோப் பன்னிட்டு வா", என்றவன் சாந்தினியை பார்த்து, "பசங்க இன்னைக்கு உன் கூட இருக்கட்டும்", என்று சொல்லி இருந்தான்.



அவளும் தலையாட்ட அவர்கள் அனைவரும் புறப்பட்டனர்.



இதே சமயம், அங்கு வந்த தாதி ஒருவர், "சார் இந்த டைரி ஒன்னு கவர் ஆகி இருந்தது. அவங்க புடவைக்குள்ள சொருகி வச்சி இருந்தாங்க", என்று சொல்லவும், கவருடன் கொடுத்து விட்டு சென்று இருந்தார்.



அவனும் கவரை பிரித்து, டைரியை பார்த்தவன், அந்த டைரியை பிரித்து படிக்க ஆரம்பித்து இருந்தான்.



டைரி திறக்கவும், மர்ம முடிச்சிக்குகளும் அவிழுமோ?
 

அத்தியாயம் 16



செல்வ செழிப்பில் வளர்ந்தவள் அவள், ஆனால் அவளது தந்தை பிரகாஷ் உடைய சொத்துக்கள் அல்ல, அனைத்தும் அவளது அன்னை லீலா உடையது.



அவரை திருமணம் செய்து கொண்டதால் தான் இந்த சொத்துக்கள் அனைத்தும் பிரகாஷிற்கு உரியது ஆகி விட்டது.



முதன்முதலில் அவள் ஆதர்ஷனை பார்த்தது ஹார்வர்டில் தான். அவளின் நெருங்கிய நண்பன் அவன், அவனிடம் மட்டும் தான் உரிமையுடன் பேசுவாள். அவளின் அன்னை இறந்து இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது.



அவர்களின் பிணம் கூட கிடைக்கவில்லை. மலை உச்சியில் இருந்து கார் விழுந்ததால் தான் இந்த நிலைமை.



தனிமையிலேயே வளர்ந்தவள் அவள், அவளிற்கு என்று கிடைத்த முதல் நண்பன் ஆதர்ஷ் தான்.



குறும்பும் கூத்துமாய் இருந்தது அவர்களின் கல்லூரி வாழ்க்கை.



என்னத்தான் அவள் அவனுக்கு நெருங்கிய தோழியாய் இருந்தாலும், அவளை விட அவனிற்கு நெருக்கமானவன் ஒருவன் இருந்தான்.



அவனை காணும்போதெல்லாம் பொறாமை பொங்கும்.



"உனக்கு என்ன விட அவனை தான் பிடிக்கும்ல?", என்று சுப்ரியா சிறுபிள்ளை போல கேட்கவும், அவனும் அடிக்கடி சிரித்து கொள்வான்.



"ஏன் இப்படி பொறாமைல பொங்குற?", என்றவனை பார்த்து, "ஹலோ பொறாமைலாம் இல்ல சும்மா கேக்குறது தான்", என்று தோளை உலுக்கும் போதே வந்து சேர்ந்தான் அவனின் ஆருயிர் நண்பன்.



"கிளாஸ் போலாமா?", என்றவனை பார்த்து, "போலாம் டா நல்லவனே", என்று ஆதர்ஷ் அவனை அழைத்து கொண்டு செல்லவும், "விட்டா என்ன கொன்னுடுவா போல", என்றவுடன் சிரித்து இருந்தான் ஆதர்ஷ்.



"டேய் உன் தங்கச்சிய எனக்கு இன்ட்ரோ கொடு டா", என்ற நண்பனை பார்த்து, "நீ உன் தங்கச்சி போட்டோவை கூட காட்ட மாட்டேங்குற நான் மட்டும் என் தங்கச்சிய இன்ட்ரோ பண்ணனுமா?", என்று ஆதர்ஷ் கேட்கவும், "போடா போடா.. ஒரு நாள் உன் தங்கச்சிய கரெக்ட் பண்ணி காட்றேன்", என்றவனுக்கு புன்னகையை மட்டும் பதிலாக அளித்து இருந்தான்.



எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. ஆதர்ஷனுக்கு அவன் தனியாக தொழில் துவங்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது.



"ஈக்கோ பிரென்ட்லியா ஏதாச்சு புட் இண்டஸ்ட்ரி தொடக்கணும் டா", என்றான்.



அவனது நண்பனும், "கண்டிப்பா தொடங்கு... அதுக்கான எல்லா ரா மெட்ரியல்லும் நான் தரேன் டா", என்று முடித்து இருந்தான்.



எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்த தருணம், சுப்ரியாவிற்கும் ஆதர்ஷனின் நண்பனுக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.



சுப்ரியாவோ, "அவன் என்ன ரொம்ப கேவலமா பேசுறான் ஆதர்ஷ்", என்று பொய் தான் உரைத்து இருந்தாள்.



ஆனால் அது பொய் என்று அவளுக்கே தெரியாது. ஏனென்றால் அவளை அப்படி பேசியது வேறு ஒரு மாணவன். அவன் தான் ஆதர்ஷனின் நண்பனை கோர்த்து விட்டு இருந்தான்.



ஆதர்ஷ் நம்பவே இல்லை. ஆனால் அவனின் கண்முன் அவள் அழுவதையும் பார்க்க முடியவில்லை.



"டேய் ஒரு சாரி சொல்லு டா நான் பார்த்துக்குறேன்", என்று ஆதர்ஷ் சொல்லவும், அவனோ ரோஷக்காரன், "முடியவே முடியாது", என்று ஒற்றை காலில் நிற்க, இப்படியே வாக்கு வாதம் நீண்டு விட்டது.



அவர்களுக்கு பிரச்சனையை சுலபமாக தீர்க்கும் வழியும் அந்த வயதில் தெரிந்து இருக்க வில்லை.



அவனின் நண்பனுக்கோ ஆத்திரம்.



"என்ன நம்பாம இவ பின்னாடி போகுற தானே, ஒரு நாள் உன்னையும் அவ இதே மாறி நிக்க வைப்பா அன்னைக்கு தெரியும் டா", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



ஆதர்ஷிற்கு தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை, ஒரு பக்கம் சுப்ரியா மறு பக்கம் அவன்!



சுப்ரியாவிற்காக யாரும் இல்லை, ஆனால் அவனின் நண்பன் சமாளித்து கொள்வான் என்கிற நம்பிக்கை.



அவனின் தம்பிகள் மற்றும் சிவமிற்கு அடுத்து அவனுடன் மிக மிக நெருங்கி இருந்தவன் அவன் தான். அவன் போனதும் அவனின் சிரிப்பு கொஞ்சம் குறைந்தது தான். மீண்டும் அவன் நேரம் தானாக அவனின் மனது மலரப்போவதை அப்போது ஆதர்ஷ் அறியவில்லை.



அனைத்தும் முடிந்து கல்லூரி முடியும் சமயம் கூட, இருவரும் பேசிக்கொள்ளவில்லை.



சுப்ரியாவிற்கே குற்ற உணர்ச்சியாக இருந்தது.



"நான் வேணா அவன் கிட்ட பேசட்டுமா? எல்லாம் என் தப்பு தான்", என்று அவள் சொன்னபோதும் ஆதர்ஷ் தான் மறுத்து விட்டான்.



அடுத்து அவர்கள் இந்தியா வந்ததும் தான் இருவரும் இந்த ஈக்கோ பிளேட் நிறுவனத்தை நிறுவி இருந்தார்கள்.



சுப்ரியாவும் ஆதர்ஷனை காதலிக்க துவங்கி இருந்தாள். ஆனால் அவளுக்கு அவளின் நட்பை முறித்து கொள்ளும் எண்ணம் இல்லை.



இப்படியான நேரத்தில் தான் அவளின் தந்தை அவளை அழைத்து இருந்தார்.



"சொல்லுங்க டாடி", என்று அவள் துள்ளி குதித்து கொண்டு அவரை அணைக்கவும், அவரும் அன்பாக அணைத்து விடுவித்து இருந்தார்.



"நீ ஆதர்ஷ் கிட்ட உன் லவ்வ சொல்லிட்டியா சுப்ரியா?", என்று அவர் நேரடியாக கேட்கவும், "ட.. டாடி", என்று தயங்கி நின்றவளை பார்த்து, "எனக்கு தெரியும் சுப்ரியா? உங்க கம்பெனி முதல் அனிவர்சரி வருதுல அன்னைக்கே நீ என் ப்ரொபோஸ் பண்ண கூடாது", என்று அவர் கேட்கவும், அவளுக்கோ தயக்கம்.



"இல்ல டாடி செட் ஆகாது. லவ் பண்ணது உண்மை தான். ஆனா ஆதர்ஷ் டீசெர்வ்ஸ் பெட்டெர். நான் அவனுக்கு லைஃப் லோங் பிரென்ட்டா இருந்தா போதும்", என்றவளை பார்த்து, "உன்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியுமா?", என்று கேட்கவும், "இப்பவே முடியாது டாடி ஆனா கண்டிப்பா இன்னும் இரண்டு மூணு வருஷத்துல பண்ணிப்பேன்... மாற்றம் ஒன்று தானே மாறாதது", என்று வெகுளியாக பேசி கொண்டு இருந்தாள்.



இப்போது தான் பிரகாஷின் உண்மையான முகம் வெளிப்பட துவங்கியது.



"நீ ஆதர்ஷ் கூட கல்யாணம் பண்ணி வாழ்ந்தா நல்லா இருக்கும்", என்றவரின் குரல் மாறியது.



"டாடி எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல", என்றவளை பார்த்தவரின் கண்கள் சிவந்தன.



"ஐ டோன்ட் கேர்! நீ அவனை மயக்குவியோ அவன் கூட படுப்பியோ, எப்படியாச்சு அவனை கல்யாணம் பண்ற வழிய பாரு", என்றவுடன் அதிர்ந்து விட்டாள்.



"டாடி என்ன சொல்றிங்க?", என்று அவளின் குரல் உயரவும், அவரின் சுயரூபம் வெளியே வந்து விட்டது.



"யாரு டி உனக்கு டாடி? உன் அம்மா எவனுக்கோ உன்ன பெத்துட்டு வந்துட்டா... அதனால தான் அவளை நானே ஆக்சிடென்ட் பண்ணிட்டேன்.. ஆனாலும் பாரு அவளுக்கு ஆயுசு கெட்டி... பொழச்சிகிட்டா", என்றவுடன் அவளுக்கு இதயமே நின்று துடிக்க ஆரம்பித்தது.



"ஏ.. என்ன சொல்றிங்க? அம்மா சாகலையா?", என்றவளின் கையை பிடித்தவர், தரதரவென்று அந்த வீட்டின் பேஸ்மென்ட்டிற்கு அழைத்து சென்றார்.



இன்று வரை யாரும் அங்கு வந்ததில்லை.



அங்கு அவளின் தாய் உயிர் இருந்து உயிர் அற்ற சடலமாக கிடந்தார்.



பார்த்தவள் கண்களில் நீர் தேங்கி விட்டது.



"அம்மா", என்று ஓடிச்சென்று அவளின் தாயை அணைத்து கொண்டாள்.



கதறி அழுதாள். ஆனால் அவளின் தாயிடம் ஒரு அசைவும் இல்லை.



"உன் அம்மா கோமாவுல இருக்கா... நான் சொல்றத கேட்டா உன் அம்மா உயிரோட இருப்பா... அது மட்டும் இல்லமா...", என்று நிறுத்தியவன் சொன்ன விடயத்தை கேட்டு அவளின் உள்ளம் இரண்டாய் பிளந்து விட்டது.

அத்தியாயம் 17



"உன்னோட நியூட் விடியோஸ் வச்சிருக்கேன்... அதையும் நெட்ல போட்டு விடட்டுமா?", என்று கேட்கவும், அவள் அதிர்ந்து விட்டாள்.



"என்ன சொல்றிங்க? நான் உங்க பொண்ணு", என்று அவளின் குரல் தழுதழுவும், "யாரு யாருக்கு டி பொண்ணு? உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா? உன் அம்மா ஒருத்தனை லவ் பண்ணா... நான் இவ வீட்ல டிரைவர்ரா இருந்தேன். இவ லவ் பண்ற பையன எனக்கு தெரியும். ஆனா பாரேன், உன் அம்மா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னமே அம்மாவாகிட்டா... நானே இந்த கையாள உன் அப்பாவ கொன்னுட்டேன். கொல்ல சொன்னது உன் தாத்தா தான். அதுக்கு கைமாறா தான் அவரோட பொண்ணையே எனக்கு கட்டி வச்சாரு. நானும் நல்லவன் மாறியே நடிச்சேன். உன் அம்மா எனக்கு ஒரு குழந்தையை பெத்து தர மாட்டேன்னு சொல்லிட்டா.. அதான் அவளுக்கு தெரியாம வேற ஒரு பொண்ண வச்சிக்கிட்டேன். ஆனா அவ நியாயமானவ, அவளுக்கு எனக்கு முன்னமே கல்யாணம் ஆனது தெரிஞ்சு அவ வேற ஒரு ஊருக்கு போய்ட்டா.. என் மகனை கூட நான் பார்க்கல... எனக்கு சொத்து இருந்தா போதும்னு தோணுச்சு.. நீயும் வளந்த... இப்போ எனக்கு இருக்குற பணம் பத்தலை... பதவியும் இருந்தா நல்லா இருக்கும்ல... ருத்ரன் வீட்டு சம்மந்தினு எனக்கு பேரு வேணும்", என்று ஈவு இரக்கம் இல்லாமல் பேசினான் அந்த அரக்கன்.



"எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க?", என்று அவளின் குரல் கம்மியது.



"ஏனா உன் அம்மா எல்லா சொத்தையும் உன் குழந்தைங்க பேருல எழுதி வச்சிருக்கா", என்றவனை பார்த்து, "இப்போ சொத்து தான் பிரச்சனையா?", என்று கேட்கவும், ஆமாம் என்று தலை அசைத்தவனின் இதழில் வன்ம புன்னகை.



"ஆதர்ஷ் கிட்ட சொல்லலாம்னு யோசிக்காத, அவன் ஏதாச்சு பண்றதுக்கு முன்னாடி உன் அம்மா பரலோகம் போயிருவாங்க...உன் மானம் காத்துல போயிரும்', என்று மிரட்டினான்.



வெகுளியாக வளர்ந்த பென்னவளுக்கு இதெல்லாம் புதிதாக தெரிந்தது. அலுவலத்தில் கூட அவள் நன்றாக தான் எல்லாரிடமும் பேசுவாள்.



அவளுக்கு வேறு வழி இல்லை. செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.



"இப்போ.. இப்போ நான் என்ன செய்யணும்?", என்று கேட்க, பிரகாஷின் அறிவுரையின் பெயரில் தான் அந்த ஹோட்டலில் ஆதர்ஷனை தங்க வைத்தது.



"இப்போ போய் நீ அவன் கூட நியூடா இருக்கனும்", என்கவும், அவளுக்கு தூக்கி வாரி போட்டது.



"ஹே நான் ஒன்னும் உன்ன அவன் கூட இருக்க சொல்லல, சும்மா டிரஸ் இல்லமா படுக்க தான் சொல்றேன். ஆதர்ஷ் உன் கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த பிளான் சொல்றேன்", என்றதும் தலையாட்டி சென்று விட்டாள்.



இப்போது அவளுக்கு அவனின் மீது காதல் கூட இல்லை. அவளின் அன்னையை கைப்பற்றினால் போதும் என்கிற மனநிலை தான்.



சிறுவயதில் இருந்தே அவளை பேட்டி பாம்பாய் அடக்கி வைத்து விட்டு இருந்தான் அந்த கயவன்.



அவளின் அன்னைக்கு இதெல்லாம் அவளின் மீது கொண்ட பாசமாக தான் தெரிந்தது. அப்படி ஒரு ஆஸ்க்கார் விருது வாங்கும் நடிப்பு.



அவளின் உடல் கூசியது. ஆதர்ஷ் உடன் ஒரே கட்டிலில் அதுவும் பிறந்த மேனியில், நினைக்க நினைக்க அவளின் உடல் தகித்தது. மறித்து விடலாமா என்று கூட நினைத்தாள். ஈன்றவளின் முகம் நினைவு வர, அடக்கி கொண்டாள்.



நண்பனுக்கு துரோகம் செய்ய துணிந்து விட்டாள்.



அவளுக்கு கடவுள் நிச்சயம் தக்க தண்டனை கொடுப்பார் என்று மனதில் நினைத்து கொண்டாள்.



அடுத்த நாள் விடிய அனைத்தும் பிரகாஷ் நினைத்தது போலவே நடந்தது.



ஒரு வருடம் ஆகியும் அவளை ஆதர்ஷ் நெருங்க வில்லை. அவளின் நண்பனாக அவனை மெச்சினாள்.



"ஆதர்ஷ்க்கு நல்ல பொண்ணா லைஃப் பார்ட்னர் வரணும்", என்று சில நேரங்களில் எண்ணி கொண்டாள்.



அவன் உனது கணவன் என்று ஒரு மனது வாதாடும், மற்றொரு மனமோ தாலியே இல்லயாம் கணவன் எங்கிருந்து என்று எடுத்துரைக்கும்.



பிரகாஷ் அடுத்த கட்ட தாக்குதலுக்கு தாயாராகினார்.



"குழந்தை பெத்துக்கோ", என்று அவளின் தலையில் அடுத்த இடியாய் இறக்கி இருந்தார்.



"நானும் அவனும் ஒண்ணா கூட இல்ல", என்று அவள் பற்களை கடித்து கொண்டு சொல்லவும், அவரோ, "எனக்கு அதெல்லாம் தெரியாது... சரோகசி ட்ரை பண்ணு", என்று எகத்தாலாமாய் அவர் பதிலளிக்க அவளுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.



"என்ன சொல்றிங்க?', என்று அவள் வினவ, ஒரு கவலையும் இல்லமால், "இங்க பாரு அவன் உன்ன நெருங்க போறதே இல்ல, அப்புறம் எப்படி குழந்தை வரும்? அதனால நீ சரோகசி ட்ரை பண்ணு", என்று அவர் சொல்லவும், அவளுக்கு அடுத்த அதிர்ச்சி அங்கே தான் காத்து கொண்டு இருந்தது.



அவள் அடுத்து ஆதரிஷிடம் சென்று பேசி எப்படியோ சம்மதம் வாங்க, அவளின் கருப்பையை சோதனை செய்தவர்கள், அடுத்த குண்டை அவளின் தலையில் போட்டு இருந்தனர்.



'உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கு', என்றதும் அவளுக்கு உலகமே தலைகீழாக நின்ற உணர்வு.



அந்த ரிப்போர்ட்டை கையில் வாங்கிய அவளின் கைகளில் நடுக்கம், ஒரு பக்கம் அவள் சாகப்போகிறாள் என்று தெரிந்து கொண்டாள். மறுபக்கம் அவளின் அன்னையின் உயிர், இதை எல்லாம் விட, ஆதர்ஷ்க்கு அவள் செய்த துரோகம் அனைத்தும் கண் முன் வந்து சென்றது.



பிரகாஷின் கண்முன் வந்து நின்று, "எனக்கு கான்செர்", என்று சொன்னதும், அவன் மனிதப்பிறவியாக இருந்தால் தானே இரக்கம் இருக்கும், பணப்பேய்க்கு எப்படி இருக்கும்?



'ஓஹ் சரி வேற சரோகேட் பாரு அவன் கிட்ட ஏதாச்சு கதை சொல்லு", என்றவுடன், "நீங்க மனுஷன் தானா?", என்று கேட்டே விட்டாள்.



"நான் எப்போ சொன்னேன் மனுஷன்னு? போ போய் சரோகேட் தேடு", என்று அவன் சொல்லவும், உணர்ச்சியே இல்லாமல் தான் வீட்டிற்கு அன்று வந்து இருந்தாள்.



அவளின் இதயம் வலித்தது. அவளுக்காக கண்ணீர் சிந்த யாருமே இல்லை, தனித்து விட பட்டது போல் உணர்ந்தாள்.



அவள் உண்மையை சொன்னால் கூட நிச்சயமாக பிரகாஷ் ஏதாவது செய்து சமாளித்து விடுவார் என்று தெரியும். அவளே ஆதரிஷிடம் சொல்லி இருக்கிறாள், அவளின் தந்தையின் உயிர் அவள் என்று, பின்பு எப்படி அவன் கூட நம்புவான்.



"என்னால தான் அவனுக்கு ஒரு சந்தோஷம் தர முடியல, அடலீஸ்ட் என் மூலமா அவனுக்கு நல்ல பொண்ணு கிடைச்சு அவன் சந்தோஷமா இருக்கட்டும்", என்று நினைத்து கொண்டாள்.



தீவிரமாக சரோகேட் தேட ஆரம்பித்தாள்.



அவள் கெட்ட நேரம், யாரும் அவளுக்கு தென்பட வில்லை.



அப்போது தான் அந்த குரல் அவளுக்கு கேட்டது.



"ப்ளீஸ் டாக்டர் ப்ளீஸ்... நான் என்ன வேணா பண்றேன்.. என் தங்கச்சிய காப்பாத்துங்க", என்று கெஞ்சி கொண்டு இருந்தது அந்த குரல்.



அவளும் அந்த குரலை நோக்கி சென்றாள். அந்த குரலுக்கு உரியவளை பார்த்ததும் முடிவு செய்து விட்டால், இவள் தான் ஆதர்ஷின் தர்மபத்தினியாக காத்து இருக்கிறாள் என்று!
 

அத்தியாயம் 18



சாந்தினி தான் நின்று இருந்தாள். அவளின் தங்கைக்காக கெஞ்சி கொண்டு இருந்தாள்.



அவளின் அருகே சென்றவள், "என்ன ஆச்சு?", என்று கேட்கவும், "மேடம் என் தங்கச்சிக்கு ஆக்சிடென்ட்.. எனக்குன்னு இருக்குற ஒரே சொந்தம் அவ தான்.. அவளுக்கு ஒரு ஆபரேஷன் பண்ணனும்... அதுக்கு முப்பத்து லட்சம் ஆகும்னு சொல்ராங்க", என்று அழுது கொண்டே சொன்னவளை பார்த்து, அவளுக்கே பாவமாக இருந்தது.



அப்போது இருந்த சாந்தினி ஒன்றும் தைரியசாலி எல்லாம் இல்லை. சாதாரண பெண் தான். சாதாரண குடும்பத்தில் பிறந்து, அன்னை தந்தையை சிறு வயதில் பறி கொடுத்தவர்கள் அவளும் தளிரும். எப்படியோ படிப்பை மட்டும் இருவரும் விடவே இல்லை.



இருவருமே அவர்களின் நிலையை உணர்ந்து படித்தார்கள். அதுவும் அவர்களுக்கு முழு ஸ்கொலர்ஷிப் கிடைத்தது. சாந்தினி ஒரு சிறு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தளிர் இதே சமயம் அவளின் படிப்பை முடித்து வேலை செய்ய துவங்கிய தருணம் அது!



அப்போது தான் அவளுக்கு இந்த ஆக்சிடென்ட் நடந்தது.



அவளின் இஷானாவும் அப்போது ஊரில் இல்லை. ஆறு மாதம் அவள் இன்டெர்ன்ஷிப் செய்ய வேறொரு இடத்திற்கு சென்று இருந்தாள். இருந்து இருந்தால் இப்படி அவள் கெஞ்சி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.



ஆனால் அவளுக்கு இஷானாவின் போன் நம்பர் கூட தெரியாது.



நல்ல பெண் அவள், இப்படி கெஞ்சி கொண்டு இருந்தாள்.



அவளின் வாழ்க்கையில் தான் எத்தனை சோதனை. பிறந்ததில் இருந்தே கடவுள் அவளுக்கு மகிழ்ச்சி என்கிற ஒன்றை கண்ணில் காட்டியது கூட இல்லை. அவளுக்கு என்று இருக்கும் ஒரே ஒரு மனநிம்மதி அவளின் தங்கை தளிர் மட்டுமே!



அவளையும் இப்போது அவளிடம் இருந்து பிரிக்க நினைத்து விட்டது போல் அவளுக்கு தோன்றியது.



சுப்ரியாவிற்கு சட்டென மின்னல் வெட்டியது.



"உனக்கு பணம் நான் தரேன்.. முப்பது லட்சம் என்ன ஒரு கோடி தரேன்.. ஆனா..", என்று அவள் தயங்கி நிற்க, சாந்தினிக்கு அவள் பணம் தருகிறேன் என்று அப்போது சொன்னதே பெரியவிடயமாக தெரிந்தது. இதில் அவள் வேறு எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை.



"நீங்க என்ன சொன்னாலும் செய்றேன் மேடம்", என்று அவள் சொல்லவும், "என் புருஷன் குழந்தைங்களுக்கு சரோகேட்டா இருக்கனும்", என்றவுடன், சாந்தினி கொதித்து எழுந்து விட்டாள்.



"என்ன பேசுறீங்க? எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல... ச்சீ இதுக்கு தான் ஹெல்ப் பன்றேன்னு சொன்னிங்களா?", என்று அவள் பேசவும், "மிஸ் நீங்க யாரா வேணா இருங்க... நீங்க தான் ஹெல்ப் பண்ண சொன்னிங்க.. உங்களுக்கு பணம் வேணும்.. எனக்கு குழந்தைங்க", என்று அவள் சொல்லவும், சாந்தினிக்கும் இக்கட்டான நிலை.



அவளின் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்.



"நல்லா யோசிச்சு முடிவு சொல்லுங்க", என்று விட்டு அவள் நகர போக, "மேடம் உங்க தங்கச்சிக்கு இன்னைக்கு நைட் குள்ள ஒப்பரேஷன் பண்ணி ஆகணும்", என்று அந்த டாக்டர் சொல்லவும், அவளுக்கு யோசிக்க கூட நேரம் கிடைக்கவில்லை.



"நான் சரோகேட்டா இருக்கேன்", என்று சொல்லிருந்தாள் அவள்.



சுப்ரியாவின் கால் சட்டென நின்று விட்டது. அவள் ஒப்புக்கொள்வாள் என்று அவளும் தான் எதிர் பார்த்தாள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.



"என் தங்கச்சி ஆபரேஷன்", என்றவளை தடுத்து, "நீ சைன் பண்ண அடுத்த நிமிஷம் நான் உன் தங்கச்சி ஆபரேஷன்க்கு பீஸ் கட்டுறேன்", என்று முடித்து இருந்தாள்.



மின்னல் வேகத்தில் தேவையான அனைத்து பாத்திரங்களும் தயார் ஆகின.



அவளின் முன்பு அவள் கையெழுத்து இட வேண்டிய அனைத்து ஆவணங்களும் வைக்க பட்டு இருந்தன.



கையெழுத்து போடும் போதே அவளின் கைகள் நடுங்கின. இன்னும் திருமணம் ஆகவில்லை, தாம்பத்தியம் சுவைத்ததில்லை, தாயாக மாற காத்து இருக்கிறாள்.



ஒரு பக்கம் மனது வேண்டாம் என்றது, மறுபக்கம் அவளின் உயிரான தங்கையின் உயிர்!



கருவறையை விற்று அவளின் உடன் பிறந்தவளை காப்பற்ற துணிந்து விட்டாள்.



உலகம் அவளை என்னவெல்லாம் தூற்றும் என்று அவளுக்கு தெரியும், வெளியுலகம் அவளை வேசி என்று வசை பாடுவார்கள். ஆனால் அவளுக்கு தெரியுமே, அவள் இன்றும் சீதை என்று!



இன்று மட்டும் அல்ல, என்றுமே அவள் சீதை தான்.



"சாந்தினி உனக்கு வேண்டாம்னா நீ விலகிக்கலாம்", என்ற சுப்ரியாவின் குரலில் உயிர்பெற்றவள், "இல்ல நான் சைன் பண்றேன்", என்று அவளின் கருவறையை விற்று விட்டாள்.



சுப்ரியாவின் மனதோ, "நீ என்னைக்குமே சீதை தான் சாந்தினி, என் உயிர் போறத்துக்குள்ள நான் உன்ன ஆதர்ஷராம் கிட்ட கண்டிப்பா சேர்த்து அவன் கூட வாழ வச்சிரணும். அவனுக்குனு பிறந்த சீதை நீ தான்... கண்டிப்பா ஒரு நாள் அந்த ராமனின் உயிரான சீதையவள்னு எல்லாரும் சொல்லும் படி நீங்க வாழ தான் போறீங்க... அத நான் வானத்துல இருந்து பார்க்க தான் போறேன்", என்றவள் கண்களில் வரவிருக்கும் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்.



இப்படியாக தான் ஆதர்ஷின் குழந்தைகளை கருவில் சுமக்க துவங்கி இருந்தாள் சாந்தினி.



தளிர் கண் திறக்கவே, ஒரு மாதம் ஆகி விட்டது. அவளின் மொத்த மருத்துவ செலவுகளையும் ஏற்று கொண்டு இருந்தாள் சுப்ரியா.



தளிர் தேறி வர அடுத்து ஒரு மாதம் எடுக்க, அவளோ ஒரு நாள், "அக்கா பீஸ்லாம் எப்படி பெ பண்ற?", என்று கேட்டிருந்தாள்.



இப்போதைக்கு அவளிடம் எதுவும் சொல்லவேண்டாம் என்கிற மனநிலை தான்.



"அதெல்லாம் என் பாஸ் கொடுத்தாங்க", என்று ஏதேதோ சொல்லி சமாளித்து இருந்தாள்.



ஆனால் மறைத்து வைக்க கூடிய விடயமா இது, தெரியும் நாளும் வந்தது.



இரண்டு மாதங்கள் கழித்து தளிர் வீட்டில் இருக்கும் சமயம், சாந்தினியின் ரிபோர்ட்ஸை பார்த்து விட்டு இருந்தாள்.



அவளுக்கு தூக்கி வாரி போட்டது. ஆதி முதல் அந்தம் வரை பார்த்து விட்டு இருந்தாள்.



கண்களில் நீர் கரித்து கொண்டு வந்தது. தாயை விட ஒரு படி உயர்ந்து விட்டாள் அல்லவா சாந்தினி.



தங்கைக்காக எத்தனை தியாகங்கள் செய்து இருப்பாள். இப்போது ஒரு படி மேலே சென்று அதற்கும் மேல் செய்து விட்டு இருந்தாள். அவளின் வாழ்க்கையே இதற்கு மேல் கேள்வி குறியாகி விடுமே!



சாந்தினி குளித்து விட்டு வெளியே வரவும், "அக்கா", என்று அவளை ஓடிச்சென்று அழைத்து கொண்டவள், அழுது தீர்க்க, அவளின் கையில் இருந்த ரிபோர்ட்ஸை பார்த்தே அவள் எதற்காக அழுகிறாள் என்று உணர்ந்து கொண்டாள்.



"என்ன ரொம்ப கடன்காரி ஆக்குற... என்னால முடியல", என்றவளை ஒருவழியாக சமாதானம் செய்து தேற்றி எடுத்தாள்.



அப்போது தான் அவளுக்கும் அவள் ஒரு நிறுவனத்தை நிறுவினால் என்னவென்று தோன்றியது.



இதை பற்றி சுப்ரியாவிடம் பேசியவுடன், அவளும், "ரொம்ப நல்லது சாந்தினி, உனக்கு ஸ்டார்டிங் தேவையான எல்லா அமௌண்டும் நான் தரேன்" என்றவள் உதவி செய்ய, அவளும் அவளின் நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தாள்.



அதற்கான பிளான் அனைத்தையும் துவங்கி இருந்தாள் சாந்தினி.



இதே சமயம் சுப்ரியாவோ, அவளையும் ஆதர்ஷனையும் எப்படியாவது சந்திக்க வைக்க வேண்டும் என்று தவித்து கொண்டு இருந்தாள். அவளின் நாள் நெருங்குவதையும் உணர்ந்து கொண்டாள்.







அத்தியாயம் 19



அப்போது தான் அன்று சாந்தினி ஸ்கெனிற்கு வருவதை நினைத்து ஆதர்ஷனை அழைத்து இருந்தாள் சுப்ரியா. அவன் வரும் நேரம் என்று உணர்ந்து தான் மருத்துவரை அழைத்து கொண்டு பக்கத்து அறைக்கு சென்று விட்டு இருந்தாள்.



ஆனால் விதியின் சதியால் அன்று அவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை. அவன் அடுத்த அறைக்கு வரவும், "சரோகேட்ட பார்த்திங்களா?", என்று உற்சாகமாக கேட்டவளை பார்த்து, "இல்ல அவங்க ஸ்க்ரீன் பின்னாடி இருந்தாங்க", என்று சொல்லவும், அவளுக்கு தான் புஸ் என்று ஆகி போனது.



ஆனால் இதே சமயம் சாந்தினிக்கும் குழந்தைகளை சுமக்கும் ஆசை எட்டி பார்த்தது. அது அவளின் உதிரத்தில் உதித்த குழந்தைகள் தானே! அவளுடைய கருமுட்டையில் இருந்து வரவிருக்கும் இரு உயிர்கள், நினைக்கவே மேனி சிலிர்த்தது. குழந்தைகளை அவளே வைத்து கொண்டாள் என்னவென்றெல்லாம் சில நேரம் தோன்றும்.



குழந்தைகள் அசையவும் ஆரம்பித்து இருக்க, அடிக்கடி தடவிக்கொண்டே இருந்தாள்.



"என்ன அக்கா? உங்க பசங்க ரொம்ப ஆக்டிவா இருக்காங்க போல?", என்று தளிர் ஒரு சில நேரம் கிண்டல் செய்யவும், அவளிடம் விரக்தி புன்னகை. அவளின் குழந்தைகளா? ஈன்றவுடன் பிரிய போகிறாள். நினைக்கவே மனது கனத்தது.



ஒன்றாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் ஆனால் அவளது உதிரம் என்று நினைக்கும் போதே, அவளுள் ஒரு மன மாற்றம்.



இருந்தும் ஏதும் செய்யமுடியாத நிலை.



சுப்ரியாவின் புற்றுநோயின் வீரியமும் அதிகமாகி கொண்டே போனது.



அவள் அதற்கு எந்த வித மருந்தும் கூட எடுக்கவில்லை. போகும் உயிர் எப்படியோ போகட்டும் என்கிற எண்ணம் அவளுக்கு வந்து விட்டு இருந்தது.



சில நேரம் அவளின் வாழ்க்கையை நினைத்து அவளே நொந்து கொள்வாள்.



ஆதர்ஷின் வெறுப்பான பார்வைக்கு பழக்கப்பட்டு கொண்டு இருந்தாள். அவளால் அவனின் நண்பனை விட துணிந்தவன் அவன், இன்று அவனது வாழ்க்கையை நாசமாகியது போன்று தோன்றியது.



"கடவுளே எப்படியாவது சாந்தினி மற்றும் ஆதர்ஷ் சேர நான் ஒரு அணில் ஆகவது இருக்க வேண்டும்", என்று அடிக்கடி வேண்டி கொள்வாள்.



நாட்கள் நகர்ந்தன, சாந்தினி குழந்தை பேறும் நாளும் வந்தது. சாந்தினியுடன் நேரம் செலவிட வந்து இருந்தாள் சுப்ரியா. இப்போதெல்லாம் அவளும் அந்த வீட்டில் ஒரு உறுப்பினர் போல் தான் மாறி இருந்தாள்.



தீடீரென்று அவளுக்கு வலி வந்து விட, சுப்ரியா அவளின் ட்ரைவர்க்கு அழைக்க, அங்கு வந்ததோ பிரகாஷ்.



சுப்ரியாவிற்கு தூக்கி வாரி போட்டது.



'நீங்க.. நீங்க...", என்று தடுமாறினாள்.



இன்று வரை ஆதர்ஷின் சரோகேட் யாரு என்கிற உண்மையை மறைத்து வைத்து இருந்தாள். எங்கே தெரிந்தால் சாந்தினியின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்கிற பயம் அவளுக்குள் இருந்ததது.



"ஏறுங்க", என்று அவர் சொல்லவும், தளிரோ, "யாரு இவரு?", என்று கேட்கவும், "அவ அப்பா மா', என்கவும் தைரியமாக ஏறினாள் தளிர்.



அங்கு தான் அனைவரும் தவறு செய்து விட்டனர்.



காரில் ஏறியவுடன், அவர் வண்டியில் ஏற்றி கொண்டு மருத்துவமனை செல்ல, அடுத்து சாந்தினியை ஸ்டர்ட்ச்சரில் ஏற்றிய சமயம், தளிருக்கு மயக்க மருந்து கொடுத்து அவளை சிறை எடுத்து இருந்தான்.



சுப்ரியாவோ, "அவளை விட்ருங்க... சாந்தினியோட உயிரே அவ தான்", என்று அவள் கெஞ்சவும், "குழந்தை என் கைல வந்ததும், இவ அவங்க அக்கா கையில் மாறிடுவா", என்று மனசாட்சியே இல்லாமல் பேசினான் அந்த அரக்கன்.



"டேய் நீ எல்லாம் மனுஷனா? உனக்கெல்லாம் நல்ல சாவே வாராது டா... நீ பாரு உண்மை தெரியுற நாள் உன்ன சூரசம்ஹாரம் பண்ண அந்த வேலவனே வருவான் டா", என்று அவள் கூறவும், "உங்க அம்மா உன்ன நிறைய கடவுள் பக்தியோட வளர்த்துட்டா.. நான் சாத்தான்.. என்ன ஒன்னும் பண்ணவே முடியாது", என்றவன், தளிரியை விடவே இல்லை.



பிரசவ வலியில் துடித்து கொண்டு இருந்தாள் சாந்தினி. "ஐயோ கடவுளே குழந்தைங்க நல்ல படியா பிறந்திரனும்", என்று வேண்டுதலை வைத்து கொண்டு இருந்தாள் சுப்ரியா.



அடுத்து மூன்று மணி நேரத்தில் இரண்டு அழகான குழந்தைகள் பிறந்து இருந்தது.



சுப்ரியாவிற்கோ முதலில் சாந்தினியை பார்க்க வேண்டும் என்று தான் தோன்றியது.



அவளை சென்று பார்த்தவள், அவள் பயக்கத்தில் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு, அவளின் மனதில் இருக்கும் அனைத்தையும் சொல்லி அழ ஆரம்பித்து இருந்தாள். தளிரை கூட சிறை எடுத்து விட்டானே அந்த அசுரன்.



ஆனால் அவளுக்கு தெரியவில்லை, அரை மயக்கத்திலும் சாந்தினியின் செவிகளில் அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியயை போல் பதிந்து இருந்தது.



ஆனால் சுப்ரியா அவனை ஆதர்ஷராம் என்று சொல்லவில்லை. ராம் என்று மட்டும் சொல்லி இருந்தாள்.



"உன் தங்கச்சிய கூட இப்போ காப்பாத்த முடியாத பாவியா இருக்கேன்", என்று கதறி அழ, விழித்து கொண்டிருந்தாள்.



பச்சை உடம்புடன் எழுந்து நின்று இருந்தாள். அவளின் உதிர போக்கு நிற்க வில்லை, போட்ட தையல் இன்னும் காயவில்லை. காலியாக பிரகாஷின் முன் வந்து நின்றவள், "என் தங்கச்சிய விடு டா ராஸ்கல்", என்று அவள் எடுத்து வந்த கத்தியை அவனின் கைகளில் சீவ, அதை பார்த்த அனைவரும் நடுங்கி விட்டனர்.



அதற்குள் பிரகாஷ், "அவளுக்கு பைத்தியம் பிடிச்சி இருக்கு.. பணத்துக்காக கொல்ல பாக்குறா", என்று அடித்து விட, அங்கே இருந்த அனைவரும் நம்பி தான் விட்டனர்.



சுப்ரியாவோ அவனின் காலை பிடித்து, "ப்ளீஸ் அவ பச்சை உடம்பு காரி, அவளையும் அவ தங்கச்சியையும் போக விடுங்க", என்று கெஞ்சும் போதே அவளுக்கு மூக்கில் இருந்து இரத்தம் வந்தது. புற்றுநோயின் இறுதி கட்டத்தில் இருந்தாள்.



சாந்தினிக்கு முதல் முறையாக அவளுக்காகவும் தளிருக்காகவும் ஒருத்தி காலை பிடித்து கெஞ்சியதே மனதை பிசைந்தது.



என்ன பெண்ணிவள், அவளின் உயிரே போகும் நிலையில் இருக்கும் போதே, தனக்காக கெஞ்சுகிறாளா? என்று நினைத்து கொண்டாள்.



"அவளை சீக்கிரம் அவ தங்கிச்சிய கூட்டிட்டு போக சொல்லு", என்று பிரகாஷ் கர்ஜிக்க, அவளோ மயக்க நிலையில் இருந்த தளிரை கை தங்களாய் ஒரு டாக்சியில் ஏற்றி, சாந்தினியையும் அதில் ஏற்றியவள், "என்ன மன்னிச்சுடு, உனக்கான மொத்த பணமும் நான் பேங்க்ல போற்றுவேன்.. இவனை நீ எதிர்க்க முடியாது சாந்தினி. பணம் பத்தும் செய்யும். உன் குழந்தைங்களை கூட என்னால உங்கிட்ட காமிக்க முடியல.. எனக்கு நம்பிக்கை இருக்கு... கடவுள் கண்டிப்பா உன் குழந்தைகளை உன் கிட்ட சேர்த்திருவாரு... உன்னைக்கவனையும் தான்.. நீ இந்த கலியுக சீதை சாந்தினி.... கண்டிப்பா ராமனே உன்னை தேடி வருவான்", என்றது தான் சாந்தினியை இறுதியாக பார்த்தது.



அதற்கு பிறகு ஆதரிஷிடம் அவன் கதை கட்டியது எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு கடுப்பை கிளப்பினாலும், அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம்.



குழந்தைகளின் உயிர் வேறு இருக்கிறதே!



சாந்தினிக்கு அவள் சொன்னபடி பணத்தை அனுப்பியவள், அவளின் இறுதி நாட்களில் இந்த டைரியை எழுத துவங்கினாள். ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் எழுதினாள்.



அவளின் இறுதி வரிகள் இதோ,



"எனக்குன்னு யாருமே இல்லனு நினைச்சிட்டு இருந்தேன் ஆதர்ஷ். நீ வந்த, உன்ன மாறி ஒரு பிரென்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்... ஆனா உன் கூட பிரென்ட்டாவே இருக்க தான் முடியல.. நான் உன் லைஃப்ல வந்த பிளாக் மார்க் ஆதர்ஷ். ஆனா எனக்கு ஒரு ஆசை, என்னைக்காவது இந்த டைரி உங்கிட்ட கிடைச்சா, நீ சாந்தினியை தேடி கண்டு பிடி... அவ தான் உனக்கு ஏத்த பார்ட்னர்... உன் குழந்தைகளை சுமந்ததுனால நான் சொல்லல... ஷி ஹெஸ் எ ஸ்பார்க்..அந்த அரக்கன் என் சாவையும் ஏதாச்சு கேவலமா தான் சொல்லி இருப்பான். இந்த டைரியை என் அம்மா பெட்க்கு கீழ வச்சிருக்கேன். கடவுள் எப்படியாவது உனக்கு இத சேர்த்துவாருனு ஒரு நம்பிக்கை. என் அம்மா கிட்ட நான் கேட்டு இருக்க கடைசி ஹெல்ப் இது தான். அவங்க என்னைக்காச்சு எழுந்திங்கனா இத உங்கிட்ட சேர்த்திறனும். நீ ப்ளீஸ் அவன் கிட்ட பேசு ஆதர்ஷ்... எனக்காக நீங்க சண்டை போட்டிங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உன் ஈகோவை விட்டுட்டு கால் பண்ணு.. அதே மாதிரி உன் பிரென்ட் உங்கிட்ட கேக்குற கடைசி ஹெல்ப்.. அந்த அரக்கனை துடிக்க துடிக்க கொல்லனும்.. எனக்கு சாப்பாடு கூட போட மாட்டுறான் ஆதர்ஷ்...", என்ற இடத்தில் அவளின் எழுத்துக்கள் சிதறி இருந்தது. அழுத தடயம் அப்படியே இருந்தது.



"குழந்தைங்க இல்ல எனக்கு யாராச்சு ஒருத்தவங்களுக்கு தான் சாப்பாடு தருவனாம்... சரியான அரக்கன்... அவன்லாம் மனுஷன் இல்ல... ஐ அம் சாரி ராம்... நான் உனக்கு நல்ல பிரென்ட்டா இருக்கலா... ஐ லவ் யு லொட்ஸ்... என்னோட பிரென்ட்டா மட்டும்... என்றும் உன் தோழி சுப்ரியா!", என்று முடித்து இருந்தாள்.



படித்து முடித்தவனின் கண்களில் தரை தரையாக கண்ணீர்.



கத்தி அழ வேண்டும் போல இருந்தது. எவ்வளவு தாங்கி கொண்டு இருக்கிறாள்.



அவளை அரக்கி என்று நினைத்து இருந்தான். அவளே கைதியாக இருக்கும் போது, எப்படி அவளால் அன்பை வெளி படுத்தி இருக்க முடியும். தாயின் உயிர் அந்த கயவனின் பிடியில், அவனுக்கு வேறு வார்த்தை ஜாலங்களில் அனைவைரையும் ஈர்க்கும் சக்தி வேறு இருந்தது.



ஆதர்ஷ் கூட அவனை தானே நம்பினான். ஆத்திரமாக வந்தது.



நல்ல மகன், நல்ல அண்ணன், நல்ல தகப்பன், ஆனால் நண்பனாக தோற்று விட்டான். சுப்ரியாவிடம் மட்டும் அல்ல, அவனின் உயிர் தோழனிடமும் தான்.



நினைத்து இருந்தால் பேசி இருக்கலாம் ஆனால் அவனின் ஈகோ தடுத்து விட்டது.



ஆனால் இன்று அவனுக்கு அவன் வேணும், அவனின் நண்பன் நிச்சயம் வேண்டும், அவனின் ஈகோவை உடைத்து எரிந்து இருந்தது சுப்ரியாவின் டைரி.



கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து அவனின் உயிர் தோழனுக்கு அழைத்து இருந்தான்.



இரண்டே ரிங்கில் எடுத்து இருந்தான் அவனின் ஆருயிர் நண்பன்.



"வெற்றி", என்றவனின் குரல் உடைந்தே விட்டது. செந்தளிரின் அரசனும் கண்ணீர் சிந்த, பதறி விட்டான் வெற்றி வேந்தன்.



ஆம், ஆதர்ஷின் ஆருயிர் நண்பன், ஹார்வர்டில் அவனுடன் ஒன்றாக பயின்றவன்.
 

அத்தியாயம் 20



அடுத்த நாள் காலை விடிய, அங்கே ஆதர்ஷின் முன் அமர்ந்து இருந்தான் வெற்றி வேந்தன். இரவு நேரத்தில் ஆதர்ஷின் குரலில் பதறியவன், அவனை பேச விடவில்லை.



"எங்க இருக்க?", என்று மட்டும் கேட்டு விட்டு, அடுத்த நொடியே காரை எடுத்து கொண்டு இதோ இரவு முழுவதும் காரை ஒட்டி கொண்டு இதோ அவனின் முன்பு அமர்ந்து இருந்தான். அவன் தூங்கத்தை அவனின் சிவந்த கண்களே சொல்லியது.



ஆதர்ஷ் அவனை மருத்துவமனையில் பார்த்ததும் அவனின் கைகள் அவனை அணைக்க பரபரத்தது. அடக்கி கொண்டான்.



"பக்கத்துல ஒரு காபி ஷாப் பார்த்தேன் போய் அங்க ஒக்காந்து பேசலாமா?", என்று கேட்கவும், சரி என்று தலையசைத்தவன், அவனுடன் இதோ வந்து அமர்ந்து இருந்தான்.



"சொல்லுங்க மிஸ்டர் ஆதர்ஷராம்.. என்ன தீடீர்னு என்ன எல்லாம் கூப்பிட்டு இருக்கீங்க?", என்றான் நக்கல் குரலில். அவனுக்கு ஆதர்ஷ் அழுதது மனது பிசைந்தாலும், அவனின் மேல் உள்ள கோவம் அப்படியே இருந்தது.



அன்று அவன் ஆதியை வைத்து செய்தியை பார்க்கும் போதே அவனுக்கு தெரியும் இது ஆதர்ஷின் குடும்பத்துடன் சம்மந்த பட்டது என்று!



ஆனாலும் அவனுக்கு ஆதரிஷிடம் சென்று நிற்க மனம் இடம் கொடுக்க வில்லை. அகல்யாவிடம் சென்றான். அன்று திருமண மண்டபத்தில் அகல்யாவை வெற்றியுடன் பார்த்தவுடன் ஆதர்ஷிற்கு தூக்கி வாரி போட்டது.



எத்தனையோ முறை அவனின் தங்கையின் புகைப்படத்தை கேட்டு இருக்கிறான் ஆதர்ஷ். அவன் காட்டியதே இல்லை, வெற்றி மட்டும் அப்போது காட்டி இருந்து இருந்தால், யாழை நிச்சயமாக இப்படி ஒரு நிலையில் அவன் வர விட்டு இருக்க மாட்டான்.



இவ்வளவு ஏன், ஆருஷ் மற்றும் தளிரின் திருமணம் ஏர்போர்ட்டில் நடந்த நாள் கூட இருவரும் முறைத்து கொண்டு சென்று விட்டனர்.



கோவம் இருந்தது ஆனால் நண்பன் எது செய்தாலும் நியாயத்திற்கு என்று அறிந்து இருந்தான்.



வெற்றி ஆருஷை உயிரோடு விட்டதற்கு முக்கிய காரணமே அவன் ஆதர்ஷின் தம்பி என்பதால் மட்டும் தான். அனைத்தையும் அவிரான் சொல்ல கேட்டவனுக்கு ஆருஷை கொன்று விடலாம் என்று தான் தோன்றியது. அவன் நினைத்தால் நிச்சயமாக தளிருக்கு வேறு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர முடியும். கால போக்கில் அவளின் மனமும் மாறி தான் இருக்கும்.



ஆதர்ஷின் தம்பி அவன், இப்படி செய்ய காரணம் இருந்து இருந்தாலும், நிச்சயமாக இப்போது வருத்தப்படுகிறான் என்று கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை வைத்து இருந்தான்.



இருவரும் இருவேறு துருவங்களை நின்ற போதும், ஒருவரின் மேல் மற்றொருவருக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது.



அதனால் தான் வரும் காலத்தில், ஆதிக்காக வெற்றியும், யாழிற்காக ஆதர்ஷும் நிற்க போகிறார்கள். நண்பனின் தங்கை, வெற்றி யாழை நிலா என்று தான் பேசும் போது கூட அழைப்பான். அவனுக்கு யாழ் என்றால் கொள்ளை பிரியம் என்று ஆதர்ஷிற்கு தெரியும், தம்பியின் மனைவி என்பதையும் தாண்டி நண்பனின் தங்கை என்றும் இருந்ததால் தான், ஆதியை எதிர்க்க துணிவான் ஆதர்ஷ்.



"வெற்றி", என்றவன் அவனின் முன் சுப்ரியாவின் நாட்குறிப்பை வைத்தான்.



அவனின் புருவங்கள் சுருங்கி ஆதார்ஷை கேள்வியாய் பார்க்க, "எடுத்து படி", என்றவன், அப்படியே தலைசாய்த்து அமர்ந்து கொண்டான். அவனும் இரவில் இருந்து உறங்கவே இல்லை.



எப்படி உறக்கம் வரும்? அவனின் மனதில் ஒரு பக்கம் சுப்ரியா என்றால் மறுபக்கம் அவன் சாந்தினியை வதைத்த வார்த்தைகள் அனைத்தும் அவனை பொசுக்கி கொண்டு இருந்தது.



வெற்றி படித்து முடிக்கவும், அவனை பார்த்தான் ஆதர்ஷ். வெற்றியின் மனதில் எந்த உணர்ச்சியும் இல்லை. அப்படியே அமர்ந்து இருந்தான்.



"இந்த பிரகாஷை ஏதாச்சு பண்ணனும்", என்றவனின் குரலில் அப்படி ஒரு வன்மம். அவனை துடிக்க துடிக்க கொல்ல வேண்டும் என்கிற ஆத்திரம்.



மனிதனா அவன் என்று தோன்றியது?



"அவனை தூக்கிற வேண்டியது தான்', என்று வெற்றி சொல்லவும், "அவளோ ஈஸி இல்ல அது", என்று ஆதர்ஷ் முடித்து இருந்தான்.



"தி கிரேட் ஆதர்ஷராம் இப்படி பேசுறது ரொம்ப காமெடியா இருக்கு", என்றவனை பார்த்து, "நீங்க தானே சார் கிட்ணப் எக்ஸ்பர்ட்", என்று அவனும் சொல்ல, இருவருக்கும் இப்போது சண்டை போட வேண்டாம் என்கிற மனநிலை தான். ஆனாலும் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் இருவருக்கும் வாக்கு வாதம் தான் வரும் என்று தோன்றியது.



"அவனோட பாடி கார்ட்ஸ் எல்லாரையும் விலைக்கு வாங்குங்க ஆதர்ஷ். அவனை அவனுங்களே தானா இங்க இழுத்துகிட்டு வருவாங்க", என்று வெற்றி சொல்லவும், அடுத்து ஆதர்ஷ் அழைத்தது என்னவோ அர்னவ்விற்கு தான்.



"அர்னவ் டூ அஸ் ஐ சே", என்றவன், அவனுக்கு அனைத்தையும் விளக்கி விட்டு, "சாந்தினி கிட்டயே கிட்ஸ் இருக்கட்டும்", என்று முடித்து இருந்தான்.



"பரவால்லயே சாந்தினி மேல நம்பைக்கைலாம் இருக்கா?", என்று வெற்றி அவனை பார்க்க, "இருக்கு", என்று மட்டும் முடித்து கொண்டான்.



அவனுக்கு வெற்றியை கட்டி பிடித்து அழ வேண்டும் போல் இருந்தது அவன் தான் மொத்தமாக அவனை பார்வையாலேயே தள்ளி நிறுத்தி வைத்து இருக்கிறானே!



"சாரி", என்றவனை நிமிர்ந்து பார்த்து, "நீங்க சாரி என்கிட்ட எதுக்கு சொல்றிங்க ஆதர்ஷ்? நீங்க சாரி சொல்ல வேண்டிய எல்லாரையும் லிஸ்ட் போட்டு நான் தரேன்...இப்போ கிளம்பலாமா?", என்றவன் ஒரு ஹோட்டலிற்கு சென்று குளித்து முடித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு, ஒரு இடத்திற்கு சென்று இருந்தார்கள்.



அங்கு அவர்களுக்காக அர்னவ் காத்துகொண்டு இருந்தான்.



"சார் நீங்க சொன்னது எல்லாமே செஞ்சிட்டேன். நீங்க ஷார்ப் நைட் பதினோரு மணிக்கு அந்த இடத்துக்கு போகலாம்", என்று சொல்லவும், அவனிடம் தலை அசைத்து கொண்டு, ஹோடலிற்கே மீண்டும் சென்று விட்டனர். வரும் வழியில் சுப்ரியாவின் அன்னை லேகாவை பார்க்க, ஆனால் அவர் இன்னும் விழிக்க வில்லை.



அறைக்கு வந்தவர்கள் இருவரும் அடித்து போட்டது போல் தூங்கி இருந்தார்கள்.



அடுத்து அவர்கள் எழுந்தது என்னவோ இரவு எட்டு மணிக்கு தான்.



ஆதர்ஷிற்கு அழைத்து இருந்தால் சாந்தினி.



"எப்போ வருவீங்க?", என்று கேட்டவளுக்கு, "பசங்க வேணும் வேண்டும்னு கேட்ட, இப்போ ஒரு நாள் கூட வச்சிக்கலை அதுக்குள்ள எப்போ வருவீங்கன்னு கேக்குற?", என்றவனிடம், "ஹலோ நான் ஜஸ்ட் நேத்து நைட்ல இருந்து நீங்க வரலயேன்னு தான் கேட்டேன்", என்றவள், அடுத்து அவனிடம் பேசாமல் வைத்து விட்டாள்.



எங்கே பேசினால், அவளுக்கு பதில் அளிக்க முடியாமல் போய் விடுவானோ என்கிற பயம்.



வெற்றியும் ஆதர்ஷும் உணவு உட்கொண்டு, சரியாக பதினோரு மணியளவில் அர்னவ் சொன்ன இடத்திற்கு சென்று இருந்தார்கள். அங்கே கட்ட பட்ட நிலையில் இருந்தார் பிரகாஷ்.









அத்தியாயம் 21



அவனை பார்க்கும் போதே அவ்வளவு கோவம் அவர்களுக்கு, வெற்றி சுப்ரியாவின் நாட்குறிப்பை படிக்கும் போதே, சாந்தினிக்காக கண்ணீர் வடித்தான் தான். அவனிடம் மட்டும் தான் சாந்தினி அவளின் கருப்பு பக்கங்களை சொல்லி இருந்தாள். யாழிற்கு நடந்த கொடுமையை மட்டும் மறைத்தவள், அவளை காப்பாற்றும் போது அவளின் கருப்பை போனதையும் ஒரு நாள் வெற்றியிடம் சொல்லி இருந்தாள்.



ஏனோ அவளுக்கு அவனிடம் ஒரு பாதுகாப்பான உணர்வு. அண்ணன், தம்பி பாசத்தை அறியாதவள் அவள். ஆனால் யாழால் அவளுக்கு என்று கிடைத்த அவளுடன் பிறக்காத சகோதரன் வெற்றி தான்.



அவன் தளிருக்காக இவ்வளவு செய்ததும் கூட ஒரு விதத்தில் அவளுக்கு நல்லது என்று தான் தோன்றியது. தளிரின் வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும் என்று அவள் எண்ணிக்கொள்ள, என்ன தான் ஆருஷின் மீது கோவம் இருந்தாலும், அவர்களின் குடும்பத்தின் மீது அவளுக்கு நிறைய மதிப்பு இருந்தது.



வெற்றிக்கு அவ்வளவு ஆத்திரம், இந்த நாள் முழுக்க இந்த நிமிடத்திற்காக தான் காத்துகொண்டு இருந்தான்.



ஆதர்ஷும் வெற்றியும் பிரகாஷை கட்டி போட்டு நின்று இருந்தனர். இரு வேங்கைகளின் கண்களும் சிவந்து இருந்தது.



ஆதர்ஷ் சுப்ரியாவிற்காக நின்று இருந்தான் என்றால், வெற்றி சாந்தினி மற்றும் தளிருக்காக நின்று இருந்தான்.



"ஏன் டா நாயே, புள்ள பெத்து பச்சை உடம்பா இருக்க பொண்ணு கிட்ட போய் உன் வீரத்தை காட்டுறியே நீ எல்லாம் மனுஷனா?", என்று கேட்டுக்கொண்டே அவனின் வலது கை நகம் ஒன்றை பிடுங்கி எறிந்தான்.



உயிர் போகும் வலி, "ஆஹ்...", என்று அலறினான் பிரகாஷ்.



"என்ன வலிக்குதா? இப்படி தான சுப்ரியாக்கும் வலிச்சி இருக்கும்.. கேன்சர்ல உயிருக்கு போராடிட்டு இருந்த பொண்ணுக்கு ஒரு வாய் சோறு கொடுக்காம கொன்னு போட்டு இருக்கியா டா.. த்து", என்று அவனின் முகத்தில் காரி உமிழ்ந்து, அவனின் இடது கையில் இருந்த நகத்தை பிடுங்கி எறிந்தான்.



"என்ன கொன்னுடுங்க...", என்று அவன் கத்தவும், அவர்கள் இருவரின் இதழ்களிலும் வன்மம் நிறைந்த புன்னகை.



"உனக்கெல்லாம் அவளோ சீக்கிரம் சாவு வர கூடாது.. துடிக்க துடிக்க சாகனும்", என்றவன் அடுத்த செய்த காரியத்தில் பிரகாஷின் அலறல் விண்ணை பிளந்து இருந்தது.



அவனின் மேல் விஷம் உள்ள தேள்களை போட்டு இருந்தார்கள். அது அனைத்தும் அவனை கோத்த கோத்த, அவனின் கதறல் விண்ணை பிளந்தது.



"சுப்ரியா, சாந்தினி, தளிர், சுப்ரியா அம்மா லேகா.. எத்தனை பொண்ணுங்கள வச்சி விளையாடிருக்க நீ? ச்சீ.. உன்ன மாறி ஆலால தான் டா இந்த ஆம்பிளைங்க இனத்துக்கே கேடு!", என்று ஆதர்ஷ் சொல்லவும், அலறல் சத்தம் மட்டும் தான்.



அடுத்து வெற்றியோ, அவனின் வாயில் ஒரு ட்ரோப் ஏதோ ஒரு திரவியம் ஊற்றினான்.



"இது பாய்சன் தான்.. ஆனா உன்ன துடிக்க துடிக்க, ஒவ்வொரு பாகமா செயல் இழந்து சாவடிக்கு", என்றவனை உண்மையாகவே துடிக்க துடிக்க வேட்டையாடி இருந்தார்கள்.



இரு குடும்பத்தின் வேங்கைகள் அவர்கள். ராமனும் வேந்தனும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் தானே!



அடுத்து ஆதர்ஷிற்கு தான் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது.



இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.



"அவங்க ரொம்ப கிரிட்டிகள் ஸ்டேஜ்ல இருக்காங்க சார்.. கடைசியா பேசணும்னா பேசிக்கோங்க", என்று மருத்துவர் கைவிரித்து விட்டார்.



சுப்ரியாவின் இறுதி ஆசைக்காகவோ அல்லது சாந்தினியின் வாழ்க்கையை சிறப்பிக்கவோ கடவுள் என்ன நினைத்தாரோ, லேகாவை சிறிது நேரம் கண் திறக்க வைத்தார் போலும்.



ஆதர்ஷ், வெற்றி இருவரும் உள்ளே சென்றனர்.



அவரோ, "டைரி", என்று மூச்சை இழுத்து பிடித்து கொண்டு கேட்க, "நான் தான் ஆதர்ஷ்", என்று ஆரம்பித்தவன், அவருக்கு சுருக்கமாக அவன் தான் சுப்ரியாவின் நண்பன் என்று தான் உரைத்து இருந்தான், கணவன் என்று உரைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.



அவரோ அவரின் கையை பிடித்து, "என் பொண்ணு..", என்று பேச மிகவும் கஷ்ட படுவதை உணர்ந்து கொண்டு, "அவ எவளோ நல்லவன்னு எனக்கு தெரியும் மா.. சாரி.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்", என்றவனின் கண்ணீர் துளி அவரின் கைகளை நனைத்தது.



அது மன்னிப்பு வேண்டி அவன் நிற்பதற்காக விழுந்த துளிகள். உங்கள் மகளை நான் காப்பாற்ற மறந்து விட்டேன் என்று அவன் நினைத்து விட்ட துளிகள்.



அவரோ அவனின் கண்ணீரை துடைத்து விட்டவர், "சாந்தினி?", என்று கேட்கவும், அவனுக்கு சுப்ரியா சாந்தினியின் மீது வைத்துள்ள அன்பின் அளவு புரிந்தது.



எத்தனை முறை அவளின் அன்னையிடம் சாந்தினியை பற்றி பேசி இருந்தால், அவர் மரணப்படுக்கையில் அவளை பற்றி வினவுவார்.



"சாந்தினி நல்லா இருக்கா.. இப்போ இவன் கூட தான் இருக்கா", என்று வெற்றி சொல்லவும், அவரின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.



அவரின் மகள் நினைத்தது நடந்து விட்டது போன்ற உணர்வு.



அப்படியே ஆதர்ஷின் கையை பிடித்து, "அவளை பார்த்துக்கோ", என்று மட்டும் சொல்லிவிட்டு அவரின் இறுதி மூச்சை விட்டு இருந்தார்.



அவரின் திறந்த கண்களை மூடி இருந்தான் ஆதர்ஷ்.



ஆதர்ஷின் தோள்களை பற்றி இருந்தான் வெற்றி.



இவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த அழுகை இப்போது வந்தது. அணைத்து அழுதான், வெடித்து அழுதான், அவனின் உணர்வுகள் மொத்தத்தையும் கொட்டி அழுது தீர்த்து விட்டான்.



எதற்கு அழுதான், யாருக்காக அழுதான் என்று தெரியவில்லை. அழுதான்! மனதின் மொத்த பாரத்தையும் இப்படியாவது இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு, அவனும் மனிதன் தானே! அவனுக்கும் உணர்வுகள் இருக்கும் தானே!



வெற்றி அவனின் முதுகை தடவி விட்டான்.



"ரிலாக்ஸ் ஆதர்ஷ்", என்று சொல்லியவன், அவனை தேற்றிவிட்டு, லேகாவிற்கான இறுதி காரியங்களை செய்ய துவங்கினான். அப்போது அங்கு வந்த பிரகாஷின் லாயர், "இது பசங்களுக்கு போக வேண்டிய சொத்து சார்", என்று ஆதரிஷிடம் நீட்ட, அவனும் வாங்கி கொண்டான்.



அது அவனின் பிள்ளைகளுக்காக சுப்ரியா விட்டு சென்றது. அவனுக்கு உரிமை இல்லை, ஆனால் அவனின் பிள்ளைகளுக்கு இருக்கிறதே, ஆதலால் மட்டும் வாங்கி கொண்டான்.



வெற்றியை பார்த்தான். மீண்டும் அவனின் முகத்தில் இறுக்கம்.



"வெற்றி", என்று அழைக்கவும், "உங்க கிட்ட சில கேள்விகள் கேக்கணும் ஆதர்ஷ்", என்றவன் கேள்வி ஈட்டிகளை எரிய துவங்கினான்.



"சுப்ரியாக்கு நல்ல பிரண்ட்டா இல்ல! ஆனா நல்ல கணவனாகவும் இல்லையே ஆதர்ஷ். எதுக்கு அவளோட கல்யாணம் பண்ண? ஒரு வருஷம் ஆகியும் முனிவர் வாழ்க்கை வாழவா சார்? இல்ல தெரியாம தான் கேக்குறேன் சரி சுப்ரியாக்கு கான்செர் வந்து செத்துட்டா? இதுவே வேற பொண்ணா இருந்து அன்னைக்கு உனக்கும் அவளுக்கும் ஏதோ நடந்து இருக்குனு வச்சிக்கோ.. அப்பவும் இப்படியே இருந்து இருப்ப அப்படினா.. நீ அந்த பொண்ணு வாழ்க்கையே அழிச்சி இருக்க ஆதர்ஷ்... இதுக்கு நீ கல்யாணம் பண்ணாமலேயே இருந்து இருக்கலாம்... சரி சாந்தினியை பத்தி கரக்ட்டர் செர்டிபிகேட் கொடுக்க நீ யாரு டா? நீ ராமன்னா அவ சீதை... எத்தனை நாள் தான் சீதைங்க தீ குளிக்கணும்? அந்த பொண்ணு எவளோ கஷ்டம் பட்டு இருக்கு தெரியுமா? உங்கள மாறி பணத்துலயே மிதக்குற பேய்ங்களுக்குலாம் எப்படி தெரியும்?", என்று அவனை வெளுத்து வாங்கி விட்டான்.



ஆதரஷால் பேச முடியவில்லை.



தலை கவிழ்ந்து நின்றான். உண்மை, வெற்றி கேட்ட அத்தனையும் உண்மை.



"ஆருஷ், ஆதி, ஆதர்ஷ்... உங்க வீட்ல உங்க எல்லாருக்கும் சேர்த்து கொடுமைக்காருனுங்கனு பேரு வச்சிருக்கலாம் டா.. ஆதி ஏதோ தப்பிச்சிட்டான்.. கொஞ்சம் கொடுமை பண்ணாலும் இப்போலாம் அவன் பொண்டாட்டி பின்னாடி தான் இருக்கான். ஆருஷ் கூட திருந்திட்டான். ஆனா பாருங்க ஆதர்ஷ் சார் மட்டும் தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நின்னு இருக்கீங்க", என்று அவன் பேசவும், அப்போதும் பதில் இல்லை.



"அடிக்கடி சொல்லுவியே, என்னைக்கு நான் பதில் சொல்ல முடியலையோ நான் தோத்துட்டேன்னு அர்த்தம்னு... அப்போ இன்னைக்கு தான் நீங்க மொத்த தோத்துடுங்க... காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோங்க", என்றவன், அவனின் கையை பிடித்து இருந்தான்.



"எனக்கு சாந்தினியை பத்தி தெரிஞ்சிக்கணும்", என்று சொல்லவும், வெற்றி அவனை பார்க்க, "ப்ளீஸ்", என்று கெஞ்சவும், சாந்தினியின் தைரியம் மிக்க, வீரமான பயணத்தை சொல்ல ஆரம்பித்து இருந்தான் வெற்றி வேந்தன்.



வேந்தன் அவனை வியக்க வைத்த பயணம் அது! செந்தளிரின் அரசனும் அடிபணிவான் அந்த வீரமங்கையின் ஆற்றலை பார்த்து!
 

அத்தியாயம் 22



சுப்ரியா சென்றதிற்கு பிறகு, சாந்தினி தான் பிரம்பை பிடித்தது போல் ஆகிவிட்டாள். அவள் சாதாரண பெண், அவளின் தங்கைக்காக அவளின் கருவரரை விற்று இருக்கிறாள். அவளின் பாதி அவளின் பிள்ளைகள். அவர்களை விட்டு விட்டு வந்து இருக்கிறாள். அதுவும் அவளிடம் இருந்து அவர்கள் பால் கூட அருந்த வில்லை.



மார்பு வலித்தது. கண்களில் நீர் சுரந்ததோ இல்லையோ ஆனால் அவளின் மார்பில் இருந்து அமுதம் சுரந்தது.



தளிரால் அவளின் வலியை பார்க்கவே முடியவில்லை. "பம்ப் பண்ணி எடுத்துருங்க அக்கா", என்று அவளிடம் அவள் பம்பை கொடுக்க, அவளும் எடுத்து கொடுத்தாள்.



அவளுக்கு மனது கனத்து இருந்தது. கடவுள் இன்னும் என்னவெல்லாம் அவளுக்காக பரிட்சை வைக்க காத்து கொண்டு இருக்கிறாரோ என்று அவளின் மனது வேதனை கொண்டது.



இதற்கு மேல் அவளுக்கு என்று ஒரு திருமணம், குழந்தைகள் என்று அவளால் நினைக்க கூட முடியவில்லை.



இப்படியே வாழ்ந்து விட வேண்டும் என்று தான் முடிவு செய்து இருந்தாள்.



"என்ன அக்கா, இப்படியே இருக்கீங்க?", என்று தளிர் கேட்கவும், சாந்தினியின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.



தளிர் அவளின் தாய்ப்பாலை எடுத்து கொண்டு சென்று தான் ஒரு தாய்ப்பால் வங்கியில் கொடுத்து விட்டு வந்து இருந்தாள். அவளை பின்தொடர்ந்த சுப்ரியாவின் வேலைக்காரன் ஒருவன், அவள் கொடுத்த பாலையே எடுத்து தான், சுப்ரியாவிடம் கொடுத்து இருந்தான்.



சுப்ரியாவால் சாந்தினியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளின் வேலைக்காரன் ஒருவன் மூலம் தொடர்பு கொள்ள முடிவெடுத்து இருந்தாள். இப்போது அவளுக்கு தேவையானது குழைந்தைகளுக்கான தாய் பால். அதுவும் அந்த வேலைக்காரனிடம், சிறிய துண்டு தான் கொடுக்க முடியும், அப்படி ஒரு செக்யூரிட்டி போட்டு இருந்தார் பிரகாஷ். ஆதலால் அந்த துண்டில் அவளால் ஆதர்ஷனை பற்றி கூற முடியாமல் போய் விட்டது.



"உன்னோட தாய்ப்பாலை அதே பேங்க்ல கொடு சாந்தினி", என்று எந்த நேரம் கொடுக்க வேண்டும் என்கிற நேரத்தையும் குறிப்பிட்டு இருந்தாள்.



அடுத்த நாள் வந்த அந்த வேலைக்காரன், தளிர் வருவதை பார்த்து, அவளிடம் ஒரு துண்டு சீட்டை நீட்ட, அதை பார்த்தவளின் கண்கள் விரிந்தன.



வீட்டிற்கு வந்தவள், "அக்கா... அக்கா", என்று மூச்சிரைக்க ஓடி வந்து, "உங்க குழந்தைங்க உங்க தாய்ப்பால் தான் குடிக்குறாங்க", என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.



அவளுக்கு கட்டுக்கடங்கா மகிழ்ச்சி. உண்மையாகவே மகிழ்ந்தாள்.



மூன்று மாதம் நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால் தீடீரென்று ஒரு நாள் அந்த வேலைக்காரன் வந்து, "சுப்ரியா அம்மா செத்துட்டாங்க... பிள்ளைங்களை அவங்க அப்பா எடுத்துகிட்டு போய்ட்டாரு", என்று சொல்லி இருந்தான்.



தளிருக்கு பேரதிர்ச்சி.



"எனக்கு பயமா இருக்கு தளிர்... அந்த கிறுக்கன் அப்பவே குழந்தைங்களை ஏதாச்சு பன்னிருவானோனு எனக்கு பயம் இப்போ..", என்று அவள் பயந்தாலும், தளிர் தான், "அக்கா சுப்ரியா அக்கா தான் சொல்லுவாங்களே, அவங்க புருஷன் ரொம்ப நல்லவருனு...", என்றவளை பார்த்து, "யாரு அவன் நல்லவனா? கட்டின பொண்டாட்டிக்கு கேன்சர் இருக்குனு தெரியமா இருக்கான்... பாவம் சுப்ரியா.. நான் மட்டும் அவனை என்னைக்காச்சு பார்த்தேன்... அவனை அம்மியில வச்சி அறச்சிருவேன்", என்றவுடன் சிரித்து விட்டாள்.



"என்ன டி சிரிக்கிற?", என்றவளை பார்த்து, "இல்ல என்னைக்காச்சு ஒரு நாள் நீங்க அவரை பார்த்தா எப்படி இருக்கும்னு நினைக்கிறேன்", என்றவுடன், "போ டி போ", என்று அவளை அதட்டி செல்ல சொல்லி விட்டாள்.



அடுத்த பிரச்சனை அவளுக்கு வந்தது. அவள் நினைத்தது போலவே அவளின் கம்பெனியை துவங்கி இருந்தாள். அவளுக்கு எதிலாவது அவளின் எண்ணத்தை செலுத்த வேண்டும். அதற்கு எளிய வழி அவளது தொழில் தான்.



அவளுக்கான முதல் காண்ட்ராக்ட் கிடைத்தவுடன், அந்த ப்ரொஜெக்ட்டின் மானேஜர் ஒருவன் தான் பிரச்சனையாக வந்தான்.



"உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா மேடம்?", என்று அவன் கேட்கவும், சாந்தினி அவன் எதற்காக கேட்கிறான் என்று அறியாமல், "இல்ல சார்", என்று வெகு சாதாரணமாக தான் கூறி இருந்தாள்.



"அப்போ நீங்க அஞ்சு மாசம் முன்னாடி ப்ரெக்னென்ட்டா இருந்திங்களே?", என்றவன் புருவம் உயர்த்தி கேட்கவும், "அது உங்களுக்கு எப்படி?', என்றவளை நிறுத்தி, "என்னோட சிஸ்டர் அப்போ அந்த ஹொஸ்பிடல்ல தான் இருந்தா", என்றதும், "அது சரோகேசியால சார்",என்று மட்டும் நிறுத்தி கொண்டாள்.



"ஓஹ்... அப்போ குழந்தை இல்லமா அதுக்கு மட்டும்னா எவளோ பெ பண்ணனும்?', என்று அவன் கேட்கவும், அவனை குழப்பமாக அவள் பார்க்கவும், "இல்ல குழந்தை பெத்துக்க இப்போ உங்களுக்கு ஒரு அமௌன்ட் கொடுத்து இருப்பாங்க இல்லையா? குழந்தைலாம் வேண்டாம்.. நீங்க வேற பார்க்க நல்லா இருக்கீங்க... இப்போ அஞ்சு மாசம் ஆகிறுக்குமா குழந்தை பொறந்து? குழந்தைல குடிச்சது இன்னும் வருதா? அதுக்கும் சேர்த்து பெ பண்ணுறேன்", என்று சொல்லி முடிக்க வில்லை, அருகே இருந்த சூடான காபி எடுத்து அவனின் முகத்தில் அடித்து இருந்தாள் சாந்தினி.



"அம்மா ஐயோ எரியுது", என்று அவன் கத்தவும், "என்ன டா அம்மா? உன் அம்மா கிட்ட குடிச்சது தானே.. து... நீ எல்லாம் என்ன மனுஷன்? சரோகசினு சொல்றேன்... படுக்க கூப்பிட்ற... உன் சிஸ்டர்க்கும் இப்போ தானே குழந்தை பிறந்தது.. அவளுக்கும் வரும்... போய் குடிச்சி பார்த்துக்கோ", என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.



வீடு வந்து சேர்ந்தவளின் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை. முதல் முறை அவள் வாழ்க்கையில் அவள் இவ்வளவு தைரியமாக ஒரு செயலை செய்து இருக்கிறாள். தாய்மை அவளை மாற்றி இருந்தது.



எங்கு சென்றாலும் அவமானம் தான். நினைக்க நினைக்க அவளுக்கு நெஞ்சம் அடைத்தது. பெண்கள் என்றாலே படுக்கைக்கு மட்டும் தானா? ஒரு பெண் தானாக முன்னேற இந்த சமுதாயம் அனுமதிக்காதா? பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆண்களையும் என்ன செய்யலாம் என்று அவளின் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.



இவர்களை திருத்த முடியாது. ஆனால் அவள் மாறலாம். மாற்றம் ஒன்று தானே மாறாதது.



மாற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள். அவளின் பாசத்தை கூட மறைத்து கொள்ள முடிவெடுத்தது விட்டாள்.



மலரினும் மென்மையானவள் தான், ஆனால் இனி மென்மையாக இருப்பதை விட, மேன்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.



போதும் அழுதது போதும். இன்னும் எவ்வளவு நேரம் அழ முடியும்? அழுது என்ன சாதிக்க முடியும்? இந்த உலகம் என்றைக்கும் நம்மை தூற்ற தான் போகிறது. சாந்தினியும் இதனை புரிந்து கொண்டாள்.



இறுகி விட்டாள். மொத்தமாக அவளின் உணர்வை மறைத்து கொண்டாள். சீதையவள் தீக்குளிக்க போவதில்லை. மாறாக அவளின் பார்வையினால் சமுதாயத்தை எரித்திடுவாள். போதும் போதும் சீதை தீக்குளித்ததும் போதும் பூமியில் புதைந்ததும் போதும்.



அவளும் புதைத்து விட்டாள், அவளின் உணர்வுகளை மொத்தமாக, இனி எவராலும் அதை தட்டி எழுப்ப முடியாத அளவிற்கு அதல பாதாளத்திற்கு அதை அனுப்பி விட்டாள்.



ராமனால் தட்டி எழுப்ப முடியுமா அவளின் உணர்வுகளை?



சாந்தினி இந்த கட்டத்திற்கு வர செய்த தியாகங்கள்? அடுத்த அத்தியாயத்தில்!





அத்தியாயம் 23



மொத்தமாக மாறி இருந்தாள் சாந்தினி. கடந்த ஒன்றரை வருடங்கள் அவளை நிறைய மாற்றி இருந்தன. பொருளாதார அளவிலும் நன்றாக இருந்த சூழலில் தான் அந்த பிரச்சனை ஒன்று வந்தது.



அப்போது வரை சாந்தினியும் தளிரும் வாடகை வீட்டில் தான் இருந்தனர்.



அவர்களுக்கு எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு அன்று பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அங்கிருந்த மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணின் கண்ணில் சாந்தினி பட்டு விட்டாள்.



அவ்வளவு தான், அவர் தான் சாந்தினிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனையின் தாதி!



"இவ எப்படி இங்க? இவளை மறக்கவே மாட்டேன். இரண்டு குழந்தைகளை பணத்துக்காக கொள்ள துணிஞ்சா? இவளுக்குலாம் வீடு எப்படி கொடுக்குறாங்க?", என்று ஒன்றுக்கு இரண்டாக கதை கட்டி விட்டு ஒரு வழி செய்து விட்டார்.



"ஒரு வாரத்துல வீட்டை மாத்திடறோம்" என்ற சாந்தினி ஒரே வாரத்தில் அவளிடம் இருந்த சேமிப்பை பயன்படுத்தி தான் ஸ்வஸ்திக் அபார்ட்மெண்ட்ஸ் என்கிற அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி இருந்தாள்.



அவளின் தளிரின் உழைப்பு அது.



"நீ ரொம்ப ஸ்ட்ரோங் அக்கா", என்று தளிர் சொல்லவும், "ஸ்ட்ரோங்கா நம்ப இல்லனா இந்த உலகம் நம்பள தூக்கி சாப்பிட்டுறோம்", என்றவள் சிரித்தே பல நாள் ஆகி இருந்தது.



தளிரின் மனதில் எப்போதும் ஒரு ஏக்கம் இருக்கும். சாந்தினி என்றைக்காவது மீண்டும் சிரிக்க மாட்டாளா? என்றாவது அவளின் வாழ்விலும் புன்னகை மலராதா என்று அவள் நினைக்காத நாள் இல்லை.



சில நேரம் அவளால் தான் அவளின் வாழ்வு இப்படி ஆகி விட்டதோ என்று அவளின் மனசாட்சி அவளை கொன்று புதைத்து விடும்.



ஒரு நாள் நிச்சயம் சாந்தினியின் வாழ்வு மாறும் என்று அவள் எண்ணி கொள்வாள்.



அப்போது தான் ஒரு நாள், சாந்தினி அவளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் சென்று, "என் குழந்தைங்க எங்க இருக்காங்க? என் கிட்டயே கொடுத்துடுறிங்களா?", என்று கேட்கவும், அவரோ, "இங்க பாருங்க சாந்தினி நீங்க சைன் பண்ணி இருக்கீங்க மறந்துராதீங்க", என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டாள்.



அடுத்து தான் நடந்தது யாழை காப்பாற்ற அவள் செய்த தியாகம்.



யாழ் மொத்தமாக அவளின் முன் உடைந்து அழுதாள். தனக்காக ஒவ்வொரு பெண்ணும் உணர நினைக்கும் தாய்மையையே தியாகம் செய்த தியாக செம்மலை நினைத்து அவளுக்கு நெஞ்சம் அடைத்தது.



ஆனால் அவளிடம் சாந்தினியின் சரோகேசியில் பிறந்த குழந்தைகளை பற்றி தளிரும் அவளும் ஒன்றும் சொல்ல வில்லை. முடிந்த பகுதி என்று தான் நினைத்து இருந்தனர்.



ஒரு நாள் அந்த எதிர் வீட்டு பெண்மணியின் வீட்டிற்கு சாந்தினி மற்றும் யாழ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர் வந்து இருந்தார். அவர்களின் உறவினரால் போலும், எப்போதும் அவர்களின் பிள்ளை அவர்களுடன் விளையாட செல்வாள். அவளை விட வரும் போது இவர்களை பார்த்ததும், "நீ ரேப் அட்டெம்ப்ட் கேஸ்ல வந்து அட்மிட் ஆணவ தானே மா? அண்ட் உனக்கு குழந்தையை பிறக்காதுல?", என்று யாழையும் சாந்தினியையும் பார்த்து கேட்க, அங்கு ஆரம்பித்தது பிரச்சனை.



அன்றில் இருந்து அவர்களை தீண்டத்தகாதவர்களை போல் பார்க்க துவங்கினால் அந்த பெண்மணி.



இது மட்டுமா? எப்போதும் அவளுக்கு வரும் தொழில் துறை பேச்சில் மூன்றில் ஒன்றாவது அவளை வேற மாறி அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைப்பதும் உண்டு.



அவளின் அலுவலகத்தை பெண்களுக்கு என்று மாற்றி அமைத்து இருந்தாள்.



பணம் இல்லை என்று அவளுடன் வேலை செய்யும் யாரவது வந்து தகுந்த காரணம் சொல்லி பணம் கேட்டால், அவர்களுக்கு அவளே வட்டி இன்றி கொடுத்து விடுவாள். அதுவும் அவர்களின் மகப்பேறுக்கு என்று தெரிந்தால், இலவசமாகவே கொடுத்து விடுவாள்.



இறுக்கமானவள் அவள்! ஆனால் இரக்கமானவளும் கூட தான்! தாய்மையை அனுபவிக்காத தாயுமானவன் அவள்!



தளிருக்காக தன்னையே தந்த தியாக செம்மல் அவள்!



யாழிற்காக அவளின் உயிரையே பணயம் வைத்த காளி தேவி அவள்!



இந்த கதையின் வீர மங்கை அவள் தான்!



என்றுமே அவளுக்காக வாழாத அன்னை தெரசா அவள்!



இந்த செந்தளிர் இல்லத்தின் மூடி சூட மன்னனின் மணவாட்டியாக போகும் தேவியும் அவளே!



ஒரு நாள் யாழின் ஊருக்கு வந்த சமயம், தனிமையில் இருந்தவளை வெற்றி அணுக, பேச்சுவாக்கில் அனைத்தையும் சொல்லி இருந்தாள் சாந்தினி. சொல்லி முடிக்கவும், வெற்றி அவனை இறுக அணைத்து இருந்தான்.



"அழுதிரு சாந்தினி", என்கிற ஒற்றை சொல்லில், அவள் கதறினாலே ஒரு கதறல், இன்றும் வெற்றியின் செவிகளை அவளின் கதறல் சத்தத்தை மறக்க முடியவில்லை.



சொல்லி முடிக்கவும், ஆதர்ஷ் கூட கண்ணீர் சிந்தினான். அவளுக்காக, அவனவளுக்காக!



இத்தனை போராட்டங்களை ஒரு பெண் தனியாக சமாளித்து இருக்கிறாளா?



நினைக்கவே ஆச்சர்யம்?



" அவ பட்ட கஷ்டங்களை நீ நினைச்சி கூட பார்க்க முடியாது ஆதர்ஷ். அவ ஒரு குயின்! எ ஸெல்ப் மேட் குயின்!", என்கவும், ஆதர்ஷின் இதழ்களில் புன்னகை, அவனை அறியாமல் அவனுக்கு கர்வம், அவனின் மகவை சுமந்தவள் அவள், அவனின் குழந்தைகளின் தாய் அவள் தான். ஆனால் அதற்காக மட்டும் அவன் கர்வம் கொள்ள வில்லை.



அவனை ஈர்த்த முதல் பெண், இப்போது அவளின் மீது மொத்தமாக காதல் வயத்தில் இருக்கிறான்.



அவனுக்கு அவள் மீது இரக்கம் வர வில்லை. ஈர்ப்பு தான் வந்தது. அவளின் தைரியம், அவளின் மனவலிமை, அவளின் தாய்மை உணர்வு என்று அனைத்தையும் கண்டு வியந்து நிற்கிறான்.



இந்த கலியுகத்தின் மிக சிறந்த பெண்ணாக இன்று சாந்தினி அவனுக்கு தெரிகிறாள்.



கொற்றவையின் கனிவு, வித்யாவின் தைரியம், வைஷ்ணவியின் இரக்கம் என்று அவனின் மூன்று தாய்களின் ஒன்றாக சேர்த்து அவளுக்கு இருக்கிறது.



அவனுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்?



அவன் ஆருஷை போல் பார்த்து பேசி பழகி காதலிக்க வில்லை, ஆதியை போல் திருமணம் செய்த மனைவியை காதலிக்க வில்லை.



ஆதர்ஷ் சாந்தினியை அவளுக்காக காதலிக்கிறான். அவளின் குணநலன்களை காதலிக்கிறான். அவனின் பிள்ளைகளின் பெற்ற அன்னையை காதலிக்கிறான்.



"என்ன மிஸ்டர் ஆதர்ஷராம் அப்படியே நின்னுகிட்டு இருக்கீங்க? அடுத்த பிளான் என்ன?', என்று கேட்கவும், "அடுத்து என்ன லவர் பாய் ஆதர்ஷா மாற வேண்டியது தான்", என்று அவன் கண்சிமிட்டி சொல்லவும், "சாந்தினி செருப்பால அடிப்பா", என்கவும், "வாங்கிக்குறேன் டா.. என் பொண்டாட்டி தானே", என்று அவன் மீண்டும் கண்சிமிட்டவும், "பொண்டாட்டியா? அவ உன்ன அரக்கன் மாதிரி பாக்குறா நீ அவளுக்கு அரசனாகலாம்னு பாக்குற", என்றான் வெற்றி.



"டேய் அதெல்லாம் லவ்வர்ஸ் கோட்! சீக்கிரம் நீயும் லவ் பண்ணும் போது புரிஞ்சிக்குவ! டாஸ்க் நினைவு இருக்குல்ல?", என்று கேட்கவும், "உண்மை தெரியும் போது அகல்யா என்ன கொல்ல போறா", என்று பற்களை கடித்து கொண்டு அவன் சொல்லவும், "அப்போ நீயும் அவ கால்ல தான் விழணும் மிஸ்டர் வெற்றி வேந்தன்.. வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. எப்படியா இருந்தாலும் நீங்க இன்னும் என் மேல கோவமா தான் இருப்பிங்க... அதையே கண்டின்யு பண்ணிக்கோ.. இதோட ஆதரஷோட லவர் பேஸ் ஸ்டார்ட் ஆகும்", என்றவன் அவனின் இல்லத்தை நோக்கி சென்று விட்டான்.



காமம் இல்லாமல், காதல் இல்லாமல், குழந்தைகளை ஈன்று அன்னை தந்தை ஆகி விட்டனர்.



ஆதர்ஷின் மனதில் காதல் மலர்ந்து விட்டது இனி காமமும் துளிர்க்கும் போது அவனின் நிலை என்னவோ?



சாந்தினியின் மனதை வெல்வானா ஆதர்ஷ்? இருண்ட அவளின் இதயத்தில் வெளிச்சம் ஏற்றுவானா?



அடுத்த அத்தியாயத்தில் இருந்து!
 

அத்தியாயம் 24



ஆதர்ஷ் அன்று வீட்டிற்கு வர, சாந்தினி எதுவும் கேட்க வில்லை. கேட்டால் ஏதாவது எசக்கு பிசகாக ஏதாவது சொல்லுவான் என்று நினைத்து கொண்டாள்.



அடுத்த வந்த ஒரு வாரத்தில் தான் யாழின் கரு கலைந்து விட, மீண்டும் மும்பை பயணம், அவர்கள் இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் குழந்தைகளை கூட்டி கொண்டு மீண்டும் சென்னை வந்து சேர்ந்து இருந்தனர்.



அவர்களுக்கே அவர்கள் குடும்பங்களின் நிலை நினைத்து வருத்தம் தான். ஒரு பக்கம் யாழின் இழப்பு சாந்தினியை வாட்டி எடுத்தாலும் அவளுக்கு ஆதியின் மீது நிறைய நம்பிக்கை இருந்தது தான். அவன் யாழிற்காக ஏங்கியது இன்னும் அவளின் கண்களில் நின்றது.



அதே தவிப்பை தானே அவள் ஆருஷின் கண்களில் பார்த்தாள்.



அவளின் முன் ஒரு கிளாஸ் நீட்ட பட்டது. நிமிர்ந்து பார்த்தாள். ஆதர்ஷ் தான் நின்று இருந்தான்.



"என்ன?", என்று கேட்கவும், "தண்ணி குடி.. என்னை திட்டி திட்டி டையர்ட் ஆகி இருப்ப தானே?", என்று கேட்கவும், அவளுக்கோ அவனிடம் வாதாட எல்லாம் இப்போது தெம்பு இல்லை.



தண்ணீரை வாங்கி குடித்து இருந்தாள்.



"சரி நான் என் வீட்டுக்கு கிளம்புறேன்", என்று அவள் கிளம்ப போகவும், அவளின் கையை பிடித்து தடுத்து இருந்தான் ஆதர்ஷ்.



அவளோ அவனை அதிர்ச்சியாக பார்க்கவும், "இல்ல பசங்க இவளோ நாள் உன்கூடவே இருந்துட்டாங்க... நீ இங்கயே இருந்துறேன்", என்றவுடன் அவளின் கண்கள் விரிந்தன.



"ஐ மீன் நீயும் தாராணியும் இரண்டு பேரும் இங்க ஷிபிட் ஆகிருங்க.. எதுக்கு வேஸ்ட்டா அந்த வீடு? பசங்களும் உன்கூட இருப்பாங்க இல்ல", என்று அவன் முடிக்கும் முதலே, அவளின் கையை கிள்ளி பார்த்து இருந்தாள்.



'ஆஹ்', வலித்தது தான் அவளுக்கு, அப்போது தான் இது கனவல்ல நிஜம் என்று அவளுக்கு புரிந்தது. உண்மையாகவே ஆதர்ஷ் தான் அவளிடம் இப்படி பேசுகிறானா என்று தோன்றியது.



"உங்களுக்கு ஒன்னும் இல்லையே? ஆர் யு ஆல்ரைட்? டாக்டர் கிட்ட போகலாமா?", என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டாள்.



பின்னே, எப்போதும் அவள் மீது எரிந்து விழுபவன், இப்படி ஓவர் நைட்டில் நல்லவனாக அவளிடம் பேசினால் அவளுக்கு என்னவென்று தோன்றும்?



"நான் நல்லா தான் இருக்கேன். ஜஸ்ட் ஒரு சஜஷன் தான். வேணும்னா இரு.. இல்லனா கிளம்பு.. அண்ட் உன்ன பேயிங் கெஸ்ட்டா தான் இருக்க சொல்றேன்... ஒன்னும் என் வைப்பா இல்ல", என்று அவனின் கெத்து குறைந்து விட கூடாது என்று பேசினான்.



மனதிற்குள், "ஐயோ இவ வேற இன்வெஸ்டிகஷன் பண்ணிக்கிட்டு இருக்கா? வீட்டுக்கு ஷிபிட் ஆகுறேன்னு ஓத்துக்கோ டி சாந்து பேபி", என்று நினைத்து கொண்டான்.



"நான் தாரணி கிட்ட பேசிட்டு சொல்றேன்", என்றவள் தாரணியிடம் சென்று கலந்து உரையாடினாள்.



"நம்ப ஆதர்ஷ் வீட்டுக்கு ஷிபிட் ஆகலாமா?", என்று கேட்கவும், "ஐயோ மேம் நீங்களும் சாரும் லிவ் இன்ல இருக்க போறிங்களா?", என்று கேட்கவும், "வாட்?", என்று கேட்டே விட்டாள்.



"இல்ல பேபீஸ் இரண்டு பேரும் உங்கள அம்மானு கூப்பிட்றாங்க அதான்", என்று அவள் தயங்கி நிற்க, "அவங்க என் பசங்க தான்", என்று முடித்து கொண்டாள்.



தாராணிக்கு தான் தலையை பிய்த்து கொள்ளலாமா என்று இருந்தது.



அவளது பிள்ளைகளா? எப்படி ஆதரிஷிடம்? அப்போது திருமணம் ஆகி பிரிந்து இருக்கிறார்களா என்று அவளின் மனதில் ஆயிரம் கேள்விகள்.



ஆனால் வெளிப்படையாக அவளிடம் கேட்க முடியாதே, ஆதரிஷிடமும் கேட்க முடியாது.



கேட்க கூடிய ஒரு ஏமாந்த பிள்ளை அர்னவ் தான். கடந்த நாட்களில் அவனும் அவளிடம் நன்றாக தான் பேச துவங்கி இருந்தான். அவளுடன் நன்றாக உரையாடும் ஒரே தோழன் என்று கூறலாம். ஆனாலும் அவள் சைட் அடிப்பதை விடவில்லை.



அன்று மாலையே இருவரும் ஆதர்ஷின் வீட்டிற்கு சென்று விட்டனர்.



லக்ஷித் மற்றும் லயனிக்காவிற்கு தான் சந்தோஷம் தாங்கவில்லை.



"வாவ் மம்மி எங்க கூடவே இருக்க போறிங்களா?", என்று துள்ளி குதித்து ஒரு வழி செய்து விட்டனர்.



ஆனால் ஆதர்ஷின் தீடீர் மாற்றம் சாந்தினியின் மனதை அரித்து கொண்டு தான் இருந்தது.



இருந்தாலும் பிள்ளைகளுக்காக அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுடன் நேரம் செலவழிக்க துவங்கி இருந்தாள்.



எத்தனை நாட்கள் அவளை இங்கே இருக்க விடுவான் என்று தெரியாதே! வேதாளம் மறுபடி முருங்கைமரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என்று அவளின் மனம் அடிக்கடி அவளை கேள்வி கேட்கும். இருக்கும் வரையில் வாழ்ந்து கொள்ள வேண்டியது தான் என்று சமாதானம் செய்து கொண்டாள்.



ஒரு வாரம் கடந்து இருக்கும், பிள்ளைகளை இப்போதெல்லாம் பள்ளியில் இருந்து அவளே அழைத்து வந்தாள்.



பிள்ளைகளின் பள்ளியிலும், அவள் தான் அன்னை என்று பிள்ளைகள் கூப்பிடுவதால், பிரச்சனை இல்லாமல் போய் விட்டது.



பள்ளியில் இருந்து வந்த பிள்ளைகளோ, "மம்மி விளையாடலாம்" என்று அவளை இழுத்து கொண்டு வெளியே சென்று விட்டனர்.



அப்போது தான் வீட்டிற்கு வந்து இருந்தான் ஆதர்ஷ். அவனின் உடையை மாற்றியவன் அவனின் குடும்பத்தை தான் தேடி கொண்டு இருந்தான்.



வெளியில் பிள்ளைகளின் சத்தம் கேட்க, அங்கே அவனின் கால்கள் தன்னிச்சையாக சென்றது.



வெளியில் பிள்ளைகளுடன் கண்கட்டி விளையாடி கொண்டிருப்பவளை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதர்ஷ்.



இப்போதெல்லாம் அவளை ரசித்தது அவனின் கண்கள், ருசிக்கவும் மனம் ஏங்கியது.



அவனின் முப்பது வருட வாழ்க்கையில், முதல் முறை அவளை பார்க்கும் போது அவனின் ஹோர்மோன்கள் தாறுமாறாக குத்தாட்டம் போட்டது.



அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவளை முதல் முறை பார்க்கும் போது அவளின் ஆளுமையை மெச்சியவன், இன்று எல்லா உண்மைகளும் தெரிந்து கொண்டு அவளை மொத்தமாக நேசிக்க துவங்கி இருந்தான்.



கண்களை கட்டி கொண்டு அவள் நடந்து செல்ல, அவள் சென்ற பாதையில் ஒரு முள்ளு செடி இருந்தது. அவளின் பின்னால் பிள்ளைகள் இருந்ததால் அவர்களுக்கு தெரியவில்லை.



என்ன நினைத்தானோ, அவளின் அருகில் சென்றவன் அவளை பின்புறத்தில் இருந்து அணைத்து கொண்டான், அதே சமயம் வான்மகள் மழையை தூவ துவங்கினாள்.



"ஆதர்ஷ் என்ன பண்றீங்க?", என்று சொல்லிக்கொண்டே அவள் அவனை விட்டு விலக முற்பட, "முன்னாடி முள் செடி இருக்கு டி", என்றவனின் குரலில் அத்தனை மென்மை.



"அத நீங்க சொல்லி இருக்கலாமே, எதுக்கு இப்படி பின்னாடில இருந்து கட்டிபுடிக்கிறிங்க?", என்று அவள் சரியாக கேட்க, காதல் வந்தால் கள்ளமும் சேர்ந்து வந்து விடும் அல்லவா, குரலை செறுமியவன், "உனக்கு அடிபட்டுற போதுன்னு தான்", என்று அவன் இழுக்க, "ஆல்ரெடி நிறைய அடி பட்டுட்டேன்", என்று சொன்னவள் குரல் தழுதழுத்தது.



"இனி நான் இருக்கிறவரை உன் மேல ஒரு அடி கூட பட விடமாட்டேன்", என்று சொன்னவனின் குரலில் உறுதியா இல்லை அவன் அவளுக்கு கொடுக்கும் வாக்குறுதியா என்று அவனே அறிவான்.



பிள்ளைகள் மழை பெய்ய துவங்கியதால் உள்ளே சென்று விட்டனர்.



"நீங்களே என்ன நிறைய அடிச்சி இருக்கீங்க... அதுவும் வார்தைகளால நினைவு இருக்கா?", என்று கேட்கும் போதே அவளின் இதழ்களில் விரக்தி புன்னகை.



அவனுக்கோ செருப்பால் அடித்த உணர்வு. சட்டென விலகி விட்டான். உண்மை தானே, அவளை வலிக்க வலிக்க அடித்து இருக்கிறான்.



எத்தனை கடும் சொற்களை அவளின் மீது பிரயோகம் படுத்தி இருக்கிறான்.



அவற்றை எல்லாம் சமாளித்து அவனின் முன் இன்றும் கம்பீரம் குறையாமல் நிற்கிறாள் அவள் அல்லவா சிங்கப்பெண்!



'உண்மை தான்.... நானும் உன்ன அடிச்சி இருக்கேன்... அதுவும் வலிக்க வலிக்க அடிச்சி இருக்கேன்.. உன்னை பத்தி தப்பா பேசி இருக்கேன்... ஆனா அதுக்கு சாரினு சொன்னா மட்டும் கண்டிப்பா போதாது.. சாரினு கேட்டா நான் சொன்னதெல்லாம் இல்லனும் ஆகிடாதே.. நான் சொன்ன எல்லாத்தையும் மறக்க வச்சி உனக்கு புது மெமோரிஸ் கொடுக்குறேன்...இப்போதைக்கு இத மட்டும் எனக்கு சொல்ல முடியும்", என்று மென்மையாக பேசினான்.



இப்படி எல்லாம் அவனுக்கு பேச தெரியுமா? என்று நினைத்தவள், "நீங்க சரி இல்ல", என்று அவள் கண்ணின் கட்டை அவிழ்த்து விட்டாள்.



"உண்மையா சொல்லுங்க, ஏதோ நடந்து இருக்கு.. என்கிட்ட இருந்து என்ன மறைக்குறிங்க?", என்று கேட்டே விட்டாள்.



அவளுக்கு அவனின் மாற்றமே நிறைய எடுத்து உரைத்தது.



"மிஸ்டர் பிரகாஷ் இப்போ உயிரோட இல்ல", என்று சொன்னவுடன் அவளுக்கோ அதிர்ச்சி.



"என்ன சொல்றிங்க?", என்று அதிர்ந்து விட்டாள்.



மழையில் வேறு முழுமையாக நனைந்து இருந்தார்கள்.



அது கூட அறியாமல் பேசிக்கொண்டே இருந்தனர்.



அவனுக்கும் அவளிடம் எதையும் மறைக்கும் எண்ணம் இல்லை. வெற்றியின் விடயத்தை தவிர, எல்லாவற்றையும் சொல்லி இருந்தான்.



"சாரி சாந்தினி ", என்று முடித்து இருந்தான்.



அவள் அப்படியே கற்சிலை போல தான் நின்று இருந்தான்.



"ஏதாச்சு சொல்லு சாந்தினி", என்று அவன் அவளின் தோளை பற்றவும், "என்ன சொல்றது மிஸ்டர் ஆதர்ஷ்? கண்ணு கேட்டதுக்கு அப்புறம் சூரிய நமஸ்காரம்... மிஸ்டர் ஆதர்ஷராம் கண்ணை திறக்க இரண்டு உயிர் பலி ஆகியிருக்கு...பாவம் சுப்ரியா... உங்கள எவளோ நம்புனா தெரியுமா? என் கிட்ட கூட உங்கள பத்தி நிறைய நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கா.. உங்களுக்கு தெரியவே தெரியாது அவளுக்கு கென்செர்னு தெரிஞ்சி இருந்தா.. நீங்க அவளை கைல தாங்கி இருப்பிங்கனு சொன்னா", என்றவுடன், மொத்தமாக நொறுங்கி விட்டான் ஆதர்ஷ்.



"எத்தனையோ நாள் அவ இறந்த பிறகு நான் நினைச்சி இருக்கேன்... எனக்கு பொண்ணா சுப்ரியா பிறந்தா நல்லா இருக்குமேன்னு... ஆனா கடவுள் எனக்கு அந்த ஆசைய கூட நிறைவேத்தல", என்றவள் உடைந்து தான் விட்டாள்.



அவள் உடைந்து அழும் மூன்றாவது நபர், "தளிருக்கு பின், வெற்றி, இன்று ஆதர்ஷ், அவளை அல்லி அவனுடன் அணைத்து கொண்டான் ஆதர்ஷ்.



அவனுக்கும் அந்த அணைப்பு தேவை பட்டது. எவ்வளவு நேரம், அப்படியே நின்று இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.



மழையும் நின்று விட்டது. "மம்மி டாடி", என்று பிள்ளைகளின் அழைப்பில் சுயம் பெற்றவர்கள், சட்டென பிரிந்து கொண்டனர்.



அவளின் உடை மொத்தமும் நனைந்து அவளின் அழகை அப்பட்டமாய் காட்ட, ஆதர்ஷின் கண்களும் அவளை வரை முறை இன்றி மேய்ந்தன.



"பொறுக்கி", என்று முணுமுணுத்தவள், அப்படியே சென்று விட்டாள்.



"உனக்கு என்னைக்கும் பொறுக்கி தான் டி" என்று கத்தி கூறினான் ஆதர்ஷ்.



முப்பது வயதில் அவன் பதினாறு வயது பிள்ளையாக மாறி இருந்தான்.



அவனின் மனதை மொத்தமாக கொள்ளை இட்டு இருந்தாள் சாந்தினி.



ஆனாலும் அவனுக்கு சுப்ரியாவிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.



அவனுக்கு தீடீரென்று ஒரு எண்ணம். நாளையே அதை செயல் படுத்தவும் முடிவெடுத்து இருந்தான்.



அடுத்த நாள் விடிய, சாந்தினி, அர்னவ் மற்றும் தாரணி அனைவரையும் அவனின் கேபினிற்கு அழைத்தான் ஆதர்ஷ்.



அவர்களும் வர, அவனின் திட்டத்தை சொல்ல துவங்கினான். அவர்கள் மூவரின் கண்களும் விரிந்தன.
 
Last edited:

அத்தியாயம் 25



"எனக்கு ஒரு பிளான் இருக்கு... நீங்க இன்டெரெஸ்ட்டா இருந்தா இந்த ப்ராஜெக்ட்டும் சேர்ந்து பண்ணலாம். சுப்ரியாக்கு ஒரு ஆசை இருந்துது, நம்ப கவர்ன்மெண்ட் கொடுக்குற மதிய உணவு திட்டத்துல கொடுக்குற காண்ட்ராக்ட் நம்ப எடுக்கலாம்.. வி கேன் கிவ் ஆர்கானிக் பூட்ஸ் டு ஸ்டுடென்ட்ஸ்.. கொஞ்சம் பெரிய காண்ட்ராக்ட் நம்ப நிறைய கவர்ன்மெண்ட் அபிஷியல்ஸ் கிட்ட பேசணும்.. அதெல்லாம் நான் ருத்ரன் அப்பா வச்சி மூவ் பணிக்குறேன்.. நீங்க என்ன நினைக்குறிங்க?", என்று அவன் கேட்கவும், அவர்கள் மூவரின் கண்களும் விரிந்தன.



இது ஒன்றும் சாதாரணமான விடயம் இல்லையே!



"இது ரொம்ப பெரிய காண்ட்ராக்ட்டா இருக்கும் ஆதர்ஷ்.. நீங்க யோசிச்சி தான் பேசுறிங்களா?", என்று கேட்டே விட்டாள் சாந்தினி.



"அதுவும் நம்ப ஒன்னும் அவளோ டெவெலப் ஆகலேயே", என்று அர்னவ் சொல்லவும், "டெவெலப்மென்ட் நம்ப தான் நம்பள பண்ணிக்கணும்.. நம்ப எடுத்ததும் மொத்த தமிழ்நாட்டுக்கும் கொடுக்க வேண்டாம். ஒரு ஒரு செக்டர் மாறி ட்ரை பண்ணலாம்", என்கவும், அவர்களுக்கும் அது சரியாக தான் பட்டது.



நல்ல விடயம் தானே அவன் சொல்வதும், "சரி ஆதர்ஷ், வி கேன் ஒர்க்" என்று சாந்தினி சொல்லவும், 'நீங்க ரொம்ப கிரேட் சார்", என்று தாரணி வாய் விட்டு பாராட்ட, "நான் இல்ல இது என்னோட பிரண்ட் ஐடியா தான்... அவங்க தான் கிரேட்", என்றவனின் மனதில் சுப்ரியாவின் எண்ணம் தான். அவளின் ஆத்மா சாந்தி அடைந்து அடுத்த பிறவியிலாவது அவளை நேசிப்பவனுக்கு துணைவி ஆகி அவள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டான்.



அன்றைய நாள் மாலை பிள்ளைகளை சாந்தினி மற்றும் ஆதர்ஷ் இருவரும் தான் பள்ளியில் இருந்து கூட்டி கொண்டு வந்தனர்.



பிள்ளைகள் இருவரும், "வாங்க மம்மி டாடி விளையாடலாம்", என்று இழுத்து கொண்டு சென்று விட்டனர்.



அன்று அர்னவ்வை இரவு உணவிற்கு ஆதர்ஷ் அழைத்து இருக்க, அவனும் தாராணியும் நின்று பிள்ளைகளுடன் அவர்கள் விளையாடுவதை பார்த்து கொண்டு இருந்தனர்.



"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்', என்ற தாராணியை புருவம் சுருக்கி பார்த்தான் அவன்.



"கேளு", என்று அவன் சொல்லிவிட்டு மீண்டும் பிள்ளைகளை பார்க்க முகத்தை திருப்பி கொண்டான்.



இப்போதெல்லாம் அவனை அவள் ரசிப்பதில்லை என்கிற கோவம். அவளோ அவனை நண்பனாக பார்க்க ஆரம்பித்து இருந்தாள். கொஞ்சம் அவளுக்கு அவள் மீதே தாழ்வு மனப்பான்மையும் இருந்தது. அவன் உயரம் எங்கே அவள் எங்கே என்று நினைக்க துவங்கி இருந்தாள்.



"என்ன உங்க பாசும் என் பாசும் புருஷன் பொண்டாட்டியா?", என்று தாரணி அர்னவிடம் கேட்க, "அவங்களுக்கு கல்யாணம் ஆகலை", என்று பட்டென்று சொன்னான் .



"அப்போ குழந்தைங்க?", என்று அவள் அதிர்ச்சியாக அவனை பார்க்க, "அதெல்லாம் அப்படி தான்", என்றவனிடம், "என்ன அப்படி தான் அப்போ என்ன உன் பாஸ் சூரிய பாகவனா எதுமே பண்ணாம குழந்தை வரம் குடுக்க, இல்ல என் பாஸ் தான் குந்தி தேவியா?", என்றவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தான்.



"அவங்க அதுக்கும் மேல", என்றவனிடம், "அதுக்கும் மேலானா விட்டா பாக்கவே இல்ல குழந்தை வந்துருச்சுனு சொல்லுவ போல", என்று அவள் சொல்லி முடிக்கும் போதே, "ஆமா பார்க்காம தான் குழந்தைங்க வந்தாங்க", என்றானே பார்க்கலாம், "ஏதே", என்று அவளின் கண்கள் விரிந்தது.



அவர்களுக்கு முன்னால் தான் சாந்தினியும் ஆதர்ஷும் நின்றிருந்தார்கள். பக்கத்தில் அவர்களின் இரு குழந்தைகளும் உடன் இருந்தார்கள்.



"டாடி நீங்க ஏன் மம்மிக்கு கிஸ் கொடுக்கவே மாற்றிங்க?", என்று லயா வினவ, "என்ன பேச்சு பேசுற?", என்று சாந்தினி அவளிடம் கண்டிப்பு காட்டினாள்.



"மம்மி எங்க பிரண்ட்ஸ்லாம் சொல்ராங்க அவங்க மம்மி டாடிலாம் கிஸ் பண்றங்களாம்" என்று லக்ஷித்தும் அவனின் சகோதரிக்கு ஆதரவாக பேச, "நானும் உங்க டாடியும் கிஸ்லாம் பண்ண மாட்டோம்", என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவளின் கன்னத்தில் இதழ் பதித்து இருந்தான் ஆதர்ஷராம்.



சாந்தினிக்கோ அதிர்ச்சி. அவனை திரும்பி முறைத்தவள், "பசங்க இருக்காங்களே பார்க்குறேன்", என்று அவள் பற்களை கடித்து கொண்டு கூற, "நானும் பசங்க இருக்காங்களேன்னு தான் பார்த்தேன் இல்லனா கன்னத்துல கிஸ் பன்னிற்க மாட்டேன்", என்று அவளின் இதழை பார்த்து கொண்டு கூறினான்.



பிள்ளைகளோ, "ஹை டாடி மம்மிக்கு கிஸ் கொடுத்திட்டாரு", என்று துள்ளி குதித்தனர்.



அவளோ பற்களை கடித்து கொண்டு அவனை பார்த்தான்.



அதற்குள் லயாவோ, ஆதர்ஷின் போனை எடுத்து வந்து, "டாடி ஒன்ஸ் மோர்", என்று கேட்க, சாந்தினியோ, "வேண்டா ஆதர்ஷ்", என்று விலகி செல்ல முற்படவும், மீண்டும் அவளின் இடையை பற்றி, அவளின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அதை அழகாக படம் எடுத்து இருந்தாள் குழந்தை.



எடுத்தவள் அதை ஆருஷ் மற்றும் ஆதிக்கும் அனுப்பி வைத்து இருந்தாள். சிறு வயதில் இருந்தே எந்த புகை படம் எடுத்தாலும் அவர்களுக்கு அனுப்புவதை பழக்கி விட்டு இருந்தான் ஆதர்ஷ். அது அவனுக்கே வினையாக இன்று முடிந்து இருந்தது.



அதற்குள் இங்கே இருக்கும் தாராணியோ, "என்ன இப்படி ஒப்பண்ணா கிஸ் பன்றாரு?", என்று கண் விரித்து கேட்க, "இதுல என்ன இருக்கு? குழந்தைங்களே இருக்கு கிஸ் தானே பண்ணிக்கட்டும்", என்று அர்னவ் சாதாரணமாக சொல்லவும், "என்ன இப்படி சொல்றிங்க? கிஸ் பண்றது சாதாரண விஷயமா?", என்றவளை பார்த்து, "அப்படி என்ன கஷ்டம் கிஸ் பண்றதுல?", என்று கேட்டவன், அவளுக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்க வில்லை, அவனே கன்னத்தில் முத்தம் கொடுத்து இருந்தான்.



அவளுக்கோ அதிர்ச்சி, "என்ன இப்படி கிஸ் பண்றீங்க?" என்றவளை பார்த்து, "மேடம் அன்னைக்கு நீங்க ஆபீஸ்ல கிஸ் பண்ணாத நியாபகம்", என்று அவன் புருவம் உயர்த்தி கேட்கவும், "அது ஏதோ அறியாத வயசுல தெரியாம பண்ணிட்டேன்.. இப்போ அப்படி இல்ல.. நீங்க எவளோ ஹண்ட்ஸாம் நான் எப்படி பப்லி மாஸ் மாறி இருக்கேன்", என்று கேட்கவும், அவளுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் தான் அவள் அவனை தள்ளி வைத்து இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டான் அர்னவ்.



"எனக்கு சப்பி பொண்ணுங்க தான் பிடிக்கும்.. அவங்கள தான் இப்படி புடிச்சி இழுத்து...", என்றவன் அவளின் இடையை இழுத்து பற்றி, அவளின் கன்னம் தாங்கி அவள் சுதாரிக்கும் முன் அவளின் இதழை அவன் வசம் ஆக்கி இருந்தான்.



நல்ல வேலை யாரும் பார்க்க வில்லை.



"இப்படி கிஸ் பண்ண வசதியா இருக்கும்", என்று அவன் நெற்றி முட்டி சொல்லவும், அவளுக்கு என்ன நடந்தது என்று கிரக்கிகவே நேரம் எடுத்தது.



"ஹே தாரு... நீ ரொம்ப அழகா இருக்க டி.. என் பப்லி மாஸ்", என்றவன் சொல்லவும், அவனுள் புதைந்து இருந்தாள் அர்னவ்வின் தாரணி.



இதே சமயம், ஆதர்ஷின் போன் அலறியது.



ஆதி மற்றும் ஆருஷ் இருவருமே சேர்ந்து அழைத்து இருந்தனர்.



ஆதிக்கு என்ன தான் ஆதர்ஷ் அவனுக்காக நிற்கவில்லை என்கிற கோவம் இருந்தாலும், அவனின் சகோதரினின் வாழ்க்கை சாந்தினியுடன் துவங்க போவதை நினைத்து அவனுக்கு சந்தோஷம் தாங்க வில்லை.



சாந்தினி பிள்ளைகளை கூட்டி கொண்டு உள்ளே சென்று விட, ஆதர்ஷ் போனை எடுத்து, "என்ன இரண்டு பேரும் கால் பண்ணிருக்கீங்க?", என்று கேட்கவும், "டேய் ஆது.. என்ன டா இப்படி பசங்க முன்னாடியே கிஸ் பண்ற?", என்று ஆருஷ் கேட்கவும், அவனுக்கு தூக்கி வாரி போட்டது.



அப்போது தான் அவசரமாக அவனின் வாட்சப் எடுத்து பார்த்தான். அவர்கள் மூவரும் இருக்கும் குரூப்பில் அந்த புகைப்படம் ஷேர் செய்ய பட்டு இருந்தது.



"டேய் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்த இப்போ தானே தெரியுது இந்த பூனை பீர் விஸ்கி எல்லாமே குடிக்கும்னு...", என்று ஆதியும் காலை வார, "அடேய் என்ன டா இப்போ? டேய் ஆருஷ் நீ ஒன்னுமே பண்ணமா தான் இப்போ தளிர் மாசமா இருக்காளா? அப்புறம் ஆதி சார் நீங்க பேசவே பேசாதீங்க.. மது சொன்னா நீ எப்படி கதவை கூட சாத்தாம உன் மாமியார் வீட்ல கிஸ் அடிச்சன்னு... நான் வெறும் கன்னத்துல தான் டா கிஸ் பண்ணேன்", என்று சமாளித்தான்.



அவர்கள் விடுவார்களா? "ஓஹ் அப்போ சாருக்கு அப்படி வேற எண்ணம் இருக்கு! எப்போ நாங்க மூணாவது ரிலீஸ் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்?", என்று ஆருஷ் கேட்கவும், "எங்களுக்கு என்னைக்கும் இரண்டு குழந்தை தான்..", என்றவன், சாந்தினியின் நிலையை சொல்லவும், ஆதி மற்றும் ஆருஷ் இருவருக்குமே பாவமாக இருந்தது.



ஆருஷிற்கு இப்போது இன்னும் குற்ற உணர்வு. அன்று தளிர் அப்படி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்கான காரணம் இப்போது அவனுக்கு இன்னும் மனதில் அரித்தது.



"ஐ பீல் சோ பேட்... சாந்தினி உண்மையாவே ஒரு டைகரஸ் டா", என்று ஆதி சொல்லவும், "நீ அவளை கொஞ்சமாச்சு நல்லா வச்சிக்கோ டா ஆது... உண்மையாவே அவளை எப்படி பேஸ் பண்ண போறேன்னு தெரியல", என்று ஆருஷ் சொல்லவும், "அதெல்லாம் நீ தளிரை நல்லா வச்சிக்கோ அவ உன்ன மன்னிச்சிருவா... என்ன தான் என்னயெல்லாம் பண்ண போராளோனு நினைச்சா நெஞ்சு வலிக்குது டா", என்று ஆதர்ஷ் சொல்ல, "நீ அனுபவை ராசா... நீங்க தான் தி கிரேட் ஆதர்ஷராம் ஆச்சே.. நீங்க சொன்ன தான் எட்டு திக்கும் கேட்கும்.. மழை கூட பெய்யுனா பெய்யும்.. நில்லுன்னா நிக்குமே", என்று ஆதி அவனை கலாய்த்து விட்டான்.



ஆருஷும் சிரித்து விட்டான்.



"டேய் நீ அவ கூட கிளோஸ் ஆகிட்டேனு வச்சி செய்றல?", என்று ஆதர்ஷ் பற்களை கடித்து கொண்டு கேட்கவும், "கண்டிப்பா.. நானே சாந்தினி கிட்ட போய்..இவன மட்டும் நம்பாத சாந்தினி ஒண்ணா நம்பர் பிராட்னு சொல்றேன்", என்றவனிடம், "நானும் போய் யாழ் கிட்ட... இவன டிவோர்ஸ் பண்ணிடு நான் நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்குறேனு சொல்றேன்...", என்றானே பார்க்கலாம்!



ஆனால் அதற்கெல்லாம் ஆதி அசரவே இல்லை.



"டேய் நீ அதெல்லாம் பண்றதுக்குள்ள, நான் திருப்பி விதை விதைச்சு காட்டுறேன் பாரு டா", என்று சாவல் விட்டுட்டு, "டேய் ஆரு, நீ செப்பா இருக்க டா, பொண்ண கல்யாணம் பண்ணிட்ட... குழந்தைக்கு குழந்தையும் வர போகுது", என்று ஆதி சொல்லவும், "டேய் அவன் நம்ப கிட்ட வாங்காத திட்டா?", என்ற ஆதரிஷிடம், "டேய் உங்க மூணு பேருலயே எனக்கு தான் டா பொங்கல் அதிகம்... என்ன திட்டு எல்லாமே கிறீன் ஒர்டஸ்", என்றதும் மூவரும் ஒன்றாக சிரித்து விட்டார்கள்.



பின்பு சிறிது நேரம் பேசிவிட்டு வைத்து விட்டார்கள்.



ஆதர்ஷும் அவனின் அறைக்கு வர, அங்கு அவன் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நின்று விட்டான்.
 

அத்தியாயம் 26



பிள்ளைகள் உடை மாற்றி கொண்டு விளையாடி கொண்டிருக்கவும், சாந்தினி, "நானும் குளிச்சிட்டு வரேன்... போகும் போது ரூமை லாக் பண்ணிட்டு போங்க", என்று சாந்தினி சொல்வதை அவர்கள் காதில் வாங்கவே இல்லை.



போனில் விளையாடுவதில் குறியாக இருக்கவும், சாந்தினியோ பிள்ளைகள் லாக் செய்து விட்டு தான் சென்று இருப்பார்கள் என்று பாத்ரோப் மற்றும் டவல் எடுத்து கொண்டு தான் குளிக்க சென்றாள்.



அவள் குளித்து முடித்து வெளியே வந்து தலையை துவட்டி கொண்டு இருக்கும் சமயம் தான் உள்ளே நுழைந்து இருந்தான் ஆதர்ஷ்.



அவளின் பாத்ரோப் வெறும் தொடை அளவே இருக்க, அவளின் பளிங்கு கால் அவனுக்கு பளிச் என்று விருந்தாகி கொண்டு இருந்தது.



அதுவும் அவள் அப்படியே திரும்ப அவனுக்கு மூச்சே அடைத்து விட்டது. கதவு தாழிடப்பட்டிருப்பதாக நினைத்து அவள் சரியாக பாத்ரோபை கட்ட வில்லை. அவள் முன்னழகில் பாதி அவனின் கண்களில் பட்டு விட, ஆண்மகன் அவன் தான் திண்டாடி விட்டான்.



சட்டென திரும்பியவன், "கதவை மூடிட்டு டிரஸ் மாத்த மாட்டியா?", என்று அவன் கேட்கவும் தான், அவள் அவன் இருப்பதையே உணர்ந்தாள்.



"நீங்க எப்படி உள்ள வந்திங்க?", என்று அவள் கத்தவும், "ரூம் லாக் ஆகல", என்றவன் எச்சில் விழுங்கினான்.



அவன் மனக்கண்ணில் இன்னும் அவனின் முன்னழகு தான் நின்று இருந்தது.



"எனக்குன்னே வரா, நல்லா பால்கோவா மாறி இருக்காளே! இப்போ ஒண்ணுமே அதுல வராதே! மிஸ் பண்ணிட்டேன்", என்று அவன் மனம் தறிகெட்டு ஓட, அவனோ தலையை உலுக்கி கொண்டு, "ச்ச ஆதர்ஷ் என்ன டா இப்படி இறங்கிட்ட? நீ அவளோ வீக்கா? இல்ல இவ முன்னாடி மட்டும் வீக் ஆகிடுறியா?", என்று அவனே சமன் செய்து கொண்டு, "நான் வெளிய போறேன்", என்றவன், அப்படியே செல்ல முற்பட, அவனின் காலும் செல்ல வில்லை, அவனும் செல்ல வில்லை.



இங்கோ சாந்தினியின் மனமோ, "ஐயோ என்ன தான் வச்சி செய்வான், மயக்க பாக்குறேன் அதான் இப்படி அரைகுறையா நிக்குறேன்னு இவனே கதை கட்ட போறான்", என்று அவள் தலையில் அடித்து கொள்ள, அவன் சென்றால் தானே!



"ஆதர்ஷ் வெளிய போங்க..", என்று அவள் சொல்லி முடிக்கவும், அவனோ இரண்டே அடியில் அவளை நெருங்கியவன், அவளின் கன்னம் பற்ற, அவளின் கண்கள் விரிந்தன.



அவன் அவளுக்கு யோசிக்க கூட நேரம் வழங்க வில்லை, அப்படியே அவளின் இதழ்களை சுவைக்க துவங்கி இருந்தான்.



அவளோ கைகளால் அவனை அடிக்க, அவனோ பலம் பொருந்திய ஆண்மகன், ஆதலால் மட்டும் அவளால் அவனை தள்ள முடியவில்லையா? இல்லை அவள் ஆழ்மனதில் அவனுக்காக இருக்கும் காதலால் தள்ள முடியவில்லையா என்று சாந்தினிக்கு மட்டுமே தெரியும்!



ஆம் காதலிக்கிறாள். அவனை பார்க்காமலே காதலிக்க துவங்கி இருந்தாள். சுப்ரியா எப்பொழுதெல்லாம் அவனை பற்றி பேசுகிறாளோ, அப்போதெல்லாம், "இப்படி ஒரு கணவன் தனக்கு வாய்த்தால் நன்றாக இருக்குமே", என்று எண்ணி இருக்கிறாள்.



ஆனால் அடுத்தவள் கணவனை பற்றி அப்படி நினைப்பது குற்றம் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவள் ஆதர்ஷனை பற்றி பேசும்போதெல்லாம் சாந்தினியின் கண்கள் மின்னுவதை சுப்ரியாவும் பார்த்து தான் இருக்கிறாள்.



அவளும் அதற்கு தானே ஆசை பட்டாள். ஆதர்ஷனை குழந்தையுடன் பார்க்கும் போது, அவளுக்கும் அவனின் மீது ஈர்ப்பு தோன்றியது உண்மை தான். அவளும் பெண் தானே, உணர்வுகளை கட்டி வைத்து இருக்கிறாளே தவிர, உணர்வுகள் எழாமல் இல்லை.



ஆனால் அதை மொத்தமாக அவனின் வார்த்தைகளால் அவன் தான் கொன்று புதைத்து இருந்தான்.



அவளுக்கு அவனின் மீது கோவம் இருந்தாலும், ஒரு பக்கம் காதலும் இருந்ததே, குழந்தைகளை எங்கே ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று அரண்மனை போல வீட்டை விட்டு, இங்கு இருக்கிறான். அவளுக்கு இப்போது தான் தளிர் சொல்லி இருந்தாள்.



அவளுக்கு அவனின் மேல் மரியாதை இருந்தது. இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு அவனே அனைத்தும் செய்து கொண்டு இருக்கிறான்.



லயனிக்கா கூட சொல்லி இருந்தாள் தான், "டாடி தான் நிறைய சமைச்சி கொடுப்பாரு மம்மி" எனும் போதே அவன் எவ்வளவு தூரம் பிள்ளைகளுக்காக இறங்கி வந்து இருக்கிறான் என்று தோன்றியது.



காதலால் நிகழாத திருமணம், காமத்தை சுவைக்காமல் பிறந்த பிள்ளைகள், ஆனாலும் அவனின் உதிரம் எனும் ஒரே காரணத்திற்காக அனைத்தையும் ஒதுக்கி, அனைவரையும் ஒதுக்கி விட்டு வந்து இருக்கிறான்.



அவன் கோவக்காரன் தான், ஆனால் குணத்தில் என்றுமே தங்கம் தான்.



ஆருஷை விட, ஆதியை விட மிக மிக நல்லவன்.



ஒரு கட்டத்தில் அவளும் அவனுள் அடங்கி தான் போய்விட்டாள்.



"டாடி மம்மி", என்று பிள்ளைகளின் சத்தத்தில், மீண்டும் அவளுக்கு சுயநினைவு வர, இந்த முறை பிரித்தே ஆக வேண்டும் என்று அவனை தள்ளி விட்டு இருந்தாள். ஆனால் அவனை இதழ்களை விட்டு மட்டும் தான் பிரிக்க முடிந்தது.



அவனோ மோகம் கலைந்த உணர்வில் கோவமாக இருக்க, சாந்தினியோ எதையோ உணர்ந்து கீழே குனிந்தவளுக்கு தூக்கி வாரி போட்டது.



அவனின் கைகள் இருந்த இடத்தை அப்படியே தட்டி விட, அவனுக்கோ அவளின் மொத்த முன்னழகும் கண்களுக்கு விருந்தாகின.



"செம்மயா இருக்கு", என்று அவன் வாய் விட்டு சொல்லவும், அவளும் சட்டென அதை மறைத்து கொள்ள, சாக்லெட்டை பிடுங்கிய பிள்ளை போல அவனின் முகம் மாறியது.



"எங்க கைய வச்சிருக்கீங்க?", என்று அவள் சீறவும், "கைய வைக்கும் போது அமைதியா தானே இருந்த, நான் அத வெறும் பிடிச்சிட்டு மட்டும் இல்ல.. அப்படியே...", என்று அவன் மேலும் அதை விவரிக்க, "ஐயோ நிறுத்துங்க", என்று அவள் தான் காதை பொத்தும் நிலைமை.



"வெளிய போங்க", என்று அவளே அவனை திருப்பி வெளியே தள்ளி விடவும், அவனோ அவளின் காதுகளின் அருகில் சென்று எதையோ கூறவும், "ச்ச என்ன பேச்சு இது?", என்று திரும்ப போனவளை அவளின் கையை பிடித்து, "கரெக்டா இல்லையா?", என்று அவன் கேட்கவும், அவளுக்கு தான் எங்காவது சென்று புதைந்து விடலாமா என்று இருந்தது.



"சொல்லு டி", என்றவனின் குரலில் இன்னும் அடங்காத மோகம்.



"கரெக்ட் தான்.. ஆனா எப்படி?", என்று அவன் கேள்வியாக பார்க்கவும், அவனோ குரலை செருமிக்கொண்டு, "கண்ணு அ அளக்காததையா டேப் அளக்க போகுது? நான் கண்ணு மட்டும் இல்ல, கையாலையும் அளந்து இருக்கேனே", என்று கண்களை சிமிட்டியவன், ஓடி தான் விட்டான்.



இருந்தால் அவனுக்கு செருப்படி தான் என்று அவனுக்கு தெரியும். அவளோ கதவை சாற்றியவளின் நெஞ்சம் துடிக்க துவங்கியது. முதல் முறை ஒரு ஆண்மகனின் ஸ்பரிசம், அதுவும் அவளுக்கு பிடித்தவன் தான் என்பதால் தான் இவ்வளவு தூரம் விட்டு இருந்தாள். இதுவே வேறு யாரவது என்றால், இந்நேரம் தாடை பிய்ந்து தனியாக வந்து இருக்கும்.



அவளின் இதழ்களை வருடி கொண்டாள். இன்னும் அவனின் முத்தத்தின் எச்சம் இருப்பது போன்ற உணர்வு. அதுவும் அவனின் கை அவளின் மேல் பாதியை மொத்தமாக தீண்டி இருந்தது.



"ச்ச எப்படி எப்படி இவளோ நேரம் அப்படியே இருந்தேன்?", என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்.



உடையை மாற்றி வரும் சமயம், அங்கே பிள்ளைகளுடன் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.



அவனோ மாம்பழத்தை சுவைத்து கொண்டு இருந்தான்.



அவனின் கண்கள் அவளை தான் நோக்கி கொண்டு இருந்தன. ஆனால் எங்கே என்று பார்த்தவளுக்கு மூச்சே அடைத்து விட்டது.



"பொறுக்கி", என்று அவளின் இதழ்கள் முணுமுணுக்க, அதையும் அவன் அறிந்தான் தான்.



"மம்மி வாங்க மேங்கோஸ் சாப்பிடுங்க", என்று லக்ஷித் அழைக்கவும், "மம்மி கிட்டயே நல்ல மேங்கோஸ் இருக்கு", என்றவுடன் அவனின் காலில் ஓங்கி மிதித்து இருந்தாள் சாந்தினி.



"ஆஹ்", என்று அலறி இருந்தான் ஆதர்ஷ்.



"என்ன ஆச்சு டாடி?", என்று லயனிக்கா கேட்கவும், ஒன்றும் இல்லை என்று தலையாட்டி கொண்டான்.



அவளோ அவனை முறைக்க, அவனோ, "எதுக்கு டி கால மிதிச்ச?", என்றவனை பார்த்து, "இப்படி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க... அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது", என்று பற்களை கடித்து கொண்டு கூறினாள்.



"மம்மி தளிர் மம்மாக்கு கிபிட் வாங்கலாமா? அவங்களுக்கு இன்னும் டூ வீக்ஸ்ல ஏதோ பன்க்ஷனு சொன்னிங்களே", என்று லயா கேட்கவும், "நாளைக்கு போகலாம்", என்று அவள் சிரித்து கொண்டே சொல்லவும், "நான் போய் எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்து வரேன்', என்று தாரணி செல்ல, அவளின் பின்னே சென்றான் அர்னவ்.



தாராணியோ ஸ்னாக்ஸ் எடுக்க, அர்னவ் அவளை உரசி கொண்டு நின்றான்.



'இப்போ எதுக்கு இப்படி நிக்குறீங்க?", என்று கேட்டு முடிக்கும் முதல், அவள் கழுத்தில் முகம் புதைத்து இருந்தான் அவன்.



தாராணிக்கு மூச்சே அடைத்து விட்டது.



'என்ன பண்றீங்க?",என்று கேட்டு முடிக்கும் முதல், அவன் சொன்ன விடயத்தில் அவள் தான் அப்படியே சிலையாக நின்று விட்டாள்.
 
Last edited:

அத்தியாயம் 27



"உன் பின்னாடி ஒரு பல்லி இருக்கு தாரணி", என்று அவளின் கழுத்தில் புதைந்து அவன் சொல்லவும், அவளோ, "ஐயோ அர்னவ்", என்று அவனை இறுகி கட்டி அணைத்து இருந்தான்.



கள்ளன் அவன், அவள் அணைக்க வேண்டும் என்றே பொய் உரைத்து இருந்தான்.



'பல்லி போயிருச்சா", என்று மேலும் நெருக்கி, "இல்லையே டி', என்று மோகம் கலந்த குரலில் அவன் சொல்லவும், அவளுக்கு அவனின் குரலின் வித்யாசம் தெரிந்து பார்க்க, அவனோ அவளின் கழுத்தில் முத்தம் பதித்து கொண்டு இருந்தான்.



அவனை தள்ளி விட்டவள், "என்ன பண்றீங்க? அதுவும் கிச்சன்ல போய்! தள்ளி நில்லுங்க", என்றவள் நகர போக, அவளின் இடையை பிடித்து இழுத்து அவனை நெருக்கி நிற்க வைத்தான்.



"அப்போ பெட் ரூம்ல இப்படி பண்ணா ஓகே வா?", என்று கண்சிமிட்டி கேட்கவும், இவளுக்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை.



"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நீங்க சரியே இல்லை... தள்ளி போங்க", என்று அவள் தள்ளி செல்ல முற்பட, "உனக்கு என்ன தான் டி பிரச்சனை? முதல்லலாம் கிட்ட கிட்ட வந்த, இப்போ தள்ளி தள்ளி போற", என்று கேட்டே விட்டான்.



"நீங்க இருக்க உயரம் வேற அர்னவ்... நான் இருக்க வேற... அது மட்டும் இல்ல.. எனக்கு என் அம்மாவை பத்துக்குற ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு", என்றவள் விலகி சென்று விட்டாள்.



அவளுக்கும் அவனை பிடிக்கும் தான். அர்னவ் ஒன்றும் சாதாரண வீட்டு பிள்ளை அல்ல, அவனின் அப்பா நல்ல அரசு உத்யோகத்தில் உள்ளார். தாயாரும் கூட கல்லூரியில் பேராசிரியர். ஒரே மகன் அவன் தான். செல்லமாக வளர்ந்தவன் என்று இத்தனை நாட்களில் அவள் தெரிந்து இருக்க, அவளுக்கு அவனின் உயரம் எட்டா கனியாக தெரிந்தது.



அவளின் முகமே வாடி போய் இருந்தது. ஆதர்ஷும் அதை கண்டு கொண்டான்.



"ஹே தாரு ஏதாச்சு ப்ரோப்ளமா?", என்று நேரடியாக கேட்கவும், "இல்ல சார்...கொஞ்சம் டயர்டா இருக்கு... போய் தூங்குறேன்", என்று சொல்லி சென்று விட்டாள். அவள் செல்லவும் இறுகிய முகத்துடன் வந்து இருந்தான் அர்னவ்.



"நான் கொஞ்ச நாள் லீவ் எடுத்துக்குறேன் சார்", என்று அவன் சொல்லவும், புருவம் சுருக்கி பார்த்தவன், "சரி நாங்க தளிர் வளைகாப்புக்கு போற சமயம் லீவு எடுத்துக்கோ", என்று சொல்லி விட்டான்.



அடுத்த நாள் சாந்தினியும் ஆதர்ஷும் சேர்ந்து தான் நகை கடைக்கு சென்றார்கள்.



தளிருக்கு தங்க வளையல் வாங்கி இருந்தாள் சாந்தினி.



அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்ணோ, "யாருக்கு மேம்?", என்றவுடன், "என் தங்கச்சிக்கு தான்", என்று சொல்லவும், "உங்க செலெக்ஷன் சூப்பர் மேம்... உங்க தங்கச்சிக்கே இப்படி செலக்ட் பண்றீங்க... அப்போ உங்க வளைகாப்புக்கு எப்படி செலக்ட் பன்னிருப்பிங்க?", என்று கேட்கவும், அவள் அப்படியே நின்று விட்டாள்.



அப்படி ஒன்று நடக்கவே இல்லை அல்லவா! அவையெல்லாம் ஒரு பெண்ணின் வாழ்வில் எவ்வளவு அழகான தருணங்கள்...எதையுமே கடவுள் அவளுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே!



இறுகி விட்டாள். அதை கேட்ட ஆதர்ஷிற்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. எத்தனை துன்பங்களை அவள் தாங்கி வந்திருப்பாள் என்று நினைக்கவே அவனுக்கு நெஞ்சு அடைத்தது.



"பில் போடுங்க", என்று சொன்னவன், அவளின் புறம் திரும்பி, "ஆர் யு ஓகே?", என்று கேட்கவும், "எஸ்", என்று பதில் சொன்னவள் அப்படியே அமைதியாகி விட்டாள்.



அன்றைய இரவு, குழந்தைகள் உறங்கிய பின், சாந்தினியின் அறையை தட்டி இருந்தான் ஆதர்ஷ்.



"கம் இன்", என்று சொல்லவும், உள்ளே வந்தவன், அவளின் அருகில் அமர, அவள் எதுவும் பேச வில்லை. இன்னும் அவளின் எண்ணங்களில் அந்த பெண்மணியின் கேள்வி தான் ஓடிக்கொண்டு இருந்தது.



"சாந்தினி .. வாழ்க்கைல எல்லாமே சிலருக்கு கிடைக்கறது இல்ல.. ஆனா கிடைச்சது வச்சி வாழ்ந்த லைப் ரொம்ப அழகா இருக்கும்...", என்று அவன் சொல்லவும், "தத்துவமா?", என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.



"கண்டிப்பா... நீ கொஞ்சம் யோசி.. நம்ப இரண்டு பேரும் பார்த்தது கூட இல்ல.. ஆனா குழந்தை வந்திருச்சு... இப்போ பாக்குறோம்.. ஆனா குழந்தை வராது...", என்கவும், அவளின் முகம் இறுகி போய் விட்டது.



"ஆனா எனக்கு ஹாப்பி தான்... ", என்றவனை முறைத்து பார்க்க, "என்னால உன்ன விட்டுட்டு இனி தனியாலாம் இருக்க முடியாது... திரும்பி குழந்தை எல்லாம் வந்தா தனியா வேற படுக்கணும்... ஆனா இதோட தினமும் எனக்கு...", என்று ஆரம்பித்தவன், விளக்கை அணைத்து விட்டு, "உன்கூட தூங்க போறேன்", என்று சொல்லவும், "பைத்தியமா உங்களுக்கு ஆதர்ஷ்?", என்றவள் அவனை படுக்கையில் இருந்து தள்ளி விட்டு இருந்தாள்.



"அம்மா", என்று அலறி விட்டான் ஆதர்ஷ்.



உடனே அவளின் பக்கத்தில் இருந்த சுவிட்ச் போட்டவள், "முதல்ல இப்படி கிட்ட வர்றத நிறுத்துங்க... அப்புறம் அவளோ தான்... நானும் பார்த்துகிட்டே இருக்கேன்.. என்னென்னவோ பேசுறீங்க.. நான் ஏதோ உங்கள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னா மாதிரி இவளோ உரிமையா பேசுறீங்க", என்று அவள் பேசிக்கொண்டே செல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர்.



அவளின் அருகே வந்தவன், அவளின் கன்னங்களை தாங்கி, "அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா சாந்தினி ?", என்று உருகும் குரலில் கேட்க, அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையசைத்து இருந்தாள்.



'நீங்க வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க ஆதர்ஷ். உங்க வைப்க்கு பிடிக்கலைன்னா என்கிட்ட லயா அண்ட் லக்ஷித்தை கொடுத்துருங்க.. இல்லனா என்ன வீக்லி ஒன்ஸ்...", என்று அவளின் பேச்சை அவனின் இதழ்கள் கொண்டு நிறுத்தி இருந்தான்.



அவளோ அவளின் முழு பலத்தையும் கொண்டு அவனை விளக்கி விட்டு, "ஏன் இப்படி கிஸ் பண்ணிகிட்டே இருக்கீங்க?", என்று கத்தவும், 'நீ தான் டி என்ன கோவ படுத்தி கிட்டே இருக்க... ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்", என்றவன் அதற்கு பிறகு எதுவும் பேசாமல் அவனின் அறைக்கு சென்று விட்டான்.



அடுத்து இருவரும் தளிரின் வளைகாப்புக்கு சென்று வந்தனர். ஆருஷ் மற்றும் ஆதி இருவரும் அன்று சாந்தினியிடம் ஆதர்ஷ் அவளுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வைத்து செய்து விட்டனர்.



அன்று அவளுக்காக ஆதர்ஷ் கூடவே இருந்தான். அடுத்து சிவயாழினியும் பிறந்து விட, மீண்டும் அவர்களின் வேலைக்கு திரும்பி இருந்தனர்.



இதே சமயம் அர்னவ் மற்றும் தாரணியின் வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.



அர்னவ்வும் அவனின் விடுமுறை முடித்து கொண்டு வந்து, அன்று அடுத்த இடியை தாரணியின் தலையில் இறக்கி இருந்தான்.



"எனக்கு பொண்ணு பார்த்து இருக்காங்க சார்", என்று ஆதர்ஷனை பார்த்து அவன் சொல்லவும், "கன்க்ரட்ஸ்", என்று புன்னகையுடன் அவனும் சொல்லி இருந்தான்.



"நாளைக்கு தான் அவளை மீட் பண்ண போறேன்", என்று அவன் சொல்லவும், தாரணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.



"என்ன இழுத்து வச்சி கிஸ் பண்ணிட்டு... இப்போ வேற ஒருத்தி கூட கல்யாணமாம்! இந்த பசங்கள் அப்படி தான்", என்று அவளின் ஒரு மனம் சாட, "நீ தான வேணாம்னு சொன்ன", என்று அவளின் மற்றொரு மனம் அர்னவ்விற்காக பேசியது.



அடுத்த நாள் தாராணியும் அரனவ்வும் ஒரு வேலை விடயமாக ஒன்றாக செல்ல நேர்ந்தது. அதை முடித்து கொண்டு வரும் வழியில், "நான் என் பியான்ஸேவை மீட் பண்ணிட்டு வரேன்.. ஒரு திரட்டி மினிட்ஸ் வெயிட் பண்ணு", என்றவன் அவளிடம் கேட்கவில்லை. சொல்லி விட்டு சென்று இருந்தான்.



"ஹலோ அர்னவ் ஹலோ", என்று அவள் கத்தியதெல்லாம் அவன் காதில் வாங்கவே இல்லை.



அவளோ அப்படியே சென்று யார் அந்த பெண் என்று பார்க்க, பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.
 

அத்தியாயம் 28



அங்கே நின்று இருந்தது என்னவோ அவளின் கல்லூரி எதிரி வர்ஷினி தான்.



வர்ஷினியோ அர்னவ்வை கட்டி அணைத்து விடுவிக்க, இங்கோ ஒருத்திக்கு பற்றி கொண்டு வந்தது.



அவன் வேறு யாரவது பெண்ணிடம் பேசினாலே இவளுக்கு புகை வரும், இப்போது கட்டி அணைத்து இருக்கிறான் அதுவும் அவளின் பரம எதிரியை, எரியுமா எரியதா? தண்ணீர் லாரி வந்தால் கூட அணைந்து இருக்காது போல, அப்போது ஒரு எரிச்சல் அவளுக்கு!



இருவரும் சிரித்து சிரித்து பேச, தாராணிக்கோ பொறுமை போய் விட்டது.



வேகமாக சென்று, அர்னவ்வின் அருகில் நின்று, "அர்னவ்", என்று கோவமாக அவனை அழைத்தாள்.



அவனோ சாதாரணமாக திரும்பியவன், "இப்போ எதுக்கு இங்க வந்த நான் தான் உன்ன கார்லயே வெயிட் பண்ண சொன்னேன்ல", என்று கேட்கவும், "உங்க பியான்ஸே பார்க்க நான் எதுக்கு வெயிட் பண்ணனும்?", என்று கோவமாக கேட்கவும், "ஓஹ் சரி அப்போ கிளம்பு... ஓலா ஆர் உபேர் புக் பண்ணி போ.. காசு வேணுமா?", என்றவுடன் அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.



அவன் அவளை விடுவதற்காக வருவான் என்று நினைத்து இருக்க, அவன் பேசியது அவளின் நெஞ்சை குத்தி கிழித்தது.



"ஹே தாரணி எப்படி இருக்க?",என்று வினவினாள் வர்ஷினி.



அழகு சிற்பம் அவள். அவள் கல்லூரி படிக்கும் போதே அவளின் பின்னால் வந்து கொண்டு இருந்த ஆண்கள் பலர் உண்டு.



"உங்களுக்கு தெரியுமா?", என்று அவர்களை பார்த்து கேட்கவும், "தாரணி என் காலேஜ் தான்', என்றவள் தாராணியை பார்த்து சிரிக்க, தாராணியோ அவளை முறைத்தாள்.



"பிரண்ட்ஸா?", என்றவரிடம், "ச்ச ச்ச எனிமிஸ்", என்று அவள் சொல்லவும், "வெறி பாண்ணி", என்று அர்னவ் அவளை பார்த்து சொல்லி விட்டு அப்படியே தாரணியிடம் திரும்பி, "கிளம்புறீங்களா ப்ளீஸ்! எனக்கு கொஞ்சம் பர்சனல்லா பேச வேண்டியது இருக்கு", என்று சொல்லவும், அதற்கு மேல் அவளால் அங்கு நிற்கவே முடியவில்லை.



அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.



"ஹே ஓலா இல்ல உபேர் போட்டுக்கோ", என்று அவன் சொல்லவும், அப்படியே திரும்பி, "நான் போய்குவேன் நீங்க பர்சனல் பேசுங்க", என்று விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்து விட்டாள்.



"அச்சோ பாவம் அர்னவ் அவ, ரொம்ப சோகமா போறா எனக்கே கஷ்டமா இருக்கு... நான் வேணா போய் பேசட்டுமா?", என்று வர்ஷினி கேட்கவும், "அதெல்லாம் ஒன்னும் வேணாம்... எனிமிஸ் தானே... இப்போ இவளோ அக்கறை படுற", என்று வினவியவனை முறைத்து பார்த்து, "அதெல்லாம் காலேஜ்ல... இப்போ நல்லா தான் பேசி இருப்போம்.. உன்னோட பிளான்க்காக தான் இப்படி பண்ணேன்", என்று அவள் உதட்டை சுழித்து கொண்டாள்.



"ஐயோ சரி மா தாயே.. நீங்க எனிமிஸ் கம் பெஸ்டிஸ் ஆகாம போனதுக்கு நான் தான் காரணம் போதுமா? அவ கொஞ்சமாச்சு எனக்காக பீல் பண்ணட்டும்... நான் எவளோ பீல் பண்ணேன்... என் அப்பா அம்மா கிட்ட இவளுக்காக பெர்மிஷன் வாங்கிட்டு வந்து இருக்கேன். கொஞ்சம் கூட கண்டுக்காம இருக்கா... இன்னைக்கு அவங்க மும்பை போறாங்க இவ அம்மா கிட்ட பேசத்தான்... பேசிட்டு வரட்டும்.. அப்புறம் இவளுக்கு இருக்கு", என்று அவன் சொல்லவும், "பரவால்ல இவளோ லவ் பண்றீங்க, அவ ரொம்ப பாவம் அர்னவ்... காலேஜ்ல கூட பெருசா யாரு கிட்டயும் பேச மாட்டா தெரியுமா? நல்லா பார்த்துக்கோங்க", என்று முடித்து இருந்தாள்.



"நான் உன் எனிமிய பார்த்துக்கறேன்.. நீ என் பிரண்ட் மனசு கஷ்டப்படாம நடந்துக்கோ", என்று அவன் சொல்லவும், "ம்கூம் உங்க பிரண்ட் கிட்ட என்கிட்ட சும்மா சண்டை போட வேணான்னு சொல்லுங்க", என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு சென்று விட்டாள்.



இரவு ஒன்பது மணி இருக்கும், சாந்தினி தான் அர்னவ்விற்கு அழைத்து இருந்தாள்.



அரனவ் எடுத்து, "சொல்லுங்க மேம்", என்றவுடன், "அர்னவ் தாரணி எங்க? நீயும் அவளும் ஒண்ணா தான இன்னைக்கு ஒர்க்னு சொல்லி போனீங்க! அவ இன்னும் வீட்டுக்கே வரல... அவங்க அம்மா கூட எனக்கு கால் பண்ணாங்க.. உன் அப்பா அம்மா வந்து அவளை பொண்ணு கேட்டதை சொன்னாங்க.. அவங்களும் கால் பன்னிருக்காங்க... ஆனா அவ எடுக்கவே இல்ல...எங்க தாரணி?", என்று காட்டமாகவே கேட்டாள்.



"என்ன தாரணி இன்னும் வீட்டுக்கு வரலையா?", என்று அதிர்ந்து போய் வந்தது அவனின் குரல்.



சாந்தினியிடம் இருந்து போனை வாங்கிய ஆதர்ஷ், "அர்னவ், தாரணி இன்னும் டூ ஹௌர்ஸ்ல இங்க இருக்கனும்...இல்லனா என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது", என்று அவன் சொல்லி வைத்து விட்டான்.



அனைவருக்கும் பதட்டம், எங்கே சென்றால் தாரணி என்று தான் இருந்தது.



அர்னவ்வின் மனது வேகமாக துடிக்க துவங்கியது. அவன் விளையாட்டாக ஆரம்பித்தது இப்போது வினையாக அவன் முன் நிற்கிறது.



"எங்க டி போன?", என்றவன் காரை மின்னல் வேகத்தில் செலுத்தி, சென்னையை அலசி ஆராயத்துவங்கினான்.



அவனுள் சட்டென ஒரு மின்னல் வெட்டியது.



ஒரு நாள் அவளிடம் பேசும் போது, "எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா பீச் தான் போவேன்", என்று அவள் சொல்லியது நினைவு வர, அவனின் காரை மின்னல் வேகத்தில் கடற்கரையை நோக்கி செலுத்தினான்.



அங்கே செல்லும் வரை அவனுக்கு அவளின் நினைவு தான். "வீட்டுக்கு போ டின்னு சொன்னா... என்ன இப்படி உனக்காக தெருத்தெருவா தேட வச்சிட்டல்ல... கையில மாட்டு இருக்கு உனக்கு", என்று பற்களை கடித்து கொண்டு அங்கே காரை நிறுத்தி இருந்தான்.



காரை விட்டு இறங்கியவன் கண்களில் காரிகை தான் முதலில் தென்பட்டாள்.



அப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது.



யாரும் இல்லாத கடற்கரையில் அப்படியே அமர்ந்து கடலை வெறித்து கொண்டிருந்தாள் அவள்.



அவனோ அவளை நெருங்கி சென்று, "அங்கே என்ன தெரிகிறது இளவரசி?", என்று நக்கலாக வினவ, அப்போது தான் சுயத்திற்கே வந்து இருந்தாள்.



அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தவள், "நீங்க இங்க... எப்படி?", என்று கேட்டுக்கொண்டே எழுந்து கொள்ள, "டைம் என்னனு தெரியுமா டி உனக்கு? பத்து மணி ஆகுது! மனுஷன தூங்க விடாம இப்படி ரோடு ரோடா சுத்த விட்டுட்டு மேடம் மட்டும் கடலை பார்த்துகிட்டு இருக்கீங்களோ... உனக்கு எத்தனை போன் கால் வந்து இருக்குனு எடுத்து பாரு டி", என்று பற்களை கடித்து கொண்டு அவன் பேசவும் தான் போன் என்று ஒன்று இருக்கிறதே அவளுக்கு நினைவு வந்தது.



எடுத்து பார்த்தவளுக்கு கண்கள் வெளியே தான் விழவில்லை. நூறுக்கும் மேற்பட்ட அழைப்புக்கள்.



"ஐயோ", என்று வாயில் அவள் கையை வைக்கவும், "என்ன ஷாக் ஆகுற? கொஞ்சமாச்சு அறிவு இருக்கா? எதுக்கு டி இப்படி வீட்டுக்கு போகாம இங்க உட்காந்து இருக்க?", என்று அவன் அவளின் கையை பிடித்து கேட்க, "கைய விடுங்க.. நான் எப்படியோ போறேன் உங்களுக்கு என்ன வந்தது? ஏதோ அக்கறை இருக்க மாதிரி தான். நீங்க ஏன் என்ன தேடி வந்திங்க? உங்கள நான் வர சொன்னேனா? நான் இருந்தா என்ன செத்தா என்ன?", என்று அவள் கேட்டு முடிக்கும் முதல், அவளின் இடையை வளைத்து அவளின் கன்னத்தில் இதழ் பதித்து இருந்தான்.



அவளின் கண்கள் மூடிக்கொண்டன.



"நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தாரணி. ஐ லவ் யு சோ மச்.. உன்ன சும்மா வெறுப்பேத்த தான் டி வர்ஷினியை வர சொன்னேன். அவ வருண் லவர். அவ கிட்ட உன்ன பத்தி சொல்லும் போது தான் நீயும் அவளும் ஒரே காலேஜ்னு சொன்னா... இன்னைக்கு உன் அம்மாவை பார்க்க என் பேரெண்ட்ஸ் போயிருந்தாங்க நம்ப கல்யாணம் பத்தி பேச.. நீ ஏன் டி இப்படி இங்க வந்து விட்டதை பார்த்து உட்காந்து இருக்க? எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டி.. உன்னோட குறும்பு தனம், எப்பவும் சிரிச்சிகிட்டே இருக்க உன்னோட லிப்ஸ், குழந்தைத்தனம் எல்லாத்தையும் செய்ற உன்னோட குணம் எல்லாமே.. யு ஆர் தி பெர்பெக்ட் மேட்ச் போர் மீ... நான் என் பார்ட்னர் இப்படி தான் இருக்கணும்னு எல்லாம் நினைச்சதே இல்ல.. ஆனா உன்கூட பழகுன பிறகு நீ தான் என் பார்ட்னர்ன்னு முடிவு பண்ணிட்டேன்", என்று அவன் சொல்லவும், அவனின் மார்பினில் புதைந்து அழுதாள்.



"ஏன்.. ஏன்.. என்கிட்ட எதுமே... சொல்லல.. எனக்கு... எவளோ கஷ்டமா இருந்துது... தெரியுமா... ஐ லவ் யு சோ மச்...", என்று அவனுள் அவள் இன்னும் புதைய, "அடியே பப்ளிக் பிளேஸ்னு தான் கன்னத்துல கிஸ் பண்ணேன்.. நீ வேற என்ன சோதிக்காத", என்றவன் அவளின் கையை பிடித்து காரின் அருகே அழைத்து சென்று விட்டான்.



அவளை இருக்கையில் அமர செய்தவன், யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, காரின் விளக்கை அணைத்து, அவளையும் அணைத்து இருந்தான்.



"ஐயோ அர்னவ்.. என்ன பண்றீங்க?", என்று கேட்டவளின் குரல், அப்படியே முனகலாய் தான் மாறியது.



அவன் விளக்கை போட்ட சமயம், அவளின் சட்டையின் பட்டன்களை போட்டு கொண்டிருந்தவள், அவனை முறைக்க, "எதுக்கு டி முறைக்கிற?", என்று அவனும் சட்டை பட்டன்களை போட, "என்னலாம் பண்ணிட்டீங்க?", என்று கோபத்துடன் வெட்கமும் கலந்து இருந்தது.



"ம்கூம் என்ன பண்ணி என்ன பிரயோஜனம்! வெறும் தொட தான் முடிஞ்சிது ஒண்ணுமே பார்க்கல டி... லைட் போட்டு இன்னொரு தடவை ப்ளீஸ்", என்றவனின் குரலில் மோகம் தேங்கி இருந்தது.



"ஆதர்ஷ் சார் கால் பண்ணுவாரு போங்க", என்று அவள் சொல்லவும் தான் அவன் காரை எடுத்தான். அவனின் தோளில் சாய்ந்தவளுக்கு பல நாள் கழித்து அப்படி ஒரு நிம்மதி. அவளுக்காக ஒருவன் இருக்கிறான் என்கிற நிம்மதி அது, இதோடு அவள் மட்டும் தடைகளை தாண்ட வேண்டாம், அவளுடன் அவனும் வருவான் என்கிற நம்பிக்கையில் வந்த மனநிம்மதி அது!



அர்னவ் காதலனாக ஜெயித்து விட்டான். அவளின் மனதை வென்று, அவளின் தாழ்வு மனப்பான்மையை போக்கி, அவளுக்காகவே அவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையை அவன் கொடுத்து இருந்தான்.



அவர்கள் இருவரும் ஆதர்ஷின் வீட்டிற்கு வர, அங்கோ நிலமை மோசமாக இருந்தது.
 

அத்தியாயம் 29



சாந்தினி தான் ஆதர்ஷனை லேப்ட் அண்ட் ரைட் வாங்கி கொண்டு இருந்தாள்.



"உங்க பிஏக்கும் உங்கள மாறி அறிவு இல்லையா? கல்யாணம் பணிக்குற பொண்ணு எங்க போயிருக்கானு தெரியல? அவன் தானே கூட்டிட்டு போனான், இப்போ எங்கன்னு தெரியல்னு சொல்றான். உங்கள மாதிரியே இரெஸ்பான்சிபிள் இடியட்", என்றவள் அப்படியே அருகே இருந்த பிளவர் வாசை எடுக்கவும், தாராணியோ, "மேம்", என்று பதறி விட்டாள்.



"ஐயோ அம்மா நீ வந்துட்டியா? நீ மட்டும் வரலைனா உன் மேம் என்ன ஜாம் ஆக்கிருப்பா", என்று ஆதர்ஷ் சொல்லவும், அர்னவ் சிரித்து விட்டான்.



"டேய் சிரிக்காத டா... எல்லாம் உன்னால தான்", என்று சொல்லவும், அவனுக்கும் கொஞ்சம் குற்ற உணர்வாக தான் இருந்தது.



"சாரி சார்", என்கவும், அப்படியே சாந்தினியின் புறம் திரும்பி, "சாரி மேம்", என்று சொன்னவன், செல்ல எத்தனிக்க, "இதோட நீ தாரணிய எங்கயும் கூட்டிட்டு போக கூடாது", என்று சொல்லி இருந்தாள் சாந்தினி.



"ஏன் டி கூட்டிட்டு போக கூடாது? நீ தான் லவ் பண்ண மாட்டுற, பண்றவங்கலயாச்சு விடேன்", என்று ஆதர்ஷ் கூற, ஓரே முறை தான் அப்படியே அடங்கி விட்டான்.



அவனையே அடக்கி வைக்கும் ஆற்றல் அவள் பெற்று இருந்தாள். அவனும் கொடுத்து இருந்தான்.



"நான் தாரணி அம்மா கிட்ட பேசிட்டேன். நோ மோர் அவுட்டிங்", என்கவும், இருவரின் முகமும் கூம்பி போய் விட்டது.



"கோ அண்ட் ஸ்லீப்", என்று சொல்லவும், அனைவரும் அவர்களின் அறைக்கு சென்று விட, அர்னவ்வும் அவனின் அபார்ட்மெண்டிற்கு சென்று விட்டான்.



ஆனால் கைபேசி தான் காதல் சின்னமாக மாறி விட்டதே, அதிலேயே காதல் பாடத்தை படிக்க துவங்கி இருந்தார்கள் அர்னவ்வும் தாராணியும்!



அவர்களின் காதல் அலுவலகத்தை மட்டும் தான் அடையவில்லை. அவளை திட்டுவதையும் அவன் விடவில்லை.



"அறிவில்லையா உனக்கு ஒரு வேலை சொன்னா உனக்கு செய்ய துப்பில்லை... வந்துட்ட", என்று அப்போது தான் அவளை திட்டி வைத்து இருந்தான்.



கோவமாக வந்தது.



"பஜ்ஜி பேபினு நைட் வரட்டும் வச்சி செய்றேன்", என்று மனதில் கருவி கொண்டவள், அப்படியே சென்று அமர்ந்து கொண்டாள்.



"அர்னவ் சார்", என்று அவனின் முன் நின்று இருந்தாள் அவர்களின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் புஷ்கலா.



"சொல்லுங்க", என்று அவன் புன்னகைத்து கொண்டு வினவ, "ஐ லவ் யு சார்", என்று பட்டென சொல்லி இருந்தாள். அர்னவ்வின் அருகே இருந்த தாரணியின் செவிகளையும் அது அடைந்தது.



அவள் ஒன்றும் பேசவில்லை.



அர்னவ்வோ, குரலை செறுமி விட்டு, "எனக்கு கல்யாணம் ஆக போகுது புஷ்", என்று சொல்லவும், "என்ன சார் சொல்றிங்க? யாரது? என்ன புஷ் புஷ்னு செல்லமா கூப்பிட்டுட்டு இப்படி என் மனச மொத்தமா புஷ் பண்ணி விட்டுட்டீங்களே", என்று அவள் வராத கண்ணீரை வரவழைத்து கொண்டு கூறினாள்.



அவனோ, "ஐயோ புஷ், என்ன விட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைப்பான்", என்றவன் சொல்லவும், "அட போங்க சார், உங்கள விட நல்லவன் கிடைச்சி என்ன பிரயோஜனம்? உங்கள மாதிரி யாரும் கிடைக்க மாட்டாங்க தானே? அப்படி என்ன சார் என் கிட்ட இல்லாதது அந்த பொண்ணு கிட்ட இருக்கு?", என்றவுடன், பேப்பர் வெயிட் ஒன்று அர்னவ்வை நோக்கி பறந்து வந்தது.



நல்ல வேளை விலகி விட்டான். இல்லை என்றால் இன்று அர்னவ்வின் தலையில் இருந்து தக்காளி சட்னி தான் வந்து இருக்கும்.



புஷ்கலாவோ தாராணியை பார்த்து, "அறிவில்லையா?", என்று எகிறிக்கொண்டு வர, "அடுத்தவ கல்யாணம் பண்ணிக்க போற பையன பாக்குற உனக்கு ரொம்ப இருக்கா", என்று அவளும் பேசினாள்.



"அது அந்த பொண்ணு தான் பீல் பண்ணனும்", என்கவும், "அந்த பொண்ணு தான் இப்போ உன்கூட பேசிட்டு இருக்கா", என்று முடிக்கவும், சத்தமாக சிரித்து விட்டாள் புஷ்கலா.



"உன் முகத்தை நீ கண்ணாடியில் பாத்து இருக்கியா? உன் மூஞ்சுக்கு அர்னவ் கேக்குதா?", என்று அவள் முடிக்கவும், "இனப்", என்று கத்தி இருந்தான் அர்னவ்.



"நீ யாரு டி அவளை பத்தி பேசுறத்துக்கு? எனக்கு தான் இன்டெரெஸ்ட் இல்லனு சொல்றேன்ல? ஆமா அவ தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு... பாக்கறியா", என்றவன், அவளை தாண்டி சென்று தாரணியின் தாடையை பிடித்து, அவளின் இதழ்களில் ஆழ்ந்த முத்தம் பதித்தான்.



புஷ்கலாவிற்கோ செருப்பால் அடித்தது போல் இருந்தது.



"கெட் அவுட்", என்று அவன் சீறவும், அவள் வெளியே சென்று விட்டாள்.



தாரணியின் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது.



"இப்போ நீ எதுக்கு டி அழற?", என்று அவன் சலிப்பாக கேட்க, "அவ சொன்னது கரெக்ட் தானே", என்றவளை பார்த்து, "எது கரெக்ட்? இங்க பாரு யு ஆர் பெர்பெக்ட் போர் மீ", என்றவன், மீண்டும் அவளின் இதழ்களை சுவைக்க துவங்கினான்.



அன்றைய நாள் அர்னவ் சாந்தினியின் முன் அமர்ந்து இருந்தான்.



"எதுக்கு அர்னவ் வர சொன்ன? ஏதாச்சு பேசணுமா?", என்றவளை பார்த்து, "மேம் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் நீங்க ஆதர்ஷ் சாரை கல்யாணம் பண்ணிக்க இவளோ யோசிக்கிறீங்க?", என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.



"ஹி டிசர்வ்ஸ் பெட்டெர்", என்றவளை பார்த்து, "இல்ல மேம், யு போத் ஆர் மேட் போர் இச் அதர். நீங்க அதை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்க? உங்களுக்கு தெரியுமா ஆதர்ஷ் சார் அன்னைக்கு இந்த காண்ட்ராக்ட் ரெஜிஸ்டர் ஆகிருச்சுனு என்கிட்ட கேட்கும் போது இது ஆகவே இல்ல.. ஆனா.. நான் தான் அதுக்கு அப்புறம் ரெஜிஸ்டர் பண்ணேன்... நீங்க ரொம்ப நல்லவங்க.. அவரும் ரொம்ப நல்லவரு... உங்க லைப்ல இரண்டு பேருமே எந்த சந்தோஷத்தையும் அனுப வைக்கவே இல்லை. இனியாச்சு உங்க லைப்ல ஹப்பின்ஸ் இருக்கட்டும் மேம். பாவம் அவரு இரண்டு குழந்தைகளை தனியா வச்சிக்கிட்டு கஷ்டம் பட்டாரு... நீங்க குழந்தையே இல்லமா கஷ்டம் படுறிங்க.. உங்களுக்கு என்ன மேம் அப்படி அவரு மேல கோவம்? அவர் நிலைல இருந்து யோசிச்சி பாருங்க... எப்படி இருக்க வேண்டியவரு தெரியுமா அவர்? இந்த கம்பெனிலாம் எந்த மூலைக்கு மேம்? ஆர்எ குரூப்ஸ் விடவா பெருசு.. அதை விட்டுட்டு இங்க வந்து இருக்கார். கடல் மாதிரி வீட்டை விட்டுட்டு இப்படி ஒரு வாழ்க்கை.. அவரு ரொம்ப நல்லவர் மேம்... அவரோட பிரண்ட் கிட்ட கூட பேசுறது இல்ல போல இப்போ... கொஞ்சம் பேசுங்க.. உங்களுக்கு அவரை பிடிக்கலையா மேம்?", என்று கேட்கவும், அவளால் என்ன பதில் சொல்ல முடியும்.



"அவரு பேசுனதெல்லாம் கூட எனக்கு பெருசா தெரியல அர்னவ்... நான் அவரை விட மோசமா மத்தவங்க என்கிட்ட பேசி கேட்டு இருக்கேன்... ஆனா... அவருக்கு இன்னும் நல்ல பொண்ணா கிடைச்சா நல்லா இருக்கும்ல", என்றவள் சொல்லவும், "உங்கள விட நல்ல பொண்ணு வாய்ப்பே இல்ல மேம்", என்றவன் சென்று விட்டான்.



சாந்தினிக்கு தான் இரண்டும் கேட்டான் நிலை.



அவளுக்கு ஆதர்ஷனை பிடிக்கும் தான், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த நாட்களாக மிகவும் பிடிக்கிறது.



நேற்று கூட அவளுக்கு நடந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது.




அத்தியாயம் 30



அவள் சமைக்க துவங்கிய சமயம், "இன்னைக்கு என்ன சமைக்கிற?", என்று ஆதர்ஷ் வரவும், அவளுக்கு கோவமாக வந்தது.



"மம்மி பஜ்ஜி செய்றாங்க டாடி", என்று லயனிக்கா சொல்லவும், "எனக்கும் வேணும்", என்று அவனும் சொல்லிவிட்டு அறைக்குள் உடை மாற்ற சென்று விட்டான்.



"நான் என்ன இவன் பொண்டாட்டியா?", என்று நினைத்து கொண்டவள், அவனுக்கு பச்சை மிளகாய் வைத்து பஜ்ஜி போட்டு அவனுக்காக வைத்து இருந்தாள்.



பிள்ளைகளுக்கு உருளைக்கிழங்கும், முட்டையும் வைத்து பஜ்ஜி போட்டு கொடுத்து அனுப்பி வைத்து விட்டாள்.



ஆதர்ஷ் வந்து, "பஜ்ஜி எங்க?", என்று கேட்கவும், அவனின் கையில் அவள் தட்டை நீட்ட, அதை எடுத்து வாயில் வைத்தவனின் கண்கள், கன்னங்கள் என்று அனைத்தும் சிவந்து விட்டது.



ஆனால் அவன் ஒரு வார்த்தை சொல்ல வில்லை. அப்படியே சாப்பிட்டான். ஒரு கட்டத்தில் சாந்தினியே அதிர்ந்து அவனின் கையில் இருக்கும் தட்டை வாங்கி வைத்து விட்டு, ஜூஸ் கொடுக்க, அதை அவன் பருக வில்லை.



"ஐயோ குடிங்க", என்று அவள் புகட்டவும், அவனோ மறுத்து விட்டான். இப்போது அவளது கண்களில் தான் தண்ணீர் வந்தது.



"ப்ளீஸ் குடிங்க", என்றவளின் குரல் தழுதழுக்க, அவளின் கையில் இருந்த கிளாஸை வாங்கி அவளுக்கு புகட்டவும், "எனக்கு எதுக்கு?", என்று கேட்டவளின் வாயில் ஜூஸ் திணிக்க, அவளும் பருக, அப்படியே அவனின் வாயிற்கு அதை கிடத்தி இருந்தான்.



அவளின் கண்கள் விரிய, அப்படியே ஒரு கட்டத்தில், முத்த யுத்தம் தொடர்ந்தது.



பின்பு அவளை விடுவித்தவன், "எனக்கு கஷ்டம் கொடுக்குறேனு சொல்லிட்டு நீ தான் அழற", என்று நெற்றி முட்டி சொல்லவும், அவளால் பேச முடியவில்லை.



உண்மை தான், அவளால் அவனை திருப்பி அடிக்க முடியவில்லை. அவளும் அவனை குத்தி காட்டி கொண்டு இருக்கிறாள் தான். ஆனால் அவன் அளவிற்கு முடியவில்லை.



ஆதர்ஷ் வெறுப்பில் பேசினான். ஆனால் சாந்தினி அப்படி அல்லவே, அவளின் உள்ளே அவன் தான் ஆசனமிட்டு அமர்ந்து இருக்கிறானே...



இன்று அவளுக்கு அது நினைவு வர, தளிரும் அழைத்து இருந்தாள்.



"எப்படி இருக்க அக்கா?", என்றவளிடம், "நல்லா இருக்கேன்.. நம்ப சிவு எப்படி இருக்கா?", என்று கேட்கவும், "ரொம்ப ரொம்ப நல்லா இருக்கா... அவளோட மம்மியை எப்போ பார்ப்போம்னு வெயிட் பண்ரா", என்கவும், "சீக்கிரமே", என்று முடித்து இருந்தாள்.



"அக்கா நீ ஏன் இன்னும் மாமாக்கு ஓகே சொல்லல?", என்று கேட்கவும், "என்ன நீ தூதா உன் மாமாக்கு?", என்றவளிடம், "ஐயோ இல்ல அக்கா... நானா தான் கேக்குறேன்.. அக்கா நீயும் மாமாவும் சேர்ந்தா எங்க எல்லாருக்கும் ஹாப்பி தான்", என்று பேசியவள், பின்பு கொஞ்ச நேரம் பேசிட்டு வைத்து விட்டாள்.



சாந்தினியின் மனதில் ஆதர்ஷின் எண்ணங்கள் ஓடத்துவங்கின.



அவனின் மீது காதல் உள்ளது, மரியாதை உள்ளது. ஆனால் ஏன் இன்னும் அவளால் முழுமையாக அவனை நேசிக்க முடியவில்லை.



அவன் அருகில் வந்தாலே உருகி விடுகிறாள். அவனை ரசிக்கிறாள் தான். ஆனாலும் ஏதோ ஒரு தடை.



இப்படியாக நாட்கள் செல்ல, இருவருக்குள்ளும் சிறிது நெருக்கம் ஏற்பட்டு இருந்தது.



இப்போதெல்லாம் அவனிடம் எரிந்து விழாமல் இருக்க துவங்கி இருந்தாள்.



"என்ன மேடம் இப்போ எல்லாம் என் கிட்ட நல்லா பேசுறீங்க" என்றவனை பார்த்து, "மருமடியும் வேணா முறைகட்டுமா?", என்று கேட்கவும், "எப்படி பார்த்தாலும் அழகா இருக்க", என்று சிரித்து கொண்டே சொல்ல, "ஹப்பா முடியல மிஸ்டர் ஆதர்ஷ் வேற லைன் ட்ரை பண்ணுங்க", என்று முடித்து விட்டாள்.



அவர்கள் இருவரையும் பேரன்ட்ஸ் டேவிற்கு பிள்ளைகள் அழைக்கவும், சேர்ந்து சென்று வந்தனர்.



இருவரும், "இது தான் எங்க மம்மி டாடி", என்று ஆசை தீர அறிமுகம் செய்யவும், அவர்களுக்கும் புன்னகை தான்.



அழகாக குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டனர்.



"ரொம்ப அழகா இருக்க இந்த சாரீல", என்று அவளின் செவிகளில் ஆதர்ஷ் சொல்லவும், செவ்வானமாய் சிவந்து விட்டாள் சாந்தினி.



அவர்களின் விடயம், அப்படியே கசிய துவங்கியது.



அதற்கு பிறகு தான் ருத்ரன் கடத்தப்பட்டதாக செய்தி வர, அவர்கள் அனைவரும் மும்பை வந்து சாந்தினியை அறைந்து இருந்தான் ஆதர்ஷ்.



பின்பு இருவரும் ஒன்றாக சென்னை வந்து இருந்தார்கள்.



சாந்தினிக்கு ஆத்திரம் தீரவே இல்லை. அவள் பேசியது தவறு தான், ஆனால் அவனும் அல்லவா பேசி இருந்தான். அவளை அடித்தது வேறு அவளுக்கு கடுப்பாக இருந்தது.



"ஹே சாரி டி.. ஏதோ தெரியாம பேசிட்டேன்... அடிச்சிட்டேன்.. வேணும்னா திருப்பி அடிச்சிக்கோ", என்று அவன் சொல்லி முடிக்கவும், அவனின் கன்னத்தில் சுளீர் என்கிற வலி.



"என்ன டி அடிச்சிட்ட.. ஒரு பேச்சிக்கு சொன்னா", என்று அவன் அப்படியே நிற்க, "இந்த ஒரு பேச்சு இரண்டு பேச்சு எல்லாம் இல்ல... சொன்னிங்க அடிச்சிட்டேன்.. முடிஞ்சிது மிஸ்டர் ஆதர்ஷ்", என்றவள் சென்று விட்டாள்.



இன்னும் கோவமாக இருக்கிறாள் என்று தோன்றியது.



சமாதானம் செய்தாக வேண்டிய கட்டாயம்.



அவனுக்கு பிரச்சனை என்றால் அழைக்கும் ஜீவன்கள் இருக்கிறார்களே!



ஆதி, ஆருஷ், சிவம் மூவருக்கும் அழைத்து இருந்தான்.



"என்ன டா?", என்று மூவரும் சலிப்பாக கேட்க, "டேய் என்ன டா இப்படி பேசுறீங்க?", என்று அவனும் ஆத்திரமாக கேட்டான்.



"டேய் இப்போ தான் டா ஷ்ரேயஸ்க்கு ஸ்மஷ்ட் பொட்டேட்டோ ஊட்டிகிட்டு இருக்கேன்", என்று ஒரு பக்கம் சிவம் சொல்ல, "சிவுக்கு பாம்பெர்ஸ் மாத்திக்கிட்டு இருக்கேன் டா", என்று ஆருஷ் சொல்ல, ஆதி தான் அதை விட சிறந்த பதில் அளித்தான்.



"என் பொண்டாட்டி ஜக்கெட்க்கு ஊக்கு தச்சிகிட்டு இருக்கேன் டா... அவ பேவரிட் ப்லோஸ் கொஞ்சம் ஊக்ஸ் பிஞ்சிருச்சு", என்று அவன் வழிந்து கொண்டே சொல்லவும், "டேய் பிஞ்சிருச்சா பிச்சிட்டியா?", என்று கேட்டு இருந்தான் சிவம்.



"ஹிஹி.. இப்போ அதெல்லாம் எதுக்கு.. நீ சொல்லு ஆது", என்று அவன் பேச்சை மாற்ற, "டேய் டேய் நடிக்காத டா", என்று ஆருஷ் சொல்ல, "டேய் நீ பாம்பெர்ஸ் கட்டு சிவுக்கு.. ஆது நீ சொல்லு டா", என்று அவன் மீண்டும் ஆதஷிடம் வர, "டேய் சாந்துவை கரெக்ட் பண்ணனும்.. ஐடியா சொல்லுங்க", என்று அவன் கேட்கவும், மூவரும் சிரித்து விட்டனர்.



"எதுக்கு டா சிரிக்கிறீங்க?", என்று அவன் கோவமாக கேட்கவும், "இல்ல இங்க ஆதர்ஷ்னு ஒரு உத்தமன் இருந்தான் அவனை தான் தேடிகிட்டு இருக்கோம்", என்று சிவம் நக்கலாக சொல்லவும், "சிவம்.. டேய் பாவி உனக்காக ஸ்கூல்ல எவளோ பண்ணிருக்கேன்.. இப்படி பழி வாங்குறியே", என்கவும், "நாங்க என்ன டா ஹெல்ப் பண்றது? நீ தான் பிரில்லியண்ட்னு பெருமை பீத்திக்குவியே", என்று ஆருஷ் காலை வார, "அது மட்டுமா சார் எது சொன்னாலும் யாரா இருந்தாலும் கேக்கணும்.. ஸ்கூல் கிரிக்கெட் கோச் வரைக்கும்", என்று ஆதியும் அவனின் பங்கிற்கு சீண்டினான்.



"டேய் ஆதி நீ டீம்ல வரணும்னு தான் டா அப்படி பேசுனேன்.. எல்லாரும் வச்சி செயிரிங்க டா... உங்களுக்கு கால் பண்ணேன் பாரு என்ன நானே செருப்பால அடிச்சிக்கணும்", என்றவுடன், "நான் வேணா பிஞ்ச செருப்பை பார்சல் பண்ணி விடுறேன் டா ஆது", என்று ஆதி சொல்லவும், "உன்ன யாழ் கிட்ட சொல்லி ரூமை விட்டு அனுப்ப சொல்றேன் பாரு", என்றவனிடம், "அதெல்லாம் நடக்குற காரியமா பேசு டா", என்றான்.



"ஆது.. நான் சொல்லுவேன்... ஆனா நீ பண்ணுவியான்னு தெரியல", என்று ஆருஷ் சொல்ல, "சொல்லு டா பன்றேன்", என்றவனிடம் ஆருஷ் அவன் ஐடியாவை சொல்ல, மீதி இருவரும் சிரித்து விட்டனர்.



"டேய் ஆது இத பண்ணா கண்டிப்பா சாந்து உன்ன மன்னிச்சிருவா", என்று ஆதி சிரிக்க, "ஆமா டா ஆது", என்று சிவமும் சிரிக்க, பற்களை கடித்து கொண்டு, "பண்ணி தொலையுறேன்", என்று வைத்தவன், நேரே சாந்தினியின் முன் சென்றவன், ஆருஷ் சொன்னதை செய்ய, விதிர்விதிர்த்து போய் விட்டாள் சாந்தினி.
 
Last edited:

அத்தியாயம் 31



நேராக சாந்தினியிடம் சென்ற ஆதர்ஷ், நண்பன் படத்தில் வருவது போல், அவனின் பேண்டை இறக்கி, "தலைவி யு ஆர் கிரேட், என்ன மன்னிச்சிருங்க", என்று சொல்லவும், அவள் தான் விதிர் விதிர்த்து போய் விட்டாள்.



நல்ல வேலையாக அவன் உள்ளே பாக்சர்ஸ் போட்டு இருந்ததால் தப்பித்தாள். இல்லை என்றால் அவளின் நிலைமை மோசமாகி இருக்கும்.



"ஆதர்ஷ் என்ன பண்றீங்க?", என்று அவள் பற்களை கடித்து கொண்டு திரும்பி விட்டு கேட்டாள்.



"ஹே சாரினு வேற எப்படி சொல்றது?", என்று மீண்டும் பேண்டை மாட்டி கொண்டு கேட்கவும், "வாய்ல கூட கேட்கலாம்... எனக்குன்னு வந்து சேரிங்க பாருங்க", என்று தலையில் அடித்து கொண்டவளை பார்த்து, "ஆருஷ் தான் டி ஐடியா கொடுத்தான்', என்றவனிடம், "எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் தானே... வேற எப்படி இருக்கும்... பேண்ட் மாடிட்டிங்களா இல்லையா?", என்று கேட்கவும், "மாட்டிட்டேன் திரும்பு", என்றவுடன் தான் திருப்பி இருந்தாள்.



"அறிவில்லையா உங்களுக்கு?", என்று அவள் மீண்டும் கேட்க, "இல்ல டி இப்போ என்ன பண்லாம்? உனக்கு என்ன தான் டி பிரச்சனை? ஏன் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற? ப்ளீஸ் குழந்தை பிறக்காது காக்கா பறக்காதுனு எல்லாம் கதை சொல்லாத சாந்தினி.. சே வாட்ஸ் யுவர் ப்ரோப்லேம்?", என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.



"ஏனா எனக்கு பயமா இருக்கு ஆதர்ஷ்.. எனக்கு பயமா இருக்கு", என்றவள் வெடித்து அழுது இருந்தாள்.



அப்படியே முட்டியை மடக்கி அழவும், அவனோ அவளின் முன் மண்டியிட்டு அவளை அவனின் கைவளைவுக்குள் கொண்டு வந்து இருந்தான்.



"சாந்தினி", என்று மென்மையாக அழைத்தவனின் திண்ணிய மார்பில் சரண் புகுந்தாள் மெல்லிடையாள்.



"எனக்கு பயமா இருக்கு ஆதர்ஷ்... உங்களோடது எவளோ பெரிய குடும்பம்... நான் போய் எப்படி அங்க அதுவும் முதல் மருமகளா? எனக்கு குடும்பம்னா என்னன்னே தெரியாது ஆதர்ஷ்... யாழ் எவளோ அழகா எல்லா பிரச்சனையும் ஹாண்டில் பண்ணுறா.. ஆனா நான்.. தளிரோட கேஸ் வேற அவ ப்ரெக்னென்ட்டா அந்த வீட்டுக்குள்ள போனா.. அவளை உங்க வீட்ல அக்செப்ட் பண்ணாங்க... ஆனா நான்.. எனக்கு தெரியல.. என்னால முடியல... ஒரு கம்பெனியை எடுத்து நடத்துற என்னால ஒரு வீட்ல எப்படி இத்தனை பேரோட இருக்க முடியும்னு தெரியல... என்ன உங்க வீட்ல அக்சப்ட் பண்ணிப்பாங்கனு தெரியும்.. இருந்தாலும்...", என்றவள் மீண்டும் கதறி அழ, அவனுக்கு அவளின் தனிமையின் கொடுமை புரிந்தது.



தனிமையிலே இருந்தவளுக்கு இன்று குடும்பத்துடன் இருப்பதில் ஒரு பயம், தயக்கம், ஆனாலும் அவளின் மனதில் அந்த ஏக்கமும் இருக்கிறது என்று அவனுக்கு தெரியும்.



"இங்க பாரு சாந்தினி", என்றவன் அவளின் முகத்தை தாங்கி கொண்டு, "நான் இருக்கேன் டி.. நீ சொல்லு நம்ப வேணா தனியாவே கூட இருந்திரலாம்... அங்க ஆதி அண்ட் யாழ் எல்லாமே பார்த்துக்குவாங்க..", என்றதும் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.



அவளுக்காக அவனின் மொத்த குடும்பத்தையும் விட்டு விட்டு வர தயாராகி விட்டான். அவளுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.



"நான் உண்மையா தான் சொல்றேன்.. எனக்கு பிரச்சனை இல்ல", என்றவனின் குரலில் அப்படி ஒரு உறுதி.



அவளை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்று அவனால் எப்படி சொல்லி விட முடியும்.



"நீ சொல்லு டி.. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உன் தைரியத்தை பிடிக்கும்... உன் தியாக உணர்வை பிடிக்கும்.. உனக்காக நான் என் குடும்பத்தை தியாகம் பண்றது எல்லாம்...", என்றவனின் வார்த்தைகள் முற்று பெற வில்லை. அவள் முற்று பெற விடவில்லை.



அவளின் இதழால் அடைத்து இருந்தாள். அவளாக கொடுக்கும் முதல் முத்தம், அவனே முதலில் அதிர்ந்து விட்டான்.



ஆனாலும் உடனே சுதாரித்து கொண்டு, முதலில் அவளுக்கு அடக்கியவன், பின்பு அவளை அள்ளி கொண்டு மஞ்சத்தில் சரணடைத்தான்.



அவன் ஆடைகளை விளக்கவில்லை. ஆனாலும் அவளை முழுதாக அளக்க துவங்கினான்.



மூச்சு முட்ட முட்ட முத்த யுத்தம் தொடர்ந்தது.



ஆதர்ஷின் கைபேசி அலறியது.



அவன் முதலில் எடுக்க வில்லை. சாந்தினி தான் அவனை தள்ளி விட, "என்ன டி?", என்றவனின் குரலில் இன்னும் மோகம் தீர்ந்த பாடில்லை.



"உங்களுக்கு கால் வருது", என்றவள் சொல்லவும், அவனோ கைபேசியை எடுத்தவன், கடுப்பில், "எஸ்", என்று கேட்கவும், "என்ன டா சிவ பூஜையில் கரடி மாதிரி கால் பண்ணிட்டோமா?", என்று சிவம், ஆருஷ், ஆதி தான் அழைத்து இருந்தார்கள்.



"நீங்க ஏன் டா இப்போ கால் பண்ணீங்க? ஷ்ரேயஸ்க்கு ஊட்டி முடிஞ்சா நீ ஸ்ருஷ்டிக்கு சாப்பாடு ஊட்ட வேண்டியது தானே! அடேய் ஆருஷ் போய் சிவுக்கு விளையாட்டு காட்டு... அப்பா டேய் ஆதி போ போய் ரோமேன்ஸ் பண்ணு டா", என்றவன் வைத்து விட்டான்.



"ஐயோ என்ன வச்சிட்டீங்க...', என்றவளின் குரல் முடியாது என்னவோ முனகலாய் தான்.



அவன் அவளை மொத்தமாக களவாட வில்லை. ஆனால் அவனின் அச்சாரத்தை மொத்தமாக பதித்து இருந்தான்.



"மம்மி டாடி", என்று பிள்ளைகள் வர, "பசங்க வராங்க போங்க", என்று அவள் தள்ளி விடவும் தான், அவன் வெளியே சென்றான்.



அவளின் ஆடைகள் முழுக்க சிதறி இருந்தது.



அவளுக்கு தான் வெக்கம் பிடிங்கி தின்றது.



அவளும் எழுந்து சென்று குளித்து விட்டு, சூப்பர் மார்க்கெட் சென்று பிள்ளைகளுக்காக பழமும், இன்னும் சில உணவுவகைகளை வாங்கி வைத்து இருந்தாள்.



அன்று அவளிடம் கெஞ்சி கூத்தாடி அர்னவ் தான் தாராணியை டேட்டிங் அழைத்து கொண்டு சென்று இருந்தான்.



அனைத்து உணவு வகைகளையும் வைத்து விட்டு அமர்ந்து விட்டார்கள்.



பிள்ளைகளுக்கு பரிமாறியவள், அவனுக்கும் பரிமாறி, அவளும் சாப்பிட அமர்ந்து விட்டாள்.



ஒரே குடும்பமாக மனா நிறைவாக சாப்பிட்டார்கள்.



"பசிக்குது சாந்தினி", என்று அவன் சொல்ல, சட்டென அவனை தலை நிமிர்த்தி பார்த்தாள். அவனின் குரல் மாற்றத்திலேயே அவன் எதற்கு அடித்தளம் போடுகிறான் என்று அறியாதவளா அவள்!



"பசங்க முன்னாடி என்ன எல்லாம் கேக்குறாரு! இதுல கோட் வர்ட் வேற?", என்று அவள் நினைக்க, "அதான் சாப்பிட்டுட்டு இருக்கீங்களே டாடி", என்று பதில் அளித்தால் லயு!



சாந்தினி சிரித்து விட்டாள்! ஆதர்ஷனோ அவளை முறைக்க, "உங்கள விட டாடி பிக் பாய்ல அதனால எனக்கு இன்னும் பசிக்கும் சோ மம்மி எக்ஸ்ட்ரா சாப்பாடு கொடுப்பாங்க", என்று அவனின் கண்கள் சென்ற இடத்தை பார்த்த சாந்தினிக்கு தான் மூச்சு அடைத்து விட்டது!



இன்னும் திருமணம் ஆகவில்லை! எல்லை தாண்ட மாட்டான் என்று தெரியும் தான்! ஆனால் அதை தவிர அனைத்தையும் அவளிடம் செய்து விடுகிறான் அல்லவா!



"அப்போ மம்மி டாடிக்கு எக்ஸ்ட்ரா கொடுங்க", என்று லக்ஷித் சொல்ல, "நீங்கலாம் சாப்பிட்டு போயிட்ட பிறகு மம்மி எனக்கு தருவாங்க... சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க", என்று சொல்லவும், இரு பிள்ளைகளும் அமைதியாக சாப்பிட்டனர்.



"பசங்க முன்னாடி என்ன பேச்சு இதெல்லாம்", என்று அவள் அவனின் காதுகளில் முணுமுணுக்க, "உன்ன யாரு டி ஸ்ட்ராபெரி பைனாப்பிள்லாம் வாங்கி வெக்க சொன்னா?", என்று அவனும் கேட்க, "பசங்களுக்கு பிடிக்குமேனு வாங்குனேன்", என்றவள் அவனை பார்க்க, "எனக்கும் பிடிக்கும் தான்... இட் வில் இன்க்ரீஸ் அர்ஜெஸ்", என்று அவன் சொல்ல, அவளின் கண்கள் விரிந்தன!



"ஆதர்ஷ்", என்று அவள் பற்களை கடிக்கும் போதே, "சர்ப்ரைஸ்", என்று வந்து இருந்தார்கள் விஷ்ணுவும், வித்யாவும்!


 

அத்தியாயம் 32



"தாத்தா.. பாட்டி", என்று துள்ளி குதித்து கொண்டு ஓடினார்கள் லயாவும் லக்ஷித்தும்!



"மம்மி டாடி... நீங்க ஏன் இங்க வந்திங்க?", என்று கடுப்பாக கேட்டான் ஆதர்ஷ்.



"டேய் என்ன டா நாங்க ஏதோ நந்தி மாதிரி வந்து இருக்க மாதிரி பேசுற?", என்று விஷ்ணு சொல்லவும், வித்யாவோ, "உன் முழியே சரி இல்லையே", என்று மகனை ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்தார்.



"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்களே அதான்", என்றவன் உணர்ச்சிகளை கட்டு படுத்த, "உன் டாடிக்கு ஏதோ கான்பரென்ஸ் போல, எனக்கு பேபிசை பார்க்கணும் போல இருந்தது", என்று சொல்லிக்கொண்டே அவர் கொற்றவை, யாழ், தளிர் மற்றும் வைஷ்ணவி அவர்களுக்காக அனுப்பிய பொருட்களை திறந்து கொடுக்கவும், "ஹே செம்ம டெஸ்ட்டா இருக்கு பாட்டி", என்று சொல்லிக்கொண்டே கன்னத்தில் முத்தம் கொடுத்தார்கள்.



"சாப்பிட்டீங்களா ஆன்டி?", என்ற சாந்தினியை பார்த்து, "பரவால்ல மா உனக்காச்சு கேட்கணும்னு தோணுச்சே.. நான் பெத்த ஜந்துக்கு தான் இதெல்லாம் தெரியல", என்று சொல்லிக்கொண்டே அவர் உணவு மேசைக்கு அருகே வர, "நீயாமா சமைச்ச?", என்றவருக்கு புன்னகையுடன் தலை அசைத்தாள்.



அடுத்து அனைவரும் சாப்பிட்டு அவரவர் அறைக்கு போகும் சமயம், "சாந்தினி நான் உன் கூட படுத்துக்குறேன்", என்று செல்ல இருந்த வித்யாவை, "எதுக்கு நீங்க டாடி கூட படுங்க", என்று விரைந்து பதில் அளித்த ஆதர்ஷனை பார்த்து வித்யா மற்றும் விஷ்ணு இருவரும் புருவம் சுருக்கி பார்க்க, சாந்தினியோ சிரிப்பை அடக்கி கொண்டாள்.



"ஐயோ க்ரதாகி வச்சி செய்யுறா.. இன்னைக்கு நான் இவளை ஸ்வாகா பண்ணலாம்னு பார்த்தா.. இவங்க வந்து இவளுக்கு பாடி கார்ட் வேலை பார்க்குறாங்க", என்று மனதில் நினைத்து கொண்டு, அவன் சென்று படுத்து விட்டான்.



சாந்தினியும் சென்று படுத்து விட, நள்ளிரவில் அவளுக்கு ஏதோ அந்தரத்தில் பறப்பது போகிற உணர்வு.



முழித்து பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது. ஆதர்ஷ் தான் அவளை சுமந்து கொண்டு எங்கயோ சென்று கொண்டு இருந்தான்.



"ஆதர்ஷ் என்ன பண்றீங்க?", என்று அவள் கத்த போக, அதை மொத்தமாக அவனின் இதழ்களுக்குள் விழுங்கி இருந்தான் அந்த மாயக்காரன்.



நேராக வீட்டில் இருந்து வெளியே வந்தவன், காரின் பின் சீட்டில் தான் அவளை இறக்கி விட்டான்.



"லூசா நீங்க இப்படியா தூக்கிட்டு வருவீங்க?", என்று பற்களை கடித்து கொண்டு கேட்கவும், "பின்ன என்ன டி வெண்ணை கட்டி போல நீ இருக்க.. பார்த்து என்ன பூஜை பண்ண சொல்றியா?", என்று அவன் கேட்டுக்கொண்டே அவனின் கைகள் அவளின் இரவு உடையில் கை வைக்க, அவளோ அவனை தள்ளி விட முயற்சிக்க, எங்கே இருந்து விட போகிறான்.



இன்று மாலை கட்டிலில் செய்த அனைத்தையும் காரில் செய்து கொண்டிருந்தான்.



வித்யாவோ தண்ணீர் குடிக்க எழுந்த சமயம், சாந்தினி அவளின் அருகில் இல்லை.



"இந்த பொண்ணு எங்க போயிருக்கா?", என்று நினைத்து கொண்டே அவர் வெளியே வர, விஷ்ணுவும் வெளியே வந்து விட்டார்.



"சாந்தினியை ரூம்ல காணோம்ங்க", என்று அவர் யோசித்து கொண்டே சொல்லவும், "ம்கூம் உன் மகனையும் காணோம் டி", என்றவர் வெளியே வர, கார் அசைவது தெரிந்தது.



"உன் மகன் பாரு காரை பெட் ரூம் மாதிரி யூஸ் பன்றான்", என்று விஷ்ணு மனைவியை பார்க்க, "சாந்தினிக்கு குழந்தை பிறக்காம இருக்குறதே நல்லது. இல்லனா இவன் மூணாவது பேர பிள்ளையை கைல கொடுத்துட்டு தான் கல்யாணம் பண்ணிருப்பான்", என்று வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டு சென்று விட்டார்.



விஷ்ணுவும் சென்று விட, ஆதார்ஷோ விடியும் வேளையில் தான் அவளை விட்டான்.



"உங்கள...", என்று அவள் சொல்லிக்கொண்டே அவளின் உடைகளை அடைய, "இன்னும் முழுசா ஒன்னும் பண்ணல டி... குஸ்கா தான் சாப்பிட்டு இருக்கேன்", என்றவனை பார்த்து முறைத்து கொண்டே சென்று விட்டாள்.



அடுத்த நாள் எழுந்த வித்யா ஆதர்ஷனை முறைக்க, "ஏன் டாடி மம்மி என்ன முறைக்கிறாங்க?", என்று விஷ்ணுவின் காதை அவன் கடிக்க, "நீ சாந்துவை நேத்து நைட் அபேஸ் பண்ணிட்டு போனது உன் மம்மிக்கு தெரிஞ்சி போச்சு", என்றவுடன், அவனோ குரலை செறும்மிக்கொண்டு, "ஒண்ணுமே பண்ணல டாடி",என்றதும், "டேய் மகனே.. ஏன் டா என்கிட்டயே இப்படி உருட்டுற? என்னவோ போ.. எப்போ கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா?", என்று அவர் சத்தமாக கேட்கவும், "இப்போ தான் டேட்டிங் பிரியட்ல இருக்கோம்.. கொஞ்சம் மாசம் போகட்டும்", என்று அவன் சொல்லவும், அவனின் முதுகில் ஜல்லிக்கரண்டியாலயே அடித்தார் வித்யா.



"டேய் இரண்டு குழந்தை இருக்கு.. இப்போதான் டேட்டிங் பீரியட் மண்ணாங்கட்டி பீரியட்னு? எங்களுக்குனு வந்து வாச்சிருக்கீங்க பாரு.. ஒருத்தன் என்னடானா குழந்தை கொடுத்து கர்பமா இருக்க பொண்ணுக்கு தாலி கட்டுறான், இன்னொருத்தன் என்னடானா தாலி கட்டுன பொண்டாட்டிய கடத்திகிட்டு போய் மாசம் ஆக்குறான், நீ என்னடா உனக்கே தெரியாம இரண்டு குழந்தை கொடுத்து, இப்போ தான் டேட்டிங் பண்ற... எங்க இருந்து தான் பெத்தோமோ நாங்க மட்டும்... எங்க பொண்ணுங்களே பரவால்ல", என்று வித்யா சொல்ல, ஆதார்ஷோ, "அவளுங்க கச்சேரி வரும் போது தான் தெரியும்", என்று முணுமுணுத்து கொண்டான்.



அடுத்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து விட்டு, "சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க டா", என்று சொன்ன வித்யா, "இவன் ஏதாச்சு பண்ணா சொல்லு மா... சீக்கிரமா அவனோட எங்க வீட்டுக்கு வந்துருமா... நீ எப்போ வருவேன்னு தான் நாங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம்", என்றவர் சாந்தினியின் கையில் தங்க வளையல் போட்டு விட்டு தான் சென்றார்.



அடுத்த சில நாட்களில் தான் அகல்யா வீட்டிற்கு வந்து இருந்தாள்.



ஆதி தான் அவளிடம் பேச சென்றான்.



"உனக்கு வெற்றியை பிடிக்கலையா?", என்று கேட்கவும், "உங்க அண்ணா ஆதர்ஷ் கிட்ட போய் கேட்டுக்கோங்க", என்று சொல்லவும், ஆதியின் கண்கள் சுருங்கியது.



இவள் ஏன் ஆதர்ஷனை இங்கு இழுக்கிறாள் என்று அவனுக்கு தெரியாதே!



அடுத்த அழைப்பு ஆருஷிற்கு அழைத்தவன், சிவமிற்கும் அழைக்க, "என்ன டா எதுக்கு கால் பண்ணிருக்க?", என்றவர்களிடம், "அடுத்த பஞ்சாயத்து டா", என்றவன் ஆதர்ஷனை அழைப்பில் சேர்த்து இருந்தான்.



அத்தியாயம் 33



ஆதர்ஷ் அப்போது தான் அர்னவ் மற்றும் தாராணியுடன் ஒரு மீட்டிங் முடித்து விட்டு அமர்ந்து இருந்தான்.



"சொல்லுங்க டா நல்லவங்களா", என்று சொல்லவும், "அகல்யா வீட்டுக்கு வந்துட்டா ஆதர்ஷ்", என்று ஆதி சொல்ல, ஆதர்ஷ் கண்களை அழுத்தி மூடி திறந்தான். என்ன நடந்து இருக்கும் என்று அவனுக்கு ஓரளவிற்கு யூகிக்க கூடியதாக இருந்தது.



அவனின் குரல் இறுகி விட்டது.



"நான் வெற்றி கிட்ட பேசுறேன்", என்கவும், "நீ வெற்றி கிட்ட ஏன் பேசுற?", என்று ஆருஷ் கேட்க, "அகல்யாவும் உன் கிட்ட தான் பேச சொல்றா ஆதர்ஷ்... எங்களுக்கு தெரியாம என்ன நீ பண்ணிருக்க?", என்று ஆதி கட்டமாகவே கேட்டான்.



"டேய் என்னவோ நான் அவளை கல்யாணம் பண்ணாம அவன் கூட போய் வாழ சொன்ன மாதிரி பேசுற", என்று அவன் அவசரத்தில் உளறி விட, "என்ன வெற்றிக்கும் அகல்யாவுக்கும் கல்யாணம் ஆகலையா?", என்று ஆருஷ் மற்றும் சிவம் ஒரே போல் கேட்க, "டேய் ஆதி நீ என்ன எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்க?", என்று சிவம் தான் அவனிடம் கேட்டான்.



"எனக்கு தெரியும்", என்றவன் எப்போது தெரியும் என்பதையும் கூற, "சரி ஆதிக்கு ருத்ரன் அப்பா சொன்னாரு.. உனக்கு எப்படி தெரியும் டா உத்தமனே", என்று ஆருஷ் கேட்கவும், சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டளையும் இருந்தது.



"வெற்றி என்னோட பெஸ்ட் பிரண்ட்", என்றவுடன் அவர்களுக்கோ அதிர்ச்சி தான்.



"டேய் என்னால முடியல டா.. உங்க குடும்பத்துல பிரண்ட்ஷிப் வச்சிக்கிட்டு இருக்கறதுக்கு என்ன மொத்தமா அம்புலன்ஸ்ல ஏத்திருவிங்களா டா? ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ஷாக்கா கொடுக்குறீங்க.. ஒருத்தன் என்னடானா கொலை பண்ணும் போது தெரியும்னு சொல்றான்.. இன்னொருத்தன் முறிக்கிட்டு திரிஞ்சவன் தான் என் பேஸ்டினு சொல்றான்... முடியல", என்று சிவம் புலம்பவும், "உன்ன யாரும் இங்க இருக்க சொல்லல நீ கிளம்பு", என்று ஆருஷ் சொல்ல, "நான் கிளம்பி போய் அகல்யா கிட்ட எல்லாத்தையும் கேட்டுக்குறேன்", என்கவும், "யப்பா நல்லவனே கொஞ்சம் இரு டா... அவ வேற சாமி ஆடுவா", என்றவன் நடந்ததை சொல்ல, "அடப்பாவி ஆது.. உன்ன மட்டும் அவ பாத்தானு வை.. உப்புக்கண்டம் போட்டுட்டு வா டா", என்று ஆதி சொல்ல, "என் பிரண்ட் பாவம்.. அப்பவே சொன்னேன் அவன் கிட்ட... இந்த ராக்ஷஸி வேணாம் டா.. அவ போட்டோவ பார்த்து முடிவு பண்ணாதானு.. ஆனா கேட்டனா", என்று ஆதர்ஷும் கூறினான்.



"எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம்.. பாவம் அகல்யா.. அவளுக்கு எப்படி இருக்கும்?", என்று ஆருஷ் பேசவும், "டேய் கொஞ்சம் அடங்கு நான் முதல்ல போய் அவன் கிட்ட பேசிட்டு வரேன்.. அவன் வேற என்ன நிலமைல இருக்கானோ", என்று ஆதர்ஷ் அழைப்பை துண்டித்து விட்டான்.



இன்று தான் மறுபடியும் பிரகாஷின் இறப்பிற்கு பிறகு அழைத்து இருந்தான்.



"ஹலோ", என்று எடுத்தது என்னவோ அழகு மயில் தான்.



"நான் ஆதர்ஷ் பேசுறேன் மா", என்கவும், "அண்ணா.. நீங்க தானா? அகல்யா அக்கா உங்களோட வெற்றி மாமா போட்டோ பார்த்துட்டு தான் போய்ட்டாங்க.. பாவம் மாமா நேத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடமா இங்க வயல்ல இருக்க வீட்டுக்கு வந்துட்டாரு.. நான் தான் மனசு கேட்காம சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன்", என்று அவள் பேசவும், அவனுக்கே மனது பிசைந்தது.



"அவன் எங்க அழகு இப்போ?", என்று கேட்கும் போதே, அங்கு வந்து இருந்தான் வெற்றி.



"யாரு அழகு?", என்று கேட்டுக்கொண்டே அவன் வர, "ஆதர்ஷ் அண்ணா தான் மாமா", என்று அவனிடம் போனை கொடுத்தவள் சென்று விட்டாள்.



அவனோ, 'என்ன துக்கம் விசாரிக்கிறியா?", என்று அவன் ஏகத்தலமாய் கேட்க, "டேய் ஏன் டா?", என்று உண்மையாகவே வருத்தமாக பேசினான் வெற்றி.



"பின்ன என்ன டா.. உன் தங்கச்சி என்ன பேச கூட விடல.. அவ பாட்டுக்கு ஏதோ ஒன்னு புரிஞ்சிகிட்டு கிளம்பி போய்ட்டா.. கடுப்பா இருக்கு.. என் அப்பா அம்மா கூட என்ன கேவலமா பார்க்குறாங்க.. மாறன் கூட பேசுறது இல்ல டா... ச்ச என்ன வாழ்க்கையோ? நான் பாட்டுக்கு யுஎஸ்லேயே வேலை பார்த்துகிட்டு இருந்து இருக்கனோம். இங்க இவர்களுக்காக எல்லாம் வந்து.. எல்லாருக்கும் வில்லன் மாறி ஆகிட்டேன்.. உன் தங்கச்சி அப்படி தான் ஆக்கிட்டா... இத்தனை நாள் அவ கூட தான் டா ஒரே ரூம்ல இருந்தேன்.. கேட்டு பாரு அவ விருப்பம் இல்லாம ஒரு நாள் கூட அவளை தொட்டது இல்ல தெரியுமா?", என்று கேட்டவனின் குரல் உடைந்து விட்டது.



வெற்றியின் ஒழுக்கத்தின் மேல் எள் அளவிற்கு கூட அவனுக்கு சந்தேகம் இல்லை.



"சாரி", என்று ஆதர்ஷ் சொல்லவும், "நீ எதுக்கு சாரி சொல்ற டா? விடு இது தான் தலை எழுத்து. நான் பார்த்துக்குறேன். யு டேக் கேர்", என்று சொல்லி வைத்து விட்டான்.



ஆதர்ஷ் அடுத்து அழைத்தது என்னவோ அகல்யாவிற்கு தான்.



அவள் எடுக்க வில்லை. கோவமாக இருக்கிறாள் என்று தெரிந்தது.



ஆதிக்கு மீண்டும் அழைத்தான். ஆருஷ் மற்றும் சிவமும் இருந்தார்கள்.



"என்ன டா சொன்னான்?", என்று ஆருஷ் கேட்கவும், "உங்க தங்கச்சி மொத்தமா அவனை உடைச்சிட்டு வந்து இருக்கா", என்றவனின் குரலில் அகல்யாவின் மேல் கோவம்.



"நீ என்ன டா இப்படி பேசுற?", என்று சிவம் பேசவும், "டேய் அவன் என் பெஸ்ட் பிரண்ட்.. நீங்களும் அவனும் வேற வேற இல்ல எனக்கு.. அகல்யாவுக்கு அவனை விட பெட்டெர் பார்ட்னர் கிடைக்க மாட்டான் டா", என்று அவன் கத்தவும், "சரி விடு, அவங்க அவங்க லைப்பை பார்த்துக்குவாங்க.. உனக்கும் சாந்தினிக்கும் எப்போ கல்யாணம்?", என்று சிவம் பேச்சை மாற்றி இருந்தான்.



"யாழோட வளைகாப்பு முடிய பண்ணலாம்னு சாந்தினி சொல்றா .. பார்ப்போம்", என்று வைத்து விட்டான்.



அடுத்து யாழின் வளைகாப்பு முடிவதற்குள் இருவரின் நெருக்கமும் அதிகரித்து இருக்க, தாராணிக்கும் அர்னவ்விற்கும் தான் முட்டி கொண்டு இருந்தது.
 

அத்தியாயம் 34



தாராணிக்கே தெரியாமல் அவளின் பெயரில் ஒரு அபார்ட்மெண்டை வாங்க ஏற்பாடு செய்து இருந்தான் அர்னவ்.



இதை தெரிந்தலில் இருந்து தான் பிரச்சனையே!



"நான் உங்க கிட்ட இதெல்லாம் வேணும்னு கேட்டேனா?", என்றவள் சொல்லவும், "ஹே நான் உனக்கு கிபிட் தான் டி கொடுக்குறேன்", என்றவனை பார்த்து, "நானும் சம்பாதிக்கிறேன்.. என்னால வாங்கிக்க முடியும்.. நீங்க எதுவும் இவளோ எக்ஸ்பென்சிவா வாங்கி தராதீங்க", என்று சொன்னவள் சென்று விட, அன்றில் இருந்து இருவருக்கும் பாரா முகம் தான்.



உனக்கு வாங்கி தர எனக்கு உரிமை இல்லையா என்று அவனும், எனக்கு சம்பாத்தியம் இருக்கிறது இவ்வளவு பெரிய தொகை கொண்ட எதுவும் தேவை இல்லை என்று அவளும் முறுக்கி கொண்டு இருந்தனர்.



சாந்தினி கூட கேட்டு பார்த்தாள்.



"என்ன பிரச்சனை?", என்றவளிடம், "ஒன்னும் இல்ல மேம்", என்று சென்று விட்டாள்.



அவர்களே பார்த்து கொள்வார்கள் என்று நினைத்து கொண்டாள். ஆதரிஷிடமும் இதை பற்றி சொல்லி தான் இருந்தாள்.



"நானும் கவனிச்சேன்.. என்ன டா இரண்டு பேரும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி திரியுறாங்கனு.. எதுவும் பெருசா ஆனா பார்த்துக்கலாம்", என்று சொல்லி இருந்தான்.



யாழின் வளைகாப்பு முடிய, அடுத்த நாளே, "இன்னும் ஒரு வாரத்துல நல்ல நாள் வருது, சாந்தினி ஆதர்ஷ்", என்று ராஜ பார்த்திபன் பார்க்க, "எங்களுக்கு ஓகே தான் தாத்தா", என்று சொல்லி இருந்தார்கள் இருவரும்.



அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. அந்த வீட்டின் முதல் வாரிசின் திருமணம். இன்று அனைவரின் மனமுவந்து நடை பெறுகிறது.



"ஆதர்ஷ்", என்று ருத்ரன் அழைக்கும் போதே, "மொத்தமா வீட்டுக்கு ஷிபிட் ஆகிடுறேன்", என்று சொல்லி இருந்தான்.



அவனின் கன்னத்தை நெகிழ்ச்சியுடன் பற்றி இருந்தார் கொற்றவை.



"நீ இல்லாம வீடு வீடாவே இல்ல டா", என்றவரை பார்த்து, "அப்போ நாங்க எல்லாம் இருந்தாலும் அவன் தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியுறான்', என்று ஆதி சொல்லவும், "நீ இல்லமா இத்தனை நாள் நாங்க யாருமே சிரிக்கவே இல்ல டா", என்று வித்யா சொல்லவும், "மம்மி நீங்க தான் என் செல்லம்", என்றான்.



"அக்கா என் கூட இருக்கட்டுமே", என்று ஆசையாக தளிர் சொல்லவும், "ஆமா கல்யாணம் முடியுற வரைக்கும் இரண்டு பேரும் தனியா தனியா இருங்க" என்று வைஷ்ணவி சொல்ல, ஆருஷ் தான், "முழுசா நினைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு.. இவளோ நாள் ஒண்ணா தானே இருந்தாங்க.. இந்த ஒரு வாரம் பிரிஞ்சி இருக்கணுமா?", என்று கேட்கவும், "அப்படி கேளுடா", என்றான் ஆதர்ஷ்.



"டேய் ஆது ஏன் டா இப்படி அலையுற? பச்சையா தெரியுது", என்று சிவம் சொல்லவும், "உனக்கு என்னப்பா நீ எல்லாம் ஜாலியா அனுபவிச்ச.. பேசுவ.. நான் அப்படியா?", என்று நேரடியாக பேச, "என்ன இப்படி ஒப்பண்ணா பேசுறீங்க?", என்று கேட்டே விட்டாள் ஸ்ருஷ்டி.



"இத விட மோசமா பேசுவோம்.. எல்லாரும் இருக்காங்களேன்னு டீசென்ட்டா பேசுறோம்", என்று ஆதி சொல்லவும், அப்போது தனியாக என்னவெல்லாம் பேசுவார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை அங்கிருந்தவர்களால்..



"யாரும் இமாஜின்லாம் பண்ணாதீங்க...", என்கிற ஆதியை பார்த்து, "நான் தளிர் கூட கல்யாணம் வரைக்கும் இருக்கேன்", என்று விட்டாள் சாந்தினி.



ஆதர்ஷ்க்கு பெரிய ஏமாற்றம்.



"நான் மம்மி கூட போறேன்", என்று லக்ஷித் சொல்லி விட, "நான் டாடி கூட இருக்கேன்", என்று லயனிக்கா இருந்து விட்டாள்.



சரி என்று அனைவரும் சென்று விட்டார்கள்.



ஆதர்ஷிற்கு அன்று இரவு உறக்கமே வர வில்லை. இத்தனை நாட்களில் அவளை கட்டி அணைத்து படுத்தவனுக்கு அவள் இல்லாமல் தூங்குவது பேரும் பாடாக இருந்தது.



சாந்தினியும் நிலையும் இது தான்! அவனில்லாமல் அவளால் உறங்கவே முடியவில்லை.



அவளின் கைபேசி அலறியது. பராமலேயே யார் என்று அறிந்தவள், "என்ன தூங்கலையா?", என்று கேட்க, "நீங்களும் தூங்கலை போல?", என்று அவனும் கேட்க, இருவரும் பேசிக்கொள்ள வில்லை.



"பசிக்குது சாந்தினி",என்கவும், "பைத்தியமா நீங்க? எப்பவும் அதே நினைப்பு தானா?", என்று கேட்டவளிடம், "ஹே உண்மையாவே பசிக்குது டி.. நீ தோசை சுட்டு கொடு." என்கவும், "ம்கூம் நான் பறந்து தான் வரணும் செந்தளிர் இல்லத்துக்கு", என்றவள் நொடித்து கொள்ள, "நீ வர வேணாம் நான் வந்து இருக்கேன் கீழ வா", என்றவுடன், அடித்து பிடித்து கொண்டு கீழே சென்றாள்.



அங்கே சமையல் அறைக்கு முன் நின்று இருந்தான் ஆதர்ஷ்.



"தோசை சாப்பிடவா இங்க வந்திங்க", என்று அவள் ஹஸ்கி குரலில் பேச, "இல்ல இப்போ மனசு மாறிடுச்சு... எனக்கு எக் பரோட்டா வேணும்", என்றதை கேட்டவளுக்கு தான் அய்யோடா என்று இருந்தது.



"உண்மையா சொல்றிங்களா?", என்று அவள் மனதில் உள்ளதை கேட்கவும், "பொய்யா டி சொல்றேன்.. வா வந்து செஞ்சு கொடு" என்று அவளின் கையை பிடித்து கொண்டு அழைத்து சென்று இருந்தான்.



அவள் அவனுக்கு முட்டை பரோட்டா செய்ய, அவன் அவளை எவ்வளவு முடியுமோ செய்தான்.



"இதுக்கு தான் வந்திங்களா?", என்று அவள் கேட்கவும், "இதுக்காகவும் வந்தேன்", என்றவன் மாவு பிசைந்து கொண்டிருந்தவள் கழுத்தில் புதைய, "ஐயோ நான் எதுவும் பார்க்கல", என்கிற தளிரின் குரலில் ஆதர்ஷ் தள்ளி நிற்க, இதே சமயம் சிவயாழினியை தூக்கி கொண்டு வந்தான் ஆருஷ்.



"தண்ணி எடுக்க இவளோ நேரமா?", என்று கேட்டுக்கொண்டே அவன் வர, திருட்டு முழி முழித்து கொண்டு நின்று இருந்த ஆதர்ஷனை பார்த்தவன், "நீங்க என்ன இங்க பண்றீங்க சார்?", என்று கேட்கவும், "சிவுவை பார்க்க வந்தேன்" என்று வாயில் வந்ததை அடித்து விட்டான்.



"எதே! சிவு கிச்சன்ல என்ன டா பண்ணுவா?", என்று அவன் புருவம் உயர்த்தி கேட்க, "தோ நீ இப்போ தண்ணி குடிக்க வரமாதிரி வருவ பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" என்றவுடன் தளிர் சிரித்து விட்டாள்.



"கேவலமா சமாளிக்காத ஆதர்ஷ்.. வீட்டுக்கு கிளம்பு.. இவன் தான் வந்தானா அவனுக்கு நீயும் நைட் சமைச்சிக்கிட்டு இருக்கியா சாந்தினி.. சப்பாத்தி மாவை எடுத்து அவன் மூஞ்சுல அடிச்சிருக்க வேண்டாம்", என்று அவளுக்கு சொல்லி வேறு கொடுத்தான்.



"டேய் சண்டாளா.. நான் போறேன் டா", என்றவன் அவனின் முன்னவே சாந்தினியின் கன்னத்தில் முத்தம் கொடுக்க, "டேய் லூசு பயலே குழந்தை முன்னாடி என்ன பண்ற?", என்று ஆருஷ் பற்களை கடித்து கொண்டு கேட்கவும், "ஆதி பண்ண மூடிட்டு இருக்கல", என்றவன், சிவயாழினியின் கன்னத்திலும் முத்தம் பதித்து விட்டு சென்று விட்டான்.



அத்தியாயம் 35



அர்னவ் மற்றும் தாரணி அமர்ந்து இருந்தார்கள்.



"இங்க பாரு நான் அந்த அபார்ட்மெண்ட் வாங்குறது உன் அம்மாக்காக தான்.. இத நான் அவங்க கிட்ட டைரக்ட்டா கொடுக்க முடியாது.. அதான் உன் பேருல வாங்குறேன்.. அவங்களும் எனக்கு அம்மா மாதிரி தான் தாரணி. புரிஞ்சிக்கோ", என்று அவன் இதற்கு தான் இதை செய்கிறான் என்று சொல்லி விட்டான்.



அவளுக்கு ஒரு நொடி பேச்சே வர வில்லை. அவளது அன்னைக்காக இவ்வளவு யோசிக்கிறானா? இதற்கு மேல் அவள் என்ன கேட்க முடியும்.



'சாரி", என்று சொல்லி அவனை இருக்க அணைத்து இருந்தாள்.



"எப்போ கல்யாணம் வச்சிக்கலாம்?", என்றவனை பார்த்து, "சார் அண்ட் மேம் கல்யாணம் முடிஞ்சதும்", என்று சொல்லி இருவரும் அணைத்து கொண்டனர்.



அன்று தளிரை கையில் பிடிக்கவே முடியவில்லை. அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. எத்தனை நாள் அவளுக்கு கனவாக அவளின் அக்காவின் திருமணம் வந்து இருக்கும். இன்று நினைவாக நடக்கிறது.



ஆதி வந்திருந்தான்.



"இந்தா தளிர், இந்த ஜெவெல்ஸ்லாம் அம்மாவும் மம்மியும் சாந்துக்கு கொடுத்து விட்டாங்க", என்று அவளிடம் கொடுக்கவும், "நான் ஆல்ரெடி ரேடி ஆகிட்டேன் ஆதி", என்று அவள் முன் அழகு சிற்பமாக நடந்து வந்தாள் சாந்தினி.



"செம்மயா பொண்ணு மாதிரி இருக்க", என்று அவன் சொல்லவும், தளிர் அவனின் தோளில் பட்டென்று அடித்தாள்.



"ஹே என்ன? எப்ப பாரு லேடி ஹிட்லர் மாதிரி தான இருந்தா? இன்னைக்கு தான் நல்லா பொண்ணு மாதிரி இருக்கா.. சாந்து ஆதர்ஷ் பிளாட் ஆக போறான் பாரு", என்று சொல்லவும், அவள் அவன் அருகே வந்து, "எனக்குன்னே வர டா நீ", என்றவனை பார்த்து, "இனி என் தொல்லைய தினமும் சமாளிக்கணும்" என்று கண் அடித்தான்.



"தலையெழுத்து", என்று சொல்லவும், "ம்கூம்.. இனி நீ தான் என் அக்கா கூட எப்பவும் இருக்க போற", என்று தளிர் நொடித்து கொள்ள, "நீயும் வேணா அங்க ஷிபிட் ஆகிடு.. சிவு, நீ, நான், சாந்து, லயு எல்லாரும் பன் பண்ணலாம்", என்று இவர்கள் இங்கே பேசி கொண்டிருதார்கள்.



அங்கோ, "உங்க தம்பி கூட நான் இருக்கேனே அதுவே அவரு செஞ்ச புண்ணியம் தான்", என்று கையில் ஆப்பிளை வைத்து கொண்டு மேடிட்ட வயிறுடன் பேசி கொண்டிருந்தாள் யாழ்.



"நான் அன்னைக்கே சொன்னேன்.. உனக்கு ஏத்த பொண்ணு இவ தாணு.. அவன் தான் அப்போ கேட்கல", என்று ஆதர்ஷ் சொல்லவும், "நான் கூட தான் டா மதி கிட்ட சொன்னேன்.. என் அண்ணனையும் உன் அக்காவையும் கட்டி வச்சிரலாம்னு.. இப்போ அதே தான் நடக்குது", என்று அவனும் சொல்லி கொண்டு இருந்தான்.



சிவம் உள்ளே வர, "நான் சொல்றத கேளு ஆதர்ஷ்.. கடைசி சான்ஸ் ஓடி போய்ட்டு.. இந்த கல்யாணம்லாம் வேண்டாம்.. நாங்க படுற பாடு உனக்கும் வேணுமா?", என்கவும், "இப்போ ஒன்னும் பண்ண முடியாது.. மாமா செம்மயா லாக் ஆகிட்டாரு", என்று சிவமிற்கும் ஒரு ஆப்பிளை நெட்டி இருந்தாள் யாழ்.



ஆதர்ஷ் வர, அங்கே சாந்தினியும் வர நேரம் சரியாக இருந்தது. மிக மிக எளிமையான திருமணம். ஆனால் மனம் உவந்த திருமணம். அவர்கள் குடும்பத்தில் மிகவும் அனைவரும் எதிர்பார்த்த திருமணம்.



"இருங்க வெட்டிங் ஸ்பீச் கொடுங்க", என்று ஸ்ருஷ்டி சொல்ல, "நான் சாந்தினிக்காக கொடுக்குறேன். ஆதர்ஷ் என் சிஸ்டர்ர நல்லா பாத்துக்கோ.. ஷி இஸ் எ ஜெம்.. எவளோ கஷ்டத்தை பாத்துட்டா.. ஆனாலும் அவ உடையவே இல்லை.. அதுக்கு காரணம் அவ மன உறுதி தான்.. நான் சிவயாழினிய சாந்தினியை காட்டி தான் வளர்ப்பேன். ஷி இஸ் எ இன்ஸ்பிரஷன். அவ கண்ணுல நான் என்னைக்காச்சு கண்ணீரை பார்த்தேன் உன்ன கொன்னுடுவேன்.. நீ எப்படி தளிர் அண்ட் யாழ்கக பேசுறியோ அதே மாதிரி நானும் சாந்தினி அண்ட் யாழ்க்காக எப்பவும் பேசுவேன்", என்று முடித்து இருந்தான்.



"சரி சரி போதும் அடுத்து நான் தான்... சாந்தினி ஆதர்ஷ் ரொம்ப ரொம்ப நல்லவன்னுலாம் சொல்ல மாட்டேன்.. ஆனா எங்க மூணு பேருல அவன் ரொம்ப பாவ பட்ட ஜீவன். அதர்வ் டெத்க்கு அவன் ஏன் வரலன்னு யாருக்கும் தெரியாது ஆனா எனக்கு தெரியும்", என்ற ஆதி அப்படியே திரும்பி ஆதர்ஷனை பார்க்க, அவனோ அர்னவ்வை முறைத்தான்.



"சாரி சார்", என்று அர்னவ் சொல்ல, அனைவரின் கண்களும் ஆதியை தான் பார்த்தன.



"ஆதர்ஷ்க்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு.. அத கூட அவன் அந்த டைம்ல நம்ப கிட்ட சொல்லல.. அவனே குழந்தைங்களை அர்னவ் கிட்ட விட்டுட்டு தனியா இருந்து இருக்கான்", என்று சொல்லவும், 'டேய் ஆதர்ஷ்", என்று கொற்றவை தான் பதறி விட்டார்.



"அவன் தான் இப்போ நல்லா இருக்கான்ல விடு", என்று வித்யா தான் தேற்றினார்.



"அவனுக்கு அவன் ஹாப்பினஸ் கூட செகண்டரி தான்.. அடுத்தவர்களுக்காக அவன் வாழ்ந்துதானோனு எனக்கு ஒரு பீல்.. அவனுக்காக நீ எப்பவும் இருக்கனும் சாந்தினி.. யு போது டீசெர்வ் ஈச் அதர்", என்று முடித்தவன், அப்படியே சென்று இருவரையும் அணைத்து அவனின் வாழ்த்துக்களை கூறினான்.



"புரட்சி பண்ற டா ஆது, எல்லாரும் லவ், கல்யாணம், குழந்தைனு பண்ணுவாங்க... இல்ல அரேஞ் மேரேஜ் அப்படினா மேரேஜ், லவ், குழந்தை.. உனக்கு அப்படியே உல்ட்டா.. குழந்தை, லவ், கல்யாணம்", என்று ஆதி சொல்லவும், அனைவரும் சிரித்து விட்டனர்.



"சரி யாரு சாட்சி கையெழுத்து போட போறா?", என்று விஷ்ணு கேட்க, "என் நண்பன் போடுவான்", என்று சொல்லும் போதே, தமிழ் நாடு குழு உள்ளே வந்தது.



வேறு யார், வெற்றி, மாறன், அழகு மயில், அவிரன் தான். அர்ஜுனும் வந்து இருந்தான்.



ஜானவியின் கண்கள் அர்ஜுனை பார்க்க, அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.



"சைட் அடிக்காத டி", என்று தளிர் சொல்லவும், "அண்ணி நீங்க தான் எனக்கு சாட்சி கையெழுத்து போடணும்", என்று சொல்லவும், "உங்க அண்ணன்களுக்கு தெரிஞ்சா எங்களை போட்ருவாங்க", என்று யாழ் அவளின் மற்றொரு காதில் கூறினாள்.



வெற்றி ஆதர்ஷிற்காக கையெழுத்து போட்டான்.



"சாந்தினிக்கு யாரு தளிரா இல்ல யாழா?", என்று ருத்ரன் கேட்க, "இரண்டு பேருமே இல்ல.. ஆருஷ் இல்ல ஆதி யாரவது ஒருத்தர்", என்று அவள் சொல்லவும், ஆருஷ் தான் கையெழுத்து போட்டான்.



இந்த நாட்களில் அவர்களின் உறவு நன்கு மேம்பட்டு இருந்தது.



திருமணமான அன்றே அகல்யா சாந்தினியிடம் உண்மையை சொல்லி இருக்க, அவ்வளவு தான் சாமி ஆடி விட்டாள் சாந்தினி.



"உங்களுக்கு அறிவு இருக்கா?", என்று வெளுத்து வாங்கவும், ஆதர்ஷ் தான் காதை அடைத்து கொண்டான்.



"அவங்க சேருற வரைக்கும் உங்களுக்கும் ஒண்ணுமே கிடையாது", என்று சொல்லிவிட்டு அவளின் அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.



"சொல்றத கேளு டி", என்று அவன் கூப்பிட்டது காற்றில் தான் கரைந்து போனது.



ஒரு வாரத்தில் யாழிற்கு குழந்தை பிறந்து விட, குழந்தைகளை காண வந்தவர்கள், "எனக்கு டிவோர்ஸ் வேணும்", என்று சாந்தினி கூறினாள்.



"என்ன டா இது?", என்று ஆதி கேட்க, "அவளை கேளு", என்று சொல்லி முடித்து விட்டான்.



இவர்கள் தான் சண்டை இடுகிறார்கள் என்றால், "உன் பாஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்", என்று தாரணி, அர்னவ்விடம் சண்டை பிடித்து நின்று இருந்தாள்.



இங்கோ அகல்யா அவளும் வெற்றியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெறித்து கொண்டு இருந்தாள். அவளின் கையில் பிரதாப் அவளுக்கு அணிவித்த நிச்சயதார்த்த மோதிரமும் இருந்தது.



அவளின் நினைவுகள் அவளும் வெற்றியும் கூடி கழித்த அழகான நாட்களை நோக்கி சென்றது.



மாறனும் அழகும் கூட, அவர்கள் ஒன்றாக இருக்கும் தருணங்களை நினைக்க துவங்கின.



வெற்றியோ வானத்தை உற்று நோக்கி கொண்டு இருந்தான். அவனின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவள் அவள்.. இன்று பிரிந்து அவனின் உணர்வுடன் உயிரையும் கொன்று கொண்டு இருக்கிறாள்.



வெற்றி மட்டும் அகல்யாவின் அழகான காதல், மாறன் மற்றும் அழகு மயிலின் அதிரடியான காதலையும், யாழ், வெற்றி, மாறன், அவிரன், மதுமதி, அர்ஜுன் இவர்களின் மழலை பருவத்தையும், உயிரும் உறவும் சீரிஸ் ஐந்தாம் பாகமான உணர்வுக்கு உயிர் கொடுவில் காண்போம்.
 
Top