அத்தியாயம் 04
தன் இரு விரல்களை இணைத்து, அதில் குங்குமத்தை எடுத்து அவன் அவளின் நெற்றியை நோக்கி கொண்டு போக, இலஞ்சிதா நிமிராமல் நிற்க, “ இன்ஷி, இப்படி நேருக்கு நேராக அல்ல, அவள் தலையை சுற்றி கையை கொண்டு போய் வகுட்டில் வை”, என்று யசோதை வைக்கும் முறையை சொல்லிக் கொடுக்க, அவன் அதை பின்பற்ற அவளின் அருகில் நெருங்கி நின்றான். அவள் தனக்குள் ஒடுங்க, இவன் அவளை அணைத்தார் போல் தன் வலது கையை கொண்டு வந்து அவள் நெற்றியின் வகுட்டில் குங்குமத்தை வைத்தான். அவன் தொட்டவுடன் அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு, அதை அவனால் உணர முடிந்தது. “ அம்மாச்சி உங்க தாலியை எடுத்துக்காட்டுங்கோ, தம்பி அதிலும் வைக்கட்டும்”, என்றார். அவளின் தயக்கத்தையும் ஒதுக்கத்தையும் அவர் உணர்ந்து இருந்தாலும் அவர் அதை பெருட்படுத்தவில்லை. அவர் சற்று இறங்கி வந்தாலும் இளஞ்சிதா மேலும் ஒடுங்கிப் போவாள். இங்கே முகாமில் தனித்தனி வீடுகள் கிடையாது. குருவிக்கூடு போல், அதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றவர்களின் விமர்சனத்திற்கு வழிவகுத்து விடும். இன்று நடக்கவிருக்கும் வரவேற்பும் கூட வேண்டாத புரளிகளை தடுப்பதற்காகவே மட்டும்தான். அவருக்கு மகனின் விருப்பு வெறுப்புகள் நன்றாகத் தரும். தன்னைப் பற்றியோ தன்னை சார்ந்தவர்கள் பற்றியோ விமர்சனங்களை அவன் விரும்புவதில்லை.
அவரின் பேச்சில் இலஞ்சிதா அசையாமல் நிற்க, அதை பார்த்த இன்ஷித் தன் மறுக்கையை அவள் கழுத்தை நோக்கி கொண்டு சென்றான். அவனின் மற்றொரு கரம் தன் கழுத்தை நோக்கி நீள்வதை கண்டவள் , அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்த உடன் ,அவளே தன் தாலியை எடுத்துக் காண்பித்தாள் .அதில் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணமாக, “ குட்”, என்றவன் சிவனும் சத்தியமாக சேர்ந்திருந்த தாலியில் தன் விரல்களைக் கொண்டு தன் முத்திரையை பதித்தான் .அதன் பின்பு யசோதா தன் கையில் வைத்திருந்த ஒரு முகப்பு செயினை அவன் கையில் கொடுத்து அதனையும் அவளுக்கு அணிவிக்கச் சொன்னார். அது சற்று கனமான வைரக்கல் முகப்பு வைத்து அதில் இரண்டு இஇ பிணைந்து ஒரு இருதய வடிவத்திற்குள் இருக்க , வைரக்கல் சுற்றிலும் பளபளத்தது. அவள் குனிந்து நிற்க, அதை வாங்கி அவளுக்கு அணிவித்தான். அது அவளுக்கு தனி கலையை கொடுத்தது .
அதற்குள் இன்ஷித்தின் கைபேசி அலற அதை உயிர்ப்பித்தவன், “ இதோ வருகிறோம்”, என்று சொல்லியவன், கைபேசியை அணைத்துவிட்டு யசோதையிடம், “ அவ்வளவுதானே என்றால் கிளம்புங்களள் ,அனைவரும் வர ஆரம்பித்து விட்டார்களாம்”, என்று கூறி முன்னே நடந்தான். யசோதை சிலையாக நின்றிருந்த இளஞ்சிதாவின் கையைப் பற்றி நடத்தி அவனை பின்தொடர்ந்தார். கபிணேஷ் குழந்தைகளும் வெளியே நின்று கொண்டிருக்க ,அவர்களை அழைத்துக் கொண்டு வரவேற்ப்பு நடக்கும் இடம் நோக்கி நடந்தான்.
இலஞ்சிதா சுற்றுப்புறத்தை உணராமல் தனக்குள் அவளின் சிந்தனைக்குள் சுழன்று கொண்டிருக்க, யசோதனையின் கைப்பிடி மட்டும் இல்லையென்றால், தவித்து தான் போயிருப்பால். இரினா இலஞ்சிதாவுடன் வர இதிகா இன்ஷித்தை பிடித்து வந்தால். வரும் வழியாவும் சுற்றத்தார் கண்கள் யாவும் இவர்களைத்தான் பார்த்தது. ஏற்கனவே யசோதை நல்ல விதமாக அக்கம் பக்கத்தில் இன்ஷித்துக்கு திருமணம் நடைபெற்று இருந்த விஷயத்தை சொல்லி இருந்தார் . ஏற்கனவே இன்ஷித்துக்கு முகாமில் நல்ல பெயர். ஆதலால் அவர்களால் இதை ஏற்க முடிந்தது. புறம் பேசுபவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் அவர்களால் இன்ஷித்தை மீறி எதுவும் பேச முடியாது. பின் பேசி விட்டு யார் அவனிடம் வாங்கி கட்டுவது . தவறு என்றால் முகத்துக்கு முகம் திருப்பி அடிக்க தயங்க மாட்டான். அதே போல் கஷ்டத்தில் தோள் கொடுக்க அவனைப் போல் எவரும் இல்லை.
அவர்கள் கூடத்தை அடையும் போது சண்முகம் வினோத் மற்றும் ரமேஷ் ரேவத்துடன் நின்று நடக்கும் வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் வந்து விட வினோத் இதிகா இரினா விடம் , “பாப்பா”, என்று நெருங்க, அவர்களுக்கு கபிணேஷிடம் இருக்கும் ஒட்டுதல் கூட இவனிடம் அவர்களுக்கு தோணவில்லை. இன்பா இருக்கும் போதும் அவனுடைய நடவடிக்கையே அவனை சார்ந்தவர்களை தள்ளி நிறுத்தியது. சண்முகத்தின் இளைய மகள் தன்சி புண்ணியத்தில் இவர்களும் பிள்ளைகளிடம் விலகித்தான் இருந்தனர். இப்போது அவர்கள் இன்ஷித் கபிணேஷிடம் ஒட்டுவது இவர்களுக்கு தங்களின் தவறு புரிந்தது. காலம் கடந்து சண்முகம் யோசித்தார் தன் ஒற்றை மகளே தன் வீட்டின் முடி சூடாய் இளவரசி போல் வளர்த்தது, இன்னொரு குழந்தையின் மனதை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று. தன்சி எப்போது இரினாவை போட்டியாக பார்க்க ஆரம்பித்தாலோ அன்றே அதை முலையிலே கிள்ளி எரிந்திருந்தால் இன்று இரு நாவுக்கு அப்பா பாசம் கிடைத்திருக்கும். இன்பாவை அது மாற்றியும் இருக்கும். நூற்றில் ஒற்றை பங்காக அவன் திருந்த மகள் பாசம் அடித்தளம் அமைத்திருக்கும். இதிகா பிறந்த போது அவன் முற்றிலும் அடிமையாகி இருந்தான். இவர் இவ்வாறு யோசிக்க, “ பட்டு லட்டு, சித்தப்பா கூப்பிடுகிறான் அல்லவா போங்கல்”, என்றார் யசோதா.
அவரின் பேச்சில் நினைவுக்கு வந்தால் இலஞ்சிதா அவள் அப்போதுதான் அங்கு இருந்தவர்களை நிமிர்ந்து பார்த்தால். அங்கே ரமேஷ்ஷை பார்த்தவுடன் அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. ரமேஷ் இலஞ்சிதாவை பிறந்ததிலிருந்து தூக்கி வளர்த்தவர். அவளுக்கு வயது 10 இருக்கும் போது தான் அவருக்கு திருமணம் நடைபெற்றத அதுவரை அவர் தான் அவளுக்கு எல்லாம். தாய்மாமன் என்பவன் தாயின் மறு ரூபம் தானே. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு கண்கள் நிறைந்துதான் போயின. செல்வ சீமாட்டியாய் அவளை தோளிலும் மார்பிலும் வளத்துவருக்கு அவள் இரண்டு பெண் குழந்தைகளோடு இன்பா மரணம் அடைந்த பின் தனியே நின்றது சொல்ல முடியாத வேதனையாகவே இருந்தது. இன்று அவளை இனிஷித்யிட்ட குங்குமத்தோடு வைர முகப்பு வைத்த சங்கிலியும் தாலிக்கொடியோடு பார்த்தது மனது நிறைந்து தான் போனது. மனுஷனுக்கு உணர்ச்சி பெருக்கோடு இன்ஷித்தை ஆழத் தழுவிக் கொண்டார். “ ரொம்ப சந்தோஷம் மாபிள்ளை”, என்றவரின் குரல் தளதளத்தது. “ யாரும் செய்யத் துணியாத காரியம் மாப்பிள்ளை அதுவும் இரண்டு பெண் குழந்தைகள், நன்றி என்ற வார்த்தையை சொன்னால் அது போதாது. ஆனால் இன்று என் மாமா இருந்திருந்தால் உங்களைப் போற்றி புகழ்ந்து தலையில் வைத்து கொண்டாடி இருப்பார்”, என்றார் உள்ளம் நிறைந்த மகிழ்வோடு. அதை சண்முகமும் வினோத்தும் ஆமோதிக்கும் வண்ணமாக, “ ஆமாம் தம்பி”, “ ஆமாம் சித்தப்பா”, என்றனர்.
“ சித்தப்பா பிள்ளைகள் முன்னிலையில் ஏன் இப்படி”, என்று புகழ்வது பிடிக்காமல், அது போக அவன் அவர்களுக்கு அப்பாவாக இருக்கவே நினைத்தானே தவிர மாற்றான் போல் அல்லவே. அதனால் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல், “ வாருங்கள் முதலில் நாம் காலை உணவை முடித்து விடுவோம் , அனைவரும் வருவதற்குள் பிள்ளைகளுக்கு பசிக்கும் நேரம் ஆகிறது”, என்று அனைவரையும் சாப்பிடும் இடம் நோக்கி நடத்தினான். அனைவரும் அமர்ந்தவுடன். ரேவன்த், “ டேய் மாப்பிள்ளை, நீயும் தங்கச்சியும் பக்கத்துல உட்காரு, இன்றைக்கு நீதான் நாயகன், அதனால் நானும் கபியும் பார்த்துக்கொள்கிறோம்”, என்று கூறி இலஞ்சிதா பக்கத்தில் அமர வைத்தான். “ ஆமாம் அண்ணா, இன்றைக்கு வருபவர்களுக்கு தம்பதி சமைந்தராக குழந்தைகளுடன் காட்சியளிப்பது மட்டுமே உங்கள் வேலை”, என்று வினோத்தும் கூற, “ ஆமாம் எப்ப பாரு இவர் மட்டுமே நல்லது பண்ணி ஸ்கோர் பண்றாரு. சோ இன்றைக்கு இவர் ஆட்டத்தில் கிடையாது”, என்றான் கபிணேஷ் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு. இதற்கு இதிகாவோ, நான் இங்கு இன்ஷிப்பாவை கையை கையை நல்லா இறுக்க பிடிச்சிக்கிறேன், நீங்களே விளையாடுங்க”, என்று கூறி, இதிகா அவன் அருகில் அமர்ந்திருந்தவள் அவள் கூறியது போல கையை இறுக்க பிடித்துக் கொண்டால். அதில் சண்முகம் ரமேஷுக்கு மனம் நிறைந்து தான் போனது. அமைதியாகவே அதன்பின் காலை உணவை முடித்து அனைவரும் கூடத்தின் முன் பகுதிக்கு வந்தனர்.
இன்பாவின் வீட்டினருடன் இணைந்து இலஞ்சிதாவின் வீட்டினரும் வந்தனர். ஏற்கனவே யசோதை சீராக எதையும் எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆதலால் அவர்கள் 21 வகை தட்டு அவர்களுக்கு ஆடை ஆவணங்கள் தின்பண்டம் விதவிதமான பழங்கள் அழகு சாதன பொருட்கள் என்பன மட்டுமே எடுத்து வந்திருந்தனர். இன்பா வின் அக்கா தங்கைகள் என வெளிநாட்டில் இருப்பவர்கள், உட்பட வேலுவின் வற்புறுத்தலில் வந்திருந்தனர். இன்பம் மறைவுக்கு வராதவர்களை கண்டித்து வர வைத்திருந்தார். அவர்களும் குடும்பத்தோடு வந்திருந்தனர். சண்முகம் தன்ஷியை கண்டித்து இருந்ததனால் அவளும் வந்திருந்தால். ராஜேஷ் தனத்தின் துணையோடு வந்தான். நாத்தினார் முறையில் உள்ள அனைவர் கைகளிலும் தட்டுக்கள். ஜெகன் இலஞ்சிதாவின் மூத்த மாமாவிற்கு இளையவர் ரமேஷுக்கும் பெண் ஒன்று ஆண் ஒன்று என்று இரண்டு குழந்தைகள். ஜெகன் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்திருந்தது. ரமேஷ் மகன் லாயர் மகள் படித்துக் கொண்டிருக்கிறாள். இவர்கள் அனைவரைம் தம்பதி சமைந்தராக இன்ஷித் நிறைந்த புன்னகையோடு இதிகாவை தூக்கிக் கொண்டு வரவேற்றான். இலஞ்சிதா அமைதியாகவே ஆனால் கை கூப்பி அவள் வரவேற்றது அவர்களுக்கு போதுமானதாகவே இருந்தது. வளமை போல் இலஞ்சிதா குடும்பத்திலும் ரமேஷின் மனைவி மாலா கொஞ்சம் குணம் சரியில்லாதவள்.
அவள் வழக்கம் போல் கண்ணனை தேடி வந்து, “ என்ன தம்பி இப்படி நீங்க இருக்கும் போது”, என்று அவள் அவனை பழைய கண்ணன் என்று நினைத்து ஆரம்பிக்க , “ ஆமாம் அத்தை, ஆமாம் நான் இருக்கும் போது எப்படி என் தங்கை கலங்க விடுவேன். அதனால்தான் இன்பாவை விட பல மடங்கு உசந்த இன்ஷித்துக்கு அவளை மனம் முடித்து வைத்தேன்”, என்று அழகாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற விதமாக பதில் அளித்தவன், அவர் மேலும் எதற்கும் வாயை திறக்கா வண்ணம், “ உங்கள் மகன் சட்டக் கல்லூரியில் படித்த போது நண்பர்கள் கூட்டத்தோடு ஒரு பெண் விஷயத்தில் மாட்டினானே, அதைக்கூட யாரும் அறிய வேண்டாம், இன்பா கேட்டு கொண்டதற்காக மட்டுமே பிறர் அறியாமல் பிரச்சனையை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டேன். ஞாபகம் இருக்கிறதா அதை”, என்றான் . “அந்த பெண்ணின் தகப்பன் இன்னும் என்னிடம் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார், என் தங்கை பற்றியோ இல்லை அவளுக்கு எந்த ஒரு பிரச்சனையோ செய்தீர்கள் என்றால்”, என்று அவன் பல்லை கடித்து வார்த்தைகளை துப்ப, “ என்னங்க”, என்று இலக்கிய வர அவன் பேச்சு நின்றது. இதுதான் சந்தர்ப்பம் என்று மாலா ஓடியே விட்டார். பின்னே மகன் அதுவும் பெண் பிரச்சனை என்று கணவனுக்கு தெரிந்தால் கொன்றுவிடுவார் என்று தன் தம்பி சந்திரமோகன் மதுரையில் பெரிய லாயர் அவனிடம் கூறி அவன் கூறிய அறிவுரையின்படி அவன் விசாரித்தது போது அது அந்த பெண் கண்ணனிடம் வேலை பார்ப்பவரின் மகள் என்பது தெரிய வந்ததால் இன்பா மூலம் கண்ணனை வைத்து அந்த பிரச்சனையில் இருந்து அவனை விடுவித்தார்கள். அதனால அதன்பின் வேறு எதுவும் மாலா முயற்சிக்கவில்லை. இலஞ்சிதாவின் அன்னை அவளை அணைத்துக்கொண்டார். ஈஸ்வரி வாசுகி மீனா முன்னே நின்று கொண்டு வந்த தட்டை பரப்பினர். இலஞ்சிதாவிற்கு வாசுகி போட்ட விசேத்தை ஆரம்பித்து வைத்தார்.நாத்தி முறைக்கு இன்பாவின் அக்கா தங்கைகள் அனைவரும் நலங்கு வைத்தனர் .அனைவரும் ஆளம் சுற்றி நிறைவேற்றிய பின்பு வந்திருந்த ஓவ்வேராக மேடை ஏறினார். குடும்பமாக புகைப்படம் எடுக்கப்பட்டது .அனைத்தும் முடிந்து யசோதை அருகில் நிழலாட அவர் திரும்பிப் பார்த்தவர் அசையாமல் அப்படியே நின்று விட்டார்