அத்தியாயம் - 14
மன அழுத்த மாத்திரையோ, ஸ்லீப்பிங் பில்சோ, மது மாதுவின் கிறக்கமோ, எதுவுமே தராத ஆழ் உறக்கத்தை, ஆரத் தழுவிய அவள் ஸ்பரிசம் தந்தது. நீண்ட, மிக நீண்ட வருடங்களுக்குப் பின் ஒரு ஆழ்ந்த உறக்கம். ஊன் மறந்து, பஞ்சனையில் துயிலும் அவன் உயிர் மறந்து, உறக்கத்தில் வெற்று மேனியைத் தழுவிய போர்வை நழுவிய நிலை மறந்து, சத்தமிடும் பறவையும், எரிக்கும் சூரியனும், ஒலிக்கும் அவன் வீட்டு பூஜை அறையின் மணியும், எதுவுமே தூங்கும் அவன் துயில் கலையவில்லை.
நேரம் ஒன்பதை நெருங்கவே, லேசாக துயில் கலைந்தவன், தன் கன்னத்தை அங்கும், இங்கும் புரட்ட மெதுமெதுவென்ற ஏதோ ஒன்றில் அவன் முகம் புதைந்தது. அதில் மெதுவாக விழியைத் திறந்து பார்த்தான்.
அவன் சயனித்திருப்பது பஞ்சனையில் அல்ல. அவன் சாத்வியின் வயிற்றில்.
மஞ்சள் நிற இடை, அதன் இரு ஓரங்களில் லேசான வளைவு. முன் வயிறு உப்பி, மெல்லிய உருவத்துக்கும் உப்பிய வயிற்றுக்கும் சம்பந்தமே இல்லாது உறங்கிக் கொண்டிருப்பவளை தலை தூக்கிப் பார்த்தவன் இதழ்களில் நிறைவான புன்னகை.
இளங்காலை வேளை, இதமாகத் தோன்ற, அவள் நாபியில் முத்தமிட்டான். இரவெல்லாம் அவன் வலுவான பிடியில் கலைந்து களைத்தவள், அடித்துப் போட்டதை போல உறங்க, அந்த முத்தம் அவளை ஒன்றும் செய்யவில்லை.
ஏறி இறங்கும் சாத்விகாவின் நெஞ்சாங் கூட்டைத் தவிர மாற்றத்தைக் காணாதவன் தாடி, மீசை குத்த அழுந்த ஒரு முத்தமிட்டான். அதில் கால்களை மெதுவாக அசைத்துப் பார்த்தாள். மீண்டும் அவள் நாபியில் வலிக்க ஒரு கடி, கடித்து அழுத்த முத்த மிட,
ஸ்ஆஆ! ராவணா!”
“குட் மார்னிங்! மை டியர் மண்டோதரி!”
உருண்டு அவள் கழுத்து வளைவுக்குச் சென்று அங்கே ஒரு செல்லக் கடி கடிக்க, சிணுங்கிக் கொண்டே அவள் விழிக்க, திருமணத்திற்குப் பின் அவளின் முதல் விடியல் அவன் முகத்தில்.
அன்று மலர்ந்த தாமரை போல் இமைகள் விரிந்து கொடுக்க, இதழ்களோ மொட்டில் பிரிந்த இதழ்களைப் போல், அழகாகப் புன்னகைத்தன. இத்தனை ரம்யமான காலைப் பொழுதை, அவன் வாழ்வில் அனுபவித்ததில்லை.
“பேட் ஃபெலோ! பப்பி ஷேம். ட்ரெஸ் போட்டு இருக்கலாம் இல்ல..”
குரலை தழைத்து மெதுவாக முனங்க,
“நேத்தே சொல்லிட்டேன். உன்கிட்ட என்னோட நிர்வாணம் ரொம்ப பிடிச்சிருக்குடினு..”
அதில் மேலும் முகம் சிவந்தவள், பார்வையை தழைத்துக் கொள்ள
“ம்ச்! அப்படி பண்ணாதடி. காலையிலேயே என்னமோ தோனுது. இந்த கண்ணு இருக்கில்லையா கண்ணு, அது மூடி விரிகிற அழகும், அந்த கண்ணுக்குள்ள இருக்க முழி சுழலுகிற ரம்யமும், என் மனசுல தாளம் தப்புற உணர்வை தருது பொண்டாட்டி!”
“கவிதை! கவிதை!”
“அப்படியா? கவிதை இப்படித்தான் இருக்குமானு தெரியாது. பட் எனக்கு தெரிஞ்ச ஒரு கவிதை. ஹூம்.. ஹூம்.. ஒரே ஒரு கவிதை என் ஐஞ்சடி பெண் சிலை தான்.”
அதில் அவள் உதட்டை பிதுக்கவும், இரு விரலில் உதடுகளை குவித்துப் பிடித்தவன்,
“நீ உதட்டப் பிதுக்கும் போதெல்லாம், கடிச்சு திங்கணும்னு தோனுது. ஷால் ஐ?”
அவள் சம்மதம் வேண்டியவன், சம்மதம் கொடுக்கும் முன் இதழோடு இதழ் புதைந்தான்.
“ஸ்.. முரடு வலிக்குது”
அவனை தன்னிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்க..
“வலியை தாங்குறேன்னு சொன்ன?”
அவன் திமிரில் சர்வேஷ் உதட்டில் வலிக்க, வலிக்க கடித்தவள்...
“வலியக் கொடுக்கிறேன்னும் சொன்னேன் மறந்திருச்சா?”
அதில் தொக்கி நின்ற ஆணவத்தில், அசந்து போனான், சர்வேஷ் அக்கண்யன்.
“ரிங்குக்குள்ள எத்தனையோ அடி வாங்கி இருக்கேன். திருப்பி கொடுத்தும் இருக்கேன். அது எல்லாம் துளி சவாலா இருந்ததில்ல. ஆனா உன் கண்ணுல இருக்கு பாரு, அந்த திமிரும், நிமிர்வோடு கலந்திருக்கும் ஆணவமும், என்னை அசைச்சுப் பார்க்குதுடி.
என்ன செய்து விட முடியும்னு கேள்வி கேட்குது. அப்படி கேட்கும் போது, ஒண்ணுமே செய்ய வேண்டாம், இந்தக் கண்ணுல தோற்றுக் கிட்டே இருனு மனசு சொல்லுது.
தோல்வியை ஏற்காதவன் நான். தோல்விய வெறுப்பவன் நான். அதுவும் நாலு பக்கம் அணைகட்டியிருக்கும் ரிங்குக்குள் தோல்வியை தூர வைக்க நினைக்கிறவன். அப்படிப் பட்டவனுக்கு இந்தக் கண்ணுக்குள்ள தோற்கத் தோனுதடி. தோற்கட்டுமா? மீண்டும் ஒரு முறை என்னை மறக்கிற அளவு தோற்றுப் பார்க்கட்டுமா?”
“நேற்று எல்லாம் வலிக்கணும்னு சொன்னீங்க. இன்னைக்கு தோற்கணும்னு சொல்றீங்க”
“நீ கொடுக்கிற வலி சுகமா இருக்கு. அது மாதிரி நீ கொடுக்கிற தோல்வியும் சுகமா இருக்கும். கொடுத்து தான் பாரேன்.”
என்றவன் சுழன்றடிக்கும் காற்றாக மாறி அவளை சுழற்றி எடுத்தான். இறுக்கி அணைத்தான். மூச்சுத் திணற முத்தமிட்டான். காலை சூரியனுக்கு இணையாக அவன் வேகம் பெண்ணின் அவயங்களை சுட்டெரித்தது.
நிறைவான கூடலுடன் அவளில் இருந்து பிரிந்தவன், மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அவளும் குளிக்கச் செல்ல கட்டிலில் இருந்து இறங்கவும்,
விலகிச் செல்ல நினைத்தவள், இடையோடு கையிட்டு இறுக்கி கொண்டு வெகுவான தயக்கத்தோடு,
“ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுவியா?”
அவன் விழிகளைக் கூர்ந்தவள், அதிலிருந்த அசூசையில் மயக்கத்திலிருந்து தெளிந்து நிமிர்ந்து அமர்ந்து...
“என்ன கேட்கணும்?”
பட்டென்று அவனும் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு,
“நான்.. நீ.. நாம.. ம்ச்!”
சர்வேஷ் அக்கண்யன் இரண்டாம் முறையாக திணறவே,
“கேளுங்க என்னாச்சு?”
“ஓகே ரிலாக்ஸ்”
ஆழ மூச்செடுத்து, தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன்.
“ஆர் யூ ஹேப்பி வித் மீ?”
“வாட்? புரியவில்லை?”
சர்வேஷ் உடல் இறுக,
“என்னோட சந்தோஷமா இருந்தியா? நான் உன்னை சந்தோஷமா வச்சிருந்தேனா? இந்த இரவில் நீ முழுசா எனக்காக, என்னை உணர்ந்தியா? நாம மிங்கில் ஆகும் போது என்னோட அப்பீரியன்ஸ், ஆட்டிட்யூட், ஆக்டிவிட்டீஸ் உனக்கு திருப்தியா இருந்துச்சா? ஆல் ஓகே இல்ல...”
என்றவன் சற்றே நிறுத்தி, தலையை அழுந்தக் கோதிக் கொண்டு,
“இல்ல... உனக்கு திருப்தியா இந்த லவ் மேக்கிங்ல? நீ ஏதும் எதிர்பார்க்கிறேனா, ஓப்பனா சொல்லு சாத்வி. ஐ கேன் டிரை டு ஃபுல் ஃபில் யுவர்செல்ப்!”
அவள் சலனமில்லா பார்வையோடு அவனை வெறித்து நோக்கிக் கொண்டிருக்க, அந்தப் பார்வை அவனை என்னவோ செய்யவும்,
“என்னடா?” அவள் கன்னத்தை தொட்டான். அவளிடம் அசையவில்லை. கன்னி வெடி என்று தெரிந்தும், காலை வைத்து விட்டான்.
“ஏதாவது பேசுடி! இப்படி இருக்கும் போது ஐ அம் கெட்டிங் நேவர்ஸ்”
அவளிடம் மௌனம்...
“பிரேக் யுவர் சைலன்ஸ், சாத்வி. நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிற ப்ளீஸ் டெல் மீ...”
அதே சலனமற்ற பார்வையோடு,
“ஒரு சாதாரணமான டிஃபிக்கல் வைஃப், பெட்ல கணவனோட வயலன்ஸை சத்தமாப் பேசினா அது ஃபேமிலிஸமா? ஓகே! அதை விட்டுவிடுவோம். செக்ஸுவல் வயலன்ஸ்ங்கிறது உடம்பு ரீதியா கொடுக்கிற வலியா? இல்லை, வார்த்தை ரீதியாவும் கொடுக்கிற வலியா?”
அவள் நிறுத்தவும் அவன் திகைத்துப் பார்த்து,
“நான் உன்னை ஏதாவது பிசிக்கலி ஹார்ட் பண்ணிட்டனா?”
“செக்ஸுவல் வயலன்ஸ்ங்கிறது உடல் ரீதியா கொடுக்கிற வலியா? இல்லை, மனம் ரீதியா கொடுக்கிற வலியா?”
மீண்டும் அழுத்திக் கேட்க, அப்போதே தான் அவளிடம் கேட்ட வார்த்தை தவறானது என்பது, அவன் அடிமண்டையில் தட்டிக் காட்டியது.
“சாத்வி!” அவளை மெதுவாகத் தொடவும், அவன் கையை தட்டி விட்டவள்,
“புருஷன் தாம்பத்யம்கிற பேர்ல ரேப் பண்ண நினைச்சா, கத்தி எடுத்து குத்தத் தெரியாதானு கேட்டீங்க. அப்போ தப்பு தப்பா பேசுற உங்க நாக்க, கத்தி எடுத்து அறுத்துக் காட்டி, நான் நல்ல பொண்டாட்டின்னு நிரூபிக்கட்டுமா?”
அதிர வேண்டியவன், இதழ்களில் மனோகரப் புன்னகை,
“சிரிக்காதைய்யா.. வெறியா வருது!”
“ம்ச்! அது எப்படி கேட்கிறதுனு தெரியல்லைடி. அதுதான் எனக்கு தெரிஞ்ச மாதிரி கேட்டுட்டேன்..”
“அதாவது ஒவ்வொரு நைட்டும் நீங்க மிங்கில் ஆகிற பொண்ணுங்க கிட்ட, நான் உங்களை சாட்டிஸ்பை பண்ணுறனானு கேட்டுட்டு தான் அடுத்த புக்கிங் போவீங்களோ? அதே எண்ணத்துல என்கிட்ட கேட்டீங்களா என்ன?”
“சாத்வி!” அவன் கர்ஜனையில் உடல் தூக்கி வாரிப் போட்டாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“சொல்லுங்கள் புருஷ், பதில் சொல்லிட்டு போங்க”
அவளை மிக அழுத்தமாகக் கூர்ந்து பார்த்தவன்,
“பொண்டாட்டிய அடிச்சு ஆம்பளத்தனத்தை நிரூபிக்கிறவன் ஆம்பளை இல்லைனு சொன்னேன். சோ.. உன்ன அடிக்க மாட்டேன்டி! இனி நீ ஒரு வார்த்தை பேசுனாலும், என்னை நானே ஏதாவது பண்ணிப்பேன்.”
“புரூஷ்!”
அவள் அதிர்ந்து அலறவும்.
“நீயும் வலிகட்டும்ங்கிற, நானும் திருப்பி வலிக்க வைக்கிறேன். ஒன்னும் பண்ண முடியாது, நம்ம மேக்கிங் அப்படி. நான் கேட்டது தப்பு தான் என் வாயோட வாஸ்துவே அப்படிங்கிறது உனக்கு நல்லா தெரியுமே. பிழைனா சொல்லித் தாரது, இல்லைனா... நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிட்டு சொல்லிக் கொடு. நீ கொடுத்ததை திருப்பிக் கொடுக்கிறேன் எப்படி இருக்குன்னு பாருங்கனு கொடுக்காதடி! அப்பப்போ சுருக்கு, சுருக்குன்னு இங்க குத்துது!”
என்றவன் நெஞ்சில் கை வைத்துக் காட்ட அதில் அவள் கண்களில் தோன்றிய கனிவோடு,
“கிட்ட வாங்க.”
“எதுக்கு?”
என்றவன் இடையில் டவளை கட்டிக் கொண்டு வீம்போடு நிற்க,
“கிட்ட வாங்கன்னு சொல்றேன்..”
“முடியாது போடி!”
“சும்மா வாயா கிட்ட”
என்றதும் சன்னமான சிரிப்போடு அருகே வர, அவன் முன் நெற்றியில் விழுந்த முடியை பின்னோக்கி தள்ளி விட்டவள் அழுந்த முத்தமிட்டு,
“இந்த வார்த்தை அவ கொடுத்த காயத்துல வந்தது தானே? ஆனா.. நான் திருப்பிக் கொடுத்த வார்த்தை! நான் கொடுக்கும் வலியையும் நம்மளோட ஒவ்வொரு இரவையும், ஒவ்வொரு கூடலையும் நினைக்கும் போது, அதுதானா ஞாபகம் வரும். அங்க நானும் நாம இருவரும் மட்டும் தான் ஞாபகம் இருப்போம். இப்போ அவ கொடுத்த வார்த்தை தந்த வலிய, நான் கொடுத்த வலி டாலி பண்ணிடுச்சு.”
என்றவள் அவன் இரு கன்னத்தையும் பிடித்துக் கொஞ்ச, அவளை முறைத்துக் கொண்டே இருந்தவன்,
“என்னோட பெட்டும், ஒவ்வொரு விடியலும் நிறைய அசிங்கத்தை தந்திருக்கு. ஆனா, இந்த பெட்ல வச்சு முதல் முறை நீ கத்தி எடுத்துக் குத்தியிருந்தா கூட வலிச்சிருக்காது. அப்படியே மிதக்கிறேன்டி. அப்படியே இந்த காத்துல என் பாரமே தெரியாத அளவு மிதக்கிற மாதிரி ஃபீலா இருக்கு. பெட்ல காமம் இருக்குன்னு நினைச்சவன் தான். ஆனால், காதல் மட்டுமே இருக்குனு நீ புரிய வச்சிட்ட. பிடிச்சிருக்கு!”
அவள் சிரிக்கவே..
“சிரிக்கும் போது அந்த கண்ணோரத்தில் இருக்கு பார்த்தியா உன்னோட திமிரு, ரொம்ப பிடிச்சிருக்கு!”
“அப்படியா? அந்த சிரிப்பு உங்க கர்வத்தை நீங்க காட்ட காட்ட திமிரா மாறுதே!”
“இப்பதான்டி.. ரொம்ப கர்வமா நடந்துக்கணும்னு நினைக்கிறேன். இந்த கண்ணோரத்தில் இருக்க திமிரப் பார்க்க, கர்வியா இருக்கலாம் தப்பில்ல!”
என்றவன் புன்னகையோடு குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள,
அதற்குள் எழுந்து அறையை சரி செய்த சாத்விகா, அவன் குளித்துவிட்டு வரவும் நேரத்தை பார்த்துவிட்டு,
“நானும் குளிச்சிட்டு வாரேங்க. முதல் நாளே உங்க வாயால தான் இவ்வளவு நேரம் ஆச்சு.”
அதில் அவளை முறைத்தவன், “ஹாட் வாட்டர் போட்டு வச்சிருக்கேன். சீக்கிரமா குளிச்சுட்டு வா!”
அவன் தயாராகி அறைக்குள் காத்திருக்கவும், குளித்து ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து இள மஞ்சள் நிற புடவையை அணிந்து வந்தவள், அவன் தனக்கென வாங்கிக் கொடுத்த இரு சோடி நெளிகாப்புகளை இரு கைக்கும் அணிந்து கொண்டு, தாலிக்கொடியோடு சின்னதாக கழுத்தோடு ஒட்டிய செயின், அதில் இரண்டு எஸ்(s) ஒட்டி பிணைந்த பென்டன். காதில் குட்டி ஜிமிக்கி அணிந்து, முடியை மெதுவாகத் தளர்த்தி, இரு பக்கமும் கொஞ்சம் எடுத்து கிளிப்பில் அடக்கியவள், நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க முனையவும், தூக்கிய அவள் விரலைப் பிடித்து குங்குமம் வைத்தவன் அவள் இடையோடு இறுக்கி, கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவன் விரும்பும் அவள் வாசனையை ஆழ இழுத்து நெஞ்சில் நிரப்பிக் கொண்டான்.
“வாசமா இருக்கடி. ஸ்மெல் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு தோனுது.”
“நீங்களும் தான்.” அவன் விழிகள் சிரிக்கவே,
“உங்க கண்ணுல ஒரு கேள்வி இருக்கு கேட்டிருங்க.”
“கேட்கட்டுமா?”
“ஹம்”
“நான் உனக்கு பண்ற ஒவ்வொரு விஷயமும், என்னோட முதல் வாழ்க்கையில் இன்னொருத்திக்கு செய்தது தானேனு ஒரு நிமிஷம் கூட யோசிக்கத் தோனலையா? இல்லை.. என்னை அருவருப்பாகவோ அசிங்கமாகவோ பார்க்கவே தோனலையா?”
என்றவன் முகமோ அவமானத்தில் கன்றியது. அவனை ஆதுரமாகப் பார்த்துக் கொண்டு,
“மே பீ தோனி இருக்கும், உங்க தொடுகைல என்னை நான் உணரல்லைனா. உங்க தேடல் முழுக்க நான் தான் இருந்தேன் என்பதை நான் உணர்ந்து இருக்கலைனா. உங்களோட சுகித்து இருந்த ஒவ்வொரு நிமிஷமும் இந்த கண்ணுல அலைப்புறுதல் இருந்து இருந்தா, நான் உணர்ந்திருப்பேன்.”