பாகம் – 15
விக்ரம், “இது எல்லாத்துக்கும் நேரம் வரும் போது நானே உன் கிட்ட சொல்கிறேன்” என்றான்.
நிலா, “கோபமாக அது என்ன நேரம் வரும்போது. இது என்ன சின்ன விஷயமா இதில் என்னோட வாழ்க்கையே அடங்கி இருக்கு. நீங்க இப்பவே சொல்லணும்” என்றாள்.
சித்ரா மீண்டும் குரல் கொடுத்தாள் சாப்பிட வருமாறு.
விக்ரம், “சரி நாளைக்கு நம்ம ரிசப்ஷன் முடிஞ்சதும் நைட்டு உன்கிட்ட கண்டிப்பா நான் சொல்கிறேன்” என்று வாக்கு கொடுத்தான்.
பிறகு இருவரும் ஒன்றாக கீழே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள் . அங்கு ராஜேந்திரன் ,ராஜலட்சுமி, ராதிகா அமர்ந்து இவர்களுக்காக சாப்பிடாமல் காத்திருந்தார்கள்.
ராஜேந்திரன், “வாப்பா விக்ரம் உங்களுக்காக தான் நாங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம் சாப்பிடாம” என்றார்.
விக்ரம், “நான் உங்களை வெயிட் பண்ண சொல்லலையே” என்றான் வெடுக்கென்று.
ராஜலட்சுமி, “சரி சரி நீ உட்காருப்பா எல்லாரும் சாப்பிடலாம்” என்றார் சிரித்த முகமாக. விக்ரம் நிலாவை அமர வைத்து விட்டு அவனும் பக்கத்தில் அமர்ந்தான்.
ராஜலட்சுமிக்கு மனதில் விக்ரம் நிலா மேல் இவ்வளவு பாசமாக இருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டாள்.
பிறகு இரவு உணவை சாப்பிட்டு கொண்டே விக்ரம், “மித்ரா, ஆதித்யா எப்போ வராங்க?” என்றான். ராஜலட்சுமி, “நாளைக்கு ஃபங்ஷனுக்கு கண்டிப்பா வந்துருவாங்க” என்றாள்.
விக்ரம், “ நிலா நீ சாப்பிட்டு மேல வா” என்று விட்டு அங்கிருந்து சென்றான். ராஜலட்சுமி, “ஒரு நிமிஷம் நில்லுப்பா” என்றாள்.
விக்ரம் திரும்பி பார்த்தான். ராஜலட்சுமி, “இன்னைக்கு நைட்டு நிலா என்கூட தூங்கட்டும்” என்றாள்.
விக்ரம், “ஏன்?” என்றான. ராஜலட்சுமி, “இல்ல கல்யாணம் ஆகி முதல் நாள் புருஷன், பொண்டாட்டி தனி தனியா தான் தூங்கனும் அது நம்ப வீட்டு சம்பிரதாயம்” என்றார்.
“அப்போதான் உங்க வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் அதுக்காக தான் இதெல்லாம்” என்றார்.
விக்ரம், “இல்ல எனக்கு இதில் எல்லாம் எந்த நம்பிக்கையும் கிடையாது. நிலா என்கூடயே தூங்கட்டும்” என்றான்.
ராஜலட்சுமி, “அதெல்லாம் முடியாது இன்னைக்கு நிலா என் கூட தான் தூங்கணும்” என்று முடிவாக கூறிவிட்டாள் .
வேறு வழி இன்றி விக்ரம், நிலாவை பார்த்து கண்களால் உனக்கு ஓகேவா என்று சைகை செய்தான்.
நிலா, சரி என்று தலையசைத்து விட்டு மனதுக்குள் என்னமோ நம்மளை கேட்டு தான் எல்லாமே பண்ற மாதிரி சீன் போடுறாரு.
தாலி கட்டுறதுக்கே என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல பிடிச்சு இருக்கான்னு. அவர் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்து நிக்க வச்சி இருக்காரு என்று முனு முனுத்தால்.
பிறகு விக்ரம் சரி ஓகே என்று மேலே சென்று விட்டான். அவன் சென்றதை உறுதி செய்து கொண்ட ராதிகா, “பார்த்தியா அக்கா அவன் இவளை கேட்காமல் ஒரு முடிவை கூட எடுக்கவே மாட்டிக்கிறான்”.
“இதுக்கு முன்னாடி எல்லாம் நம்ம எது சொன்னாலும் சரின்னு சொல்லுவான் இல்லனா அவன் எடுக்கறது தான் முடிவு என்று சொல்லுவான்”.
“ஆனா இப்ப பார்த்தியா நம்ம பையனுக்கு என்னத்த கலந்து கொடுத்தாலோ தெரியல இப்படி இவள் கண் அசைச்சால் தான் அவன் தலையவே அசைக்கிறான் எனக்கு என்னமோ சந்தேகமா தான் இருக்கு இந்த சொத்துக்காக தான் நம்ம பையன இவ வளச்சி போட்டு இருப்பா என்று” என்றாள்.
ராஜலட்சுமி, “நீ கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு இருக்கியா மத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைகிறதே உனக்கு வேலையா போச்சு” என்று சிடுசிடுத்தால்.
ராதிகா, “என்னது மத்தவங்க விஷயமா இது நம்ம குடும்பத்து விஷயம் அக்கா” என்று கண்களை துடைப்பது போல் நடித்துக் கொண்டு “அப்படின்னா என்னை இந்த குடும்பம் இல்லைன்னு சொல்றியா? அக்கா”.
“என் வீட்டுக்காரர் சரியில்லைன்னு நான் இங்க வந்து உன் கூட இருக்கேன் அதனால் நீ என்னை எலக்காரமா பாக்குற இல்ல”.
“நீ என்னை உன் தங்கச்சியாக நினைக்கவே இல்லை“ என்று கண்களை துடைப்பது போல் செய்தால்.
ராஜலட்சுமி, “இல்ல டி நான் அப்படி சொல்லல. நீ தேவை இல்லாம விக்ரம் விஷயத்துல தலையிடாதே என்று தான் சொன்னேன்”.
“நீ சாதாரணமா பேச போய் அது பிரச்சினையா போய் முடிஞ்சிடும் என்று சரி இப்போ போய் தூங்கு நீயும் இந்த குடும்பம் தான். உன்னை நான் எதுவும் சொல்லல” என்று விட்டு நிலாவை அழைத்துக் கொண்டு அவள் அரைக்கு சென்றால்.
ராஜேந்திரன் பக்கம் திரும்பிய ராஜலட்சுமி, “நீங்க ஆதித்யா ரூம்ல படுத்துக்கோங்க” என்றாள்.
ராஜேந்திரன் சரி என்று சென்று விட்டான். ராஜலட்சுமி, நிலாவை அழைத்துச் சென்று “இதுதான் மா எங்க ரூம். நீ போய் படுத்துக்கோ” என்றாள். நிலா, நேராக சென்று பீரோ மேல் இருக்கும் ஒரு பாயை எடுக்க முயற்சி செய்தாள்.
ராஜலட்சுமி, “அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்றார் கேள்வியாக. நிலா, “இல்லங்க அத்தை தூக்குவதற்கு பாய் வேண்டும் இல்லையா அதான்” என்றால் தயக்கமாக.
ராஜலட்சுமி, “என்கிட்ட பேசுறதுக்கு நீ எதுக்கும் தயங்க தேவையில்லை. நீ என்கிட்ட வெளிப்படையா எல்லாமே பேசலாம் சரியா. பாய் எல்லாம் தேவையில்லை பெட்லயே என் பக்கத்தில் படுத்துக்கோ” என்றாள்.
நிலா, “இல்ல பரவாயில்லை இருக்கட்டும். நான் கீழேயே படுத்துக்கிறேன்” என்றாள்.
ராஜலட்சுமி, “கட்டளை இடுவது போல் நான் சொன்னா கேட்கணும் புரிஞ்சுதா போய் படு” என்றவுடன் அவளுக்கு தன் சித்தியின் ஞாபகம் வந்து விட்டது பயத்துடன் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
ராஜலட்சுமி சிரித்துக் கொண்டே என்ன கொஞ்சம் சத்தமா பேசினதும் இப்படி பயந்துட்டாலே பாக்க ரொம்ப அப்பாவியா இருக்கா என்று நினைத்து கொண்டு நிலா பக்கத்தில் படுத்து உறங்கி விட்டாள்.
நிலா மனதில் ஒரு நாள் தன் வீட்டு சோஃபாவில் படுத்ததற்கு சித்தி தன் காலில் சூடு வைத்து நீ என்ன இந்த வீட்டுக்கு எஜமானி நினைப்பா ஒய்யாரமா சோஃபாவில் படுத்திருக்க நீ இருக்க வேண்டிய இடம் அடுப்பங்கரையும் பக்கத்தில் இருக்க அந்த சின்ன ரூம் மட்டும் தான்.
நீ இந்த வீட்டுக்கு முதலாளி கிடையாது உன் இஷ்டத்துக்கு எல்லா இடத்திலும் படுக்குறதுக்கு” என்று திட்டி முறைத்தது நினைவில் வர மௌனமாக கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
ஆனால் லட்சுமி அத்தை, கட்டிலில் அதுவும் பக்கத்தில் படுக்க சொல்லி முறைக்கிறார்களே என்று ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.
மறுநாள் காலை எப்பொழுதும் போல் நிலா நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு குளித்து தயாராகி பூஜையறையில் பூஜை செய்து பக்தியுடன் சாமி பாட்டு ஒன்றை போட்டுவிட்டு சாம்பிராணி புகையை வீடு முழுக்க காண்பித்தாள்.
ஆறு மணிக்குள் டீ, காபி இரண்டையும் போட்டு பிளாஃக்ஸ்சில் ஊற்றி வைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலீல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தால் .
சித்ரா அப்பொழுது தான் வீட்டு வேலைக்கு உள்ளே நுழைந்தால். நிலா அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பதை பார்த்து “என்னம்மா சீக்கிரமா எழுந்துட்டீங்களா? சரி இருங்க நான் போய் உங்களுக்கு காபி போட்டு எடுத்துக்கிட்டு வரேன்” என்று விட்டு கடகடவென அடுப்பங்கரையை நோக்கி சென்றால்.
அங்கு அடுப்பாங்கரையில் மொத்த வேலையும் முடிந்து இருந்தது. சித்ரா, “என்னம்மா நீங்களே எல்லா வேலையும் பண்ணிட்டீங்களா?“ என்றால் நிலாவை பார்த்து.
நிலா, “ஆமா இதுல என்ன இருக்கு” என்றால். சித்ரா, “நீங்க இந்த வீட்டு முதலாளி மா நான் தான் எல்லா வேலையும் பண்ணனும் எனக்கு முன்னாடி நீங்க பண்ணிட்டீங்க” என்றாள்.
நிலா, “பரவாயில்லை இருக்கட்டும் எனக்கு இதெல்லாம் பழக்கப்பட்ட வேலை தான். எங்க வீட்ல நான் தான் இதெல்லாம் பண்ணுவேன்” என்றால் சிறித்த முகமாக.
பிறகு அனைவரும் எழுந்து விட ராஜலட்சுமி, நிலாவை பார்த்து சீக்கிரமா எழுந்துட்டியா? என்றார்.
சித்ரா, “அம்மா நான் காலையில் வரும் பொழுதே நிலாமா எல்லா வேலையும் முடிச்சிட்டாங்க” என்றாள்.
ராஜலட்சுமி, நிலாவை பார்த்து அப்படியா என்றாள். நிலா, “நான் காலையில் நாலு மணிக்கு எல்லாம் எழுந்துட்டேன் அத்தை அதான்” என்றாள்.
ராஜலட்சுமி, “இனிமே இந்த வேலை எல்லாம் சித்ரா பார்த்துப்பா. நீ விக்ரமை மட்டும் பார்த்துக்கிட்டா போதும்” என்று விட்டு அனைவரும் தயாராகி காலை உணவை முடித்து விட்டார்கள்.
ஆனால் விக்ரம் மட்டும் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. ராஜலட்சுமி, “நிலா சரி நீ போயிட்டு விக்ரமை எழுப்பி கூட்டிட்டு வா சாப்பிட” என்றார்.
நிலா சரி என்று கையில் காபியுடன் விக்ரம் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால்.
விக்ரம், உறங்கிக் கொண்டு இருந்தான். நிலா, எப்படி இவங்களை எழுப்புவது என்று யோசனையாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பிறகு ”காபி.. எழுந்து காபி குடிங்க” என்றால் மெதுவான குரலில். அவன் ஒரு அசைவும் இன்றி அப்படியே படுத்து இருந்தான்.
நிலா என்ன இது எழுந்திருக்கவே மாட்டிக்கிறாங்க என்று சிறு தய்க்கத்துடன் அவன் அருகில் குனிந்தபடி அவன் தோள்பட்டையில் கை வைத்து, “காபி குடிங்க” என்றாள்.
விக்ரம் அவள் கண் சிமிட்டும் நேரத்தில் அவன் கை வளைவுக்குள் கட்டி அணைத்தபடி படுக்க வைத்து இருந்தான் அவளை.
நிலா முகத்து அருகே இவன் முகத்தை வைத்து மூக்கும், மூக்கும் உரச, “குட் மார்னிங் டார்லிங்” என்றான் மென்மையாக.
நிலா அவன் கண்களைப் பார்த்து பேசும் வார்த்தைகளை எல்லாம் மறந்து போனால். சிறு நிமிடம் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தவள் தான் இருக்கும் நிலையை அவள் உணர்வதற்கே சிறு வினாடி எடுத்துக் கொண்டது.
விக்ரம் கிசுகிசுப்பாக அவள் காதோரம் உரசியபடி, “என்ன டார்லிங் இப்படி பார்த்துக்கிட்டே இருக்க” என்று கண் அடித்தான்.
நிலா தான் இருக்கும் நிலையை உணர்ந்து பதறிப் போய் திருத்திரு என விழித்து கொண்டு அவனை பிடித்து ஒரே தல்லாக தள்ளி, “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று எழுந்தரிக்க முற்பட்டால்.
ஆனால் விக்ரமின் பிடி அவளை எழுந்தரிக்க முடியாதபடி மேலும் இறுக்கி பிடித்தது. நிலா, என்ன செய்வது என்று தெரியாமல் நெலிந்தபடி தத்தளித்துக் கொண்டு இருந்தா