எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கைவிடாத உறவே💞

Status
Not open for further replies.

Rishaba Bharathi

New member
என்னுடைய இந்த கதையை இந்த திரியின் வழி படித்து மகிழுங்கள்!!!
 

Rishaba Bharathi

New member
பிடி 1



வருடம் 2019

மாலை நேரம் அழகிய புல்வெளி மீது ஒரு பெண்ணவள் நடந்து செல்ல அவளின் ஆடையும்,

அதோடு அவளுடைய கற்றை கூந்தல் காற்றிலே ஆட..சிறு பிள்ளை போல துள்ளி துள்ளி வீட்டினுள் சென்றாள்.


அவள் தன் அறைக்கு செல்ல. அங்கு அவள் கட்டிலுக்கு எதிரே இருக்கும் டிரெஸ்ஸிங் டெபிலில்.. அவள் அமர்ந்து தன்னை அலங்காரம் செய்து கொண்டு இருக்கும் வேளை.


அவளுடைய தங்கை "தாகினி.. அக்கா வாங்க உங்க ஃபரண்டு நித்திலா வந்திருக்காங்க."


ஹாலுக்கு சென்றவள் நேராக நித்திலாவின் பக்கம் வந்து அமர்ந்து "ஹேய்!! வாட்சப்! நித்திலா அதிசயமா என் வீட்டுக்கு வந்திருக்க?"

அவள் "ஏய்! உனக்கு வேற வேலையே கிடையாதா? வா..டயமாச்சு காலேஜ் போகணும். வா..வா.." என அவள் அவளது கைகளை பிடித்து அழைத்து சென்றாள்.


தாகினி பி.பி.ஏ மூன்றாம் பருவம் படித்து முடிக்கும் தருவாயில் இருகிறாள்.

இவளுக்கு ஒரு தங்கை உண்டு அவள் தான் நம் சீதா.

இவளுக்கு அம்மா கிடையாது. எல்லாம் அவளுடைய பாட்டி தான்.


இவளுடைய தாய் இவர்கள் மூவ்வரையும் கைகழுவி விட்டு வேறு ஒரு ஆண்மகனை திருமணம் செய்து கொண்டாள்.



இந்த சம்பவத்திற்கு பின் இவர்களுடைய தந்தை தன்னை, தன்னுடைய மனைவி ஏமாற்றிவிட்டாள். என்ற ஒரே காரணம் அவனது மனதில் ஆறாத தழும்பாக மாறியது.


அதன் பின் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்து கடந்த வருடம் தான் இறந்து போனார்.


தாகினியின் பாட்டி, தாத்தா, மாமா, அத்தை என எல்லோரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.


தாகினி மீது அனைவரும் பாசத்தோடு நடப்பது மட்டுமல்லாமல், அவள் மீது தனி மரியாதை வைப்பார்கள்.


காரணம், இவர்களின் குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக பெண் வாரிசு இல்லாமல் மிகவும் வருத்தம் அடைந்தனர்.


ஐந்தாவது தலை முறையில் முதல் பெண் வாரிசாக நம் நாயகி தான் பிறந்தாள்.

ஆதலால், அவர்கள் தங்களுடைய கொள்ளு பாட்டி மறு உருவம் பெற்று பிறந்து வந்திருக்கார்கள். அதோடு அந்த தாகினி தான் இவளுக்கு தன் பெயரை சூட்டி இருக்கிறாள்.



********



கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்த தாகினி.. தன் ஆடைகளை மாற்றிக்கொண்டு வீட்டிற்கு பின்னால் இருக்கும் ஒரு சிறிய அறையினுள் சென்று..


அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அவளுக்கு நேராக இருந்த புகைப்படம். அதற்கு பக்கத்தில் இருந்த ஓவியம் இரண்டும் மிக பழமையான படங்கள்.


அந்த ஓவியம் அந்த காலத்தில் வரைந்தது போலவும். அதிலும் அதற்கு பக்கத்தில் இருக்கும் புகைப்படம், அதில் இருக்கும் நபர்.

அந்த ஓவியத்தில் ஒரு அழகு தேவதயை அற்புதமாக வரையப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே.. அவள் மனதில் சில வார்த்தைகள், அருவியாக கொட்டியது.

'..பாட்டி. நா..உங்களுடைய மறு உருவம்னு எல்லோரும் சொல்லுறாங்க. இருந்தாலும், என்னால நம்பவே முடியள. நா..உங்க அளவுக்கு வைராக்கியமான பெண் கிடையாது. அதோட எதிர்த்து நின்னு பேசுற தைரியமும், காதல் கத்தரிக்காய்னு எதிலும் எனக்கு விருப்பம் இல்ல.
இருந்தும், எனக்கு அப்படி ஏதாவது என் வாழ்க்கையில் வந்தா.? நா..என்ன பண்ண? உங்க கதைய நேத்து தான் நான் பாட்டி கிட்ட கேட்டேன். ஆனா, அவங்க ஏதோதோ சொல்லுறாங்க. நீங்க..ஆதவன்னு யாரையோ காதலிச்சீங்க? அப்புறம் நிறைய சொன்னார். அதெல்லாம் நா..அவ்வளவா கேட்கல. கடைசியா.. என்னமோ, நடந்ததுனு சொன்னார். அப்புறம், சாகும் போது அமுதா பாட்டியோட கைய பிடிச்சு நம்ம தாகினி என்னுடைய மறு உருவம் அவ வாழ்க்கை அவளுடைய கையில் இருந்தாலும், நல்ல முறையில் வளர்ப்பேன்னும். எனக்கு சத்தியம் செய்யினு சத்தியம் வாங்கிட்டு போய்டீங்கனு சொன்னதா. பாட்டி சொன்னாங்க. அப்பிடி உண்மையாவே உங்க வாழ்க்கையில் என்ன தான் நடந்தது.?'


என தன் கொள்ளு பாட்டியின் பழையான ஓவியத்தை பார்த்து தன் ஆதங்கத்தை மனதின் வழியாக கேட்டால்.


அவளது மனதில் ஆழ்ந்து கிடந்தது ஒரு சோகம்..


**********


ஆந்திராவில்
விஜயவாடா, காரசாரம் நிறைந்த நாடு, அத்தோடு பிரபலமான ஊர்களில் ஒன்று தான் இந்த விஜயவாடா.



அங்கு, அந்த விஜயவாடாவில்.. ஸ்ரீ சித்தாரா நகரில் உள்ள எஸ் பி காலனி.

அங்கு..பெத்துராஜ் இல்லத்தின் தலைவர் அவருடைய பெயர் குரு நாயர் பெத்துராஜ், மனைவியின் பெயர் ஷாட்சி பெத்துராஜ்,


இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இரண்டு. ஆண் பிள்ளைகள், மூத்தவன் பெயர் ராகேஷ் பெத்துராஜ், இளையவனுடைய பெயர் ஆதவன் பெத்துராஜ் இவன் தான் நம் கதையின் நாயகன்.

இவர்கள் இருவருக்கும் ஒரு தங்கை இருக்கிறாள்.


அவளது பெயர் ஷகல்யா பெத்துராஜ்.


இவர்களின் பூர்விக இடம் வேறு. ஆந்திராவில் கடந்த மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.


மூத்தவன் ராகேஷ் பி.ஜி. எம்.பி.ஏ முடித்து அவன் தன் தந்தையோடு பிஸ்நஸ் கவனித்து வருகிறான்.


இரண்டாவது மகன் பி.டெக் முடித்து விட்டு எம்.டெக் முதலாம் பருவம் முடிக்கும் தருவாயில் இருகிறான்.


ஷகல்யாவிற்கோ தன் அண்ணனை போல பிஸ்நஸ் செய்ய ஆசை அதிலும், அவனை போல அப்பாவோடு சேர்ந்து செய்யாமல்.


தோழிகளோடு பிஸ்நஸ் செய்ய வேண்டும். அதனால், அவள் பி.பி.ஏ மூன்றாம் பருவம் படித்து முடிக்கும் தருவாயில் இருகிறாள்.


அன்று அந்த காலை வேளையில், ஆதவன் தன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது.


ஏதார்தமாக அவனது அறையினுள் சென்று அவனுடைய பேனாவை எடுத்த ஷகல்யா நேராக தனது அறைக்கு ஓடினாள்.


ஆதவனுக்கு எக்ஸசை செய்ய மிகவும் பிடிக்கும்.

அதோடு, அவன் பயிற்சி செய்யும் போது யாராவது அவனிடம் பேசினால் அவனுக்கு பிடிக்காது.


அத்தோடு, அவன் தன் தங்கை மீது அதீத பாசம் உடையவன்.

தாய்,தந்தை அவளை திட்டினாலும் கூட இவன் அவளுக்கு ஆதரவாக பேசுவான்.


இவனுக்கு ஒரு தோழன் உண்டு அவனுடைய பெயர் ஜாரவ், இவனுக்கு தோழர்களை விட தோழிகள் தான் அதிகம். இருப்பினும், ஜாரவ் மீது அதிக நெருக்கம் உடையவன்.


அவன் தன் தோழனுக்காக சிறிது நேரம் காத்திருந்தான்.


அவன் ப்ளூ கலர் டி-ஷிர்டும் ஜீன்சும் அணிந்து கண்களில் கூலிங் கிலாஸ், தோரணையாக ஆண்மகனுக்கேற்ற கம்பீரமான தோற்றத்துடன், நடந்து வந்ததை பார்த்ததும். அவனுடைய நண்பன் "ஹ..மச்சி! செமயா இருக்க டா!!! ஹாப்பா! உன்ன இன்னைக்கு எத்தனை பெண்கள் வச்ச கண்ணு வாங்காம பாக்க போறாங்களோ.

நீ..யாரெல்லாம் சைட் அடிக்க பிளான் வைச்சிருக்கியோ. டேய் நீ குடுத்து வைச்சவன் டா." என அவனுடைய தோழனின் தோள்களில் கைவைத்து கூறினான்.


அவன் "ஹேய்! கண்ணுவைக்காத மச்சான். ம்மா! நா..காலேஜ் போறேன். பைய்" என அவன் சொல்லி விட்டு இருவரும் சென்றனர்.


கல்லூரிக்கு வந்தவன் நேராக ஜாரவ்வுடன் நடந்து வகுப்பிற்கு செல்லும் போது, அவனுக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.

தினமும் அவன் தான் ஷகல்யாவை கல்லூரியில் டார்ப் செய்துவிட்ட பிறகு தான் தன்னுடைய கல்லூரிக்கு செல்வான்.


இந்த முக்கியமான வேலையை மறந்ததும் அவன் "ஹேய்! மச்சான் நா..ஷகல்யூ வ டார்ப் பண்ண மறந்துட்டேன் டா.?" என அவன் தலையை கை வைத்து கொண்டே கூற..


அவன் "டேய்! அவ என்ன சின்ன பொண்ணா? வயசு அவளுக்கு இருபது ஆச்சுல அவ போயிடுவா. வா..கிலாஸ்க்கு போவோம்." என அவனுடைய கைகளை பிடித்து இழுத்து சென்றான்.

அவன் தோழனினுடைய கைகளில் இருந்து தன் கைகளை விடுவித்து கொண்டு.

அவனிடம் "ஹேய்!! என்ன பேசிகிட்டு இருக்க? உனக்கு ஒரு தங்கச்சி இருந்தா தெரியும்.!" என அவன் கோபமாக பேசிவிட்டு பார்கிங் சென்று, தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.


அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.


அப்போது அவனுடைய தங்கை கன்னத்தில் கைவைத்து கொண்டு அமர்ந்திருக்க.


அவளை பார்த்து அவள் பக்கம் சென்றவன், அவனை பேச விடாமல் அவள் பேச ஆரம்பித்தாள்.

"அ..அண்ணா உன் பேனாவ நா எடுத்து யூஸ் பண்ணிட்டேன்னு தான நீ இப்போ என் ட்ராப் பண்ணாம ஜாரவ்அண்ணா கூட சேர்ந்து காலேஜ் போன?"


என அவள் கூறியதை கேட்டதும் அவனுக்கு தூக்கிவாரி போட்டது.


உடனே அவன் "ஹேய்! அப்போ..என்ன கேட்காமல் பேனாவ திருடி இருக்க?" என அவன் செல்லமாக அவளிடம் கோபித்து கொண்டவன்.


தன்னுடைய முகத்தை சுளித்துகொண்டு கிளம்பினான்.


அவள் "அண்ணா..! இரு..என்னையும் கூட்டிட்டு போ! ஹேய்! ஆதவ்! லுசுப்பயலே!" என அவள் அவன் பின்னே செல்ல..தங்கையை கண்டு சிரித்தான் அவளின் அண்ணன்.


அவனுடனே பைக்கில் சென்றாள்..ஷகல்யா.


**********


இங்கு தன்னந்தனி அறையில் மனதின் வழியாக பேசிக்கொண்டு இருந்தவளின்.. கண்களில் தேக்கி வைத்த கண்ணீர் கண்களை விட்டு வெளியே வர தொடங்கியது.


வீட்டில் உள்ள அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பாட்டி, தாத்தா என அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.


அப்போது பாட்டி "சீதா..தாகினி அம்மா..எங்க?" என கேட்கும் இந்த பாட்டியின் பெயர் அமுதவல்லி.


இவள் தான் அந்த தாகினியின் மருமகள்.



இவள் "அக்கா..இதோ..வராங்க. பாட்டி." என கூறினாள்.

அவளை கண்டதும் அமுதாவின் மனதில் 'தாகினி..ம்மா ஏதோ ஒரு கவலையில் இருக்காங்க'


என அவள் நிலையை சரியாக உணர்ந்தாள். அவளுடைய பாட்டி.
அவளின் கைகளை பிடித்து தனியாக அழைத்து சென்றாள்.


அப்போது..


அவள் "பா..பாட்டி.!" என அழைக்கவும்.

அவர் "ம்மா..என்ன மா ஒரு மாதிரியா
இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?" என அவர் அவளுடைய கைகளை வருடிய படி கேட்க.


அவளும் "அ..அது ப..பாட்டி நா..எம்.பி.ஏ பண்ண ஆசைப்படுரேன்." என்றாள்‌ அழுத்தமாக.


அவர் "அட..இவ்வளவு தானா! படிக்க வைக்கிறேன். செமஸ்டர் முடிஞ்சதும் கோயம்புத்தூர் ல அப்பிகேசன் ஃபாம் வாங்கிடுவோம்." என்றார் பாட்டி சிரித்து கொண்டே.


அவள் "அமுதா..பாட்டி நா..ஆந்திரால படிக்க ஆசைப்படுரேன்."

அவர் "ஆந்ராவுல..படிக்க.. எங்க நீ தங்க போற? யார் இருக்கா?"


அவள் "பாட்டி..நானும் நித்தலாவும் சேர்ந்து படிக்கலாம்னு இருக்கோம். அதோட அவ ப்ரண்டு வீடு அங்க இருக்கு..ஹாஸ்டல எல்லாம் தங்க மாட்டோம். அதுக்கு வாய்ப்பு கிடையாது. பிளீஸ் அமுதா பாட்டி." என அவள் கூறிவிட்டு அவளது அறைக்கு சென்றாள்.

பிறகு பாட்டி அந்த ஓவியத்தில் இருக்கும் தாகினியின் புகைப்படத்தை பார்த்து.

"அம்மா..இது என்ன சோதனை இப்படி நீங்க வேற நாடு போக ஏன் முடிவு பண்ணிங்க. ஒரு..வேளை நீங்க மறுபிறவி எடுத்த காரணம் அங்க கிடைக்க வாய்ப்பு இருக்கும்னா.. தாகினி ம்மா.. உங்க அளவு மனதைரியமும் நம்பிக்கையும் இந்த அம்மாக்கு இல்ல..இவங்க பூ மாதிரி. சின்னதா பிரச்சனைனாலும் அவங்களால தாங்கிக்க முடியாது." என அவர் வாய் விட்டு புலம்பிய படி கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டே சென்றார் அமுதவல்லி.


என்னை விட்டு எங்கும் செல்லாதே💝
 
Last edited:
Status
Not open for further replies.
Top