எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 03

Simma

Moderator
அத்தியாயம் 3

அவன் வீட்டுக்குள் நுழைய அங்கே ஆளுக்கு ஒரு சோபாவில் கால்களை இருக்கைகளால் கட்டிக் கொண்டு முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தனர் இரினா மற்றும் இதிகா . யசோதா கையில் சத்துமாவு கலந்த பாலுடன் நின்று இருந்தார். “ என்னடா பட்டு லட்டு அப்பம்மா கையில் இருப்பதை வாங்கி குடிக்க வேண்டியது தானே” என்று கேட்டுக் கொண்டே வந்த அமர்ந்தான் இன்ஷித். “ இன்ஷிப்பா”, என்று அவனின் மடியில் தானாக வந்து சாய்ந்து நின்ற இதிகாவை தூக்கி மடியில் வைத்து, “ என்னடா மா”, என்றான் மகள் பாசம் ஊற்றெடுக்க. “ அது எனக்கு ஹார்லிக்ஸ் பூஸ்ட் மாதிரி”, என்றவள் கூற, “ அது மாதிரி தாண்டா இது, அது வெளியே யாரோ செய்கிறார்கள் , இது நம்ம அப்பம்மா பட்டுக்குட்டிக்காக ஸ்பெஷலா செய்தது , நீ கூடி சூப்பரா இருக்கும்”, என்றான் பரிவோடு.அதில் இன்னும் அவன் மீது வாகாக சாய்ந்து கொண்டு , “இது ஒரு மாதிரி பிரவுன் கலர்ல இருக்கு”, என்று அவள் இழுக்க, “ இன்ஷிபா சொன்னா கேட்பேல்ல இந்தா”, என்று அதை எடுத்து அவளை தன் மடியில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க, அவள் பருகுவதைக் கண்ட இரினாவின் நெஞ்சில் ஒரு வலி. அவளுக்கு அவன் கொஞ்சிக் கொடுப்பதை மனதில் ஒரு சொல்ல முடியாத வலியோடு பார்த்தால். இதிகாவிற்கு பாலை புகட்டி விடும் போதே இரினா மீது கண்ணை வைத்திருந்தவனுக்கு அவள் மனதின் வலி அவள் கண்களில் பிரதிபலிப்பதை உணரத்தான் செய்தான்.

இதிகா பருகி முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன், “அம்மா நீங்கள் இதிகாவை குளிக்க வையுங்கள்”, என்று அவரோடு அனுப்பிவிட்டு இரினா அமர்ந்திருந்த சோபாவில் அவளின் அருகே வந்தமர்ந்தான். இரினா ஏதோ சிந்தனையில் மௌனமாக இருக்க, என்னதான் அவள் இன்ஷித்தை ஏற்றுக் கொண்டாலும், தாயின் பரிதவிப்பு, நடந்து முடிந்த சம்பவங்கள், இன்பாவின் நடவடிக்கை அவளை பாதித்திருந்தது.

இன்ஷித் அவளின் தோளை தொட வர , “அழுத்தமாக வேண்டாம்”, என்று தலையை ஆட்டியவள், “ யாரும் என்கிட்ட வர வேண்டாம், இப்போ என்ன இதை குடிக்கணும், அவ்வளவுதானே குடிக்கிறேன்”, என்று அங்கே இருந்த ஒரு டம்ளரை மூச்சு விடாமல் குடித்துவிட்டு ஓடிவிட்டாள் யசோதையிடம் .செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் எதை நினைத்து வேதனை கொள்கிறாள் என்று பிரச்சினையின் ஆணிவேரை அறிய யோசிக்க ஆரம்பித்தான். ஆனால் பாவம் அவனுக்கு என்ன தெரியும் அவளை சுற்றி இருந்தவர்கள் சொன்னது மட்டுமே தான் அவனுக்கு தெரியும். ஆனால் அவர்களின் ஆரம்ப வாழ்க்கை முறை இன்பா இலஞ்சிதா இரினாவின் ஆரம்ப வாழ்க்கை முறை தெரியாது அவன் அப்போத வெளிநாட்டில் அல்லவா இருந்தான். இதைப் பற்றி இலஞ்சிதா அல்லது இரினா வாய்விட்டு தங்கள் அழுத்தத்தை கூற வேண்டும் இல்லையென்றால் அவன் நண்பன் தான் கூற வேண்டும் . அவன் தான் இனி நீ பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு எமதுதனோடு பரலோகம் சென்று விட்டானே. இன்ஷித் தன் யோசனையில் இருக்க அதை கலைத்தது அவனது கைபேசி சிணுங்கியது .யாரிடம் இருந்து அழைப்பு என அவன் பார்க்க வேலுவின் பெயர் ஒளிர்ந்தது.

“சித்தப்பா”, என்றான் அதை உயிர்பித்து, “ இன்ஷித் கிளம்பி விட்டாயா , இங்கே இலஞ்சிதாவின் வீட்டு ஆட்கள் அனைவரும் வந்து இருக்கிறார்கள், சீதா ஒன்றும் சொல்லலா தானே”, என்று அவர் கேட்டபோது தான், அவன் இன்னும் கிளம்பவில்லை என்று அவன் நினைவுக்கு வந்தது. “ சித்தப்பா”, என்றவன், “ சித்தப்பா பசங்க குளிக்கிறாங்க நான் இப்ப தான் எனக்கு தெரியும் இனிமே தான்”, என்று அவன் தயங்கியபடி, “டேய், உன்கிட்ட எதையும் சொல்ல வேண்டாம், இன்று நான் தான் சொன்னேன். படையலில் பார்த்தால் தானே, இன்பாவின் பரிபூரண ஆசிர்வாதம் உனக்கு இருக்கு, அதனால எதையும் யோசிக்காத வேகமா கிளம்பு. அங்கே போய் தம்பதி சகிதமாக வரவேற்க தயாராகு”, என்று அவர் அறிவுரை கூறிய கைபேசியை அணைத்து வைத்தார்.

மனதில் இருந்த குழப்பம் மறைய தன் அறையை நோக்கி நடந்தான். எழுந்த அமர்ந்து விட்டதை பார்த்த அமர்ந்திருந்தால் இலஞ்சிதா. இவன் உள்ளே நுழையவும் அவள் கட்டில் இருந்து எழுந்து நின்றால்.அதை கண்டவன் , “நான் ஒன்றும் வார்டனோ, தலைமை ஆசிரியரோ கிடையாது. நான் வந்ததும் எழுந்து நிற்பதற்கு. இது உன் வீடு, உன் அரை , நான்”, என்று ஒரு வேகத்தில் பேசியவன், அவன் சொல்ல வந்ததின் பொருள் உணர்ந்து ஒரு நிமிடம் தயங்கி அவளை பார்க்க, அந்த நொடி அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தால். அவளின் பார்வையோ எங்கே நீதான் நீ சொல்ல வந்ததை சொல்லித்தான் பாரேன் என்றது. அதில் அவனின் மனது சீண்டப்பட, “ நான் உன் கணவன்”, என்று ஒரு அழுத்தத்தோடு சொல்லி முடித்தான். “எப்பவும் இருப்பது போல் சகஜமாக இருக்க பழகு. நீ மிரண்டு ஒதுங்கி இரினாவையும் அதை செய்ய வைக்காதே. அது நல்லதல்ல”, என்று அவன் பேச, இவளுக்கோ வந்த முதல் நாளே கண்ணை கட்டுதே, என்று நினைத்தவள் அவனை தாண்டி வெளியே செல்ல முற்பட்டால். அதில் அவன் தன்மானம் சீண்டப்பட, “ இலஞ்சிதா”, என்று அழுத்தமான குரல் அவளின் அடுத்த அடியை தடுத்து நிறுத்தியது. திரும்பி அவனை பார்த்தால் , “கொஞ்சம் மாறி வாளப்பழகி. நீ இப்படியே இருந்தால் இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் நலனை கருதி மட்டுமே நம் திருமணம் நடந்தது”, என்று சொன்ன நொடி, “ நடந்ததா….., நடத்தினாய்”, என்று அவள் கோபத்தில் ஒருமையில் பேச, அவனின் அழுத்தமான பார்வையில், “ நடத்தினீர்கள்”, என்ற பன்மையில் முடித்தால்.

அவளின் குற்றம் சுமத்து பேச்சும், பார்வையும் அவனை சீண்ட, “ ஆமாம் நான்தான் நடத்தினேன். இது ஒரு வழிப்பாதை திரும்ப செல்ல வாய்ப்பில்லை”, என்றான் அதிகாரமாக. அவள் அவனே பார்த்துக் கொண்டு நிற்க மேலும் அவனே தொடர்ந்தான். “ அதனால் நல்ல பெண்ணாக போய் உன் மாமியிடம்” , என்று ஆரம்பித்தவன் அவள் குழப்பமாக யார் என்று பார்க்க, “ ஓ, உனக்கு மாமி என்றால் புரியாது அல்லவா மாமி சிங்கள தமிழ்ளில் மாமியாரை அப்படித்தான் அழைப்பார்கள். அதனால் போய் உன் மாமியிடம் கேட்டு தயாராக. ஒன்பது மணிக்குள் ஒரு இடத்திற்கு போக வேண்டும் குடும்பமாக”, என்றான் முடிவாக .அவள் அசையாமல் இருக்கவும் அவன் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க அவள் அதற்கும் அசையவில்லை. பிள்ளைகள் இல்லாததால் கொஞ்சம் தைரியமாவே நின்றால். அதில் அவனுக்கு சிறு வியப்பு பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக, “நான் முன் சொன்னதுதான் எந்த ஒரு பிடிவாதமும் செய்யாமல் என்னோடு ஒத்துப் போவது உனக்கு நல்லது .ஏற்கனவே என் சொல்லை ஏற்காமல் பிடிவாதம் பிடித்ததினால் தான் இந்த நிலைமையில் இருக்கிறாய் .எப்பவும் என் கௌரவம் எனக்கு முக்கியம். அதைவிட நீங்கள் என்னை சார்ந்தவர்கள் .அதனால் உங்களின் செயல்களின் மதிப்பும் எனக்கு முக்கியம். இன்று நாம் போகிற இடம் நமக்கு நம் மதிப்பை உயர்த்தும் .அதுதான் உங்களுக்கும் நல்லது நம் உறவுக்கும் நல்லது. அதனால் தேவையில்லாமல் பிடிவாதம் பிடித்தால் நானே அனைத்தையும் செய்து உன்னை தயார் செய்து இழுத்துப் போவதற்கும் தயங்க மாட்டேன்”, என்ற அழுத்தம் திருத்தமாக உரைத்தான்.

பேசிக்கொண்டே அவளை நோக்கி அடி எடுத்து வைக்க, “ அம்மாச்சி”, என்ற யசோதையின் அழைப்பில், “ இதோ அத்தை”, என்றவள் தயங்கி , “ இதோ வருகிறேன் மாமி”, என்று அந்த இடத்தில் இருந்து வெளியேறினால் அவளின் தயக்கத்துடான அந்த மாமியின் அழைப்பு அவனுக்கு ஒரு மென் நகையை தோற்றுவிக்க செய்தது. அவனும் குளித்து முடித்து தன் அம்மா எடுத்து வைத்திருந்த புது வெள்ளை நிறப்பட்டு வேஷ்டியில் தயாராகி ஹாளுக்கு வந்தவன், அசந்து தான் போனான்.

கருநீள பச்சைக் கரையில் சிவப்பு நிறத்தில் உடல் முழுவதும் பட்டுக் கொடியில் படர்ந்து இருந்த சேலையில் மிக நேர்த்தியான அழகான சின்ன சின்ன ப்ளிட்டுகள் எடுத்து நடுவே நேர்த்தியான மடிப்புகள் வைத்து இலஞ்சிதா சடாரென ஐந்து வயது கம்மியாகவே நின்றிருந்தால். அவளுக்கு இருபுறமும் வெள்ளைபட்டில் ஆங்காங்கே சிவப்பு மற்றும் பச்சை பட்டுக் கொடியில் பட்டு பாவாடை சட்டையில் இரினா இதிகா நின்றிருந்தனர். தன் மனைவி மக்களின் தோற்றத்தில் முதன்முறையாக தன்னை மறந்து பார்த்து நின்றான். தன் பிள்ளைகளுக்கு தன் மனையாள் ஒரு சகோதரி போலவே தோன்றினால் .மனைவி மக்களை கண் மூடாமல் பார்த்திருந்திருந்தவனை நிகழ்காலத்து அழைத்து வந்தது யசோதையின் குரல், “ இன்ஷி குடும்பமாக சாமியறையில் நில்லு அப்பு”, என்று அவன் சாமி அறையை நோக்கிப் போக, இலஞ்சிதா குழந்தைகளுடன் பின் தொடர்ந்தால். ஏனோ காலையில் அவன் பேசிய அழுத்தமான குரலை அலட்சியப்படுத்த அவளுக்கு தைரியம் வரவில்லை. அது மட்டும் இல்லாமல் யசோதை உடைய தன்நலமற்ற அன்பு ,அவர்கள் பிள்ளை மேல் காட்டும் பரிவு அனைத்தும் அவளை கட்டி போட்டு விட்டது. யசோதை ஒரு தாம்பாள தட்டுல் நிறைய நெருக்கமான தொடுத்த மல்லிகை பூவுடன் இரு வெள்ளி சிமிழில் குங்குமம் மற்றும் சந்தனத்தை எடுத்து வந்த அவரும் பிள்ளைகள் அருகில் நின்று கொண்டார். சிறியசாமி அறை தான். ஐந்து பேர் நிற்க போதுமானதாக இல்லை. ஆதலால் யசோதை, “ இன்ஷி மனைவி அருகில் நில்லு”, என்றவர் பிள்ளைகள் இருவருடன் சற்று தள்ளி ஹாளில் நின்று கொண்டார். “அம்மாச்சி விளக்குக்கு சந்தனம் குங்குமம் வையுங்கோ”, என்றார் ,அவள் அருகில் நின்று கொண்டிருந்த இன்ஷித்துக்கு அவளது இறுக்கம் தெரியத்தான் செய்தது. ஆனால் மௌனம் காத்தான் .அவர் மறுபடியும், “ அம்மாட்சி”, என்று ஆரம்பிக்க இவள் தன் நடுங்கும் விரல்களால் விளக்குக்கு போட்டு வைத்தால். அவர் தொடுத்திருந்த மல்லிகை பூக்களை சிறு சிறு கூர்ராக வெட்டி கொடுத்து அங்கு இருந்த அனைத்து தெய்வங்களுக்கும் வைக்க சொல்ல சொல்ல , இலஞ்சிதா வைத்தால். இறுதியாக விளக்கு ஏற்ற அவர் சொல்ல, அவன் நடுங்கும் விரல்களால் ஏற்ற என்ன முயன்றும் அவளின் சிந்தனைகள் பின்னோக்கி செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் சூழ, “ இறைவா இதை எதையுமே நானா விரும்பி ஏற்கவில்லை. அனைத்துமே நீ நடத்திய திருவிளையாடல். இனியேனும் மனதில் ஒரு நிம்மதியை கொடு”, என்று அவள் வேண்டிக் கொள்ள, தீபாரதனை இன்ஷித் ஏற்ற சொன்னார் யசோதா .அவன் தீபாரதனை காட்டி முடிக்கவும் அவன் மனைவி மக்களை தொட்டு பணிந்து கொள்ளச் சொன்னவர் தானே குழந்தைக்கு சந்தனம் குங்குமம் பொட்டு அழகாக வைத்து மல்லிகை பூச்சரத்தை சூட்டினார். அங்கே கபிணேஷ் கிளம்பி வரவும் அவனோடு பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்லுமாறு பணிந்துவிட்டு ,அவர்கள் சென்றவுடன் இன்ஷித்திடம் திரும்பினார்.

“அப்பு ஒன்ற மனுஷிக்கு குங்குமம் வை”, என்று நீட்டினார் .அவனால் அவளது மனநிலையை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது தான் .ஆனால் அவன் காலையில் சொன்னது போல் இது ஒரு வழி பாதை இதில் பின்வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லை அதே போல் அவளை பின்வாங்க விடும் எண்ணமும் அவனுக்கு அறவே இல்லை.

தொடரும்
 
Top