எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் -14, 15

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 14​

மன அழுத்த மாத்திரையோ, ஸ்லீப்பிங் பில்சோ, மது மாதுவின் கிறக்கமோ, எதுவுமே தராத ஆழ் உறக்கத்தை, ஆரத் தழுவிய அவள் ஸ்பரிசம் தந்தது. நீண்ட, மிக நீண்ட வருடங்களுக்குப் பின் ஒரு ஆழ்ந்த உறக்கம். ஊன் மறந்து, பஞ்சனையில் துயிலும் அவன் உயிர் மறந்து, உறக்கத்தில் வெற்று மேனியைத் தழுவிய போர்வை நழுவிய நிலை மறந்து, சத்தமிடும் பறவையும், எரிக்கும் சூரியனும், ஒலிக்கும் அவன் வீட்டு பூஜை அறையின் மணியும், எதுவுமே தூங்கும் அவன் துயில் கலையவில்லை.​

நேரம் ஒன்பதை நெருங்கவே, லேசாக துயில் கலைந்தவன், தன் கன்னத்தை அங்கும், இங்கும் புரட்ட மெதுமெதுவென்ற ஏதோ ஒன்றில் அவன் முகம் புதைந்தது. அதில் மெதுவாக விழியைத் திறந்து பார்த்தான்.​

அவன் சயனித்திருப்பது பஞ்சனையில் அல்ல. அவன் சாத்வியின் வயிற்றில்.​

மஞ்சள் நிற இடை, அதன் இரு ஓரங்களில் லேசான வளைவு. முன் வயிறு உப்பி, மெல்லிய உருவத்துக்கும் உப்பிய வயிற்றுக்கும் சம்பந்தமே இல்லாது உறங்கிக் கொண்டிருப்பவளை தலை தூக்கிப் பார்த்தவன் இதழ்களில் நிறைவான புன்னகை.​

இளங்காலை வேளை, இதமாகத் தோன்ற, அவள் நாபியில் முத்தமிட்டான். இரவெல்லாம் அவன் வலுவான பிடியில் கலைந்து களைத்தவள், அடித்துப் போட்டதை போல உறங்க, அந்த முத்தம் அவளை ஒன்றும் செய்யவில்லை.​

ஏறி இறங்கும் சாத்விகாவின் நெஞ்சாங் கூட்டைத் தவிர மாற்றத்தைக் காணாதவன் தாடி, மீசை குத்த அழுந்த ஒரு முத்தமிட்டான். அதில் கால்களை மெதுவாக அசைத்துப் பார்த்தாள். மீண்டும் அவள் நாபியில் வலிக்க ஒரு கடி, கடித்து அழுத்த முத்த மிட,​

ஸ்ஆஆ! ராவணா!”​

“குட் மார்னிங்! மை டியர் மண்டோதரி!”​

உருண்டு அவள் கழுத்து வளைவுக்குச் சென்று அங்கே ஒரு செல்லக் கடி கடிக்க, சிணுங்கிக் கொண்டே அவள் விழிக்க, திருமணத்திற்குப் பின் அவளின் முதல் விடியல் அவன் முகத்தில்.​

அன்று மலர்ந்த தாமரை போல் இமைகள் விரிந்து கொடுக்க, இதழ்களோ மொட்டில் பிரிந்த இதழ்களைப் போல், அழகாகப் புன்னகைத்தன. இத்தனை ரம்யமான காலைப் பொழுதை, அவன் வாழ்வில் அனுபவித்ததில்லை.​

“பேட் ஃபெலோ! பப்பி ஷேம். ட்ரெஸ் போட்டு இருக்கலாம் இல்ல..”​

குரலை தழைத்து மெதுவாக முனங்க,​

“நேத்தே சொல்லிட்டேன். உன்கிட்ட என்னோட நிர்வாணம் ரொம்ப பிடிச்சிருக்குடினு..”​

அதில் மேலும் முகம் சிவந்தவள், பார்வையை தழைத்துக் கொள்ள​

“ம்ச்! அப்படி பண்ணாதடி. காலையிலேயே என்னமோ தோனுது. இந்த கண்ணு இருக்கில்லையா கண்ணு, அது மூடி விரிகிற அழகும், அந்த கண்ணுக்குள்ள இருக்க முழி சுழலுகிற ரம்யமும், என் மனசுல தாளம் தப்புற உணர்வை தருது பொண்டாட்டி!”​

“கவிதை! கவிதை!”​

“அப்படியா? கவிதை இப்படித்தான் இருக்குமானு தெரியாது. பட் எனக்கு தெரிஞ்ச ஒரு கவிதை. ஹூம்.. ஹூம்.. ஒரே ஒரு கவிதை என் ஐஞ்சடி பெண் சிலை தான்.”​

அதில் அவள் உதட்டை பிதுக்கவும், இரு விரலில் உதடுகளை குவித்துப் பிடித்தவன்,​

“நீ உதட்டப் பிதுக்கும் போதெல்லாம், கடிச்சு திங்கணும்னு தோனுது. ஷால் ஐ?”​

அவள் சம்மதம் வேண்டியவன், சம்மதம் கொடுக்கும் முன் இதழோடு இதழ் புதைந்தான்.​

“ஸ்.. முரடு வலிக்குது”​

அவனை தன்னிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்க..​

“வலியை தாங்குறேன்னு சொன்ன?”​

அவன் திமிரில் சர்வேஷ் உதட்டில் வலிக்க, வலிக்க கடித்தவள்...​

“வலியக் கொடுக்கிறேன்னும் சொன்னேன் மறந்திருச்சா?”​

அதில் தொக்கி நின்ற ஆணவத்தில், அசந்து போனான், சர்வேஷ் அக்கண்யன்.​

“ரிங்குக்குள்ள எத்தனையோ அடி வாங்கி இருக்கேன். திருப்பி கொடுத்தும் இருக்கேன். அது எல்லாம் துளி சவாலா இருந்ததில்ல. ஆனா உன் கண்ணுல இருக்கு பாரு, அந்த திமிரும், நிமிர்வோடு கலந்திருக்கும் ஆணவமும், என்னை அசைச்சுப் பார்க்குதுடி.​

என்ன செய்து விட முடியும்னு கேள்வி கேட்குது. அப்படி கேட்கும் போது, ஒண்ணுமே செய்ய வேண்டாம், இந்தக் கண்ணுல தோற்றுக் கிட்டே இருனு மனசு சொல்லுது.​

தோல்வியை ஏற்காதவன் நான். தோல்விய வெறுப்பவன் நான். அதுவும் நாலு பக்கம் அணைகட்டியிருக்கும் ரிங்குக்குள் தோல்வியை தூர வைக்க நினைக்கிறவன். அப்படிப் பட்டவனுக்கு இந்தக் கண்ணுக்குள்ள தோற்கத் தோனுதடி. தோற்கட்டுமா? மீண்டும் ஒரு முறை என்னை மறக்கிற அளவு தோற்றுப் பார்க்கட்டுமா?”​

“நேற்று எல்லாம் வலிக்கணும்னு சொன்னீங்க. இன்னைக்கு தோற்கணும்னு சொல்றீங்க”​

“நீ கொடுக்கிற வலி சுகமா இருக்கு. அது மாதிரி நீ கொடுக்கிற தோல்வியும் சுகமா இருக்கும். கொடுத்து தான் பாரேன்.”​

என்றவன் சுழன்றடிக்கும் காற்றாக மாறி அவளை சுழற்றி எடுத்தான். இறுக்கி அணைத்தான். மூச்சுத் திணற முத்தமிட்டான். காலை சூரியனுக்கு இணையாக அவன் வேகம் பெண்ணின் அவயங்களை சுட்டெரித்தது.​

நிறைவான கூடலுடன் அவளில் இருந்து பிரிந்தவன், மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அவளும் குளிக்கச் செல்ல கட்டிலில் இருந்து இறங்கவும்,​

விலகிச் செல்ல நினைத்தவள், இடையோடு கையிட்டு இறுக்கி கொண்டு வெகுவான தயக்கத்தோடு,​

“ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுவியா?”​

அவன் விழிகளைக் கூர்ந்தவள், அதிலிருந்த அசூசையில் மயக்கத்திலிருந்து தெளிந்து நிமிர்ந்து அமர்ந்து...​

“என்ன கேட்கணும்?”​

பட்டென்று அவனும் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு,​

“நான்.. நீ.. நாம.. ம்ச்!”​

சர்வேஷ் அக்கண்யன் இரண்டாம் முறையாக திணறவே,​

“கேளுங்க என்னாச்சு?”​

“ஓகே ரிலாக்ஸ்”​

ஆழ மூச்செடுத்து, தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன்.​

“ஆர் யூ ஹேப்பி வித் மீ?”​

“வாட்? புரியவில்லை?”​

சர்வேஷ் உடல் இறுக,​

“என்னோட சந்தோஷமா இருந்தியா? நான் உன்னை சந்தோஷமா வச்சிருந்தேனா? இந்த இரவில் நீ முழுசா எனக்காக, என்னை உணர்ந்தியா? நாம மிங்கில் ஆகும் போது என்னோட அப்பீரியன்ஸ், ஆட்டிட்யூட், ஆக்டிவிட்டீஸ் உனக்கு திருப்தியா இருந்துச்சா? ஆல் ஓகே இல்ல...”​

என்றவன் சற்றே நிறுத்தி, தலையை அழுந்தக் கோதிக் கொண்டு,​

“இல்ல... உனக்கு திருப்தியா இந்த லவ் மேக்கிங்ல? நீ ஏதும் எதிர்பார்க்கிறேனா, ஓப்பனா சொல்லு சாத்வி. ஐ கேன் டிரை டு ஃபுல் ஃபில் யுவர்செல்ப்!”​

அவள் சலனமில்லா பார்வையோடு அவனை வெறித்து நோக்கிக் கொண்டிருக்க, அந்தப் பார்வை அவனை என்னவோ செய்யவும்,​

“என்னடா?” அவள் கன்னத்தை தொட்டான். அவளிடம் அசையவில்லை. கன்னி வெடி என்று தெரிந்தும், காலை வைத்து விட்டான்.​

“ஏதாவது பேசுடி! இப்படி இருக்கும் போது ஐ அம் கெட்டிங் நேவர்ஸ்”​

அவளிடம் மௌனம்...​

“பிரேக் யுவர் சைலன்ஸ், சாத்வி. நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிற ப்ளீஸ் டெல் மீ...”​

அதே சலனமற்ற பார்வையோடு,​

“ஒரு சாதாரணமான டிஃபிக்கல் வைஃப், பெட்ல கணவனோட வயலன்ஸை சத்தமாப் பேசினா அது ஃபேமிலிஸமா? ஓகே! அதை விட்டுவிடுவோம். செக்ஸுவல் வயலன்ஸ்ங்கிறது உடம்பு ரீதியா கொடுக்கிற வலியா? இல்லை, வார்த்தை ரீதியாவும் கொடுக்கிற வலியா?”​

அவள் நிறுத்தவும் அவன் திகைத்துப் பார்த்து,​

“நான் உன்னை ஏதாவது பிசிக்கலி ஹார்ட் பண்ணிட்டனா?”​

“செக்ஸுவல் வயலன்ஸ்ங்கிறது உடல் ரீதியா கொடுக்கிற வலியா? இல்லை, மனம் ரீதியா கொடுக்கிற வலியா?”​

மீண்டும் அழுத்திக் கேட்க, அப்போதே தான் அவளிடம் கேட்ட வார்த்தை தவறானது என்பது, அவன் அடிமண்டையில் தட்டிக் காட்டியது.​

“சாத்வி!” அவளை மெதுவாகத் தொடவும், அவன் கையை தட்டி விட்டவள்,​

“புருஷன் தாம்பத்யம்கிற பேர்ல ரேப் பண்ண நினைச்சா, கத்தி எடுத்து குத்தத் தெரியாதானு கேட்டீங்க. அப்போ தப்பு தப்பா பேசுற உங்க நாக்க, கத்தி எடுத்து அறுத்துக் காட்டி, நான் நல்ல பொண்டாட்டின்னு நிரூபிக்கட்டுமா?”​

அதிர வேண்டியவன், இதழ்களில் மனோகரப் புன்னகை,​

“சிரிக்காதைய்யா.. வெறியா வருது!”​

“ம்ச்! அது எப்படி கேட்கிறதுனு தெரியல்லைடி. அதுதான் எனக்கு தெரிஞ்ச மாதிரி கேட்டுட்டேன்..”​

“அதாவது ஒவ்வொரு நைட்டும் நீங்க மிங்கில் ஆகிற பொண்ணுங்க கிட்ட, நான் உங்களை சாட்டிஸ்பை பண்ணுறனானு கேட்டுட்டு தான் அடுத்த புக்கிங் போவீங்களோ? அதே எண்ணத்துல என்கிட்ட கேட்டீங்களா என்ன?”​

“சாத்வி!” அவன் கர்ஜனையில் உடல் தூக்கி வாரிப் போட்டாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,​

“சொல்லுங்கள் புருஷ், பதில் சொல்லிட்டு போங்க”​

அவளை மிக அழுத்தமாகக் கூர்ந்து பார்த்தவன்,​

“பொண்டாட்டிய அடிச்சு ஆம்பளத்தனத்தை நிரூபிக்கிறவன் ஆம்பளை இல்லைனு சொன்னேன். சோ.. உன்ன அடிக்க மாட்டேன்டி! இனி நீ ஒரு வார்த்தை பேசுனாலும், என்னை நானே ஏதாவது பண்ணிப்பேன்.”​

“புரூஷ்!”​

அவள் அதிர்ந்து அலறவும்.​

“நீயும் வலிகட்டும்ங்கிற, நானும் திருப்பி வலிக்க வைக்கிறேன். ஒன்னும் பண்ண முடியாது, நம்ம மேக்கிங் அப்படி. நான் கேட்டது தப்பு தான் என் வாயோட வாஸ்துவே அப்படிங்கிறது உனக்கு நல்லா தெரியுமே. பிழைனா சொல்லித் தாரது, இல்லைனா... நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிட்டு சொல்லிக் கொடு. நீ கொடுத்ததை திருப்பிக் கொடுக்கிறேன் எப்படி இருக்குன்னு பாருங்கனு கொடுக்காதடி! அப்பப்போ சுருக்கு, சுருக்குன்னு இங்க குத்துது!”​

என்றவன் நெஞ்சில் கை வைத்துக் காட்ட அதில் அவள் கண்களில் தோன்றிய கனிவோடு,​

“கிட்ட வாங்க.”​

“எதுக்கு?”​

என்றவன் இடையில் டவளை கட்டிக் கொண்டு வீம்போடு நிற்க,​

“கிட்ட வாங்கன்னு சொல்றேன்..”​

“முடியாது போடி!”​

“சும்மா வாயா கிட்ட”​

என்றதும் சன்னமான சிரிப்போடு அருகே வர, அவன் முன் நெற்றியில் விழுந்த முடியை பின்னோக்கி தள்ளி விட்டவள் அழுந்த முத்தமிட்டு,​

“இந்த வார்த்தை அவ கொடுத்த காயத்துல வந்தது தானே? ஆனா.. நான் திருப்பிக் கொடுத்த வார்த்தை! நான் கொடுக்கும் வலியையும் நம்மளோட ஒவ்வொரு இரவையும், ஒவ்வொரு கூடலையும் நினைக்கும் போது, அதுதானா ஞாபகம் வரும். அங்க நானும் நாம இருவரும் மட்டும் தான் ஞாபகம் இருப்போம். இப்போ அவ கொடுத்த வார்த்தை தந்த வலிய, நான் கொடுத்த வலி டாலி பண்ணிடுச்சு.”​

என்றவள் அவன் இரு கன்னத்தையும் பிடித்துக் கொஞ்ச, அவளை முறைத்துக் கொண்டே இருந்தவன்,​

“என்னோட பெட்டும், ஒவ்வொரு விடியலும் நிறைய அசிங்கத்தை தந்திருக்கு. ஆனா, இந்த பெட்ல வச்சு முதல் முறை நீ கத்தி எடுத்துக் குத்தியிருந்தா கூட வலிச்சிருக்காது. அப்படியே மிதக்கிறேன்டி. அப்படியே இந்த காத்துல என் பாரமே தெரியாத அளவு மிதக்கிற மாதிரி ஃபீலா இருக்கு. பெட்ல காமம் இருக்குன்னு நினைச்சவன் தான். ஆனால், காதல் மட்டுமே இருக்குனு நீ புரிய வச்சிட்ட. பிடிச்சிருக்கு!”​

அவள் சிரிக்கவே..​

“சிரிக்கும் போது அந்த கண்ணோரத்தில் இருக்கு பார்த்தியா உன்னோட திமிரு, ரொம்ப பிடிச்சிருக்கு!”​

“அப்படியா? அந்த சிரிப்பு உங்க கர்வத்தை நீங்க காட்ட காட்ட திமிரா மாறுதே!”​

“இப்பதான்டி.. ரொம்ப கர்வமா நடந்துக்கணும்னு நினைக்கிறேன். இந்த கண்ணோரத்தில் இருக்க திமிரப் பார்க்க, கர்வியா இருக்கலாம் தப்பில்ல!”​

என்றவன் புன்னகையோடு குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள,​

அதற்குள் எழுந்து அறையை சரி செய்த சாத்விகா, அவன் குளித்துவிட்டு வரவும் நேரத்தை பார்த்துவிட்டு,​

“நானும் குளிச்சிட்டு வாரேங்க. முதல் நாளே உங்க வாயால தான் இவ்வளவு நேரம் ஆச்சு.”​

அதில் அவளை முறைத்தவன், “ஹாட் வாட்டர் போட்டு வச்சிருக்கேன். சீக்கிரமா குளிச்சுட்டு வா!”​

அவன் தயாராகி அறைக்குள் காத்திருக்கவும், குளித்து ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து இள மஞ்சள் நிற புடவையை அணிந்து வந்தவள், அவன் தனக்கென வாங்கிக் கொடுத்த இரு சோடி நெளிகாப்புகளை இரு கைக்கும் அணிந்து கொண்டு, தாலிக்கொடியோடு சின்னதாக கழுத்தோடு ஒட்டிய செயின், அதில் இரண்டு எஸ்(s) ஒட்டி பிணைந்த பென்டன். காதில் குட்டி ஜிமிக்கி அணிந்து, முடியை மெதுவாகத் தளர்த்தி, இரு பக்கமும் கொஞ்சம் எடுத்து கிளிப்பில் அடக்கியவள், நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க முனையவும், தூக்கிய அவள் விரலைப் பிடித்து குங்குமம் வைத்தவன் அவள் இடையோடு இறுக்கி, கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவன் விரும்பும் அவள் வாசனையை ஆழ இழுத்து நெஞ்சில் நிரப்பிக் கொண்டான்.​

“வாசமா இருக்கடி. ஸ்மெல் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு தோனுது.”​

“நீங்களும் தான்.” அவன் விழிகள் சிரிக்கவே,​

“உங்க கண்ணுல ஒரு கேள்வி இருக்கு கேட்டிருங்க.”​

“கேட்கட்டுமா?”​

“ஹம்”​

“நான் உனக்கு பண்ற ஒவ்வொரு விஷயமும், என்னோட முதல் வாழ்க்கையில் இன்னொருத்திக்கு செய்தது தானேனு ஒரு நிமிஷம் கூட யோசிக்கத் தோனலையா? இல்லை.. என்னை அருவருப்பாகவோ அசிங்கமாகவோ பார்க்கவே தோனலையா?”​

என்றவன் முகமோ அவமானத்தில் கன்றியது. அவனை ஆதுரமாகப் பார்த்துக் கொண்டு,​

“மே பீ தோனி இருக்கும், உங்க தொடுகைல என்னை நான் உணரல்லைனா. உங்க தேடல் முழுக்க நான் தான் இருந்தேன் என்பதை நான் உணர்ந்து இருக்கலைனா. உங்களோட சுகித்து இருந்த ஒவ்வொரு நிமிஷமும் இந்த கண்ணுல அலைப்புறுதல் இருந்து இருந்தா, நான் உணர்ந்திருப்பேன்.”​

 

admin

Administrator
Staff member

அவன் அவளை கண்ணிமைக்காமல் பார்க்க, சர்வேஷின் நெஞ்சளவு உயரத்தில் இருந்தவள், அவன் நெஞ்சில் அழுத்த முத்தமிட்டு,​

“என்னோட வாசத்தை சுவாசத்தில் நிரப்பும் போது, இரு விழி மூடி நீங்க ஆழ்ந்த தியானத்துக்கு போற அந்த ரெண்டு நிமிஷத்துல ஒரே ஒரு செக்கன்டு என் வாசனை உங்களுக்கு ஒவ்வாமையை தந்திருந்தாலும், எனக்கு தோன்றிருக்குமோ என்னமோ. இது எதையுமே நான் உணரவில்லை. ஏன்னா? இது அவ்வளவும் நீங்க எனக்கே எனக்காகனே கொடுத்தது.​

நான் கொடுக்கப் போறது கசப்பாக இருந்தாலும், என்னிடம் மட்டுமே அந்தச் சுவையை சுவைத்துப் பார்க்க நினைக்கிற நினைப்புல கூட, என்னைத் தவிர வேற யாரும் இல்லையே. அப்படி இருக்கும் போது உங்களால என்னைத் தவிர யாரையும் நினைச்சு பார்க்க முடியாது. கணவனோட பாஸ்ட பொறுத்து போற மனைவி இல்ல நான். அதே நேரம் அவரோட பிரசண்ட்ஸ நம்புவேன்!”​

இதுவரை வெளிப்படையாக யாரிடமும் கண்ணீரைக் காட்டாத சர்வேஷ் அக்கண்யனின் இரு விழிகள் கலங்க, மென்மையான புன்னகையோடு அவளைப் பார்த்திருக்க,​

“இந்த முகத்துல தோன்றுகிற அந்த கன்றல் பிடிக்கல. உடல் எல்லாம் மின்னி மறையும் அந்த ஒதுக்கம் பிடிக்கல. உங்க ஆட்டிடியூட்ல இருக்க அந்த அருவருப்பு பிடிக்கல..”​

“மாத்திக்கிறேன்..”​

“நிஜமா!”​

“நிஜமா தான்”​

“ஏன் அப்படி திடீர்னு?”​

“என்னோட கன்றல் என் பொண்டாட்டி கண்ணக் கலங்க வைக்குது. என்னோட ஒதுக்கம் என் பொண்டாட்டி இதயத்தை அதிகமா துடிக்க வைக்குது. என்னோட அருவருப்பு என் பொண்டாட்டி நேசத்தை சந்தேகிக்க வைக்குது. சோ நான் மாத்திக்கிறேன்.”​

இதைவிட ஒரு ஆண் காதலை வேறு எப்படி சொல்லிவிட முடியும். அவன் கடைசி வரை காதலை வாய் திறந்து சொல்லவில்லை, என்றாலும் அவளும் கேட்கப் போவதில்லை. அவனும் வற்புறுத்தப் போவதில்லை. அவர்கள் காதலை பேசிக்கொள்ள மொழிகளுக்கோ அவசியமில்லை. ஏனெனில் அந்த நேசத்தை ஆள்வது மௌனம் என்னும் பெருமொழி.​

“கீழ போவோமா? இல்லைனா, உன் ஜனனியம்மா மேல வந்துருவாங்க.”​

வெட்கச் சிரிப்போடு அவன் கையோடு கைகோர்த்து கீழே செல்ல, படியில் விழி வைத்து காத்திருந்த ஜனனி, இந்தக் காட்சியில் கண்களோடு முகமும் மலர, நெஞ்சில் கை வைத்து அப்படியே அமர்ந்து கொண்டாள்.​

“பேபி என்னாச்சு?”​

“இதோ, இதோ இவங்க இருவரையும் ம்ச்”​

அவர்களை காட்டி,​

“இது போதும் அத்தான். இந்த ஒன்று போதும். அவன் முகத்துல சிரிப்பு பாருங்க. என் புள்ள எவ்வளவு அழகா இருக்கான்னு, இன்னைக்கு தான் எனக்கே தெரியும். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் என்னோட சர்வாவை அழகா மாத்திட்டா!”​

“அப்போ இதுக்கு முன்ன, உம் புள்ள அழகில்லையோ?”​

கணவனை செல்லமாக முறைத்தவள்,​

“அது புற அழகத்தான், இது அக அழகு. இத்தனை வருஷம் என்னோட வாழ்ந்த, அக்கண்யன் அருளானந்தனுக்கு, இதை ஜனனி அக்கண்யன் சொல்லித் தரணுமா என்ன?”​

அதில்.. ஜனனியை ரசனையான பார்வையோடு முறைத்தான். அதுவரை கணவன் இருக்கும் தைரியத்தில் கீழே வந்த சாத்வி, அக்கண்யனைக் கண்டதும் தானாக சர்வேஷ் பின்னே ஒளிந்து கொண்டாள்.​

அதில் வாய் விட்டுச் சிரித்தவன்,​

“அம்மா நீ என்னைப் பார்த்து பயப்படுறது கூட பெருசா தெரியல. ஆனால் என்னை விட பெரிய ஜீபூம்பா பூதமே உன் புருஷன் தான். அவன் பின்னுக்கு போய் ஒளியிற பார்த்தியா, அதான் தாங்க முடியல!”​

அவன் நக்கலோடு மகனைப் பார்க்க, அவன் விழிகளில் அப்படி ஒரு கர்வம். அந்த கர்வத்தில் அக்கண்யனின் மனம் நிறைந்தது.​

அப்போது அங்கே வந்த ஆத்விக்,​

“டேட் அது பூதம் இல்ல, ராட்சச ராவணன்.” அழுத்திச் சொல்லவும், அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.​

சாத்வி அருகே நெருங்கிய ஜனனி, அவள் நெற்றியில் முத்தமிட்டு.​

“போமா! போய் விளக்கு ஏற்று. நீ தான் நல்லா பாடுவியே, அப்படியே ஒரு பாட்டும் பாடிடு.”​

சாத்விகா ராகவியை பார்க்கவும்,​

“ஊசி வேணும்னா, ரெண்டு போட்டு விடுறேன். பாட்டெல்லாம் பாட என்னைக் கூப்பிடாத தங்கமே. என் பாட்டை என்னாலயே கேட்க முடியாது!”​

சாத்வி இதழ்களில் தோன்றிய அழகான புன்னகையில், அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவள்,​

“மே பீ இந்த தடிமாடு உன்னோட சிரிப்புல தான் கவுந்திருக்கணும்னு நினைக்கிறேன். அழகா சிரிக்கிற..”​

அவள் கணவனைப் பார்த்து விழிகள் ‘அப்படியா?’ என்று கேட்க..​

‘எதுலன்னு உனக்கு தெரியாதா?’ அவனும் விழிகளில் பதிலைச் சொன்னான்.​

அவர்கள் மௌன பாஷையில் அந்த குடும்பத்தில் அப்படி ஒரு நிறைவு.​

“தங்கமே உங்க ராவணனை அப்புறம் சைட் அடிச்சுக்கோங்க. இப்ப வந்தீங்கன்னா, கடவுளுக்கு ஒரு வணக்கத்தை போட்டு விடலாம்.”​

மூத்த மருமகளாக தன் கடமையைச் செய்ய பூஜை அறைக்குள் சாத்வியோடு நுழைய, சாத்விகா விளக்கேற்றி கற்பூரம் காட்டிவிட்டு, வீணையோடு அமர்ந்தவள், விழிகளை மூடிக்கொண்டு வீணையை மீட்டத் தொடங்கினாள்.​

“குழலூதி மனமெல்லாம் –​

கொள்ளை கொண்டபின்னும்​

குறையேதும் எனக்கேதடீ – ஒரு சிறு​

குறையேதும் எனக்கேதடீ!​

அழகான மயிலாடவும் – (மிக) காற்றில்​

அசைந்தாடும் கொடி போலவும்”​

காம்போஜி ராகம், ஆதி தாளத்தில் சாத்வியின் குரலில் தவழ்ந்த அந்த இசையில், காலை நேரத்து இதத்தில் அந்த வீட்டில் நீண்ட வருடம் கழித்து ஒரு நிறைவு.​

 

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 15​

அந்த அசாத்தியம் நிறைந்த அமைதியில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மன நிலையில் ரசித்துக் கொண்டிருந்தனர்.​

சர்வேஷ் ஒருவன் மட்டுமே அவள் மெட்டுக் கட்ட தொடங்கவும், அங்கிருந்த நீள் சோஃபாவில் அமர்ந்து கண்களை மூடி தலையை பின்னே சாய்த்துக் கொண்டான்.​

அவள் இசை கொடுத்த உணர்வின் தாக்கம் தாளாது, அவன் உயிர் அசைந்தாடியது.​

அவன் குயில் கூவியதில், ஆயிரம் மின்னல்கள் மூடிய அவன் விழிகளுக்குள் தெறிக்க, கண்விழித்து அவளில் பார்வையை பதிக்க போராடிக் கொண்டிருந்தான்.​

பாடல் முடியும் தருவாயில், வருணை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு வந்த கவிதா, அக்கண்யன் வீட்டுக்குள் நுழைந்தாள்.​

கண்மூடி லயித்து, குலைந்து உணர்ச்சிக் குவியலாக உருக்குலைந்து இருக்கும் இப்படி ஒரு சர்வேஷை, தன் மகளோடு வாழ்ந்த காலத்தில் கூட கவிதா கண்டதில்லை.​

கண்ட கோலம் தாய் மனதின் கசடை சீண்டி விட்டது.​

அப்போது கவிதாவைக் கண்ட ராகவி,​

“அம்மா!” அழைக்கவும்.​

“ராகவி! அம்மாவப் பார்த்தா தான் அம்மா ஞாபகம் வாரேன், இல்ல...”​

“அம்மா அதில்ல நீங்க ஏன்..”​

அவள் தயங்கி நிறுத்த,​

“ஏன் வந்தேன்னு கேட்கிறியா?” என்றவளின் கண்களில் வன்மம். பதறிய ராகவி,​

“அம்மா!”​

கண்டிக்கவும், அதுவரை சுகஸ்வரத்தில் தவழ்ந்தவன், அபஸ்வரத்தில் கலைய, பட்டென்று எழுந்தவன் உடல் நொடியில் இறுகியது.​

அவன் மென்மை மறைய, மூர்க்கன் விழித்துக் கொண்டான்.​

“சாத்வி!” மனைவியை அதட்டலாக அழைக்க. அவசரகதியில் வீணையை கீழே வைத்துவிட்டு ஹாலுக்கு வரவே, கணவனின் மூர்க்கம் எதனால் என்பதை நொடியில் கண்டு கொண்டாள்.​

“கண்ணா!”​

“அம்மா! எனக்கு பொறுமையே இல்ல. எப்போ என் பொறுமை கலையுதோ, அப்போ நான் மனுஷனா இருக்க மாட்டேன்!”​

“புருஷ்!” அழைத்த சாத்வி, கண்களால் அமைதி என்று விழி மூடித் திறக்கவே, தலையை அழுந்த கோதிக்கொண்டு “உப்” வாயில் மூச்சை ஆழ்ந்து விட்டு தன்னை சமன்படுத்தியவன், சாத்விக்கு கண்ணை காட்டி விட்டு மாடியேற திரும்பவும்,​

“ம்.. நல்லா தான் பாடுற. என் பொண்ணும் ரொம்ப, ரொம்ப நல்லா பாடுவா. அவளுக்கு அப்படி ஒரு மென்மையான குரல். அதட்டிக் கூட பேச வராது. பேசுனாலே பாடுற மாதிரி இனிமையா இருக்கும். சர்வாக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும். பாட கேட்பான், அவ தான் பாட ரொம்ப வெட்கப்படுவா. எம் பொண்ணு உன்னை விட ரொம்ப அழகு.”​

“சிலீர்” கண்ணாடி உடையும் சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அழகுக்கு வைக்கப்பட்டிருந்த ஐந்தடி இத்தாலிய வடிவமைப்பிலான முகப்பு கண்ணாடி தூள் தூளாக சிதறியது. ராமன் கையில் இருக்கும் வில்லாக, அர்ஜுனன் தொடுக்கும் அம்புகளாக, இந்திரனின் வஜ்ராயுதமாக, பீமனின் கதையாக அவன் ஆக்ரோஷமாக விறைத்து, ஆங்காரமாக இறுகி, மூர்க்கனாக மாறியிருந்தான்.​

இத்தனை ரௌத்திரத்தை, அவனிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை.​

ராகவியின் கால்கள் தன்னால் ஆத்விக்கின் பின்னால் போய் தஞ்சம் புக...​

அக்கண்யன் நிலைமை கை மீறியதை எண்ணி தன் நண்பனுக்காக வருந்தினான்.​

அதே நேரம் சர்வேஷின் மூர்க்கத்தை பல வருடங்களாக அருகில் இருந்து பார்த்த வருண், தாயின் அருகில் வந்து நின்று கொண்டான். அதுவரையிலும் பெரிதாகத் தெரியாத தன் வார்த்தையின் வீரியம், தன்னையே வதம் செய்யப் போகிறது என்பதில் பயந்து போனார், கவிதா.​

“என்ன சொன்னீங்க?”​

“பாஸ்!”​

“மூச்! உங்க அப்பாவுக்காகக் கூட, உங்க அம்மாவ விடுறதா இல்ல.”​

அவன் கடுமையில் கவிதாவின் கால்கள் இரண்டடி பின்னே நகர்ந்தது என்றால்,​

வருண் தாயை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.​

“பாஸ்.. அவங்க என் அம்மா!”​

தந்தை வெளிநாடு சென்ற இந்த சமயத்தில் எப்படியாவது நிலைமையின் தீவிரத்தை தவிர்க்கவே நினைத்தான்.​

“சோ வாட்?”​

“என்னோட அம்மா பாஸ்..”​

அவன் அழுத்தி சொல்லவே வாக்குவாதம் முற்றுவதை நினைத்த அக்கண்யனும் ஆத்விக்கும் அவர்களை தடுக்க நினைக்கவே, காற்றுக்கு கடிவாளம் இடுவது யார்?​

“அதனால தான் உங்க அம்மாவை இதுவரைக்கும் உயிரோடு விட்டு இருக்கேன்.”​

அந்த வார்த்தையில் ஆண் மகனாக வருணுக்கும் தோன்றிய கோபத்தோடு,​

“ஆமா, எங்க அம்மா எங்கேயோ ஒரு இடத்துல பிழை செஞ்சுட்டாங்கன்னு தெரியுது தான். அந்தப் பிழையால நீங்க ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீங்கன்னு தெரியுது தான்.​

அதுக்கு நான் பிராயச்சித்தமும் செய்துட்டேன்னு நினைக்கிறேன்!”​

அவன் பார்வை சாத்வியில் படிந்து மீள,​

“யூ ப்ளடி!” அவன் ஷர்ட் காலரை இறுக்கி பிடித்து, முகத்தில் குத்து விட கையை ஓங்கவும்,​

“சர்வேஷ்!” ராகவியின் வேதனையான குரலுக்குக் கட்டுப்பட்டு கையை இறக்கியவன், வருணின் ஷர்டை காலரை சரி செய்து,​

“யூ புவர் கய்! என்னது பிராயச்சித்தமா? இந்த சர்வேஷுக்கு யாசகமா? நான்!”​

என்றவன், தன் நெஞ்சில் விரலை வைத்து காட்டி கம்பீரக் குரலில்,​

“சர்வேஷ் அக்கண்யனுக்கு யாசகம் போட்டு தான் பழக்கம். யார்கிட்டயும் யாசகம் கேட்டு பழக்கம் இல்லை. நீ பிராயச்சித்தம் செய்யல. நான் பச்சாதாபத்துல உன்னையும் உன் குடும்பத்தையும் உயிரோட வாழ விட்டு இருக்கேன்!”​

கவிதா புறம் திரும்பி,​

“பொண்ணுங்க எவ்வளவு அழகுனு என் அம்மாவுக்குப் பிறகு, என் அண்ணிக்குப் பிறகு என் பொண்டாட்டி கிட்ட தான் பார்த்து இருக்கேன். அவளோட நிதானம் அழகு, நிமிர்வு அழகு, கண்ணுக்குள்ள இருக்கும் திமிரு அழகு. இவ்வளவு நடந்தும், சந்தேகமா என்னை ஒத்தப் பார்வை பார்க்காமல் தில்லா நிற்கிற அவள் கெத்து அழகு. நான் இதுவரைக்கும் யாசகம் கேட்டதில்லை தான். ஆனா, எனக்காக என் பொண்டாட்டி கிட்ட யாசகம் கேட்டுப் பார்த்தா, எப்படி இருக்கும்னு தோனுது!”​

துளியும் குறையாத கம்பீரமும் கர்வமும், அவன் மனைவியை மெய்சிலிர்க்க வைத்தது.​

வருண், தன் வீட்டில் ஏதோ ஒரு மர்மம் உள்ளதை அறிந்தும் வாய்விட்ட தன் மடமையை எண்ணி வெட்கித் தலை குனிந்தான்.​

கவிதாவுக்கு அதில் லேசாகத் துளிர்த்த கோபத்தோடு,​

“கண்ணா இந்த அத்தை அப்படி ஒன்னும் தப்பா பேசிடலையே? உண்மைதானே. அவளோடு ஆறு மாசம் நல்லாத் தானே வாழ்ந்த? அந்த வாழ்க்கையை, இப்போ வந்த உன் புது மனைவிக்காக இல்லைன்னு சொல்லிடுவியா? என் மகள் ஏதோ ஒரு இடத்தில் தவறிழைத்தாள். அதுக்காக நல்ல பெண் இல்லைனு ஆகிருமா. அவள் தவறு செய்திருக்கான்னா, புருஷனா கவனிக்க வேண்டிய உன்னோட பிழையும், எங்கேயோ ஒரு இடத்துல இருக்குன்னு தானே அர்த்தம்?”​

எந்த வார்த்தை அவனைக் குன்ற வைக்கும் என்று அறிந்தே கூறிய கவிதாவின் கண்களில் தொக்கி நின்ற வன்மத்தை சாத்வி கண்டு கொண்டாள்.​

இப்படி கவிதா திடீரென பேசக் கூடும் என்று அங்கிருந்த யாருமே நினைக்கவில்லை. கூனிக்குறுகி, குன்றிப் போயிருந்த சர்வேஷை நினைத்து அத்தனை பேரும் கலங்கிப் போய் நிற்க, கலங்க வேண்டியவளோ அவனைப் பார்த்த பார்வை அகற்றாதிருக்க, அதில் விழிகளை இறுக மூடி திறந்து குன்றலோடு தலைகுனியப் போக...​

“புருஷ்!” சத்தமிட்டு அழுத்தி அழைக்கவே, அத்தனை பேரின் பார்வையும் அவள் புறம் திரும்ப, சர்வேஷும் அவளைப் பார்க்கவும்,​

“ம்ச்.. என் கண்ணப் பாருங்க!”​

அவன் பார்க்கவே..​

“என் கண்ணைப் பாருங்கன்னு சொன்னேன்!” சுற்றி இருந்தவர்கள் அதிர நின்றனர். அனைவர் மனதிலும் ஒரே ஒரு கேள்வி?​

‘சர்வேஷா இது? ஒற்றை வார்த்தையில் இவ்வளவு நிதானமாகக் கூடியவனா? இதுதான் தாங்கள் அறியாத அவன் முகமோ?’ என அக்கண்யனை தவிர, அனைவரும் திகைத்துப் போயினர்.​

“கீழ குனிஞ்சுங்க, அடிச்சுடுவேன் புருஷ்!”​

அவன் இதழ்கள் புன்னகையோடு விரிய, சுற்றி இருந்தவர்களின் முகபாவனையில் ஒரு மலர்ச்சி. கவிதா முதல் முறை சாத்விகாவை பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.​

சர்வேஷின் ஒற்றை முடியைக் கூட ஆட்டி வைக்கத் துணியாத தன் மகள் எங்கே? ஒற்றை வார்த்தையில் அவன் பிடரி முடியை கொத்தாக பிடித்து ஆட்டி வைக்கும் இவள் எங்கே? கண் முன்னே பாய்ந்த தோட்டாக்களில் அதிர்ந்து நின்றவளை, இன்னும் அதிரச் செய்ய சர்வேஷின் வாயிலிருந்து வந்த “சரி!” என்ற ஒற்றை சொல், வீரியம் மிக்க தோட்டாவாக பாய்ந்து வந்தது.​

“என்ன சரி?”​

“ம்ச்.. குனிய மாட்டேன்டி மண்டோதரி!” அவன் குரல் குழைய​

“குனியக் கூடாது!”​

அழுத்திச் சொன்னவள், அக்கண்யன் புறம் திரும்பி,​

“அகிப்பா! அப்படி கூப்பிடாம்ல?”​

விழிகளில் நேசத்தை தேக்கி,​

“கண்டிப்பா கூப்பிடலாம்.”​

“நான் அவங்களுக்கு பதில் சொல்லலாமா?”​

“சாத்வி!” சர்வேஷின் அதட்டலில்,​

“ராவணா.. மூச்! நான் பேசி முடிக்கும் வரைக்கும், சத்தம் வரக்கூடாது. சொல்லுங்க அகிப்பா.”​

“கண்டிப்பா!”​

“அவங்க ராகவி அக்கா அண்ட் வருண் அண்ணாவோட அம்மா. உங்க ஃப்ரெண்டு அரவிந்த் சாரோட வைஃப். நீங்க மட்டும் தான் அனுமதி கொடுக்கலாம். அவங்க கிட்ட, சர்வேஷ் மனைவியா நான் பதில் சொல்லலாமா?”​

அவள் பார்வை ராகவியிடம் திரும்பவும், விழியை மூடித் திறந்து,​

“உன் புருஷனுக்காக பேசப் போற. அதுவும் உன் உரிமைக்காக, பேசு தங்கமே!”​

என்றவள் தன் அறைக்குள் சென்று மறைய,​

உணர்வு தொலைத்த முகத்துடன் இறுகிப் போய் இருந்த கணவனை ஒரு பார்வை பார்த்தவள்,​

கவிதாவின் கண்களை கூர்ந்து நோக்கி அம்புகளை தொடுக்கத் தயாரானாள்.​

“நீங்க சொல்றது சரிதான், அவரோட பிழை தான். அவருடைய இறந்த காலத்துல என்ன நடந்துச்சுன்னு, எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் கேட்டுக்கிட்டேன். முழுசா தெரியாது. அப்படி அவர் சொல்ல வரும் போது அந்த கண்ணுல தெரிஞ்ச ரணத்துல, நான் அவரை சொல்ல விடாம தடுத்ததும், அவர் சொல்லாமல் விட்டதும் பிழை தான். தெரிஞ்சுக்கிட்டு அதுல சம்பந்தப்பட்டவங்களோட முகத்திரைய கிளிக்காம விட்டது, மிகப்பெரிய பிழை தான்!”​

முதல் அம்பு கவிதாவை மிகப் பலமாக தாக்கியது.​

“ஹம்.. அவரோட பிழை தான், தன்னோட உதிர்ந்த முடியைக் கூட தொடத் தகுதி இல்லாத ஒன்றுக்காக, அவரோட பொண்டாட்டி நான் அவர் கண்ணு முன்னே நிற்கும் போதே, ஒரு செகண்ட் தலை குனியப் பார்த்தாரே! அது அவரோட மிகப் பெரிய பிழை தான்.”​

அடுத்த அம்பு வருணைப் பலமாகத் தாக்க, தன் தாயின் குணமறிந்தும் தவறி விட்டோம் எனப் புரிந்தது.​

அதே நேரம் மருமகள் வார்த்தையில் அக்கண்யன் மீசையை முறுக்கி கொண்டான் என்றால், சர்வேஷின் மீசையோ கர்வத்தில் துடித்தது.​

“தான் ஆறே மாசம்னாலும் திருமணம் என்கிற பந்தத்தோட வாழ்ந்த ஒருத்தியை சபையில் அசிங்கப் படுத்தவேணான்னு நினைத்து, அவளை ஒரு பெண்ணா மதித்து, உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, உங்க பெண்ணை விட்டுக் கொடுத்தாரே! அது அவரோட பிழை தான்!”​

இந்த அம்பு உள்ளே அமர்ந்திருந்த ராகவியை தாக்கியது என்றால், ஐந்து பிள்ளைகளைப் பெற்ற ஜனனி எனும் பெண்ணரசியின் மனம், மகனுக்கு ஆயிரம் புகழ் மாலைகள் கிட்டிய போதும் குளிராதது, மருமகள் கொடுத்த ஒற்றை உரிமைச் சொல்லில் குளிர்ந்து விட்டது.​

 

admin

Administrator
Staff member

“ஒருத்தன் அவரு பொண்டாட்டி கண் முன்னாலயே, இவர் ஒரு கே(gay) ஆண்மை இல்லாதவர், நான் சொல்லல, அவர் முதல் மனைவி உலகமே கேட்கச் சொன்னாங்க! சொன்ன போதும், அதை ஊரெல்லாம் சொல்லி பரிதாபம் தேடின உங்க மகளை தேடிப் போய் சங்க அறுத்துப் போடாமல் உயிரோடு விட்ட அவர் மனிதாபிமானம், உலகத்திலேயே மிகவும் பிழையானது தான்!”​

கவிதாவின் முகம் மேலும் கன்றியது என்றால், ஆத்விக்கின் ஒரு மனம் தம்பியை நினைத்துத் துடிக்க,​

அவன் ஒரு மனமோ தம்பிக்கு கிட்டிய வாழ்க்கையை நினைத்து பெருமிதத்தில் மார்தட்டிக் கொண்டது.​

அடுத்த அம்பை எடுத்து மிகக் கூர்மையாக பட்டை தீட்டிய சாத்வி, வில்லில் பொருத்திக் கொண்டாள் போலும்...​

“வாழ்ந்த வாழ்க்கைக்கு நேர்மையாக இருந்ததுனால, வாழ்ந்து கிட்டு இருக்க வாழ்க்கையை வலியோடு வாழ்ந்தார் பாருங்க.. அது அவரோட பிழை தான்!”​

துளி மௌனம் காத்தவள்,​

“இது எல்லாத்தையும் விட, அவர் பொண்டாட்டி அவரை முழுசா நம்புவேன்னு தெரிஞ்சும். எந்த நிலையிலும் சந்தேகப்பட மாட்டேன்னு தெரிஞ்சும். நீங்க அவர் முதல் வாழ்க்கையை பற்றி வீணாப் பேசும் போது, என்னை நம்ப மாட்டியா? நான் அசிங்கமா? உனக்கு என்னைப் பிடிக்கலையா? நான் அப்படி இல்லைன்னு ஒரு நிமிஷம் அவர் கண்ணுல யாசகத்தோடு, வேதனையோடு, எதிர்பார்ப்போடு, தயக்கத்தோடு ஒத்தப் பார்வை பார்த்தார் பாருங்க. அது மிகப்பெரிய பிழை தான்!”​

அதைச் சொல்லி முடிக்கையில் சாத்வியிடம் ஒரு திமிர்.. தோன்றி மறைந்தது என்றால், சர்வேஷின் இதழ்களோ பெருமிதத்தில் புன்னகையில் மிதந்தன. அதில் அந்தக் குடும்பமே முக்தி பெற்றது என்றே சொல்லலாம்.​

சாத்வியோ வருணையும், கவிதாவையும் கூர்ந்து நோக்கி..​

“இப்ப கூட அவரைக் குற்றவாளியாக்கி, ஒரு யாசகனாக்கி, பரிதாபத்துக்குரியவனாக்கி, நீங்க நிற்க வச்சு கேள்வி கேட்டு, அதுக்கு நீங்களே பதிலும் சொல்லி, அவர் உணர்வுகளை உங்க வார்த்தையால பந்தாடிய பின்னும், கோபத்தில் கொதித்த அந்த மனுஷன், என் ஒத்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்னாலும், ஒரு செகண்ட் நான் என்ன நினைப்பேனு நினைச்சு, தப்பே செஞ்சாலும், என் புருஷன் தலை குனியிறது எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும், தலை குனியப் பார்த்தாரு பாருங்க, அது மாபெரும் பிழை தான்!”​

அத்தனை அம்புகளையும் விட கடைசி அம்பு அத்தனை பேர் இதயத்திலும் ‘சர்!’ என்று போய் சொருகியது. அந்த வார்த்தை கொடுத்த வலிமையில், அங்கிருந்த அத்தனை பேரும் ஆடிப் போக, இடம் பொருள் ஏவல் மறந்த சர்வேஷ், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.​

அவளைத் தன்னில் இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவன் உணர்வுகளை முத்தத்தில் வெளிப்படுத்தினான். அனைவரும் நெகிழ்ந்திருக்க, அதை பார்த்த கவிதா மனம் உடைந்து போனார் என்றால், வருண் உதட்டில் தோன்றிய புன்னகையோடு, தாயை அங்கிருந்து அழைத்துச் செல்ல முனையவும்,​

சாத்விகாவை தன்னிலிருந்து பிரித்த சர்வேஷ்,​

“வருண்!” கடுமையாக அழைக்க​

“எஸ் பாஸ்!”​

அவனை ஆழமாகப் பார்த்துக் கொண்டு,​

“நீ எனக்கு பாவத்துக்கு பிரதிபலன் செய்யலை, யாசகமும் தரலை, ஒரு வரம் கிடைக்க விதை போட்டிருக்க...”​

சர்வேஷ் கூறியதன் அர்த்தம் புரிந்தவன், இதழ்கள் மேலும் புன்னகையில் விரியப் பார்க்க,​

“என்னை நீ எப்படி கூப்பிடுவ?”​

“பாஆஆ.. பாஸ்” வார்த்தை திக்கி வரவே.​

“ஏன்?”​

“நீங்க அப்படித்தான் கூப்பிடச் சொல்லி இருக்கீங்க.”​

“ஓ!” மனைவியை ஒரு கையில் அணைத்துக் கொண்டு, மற்றைய கையால் தாடியை வருடியவன்,​

“மூனு வருஷத்துக்கு முதல் போல, என்னை மச்சான்னு கூப்பிடு.”​

அதில் வருணின் கண்களில் மத்தாப்பு வெடிக்க,​

அதில் தோன்றிய கனிவை கண்களில் காட்டாது மறைத்தவன்,​

“உன்னால வந்த உறவுக்காக இல்லை. என் பொண்டாட்டியால வந்த உறவுக்காக. இவளோட அண்ணன் ஸ்தானத்திலிருந்து என்னை மச்சான்னு கூப்பிடு!”​

என்றதும் மகிழ்வோடு விழி மூடிச் சம்மதித்தவன், தாயோடு அந்த இடம் விட்டு அகல,​

தம்பியின் தோளில் தட்டிக் கொடுத்த ஆத்விக்கும், மனைவியின் மனநிலையை எண்ணத்தில் கொண்டு, அவளை தேடிச் சென்றான்.​

சாத்வியை மீண்டும் ஒருமுறை அணைத்து விடுத்த சர்வேஷ்,​

“எனக்கு கொஞ்சம் வெளியே ஒர்க் இருக்கு. முடிச்சுட்டு நைட்டுக்கு தான் வருவேன்.”​

என்றவனை தடுத்த அக்கண்யன்,​

“சர்வா உன்னோட வெட்டிங் நியூஸ இப்படியே விட முடியாது. ஒரு ரிசப்ஷன் வச்சு பெருசா செலபரேட் பண்ணிடலாம். வெட்டிங்கை தான் சிம்பிளா பண்ணிட்டோம். இதையாவது கொஞ்சம் கிராண்டா பண்ணலாம்.”​

“நோ டேட்! எனக்கும் சரி, சாத்விக்கும் சரி கிராண்டா செய்றதுல விருப்பம் இல்ல. அண்ட் நீங்க மத்தவங்களுக்கு தெரியப்படுத்தணும்னு நினைச்சா, மீடியா அண்ட் நியூஸ் பேப்பர்ல நியூஸ் ரிலீஸ் பண்ணிருங்க.”​

அதில் சலித்துக் கொண்ட ஜனனி,​

“உனக்குனு ஒன்னு வரும்போது அதை கிராண்டா செய்யணும்னு எங்களுக்கு விருப்பம் இருக்காதா?”​

“இப்போ வேணாம், அம்மா”​

“இப்போ வேணாம்னா, எப்போனு சொல்லு சர்வா?”​

பதில் வேண்டிய தந்தையை ஒரு கணம் பார்த்தவன், மனைவியின் கண்களை பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். இரு விழிகள் பேசிக்கொண்ட வார்த்தையில், பதிலை சாத்வியின் இதழ்கள் பிரிந்து மென்மையாக,​

“இப்போ வேணாம், அகிப்பா! என்னோட வளைகாப்புக்கு, நீங்கள் இரண்டு பேரும் ஆசைப்படுற மாதிரி ஊரையே கூட்டி, பெரிய விருந்தா வச்சு ரொம்ப, ரொம்ப கிராண்டா பண்ணிருவோம். ஏன்னா, அங்க நானும், இவரும் மட்டும் இல்ல, எங்க காதலோட சாட்சியும் இருக்கும்!”​

அவள் இதழ்கள் அசைந்து முடிக்க, பெற்றவர்களோ... அவர்கள் இருவரின் புரிந்துணர்வில் அசந்து நின்றனர்.​

அந்த ஒரு நாள், அவளுக்குக் கொடுக்கப் போகும் அதிர்ச்சி வைத்தியங்களை, அவள் அறியாள். வெடிக்கப் போகும் பூகம்பங்களை, அந்தக் குடும்பமும் அறியாது. ஆனால், இந்தத் தருணம் விழி பேசிய காதல் மொழிகளை, பெற்றவர்கள் ரசித்தனர்.​

சர்வாவோ தன்னை, தன் மனதை புரிந்த மனைவியை ஆதரவாகப் பார்த்து, அவள் தலையை லேசாக வருடி விட்டவன், அவளிடம் தலையசைப்பில் விடை பெற்றுச் செல்ல, சாத்விகாவும் ஜனனியிடம் கூறிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.​

“அத்தான், இது நம்ம சர்வேஷா? என்னால நிதானமாகவே நிற்க முடியல.”​

“அவனுக்கு ஒரு பக்கம் இருக்கு, ஜனனி. பெத்தவங்க நாம பார்க்காத பக்கம். அதை நம்ம மருமக புரிஞ்சுகிட்டா. ஹூம்.. உணர்ந்துக்கிட்டா!”​

“பெத்த வயிறு அந்தப் பொண்ணோட ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு குளிர்ந்து போச்சுங்க!”​

பதில் சொல்லாது மௌனமாக இருந்த கணவனை புருவம் சுருக்கிப் பார்த்தவள்,​

“என்னத்தான் அமைதியா இருக்கீங்க?”​

“ஹம்.. என்னோட பசங்களுக்கு இந்த அக்கண்யன் அருளானந்தன் எப்போவும் ரோல் மாடலா இருந்திருக்கேன். என்னைத் தான் அவங்க லைஃப்ல, ஹீரோன்னு சொல்லிக் கேட்டு இருக்கேன். வாழ்க்கையில கத்துக் கொடுத்து இருக்கேன். வாழ்க்கையை கத்துக் கொடுத்த ஆசான்னு என் பசங்க சொல்லிக் கேட்டு இருக்கேன். கத்து கொடுத்துட்டும் இருக்கேன்.​

ஆனால், முதன் முறை வாழ்க்கையில காதல்னா என்ன? காதலை எப்படி காதலிக்கணும்? வாழ்க்கையில நேசத்தை எப்படி நேசிக்கணும்? தன் இணையை எப்படி ஆராதிக்கணும்? வாழ்க்கை துணையை எப்படி நம்பணும்? வாழ்க்கையை எப்படி வாழணும்னு உன் மகன் சர்வேஷ் இந்த அக்கண்யனுக்கே கத்துக் கொடுத்து விடுவானோனு கொஞ்சம் பயமா தான் இருக்கு.​

அவனப் பார்த்து கத்துக்கோன்னு என் மனசு சொல்லும் போது, என்னோட ஈகோ எங்கயோ ஒரு இடத்துல உடைஞ்சு போறதை ஃபீல் பண்றேன், பேபி!”​

என்றவன் கர்வத்தோடு மீசையை முறுக்கிக் கொண்டான்.​

சர்வேஷ், அவன் வேதாந்தங்களை கடந்த விந்தை.​

 

santhinagaraj

Well-known member
சர்வேஷின் மீதான சாத்வீயோட காதலும் நம்பிக்கையும் கர்வமும் வேற லெவல் 👌👌
நல்லா தானே போயிட்டு இருக்கு சாத்வியோட வளைகாப்புல என்ன அதிர்ச்சி வைக்க போறீங்க??
 
Top