எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 12

Lufa Novels

Moderator
ஒரு நட்சத்திர பப்பில் அமர்ந்து கையிலிருந்த விலையுயர்ந்த மதுபானத்தை மிடறு மிடறாக அருந்தியவன் கண்கள் அங்குள்ள நடனமேடையில் அரைகுறை ஆடையில் ஆடும் மங்கையின் மேனியிலுள்ள வளைவு நெளிவுகள் மீது ஊர்வலம் போக, அதையும் மீறி நொடிக்கொரு முறை அவனது அலைபேசியைப் பார்த்துக் கொண்டே இருந்தது.


அவன் எதிரிலுள்ள அவனின் பி.ஏ கருமமே கண்ணாக அவன் அலைபேசியில் மூழ்கி இருந்தான். நிமிஷத்து ஒரு தரம் யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டும் இருந்தான்.


அப்போது தான் பி.ஏ வின் அலைப்பேசியில் இவ்வளவு நேரம் அவர்கள் எதிர்பார்த்த விஷயம் வர,


“சார். அப்லோட் ஆகிடுச்சு சார்” எனக்கூற, உடனடியாக தன் அலைப்பேசியில் கவனம் செலுத்தினான் சூர்யான்ஷ்.


அதில் சமூக வலைதளத்தில் அவன் கூறிய “முதல்வர் வாரிசு நடிகையுடன் சல்லாபம்” என்னும் தலைப்பில் விஹானும், நேகாவும் நெருக்கமாக இருப்பது போல பல புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தது.


அவை அனைத்தும் அன்று காஃபிஷாப்பில் எடுக்கப்பட்டவை தான் ஆனால் அதன் பின்னனியை மாற்றி இருவரும் நெருக்கமாக இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.


“வாவ். குட் ஜாப்” என சந்தோஷத்தில் கையிலுள்ள மதுபானத்தை ஒரே மிடறாக அருந்திவிட்டு,


“லெட்ஸ் செட்டில் தி அமௌண்ட்” என தன் பி.ஏ விடம் கூற, அவனும் முதலாளி கூறியதை செய்து முடிக்க,


“ஹா.. பீல் ஃபிரீ’யா இருக்கு” எனக்கூறியவன் கண்கள் மோகமாக அங்கு அரைகுறை ஆடையில் ஆடிய பெண் மேல் விழ, அவன் பார்வையை வைத்தே அவன் பி.ஏ புரிந்து கொண்டு தன் முதலாளியை திருப்திபடுத்தும் வேலையை செய்ய ஆரம்பித்தான்.


“சார் ரூம் நம்பர் 304. இந்தாங்க கீ. நான் மார்னிங் உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன் சார்” எனக்கூற, அங்கு ஆடிக்கொண்டிருந்த பெண்ணும் இறங்கி வந்து சூர்யான்ஷ் அருகில் அமர்ந்தாள். அவள் வரவும் சூர்யான்ஷிடம் தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டான் அவன் பி.ஏ.


அவன் செல்லவும் தன்னருகில் நெருக்கமாக அரைகுறை ஆடையிலிருந்த பெண்ணுடன் அறைக்குள் சென்று அவன் சல்லாபிக்க, இங்கு வெளியில் அவன் பற்ற வைத்த பொறி பத்தி எரிய ஆரம்பித்தது.


*******


இரவு உணவு உண்பதற்காக அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர் ராகவேந்திரா இல்லத்தினர். கல்பனாவும் அனைவருக்கும் பரிமாற அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேலை அனைவரின் அலைப்பேசியிலும் ஒவ்வொன்றாக குறுந்தகவல் செய்தி வர, ஒவ்வொருவரும் எடுத்துப் பார்க்க அனைவருக்கும் அதிர்ச்சி. அதிர்ச்சியின் உச்சத்தில் எழுந்தேவிட்டான் விஹான்.


“வாட் தி ஹெல்” என கோபத்தில், காலை தரையில் உதைத்தான்.


சந்தோஷ் ராகவேந்திரா “என்னடா இது?” எனக்கேட்க,


“பெரியப்பா. அது ஜஸ்ட் ஒரு காஃபி ஷாப்ல காஃபி சாப்பிட்டோம். அவ்ளோதான். அத எடிட் பண்ணிருக்கானுங்க”


விமலேஷ் “தீபாவளி அதுவுமா இன்னைக்கு வீட்டுல இருக்காம வெளிய போகும் போதே எங்கடா போறனு கேட்டேன்ல.. இவள பாக்க தான் போனியா?” என்றார் கோபமாக.


“டேட்! நான் ஒன்னும் அந்த பொண்ண பார்க்க போகல.. காலையில இருந்து எவ்ளோ இஸ்ஸூனு தெரியுமா?” என கூறி, காலையிலிருந்து அவனை அலையவிட்டதைக் கூறியவன்,


“நீங்க ஃபங்ஷன் அன்னைக்கு டென்சன் ஆக கூடாதுனு தான் சொல்லாம போனேன். எல்லாம் முடிக்க, தலைவலி காஃபி சாப்பட போகும் போது அவங்களும் அங்க வந்தாங்க”


“அவ உன் கார்ல ஜோடிபோட்டு உன்னை ஒட்டிக்கிட்டேல வரா.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லு ஃப்ரோ” என்றான் விராஜ்.


“பல்ல உடைச்சுடுவேன்.. சும்மா இரு சொல்லிட்டேன்” என சீறினான் விஹான்.


“உண்மைய தான ப்ரோ சொன்னேன்” என்றான் அவனை வம்பிழுக்கும் நோக்கத்கோடு. ஆனால் அவனுக்கும் தன் அண்ணன் தப்பு பண்ணிருக்க மாட்டான் என தெரியும் ஆனாலும் தன் அப்பா அவனை நம்பாமல் கேள்வி கேட்பது பிடிக்காமல், விவாதத்தை திசை திருப்பும் எண்ணத்தில் வழக்கம் போல சண்டையிட்டு, அனைவரின் மனதையும் திசை திருப்பினான் விராஜ்.


கவிதா “இப்படியே சண்டை போடாம.. யார் வீடியோ அப்லோட் பண்ணினானு பார்த்து வீடியோவ டெலிட் பண்ண பாருங்க. ஸ்ப்ரெட் ஆகாம தடுக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க.. தேவையில்லாதத பேசி டைம் வேஸ்ட் பண்ணாம” எனக்கூறியவர் பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றுவிட்டார்.


அதன் பின் ஷிம்ரித்தின் உதவியாலும், சந்தோஷ் ராகவேந்திராவின் பதவியாலும் அடுத்த அரை மணி நேரத்தில் விஹானின் புகைப்படம் அத்தனையும் சமூகவலைதளங்களிலிருந்து அகற்றப்பட்டது.


ஆனாலும் பரவிவிட்டது. முதல்வர் வீட்டு விஷயம் என்றால் எவ்வளவு வேகமாக பரவும் என்று தெரியாதா? எவ்வளவு முயன்றும் பலருக்கு விஷயம் தெரிய வந்துள்ளது.


*******


இங்கு கவின் வீட்டில், முதலில் அந்த புகைப்படங்களை எல்லாம் சாத்விகா தான் பார்த்தாள்.


சாத்விகா “ஏய் பிரணி!” என கத்த,


“ஏன் டீ இப்படி கத்துற?”


“இங்க பாரு கேர்ள்” என தன் கைப்பேசியை காட்ட,


“அட நம்ம சிடுமூஞ்சி.. இவனுக்கு லவ்வர் எல்லாம் இருக்காங்க பாரு” என வாய் கூறினாலும், மனதில் ‘லவ்வர் இருக்கும் போதேவா எனக்கு அத்தனை தடவை முத்தம் கொடுத்த.. உன்னை போய் இத்தனை நாளா நல்லவன்னு நினைச்சேனே!’ என எண்ணினாள்.


“நல்லதாவே யோசிக்க மாட்டியா கேர்ள் நீ. அவ ஒன்னும் அத்தானோட லவ்வர் கிடையாது. அவ நம்ம ஆட்’ல நடிக்கிற ஆர்ட்டிஸ்ட். யாரோ இப்படி பண்ணி போட்டுருக்காங்க” என சரியாக கூறினாள் சாத்விகா. இது தான் சாத்விகாவின் குணம். எதையும் சரியான கோணத்தில் பார்க்கும் பெண்.


“க்கூம் நீ வேணா உன் பொத்தானுக்கு கொடி புடி.. என்னால நம்ப முடியாது. எனக்கு அன்னைக்கு லிப் டூ லிப் கிஸ் அடிச்சான் தெரியும்ல.. நேத்து கூட என் கன்னத்துல முத்தம் கொடுத்தான்.


இரு இரு.. இதுவும் நேத்து நடந்தது தான.. அப்போ அவ கூடயும் கூத்தடிச்சிட்டு என் கிட்டயும் வந்து வாலாட்டிருக்கான்.. இனி என் பக்கத்துல வரட்டும் வால ஒட்ட நறுக்குறேன்”


“ஸ்டாப்பிட் கேர்ள். அவர் உன் விஷயத்துல அவசரப்பட்டது வேணா உண்மை ஒத்துக்கிறேன். இப்படி அவர் கேரக்டரை தப்பா பேசாத. காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க.. ஏன் எத்தனை டாக்டர்ஸ் அவர் பின்னால அலையுறாங்கனு தெரியும்ல. ஆனாலும் அவர் எவ்ளோ கண்டிப்பானவரா இருப்பாரு.. கண்ணால பார்த்தும் இப்படி பேசுற.. அவர் தடுமாறுன இடம் நீ மட்டும் தான். உன்னை போய் லவ் பண்ணிருக்கார் பார் அவர சொல்லனும்”


“அந்த சிடுமூஞ்சி என்னை லவ் பண்ணுது? அத நீ பார்த்த? நல்லா பாருடி இந்த போட்டாவ.. லவ் பண்றானாம் லவ்வூ போடி.. என் பாட்னர் தான் உன்கிட்ட மாட்டிட்டு முழிக்குறான். அவன் மனச பார்க்க துப்பில்ல.. இவ அடுத்தவன் மனச பார்த்து சொல்றாளாம்” எனக்கூற, பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து பிரணவிகா மேல் வீசியவள்,


“உன் பாட்னர நான் பிரேக்கப் பண்ணிட்டேன். இனி அவன் யாரோ.. நான் யாரோ..”


“சரி தான் போடி.. நீ இல்லனா ஊர்ல பொண்ணே இல்ல பாரு.. என் பார்ட்னருக்கு அழகான பொண்ணா பார்த்து நான் செட் பண்ணி விடுவேன்”


சாத்விகா “மாமா வேலை மட்டும் தான் பார்க்கல.. அதையும் பாரு.. அக்குள்ள ஒரு பைய வச்சிக்கோ அம்சமா இருப்ப.. மரமண்டை மரமண்டை.. மண்டையில வைக்க வேண்டிய மூளையையும் சேர்த்து கடவுள் உனக்கு வாயில வச்சிருக்கார்.. வாய் மட்டும் தான் இருக்கு.. மூளைனு ஒன்னு இருக்கானே தெரியல”


“உனக்கு குடுத்த மூளைய நீ நல்லா யூஸ் பண்ணு தாயே!! என் மூளை ரெஸ்ட் எடுக்கட்டும். படுடீ வந்துட்டா” எனக்கூறி அவளும் படுத்துவிட்டாள்.


*******


காலையிலேயே விஹான் நேகா வீட்டில் இருந்தான்.


“வாங்க விஹான்.. வாங்க” என அன்பாக வரவேற்றாள் நேகா. அவள் முகத்தில் எந்த கலக்கமோ, சோகமோ இல்லை. அதில் சந்தேகமுற்றான் விஹான்.


அவன் காலையிலேயே இங்கு வந்தது அவள் பெயரும், புகைப்படமும் வெளிவந்து அவளுக்கும் மன உலைச்சலை கொடுத்திருக்கும், புகைப்படங்களை நீக்கிவிட்டதை தெரியப்படுத்தி விட்டு அவளுடன் ஆறுதலாக பேசலாம் என தான் வந்தான்.


ஆனால் வந்த இடத்தில் அவளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவள் வருந்தியதாகவோ, பயந்ததாகவோ ஒரு தடமும் தெரியவில்லை. அதில் சந்தேகமுற்றவன்,


“நேகா! நீங்க தான் அந்த போட்டோ எடுத்து ஸ்ப்ரெட் பண்ணதா?”


“அய்யோ நான் இல்ல சார்”


“பொய் சொல்லாதீங்க. உங்க முகத்துல பதட்டமோ, பயமோ நான் பார்க்கவே இல்ல”


“ஏன் பதட்டப்படனும்? ஏன் பயப்படனும்? எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. உங்க கூட சேர்த்து ஒரு ரூமர் வந்தா எனக்கு சந்தோஷம் தான். எவ்ளோ அழகா இருந்தது அந்த போட்டோஸ். நான் சேவ் பண்ணி வச்சிருக்கேன்”


“அப்போ கன்ஃபர்மா நீ தான?” என கோபமாக சீறினான்.


“ஒருவகையில இந்த போட்டோஸ் ஸ்ப்ரெட் ஆனது எனக்கு சாதகம் தான் ஆனா.. நான் அத பண்ணல” எனக்கூறினாள்.


“டேமிட்” எனக்கூறியவன், அங்கிருந்தும் கிளம்பிவிட்டான். அவனுக்கு தெரியும் அதை செய்தது சூர்யான்ஷ் தான் என்று ஆனால் அதில் இவள் பங்கு இருக்கிறதா என உறுதிபடுத்தவே வந்தான். ஆனால் அவளோ அவன் இரத்த அழுத்தத்தை தான் அதிகரிக்க வைத்துவிட்டாள்.


கோபத்தில் அவன் கார் கண்டமேனிக்கு சென்றது. அவனுக்கு அவனவளன்றி வேறு ஒரு பொண்ணுடன் தன்னை பற்றிய செய்தி வந்தது அத்தனை ஆத்திரத்தை குடுத்தது. அவனால் அதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.


*******


காலையில் சீக்கிரமே கிளம்பிவிட்டனர் சாத்விகாவும், பிரணவிகாவும். இன்று அவர்களுக்கு பிரசவ வார்டின் முதல் நாள். இதுவரை பல பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றனர் ஆனால் இன்று தான் முதன் முறை பிரசவம் பார்க்க போகின்றனர். காலையிலேயே ஒரு விதமான பதட்டம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது அவர்களுக்கு.


நோயை குணமாக்குவது வேறு, அவசர உதவி செய்து ஓர் உயிருக்கு உதவுவது வேறு ஆனால் ஒரு உயிரை.. ஒரு குட்டி குழந்தையை இப்பூவுலகுக்கு வரவேற்பது என்பது ஒரு மனநிறைவையும் கூடவே பதட்டத்தையும் சேர்த்தே தந்தது.


அதே பதட்டத்தில் கல்லூரி பேருந்துக்காக நிற்கும் போது அவர்கள் முன் ஒரு வாலிபன் வந்து நின்றான். தயங்கி பின்னால் நகர்ந்து நின்றனர் இருவரும். அவனோ


“பிரணவிகா நீங்க தான?” என கேட்க, அவளும் மண்டையை ஆட்டினாள்.


“உங்களுக்கு ஒரு கிப்ட் வந்துருக்கு..” எனக்கூறி ஒரு பூங்கொத்தை கொடுக்க, வாங்க தயங்கினாள் அவள்.


“வாங்கிக்கோங்க”


“நீ யார்? இத யார் குடுத்தா?”


“மேடம் நான் பெக்கே ஷாப் வச்சிருக்கேன்.. எனக்கு பேமெண்ட் அனுப்பி இந்த பொக்கேவ உங்களுக்கு டெலிவர் பண்ண சொன்னாங்க”


“யார் சொன்னா?”


“உங்க ரசிகன்னு மட்டும் சொல்ல சொன்னாங்க.. மீதிய அவங்க நேர்ல வந்து சொல்லிக்குவாங்களாம்”


“எனக்கு வேணாம் எடுத்துட்டு போங்க”


“ஐயோ நான் பேமெண்ட் எல்லாம் வாங்கிட்டேன் மேடம். இந்தாங்க” எனக்கூறி கையில் திணித்து விட்டு சென்றான். அதில் ஒரு துண்டு சீட்டும் இருந்தது. அதில் “டூ மை பியூட்டி குயின்.. ஐ ஆம் கம்மிங் சூன் டூ மீட் யூ.. லவ் யூ பேப்” எனப்போட்டு பல இதய வடிவங்கள் இருந்தது.


“யார் கேர்ள் இத பண்ணது?” என சாத்விகா கேட்க,


“தெரியலயே! இது அம்மாக்கு தெரியாம இருக்கனும்டா சாமி இல்ல எனக்கு மந்திரிச்சிடும்” எனக்கூறி சுற்றி சுற்றி பார்த்தாள். நல்லவேளை அவளுக்கு தெரிந்த நபர்கள் யாருமில்லை அந்த நேரத்தில்.


“இத வீட்டுக்கு கொண்டு போனா தெரியும் தான?”


“நான் ஏன் கொண்டு போக போறேன்.. பிரவீனா கிட்ட குடுத்து ஹாஸ்டல்ல பத்திரமா வைக்க சொல்லனும்”


“எதுக்கு இத எல்லாம் பத்திர படுத்துற.. தூக்கி எறி”


“க்கூம்.. போடி எனக்கு முதல் முதலா வந்த ஃபேன்ஸி ப்ரோபோசல்.. இத கீழ போடுறதா.. நெவர்.. இத யாரு குடுத்துருப்பானு தான் என் மண்டை பூராம் ஓடுது”


“தேவையில்லாத வேலை இதெல்லாம்”


“நீ காதலிச்சியே நான் எதாவது கேட்டேனா? ஒரு பொக்கே எனக்கு வந்தது உனக்கு பொறுக்கலயா?”


“அம்மா தாயே என்னவோ பண்ணு.. என்னை ஆள விடு..” என ஒதுங்கி விட்டாள் சாத்விகா. பிரணவிகா ஆசைப்பட்டது இப்படியான ஒருத்தனை தானே! அவளை குயினாக பார்க்க வேண்டுமென.. அவள் எதிர்ப்பார்த்தபடியே ஒரு அழகான தருணம் நிஜமாகவே நடக்க.. அதை ரசிக்க ஆரம்பித்தாள்.


யார் அவன்? அவன் குணம் என்ன? நல்லவனா? கெட்டவனா? என்பதை எல்லாம் அந்த தேவதைகதை (ஃபேர்ரிடேல்) நாயகிக்கு கவலை இல்லை.. அவள் கனவு கண்டது போல ஒருவன் செய்தது அவளை ஆச்சரியப்படுத்தி, ஆனந்தமாக்கி விட்டான். அந்த சந்தோஷத்தில் அவளுக்கு பிரவசம் பற்றிய பதட்டம் கூட மறந்துவிட்டது.


மயக்கமான மனநிலையுடன் தான் அன்று கல்லூரிக்கே சென்றான். அங்கு செல்ல முதல் வகுப்புகள் முடிய, சரியாக பிரசவத்திற்காக வலியுடன் ஒரு பெண்ணும் வந்துவிட்டாள். அவளை பிரசவ அறைக்குள் அனுமதித்தனர். இவர்களும் உள்ளே செல்ல, இவ்வளவு நேரம் இருந்த மாயவலை அறுந்துவிட்டது அந்த பெண்ணின் கதறலில்.


ஓர் உயிரை இந்த பூவுலகிற்கு வரவேற்க அப்பெண் எவ்வளவு வலிகளை தாங்க வேண்டி உள்ளது என பாடமாக படித்திருந்தாலும் அதை நேருக்கு நேராக பக்கத்திலிருந்து பார்க்கும் போது கை கால் எல்லாம் உதறவே செய்தது.


வலி விட்டு விட்டு வர துடித்து கொண்டிருந்தாள் அப்பெண். அடுத்த சில நிமிடங்களில் பனிக்குடம் உடைந்தது.. கர்ப்பவாய் திறக்க ஆரம்பித்தது. விட்டு விட்டு வந்த வலி விடாமல் வர, அப்பெண் கதறி துடிக்க, மருத்துவர் கூறிய அறிவுறைகளை கேட்டு, அதை மனதில் ஏற்றினாலும், அப்பெண்ணின் கதறல் அவளை அசைத்துத்தான் பார்த்தது.


பத்து நிமிட கடின வலிக்கு பிறகு குழந்தையை பெற்றெடுத்தாள் அப்பெண். அதற்கு பிறகு பிரணவிகாவால் அங்கு நிற்கவே முடியவில்லை. ஒரே ஓட்டமாக ஓடி வெளியே வந்தவள் ஒரு மரத்தின் கீழ் அமர, அவள் கண்களோ தாரை தாரையாக கண்ணீரைக் கொட்டியது.


அவளது குழந்தைத்தனமான, இளகுவான மனதால் அந்த வேதனை எல்லாம் தாங்க முடியவில்லை. தன் தாயின் ஞாபகம் வேறு வர, மருத்துவமனை வளாகம் என்று கூட பார்க்காமல் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.


விஹானின் வண்டி அப்போது தான் கல்லூரிக்குள் வந்தது. எப்போதும் இவள் வரும்முன்னே வந்து இவளைக் காண தவமிருப்பவன் இன்று நேகாவை சந்திக்கச் சென்றதாலும், நேற்றைய நிகழ்வால் உண்டான மன உளைச்சலாலும் இப்போது தான் கல்லூரிக்கே வந்தான்.


வந்ததும் அவன் கண்களுக்கு சிக்கியதென்னவோ தன்னவளின் அழுகை தான். துடித்துவிட்டான். எதற்காக அழுகிறாள் என தவித்து வேக எட்டுகளில் பட்டென அவள் முன் வந்து நிற்க, அவனைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள் பிரணவிகா.
 

Mathykarthy

Well-known member
சாத்வி சரியா சொன்னா பிரணிக்கு மூளைன்ற ஒன்னு இல்லவே இல்ல.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
சூர்யா விரிச்ச வலையில அழகா போய் மாட்டாப் போறா 😡
 
Last edited:
Top